Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    20004
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38737
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8904
    Posts
  4. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23920
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/31/23 in all areas

  1. கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.
  2. குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள். கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மலை ஏறுவதற்கென்றே பலர் வருவதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் 365 நாளும் இந்தப் பகுதி ஒரே கொண்டாட்டம் தான். நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல. அக்கா காய்ச்சல் தடிமன் வரப்போகுது. புங்கை இந்த படத்தைப் பார்த்த மகன் என்ன ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருக்கு என்றான்.
  3. சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)
  4. பனிப் பொழிவு 2 காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதியம் சாப்பாட்டுக்கு வேறு நிற்க வேண்டும். புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே பேத்திக்கு பம்பஸ் மாற்ற வேண்டும் என்று ஒரு கோப்பிக் கடையில் நிற்பாட்டினார்கள்.கோப்பிக் கடையில் பிள்ளைகளுக்கு டோநட்டும் கோப்பியும் வாங்கினார்கள்.எனக்கு எப்போதும் கோன்மபின் சாப்பிடவே விருப்பம்.எந்தநாளும் என்றில்லை இப்படி எங்காவது போனால் விரும்பி சாப்பிடுவது இதைத் தான். அங்கிருந்து புறப்பட்டு சக்கரமன்ரோ பகுதியில் மதியம் சாப்பாடு.நிறைய கூட்டமாக இருந்தது.இவர்கள் கொஞ்சம் முதலே முன்பதிவு செய்தபடியால் சுலபமாக உள்ளே போய்விட்டோம்.சாப்பாடு கொண்டுவர தாமதமாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்து இதை எதிர்பார்த்தது தான்.சாப்பாடு திறமாக இருந்தது. சக்கரமன்ரோவில் காலநிலையும் நன்றாகவே இருந்தது.இன்னும் ஒன்றரை மணிநேரம் ஓடினால் கொட்டேலுக்கு போய்விடலாம் என்றார்கள்.போகப் போக வழி நெடுகலும் ஏற்கனவே பனி கொட்டிக் கிடக்கிறது.இரு பக்கங்களிலும் பெரிய மலைகள்.அனேகமானவை பனி படிந்து போயிருந்தது. ஒருசில இடங்களில் மக்கள் பனியில் சறுக்கி விளையாடுவதையும் கேபிள் கார்கள் மக்களை சுமந்து மேலே கூட்டிச் செல்வதையும் தூரத்தே காண முடிந்தது.இப்படி தான் நாங்களும் நாளைக்கு போகப் போகிறோம் என்று சொன்னார்கள்.நாளை நடக்க போவதை தெரியாமல் ரசித்துக் கொண்டே வந்தோம். நாங்கள் போனநேரம் ஏற்கனவே விளையாடி முடிந்து மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.எமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எமது சாமான்களை வைத்துவிட்டு மகளும் மருமகனும் வெளியே போய் சுற்றி பார்க்க போனார்கள்.பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுடன் நாமும் படுத்து தூங்கவிட்டோம். பிற்பகல் 5 மணி போல் இரவு சாப்பாட்டுக்காக நடந்தே போனோம்.சாப்பாடு மதிய சாப்பாடு போல இருக்கவில்லை.மனைவியும் நானும் வேளைக்கே சாப்பாட்டை முடித்து பக்கத்தில் இருந்த கடையில் நொறுக்குத்தீனி என்று சிப்ஸ் பிஸ்கட் என்று கூடுலாகவே வாங்கி வந்தோம்.அடுத்த நாள் இது தான் சாப்பாடு என்று யாருக்கு தெரியும். மீண்டும் கொட்டேலுக்கு வர 8 மணி ஆகிவிட்டது.நாளைக்கு நிறைய பனி பொழியப் போகுது.அதற்கு முதல் போய் விளையாடிப் போட்டு வர வேண்டும்.7 மணிக்காவது இறங்க வேண்டும் என்று அடுத்த நாள் போடுற உடுப்புகள் எல்லாம் இப்பவே எடுத்து வையுங்கோ என்று அவரவர் உடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு 9 மணிக்கே படுக்கைக்கு போய்விட்டோம். பனி பொழியும். இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது. இது தேவையா? பனியில் நனைய தயாராகுங்கள். இதுவும் ஒரு அனுபவம் தான்.
  5. மலர் .....(9). இராசம்மாவின் வீட்டில் ஜோதி வந்ததில் இருந்து அவளுக்கு தாயம்மாவை அவ்வளவாக பிடிக்கவில்லை. தாயம்மா பத்து வயதில் அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்து இராசம்மாவின் அன்பால் பத்தாவது வகுப்புவரை படித்திருந்தாள். நாளாக நாளாக அவள் அந்த வீட்டின் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யப் பழகியிருந்தாள். அங்கு இராசம்மாவும் சங்கரும் மட்டும் இருப்பதால் அவர்களுக்கு என்னென்ன தேவைகள் எந்தெந்த நேரத்தில் வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருந்தாள். ஆனால் ஜோதிக்கு அவள் தான் ஒரு வேலைக்காரி என்பதையும் மறந்து அந்த வீட்டில் அதிக உரிமை எடுப்பது போலப் படுகிறது. உணவு மேசையில் சங்கருக்கு சாப்பாடு பரிமாறுவது அவனது உடுப்புகளை கழுவிற மிஷினில் போட்டு பின் இஸ்திரி போட்டு மடித்து வைப்பதெல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அவர்கள் எல்லோருடைய ஆடைகளையும் அப்படித்தான் செய்கிறாள். அதனால் அப்பப்ப சிறு சிறு பிரச்சினைகள் வர இராசம்மாவுக்கு தாயம்மா தனியாக போய் அழுவது எதையும் பார்க்கப் பொறுக்கவில்லை. அந்நேரம் தாயம்மாவின் தகப்பன் அங்கு வந்து தாயம்மாவுக்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும் அவளை தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்க இராசம்மாவும் அவர்களுக்கு தேவையான பணம், புடவைகள், நகைகள் எல்லாம் சீராகக் குடுத்து அனுப்பி வைக்கிறாள். ஜோதி சங்கரின் வீட்டுக்கு இரண்டாந்தாரமாக மணமுடித்து வந்து இந்தா அந்தா என்று நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஜோதியும் கல்யாணமாகி வந்த புதிதில் ஜோடியாக தியேட்டர்,பூங்கா,கடற்கரை என்று எல்லா இடமும் சந்தோசமாக சுற்றித் திரிவார்கள்.அப்படி அவன் கையைப் பிடித்து நடக்கும்போது அதில் ஆறாவதாக ஒரு சின்னி விரல் இருப்பதைப் பார்த்து ஏன் சங்கர் இதை ஒரு சத்திரசிகிச்சை செய்து அகற்றலாமே என்று சொல்ல அவனும் ஏன் அது தன்பாட்டுக்கு இருக்கு. என் அப்பா அவரின் அப்பா எல்லோருக்கும் இடது கையில் ஆறுவிரல் இருக்கு தெரியுமா. அதன் பின் அவளும் அதைப்பற்றி கதைப்பதில்லை. அவளுக்கு ஓரிரு தடவை வயிற்றில் பிள்ளை உண்டாகியும் மூன்று நான்கு மாதங்களில் கரு அழிந்து விடுகின்றது. இராசம்மாவுக்கு எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. இப்போதெல்லாம் அவள் யாரிடமும் அதிகம் கதைப்பதில்லை. தங்களுடைய இவ்வளவு திரண்ட சொத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்பதை நினைக்க அவளறியாமலே கண்கள் கலங்கி கண்ணீர் வருகிறது. அவளும் தன்பாட்டில் புதிதாக வந்த வேலைக்காரி அம்மாவுடன் சேர்ந்து சமையல் செய்து வைத்து விட்டு மாலை நேரங்களில் அயலவர்களுடன் ஏதாவது கதைக்க போய் விடுவாள். அல்லது அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இருந்து விட்டு வருவாள். சங்கருக்கும் பிள்ளை ஆசையே போய் விட்டது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். ஜோதியிடமும் இந்த நான்கைந்து வருடங்களில் நல்ல நிதானமும் பக்குவமும் வந்து விட்டது. அவளுக்குள் எப்போதும் ஒரு குற்றவுணர்வு இருக்கு. குழந்தை ஒன்று வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இந்தக் குடும்பத்துக்கு தன்னால் ஒரு குழந்தை பெற்றுத்தர முடியவில்லையே என்று. கருத்தரிக்கும் பிள்ளைகள் கருவிலேயே அழிந்து போவதற்கு முன்பு கொழும்பில் தனது தவறான நடத்தையே காரணம் என்று நன்கு அறிவாள். அத்துடன் சங்கரின் முதல் மனைவி பற்றி ஒரு தகவலும் இல்லை. இப்ப எங்கிருக்கிறாளோ என்ன ஆனாளோ தெரியவில்லை. எல்லாம் தனது தவறான நடத்தையால் என்று உள்மனம் குத்திக் காட்டுது. சங்கருக்கும் எப்போதும் கலகலப்பாய் இருந்த தன்வீடு இப்போது வெறும் அமைதியாக இருப்பதும் கவலையளிக்கிறது. அத்துடன் அநியாயமாய் நிர்மலாவை மனம் நோகச்செய்து விட்டோம் என்ற கவலை வேறு. அவன் இப்போது தாயாரோடும் ஜோதியோடும் கலந்தாலோசித்து ஒரு பிள்ளையை தத்தெடுத்தால் என்ன என்றுகூட யோசிக்கிறான். அப்படியாவது இந்த வீட்டின் இழந்த சந்தோசம் மீண்டும் திரும்பாதா என்றும் நினைக்கிறான். முதலில் இந்தத் துன்பத்தை போக்குவதற்கு என்ன வழி, எல்லோருமாய் எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகின்றது. இந்நேரத்தில் அவன் நண்பன் ஜோசேப் பத்திரிகையில் வந்த படத்துடன் கூடிய மடுமாதா திருக்கோயிலின் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பமாகும் ஒரு செய்தியைக் காட்டி தாங்களும் தங்கள் குடும்பத்துடன் போகப் போவதாகச் சொல்லுகிறார். அதைக் கேட்ட சங்கருக்கும் தாங்களும் அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி மாதாவின் கூடு சுற்றும் திருவிழாவையும் பார்த்துவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம் என்று தோன்றுகின்றது. மலரும்.........! 🌷
  6. தொடருங்கள் சுவியண்ணா உங்களுக்கு நல்ல எழுத்தாற்றல்...வாழ்த்துக்கள்...நானும் தான் எழுத முயற்சிக்கிறேன்...முடியவில்லை முதல் பொண்டாட்டி பிள்ளை பெத்து தரேல்ல என்று துரத்தி விட்டவருக்கு மாதா நல்லருளை கொடுப்பா...இப்ப இப்படியானவர்களுக்கு தான் "கடவுள்" என்று சொல்பவர் அருள் புரிவார் . இல்லையா நிலாக்கா
  7. எப்படிதான் இப்படி நன்றாக எழுதுகின்றீகளோ தெரியவில்லை🤔, உங்கள் எழுத்து நடை அருமை👍, அத்துடன் கதையை நகர்த்துமிடம் அதைவிட👍 தொடர்ந்து எழுதுங்கள், கலைஞனாக என்றும் சந்தோஷமாக இருப்பிர்கள்🙏, வாசர்களாக நாமும்👍
  8. இச் சிறிய பறவை இப்போது, நீல வானத்தைப் பார்க்கிறது. முன்போல் அதனால் வானத்தை இன்னும், முழுமையாகச் சொந்தம் கொண்டாட முடியவில்லை. இப்பறவையை இப்போது யாரும் பார்க்க மாட்டார்கள். இப்போது இதனால் அரிதாகவே பறக்க முடிகிறது. அதன் உடைந்த சிறகுகளை சரிசெய்ய, அங்கு யாரும் வரமாட்டார்கள். ஒரு காலத்தின் சுதந்திர பறவை இது! காற்றின் மிதப்பில், வானத்தை உரிமை கொண்டாடியபடி, மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி மிதந்தது. -தியா-
  9. செல்லம்! உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  10. முன்குறிப்பு பகுதி 1 இங்கே *** மீள்குடியேற்றம் நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன். எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன். ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது . சமையல், வீட்டு வேலைகள பேரப்பிள்ளையைப் பராமரித்தல் உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால் இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும். சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை. நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன். இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும். தடைகள் துணை வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன். உறவுகள் நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது. ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம். மருத்துவம் இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன் - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது) - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்) - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்) - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன) வாழ்க்கை வசதி குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம். வெப்ப காலநிலை உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரம் உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன். நோக்கம் ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை. நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன். இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன். எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம். இதுவே எனது தேசியம். நன்றி.
  11. அருமை... பலர் வேண்டுவதும் அஃதே.
  12. மோகன் அண்ணை, 100% ஒதுங்கி, ஓய்வெடுக்காது, வேண்டாப்பிள்ளையை தத்துக் கொடுத்து விட்டுப் போன அப்பா போல இராமல், அப்பப்ப, குறைந்தது மாதம் ஒரு முறையாவது வந்து, குரல் விட வேண்டும். என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா என்றாவது விசாரித்துப் போகவேணும். 🙏
  13. கடவுள் பக்தி ஆரம்பித்து விட்டது. மாதா நம்பினோரைக் கைவிடமாடடார் . இனி எல்லாம் சுபமே நடக்கும் என எண்ணுகிறோம்.
  14. நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂
  15. நல்லதொரு கதைக்கரு. தொடருங்கள்.👍🏼
  16. ஆஹா.....நல்லதொரு குளிர்மையான தொடர்......தொடருங்கள்......கொஞ்சம் படங்களையும் பகிருங்கள் பிரியன்.........👍 😂
  17. சென்ற இடத்தில், குளிருக்குள் அவதிப் படுவது போல் நரக வேதனை கிடையாது. அதைப் போன்ற அனுபவத்தை பகிரப் போகின்றீர்கள் என நினைக்கின்றேன். ஆரம்பமே தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகின்றது. தொடருங்கள் ஈழப்பிரியன். 👍🏽
  18. படத்தைப் பார்க்க எங்கட fire brigade போல கிடக்குது..! தொடருங்கோ…!
  19. மிக்க மகிழ்ச்சி .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.
  20. தொடருங்கள் அண்ணா. வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.
  21. தேர்தல் முறைகேடுகளில் இறங்கிய அரசாங்கம் யாழ்மாவட்டத்தின் அபிவிருத்திச் சபைத் தேர்தலில் எப்படியாவது சில ஆசனங்களைப் பெற்றுவிடவேண்டும் என்று ஜெயார் உறுதிபூண்டிருந்தார். அதற்காக பலம்வாய்ந்த அமைச்சர்களான காமிணி திஸாநாயக்க, சிறில் மத்தியூ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கேணல் தர்மபால, மேலதிக பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல, அமைச்சரவை செயலாளர் சமரசிங்க மற்றும் ராணுவ அதிகாரிகளின் பிரதானி திஸ்ஸ வீரதுங்க ஆகியோரை யாழ்ப்பாணத்திற்கு ஜெயார் அனுப்பி வைத்தார். இந்தக் குழுவிற்கு ஜெயாரினால் வழங்கப்பட்ட பணிகள் இவைதான், 1. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வெற்றிவாய்ப்பை எப்படியாவது சிதைப்பது, 2. தமிழ்ப் போராளி அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவது. 3. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு உடனடியான முடிவுகளை எடுத்து மேற்சொன்ன இரண்டையும் செய்துமுடிப்பது. ஜெயாரின் விருப்பத்தின்படி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த அதிகாரம் மிக்க அணி, தமிழர்களை அச்சுருத்தி வந்ததுடன், அரச பயங்கரவாதத்திலும் ஈடுபட்டு வந்தது. தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென்று 500 பொலீஸார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். இன்னொரு 200 சிறப்புப் பொலீஸார், உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தனவின் நேரடிக் கட்டுப்பாட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விசேட பொலீஸ் பிரிவே யாழ் நூலகத்திற்கு அருகில் அமைந்திருந்த துரையப்பா விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டது. மீதிப் பொலீஸார் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அமைந்திருந்த பொலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ்க்குடாநாட்டிலிருந்து போராளிகளின் பிரசன்னத்தை ஒழிப்பதே பொலீஸாருக்கு வழங்கப்பட்ட பிரதான பணி. ஆகவே, யாழ்ப்பாணத்தில் பாரிய தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலீஸார் சுமார் 30 இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர். இந்த இளைஞர்கள் பற்றிய எந்தவிபரமும் வெளியில் தெரிந்திருக்கவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த இளைஞர்களின் பாதுகாப்புக் குறித்து அரசிடம் முறைப்பாடு செய்ததுடன், அவர்களைச் சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கும், சட்டத்தரணிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தது. மேலும், கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் பொலீஸாரினால் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுவருவதாகவும் அது குற்றஞ்சாட்டியிருந்தது. கைதுசெய்யப்பட்ட இளைஞர்களில் நால்வர் தாம் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக வழக்குகளைப் பதிவுசெய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் குறைந்தது இரு இளைஞர்களாவது சித்திரவதைக்கும், முறைகேடாக நடத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தியது. யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதி இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பொறுப்பெடுப்பதற்கு பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் தன்னுடன் சேர்ந்து தமிழ் இளைஞர்களுக்கெதிரான அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு திஸ்ஸ வீரதுங்க யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுபாஸ் விடுதி இராணுவ தலைமைக் காரியாலயமாக ஆக்கப்பட்டது. வைகாசி 31 ஆம் திகதி நடைபெற்ற நாச்சிமார் கோயிலடி வன்முறைகள், அன்றிரவு பொலீஸார் மேற்கொண்ட பழிவாங்கல்த் தாக்குதல்கள், ஆனி 1 ஆம் திகதி யாழ் நூலகம் தீக்கிரையான சம்பவம், ஆனி 2 இல் இடம்பெற்ற சுன்னாகம் மற்றும் காங்கேசந்துறைச் சந்தைப்பகுதிகளின் அழிப்பு ஆகியவை யாழ்க்குடாநாட்டில் மிகவும் பதற்றமான சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது. ஆகவே, ஆனி 3 ஆம் திகதியிலிருந்து மாலை 6 மணிமுதல் காலை 5 மணிவரை தொடர்ச்சியான ஊரடங்குச் சட்டம் யாழ்க்குடாநாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டது. ஆனி 3 ஆம் திகதி பிற்பகல் மேலதிகமாக 250 சிங்கள அதிகாரிகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டனர். அவர்களை அரசு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தங்கவைத்தது. ஆனி 3 ஆம் திகதி இரவு இரு மர்மமான விடயங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் செயலகத்தில் தேர்தல் ஆணையாளர் எம்.ஏ.பியசேகரவும், தேர்தல் கண்காணிப்பாளர் யோகேந்திரா துரைசாமியும் சுமார் 150 வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களுக்கு அறிவுருத்தல்களை வழங்கிக்கொண்டிருந்தவேளை காமிணி திஸாநாயக்கவும், சிறில் மத்தியூவும் அங்கே திடீரென்று சென்றிருந்தனர். அங்கு கடமையிலிருந்த துரைசாமியைப் பார்த்து சிறில் மத்தியூ பின்வருமாறு கூறினார், "எங்களுக்கு தமிழ் வாக்குச் சாவடி அதிகாரிகள் மீது நம்பிக்கயில்லை. அவர்களை அனுப்பிவிட்டு சிங்கள அதிகாரிகளை நாம் நிறுத்தப்போகிறோம்" . துரைசாமி இதற்கு மறுப்புத் தெரிவிக்கவே, அங்கு வந்த பாதுகாப்புச் செயலாளர் தர்மபால எழுத்துமூல கட்டளை ஒன்றை துரைசாமிக்கு வழங்கி, ஏற்கனவே பணிக்கு அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கொழும்பிலிருந்து கூட்டிவரப்பட்ட சிங்கள அதிகாரிகளை பணிக்கு அமர்த்தினார். ஜனாதிபதியிடமிருந்து வந்த நேரடிப் பணிப்பின் பேரிலேயே தமிழ் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி, சிங்களவர்களை நியமித்ததாக தர்மபால துரைசாமியிடம் கூறினார். எஸ் நடேசன் மாவட்ட அபிவிருத்திச் சபை அமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட எஸ் நடேசன், தேர்தல்கள் நடைபெற்று ஒருவருடத்திற்குப் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் எனும் தலைப்பில் பேசும்போது ,"தேர்தலுக்கு முதல் நாள் இரவு, ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில், பாதுகாப்புச் செயலாளர் தேர்தல் அதிகாரியான துரைசாமிக்கு சில கட்டளைகளை வழங்கினார். நூற்றைம்பது தமிழ் தேர்தல் அதிகாரிகள் அவர்களது பணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிங்கள அதிகாரிகள் அப்பதவிகளை நிரப்பினர். இந்தச் சிங்கள அதிகாரிகளில் பலர் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் பியோனாக வேலை பார்த்து வந்தவர்கள், அவர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவே இருந்திருக்கவில்லை. தேர்தல் முடிந்த வேளை 6 வாக்குப் பெட்டிகள் காணாமற் போயிருந்தன" என்று கூறினார். அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தேர்தல் அதிகாரிகள் நடேசனின் கூற்றை ஆமோதித்தனர். இரண்டாவது சம்பவமான அமிர்தலிங்கத்தின் கைது ஆனி 4 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றது. ஆனி 4 ஆம் திகதி அதிகாலை 2:45 மணிக்கு பண்ணாகத்திலிருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டைச் சுற்றிவளைத்த சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழு அவரைக் கைதுசெய்தது. பொலீஸ் குழுவின் தலைவராக வந்திருந்த பொலீஸ் பரிசோதகர், யாழ் மாவட்ட ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவினால் உருவாக்கப்பட்ட கைதுசெய்யும் அதிகாரப் பத்திரத்தை அமிர்தலிங்கத்திடம் கையளித்தார். அந்த பத்திரத்தின்படி, ஜனநாயகச் செயற்பாடான தேர்தலினை குழப்புவதற்கு அமிர்தலிங்கம் எத்தனிப்பதால் அவர் கைதுசெய்யப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டிய அமிர்தலிங்கம், தான் ஜனநாயகச் செயற்பாடான தேர்தலைப் பாதுகாக்கவே முயல்வதாக பொலீஸ் அதிகாரியிடம் கூறினார். தன்னை மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்ட பொலீஸ் அதிகாரி, தனக்கு இடப்பட்ட கட்டளையினையே தான் நிறைவேற்றுவதாக அமிர்தலிங்கத்திடம் கூறினார். தனது வீட்டின் வரவேற்பறையில் கதிரையொன்றில் அமிர்தலிங்கத்தை இருத்திவைத்துவிட்டு, அவரது வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினர் பொலீஸார். ஆனி 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் அவரது வீட்டுக் குப்பைக் கூடையினைக் கூட பொலீஸார் விட்டுவைக்கவில்லையென்றும், ஒவ்வொரு துண்டுக் குப்பைக் கடதாசியும் அவர்களால் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார். தனது வீட்டில் பொலீஸார் நடந்துகொண்ட முறையினைப் பார்த்தபோது பெரிய கெரில்லாத் தலைவனையோ அல்லது போராளிகளின் பாரிய முகாமையோ கண்டுபிடித்தது போன்றே பொலீஸார் அன்று காலை செயற்பட்டதாகக் கூறினார். குருநகர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளித்தொடர்புகள் ஏதுமின்றி அடைத்துவைக்கப்பட்டார். அன்றிரவு அமிர்தலிங்கத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெயார், அவரது கைது ஆள்மாறாட்டம் ஒன்றினால் ஏற்பட்ட தவறு என்றும், அவர் வீடு திரும்பலாம் என்றும் கூறினார். தனது கைது தனக்கு மர்மமாக இருந்ததாக அமிர்தலிங்கம் என்னிடம் கூறினார். "சிலவேளை ஜெயார் என்னைக் காப்பாற்ற நினைத்தே கைதுசெய்திருக்கலாம்" என்று நகைச்சுவையாகக் கூறிச் சிரித்தார். ஆனால், அவரது கைது தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இதன் காரணமாகவே தமிழர்கள் பெருவாரியாக அன்று காலைமுதல் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். அமிரின் கைதிற்கான காரணம் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், அரச தரப்பு அமைச்சர்கள் மத்தியில் உலாவிய செய்திகளின்படி, திஸ்ஸ வீரதுங்கவை சிறில் மத்தியுவே வற்புறுத்தி கைதுசெய்யும் ஆணையினைப் பிறப்பித்ததாகக் கூறப்பட்டது. சிங்கள இனவாதி - சிறில் மத்தியூ இராணுவ திகாரிகளிடம் நான் அமிரின் கைது குறித்து வினவியபோது, அது காமிணி மற்றும் சிறில் மத்தியூ இணைந்து எடுத்த முடிவு என்று கூறினார்கள்.
  22. மலர்.......(8). பிறிதொருநாள் ஆச்சி மகன் கதிரவனிடம் தம்பி நீ இந்தப் பிள்ளை நிர்மலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்கின்றாள். அவனும் ஏன் அவவைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அவ தானும் தன் பாட்டில் வேலை செய்கிறா. வாடைக்காசும் ஒழுங்காய் தருகிறா. எங்கட மகன் முகிலனும் வகுப்பில் கெட்டிக்காரனாய் இருக்கிறான் என்று அவன்ர வகுப்பு ஆசிரியை சொன்னவர். வேறு எண்ணத்தை சொல்ல. --- இல்லை தம்பி, எங்களுக்கும் வயசாயிட்டுது. உனக்கு விருப்பமெண்டால் அந்தப் பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன். கொப்பருக்கும் நல்ல விருப்பம். --- ஓ.....நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கதைத்து வைத்து விட்டுத்தான் இப்ப என்னிடம் கேட்கிறீங்கள் போல. அவ ஏதோ தன் பாட்டுக்கு இருக்கிறா, அவவை அத இத கதைத்து குழப்பிப் போடாதேங்கோ. மேலும் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவ தனியா வீட்டை விட்டு வர என்ன என்ன பிரச்சினையென்றும் தெரியாது. அதால கதைக்கிறதை நல்லா யோசித்து கதையுங்கோ. --- அதடா மோனை அப்பப்ப கதையல் வரேக்க நான் கொஞ்சம் கொஞ்சம் ஜாடை மாடையா விசாரிக்கிறானான்.அதுகளை கோர்த்து வைத்துப் பார்த்தால், அவ யாழ்ப்பாணத்தில் கலியாணம் கட்டிய இடம் பெரிய இடமாம். கலியாணம் செய்து பல வருடங்களாக அவையளுக்கு பிள்ளை இல்லையாம். அதனால புருசன்காரன் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டு வீட்டுக்கு வர இந்த பிள்ளையும் அங்கிருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒரு தைரியத்தில வெளிக்கிட்டு வந்திட்டுது. தாய் தேப்பன் எல்லாம் தெல்லிப்பளையில் இருக்கினமாம். ஆனால் ஒருத்தரோடும் இதுவரை எதுவித தொடர்பும் இல்லையாம் என்று சொன்னவ. --- ஓ.....நீங்கள் எல்லாம் விசாரிச்சுதான் வைத்திருக்கிறியள். --- அதுதான் சொன்னேனே, அப்பப்ப பேச்சு வரேக்க கதைக்கிறது, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேர்த்து புரிந்து கொள்ளுறதுதானே. அது கிடக்கட்டும் இப்ப நீ என்ன சொல்லுறாய் அத முதல்ல சொல்லு. --- சரி, என்னவோ செய்யுங்கோ ஆனால் அவவுக்கு அதிகம் மனக்கஷ்டம் உண்டாக்க வேண்டாம். அது முக்கியம். --- சரியடா தம்பி, நான் நேரம் பார்த்து நைசாய் கதைக்கிறேன். அநேகமான மாலை நேரங்களில் அவர்கள் அருகில் இருக்கும் குளத்தின் கரையையொட்டி நடந்து போய் வருவதை வழக்கமாய் கொண்டிருந்தார்கள். முன்பு ஆச்சி அப்புவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனால் நிர்மலா வந்து கொஞ்ச நாளில், அவள் முதலில் தான் தனியா நடந்து போட்டு வருவாள். பின் அவர்களுடன் நன்றாகப் பழகியபின் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே நடந்து போய்வரப் பழக்கி விட்டாள். ஆரம்பத்தில் சும்மா சாக்கு போக்கு சொன்ன ஆச்சி நாளடைவில் அப்புவும் பிள்ளைகளும் ஆவலுடன் சேர்ந்து நடக்க பின் தானும் சேர்ந்து கொண்டாள். அதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பிள்ளைகளின் இரவு உணவையும் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட வைத்து விடுவார்கள். அவர்களுக்கு முன் சிவாங்கியும் முகிலனும் நொறுக்குத் தீனிகளுடன் தயாராய் இருப்பார்கள். அப்படி குளக்கரையிலும் வயல்களுக்கு நடுவேயும் நடக்கும்போது சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் ஆச்சி அப்புவுக்கும் உடம்பு இலேசாகவும் சில சில வருத்தங்கள் இல்லாமல் போவதையும் கண்கூடாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இரவில் நல்ல பசியுடன் வந்து வடிவா சாப்பிட முடிகிறது. அடிச்சுப் போட்டால் போல் நல்ல உறக்கமும் வருகிறது. பலப்பல விடயங்களையும் கதைத்துக் கொண்டு வருவதால் மனசிலும் எந்தப் பாரமும் இல்லாமல் இலேசாக இருக்கின்றது. பிள்ளைகள் முன்னால் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு திரிய இவர்கள் பின்னால் நடந்து போவார்கள். அன்றும் அப்படித்தான் அப்புவும் பிள்ளைகளும் முன்னால் போய்க்கொண்டிருக்க ஆச்சியும் நிர்மலாவுக்கு மிக அருகில் வந்து மெதுவாக பேச்சைத் துவங்குகிறாள். --- எடி பிள்ளை நிர்மலா நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கட்டே என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள். --- என்ன அம்மா இது எதுவென்றாலும் கேளுங்கோ. --- பிறகு நீ குறை நினைக்கக் கூடாது சரியோ. --- சொல்லுங்கோ அம்மா இந்தமாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் குறை நினைக்க மாட்டன். --- பிள்ளை நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாது. --- அது வந்து அம்மா நான் அங்கிருந்து வந்தபின் எப்படியாவது உழைத்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். கடைசி காலத்தில அம்மா அப்பாவுக்கும் மற்றும் எனது மூத்த அக்காவுக்கும் உதவி செய்து அவர்களை நல்லா வைத்திருக்க வேண்டும். அதிலேயே என் சிந்தனை முழுதும் இருந்ததால் நான் மறுமணம் பற்றி நினைக்கவே இல்லை. --- சரி..... நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறாய்தானே. நீ கெட்டிகாரி அதெல்லாம் செய்து போடுவாய். அதவிடு, இப்ப நான் விசயத்துக்கு வாறன். இந்த சில வருடங்களில் உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போட்டுது. என்ர மகன் கதிரவனை கலியாணம் செய்ய உனக்கு சம்மதமே. அல்லது உனது பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் சொல்லு நாங்கள் சென்று உன்னைப் பெண் கேட்கிறம். --- சிறிது தயங்கிய நிர்மலாவும் அது வந்து அம்மா நீங்கள் திடுதிப்பென்று என்னிடம் கேட்கிறீங்கள் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. --- பொறு பிள்ளை, நீ ஒன்றும் அவசரப்பட வேண்டாம்.நன்றாக யோசித்து ஒரு பதிலை சொல்லு. நீயும் இப்படியே இன்னும் எவ்வளவு காலம்தான் இருக்க முடியும். --- உங்களுக்கு தெரியும்தானே அம்மா எனக்கு பிள்ளை பிறக்காததால்தான் அவர் மறுமணம் செய்தவர். அதனால்தான் நானும் அங்கிருந்து கிளம்பி வந்தனான்.நாளைக்கு அதுவே உங்களுக்கும் ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதல்லவா. --- அதையேண்டி அம்மா நீ நினைக்கிறாய். அது ஆண்டவன் போடுற பிச்சை. யார்யாருக்கு எதையெதை எப்ப குடுக்கணும் என்று அவனுக்குத்தான் தெரியும். எனக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொன்றும் கருவிலே அழிந்தும், குறைப்பிரசவத்திலும் என்று போய் கடைசியில மிஞ்சினது இவன் கதிரவன் மட்டும்தான். இப்ப உனக்குத்தான் இரண்டு பிள்ளைகள் இருக்குதே. நீ இங்க வந்ததில் இருந்து அந்த தாயில்லாப் பிள்ளைகளை குளிக்கவாக்கிறதில் இருந்து அவையளுக்கு ஏற்ற சாப்பாடுகள் உடுப்புகள் எல்லாம் நீதானே பார்த்துப் பார்த்து செய்கிறாய். கண்ணன் தேவகியிடம் பிறந்தாலும் தாய் என்று யசோதாவிடம்தானே வளர்ந்தவன். அதுபோல் அதுகளும் உன்னிடம்தானே அம்மா அம்மா என்று ஒட்டிக் கொண்டு கிடக்குதுகள். பெற்றவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கேல்லையே. "கல்லைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்தான் கடவுள் வழிபாடா, இந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாய் இருந்து கண்ணுங் கருத்துமாய் வளர்க்கிறதும் கூட அந்த பரம்பொருளுக்கான வழிபாடுதான்" அன்று கிணத்துக் காட்டில் இருந்து நீ சிவாங்கியை காப்பாத்தினது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது. அண்டைக்கு மட்டும் ஒரு தப்பு நடந்திருந்தால் நான் என்ர பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுவன். அன்றிலிருந்துதான் எனக்கும் அப்புவுக்கும் உன்மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது. யார் கண்டது உனக்கும் ஆண்டவன் ஒரு மடிப்பிச்சை இட நினைத்தால் அதை யார் தடுப்பார். இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க அப்புவும் பிள்ளைகளும் விளையாடி விட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டிற்கு வருகிறார்கள். மலரும்...........! 🌾
  23. மலர்.......(6). சங்கருக்கும் இராசம்மாவுக்கும் மனசுக்குள் ஒரே குற்றவுணர்வாய் இருக்கிறது. நிர்மலாவின் பெற்றோரும் அவளைத் தேடி அங்கு வந்திருந்தார்கள்.இருபகுதியினரும் சண்டை பிடித்து வாக்குவாதப் பட்டு பின் தனித்தனியே சென்று போலீசில் நிர்மலாவை காணவில்லை என்று புகார் குடுத்து விட்டு வந்திருந்தார்கள். இவ்வளவுக்கும் சங்கரின் புது மனைவியான ஜோதி அவர்களின் கண்களில் படவேயில்லை. நிர்மலாவின் தந்தை சண்முகம் போகும்போது சங்கரிடம் இதை தான் இப்படியே விடப் போவதில்லை நீங்கள் கெதியா என்ர பிள்ளையை என்னிடம் கொண்டுவந்து தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குப் போடுவன் என்று எச்சரித்து விட்டுப் போகிறார். இவை எதைப் பற்றியும் ஜோதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் அவள் பெற்றோர் அவளை வேலையையும் நிறுத்தி விட்டு கொழும்பில் இருந்து கூட்டிக் கொண்டு வந்ததில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஜோதியின் தகப்பன் கஜேந்திரன் இராசம்மாவுக்கு துரத்து உறவு. ஜோதி கொழும்பில் ஒரு சர்வதேசங்களுடன் தொடர்புடைய கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தோடு நல்ல வேளையில் இருக்கிறாள். முதன் முதல் வீட்டில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போகும்போது பதவிசாக நல்ல மாதிரித்தான் போனவள். அங்கு அவர்களின் உறவினர் ராசன் வீட்டில் இருந்து கொண்டுதான் பேரூந்தில் வேலைக்குப் போய்வாறவள். காலப்போக்கில் கூட வேலை செய்ப்பவர்களின் சகவாசத்தாலும் மற்றவர்கள் போல் மிகவும் வசதியாக வாழவேண்டும் என்னும் இச்சையாலும் சின்ன சின்ன பார்ட்டிகள், அங்கு அவர்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மது அருந்துதல் என்று தடம் மாறுகிறாள். அவள் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வருவதாலும் சில நாட்கள் வெளியே தங்கிவிட்டு வருவதாலும் அதை ராசன் கண்டிக்க அவர்களுக்குள் உறவில் விரிசல் ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பி சக தோழியுடன் ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறாள். சமீபத்தில் ஒருநாள் கஜேந்திரனுக்கு அவரது கை பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. எதிர் முனையில் பேசியவர் நீங்கள் கஜேந்திரனோ பேசுவது என்று வினவ, ஓம்....நீங்கள் யார் கதைக்கிறது என்று கேட்கிறார். ஐயா உங்களது மக்கள் ஜோதி கொழும்பாஸ்பத்திரியில் இன்ன வார்ட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான நோயில் இருக்கிறா. அதுதான் உங்களுக்கு தெரிவிக்கிறன் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். உடனே கஜேந்திரன் பதற்றத்துடன் மனைவி சுகுமாரியிடம் விஷயத்தை சொல்ல அவளும் பதறி இஞ்ச அப்பா இப்ப நீங்கள் கோபத்தை பாராட்டாமல் ராசனுக்கு அழைப்பெடுத்து என்னெண்டு போய் பார்க்கச் சொல்லுங்கோ. நாங்களும் உடனே போக வேணும் என்கிறாள். அவரும் ராசனுக்கு அழைப்பு விட அவனும் எடுத்து என்ன மாமா என்கிறான். --- தம்பி ராசு நான் மாமா பேசுறன்.....என்ன சொல்லுங்கோ மாமா.(ராசன் வீட்டில் இருந்துதான் ஜோதி வேலைக்குப் போய் வந்தவள்). --- அப்பன் குறைநினைக்காத இப்ப உங்கிருந்து ஒரு ஆள் யாரென்று தெரியாது போன் எடுத்தவர். என்னண்டால் எங்கட மகள் ஜோதி எதோ வருத்தமாய் ஆசுபத்திரியில் இருக்கிறாவாம். உனக்கு தெரியுமே. --- எங்களுக்குத் தெரியாது மாமா, விவரத்தை சொல்லுங்கோ நான் போய் பார்த்து உங்களுக்கு அறிவிக்கிறன். --- அவர் விபரங்களை விளக்கமாய் சொல்லிவிட்டு, குறைநினைக்காமல் ஒருக்கால் போய் பார்த்துவிட்டு எங்களுக்கு சொல்லு தம்பி. இங்க தாயார்காரி ஒரே அழுகையோடு இருக்கிறாள். --- ஒரு குறையுமில்லை மாமா, நான் இப்பவே சென்று பார்த்துவிட்டு சொல்லுறன். தொடர்பு துண்டிக்கப் படுகிறது.கொஞ்ச நேரத்தில் கஜேந்திரனுக்கு அழைப்பு வருகிறது. ராசன்தான் அழைக்கிறான். --- ஹலோ மாமா உங்களுக்கு வந்த செய்தி உண்மைதான். அவ இப்பவும் ஆசுபத்திரியில்தான் இருக்கிறா. குளுக்கோஸ் ஏத்துப்படுகுது. எதுக்கும் நீங்கள் இங்கு வாறது நல்லம் என்கிறான். உடனேயே கஜேந்திரனும் சுகுமாரியும் காரில் இரவிரவாக ஓடி கொழும்புக்கு வருகிறார்கள். பொழுது பல பலவென விடிந்து விட்டது. நேராக ஆஸ்பத்திரி சென்று மகளைப் பார்க்கிறார்கள். அவள் கட்டிலில் கிழிந்த நாராய் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். குளுக்கோஸ் எல்லாம் கழட்டி விட்டு விட்டார்கள். அங்கு அவள் அறைக்கு வந்த வைத்தியரிடம் விசாரித்த போது அவர் சொன்ன செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்கிறார், இப்ப இந்தப் பெண்ணுக்கு மூன்றாவது முறையாக "அபார்சன்" ஆகியிருக்கு. முன்பே எச்சரித்து இருந்தோம். இனி இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கருத்தரிப்பது கடினம்.இன்றைக்கே நீங்கள் பில்லை கட்டிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு போகலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறார். அன்றே அவளிடம் கஜேந்திரன் உனக்கு இங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒழுங்கா வேலை செய்வாய் என்று அனுப்பினால் நீ இங்க விசர் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாய் என்று பேசிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து விட்டார். இது நடந்து சில மாதங்களில் இந்த இராசம்மாவின் சம்பந்தம் தானாக தேடிவர, ஜோதிக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி அவசரம் அவசரமாக கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் இராசம்மா அவர்களிடம் உண்மையை மறைக்காமல் சொல்லித்தான் ஜோதியை சங்கருக்கு இரண்டாவது மனைவியாக கலியாணம் கட்டி அழைத்து வந்தவள். இரண்டு வீட்டாரும் மிகவும் பணக்காரர்களாக இருந்தபடியால் யாரும் இதைப் பெரிதாக்கவில்லை. மணமக்கள் சங்கரின் வீட்டுக்கு வந்த நேரம் நிர்மலா இல்லாததும் அவர்களுக்கு வசதியாகி விட்டது. இதை இராசம்மா சிறிதும் எதிர்பார்க்க வில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் தன்னுடைய வீட்டுக்குத்தான் போவாள், கொஞ்ச நாளில அங்கு சென்று அவளை அழைத்து வந்து விடலாம் என்றுதான் நினைத்தாள். இப்படியே ஒரு வருடத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜோதியும் புகுந்த வீட்டுடன் நன்றாக ஒன்றிப்போய் விட்டாள். நிர்மலாவைப் பற்றி அவர்களுக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. மலரும்........! 🥀
  24. நூலகம் எவ்வாறு எரியூட்டப்பட்டது? தமிழரின் கலாசார பொக்கிஷத்தை முற்றாக எரியூட்டி, கட்டிடத்தை அழிக்கும் இந்த நாசகாரச் செயல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இரவு சுமார் 10 மணியளவில் குட்டையாக தலைமுடி வெட்டப்பட்டு, காக்கி நிற காற்சட்டைகளும் வெண்ணிற பெனியன்களும் அணிந்திந்திருந்த வாட்டசாட்டமான பொலீஸ் காடையர்கள் கைகளில் பெற்றொல் கொள்கலன்களும், இரும்புத் தடிகளும், கோடரிகள் மற்றும் வாட்கள் என்பவற்றுடன் அல்பிரெட் துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து, வீதிக்கு மறுபுறத்தில் அமைந்திருந்த யாழ் நூலகம் நோக்கிய தமது நாசகார பயணத்தை ஆரம்பித்தனர். நூலகத்தின் வாயிலுக்குச் சென்ற பொலீஸ் காடையர்கள், வாயிலின் உட்புறமாக சரஸ்வதிச் சிலையின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ஒற்றைக் காவலாளியையும் அடித்துத் துரத்தினர். பின்னர் தாம் கொண்டுவந்திருந்த கோடரிகளால் நூலகத்தின் கதவுகளைக் கொத்தித் திறந்தனர். "அவர்கள் செயற்பட்ட விதத்தினைப் பார்த்தபோது, இந்த நாசகாரச் செயலினை அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு, இந்தச் செயலுக்காகப் பயிற்றப்பட்டு வந்தது போலத் தெரிந்தது" என்று பொலீஸாரால் திரத்தப்பட்டபின்னரும், அருகில் ஒளிந்திருந்து இந்த அக்கிரமத்தைக் கண்ணுற்ற அந்தக் காவலாளி கூறினார். நூலகத்தை எரிக்கவந்த குழு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துகொண்டது. முதலாவது குழு, புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கும் பிரிவினுள் நுழைந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அடுக்குத் தட்டுக்களூடாக நடந்துகொண்டே இருபுறமும் இருந்த புத்தகங்கள் மேல் தாம் கொண்டுவந்த பெற்றோலினை ஊற்றிக்கொண்டே சென்றது. இரண்டாவது குழு, செய்தித்தாள்களும், பருவப் புத்தககங்களும் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, மரத்தாலான தளபாடங்கள் அனைத்தையும் அந்த மண்டபத்தின் மத்தியில் இழுத்துவந்து குவித்து அவற்றின்மேல் பெற்றோலினை ஊற்றியது. மூன்றாவது குழு குறிப்புப் புத்தகங்களும், ஈடுசெய்யப்பட முடியாத, புராதன ஓலைச் சுவடிகளும் பாதுக்கக்கப்பட்டு வந்த பகுதிக்குச் சென்று அவற்றின் மேல் பெற்றோலினை ஊற்றியது. இன்னொரு குழு சிறுவர் பகுதி உட்பட நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று தமது திட்டத்தின் முதலாவது கட்டத்தை நிறைவுசெய்தன. "ஒரேநேரத்தில் முழுக் கட்டடமும் தீப்பற்றிக் கொண்டது" என்று நூலகக் காவலாளி நகர மேயர் சிவஞானத்திடம் கூறினார். "இந்த நாசகாரச் செயலினை அவர்கள் எதற்காக எங்களுக்குச் செய்தார்கள்?" என்று விம்மி அழுதுகொண்டே விசாரணைகளை மேற்கொண்ட பீட்டர் கியுனுமென்னைப் பார்த்துக் கேட்டார் தலைமை நூலகரான ஆர் நடராஜா. அவரால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிகொள்ள முடியவில்லை. அவரால் பொங்கிவரும் அழுகையினையும் கட்டுப்படுத்த முடியவில்லை. யாழ் நூலகத்தின் பிரதான நூலகர் திருமதி ரூபா நடராசா இடிந்துபோன நிலையில் நூலகத்தின் தரையில் அமர்ந்திருக்கும் காட்சி ஆனால், சொற்பிறப்பியல் நிபுணரான பாதிரியார் டேவிட்டிற்கு இந்த அதிர்ச்சி இலகுவானதாக இருக்கவில்லை. புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவர் விடுதியில் இருந்த தனது அறையிலிருந்து வானத்தில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த யாழ் நூலகத்தைப் பார்த்த கணம் அவர் நடுக்கத்துடன் கீழே விழுந்தார், சில கணங்களில் அவரது உயிரும் பிரிந்தது. பாதிரியார் டேவிட் "அத்த" எனும் சிங்கள மொழி பத்திரிக்கை இந்த நாசகாரச் செயல் பற்றி எழுதும்போது, பீட்டர் கியுனுமென் நூலகத்தைப் பார்வையிடச் சென்றவேளை நூலகத்திலிருந்து இன்னமும் வெப்பமும் கரிய புகையும் வெளியேறிக்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது. "நூலகத்தின் சில பாகங்கள் இன்னும் வெப்பத்தால் தகதகத்துக்கொண்டிருந்தன, எம்மால் அப்பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை" என்று அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார். ஆடி 17 ஆம் திகதி, பிரான்ஸிஸ் வீலன் எனப்படும் ப்சர்வதேசப் பத்திரிக்கையாளர் எரிந்த நூலகத்தை சில தினங்களுக்குப் பின்னர் சென்று பார்வையிட்டார். தான் அங்கு பார்த்ததை பின்வருமாறு தனது பத்திரிக்கையில் எழுதுகிறார், "இன்று நான் நூலகத்தினுள் சென்றபோது அதன் நிலம் முழுவதும் எரிந்து சாமபலான புத்தகங்களால் மெழுகப்பட்டிருந்தது. அருகிலிருந்த உடைந்த யன்னல்களுடாக உள்ளே வீசிய மெல்லிய காற்றில் பாதி எரிந்த புத்தகத் தாள்கள் காற்றில் பறந்து ஊசலாடிக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த சுவர்களின் சுண்ணாம்புப் பூச்சுக்கள் புத்தகங்கள் எரிந்து வெளியிட்ட வெப்பத்தால் வலுவிழந்து நொறுங்கத் தொடங்கிவிட்டன. எரிந்த நூலகத்தைச் சுற்றி நான் நடந்துவந்துகொண்டிருந்தபொழுது, ஆசிரியர் கலாசாலையில் பயிற்றுனராகக் கடைமையாற்றும் ஒருவர் மனமுடைந்து என்னைப்பார்த்துக் கேட்டார், "ஏன் இப்படிச் செய்தார்கள்? நிச்சயமாக சிங்களவர்கள் எமது நூலகத்தின் மீது பொறாமைப்பாடிருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது. எனது விரிவுரைகளுக்காகவும், குறிப்புகளுக்காகவும் நான் இந்த நூலகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருவேன். ஆனால், இனி என்னால் இங்கு வரமுடியாது. எனக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள நான் இனிமேல் கொழும்பிற்குச் செல்லவேண்டும், ஆனால் அங்கு எனக்குத் தேவையான புத்தகங்கள் இருப்பது சந்தேகமே என்று கூறினார்". செய்தியாளர்களிடம் பின்னர் பேசிய யாழ்நகர மேயர், "பொறாமையே இந்த நாசகாரச் செயலுக்குக் காரணமாக இருந்தது என்பதை நான் நம்பவில்லை. தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, சிறுமைப்படுத்தவேண்டும் என்கிற நோக்கம் சிங்களவர்களுக்கு இருக்கிறது. தமிழர்கள் தமது நாகரீகத்தின் பெருமைகளை, கலாசார விழுமியங்களை, தனித்துவமான அடையாளத்தை பறைசாற்றிப் பெருமைப்படும் எந்த சின்னத்தையும் கொண்டிருக்கக் கூடாதென்பதே சிங்களவர்களின் நோக்கம்" என்று அவர் கூறினார்.
  25. இலங்கையின் முதன்மை நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் யாழ்ப்பாணம் பல விடயங்களில் இலங்கையின் முன்னணி மாவட்டமாகத் திகழந்தது போல் நூலகத்துறையும் சிறந்து விளங்கியிருந்தது. முதலாவது வாசகர் அறையினை யாழ் நூலகமே கீரிமலையில் 1915 ஆம் ஆண்டு நகுலேஸ்வரா வாசக அறை என்ற பெயரில் உருவாக்கியிருந்தது. அதேபோல் இலங்கையின் முதலாவது பொது நூலகம் யாழ்ப்பாணத்திலேயே 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி திறக்கப்பட்டது. யாழ் பொது நூலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டிற்குப் பின்னரே கொழும்பு பொதுநூலகம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண நூலகம் சர்வதேச நூலகத்துறையில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றினை தானும் நடைமுறைப்படுத்தி வந்தது. அந்தவகையில் பொதுமக்களிடம் வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுமக்கள் புத்தக இயக்கம் எனும் செயற்பாட்டினை யாழ்ப்பாண நூலகம் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இயக்கத்தின் மூலம் 1930 களில் மக்களுக்கு மலிவான விலையில் பல புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வந்திருந்தது. இதற்கு முதல், புத்தகங்கள் பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத்தளங்கள், செல்வம் படைத்தவர்களின் இல்லங்களில் மட்டுமே காணப்பட்ட அரிய பொருளாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்காலத்தில் புத்தகங்கள் கம்பளியில் எழுதப்பட்டு, நேர்த்தியாகக் கட்டப்பட்டு, மினுங்கும் மைகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாழ் நூலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கிறித்தவப் பாதிரியார் லோங்கின் உருவச் சிலை யாழ் நூலகத்தின் முதலாவது கட்டிடம் 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நீதிமன்றின் செயலாளர் எப். சி. கிரெய்னரின் வாசிப்பு அறையாகவே உருவாக்கப்பட்டிருந்தது. 1848 இல் இந்த வாசிப்பு அறை முறையான பொது நூலகமாக உதவி அரசாங்க அதிபர் வில்லியம் டியுனத்தினால் மேம்படுத்தப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நீதிமன்ற செயலாளராகக் கடமையாற்றிய கே. எம். செல்லப்பா அவர்கள் கந்தர்மடத்து இளைஞர்களை ஊக்கப்படுத்தி யாழ்ப்பாண நூலகத்திற்காக புத்தகங்களைச் சேகரிக்குமாறு கேட்டிருந்தார். மேலும், அவ்வருடம் மார்கழி 11 ஆம் திகதி தமிழிலும், ஆங்கிலத்திலும் பொதுமக்களுக்கான வேண்டுகோள் ஒன்றினை அவர் விடுத்திருந்தார். "யாழ்ப்பாணத்தில் இயங்கப்போகும் இலவச மத்திய நூலகம்" என்கிற தலைப்பில் அவரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு மக்களிடமிருந்து சிறந்த வரவேற்புக் கிடைத்தது. 1934 ஆம் ஆண்டு ஆனி 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மண்டபத்தில் மாவட்ட நீதிபதி சி. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை அமைக்கும் நிர்வாக சபைக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அதன்படி நூலக நிர்வாக சபையின் தலைவராக நீதிபதி குமாரசாமியும், உதவித் தலைவராக பாதிரியார் ஐசக் தம்பையாவும், இணைந்த செயலாளர்களாக வழக்கறிஞர் சி பொன்னம்பலமும், செல்லப்பாவும் தெரிவுசெய்யப்பட்டனர். கே. எம். செல்லப்பா யாழ்ப்பாண நூலகம் முதன்முதலாக 1934 ஆம் ஆண்டு, ஆவணி முதலாம் திகதி 844 புத்தகங்களுடனும், 30 செய்தித் தாள்களுடனும், ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருந்த இலங்கை மின்சார சபைக் கட்டடத்தின் முன்னாலிருந்த தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்து மாநகரசபையின் பிரிவான யாழ்நகர அபிவிருத்திச் சபை 1935 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இந்த நூலகத்தினை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறது. யாழ் நூலகம் தொடர்ச்சியாக வளர்ந்து வந்தது. 1952 ஆம் ஆண்டு நூலகத்தின் செயற்பாடுகள் விஸ்த்தரித்து மக்களின் அபிமானத்தை பெருவாரியாகப் பெற்றுவந்த நிலையில் அதற்கென்று தனியான கட்டடம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்த அன்றைய யாழ் நகர மேயர் சாம் சபாபதி கட்டடம் ஒன்றினைக் கட்டுவதென்று முடிவெடுத்தார். கட்டடத்திற்கான அமைவிடம் நகர அபிவிருத்தி அதிகாரியான வீரதுங்கவினால் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான அடிக்கல் 1954 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 29 ஆம் திகதி மேயர் ஆர். விஸ்வநாதனின் மற்றும் பாதிரியார் லோங்கினாலும் நாட்டி வைக்கப்பட்டது. இந்த நூலகத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் பின்னணியில் பிரித்தானியா , அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் இருந்திருக்கின்றனர். கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் இரு இந்தியர்களான நூலக விஞ்ஞானத்தின் நிபுணர் கலாநிதி எஸ்.ஆர். ரங்கநாதன் மற்றும் திராவிட கட்டிடக் கலையின் விற்பன்னரான கே. எஸ். நரசிம்மன் ஆகியோர் நூலகக் கட்டிடத்தின் வடிவமைப்பையும், நூலகத்தின் பிரிவுகள் அமைக்கப்படவேண்டிய ஒழுங்கினையும் வரைந்து கொடுத்திருந்தனர். நூலகத்தின் முதலாவது கட்டம் பூர்த்தியாக்கப்பட்டபோது அன்றைய யாழ் மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவினால் 1959 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக ஏனைய பிரிவுகளும் பூர்த்திசெய்யப்பட்டு வந்தன. இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாக யாழ் நூலகம் திகழ்ந்ததோடு 15,910 சதுர அடிகள் நிலப்பரப்பையும் கொண்டிருந்தது. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தில் ஏழு முக்கிய பகுதிகள் இருந்தன. புத்தகங்களை வாசிப்பதற்குக் கொடுக்கும் பகுதி, புதினப் பத்திரிக்கைகள் மற்றும் பருவப் புத்தகங்கள் பகுதி, சிறுவர் பிரிவு, கேட்போர் கூடம், குறிப்புப் புத்தகங்கள் பிரிவு, கலைப்பிரிவு மற்றும் கற்றல் பிரிவு ஆகியவையே அவை. நூலகம் எரிக்கப்பட்டபோது அங்கு 96,000 நூல்கள் இருந்தன. புத்தகங்களைப் பாவனைக்கு வழங்கும் பகுதியிலேயே அதிகளவான புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. குறிப்புப் பகுதியில் 29,000 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வந்ததுடன் இவற்றுள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமையான நினைவுக் குறிப்புக்கள், பழைய எழுத்தாளர்களின் ஆக்கங்கள், நாடகக் குறிப்புகள், அரசியல்க் குறிப்புகள், பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றிய தொகுப்புகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல வரலாற்று ஆவணங்கள் கவனமாகப் பராமரிக்கப்பட்டு வந்திருந்தன. இறுதியாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண வைபவமாலையின் பிரதியும் அங்கிருந்தது. இலங்கையின் பெரிய சிறுவர் பகுதியைக் கொண்டிருந்த யாழ் நூலகம் 8,995 சிறுவர்களுக்கான புத்தகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தது. இக் கொடூரமான நூலக எரிப்பினை விசாரித்த பிரபல நூலகரான எம்.கமால்டீன் தனது விசாரணைகளின் முடிவில் பின்வருமாறு கூறியிருந்தார். "அந்தப் பயங்கரமான இரவில் யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்தவர்களின் ஒரே நோக்கம் அங்குள்ள புத்தகங்கள் அனைத்தையும் அழிப்பதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் ஒரு புத்தகத்தையாவது விட்டுவைக்க விரும்பவில்லை. பாதி எரிந்த நிலையில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே எம்மால் அங்கிருந்து மீட்க முடிந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.
  26. யாழ்ப்பாண நூலகத்தை எரிக்கும்படி உத்தரவு வழங்கியது யார்? நூலகத்தை எரித்தது யார்? யாழ்ப்பாண நூலகம் தமிழரின் பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாக முக்கியமான மூன்று கேள்விகள் எழுந்தன. நூலகத்தை எரித்தது யார்? எவ்வாறு அதனை எரித்தார்கள்? எரிக்கும்படி உத்தரவிட்டது யார்? என்பனவே அம்மூன்று கேள்விகளும். யாழ்ப்பாண தமிழர்களின் கலாசாரப் பொக்கிஷமான நூலகம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரன் மிகுந்த வேதனையும், அதேநேரம் ஆத்திரமும் கொண்டார். இந்த நாசகாரச் செயலினால் தமிழினம் "கலாசாரப் பேரிழப்பொன்றினை அடைந்திருக்கிறது" என்று அவரது வாய் முணுமுணுத்தது. தென்னாசியாவின் முக்கிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை இன்னும் பலர் செய்வதறியாது பார்த்துக்கொண்டு நின்றார்கள். சரித்திரத்தில் ஒரு இனத்தின் கலாசார அடையாளத்தைப் பேணும் நூலகங்கள் எரிக்கப்படுவது இதுவே முதல்முறையுமல்ல. இதற்கு முன்னர் இரு தடவைகள் இவ்வாறான் நூலக எரிப்புக்கள் சரித்திரத்தில் நடைபெற்றிருக்கிறன. முதலாவது 12 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசிய காடையர் கூட்டமான கில்ஜி எனப்படும் கொடூரனின் படைகள் நாலந்த என்றழைக்கப்பட்ட பெளத்த பல்கலைக் கழகத்தையும், அதனோடிணைந்த நூலகத்தையும் எரித்தது. இரண்டாவதாக 1619 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் தமிழ் ராஜதானியைக் கைப்பற்றிய போர்த்துக்கேய படைகளின் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா என்பவன் தமிழர்களின் மிகவும் பழமைவாய்ந்த நூலகமும், தமிழர்களின் சரித்திரம், திராவிடப் பாரம்பரியம் ஆகியவற்றின் மூலங்களையும் கொண்ட சரஸ்வதி மகால் எனும் நூலகத்தை எரித்தான். மேலும், 500 சைவக் கோயில்களையும் அழித்துத் தரைமட்டமாக்கியதுடன் தமிழரின் தொன்மையின் அடையாளங்களை இல்லாமப் போகச் செய்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. மூன்றாவதாக பாரம்பரிய நூலகம் ஒன்றும் பெளத்த நாடு என்று அறியப்பட்ட, பெளத்த ஜனாதிபதியினால் ஆளப்படும் இலங்கையில் எரிக்கப்பட்டிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதி இரவு 10:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரான சி.வி. சிவஞானம் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்தி யாழ் நூலகம் எரிந்துகொண்டிருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார். உடனேயே சிவஞானம் அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரான யோகேந்திரா துரைசாமிக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த, அவரது மனவி மறுமுனையில் பேசினார். நூலகம் எரிவதுபற்றி தனக்கெதுவும் தெரியாது என்று கூறிய அவர், விடயங்களை அறிந்துகொண்டு மீளவும் அழைப்பதாகக் கூறினார். சில நிமிடங்களுக்குப் பின்னர் சிவஞானத்தை மீள அழைத்த அரசாங்க அதிபரின் மனைவி நூலகம் எரிவது உண்மைதான் என்பதனை உறுதிப்படுத்தினார். உடனேயே சிவஞானம் நகரசபையின் காவலர் அறைக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி நூலகம் எரிவது உண்மையா என்று கேட்டார். காவலர்களும் அதனை உறுதிப்படுத்தினர். நூலகத்தைச் சுற்றி நிற்கும் பொலீஸாரே நூலகத்திற்கு தீவைப்பதாக காவலர்கள் சிவஞானத்திடம் கூறினர். சி.வி. சிவஞானம் கடமையிலிருந்து ஆறு காவலர்களை தீயணைக்கும் இரு வாகனங்களை எடுத்துக்கொண்டு நூலகத்தை தீயிலிருந்து காக்குமாறு சிவஞானம் உத்தரவிட்டார். ஆனால், யாழ்ப்பாண நகரசபையிடம் அன்றிரவு தீயணைப்பு வாகனங்கள் இருக்கவில்லை, "குறைந்தது நூலகத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவுவதையாவது தடுத்து நிறுத்துங்கள்" என்று தனது காவலாளிகளிடம் கத்திவிட்டு, தானும் நூலகப் பகுதிக்குச் சென்றார். ஆனால் நூலகத்திற்கு அருகில் செல்வதிலிருந்தும், யாழ் நகரசபை கட்டடத்திற்குள் செல்வதிலுமிருந்து அவர் தடுக்கப்பட்டார். அவரை வழிமறித்த பொலீஸார், "நீ உள்ளே போகமுடியாது , திரும்பி சென்றுவிடு" என்று திருப்பியனுப்பினர். மேலும், மாநகரசபையின் ஊழியர்கள் சிலர் எப்படியாவது நூலகத்தினுள் சென்று தீயை அணைக்க முயற்சியெடுத்த வேளை, "வீதிக்கு வந்தீர்கள் என்றால் சுட்டுக் கொல்வோம்" என்று மாநகரசபையின் வாயிலுக்கு முன்னாலிருந்த் பொலீஸ் காவலரனில் கடமையிலிருந்த பொலீஸ் காடையர்கள் ஊழியர்களைப் பார்த்துக் குரைத்தனர். பீட்டர் கியூனுமென் கம்மியூனிஸ்ட் கட்சியின் பீட்டர் கியூனுமென் நூலகம் எரிந்த பின்னர் அதனை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். அவருடன் கூடவே "அத்த" (உண்மை) எனும் சிங்களப் பத்திரிக்கையும் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தது. அப்பத்திரிக்கைக்கு அழுதுகொண்டே பேட்டியளித்த நகரசபை ஊழியர் ஒருவர், "எங்களை உள்ளே செல்ல விடுங்கள் என்று பொலீஸாரிடம் நாங்கள் மன்றாடினோம். அவர்கள் எம்மை அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவர் எம்மைப்பார்த்து, நூலகம் முற்றாக எரியவேண்டும்" என்று கத்தினார்" என்று கூறினார். கியூனுமெனின் விசாரணைகளின்போது, நூலகம் எரிக்கப்பட்ட அன்றிரவு, அதனைச் சூழவுள்ள வீதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்திக் காவலுக்கு நின்ற பொலீஸார் அப்பகுதியினூடாக நூலகத்தை நோக்கி செல்லும் அனைவரையும் தடுக்கும் நோக்குடன் செயற்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. நூலகத்தின் பிரதான வாயில் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்டு, அவற்றின் முன்னால் பழைய டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. ஊர்காவற்றுரையில் இருந்த இலங்கை கப்பற்படையின் தளபதியுடன் தொடர்புகொண்ட சிவஞானம் உடனடியாகச் செயற்பட்டு தமிழரின் கலாசார சின்னமான நூலகம் முற்றாக எரிந்து சாம்பலாவதைத் தடுக்க உதவுமாறு கெஞ்சினார். தயக்கத்துடன் கடற்படைத் தளபதி சில வீரர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் நூலகம் முற்றாக எரிக்கப்பட்டுவிட்டது. நூலகத்தின் முழுக் கட்டிடமும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. தமிழரின் வரலாற்றுப் பெருமையான யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாக மாறிக்கொண்டிருந்தது.
  27. வாழ்த்துக்கள், ஊர் இப்ப இருக்கும் நிலை வேறு, நேரில் பார்த்த அனுபவம், இங்கிருந்தே அங்கிருக்கம் பிள்ளைகளை படிப்பித்துவிட்டால், அப்பிள்ளைகள் பலரை முன்னேற வைப்பார்கள், எங்களுக்கும் பாதுகாப்பு வருமானம் இங்கிருந்து செய்தால், இதைதான் கடைசி வரை செய்யப்போகின்றேன், நானும் நினைத்தேன் ஊரில் போய் பல மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியோக வகுப்புகளை நடத்தி அவர்களை முன்னேற்ற, இப்ப ஊர் இருக்கும் நிலை ??? இங்கிருப்பதுதான் பாதுகாப்பு வசதி
  28. தமிழரின் பொக்கிஷத்தை எரித்த சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாணத்தில் அரசியல் சூழ்நிலை எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கு வன்னியில் மறைந்திருந்த நாட்களிலும் கூட, இரவு வேளைகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றார் பிரபாகரன். ஆனால், அவரும், மீதமாக இருந்த டெலோ தலைவர்களும் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தனர். டெலோ இயக்கம் 1981 ஆம் ஆண்டு சித்திரை 26 ஆம் திகதி தனது தலைவர்களில் ஒருவரான ஜெகன் எனப்படும் கணேசநாதன் ஜெகநாதனை காட்டிக்கொடுத்தல் ஒன்றின் மூலம் பொலீஸாரிடம் பறிகொடுத்தது. இதனையடுத்து, தமிழ் மக்களின் மனங்களில் தானும் இடம்பிடித்துவிட வேண்டும் என்று எதிர்பாத்திருந்த உமா மகேஸ்வரனுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சுந்தரம் எனப்படும் சிவஞானமூர்த்தியுடன் இணைந்து மாவட்ட அபிவிருந்திச்சபைகளுக்கான தேர்தல்களைக் குழப்புவதென்று உமா முடிவெடுத்தார். அதன்படி, வைகாசி 24 ஆம் திகதி, காரைநகர் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும், வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஏ. தியகாராஜா புளொட் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏ. தியகாராஜா தொண்டைமானும், 1978 ஆம் ஆண்டிலிருந்து ஜெயாருக்கு ஆலோசகராகக் கடமையாற்றி வந்தவரான ஏ.ஜே. வில்சனும் வட மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவேண்டாம் என்று ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். "தமிழர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு ஒருவரைத் தெரிவு செய்யட்டும்" என்று வில்சன் ஜெயாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால், ஜெயாரோ வடக்கில் தனது விசுவாசிகளாக இருந்த கணேசலிங்கம், புலேந்திரன் போன்றோரின் ஆலோசனைகளையே நடைமுறைப்படுத்த விரும்பினார். 10 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபையில் குறைந்தது இரு உறுப்பினர்களையாவது வெல்லவைப்பதன் மூலம் சர்வதேசத்திற்கு தமிழர்கள் தன்னுடன் இருப்பதாகக் காட்டலாம் என்று அவர் கணக்குப் போட்டிருந்தார். இதனைச் செய்வதற்கு தேர்தலில் எந்தவகையான முறைகேடுகளையும் செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். ஏ.ஜெயரட்ணம் வில்சன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும், தேர்தல்களை நடத்துவதற்கும் உதவியாக தனது இரு முக்கிய அமைச்சர்களான சிறில் மத்தியூவையும், காமிணி திசாநாயக்கவையும் ஜெயவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்தார். முதலில் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற சிறில் மத்தியூ, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பல பஸ்களில் தனது காடையர்களை ஏற்றிக்கொண்டு காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் விருந்தினர் விடுதியில் தங்கிக்கொண்டார். ஒரு சில நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற காமிணி திசாநாயக்க யாழ்ப்பாணம் சுபாஸ் விடுதியில் தங்கிக்கொண்டார். வில்சனின் கூற்றுப்படி, காமிணி யாழ்ப்பாணத்திற்குப் போகும், அவரை வழியனுப்பி வைத்த ஜெயார், "சிறில் மத்தியூ மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சிறில் மத்தியூ யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய அசம்பாவிதம் ஒன்றில் ஈடுபடப்போகிறார் என்பதை ஜெயார் அறிந்திருந்தார் என்பது உறுதியாகிறது. சிங்கள மிருகங்கள் - ஜெயவர்த்தன, சிறில் மத்தியூ இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல்ப் பிரச்சாரத்தை மும்முரமாக நடத்தி வந்தது. அக்கட்சியின் இறுதி பிரச்சாரக் கூட்டம் வைகாசி 31 ஆம் திகதி, காங்கேசந்துறை வீதியில், நாச்சிமார் கோயிலடியில் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு யாழ் நகர மேயர் தலைமை தாங்கியிருந்தார். பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தனர். கூட்டத்திற்குப் பாதுகாப்பளிக்க வந்திருந்த நான்கு பொலீஸார், கூட்டத்தின் பின்புறமாக அடுக்கப்பட்டிருந்த வாங்குகளில் அமர்ந்திருந்து கூட்டத்தை அவதானித்தானித்துக்கொண்டு இருந்தனர். பொலீஸாரின் பின்புறமாக வந்த புளொட் அமைப்பின் ஆயுததாரிகள் பொலீஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சார்ஜன்ட் புஞ்சி பண்டா மற்றும் கொன்ஸ்டபிள் கனகசுந்தரம் ஆகிய இரு பொலீஸ்காரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். ஏனைய இரு பொலீஸ்காரர்களான உஸ்மானும், குலசிங்கவும் காயப்பட்டனர். இச்சூட்டுச் சம்பவம் இன்னொரு வன்முறையினைத் தூண்டிவிட்டது. வெற்றிவேல் யோகேஸ்வரன் இச்சம்பவம் நடந்து சரியாக 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு வந்த பொலீஸார், கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட தமது சகாக்களை எடுத்துச்சென்றதுடன், அவ்வாறு செல்லுமுன் நாச்சிமார் கோயிலுக்கும், அருகிலிருந்த சில வீடுகளுக்கும், வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கார்களுக்கும் தீவைத்துவிட்டுச் சென்றனர். மேலும், காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த இறுதி போக்குவரத்து பஸ்ஸை மறித்து, பயணிகளை அடித்து விரட்டிவிட்டு அதிலேறி யாழ்நகர் நோக்கிப் பயணித்தது ஒரு பொலீஸ் குழு. யாழ்நகரை அடைந்ததும், யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் இயங்கிவந்த பல வியாபார நிலையங்களை வரிசையாகக் கொழுத்திக்கொண்டே சென்றனர் பொலீஸார். பின்னர், யாழ்நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் பஸ்ஸை நிறுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யோகேஸ்வரனின் ஜீப் வண்டி, அவரது நண்பரின் கார் மற்றும் யோகேஸ்வரனின் வீடு ஆகியவற்றிற்கும் தீமூட்டினர். தாக்குதல் நடந்தவேளை யோகேஸ்வரனும், மனைவியும் வீட்டில் இருந்தபோதும், சமயோசிதமாக தமது வீட்டின்பின்புறத்தால் ஏறிக் குதித்து அயலவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்ததன் மூலம் உயிர்தப்பிக்கொண்டனர். யோகேஸ்வரனின் வீட்டிற்குத் தீமூட்டிய பொலீஸார் பின்னர் அங்கிருந்து, பிரதான வீதியில் அமைந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகம் நோக்கிச் சென்று அதற்கும் தீமூட்டினர். பொலீஸாரின் இந்த வன்முறைகள் நடந்தேறி சரியாக ஒருவாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து முறையிட்ட யோகேஸ்வரன், "என்னைக் கொல்வதற்காகவே அன்றிரவு பொலீஸார் எனது வீட்டிற்குத் தீவைத்தனர். நான் உயிருடன் இருப்பது அதிஷ்ட்டமே" என்று கூறினார். யோகேஸ்வரனின் பேச்சினை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறில் மத்தியூ, "யோகேஸ்வரனது வீட்டில், அவரும் பயங்கரவாதிகளும் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது குறித்து பொலீஸாருக்குத் தகவல் வந்ததனாலேயே பொலீஸார் அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது" என்று கூறினார். மேலும், "யோகேஸ்வரனின் வீட்டிற்குள் இருந்த பயங்கரவாதிகள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாலேயே வீடு தீப்பற்றிக்கொண்டது" என்றும் பொலீஸாரின் அக்கிரமத்தை நியாயப்படுத்தினார் சிறில் மத்தியூ. கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் இனங்களுக்கிடையிலான சமத்துவம், நீதிக்கான அமைப்பு இத்தாக்குதல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் யோகேஸ்வரனைக் கொல்லும் நோக்கிலேயே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குத் தீவைத்தனர் என்று கூறியிருந்தது. "பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் உயிர் தப்பியது அதிஷ்ட்டமே, ஏனென்றால், அவரைக் கொல்லும் ஒரே நோக்கத்திற்காகவே பொலீஸார் அன்றிரவு அவரது வீட்டிற்குச் சென்றனர்" என்று அது கூறியிருந்தது. பொலீஸாரின் வெறியாட்டம் மறுநாளான, 1981 ஆம் ஆண்டு, ஆனி 1 ஆம் திகதியும் தொடர்ந்தது. அந்தச் சோகமான இரவில், தமிழர்களின் பெருமையான, விலைமதிப்பற்ற யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்த நிசப்தமான இரவில், யாழ்ப்பாணத்தின் வானத்தை மறைத்துக்கொண்டு மேலெழுந்த கரிய புகையினை, உதவுவார் எவருமின்றி ஆதரவற்ற தமிழர்கள், செய்வதறியாது பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர். தமது பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்படுவது தெரிந்து உணர்வுமேலீட்டால் ஓடிச்சென்று அணைத்துவிடலாம் என்று எண்ணி, வீதிகளில் இறங்கி நூலகம் நோக்கிச் சென்ற தமிழர்களை நூலப்பகுதியில் நின்றிருந்த பொலீஸார் அடித்து விரட்டினர். பல தமிழர்கள் தம் கண்முன்னே தமது சொத்து எரிக்கப்படுவது கண்டு ஓவென்று அழ, மீதிப்பேர் அந்த அக்கிரமத்தைப் பார்க்க விரும்பாது கண்களை இறுக மூடிக்கொண்டனர். எரிக்கப்பட்டுக் கிடக்கும் எமது பொக்கிஷம் - யாழ்ப்பாண நூலகம் 1981 ஆனால், ஒரு இளைஞன் மட்டும் இதனை எப்படியாவது எதிர்க்கவேண்டும் என்று உறுதிபூண்டான். வான் நோக்கி எழுந்த தீச்சுவாலைகளை அவன் ஏறெடுத்துப் பார்த்துக்கொண்டான். கண்கள் வீங்கிச் செந்நிறமாக, முகத் தசைகள் இறுகத்தொடங்க அவனது இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. இதற்குப் பழிவாங்குவேன் என்று அவன் சபதம் பூண்டான். ஜெயவர்த்தனவின் காடையர்கள் எனது பணியை இலகுவாக்கி விட்டார்கள் என்று அவனது வாய் முணுமுணுத்துக்கொண்டது. உலகத்தமிழர் மாநாட்டில் 11 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழர்கள் அடைந்த துன்பத்தைக் காட்டிலும் பன்மடங்கு துன்பத்தை இந்த நூலக எரிப்பு அவர்களுக்குக் கொடுத்தது. அவர்கள் மனங்களில் என்றும் அழியாத வடுவை அது ஏற்படுத்தியது. இந்த சதிகார நாசச் செயலை எந்தவொரு தமிழனும் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, அவனே பிரபாகரன். எரிந்துகொண்டிருந்த தமிழரின் பொக்கிஷத்திற்கு வெகு அருகிலேயே அவன் அப்போது ஒளிந்திருந்தான். அவனது மனம் கோபத்தால் கொப்பளித்துக்கொண்டிருந்தது.
  29. நீர்வேலி வங்கிக்கொள்ளை கடுமையான பணத்தட்டுப்பாடினை எதிர்நோக்கிய டெலோ அமைப்பு, தமிழ் மக்கள் அரசின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தியான சூழ்நிலையினைப் பாவித்து, குறும்பசிட்டியில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான நகை அடைவுபிடிக்கும் நிலையம் ஒன்றினை 1981 ஆம் ஆண்டு தை மாதம் 7 ஆம் திகதி கொள்ளையடிக்கத் தீர்மானித்தனர். பின்னர் நடைபெறவிருந்த வன்முறைகளுக்கு இது முன்னோடியாக அமைந்திருந்தது. தனது பணத்தினையும், நகைகளையும் கொள்ளையடிக்க வந்திருந்த குழுவைக் கண்டதும் உரத்துக் கூக்குரலிட்ட உறிமையாளர், அயலவர்களின் உதவியுடன் கொள்ளையிட வந்த குழுவினரைக் கலைத்துவிட்டார். ஆனால், அக்குழு ஒரு தமிழ்ப் போராளி அமைப்பென்பதை அவர் தெரிந்திருக்கவில்லை. தப்பியோடிய கொள்ளைக் குழு தம்மைத் துரத்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஐய்யாத்துரை, குலேந்திரன் ஆகிய இரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பங்குனி 16 ஆம் திகதி, டெலோ அமைப்புடன் சேர்ந்து பிரபாகரன் தனது முதலவாது ஒருங்கிணைந்த நடவடிக்கையினை மேற்கொண்டார். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளியாக மாறியிருந்த முன்னாள் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவரான செட்டி தனபாலசிங்கத்தை யாழ்ப்பாண நகருக்குச் சற்று வெளியே இருந்த கல்வியங்காடு பகுதியில் சைக்கிளில் சென்ற பிரபாகரனும், குட்டிமணியும் சுட்டுக் கொன்றனர். வீதியில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த செட்டி, பிரபாகரனும், குட்டிமணியும் வருவதைக் கவனித்திருக்கவில்லை. செட்டி சுதாரித்து, இடுப்பில் செருகியிருந்த தனது கைத்துப்பாக்கியை எடுக்கும் முன்னரே நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 1981 ஆம் ஆண்டு, பங்குனி 25 ஆம் திகதி, இலங்கையில் அதுவரை நடைபெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் மிகவும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவமான நீர்வேலி வங்கிக்கொள்ளையினை குட்டிமணி நடத்தியிருந்தார். நீர்வேலிக் கிளையில் தினமும் சேரும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தலைமைக் கிளைக்குக் கொண்டு சேர்க்கும் மக்கள் வங்கியின் செயற்பாட்டினை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த குட்டிமணி இக்கொள்ளையினை மிகவும் சிறப்பாகத் திட்டமிட்டார். நீர்வேலிச் சந்திக்கு அருகில், ஆளரவமற்ற பகுதியில், இராணுவச் சீருடையில் பதுங்கியிருந்த குட்டிமணியும் அவரது தோழர்களும் யாழ்ப்பாணக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டி வரும்வரை காத்திருந்தனர். பணத்தைக் காவிவந்த வாகனம் தமக்கருகில் வந்தவுடன், குட்டிமணியின் தோழர்களில் ஒருவர் வீதிக்குக் குறுக்கே, வாகனத்தின் முன்னால்ப் பாய்ந்து, "நிறுத்துங்கள்" என்று சிங்களத்தில் உரக்கக் கூவியிருக்கிறார். தம் முன்னால் நிற்பது இராணுவ வீரர்கள்தான் என்று எண்ணிய வாகனத்திலிருந்த பொலீஸார், வாகனத்தை அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு கீழிறங்கும்போது, அவர்கள் இருவரையும் குட்டிமணியும் தோழர்களும் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட பொலீஸ்காரர்களின் பெயர்கள் முதுபண்டா மற்றும் ஆரியரட்ண என்பதுடன், வாகனத்தில் நேர்த்தியாக பணம் அடுக்கப்பட்டிருந்த ஐந்து சூட்கேஸுகளுடன் குட்டிமணியும், தோழர்களும் தப்பிச் சென்றனர். அன்று கொள்ளையிடப்பட்ட பணத்தின் அளவு 79 லட்சம் ரூபாய்கள். அரசாங்கம் அதிர்ந்து போனது. ஜெயவர்த்தன கலங்கிப் போனார். வீரதுங்கவின் ராணுவ நடவடிக்கையினால் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் செயலிழந்து போய்விட்டன என்று அவர் கட்டிவந்த கனவுக் கோட்டை கலைந்துபோனது. தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஜெயார், கொள்ளையிட்டவர்களை எப்படியாவது கைதுசெய்யவேண்டும் என்று கூறியதுடன், கொள்ளைக்காரர்கள் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தவேண்டும் என்றும் கட்டளையிட்டார். மேலும், கொள்ளையர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோரு பத்து லட்சம் ரூபாய்கள் சன்மானமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சித்திரை 5 ஆம் திகதி, பருத்தித்துறை கிழக்கில் அமைந்திருந்த கரையோரக் கிராமமான மணற்காடு பகுதியில் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல படகிற்காகக் காத்திருந்தவேளை குட்டிமணி, தங்கத்துரை, செல்லத்துரை சிவசுப்பிரமணியம் (தேவன்) ஆகிய மூவரும் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பில் வழக்கைச் சந்தித்த தங்கத்துரையுடன் பேசுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. என்னிடம் பேசிய தங்கத்துரை பின்வருமாறு கூறினார், "எங்களை சிறிசபாரட்ணமே கடற்கரையில் இறக்கிவிட்டார். படகு இரவு 11 மணிக்கு வரும் என்று எங்களிடம் அவர் கூறினார். ஆனால், அது வரவில்லை. பின்னர், துப்பாக்கிகளை எம்மை நோக்கி நீட்டியபடி வந்துகொண்டிருந்த பொலீஸ்காரரை நாங்கள் கண்டோம். "சரணடையுங்கள்" என்று அவர்கள் உரக்கக் கத்தினார்கள். தப்பியோடுவதற்காக சுற்றுமுற்றும் பார்த்தோம், அப்போதுதான் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. எம்மால் தப்பிச்செல்ல முடியவில்லை. நாம் கைகளை உயர்த்தியபடி சரணடைய முயலும்போது, குட்டிமணி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுக்க முனைந்தார். தன்னைத்தானே சுட்டுக்கொல்லவே அவர் முயன்றார். ஆனால், பொலீஸார் அவரை மடக்கிப் பிடித்துவிட்டனர். கைகலப்பில் துப்பாக்கி வெடித்து, சன்னம் அவரது காதினைத் துளைத்துச் சென்றது. எம்மைக் கைது செய்து, விலங்கிட்டு, சங்கிலிகளால் பிணைத்து வைத்தார்கள். பின்னர் கொழும்பிற்கு விமானத்தின்மூலம் கொண்டுவரப்பட்டு பனாகொடை இராணுவ முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம்". "உங்களைப் பற்றி யாராவது பொலீஸாருக்கு அறிவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் அவரைக் கேட்டேன். "நாமும் அந்த முடிவிற்குத்தான் வந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார். தனது சந்தேகத்திற்கான காரணங்களை தங்கத்துரை பின்வருமாறு கூறினார். அவர்களைக் கைதுசெய்ய வந்த பொலீஸ் பரிசோதகரும் அவரது படையும் தமது ஜீப் வண்டியை தொலைவில் நிறுத்திவிட்டு, கால்நடையாகவே சத்தமின்றி அவர்களை நோக்கி முன்னகர்ந்து வந்திருக்கின்றனர். ஆறுபேர் அடங்கிய அந்த பொலீஸ் குழுவினர் தாமிருந்த பகுதியை வட்டமாகச் சுற்றிவளைத்து முன்னேறியது தாம் தப்பிச்செல்வதைத் தடுத்துவிடவே என்று அவர்களுக்குப் புரிந்தது. பொலீஸார் தம்முடன் கைவிலங்குகளையும் எடுத்து வந்திருந்தது, குட்டிமணி குழுவினரைக் கைதுசெய்யும் திட்டத்துடனேயே என்பதைப் புலப்படுத்தியிருந்தது. மேலும், சிறி சபாரட்ணம் கூறியபடி இரவு 11 மணிக்கு படகு வராது போனது கூட, நேரம் வேண்டுமென்றே தவறாகக் கூறப்பட்டதனால்த்தான் என்றும் அவர்கள் சந்தேகித்திருந்தனர். "நீங்கள் யாரையாவது சந்தேகிக்கிறீர்களா?" என்று அவரிடம் கேட்டேன். அவர் பதில் கூறவில்லை. புன்னைகையே பதிலாக வந்தது. "நாங்கள் வெளியில் வந்ததன் பின்னர் நீங்களே அறிந்துகொள்வீர்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். "அப்படியானால், படகோட்டியைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று மீண்டும் அவரைக் கேட்டேன். அதற்கும் புன்னகையே பதிலாக வந்தது. "படகினை ஒழுங்கு செய்தது யார்?" என்று நான் கேட்டேன். "பிரபாகரன்" என்று அவர் பதிலளித்தார். "அவரைச் சந்தேகிக்கிறீர்களா?" என்று நான் மீண்டும் கேட்டேன். சிரித்துக்கொண்டே பேசிய அவர், "நான் எனது சந்தேகங்களை ஒரு பத்திரிக்கையாளரிடம் சொல்ல முடியாது. நான் வெளியே வந்தவுடன் இதுபற்றி நானே விசாரிப்பேன்" என்று அவர் கூறினார். ஆனால், அவரால் வெளியில் வரமுடியாமலேயே போய்விட்டது. அவரும், குட்டிமணியும், தேவனும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நேர்காணல் நடந்து சரியாக ஒருவருடத்தின் பின்னர், 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் திகதி சிறைச்சாலைப் படுகொலைகளின் முதலாம் நாளன்று அவர்கள் மூவரும் கொல்லப்பட்டுப் போனார்கள். நீர்வேலி வங்கியைக் கொள்ளையடித்தவர்களைத் தேடி இராணுவத்தினர் பாரிய தேடுதல் வேட்டையொன்றினை முடுக்கிவிட்டிருந்தனர். அதனைச் செய்தது டெலோ அமைப்பினரே என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்த தேடுதல் வேட்டை மீண்டும் ஒருமுறை பிரபாகரனின் சமயோசிதத்தை வெளிக்காட்டியிருந்தது. பொலீஸாரின் ஒவ்வொரு அசைவினையும் முன்னமே கணிப்பிட்டு , அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டார். தனது ஆயுதங்களை உடனடியாக புதிய மறைவிடங்களுக்கு அவர் மற்றிக்கொண்டார். பிரபாகரனின் பழைய மறைவிடங்களைப் பொலீஸார் சோதனையிட்டபோது எதுவுமே அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களின் தேடுதல் நடவடிக்கை பிரபாகரனைத் தொடர்ந்தும் ஓட்டத்தில் விட்டிருந்தது. இதனால் வன்னிக்குத் தப்பியோடிய பிரபாகரன், காட்டில் வாழ்ந்து வந்ததுடன் முட்புதர்களுக்குள் தூங்கியும், உணவின்றியும் அவதிப்பட்டார். குட்டிமணியும், ஜெகனும் 1982 ஆம் ஆண்டில்
  30. அரசியலில் பிரபாகரனுக்கு இருந்த ஆர்வம் எத்தனையோ சவால்களுக்கும், கஷ்ட்டங்களுக்கும் பின்னர் தான் மீளப் பெற்றெடுத்துக்கொண்ட தனது இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை மீளவும் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைப்பதில் மும்முரமாக பிரபாகரன் ஈடுபட்டிருந்தபோதும் கூட, அரசியலில் அப்போது நடைபெற்று வந்த நிகழ்வுகளையும் உன்னிப்பாக அவதானித்து வந்தார். இயல்பில் அவர் ஒரு அரசியல்த் தீவிரவாதியாகத் திகழ்ந்தார். இதனை பலமுறை நேர்காணல்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் மீதிருந்த தீவிர ஈடுபாடே தன்னை ஒரு போராளியாக மாற்றியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அனித்தா பிரதாப்பிற்கு அவர் 1984 இல் வழங்கிய முதலாவது நேர்காணலில் பின்வருமாறு கூறுகிறார், அனித்தா பிரதாப் : எந்தக் கட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகளில் நீங்கள் நம்பிக்கையிழந்தீர்கள்? அதன்மீதான உங்களிம் ஏமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது எது? பிரபாகரன் : இளைய சமுதாயம் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்த 70 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். ஆயுத ரீதியிலான போராட்டச் சிந்தனையுடனேயே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். தமிழ் மக்களின் அவலங்கள் மீது அடுத்தடுத்து ஆட்சி செய்த சிங்கள அரசுகள் காட்டிய அசமந்தமும், அலட்சியமும் மாற்றாந்தாய் மனப்பாங்குமே பாராளுமன்ற அரசியல் ஒரு ஏமாற்று நாடகம் எனும் நிலைக்கு என்னைத் தள்ளியது. பிரபாகரனைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களும், அந்த அவலங்களைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியில் முன்னெடுத்த போராட்டங்களின் முற்றான தோல்வியுமே ஆயுதம் ஏந்துவதற்குக் காரணமாக இருந்தது. அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் நெருக்கமாக அவதானித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்கள் குறித்த நுட்பங்களைத் தொடர்ச்சியாக அரசியல் அவதானிகளுடன் பேசிவந்திருக்கிறார். வி. தர்மலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பீடத்துடன் இளைஞர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாக பிரச்சினைப்படுகையில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஒரு நாள் காலை வி தர்மலிங்கத்தின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன் அரசு முன்வைக்கும் யோசனைதான் என்ன என்று அறிய முயன்றார். தர்மலிங்கத்தின் மகனான சித்தார்த்தனினின் கூற்றுப்படி, அன்று காலை பிரபாகரனுக்கு தோசை உணவாகப் பரிமாறப்பட்டிருக்கிறது. அங்கு, தனது கைத்துப்பாக்கியை பிரபாகரன் சித்தார்த்தனுக்குக் காட்டியிருக்கிறார். "இது பஸ்டியாம்பிள்ளையிடம் முன்னர் இருந்தது" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். இன்று புளொட் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் சித்தார்த்தன், அன்று பிரபாகரனுக்கு தனது தந்தையாரான தர்மலிங்கம், அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபை திட்டத்தினை விளக்கியதாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் சமஷ்ட்டி முறையிலான அதிகாரப் பரவலாக்கத்திற்கு அடித்தளமிட முடியும் என்றும் தர்மலிங்கம் பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். "தமிழர்களுக்கான சுயாட்சிப் பிராந்தியம் ஒன்றிற்கான அடித்தளத்தினை இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைக் கட்டமைப்பு கொடுக்கக் கூடியது என்பதனால், இதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம் " என்று பிரபாகரனிடம் தனது தந்தையார் கூறியதாக சித்தார்த்தன் கூறுகிறார். தனது தந்தையாரிடம் மிகவும் தீவிரமாகப் பிரபாகரன் பேசிக்கொண்டிருந்ததை தான் அவதானித்ததாக சித்தார்த்தன் கூறுகிறார். மாவட்ட அபிவிருத்திச் சபையின் நிதி அதிகாரம், காணியதிகாரம், பொலீஸ் அதிகாரம் குறித்து பல கேள்விகளை பிரபாகரன் தர்மலிங்கத்திடம் கேட்டிருக்கிறார். பிரபாகரனின் அடுத்தடுத்த கேள்விகளால் அதிர்ந்துபோன தர்மலிங்கம், இறுதியில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு இருக்கும் அதிகாரம் பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது என்பதை ஒப்புக்கொண்டார். "பிரபாகரன் அதுகுறித்து எந்தவித அபிப்பிராயத்தையும் கூறவில்லை. ஆனால் அவரது கேள்விகளில் அவரது சிந்தனையின் வீச்சு தெளிவாகத் தெரிந்தது" என்று சித்தார்த்தன் அந்த நாளை நினைவுகூர்ந்தார். மாவட்ட அபிவிருத்திச் சபைகள் குறித்து பிரபாகரன் அதிகம் அலட்டிக்கொள்ளாதபோதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவு தமது தலைமைக்கெதிரான தமது எதிர்ப்பினை இன்னும் அதிகப்படுத்தியிருந்தனர். இவ்வகையான முதலாவது சம்பவம் 1981 ஆம் ஆண்டு மாசி மாதம் நடந்தது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் அக்கூட்டத்திலேயே அமிர்தலிங்கம் அரசின் மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கப்போவதாக அறிவித்திருந்தார். அடுத்த சம்பவம், 1981 ஆம் ஆண்டு ஆனி 4 ஆம் திகதி நடக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னணியினர் தீர்மானம் எடுத்தபோது நடந்தது. அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக அகிம்சை ரீதியில் தமது எதிர்ப்பினைக் காட்டி வந்த இளைஞர்கள் 1981 ஆம் ஆண்டு பங்குனி 16 ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டிருந்தனர். அன்றிரவு, அமிர்தலிங்கமும், தர்மலிங்கமும், ராஜலிங்கமும் வல்வெட்டித்துறையில் தமது இரவுணவை அருந்திக்கொண்டிருந்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்த தர்மலிங்கத்தின் ஜீப் வண்டியை மூன்று இளைஞர்கள் சேதப்படுத்தினர். இரு நாட்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் அரசடி வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராஜலிங்கத்தின் ஜீப் வண்டியும் அடித்து நொறுக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின்னர் மன்னாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
  31. அழுத்தத்திற்குப் பணிந்த உமா மகேஸ்வரன் தனக்கு விசுவாசமான , தனக்கும், இலட்சியத்திற்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றக்கூடிய வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தபோதும் கூட, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினை உமா மகேஸ்வரன் கைவிட வேண்டும் என்று பிரபாகரன் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தார். மேலும், தான் வேறு பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரினைக் கைவிட்டு விட்டதாகவும் உலவி வந்த வதந்திகளை அவர் ஒதுக்கித் தள்ளினார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் சரித்திரத்தை இன்னொருவருக்கு விட்டுக் கொடுப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வது இலகுவானது. எனது இயக்கம், தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்தியிருப்பதுடன், தமிழ் மக்களின் மனங்களிலும் அது குடிகொண்டுவிட்டது" என்று தன்னிடம் சமரசம் பேச வந்த சிலரிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார். இலங்கையிலும், லண்டனிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வந்த கடுமையான அழுத்தங்களுக்குப் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனும் பெயரை விட்டுக் கொடுக்க உமா மகேஸ்வரன் முன்வந்ததுடன், தனது அமைப்பிற்கு தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் என்றும் பெயர் சூட்டினார். இந்த அமைப்பினுள் உமாவுடன், மார்க்ஸிசச் சிந்தனையும், தத்துவார்த்த அடிப்படையில் காலம் காலமாக வீண் விவாதங்களில் ஈடுபட்டும் வந்த பல செயலற்ற உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். தனது சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் முட்டுக்கட்டையாகவிருந்த பல செயலற்ற சிந்தனாவாதிகள் தனது இயக்கத்தை விட்டுச் சென்றது குறித்து பிரபாகரன் நிம்மதி அடைந்திருந்தார். தமிழ் மக்களின் மனங்களில் தானும் ஒரு இடத்தினைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த உமா, அரசுக்கெதிராக அதிரடியான தாக்குதல்கள் சிலவற்றை நடத்தினார். மேலும், அரச சதியான மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பங்கேற்கக் கூடாது என்று வன்மையாக எதிர்த்தும் வந்தார். இதேவேளை, தனது அரசியல் அதிகாரத்தை மேலும் பலப்படுத்த விரும்பிய ஜெயார். தனது அரசியல் வைரியான சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்குவதன் மூலம் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறிமா போட்டியிடுவதை எப்படியாவது தடுத்துவிடலாம் என்று திட்டம்போட்டார். இதற்காக, தனது பிரதமரான பிரேமதாசவூடாக சிறிமாவின் குடிமை உரிமைகளை 7 ஆண்டுகளுக்குப் பறித்துப்போடும் தீர்மானம் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சிறிமாவோ திட்டமிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஜெயாரின் இந்தப் பழிவாங்கும் செயலினை எதிர்த்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், இரு தடவைகள் நாட்டை ஆட்சிபுரிந்த ஒரு பிரதமரின் குடிமை உரிமைகளைப் பறிப்பது ஜனநாயகத்தைக் கேலிக்குள்ளாக்கும் செயல் என்று விமர்சித்திருந்தனர். இறுதியாக, இந்தப் பழிவாங்கும் செயலில் இறங்கவேண்டாம் என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் கோரினார். இது முன்னணியினர் மீது ஜெயார் கடுமையாகக் கோபம் கொள்ளக் காரணமாகியது.
  32. அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா ! 1980 ஆம் ஆண்டு ஆவணி 8 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான பிரேரணையினை பிரதம மந்திரியான பிரேமதாசா பாராளுமன்றத்தின் முன்வைத்தபோது பிரச்சினை இன்னும் சிக்கலானது. அதனை உடனடியாகவே நிராகரிக்க வேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பிரேரணையினை பாராளுமண்ரத்திலேயே நிராகரித்துவிட்டு, வெளியே வந்து தனிழ்நாட்டிற்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், இளைஞர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்னணி மறுத்துவிட்டது. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை பிரேரணையினை ஆதரிப்பதென்றும், அதனை நடைமுறைப்படுத்த ஜெயாருக்கு தமது முழு ஆதரவினையும் வழங்குவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழு முடிவெடுத்தது. எரிக்கப்பட்டுக் காட்சிதரும் யாழ்ப்பாண நூலகம் சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பொதுச்சபை, அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பான தமது தீர்மானத்தை கலந்தாலோசித்திருந்தது. சுமார் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் "இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்" என்று கூறியதுடன் தமது கட்சி இதனை முற்றாக ஆதரிக்கும் என்றும் கூறினார். இச்சட்டத்தை தானும், தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதற்கு மூன்று காரணங்களை அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, இச்சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கலை நாடு முழுவதற்கு விஸ்த்தரிக்க முடியும் என்று அவர் கூறினார். அபிவிருத்திப் பணிகளில் மக்களையும் இதன்மூலம் ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இரண்டாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரிக்காவிட்டாலும் கூட, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அரசாங்கம் நிச்சயம் அதனை நிறைவேற்றியே தீரும். ஆகவே, அதனை எதிர்த்து அரசுடன் பகைமையினை வளர்ப்பதைக் காட்டிலும், ஆதரித்து நட்புப் பாராட்டலாம் என்று அவர் கூறினார். மூன்றாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரித்து சட்டமாக்க உதவுவதன் மூலம், தமிழ் மாவட்டங்களில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என்றும், அவ்வாறில்லாமல் இதனை எதிர்த்தால் வடக்குக் கிழக்கில் இன்றுவரை அரசால் அபிவிருத்திப்பணிகளில் காட்டப்பட்டுவரும் மாற்றாந்தாய் மனப்பான்மை இனிமேலும் தொடரும் என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அமிர்தலிங்கத்தின் இந்த யோசனைக்குப் பலமான எதிர்ப்பு இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. அவரை விமர்சித்தவர்கள் இச்சட்டம் மிகவும் பலவீனமானதென்றும், இதனால் தமிழருக்கென்று நண்மைகள் ஏதும் இல்லையென்றும் வாதிட்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் டட்லி சேனநாயக்கவினால் வரையப்பட்ட பிராந்திய சபைகள் அடிப்படையிலான தீர்வினைக் காட்டிலும் ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மிகவும் பலவீனமானவை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். டட்லியின் பிராந்திய சபைகளையே தமிழ் இளைஞர்கள் "மிகைப்படுத்தப்பட்ட நகர சபைத் தீர்வு" என்று ஏளனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது. மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தினை விமர்சித்தவர்களின் கருத்தின்படி சட்டவாக்கல் மற்றும் வரி அறவிடல் ஆகிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் போதுமானதாக இல்லையென்றும், மத்திய அரசாங்கத்தின் விருப்பின் அடிப்படையிலேயே இவை தீர்மானிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், இந்த சட்டத்தினை தமிழர்களுக்கான தீர்வாக சர்வதேசத்திற்கு காட்டுவதே ஜெயாரின் உண்மையான நோக்கம் என்றும், இச்சட்டத்தினை அவர் ஒருபோதும் உண்மையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ஈழவேந்தன் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வவுனியா நகர மண்டபத்திற்கு வெளியே இளைஞர் குழுவொன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் இறங்கியது. அந்த இளைஞர்கள் பதாகை ஒன்றினை ஏந்தியிருந்தனர். "எமது இலட்சியத்திலிருந்து எம்மை திசைதிருப்பும் இந்த சட்டத்தினை உடனடியாக நிராகரியுங்கள்" என்று அந்தப் பதாகை கூறியது. கூட்டத்தின் முடிவில் அச்சட்டத்தினை தமது கட்சி ஏற்கும் என்று அன்று இரவு 9 மணிக்கு முடிவெடுத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியே வந்த அமிர்தலிங்கத்தைச் சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் "அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா, அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா" என்று ஆக்ரோஷமாகக் கூச்சலிடத் தொடங்கினர். அதாவது, அமிர்தலிங்கம் சிங்களவர்களுக்கான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் என்று பொருள். அந்தச் சத்தியாக்கிரகத்தை ஒழுங்குசெய்த ஈழவேந்தன் எழுந்துசென்று, அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசியின் முன்னால்ப் போய் அழுதுகொண்டே, "உங்களின் கணவர் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார்,உங்களுக்கு வணக்கம்" என்று கூறிவிட்டுச் சென்றார். கனகேந்திரன் எனும் இயற்பெயரைக் கொண்ட ஈழவேந்தன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் பலகாலம் பணிபுரிந்தவர் என்பதுடன், செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய அமைப்பாளராக ஆரம்ப காலங்களில் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஈழவேந்தனின் அந்த இறுதி விடைபெறுதல் நிகழ்வு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குள் இருந்த பிளவை முழுமையாக்கியிருந்தது என்றால் அது மிகையில்லை. முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற கோவை மகேசனின் அமைப்பு தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் புதிய அமைப்பினை உருவாக்கியது. இப்புதிய அமைப்பின் தலைவராக கலாநிதி தர்மலிங்கமும், செயலாளராக ஈழவேந்தனும் நியமிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். தனது அமைப்பை மீள உருவாக்கிக் கட்டமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். தான் எப்படியாவது மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும் என்று அவர் உறுதி பூண்டிருந்தார். தனக்கு விசுவாசமான, தனது நோக்கத்தினைச் செவ்வணே நிறைவேற்றும் கெரில்லா அமைப்பொன்றினை உருவாக்க அவர் விரும்பினார். தேவையற்ற விவாதங்களும், பலனற்ற தத்துவார்த்தச் சிந்தனைகளும், இயக்கம் எப்படி பயணிக்கவேண்டும் என்பது குறித்து காலவரையறையின்றி நடக்கும் கலந்துரையாடல்களும் ஒருபோதும் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தப்போவதில்லை என்று அவர் திடமாக நம்பினார். ஆகவே, தந்தை செல்வாவைப்போன்று தானும் யதார்த்தமான வழிகளைப் பின்பற்ற விரும்பினார். ஒரே தலைவன், ஒருவனே தீர்மானம் எடுப்பது, தமிழ் மக்களின் விடுதலையினை வென்றெடுக்க ஒரே சிந்தனையுடன் இலட்சியத்தில் பயணிப்பது ஆகியவையே அவரைப்பொறுத்தவரை தனது இயக்கத்திற்குத் தேவையானதாக இருந்தது. பிரபாகரனின் தளபதிகளில் ஒருவராக கிட்டு அவர்கள் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இற்கு வழங்கிய நேர்காணலில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். தமிழர்களின் தலைவர் தான் மட்டுமே என்ற காரத்தினால்த்தான் தந்தை செல்வாவினால் பிரதமர்களான பண்டாரநாயக்கவுடனோ அல்லது டட்லி சேனநாயக்கவுடனோ நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்யக்கூடியதாக இருந்தது என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கிட்டு கூறுகிறார். தந்தை செல்வா தன்னுடன் G G பொன்னம்பலத்தையோ அல்லது சுந்தரலிங்கத்தையோ உடன் அழைத்துச் சென்றிருந்தால், தந்திரசாலிகளான சிங்களப் பிரதமர்கள் இருவரும், தமிழர்களின் பிரதிநிதிகளுக்குள் பிளவினை உருவாக்கி பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பினைப் பலவீனப்படுத்தியிருப்பார்கள் என்று பிரபாகரன் கிட்டுவிடம் கூறியிருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.