Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    33600
    Posts
  2. Paranee

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    11
    Points
    1503
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  4. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23922
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/28/23 in all areas

  1. சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே 99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன். என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.
  2. மலர்.......(6). சங்கருக்கும் இராசம்மாவுக்கும் மனசுக்குள் ஒரே குற்றவுணர்வாய் இருக்கிறது. நிர்மலாவின் பெற்றோரும் அவளைத் தேடி அங்கு வந்திருந்தார்கள்.இருபகுதியினரும் சண்டை பிடித்து வாக்குவாதப் பட்டு பின் தனித்தனியே சென்று போலீசில் நிர்மலாவை காணவில்லை என்று புகார் குடுத்து விட்டு வந்திருந்தார்கள். இவ்வளவுக்கும் சங்கரின் புது மனைவியான ஜோதி அவர்களின் கண்களில் படவேயில்லை. நிர்மலாவின் தந்தை சண்முகம் போகும்போது சங்கரிடம் இதை தான் இப்படியே விடப் போவதில்லை நீங்கள் கெதியா என்ர பிள்ளையை என்னிடம் கொண்டுவந்து தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குப் போடுவன் என்று எச்சரித்து விட்டுப் போகிறார். இவை எதைப் பற்றியும் ஜோதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் அவள் பெற்றோர் அவளை வேலையையும் நிறுத்தி விட்டு கொழும்பில் இருந்து கூட்டிக் கொண்டு வந்ததில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஜோதியின் தகப்பன் கஜேந்திரன் இராசம்மாவுக்கு துரத்து உறவு. ஜோதி கொழும்பில் ஒரு சர்வதேசங்களுடன் தொடர்புடைய கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தோடு நல்ல வேளையில் இருக்கிறாள். முதன் முதல் வீட்டில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போகும்போது பதவிசாக நல்ல மாதிரித்தான் போனவள். அங்கு அவர்களின் உறவினர் ராசன் வீட்டில் இருந்து கொண்டுதான் பேரூந்தில் வேலைக்குப் போய்வாறவள். காலப்போக்கில் கூட வேலை செய்ப்பவர்களின் சகவாசத்தாலும் மற்றவர்கள் போல் மிகவும் வசதியாக வாழவேண்டும் என்னும் இச்சையாலும் சின்ன சின்ன பார்ட்டிகள், அங்கு அவர்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மது அருந்துதல் என்று தடம் மாறுகிறாள். அவள் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வருவதாலும் சில நாட்கள் வெளியே தங்கிவிட்டு வருவதாலும் அதை ராசன் கண்டிக்க அவர்களுக்குள் உறவில் விரிசல் ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பி சக தோழியுடன் ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறாள். சமீபத்தில் ஒருநாள் கஜேந்திரனுக்கு அவரது கை பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. எதிர் முனையில் பேசியவர் நீங்கள் கஜேந்திரனோ பேசுவது என்று வினவ, ஓம்....நீங்கள் யார் கதைக்கிறது என்று கேட்கிறார். ஐயா உங்களது மக்கள் ஜோதி கொழும்பாஸ்பத்திரியில் இன்ன வார்ட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான நோயில் இருக்கிறா. அதுதான் உங்களுக்கு தெரிவிக்கிறன் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். உடனே கஜேந்திரன் பதற்றத்துடன் மனைவி சுகுமாரியிடம் விஷயத்தை சொல்ல அவளும் பதறி இஞ்ச அப்பா இப்ப நீங்கள் கோபத்தை பாராட்டாமல் ராசனுக்கு அழைப்பெடுத்து என்னெண்டு போய் பார்க்கச் சொல்லுங்கோ. நாங்களும் உடனே போக வேணும் என்கிறாள். அவரும் ராசனுக்கு அழைப்பு விட அவனும் எடுத்து என்ன மாமா என்கிறான். --- தம்பி ராசு நான் மாமா பேசுறன்.....என்ன சொல்லுங்கோ மாமா.(ராசன் வீட்டில் இருந்துதான் ஜோதி வேலைக்குப் போய் வந்தவள்). --- அப்பன் குறைநினைக்காத இப்ப உங்கிருந்து ஒரு ஆள் யாரென்று தெரியாது போன் எடுத்தவர். என்னண்டால் எங்கட மகள் ஜோதி எதோ வருத்தமாய் ஆசுபத்திரியில் இருக்கிறாவாம். உனக்கு தெரியுமே. --- எங்களுக்குத் தெரியாது மாமா, விவரத்தை சொல்லுங்கோ நான் போய் பார்த்து உங்களுக்கு அறிவிக்கிறன். --- அவர் விபரங்களை விளக்கமாய் சொல்லிவிட்டு, குறைநினைக்காமல் ஒருக்கால் போய் பார்த்துவிட்டு எங்களுக்கு சொல்லு தம்பி. இங்க தாயார்காரி ஒரே அழுகையோடு இருக்கிறாள். --- ஒரு குறையுமில்லை மாமா, நான் இப்பவே சென்று பார்த்துவிட்டு சொல்லுறன். தொடர்பு துண்டிக்கப் படுகிறது.கொஞ்ச நேரத்தில் கஜேந்திரனுக்கு அழைப்பு வருகிறது. ராசன்தான் அழைக்கிறான். --- ஹலோ மாமா உங்களுக்கு வந்த செய்தி உண்மைதான். அவ இப்பவும் ஆசுபத்திரியில்தான் இருக்கிறா. குளுக்கோஸ் ஏத்துப்படுகுது. எதுக்கும் நீங்கள் இங்கு வாறது நல்லம் என்கிறான். உடனேயே கஜேந்திரனும் சுகுமாரியும் காரில் இரவிரவாக ஓடி கொழும்புக்கு வருகிறார்கள். பொழுது பல பலவென விடிந்து விட்டது. நேராக ஆஸ்பத்திரி சென்று மகளைப் பார்க்கிறார்கள். அவள் கட்டிலில் கிழிந்த நாராய் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். குளுக்கோஸ் எல்லாம் கழட்டி விட்டு விட்டார்கள். அங்கு அவள் அறைக்கு வந்த வைத்தியரிடம் விசாரித்த போது அவர் சொன்ன செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்கிறார், இப்ப இந்தப் பெண்ணுக்கு மூன்றாவது முறையாக "அபார்சன்" ஆகியிருக்கு. முன்பே எச்சரித்து இருந்தோம். இனி இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கருத்தரிப்பது கடினம்.இன்றைக்கே நீங்கள் பில்லை கட்டிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு போகலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறார். அன்றே அவளிடம் கஜேந்திரன் உனக்கு இங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒழுங்கா வேலை செய்வாய் என்று அனுப்பினால் நீ இங்க விசர் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாய் என்று பேசிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து விட்டார். இது நடந்து சில மாதங்களில் இந்த இராசம்மாவின் சம்பந்தம் தானாக தேடிவர, ஜோதிக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி அவசரம் அவசரமாக கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் இராசம்மா அவர்களிடம் உண்மையை மறைக்காமல் சொல்லித்தான் ஜோதியை சங்கருக்கு இரண்டாவது மனைவியாக கலியாணம் கட்டி அழைத்து வந்தவள். இரண்டு வீட்டாரும் மிகவும் பணக்காரர்களாக இருந்தபடியால் யாரும் இதைப் பெரிதாக்கவில்லை. மணமக்கள் சங்கரின் வீட்டுக்கு வந்த நேரம் நிர்மலா இல்லாததும் அவர்களுக்கு வசதியாகி விட்டது. இதை இராசம்மா சிறிதும் எதிர்பார்க்க வில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் தன்னுடைய வீட்டுக்குத்தான் போவாள், கொஞ்ச நாளில அங்கு சென்று அவளை அழைத்து வந்து விடலாம் என்றுதான் நினைத்தாள். இப்படியே ஒரு வருடத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜோதியும் புகுந்த வீட்டுடன் நன்றாக ஒன்றிப்போய் விட்டாள். நிர்மலாவைப் பற்றி அவர்களுக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. மலரும்........! 🥀
  3. நம்பி ஏறலாம்👍; இதை நடத்துபவர் எமது ஆள், இது முன்னரே நடக்க வேண்டிய விடயம், இன்னும் இழுபடுவதிற்கு காரணம் தமிழ்நாடு அல்ல, நமது நாடுதான், வெளிப்படையாக பல விடயங்களை கூற முடியாது, தீவு பகுதியில் இந்திய உதவியுடன் விரைவில் சூரிய மின்கலத்தால் மின்சார Projects வரும் 🤞
  4. மலர்............(5). வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்கள், வண்டிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நடந்தும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலைப் பிள்ளைகளும் முதுகில் புத்தகப் பையை சுமந்தபடி நடக்கிறார்கள். அப்போது தனியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இரு பொம்பிளைப் பிள்ளைகளை நிர்மலா வழிமறித்து, பிள்ளைகள் இங்கு பக்கத்தில் ஏதாவது வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா என்று வினவுகிறாள். அவர்களும் அப்படி எதுவும் தமக்குத் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்க அவளும் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து போகிறாள். அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஒரு பையனை மறித்த அந்தப் பிள்ளைகளுள் ஒருத்தி அவனிடம் ஏன்டா ரமேஷ் இங்கு பக்கத்தில் எங்காவது வீடு வாடகைக்கு இருக்குதா என்று கேட்க அவனும் கொஞ்சம் யோசித்து அந்த பைக் கடைக்காரர் வீட்டு கேட்டில "டூ லெட்" பலகையைப் பார்த்தனான் தேவையென்றால் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறான். உடனே மற்றப்பெண் சற்று தூரத்தில் செல்லும் நிர்மலாவை சத்தமாய் அழைத்து அக்கா சற்று நில்லுங்கள் என்று சொல்ல அதைக் கேட்டுத் திரும்பிய நிர்மலாவும் அவர்களுக்கு அருகில் வருகிறாள். அந்தப் பெண்ணும் அக்கா இவன் இங்கு அருகில் ஒரு வீட்டில் "டூ லெட்" பலகையைப் பார்த்ததாக சொல்கிறான்.விரும்பினால் சென்று பாருங்கள் என்று சொல்கிறாள். அந்தப் பையனும் அக்கா அது பக்கத்தில்தான் இருக்கு நானும் போற வழிதான் வாங்கோ காட்டிட்டுப் போறேன் என்று சொல்லி சயிக்கிளை விட்டிறங்கி உருட்டிக் கொண்டு நடந்து வருகிறான். அந்த வீதியில் சிறிது தூரம் சென்று ஒரு ஒழுங்கையில் இறங்கி இரு வளவு தாண்டி நடந்து வர ஒரு பெரிய கேட்டில் "டூ லெட்" பலகை தொங்குகிறது. பையனும் இடத்தைக் காட்டி விட்டு சயிக்கிளில் ஏறி சிட்டாய் பறக்கிறான். அந்த வீடு வெளிக்கேட்டில் இருந்து சிறிது தூரம் உள்வாங்கி இருக்கிறது. கொஞ்சம் பழைய காலத்து வீடானபோதும் அதை மிகவும் அழகாக நவீனமயப் படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே செம்பருத்தி, ரோஜா மற்றும் சில பூ மரங்கள் செடி கொடிகளும் சரியான நீரின்றி காய்ந்துபோய் இருக்கின்றன. வீட்டின் முன்னால் முற்றத்தில் ஒரு மல்லிகை பந்தல் ஆர்ச் வடிவுக் கம்பிப் பந்தலில் படர்ந்திருக்கிறது. அங்கிருக்கும் தென்னை மரங்களின் ஓலைகள் எல்லாம் மாலையில் கிளிகள் கூட்டமாக வந்து தங்குவதால் நார் நாராக கிழிந்து தொங்குகின்றன.எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் நிர்மலா கவனித்து விடுகிறாள். அங்கு மல்லிகை பந்தலின் நிழலில் ஒரு ஐயா சரத்தோடும் வெற்றுடம்பில் ஒரு சிவப்புத் துவாயும் தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மடியில் ஒரு சின்னப்பிள்ளை விரல் சூப்பியபடி உறங்கிக் கொண்டிருக்கு. கையில் இருந்த பனை ஓலை விசிறியால் அவர் குழந்தைக்கும் விசிறி அப்பப்ப தனக்கும் விசிறிக் கொள்கிறார். நிர்மலாவும் படலையைத் திறந்து கொஞ்சம் உள்ளே வந்து ஐயா நாய் நிக்குதோ என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்க்கிறாள். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆச்சி வருகிறா. அவவின் சீலைத் தலைப்பப் பிடித்துக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஒரு சிறுவன் மூக்கு ஒழுக வருகிறான். இஞ்சையப்பா யாரோ படலையடியில் நிக்கினம் ஒருக்கால் என்னெண்டு விசாரியுங்கோ என்று சொல்ல அப்புவும் அங்க பார்த்து பிள்ளை இங்க வாங்கோ உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்கிறார். --- நாய் நிக்குதோ ஐயா. --- ஒரு நாய் நிக்குதுதான் அது ஒன்றும் செய்யாது நீங்கள் பயப்பிடாமல் வாங்கோ என்று ஆச்சி சொல்லுறா. அவர்களுக்கு அருகே வந்த நிர்மலாவும் ஆச்சி இங்கு வீடு வாடகைக்கு என்று பலைகையில எழுதி இருக்கு அதுதான் விசாரிக்க வந்தனான். --- யாருக்கு பிள்ளை வீடு. பெரிய குடும்பமோ என்று ஐயா கேட்கிறார். --- இல்லை ஐயா, எனக்குத்தான். அவரின் மடியில் இருக்கும் பிள்ளையைப் பார்த்து பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்கிறாள். --- இவளுக்கோ ....ஓ இவள் பெயர் சிவாங்கி. எப்பவும் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அப்படியா நல்ல பெயர். அவர் தொடர்ந்து பேரன் பெயர் முகிலன் என்கிறார். ம்....இதுவும் நல்ல பெயர். என்று சொல்கிறாள். ஆச்சி பேரனின் மூக்கை வழித்து எறிந்து விட்டு தனது முந்தானையால் அவன் மூக்கை அழுத்தித் துடைத்து விடுகிறா. இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டிருக்க முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வருகிறார். ஆச்சி அவளிடம் இவர்தான் எங்கட மகன் கதிரவன். வவுனியா டவுனில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். நீங்கள் இவரோடு கதையுங்கோ என்று சொல்லிவிட்டு தம்பி கதிரவன் இவ வீடு வாடகைக்கு கேட்டு வந்திருக்கிறா, என்னண்டு நீ விசாரி என்று சொல்கிறாள். நிர்மலா அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, அவனும் வணக்கம் சொல்லிவிட்டு விசாரிக்கிறான். நீங்கள் எங்கிருந்து வாறீங்கள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கினம். --- நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்.தனியாக எனக்கு மட்டும்தான். ஒரு சிறு அறை இருந்தால் கூடப் போதும். --- இங்கு எங்கே வேலை செய்கிறீங்கள். --- நான் இனித்தான் வேலை தேட வேண்டும். --- அப்போ உங்களின் வருமானம் என்று கேட்கிறான். ---எனக்கு நல்ல வேலையொன்று கிடைக்கும்வரை பிள்ளைகளுக்கு ட்யூசன் குடுக்கலாம் என்றிருக்கிறேன்.மேலும் ஒன்லைன் மூலமாகவும் A /L வரை என்னால் படிப்பு சொல்லிக் குடுக்க முடியும் என்கிறாள். --- ஆச்சி குறுக்கிட்டு என்னபிள்ளை சொல்லுறாய், டியூசன் குடுத்து அதில என்ன வருமானம் வர போகுது. அதில வீட்டு வாடகை எங்க, உன்ர சாப்பாட்டு செலவுகள் எங்க என்று சொல்கிறாள். தாயை இடைமறித்த கதிரவன் தாயிடம் அம்மா நீ இந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்பவெல்லாம் டியூஷனில் நிறைய சம்பாதிக்கலாம் தெரியுமா, வீட்டுக்குள் இருந்து கொண்டே நாடுமுழுக்க பாடம் சொல்லிக் குடுக்கலாம் தெரியுமே, பின் நிர்மலாவின் பக்கம் திரும்பி அம்மா அப்படித்தான் நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் சரி நீங்கள் சொல்லுங்கோ. --- இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு அறை போதும்.சிறிதாய் இருந்தாலும் பரவாயில்லை.வாடகை எவ்வளவு என்று சொன்னால் நல்லது. --- நாங்கள் ஒரு குடும்பத்துக்கு, மேல் வீட்டை முழுதாய் குடுக்கிறதாய்த்தான் இருக்கிறம். அங்கு குசினி, டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கிறது. நீங்கள் தனியாக இருப்பதால், உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும். --- அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்...... என்ன யோசிக்கிறீங்கள் எதுவென்றாலும் சொல்லுங்கோ. --- இல்ல, உடனடியாக அவ்வளவு பணம் தர எனக்கு கொஞ்சம் சிரமம். அதுதான் யோசிக்கிறேன். அப்போது ஆச்சி மகனைத் தனியாக அழைத்துப் போய் ....எட தம்பி அந்தப் பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளை போலத் தெரியுது. எங்களுக்கும் உதவியாய் இருக்கும். அத்துடன் உன்ர பிள்ளையளுக்கும் பிராக்காய் இருக்கும். இந்தப் பெரிய வீட்டில நானும் கொப்பரும் ஆளை யாள் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கிறம். நீ வாடைக்காசை கொஞ்சம் குறைத்து விடு. இப்ப பத்தி ஒன்றும் போடவேண்டாம், அவவும் எங்கட குசினியையே பாவிக்கட்டும் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று படுகிறது. பின் அவன் அவளிடம் வந்து நிர்மலா நீங்கள் ஒரு நல்ல வேலை எடுக்கும்வரை ஐயாயிரம் ரூபாய் தந்தால் போதும். முன்பணமும் இப்ப அவசரமில்லை என்று சொல்கிறான். --- சரிங்க....இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டன். --- எப்ப இங்கு குடி வாறீங்கள். --- உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இன்றைக்கே வந்து விடுகிறேன்.காலையில் இங்கு வரும்போது முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன் அவர் கை விடேல்லை என்று சொல்கிறாள். --- உங்கட உடைமைகள் எங்கே இருக்கு. --- என்ன பெரிய உடைமைகள் ஒரு சூட்கேஸ் அது டவுனில் ஒரு விடுதியில் இருக்கு....! --- சரி நீங்கள் போய் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ அதற்குள் நான் அறையை தயார்படுத்தி வைக்கிறேன். நிர்மலாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்று தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு வாழைப்பழமும் பாணும் வாங்கிக் கொண்டு வருகிறாள்.....! மலரும்.......! 🌷
  5. பார்த்தேன் சிரித்தேன்...
  6. தொடருங்கள் சுவி, நன்றாக போகின்றது 😂😁
  7. சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா. 1974. 802 அறைகள் கொண்ட ஹோட்டல், விருது பெற்ற எம்பார்கேடோ மையத்தில் அமைந்துள்ளது,
  8. மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁
  9. மலர்.................(2). சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய் பார்த்து தேவையான பரிசோதனைகள் எல்லாம் கூட செய்து விட்டார்கள். எல்லா பதில்களும் அவர்கள் இருவர் மீதும் உடலளவில் எந்தக் குறையும் இல்லை என்றே சொன்னார்கள். இப்போதெல்லாம் சங்கருக்கும் குழந்தை இல்லாதது பெரிய குறையாகத் தெரிகின்றது. தனக்குப் பின் திருமணம் செய்தவர்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளுடன் வரும்போது ஏக்கமாய் இருக்கும். அவளுக்கும் அந்த ஏக்கம் இருக்கிறது. தாயையும் மகனையும் பார்க்கும்போது கவலையாகவும் இருக்கும். இவ்வளவுகாலமும் இல்லாத பிள்ளை இனி கிடைக்குமா என்னும் விரக்தியும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கு. நிர்மலாவின் மூத்த தமக்கைக்கு நான்கு பிள்ளைகள். அவளுக்கு பின் திருமணம் செய்த இரண்டாவது அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். தனக்கும் எந்தக் குறையும் இல்லை என்பதை தானே நன்றாக உணர்ந்திருந்தாள். ஆனால் இந்த சமூகம் பெண்கள் மீதுதானே குறைகளைக் கூறி வசை பாடுகிறது. ஒருபோதும் ஆண்களை சந்தேகிக்கிறதில்லையே. ஏதாவது உறவினர்களின் விசேடங்களுக்கு இவர்கள் போனாலும் அவர்களின் மங்களமான எந்த நிகழ்வுகளிலும் நிர்மலாவை தவிர்த்து விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் அவளாகவே அது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி விடுகிறாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நிர்மலா அழுக்குத் துணிகளை அலசிப் பிழிந்து அவற்றை வாளியோடு தூக்கிக் கொண்டு வீட்டுக் கொல்லையில் இருந்த கொடியில் விரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அதன் பக்கத்தில் இருந்த அறையில் இருந்து இராசம்மாவும் மகன் சங்கரும் கதைப்பது கேட்கிறது. அவர்களது பேச்சில் தனது பெயரும் அடிபடுவதால் அவளும் அப்படியே நின்று கேட்கிறாள்......! --- இராசம்மா மகனிடம் தம்பி நான் சொன்னதை யோசிச்சனியோடா..... நீ என்ன சொல்கிறாய் என்று வினவ --- அது அம்மா வந்து.....நிர்மலா பாவம் அம்மா, இதெல்லாம் தேவையா என்றுதான் யோசிக்கிறேன்.....! --- நீ ஒன்றும் அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். நான் நல்ல நேரம் பார்த்து அவளிடம் பக்குவமாய் எடுத்து சொல்லுறன். அதுக்கென்ன அவளும் எங்களுடன் கூடவே இருக்கட்டும்......என்ன ஊர் உலகத்தில இல்லாததையா நீ புதுசா செய்யப் போகிறாய்......உங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் நான் ஏன் இப்படி சொல்லப் போறன்.......நானும் ஒரு பொம்பிளைதானே.....! --- அதுக்கு இன்னும் கொஞ்சகாலம் பார்த்து விட்டு செய்யலாம்தானே அம்மா. --- அது சரிதான்......ஆனால் நான் இப்ப பார்த்திருக்கிற இடம் நல்ல இடம். அப்பாவழி உறவும் கூட....பொம்பிளையும் நல்ல லட்ஷணமாய் இருக்கிறா. அதோட அவையிலும் அவசரப் படுகினம். இதை விட்டால் பிறகு எப்ப இப்படி அமையுமோ தெரியாது.அதுதாண்டா மோனை.....! --- சரியம்மா என்னவோ செய்யுங்கோ. பட்டும் படாமலும் சொல்கிறான். --- அப்ப நான் அவையளிட்ட சரியென்று சொல்லுறன்.நீ ஒன்றுக்கும் யோசியாத, வாறமாதம் நல்லநாள் இருக்கெண்டு சொன்னவை, கொஞ்ச ஆட்களுடன் சென்று கோயிலில தாலி கட்டி கூட்டிக் கொண்டு வரலாம். எல்லா அலுவலும் அவையளே பாக்கினம்,நாங்கள் செலவில் பாதி குடுத்தால் போதும். --- இதால பிரச்சினை ஒன்றும் வராதுதானே அம்மா. --- நான் நல்லா விசாரிச்சுட்டன். நிர்மலாவோடு பதிவுத் திருமணம் செய்யவில்லைத்தானே அதனால் பெரிசா ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் அவளையும் எங்களோடுதானே வைத்திருக்கப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். இவையனைத்தையும் எதிர்பாராமல் வெளியில் நின்று கேட்ட நிர்மலாவுக்கு வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தது போல் இருக்கிறது. இந்த கல்யாணத்துக்கு சங்கரும் சரியென்று சொல்லுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அங்கிருந்து அழுதுவிட்டு பேசாமல் துணிகளை கொடியில் விரித்து விட்டு முத்தத்துக்கு வருகிறாள். அவள் பின் பக்கத்தில் இருந்து வெறும் வாளியுடன் வருவதைப் பார்த்த இராசம்மாவுக்கு தாங்கள் கதைத்ததை இவள் கேட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. கேட்டிருந்தால் அதுவும் ஒன்றுக்கு நல்லதுதான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் நிர்மலாவின் அழுது சிவந்த முகத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் உள்ளே போகிறாள்.......! மலரும்........! 🌷
  10. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் (KKS) இடையிலான படகுச் சேவை ஏப்ரல் 29, 2023 முதல் தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கே.கே.எஸ் துறைமுகத்துக்கு ஏப்ரல் 29-ம் தேதி புதிய படகு சேவையின் முதல் கப்பல் போக்குவரத்து வரும் என்றார். அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். படகு சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும் மற்றும் 100 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படும். ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து KKS க்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும். படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார். KKS துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது" என்று அமைச்சர் கூறினார். (அஜித் சிறிவர்தன) https://www.dailymirror.lk/breaking_news/Karaikkal-KKS-Ferry-service-to-commence-on-April-29-Minister/108-256557#.ZCAmve8qry4.whatsapp
  11. உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹
  12. கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த ஒரு இடம் அல்லது விடயம் அங்கொட. அதோட அங்க போற இபோச BUS இலக்கம் 134 என்றதும் தெரியும். காரணம் என்ன? எதுக்கு கொழும்பில இவ்வளவு இடம் இருக்க இந்த இடமும் BUS இலக்கமும் நமக்கு பாடம் என்று கொஞ்சம் மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம் அல்லது மட்டம் தட்ட நமக்கு இருக்கும் ஆர்வம் தான் காரணம் என்று. தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல் ஏற்றி விடுங்கோ என்பதும் பெரிய பகிடி அப்ப. ஏன் இப்பவும் தான். அதாவது ஒருவருடைய மனதில் ஏற்படும் சிறு பிசகை அல்லது சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக எடுத்துக்கொள்கின்றோம்? நான் பிரான்சுக்கு வந்தும் இந்த மனநிலை தான். நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை இருக்கிறது. மனைவி மக்களுடன் சிரிப்பதுண்டு. உங்களை அடிக்கடி கொண்டு திரிய முடியாது என்று தான் பக்கத்தில் வீடு எடுத்தனான் என்று. ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது தற்போதைய சூழ்நிலைப்படி பார்த்தால் மனநிலை வைத்தியரைப்பார்ப்பது என்பது சிறியவர் தொடக்கம் பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது நித்திரை வராததிலிருந்து வேலை மற்றும் படிக்க ஆர்வமில்லாதவர் வரை சர்வசாதாரணமாக மனநிலை சார்ந்த வைத்தியர்களின் ஆலோசனைகளைக்கேட்பது அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. இன்றைய இயந்திர வாழ்வு காரணமாக அதற்கு அடுத்த கட்டமாக அதற்கு தேவையான மாத்திரைகளை பாவிப்பதும் சாதாரண நிகழ்வுகள். ஆனால் தமிழர்கள் நாம் இன்றும் இவை கொஞ்சம் குறைவான ஆட்கள் என்ற மனநிலையுடன்??? அவர்களை ஒதுக்கியபடி??? நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள் இருப்பின் சமூதாய பயத்தைக்காட்டி நாம் எதை விதைத்தோமோ அதையே இந்த சமூகம் பரிசாக நமக்கு தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம் மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு நாளைக்கு இன்னும்??? 25வது சுய ஆக்கத்திற்காக விசுகு...
  13. நன்னி பரணி பழைய ஆள். யாழ் தொடங்கிய கால உறுப்பினர். மட்டுறுத்தினராகவும் இருந்த ஞாபகம்.
  14. வணக்கம், வாருங்கள். தொடர்ந்து இணைதிருங்கள். எங்களோடு மல்லுக்கட்டி🤪 குதூகலியுங்கள், களிப்புறுங்கள்!😄
  15. வணக்கம் பரணி. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.
  16. "காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம். " விழுந்து விழுந்து சிரித்தேன்.🤣
  17. மீளவும் காண்பதில் மகிழ்ச்சி . தொடர்ந்திருங்கள்.
  18. வணக்கம் பரணி வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!
  19. வணக்கம் பரணி உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள்.
  20. எத்தனையோ தரம் இந்தப் பகுதிக்குள் திரிந்தும் இதைப் பார்க்கவில்லையே. இணைப்புக்கு நன்றி.
  21. பக்கத்து வீட்டு பொண்ணு நாலு வருஷத்துக்கு முன்னாடி பனிரெண்டாவது முடிச்சிட்டு இஞ்சினியரிங் படிக்க ஹாஸ்டலுக்கு போச்சு போகும் போது போயிட்டு வரேன் அண்ணே னு சொல்லுச்சு இந்த வருஷம் வீட்டுக்கு வந்திருக்கு எப்படி இருக்கீங்க அங்கிள் னு கேட்குது நாலு வருஷத்திலையா அங்கிள் ஆயிட்டேன். 😂 🤣 Life is Beautiful
  22. சீனாவில் உள்ள ஒரு வனப்பகுதியில்... கடுமையான நடைப் பயணத்திற்குப் பிறகு யானைகளின் குடும்பம் தூங்குகிறது, ட்ரோன் மூலம் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
  23. ஆக்கமும் ஊக்கமும் தந்து கருத்துக்களால் மகிழ்விக்கும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி......எனக்குப் பல புதிய உறவுகளும் வந்து வாசிப்பதும் கருத்துக்கள் பகிர்வதும் சந்தோசமாய் இருக்கு......! 💐
  24. ஓம்.நான்காவது பகுதிக்கு பின் கதையின் போக்கை புரிந்து கொள்ள முடிகிறது..தொடரட்டும்.
  25. வழமை போலவே உங்கள் கதை விறுவிறுப்பாகப் போகிறது அண்ணா. தொடருங்கள்
  26. பைத்தியம் U mad bro பாகம் I நதியே…நதியே காதல் நதியே நீயும் பெண்தானே…. அடி நீயும் பெண்தானே …. நிசப்தமான இரவை குலைத்தபடி சங்கர் மகாதேவன் போனில் பாடத்தொடங்கி இருந்தார். சை…இந்த அலாம் டோனை மாத்த வேணும். பழைய நொக்கியா மாரி இல்லை, இந்த போனில் புதிதா ஒரு டோன் போடுறதுகுள்ளா போதும் போதும் எண்டாயீடும். நினைத்து கொண்டே கட்டிலில் இருந்து பிரண்டு, போனின் அலார்மை அணைத்தான் அவன். அலாம் அடிக்கிறது என்றால் அது ஒரு கிழமை நாள், காலை ஆறரை மணியாக இருக்க வேண்டும். அவன்……. அப்படி ஒன்றும் கதாநாயகன் களை எல்லாம் இல்லாவிடிலும் இந்த கதையின் நாயகர்களில் ஒருவன். ஒரு பெண்ணின் கணவன். ஒரு மகனின் தந்தை. கட்டிலில் திரும்பி பிரண்டபோதுதான் அருகில் மனைவி இல்லை என்பது உறைத்தது. நேற்றே சொல்லி இருந்தாள் “நாளைக்கு காலமை அப்பாவுக்கு ஹொஸ்பிட்டல் அப்பொயிண்ட்மெண்ட், ஸ்கூல் ரன் உங்கள் பாடு”. கட்டிலால் எழுந்து பல்லை விளக்கி விட்டு வந்து மகனை எழுப்பி, மகனுடன் பள்ளிக்கு வெளிக்கிடசொல்லி தேவாரம் பாடி, இடையில் உணவும் தயார் செய்து, அதை உண்ணவும் வைத்து, வெளியே ரத்தம் உறையும் குளிரில் நிண்டபடி காரில் படிந்திருக்கும் பனியை சுரண்டி……. நினைக்கவே அலுப்பாக இருந்தது அவனுக்கு. ஆனாலும் செய்யதான் வேண்டும். சோம்பலாய் எழுந்து போனை பார்த்தால் - இவன் மிஸ்டுகால் என காட்டியது. இவன்…….. இந்த கதையின் இன்னுமொரு நாயகன். கொழும்பில் நல்ல வசதியாக வாழும் ஒருவன். மூன்று மாடியில் ஏழு அறை வீடு, டிரரைவர், சமமையல்காரன், தோட்டகாரன் என சகல செளபாக்கியமுமான வாழ்க்கை வாழ்பவன். சரி ஏதோ ஸ்கூல் விசயமாக்கும். பிறகு அடிப்பம். என நினைத்தபடி வேலையில் மூழ்கிப்போனான் அவன். காரில் இருந்து மகன் இறங்கி போகும் போது, urgent. Plz call…..plz அவனின் போனில் இவன் அனுப்பிய குறுஞ்செய்தி மின்னியது. (தொடரும்) (யாவும் கற்பனை அல்ல) ——————————————-
  27. இளங்கோவனை விட மோசமானவர்கள் எங்களுக்குள் இருக்கும் போது அது யாழ்களத்திலும் சரி புலம்பெயர் நாடுகளிலும் சரி ஊர்களிலும் சரி..... ஏன் தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்களை திட்ட வேண்டும்?
  28. அழகிய கட்டிடக் கலை.
  29. இவரைப் பற்றி இப்போது தான் தெரிந்து கொள்கிறேன். தகவல்களை தமிழில் தொகுத்து வழங்குவதற்கு மிக்க நன்றி ரஞ்சித்.
  30. மிதவாதிகளுக்கும் தமது ஆதரவை வெளிக்காட்டிய தமிழர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் 1981 ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் பெரும்பான்மையான தமிழர்கள் வக்களிப்பதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்டு வரும் தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சர்வதேசத்திற்குக் காட்டமுடியும் என்று ஜெயார் நம்பியிருந்தார். ஆனால், அவர் நினைத்ததற்கு எதிர்மாறாகவே அது நடந்து முடிந்தது. நாடு தழுவிய ரீதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடந்தபோதிலும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல்களிலேயே அனைவரினதும் கவனம் குவிந்திருந்தது. ஏனென்றால், அங்குதான் இத்தேர்தல் தொடர்பாக பெருவாரியான முறைகேடுகளை அரசும், அதன் படைகளும் செய்திருந்தன. ஆனால், தெற்கிலோ இத்தேர்தல் மிகவும் மந்தமாகவே நடைபெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி இத்தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், சிங்கள மக்கள் இத்தேர்தலில் அதிகம் அக்கறை காட்டவில்லை. விளைவு, ஐக்கிய தேசியக் கட்சி போட்டியின்றி சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றது. ஆனால், வட கிழக்கு மாகாணங்களில் கதை வேறாக இருந்தது. இந்த மாகாணங்களில் இருந்த 7 மாவட்டங்களில் ஒரேயொரு மாவட்டமான அம்பாறையை மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியினால் கைப்பற்ற முடிந்தது. சுமார் 41 வீதம் முஸ்லீம்களையும், 37 வீதம் சிங்களவர்களையும், வெறும் 20 வீதம் மட்டுமே தமிழர்களையும் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், ஏனைய 6 மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே வெற்றிபெற்றிருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் 33.9 வீதமாகவும், சிங்களவர்கள் 33 வீதமாகவும், முஸ்லீம்கள் 29 வீதமாகவும் காணப்பட்டபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 44,692 வாக்குகளைப் பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 42,388 வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் 70 வீதமானவர்கள் தமிழர்களாகவும், 24 வீதம் முஸ்லீம்களாகவும், 3 வீதம் சிங்களவர்களாகவும் காணப்பட்டமையினால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இலகுவாக வெற்றிபெற்று மாவட்ட சபையினைக் கைப்பற்றியிருந்தது. மேலும், வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெருவெற்றி பெற்றிருந்தது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தனிநாட்டிற்காகத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையினை மீளவும் உறுதிப்படுத்துவதாகவே இந்தத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வெற்றி அமைந்திருந்தது. இத்தேர்தலைக் கொண்டு தமிழர்கள் தனிநாட்டிற்கு ஆதரவளிக்கவில்லை என்று ஜெயார் சர்வதேசத்திற்குக் காட்ட முனைந்தபோதும், தமிழ் மக்கள் தனிநாட்டையே விரும்புகிறார்கள் என்பதை சர்வதேசம் உணரும்படி தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்த விரும்பிய ஜெயார், தன்னால் ஆட்டுவிக்கக்கூடிய மாற்றுத் தமிழ்க் கட்சிகளை பலப்படுத்த விரும்பினார். இந்த மாற்றுத்தலைமைகளூடாக தான் விரும்பும் தீர்வைத் தமிழ் மக்கள் மேல் திணித்துவிடலாம் என்று ஜெயார் நம்பினார். சர்வதேச சமூகத்தை, குறிப்பாக உதவி வழங்கும் நாடுகளை மகிழ்வாக வைத்திருக்க வேண்டும் எப்தற்காகவாவது தமிழ் மக்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை ஜெயாருக்கு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்துவைய்யுங்கள் என்கிற குரல்கள் சர்வதேச மட்டத்தில் ஒலிக்க ஆரம்பித்திருந்தன. மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் போலித் தீர்வை ஜெயார் அவித்துக் கொட்டியதன் நோக்கமே, சர்வதேசத்திற்கு தான் தமிழரின் அபிலாஷைகளை தீர்த்துவைக்கப்போகிறேன் என்று காட்டுவதற்காகவே என்றால் அது மிகையில்லை. 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழரின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இரு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. தமிழ் மக்களின் அவலங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்த ஐக்கிய தேசியக் கட்சி, கல்வி, குடியேற்றம், தமிழ் மொழிப் பயன்பாடு, அரச கூட்டுத்தாபனங்களில் வேலைவாய்ப்பு, சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி நிரந்தரமான தீர்வுபற்றி கலந்துரையாடுவது ஆகிய வாக்குறுதிகளை ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களை நோக்கி முன்வைத்திருந்தது. இவற்றுள் சில நடவடிக்கைகளை ஜெயார் எடுத்துக்கொண்டாலும்கூட, சர்வகட்சி மாநாட்டினைக் கூட்ட விரும்பவில்லை. தனது பரம வைரியான சிறிமாவை அரசியலில் இருந்து முற்றாகவே ஒதுக்கிவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜெயாருக்கு, சர்வகட்சி மாநாட்டில் சிறிமா கலந்துகொள்வது அவருக்கு ஒரு அரசியல் மீள்வருகையினைப் பெற்றுக்கொடுத்துவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆகவேதான், சர்வகட்சி மாநாட்டினக் கூட்டுவதை ஜெயார் தவிர்த்து வந்தார். பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சன் ஆகவே, சிறிமாவுக்கு அரசியல் மீள்வருகையினை ஏற்படுத்திக் கொடுப்பதைக் காட்டிலும், 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் நேரடியாகப் பேசலாம் என்று ஜெயார் விரும்பினார். இதற்கு ஏதுவாக இரு தமிழர்களை ஜெயார் தன் சார்பாக நியமித்தார். ஒருவர், நியூ பிரண்ஸ்விக் பல்கலைக் கழகப் பேராசிரியரும், தந்தை செல்வாவின் மருமகனுமான ஜெயரட்ணம் வில்சன். இரண்டாமவர், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமஷ்ட்டிக் கட்சியைப் பிரதிநித்துவப்படுத்திய அமைச்சர் ஒருவரின் மகனான நீலன் திருச்செல்வம். நீலன் திருச்செல்வம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து தன்னுடன் பேசும்போது ஜெயவர்த்தனா பெரிதும் கவலையடைந்து காணப்பட்டதாக ஜெயரட்ணம் வில்சன் என்னிடம் தெரிவித்தார். "நாம் இனப்பிரச்சினை மேலும் மோசமாவதை அனுமதிக்க முடியாது. அது இந்த நாட்டின் இருப்பையே ஆபத்திற்குள் தள்ளிவிடும். தற்போது அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பாராளுமன்ற அரசியலையும் ஏற்றுகொண்டுள்ளதனாலும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடித்தளத்தினை இட்டுக்கொள்ளலாம்" என்று ஜெயார் ஜெயரட்ணம் வில்சனிடம் கூறியிருக்கிறார். ஆகவே, தான் எண்ணிவைத்திருந்த அடிப்படைத் திட்டத்தை ஜெயார் வில்சனிடம் தெரிவித்தார். "அவர்கள் தமது மாவட்டங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் இதனை ஆரம்பிக்கட்டும். நாம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சபைகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அம்மாவட்டங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கலாம். இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அதிகாரத்தையும், நிதியையும் நாம் கொடுக்கலாம். யாழ்ப்பாணத்து மனிதர்கள் வேண்டுவது இதைத்தான். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் தமிழ் பேசும் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்" என்று ஜெயவர்த்தனா வில்சனிடம் கூறினார். ஜெயரட்ணம் வில்சனும், நீலன் திருச்செல்வமும் ஜெயாரின் எண்ணக்கருவை அமிர்தலிங்கம் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீதும் திணித்து, அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். இதனையடுத்து காரியத்தில் இறங்கிய ஜெயார், 1979 ஆம் ஆண்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான 10 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கி அக்குழுவிற்கு விக்டர் தென்னக்கோனை தலைவராக நியமித்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை பிராந்திய சுயாட்சி தீர்வுக்கான அடிப்படை என்று எண்ணிய வில்சனும், நீலனும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியிருந்தனர். ஆனால், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அரசத் தலைமையினாலும், அமைச்சர்களாலும், அதிகாரிகளாலும் கட்டுப்படுத்தப்படும் ஒரு அமைப்பு என்று விக்டர் தென்னக்கோனும் ஏனைய ஆணைக்குழு உறுப்பினர்களும் செயற்பட்டு வந்தமை வில்சனுக்கும் நீலனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு ஏற்றார்போல், மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான சட்டம் உருவாக்கப்பட்டபோது, இச்சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இறுதி நகலைப் பார்த்த வில்சன் பெரிதும் விரக்தியடைந்ததுடன், மிகத் தாமதாமதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள மிகச்சொற்ப அதிகாரங்கள் என்று மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை விமர்சித்திருந்தார். பாராளுமன்றத்தில் இச்சட்டம் முன்வைக்கப்படு முன்னமே, வழமைபோல சிங்கள இனவாதிகளால் மாற்றப்பட்டு, உப்புச் சப்பற்ற திட்டமே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி இத்திட்டத்தினை எதிர்த்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களும், பெளத்த பிக்குகளும் மாவட்ட அபிவிருத்திச் சபை நகல்களை கிழித்து எரித்ததுடன், ஜெயாரின் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நாட்டை விற்க முனைவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தின் மூலம் தமிழர்களின் தனிநாட்டிற்கான அடித்தளம் இடப்பட்டு விட்டது என்று பெளத்த பிக்குகள் இத்திட்டத்திற்கெதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பி வந்தனர். ஆகவே பெளத்த பிக்குகளை சமாதானப்படுத்த நினைத்த ஜெயார், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது முழு நாட்டிற்குமான பொதுவான ஒரு திட்டமேயன்றி, தமிழர்களுக்கு இதனால் தனியான அதிகாரம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். பின்னர், இத்திட்டத்தை தான் கொண்டுவந்ததன் உண்மையான நோக்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார். "அமிர்தலிங்கமும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டதும், அவர்களும் எமது அரசியல் விளையாட்டினுள் அகப்பட்டு விடுவார்கள். மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர்களின் கவனம் குவிந்திருக்கும்போது, தனிநாட்டிற்கான அவர்களின் கோரிக்கை சிறிது சிறிதாக மறைந்துவிடும். இதன் மூலம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணையினரையும், தமிழ் மக்களையும் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிற்குள் உள்வாங்கி விடமுடியும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது மாவட்டங்கள் சிலவற்றில் பெரும் அபிவிருத்திகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு காலத்தைக் கழிக்கும் நிலை உருவாக, தமது தனிநாட்டிற்கான கோரிக்கையினை அவர்கள் சிறிது சிறிதாக மறந்துவிடுவார்கள்" என்று பிக்குகளிடம் ஜெயவர்த்தனா கூறினார்.
  31. மலர்............(4). "வவுனியா" ஒரு நகரசபையைக் கொண்ட மிகவும் அழகான நகரம். திரும்பிய இடமெல்லாம் குளங்கள் உள்ள நகரம் என்றால் அது வவுனியாதான். அந்தக் குளங்களை அண்மித்தே குடிமனைகள் பாடசாலைகள் கடைகள் எல்லாம் இருக்கும். அங்கு பல கோவில்களும் ஓரிரு மசூதி மற்றும் விகாரைகள் இருக்கின்றன. அவளும் வெளிக்குளத்தில் ஒரு பாடசாலையை தெரிவுசெய்து அதற்கு அண்மையில் ஒரு ஆட்டோவில் சென்று இறங்கி பணம்குடுத்த ஆட்டோவை அனுப்பிவிட்டு அதில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதியில் குடிமனைகள் இருக்கும் பக்கமாக நடந்து போகிறாள். இங்கு இராசம்மாவின் வீட்டில் வழக்கம்போல் காலை ஆறுமணிக்கு காகம், கோழி, குருவிகளின்களின் சத்தத்தில் எழுந்த வேலைக்காரி தாயம்மா முற்றமெல்லாம் கூட்டி சாணித் தண்ணி தெளித்து கோலம் போட்டுவிட்டு அதன் நடுவில் சாணியாலேயே அழகாக ஒரு பிள்ளையாரும் பிடித்து வைத்து அதன்மேல் செம்பருத்திப் பூ ஒன்றும் வைத்து விட்டு நிர்மலாவைத் தேடி அவள் அறைக்குப் போகிறாள். அங்கு அவளைக் காணாமல் குளியல்அறை, கிணத்தடி எல்லாம் தேடி கூப்பிட்டுப் பார்த்து விட்டு நிர்மலாவுக்கு போன் செய்கிறாள். அது அமைதியாக இருக்கின்றது. சரி வெளியே சந்தைக்கு எங்காவது போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு மற்ற மற்ற வேலைகளைச் செய்கிறாள். இப்படியாக இருமணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டிருந்தது. மீண்டும் மீண்டும் நிர்மலாவின் கைபேசிக்கு முயற்சி செய்தும் தொடர்பில்லாததால் தாயம்மாவுக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. அதற்கு சமீப நாட்களாக வீட்டில் ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகளும் காரணம். அது தாயம்மாவுக்கும் கவலையாக இருக்கிறது. தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு இராசம்மாவுக்கு தொலைபேசி எடுக்கிறாள்.அங்கிருந்தும் இராசம்மா கைபேசியை எடுக்கவில்லை. இராசம்மா மற்றும் சங்கர் ஜோதி அவளின் பெற்றோர்கள் எல்லோருமாக வந்த கார்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலடியில் தரிசனத்துக்காக தரித்து நிற்கின்றன. சுவாமி தரிசனம் முடிந்து வந்த இராசம்மா தனது கைப்பேசியைப் பார்த்தபோது அதில் வீட்டில் இருந்து அழைத்திருப்பது தெரிந்து வீட்டிற்கு அழைப்பு எடுக்கிறாள். அப்போது தாயம்மா தொலைபேசியை எடுத்து ஹலோ அம்மாவா பேசுறது என்று கேட்கிறாள். --- ஓம்.....நான்தான் என்ன தாயம்மா என்ன விடயம். --- அது வந்து அம்மா சின்னம்மாவைக் காணவில்லை. அதுதான் பதற்றமாய் இருக்கு. --- சரி.....நீ பதறாதே......நாங்கள் இப்பொழுது கோயிலடியில் நிக்கிறம். நீ ஒரு தட்டத்தில் ஆரத்தி சாமான்கள் எல்லாம் எடுத்து ஒழுங்கு பண்ணி வை. நான் அயல் ஆக்களிடமும் சொல்லி இருக்கிறன், அவர்களும் இப்ப அங்கு வருவார்கள். நாங்களும் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்திடுவம். --- சரி அம்மா அப்படியே செய்கிறேன்......! அப்போது ஒரு வானில் சிலர் வந்து சில பல பலகாரப் பெட்டிகளுடன் உணவு கறி வகைகளும் அத்துடன் பெரிய பெரிய சுடுதண்ணீர்ப் போத்தல்களில் பால் தேநீர் மற்றும் கோப்பி எல்லாம் இறக்கி வைத்து விட்டுப் போகிறார்கள். கைபேசியில் தாயம்மாவுக்கு தைரியம் சொல்லி விட்டாளே தவிர இராசம்மாவுக்கும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை நிர்மலா தனது தாய் வீட்டுக்கு போயிருக்கலாம் என நினைத்து அங்கு பேசுவதற்கு கைபேசியை எடுத்தவள் பிறகு இப்ப வேண்டாம், எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சங்கருக்கும் விடயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவர்களின் கார்கள் மீண்டும் அங்கிருந்து புறப்படுகின்றன. தாயம்மாவும் அயலவர்களும் சேர்ந்து பொம்பிளை மாப்பிளைக்கு ஆரத்தி எல்லாம் எடுக்க ஆயத்தமாய் இருக்கும் போது அவர்களின் வண்டியும் அங்கு வந்து நிக்கிறது. மணமக்கள் இறங்கி உள்ளே வர இரு சுமங்கலிப் பெண்கள் வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து கண்ணூறு கழித்து அவர்களுக்கு திலகம் இட்டு விட்டு மிச்சத்தைக் கொண்டுபோய் வாசலில் கொட்டிவிட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டுக்குள் போகிறார்கள். சங்கரின் கண்கள் நிர்மலாவைத் தேடுகிறது. தாயிடம் ஜாடையில் விசாரிக்கிறான். தாயும் கண்ணாலேயே அவனைப் பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டி விட்டு தாயம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போகிறாள். அயலவர்கள் சிலர் வந்திருந்த எல்லோருக்கும் பெட்டிகளில் இருந்து உணவுகள், தேநீர்கள் எல்லாம் எடுத்து பரிமாறுகிறார்கள். சங்கரும் புது மனைவி ஜோதிக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தங்களது அறையைக் காட்டிவிட்டு தனது ஆபீஸ் அறைக்கு வருகிறான். அங்கு அவனது மேசைமீது நிர்மலாவின் கூறைப்புடவையும் அதன்மேல் தாலிக் கொடியையும் பார்த்ததும் அவனுக்கு ஓரளவு விடயம் புரிகின்றது. வந்திருந்தவர்கள் எல்லோரும் இவர்களை வாழ்த்திவிட்டு சென்றபின் அவன் தாயிடம் சென்று அவற்றைத் தருகிறான். அவற்றைப் பார்த்ததும் இராசம்மாவுக்கு எல்லாம் தெளிவாகப் புரிகின்றது. உடனே இராசம்மா நிர்மலாவின் வீட்டுக்கு அழைப்பு எடுத்து அங்கு நிர்மலா வந்தாளா என்று விசாரிக்கிறாள். அதைக் கேட்டதும் நிர்மலாவின் தந்தை சண்முகமும் கோமளமும் பதற்றமாகி இங்கு வரவில்லை என்று சொல்கின்றார்கள். தொடர்ந்து சண்முகம் நான் உடனே அங்கு வருகின்றேன் சம்பந்தி, என்ர பிள்ளை எங்கு போயிருப்பாள், அங்கு என்ன நடந்தது என விசாரிக்க இராசம்மாவும் நீங்கள் இப்ப இங்கு வரவேண்டாம். அவளின் சிநேகிதிகள் வீட்டுக்கு போயிருப்பாள். நான் எல்லா இடமும் விசாரித்து பார்த்து விட்டு உங்களுக்கு சொல்லுறன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விடுகிறாள். இவை எதையும் அறியாத ஜோதி ஆடை மாற்றி வரவேற்பறைக்கு வந்து சங்கரிடம் எங்கே உங்களது மனைவி நிர்மலாவை நான் பார்க்கலாமா என்று கேட்கிறாள். மலரும்..........! 🌹
  32. மிக்க நன்றியும், மட்டற்ற மகிழ்ச்சியும் வசி.இந்தத் தொடர் பெரும்பாலும் வரலாற்றுத் தொடர் போன்றே செல்வதனால் வாசகர்களின் கவனத்தை ஈர்க்காது என்று எதிர்பார்த்தேன். ஆனாலும், தமிழில் இது பதியப்படவேண்டும் என்பதற்காகவும், எனது தேடலுக்காகவும் இதனைச் செய்யலாம் என்றே ஆரம்பித்தேன். உங்கள் போன்றவர்களின் ஆதரவு புத்துணர்ச்சியைத் தருகிறது. நன்றி ! உண்மை
  33. அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...
  34. சுய மரியாதையை விட, பொறுப்பு பெரியதாக இருக்கும் நிலை இது. 🤣
  35. காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம்.
  36. தொடருங்கள் சுவி அண்ணா ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? கதை ஊரிலா நிகழ்கின்றது?
  37. தன்னை வெட்டி வீழ்த்த வந்தவனுக்கும் ஓய்வெடுக்க நிழல் தந்தது மரம்..!
  38. சிம்பிள் & ஸ்வீட்.......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.