Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்10Points8907Posts -
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்6Points2957Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்5Points87990Posts -
Kapithan
கருத்துக்கள உறவுகள்4Points9308Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/28/24 in all areas
-
ஆண்டவனையும் கேட்க வேண்டும்
5 pointsஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன். இப்படிச் சொன்னாலே மூன்று காலங்களும் வந்துவிடும். ஆனால் நாங்கள் என்னவோ முக்காலத்திலும், கடந்த காலத்து ஆண்டவர்களைத்தான் தேடுகிறோம். கோயில் கட்டி வணங்குகிறோம். பொங்கல் படைக்கிறோம். காணிக்கை தருகிறோம். காவடி தூக்குகிறோம். தேரில் வைத்து இழுக்கிறோம்…இன்னும் என்னென்னவோ செய்கிறோம். நாங்கள் தமிழர்கள் என்பதால், எங்களை ஆண்டவர்கள் கந்தசாமி, சண்முகம், கதிரேசன், ஆறுமுகம், முருகன்,…. என்னும் பெயர்களுடன் இருக்கிறார்கள். நான் இரண்டாம் வகுப்பு படித்த போது, எனது சமயம் சைவசமயம் எனத்தான் படித்தேன். இப்பொழுது எனது சமயம் என்ன என்று கேட்டால் இந்து சமயம் என்றுதான் குறிப்பிடுகிறேன். என் சமயத்தையே என்னைக் கேட்காமல் மாற்றிவிட்டார்கள். ஆண்டவர்களில் மூன்றுபேர், படைத்தல், காத்தல், அழித்தல் என்று தங்களுக்கான பொறுப்புகளை தங்களுக்குள்ளேயே பிரித்து எடுத்துக் கொண்டார்கள். இதில் படைப்பவன், படைத்தலுடன் தன் வேலையை நிறுத்திக் கொண்டான். காத்தல், அழித்தல் செய்பவர்கள் கொஞ்சம் குளப்படி. தேவையில்லாத விடயங்களையும் செய்யக் கூடியவர்கள். அப்படிச் செய்யும் தில்லு முல்லுகள் எல்லாம் ஆண்டவனின் ‘திருவிளையாடல்கள்’ என்ற பதத்துக்குள் அடங்கிவிடும். அழித்தல் வேலை செய்த ஆண்டவனின் மாமனார் (பெண் கொடுத்தவர்), ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்துக்கு மருமகனை அழைக்கவில்லை. அது மருமகனுக்குப் பொறுக்கவில்லை. கோவம் தலைக்கேறி ஒரு தாண்டவமும் ஆடி, தனது வேலையாளான வீரபத்திரனை அனுப்பி, யாகத்தை அழித்து மாமனாரையும் கொலை செய்வித்தான் . இந்தக் கொலையை செய்ய ஆளை அனுப்பியவன் ஆண்டவன் என்பதால் ‘வதம்’ செய்வித்தான் என்று குறிப்பிட்டால்தான் சரியாக இருக்கும். அடுத்து காத்தல் செய்பவன். இவன் அழித்தல் செய்பவனை விட ஓவரான குழப்படிக்காரன். தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுக்காரன். பெண்களை மயக்கும் மாயவன். பெரும் தந்திரசாலி. ஒரு தடவை நரகன் என்ற அரசனுடன் (பின்னாளில் நரகாசுரன்) பிரச்சனையாகிப் போனது. நரகன் பலசாலி. அவனுடன் மோதினால் காத்தல் வேலை செய்யும் தான் கந்தல் ஆகிவிடுவேன் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான். நரகன் நல்லவன், அறிஞன், வீரன் என்பதெலாம் காத்தல் ஆண்டவனுக்குத் தேவைப்படாத விடயங்கள். தந்திரத்தால் நரகனை அழிக்கத் திட்டம் போட்டான். ‘நரகன் ஆண்களுடனையே போர் செய்வான். எக்காலத்திலும் பெண்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமாட்டான்’ என்ற தகவல் அவனுக்குக் கிடைத்தது. நரகனை போருக்கு அழைத்துத் தன் மனைவி சுபத்திரையிடம் ஆயுதம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தான். நரகன், பெண்களை மதிப்பவன். கொண்ட கொள்கையில் நிலையாய் நிற்பவன். போர்க்களத்தில் தன்னுடன் மோத வந்திருப்பது ஒரு பெண் என்பதால், தன் ஆயுதங்களை எடுக்காமல் அமைதியாக நின்றான். கணவன் சொல் கேட்டு சுபத்திரை அம்பு விட்டாள். நரகன் செத்துப் போனான். “நரகன் அழிந்துவிட்டான். இந்நாளை இனி வரும் காலங்களில் நன்னாளாகக் கொண்டாடுங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டான். காத்தல் வேலை செய்தாலும், தன்னுடைய மச்சான் செய்யும் அழித்தல் வேலை அவனுக்குப் பிடித்திருந்தது போலே, இரணியனை கொலை (வதம்) செய்தான். பரசுராமன் என்று மாற்றுப் பெயரில் போய் தன் தாயையே கொன்றான். கெளரவர்களில் ஒருத்தனை மட்டும் விட்டு விட்டு எல்லோரையும் அழித்தான்.. என்று அவனின் காத்தல் வேலை அழித்தலாகத் தொடர்ந்தது. இதை எல்லாம் கேள்விப் பட்ட எங்களை ஆண்ட கந்தனுக்கும் கை துருதுருக்க அவனும் சூர பத்மனை கொலை (வதம்) செய்து, ஆண்டாண்டு காலமாக அதை நினைவு கூரவும் செய்திருக்கிறான். இப்படிப் போகிறது எங்களை ஆண்டவர்கள் கதை. அமைதி தேடி ஆண்டவர்களின் இருப்பிடத்துக்குப் போனால், ஆண்டவர்கள் எல்லாம் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயமுறுத்துகிறார்கள். கால்களில் யார் யாரையோ போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்னிகளை ஒன்றுக்கு இரண்டாக அணைத்து வைத்துக் கொண்டு காட்சி தருகிறார்கள். ஆனாலும் நாங்கள் அங்கே போய்த்தான் அமைதியைத் தேடிக் கொள்கிறோம். ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம்.5 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலன் கொல்லப்பட்டது தவறு என்று புலிகளே கூறியபின்னர் ஏனையவர்கள் அதனைச் சரியென்று வாதிடுவதில் அர்த்தமில்லை. அவரது கொலையினால் கிடைத்த நண்மை எதுவுமில்லை, மாறாக எமது போராட்டத்தினைப் பயங்கரவாதம் என்று பேரினவாதம் பிரச்சாரப்படுத்த உதவியிருந்தது. இவரைப்போன்றே அமிர், யோகேஸ்வரன் போன்று நீளும் இன்னும் சில தமிழ் மிதவாதிகளின் கொலைகள். எவையுமே செய்யப்பட்டிருக்கத் தேவையில்லை. இக்கொலைகளை விவாதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று நினைப்பது தேவையானதுதான். ஆனால், இத்திரியில் எழுதும் சிலரது நோக்கம் அதுவல்ல என்பதும், தமிழரின் இருப்பிற்கான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதே அவர்களின் உண்மையான நோக்கம் என்று தெரிந்தபின்னரும் அவர்களை சிலர் தொடர்ந்தும் ஆதரிப்பது கவலையளிக்கிறது. தவறுகளை விவாதிப்பதே இனிமேல் இவை நடவாமலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, தமிழரின் விடுதலைக்கான போராட்டத்தை மேம்படுத்துவதுதான் உங்களின் உண்மையான நோக்கம் என்றால், அப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, பேரினவாதத்திடம் முற்றான சரணாகதியை அடையச் சொல்லும் சிலரின் நோக்கங்களுக்கு நீங்களும் துணைபோய்விடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இல்லை, ஊரிலிருப்பவர்கள் சொல்கிறார்கள், அதைக் கேட்கத்தான் வேண்டும். தமிழருக்கு இனிமேல் அரசியல் அபிலாஷைகள் என்று எதுவும் வேண்டாம், சிங்களத்திற்குள் உள்வாங்கப்படு இலங்கையராக எம்மை அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்று நீங்களும் முடிவுசெய்துவிட்டால், அதனை இங்கே வெளிப்படையாகவே கூறிவிடுங்கள். ஏனென்றால், புலிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை நீங்கள் விமர்சித்தாலும் தமிழருக்கான நீதி தேடுதலில் நீங்கள் இன்னமும் உறுதியாக இருப்பதாக எண்ணி நாம் தொடர்ந்தும் உங்களைத் தொந்தரவு செய்வதை குறைத்துக்கொள்ளலாம். இக்கொலைகள் நடத்தப்பட்டபோது உண்மையான கரெக்டர் அஸாஸினேஷன் நடந்துவிட்டது. ஆனால், இப்போதும் அவற்றை மீளவெடுத்து திரும்பத் திரும்பச் செய்யவேண்டியதன் அவசியம் என்ன? இது யாருக்குத் தேவைப்படுகிறது? இதனால் அவர்கள் அடையப்போகும் நண்மையென்ன? சரி, விவாதத்தைத் தொடர்ந்து என்ன செய்வதாக உத்தேசம்? புலிகளை விமர்சிக்க வந்தேன், என் பணி முடிந்துவிட்டது என்று சென்று விடப்போகிறீர்களா? உங்களின் வாதத்தை இன்னும் சிலர் தமது தேவைகளுக்குப் பாவிப்பது தெரியவில்லையா உங்களுக்கு? ஏதோ செய்துவிட்டுப் போங்கள். எனது கருத்திற்கு செம்புள்ளி குத்திய கொழும்பானுக்கும் மற்றையவருக்கும் நன்றிகள்.5 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த திரி 15 பக்கம் வரை வந்த போதும் எவருமே தமிழரசு கட்சியை வயோதிபர்களை களைந்து கிராமங்களிலிருந்து துடிப்புள்ள இளைஞர்களை உள்வாங்கி புதுப்பொலிவுடன் காலத்திற்கு ஏற்ப எப்படி கட்டியெழுப்புவது என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கவில்லை என்பது கவலையளிக்கிறது மற்ற திரிகளை போல் இந்த திரியையும் திசை திருப்பி வெற்றி பெற்றுள்ளார்கள் 🤣🙏🙏🤣4 points
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
வெறும் ஒரு மணிநேர விமானப் பயணத்தில் அவனால் அவனின் அம்மாவின் கரம் பற்றியிருக்கமுடியும்.. அம்மாவின் வாசத்திற்காய், அம்மாவின் அரவணைப்பிற்காய் ஏங்கிய அந்த மனிதன் இன்று தன் மூச்சை நிறுத்திவிட்டான்.. விடுதலை என அறிவிக்கப்பட்டு, 16 மாதங்கள் கடந்த பின்னர் கூட தன் அன்புத் தாயுடன் அவனை சேரவிட மறுத்த இந்திய அதிகார திமிரை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். சாந்தன்.. இனியொருபோதும் திரும்பவரப்போவதில்லை. அவனின் நினைவுகளுடன் மட்டுமே தன் எஞ்சிய காலத்தை கழிக்கப் போகின்றார் சாந்தனின் அம்மா.. வக்கற்ற இந்த தமிழினத்தை மன்னித்துவிடுங்கள் அம்மா.. கண்ணீர் வணக்கம் சாந்தன்..😭😭😭 Nadarajah Anparasan3 points
-
ஆண்டவனையும் கேட்க வேண்டும்
2 pointsஆண்டவனே கவலை கொள்ளும் செயல்களை செய்துவிட்டு, மனசாட்சி என்றதை மறைத்துவிட்டு ஆண்டவனுக்காகத்தான், ஆண்டவனது இருப்புக்காகத்தான் அதனை செய்தோம் என கொஞ்சமும் தயங்காமல் சொல்கிறோம். ஆண்டவனே மனிதர்களைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு எங்களது செயல்கள் உள்ளன.2 points
-
கருத்துக்களில் மாற்றங்கள் [2024]
2 pointsநீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து? எனும் திரியில் தேவையற்ற கருத்தாடல்கள் நடைபெறுவதால் பல அரட்டைத்தனமான கருத்துக்கள் நீக்கப்பட்டதுடன், திரியும் பூட்டப்பட்டுள்ளது.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மையாகவே புலிகளால் செய்யப் பட்ட ஒரு தவறைப் பற்றிப் பேசுகிறோம். அதைப் பேச வேண்டி வந்ததே நீலன் போல கொஞ்சமாவது செயல்படுகிற ஒரு தற்கால அரசியல் வாதியைக் கொல்ல வேண்டுமென்பது போன்ற கருத்துக்களை சிலர் சில திரிகளில் சொன்னதால் தான். இது வலிந்து யாரும் தொடங்கிய குற்றப் பத்திரிகை அல்ல, ஆனால் இதை இவ்வளவு நீட்டித்து "மூடனுக்கு அசிங்கம் அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்பது போல கொண்டு வந்ததே, இந்த வன்முறையை நியாயப் படுத்தும் தீவிர தேசியர்கள் தான். ஆனால், அதை மடை மாற்ற எல்லாவற்றையும் பேசுவர், நீலன் கொலை சரியா பிழையா என்பதைத் தவிர!அரசியல் கொலையை பற்றி மூச்சு விடாமல், ஒருவர் "character assassination" பற்றிப் பிளந்து கட்டியிருப்பதும் பெரிய நகைச்சுவை தான்! அதாவது புலிகள் அமைப்பு இதைச் செய்த போது கரெக்ரரில் கீறலே விழவில்லை, அதைச் சொல்லிக் காட்டினால் கரெக்ரர் கொல்லப் பட்டு விட்டது - நம் கையில ரத்தம்😂!2 points
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
களவு எடுக்க போனபோது வரவேற்கவில்லை என்ற கோவத்தில் கச்சதீவுக்கும் வரவில்லையாம்.2 points
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகள் தோற்றது சிங்களத்தின் வீரத்தினால் அல்ல தமிழரின் துரோகத்தால்.2 points
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்1 point
-
பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.
உச்ச அளவாம் வெப்ப உயர்வு.. 1.5 பாகை செல்சியஸ் தொட்டாச்சு 2040 இல் வர வேண்டியது 2023 இல் வந்தாச்சு.. பூமித் தாய்க்கும் அடிக்குது குலப்பன்.. யாருக்கென்ன கவலை..!! விண்ணில கொஞ்சம் வி(வீ)ணாகுது நிலவில கொஞ்சம் குப்பையாகுது உக்ரைனில் கொஞ்சம் உருகிப் போகுது காசாவில் கொஞ்சம் கரி(ரு)கிப் போகுது இப்படி யாகுது டொலர் கணக்கு யாருக்கென்ன கவலை..!! கார் ஓட்டமும் குறையல்ல காற்றில கலந்த அந்த சுவட்டுக் காபனும் குறையல்ல.. கக்கும் புகைக்கு வரிதான் வருகுது கரியமிலையின் அளவுக்கோ வீழ்ச்சியில்லை யாருக்கென்ன கவலை...!! மின்சாரத்தில் இயக்கினால் வரி விலக்கு என்டாங்கள் மின்சாரத்தை பெற இப்ப பாட்டரி கெமிக்கலுக்கு பற்றாக்குறையாம்... புதுக்கதையாய் கிண்டக் கிண்ட பாட்டரி கெமிக்கலால் பாழாகுதாம் பூமி யாருக்கென்ன கவலை..!! எங்கும் ஒரு கூட்டம் எதிலும் வியாபாரம் தனக்கு மட்டும் வேண்டும் இலாபம் இதையே சிந்தனையாக்கி இருப்பதால் பூமி தாய்க்கும் அடிக்குது குலப்பன் யாருக்கென்ன கவலை..!! எதிர்கால சந்ததியோ தொடுதிரையில் மயங்கிக் கிடக்குது 'ரீல்' விட்டே பழகிப் போனதால்.. தொடும் தூர ஆபத்துப் புரியவில்லை.. யாருக்கென்ன கவலை..!! இப்படியே போனால்.. பூமிக்கு அடிக்கும் அனல் குலப்பனில் அழியப் போவது மொத்த உயிர்களொடு தாமும் தான் மனிதப் பதர்களுக்கு புரியும் வேளை ஆபத்து வெள்ளம் அணை தாண்டி ஓடி இருக்கும்..! -------------------------------------- நெடுக்ஸ் (யாழுக்காக.. பூமி தாய் சார்ப்பாக) மாசி/2024.1 point
-
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இணக்கம்
1 point
- பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
இருக்கிற சட்டத்தை ஒழுங்கா அமுல்படுத்தினாலே போதும்1 point- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
1 point- கருத்து படங்கள்
1 point1 point- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இரங்கல்கள்! நாசமாபோக இந்தியா!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த திரியில் உங்கள் ஆதங்கத்திற்கான பதிலை எழுதியுள்ளேன்...1 point- யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
உங்கள் ஆசை நிறைவேற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 😗1 point- தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை? களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ராஜீவ் காந்தி படுகொலை: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொன்னது என்ன..? ரா.அரவிந்தராஜ் பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு அரசியல் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை என மறுத்து இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்திய அரசின் தரப்பில் விடுதலைப்புலிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில், கொலைக் குற்றவாளிகளை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் பலரும் ராஜீவ் படுகொலை தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, அனைத்துகோணங்களிலிருந்தும் விசாரணை கொண்டுசெல்லப்படவில்லை என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவருகின்றனர். குறிப்பாக, கொலைச் சம்பவம் குறித்து விசாரித்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் போன்ற விசாரணைக்குழுக்களும் விடுதலைப்புலிகளைத் தாண்டி பின்புலத்தில் உலகளாவிய புள்ளிகள் இருப்பதற்கான முகாந்திரமும், இந்திய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சந்தேகங்களையும் எழுப்பி விசாரணை முடிவுகளை முன்வைத்தன. ராஜீவ் காந்தி ஆனால், அந்த சந்தேக நோக்கில் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இறுதிவரை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மர்மங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்துக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அமைப்புதான் என்ற கருத்துகளே தற்போதுவரை பொதுவெளியில் நீடிக்கிறது. இந்தச் சூழலில், ராஜீவ் காந்தி கொலைக்குக் காரணமாகச் சொல்லப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் விளக்கம் குறித்தும், முக்கியமாக விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன கூறினார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்தக் கட்டுரை. பத்திரிகையாளர் சந்திப்பு, கிளிநொச்சி, ஏப்ரல் 10, 2002:- 2002, ஏப்ரல் 10-ம் நாள் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஏற்று உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியில் கூடியிருந்தார்கள். இதற்கு முன்பாக சின்னச் சின்ன பேட்டிகள் கொடுத்திருந்தாலும் இதுதான் புலிகளின், முதல் அதிகாரபூர்வமான மிகப்பெரிய ஊடகச் சந்திப்பாக இருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்டனர். அதுவரை துப்பாக்கித் தோட்டாக்களையும், ஏவுகணை குண்டுகளையும் எதிர்கொண்டுவந்த புலிகள், முதன்முறையாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர். பிரபாகரன் அந்த ஊடகச் சந்திப்பில், ராஜீவ் காந்தி படுகொலை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் அளித்த பதில்களும் உள்ளது உள்ளபடி உண்மை மாறாமல் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. (குறிப்பு: சில கேள்வி, பதில்கள் ஆங்கிலம், தமிழ் எனக் கலந்து இருந்ததால், ஆங்கிலத்தில் உள்ளவை மட்டும் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் - பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிகையாளர்களின் கேள்வி Vs விடுதலைப்புலிகளின் பதில்: 1). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் குற்றம்சாட்டப்பட்டிருப்பது பற்றி..? பிரபாகரன்: இந்த கேஸ் வழக்கிலிருக்கும் வரைக்கும், நாம் இதைப் பற்றி ஒரு கருத்தைக் கூற முடியாதவர்களாக இருக்கிறோம். 2). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் சம்பந்தப்படுத்தப்படுவதை மறுக்கிறீர்களா? பிரபாகரன்: இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியலான சம்பவம். மேலும், இதைப் பற்றி நாங்கள் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் இப்போது ஒரு சமாதான முயற்சியில், வெளிநாட்டு அனுசரணையுடன் ஈடுபட்டிருப்பதால், மேற்கொண்டு இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை. ஆன்டன் பாலசிங்கம், பிரபாகரன் 3). குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் சொல்லவரும் கருத்து? ஆன்டன் பாலசிங்கம்: இது மிகவும் `உணர்வுப்பூர்வமான, முக்கிய பிரச்னை’ (sensitive issue) என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிக்கலை எழுப்புகிறீர்கள். அதைத்தான் திரு.பிரபாகரன் சொல்கிறார். தயவுகூர்ந்து கவனியுங்கள், இது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்தக் கட்டத்தில் இது குறித்து எந்தக் கருத்தையும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை. https://www.vikatan.com/amp/story/government-and-politics/what-ltte-prabhakaran-spoke-about-rajiv-gandhi-assassination சாறி பாஸ்,......... 🤣1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தாங்கள் என்னைத் துரோகி என்று கூறினால் அது என்னைக் காயப்படுத்தாது. உங்கள் உழைப்பும, நோக்கமும், 2009 ன் பின்னரான வருத்தமும் என்னால் புரிந்துகொள்ள முடியும் ஆனால் மற்றவர்கள் என்னைத் துரோகி எனக் கூறினால் அதை நான் எனது கால் தூசுக்குக் கூடப் பொருட்படுத்தப்போவதில்லை. ஒருகணம் யோசித்துப் பாருங்கள், இந்தத் திரியில் மட்டும் எத்தனை பேருக்குத் துரோகி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது? பலன் ?1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சகோதரப் படுகொலைகள், துரோகிகள் என்கிற பெயரில் நடைபெற்ற படுகொலைகள் என்றவுடன் தங்களுக்கு விபு க்கள் மட்டுமே நினைவிற்கு வருகிறது என்றால் தாங்கள் 85 களின் பின்னர் பிறந்தவர் என்று அர்த்தம். நீங்கள் சொல்வது உண்மைதான் விசுகர். வெளிநாடுகளிற்கு வந்து பல தசாப்தங்களைக் கடந்தும் நாகரீகமடைந்த சமூகங்களின் மேன்மையான பண்புகளை உள்வாங்காது தற்போதும் கொலைகளை வீம்புக்கு ஆதரிக்கும் மனநிலையில் இருக்கும் பலரின் முகங்களை அடையாளம் காண இந்தத் திரி உதவியது நல்லதே.1 point- தமிழரசுக்கட்சியை விமர்சிக்கலாமா?
1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை நாசுக்காக முன்னெடுக்கும் நோக்கம், அதுதான் போராடிப் பிரியோசனமில்லை, அரசியல் எல்லாம் இனிமேல் எடுபடாது, இலங்கையராக எல்லாரும் வாழுவோம் என்று சுலோகங்கள் ஓதப்படுகின்றன. இந்த இரு பகுதியினரும் ஒன்றிணையும் புள்ளிதான் புலிகளை வசைபாடல். முதலாமவருக்கு வசைபாடலுடன் எல்லாம் முற்றுப்பெற்றுவிடும். மற்றைய இருவருக்கும் புலி வசைபாடல் ஊடாக அவர்களை கரெக்டர் அஸாசினேஷன் செய்வதன் மூலம் தாங்கள் ஏலவே நடத்திவரும் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின் வழிகளை மேலும் பலப்படுத்துவது. அந்த இருவரையும் பொறுத்தவரையில் இத்திரி வெறுமனே புலிகளை விமர்சிப்பதுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. மாறாக அதற்கும் அப்பால்ச் சென்று, அவர்களின் நிகழ்ச்சி நிரலான தமிழருக்கான தீர்வை மறந்துவிட்டு இலங்கையராக ஒன்றுபடுங்கள், பேரினவாதத்திற்குள் உள்வாங்கப்படுங்கள் என்று பரப்புரை செய்யவும் பயன்படுகிறது. முதலாமவருக்கு நடப்பது தெரிந்தும், புலிகளை வசைபாட ஒத்தூதிகள் இருவர் கிடைத்த களிப்பில் அவர் அந்த இருவரினதும் ஏனைய நோக்கங்களைக் கண்டும் காணாதது போல விட்டு விடுகிறார். அதுசரி, நீலன் கொல்லப்பட்டது 1999 இல் அல்லவா? முள்ளிவாய்க்காலின் பின்னரான மனமாற்றம் என்பது 2009 இற்குப் பின்னர்தானே? இடைப்பட்ட 10 வருடத்தில் நீலனின் கொலைபற்றி முதலாமவர் என்ன நிலைப்பாட்டிலிருந்திருப்பார் என்று யோசிக்கிறேன். எனக்கெதற்குத் தேவையில்லாத வேலை??1 point- கருத்து படங்கள்
1 point1 point- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அவர் கன்றுக்குட்டியை பார்த்து கன்றுக்குட்டி என்று தான் சொல்லுபவர் ஆகவே அப்படி கேட்க மாட்டார்.. இன்னொரு உறவு படுகொலைகளை நியாயபடுத்த கதை கதையாக எழுதி 😭1 point- இன்றைய வானிலை
1 pointசில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார் என்று யாழ் களத்தில் பார்த்த ஞாபகம்😃 *****1 point- விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி -தமிழக திரைப்படத்துறையை சேர்ந்த ஆதிலிங்கம் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை
What were the two waves of attacks on Pearl Harbor? On the morning of December 7th, at 6:10 AM, the first wave of Japanese planes launched. At 6:45 AM, the USS Ward spotted and open fired on a Japanese submarine off the coast of Hawaii. At 6:53 AM, the Ward reported sinking the sub, but decoding the message took time. At 7:02 AM, a radar station on Oahu spotted unidentified aircraft heading towards the island. However, radar systems were less than a month old, and the lieutenant who received the warning thought it was a false alarm. By 7:40 AM, the first wave of Japanese aircraft had reached Oahu, having evaded American early warning systems. Shortly thereafter, the Japanese aerial commander ordered the attack. The Japanese aircraft flew in two waves. The first wave attacked airfields and anti-air defenses on the west side of the island, while the second wave, almost an hour later, concentrated on the eastern side. Both waves met over Pearl Harbor. In the harbor, anchored ships made perfect targets for the Japanese bombers. https://www.britannica.com › study https://www.britannica.com/study/timeline-of-the-attack-on-pearl-harbor#:~:text=The Japanese aircraft flew in,targets for the Japanese bombers.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointயாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிய லலித் அதுலத் முதலி மட்டக்களப்பில், கார்த்திகை 30 ஆம் திகதி, படகு ஒன்றில் இருந்து இறங்க எத்தனித்த ஐந்து ஆயுதம் தரித்த போராளிகள் இராணுவத்திற்கு உளவு பார்ப்பவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் பதுங்கியிருந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படகிலிருந்து 10 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் 3,000 தோட்டாக்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர். இரண்டாவது படகு இராணுவத்தினரின் தாக்குதலுக்கு மத்தியிலும் தப்பிச் சென்று விட்டது. இராஜாங்க அமைச்சரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் செய்தியாளர் மாநாட்டில் பேசும்போது தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையை ஆக்கிரமிக்க தமிழ்ப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி, தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் அன்று தமிழ் ஈழத்திற்கான சுதந்திரப் பிரகடணத்தைச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் கூறினார். "அப்படியான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தால் நாம் போருக்குச் செல்வோம்" என்று அவர் முழங்கினார். அல்விஸின் கூற்றிற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இலங்கையரசு தேவையற்றவிதமாக போர் உளவியலுக்குள் மக்களை இழுத்துச் செல்வதாகவும் கூறியது. தமிழர்கள் மீது கொடூரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கையரசு இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டினை லலித் ஏளனம் செய்தார். "தமிழர்களுடன் போருக்குச் செல்வதன் மூலம் நாம் எதனை அடையப் போகிறோம்?. இந்த அரசாங்கத்திற்கு அறுதிப் பெரும்பான்மையிருக்கிறது. அடுத்துவரும் தேர்தல் 1989 இல் தான் நடக்கவிருக்கிறது" என்று கவனமாகப் பேசியிருந்தாலும்கூட, அவரது இந்தப் பேச்சு இந்தியாவை நோக்கித்தான் என்பது புதிரல்ல.ராஜீவ் காந்தியும் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அதற்கான பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தேர்தல்ப் பிரச்சாரங்களில் இலங்கையில் நடைபெற்றுவரும் இன முரண்பாடே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது. இஸ்ரேலிய ஆலோசகர்களுடன் தான் மிகவும் நுணுக்கமாக வகுத்திருந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சூழலினை லலித் ஏற்படுத்தத் தொடங்கியிருந்தார்.போராளிகளை நோக்கி அவர் விடுத்த எச்சரிக்கையில், "இலங்கைப் படைகள் மீது நீங்கள் நடத்திவரும் பைத்தியக்காரத்தனமானதும், விளைவுகளற்றதுமான தாக்குதல்களை உடனே நிறுத்தி சரணடையுங்கள். அப்படிச் சரணடைந்தால் உங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்" என்று கூறியிருந்தார். ஆனால், போராளி அமைப்புக்கள் லலித்தின் எச்சரிக்கையினை நிராகரித்தன. லலித்தின் வேண்டுகோளினை தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்து ஒரு கடிதத்தை புலிகள் அவருக்கு அனுப்பியிருந்தனர். தமிழில் எழுதப்பட்டிருந்த அக்கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. சிங்கள ஆங்கில ஊடகங்கள் புலிகளின் கடிதத்தை முற்றாகவே புறக்கணித்திருந்தன. யாழ்ப்பாணப் பத்திரிக்கைகள் அக்கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அக்கடிதத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் பின்வருமாறு, அன்பான திரு அதுலத் முதலிக்கு, நீங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இனவாத யுத்தம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். இந்த யுத்தத்தில் கொடூரமானவனான ஹிட்லரையும் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். தமிழ் இனத்தை இரத்தமும் கண்ணீரும் சிந்தவைத்து பெரும் பாவத்தையும், குற்றவுணர்ச்சியையும் உங்கள் தலைகளில் சுமந்துவருகிறீர்கள். நீங்கள் செய்துவரும் கொடூரங்கள் சரித்திரம் காணாதவை. எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால், எமது போராட்டம் என்பது அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு மட்டுமே. உங்களின் அரச பயங்கரவாதத்தின் விளைவான பிள்ளையே நாம் போராடிப் பெறவிருக்கும் தமிழ் ஈழமாகும். அதன் உருவாக்கத்திற்கு நீங்களே பொறுப்பானவர்கள். அதனை இராணுவ அடக்குமுறை மூலம் நீங்கள் தடுத்து நிறுத்திவிட முடியாது. எங்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதன் மூலமும் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. இராணுவ ரீதியிலான உங்களின் முன்னெடுப்புக்கள் உங்களுக்கு அழிவுகளை மட்டுமே கொண்டுவரப்போகின்றன. எங்களை அடையாளம் காண்பதோ, அழிப்பது உங்களால் இயலாத காரியம். நாங்கள் எங்கும் பரந்திருக்கிறோம்.குறிப்பாகச் சொல்லப்போனால் நாங்களே மக்கள். பலம் பொறுந்திய நாடுகளே மக்கள் எழுச்சிக்கு முன்னால் தோற்றுப்போன வரலாறுகள் எம் முன்னால் இருக்கின்றன. மக்களின் உண்மையான விருப்பினை அழித்து வெற்றிகொண்ட அரசுகள் கிடையாது. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதில் நாம் உறுதிபூண்டு நிற்கிறோம். எத்தடைகள் வரினும், எவ்வகையான தியாகங்கங்களைச் செய்தாவது எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று நாம் உறுதி பூண்டிருக்கிறோம். உலக மக்களின் மனச்சாட்சியின் முன்னால் நீங்களே உங்கள் குற்றங்களுக்காக குற்றவாளியாக ஆடையாளம் காணப்படுவீர்கள். என்று கூறப்பட்டிருந்தது. புலிகளின் கடிதத்திற்கு காரசாரமான பதிலை லலித் வழங்கினார். தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகள் இலங்கையை ஆக்கிரமிக்க எடுத்துவரும் நடவடிக்கையினைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் காக்கவே தான் பாடுபடுவதாக அவர் தெரிவித்தார். உடனடியாக இரண்டு வகை அவசரகால திட்டங்களை அவர் வெளியிட்டார். முதலாவது கடல்ப்பரப்பினைப் போராளிகள் பாவிப்பதனைத் தடை செய்வது. இரண்டாவது புலிகள் கூறிய "நாமே மக்கள்" எனும் பதத்திற்கான எதிர்வினையினை வழங்குவது. கார்த்திகை 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அதுலத் முதலி மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பிரதேசம் மக்கள் செல்ல முடியாத பகுதியென்று அறிவிக்கப்படுவதுடன் இப்பகுதியில் கடற்றொழிலிலோ அல்லது போக்குவரத்திலோ ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைமூலம் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பிரதேசங்கள் குறித்தும் அறிவித்தார். இப்பிரதேசங்களில் தனியார் வாகனங்களான பஸ்வண்டிகள், மோட்டார் வண்டிகள், மோட்டா சைக்கிள்கள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அரச பேரூந்துக்கள் மட்டுமே இப்பிரதேசத்திற்கு வரமுடியும் என்றும், அவை கூட ஒரு நாளை 2 மணிநேரத்திற்கு மேல் இப்பகுதிகளுக்குள் நிற்கமுடியாதென்றும் கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ இதுகுறித்து எழுதுகையில் "கொடூரமான அப்பயங்கரவாதிகள் இனி என்ன செய்யவிருக்கிறார்கள்? முச்சக்கர சைக்கிள் வண்டிகளில் பயணம் செய்வார்களோ? கடைசியாக முச்சக்கர சைக்கிள்களும் தடைசெய்யப்படுமோ? பயங்கரவாதிகள் சிலர் சைக்கிள்களைப் பாவித்ததால் சைக்கிள்கள் தடைசெய்யப்படுகின்றவென்றால், சில மக்கள் பாலியலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக உடலுறவையும் தடைசெய்துவிடுவார்களோ? என்று கேள்வி எழுப்பியிருந்தது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசம் பாராளுமன்றத்தில் தனது உரையினை நிறைவுசெய்கையில் லலித் அதுலத் முதலி யாழ்ப்பாண மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை விடுத்தார். அதுதான் யாழ்க்குடாநாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என்பது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ விடுமுறையினைக் கழிப்பதற்கு யாழ்ப்பாண மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார், எதிர்ப்பவர் யாரென்பதைக் கண்டறிவது இராணுவத்தினருக்கு இலகுவானதாக இருக்கும் அன்று அவர் கூறினார். எனக்கும் அந்த அறிவித்தல் வந்தபோது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன், இதனை என்னால் நம்பவே முடியவில்லை. மறுநாள் காலை 5:30 மணிக்கு லலித்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நான் அவரது இந்த அறிவித்தலுக்கெதிராக அவரிடம் முறைப்பாடு செய்தேன். எனது தந்தையார், சகோதரி மற்றும் அவரது குடும்பம், எனது மாமியார், மைத்துனி மற்றும் எனது நெருங்கிய உறவினர்களையெல்லாம் என்ன செய்வது என்று அவரைக் கேட்டேன். தமிழர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளால் தான் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்த லலித், பயங்கரவாதிகளைப் புறக்கணிக்க யாழ்ப்பாணத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலினை செய்கிறது என்று ஒரு செய்தியைப் போடுங்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். மேலும், இச்செய்தியைத் தன்னுடன் எந்தவிதத்திலும் தொடர்புபட்டதாகக் காட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointசாவகச்சேரி தாக்குதல் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1984 ஆம் ஆண்டென்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட முக்கியமான திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த அத்தியாயத்தில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்கள் அவர்களை அரசிடமிருந்து அந்நியப்பட வைத்திருந்தது என்று எழுதியிருந்தேன். தனக்கு எதிரானவர்களை, அவர்கள் தமிழர்களாகவோ அல்லது சிங்களவர்களாகவோ இருந்தாலென்ன, முற்றாக அழித்துவிடுவது எனும் ஜெயாரின் கொள்கையும், எதிர்த்தோரைப் பழிவாங்கும் அவரது இயல்பான குணமும், இஸ்ரேலிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து அவர்களை அச்சுருத்தி அகற்றிவிட்டு அப்பிரதேசங்களில் இராணுவ ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், தனது படைகள் மீதான தாக்குதலுக்கு தமிழ் மக்கள் மீது பழிவாங்கல்த் தாக்குதல்களைச் சரியென்று நிறுவியும் வந்த லலித் அதுலத் முதலியின் கொடுங்கரமும் தமிழர்களை போராளிகளின் பின்னால், குறிப்பாக புலிகளின் பின்னால் அணிதிரள வைத்திருந்தது. இந்த அத்தியாயத்தில் அதன் அடுத்த கட்டமான பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது முதல் தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை புலிகள் உருவாக்கியது வரையான விடயங்களைப் பார்க்கலாம். அடுத்துவரும் அத்தியாயங்களில் புலிகள் இராணுவ நிர்வாகக் கட்டமைப்புக்கள் பற்றி பார்க்கலாம். அந்த அத்தியாயத்தில் பிரபாகரன் எனும் மேதையின் செயற்றிறனும் ஏனைய நான்கு போராளி அமைப்புக்களிடமிருந்து புலிகளை அவர் எவ்வாறு விதிவிலக்காக்கி வழிநடத்திச் சென்று ஈற்றில் 1987 ஆம் ஆண்டு ஒற்றை அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பிக்கையாக புலிகளை எவ்வாறு மாற்றினார் என்பதையும் பார்க்கலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன் அதன்பின்னர் எழுதப்படும் கதை பிரபாகரனினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கதையாகவே அமையும். ஏனைய போராளி அமைப்புக்கள் வினைத்திறன் அற்ற வெற்று ஆமைப்புக்களாகவும் இன்னும் சில சிங்கள அரசாங்கத்தின் கருவிகளாகவும் மாறிப்போனார்கள். தமிழ் மக்கள், ஏறக்குறைய அனைவருமே பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் தமது முழு நம்பிக்கையினையும், விசுவாசத்தையும் வைத்தார்கள். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. தமிழ் மக்கள் பிரபாகரனின் பின்னாலும், புலிகளின் பின்னாலும் உறுதியாக அணிவகுத்து நிற்கிறார்கள். மேலும் கருணா மற்றும் அவர் போன்றவர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பிரபாகரனை பலவீனப்படுத்தி தோற்கடிக்க எடுத்த முயற்சிகள் அவர்களின் நோக்கத்திற்கு எதிராகவே அமைந்தன என்பதையும் என்னால் கூறமுடியும். இவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலிருந்து தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமாக பிரபாகரன் வெளித்தெரிந்தார். பிரபாகரனைப் பலவீனப்படுத்தித் தோற்கடிக்க அரசாங்கமும் அதன் தமிழ்க் கருவிகளும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுக்கும் கைங்கரியங்கள்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தமிழ் மக்கள் அவர்பின்னால் அணிதிரண்டார்கள். தமது சுய கெளரவமும், மரியாதையும், கண்ணியமும் பிரபாகரனின் இராணுவ வல்லமையிலேயே முற்றாகத் தங்கியிருப்பதை அவர்கள் முற்றாக உணர்ந்தார்கள். இந்திய ரோ வின் அழுத்தத்தினால் ஈரோஸ் அமைப்பினர் ஐப்பசி 22 ஆம் திகதி போரினை கொழும்பிற்குக் கொண்டுவந்திருந்தார்கள். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் ஜெயாருக்கும் லலித் அதுலத் முதலிக்கும் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தன. அவர்கள் சிங்களவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். தமிழர்களை அடக்கியாள அவர்கள் அதுவரை வைத்திருந்த "இனக்கலவரம்" எனும் ஆயுதத்தையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு கீழிறக்கப்பட்டிருந்தார்கள். ஐப்பசி 27 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த அமெரிக்க செயலாளர் ரிச்சேர்ட் மேர்பியின் மூலம் ஜெயார் தேடிக்கொண்டிருந்த ஆறுதல் அவருக்குக் கிடைத்தது. "இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வென்பது எவ்வளவு அவசியமோ, அதேயளவு அவசியமானது அத்தீர்வு வெளியாரின் தலையீடுகள் இன்றி அமைவது" என்று மேர்பி கூறியிருந்தார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்காகத் தமிழ் மக்கள் இரங்கினார்கள். பிரபாகரனும் ஏனைய அமைப்புக்களின் தலைவர்களும் தமது இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள். இந்திரா காந்தியை "அன்னை இந்திரா" என்று விளித்து பிரபாகரன் தனது இரங்கல் உரையினை வெளியிட்டிருந்தார். இந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகனான ரஜீவ் காந்தி கார்த்திகை 1 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தியே வந்தார்கள். ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நாள் இரவே அச்சுவேலி - வசாவிளான் வீதியில் பயணித்த இராணுவக் கவச வாகனத்தைக் குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை அவர்கள் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 9 இராணுவத்தினர் பலியானதுடன் இன்னும் மூவர் காயமடைந்தனர். மறுநாள், கார்த்திகை 2 ஆம் திகதி தொண்டைமானாறு பலாலி வீதியில் இராணுவக் கவச வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தில் இன்னும் 6 இராணுவத்தினரை அவர்கள் கொன்றனர். பலாலி முகாமிலிருந்து மக்கள் குடியிருப்புக்கள் ஊடாக இரவு வேளைகளில் ரோந்து வரும் இராணுவத் தொடரணியை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் இரண்டும் நடத்தப்பட்டன. தமது பாதுகாப்பிற்காகவும் , பொதுமக்களை அச்சுருத்தி அடிபணியவைக்கும் நோக்கிலும் இராணுவத்தினர் கவச வாகனங்களில் வரிசையாக ரோந்து புரிவதை அப்போது வழமையாகக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட கார்த்திகை 3 ஆம் திகதியை துக்கதினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அன்றும், மறுநாளும் புலிகளும் அமைதி காத்தனர். அதன்பின்னர் அவர்களின் கண்ணிவெடிப் போர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. கார்த்திகை 9 ஆம் திகதி இராணுவம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணம் சந்தைக்குள் நுழைந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது நடத்திய சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட மேலும் பலர் காயமடைந்தனர். இராணுவம் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும் என்கிற இஸ்ரேலின் ஆலோசனைக்கு அமைய "கூட்டுத் தண்டனை" தமிழர்களுக்கு வழங்கப்படத் தொடங்கியது. பண்டிதர் கார்த்திகை 19 ஆம் திகதி இராணுவத்தினர் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தினர். இராணுவத்தின் அதிகாரியான கேணல் ஆரியப்பெருமவும் இன்னும் ஏழு சிப்பாய்களும் பயணம் செய்த ஜீப் வண்டி புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. புலிகளின் தாக்குதல்கள் தீவிரமாகக் காணப்பட்ட பருத்தித்துறைப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் திறமைசாலியான கேணல் ஆரியப்பெருமவை பாதுகாப்பு அமைச்சு தெரிவுசெய்து அனுப்பியிருந்தது. பருத்தித்துறைப் பகுதியிலிருந்து புலிகளை முற்றாக துடைத்தழிப்பதே அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி. ஆனால், புலிகளோ பதிலுக்கு அவரை அழித்துவிட திடசங்கற்பம் பூண்டனர். புலிகளின் வடபகுதித் தளபதியாவிருந்த பண்டிதரை இத்தாக்குதலை நடத்துமாறு பிரபாகரன் பணித்திருந்தார். பண்டிதரும் அவரது உப தளபதியான கிட்டுவும் ஆரியப்பெருமவுக்கான பொறியைத் திட்டமிட்டனர். கட்டுவன் - தெல்லிபழை வீதியில் அமைந்திருந்த கல்வெட்டொன்றினை வேண்டுமெறே தகர்த்த அவர்கள் தெல்லிப்பழை சந்திக்கு அருகில் கண்ணிவெடியொன்றினை புதைத்துவிட்டுக் காத்திருந்தனர். பண்டிதர் எதிர்பார்த்ததைப் போலவே தகர்க்கப்பட்ட கல்வெட்டைப் பார்க்க ஆரியப்பெருமவும் வந்தார், கண்ணிவெடியிலும் அகப்பட்டார். ஒரு ஜீப்பும் இரு கவச வாகனங்களும் கொண்ட இராணுவத் தொடரணியில் ஆரியப்பெரும தெல்லிபழைக்கு வந்தார். தொடரணியின் முன்னால் பயணம் செய்துகொண்டிருந்த ஜீப் வண்டியில் ஆரியப்பெரும பயணித்திருந்தார். ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய புலிகள் ஆரியப்பெரும உட்பட எட்டு இராணுவத்தினரைக் கொன்றனர். ஆரியப்பெருமவின் இழப்பு இலங்கை இராணுவத்திற்கு விழுந்த பெரிய அடியாகக் கருதப்பட்டது. அவரது மரணத்தின் பின்னர் அவர் பிரிகேடியர் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றார். தாக்குதல் நடைபெற்ற தெல்லிப்பழை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் மீது இராணுவத்தினல் காலை 3 மணியிலிருந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடைபெற்றிருக்கொண்டிருந்த வேளையிலேயே அன்றுவரை நடந்த ஆயுதப் போராட்டத்தில் மிகவும் அதிகளவு இழப்புக்களை ஏற்படுத்திய தாக்குதலை டெலோ அமைப்பு நடத்தியது. அன்று பிற்பகல் 2:30 மணிக்கு நன்கு பலப்படுத்தப்பட்டு, காவலுக்கு உட்பட்டிருந்த இருமாடிகளைக் கொண்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் சென்றான். வாயிலில் காவலுக்கு நின்ற பொலீஸ் காவலாளியிடம் தனது தேசிய அடையாள அட்டை தொலைந்து விட்டதாகவும், ஆகவே அதுகுறித்து முறைப்பாடு ஒன்றினைச் செய்து, இன்னொரு அடையாள அட்டையினைப் பெறவே தான் வந்திருப்பதாகக் கூறினான். மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக தான் காத்திருப்பதால் அடையாள அட்டை மிகவும் அவசியம் என்றும் அவன் கூறவே, போலீஸ் காவலாளியும் கேட்டினைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தார். ஏக காலத்தில் பொலீஸ் நிலையத்தின் முன்னால் வந்த உள்ளூரில தயாரிக்கப்பட்ட கவச வாகனத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டே வெளியில் குதித்த நிக்கலஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட நியூட்டன் எனும் போராளி பொலீஸ் நிலையம் நோக்கி ஓடத் தொடங்க அவரைத் தொடர்ந்து மேலும் பல டெலோ போராளிகள் உள்ளே புகுந்தார்கள். கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த நியூட்டன் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். நியூட்டனின் பின்னால் பத்து போராளிகள் சுட்டுக்கொண்டே உள்நுழைய மேலும் 20 போராளிகள் அவர்களைத் தொடர்ந்து உள்நுழைந்து பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகள் நோக்கிச் சென்றனர். இராணுவச் சீருடையில் இருந்த அவர்களில் ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கு நோக்கிச் சென்று அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர். கட்டிடத்தின் மேற்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்பு அறைக்குச் சென்ற ஒரு குழு தொலைத்தொடர்புச் சாதனங்களை அடித்து நொறுக்கியதுடன், பொலீஸாரின் தங்குமிடத்திற்குள் ஒளித்திருந்த பொலீஸாரைச் சுட்டுக் கொன்றனர். டெலோ போராளிகள் கிர்னேட்டுக்களைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட சிறப்புக் கொமாண்டோக்கள் அதிர்ச்சியுற்று சிதறி ஓடத் தொடங்கினர். இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான லொறியைக் கடத்திவைத்திருந்த 3 போராளிகள் அதனுள் வெடிகுண்டுகளை நிரப்பி ஓட்டி வந்தனர். பொலீஸ் நிலைய வளாகத்தின் நடுவில் அந்த லொறியை நிறுத்திவைத்த அவர்கள் அதிலிருந்து தாம் வந்த வானிற்கு வயர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் போராளிகளில் ஒருவர் விசில் ஒலியை எழுப்பியதும் உள்ளிருந்த போராளிகள் வெளியேறிவிட பாரிய சத்தத்துடன் லொறிக் குண்டு வெடித்தது. சீமேந்துத் தூண்களினாலும், தகடுகளாலும் பலப்படுத்தப்பட்ட பொலீஸ் நிலையக் கட்டிடம் நொறுங்கி வீழ்ந்தது. தாக்குதல்க் நடத்தப்பட்ட கட்டிடத்தைப் பார்க்கப் பள்ளிச் சிறுவர்கள் வந்திருந்தார்கள். சேதப்படுத்தப்பட்டுக் கிடந்த பல ஆயுதங்களை அவர்கள் பொறுக்கியெடுத்தார்கள். தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பிய தமிழ் பொலீஸ் பரிசோதகர் ஒருவர் அச்சூழ்நிலை இதயத்தைப் பிளக்கும் உணர்வைத் தந்ததாகக் கூறினார். அன்றைய தாக்குதலை தமிழ் மாணவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிய விதத்தினைப் பார்க்கும்போது எவ்வளவு தூரத்திற்கு தமிழ்ச் சமூகம் இலங்கை அரசிடமிருந்தும், சட்டம் ஒழுங்கினைக் காக்கும் இலங்கைப் பொலீஸாரிடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "இலங்கை அரசிடமிருந்தும் அதன் படைகளிடமிருந்தும் தமிழ் மக்கள் முற்றாகப் பிரிந்து சென்றுவிட்டார்கள்" என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றிற்கு அவர் கூறினார். 24 பொலீஸாரும், உதவிக்கு இருந்த மூன்று சிவிலியன்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதமாயிருந்த பொலீஸாரில் பெரும்பாலானோர் காயமடைந்தனர். மிகவும் திட்டமிட்ட ரீதியில், குறுகிய நேரத்தில் கச்சிதமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. வெறும் 15 நிமிடத்தில் அனைத்தும் முடிந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து படையணியொன்றினை சாவகச்சேரி நோக்கி இராணுவம் உடனடியாக அனுப்பிவைத்தது. ஆனால், இராணுவம் பொலீஸாருக்கு உதவிக்கு வரும் என்பதை எதிர்பார்த்த டெலோ போராளிகள் கைதடிப் பகுதியில் இராணுவம் மீது கடுமையான தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடிகளை இயக்கிய அதேவேளை கடுமையான துப்பாகித் தாக்குதலையும் அவர்கள் மேற்கொண்டனர். கண்டி வீதியின் இருபக்கத்திலிருந்து தாக்குதல் நடத்திய டெலோ போராளிகள் இராணுவம் மீது சரமாரியாக கிர்ணேட்டுக்களையும் எறிந்து தாக்கினர். டெலோவின் கடுமையான தாக்குலில் குறைந்தது 20 இராணுவத்தினர் கைதடியில் பலியானார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்கும் வல்லமையினைப் போராளிகள் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் இத்தாக்குதல் நிரூபித்திருந்தது. இத்தாக்குதலையடுத்து இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வெளிவந்த அனைத்துத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இத்தாக்குதலை மகிழ்ச்சியுடன் செய்தியாக வெளியிட்டன. சிங்கள அரசுக்கு தமிழர்கள் பாடம் ஒன்றினைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதே இச்செய்திகளின் கருப்பொருளாக இருந்தது. டெலோ அமைப்பும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. இறுதியாக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்றுவிட்டோம் என்கிற பூரிப்பு அவ்வியக்கத்தில் காணப்பட்டது. அதுஅவரை காலமும் புலிகள் அமைப்பே மக்களின் கவனத்தை ஈர்ந்திருந்தது. பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டு வந்தனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாகவே வெளிவந்திருந்தன. ஆகவே, மக்களின் கவனம் தனது இயக்கம் நோக்கியும் திரும்பவேண்டும் என்று நினைத்த டெலோ அமைப்பின் தலைவர் சிறீசபாரட்ணம் பெரியளவில் தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று நினைத்தார். மேலும், இதே பொலீஸ் நிலையம் மீது இரு வருடங்களுக்கு முன்னர் புலிகள் நடத்திய தாக்குதலைக் காட்டிலும் வெற்றிகரமான தாக்குதலாக இது அமையவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இத்தாக்குதலைத் திட்டமிடுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவர் வந்திருந்தார். இத்தாக்குதலை ஒளிநாடாவாகப் பதிவுச் செய்யும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருந்தார். இந்த ஒளிப்படத்தைத் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் டெலோ அமைப்பினர் மக்களிடம் காண்பித்தனர். இதன்மூலம் பணத்தினை மக்களிடமிருந்து அவர்களால் பெற முடிந்தது. ஆனால், தாங்கள் ஏற்படுத்திய தாக்குதல் வெற்றியைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல டெலோவினால் முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு நடத்தும் தாக்குதல்கள் ஊடாக விடுதலைப் போராட்டத்தை வென்றுவிட முடியாது என்பதற்கு டெலோவின் இத்தாக்குதல் ஒரு உதாரணமாக அமைந்தது. ஆனால், புலிகள் அமைப்போ இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தி, பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கும் கண்ணிவெடித் தாக்குதல்களை முதன்மையாகக் கொண்ட நகர்வு முறியடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியபடியே இருந்தனர்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழின அழிப்பில் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேவையின் பங்களிப்பு புது தில்லியும், கொழும்பின் இராணுவ ஆய்வாளர்களும் ஜெயாரின் மூன்றுவழித் திட்டத்திற்கு இந்திரா காந்தி கடுமையான முறையில் பதிலளிப்பதாகவே கருதின. குறிப்பாக ஜெயார் முன்வைத்த இராணுவத் தீர்வில் பாவிக்கப்பட்ட ஆள்ப்பலம், வெளிநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆதரவு என்பன இந்திராவைக் கோபப்பட வைத்திருந்தன. தமிழர்களுக்கெதிரான போரில் இஸ்ரேலிய உளவு அமைப்புக்களான மொசார்ட், ஷின்பெட், இங்கிலாந்தின் முன்னாள் விசேட வான் மற்றும் தரை படையணியினரினால் நடத்தப்படும் தனியார் இராணுவக் கூலிப்படையான கீனி - மீனி மற்றும் அவர்களால் கொழும்பில் கொண்டுவந்து இறக்கப்பட்ட சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க கெரில்லா யுத்தங்களின்போது கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட படையணி வீரர்களின் ஈடுபடுத்தலும், பாக்கிஸ்த்தான் , சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களும் இலங்கையரசை இராணுவத் தீர்வு நோக்கிச் செல்ல உந்தியிருந்தன. லலித் அதுலத் முதலியும், ரவி ஜயவர்த்தனவும் ஒருவரையொருவர் வெளிப்படையாகவே தூற்றி வந்தபோதிலும் தமிழர் தாயகத்திலிருந்து அவர்களை அச்சுருத்தி வெளியேற்றி, தமிழ்க் கிராமங்களின் எல்லைகளில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் முன்வைத்த திட்டத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வந்தனர். எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமா, இஸ்ரேலின் திட்டங்களை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தார். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்கள் முன்னெடுத்துவரும் இதே திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதால், இலங்கையிலும் அதே நிலைதான் ஏற்படும் என்று அவர் அரசை எச்சரித்தார். நடந்ததும் அதுதான். தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் அஞ்சவில்லை. மாறாக அதற்கெதிரான அவர்களின் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழர்கள் ஒன்றிணையத் தொடங்கினார்கள். தமிழ் மக்களால் முன்னர் ஆதரவளிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழரின் ஒற்றுமையின் முன்னால் அடிபட்டுப் போயிற்று. இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேர்விசஸ் அமைப்பை தமிழின அழிப்பில் ஈடுபட வைத்தது லலித் அதுலத் முதலியே. லண்டனில் இருந்து வெளிவரும் டெயிலி நியுஸ் பத்திரிக்கை இக்கூலிப்படை இலங்கையில் செய்துவரும் நடவடிக்கைகளை 1987 பங்குனியில் செய்தியாக வெளியிட, 1987 ஆம் ஆண்டு வைகாசி 19 ஆம் திகதி வெளியான அமெரிக்காவின் வோஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் பல ஆதாரங்களுடன் இக்கூலிப்படையினரின் செயற்பாடுகள் குறித்த இரகசிய விபரங்களை வெளியிட்டது. ஆனால், இந்த விபரங்கள் எல்லாமே 1984 ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது. லண்டன் டெயிலி நியுஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பல டசின்கணக்கான கீனி மீனி கூலிப்படையினர் இலங்கையில் போரில் பங்கெடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு வருட வருமானமாக 33,000 (1984 இல்) அமெரிக்க டொலர்கள் இலங்கையரசால் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது. வோஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதிய ரிச்சேர்ட் எல்ரிச், குறைந்தது 35 கீனி மீனி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பு : பி. பி. சி செய்திச்சேவை 2020 ஆம் ஆண்டு, கார்த்திகை 30 ஆம் திகதி வெளியிட்ட ஆய்வறிக்கையில், "இலங்கையின் விசேட அதிரடிப்படை வீரர்களுக்கு கீனி மீனி கூலிப்படையினர் 1980 களில் பயிற்சியளித்து வந்ததாகவும், இலங்கையின் விமானப்படையினருக்கான விசேட பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும்" கூறியிருந்தது. கட்டுக்குருந்தை - விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாம் தமிழ் கெரில்லாக்களைக் கொல்வதற்கான பயிற்சிகளை இலங்கை விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாமான கட்டுக்குருந்தையில் இங்கிலாந்துக் கூலிப்படை வழங்கி வந்ததாக எல்ரிச் கூறுகிறார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் கீனி மீனி கூலிப்படையினரின் பங்கு குறித்து எல்ரிச் முன்னாள் இங்கிலாந்து விசேட படைகளின் கேணல் தர அதிகாரியும் பின்னாட்களில் கூலிப்படையின் அதிகாரியாகவும் செயற்பட்ட கென் வைட், இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலய பேச்சாளர் ஜக் ஜோன்ஸ், கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோரிடம் வினவியிருந்தார். கென் வைட் பேசுகையில், "நாம் இலங்கை அரசாங்கத்தின் ஊழியர்கள். ஆகவே, எம்மைப்பற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும், இங்கிலாந்தின் உயர்ஸ்த்தானிகரும் கூறும் விடயங்களைச் செவிமடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைத்தவிர நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்று கூறினார். இலங்கை கொலைப்படையுடன் கீனி மீனி கூலிகளில் ஒருவன் இங்கிலாந்து தூதரகப் பேச்சாளர் ஜக் ஜோன்ஸ் மிககவனமாகத் தேர்ந்தெடுத்த வசனங்களைக் கொண்டு பதிலளித்தார், "கீனி மீனி சேவைகளின் இலங்கையின் பிரசன்னம் என்பதை அந்த தனியார் அமைப்பிற்கும் இலங்கை அரசுக்குமிடையிலான தனிப்பட்ட விடயமாகவே இங்கிலாந்து அரசு கருதுகிறது. இங்கிலாந்தின் படை வீரர்கள் இலங்கையில் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், கீனி மீனி அமைப்பில் இன்று இலங்கையில் செயற்படும் வீரர்கள் முன்னர் இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று நான் அறிவேன். அவர்கள் இலங்கையில் செயற்படுவதை ஆதரிக்கவோ அல்லது தடுக்கவோ இங்கிலாந்து அரசால் முடியாது. என்னைப்பொறுத்தவரை ஒரு சட்டபூர்வமான தனியார் கம்பெனி சட்டபூர்வமான இலங்கை அரசாங்கத்துடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் இணைந்திருக்கிறது. இந்த வியாபார ஒப்பந்தத்தின்படி கீனி மீனி யின் வீரர்கள் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும், நேரடியான இராணுவ நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை என்பதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றும் கூறினார். ஜோன்ஸ் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் உள்த்துறை அமைச்சரான டேவிட் வடிங்க்டன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது கூறிய விடயத்தைக் கவனியுங்கள், இலங்கையின் கீனி மீனியின் பிரசன்னம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும் என்றும், அவர்களின் பயிற்சியினால் இலங்கை இராணுவத்தின் போரிடும் திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அல்லவா?" என்றும் கூறினார். இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன் எல்ரிச்சுடன் பேசிய மேற்குநாட்டு இராஜதந்திரி ஒருவர் கீனி மீனி சேவை, இலங்கையின் உள்நாட்டுப் போரில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளால் இங்கிலாந்து அரசாங்கம் அவமானப்பட்டிருப்பதாகக் கூறினார். "கீனி மீனி சேவையின் பங்களிப்பு என்பது உள்நாட்டுப் போரில் இங்கிலாந்தின் பங்களிப்பு என்றே பலராலும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சரியானது என்று கூறினாலும், கீனி மீனி சேவை உள்நாட்டுப் போரில் நேரடியாக ஈடுபட்டிருப்பதன் மூலம், இங்கிலாந்தும் இராணுவத் தீர்வையே விரும்புகிறது போலத் தெரிகிறது. கீனி மீனி சேவையின் உதவிகள் ஊடாக தமிழ் கெரில்லாக்கள் கொல்லப்பட்டு வருவதானது இங்கிலாந்து அரசும் அரசியல் ரீதியிலான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது" என்றும் கூறினார். கீனி மீனி கூலிப்படையில் இலங்கையில் பணியாற்றிய கொமாண்டோ சமி டொரத்தி என்பவன் லண்டன் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், "அங்கு பல அட்டூழியங்கள் நடந்திருக்கலாம், ஆனால் நாம் அங்கு செல்லாதிருந்தால் இவை நடந்திருக்காது என்றும் கூற முடியாது. ஒழுக்கயீனமே அட்டூழியங்கள் நடைபெறக் காரணமாகி விடுகின்றன. போரிற்குப் பயந்த, தகுந்த பயிற்சி வழங்கப்படாத படைவீரர்களே அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், நான் வழங்கும் பயிற்சிகள் அவர்கள் அட்டூழியங்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. நாம் அவர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் மூலம் சுயகட்டுப்பாடு அவர்களுக்கு ஏற்படுவதோடு பல உயிர்களும் காக்கப்படுகின்றன என்பதே உண்மை" என்று கூறினான். தொடர்ந்து எழுதும் எல்ரிச், "கீனி மீனி சேவையினால் பயிற்றப்பட்டு வரும் இலங்கை பொலீஸாரின் விசேட அதிரடிப்படையினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு கொலைப்படையாகவே செயற்பட்டு வருவதாகவும், கடுமையான சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டுவருவதன் மூலம் அப்பிரதேசத்தை கடுமையான அச்சத்தில் ஆள்த்தி வைத்திருப்பதாகவும் தமிழர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்" என்றும் எழுதுகிறார். கென் வைட் அவருடன் பேசும்போது, "நாம் அவர்களுக்கு வழங்கிவரும் பயிற்சிகளின்மூலம் அட்டூழியங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். ஆனால், கொழும்பில் தங்கியிருக்கும் பல மேற்குநாட்டு இராஜதந்திரிகளோ கீனி மீனியின் பயிற்சிகளின் பின்னரே கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் காண்பித்திருந்தார்கள். எல்ரிச்சுக்குப் பேட்டியளித்த லலித் அதுலத் முதலி, "இலங்கை அரசாங்கம் அரசியல்த் தீர்வில் நம்பிக்கை கொள்ளவில்லை. வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியின் மூலம் இராணுவத் தீர்வு சாத்தியப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார். கீனி மீனி கூலிப்படையினரால் செலுத்தப்பட்ட இலங்கை வான்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்று " நாம் அவர்களை எமது விசேட அதிரடிப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கவும், துணை இராணுவக் குழுக்களை அமைக்கவுமே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இப்பயிற்சிகளின் ஊடாக எமது வீரர்கள் பல நுணுக்கங்களைக் கற்றிருக்கிறார்கள். பல பகுதிகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவர்களால் முடிந்திருக்கிறது. இலங்கையின் அரச படைகள் படுகொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தமிழ்மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் கீனி மீனி சேவையினரின் பயிற்சியினால் 42 வீதம் குறைந்திருக்கிறது. கீனி மீனி சேவையின் வீரர்களை நாம் நேரடியான சண்டைகளில் பயன்படுத்தி வருகிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும்" என்றும் கூறினார். தனது ஆய்வுகளின் சாரம்சமாக எல்ரிச் பின்வருமாறு கூறுகிறார், "கீனி மீனி சேவைகளின் வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று அரசு கூறினாலும் கூட, பயிற்சிக்கும் நேரடியான சண்டைக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு சிலவேளைகளில் அழிக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக வான் தாக்குதல்களில் கீனி மீனீ சேவையின் வீரர்கள் நேரடியாகவே பங்கெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, 35 கீனி மீனி சேவைகளின் வீரர்கள் அமெரிக்கத் தயாரிப்புக்களான பெல் 212 மற்றும் பெல் 412 ஆகிய உலங்குவானூர்திகளில் இலங்கை வான்படை வீரர்களுக்குச் சண்டைப்பயிற்சி அளித்து வருகிறார்கள். சாட்சியங்களின்படி, போராளிகள் மீதான வான் தாக்குதல்களுக்குச் செல்லும் வேளைகளில் இலங்கையைச் சேர்ந்த விமானி ஒருவர் பிரதான விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருக்க, கீனி மீனியின் வீரர் உதவி விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த்து தாக்குதலில் ஈடுபடுகிறார். வெளியில் இருந்து பார்ப்போருக்கு இலங்கை விமானியே உலங்குவானூர்தியைச் செலுத்துவதால், கீனி மீனியின் பங்களிப்பு மறைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், உலங்கு வானூர்தி மீது போராளிகள் தரையிலிருந்து தாக்கும்போது நிலைமை மாறி விடுகிறது. போராளிகளின் தாக்குதல்களிலிருந்து விமானத்தைத் தப்புவிக்க, இலாவகமாக ஓட்டிச் செல்ல கீனி மீனியின் விமானி பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொள்ள இலங்கை விமானியோ இயந்திரத் துப்பாக்கியை இயக்கச் சென்றுவிடுகிறார். அமெரிக்காவால் வழங்கப்பட்டு கீனி மீனி கூலிப்படையினரால் இயக்கப்பட்ட பெல் 412 உலங்கு வானூர்தி பெருமளவு கூலிப்படையினரும் ஆயுதங்களும் இலங்கை அரசால் தருவிக்கப்பட்டபோது இந்திரா காந்தி எரிச்சலடைந்தார். இதுகுறித்து நரசிம்ம ராவோ லோக் சபையில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். இந்தியாவைக் கடந்து, வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரின் உதவிகள் பெறப்பட்டிருப்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவ ரீதியில் தீர்வு காண முயன்றால் அழிவுகரமான விளைவுகளே ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தை அவர் எச்சரித்தார். இதனால் கொதிப்படைந்த ஜெயார், இந்தியாவுக்கெதிரான கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பெரியண்ணை பாத்திரத்தை இந்தியா வகிக்க எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பிராந்திய வல்லரசு எனும் இந்தியாவின் எண்ணம் வெறும் கனவுதான் என்றும் எள்ளி நகையாடினார். இந்தியாவை அவமானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள், அதற்கு எதிர்மறையான விளைவுகளையே அவருக்குக் கொடுத்தன. அதுமட்டுமல்லாமல், இலங்கையின் நிலையினையும் இன்னும் மோசமாக்கி விட்டிருந்தது. பெருமளவு போராளிகளும் அவர்களுக்கான ஆயுதங்களும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியாவால் நகர்த்தப்பட்டன. தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கொடுத்த பணத்தினால் வாங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களும் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு போராளி அமைப்புக்களை ரோ கோரத் தொடங்கியது. தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக பொலீஸாரும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் ஆவணி, புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. இதனையடுத்து தமிழ் மக்கள், போராளி அமைப்புக்களுக்கு முற்றான ஆதரவினை வழங்கத் தலைப்பாட்டார்கள். இலங்கை அரசுக்கெதிரான புரட்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அவர்கள் முன்னர் வழங்கிவந்த ஆதரவு முற்றாக போராளிகளுக்கு கைமாறியிருந்தது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விசுவாசத்தினை இலங்கை அரசாங்கம் இழந்தது. இலங்கையரசு என்பது சிங்கள அரசுதான் என்கிற நிலைக்குக் அது கீழிறக்கப்பட்டது. தொடர்ந்துவந்த மூன்று மாதங்களில் புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், தமிழர்களுக்கான தனிநாட்டினை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். மேலதிக வாசிப்பிற்கு : கீனி மீனிக் கூலிப்படையின் இலங்கைச் செயற்பாடுகள் குறித்த ஆவணம் ஒன்று https://www.puradsimedia.com/wp-content/uploads/2019/02/britains_dirty_war.pdf1 point- மரணம்
1 pointஅண்ணை, அது 2006 இல. என்ன சொல்கிறார்கள் என்று மூளை மொழிபெயர்த்து, கிரகிக்க டயிம் எடுத்த காலம். இப்ப பரவாயில்லையாக்கும் !!!😁1 point- சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை! சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார். சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/13715520 points- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்தும் இலங்கைக்கு தன்னை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், பல போராட்டங்களின் பின் சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானார். பல போராட்டங்களின் பின் சாந்தன் இன்று இலங்கை திரும்ப இருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://samugammedia.com/rajiv-gandhi-assassination-case-convict-santhan-passes-away-17090857380 points- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இறப்பதற்கு முன் தனது சகோதரனிடம் சாந்தன் கூறிய கண் கலங்க வைக்கும் வார்த்தைகள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் தனது சகோதரனை சந்தித்த காணொளியொன்று தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இறப்பதற்கு முன் வைத்தியசாலையில் இருந்த போது தனது சகோதரனை ஆரத்தழுவி ஏக்கத்துடன் பார்க்கும் அந்த காணொளி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்து புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் உயிரிழந்துள்ளார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்தவாரம் அவரது சகோதரர் அவரை வைத்தியசாலையில் பார்க்கச் சென்றபோது தனது சகோதரனின் கையைப் பிடித்துக் கொண்டு “என்னை விட்டு எங்கேயும் போகாதே” என கூறியுள்ளார். https://tamilwin.com/article/santhan-former-convict-rajiv-gandhi-assassination-17091098550 points- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதென்ன முதலாமவர், மற்ற இருவர்? இரணடாமாவர் மூன்றாமவர் முதலாமவர்? முன் வங்கார் பின் வங்கார். பின் வங்கார் முன் வங்கார். ஒன்றுமே விளங்கவில்லையடா சாமி. கொஞ்சம் தமிழிலே எழுதினால் எங்களுக்கும் விளங்கும். இதட்கு முன்னரும் ஒரு பண்டிதர் எனக்கு தமிழ் விளங்கவில்லை என்று எழுதினார். நான் அந்த பண்டிதரிடம் தமிழில் எழுதும்படி கூறினேன். அதன் பின்னர் தமிழில் எழுதினார். எனக்கும் விளங்கியது. எனக்கும் சந்தோசம் அவருக்கும் சந்தோசம்.0 points- கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
யாருக்கா ?அது யாருக்கா? அது மக்களுக்கா மக்களுக்காக அமைச்சு பதவியே போ போ ஜனநாயகமே வா வா சேவை எனும் தூது வந்தது அது அமைச்சு பதவி என்ற வடிவில் வந்தது0 points - பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.