Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87993
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19139
    Posts
  3. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    929
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46798
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/26/23 in Posts

  1. நீங்க பார்க்கலைனா அதுக்கு நான் என்ன பண்ண.... 😂 🤣
  2. 2017 ஆம் ஆண்டு எமது பல்கலைக்கழக BBB (Tribeta Biological Honor society)அமைப்புக்கு கிடைத்த ஆய்வு பணத்துடன் லீமார் விலங்கினங்கள், மற்றும் மடகஸ்கார் தாவர விலங்கினங்களை பற்றிய ஆய்வுக்காக மாணவ மாணவிகளுடனும், பேராசிரியர்களுடனும் அட்லாண்டாவில் இருந்து பிரான்ஸ் வழியாக மடகாஸ்கர் சென்றடைந்தோம். மடகாஸ்கர் பிரெஞ்சு ஆட்சியில் இருந்ததால் பிரான்சில் இருந்து தினமும் நேரடி விமான சேவைகள் இருக்கு. நிறைய பிரெஞ்சு காரர்கள் அடிக்கடி மடகஸ்கார் செல்வார்களாம். மடகஸ்காரில் பிரெஞ்சு மொழியில் பேசும் எல்லோருக்கும் குறிப்பாக சிறுவர்களுக்கு பிரெஞ்சு பயணிகள் பணம் கொடுப்பதால் எல்லா மக்களும் பிரெஞ்சு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் இருந்து வேர்ல்ட் ஸ்ட்ரிட்ஸ் (World strides) என்னும் அமைப்பினர் எம்மை வரவேற்று அந்தணனாரிவோ (Antananarivo) விமான நிலையத்தில் இருந்து ஆன்டாசிபே சரணாலயத்துக்கு அழைத்து சென்றனர். எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 12,000 அமெரிக்கன் டொலர் செலவிட்டிருந்ததால் 13 நாள் பயணம் முழுவதும் உயர்தர ஹோட்டல் மற்றும் ரிசொர்ட்கலில் தங்கினோம். இந்த்ரி (Indri lemur) எனப்படும் லிமூர் இனம் கூர்ப்பில் மனிதர்களுக்கு தொடர்புடையது. தாவர உண்ணியான இந்த்ரி லெமூர் இனம் வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பமாக வாழும். அவைகளையும் , பல விதமான பச்சோந்திகளையும் அடர் காட்டுக்குள் நடந்து சென்று பார்த்து சில படங்களையும் எமது பயண விபரங்களையும் இத்துடன் இணைத்திருக்கிறேன். அங்கு பாம்புகளோ,யானைகளோ வேட்டையாடும் இனங்களான புலி, சிங்கம் கரடிகளோ இல்லாததால் இரவிரவாக காடுகளில் நடமாட முடியும். அத்துடன் லெமூர் இனங்களும் மனிதர்கள் தம்மை தாக்க மாட்டார்கள் என்று கடந்த பல தசாப்தங்களாக உணர்ந்த படியால் அவைகள் மனிதர்களை தாக்குவதும் இல்லை, பயந்து ஓடுவதும் இல்லை. மாறாக மனிதர்களை நம்பும் ஒரு காட்டு விலங்குங்களாக இருக்கின்றன. மேலும் தொடரும். ஜல்லிக்கட்டில் இருந்து அப்பச்சட்டி வரை எல்லாமே இருக்கும் ஒரு விசித்திர ஊர் மடகாஸ்கர்.
  3. நிச்சயம் நடந்தது. ஜப்பானியர்கள் சீனாவை கைப்பற்றி அங்கே சீன இனத்தவரை சொல்லொணா கொடுமைக்கு ஆளாக்கினார்கள். குறிப்பாக comfort women என்று வகை தொகையின்றி சீன பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதே போல் பர்மாவில் இருந்து கிழக்கு நோக்கி death railway என அழைக்கப்படும் ரயில்பாதையை கட்டும் பணியில் பல போர்குற்றவாளிகளை அடிமைகளாக நடத்தி உள்ளார்கள். பலர் இறந்தனர். நான் போய் பார்த்துள்ளேன். தாய்லாந்தின் காஞ்சனாபுரி என்ற ஊரில் இன்றும் இந்த ரயில் பாதை, பாலம் எல்லாம் உள்ளது. இதில் இறந்தவர்கள் பலர் இந்தியா, சிங்கப்பூரில் பிடிக்கப்பட்ட தமிழர்கள். தாமே உயர்ந்த இனம் - சூரிய புத்திரர்கள் என்ற இனதுவேச, இனத்தூய்மைவாதம் இன்றும் ஜப்பானியர்களிடம் உண்டு. ஜப்பானியர் வேற்று இனத்தவரை திருமணம் முடிப்பதும் குறைவு. இன்றளவும் டோக்கியோவில் கூட ஒரு கறுப்பர் நடந்து போனால் ஆச்சரியமாக பார்க்கும் சமூகம்.
  4. நாங்கள் ஒண்டுக்கை ஒண்டாகிறதுக்கு இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடத்துறம்? விடியப்பறமே சும்மா விசர கிளப்பிக்கொண்டு....
  5. நகைச்சுவையாக போன ஒன்று கடைசியில் இந்த மாதிரி ஆழமான செய்தியுடன் முடியும் என எதிர்பார்த்திருக்கவில்லை.. வலிகள் வரும் பொழுதுதான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு முடிவுகளுமே கவலையைத் தந்தாலும், இந்தக் கவலையின் ஊடாக இவர்களைப் போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவுகிறது.. எங்களையும் பரந்துபட்டளவில் சிந்திக்க உதவுகிறது. என்னைப் பொறுத்த வரை யாவும் கற்பனை என கூற முடியாது உள்ளது ஏனெனில் இப்படியானவர்களை எங்கோ ஓரிடத்தில் சந்தித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம் என்றே நினைக்கிறேன். பாராட்டுகள் கோஷான்! ஆனாலும் முருகர்சாமியை வம்பிற்கு இழுக்காவிட்டால் கோஷானிற்கு அந்த நாள் நல்லதாக முடியாது என நினைக்கிறேன்!!!
  6. எல்லோருடைய கொமெண்ட்ஸ்க்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி. எப்பவோ எழுத நினைத்தது. அங்கு வாழும் மக்களில் 95 வீதமானோர் 500 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கை தான் வாழ்கின்றனர். மிகவும் வறுமை. வரும்போது அநேகமான கொண்டுபோன பொருட்களை அங்கு விட்டுட்டு அழகான கலை பொருட்களை வாங்கி வந்தோம். இந்த சிறுமிகள் மாலையில் பவோபாப் என்னும் ராட்சத மரத்தில் இருந்து பெறும் மணிகளை கொண்டு செய்த மாலைகளை விற்றுத்தான் பள்ளிக்கூடம் போகிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் கடிகாரம் நான் குடுத்தது. இந்த மரம் நெடுந்தீவு மற்றும் மன்னாரில் போர்த்துக்கீசரால் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டது. இந்த இலைகள் தண்ணிப்பிடிப்பானவை. அரேபியார்களுக்கு குதிரை விற்கும் காலத்தில் குதிரைகள் இந்த மரத்தின் கீழ் இளைப்பாறி தண்ணிக்காக இலைகளையும் சாப்பிட்டதாக நெடுந்தீவு சென்றபோது சொன்னார்கள். யாழ்ப்பாணத்தில் செய்யும் பனை சார்ந்த கைவினை பொருட்களின் தரம் பத்தாது. இந்த வறிய மக்கள் செய்து வைக்கும் பொருட்கள் மிகவும் உறுதியான நல்ல தரமானவை. ஏனெனில் அதை செய்வதற்கு பயிட்சியாளர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் அப்படி செய்தா நல்லம். அகப்பைகள் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு தான் பாவிக்கலாம். நான் ஒவ்வொரு முறையும் வேண்டும்போது அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். தரமானதாக செய்தால் எல்லோரும் நிறைய வேண்டுவார்கள் (வெள்ளைக்காரர் உற்பட) யாழ் சந்தையில் எனக்கு சில வெள்ளைக்காரர்கள் அப்படி அவர்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். நிறைய எழுத இருக்கு. நான் பாவிக்கும் கூகிள் மொழி பெயர்ப்பு அவ்வளவு நல்லம் இல்லை. நீங்கள் எல்லோரும் எப்படி தமிழில் எழுதுகிறீர்கள்?
  7. குருசுவாமியின் கொலை அதிகரித்து வந்துகொண்டிருந்த முறுகல் நிலை, டெலோ அமைப்பினரால் பொலீஸ் பரிசோதகர் குருசுவாமி 1979 ஆம் ஆண்டு ஆடி 1 ஆம் திகதி கொல்லப்பட்டபோது மேலும் தீவிரமாகியது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தி இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் வன்முறைகளை விசாரிக்கவென்று அமைக்கப்பட்ட சன்சொனி விசாரணைக் கமிஷனின் முன்னால் அழைக்கப்பட்ட இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளில் குருசுவாமியும் ஒருவர். மற்றைய அதிகாரியான தாமோதரம்பிள்ளை கமிஷனின் முன்னால் பேசும்போது யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்களே யாழ்ப்பாணத்தில் கடைகளுக்கும் சந்தைக் கட்டிடத் தொகுதிக்கும் தீவைத்ததாகக் கூறினார். அவர்கள் எவரும் சீருடையில் இருக்கவில்லையென்றும், எவரும் தமது அடையாள இலக்கத் தகடுகளை அணிந்திருக்கவில்லை என்றும் மேலும் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனி யாழ்ப்பாணம் சந்தை ஆவணி 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திய வன்முறைகளில் இருமுக்கிய விடயங்களில் பொலீஸாரைப் பாதுகாக்கும் வகையில் குருசுவாமி சாட்சியமளித்திருந்தார். முதலாவது, யாழ்ப்பாண பழைய சந்தைக்குத் தீமூட்டிய விவகாரம். இந்த தீவைப்புச் சம்பவத்தில் பொலீஸார் எவரும் ஈடுபடவில்லை என்று அவர் கூறினார். இரண்டாவது யாழ்ப்பாணத்தில் வாழும் சிங்களவர்கள் தாக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் நாகவிகாரை தமிழர்களால் எரியூட்டப்பட்டதாகவும் வேண்டுமென்றே பொலீஸாரால் அனுப்பப்பட்ட செய்தி. யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியான நாணயக்கார அனுப்பிய இந்த விஷமத்தனமான அறிவிப்பை அவர் செய்யவில்லை என்று குருசுவாமி கமிஷனிடம் கூறினார். யாழ்ப்பாண உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்கவின் நெருங்கிய தோழரான குருசுவாமி தனது பொலீஸ் நண்பர்களைக் காப்பதில் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். குருசுவாமியின் வாக்குமூலம் பத்திரிக்கைகளில் வெளிவந்தபோது தமிழர்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர். பல தமிழர்கள் அவரைத் தமிழினத் துரோகி என்று அழைக்கத் தலைப்பட்டனர். தமிழர்களின் வெறுப்பினை அவர் சம்பாதித்துக்கொண்டதால் அவரின் பாதுகாப்பிற்கென்று தானியங்கிக் கைத்துப்பாக்கியொன்றும் அவருக்கு பொலீஸாரால் வழங்கப்பட்டது. நடராஜா தங்கவேல் (தங்கத்துரை) தங்கத்துரையின் அமைப்பு குருசுவாமியைக் கொல்லத் தீர்மானித்தது. குருசுவாமியைக் கொல்லும் பணி குட்டிமணி, ஜெகன் மற்றும் ஒபரோய் தேவனிடம் வழங்கப்பட்டது. கொழும்பில் அமைந்திருக்கும் உல்லாச விடுதியான ஒபரோய் ஹோட்டலில் சிலகாலம் தேவன் கடமையாற்றி வந்ததினால் அவர் ஒபரோய் தேவன் என்று அழைக்கப்பட்டு வந்தார். குருசுவாமியைச் சுட்டுக் கொல்லும் பொறுப்பு தேவனுக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் குருசுவாமியின் இல்லம் அமைந்திருந்தது. குருசுவாமியைக் கொல்லும் குழு அவரது வீட்டை நெருங்கிய நேரத்தில், அருகிலுள்ள வீடொன்றில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக்கொண்டிருக்க இன்னொரு புறத்தில் வெடிகளும் கொழுத்தப்பட்டன. குருசுவாமியின் வீட்டுக் கதவை குட்டிமணி தட்டினார். குருசுவாமி கதவினருகில் வரும்போது அவரைச் சுட்டுக் கொல்வதே தேவனுக்கு வழங்கப்பட்டிருந்த பணி. யன்னலின் அருகில் பதுங்கியிருந்த தேவன், வீட்டினுள் இருந்து கதவுநோக்கி குருசுவாமி வருவதைக் கண்டதும் பதட்டமடையத் தொடங்கினார். அவரை நடுக்கம் பற்றிக்கொண்டது. அதுவே தேவனின் முதலாவது கொலை. "சுடடா" என்று தேவனைப் பார்த்துக் கட்டளயிட்டார் குட்டிமணி. தேவனுக்கு இன்னமும் நடுக்கம் நின்றிருக்கவில்லை. "டேய், சுடடா" மீண்டும் குட்டிமணி தேவனைப் பார்த்துக் கத்தினார். இந்தமுறை தேவன் சுட்டார். அருகில் வெடிச்சத்தம் காதைப் பிளந்துகொண்டிருக்க, தாம் வந்த சைக்கிள்களில் ஏறி மறைந்தது குருசுவாமியைக் கொல்ல வந்த குழு.
  8. ஒருங்கிணையும் சிங்கள இனவாதிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் செயல்களை நியாயப்படுத்தி வாதிடுவதற்கென்று ஒரு சிறந்த பேச்சாளர் இருந்தார். அவரது பெயர் ஜி எம் பிரேமச்சந்திர. அவர் பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையில் அனைத்து பிரிவினைவாத அமைப்புக்களையும் உடனடியாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். சகல சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் இதன்மூலம் செயற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றுள் முக்கியமானது மூன்று நிக்காயக்களின் சங்க சபா என்றழைக்கப்பட்ட மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் பெளத்த பிக்குகளும் உள்ளடங்கிய பெளத்த இனவாத அமைப்பு. இவ்வமைப்பு அரசுக்கு விடுத்த கோரிக்கையில் சிங்களவர்களுக்கெதிராகவும், நாட்டிற்கெதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கண்டிக்கத் தொடங்கியதுடன் அமிர்தலிங்கத்தின்மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்கள் சிலரின் தீர்மானங்கள் அமிர்தலிங்கத்தை "துரோகி" என்று விழித்திருந்தன. ஐக்கிய பெளத்த மண்டலய எனும் பெளத்த சிங்கள அமைப்பு தனிநாட்டிற்கெதிரான தீர்மானத்தினை நிறைவேற்றியது. அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் பலிபான சந்தானந்த தேரரும், மல்வத்தை பீடத்தின் அனுனாயக்கரான ரம்புக்வல்ல சிறி சோபித தேரரும் இத்தீர்மானங்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததுடன், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும் வெகுவாகக் கண்டித்திருந்தனர். சிங்கள ஆங்கில நாளிதழ்கள் சிங்களவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வந்தன. சிங்களப் பத்திரிக்கைகள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்கிற தலைப்பிலும் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கனவினை ஏன் கைவிடவேண்டும் எனும் தலைப்பிலும் வெளியிடப்பட்டன. அரச ஆதரவிலான டெயிலி நியூஸ் பத்திரிக்கை தனது ஆசிரியர்த் தலையங்கம் ஒன்றில் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கனவினை தூக்கிக் குப்பையில் போடவேண்டும்" என்று கூறியிருந்தது. "பிரிவினவாதகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது தனிநாடான தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையினை முன்வைப்பதனை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரிகளைக் கொல்லுதல், வங்கிகளைக் கொள்ளையிடல், அச்சுருத்தல்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்றும் அது கூறியிருந்தது. தனது கட்டுப்பாட்டினை இழந்த அமிர்தலிங்கம் தமது அரசியல்த் தலைவர்களைப் போலவே சிங்களப் பத்திரிக்கையாளர்களும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அமிர்தலிங்கத்தை சிங்களவர்களின் நலன்களுக்கு அடிபணியவைக்கும் தமது முயற்சிகள் மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை அவர்கள் ஒருபோதுமே எண்ணிப்பார்க்க விரும்பியதில்லை. தமது அழுத்தங்களுக்கு அமிர்தலிங்கத்தைப் பணியவைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழர்கள் முன்னால் அவரை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதனைச் செய்தார்கள். 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பேச்சாளர்கள் அமிர்தலிங்கம் சிங்களவர்களுடன் மிகவும் மென்மையாக நடதுகொள்வதாக விமர்சித்திருந்தனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த சந்ததியார் பேசும்போது "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது தேர்தல் வெற்றிக்காகவே தமிழ் ஈழம் எனும் கோரிக்கையினை முன்வைக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தனது பேச்சின் முடிவில்,"இனிமேல் தமிழ் இளைஞர் பேரவை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிடமிருந்து பிரிந்து தனித்தே இயங்கும்" என்று கூறினார். மாவை சேனாதிராஜா இன்று தமிழ் இளைஞர் பேரவையின் இந்த தனித்தியங்கும் முடிவை தனது ஆதரவாளரான மாவை சேனாதிராஜாவைப் பாவித்துத் தடுத்துவிடலாம் என்று அமிர்தலிங்கம் நினைத்தார். சிங்களவர்களிடமிருந்து எழுந்து வந்த கடுமையான அழுத்தத்தினையடுத்து வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களிடமிருந்தும் விலகி நடக்கத் தொடங்கினார். இது, இளைஞர் அமைப்புக்கள் மீது அவருக்கிருந்த செல்வாக்கினை சிறிது சிறிதாக இழக்கக் காரணமாகியது. 1979 ஆம் ஆண்டின் முதற்பாதியில் டெலோ அமைப்பு வீரியமாகச் செயற்பட்டு வந்தது. மார்கழி 13 ஆம் திகதி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த பொலீஸ் உளவாளி ஐயாசாமி சிவராஜாவை டெலோ இயக்கம் கொன்றது. மாசி 1 ஆம் திகதி பொலீஸ் கொன்ஸ்டபிள் ஞானசம்பந்தம் என்பவர் கொக்குவில்ப் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பங்குனி 21 ஆம் திகதி இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசன் என்பவர் வல்வெட்டித்துறையில் கொல்லப்பட்டார்.ஆனி 30 ஆம் திகதி தொண்டைமனாற்றினைச் சேர்ந்த பொலீஸுக்குத் தகவல் வழங்கும் கணவன் மனைவியான சுவர்ணராஜா தம்பதிகளை டெலோ கொன்றது. மாவை சேனாதிராஜா தமிழ் இளைஞர் பேரவையினை தன்பக்கம் மெதுவாகத் திருப்பிக் கொண்டாலும்கூட, அவ்வமைப்பில் செல்வாக்கு மிகுந்தவர்களாக விளங்கிய பல உறுப்பினர்களை அவரால் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியாமற்போனது. இவர்களுள் சந்ததியார், இரா வாசுதேவா, இறைக்குமரன், யோகனாதன் போன்றோர் தனித்து இயங்கி வந்ததுடன் பின்னாட்களில் ஆயுத அமைப்புக்களின் தலைவர்களாகவும் மாறிப்போனார்கள். சிறிதுகாலம் தமிழ் இளைஞர் பேரவை - விடுதலை அணி என்கிற பெயரில் இயங்கிவந்த இவர்கள் உமாமகேஸ்வரன் 1981 ஆம் ஆண்டு புளொட் அமைப்பினை உருவாக்கியபோது அதில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள். டெலோ அமைப்பினரது செயற்பாடுகள் ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், சிங்கள மக்களின் உணர்வுகளையும் வெகுவாகப் பாதித்திருந்தது. ஐரோப்பாவில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செயற்பட்ட விதமும் சிங்களவர்களுக்கு எரிச்சலையூட்டியிருந்தது. இலங்கையில் பொது எழுதுவிளைஞர்கள் ஒன்றியத்தின் முன்னாள்த் தலைவரும், பின்னர் வழக்கறிஞராகி பிரித்தானிய மற்றும் இலங்கை வழக்காடு மன்றங்களில் வழக்குரைஞராகவும் பணிபுரிந்து ஒரு காலத்தின் சம்பியாவின் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய கிருஷ்ணா வைகுந்தவாசன் அவர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் இங்கிலாந்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டிருந்தார். கிருஷ்ணா வைகுந்தவாசன் 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவிற்கு வந்த உடனடிச் செய்தியொன்று மிகுந்த பரபரப்பாகப் பேசப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்திச்சேவையூடாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கையர்களுக்காக அனுப்பப்பட்ட செய்தி என்று தலைப்பில் அது வந்திருந்தது. சுமார் 150 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேச எழுந்த தருணத்தில் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இலங்கையில் தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்துவரும் கொடுமைகளைக் கண்டிப்பதாக முழக்கமிட்டார். ஆனால், அவர் முழக்கமிடத் தொடங்கிய சில வினாடிகளில் அவரது ஒலிவாங்கியின் இணைப்பு மறுக்கப்பட்டதுடன் அவரைக் காவலர்கள் அங்கிருந்து அகற்றிச் சென்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் சபையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த தமிழர் தன்னை கிருஷ்ணா என்று அறிமுகப்படுத்தியிருந்ததோடு, சுமார் 25 லட்சம் மக்களைக் கொண்ட, இந்தியாவிற்கும் சிங்களவர்களின் நாட்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் தமிழ் ஈழம் எனும் தேசத்தை தான் பிரதிநித்துவம் செய்வதாகவும் கூறியிருந்தார். "தமிழர்கள் மேல் சிங்களவர்களின் தேசம் இனக்கொலையொன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது" என்று அவர் முழக்கமிட்டு முடியும்போது அவரது ஒலிவாங்கியின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தது. அதன் இன்னொரு செய்தி பின்வருமாறு கூறியது, "இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாகுல் ஹமீட் பேசும்போது, "எனக்கு முன்னால் பேசிய பேச்சாளருக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எனது நேரத்தில் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டாலும் கூட, சபையில் சலசலப்பை ஏற்படுத்தி எனது பேச்சிற்கான முன்னுரையை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்" என்று அச்சம்பவத்தின் தக்கத்தை குறைக்க எத்தனித்தார்" என்று கூறியது. அச்செய்தியின் இறுதிப் பகுதி பின்வருமாறு கூறியது. "கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த நபரை விசாரித்தபோது அவர் இலங்கையைச் சேர்ந்த கே வைகுந்தவாசன் என்று அடையாளம் காணப்பட்டதாக ஐ நா பேச்சாளர் தெரிவித்தார். முன்னாள் நீதிபதியான அவர் தற்போது லண்டனில் பணிபுரிந்துவருந்துவருகிறார். அவரது வதிவிட விபரங்கள் தெரியவில்லை. சபையினுள் நுழையும்போது ஏனைய அதிதிகளுடன் அவரும் நுழைந்து வந்துள்ளதனால் அவர் தனது அடையாளம் தொடர்பான அனைத்துச் சோதனைகளும் மிகவும் நுட்பமாகக் கடந்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஐ நா வின் மாநாட்டு மண்டபத்தில் இராஜதந்திரிகளும் அவர்களது விருந்தினர்களும் அமரும் பகுதியில் அமர்ந்துகொண்ட அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுதற்கு அழைக்கப்பட்ட வேளை மேடையில் திடீரென்று ஏறி பேசத் தொடங்கியிருக்கிறார். ஐ நா சபையின் பேச்சாளர் கூறும்போது அவரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும், இனிமேல் பிரவேசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், வைகுந்தவாசன் அமெரிக்காவில் செய்தியாளர் ஒருவருடன் பேசும்போது நியுயோர்க் நகரில் நடைபெறும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்குபெற தான் வந்திருந்ததாகக் கூறிய அவர், தமிழரின் அவலங்களை உலகறியச் செய்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவே ஐ நா சபையில் தான் அவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறினார்". வைகுந்தவாசனின் பேச்சின் முழு வடிவம், "மதிப்பிற்குறிய தலைவர் மற்றும் உலக நாடுகளின் அதிபர்களே! அடக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு இந்த உயரிய சபையில் தம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் எங்குதான் போவார்கள்? எனது பெயர் கிருஷ்ணா, நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்திருக்கும் சுமார் இரண்டரை மில்லியன் தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். தமிழ்த் தேசத்தை முற்றாக அழித்துவிடும் நோக்கில் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை சிங்கள அரசு ஈழத் தமிழர்கள் மேல் ஏவிவிட்டிருக்கிறது". "தமிழர்களின் பிரச்சினை இந்திய பிராந்தியத்தின் அமைதியினைக் குலைக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. உலக நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள் உடனடியாக எமது பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்விற்கு உழைக்காவிட்டால் ஈழத் தமிழரின் பிரச்சினையும் மிக விரைவில் இன்னொரு பாலஸ்த்தீனமாகவோ அல்லது சைப்பிரஸாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, நாங்கள் உங்களின் உதவியினை வேண்டி நிற்கிறோம். மிக்க நன்றி ! அனுமதியின்றி எனது பேச்சினை இங்கே நிகழ்த்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நெடுநாள் வாழ்க தமிழ் ஈழம் !!!". இந்தச் சம்பவம் குறித்து வைகுந்தவாசனையும் சாகூல் ஹமீதையும் நான் தனித்தனியாகச் செவ்வி கண்டேன். என்னிடம் பேசிய வைகுந்தவாசன் தனது நோக்கமெல்லாம் தமிழரின் அவலங்களை உலகறியச் செய்வதுதான் என்றும், அதற்காக அதனை தான் மிகவும் திட்டமிட்டு நிகழ்த்தியதாகவும் கூறினார். ஹமீத் என்னிடம் பேசும்போது, அந்த அசாதாரண சூழ்நிலையினை தணிக்கவேண்டிய தேவை தனக்கு இருந்ததனால் தான் மிகவும் இயல்பாக நடந்துகொள்ள எத்தனித்ததாகக் கூறினார். தான் இயல்பாக நடந்துகொண்டமைக்காக பலராலும் கெளரவப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், கொழும்பு அரசாங்கமோ கொதித்துப் போயிருந்தது. வைகுந்தவாசனின் செயலை அமிர்தலிங்கம் வரவேற்றிருந்ததனால் தனது ஆத்திரம் முழுதையும் அவர்மீதே கொழும்பு அரசாங்கம் காட்டியது. அமிர்தலிங்கத்தின் அறிக்கை இவ்வாறு கூறியது, " திரு வைகுந்தவாசன் அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தமிழ் ஈழத் தனிநாட்டின் தேவையினையும், நவ காலணித்துவவாதிகளான சிங்களவர்களிடமிருந்து தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கான தேவையினையும் மிகச் சுருக்கமாக சர்வதேச அவையில் கொண்டுவந்திருக்கிறார். எம்முன்னால் உள்ள இன்றைய தேவை என்னவென்றால் சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் போராட்டம்பற்றி பிரச்சாரம் செய்வதுதான். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுவதற்கு முன் மேடையில் வைகுந்தவாசன் பேசியதன் மூலம் உலக வரைபடத்தில் தமிழ் ஈழத்தினையும் அவர் இடம்பெறச் செய்திருக்கிறார்" என்று அவ்வறிக்கை கூறியது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து விவாதித்த எதிர்க்கட்சியினர், இந்த சம்பவம் சிங்களவர்களின் அதிகாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினர். உலகத்தின் கண்களில் சிங்களவர்கள் அடக்குமுறையாளர்களாக இதன்மூலம் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் கூறினார்கள். மசாசுசெட்ஸ் தீர்மானம் 1979 ஆம் ஆண்டு வைகாசி 10 ஆம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸின் உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவித்து இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகளினால் நிகழ்த்தப்பட்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருந்தது. இதுவும் ஜெயவர்த்தனவையும் சிங்கள மக்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்தது. சமர்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான மேரி இ ஹவீ என்பவரால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்தில் சுமார் 8000 சதுர மைல்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் நிலப்பரப்பில் வாழும் சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் சிங்களவர்களால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வாழ்வதாகக் கூறியிருந்தார். மேலும் இலங்கையில் சரித்திர காலம் தொட்டு இரு வேறு இனங்களான தமிழர்களும் சிங்களவர்களும் தனித்துவமான மத, கலாசார, மொழிகளையும் கொண்டிருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இவ்விரண்டு தேசங்களும் பிரிட்டிஷாரின் நிர்வாகத் தேவைகளுக்காக ஒன்றக்கப்பட்டதாகவும் அவர் விளக்கப்படுத்தியிருந்தார். அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதன்படி பிரஜாவுரிமை, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை உட்பட்ட பல விடயங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட யாப்புகளில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவரின் உரையின் முடிவில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பின்வருமாறு அம்மாநில அவை கூறியிருந்தது, "இத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளும் இந்த அவை, அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸ் தலைவர்களும் தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழர்மீது நடத்தப்பட்டுவரும் அநீதியான அடக்குமுறைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனே நிறுத்தி தீர்வொன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது" என்று கூறியதுடன் இதன் பிரதிகளை அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற அவையின் பிரதிநிதிகள், அமெரிக்க அரசுச் செயலாளர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தது. ஆளுநர் எட்வேர்ட் கிங் அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர் எட்வேர்ட் கிங் அவர்கள் 1979 ஆம் ஆண்டு, வைகாசி 22 ஆம் திகதியினை "தமிழ் ஈழம் நாள்" என்று பிரகடண்ம் செய்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும், நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தையும் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தமிழ் ஈழம் நாள் நிகழ்வில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். மசாசுசெட்ஸ் மாநில ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஈழ நாள் பிரகடணத்தின் பிரதி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்யும் முயற்சிகள் மீளவும் முன்னெடுக்கப்படலாயின. ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமச்சந்திர மற்றும் சுனில் ரஞ்சன் ஜயக்கொடி ஆகியோர் இந்த விடயத்தை மீளவும் முன்வைத்துப் பேசினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா விசேட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதனைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும், அச்சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். தனது விசேட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவந்த பகுதிகளை அநுராதபுர மாவட்டத்துடன் ஜெயவர்த்தன இணைத்துக்கொண்டார். இதற்கெதிராக செயற்பாடுகளில் இறங்கிய முன்னணியினர் பாராளுமன்றத்தைலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தீவிரவாத எண்ணங்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்குப் பதிலளித்த அரசாங்கம் பிரேமச்சந்திரவையும், ஜெயக்கொடியையும் பாவித்து இரு தீர்மானங்களை முன்வைத்தது. வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புக்களையும், தனிநாடு கோரும் அரசியல்க் கட்சிகளையும் தடைசெய்யவேண்டும் என்று பிரேமச்சந்திர முதலாவது தீர்மானத்தை முன்வைத்தார். இரண்டாவது தீர்மானத்தை முன்வைத்த ஜயக்கொடி தமிழ் ஈழத்திற்காகப் பிரச்சாரம் செய்வோர் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  9. View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
  10. நல்லபடியா முடிந்தால் சந்தோசம். மோடியின் சிவசேனா, ருத்ரசேனா என்று சந்திக்கு சந்தி சிவபெருமானுடன் கொடிகளும் பறக்குது. சிலைகளின் தரமும் (முகவெட்டு, நிறங்கள்) குறைவு. இந்த சாந்தி தான் ஆலடி சந்தி (எமது வீடு, சிறியின் வீடுகள் இருக்கும் பலாலி வீதி, பழம் வீதி சந்தி)சிறி சொன்னமாதிரி பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஆலமரத்தை கவனிப்பார் இல்லை. கன நாள் படங்கள் பதிவேற்றாமல் இருந்து எப்படி பண்ணுவது என்று மறந்து விட்டேன். யாரவது எப்படி என்று கூறமுடியுமா?
  11. நன்றி அண்ணா. நானும் தொடர்களை இப்படித்தான் வாசிக்கிறேன். ஏனைய திரிகளில் என் பதில்கள் சுணங்கி வருவதை கண்டிருப்பீர்கள்.
  12. சீனர்கள் ஜப்பானியரை கொடூரமானவர்களாக சொல்வார்கள். நாங்கள் அறியாத பக்கங்கள் இருக்கலாம்.
  13. நீங்கள் same side goal போடுகிறீர்கள். இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள். காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது. இது தான் வேறுபாடு
  14. கொரியர்களை அடிமைகளாக வைத்து இருந்தார்கள்.
  15. அடபாவிகளா செய்யிறதையும் செய்து போட்டு வீர வசனம் வேறயா?
  16. சன்சொனி ஆணைக்குழு 1978 ஆவணியில் யாழ்ப்பாணப் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களை விசாரிக்கவென சன்சொனி ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைத்தார். ஆனால், விசாரணைகளின் முடிவில் ஆணைக்குழுவினரால் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடயங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஏமாற்றி விட்டிருந்தன. பாராளுமன்றத்தில் ஆவணி 18 ஆம் திகதி அமிர்தலிங்கம் செய்த முறைப்பாட்டின் பின்னர் பொலீஸாரின் அடாவடித்தனத்தை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைக்கப்போவதாக அறிவித்தபோது தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆவணி 22 ஆம் திகதி பறங்கி இனத்தைச் சேர்ந்தவரும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ஓய்வுபெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஜே ஆர் அணுகி யாழ்ப்பாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது தமிழர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஒற்றை நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 1. இலங்கையில் 1977 ஆவணி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து புரட்டாதி மாதம் 15 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளுக்கான மூல காரணம் மற்றும் வன்முறைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருந்த புறக் காரணிகளைக் கண்டறிதல். 2. தனிநபரோ, அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு அமைப்போ இந்த வன்முறைகளின் பின்னால் இருந்துள்ளதா என்று கண்டறிதல். 3. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புணர்வாழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இவ்வாறான வன்முறைகள் இனிமேல் நடவாதிருப்பது ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்வது. தனது முதலாவது அமர்வினை 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த ஆணைக்குழு இறுதியாக 1979 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதியுடன் தனது விசாரணைகளை பூர்த்தி செய்துகொண்டது. யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களின் இந்த விசாரணைகளுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. விசாரணைகள் சாட்சியங்களூடு பூரணப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறலாம். விசாரணைகளின் இறுதி அறிக்கை 1980 ஆம் ஆண்டு ஆடி 22 ஆம் திகதி ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே வருடம் கார்த்திகை 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருந்தது வன்முறைகளுக்கான மூல காரணத்தையும், சூழ்நிலைகளையும் கண்டறிதல் மற்றும் வன்முறைகளின் பின்னாலிருந்த தனிநபர்கள் அல்லது அமைப்புக்களைக் கண்டறிதல் என்றே கூறப்பட்டிருந்தது. சுமார் 277 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையில் வன்முறைகளுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமைப்பீடமே என்று தீர்க்கமாக வரையறை செய்துகொண்டே தனது அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தார். வன்முறைகள் உருவாவதற்கான சூழ்நிலையினை நாட்டில் உருவாக்கியது முன்னணியினர் தான் என்று குற்றஞ்சாட்டிய சன்சொனி, வன்முறைகளைச் செய்தவர்கள் யாரென்பதை எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ்த்தலைவர்கள் முன்வைத்து வந்தமையும், தமிழ் ஆயுத அமைப்புக்களை ஊக்குவித்து வந்தமையுமே சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை இதற்கெதிரான பழிவாங்கல் நிலைக்குத் தள்ளியிருந்ததாக சன்சொனி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கூறியதன் மூலம் ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் தமக்கும் சம அந்தஸ்த்துக் கோரும்போது, அது பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துமிடத்து, சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகளில் பெரும்பான்மையின மக்கள் இறங்கலாம் எனும் புதிய சட்டத் தேற்றத்தை உருவாக்கியிருந்தார். இதனை இன்னும் சுருக்கமாகக் கூறினால், "நீங்கள் பெரும்பான்மைச் சமூகத்தை கோபப்பட வைத்தால் அதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்" அல்லது "பெரும்பான்மைச் சமூகத்தைக் கோபப்படுத்தியதால் உங்களுக்கு நீங்கள் கேட்டது கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பொருள். சன்சொனி மேலும் கூறுகையில், "இலங்கையின் மொத்த மக்களையும் பொறுத்தவரையில் தனிநாடு என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். அதனை பெரும்பான்மையின மக்கள் இறுதிவரை எதிர்ப்பார்கள். வன்முறைகளோ, அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களோ மேலும் மேலும் வன்முறைகளையே கொண்டுவரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. 1977 ஆவணியிலும் புரட்டாதியிலும் இடம்பெற்ற சம்பவங்கள் எங்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்" என்று கூறினார். இந்த அறிக்கையினை ஆராய்ந்த பலர் சன்சொனி கூறியிருப்பது 1977 ஆம் ஆண்டு ஆவணி 18 இல் பாராளுமன்றத்தில் ஜெயவர்த்தன நிகழ்த்திய தமிழர்களைச் சீண்டும் விதமான ஆணவப் பேச்சிற்குச் சற்றும் சளைத்தது இல்லை என்று கூறியிருந்தனர். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தன பின்வருமாறு பேசியிருந்தார், "நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களைப் போன்று, குறிப்பாக முன்வரிசயில் அமர்ந்திருக்கும் அதிகாரம் மிக்க உறுப்பினர்களுக்கு இருக்கின்ற பொறுமையோ சகிப்புத்தன்மையோ கிடையாது. தனியான நாடொன்றினை அமைக்கப்போகிறார்கள் என்று மக்கள் கேள்விப்படும்போது அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்து சமுத்திரத்தின் திறவுகோல் திருகோணமலையென்று நெப்போலியன் ஒருமுறை சொன்னானாம், ஆகவே தமிழர்கள் தமது தனிநாட்டிற்குத் திருகோணமலையை தலைநகராக்கப் பார்க்கிறார்களாம். " "எது எப்படியிருந்தாலும், நீங்கள் தனிநாட்டுக்கான அறிக்கைகளை விடும்போது பத்திரிக்கைகள் அதனை நாடு முழுதும் கொண்டு செல்கின்றன. நீங்கள் வன்முறையினை விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே எதிர்காலத்தில் வன்முறையினைப் பாவிக்கலாம் என்று கூறும்போது, இலங்கையில் வாழும் மற்றைய மக்கள் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்குப் போர் வேண்டும் என்றால், போர் செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்து பார்க்கலாம்" என்று ஜெயவர்த்தனா முழங்கியபோது அவரது கட்சியினர் பலத்த கரகோஷம் செய்தனர். கரகோஷங்களுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய ஜெயவர்த்தன, "இதனை நான் சொல்லவில்லை, எனது மக்களே சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் நடக்கும்போது, சிங்களவர்கள் தாக்கப்படும்போது, அவர்களது கடைகள் எரிக்கப்படும்போது, அங்கிருந்து தப்பி ரயில்களில் ஏறி தென்பகுதிக்கு வரும் சிங்களவர்கள் தமக்கு நடந்தவற்றைச் சொல்கிறார்கள். இதன் விளைவாகவே பல தமிழ் உயிர்களும், முஸ்லீம் உயிகளும் பலியாகின. இவை நடந்திருக்கத் தேவையில்லை. அவை நடந்ததற்காக நான் வருந்துகிறேன்" என்று கூறி முடித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ராஜன் ஹூல் என்பவர் சன்சொனியின் அறிக்கை பற்றிக் கூறும்போது, பாதிக்கப்பட்ட 952 பேரின் சாட்சியங்களை 298 அமர்வுகளில் விசாரித்தும், பாதிக்கப்பட்ட 275 வாக்குமூலங்களை விசாரணை செய்தும் முடிக்கப்பட்ட அறிக்கையினை ஒருவர் படிக்கும்போதும், இந்த அமர்வுகளைத் தொடர்ச்சியாக பார்த்தும் வரும் போதும், 1977 ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனவின் ஆக்ரோஷமான பேச்சினை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கயினை வெளியிடவேண்டும் என்கிற அழுத்தம் சன்சொனி மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பது இலகுவாகப் புரியவரும் என்று கூறுகிறார். சன்சொனி தனது அறிக்கையின் முழுவதிலும் தனிநாட்டிற்கான கோரிக்கையும், அதனை நோக்கிய வன்முறைகள் அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களே இனவன்முறைக்குக் காரணமாக அமைந்தன என்று கூறிவந்தார். தம்மீது நடத்தப்பட்ட சிங்களக் காடையர்களின் தாக்குதல்களுக்கு தமிழர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "வன்முறைகளுக்கான சூழ்நிலையினை நீங்களே உருவாக்கினீர்கள், அதனையே நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் " என்று அவர் தமிழர்களைப் பார்த்துக் கூறினார். இதுதான் அவரது தீர்ப்பு. அவர் சொல்லாது விட்ட ஒரு விடயம் தான், "வன்முறைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர்கள் தான்" என்பது. "தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட வேண்டும்" என்பதும் "தமிழர்கள் தாக்கப்படும்போது, மற்றையபக்கம் பார்த்துக்கொண்டு நில்" என்று பொலீஸாருக்குக் கட்டளையிடுவதுமே சுதந்திர இலங்கையில் அரசியல் இலட்சணமாகிவிட்டது. தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்கும் சிங்களவர்கள் கொடுத்த பதில் இதுதான். 1956 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி, தமிழுக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினை வழங்குங்கள் என்று அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவைக் கோரி, காலிமுகத்திடலில் கால்களை மடித்து பிரார்த்தனையில் ஈடுபட்ட சுமார் 200 தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியபோது, அருகிலிருந்து பொலீஸார் எதுவுமே செய்யாது வேடிக்க பார்த்துக்கொண்டிருந்ததுடன், பலர் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர். சத்தியாக்கிரகம் தமிழ் மக்கள் மீதான "பாடம் புகட்டும் தாக்குதல்களும்" பொலீஸாரின் பாராமுகமும் அன்று கொழும்பிலும், மறுநாள் கல்லோயாவிலும் இடம்பெற்றன. 1958 ஆம் ஆண்டு இதே "பாடம் புகட்டுதல்களும்" பாராமுகமும் இன்னும் பெரிய அளவில் இடம்பெற்றன. 1961 ஆம் ஆண்டின் சமஷ்ட்டிக் கட்சியினர் செய்த சத்தியாக்கிரக போராட்டத்தைக் கலைப்பதற்கும் சிறிமா இதே அரசியல் கலாசாரத்தையே பாவித்தார். ஜே ஆரை பொறுத்தவரை வன்முறை என்பது ஆர்ப்பாட்டங்களை அடக்க தேவையானதும், வீரியம் மிக்கதுமாகக் காணப்பட்டது. ஆடி, 1977 ஆம் ஆன்டு தனது அரசியல் எதிரிகள் மீது, குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். தான் செய்யப்போவது குறித்து அவர் முன்னரே அறிவித்தும் இருந்தார். 1956 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரக நிகழ்வுபற்றி புத்தகம் ஒன்றினை எழுதிய எஸ் பொன்னையா, சிங்களவரின் அரசியல் கலாசாரம் வன்முறையினை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியம் ஒன்றினை குறிப்பிட்டிருந்தார். 1956 ஆம் ஆண்டு, ஆனி 5 ஆம் திகதி, காலை 9:30 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையிலான நேரத்தில் பாராளுமன்றத்தில் தனது தனிச்சிங்களச் சட்டத்தினை பிரகடணப்படுத்த காரில் வந்துகொண்டிருந்தார் அன்றைய பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கண்டதும் தனது காரினை அவர் நிறுத்தினார். சத்தியாக்கிரகிகள் மீது சிங்களக் குண்டர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே சில நிமிடங்கள் அவர் அங்கே நின்றிருந்தார். அங்கு கடமையில் நின்ற சிரேஷ்ட்ட பொலீஸ் அதிகாரியொருவர் பண்டாரநாயக்காவின் காரின் அருகில் வந்து, "தாக்குதல் நடத்தும் குண்டர்களைக் கலைத்து விடலாமா?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பண்டாரநாயக்கா, "இல்லையில்லை, அவர்களைக் கலைக்க வேண்டாம். தமிழர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தின்பின்னர் தலையில் காயத்துடன் பாராளுமன்றம் வந்த அமிர்தலிங்கத்தைப் பார்த்து கேலியுடன் பேசிய பண்டாரநாயக்க, "போரில் ஏற்பட்ட விழுப்புண்களா?" என்று வினவினார். "தேர்தல்களின் பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொலீஸாருக்கு விடுமுறை வழங்குங்கள்" 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர், அரச திணைக்கள வாகனங்களில் நாடு முழுவதும் பவனி வந்த ஜே ஆரின் ஆதரவாளர்கள் ஜே ஆரின் வெற்றியைக் கொண்டாடியதோடு, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாததுபோல பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். ஆவணி 77 இல் நடந்தவை இதற்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளே. 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் மீதும் இதே பாணியிலான அரசியல் வன்முறைகளை ஜே ஆர் ஏவி விட்டார். தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, பல தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1981 இலும் 1983 இலும் தமிழர்களுக்கு மேலும் பல பாடங்கள் சிங்களவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு, பிரதம நீதியரசரான ஹேமா பஸ்நாயக்கவுக்கும் பாடம் புகட்டப்பட்டது. ஜெயவர்த்தனவை விமர்சித்தார் என்பதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு காடையர்களால் தக்கப்பட்டு அவரும் அச்சுருத்தப்பட்டார்.
  17. அதில்லை யாயினி பல வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பியும், அவரது தமக்கையின் சிறு குழந்தைகளும் லா சப்பலால் போகும் போது அங்கிருந்த அண்ணாமார் ,தம்பிமார் ,அங்கிள்மார் எல்லோரும் ஆவென்று பேயை பார்த்த மாதிரி பார்த்தார்கள்...இப்ப நிலமை என்ன மாதிரி என்று தெரியாது
  18. நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் ...அமெரிக்காவில் இருந்து எத்தனையோ பேர் பல வித காரணங்களுக்காய் வேறு நாடுகளில் போய் குடியிருக்கிறார்கள் ...அதற்காய் அமெரிக்கா வாழ தகுதியில்லாத நாடு என்றாகிவிடுமா?..எல்லோரும் தங்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப வாழ்க்கையை தெரிவு செய்கிறார்கள்...அது பிழையில்லை ...ஆனால் அதற்கு பிறகு தாங்கள் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர்கள் மாறி எழுதுகிறார்கள் பாருங்கோ அதைத் தான் நான் உட்பட பலர் பிழை என்கிறார்கள்
  19. ஐயனே, இதில் இருப்பது அவ்ரோ அல்ல... அந்தக் காலத்திய அவ்ரோவின் இரு இறக்கைகளிலும் ஒரு இயந்திரம் தான் இருக்கும் (மொத்தம் இரண்டு.) ஆனால் இதில் நான்கு உள்ளது... இது புலிகளால் தகர்க்கப்பட்டது இல்லை. வேறு ஏதோ ஒரு வானூர்தி.
  20. வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஆங்கில அறிவினை வளர்ப்பதற்காக இலகு நடையில் உள்ள ஆங்கில புத்தகங்கள் வாசிப்பதுண்டு, மேலே உள்ள நாவலின் சிறுகதை வடிவ புத்தகம் வாசித்திருந்தேன். ஆபத்து வரும்போது மனிதர்களோ மிருகமோ ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள், ஒன்று எதிர்த்து போரிடுவது அல்லது தப்பி ஓடுவது, இந்த கதையில் தனது எஜமானியினை விபத்திலிருந்து காக்க குதிரை புகையிரதத்துடன் போரிட முடிவு செய்கிறது (அது தன் அறிவிற்கேற்ப). அந்த விபத்தின் பின் அந்த குதிரையும் அந்த மனிதர்களும் அடிப்படையில்லாமல் கோபமுள்ள முரட்டு மனிதர்களாகவும், குதிரையாகவும் மாறிவிடுகிறார்கள். சில மனிதர்கள் வெறுப்புணர்வுடன் எப்பொதும் இருந்தால் அவர்கள் மனதிலும் இவ்வாறான காயங்களே அவர்கள் இவ்வாறு மாறுவதற்கு காரணம் என்பதனை இந்த புத்தகத்தினை வாசித்ததின் பின்னர் உணர்ந்துகொண்டேன்.
  21. பின்னர் இருவரும் கண்ணைனை உலகை சுற்றி பார்க்க அனுபினார்களாம். கண்ணன் பார்த்து விட்டு வந்து சொன்னானாம்… “உலகம் பூரா செம பிகருகளாய் கிடக்குது ஓய்”🤣
  22. நீங்கள் எனது கேள்வியினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன், வேலையிடத்து விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிறுவனம் மீண்ட்டும் பணி புரிய ஆரம்பிக்கும் வரை சம்பளத்தில் 80% மட்டும் வேலை செய்ய முடியாதகாலத்தில் வழங்கும். பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகள் மற்றும் இந்த 80% சம்பளத்தினை காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்கும். பின்னர் அது தனது காப்புறுதி பிரிமியத்தினை உயர்த்தும், இதனை நிறுவனங்கள் விரும்பாது அதனால் விபத்தினை ஏற்படுத்தினவரினை எதிர்காலத்தில் வேலையினை விட்டு தூக்க விரும்பும். இதனை அறியும் நோகில்தான் கேட்டேன். நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள், அது உங்களது தவறல்ல. இதனை Perception என கூறுவார்கள். கண்ணன் துரியோதனிடம் உலகை சுற்றி பார்த்து விட்டு வருமாறு கூறினாராம், துரியோதனனும் உலகை சுற்றி பார்த்துவிட்டு வந்து உலகம் முழுக்க அயோக்கியர்களாக உள்ளார்கள் என கூறினாராம். கண்ணன் தர்மனிடம் உலகை பார்த்துவிட்டு வந்து உலகு எவ்வாறு உள்ளது என கூற சொன்னார் அதே போல் உலகை சுற்றி பார்த்து விட்டு வந்த தர்மன், உலகில் தர்மம் மேலோங்கியுள்ளது என்றாராம்.
  23. சாப்பாட்டு வகைகளை கேட்கவே நல்ல ருசியாக இருக்கு சிறி.எலும்பு சரியாக பொருந்துவது, நரம்பு சதைகள் மீண்டும் தொடர்பு கொள்வதெல்லாம் எமது உடல் கச்சிதமாக செய்தாலும், ஒரு தவறும் நடக்காமல் எல்லாம் சரிவந்து , சமநிலயையும் எடுத்துவிட்டது பெரிய ஒரு விடயம்தான்.பழையபடி வேலைக்கும் போகத்தொடங்கியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. வேலைக்கு போனால் உடல் நிறை விரைவாக குறையும்
  24. அப்ப உங்களுக்கு நளாயினி ரீச்சரையும் தெரியும்......அல்லது சொந்தக்காரர்? சோதிலிங்கம் வாத்தியார் வீட்டிலையும் ஒரே லிங்கங்கள் தான். யாருடனும் தொடர்பில் உள்ளீர்களா? எல்லாம் அமசடக்கு கள்ளராய் கிடக்கு நாதமுனி என்ன மாதிரி அங்கையும் தேத்தண்ணி குடிச்சிருப்பியள் எண்டு நினைக்கிறன்.
  25. படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. உங்கள் நேரத்திற்கு நன்றி சகோதரி 👍🏼
  26. நில்மினி தங்கள்படங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்கிறது. அப்படி ஒரு மகிழ்ச்சி . பூர்வீக வீடடை அழிக்காமல் அருகில் புதிய வீடு நிர்மாணிக்கும் உங்கள் பண்பு பாராடடத்தக்கது . மஞ்சள் பூ நிறைந்த படத்தில் அரசமரம் வளர்கிறதுபோல் உள்ளது . அவதானம்😃 .
  27. நன்றாய் உள்ளது.தொடருங்கள் நில்மினி.
  28. காசு இருந்தாலும் சமையல் எரி வாயுவுக்கு நீண்ட வரிசையில்இ பெற்றோலுக்கு நீண்ட வரிசையில்இ உங்கள் கையில கேஷ் இருக்கு ஆனால் பிள்ளைக்கு வருத்தம் வரும் போது மருந்து எங்கு தேடியும் கிடைக்கவில்லை அப்போது உங்களுக்கு வரும் பாருங்கள் ஒரு விரக்தி அது எல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும்
  29. ஆம்... ஈழப்பிரியன், அமெரிக்கன் கொடுத்த நட்ட ஈடுகளைப் பற்றி சுவராசியாமாக பத்திரிகை செய்திகளில் வரும். 🙂 அதில் ஒன்று... கொரோனா நேரம், வீட்டில் இருந்து வேலை (Home Office) செய்து கொண்டு இருந்த ஒருவர், தன்னுடைய வீட்டு பாத் ரூமுக்கு போகும் போது... அங்கு நிலம் ஈரமாக இருந்து, வழுக்கி விழுந்ததுக்கும் பெரும் தொகையான நட்ட ஈடு எடுத்தவர். 🤣 நீங்கள் சொல்வதும் சரி சாத்தான். அவசரப் படாமல், கொஞ்ச நாளைக்கு பொறுப்பம். நான் போய்... கதைக்க வெளிக்கிட்டால் தன்னில் பிழை இல்லை என்றும் நினைத்து விடுவார். 🙂
  30. ஐயனே! ஒன்றும் அறியா பாலகனா நீவீர்......?
  31. பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும். பாகம் V ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும். உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும். இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான். ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு. பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன். கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை. ….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது….. நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன். கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும். இப்போ?…பச்…. அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது. கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை. “ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”? கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன். ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான். திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது…….. ”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்” என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்……. மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது. உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன். —————————————— அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும் சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார். தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது. கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி. மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர், ”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”…….. என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில் பேச தொடங்கினார். சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை. பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்….. அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்…. ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு…. அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை. எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது…. இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்…. அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்…. செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி. செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன். அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன். என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்…. எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்…. கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி. அப்ப கூட்டத்தை முடிக்கலாம்…… என்ற தோரணையில்……. கையை திருப்பி….. மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ். (யாவும் கற்பனை) முற்றும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா. ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾 நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀
  32. காலை உணவுக்கேற்ற சத்தான பாயாசம்........! 👍
  33. நம்ம முதலாளிகள் எப்படி கடை திறக்கினம் எப்படி நடாத்தினம் என்பது தொடக்கம் சீட்டுக்காசு வரை அலசி ஆராய்ந்ததை பார்த்தால் நன்றாக அடி வாங்கியிருப்பீர்கள் போல...☺️ நானும் ஒருமுறை இப்படி சீட்டு ஒன்று போட்டு அந்தாள் காசு தரும்போது குப்பை போட்டெறியும் சாக்கில் கட்டி தந்தது இதைக்கொண்டு போய் நான் என்ன செய்ய என்று விட்டு அன்றுடன் விட்ட சீட்டுத்தான் தொடுவதே இல்லை இப்பவும் சீட்டுக்காறன் சொல்லுவார் காசைக்கொண்டு போய் என்ன செய்ய என்று கேட்ட முதலாவது ஆளும் கடைசி ஆளும் நான் தான் என்று. நன்றியண்ணா கதைக்கும் நேரத்துக்கும்
  34. அப்பாடா நானும் பயந்துபோய் இருந்தனான்! ஏழரை அலுப்புக் குடுக்குமோ என்று, சுபமாய் கதை முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனாலும் சீட்டுத் தொடர்வது தான் ஏழரையோ? என்னத்தை பெருப்பிக்கப் போறியள் என்று சொன்னால் ....
  35. தையல் கடை தைப்பதில் தொடங்கி மேக் அப் ஹேர்ஸ்டைல் என்று விரிவடைந்துள்ளது. சுமதி காட்டில நல்ல மழைதான். இரண்டாவது சீட்டு எடுத்து அபிரிக்கன்ஸ் தொகுதியில் கடையோ ? அது கள்ளர் கூட்ட்மெல்லோ ? நல்லா மட்டுப்படப்போகிறா ? "சீட்டுக்கு கட்டி வாழ்ந்தவர்கள் சீரழிந்துபோனவர்கள்" என்று தான் கேள்வி ...என்றாலும் கதாநாயகி வலு கெட்டிக் காரி .
  36. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........( 11). அப்போது அங்கு கபிரியேல் வருகிறான். என்ன நீங்கள் இருவரும் சிரிக்கிறீர்கள், சொன்னால் நானும் சிரிப்பேன். மிருதுளா அவனிடம் சீ .....போடா அதெல்லாம் லேடீஸ் மேட்டர் என்கிறான். அவனும் பதிலுக்கு அவளிடம் நீ போடி என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்து அங்கு ஒரு லூசு லூசு என்று வந்திருக்கு வந்து பாருங்கோ என்று சொல்லி மேலே போகிறான்.இருவரும் வரும்போது சுமதி மிருதுளாவிடம் என்னடி இவன் போடி என்கிறான், லூசு என்கிறான் என்று கேட்க, அதொன்றுமில்லை மேடம் ரேணுகாதான் அவனுக்கு தமிழ் டீச்சர்.தமிழில் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.முகபாவத்துடன் சொல்லுவான்.இப்ப நிறைய தமிழும் கதைக்கிறான். பிரேமாவுடன் பிரெஞ் கதைப்பதைவிட தான் தமிழ் படிச்சு தமிழில் கதைப்பது பெட்டராம். சுமதி சிரித்துக் கொண்டே வருகிறாள். மேலே ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ஓ......நீங்களா வாங்கோ என்ன விடயம் ....அது வந்து சுமதி நாளைக்கு மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போக வேண்டும், இந்த ப்ளவுசை கொஞ்சம் லூசாக்கித் தரவேண்டும், அத்துடன் இந்த சாறிக்கு ஏற்றதுபோல் ஒரு உள் பாவாடையும் தைத்துத் தரவேண்டும். சரியென்று மிருதுளா அவரைக் கூட்டிச்சென்று அளவுகள் எடுத்து விட்டு "நாளை மதியத்துக்கு பின் வாங்கோ" என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். பின் சுமதியிடம் இது இரு மாதங்களுக்கு முன் நாங்கள் தைத்துக் கொடுத்த சட்டைதான் மேடம். இப்போது கொஞ்சம் சதை போட்டு குண்டாகி இருக்கிறாள். நான் அப்பவே உள்ளே சிறிது துணி கூட விட்டுத்தான் தைத்தது.கெதியா சரிபண்ணிடலாம் என்கிறாள். அப்ப இவன் லூசு என்று சொன்னது இந்த லூசைத்தான் போல. இதையாடா லூசு என்று சொன்னனி என்று அவனிடம் கேட்க அவனும் ம்....என்று தலையாட்டுகிறான். கபிரியேலையும் கூட்டிக்கொண்டு தனது அறைக்கு வந்த சுமதி அவனிடம் கபிரியேல் இந்த வாரத்துடன் உனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இது உனது புது ஒப்பந்தம் படித்துப் பார்த்துவிட்டு உன் அபிப்பிராயத்தை சொல்லு. கடிதத்தை வாங்கிப் படித்த கபிரியேல் தனது வேலை ஒப்பந்தம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்திருப்பதை பார்த்து விட்டு சுமதியிடம் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை சுமதி ஆனால் நான் சமீபத்தில் இரண்டு லொறிக் கம்பெனிகளில் சாரதிக்கான நேர்காணலுக்குப் போயிருந்தேன். அவர்கள் எந்நேரத்திலும் எனக்கு பதில் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.அப்படி அழைப்பு வந்தால் நான் உங்களிடம் சொல்லி விட்டு அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன். --- ஏன் கபிரியேல் உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையா, அல்லது சம்பளம் குறைவு என்று நினைக்கிறாயா, அல்லது நிரந்தரமான வேலை ஒப்பந்தம் போட்டுத் தரவா என்று சொல்கிறாள். --- ஓ......நோ .....அப்படியொன்றும் இல்லை மேடம். லாரிகள் ஓட்டுவதென்பது ஒரு ஜாலியான வேலை. 1000 / 1500 கி.மீ. லாரி ஒட்டிக் கொண்டு போவதும் வழியில் ஏனைய லாரி சாரதிகளுடன் வயர்லெஸ்சில் உரையாடிக் கொண்டு செல்வதும் இடத்துக்கு இடம் வித விதமான உணவுகள் தங்கும் ஹோட்டல்கள் எல்லாம் சொல்லி வேல இல்லை சுமதி, அந்த சுகம் அனுபவிக்கனும் அப்ப புரியும். கதைக்கும் போதே கனவுகளில் மிதக்கிறான்.பிரெஞ் இளைஞன் அல்லவா அவனது உணர்வுகள் அவளுக்குப் புரிகிறது. --- சரி கபிரியேல் நீ விரும்பியதுபோல் எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம். ஒரு நல்ல நண்பர்களாக உன்னுடன் வேலை செய்யும் இந்த நாட்கள் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.இருவரும் படியேறி மேலே கடைக்கு வருகிறார்கள். சரி .....மிருதுளா நாளைக்கு நீ எட்டரைக்கு வந்து கடையை திறந்து விடு. அந்நேரம் கதீஜாவும் வந்து விடுவாள். இருவருமாக கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல் 13:00 மணிக்கு கபிரியேல் வரட்டும் சரியா.....! --- சரி மேடம். உங்களுக்கு மிக்க நன்றி. --- ம்....இன்னும் ஒன்று, இப்ப வேலைகள் நிறைய வருகின்றன, கதீஜாவும் இருப்பதால் ஆபிரிக்கன்ஸ் அல்ஜீரியன்ஸ் ஓடர்களும் கொஞ்சம் வரலாம் அதனால் நான் வேறு ஆட்களை எடுக்கும் வரை நீயும் அவளும் விரும்பினால் வேலை அதிகம் இருக்கும் நாட்களில் கூடுதலாக இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து விட்டுப் போகலாம். அதற்குரிய பணத்தை நான் தனியாக உங்களின் கைகளில் தந்து விடுகிறேன். --- சரி மேடம். ஆறுமாதங்கள் பின் கடை ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கு. கபிரியேல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு டிரான்ஸ்போர்ட் கொம்பனியில் வேலை எடுத்துக் கொண்டு போய் விட்டான். கடைக்கு மேலும் ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு ஆட்களை மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருந்தார்கள். கதீஜாவுக்கு கீழ் அறையில் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்கு. அங்கு அவள் ஆபிரிக்கன் பெண்களுக்கு தலை அலங்காரம் ஒப்பனைகள் செய்வதுடன் மேலே கடையில் குறிப்பாக ஆபிரிக்கன் ஆடைகள் விற்கும் பகுதியிலும் அவர்களுக்குரிய ஸ்பெஷல் திருமண ஆடைகள் போன்றவை தைத்துக் கொடுப்பதிலும் தகுதி பெற்றவளாக சிறப்பாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். மேலும் சிறுமிகளுக்கும் குமரிகளுக்கும் தலை பின்னுவதில் கிடைக்கும் பணத்தை கதீஜாவே எடுத்துக் கொள்ளுமாறு சுமதி சொல்லியிருந்ததால் அவளுக்கு அந்தப் பணத்துடன் சுமதி தரும் சம்பளப்பணமும் கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சி. அன்று "லக்கி டெய்லரிங் & டெக்ஸ்டைல்ஸ்" மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு சேகர் வருகிறான்.சுமதி அவனை வரவேற்று என்ன சேகர் இந்தப் பக்கம், நீ சும்மா வரமாட்டாயே என்கிறாள். --- அதொன்றுமில்லை அக்கா, வாரமாதம் ஒரு புது சீட்டு ஒன்று தொடங்கிறன். இந்தமுறை தொகையும் கொஞ்சம் அதிகம். அதுதான் ஒரு சீட்டுக்கு உங்களையும் சேர்க்கலாம் என்று சொல்ல ...... சுமதிக்கு "இனிமேல் நீ சீட்டுகள் போடக் கூடாது என்று சுரேந்தர் சொன்னது ஞாபகத்தில் வந்து போகுது. ஆனாலும் மனம் இந்த சீட்டைப் போட்டு கழிவு குறைவாய் வரும்போது எடுத்தால் " லா கூரினேவிலும்" (தமிழர்களும், ஆபிரிக்கங்களும் செறிந்து வாழும் ஒரு இடம்) ஒரு தையல் கடை திறக்கலாம் என்று கணக்குப் போடுது. சரி சேகர் என்னையும் ஒரு சீட்டுக்கு சேர்த்துக்கொள் என்று சொல்கிறாள். சேகர் போகிறான். --- மனம் சொல்லுது, நீ பாட்டுக்கு சீட்டுக்கு சொல்லி விட்டாய், நாளைக்கு சுரேந்தர் கேடடால் என்ன செய்வாய். --- நீ சும்மா இரு, எனக்கெல்லாம் தெரியும். அந்தாளுக்கு சமயம் பார்த்து சூடாக ஒரு பிரியாணி போட்டு விட்டால் எல்லாம் சரியாயிடும்.........! சுபம். யாவும் கற்பனை.....! யாழ் அகவை 25 க்காக ........! ஆக்கம் சுவி........! 🙏 🙏 🙏
  37. இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.
  38. இது சரியாக புரியவில்லை ....... ஒத்துவராத காரணத்தினால்தானே மொழி இனம் தெரியாத நாடுகளுக்கு கூட ஓடி வேண்டி வந்தது இப்போதும் கூட ஆயிரக்கணக்கான சிங்களவர்களே வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள் குடிசையில் பிறந்து வளர்ந்தால் ? குடிசையிலேயே வாழ்ந்து இறக்கவும் வேண்டுமா? ஒரு மனிதன் முன்னேறவே கூடாது என்கிறீர்களா? அல்லது எங்கு எப்படி பிறந்தார்களோ அங்கே அப்படியே வாழ வேண்டும் என்கிறீர்களா? உண்மையில் சரியாக புரியவில்லை! உங்களிடம் இருக்கும் எண்ணத்தை கொஞ்சம் விளக்கமாக தருவீர்களா? எந்த நிலையிலும் சிங்களபேரினவாதம் ஆட்ச்சி வைத்திருக்கும் நாடு பெரும்பன்மை தமிழர்களுக்கு ஒதட்டுவந்ததே இல்லையே ? உயிரை கூட விடுவோம் மண்டியிட்டு வாழோம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இருந்துகூட இருக்கிறார்களே ?
  39. ஒரு வைர வியாபாரியின் மகன் தன்தந்தையிடம் வந்து கேட்டானாம், அப்பா நான் வாழ்க்கையின் பெறுமதியை எப்படி அளப்பது? எப்படி அதற்கேற்ப என் வருங்காலத்தை அமைத்துக்கொள்வது என்று கேட்டானாம். அதற்கு அப்பா, நாளைக்கு வா நான் சொல்லித்தருகிறேன் என்றாராம். அடுத்தநாள் மகன் வந்தபோது அவன் கையில் ஒருவித கல்லைக்கொடுத்து இதை நீ உன்கையில், மற்றவரின் கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு குப்பை கொட்டும் இடத்தில் காலையிலிருந்து மாலைவரை நில். என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மாலையில் வீடு வந்தமகன், அந்தக்கல்லை யாரும் பெரிதாக எண்ணவில்லை, ஏதோ வந்து பார்த்துவிட்டுப்போய் விட்டார்கள் என்றானாம். அடுத்தநாள் இதை பல்பொருள் அங்காடியில் வைத்துக்கொண்டு நில் என்றாராம், மாலையில் வந்த மகன் அதை சிலர் வந்து பார்த்தார்கள் சில்லறை விலை கேட்டார்கள் என்றானாம். மறுநாள் படித்தவர்கள் கூடும் இடமான நூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாராம், வந்த மகன் சொன்னாராம், யாரும் பெரிதாக அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, வந்து பார்த்தார்கள் அது என்ன விலை என்று கேட்டார்கள் போய் விட்டார்கள் என்றானாம். இன்னொருநாள் மிகுந்த ஆடம்பரமான செல்வர்கள் கூடுமிடத்தில் வைத்துக்கொண்டு நிற்கும்படி கூறினாராம். மகனுக்கு ஒரே ஆச்சரியம், என்னதான் சொல்லித்தருகிறார், கடைசியாக இதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணிக்கொண்டு போய் நின்றாராம். அவன் அங்கே நின்ற போது ஒரு பணக்காரர் அலங்கார உடையுடன் பெரிய காரில் வந்து இறங்கினாராம், இவனது கையில் கிடந்த கல்லைக்கண்டதும் அவனருகில் சென்று என்ன இங்கே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்துச்சென்று விலையுயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து உபசரித்து அவனது கல்லின் பெருமையையும் விலை மதிப்பையும் கூறினாராம். அவர் யாருமல்ல, வைர வியாபாரி. அதே போலவே நாம் மற்றவர்மேல் காட்டும் மரியாதை, அன்பு, இரக்கம் போன்றவையும். அதை மதிக்கத் தெரிந்தவர்களுக்கே அதன் பெருமை புரியும். நீங்கள் அவரின் குடும்ப பின்னணி, எதிர்காலம், வயதை எண்ணி மன்னித்திருந்தாலும் அவர் அதை உங்களில் பிழை இருந்தபடியாலேயே அதை செய்தீர்கள் என தவறாக நினைத்திருக்கலாம். இருந்தாலும்; உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி என்று ஒரு வார்த்தை சொல்ல தகுதியற்றவரோ என எண்ணத்தோன்றுகிறது. உங்களில்தான் பிழை என கருதுவாராகில் அவர் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புண்டு, அப்போ யாரும் உங்களைப்போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஏற்கெனவே சிலர் இந்த விடயத்தில் அவரைப்பற்றி புரிந்திருப்பார்கள், அவரது செயலுக்கான குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், அப்போ அவர் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வதுடன் அதற்க்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டி வரலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட போது, அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மரியாதை செலுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை மன்னிப்பு கேட்க செய்யாமல் காட்டிய பெருந்தன்மையை அவர் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கலாம். எது என்னவாக இருந்தாலும் பெரியவா பெரியவாள் தான்!
  40. முதலில் சிறியின் ஆக்கத்துக்கு நன்றியும் பாராட்டுக்களும்.மற்றது இங்கு விவாதிக்கப்பட்ட ஊருக்கு போய் வாழ்வது பற்றியது.நான் அறிய பலா; அங்கு வந்து வாழ்கிறார்கள் நான் உட்ப்பட.அதில் வெளி நாட்டு வதிவிடத்தைஅறுதியாக விட்டவர்களும் அடக்கம்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே.பெரும் பணக்காரர்கள் பந்தாவுடன் வாழ்ந்தால் மேலதிக ஆபத்து உண்டுதான்.எந்த வாழ்க்கை முறை பிடிக்கும் என்னறதைப் பொறுத்துத் தான் எங்கு வாழ்வது என்பது அமையும்.
  41. திரும்பும் வரலாறு - பாகம் 3 – நாசிகள். fபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) ஒரு வித்தியாசமான பேர்வழி. பயிர்கள் வளர நைதரசன் அவசியம். ஆனால், காற்றில் நிறைந்திருக்கும் நைதரசன் வாயுவை எல்லாப் பயிர்களாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாது. ஹேபர், நைதரசனை அமோனியா உரமாக மாற்றும் வழியைக் கண்டு பிடித்தது உலக விவசாய உற்பத்திக்குப் பாரிய பங்களிப்புச் செய்தது. இந்தக் கண்டு பிடிப்பிற்காக அவருக்கு இரசாயனவியலில் நோபல் பரிசும் கிடைத்தது. ஹேபரின் அடுத்த கண்டு பிடிப்பு கொஞ்சம் விவகாரமானது. குளோரின் வாயுவை, வாயுவாகவே குடுவையில் வைத்திருக்கும் முறையை ஹேபர் கண்டு பிடித்த போது, முதலாம் உலகப் போர் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. ஹேபர், பிரெஞ்சுப் போர் முனைக்கு தனது குளோரின் வாயுச் சிலிண்டர்களை ஜேர்மன் படையினரோடு சேர்ந்து எடுத்துச் சென்று பதுங்கு குழியில், காற்று பிரெஞ்சுப் படைகள் இருந்த பக்கம் வீசும் வரைக் காத்திருந்தார். காற்று வளமாக வந்த வேளையில் குளோரின் வாயுவைத் திறந்து விட்டார். காற்றோடு சேர்ந்து பிரெஞ்சுப் படைகளின் பக்கம் நகர்ந்த குளோரின் வாயு தான் முதலாவது இரசாயன ஆயுதம். தரையோடு சேர்ந்து பரவிய குளோரின் வாயு எதிரிகளின் பதுங்கு குழிகளுக்குள்ளும் இறங்கி அவர்களை மூச்சுத் திணற வைத்தது. குளோரின் வாயுவினால் உடனடியாக இறக்காதோர் கண் பார்வை, நுரையீரல் என்பன நிரந்தரமாகப் பாதிக்கப் பட்டு சில நாட்களில் இறப்பர். அந்த மரணம் வரை உடல் அனுபவிக்கும் உபாதை கொடூரமானது. இவ்வாறு ஒரு தடவையில் ஜேர்மனி பயன்படுத்திய குளோரின் வாயுவினால் மட்டும் ஆயிரத்திற்கு சற்று அதிகமான பிரெஞ்சு, கனேடியப் படைகள் இறந்தனர். ஹேபருக்கு ஜேர்மனியில் மதிப்பு உயர்ந்தது, ஆனால் அவர் தனது விஞ்ஞான அறிவை இவ்வாறு பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஹேபரின் மனைவி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதில் சுவாரசியமான தகவல் என்னவெனில், ஹேபர் ஒரு ஜேர்மனிய யூதர்! ஆனால், ஜேர்மன் தேசபக்தி காரணமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, 1933 இல் ஹிற்லர் ஆட்சிக்கு வந்த வேளையிலும் மேலும் சில இரசாயனவியல் வாயுக்களைக் கண்டறிந்து ஜேர்மனியின் விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் அடுத்துக் கண்டு பிடித்த வாயு, ஐதரசன் சயனைட் வாயு. சிக்லோன் (Zyklon) என்று அழைக்கப் பட்ட இந்த நச்சு வாயுவை இலகுவாக சில திண்மப் பொருட்களிலிருந்து தயாரிக்கும் வழியை ஹேபர் கண்டு பிடித்தார். இந்த நச்சு வாயுவை பூச்சி கொல்லியாகப் பாவிக்கும் நோக்கமே ஹேபரினுடையதாக இருந்தது. ஹேபரின் இந்தக் கண்டு பிடிப்புத் தான் அடுத்த 5 ஆண்டுகளில், சிக்லோன் - பி என்ற பெயரில் மில்லியன் கணக்கான யூதர்களை வாயு அறைகளில் அடைத்து வைத்துக் கரப்பான் பூச்சிகள் போல சில நிமிடங்களில் கொலை செய்யப் பயன் படுத்தப் பட்டது. ஆனால், இது நடப்பதற்கு முன்னரே ஹேபரின் யூத அடையாளம் காரணமாக அவரையும் ஜேர்மன் நாசிகள் ஒதுக்கி வைத்து விட்டமையும் நடந்தது. திட்டமிட்ட யூத ஒதுக்கல் முதலில், எடுத்தவுடனேயே நாசிகள் யூதர்களையும் ஏனையோரையும் கொலை செய்ய ஆரம்பிக்கவில்லை. உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன, சர்வதேச வர்த்தகம், இராஜ தந்திர உறவுகள், 1936 பேர்லின் ஒலிம்பிக் என்பன இன்னும் ஜேர்மனியை படுகொலைகள் செய்ய விடாமல் தடுத்திருந்தது. ஆனால், சில திட்டமிட்ட நாசி நடவடிக்கைகள் யூதர்களைக் குறி வைத்தன (இது முழுமையான பட்டியல் அல்ல!): 1. யூதர்களின் வியாபாரங்களைப் புறக்கணிக்கும் படி கோரும் பிரச்சாரம் மூலம் யூதர்களின் பொருளாதாரம் முடக்கப் பட்டது. இது மட்டுமன்றி, புதிதாக ஆரம்பிக்கப் படும் வியாபரங்களில் யூதர்கள் முழு உரிமையாளர்களாக இருக்க முடியாத கட்டுப் பாடுகளும் உருவாக்கப் பட்டன. 2. வர்த்தக சங்கங்களில் யூதர்கள் அங்கத்துவராக இருக்க முடியாத சட்டங்கள் உருவாக்கப் பட்டன. நாசி ஆதரவாளர்களால் நிர்வகிக்கப் பட்ட தொழிற்சங்க அமைப்புகளே முன்னின்று இந்த ஒதுக்கல்களைச் செயல் படுத்தினர். 3. சட்டத்தரணிகளாக, மருத்துவர்களாக, மருந்தாளர்களாக யூதர்கள் பணி செய்யும் அனுமதியை ஜேர்மன் நகரங்களும் மானிலங்களும் மறுத்தன. 4. ஒரு கட்டத்தில், ஜேர்மன் யூதர்களின் பிரஜாவுரிமையைப் பறித்து விடும் சட்டமொன்று வரைபாக சில மாதங்கள் விவாதிக்கப் பட்டது. இறுதியில், சர்வதேச எதிர்ப்பு வரலாமென்பதால் அதை நிறைவேற்றாமல் விட்டார்கள். ஆனால், 1938 அளவில் ஜேர்மன் யூதர்களின் கடவுச் சீட்டுகளைத் தற்காலிகமாகப் பறிமுதல் செய்து, அதில் "ஜெ" என்ற எழுத்தைக் குறித்துத் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த "ஜெ" என்ற எழுத்துக் குறித்த கடவுச் சீட்டுகளை ஜேர்மன் அதிகாரிகள் புதுப்பிக்க மறுத்ததால், நடைமுறையில் ஜேர்மன் யூதர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தனர். 5. ஜேர்மன் பாடசாலைகளில் யூதக் குழந்தைகள் சேர முடியாமல் தடை வந்தது. ஒரு கட்டத்தில் எல்லா யூதர்களையும் ஒன்று கூட்டி, பஸ்களில் ஏற்றி நகரின் ஒரு மூலையில் யூதர்களுக்கு மட்டுமே உரியதான ஒரு குடியேற்றத்தில் ஒதுக்கி வாழ வைத்தனர். நினைத்த நேரத்தில், ஜேர்மன் பொலிஸ், காக்கிச் சட்டைக் கும்பல் என்பன இங்கே நுழைந்து யாரையும் கைது செய்ய, தாக்க இந்தக் குடியேற்றங்கள் வாய்ப்பாக இருந்தன. யூதர்கள் அல்லாதோருக்கும் சட்டரீதியான ஒதுக்கல் முன்னரே குறிப்பிட்டது போல, றோமா எனும் ஜிப்சி மக்களும் கூட யூதர்களுக்கு இணையாகப் பாதிக்கப் பட்டனர். இன்னொரு விதமான கொடுமையான ஒதுக்கலையும் நாசிகள் சட்ட ரீதியாக்கினர்: 1933 இல், நாசிகள் உடற்குறைபாடுகள் தொடர்பான ஒரு சட்டத்தை இயற்றினர்: Law for the Prevention of Progeny with Hereditary Diseases. இந்தச் சட்டத்தின் நோக்கம், அப்பழுக்கற்ற ஆரிய இனமாக ஜேர்மனியர்களை மாற்றும் போலி விஞ்ஞான நோக்கமாக இருந்தது (Eugenics - இதை மனிதர்களில் செய்யவே முடியாதென்பது வேறு கதை). அடுத்த 8 வருடங்களில், ஹிற்லரின் கட்டளைப் படி, “ஒபரேஷன் T4” எனும் பெயரில் இரகசியமாக முன்னெடுக்கப் பட்ட திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் வரையான உடல், மன ஊனங்கள் உடையவர்கள் வாயுக் கூடங்களிலும், விஷ ஊசிகளாலும் கருணைக் கொலை செய்யப் பட்டனர். உண்மையில், யூதர்களைக் கொல்லப் பயன்படுத்தப் பட்ட சிக்லோன் பி விஷவாயு, இந்த உடல் ஊனமுற்றோரில் தான் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது. பின்னர், 1938 இல் இருந்து இதே முறை மூலம் யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதித் தீர்வு - “Final Solution” 1938 நவம்பர் 9 ஆம் திகதி "உடைந்த கண்ணாடி இரவுகள்" (Kristallnacht) என அழைக்கப் படுகிறது. அந்த இரவில் தான், கும்பலாக நாசி ஆயுததாரிகளும், காக்கிச் சட்டைகளும் ஜேர்மன் யூதர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு சில நூறு யூதர்களைக் கொன்றனர். ஆயிரக் கணக்கான யூதர்கள் கைது செய்யப் பட்டு, புச்சன்வால்ட் வதை முகாமிற்கு அனுப்பப் பட்டனர் - இவர்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயு அறைகளில் பின்னர் கொல்லப் பட்டனர். இதே ஆண்டில், நாசிகள் ஆஸ்திரியாவையும், பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவையும் எதிர்ப்பின்றிக் கைப்பற்றி, அங்கே வாழ்ந்த யூதர்களையும் வெவ்வேறு வதை முகாம்களில் அடைத்தனர். ஜேர்மனிக்கு வெளியே, போலந்தில் இருந்த ஆஸ்விற்ஸ் வதை முகாம் தான் அதிக கிழக்கு ஐரோப்பிய யூதர்களைப் பலி கொண்ட கொலைக்களம். ஆனால், வதை முகாம்களில் மட்டுமன்றி சில இடங்களில் திறந்த வெளிகளிலேயே யூதர்கள் பெருந்தொகையாகக் கொல்லப் பட்டனர். இத்தகைய திறந்த வெளிக் கொலைக்களங்களில் முக்கியமானதாக உக்ரைன் தலைநகர் கியேவிற்கு அண்மையில் இருக்கும் பாபி யார் (Babi Yar) பள்ளத் தாக்கு விளங்குகிறது. இந்தப் பகுதியை இயற்கைப் புதைகுழியாகப் பயன்படுத்தி, சுமார் 34,000 யூதர்களை நாசிகள் சில நாட்களில் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டே கொன்றொழித்தனர். இந்த பாபி யார் படுகொலையில் அந்தக் காலப் பகுதியில் சோவியத் எதிர்ப்பாளர்களாக இருந்த உக்ரைனிய ஆயுதக் குழுக்களும் பங்கு கொண்டிருந்தன. 1938 முதல் 1945 வரையான காலப்பகுதியில் மூன்றுக்கு மேற்பட்ட வதை முகாம்கள், ஏனைய திறந்த வெளிக் கொலைகளங்களில் கொல்லப் பட்ட யூதர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியன்கள். இதை விட மேலதிகமாக நாசிகளால் கொல்லப் பட்ட ஏனையோர் 4 மில்லியன் வரை இருப்பர். இப்படி, செறிவான, வினைத்திறனான மனிதக் கொலையே முழுமூச்சாக இயங்கிய ஒரு அரச நிர்வாகத்தை அது வரை உலகம் கண்டிருக்கவில்லை. “மிகுந்த வீரரான” 😎ஹிற்லர், இத்தனை படுகொலைப் பழிக்குப் பின்னரும் பொறுப்பை முன்வந்து ஏற்றுக் கொள்ள முடியாமல், தன் காதலியோடு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது குற்றத்தில் பங்கு கொண்ட பலர் பிடிக்கப் பட்டு மரண தண்டனைக்குள்ளாகினர். இஸ்ரேல் சில நாசிகளை, தென்னமெரிக்கா வரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்று பிடித்து வந்து இஸ்ரேலில் வைத்துத் தூக்கில் போட்டது சுவாரசியமான கதை. ஆனால், ஹிற்லர் இருக்கும் போதே அவருக்குத் தண்ணி காட்டிக் கலங்கடித்த ஒரு கதாநாயகனும் இருந்தார்: அவர் அக்கால பிரிட்டன் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில்! சேர்ச்சிலின், அவர் தலைமையில் நாசிகளுக்கு சவால் விட்ட பிரிட்டனின் கதை நாசிகளின் நரவேட்டையை விட உரத்துச் சொல்லப் பட வேண்டிய வெற்றிக் கதை! - வெற்றிக் கதை தொடரும்- -ஜஸ்ரின்
  42. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(2). கதவைத் திறந்து கொண்டு வரும்போதே இவங்கள் துலைவராலை மனுஷர் நிம்மதியா ஒரு வேலை வெட்டிக்கு போய் வர ஏலாமல் இருக்கு ......! --- ஏனப்பா வரும்போதே புறுபுறுத்துக் கொண்டு வாறியல் ..... ---அதுக்கில்லையப்பா வருமானம் வருதோ இல்லையோ மாசக்கடைசியில வீட்டுக்காரர் வாடைக்காசுக்கும், மெட்ரொக்காரரின் வேலைநிறுத்தமும் வந்திடும். நான் இரண்டு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருப்பன் இவங்களால சனத்துக்குள் இடிபட்டு நெரிபட்டு இப்ப வாறன் வேர்த்தொழுக .......உள்ளே போய் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்தண்ணீர்ப் போத்தலை எடுத்து குடித்து விட்டு ஒரு பியர் டின்னையும் எடுத்துக் கொண்டு மேசையில் இருந்த வறுத்த கடலை, கசுகொட்டை, பாதாம் பைக்கட்டையும் எடுத்துக் கொண்டு வந்து சுமதியின் அருகில் அமர்கிறார். சுமதியும் எழுந்துபோய் காற்றாடி பொத்தானை அழுத்தி விட்டு வந்து அவரருகில் மார்பு உரச நெருக்கமாக உட்காருகிறாள். நல்ல காற்றும் அவளின் அருகாமையும் சுரேந்தரின் மன இறுக்கத்தை தளர்த்தி இதமாக்குகின்றது. ---இஞ்சயப்பா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டே ......ம்....சொல்லு...... சேகரிட்ட நாங்கள் போட்ட சீட்டு இந்தமுறை எங்களுக்குத்தான் விழுந்திருக்கு. வழக்கமா சீட்டு ஏத்தி விடுகிற ஆட்கள் இந்த ஸ்ட்ரைக்கால வர பிந்திப் போட்டினம். கழிவு குறைவென்ற படியால் நான் எடுத்துப் போட்டன். வார கிழமை சேகர் காசை கொண்டுவந்து தாறனெண்டு சொன்னவர். ---அப்படியே சங்கதி....இந்த ஸ்ட்ரைக்கால நல்லதும் நடந்திருக்கு எண்டு சொல்லுறாய். நல்லது....நீங்கள்தான் உடுப்புகள் தைத்து கஷ்டப்பட்டு சீட்டு போட்டனீங்கள், வாங்கி பத்திரமாய் வைத்திருங்கோ. --- நானும் முதல் அப்படிதானப்பா நினைச்சனான், பிறகுதான் யோசித்தன், நாங்கள் ஏன் "லா சப்பலில்" ஒரு இடம் எடுத்து தையல் கடை போடக்கூடாது. சுரேந்தர் இடைமறித்து உது உமக்கு இப்ப தேவையோ, ஏற்கனவே நீங்கள் அங்க இங்க என்று அலைந்து திரிந்து செய்யும் வேலை சிரமமானது,...... சுமதியும் கொஞ்சம் பொறப்பா நான் சொல்லுறதையும் கேளுங்கோவன். அதுக்குள்ளே "ஆடறுக்கமுதல் விதைக்கு விலை பேசுறியள் " --- சரி சொல்லும், அவளும் (கிளாசில் பியரை நிரப்பி விட்டு பருப்பு பக்கட்டையும் பிரித்து வைக்கிறாள்). ம்...தங்கட காரியம் நடக்க வேணுமென்றால் எல்லாம் செய்வினம்.மனதுக்குள் நினைத்துக் கொள்கிறான், சொல்லவில்லை --- என்னிடம் இப்ப தைக்க வாற ஆட்கள் கனபேர் வருகினம்.கடை திறந்தால் இரண்டு பேரை கூட வைத்தும் வேலை செய்யலாம். அதுக்கு மேல கடை என்று ஒன்று இருந்தால் பின்னடி காலத்திலும் எங்களுக்கு உதவும். ---சிறிது யோசித்த சுரேந்தரும் சுமதி சொல்வதும் சரியென்று தோன்றவே, ம்....முதல்ல காசு கைக்கு வரட்டும் பிறகு இடம் பார்க்கலாம் என்ன .....! சுமதியும் புருஷனை சரிகட்டிய மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று கோப்பையில் இடியாப்பமும் சொதியும் விட்டுகொண்டுவந்து குடுக்கிறாள். சுரேந்தரும் என்னப்பா ஒரு முட்டையாவது பொரித்திருக்கலாமே என்று சொல்லிப் போட்டு சாப்பிட்டுவிட்டு கட்டிலுக்கு செல்கிறான். சுமதியும் காற்றடியையும் தொலைக்காட்சி பெட்டியையும் அனைத்து விட்டு அறைக்குள் போகிறாள். சிறிது நேரத்தில் அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........! தைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..........! 💞
  43. 🤣 சிரிப்போ சிரிப்பு 🤣 · Rejoindre P Baskar Uadangudi · · போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்... முதல் நாள் : எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்.. நம்ம உடம்பை Control பண்றதை விட., மனசை Control பண்றது கஷ்டம்.. ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது வெளியில விட்ட செருப்பை நினைக்கும்.. விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்.. இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்.. நீங்க ஒரு காரை Start பண்றீங்க.. ஆனா அந்த கார்... Right-ல திருப்பினா - Left-ல போகுது., Left-ல திருப்பினா - Right-ல போகுது., Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது.., பின்னாடி போட்டா - முன்னாடி போகுது.., அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்.. மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்.., காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க.. அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க.. ஆனா எங்க குருவோ.., " Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! " அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்.. அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்.. அப்ப குரு பார்த்துட்டார் என்ன கேட்டேனா.. ? " ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..? நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? " இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,
  44. பாதுகாப்பும் பந்தோபஸ்த்தும் 1968 ஆம் ஆண்டு, தாம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் மிகுந்த விரக்தியோடும், ஆத்திரத்தோடும், டட்லி சேனநாயக்கவின் அரசின் பங்காளிகள் எனும் நிலையிலிருந்து வெளியேறிச் சென்றனர். தந்தை செல்வாவின் கட்சி மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமுமே தாம் தொடர்ச்சியாக சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுவருவது குறித்து இதே காலப்பகுதியில் மிகுந்த சினங்கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது குறிப்பிடத்தக்களவு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் அடக்குவதற்கு தமது அரச அதிகாரத்தையும், ராணுவ பலத்தையும், கூடவே சிங்களக் குண்டர்களையும் சிங்களத் தலைவர்கள் பாவிக்கத் தொடங்கியிருந்தனர். காலிமுகத்திடலில் தமிழ்த்தலைவர்கள் நடத்திய சத்தியாக்கிரக நிகழ்வினை குண்டர்களைக் கொண்டு அடித்து அழித்த சிங்களத் தலைவர்கள், அதனைத் தொடர்ந்து கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் வேலை செய்துவந்த தமிழ் அதிகாரிகள் மீதும், தமிழ் விவசாயிகள் மீதும் கடுமையான வன்முறைகளை அவிழ்த்துவிட்டிருந்தனர். இருவருடங்களுக்குப் பின்னர், 1958 இல் தமிழர் மீதான திட்டமிட்ட வன்முறைகள் இலங்கையின் பல பாககங்களிலும் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. இத்தாக்குதல்களில் முதலாவது பொலொன்னறுவையூடாகச் சென்றுகொண்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு ரயில் மீது பதவியா குடியேற்றத்தில் வசித்துவந்த சிங்களக் குண்டர்களால் நடத்தப்பட்டது. பின்னர் இத்தாக்குதல்கள் அநுராதபுரம், தலைநகர் கொழும்பு, கண்டி உட்பட பல மலையகத் தமிழ்ப்பகுதிகளுக்கும் பரவியது. தமிழர்கள் சகட்டுமேனிக்குத் தாக்கப்பட்டதுடன், குழந்தைகள் கொதிக்கும் தார்ப் பீபாய்க்களுக்குள் வீசிக் கொல்லப்பட்டனர். பலர் தாம் உடுத்திருந்த உடைகளுடன் அவர்களின் வீடுகளிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டதுடன், ஆங்காங்கே அமைக்கப்பட்ட அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இப்படித் தஞ்சம் புகுந்த தமிழர்களை அரசு கப்பல்கள் மூலமும், ரயிகள் மூலமும் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது. தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களும், அரச இயந்திரமும் திட்டமிட்ட வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்க, இந்த வன்முறைகளுக்கான காரணம் தமிழ் சமஷ்ட்டிக் கட்சியினர் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டதுதான் என்றும் குற்றஞ்சாட்டிய பண்டாரநாயக்கா, சிங்களவர்களின் ஆத்திரத்தைத் தணிப்பதற்கு ஒரே வழி சமஷ்ட்டிக் கட்சியினரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதுதான் என்று கூறியதுடன் அவர்களை 1958 ஆனி 4 ஆம் திகதிலிருந்து 1958 புரட்டாதி 4 வரை சிறையில் அடைத்தார். அவ்வாறே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசு சமஷ்ட்டிக் கட்சியினர் இலங்கையில் தமிழருக்கென்று தனியான நாடொன்றினை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்கிற குற்றஞ்சாட்டி 1961 ஆம் ஆண்டு சித்திரை 17 இல் மீண்டும் சிறையில் அடைத்தது. அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட தருணத்தில் அரச வானொலியில் உரையாற்றிய சிறிமாவோ பின்வருமாறு கூறினார், "கடந்த வாரம் சமஷ்ட்டிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் தமிழர்களுக்கென்று தபால் சேவை ஒன்றினையும், காவல்த்துறை ஒன்றினையும், காணி கச்சேரியையும் உருவாக்கி, தமிழர்களுக்கு காணிகளுக்கான அதிகாரத்தினையும் வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது சட்டபூர்வமாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவமத்திக்கின்ற, அதன் அதிகாரத்திற்குச் சவால் விடுகின்ற நடவடிக்கையாவதோடு, தமிழர்களுக்கென்று தனியான நாடொன்றினை இலங்கையில் உருவாக்குவதனை நோக்காகக் கொண்டே இது நடத்தப்பட்டுவருகின்றது என்பதும் தெளிவு". சிறிமாவின் முக்கிய மந்திரிகளில் இருவரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மற்றும் சி பி டி சில்வா ஆகியோர் டட்லியின் அரசைத் தோற்கடிக்க தந்தை செல்வாவின் உதவியினை முன்னர் நாடியிருந்தனர். பின்னர் 1960 இல் தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் இருவரும் தனிச் சிங்களச் சட்டத்தினை தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் அமுல்ப்படுத்த 1961 இல் முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து, யாழ் கச்சேரிக்கு முன்பாக சமஷ்ட்டிக் கட்சியினர் இன்னொரு சத்தியாக்கிரக நிகழ்வினை 1961, மாசி 20 ஆம் நாள் ஒழுங்குசெய்தனர். ஆரம்பத்தில் சமஷ்ட்டிக் கட்சியினரால் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. யாழ் கச்சேரியின் வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் சிங்களத்தில் நிர்வாகம் நடத்தப்படுவதனை தடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து இலங்கையின் ராணுவச் சரித்திரத்தில் முதன்முறையாக பங்குனி 30 அன்று ஒரு தொகுதி கடற்படை வீரர்களை இலங்கையரசு வான்வழியாக யாழ்ப்பாணத்தில் தரையிறக்கியது. யாழ் கச்சேரியினைச் சுற்றிவளைத்து தமிழர்கள் இப்பகுதிக்கு வருவதனைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. ஆனால், தனியார் காணிகளுக்கூடாகவும், சிறுவீதிகள், ஒழுங்கைகளுக்கூடாகவும் பெருமளவு தமிழர்கள் கச்சேரிநோக்கி திரள் திரளாக வந்துகொண்டிருந்ததால் சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. அகிம்சை ரீதியிலான தமது ஆர்ப்பாட்டத்தை ராணுவ ரீதியில் அடக்க அரசு முனைந்ததற்குப் பதிலடியாக சமஷ்ட்டிக் கட்சி தமது சத்தியாக்கிரக நடவடிக்கைகளை ஏனைய தமிழ்ப் பகுதிகளான வவுனியா, மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்த கச்சேரிகளுக்கு முன்னாலும் விஸ்த்தரித்துக் காட்டியது. தமது அகிம்சை ரீதியிலான போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் வலுத்துவரும் ஆதரவினை உணர்ந்துகொண்ட சமஷ்ட்டிக் கட்சியினர், சில குறிப்பிட்ட சட்டங்களை வேண்டுமென்றே மீறுவதன்மூலம் சிறை செல்ல எத்தனித்தனர். அதன்படி சித்திரை 14 இல் தமிழ் அரசு தபால்ச் சேவை எனும் நடவடிக்கையினை அவர்கள் ஆரம்பித்தனர். தபால் அதிபராக தன்னை அமர்த்திக்கொண்ட தந்தை செல்வா அவர்கள் ஆயிரக்கணக்கான தபால்த் தலைகளை விநியோகித்தார். மேலும் சித்திரை 16 ஆம் திகதி தமிழ் அரசு காணிக் கச்சேரியையும் அவர் ஆரம்பித்தார். இதன்மூலம் தமிழ் விண்ணப்பதாரிகளுக்கு அரச காணிகள் உரிமையாக்கப்பட்டன. சமஷ்ட்டிக் கட்சி தனது சத்தியாக்கிரக போராட்டத்தை, அரசுக்கு அடிபணியாமைப் போராட்டமாக முன்னெடுத்திருப்பதைக் கண்ட சிறிமா அரசு இதற்குப் பதிலடி கொடுக்க நினைத்தது. உடனடியாக அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திய சிறிமா, தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க ராணுவத்திற்கு சகல அதிகாரங்களையும் வழங்கி அனுப்பிவைத்தார். இதன் முதற்படியாக சமஷ்ட்டிக் கட்சியின் சத்தியாக்கிரக ஏற்பாட்டாளர்களையும், அதற்குத் துணையாக பணிபுரிந்த பல தொண்டர்களையும் ராணுவம் கைதுசெய்தது. சத்தியாக்கிரகப் போராட்டங்கள் அரச அடக்குமுறையினால் செயலிழக்க வைக்கப்பட்டாலும் கூட தமிழ் மக்களிடையே விடுதலைக்கான வேட்கை சிறிது சிறிதாக பற்றியெரிய இச்சத்தியாக்கிரக நடவடிக்கை காரணமாகியது. மேலும், தமது அகிம்சைவழிப் போராட்டத்தை கொடூரமாக அடக்க இறக்கப்பட்டிருக்கும் அரச ராணுவத்துடன் நேரடியாக மோதுவது எனும் மனநிலையினை தமிழ் இளைஞர்கள் மத்தியிலும் இது ஏற்படுத்திவிட்டிருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.