Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்8Points2958Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33600Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3061Posts -
மோகன்
கருத்துக்கள பொறுப்பாளர்கள்6Points9997Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/16/24 in all areas
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும் என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது.6 points
-
மயிலம்மா.
4 points4 points
- என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே
கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம். அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா? அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.3 points- வெளிநாட்டில் இருந்துட்டு போய் ஊரில் வாழமுடியாது என்றவர்களுக்கு..
இங்கு நான் ஊருக்கு போகப்போறன் எண்டு எழுதியபோது ஊரில் வாழமுடியாது என்றவர்களுக்கு..3 points- மயிலம்மா.
3 pointsமயிலிறகு........... 18. உடனே யோகிபாபு ஐயோ அம்மா, அண்ணா நான் ஒன்றும் அவங்களைக் கடத்துறதுக்கு வரேல்ல. எங்கட அப்பான்ர மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு பொடியன் ஓடித் திரிகிறதாய் கேள்விப் பட்டன். அதுதான் அவனுக்கு இரண்டு தட்டு தட்டிப்போட்டு சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரத்தான் பிளான் போட்டு பொடியளுடன் இந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள். அப்போது அஞ்சலா முன் வந்து அதை இவர் கேட்டிருந்தால் நானே குடுத்திருப்பேனே. இவர் "பாரில்" கடத்துறது தூக்கிறது என்று கதைத்ததால்தான் அது எனக்குத் தெரிந்து இவ்வளவும் நடந்திட்டுது. அதோ அந்தா நிக்குது மோட்டார் சைக்கிள். நான்தான் அது பழுதாய் இருந்தது. அவர் கம்பிரமாய் அதில் இருந்து இந்த ஊர் முழுதும் ஓடித் திரிந்தவர். அது பழுதாகி திண்ணையில் நிற்பதை பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் இவரிடம் அதைத் திருத்தி சில நாட்கள் ஓடிப்பார்த்துட்டு கொண்டு வரச்சொல்லி குடுத்தனுப்பினனான். எங்க அந்தத் தம்பியைக் கூப்பிடு என்று சொல்ல அரசு விதானை முன்னால் வந்து அவனை உங்களுக்குத் தெரியும் தம்பி,எப்போதும் என்கூடத்தான் வேலை செய்து வருகிறவன். பெயர் வாமன். இப்ப அவனும் இங்கு விதானையாகி இருக்கிறான் என்று சொல்ல வாமன் முன்னால் வருகிறான். ஓ.....அப்படியா நல்லது, அவனைப் பார்த்து நல்ல ராஜாவாட்டம் இருக்கிறாய்......அவர்களை நல்லபடியாய் வைத்து வாழ்ந்துகொள் என்று வாழ்த்துகிறான். வாமனும் சைக்கிள் சாவியை அவனிடம் தர நீட்டுகிறான். அதை அவன் தாய் மறித்து இந்தப் பிள்ளை விடயத்தில் அவர் செய்த பாவத்துக்கு தன் மோட்டார் சைக்கிள் மூலமாய் பிராயசித்தம் செய்திருக்கிறார். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போது மூத்தமகன் ரவியும் எங்களுக்கு கொஞ்சம் முன்னால்தான் விதானையார் பிரச்சினைகளைச் சொல்லி கூட்டி வந்தவர். அதுவும் நல்லதாய் போயிற்றுது. உங்களின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு என்கிறான். மயிலம்மாவும் ஏதோ அந்தப் பெண்ணுக்கு உரித்தானவர்கள் வந்திருக்கிறீர்கள், சாப்பாடு எல்லாம் தயாராய் இருக்கு. இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும் என்று சொல்ல அங்கேயே படங்கு விரித்து தாமரை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப் படுகிறது. பின் அவர்கள் போகும் போது அந்த அம்மாள் தன் கையிலும் கழுத்திலும் இருந்ததைக் கழட்டி அஞ்சலாவுக்கு காப்பும் வாமனுக்கு சங்கிலியும் போடுகிறாள்.ரவியும், யோகிபாபுவும் கூட தங்களிடம் இருந்த சங்கிலி மோதிரங்களை கழட்டி இருவருக்கும் போடுகிறார்கள். பின் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு செல்கிறார்கள். போகும் போது மூத்தமகன் ரவி அவர்களை பார்த்து இனிமேல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு சொல்லியனுப்பவும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் தாயாரும் மயிலம்மாவையும் மற்றும் எல்லோரையும் பார்த்து நீங்கள் நாலாம் சடங்குக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கோ, நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்த்து வைக்கிறம் என்று சொல்கிறார்கள். யோகிபாபு வானில் ஏறும்போது அவனது கூட்டாளிகள் அப்பாடா கனகாலத்துக்குப் பிறகு நல்ல சாப்பாடு என்று சொல்லி ஏப்பம் வீட்டுக் கொண்டே வர யோகிபாபு அவங்களை பார்த்து நில்லுங்கடா....சும்மா தன்பாட்டில் வீட்டுக்ல வந்து நிக்கப் போற மோட்டார் சைக்கிளுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு நான் வானையும் வாடகைக்கு எடுத்து உங்களுக்கும் ஒரு வாரமா விஸ்கியும் பிரியாணியுமாய் அழுது கடைசில சைக்கிளும் கையை விட்டுப்போய் கையில கழுத்தில கிடந்த நகைகளும் போகப் பண்ணிட்டீங்களேடா. ஏறுங்கடா பஸ் ஸ்ராண்டில இறக்கி விடுவன் காலமை முதல் பஸ்ஸில இந்த ஊரைவிட்டே ஓடிடனும் சொல்லிப்போட்டன். வான் போகுது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏதோ சண்டை கலாட்டா நடக்கும் தான் விலக்குப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விதானையும் விசயம் சப்பென்று போனதைப் பார்த்து மணமக்களை அழைத்து பொக்கட்டில் இருந்து பணம் எடுத்து இந்தா இதை வைத்துக் கொள் என்று குடுக்கிறார். என்ன அண்ணா இது சம்பளப்பணமா என்று நமுட்டுச் சிரிப்புடன் வாமன் கேட்க, போடாங்.....பக்கத்தில பிள்ளை நிக்குது இல்லையென்றால் இப்ப உனக்கு சொல்லுவான், ஏன்டா ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இப்படிக் கலாட்டா பண்ணிட்டீங்களேடா. என்று சொல்லி விட்டுப் போகிறார். மற்றவர்களும் நல்ல சாப்பாடு நல்ல கலியாணம் என்று சொல்லி சிரித்துக் கொண்டு போகிறார்கள்.......! 🦚 மயில் ஆடும்........... 18.3 points- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐயா...! நான் ஒன்றும் நடக்காததை இட்டு வைச்சு காழ்ப்புணர்வில் சொல்லவில்லை. உலக நாடுகளில் எங்கே குண்டு வெடித்தாலும் இலங்கையிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்கும் முடிச்சுப்போட்டு பத்திரிகைகளில் கொட்டை எழுத்திலும் தொலைக்காட்சியிலும்செய்தி வந்ததே, கொழும்பில் பல காரணங்களுக்காக போலீசில் பதிந்து வசித்த தமிழரை சுற்றி வளைத்து பிடித்து தாக்குதல் நடத்த வந்த புலிகள் என செய்திகள் வெளியிட்டு சிங்களம் மகிழவில்லை? மக்களை ஏமாற்றவில்லை இலங்கை செய்திகள்? அப்பாவி இளைஞரை கொன்றுவிட்டு அவர்ளுக்கு அருகில் ஆயுதங்களை வைத்து புகைப்படம் எடுத்து, உறவுகளை இவர்கள் புலிகள் என்று கைப்பட எழுதித்தந்தாற்தான் உடலை உங்களிடம் கையளிப்போமென மிரட்டி கையெழுத்து வாங்கி பத்திரிகைகளில் வெளியிடவில்லை? இங்கு இறந்தவர்களை பற்றி நாங்கள் விமர்சிக்கவில்லை, கொலை செய்தவனையும் இலங்கை அரசின் செயற்பாடுகளையுமே விமர்சிக்கிறோம். அது ஏன் பலருக்கு வெறுப்பை உண்டாக்கி வேறு திசையில் கொண்டு போகிறார்கள்? விடுதலைப்புலிகள் என்கிற பெயரில் பல ஆயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்து பாற்சோறு உண்டு, வெடி கொழுத்தி கொண்டாடி, அந்த வெற்றியை நாடளாவிய ரீதியில் பெரிய அளவில் கொண்டாட முனைப்புகள் செய்யும் போது மழை கொட்டிதீர்த்து தென்பகுதி வெள்ளத்தில் மிதந்தபோது, தம் அழிவிலிருந்து மீண்டெழாத தருணத்திலும் அந்த மக்களுக்கு உணவுகளை திரட்டி வாகனகளில் அனுப்பி வைத்தவர்கள் நாம். மணலாற்றில் போர்முனையில் இறந்த போராளிகளின் உடல்களை அவமானப்படுத்தி மகிழ்ந்து வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியவர்கள் யார்? தங்கள் மாவீரரின் புகழுடலுக்கு தாம் இறுதி மரியாதை செய்வது போல், இறந்த இராணுவ வீரரும் இராணுவ இறுதி மரியாதைக்குரியவர்களே என எண்ணி, அவர்களுக்குரிய உடை அணிவித்து, உரிய மரியாதையுடன் செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைத்தபோது, அவர்களின் உடலை வாங்க மறுத்து அந்த இடத்திலேயே கொழுத்தி அவமரியாதை செய்தவர்கள் யார்? அதன்பின் விடுதலைப்புலிகள் இறந்த இராணுவத்தினரின் உடலை தகனம் செய்து சாம்பலை அவர்களின் உறவுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஏதோ நாங்கள் நாகரிகம் அற்றவர்கள் என பாடம் நடத்துபவர்கள், நடந்த உண்மை தெரியாமல் பகட்டுக்கு எழுதித்தள்ளுகிறார்கள்.3 points- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
திரு சிறிராசா ரஜிந்தனின் (பேசமுடியாதவர்) வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது. வட்டு கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திரு சிறிராசா ரஜிந்தனுக்கு (பேசமுடியாதவர்) அரசின் வீட்டுத்திட்ட உதவியாக ஆறு இலட்ச ரூபாய் கிடைக்கப்பெற்று அவருடைய குடும்பத்தினரின் முயற்சியோடு ஓரளவு வீடு கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. சமையலறை, மற்றுமோர் அறை ஆகியவற்றை பூரணப்படுத்த வேண்டியுள்ளதோடு, மலசல கூடம் அமைக்க வேண்டி உள்ளது. திரு சிறிராசா ரஜிந்தன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட உதவி 50000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பிட்டுள்ளனர். நண்பர்கள் சிவசங்கர் 30000 ரூபா, ராஜன் 20000 ரூபா நன்கொடை அளித்துள்ளனர். மிக்க நன்றி நட்புகளே. இக்காணொளியை பார்த்து உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்ப கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448 +947795910472 points- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் 145 வது பிறந்தநாளை ஒட்டி 'அருஞ்சொல்' இதழில் இயற்பியல் விரிவுரையாளரும், அறிவியல் எழுத்தாளருமான ஜோசப் பிரபாகர் அவர்களால் மார்ச் 14, 2024 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றியும், அவரது ஆராய்ச்சிகள் பற்றியும் தமிழில் எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்ட மிகச் சிறந்ததொரு கட்டுரை இது. ********* ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன் -------------------------------------------------------------------------------- (ஜோசப் பிரபாகர். மார்ச் 14, 2024) மனித இனம் எத்தனையோ மகத்தான சிந்தனையாளர்களைக் கண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு வரலாற்றில் ஒரு தனிச் சிறப்புமிக்க இடம் உண்டு. இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் 145வது பிறந்தநாள். ஏன் ஐன்ஸ்டைன் இன்றும் கொண்டாடப்படுகிறார்? காரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்வு இந்த உலகத்தை அறிவியல்ரீதியாகவும், தத்துவார்த்தரீதியாகவும் பல்வேறு வழிகளில் மாற்றியது. சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் புகழ்பெற்ற வசனம் ஒன்று உண்டு, “நான் யாரோ பத்து பேர அடிச்சி டான் ஆனவன் கிடையாது. நான் அடிச்ச பத்து பேருமே டானுங்கதாண்டா” என்று. இவ்வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஐன்ஸ்டைனுக்குச் சிறப்பாக பொருந்தும். ஏனென்றால் ஐன்ஸ்டீன் ஏதோ ஒரு துறையில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுப் புகழ்பெற்றவர் அல்ல. அவர் வெளியிட்ட ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் பல புதிய ஆராய்ச்சித் துறைகளை உருவாக்கின. அந்த ஒவ்வொரு ஆராய்ச்சித் துறையும் பல்வேறு புதிய கிளை ஆராய்ச்சித் துறைகளை இன்று உருவாக்கியிருக்கின்றன. அது மட்டுமல்ல ஒவ்வொரு ஆராய்ச்சிக் கட்டுரையும் ஏற்கெனவே இருந்த அறிவியல் சிந்தனையை மெருகேற்றியது மட்டுமல்லாமல் அதுவரை யாருமே யோசிக்காத கோணத்தில் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய அறிவியல் கண்ணோட்டத்தை நமக்கு வழங்கியது. இந்தச் சிந்தனைப் புரட்சிதான் மனித குலத்துக்கு அவர் வழங்கிய மாபெரும் பங்களிப்பு. இயற்பியலின் அதிசய ஆண்டு 1905 இயற்பியல் வரலாற்றில் 1905ஆம் ஆண்டை ‘அதிசய ஆண்டு’ என்று அழைக்கிறார்கள். இயற்பியல் உலகைப் புரட்டிப்போடக்கூடிய நான்கு மிக முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார் ஐன்ஸ்டைன். இந்தக் கட்டுரைகளை வெளியிடும்போது அவர் பேராசிரியரோ, பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தவரோ அல்ல. சாதாரண காப்புரிமை அலுவலகத்தில் ஒரு மூன்றாம் நிலை காப்புரிமை எழுத்தராக பணிபுரிந்துவந்தார். முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒளியின் மிக முக்கியப் பண்பைப் பற்றியது. இரண்டாவது கட்டுரை அணுக் கோட்பாட்டைப் பற்றியது. மூன்றாவது ஆராய்ச்சிக் கட்டுரை புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடு. நான்காவது கோட்பாடு உலகப் புகழ்பெற்ற E=mc2 சமன்பாட்டைப்பற்றியது. இந்த நான்கு கட்டுரைகளும் இருபதாம் நூற்றாண்டு அறிவியலின் திசையை மாற்றி அமைத்தன. ஒளி என்பது அலையா துகளா? முதல் ஆராய்ச்சிக் கட்டுரை ‘ஒளி-மின் விளைவு’ பற்றியது. ஒளியானது பருப்பொருளோடு (அணுக்களோடு) மோதும்போது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய கட்டுரை. ஒளியானது உலோக மேற்பரப்பில் படும்போது அம்மேற்பரப்பில் உள்ள எலக்ட்ரான்கள் மேற்பரப்பைவிட்டு வெளிவருகின்றன. இதுவே ஒளி மின் விளைவு. மேற்பரப்பில் படும் ஒளியின் நிறத்தை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் ஆற்றல் மாறுவதைக் கண்டறிந்தார்கள், அதேபோல் மேற்பரப்பில் படும் ஒளியின் பொலிவுத்தன்மையை மாற்றும்போது வெளிவரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை மாறுவதைக் கண்டறிந்தனர். இந்த நிகழ்வை அதுவரை இருந்த இயற்பியல் கோட்பாடுகளால் விளக்க முடியாமல் இருந்தது. காரணம், அப்போது வரை ஒளி என்பது அடிப்படையில் அலை வடிவில் இருக்கிறது, அலையாகவே பருப்பொருளோடு வினைபுரிகிறது என்று கருதிவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ஒளி என்பது அலைப் பண்பு மட்டுமல்லாமல் துகள் பண்போடும் இருக்கும் என்ற புதிய கோட்பாட்டை முன்வைத்தார். மேலும் ஒளியைத் துகளாக கருதினால் மட்டுமே ஒளி மின் விளைவின் ஆய்வு முடிவுகளை விளக்க முடியும் என்று நிரூபித்தார். ஒளி என்பது சிறு சிறு ஆற்றல் பொட்டலங்களாக இருக்கிறது. இந்த ஆற்றல் பொட்டலங்கள் துகள் போன்று இயங்குகின்றன. இந்த ஆற்றல் பொட்டலங்கள் ‘போட்டான்கள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டான் துகள்கள் உலோக மேற்பரப்பில் இருக்கும் எலக்ட்ரான் துகள்களோடு மோதுகிறது. ஐன்ஸ்டைனுக்கு முன்பு வரை ஒளி அலைகள் எலக்ட்ரான்களோடு மோதுகிறது என்று நினைத்துவந்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் ‘போட்டான் துகளும் எலக்ட்ரான் துகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிகழ்வே ஒளிமின் விளைவு’ என்று விளக்கினார். அதுவரை ஒளி என்பது அலைப் பண்போடு மட்டுமே கொண்டிருக்கும் என்ற சிந்தனையை மாற்றி ஒளி என்பது அலைப் பண்பையும், துகள் பண்பையும் கொண்டிருக்கும் என்கிற புதிய அறிவியல் உண்மையை நிரூபித்தார். இந்த ஆய்வுக் கட்டுரைக்காக ஐன்ஸ்டைனுக்கு 1921ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னாளில் குவாண்டம் இயற்பியல் உருவாக்கத்திற்கு இந்தச் சிந்தனை முக்கிய பங்கு வகித்தது. அணுவும் மூலக்கூறுகளும் நடைமுறை உண்மை ஐன்ஸ்டைனுக்கு முன்பே ‘அணு’ என்ற கருத்தாக்கம் சில அறிஞர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அப்போது வாழ்ந்த மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களுக்கு ‘அணு’ என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அணு என்ற ஒன்று இருக்கவே முடியாது. அது உண்மையில் சில நிகழ்வுகளை விளக்குவதற்குப் பயன்படும் ஒரு கருத்தாக்கம்தானே தவிர அது உண்மையில் நடைமுறை யதார்த்தம் இல்லை என்று நினைத்துவந்தனர். ஐன்ஸ்டைன் 1905இல் வெளியிட்ட இரண்டாவது கட்டுரை ‘பிரவுனியன் இயக்கக் கோட்பாடு’ ஆகும். இது அணுக்கோட்பாடு பற்றியது. தண்ணீரில் சில மகரந்தத் துகள்களைத் தூவினால் அம்மகரந்தத்துகள்கள் அங்குமிங்கும் தண்ணீருக்குள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்று தாவரவியலாளர் ராபர்ட் பிரவுன் 1827இல் கண்டறிந்தார். அவர் பெயரில் இந்த நிகழ்வு ‘பிரவுனியன் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. ஏன் இந்த மகரந்தத் துகள்கள் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன என்பதற்கான கோட்பாட்டு விளக்கத்தை யாராலும் திருப்திகரமாக தர முடியவில்லை. ஐன்ஸ்டைன் இந்த ஆய்வுக் கட்டுரையில் “தண்ணீர் என்பது எண்ணற்ற அணுக்களால், மூலக்கூறுகளால் ஆனது. இந்த மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடியாடுகின்றன. இந்த மூலக்கூறுகள் மகரந்தத் துகள்கள் மீது தொடர்ச்சியாக மோதிக்கொண்டே இருப்பதால் மகரந்தத் துகள்களும் ஒழுங்கற்று ஓடியாடுகின்றன” என்று கூறினார். அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இம்மகரந்தத் துகள்கள் சராசரியாக எவ்வளவு தூரம் நகர்ந்திருக்கும், அதன் மூலம் இந்த தண்ணீர் மூலக்கூறுகள் அளவையும் கோட்பாட்டுரீதியாகக் கணக்கிட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து ஜீன் பெர்ரின் என்பவர் ஆய்வகப் பரிசோதனை மூலம் ஐன்ஸ்டைன் கணக்கிட்டது சரி என்று நிரூபித்தார். இதன் மூலம் ‘அணுக்களும் மூலக்கூறுகளும்’ நடைமுறை உண்மை, அது கருத்தாக்கம் அல்ல என்று நிரூபணம் ஆனது. அதற்காக ஜீன் பெரினுக்கு 1926ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. தனிச்சார்பியல் கோட்பாடு ஐன்ஸ்டைனின் மூன்றாவது கட்டுரை ‘சார்பியல் கோட்பாடு’ பற்றியது. இதுதான் ஐன்ஸ்டைனை மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் என்ற நிலைக்கு உயர்த்தியது. நியூட்டனின் கோட்பாட்டின்படி காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன்படி “சூரிய குடும்பத்தில் இருக்கும் நமக்கும், பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் வேறொரு நட்சத்திரத்துக்கும் ஒரே மாதிரியான காலம்தான். அதேபோல் சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்பவரின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும், விமானத்தில் செல்லும் பயணியின் கையில் கட்டப்பட்டிருக்கும் கடிகாரமும் ஒரே நேரத்தைத்தான் காட்டும்.” ஐன்ஸ்டைன் இந்தக் கருத்தை அடியோடு தகர்த்தார். காலம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றல்ல. அது ஒவ்வொருவரின் இயக்கத்தைச் சார்ந்தது என்று கூறினார். சும்மா உட்கார்ந்துகொண்டிருப்பரின் நேரமும், பேருந்தில் பயணிக்கும் ஒரு நபரின் நேரமும் வேறு வேறு என்று சொன்னார். அதாவது, ஒருவரின் பயணிக்கும் வேகம் அதிகமாக அதிகமாக அவரின் காலம் மிக மெதுவாக நகரும் என்றார். இது அக்காலத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் காலமும் (time) வெளியும் (space) தனித்தனியானவை அல்ல. ஒன்றுக்கொன்று சார்ந்தவை. மேலும் காலம் மற்றும் வெளியைக் காலவெளி (space-time) என்றே இணைத்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். இவையெல்லாம் மனித குலம் மூவாயிரம் ஆண்டுகளாக நம்பிவந்த பொதுச் சிந்தனைக்கு எதிராக இருந்தது. அந்தக் காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞர்களால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆழமாக நம்பிவந்த பல்வேறு கருத்துகளின், கோட்பாடுகளின் ஆணிவேரை இது அசைப்பதுபோல இருந்தது. இந்தத் தனிச்சார்பியல் கோட்பாட்டின்படி (Special theory of relativity), ஒளி மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் உச்சபட்ச வேகத்தில் பயணிக்க முடியும். அதாவது, வெற்றிடத்தில் விநாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. எந்த ஒரு பருப்பொருளும் இந்த வேகத்தில் பயணிக்க முடியாது. வேகமாக செல்லும் ஒரு பொருளின் நீளம் குறையும். உதாரணத்துக்கு நீங்கள் ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டிருக்கிறீகள். உங்கள் கையில் ஒரு மீட்டர் அளவுகோல் இருக்கிறது. இப்போது இந்த ஒரு மீட்டர் அளவுகோலைப் புறப்பட இருக்கும் இரயிலின் உள்ளே அமர்ந்திருக்கும் ஒரு பயணியிடம் கொடுத்துவிடுங்கள். இப்போது ரயில் புறப்பட்டு வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இப்போது அந்த ரயில் பயணியிடம் இருக்கும் அளவுகோலின் நீளம் உங்களைப் பொறுத்து ஒரு மீட்டர் அல்ல. அதற்கும் கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால், அந்த ரயில் பயணியைப் பொருத்து அந்த அளவுகோலின் நீளம் ஒரு மீட்டர்தான். அதாவது, நீளம் என்பதும் காலத்தைப் போலவே சார்புத்தன்மை உடையதுதான். உங்கள் பார்வையில் ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகள் இன்னொருவரைப் பொருத்து வெவ்வேறு நேரத்தில் நடக்கும். ஒரே கண இரு நிகழ்வுகள் (simultaneous events) என்பதும் சார்புத்தன்மை உடையதுதான். வேகமாக செல்லும் ஒருவரின் காலம் மெதுவாக ஓடும். இரட்டைக் குழந்தைகளின் பிறந்தநாளில் ஒருவர் பூமியிலும், இன்னொருவர் விண்வெளிக்கும் சென்று சில ஆண்டுகள் பயணித்துச் சென்றுவந்தால் பூமியில் இருக்கும் இரட்டையர் விண்வெளிக்குச் சென்றுவந்த இரட்டையரைவிட வயது அதிகமாகிவிடுவார். காரணம் விண்வெளியில் வேகமாகப் பயணித்தவரின் காலம் மெதுவாக ஓடியதால்தான் அவருக்கு வயது ஆகும் வேகம் பூமியில் இருப்பவரைவிட மெதுவாக இருக்கிறது. வேகமாக செல்லும் பொருளின் நிறை அதிகமாகிறது. மேலே கூறப்பட்ட அனைத்துக் கருத்துகளும் அக்காலத்தில் அனைவருக்குமே அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தன. ஆனால், கடந்த நூறு வருடமாக நடந்த பல்வேறு ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் ஐன்ஸ்டீன் கூறியதே சரி என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. நீளம் குறைவதையும், காலம் மெதுவாக ஓடுவதையும், நிறை அதிகமாவதையும் நடைமுறையில் நாம் எங்குமே பார்த்ததில்லை. உண்மையில் இவையெல்லாம் நடக்கிறதா? என்று நமக்கு ஒரு கேள்வி எழலாம். ஆம், நடக்கிறது. பைக்கில் செல்லும் ஒருவரின் காலம் தரையில் நிற்பவரைப் பொருத்து மெதுவாக ஓடுகிறது. அவரின் நீளம் சுருங்குகிறது. நிறை அதிகரிக்கிறது. ஆனால், இவை எதையும் நம்மால் உணர முடியாது. அதாவது, எந்தவொரு கருவியாலும் அளவிட முடியாத அளவுக்கு மிக மிகச் சிறியது. மேற்சொன்ன அனைத்தும் நாம் உணரும் அளவுக்கு, அதாவது அளவிடும்படி நடக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் நாம் ஒரு விநாடிக்கு ஒரு லட்சம் கி.மீ. வேகத்தில் பயணிக்க வேண்டும். நடைமுறை உலகில் பயணிக்கக்கூடிய அதிகபட்ச அளவு மணிக்கு 600 அல்லது 700 கி.மீ.தான். ஒளியைவிட இந்த வேகம் மிக மிகக் குறைவு என்பதால் நம்மால் இந்தச் சார்பியல் விளைவுகளை உணர முடிவதில்லை. பிறகு எப்படி ஐன்ஸ்டைன் உணர்ந்தார்? முழுக்க முழுக்க கணிதரீதியாகவும், கோட்பாட்டுரீதியாகவும் சிந்தனைப் பரிசோதனை (thought experiment) மூலம் வெறும் பேப்பரையும், பென்சிலையும் வைத்துக்கொண்டு இக்கோட்பாடுகளை உருவாக்கினார். புகழ்பெற்ற சமன்பாடு உலகம் முழுக்க அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு சமன்பாடு என்றால் இந்த E=mc2 சமன்பாடுதான். இங்கே E என்பது ஒரு பொருளின் மொத்த ஆற்றலைக் குறிக்கும். m- பொருளின் நிறை, c – ஒளியின் வேகம். இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலும் நிறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆற்றலின் ஒரு வடிவம்தான் நிறை. நிறையின் ஒரு வடிவம்தான் ஆற்றல் என்ற புதிய சிந்தனையைக் கொண்டுவந்தார். மேலும் நிறையை ஆற்றலாக மாற்ற முடியும். ஆற்றலை நிறையாக மாற்ற முடியும் என்றும் கூறினார். அணுக்கரு ஆராய்ச்சித் துறைக்கு இந்தச் சமன்பாடுதான் அடிப்படை. நியூட்டன் கோட்பாட்டின்படி ஒரு பொருள் தரையில் ஓய்வு நிலையில் இருந்தால் அதற்கு ஆற்றல் என்பது இல்லை. ஆனால், ஐன்ஸ்டைனின் இந்தச் சமன்பாட்டின்படி “ஒரு பொருள் ஓய்வு நிலையில் இருந்தால்கூட அதற்குள் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்துள்ளது.” இதுவும் ஒரு புரட்சிகரமான சிந்தனை. துரதிருஷ்டவசமாக இந்தச் சமன்பாடுதான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு செய்யவும் பயன்பட்டது. ஐன்ஸ்டைன் இதுகுறித்து மிகவும் வருந்தினார். “ஆட்சியாளர்களின் தவறு என்றாலும் எனது கண்டுபிடிப்பு இந்த அழிவுக்குப் பயன்பட்டதே” என்று மனம் வெறுத்தார். ஹிரோஷிமா, நாகசாகி நிகழ்வுக்குப் பிறகு மிகத் தீவிர அணுகுண்டு எதிர்ப்பாளராக மாறினார். இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை ஐன்ஸ்டைன் வாழ்க்கையில் மணிமகுடமாகத் திகழும் ஒன்று இந்தப் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’. அவரால் 1915ஆம் ஆண்டு இக்கோட்பாடு வெளியிடப்பட்டது. நியூட்டன் கோட்பாட்டின்படி பூமி சூரியனைச் சுற்றிவரக் காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை. நிலா பூமியைச் சுற்றிவரக் காரணம் பூமியின் ஈர்ப்பு விசை. ஆனால், பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி “ஈர்ப்பு விசை என்ற ஒன்றே இல்லை. நிறையானது தன்னைச் சுற்றி உள்ள வெளியை வளைக்கிறது, காலத்தை மெதுவாக ஓட வைக்கிறது. இது காலவெளி வளைவு (space-time curvature) என்று அழைக்கப்படுகிறது. விசை என்பது வெளியிலிருந்து கொடுக்கப்படுவதல்ல. மாறாக அது காலவெளி வளைவு என்ற இருத்தலியல் பண்பே (existential property)” என நிரூபித்தார். இந்தக் காலவெளி வளைவுதான் நமக்கு ஈர்ப்பு விசைபோல் தோன்றுகிறது. “மனித மூளையில் தோன்றிய ஆகச் சிறந்த அறிவியல் கருத்து இது என்றும் ‘இருபதாம் நூற்றாண்டின் அழகான சிந்தனை இது’ என்றும் அறிவியல் அறிஞர்கள் புகழ்கின்றனர். எடுத்துக்காட்டாக, சூரியன் தனது நிறையால் தன்னைச் சுற்றியுள்ள வெளியை (space) வளைக்கிறது. காலத்தை மிக மெதுவாக ஓட வைக்கிறது. சூரியனைச் சுற்றி உள்ள இந்த வளைந்த வெளியில் கோள்கள் நீள்வட்டப் பாதையில் செல்கிறது. நாம் பார்க்கும்போது சூரியன் கோள்களின் மீது விசை செலுத்துவதுபோல் தெரிகிறது. இப்படித்தான் ஒவ்வொரு பொருளும் தனது நிறைக்கேற்ப தன்னைச் சுற்றி உள்ள காலவெளியை வளைக்கிறது. இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாடு கோள்களின் இயக்கத்தை, விண்மீன்களின் இயக்கத்தை நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாட்டைவிடத் துல்லியமாக விளக்குகிறது. பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி இன்னொரு ஆச்சரியமான கருத்து – ஒளியானது மிக அதிக நிறையுள்ள பொருளின் அருகே செல்லும்போது வளைந்து செல்லும். எடுத்துக்காட்டாக, சூரியனைத் தாண்டி இருக்கும் நட்சத்திரங்களின் ஒளி சூரியனுக்கு அருகில் வளைந்து செல்கிறது. இப்படி வளைந்துவருவதால் நாம் பார்க்கும் நட்சத்திரம் அதன் உண்மையான இருக்கும் இடத்தைவிட கொஞ்சம் தள்ளி நமக்குத் தெரிகிறது. இதை 1919ஆம் ஆண்டு ஆர்தர் எடிங்க்டன் ஒரு முழு சூரிய கிரகணத்தின் பரிசோதனை வாயிலாக நிரூபித்தார். இந்தப் பரிசோதனைக்கு முன்பு வரை ஐன்ஸ்டைன் அறிவியல் உலகில் மட்டுமே அதிகம் அறியப்பட்டிருந்தார். இந்தப் பரிசோதனையின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் அனைத்துப் பத்திரிகைகளிலும் பேசப்படும் மனிதரானார். இந்தக் கோட்பாடுதான் கருந்துளை என்ற ஒன்றைக் கணித்தது. ஈர்ப்பு அலைகள் என்பது இருந்தே ஆக வேண்டும் என்றும் கணித்தார். 2015இல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்தக் கண்டுபிடிப்பாளர்களுக்கு இயற்பியல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது. இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இந்தப் பொதுச் சார்பியல் கோட்பாட்டில்தான் தனது ஆராய்ச்சிகளைச் செய்தார். ஒரு ஆச்சரியமான தகவல் இன்று நாம் ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தும் ஜிபிஎஸ் பொதுச் சார்பியல் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. கடந்த நூறு வருடத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப் பின்பற்றி ஆய்வுசெய்த பலர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் பிற்காலத்தில் ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ (Theory of everything) உருவாக்க முயற்சித்தார். ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை. அரசியலும் தத்துவமும் ஐன்ஸ்டைனை நாம் கொண்டாடக் காரணம் அவரது அறிவியல் சாதனை மட்டுமல்ல. அவர் மானுடத்தை நேசிக்கும் மனிதராகவும் விளங்கினார் என்பதால்தான். அவர் வாழும்போது உலகில் நடந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்க் குரல் எழுப்பினார். ஐன்ஸ்டைன் பிறப்பால் யூதராக இருந்ததால் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியில் ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். ஆனால், அந்தச் சூழ்நிலையிலும்கூட அமெரிக்கர்கள் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தும் கொடுமைகளைக் கடுமையாக கண்டித்தார். கட்டுரைகள் எழுதினார். நான் ‘கடவுள் நம்பிக்கை இல்லாத, ஆனால் ஆன்மீக உணர்வுள்ள மனிதன்’ என்று அடிக்கடி கூறுவார். முதலாளித்துவம் மனித குலத்துக்குச் செய்யும் தீங்கு குறித்து அதிகம் பேசினார். ‘ஏன் சோசலிஸம் வேண்டும்?’ என்பது அவரது முக்கியமான ஒரு கட்டுரை. உலகெங்கும் நடக்கும் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பினார். அவருக்குக் காந்தியமும் காந்தியையும் மிகப் பிடித்த ஒன்றாக பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை உலக ஒற்றுமைக்கு எவ்வாறு பாடுபட வேண்டும் என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். ஆயுத ஒழிப்புக்கு முன்வர வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. அவர் இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் வலியுறுத்தி ‘ஐன்ஸ்டைன் - ரஸ்ஸல் உடன்படிக்கை’ என்ற ஒன்றை பெர்ட்ரண்ட் ரஸ்ஸலோடு சேர்ந்து உருவாக்கினார். அவரின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க உளவுத் துறையின் ரகசிய தொடர் கண்காணிப்பில் இருந்தார். அவரின் வீடும் அடிக்கடி சோதனை செய்யப்பட்டது. ஆனால், அவர் எதற்கும் அஞ்சாதவராக தொடர்ந்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பிவந்தார். இன்று பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் ‘அறிவியல் ஆராய்ச்சி மட்டுமே எனது வேலை. நாட்டில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை’ என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஐன்ஸ்டைனை நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும் 1950க்குப் பிறகு ஐன்ஸ்டைனின் உடல்நலம் குறைந்துகொண்டேவந்தது. 1955 ஏப்ரல் 16ஆம் நாள் அவரது உடல்நிலை இன்னும் மோசமானது. அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், ஐன்ஸ்டைன் அறுவை சிகிச்சைக்கு மறுத்துவிட்டார். “நான் எப்போது போக விரும்புகிறேனோ அப்போது போக விரும்புகிறேன். செயற்கைத்தனமாக நீட்டித்துக்கொள்ளும் வாழ்க்கை சுவையில்லாதது. நான் எனது பங்கை இவ்வுலகுக்கு அளித்துவிட்டேன். இது நான் விடைபெறுவதற்கான நேரம். அமைதியாக விடைபெறுகிறேன்” என்று கூறினார். அடுத்த நாள் காலை ஏப்ரல் 17ஆம் நாள் தனது 76வது வயதில் உயிர் நீத்தார். அவரது உடல் மறைந்தாலும் அவரின் அறிவியல் கோட்பாடுகள் மனித குல வரலாற்றில் அழியா இடம்பெற்றிருக்கும். ஆம், ஐன்ஸ்டீன் காலம் கடந்து வாழும் மனிதர். காலம் வெளி கடந்து வாழும் மனிதர். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் ஐன்ஸ்டைன். https://www.arunchol.com/joseph-prabagar-article-on-albert-einstein2 points- மயிலம்மா.
2 pointsமயிலிறகு........... 17. பின்பு மயிலம்மாவும் கனகமும் சுந்துவும் வந்து அவர்களின் அறைக் கதவைத் தட்டிவிட்டு திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள். கதிரையில் அஞ்சலா இருக்கிறாள். மயிலம்மா அவள் தோளில் கை வைத்து நீ பிள்ளை ஒன்றுக்கும் யோசிக்காதை, பயப்படாமல் இரு என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து இப்பவே இரவாகப் போகுது இனி எது செய்யிறதெண்டாலும் நாளைக்குத்தான் பார்க்கலாம். நான் போய் உங்களுக்கு சாப்பாடும் தேநீரும் எடுத்துக் கொண்டு வாறன் எண்டு கிளம்ப அவளைத் தடுத்த வாமன் அவங்கள் எல்லா இடங்களிலும் எங்களைத் தேடிக்கொண்டு திரிகிறாங்கள். அதனால் இன்றிரவே நாங்கள் தாலி கட்டி கலியாணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். அப்ப கனகத்தின் புருஷன் வந்து நடந்தது நடந்து போச்சு, அவன் சொல்லுறதுதான் சரி அதெல்லாம் செய்யலாம் என்கிறார். கனகமும் அங்கபார் அவற்ர உசாரை என்று சொல்கிறாள். பின்பு வாமன் அலுவலகத்தில் இருந்த தொலைபேசியை எடுத்து அரசு விதானைக்கு விஷயத்தை சொல்லி அண்ணா என்ர நண்பன் சுந்து அங்க வருவான். உங்கட காரில் அவனோடு சென்று அஞ்சாலாவின் பெற்றோரையும் என் பெற்றோரையும் கூட்டிக்கொண்டு மயிலம்மா வீட்டுக்கு வர முடியுமோ என்று கேட்க மறுமுனையில் இருந்து சரியடா நான் எல்லாவற்றையும் கவனிக்கிறன். நீ சுந்துவை அனுப்பு. நீங்கள் அங்கேயே கவனமாய் இருங்கோ வெளில வரவேண்டாம் என்று சொல்கிறார். சுந்துவும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்கிறான். இங்கே கோமளம், வீட்டு முற்றத்தையும் கோயில் முற்றத்தையும் கூட்டி சாணி தெளித்து கோலங்கள் போடுகிறாள். அப்போது விதானையாருடன் காரில் இருவரது பெற்றோர்களும், பின்னால் சைக்கிளில் சுந்துவும் வந்து இறங்குகின்றார்கள். இவர்களை இறக்கி விட்டுட்டு விதானையார் காரை எடுத்துக் கொண்டு வலு வேகமாய் செல்கிறார். மற்றப்பக்கம் கனகத்தின் புருசனும் இவங்கட நண்பர்களுமாய் சேர்ந்து ஆங்காங்கே மரங்களில் தூங்கிக் கொண்டிருந்த அஞ்சாறு சேவல்களைப் புடுங்கிக் கொண்டு வந்து அடித்து கறிசோறு சமைக்கின்றார்கள். மயிலம்மாவும் அன்று அஞ்சலா குடுத்து விட்ட சாராயப்போத்தல்களை அவர்களிடம் குடுத்து கெதியாய் சமையுங்கோ, இன்னும் என்னென்ன பிரச்சினை நடக்கப் போகுதோ தெரியாது என்று சொல்லிவிட்டு போகிறாள். அயலில் உள்ளவர்கள் அரசல் புரசலாய் விசயம் கேள்விப்பட்டு தங்கள் தங்கள் வீடுகளில் இருந்த கறி சாமான்களுடன் வந்து வேலைகள் செய்கிறார்கள். பூவனமும் புருசனுடன் காரில் வந்து இறங்குகிறாள். அவளும் கோமளத்துடன் சேர்ந்து அஞ்சலாவை மணப்பெண்ணாய் கூந்தலில் மலர் மாலைகள் மற்றும் சடைநாகம் எல்லாம் சூட்டி அலங்கரிக்கிறார்கள். வேறு சிலர் அம்மனுக்கும் மணமக்களுக்கும் மலர்களைச் சேகரித்து மாலைகள் கட்டுகிறார்கள். பூவனத்தின் புருசனும் வாமனின் தந்தையும் கோயிலைக் கழுவி விட சுந்து சென்று ஐயரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வருகிறான். வாமனின் தாய் அவன் தங்களுக்குத் தந்த வேட்டி சேலைகளை பூவனத்திடம் குடுத்து பொண்ணு மாப்பிள்ளைக்கு உடுத்தி விடத் தருகிறாள். ஐயரும் அம்மனுக்கும் பட்டுசேலை உடுத்தி அருகில் இருக்கும் விநாயகர், முருகனுக்கும் புதுப் பட்டுடுத்தி அலங்கரித்திருக்கிறார். அந்நேரம் அரசு விதானையாரும் காரில் வந்து இறங்குகிறார். பெண்கள் தேவாரம் பாடிக்கொண்டிருக்க எல்லோரும் மலர்தூவி வாழ்த்த கோவில் மணி ஒலிக்க ஐயர் மந்திரம் சொல்லி அம்மனின் கழுத்தில் இருந்து தாலியை எடுத்துக் குடுக்க வாமன் அஞ்சாலாவின் கழுத்தில் தாலி கட்டுகிறான். அப்போது ஒரு காரில் வைத்தியின் மனைவியும், மூத்த மகனும் வந்து இறங்குகிறார்கள். அவர்களுக்கு விதானையார் நடந்தவற்றை கூறியிருந்தார். வந்தவர்கள் தாலி கட்டுவதைக் கண்டதும் அங்கிருந்த தட்டில் இருந்த மலர்களை எடுத்து தூவி ஆசீர்வதிக்கிறார். சற்று நேரம் கழித்து பின்னால் வெள்ளை வானும் ஒரு மோட்டார் சைக்கிளும் வந்து நிக்கின்றது. வானில் இருந்து யோகிபாபு இறங்கி வருகின்றான். அவனுக்கு அங்கு தனது சித்திக்கு திருமணம் நடக்கிறதைப் பார்க்க ஆச்சரியமாய் இருக்கு. வந்தவர்களைக் கண்டு எல்லோரும் திகைத்து நிக்க மயிலம்மா முன் வந்து வைத்தியின் மனைவியிடம் அம்மா நீங்கள் பெரியவங்கள் பிள்ளைகளை மன்னிக்க வேணும். ஏனடி மயிலு, இதெல்லாம் என்ன நடுநிசியில் திடீர் திருமணம் என்று கேட்கிறாள்...... எல்லாம் உங்கள் சின்னமகனால்தான் இப்படி நடக்கிறது என்று மயிலம்மா சொல்கிறாள். அவள் யோகிபாபுவின் பக்கம் திரும்பி எடேய் சின்னவனே என்னடா இது என்று கேட்க, எனக்கு ஒன்றும் தெரியாதம்மா இந்தக் கல்யாணம் எனக்கும் திகைப்பாத்தான் இருக்கு என்று சொல்கிறான். அப்போது அஞ்சலா முன் வந்து இவர் பொய் சொல்கிறார் அம்மா. என்னைக் கடத்திக் கொண்டுபோய் தனது நண்பனுக்கு கட்டி வைக்கிறதுக்காக இன்று முழுதும் என் வீட்டுக்கு முன்னால் நூறுதரம் அந்த வானில் அங்கும் இங்குமாய் திரிஞ்சவர். நான் பயத்துடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருந்தனான். அதோ அந்த வெள்ளை வான்தான், இப்பவும் அதுக்குள் ஆட்கள் இருக்கினம் வேணுமென்றால் போய்ப் பாருங்கள் என்கிறாள். மூத்த மகன் தம்பியைப் பார்த்து என்னடா வேலை இது.....அப்பாக்குத்தான் அறிவில்லை எண்டால் உனக்கு அறிவு எங்க போச்சுது. அந்தப் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய நீயே இப்படி செய்யலாமா மடையாஎன்று ஏசிப்போட்டு டேய் யாரங்கே வானுக்குள்ளே இறங்கி வாங்கடா இங்கே என்று கத்த அதில் இருந்து நாலுபேர் கை கட்டிக்க கொண்டு முன்னால் வந்து நிக்கிறார்கள்.......! 🦚 மயில் ஆடும் .......... 17.2 points- விழல்
2 pointsதலை நிறைய முடி இருந்தாலும் பிரச்சனை. இல்லையென்றாலும் ஒரு சின்னக் கவலை. ***** விழல் ----------- சிவாஜியும் எம்ஜிஆரும் வைத்திருப்பது அவர்களின் தலைமுடி அல்ல என்று அன்று தெரியாது முடி நெற்றிக்கு மேல ஒரு சின்ன மலையாக ஏறி நெற்றியில் சுருண்டு விழ என்ன என்ன செய்ய வேண்டும் என்று அப்படி தலைமுடி இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டேன் இரும்புக் கம்பி ஒன்றை மெதுவாக சூடாக்கி அப்படியே சுற்று என்றும் ஒருவன் கொடுத்தான் யோசனை பள்ளிக்கூடத்தில் சூடு அதிகமாகி புரதம் கருகி மணந்தது தான் மிச்சம் படும் பாட்டைப் பார்த்து அம்மா சொன்னார் உனக்கு வாழைக்காய் பட்டை முடி வளையவே வளையாது என்று இது தான் வடிவு என்றும் அவர் சொன்னார் நாய்க்கு மட்டும் வால் எப்படி சுருண்டே நிற்குதே என்று மெதுவாக ஒரு நாள் இழுத்துப் பார்க்க அது திரும்பிக் கடித்தது வயிற்றில் போட்டார்கள் ஊசிகளை இந்தக் குறையுடனேயே வளர்ந்து இன்னொரு ஊருக்கு போய் வாழ அங்கே ஒரு சலூன் இருக்குது அங்கே சுருட்டி விடுவார்கள் என்று நண்பன் ஒருவன் கூட்டிப் போனான் என்ன எனக்கு வேண்டும் என்று நான் சொல்ல வாயெடுக்க சிகை அலங்காரம் செய்பவர் வாயில் விரலை வைத்தார் அவர் வாயில் தான் நான் ஒன்றும் சொல்லக் கூடாதாம் ஒன்றும் சொல்லாமல் நான் ஏறி இருக்க அவரும் ஒன்றும் சொல்லவில்லை வெட்டிக் கொட்டி ஏதோ தலையில் பூசி முடிந்தது என்று சைகை காட்டினார் இவருக்கு பேச்சு வராதோ அய்யோ பாவம் என்று நான் நினைக்க 'காசு' என்று தெளிவாக கேட்டார் அங்கே கொடுத்த காசில் வெளியே இரண்டு வருடம் வெட்டியிருக்கலாம் முடி சுருளவும் இல்லை வெளியே வந்து கடையின் பெயர் என்னவென்று பார்த்தால் அது ஒரு பிரபல நகைக்கடையின் பெயர் பின்னர் கல்யாணம் காட்சி எல்லாம் வாழைக்காய் பட்டையுடனேயே தலையில் முடி இருக்குதா இல்லையா என்று தெரியாமலும் அதற்கு தேவை ஒன்றும் இல்லாமலும் வாழ்க்கை வைத்திருந்தது சில வருடங்களின் பின் என்னை நகை கடைக்கு முடி வெட்ட கூட்டிப் போன நண்பனை பார்த்தேன் தொப்பி போட்டிருந்தான் கேட்கவும் தயக்கமாக இருந்தது பொறுத்து பொறுத்து இருந்தேன் அவன் கடைசி வரை கழட்டவே இல்லை இப்ப தொப்பி நானும் வாங்க வேண்டும் இந்த தடவை கடையின் பெயர் என்ன என்று பார்த்தே உள்ளுக்குள் காலை வைக்க வேண்டும்.2 points- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
2 points- என்னோட சாதி..
1 pointஉந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். நீங்கள் தொடர்ந்து உங்கட நல்ல வேலையைப் பாருங்கோ. உங்கள் மூலம் பல விடையங்களை நான் அறிந்துள்ளேன். மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிகரமடைய மனமார வாழ்த்துகிறேன். நன்றி1 point- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
வெல்லபோவது ஓட்டு மிசின்தான் அதுக்கேன் இவ்வளவு அளப்பரை ?😄1 point- என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே
நாகர்கோயில் கடலை நாங்கள் ஆண் கடல் என்று சொல்லுவோம். எப்போதும் அலை அடிக்கும் கடல். அப்பவும் நனையவில்லை....🤣1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்? 17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது. https://tamil.adaderana.lk/news.php?nid=1852341 point- மயிலம்மா.
1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதென்ன கோதாரி புதுக்கதையாய் கிடக்கு? புட்டினாலை உலக அமைதி கெட்டதா? எப்பிடியெண்டு ஒருக்கால் சொல்லுங்கோ...😂 சாத்தனார் நித்திரைப்பாயால எழும்பி வந்து கதைக்கிறார் எண்டு நினைக்கிறன்...🤣1 point- கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார்
1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ம் ..... நாமேதோ நாகரீகமற்றவர்கள், மனிதநேயமற்றவர்கள் என்பதுபோல் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதில், சிங்கள அரசாங்கம் வெளியிட்ட செய்திகளின் முறை பற்றிய விளக்கம் எழுதப்போய் அது பந்தியாகி உங்களுக்கு வாசிச்சு நட்டு களர வைத்ததற்காக தாங்கள் என்னை மன்னித்தருள்க.1 point- தாயின்றி நாமில்லை.!
1 pointஆகா உண்மைதான்கவியே பொட்டதுபோல் என்கண்ணுக்கு தெரிந்ததால்.... மகிழ்வோடு நன்றிகள்.1 point- கருத்து படங்கள்
1 point1 point- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
20 ஆண்டுகளாக ரஸ்யா எத்தனை நாடுகளுக்கெதிராக படையெடுத்து உலக மக்களின் அமைதியை அழித்தது என்பதையும் கூடவே கூறினால் அறிந்து, புரிந்து, தெளிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 point"நான் தான் பிரபாகரன்" பிரபாகரனைப் பொறுத்தவரை செய்தியாளர் ஒருவரைச் சந்திக்கும் முதலாவது தருனம் அதுதான். அனீட்டாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய தருனம். இந்த நேர்காணலூடாக செவ்வி காண்பவரும், காணப்படுபவரும் பிரபலமானார்கள். தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நேர்காணலை எடுப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையோரத்தில் அமைந்திருந்த புலிகளின் பாதுகாப்பான இடம் என்று கருதப்பட்ட இரு மாடிகளைக் கொண்ட வீட்டிற்குச் சென்றார். அவர் அமரவைக்கப்பட்ட அறையினுள் சில பிரம்பினால் பின்னப்பட்ட கதிரைகளும், சிறிய உணவருந்தும் மேசையும் சுற்றிவர ஆறு சிறிய கதிரைகளும் அடுக்கப்பட்டிருந்ததுடன் ஓரத்தில் சிறிய வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது.அவர் அமரவைக்கப்பட்ட சில நிமிடங்களின் பின்னர் தமது இயக்கம் தொடர்பான சில கசெட்டுக்களை அத்தொலைக்காட்சிப் பெட்டியில் புலிகள் ஓட்டினார்கள். தமிழ் ஈழம் எனும் தனிநாட்டின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட இராணுவ அமைப்பான புலிகள் பற்றி அக்காணொளிகள் பேசின. ஒரு காணொளியில் பிரபாகரன் இராணுவ அணிவகுப்பொன்றினை ஏற்றுக்கொள்வதும் படமாக்கப்பட்டிருந்தது. ஒரு இரு மணிநேரம் அனீட்டா அங்கு இருந்திருப்பார். உயரம் குறைந்த, சற்றுப் பருமனான, சராசரி மனிதர் ஒருவர் அவர் அமர்ந்திருந்த அறைப்பகுதிக்குள் நுழைந்தார். பல லட்சம் தமிழ் ஆண்களுக்கும் அப்போது உள்நுழைந்த மனிதருக்கும் உருவ அமைப்பில் எந்த வேறுபாடும் இல்லாமையினால் உள்ளே வந்தவர் குறித்து தான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறுகிறார். "ஆறடி உயரம் கொண்ட கம்பீரமான வீரன் ஒருவனை நான் எதிர்பார்த்திருந்தேன்" என்று கூறுகிறார். இரத்தத் தீவு எனும் தான் எழுதிய புத்தகத்தில் இத்தருணம் குறித்து எழுதும் அனீட்டா, "சில நிமிடங்களுக்குப் பின்னர்...." என்று ஆரம்பிக்கிறார். "அந்த மனிதரின் முகத்தில் சிறிய புன்னகை ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட மன்னிப்பொன்றினை இரைஞ்சுவது போன்று வைத்துக்கொள்ளலாம். அவரின் முகத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினேன், அடக் கடவுளே அது பிரபாகரன் தான் என்று உணர்ந்தபோது அதிர்ச்சியடைந்தேன்...." "பழுப்பு நிறத்தில் நீளமான காற்சட்டையினையும், பெருக்கத் தொடங்கியிருந்த இடைப்பகுதியை மறைக்கத்முடியாத மென் நீல நிறத்தில் மேற்சட்டையும் அணிந்திருந்தார். எனது அவநம்பிக்கையினையும், அவரது உருவ அமைப்புப் பற்றி நான் எண்ணிவைத்திருந்தவற்றிற்கும் அவரது உண்மையான தோற்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டினால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் மறைக்க நான் கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று. ஆனால் நான் ஒரு ஊடகவியலாளர், நடிகையல்ல. எனது ஏமாற்றத்தை மறைக்கும் பிரயத்தனத்தில் நான் முற்றாகத் தோற்றுப்போயிருந்தேன்.அதிர்ஷ்ட்டவசமாக பிரபாகரனை எனது ஏமாற்றம் மகிழ்வித்திருந்தது. அவர் புன்னகைத்தார், சிறு பையனைப்போல.........." பிரபாகரன் குறித்த தனது எண்ணங்களையும் அனீட்டா எழுதுகிறார். "அந்த நேர்காணல் இரு மணித்தியாலங்கள் வரை நீண்டு சென்றது. நான் எனது வாழ்க்கையில் சந்தித்த அல்லது நான் சந்திக்கவிருந்த மிக முக்கியமான மனிதர் அவர்தான் என்பதனையும் நான் உணர்ந்து கொண்டேன்.ஆகவேதான் அந்தச் சந்திப்பிற்கு பத்து வருடங்களுக்குப் பின்னர் உலகின் மிகவும் பிரபலமான கெரில்லா நாயகனாக அவர் உயர்ந்தபோது அது என்னை ஆச்சரியப்பட வைக்கவில்லை". "ஈவு இரக்கமற்ற, சூட்சுமம் கொண்ட, கடுமையான மனிதராக பிரபாகரன் வலம் வந்திருக்கலாம். ஆனால் அவர் மிகச் சிறந்த திட்டமிடலாளன் என்பதும் இராணுவ நிபுணன் என்பதும் அதேயளவிற்கு உண்மையானது. அவரது சிந்தனைகள் ஒருபோது தெளிவற்று இருந்ததில்லை. கூர்மையாக, தெளிவாக, சிக்கலற்றுத் தெளிவானது அவரது சிந்தனை. சந்தேகங்களோ, அச்சங்களோ வருத்தங்களோ அவரது இலட்சியப் பார்வையினை மழுங்கடிக்கவில்லை. எதிர்காலம் நோக்கிய அவரது பார்வையும் விசாலமானது. இனிவரும் காலங்களில் எதிரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அவரால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அவருக்கு செஸ் விளையாட்டில் பிரியமிருந்திருந்தால் மிகச்சிறந்த செஸ் வீரராக அவர் வந்திருப்பார்". எதிர்காலம் குறித்து அனுமானிக்கும் திறமை மிக்கவர் இரத்தத் தீவில் எழுதும்போது பிரபாகரனின் தீர்க்கதரிசனம் குறித்து அனீட்டா பேசுகிறார். நேர்காணலின் பகுதியொன்றினை மேற்கோள் காட்டி அது எழுதப்பட்டிருந்தது. தனது கேள்வி பதில் பகுதியில் அச்சந்தர்ப்பம் வராமையினால் பத்திரிக்கையில் அதனை எழுதுவதை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால், புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பத்தினை அதன் முக்கியத்துவம் கருதி முழுமையாக இங்கு பதிகிறேன். "நாம் பேசிக்கொண்டிருக்கும்போது "இறுதியாக நான் இந்தியாவுடன் மோதவேண்டி வரும்" என்று கூறினார். இந்தியப்படைகள் இலங்கைக்குள் வருவதற்கும், ரஜீவ் காந்தி பிரதமராவதற்கும் முன்னாலேயே இதனை பிரபாகரன் அனுமானித்திருந்தார். அத்தருணத்தில் இந்தியாவின் சர்வதேச உளவு அமைப்பான ரோ புலிகளுக்கு பணமும், ஆயுதங்களும், பயிற்சியும் வழங்கிக்கொண்டிருந்தது". "அதிர்ச்சியடைந்த நான் அவரிடம் அதனைத் தெரிவித்தேன். அவருக்கு உணவளிக்கும் கரத்தையே அவர் கடிப்பது எவ்வாறு அவரால் சாத்தியமாகிறது? இது நன்றி மறுப்பல்லவா? நன்றிமறுப்பிற்கப்பால தற்கொலைக்குச் சமனானது இல்லையா?" "இலங்கையை விடவும் இந்தியாவே எமது தனிநாட்டினை எதிர்க்கும் என்பது எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் ஐம்பத்தைந்து மில்லியன் தமிழர்களை மனதில் வைத்தே இந்தியா எமது தனிநாட்டுக் கனவினை அழிக்க முனையும்" என்று அவர் பதிலளித்தார். "அப்படியானால் எதற்காக இந்தியாவின் உதவியினை இவர் ஏற்றுக்கொள்கிறார்? "நாம் இப்போது சிறிய அமைப்பாக இருக்கிறோம், நாம் வளர்வதற்கு இந்தியாவின் ஆதரவு எமக்குத் தேவை". பேட்டியின் பிரதான பகுதியில் இச்சம்பாசணை வெளிவராத போதிலும், பிரபாகரனின் தீர்க்கதரிசனம் குறித்து அனீட்ட கொண்டிருந்த பார்வை அவரது புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. தனது இறுதிக் கேள்வியில், "உங்களின் ஈழத்தினை அடைவதற்கு எத்தனை வருடங்கள் ஆகலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். "ஒரு விடுதலைப் போராட்டம் எவ்வாறு வென்றெடுக்கப்படும் என்பது புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் திட்டமோ அல்லது கால அவகாசம் கொண்ட செயற்பாடோ கிடையாது. எமது தாயகத்திலும் சர்வதேசத்தில் நடக்கு சம்பவங்களை அடிப்படையாக வைத்தே அது தீர்மானிக்கப்படும்" என்று அவர் அன்று கூறியிருந்தபோதும், அது எவ்வளவு உண்மையானது என்பதனை இன்று போராட்டம் இருக்கும் நிலை உண்மையென்று உறுதிப்படுத்தியிருக்கின்றது. "தேசியப் பற்றுக்கொண்ட ஒரு பலமான இராணுவத்தினால் தனிநாடான ஈழம் உருவாக்கப்பட்டு, அதன் மக்களும், சொத்துக்களும் பாதுக்காக்கப்படும் நிலை உருவாகும் வரையில் தமிழ் மக்கள் இங்கு பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழமுடியாது" என்று பிரபாகரன் அன்று தீர்க்கதரிசனத்துடன் கூறியிருந்தார். "தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல்த் தீர்வொன்றினை வழங்குவதற்கு ஜெயவர்த்தனா ஒருபோதுமே விரும்பாதபோது, அவர் கண்துடைப்பிற்காக 1984 ஆம் ஆண்டில் நடத்திவந்த சர்வகட்சி மாநாடு ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை" என்று பிரபாகரன் எதிர்வுகூறியிருந்தார். "பல தசாப்த்தங்களாக நாம் கண்டுகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே எமது பார்வை அமைந்திருக்கிறது" என்று கூறிய பிரபாகரன் "சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் அவலங்களைத் தீர்க்கும் நேர்மையான செயற்பாடுகள எதனையும் மேற்கொள்ளவில்லை. இப்போது நடக்கும் பேரம்பேசல்களும் இதே முடிவினையே அடையும். அனைத்துச் சிங்களக் கட்சிகளும், பெளத்த அமைப்புக்களும் அதிகாரம் கொண்ட பிராந்தியங்களைத் தமிழர்களுக்கு வழங்குவதையே முற்றாக எதிர்க்கின்றன. சிறிய அதிகாரப் பகிர்வினைக்கூட அவர்கள் வழங்கத் தயாராக இல்லை. ஆகவே, தமிழருக்கு எதுவித தீர்வும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளால் கிடைக்கப்போவதில்லை" என்று அன்று அவர் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை? "சிங்கள இனவாத அரசுகள் இந்தியாவின் உதவியைக் கொண்டு தமிழருக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்கும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை" என்று பிரபாகரன் கூறினார். "தமிழர்களை சிறிது சிறிதாகப் பலவீனப்படுத்தி, ஈற்றில் முற்றாக அழித்துவிடவே பேச்சுவார்த்தை நாடகங்களை சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்" என்று அவர் அன்று எதிர்வு கூறியதை பிரேமதாசவும் சந்திரிக்காவும் பின்வந்த காலங்களில் உறுதிப்படுத்தினர். " தமிழருக்கான தீர்வு ஒன்றினை உருவாக்குவதில் இந்தியா வகிக்கக்கூடிய பாகம் எவ்வாறு இருக்க வேண்டும்?" என்று அனீட்டா பிரபகாரனிடம் வினவினார். மிகுந்த தீர்க்கதரிசனத்துடன் கேட்கப்பட்ட, பதிலளிக்கப்பட்ட இந்த விடயங்கள் குறித்து நான் இங்கு பகிர்கிறேன். கேள்வி : தமிழர்களுக்கு உதவ இந்தியா சரியாக எதனைச் செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பிரபாகரன் : எமது மக்களின் நியாயமான , நீதியான அபிலாஷைகளை இந்தியா புரிந்துகொண்டு, நாம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனக்குழுமம் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கேள்வி : " இராணுவ ரீதியிலான தலையீடு ஒன்று தேவைப்படும் என்று கருதுகிறீர்களா? பிரபாகரன் : எமது விடுதலையினை நாமே வென்றெடுக்கக் கூடிய துணிவும், உறுதியும், இலட்சிய வேட்கையும் எமக்குத் தாராளமாகவே இருக்கின்றன. நாம் போராடியே எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் அனுதாபமும், ஆதரவும் இருந்தாலே போதுமானது. ஆனால் இந்தியாவுக்கு வேறொரு திட்டம் இருந்தது. இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தனது செல்வாக்கு வட்டத்திற்குள் இலங்கையை வைத்திருக்க வேண்டும் என்று என்று அது விரும்பியது. அதனை அடைவதற்கு, ஈழத் தமிழர்களைப் பாவித்து இலங்கையரசாங்கத்தை தன்னிடம் மண்டியிட வைக்க அது முயன்றது. இன்றோ, தமிழர்கள் தொடர்பான அச்சத்தினை சிங்களவர்களிடையே உருவாக்குவதன் ஊடாக இலங்கையரசாங்கத்தை தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயல்கிறது. 1983 ஆண்டின் தமிழினக்கொலையினை ஜெயாரே திட்டமிட்டு, தமிழரை அழிக்க அதனைச் செய்தார் என்பதனை பிரபாகரன் உறுதியாக நம்பினார். ஆகவேதான், ஜெயவர்த்தன, தனது அமைச்சர்களினதும், சிங்கள இனவாதக் கழுகளினதும் சிறையில் அடைபட்டிருக்கிறார் என்று அனீட்டா கூறியபோது பிரபாகரன் அதனை முற்றாக நிராகரித்தார். அனீட்டா : ஜெயவர்த்தன தனது அமைச்சரவையில் இருக்கும் பலமான சிங்கள இனவாதக் கழுகுகளினதும், இன்னும் சில பலம் மிக்க அமைச்சர்களினதும் கைகளில் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்றோ அல்லது கடும்போக்குச் சிங்கள பெளத்த துறவிகளினதும் அழுத்தத்தினால் இப்படி நடந்துகொள்ளலாம் என்றோ நீங்கள் நினைக்கவில்லையா ? என்று கேட்டபோது, "ஜெயவர்த்தன தனது சுய விருப்பத்தினாலேயே இப்படி நடக்கிறார். அவரிடமே அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. இனவாதக் கழுகுகளும், பெளத்த துறவிகளும் அவருக்கு ஆதரவாக நிற்கின்றனர்" என்று பிரபாகரன் பதிலளித்தார். தான் ஒரு நேர்மையான, சமத்துவத்தினை ஆதரிக்கும் மனிதர் என்றும், கொடூரமான இனவாதிகள் மத்தியில் இருந்துகொண்டு நீதியானதைச் செய்ய எத்தனிக்கும் மகான் என்றும் நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் நம்பவைப்பதில் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்டவர்தான் சிறில் மத்தியூ எனும் கடும்போக்குச் சிங்கள இனவாதி. ஜெயவர்த்தன சிறில் மத்தியுவை பதவிநீக்கியபின்னர் அவர் முற்றாக மறைந்துபோனார். காமிணி திசாநாயக்கவும், லலித் அதுலத் முதலியும் கூட ஜெயார் விரும்பியதைச் செய்வதற்காகவே அவரால் பாவிக்கப்பட்டார்கள். ஜெயவர்த்தனவின் சூழ்ச்சிகளை பிரபாகரனைப் போலவே அனீட்டாவும் உணர்ந்துகொண்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு ஆவணி 5 ஆம் திகதி சென்னையிலிருந்து வெளிவந்த கல்கி இதழில் அவர் எழுதும்போது ஜெயவர்த்தனவுடனான தனது கலந்துரையாடல் ஒன்றுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். தமிழர்களுக்கான நீதியான தீர்வொன்றைக் காண்பதில் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், தமிழர்களுக்கான நீதியான தீர்வொன்றைக் காண்பதில் தான் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகக் கூறினார். "நான் அதிகபட்சமான தீர்வொன்றினை அவர்களுக்கு வழங்க முயல்கிறேன். ஆனால், அதனைச் செய்வது எனக்குக் கடிணமானதாகத் தெரிகிறது. ஏனென்றால் தமிழர்களுக்கு எதிரான அமைச்சர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்" என்று அவர் பதிலளித்தார். ஆனால் ஜெயார் கூறியதை தன்னால் நம்பமுடியவில்லை என்று எழுதும் அனீட்டா, "சினிமா நடிகர்கள் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் படங்களைத் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் மட்டும்தான் சினிமாவில் ஈடுபடாத அரசியல்வாதிகளால் மிகவும் திறமையாக நடிக்க முடிகிறது. ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் மிகத் திறமையான நடிகர். உலகிலேயே ஜெயவர்த்தனவைக் காட்டிலும் திறமையாக நடிக்கக் கூடிய அரசியல்வாதியொருவர் இருக்கிறார் என்பது சந்தேகம்தான். அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு ஒஸ்கார் விருது கூடக் கொடுக்கலாம்" என்று கூறுகிறார். சிங்களத் தலைவர்களின் சூட்சுமங்களையும், திட்டங்களையும் பிரபாகரன் நன்கு அறிந்தே வந்திருந்தார். அவர்களின் அத்திட்டங்களை முறியடிக்க தேசிய விடுதலை இராணுவமான தமிழீழ விடுதலைப் புலிகளை அவர் உருவாக்கினார். அவரது ஒப்பற்ற மகத்துவம் அங்கேயே ஆரம்பிக்கிறது. புனைபெயர்கள் 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே தமது விடுதலைக்கான போராட்டத்தின் முன்னணிப் போராளிகள் புலிகள்தான் என்பதை யாழ்ப்பாணத்து மக்கள் உணர ஆரம்பித்திருந்தனர். ஐந்து முக்கிய போராளி அமைப்புக்களுக்கு அவர்கள் வழங்கிய புனைபெயர்கள் இதனைத் தெளிவாக உணர்த்தியிருந்தன. அக்காலத்தில் பிரபலமாக இருந்த தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் பெயர்களை இவ்வமைப்புக்களுக்கு அவர்கள் சூட்டி அழைத்தனர். புலிகளுக்கு தமிழர்கள் வழங்கிய பெயர், "ஓயாத அலைகள்". இராணுவத்தினரையும், பொலீஸாரையும் இடையறாது தாக்கி, அவர்களை எப்போது அச்சத்தில் வைத்திருந்தமையினால் புலிகளுக்கு இந்தப் பெயரை தமிழர்கள் வழங்கினார்கள். புலிகளால் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் அதனூடாகப் பெறப்பட்ட வெற்றிகளும் யாழ்ப்பாணத்து தமிழர்களால் விரும்பி வரவேற்கப்பட்டன. தம்மை அடக்கி, ஆக்கிரமித்து நின்ற சிங்கள இராணுவத்தை திருப்பியடித்து, அகற்றிவிட வீரன் ஒருவனை தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பினை பிரபாகரன் பூர்த்தி செய்து வைத்தார். புலிகளைத் தவிர வேறு சில அமைப்புக்களும் தமிழர்களால் பேசப்பட்டன. அவ்வாறான அமைப்பொன்றுதான் டெலோ. அதற்கு அவர்கள் சூட்டிய பெயர் "தூறள் நின்றுபோச்சு" எப்போதாவது ஒரு தாக்குதலைச் செய்துவிட்டு நீண்டகாலம் ஓய்வெடுக்கும் காரணத்தினால் அவர்களை அப்படி ஏளனமாக அவர்கள் அழைத்தார்கள். புளொட் அமைப்பிற்கு "விடியும் வரை காத்திரு" என்று அவர்கள் பெயரிட்டார்கள். மார்க்சிய சிந்தனைகளால் உந்தப்பட்டு, சிங்கள இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்கள் புரட்சி வெடிக்கும்வரை அவர்கள் காத்திருந்தமையினால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு அவர்கள் இட்ட பெயர் "பயணங்கள் முடிவதில்லை". தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரே பாணியிலேயே தமது தாக்குதல்களை மேற்கொள்வதும், அவை தோல்வியில் முடிவடைவதும் அவர்கள் எப்போதாவது நடத்தும் தாக்குதல்களில் நடைபெற்று வந்தமையினால் அவ்வாறு அழைக்கப்பட்டார்கள். தமிழர் தாயகத்திற்கு வெளியே, கொழும்பு போன்ற இடங்களில் குண்டுத் தாக்குதல்களில் ஈரோஸ் அமைப்பு ஈடுபட்டு வந்தமையினால் அவர்களுக்கு "தூரத்து இடிமுழக்கம்" என்று பெயர் வழங்கப்பட்டது. தமது விருப்பத்தின்பால் போராளி அமைப்புக்களைப் பெயரிட்டு தமிழ் மக்கள் அழைத்தார்கள். பிரபாகரனைத் தமது வீரனாகவும், அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை தமது பிரியமான போராளிகளாகவும் அவர்கள் கண்டுகொண்டனர். தமது திட்டமிடல், தீர்மானம் எடுக்கும் ஆற்றல், தாக்குதல்களின் வீரியம் என்பவற்றினால் பிரபாகரனும் புலிகளும் மக்களின் மனங்களின் ஆளமாக பதிந்துபோனார்கள். அனீட்டா பிரபாகரனை பலமுறை பேட்டி கண்டிருந்தார். அப்படிச் செய்த ஒரேயொரு பத்திரிக்கையாளரும் அவர்தான். வேறு எவருக்கும் ஒருமுறைக்கு மேல் செவ்விகளை பிரபாகரன் வழங்கியதில்லை. 90 களின் இறுதிப் பகுதிகளில் பிரபாகரனைப் பேட்டிகண்டபோது, "இந்த இருபது வருட கால கெரில்லாப் போராட்டத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒற்றை விடயம் எது?" என்று கேட்டபோது "துணிபவனே வெற்றியடைகிறான்" என்று அவர் பதிலளித்தார். அவர் வெற்றி பெற்று வருகிறார் என்பதற்கான அடையாளங்கள் 1985 ஆம் ஆண்டிலேயே தென்படத் தொடங்கியிருந்தன. அந்த வருடத்திலேயே தமிழர்கள் தமது அபிலாஷைகள், தேசியம், தாயகம் , சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்கான வடிவத்தை கொடுக்க ஆரம்பித்தார்கள். 1985 இல், புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் சிங்கள இராணுவத்தை அவர்களின் முகாம்களுக்குள் தள்ளி, முடக்கி வைத்துக்கொண்டனர் !1 point- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
புடின் தேர்தலில் தோல்வியுற்றால், அவரின் நிலை என்னாகும்? யாரின் நிலையோடு ஒப்பிடலாம் அவரை? கிட்லர்.....? முசோலினி....? எதற்கும் ஒரு முடிவுண்டு. அது அவரின் அழிவோடுதான் தொடங்கும். இருபது ஆண்டுகளாக உலக மக்களின் மன அமைதியை அழித்து ரசித்தது போதாதா இவருக்கு?1 point- மகாவலி உட்பட 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சத வீதத்தால் குறைந்தது!
அவன் அவன் தான்.....சிலருக்கு இது பிடிக்காது அதற்காக உண்மையை மறைக்க முடியுமே ....வயல்வெளியில் கிணறு வெட்டி ...அந்த கிணற்றில் நல்ல தண்ணீர் வருவதற்காக கேணிகள் கட்டி மழை தண்ணீர் கேணிக்குள் ஒடி அது மண் மற்றும் கல் போன்ற வற்றினூடாக ஒடி வடிகட்டப்ப்பட்டு கிணற்றில் சேரும் ... இன்று கோவில்களில் உள்ள கேணிகளை மூடி விடுகின்றனர் அல்லது தீர்த்த மாட என நடுவில் சில சீமேந்து கட்டிடங்களை உருவாக்கின்றனர் ...1 point- மகாவலி உட்பட 73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 சத வீதத்தால் குறைந்தது!
இந்த செய்தியை வாசிக்கேக்கை யாழ்ப்பாணத்தானை நினைச்சு பெருமைப்படுறன்.புழகாங்கிதம் அடையுறன்.💪🏽 யாழ்ப்பாணத்தானுக்கு...... ஒரு நதியுமில்லை.... ஒரு ஆறுமில்லை... ஒரு குடிநீர் தேக்கமுமில்லை... உள்ள இடமெல்லால் உப்பு நீர் ஏரிகள்.... கிணறுகள் கூட உப்புத்தண்ணி கிணறுகள்... ஒழுங்கான மழைகூட இல்லை..... ஆனாலும்..... செல்வச்செழிப்பான மண் யாழ்ப்பாணத்து மண். தெய்வத்தின் கொடை அது.😍1 point- நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு!
இந்தியா ,மற்றும் சீனா நீதிபதிகளை பணி அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்... சிறிலங்காவில் பெளத்த பிக்குகளை நீதிபதிகளாக அமர்த்துவது பற்றி பரிசீலனை செய்யுங்கள்1 point- மயிலம்மா.
1 pointஉங்கள் எழுத்துகளின் ரசிகன் நான். என்னமோ தெரியவில்லை இந்த முறை ஆற அமர இருந்து முழுவதுமாக வாசிக்க முடியவில்லை😒. வெவ்வேறு மன உளைச்சல்கள் இருப்பதால் சந்தர்ப்பம் வரும் போது வாசித்து என் கருத்துக்களை சொல்கின்றேன்.1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
உண்மை ...இது ஊரில் மட்டுமல்ல பெரிய பெரிய சாம்ராஜ்யங்களை வீழ்த்தியவுடன் அவர்களின் வாரிசுகளை தேடி தேடி அழிப்பதன் காரணம் இந்த பழிவாங்கும் குணம் மனிதர்களிடையே இருப்பதால் தான்.... சிறுவர்களை கூடவிட்டு வைக்காமல் அழித்து விடுவார்கள் ....சிறுவர்கள் வளர்ந்து பழி தீர்ப்பார்கள் என்ற பயத்தினால்.. எதிர்த்து போரிட்ட மன்னர்களின் பரம்பரை இல்லாமல் போனது இதனால் தான்...சங்கிலியன்,ராஜராஜ சோழன் ...எமது போராட்ட வரலாற்றிலும் இது நடந்தது...1 point- வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.
ஊர்களில் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கினாலும்.... சம்பந்தப்பட்டவர்களுக்குள் பழிக்கு பழி எனும் இன்னொரு நடவடிக்கை என்று உள்ளது. அது 20,30 வருடங்கள் காத்திருந்தும் பழிக்குப்பழி நிறைவேற்றப்பட்டே தீரும்.1 point- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
லாட்டரி மார்ட்டினின் மருமகன், ஆதவ் அர்ஜூன், தொல். திருமாளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் போன மாதம் இணைந்திருந்தார். அவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளார் பதவி வழங்கப்பட்டதாகவும் செய்திகளில் இருந்தது.1 point- கோட்டாவை விரட்டியது சதியா? விதியா?
கோதாவை கமராவில் எடுத்தது போல இருக்கின்றது.....👍 இலங்கை டெயிலி மிரர் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தனர். ஒருவர் நூலகம் ஒன்றில் கோதாவின் இந்தப் புத்தகத்தை நகைச்சுவை புத்தகங்கள் என்ற பகுதியில் தேடிக் கொண்டிருப்பது போல....😀1 point- பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் யாழ். உதயகுமார்
பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் யாழ். உதயகுமார் பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா உதயகுமார். 34 வருடங்களாக முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்துடன் தனது 3 பிள்ளைகளும் தன்னுடன் இணைந்து தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், 34 வருட அனுபவத்தை பயன்படுத்தி பேரனின் முதலாவது பிறந்ததினத்திற்கு பரிசாக இந்த முச்சக்கரவண்டியை தயாரித்துள்ளதாகவும் பொன்னையா உதயகுமார் தெரிவித்துள்ளார். பேரனின் பெயரையும் பிறந்த திகதியையும் வைத்து இலக்கத்தகடினை உருவாக்கியுள்ளதாகவும் தான் எதிர்ப்பாராமல் தயாரித்த இந்த முச்சக்கரவண்டிக்கு தற்போது வெளிநாடுகளிலும் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முச்சக்கரவண்டி தற்போது சமூக ஊடகங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/2958681 point- தாயின்றி நாமில்லை.!
1 point- ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இவருக்கு உள்நாட்டில் எதிரிகளும் உயிருடன் இல்லை. வாரிசுகளும் இல்லை. அடுத்த கட்ட தலைவர்களும் இல்லை. இவர் போன பின், ரஷ்யா ஒரு அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கப் போகின்றது என்று நேற்று ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரையொன்று வந்திருந்தது.1 point- தாயின்றி நாமில்லை.!
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஇ இந்த லூசு கேள்வியை கேட்டே அங்கு அவங்கள் முன்னுக்கு வந்து விட்டாங்க .இனி ஒரே வழி லட்சுமியை கூப்பிடனும் ?........................😃1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்களம் முன்பு போல் வேகமாக வேலை செய்யுது இல்லை அண்ணா...........நீண்ட நேரம் எடுக்குது கருத்துக்களத்துக்குள் வர...............1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஈழத்தில் இனக்கலவர காலங்கள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழர்கள் சிங்கள பொது மக்களை தேடித்தேடி அழிக்கவில்லை. இயக்கங்களும் அதை செய்யவில்லை என நினைக்கின்றேன்.1 point- ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெருமாள், யாழில் வந்த செய்தி இது: அத்துடன், மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியுடனான திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர்வதற்காக மனைவியையும், அவரது தாயாரையும் கூலிப்படை வைத்து கொல்ல முயன்று, மனைவி மட்டும் உயிரிழந்த சம்பவமும் எம் சமூகத்துக்குள் 2022 இல் நிகழ்ந்தது. இப்படியான கொலைகள் எல்லா சமூகத்த்துக்குள்ளும் நிகழ்பவை. இதை இனம் சார்ந்த ஒரு செயலாக நிறம் தீட்ட முடியாது. ஆனாலும், இப்படியான விடயங்கள் தமிழ் சமூகத்துக்குள் நிகழும் போது, அதனை "தமிழர்கள் பயங்கரவாதிகள், எனவேதான் இப்படியான செயல்களை செய்கின்றனர்" என்று சிங்கள ஊடகங்கள், மற்றும் சமூகவலைத்தளத்தில் இயங்கும் சிங்கள தீவிர இனவாதிகள் எழுதியதையும், இனியும் எழுதுவார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் அந்த இனத்தால் தன்னுடன் இருக்கும் ஒரு இனத்தை இனப்படுகொலை செய்து விட்டு, எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இருக்க முடிகின்றது. என்னால் 2 மாதக் குழந்தையையும் படுகொலை செய்ததை, சிங்களவர்களுக்கு எதிராக எழுதுவதன் மூலம் எம் இனத்துக்கு சாதகமாக எழுதுகின்றேன் என்ற கோணத்தில் சிங்கள இனவெறியர்களைப் போல் எழுத முடியாது. அவ்வாறு எழுதினால் அந்த சிங்கள இனவெறியாளர்களுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஅனீட்டா பிரட்டாப் வெளையிட்ட இனக்கொலை பற்றிய அறிக்கை டெலிகிராப் பத்திரிக்கை அனீட்டா பிரடாப்பின் இனக்கொலை தொடர்பான செய்தியை முதற்பக்க செய்தியாக வெளியிட்டபோது இந்தியாவிலும், சர்வதேசத்திலும் அது கடுமையான அதிர்ச்சியலையினை ஏற்படுத்தியது. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை பாராளுமன்றத்தில் விவாதித்ததோடு, இந்தியா இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.இத்தாக்குதல்கள் தமிழர்களின் மீதும், அவர்களின் பொருளாதார தளத்தினை அழிக்கும் நோக்கத்திலும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் திட்டமிட்ட ரீதியிலும் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்பது சர்வதேசத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது. தான் கண்டுகொண்ட காட்சிகள் ஊடாகவும், அழிவுகள் தொடர்பாக தான் வரைந்துகொண்ட விபரங்களைத் தொகுத்தும், தாக்குதலுக்குள்ளான தமிழர்களின் வாக்குமூலங்களைக் கொண்டும் மிகவும் தத்ரூபமாக இனக்கொலையின் நிகழ்வுகளை அனீட்டா பதிவுசெய்திருந்தார். "வாக்ககளர் பட்டியலை ஆயுதமாகப் பாவித்து வெற்று லொறிகளில் வந்திறங்கிய காடையர்கள் தமிழர்களின் வீடுகளிலிருந்த பொருட்களை அந்த லொறிகளில் நிரப்பிக்கொண்டு சென்றனர். அவற்றுள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிகள், குளிர்சாதனப்பெட்டிகள், இசைக்கருவிகள், நகைகள், கடிகாரங்கள், உடைகள் உட்பட பல பொருட்கள் காணப்பட்டன. தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமல்லாமல், அவர்களிடம் எவ்வகையான பொருட்கள் இருந்தன என்பது குறித்தும் அவர்களிடம் தகவல்கள் இருந்தன" என்று அவர் எழுதுகிறார். பல இந்தியர்களூடாகவும் தனது செய்தியை அனீட்டா நகர்த்தியிருந்தார். "இந்திய உயர்ஸ்த்தானிகரான மோகன் சந்திரனின் மனவியான ஓமனாவும் அவர்களுள் ஒருவர். 1983 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதி தனது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் வீழ்ந்து நொறுங்கும் சத்தம் அவருக்குக் கேட்டது. நடப்பதை அறிந்துகொள்ள அவர் வீட்டின் முற்பகுதிக்குச் சென்றபோது பலர் வீட்டின் மூன்னால் குழுமி நின்று வீட்டின்மீது கற்களை எறிவது தெரிந்தது. அவர் பார்த்துக்கொண்டிருக்க கைகளில் இரும்புக் கம்பிகள், கோடரிகள், வாட்கள், பொல்லுகளுடன் அவர்கள் வீட்டினுள்ளே நுழைந்தார்கள். வீட்டை விட்டு வெளியேறுமாறு அவரை நோக்கிக் கூச்சலிட்ட அந்தக் கும்பல் தாம் கொண்டுவந்த ஆயுதங்களால் வீட்டிலிருந்த தளபாடங்களை அடித்தி நொறுக்க ஆரம்பித்தது. ஒரு கையில் தனது ஐந்துமாதக் குழந்தையினையும், மறுகையில் அழுதுகொண்டிருக்கும் தனது ஐந்து வயது மகளையும் இழுத்துக்கொண்டு ஓமனா அருகிலிருக்கும் வீட்டிற்குள் அடைக்கலம் தேடி ஒளிந்துகொண்டார். அவர்களும் சிங்களவர்கள்தான், ஆனாலும் அவர் உள்ளேவர அவர்கள் ஒத்துக்கொண்டார்கள்" என்று அனீட்டா எழுதுகிறார். மோகன் சந்திரன் தம்பதிகளின் உடமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. "எங்களிடம் தற்போது எதுவுமே இல்லை, பிச்சைக்காரர்களாகிவிட்டோம்" என்று ஓமனா அனீட்டாவிடம் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட இன்னொரு இந்தியரூடாக மேலும் பல அவலங்களை அவர் வெளிக்கொணர்ந்தார். திரிலோக் சிங் தம்பதிகள் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றின் முதலாவது மாடியில் வசித்து வந்தார்கள். அவர்களது வீட்டிற்குக் கீழே வசித்த 60 வயதுடைய தமிழ்ப்பெண் ஒருவரின் வீட்டினை உடைத்துக்கொண்டு ஒரு கும்பல் உள்நுழைவதை அவர் கண்டார். அக்கும்பலால் அவர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதோடு அவரது உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அருகிலிருந்த தமிழரின் வீடொன்றிற்குள் சென்ற அக்கும்பல் அங்கிருந்த ஆண் ஒருவரின் கையை வாட்களால் வெட்டி வீழ்த்தியது. திரிலோக் தம்பதிகள் வீதிக்கு இறங்கி ஓடத் தொடங்கும்போது ஒரு தமிழ்க் குடும்பமும் அவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. தமது ஏழு வயது மகனை திரிலோக்கின் கைகளில் எறிந்துவிட்டு அத்தமிழ்த் தம்பதி தொடர்ந்து ஓடத் தொடங்கியது. இந்தியர்களின் மகனென்று அச்சிறுவனை சிங்களவர்கள் உயிருடன் விட்டுவிடலாம் என்று அவர்கள் நம்பியிருக்கலாம். அச்சிறுவனின் தமிழ்ப் பெற்றோர்கள் அன்று கொல்லப்பட திரிலோக் தம்பதிகளே அவனைப் பராமரிக்கத் தொடங்கினார்கள். தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருந்த முகாம் ஒன்றிற்கு அனீட்டா சென்றவேளை அங்கு அவர் கண்ட காட்சி அவரை மனம் நெகிழச் செய்திருந்தது. "நான் பல பெற்றோர்களை அங்கே கண்டேன். பணம் படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர்கள், ஏழைகள் என்று அனைவருமே ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். படுகொலைகள் தலைவிரித்தாடியபோது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவேளை தாம் தவறவிட்ட தமது குழந்தைகளை எண்ணி அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அவ்வாறே இன்னுமொரு முகாமில் பெற்றோர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது கொண்டிருக்கும் குழந்தைகளையும் நான் கண்டேன்" என்று அவர் எழுதுகிறார். அகதி முகாம்களில் காணப்பட்ட மிகவும் அசெளகரியமான சூழ்நிலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, "அங்கிருந்த நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாக இருந்தன. ஐந்து நாட்களாக உணவின்றி அம்மக்கள் அவஸ்த்தைப்பட்டார்கள். ஆறாவது நாள் வெறும் 30 உணவுப் பொட்டலங்களை யாரோ கொண்டுவந்து கொடுத்தார்கள், ஆனால் முகாமிலிருந்தவர்களோ ஏறக்குறைய 1,000 பேர். முகாமின் சுகாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருந்தது. அங்கு நீர் வசதிகள் இருக்கவில்லை, ஆகவே மலசல கூடங்கள் பூட்டப்பட்டிருந்தன. அம்முகாமின் இன்னொரு மூலைக்குச் சென்று மலங்கழிக்கவும், சிறுநீர் கழிக்கவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு சில நாட்களிலேயே அம்முகாம் எங்கும் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அன்றிருந்த வெப்பமான காலநிலை முகாமினை கிருமிகள் உற்பத்திசெய்யும் நிலையமாக மாற்றிவிட்டிருந்தது. அம்முகாமெங்கும் இருந்த மலக்கழிவுகளில் உயிர்வாழ்ந்த சாதாரண வீட்டு இலையான்கள் பருத்துப் போய் பல்வேறு நிறங்களில் வலம்வந்துகொண்டிருந்தன. நோய்கள் பரவத் தொடங்க, பல அகதிகள் வாந்திபேதியினாலும், வயிற்றுப்போக்கினாலும் அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தனர். ஏற்கனவே பரவிவந்த துர்நாற்றத்துடன் இவையும் கலந்துகொள்ள அப்பகுதி வசிப்பதற்கே மிகவும் கடிணமான இடமாக மாறிவிட்டிருந்தது. காய்ச்சலால் இரத்தச் சிவப்பாகிவிட்ட கண்கள், தண்ணீரின்மையினால் வெடித்துப்போயிருந்த உதடுகள், வயிற்றோட்டத்தால் எரிந்துகொண்டிருந்த பின்புறங்கள் என்று அம்மக்கள் நரக வாழ்வினை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்". அனீட்டா பிரட்டாப். அகதிகளாக்கப்பட்ட தமிழர்களின் அவலங்களைத் தனது அறிக்கையில் சேர்த்ததன் மூலம் அவ்வறிக்கையினை சோகம் நிறைந்ததாக மாற்றியிருந்தார். அவ்வகையான மூன்று அகதிகளின் கதைகள் பகிரப்பட்டிருந்தவற்றில் முக்கியமானவையாகத் தெரிந்தன. சச்சிதானந்தன் எனும் வயோதிபர் வாழ்ந்துவந்த தொடர்மாடி வீட்டினுள் நுழைந்த சிங்களவர்கள் அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையிட்ட பின்னர் வீட்டிற்குத் தீமூட்டினர். தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிங்களவன் அவ்வயோதிபரைப் பிடித்து இழுத்துவந்து கைகளைப் பின்னால்க் கட்டினான். இன்னும் மூன்று சிங்களவர்கள அவரது மகனையும் இழுத்துவந்து பின்னால் கைகளைக் கட்டி இருத்தினார்கள். தமது வீட்டின் விறாந்தையில் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டார்கள். பின்னர் கீழே எரிந்து கொண்டிருந்த மொறிஸ் மைனர் காரின் மீது மகனை உயிருடன் தூக்கி வீசியது அச்சிங்களக் கூட்டம். மகன் எரிந்து கருகுமட்டும் தகப்பனாரை அதனைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள் மீதிச் சிங்களவர்கள். இன்னொரு தமிழரான சிவானந்தன் நான்கு மாடிகளைக் கொண்ட குடியிருப்பில் இருந்து கீழே பாய்ந்து உயிர் தப்ப முனைந்தார். கீழே வீழ்ந்தபோது அவரது கால்கள் இரண்டும் நொறுங்கிப்போக, நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை கொழும்பு பிரதான வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றபோது இன்னும் பல தமிழர்களை வைத்தியசாலையில் பணிபுரிந்த சிங்களவர்கள் அவமதித்துத் திருப்பியனுப்பியது போன்று அவரையும் திருப்பியனுப்பினார்கள். மேர்சி மொறாயஸ் 29 வயது நிரம்பிய சட்டக்கல்லூரி மாணவி. அகதி முகாம்களின் ஒன்றின் நிர்வாகத்தை அவரே கவனித்து வந்தார். நீண்டநேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரது கணவரான மொறாயஸ் குறித்து அனீட்டா வினவினார். இதைக் கேட்டதும் மேர்சி அழத் தொடங்கினார், "எனக்குத் தெரியாது, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்" என்று அவர் தேம்பியபடியே கூறினார். அனீட்டாவின் அறிக்கையினை படித்த ஒவ்வொரு தமிழரும் அவருக்கென்று ஒரு இடத்தை அவர்களின் மனங்களில் அமைத்தார்கள். அதற்கு நன்றிக்கடனாகவே தனது முதலாவது நேர்காணலுக்கான அனுமதியினை பிரபாகரன் அனீட்டாவிற்கு வழங்கினார்.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........ 08. மயிலம்மாவை அவள் வைத்தியின் செத்தவீட்டில் பார்த்திருக்கிறாள்.ஆனால் அதிகம் பேசிப் பழக்கமில்லை. அன்று அவரின் மகன்களும் மகளும் வைத்தியின் செத்தவீட்டுக்கு வந்த இந்தப் பெண்ணை அவரது உடலைப் பார்க்க விடாமல் தடுத்து " நீ இங்கு வரக்கூடாது, அப்பாவைப் பார்க்க விடமாட்டோம் வெளியே போடி" என்று முக்கியமாக அவர்களின் இரண்டாவது மகன் யோகிபாபு விரட்டியபோது அவர்களின் தாயார்காரி அவர்களைத் தடுத்து தன் பிள்ளைகளைப் பேசி மல்லுக் கட்டிக்கொண்டிருக்க மயிலம்மாவும் அவள் அருகில் நின்று தம்பிகள் நீங்கள் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாது.இது உங்கட வீட்டுக் காரியம்.அப்பாவை அமைதியாய் நிம்மதியாக அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் அம்மா சொல்வதைக் கேளுங்கோ. அவள் ஒரு ஓரமாய் நின்று பார்த்திட்டுப் போகட்டும். அங்க ஐயரும் காத்துக் கொண்டிருக்கிறார்.போய் ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்கோ என்று விலக்குப் பிடித்து விட்டவள்.அதன் பின் மூத்தவன் ரவிராஜ்யும் தங்கை மீனாவும் சென்று காரியங்களைக் கவனிக்க அது நல்லபடியாய் நடந்து முடிந்தது. சடங்குகள் முடிந்து சவம் வேலியைப் பிய்த்துக் கொண்டு வீதியால் போகும்வரை அந்தப் பெண் மயிலம்மா பக்கத்திலேயே நிக்கிறாள்.மயிலம்மாவும் அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே நீ ஒன்றுக்கும் பயப்பிடாத நான் இருக்கிறன் என்று அவளுக்குத் தைரியம் தருகிறாள். அதுதான் அந்தப் பெண் இந்த நினைவுகள் மனதில் நிழலாட அவளைக் கண்டதும் முன்வந்து வாங்கக்கா என்ன விசயம் என்று சொல்லி அன்று நீங்கள் மட்டும் அந்தப் பிள்ளைகளை சமாளித்திருக்காது விட்டால் பெரிய களேபரமாய் போயிருக்கும். அதிலும் அவன் சின்னவன் யோகிபாபுவின் ஆவேசத்தை நினைக்க இப்பவும் ஈரக்குலை நடுங்குது. என்று சொல்லி அவளின் கையைப் பிடித்து அழைத்துப் போகிறாள்.அங்கு விறகு வெட்டிக்கொண்டிருந்த வேலையாளிடம் "அண்ணை ரெண்டு இளநி சீவிக்கொண்டு வாங்கோ" என்று சொல்லிவிட்டு வாமனைப் பார்த்து எங்க உன்னோடு கூட ஒரு பையன் வருவானே காணேல்ல .....உங்களுக்கு என்னெண்டு தெரியும் என்று வாமு கேட்கிறான்.அதுவா நான் இந்தத் திண்ணையில் இருந்து வெளி உலகத்தைப் பார்க்கிறேன்.அப்போதுதான் நீங்கள் இருவரும் அடிக்கடி இந்த வீதியால் போய் வருவதைக் கண்டிருக்கிறேன்.இப்ப சில நாட்களாய் நீ தனியாகப் போய் வருகிறாய். அன்று மாங்காய்க்கு கல் எறிந்ததும் அந்தப் பையன்தானே என்று சொல்லிவிட்டு உன் பெயர் என்ன என்று கேட்க, மயிலம்மா குறுக்கிட்டு இவன் பெயர் வாமன். அந்தப் பையன் என் மகன் சுந்தேரேசன்.அவன் மேற்படிப்புக்காக கண்டிக்குப் போயிருக்கிறான். பல்கலைக்கழகத்துக்கா .......ஓம்.......சிறிது யோசித்தவள் ....ம்....என்று ஒரு பெருமூச்சு விட்டுட்டு அது நல்லது.இந்தக் கிராமத்தில் இருந்து மேற்படிப்புக்கு போகும் பிள்ளைகள் மிகக் குறைவு.அவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும்.அப்போதுதான் மற்றப் பிள்ளைகளுக்கும் படிக்க ஊக்கம் வரும். பின் தனக்குள் நினைக்கிறாள் இவர் மட்டும் வலுக்கட்டாயமாய் தன்னை இங்கு கூட்டி வந்திருக்காது விட்டால் இந்நேரம் நானும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர் தன்ர பவிசுக்காக எல்லோரும் பார்த்திருக்க என்னை இழுத்துக் கொண்டு வந்திட்டார் .எனக்கு இங்கு வாழ்க்கை வசதி எல்லாம் இருக்கு ஆனால் எதுவுமே இல்லாத வெறுமை எனக்குத்தான் தெரியும். "நலமடித்தஎருதுபோல் அவர் இருக்க நீரில்லாத கொடியாக நான் வாடுகிறேன். ....ம் .....எல்லாம் என் விதி என்று தன்னை நொந்து கொள்கிறாள். சரி......சரி....நானே கதைத்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லுங்கோ என்ன விசயம் வந்தது என்று கேட்க மயிலம்மாவும் என் மக்களுக்கு ஒரு சம்பந்தம் கை கூடி வந்திருக்கு. நான் ஒரு ஆறுமாதமாவது பொறுத்து செய்யலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் அவசரப் படுத்தினம். அதனால அவசரமாய் கொஞ்சப் பணம் தேவைப்படுது. அதுதான் இப்ப என்னிடம் காணிப் பத்திரமும் கொஞ்ச நகைகளும் இருக்கு, அதுகூட பிள்ளையின் கல்யாணத்துக்கு சேர்த்து வைத்த நகைகள்தான். இப்ப அவசரத்துக்கு அதையும் கொண்டு வந்திருக்கிறன்.இதை வைத்துக் கொண்டு நீங்கள்தான் பணம் தர வேண்டும் என்று கேட்கிறாள். கடவுளே: என்னங்க நீங்க இந்த வேலைகள் எல்லாம் அவர்தான் பார்த்தவர். நான் இதொன்றும் செய்யிறேல்ல. ஏன் உங்களுக்கு அவற்ர சம்சாரம் பழக்கம்தானே அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே. அவ நல்ல பழக்கம்தான். அதுதான் அவாவிடம் கேட்க கூச்சமாய் இருக்குது.....அப்ப வாமு குறுக்கிட்டு அங்கு வட்டியும் அதிகம் என்று நினைக்கிறம். இதென்ன கூத்தா இருக்கு.இவர் வாங்கும் வட்டியை விட அவ குறைவாத்தான் எடுக்கிறவ. இவரிடம் வந்தவர்களில் பத்துக்கு இரண்டு பேர்தான் தப்பிப் போவார்கள்.மற்றவர்கள் எல்லாவற்றையும் இழந்து தெருவிலே நின்று தூற்றிவிட்டுப் போவதை நான் நேரிலே பார்த்திருக்கிறேன். நல்ல காலம் இவர் இப்ப இல்லை.இருந்திருந்தால் நீங்கள் உடும்பிடம் தப்பி முதலை வாயில் விழுந்ததுபோல் ஆகியிருக்கும். ஏன் ஊருக்கே தெரியும் உங்களுக்கு சொன்னால் என்ன நானே எங்கப்பா வாங்கிய கடனுக்கு வட்டியாய் வந்தவள்தானே. அதுதான் எனக்கு அந்த வலி தெரியும். மயிலம்மாவும் சரி அப்படியென்றால் இனி வேறு இடம்தான் போகவேணும்போல இருக்கு. சரி பிள்ளை நாங்கள் போட்டு வாறம் என்று கிளம்ப அங்கு இளநியுடன் வேலையாள் வருகிறான்.நில்லுங்க அக்கா நல்ல வெய்யுலுக்க வந்திருக்கிறீங்கள். கொஞ்சம் இளநி குடியுங்கள் இதமாய் இருக்கும். மயிலம்மா சிறிது தயங்குகிறாள். பரவாயில்லை அக்கா குடியுங்கள் என்கிறாள்.வாமுவும் நிலைமையை சுமுகமாக்க நினைத்து உங்கட பெயர் என்ன என்று கேட்க்கிறான். என் பெயர் அஞ்சலா.....ம்.....நல்ல பெயர் பின் மா மரத்தைப் பார்த்து என்ன அஞ்சலா எல்லாம் பிஞ்சுகளாய் விழுந்து கிடக்கு.....ஓம் ....மழைக்கும் காத்துக்கும் கொட்டுண்டு கிடக்கு. அதற்கு மேலால் தொலைபேசி வயர் வீதியில் இருந்து வீட்டுக்கு போகின்றது.....நீங்களும் உங்களுக்குத் தேவையானதை பறித்துக் கொண்டு போகலாமே.....உங்கட வீட்டுக்கு பின்னால் பெரிய தோட்டம் இருக்கு போல மயிலம்மா இளநி குடித்துக் கொண்டே வினவ, ஓம் அக்கா எனக்குத் தோட்டம் செய்ய மிகவும் பிடிக்கும்.அதனால்தான் இந்த வீடு வளவு தோட்டம் வயல் எல்லாம் நான் அடம்பிடிக்க எனக்கென்றே எழுதித் தந்து விட்டார்.வாருங்கள் தோட்டம் பார்க்கலாம் என்று கதைத்துக் கொண்டு பின்னால் போகிறார்கள். அப்படிச் செல்லும்போது மயிலம்மாவும் தங்களுக்கு எதிர்பாராமல் மகன் சுந்தரேசனுக்கு பல்கலைக்கழகம் வரும்படி கடிதம் வர என்னிடம் கையில் பணமில்லை அப்போது வாமன்தான் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை நண்பனுக்கு குடுத்து உதவி அனுப்பி வைத்தவன். அது ஒருவழியாக முடிஞ்சுது என்று இருக்க, முந்தாநாள் சம்பந்தி வீட்டார் வந்து வாறமாதம் அவைகளின்ர மகனுக்கும் என்ர மகள் பூவனத்துக்கும் கலியாணம் செய்து வைக்கவேணும் என்று பிடிவாதமாய் நிக்கினம். மாப்பிள்ளையும் நல்ல பிள்ளை அதனால் எனக்கு இந்த சம்பந்தத்தை விட விருப்பமில்லை. அவர்களிலும் பிழையில்லை.காரணம் பொடியனின் பேத்தியும் வருத்தமாய் இருக்கின்றா,தான் சாகமுதல் அவற்ர கலியாணத்தைப் பார்க்க விரும்புகிறா. அதுதான் எனக்கு திடீரென்று பணத்தட்டுப்பாடு வந்தது.இல்லையென்றால் இன்னும் ஒரு மூன்று மாதம் பொறுத்து நெல்வயல் அறுவடை செய்து இந்தப் பிரச்சினைகளை சமாளித்திருப்பேன் என்கிறாள்.இப்படிப் போகும்போது மயிலம்மா நகைகள் இருந்த சுருக்குப் பையை தன் இடுப்பில் சொருகி வைத்துக் கொண்டு காணி உறுதிப் பாத்திரங்கள் இருக்கும் பையை கையில் கொண்டு வருகிறாள். வெய்யிலில் முகம் கழுத்தெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இடைக்கிடை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். அஞ்சலையும் கூட நடக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டே வருகிறாள்.அப்போது அவர்களின் இக்கட்டான நிலைமை அவளுக்குப் புரிகின்றது. ஒருகனம் தனது பெற்றோரின் நிலைமை கண்முன் வந்து போகின்றது.........! 🦚 மயில் ஆடட்டும்........ 08.1 point- மயிலம்மா.
1 pointமயிலிறகு........07. மயூரியும் வாமனும் தனித்து இருக்கிறார்கள்.அப்போது அவனிடம் மயூரி அப்பன் இப்ப கொஞ்சப் பணம் அவசரமாய்ப் புரட்ட வேணும். என்னிடம் கொஞ்ச நகைகள் இருக்கு. பின்னுக்கு இருக்கும் பத்து ஏக்கர் காணியில் ஐந்து ஏக்கர் காணியை எங்காவது ஈடு வைத்து பணம் புரட்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்கிறாய். கொஞ்சம் என்றால் எவ்வளவு தேவைப்படும் உத்தேசமாய் என்று வாமன் கேட்கிறான். எனக்கும் வடிவா சொல்லாத தெரியேல்ல, கல்யாண வீட்டு செலவுகள் உடுப்புகள் நகைகள் என்று, பின் நாலாம் சடங்குக்கு மச்சம் மாமிசம் சமைச்சுக்க குடுக்க வேணும். ஏன் அவையள் கலியானச் செலவில பாதி தரமாட்டினமோ......நான் ஒன்றும் அதுபற்றிக் கேட்கேல்ல.....வாறகிழமை அவையள் வருவினம் அப்ப நீயும் வா இதுபற்றிக் கதைப்பம். அண்ணனும் (கனகத்தின்ர புருசன்) இது போன்ற காரியங்களில் நியாயமாய் கதைக்கக் கூடியவர். எப்படியெண்டாலும் நாங்களும் கையில காசு வைத்திருக்க வேணுமெல்லோ. ஒரு ஐம்பது அறுபதாயிரம் எண்டாலும் கொஞ்சம் சமாளிக்கலாம் பின் மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து ம்கூம் பத்தாது இப்ப சாமான் சட்டுகள் எல்லாம் விலை கூடிப்போச்சு....கோயிலில் வைத்து தாலி கட்டினாலும்கூட ஒரு லட்சமாவது தேவைப்படும். வாமுவும் யோசித்தபடி ஓம் என்று தலையாட்டுகிறான். அப்பன்.....நீ உந்த விதானையோட எல்லாம் நாலு இடத்துக்கும் போய்வாறனிதானே உனக்கு யாரையும் தெரியுமோ என்று கேட்கிறாள். ஏன் மயூரம்மா உங்களுக்கு அந்த "வட்டி வைத்தி"யின் பொஞ்சாதி நல்ல பழக்கம்தானே, அங்கு கேட்டுப்பார்த்தால் என்ன......நானும் அதை யோசித்தனான்.அவ நல்ல பழக்கம்தான் ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நான் ஒருநாளும் அவையலிட்டை போய் நின்றதில்லை. அதோட அவையும் அறா வட்டி வாங்குவினம். வட்டி வைத்தியும் செத்துட்டாரெல்லோ அது உங்களுக்குத் தெரியுமோ......ஓம்.....நான் செத்த வீட்டுக்கும் போனானான். கொஞ்ச சனம்தான் அவற்ர சா வீட்டுக்கும் வந்தது. உந்தக் கொடுக்கல் வாங்கலால கனபேர் வரவில்லை. ஒரு மனிதனின் செத்த வீட்டில்தான் தெரியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அது கிடக்கட்டும். எங்களுக்கு குறைந்த வட்டியில் யாரும் தருவினமாய் இருந்தால் நல்லதுதானே. சரி.....நாளைக்கு மதியத்துக்கு மேல் நீங்கள் தயாராய் இருங்கோ ஒரு இடத்துக்குப் போய் கேட்டுப் பார்ப்பம். சரிவந்தால் நல்லது, இல்லையென்றால் மேற்கொண்டு விதானையாரிடம் விசாரிக்கலாம். நான்போட்டு நாளைக்கு வாறன் .....! அடுத்தநாள் வாமு சொன்னபடியே இரண்டுமணிபோல் மயூரியின் வீட்டுக்கு வருகிறான். மயிலம்மாவும் இருப்பதில் நல்லா சேலை சட்டை அணிந்து தயாராக வருகிறாள்.அவள் முன் பாரில் அமர்ந்து கொள்ள வாமன் சைக்கிளை நேராக வைத்தியின் வீட்டுக்கு கொண்டுவந்து மதில் அருகில் நிறுத்தி இருவரும் இறங்குகிறார்கள். அவன் அந்த கேட்வழியே உள்ளே பார்க்க நேற்று பெய்த மழையில் மா மரத்தில் இருந்து நிறைய பூக்களும், பிஞ்சுகளும் கொட்டுண்டு தரை முழுதும் பரவிக் கிடக்கிறது. திண்ணையில் வைத்தியின் மோட்டார் சைக்கிள் நிக்க அதன் அருகில் ஒரு நாய் படுத்திருக்கு. வேற்று மனிதரைக் கண்ட அசுமாத்தத்தில் அது அதிக ஆக்ரோஷமில்லாமல் வீட்டுக்காரரை அழைப்பதுபோல் குரைக்கின்றது. கேட்டை திறக்கப்போன வாமன் கொஞ்சம் தயங்கி நிக்க, நாயின் குரைப்புச் சத்தம் கேட்டு வைத்தியின் இரண்டாம் தாரமாய் இருக்கும் அந்த இளம்பெண் "யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியே வருகிறாள். வாமனைக் கண்டதும் ஓ.....நீயா உள்ளேவா, இனி நீ கல்லெறிந்து மாங்காய் அடிக்கத் தேவையில்லை நானே பறித்துத் தருகிறேன் என்கிறாள். அவன் நாயைப் பார்க்க அது ஒன்றும் செய்யாது, பயப்பிடாமல் வா என்று சொல்ல வாமனும் கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறான். அதுவரை மதில் அருகில் நின்ற மயிலம்மாவும் அவன் பின்னால் வருகிறாள். அப்போதுதான் அவளைக் கண்ட அந்தப் பெண் திண்ணையை விட்டு இறங்கி வந்து வாங்கோ வாங்கோ என்று வரவேற்கிறாள்.மாலை நேரத்துக்கு முன்னான சூரியன் வைரம்போல் ஒளிர்ந்து தகிக்கின்றது. அப்போதுதான் தலைக்கு தோய்ந்து விட்டு வந்திருப்பாள் போல. தலைமுடியின் ஈரம் போக ஒரு துணியையும் அதோடு சேர்த்து முறுக்கி கொண்டை போட்டிருந்தாள். தலையின் ஈரம் தோள்களில் விழுந்து சற்று நின்று கழுத்தால் வடிகின்றது. குரைக்கிற நாயைப் பார்த்து திரும்பி நின்று ஜிம்மி சும்மா இரு என்று அதட்ட அது வெளியே போகின்றது. நீல நிறத்தில் நைலான் சாறியும் அதுக்குத் தோதாய் கருப்பு பிளவுசும் அணிந்திருக்கிறாள். அந்த ப்ளவுஸ் முதுகில் அரை வட்டமடித்து தோள்களில் இருந்து இடைவரை தசைகளின் திரட்சியை எடுப்பாக காண்பிக்குமாப் போல் இறுக்கமாய் இருக்கின்றது. பின் திரும்பி இவர்களை பார்க்கிறாள். அவள் முகத்துக்கு நேரே சூரியன். மார்பில் இருந்து முத்து முத்தாய் உருளும் நீர்த் திவலைகளுக்குள் ஆயிரம் சூரியன்கள். அவைகள் ஒவ்வொன்றாய் மார்புக்கும் அந்த கருப்பு ப்ளவுசுக்கும் நடுவில் இருக்கும் கருங்குழியால் ஈர்க்கப்பட்டு நகர்ந்து மறைகின்றன...........! 🦚 மயில் ஆடும்..........! 07.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
- என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.