Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    15
    Points
    46798
    Posts
  2. nilmini

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    929
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/21/23 in all areas

  1. அது ஒரு நிலாக்காலம். வானத்தில் நட்சத்திரங்களை மேவி நிலா பொழிந்து கொண்டு இருந்தது. குளிர் அடர்ந்த வனமாக வானம் விரிந்து கிடந்தது. பறவைகளின் கூடுகளிற்குள் இருந்து அவற்றின் கலவி ஒலி சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. நந்தியாவட்டை மொட்டுக்கள் பூப்பதற்கான தன் இதழ்களை அவிழ்த்துக் கொண்டு இருந்தன. தெருவில் பவள மல்லிகையின் வாசம் பரவிக் கிடந்தது. என்று இப்படி எல்லாம் வர்ணணைகளுடன் ஒரு கதை எழுதுவம் என்று யோசித்தால், இந்த சொந்தக் கதை, சோகக் கதையைத் தான் முதலில் எழுது என்று மனம் அருட்டிக் கொண்டு இருந்தது. இது போன வருடம் சென்னை சென்று திரும்பும் போது நிகழ்ந்த சோகக் கதை. சோகக் கதை என்பதை விட நான் கிலோக்கணக்கில் அசடு வழிந்த வண்ணம் விமானத்தில் பயணம் செய்த கதை இது. எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம். அன்றும் அப்படி தான் சென்னைக்கு அக்கா குடும்பத்தை பார்க்க போய் 10 நாட்கள் நின்று விட்டு மீண்டும் ரொரண்டோ திரும்பு நாள். சென்னை - எப்ப நினைத்தாலும் என் மனசுக்குள் இனிக்கும் நகரம்! அங்கு போனவுடன் ஒரு பழைய பாட்டா (Bata) செருப்பை மாட்டிக் கொண்டு, அரைக்காற்சட்டையுடன், ரொரண்டோவில் 10 டொலருக்கு வாங்கிய ஷேர்ட் போட்டுக் கொண்டு ஆட்டோவில் (Auto) வெளியே சுற்றுவது பிடித்த விடயங்களில் ஒன்று. பத்து நாட்கள் நின்றால் 5 நாட்களாவது அங்குள்ள சைவ கடைகளான சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு நேரச் சாப்பாடாவது சாப்பிடுவன். ஊருக்கு சென்றாலோ அல்லது சென்னைக்கு சென்றாலோ "வெளிநாட்டு மிதப்பை " காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுண்டு. எனவே எப்பவும் சாதாரண உடுப்பும் பாட்டா செருப்பும் தான். ஆனால் விமானப் பயணத்தில் அப்படிச் செய்ய முடியுமோ? தச்சுத்தவறி பக்கத்து சீட்டில் ஒரு அழகி வந்து அமர்ந்து விட்டால் என்ன ஆவது? அதுவும் தனியாக பயணம் போகும் போது... சொல்லி வேலை இல்லை...! எனவே அங்கு கொண்டு போய், ஒரு நாளும் போடாத நல்ல முழுக்கை ரீஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, ஒன்றுக்கு பல தடவை கண்ணாடியில் என்னை நானே அழகு பார்த்து "நீ மன்மதன் தாண்டா.. " என்று திருப்தி பட்டுக் கொண்டு, அக்காவிடம் "நான் நல்ல வடிவா இருக்கின்றேனா" என கனக்க தரம் கேட்டு வெறுப்பேற்றி விட்டு, விமான நிலையம் வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை விமான நிலையம் ஒரு கரைச்சல் இல்லாத விமான நிலையம். நல்ல வசதியான விமான நிலையம் (இன்னும் 100 வரிகளிற்குள் இதை நான் மாற்றிச் சொல்ல போகின்றேன் என்று எனக்கே தெரியாது அப்ப). 10 வயது சின்னப் பிள்ளை கூட குழப்பம் இல்லாமல் பயணிக்கலாம் . வாசலில், கடவுச் சீட்டையும் விமான சீட்டையும் பரிசோதிக்கும் வேறு மானிலத்தை சேர்ந்த பொலிஸ்காரர் மேல் மட்டும் தான் குறை சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும், வேண்டும் என்றே தாமதித்து விட்டு, முறைத்து பார்த்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார். தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்று தொண்டைத் தண்ணீர் வற்ற பேசும் தம்பி சீமான் , தமிழர் விமான நிலைய வாசலில் தமிழர் தான் நின்று பரிசோதிக்க வேண்டும் என்ற உப கோரிக்கையையும் வைத்து பேசினால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு உள்ளே சென்றேன். விமான நிலையம் சென்று 30 நிமிடங்களில் பரிசோதிப்புகள் எல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் (Boarding pass) எல்லாம் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் அறைக்குள் சென்று விட்டேன். பாஸ்போர்ட்டை செக் பண்ணிய, நல்ல கறுத்த தமிழர் ஒருவர் "...அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற.. அள்ளி எடுத்த கைகள்" என்று "இளமை எனும் பூங்காற்று" பாடல் வரிகளை முணு முணுத்துக் கொண்டே செக் பண்ணினார். ஆள் வேலைக்கு வர முன்னர் வீட்டில் என்ன செய்து விட்டு வந்திருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன். உள்ளே இருக்கும் ஒரு பெரிய கண்ணாடியில் மீண்டும் என்னை பார்த்து... "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்து விட்டு மேலும் உள்ளே சென்றேன். அக்கா வீட்டில் இரவுச் சாப்பாட்டை 8 மணிக்கே முடித்து இருந்தேன். சாமம் 3 மணிக்கு கிளம்பும் விமானத்தை பிடிக்க நடு இரவு 11:30 இற்கே விமான நிலையம் வந்து விட்டேன். எப்பவும் 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையம் வந்து விடுவேன். ( ஒரு முறை தாமதமாக போய் அருந்தப்பில் விமானத்தை தவற விட பார்த்த பின் ஏற்பட்ட ஞானத்தால் வந்த பழக்கம் இது) 8 மணிக்கே சாப்பிட்டதால் லைட்டாக பசி எடுக்க ஆரம்பித்தது. சரி என்ன விற்கின்றார்கள் என்று பார்த்து வருவதற்காக எழும்பி மெதுவாக விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தேன். ஒரு இடத்தில் அழகான சின்ன சின்ன சிலைகளுடன் பெரிய நடராஜர் சிலையையும் வைத்து இருந்தார்கள். நவராத்திரி காலம் அப்பதான் முடிவடைந்தமையால் கொலுவும் வைத்து இருந்தார்கள். ஒன்றிரண்டு படங்களை கிளிக்கி விட்டு என்ன சாப்பாட்டுக் கடை இருக்கு என்று பார்க்கத் தொடங்கினேன். ஒரு இடத்தில் இட்டலியும் சட்னியும் வைத்து இருந்தார்கள். ஆஹா, இட்டலி என்று நினைத்து வாங்க போகும் போது "உதை சாப்பிட்டால் உழுந்து சில நேரம் 'பின்' விளைவுகளை வேகமாக்கும்" என்று மனம் எச்சரித்தது. சரி இட்டலி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்து இன்னொரு பக்கம் போனால், நல்ல சுடச் சுட பால் கோப்பியும், சமோசாவும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் ஒருவர் அவற்றை வாங்கி நல்ல ஸ்ரைலாக சமோசாவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்க்க எனக்கு வாயூறியது. சமோசாவை சாப்பிட்டு விட்டு கோப்பியை குடித்தால் இந்த சாமத்தில் நல்ல தெம்பாக இருக்கும் என்று அவற்றை வாங்கினேன். இப்படி உணவை வாங்கியவர்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். "என்ன இப்படி நின்றபடி சாப்பிடுகின்றார்கள்... நாகரீகம் தெரியாதவர்கள்... ஐ யாம் ப்றோம் கனடா.. இப்படி நின்று சாப்பிட்டால் சரியாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டு, வசதியாக எங்காவது அமறலாமா என தேடத் தொடங்கினேன். ஒரு கையில் சில்லு இருக்கும் சூட்கேஸ் (Hand luggage). மற்ற கையில் கோப்பியும் சமோசாவும் உள்ள ஒரு சிறு Tray. கோப்பி வாசனை நாக்கில் உள்ள சுவையரும்புகளை மீட்டிக் கொண்டு இருந்தது. கதிரைகள் வரிசையாக இருக்கும் ஒரு இடத்தில் நாலு ஐந்து கதிரைகள் காலியாக இருந்தன. ஒருத்தரும் அந்த வரிசையில் இல்லை. அப்பாடி, ஒருத்தரும் அருகில் இல்லை...ஆற அமர இருந்து சமோசாவை சாப்பிட்டு கோப்பியை குடிப்பம் என்று போய் ஐந்து கதிரைகள் கொண்ட வரிசையில் நடு நாயகமாக போய் இருக்கும் கதிரையில் போய் அமர்ந்தேன். ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான். அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன. அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன். முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது. இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது. இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே.. கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்! எவராவது இந்த கோலத்தை பார்க்கின்றார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் கவனித்து இருக்கவில்லை. "ஆஹா.. இந்த கதிரைகளின் நிலை தெரிந்து தானா இந்த சனம் இந்த கதிரை வரிசைக்கு கிட்ட கூட வரவில்லை" என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன். "சரி இப்படி கோப்பி நாற்றத்துடன் (வாசம் நாற்றமாகியது இந்த வரியில் இருந்து தான்) போக முடியாது, கோப்பியில் ஊறிய நனைந்த உடுப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என ஹாண்ட் லக்கேஜ் (Hand luggage) இனை திறந்து பார்த்தேன். வழக்கமாக இப்படி அவசரத்துக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் உடுப்பும் சறமும் ஹாண்ட் லக்கேஜ் ஜில் வைப்பது வழக்கம். கிட்டத்தட்ட 60 தடவைகளாவது விமானப் பயணம் செய்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக எடுத்து வைப்பேன். ஹாண்ட் லக்கேஜ் ஜினை திறந்து பார்க்கின்றேன்... அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும், துவாயும், போன் சார்ஜரும், தான் இருக்கு. என் உடுப்பு ஒன்றையும் காணவில்லை.. மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பும் இல்லை... இனி நான் என்ன செய்வேன்... (மிகுதி தொடரும். அதில் நான் புது உடுப்பு வாங்க இந்த வசதி ஒன்றும் இல்லாத விமான நிலையம் எங்கும் கோப்பியில் ஊறிய, பால் கோப்பி நாற்றத்துடன் கடை கடையாக ஏறி இறங்கிய கதையையும் எனக்கு வாய்த்த ரீஷேர்ட் பற்றியும் எழுதுகின்றேன்.)
  2. நானும் முதல் தரம் கேள்விப்படும்போது அப்படிதான் யோசித்தேன் சிறி. முந்திகேள்விப்படாத பெயர். ஆனால் நல்ல தரமான மா. https://www.tamilkadai.ca/addakari-roasted-red-raw-rice-flour-8Lb-Kalappadam
  3. குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும் காணவில்லை . குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை. மீன்பிடடுக்கு குழைத்த மாவுடன் சதைப்பிடிப்பான மீனை அவித்து மிளகாய்த்தூள் மஞ்சள் உப்பு சேர்த்து பின் வெங்கயம்பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அதையும் மீனுடன் சேர்த்து அவித்தால் ருசியோ ருசி .
  4. வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா?? அவர்களுடன் பேசி இருக்கின்றோமா? என்றால் இல்லை என்பது தானே எமது பதில்? நான் அப்படி யாரும் அருகில் வந்தால் அல்லது அவர்களின் பக்கத்தால் போகவேண்டி வந்தால் கடந்து செல்லும்வரை மூச்சை நிறுத்துபவன் அல்லது முகத்தை முழுமையாக கிடைப்பதால் மூடுபவன் நான். ஆனால் அவர்களும் மனிதர்கள் இந்த நிலைக்கு அவர்கள் வர ஏதாவது வலுவான காரணமுண்டல்லவா? நாம் சிந்தித்துண்டா? முதன் முதலில் வீதிக்கு வரத்தான் கடினமாக இருக்கும் வந்துவிட்டால்??? இப்படித்தான் பாரிசின் வீதிகளில் பல நூறுபேர்... நான் கண்டு கொண்டதில்லை எந்த உதவியும் செய்ததில்லை கண்டால் மூச்சையே நிறுத்துபவனால் எப்படி அருகில் சென்று உதவமுடியும்?? அண்மையில் எனது சின்ன மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன் எனது கடைக்கு பக்கத்தில் இவ்வாறு வீதியில் இருக்கும் ஒரு பெண்ணைக்கண்டதும் நான் முகத்தை மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு அகல எனது மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வந்தாள் என்ன என்று கேட்க அவருக்காக ஒரு சாப்பாடு தான் வாங்கி வந்ததாக சொன்னாள். இப்படி பலரும் அவளுக்கு சாப்பாடும் தண்ணீரும் உடுப்புக்களும் கொடுப்பதை பலமுறை நானும் கண்டிருக்கின்றேன் ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது செய்து கொண்டே இருக்கிறது என்பதும் இவர்கள் தங்க பல இடங்களை அரசு ஒதுக்கி இருக்கிறது ஆனால் இவர்கள் அதை பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை இருந்தது நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர் வந்தார் அந்த பெண்ணுடன் இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு வந்தது அதனால் இவரிடம் எனது மகளும் சாப்பாடு கொடுத்ததை சொல்லி இவர்கள் பற்றிய அவரது கருத்தைக்கேட்டேன் அவர் சொன்னார் ஏன் இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா? அரச ஒதுக்கும் இடங்களில் வீதிகளில் நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள் அங்கே ஆண்களே வல்லுறவுக்கு தப்பமுடியாதபோது பெண்களின் நிலை என்ன??? என்றார் தூக்கிவாரிப்போட்டது எனக்கு... உலகில் எவ்வளவு விடயங்களை அறியாமல் விமர்சனமும் வியாக்கியானமும் கேலிகளும் செய்தபடி வாழ்கிறோம்???? யாழுக்காக விசுகு...............
  5. புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே... நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே... வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே... வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே.. ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே... மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே.. பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே... கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே... ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ... சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...
  6. பச்சைச்சத்தண்ணியில குழைச்ச இடியப்ப மாவுக்கவு முன்னம் ஒரு தண்ணியும் செல்லுபடியாகாது.😎 போனகிழமை பசியில் வேலையால வந்து கிழிஞ்ச நீத்துப்பெட்டியில புட்டு அவிக்க வெளிக்கிட்டு, புட்டுப்பானையை திறந்து பார்த்தால் பானைக்குள் களிதான் இருந்தது.பசியில் கொஞ்சத்தை மாசி சம்பலுடன் சாப்பிட்டேன்.😂
  7. அம்மாவின் கைப்பக்குவதுடன் மிகவும் ருசியாக இருந்திருக்கும்
  8. தங்கச்சி மரக்கறிக்காரி ( நான் கடலுணவு சாப்பிடுவேன்). அவதான் இது இல்லாம நல்லா சமைப்பா. சாப்பிட்டுப்பார்க்கிறேன். இந்த செய்முறை நல்லதா சிறி ? ரெண்டு கோப்பை சாப்பிட்டால் குண்டம்மாவாகத்தான் வரவேணும். சிறி ஒருநாளைக்கு மட்டும் சாப்பிட்டு பார்க்க சொல்லி இருப்பார்😁
  9. எச்சரிக்கை: இது உங்களை குண்டம்மா ஆக்குற பிளான் போலக் கிடக்கு......! 😂
  10. நில்மினி, கறி வைத்து சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும். 👍 நிச்சயம் இந்தக் கறியுடன், இரண்டு கோப்பை சோறு போட்டு சாப்பிடுவீர்கள். 🤣
  11. சீனா, தாய்லாந்து கடைகளில் இருப்பவை பெரிய மொத்த தாமரை கிழங்காக இருக்கும். சுவையும் குறைவு. நம்மூர் கிழங்குகள் ஆக மெல்லியது நல்ல நீளமாக இருக்கும். சுவையோ சுவை. அந்த மாதிரி இருக்கும். வேறை லெவல். 😂 கோகிலா தண்டை அந்தக் கடைகளில் நான் கவனிக்கவில்லை. அடுத்தமுறை நிச்சயம் கேட்டுப் பார்க்க வேண்டும். அதன் ஆங்கிலப் பெயர் என்ன? மற்றும்படி... இங்கிலாந்துக்கு நண்பர்கள், உறவினர்கள் யாரும் போய் வரும் போது.. சொல்லி விட்டால் வாங்கிக் கொண்டு வந்து தருவார்கள். ஒரு முறை... @விசுகு பிரான்சில் இருந்து தாமரை கிழங்கு கொண்டு வந்து தந்தவர். 🙂
  12. யாழ்ப்பாணத்து தாமரை கிழங்கு கறி. கிராமத்து சுவையில் தாமரை தண்டு பிரட்டல்.
  13. நானும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கு சா அண்ணாவுக்கு ரசிய புட்டினில் ஏன் இவ்வளவு அக்கறை என்று பார்த்தேன் 🤣 அப்படியா புட்டு என்ற பெயர் வந்தது😂
  14. மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், தமிழக, ஆந்திர, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள்.
  15. ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும். சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan) ஆக்கலும் விட்ப்பார்கள் தகவலுக்கு நன்றி நாதமுனி.
  16. இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬 கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷
  17. என்ரை ஊரிலை ஆட்டக்காரி எண்டு சொன்னால் கதை கந்தல்
  18. நில்மினி, ஜேர்மனியில் உள்ள தமிழ்க் கடைகளில் இந்த மா இருக்குதோ தெரியவில்லை அடுத்தமுறை போகும் போது… விசாரித்து பார்க்க வேண்டும்.
  19. கொட்டாங்கச்சி இட்லி .......! 👍
  20. அங்கே இடி முழங்குது
  21. மா மட்டுமல்ல பருப்பு. அரிசி......இப்படி பல பொருள்கள் கூப்பன் அட்டையுள்ளவர்களுக்கு [ ஏழைகளுக்கு ]. வழங்கப்பட்டது இதனால் கூப்பன். மா. என்று பெயர் வந்தது பலநோக்கு சங்கத்தின் கடை மூலம் இப்பொருள்கள். வழங்கப்பட்டது...இந்த .கடையில் வேலை செய்பவர்கள் ..அநேகமாக கல் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். ஒரு எழுதுவிளைஞர். வேலை செய்பவரால் கூட அந்த காலத்தில் வீடு கட்ட முடியவில்லை........இவர்கள் சாமன்கள். நிறுக்கும்போது. ..சாமன் உள்ள பக்கத்தில் கீழே மெல்ல ஒரு தட்டு தட்டுவார்கள். .....அப்படி வேண்டும் சாமன்கள். ஒரு கிலோகிராம் என்றால் கண்டிப்பாக 50.......100. கிராம். குறைவாக தான் இருக்கும் 🤣
  22. ரெண்டுபேரும் நல்ல பிரண்ட்ஸ் 😀. குருவிக்கு தேடி திரியாமல் இரை (பூச்சி) கிடைக்கும்
  23. இவை பூச்சிகள். இலைகள் அல்ல.
  24. ஐ லைக் திஸ் கு.சா டச் யா …🤣 காதலில் இதுதான் ஏழு நிலை…. காணும் இடம் எல்லாம் அவன், தூணிலும் அவன், துரும்பிலும் அவன், போனிலும் அவன், பிசைந்த புட்டிலும் அவன். மணந்தால் மாஸ்கோ தேவன், இல்லையேல் மரண தேவன் 🤣
  25. சுவையான புட்டினை அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும் 1...மா. நன்றாக வட்ட வேண்டும் 2...வட்டிய. மா. அரிக்க வேண்டும் 3. ...நன்கு கொதித்த நீரில் குழைக்க வேண்டும் 4..தண்ணீர் கூடினால். அமெரிக்கா கோதுமை. மாவைச். சேர்த்து பதம். வரும் வரை அமர்த்தி பிசைத்து குழைக்க வேண்டும் 5...குழைத்த மாவை சிறு சிறு. துண்டுகளாகும் வரை சுண்டினால். நன்றாக குத்தவேண்டும் 6....இதனுடன் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேங்காய் பூ சேர்த்து கலக்கவேண்டும். 7....இந்த கலவையை நன்றாக அவித்து எடுக்க வேண்டும் பச்சை மா கூடாது....பச்சை தண்ணீர் கூடாது....சுடுநீர் அதிகரிப்பு கூடாது புட்டினை குழைக்கும்போது கவனம் தேவை 🤣😂
  26. ரசியன் அதிபர் புட்டினின் பிடித்த உணவு புட்டு என்று, எமது ரசிய உளவாளி உடான்சு சுவாமியார் ரகசிய தகவல் தந்துள்ளார்...
  27. அட நீங்கள் வேற சிறித்தம்பி! ஏற்கனவே எனக்கு துரோகி,வெங்காயம் பட்டங்கள் இந்த சித்திரத்திலை இதை சுய ஆக்கம் பகுதியில பதிஞ்சால் அவ்வளவுதான். சனம் புட்டே சாப்பிடாது. புட்டு மருவி புட்டினாக மாறியது என்பது இங்கு எத்தனை பேருக்குத்தெரியும்?
  28. புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.
  29. இதென்ன கோதாரி கண்ணும் தெரியுதில்லை. புட்டின் பெருமையா பூட்டினின் பெருமையா?
  30. நான்…. ரஷ்ய அதிபரின், அருமை பெருமைகளைப் பற்றி சொல்லப் போகிறீர்களாக்கும் என நினைத்து விட்டேன். 😂 புட்டின் சிறப்பு என்றால்… அதனை இன்ன கறியுடன் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை.👍🏽 வாழைப்பழம், சீனி, சர்க்கரை என்று எதனுடனும் சாப்பிடலாம்.😋 புட்டினுக்கு…. தமிழர்கள் கண்டு பிடித்த உணவுகளின் அரசன் என்றே கிரீடம் சூட்டி மகிழலாம். 🥰 🤣 *** இதனை, யாழ் கள சுய ஆக்கம் பகுதியில் பதிந்திருக்கலாமே.***
  31. இடியப்பத்தைக்கூட ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியாது. ஆனால் புட்டு ஒருநாளும் அலுக்காது. நான் இன்று கூப்பன் மா புட்டு சாப்பிட்டேன். பாரை மீன் குழம்புடன். கனடாவில் இருந்து ஆட்டக்காரி அரிசி மா பார்சலில் வர பிந்தி விட்டது.
  32. 👆1569´ம் ஆண்டு கட்டப் பட்ட... 454 வருடங்கள் பழமையான 👆 மருந்தகம் (Apotheke) (Dispensary) இது, இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. 🙂 👇 கீழே உள்ள படம் 👇 அதன் முழுமையான நான்கு மாடி கட்டிடம். 454 வருடங்களுக்கு முன், மரத்தால்…. நான்கு மாடியில் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. 🙂 ஜேர்மனியின் பழைய கால 🏚️ கட்டிடக் கலை மிகவும் அழகானது. 🥰 இரும்பை விட, மரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்படியான கட்டிடங்கள் 600 - 700 வருடங்கள் தாண்டியும், இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 👍 இப்படியான கட்டிடங்களை... வீட்டின் உரிமையாளர் நினைத்தாலும், வெளியில் எந்தப் புதிய மாற்றத்தையும் செய்ய முடியாது. வெளியே உள்ள மரங்களோ, சீமெந்து பூச்சுக்களோ பழுதாகி இருந்தால்.... அதனை அகற்றி மீண்டும் அதே மாதிரி புதியவை வைக்கப் பட வேண்டும். இதனை அந்தந்த இடத்து நகரசபை, கண்காணித்துக் கொண்டு இருக்கும். 😎 இப்படியான கட்டிடங்கள் ஜேர்மனியின் எல்லா இடங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும்... சில இடங்களில்... மிக நெருக்கமாகவும், அதிகமாகவும் காணப்படும். 🏚️ இங்கே உள்ள படங்கள் அண்மையில் நான் (Reha) தெரப்பி செய்வதற்காக சென்ற (Tübingen) என்ற நகரத்தில் காணப்படும் கட்டிடங்களே இவை. ஒரு குறுகிய இடத்தில், பல ஆயிரம் கட்டிடங்களை கண்டு பிரமிப்பாக இருந்தது. 🤗 அவர்கள்... அந்தக் காலத்து வீதிகளை கூட மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே பேணி, பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். 👍 இந்த நகரத்தில் மக்கள் அதிகரிக்க, அதற்கு அருகிலேயே நவீன கட்டிடங்களுடன் 🏥 புதிய நகரத்தை உருவாக்கி, பழைய நகரத்தின் அழகு கெடாமல் வைத்திருப்பது... பல உள்நாட்டு உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாது 👯‍♂️ ✈️ வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஆயிரக் கணக்கில் வர வைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்தப் படங்கள்... இந்த வருடம் 📆 தை, மாசி மாதங்களில் எடுக்கப் பட்டவை. படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சரியான பதில் சொல்பவருக்கு... "கெட்டிக்காரன் / காறி" என்ற பட்டம் வழங்கப் படும். 😂 💖 யாழ். களத்திற்காக... 💖 செய்தியும், படப் பிடிப்பும்: தமிழ் சிறி. 😂 படங்கள் இன்னும் வரும்.... 🙂
  33. மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.... #ஒரு மரத்துக் #பனபதநீர் குடித்தால் அடி மரமாய் உடம்பு வரும் ! #பனை மரத்துக் #பதநீர் குடித்தால் கட வெலும்பும் இரும்பாகும் ! பதநீர் நமக்குச் சுகமளிக்கும் ! வெள்ளை ரத்தம் – அந்தக் #கரும்பனையும், தென்னையும் நம் கழனித் தெய்வம் ! #பதநீர் குடித்துக் #கெட்டாரைக் கேட்ட துண்டா? பதநீர் குடித்துச் #செத்தாரைப் பார்த்த துண்டா? #எலும்புறுக்கி நோய் தீரும் தென்னங் #பதநீரால் ! எரிசூட்டு நோய் தீரும் #பனையின் பதநீரால் ! அதிகாலைக் #பதநீர் குடித்தால் அச்சம் போகும் ! அந்தி #பதநீர் குடித்தால் ஆயுள் நீளும் ! #தாகம் எடுக்கையிலே தமிழ்க்கிழவி அவ்வை #பதநீர் அருந்தித்தான் களிப்போடு வீற்றிருந்தாள் ! கடையேழு #வள்ளல்களும் கவிஞர்கள் எல்லோர்க்கும் #பதநீர் விருந்து கொடுத்தன்றோ கௌரவம் செய்தார்கள் ! வில்வேந்தர் வேல்வேந்தர் வீரவாள் வேந்தர் #பதநீர் அருந்தியன்றோ கட்டுடம்பு வளர்த்தார்கள் ! #சித்தர்கள் நமக்குச் சீதனமாய் கொடுத்த முத்தனைய பதநீர் வேண்டி முழக்கம் செய்திடுவோம் ! விருந்தாகி #மருந்தாகி விடிகாலை உணவாகி #விவசாயி வாழ்க்கையிலே வருமானம் வழங்குகிற வரம் கொடுக்கும் தேவதைகள் ! அளவான #போதை அளிக்கும் பொருளென்றால் அருந்தலாம் என்று அரசியல் சாசனமே அதிகாரம் தருகிறது! #போதை இல்லாத அளிக்கின்ற #பதநீரை ஏனருந்தக் கூடாது! ஏனிறக்கக் கூடாது! - கவிஞர் மேத்தா
  34. மிளகுத்தூள், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆலிவ் கொண்ட கோழிக்கறி, எளிதான செய்முறை தேவையான பொருட்கள்: - 4 கோழியின் நெஞ்சுப்பகுதி - 1 சிவப்பு மிளகாய் - 1 பச்சை மிளகாய் - 1 மஞ்சள் மிளகாய் - 1 கோழி sauce - 12 சிறிய உருளைக்கிழங்கு (அல்லது 4 பெரிய உருளைக்கிழங்கு துண்டுகளாக வெட்டப்பட்டது) - 1 பெரிய வெங்காயம் (அல்லது 2 நடுத்தர வெங்காயம்) - பூண்டு 4 கிராம்பு - 1 தேக்கரண்டி எஸ்பெலெட் மிளகு - 2 bay இலைகள் - ஆர்கனோ 1 தேக்கரண்டி - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - சிறிது ஆலிவ் எண்ணெய் - சுவைக்க உப்பு - ஒரு சில ஆலிவ்கள் - 5 பெர்ரி தயாரிப்பு: உங்கள் பொருட்களை தயார் செய்யவும்: விதைகள் மற்றும் தோல்களை அகற்றிய பின் மிளகாய்களைக் கழுவி கீற்றுகளாக வெட்டவும். வெங்காயத்தை நறுக்கவும், பூண்டு கிராம்புகளை நசுக்கவும். உருளைக்கிழங்கை உரிக்கவும். அவை பெரியதாக இருந்தால், துண்டுகளாக வெட்டவும். உணவு: ஒரு பெரிய வாணலியில் மூடி அல்லது ஒரு பாத்திரத்தில், சிறிது ஆலிவ் எண்ணெயில் கோழியின் நெஞ்சுப்பகுதி பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும். அவற்றை வெளியே எடுங்கள். அதே வாணலியில், மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும். பூண்டு சேர்த்து, வதக்ககப்பட்ட கோழி, கோழி sauce மற்றும் 30 கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். உப்பு, Espelette மிளகு, Bay இலை, ஆர்கனோ மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். கொதித்த பிறகு குறைந்த வெப்பத்தில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். உருளைக்கிழங்கு சேர்த்து 25 முதல் 30 நிமிடங்கள் சமைக்கவும். சமையல் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், ஆலிவ்களைச் சேர்க்கவும். பரிமாறும் போது, தட்டில், 5 பெர்ரிகளுடன் தூவி அழகு படுத்தவும். உணவை இரசித்து உண்ணுங்கள் Thanks: Google translate
  35. இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை. புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.