Leaderboard
-
kandiah Thillaivinayagalingam
கருத்துக்கள உறவுகள்12Points1487Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்11Points46790Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்11Points3061Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்11Points19129Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/31/24 in all areas
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
Dangar Island - தனிமை விரும்பிகளுக்கு மட்டும்… கொஞ்ச காலமாகவே ஒன்றிலும் நாட்டம் ஏற்படவில்லை. வேலைகளும் அதிகம், எல்லாவற்றிலும் இருந்து சற்று விலகி அமைதியாக இருக்க மனம் விரும்பியது. இந்த தீவு பற்றி கேள்விப்பட்டு அங்கே போவதற்காக ஓரு அதிகாலையில் வெளிக்கிட்டு இந்த தீவிற்கு வந்தோம். இது ஒரு சிறிய தீவு.. சிட்னியின் ஆரவார இயந்திர வாழ்கையிலிருந்து சற்று விலகி இருக்கும் ஒரு தீவு. Hawkesbury ஆற்றில் அமைந்துள்ள இந்த தீவை நீங்கள் ஆகக் குறைந்தது 1 மணித்தியாலத்திற்குள் சுற்றிப் பார்த்துவிட முடியும். Hawkesbury ஆற்றின் அழகு!! இந்த தீவிலும், இந்த தீவிற்கு வரும் வழியிலும் கண்ணில் பட்டதை கருத்தை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நான் இருக்கும் இடத்திலிருந்து 1 3/4 மணித்தியால கார் ஓட்டத்தில் Brooklyn என்ற இடத்திற்கு வந்து பின் அங்கிருந்து படகில் இந்த தீவிற்கு போகவேண்டும். Brooklynற்கு போகும் வழியில் Mooney Mooney என்ற இடத்தில் காலை உணவிற்காக நின்ற பொழுது.. அங்கே இருந்த Lawn bowling கிளப்பில் சிறிது நேரம் பொழுதை கழித்தோம். வேலையில் இருந்து ஓய்வு எடுத்தபின் இந்த பௌலிங் விளையாட்டு உதவும் என்பதால் அதனை விளையாடிப் பார்த்த பொழுது.. பின் மதிய உணவை முடித்துக்கொண்டு Brooklyn படகுதுறைக்கு மதியம் இரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்தோம்.. படகு வந்ததும் கட்டனத்தை செலுத்திவிட்டுப் படகில் ஏறி, 10 நிமிடங்களில் Danger Island வந்தடைந்தோம்.. இந்த தீவில் வாகன வசதி இல்லை என்பதால் நடந்தே தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். அதிகளவு பொருள்கள் என்றால் முன்பே பதிவு செய்து community buggy( சிறிய வண்டி) பயன்படுத்தலாம் மற்றப்படி படகுதுறையில் வைத்திருக்கும் சிறிய தள்ளுவண்டியில்( wheelbarrow) பொருள்களை வைத்து இழுத்துக் கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரவேண்டும்.. இந்த தீவி்ல் முன்பு அதிகளவு அவுஸ்திரேலிய பூர்வீக குடிகள் இருந்தனர் ஆனால் பிரித்தானியர்களின் வருகையுடன் பூர்வீக குடிகள் இல்லாமல் ஆக்கப்பட்டனர். இப்பொழுது 300லும் குறைவானவர்களே இந்த தீவின் மொத்த சனத்தொகை.. இங்கே ஒரு bowling club, NSW தீயணைப்பு நிலையம் மற்றும் ஒரு உணவகமும் உள்ளது.. சிறுவர் பூங்கா உள்ளது. அதுமட்டுமல்ல பல அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்களும் உள்ளன. அவசரமில்லாமல் ஆறுதலாக இந்த தீவைச் சுற்றினால் நிறைய விடயங்களை காணலாம். தூய்மையான காற்றையும் சுவாசிக்கலாம். மேலும் இந்த தீவு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் இருந்து எத்தனையோ மடங்கு பின்தள்ளி உள்ளதால் பதின்ம வயதினருக்குப் பிடிக்காது ஏனெனில் அவர்களுக்கு ஏற்றவகையில் ஒன்றும் இல்லை. சிறுவர்கள் விரும்பி வரக்கூடும் ஏனெனில் எந்தவித தடைகள், வாகனங்கள் இன்றி வீதிகளில் ஓடி விளையாட முடியும். இந்த தீவில் ஒரு சிறிய கடற்கரை உள்ளது. விடுமுறையில் வருவோர் தங்க வசதியாக கடற்கரையைப் பார்த்தபடி ஒன்றிரண்டு தங்குமிடங்களும் உண்டு.. மிகவும் அமைதியான ஒரு தீவு.. தனிமையை விரும்புபவர்கள் இங்கே வந்து அமைதியாக மனிதர்களின் தொந்தரவின்றி நாளை/நேரத்தை கழிக்க முடியும். Berowra Waters வீடு திரும்பும் வழியில் Berowra Waters என்ற இடத்தினூடாக வரும் வழியில் அந்த இடத்தைப் பார்த்து எனக்குள் நினைத்தேன் “ அவுஸ்திரேலிய உண்மையில் அழகான ஒரு தீவு.. இயற்கையாகவே அதிகளவு மலைகளும் அதனால் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும் அதே சமயத்தில் இந்த மலைகளுடாக காரில் பயணிப்பதும் ஒரு மகிழ்ச்சியான உணர்வைத் தரும். அதுமட்டுமல்ல இயற்கையாகவே அழகிய கடற்கரைகளும் உள்ள ஒரு நாடு.. இதைப் போல மற்ற நாடுகளுக்கும் இருக்குமா என்பது சந்தேகமே” என்று.. வீடு திரும்பும் பொழுது யாழ் இணையத்தின் 26வது அகவைக்காக நன்றி - பிரபா8 points
-
எனது அறிமுகம்
5 pointsஎனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்5 points
-
"என் இறுதி சடங்கில்"
5 points"என் இறுதி சடங்கில்" "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாக கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரை கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]5 points
-
வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல
4 pointsநீங்கள் எப்போதாவது பசித்திருந்திருக்கிறீர்களா ஆம் பசித்திருத்தலின் கொடுமையை நான் அனுபவித்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது வெறுங் காலுடன் நடந்துள்ளீர்களா ஆம் பாதணிகள் இன்றி நான் பல நாட்கள் நடந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உடுத்த உடையின்றித் தவித்திருக்கிறீர்களா ஆம் நான் மாற்றுத் துணியின்றிப் பல நாட்கள் இருந்திருக்கிறேன் நீங்கள் எப்போதாவது உங்கள் வீடு பிரிந்ததுண்டா ஆம் அகதியாகிப் பலமுறை நான் அலைந்திருக்கிறேன் ஆம் வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல பல நேரம் சுமையாகிறது சில நேரம் சுகமாகிறது தியா - காண்டீபன்4 points
-
ஒரு ஈழ அகதியின் பெயரால்
4 pointsமுடி திருத்தகம் ஒன்றில் இன்று நான் அவளைச் சந்தித்தேன் அவள் அமெரிக்க நாட்டின் ஆப்கான் அகதி பல்கலை ஒன்றில் பட்டம் பயிலும் அவள் பகுதி நேரம் அங்கே பணி புரிகிறாளாம் இப் புனித மாதத்தில் தன் ஊரில் இல்லாமை பற்றி அதிவருத்தம் கொண்டாள் முன்னொரு நாளின் ரமலான் நோன்பில் தன் சுற்றம் கூடி உண்டது பற்றி அதிகம் அளவளாவினாள் அரை மணி நேரம் தான் முடி வெட்டி மீள்கையில் கூலிக்கும் மேல் ஒரு சிறு தொகை கொடுத்தேன் ஆம்… ஒரு ஈழ அகதியின் பெயரால் அவளின் இன்றைய நோன்பு துறக்கப்படட்டும் தியா - காண்டீபன்4 points
-
ஒரே மழை
3 pointsஇது என்ன மழையோ, இங்கு நான் இருக்கும் பாலை நிலத்தில் இப்படி பெய்து கொண்டேயிருக்கின்றது. இங்கு முன்னர் இப்படியான ஒரு மழையை நான் காணவில்லை. ஊரில் தான் மாரியில் இப்படி பெய்திருக்கின்றது. ************************** ஒரே மழை ---------------- அன்று அங்கே மாரியில் அடைமழையில் இடுப்பளவு ஓடும் வெள்ளத்தில் குளிப்போம் வெள்ளத்தின் போக்கில் கடல் வரும் ஓங்கி ஓங்கி கடல் அலை கரையை அடிக்கும் என்னூருக்கு ஏதோ ஒரு சாபமிடுவது போல அலையை தொட்டு தொட்டு ஒதுங்குவோம் வெட்ட வெளியை வெள்ளம் மூடும் பத்து லட்சம் பேத்தைக் குஞ்சுகள் பிறக்கும் அன்று வந்து வெள்ளத்தில் வால் ஆட்டி ஆட்டி நீந்தும் அவை ஒரு கையில் அள்ளினால் அதில் நூறு குஞ்சுகள் நிற்கும் வெள்ளத்தில் ஊதாப்பூ ஒன்று பூக்கும் கிண்டிப் பார்த்தால் கிழங்கு இருக்கும் அடியில் தவளை முட்டைகளும் ஊதாக் கிழங்குகளும் நாங்களும் அடை மழைக்கு காத்திருந்தோம் ஒவ்வொரு மாரியிலும் எல்லா கோவில் குளங்களும் நிரம்பும் இன்னும் இன்னும் மேலே மேலே ஏறி தலை கீழாக குதிப்போம் மாரி முடிய முன் காலில் விரலிடையில் சிரங்கென்று ஒன்று வந்து நிற்கும் அதுக்கு மருந்து மண்ணெண்ணெய் அன்றைய சுகாதார அமைச்சர் இந்த மருந்தை சொல்லவில்லை இது எங்களின் சுய கண்டுபிடிப்பு மாரி முடிய மைதானம் மூடி இடுப்பளவு புல் நிற்கும் மாடுகளைக் கட்ட அந்த புல் போகும் பந்தடிக்க கால் வைத்தால் அவ்வளவும் முள் அதையும் காலைக் கொடுத்து எடுப்போம் காலையும் மாலையும் அங்கேயே உருண்டோம் இப்ப இங்கேயும் அடைமழை அங்கே பெய்த மழை நான் இங்கே வந்தவுடன் ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்து இப்ப இங்கே கொட்டுகின்றது நல்லார் ஒருவர் உளரேல்........... இந்த மழை கூரையில் விழும் சத்தம் பட பட என்று கேட்கின்றது இரட்டைக் கண்ணாடி யன்னல்களில் வெளிக் கண்ணாடிகளில் வழிந்து ஓடுகின்றது மற்றபடி இந்த மழைக்கும் எனக்கும் வேறு தொடர்பேதும் இல்லை.3 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
தாமரை கோபுரம் எப்படி இருக்கும் என்று அறியாதவர்களும் செய்திகளில் படித்தறிந்தவர்களும் யாரோ இணைத்த படத்தை பார்த்து இதெல்லாம் நமக்கு தேவையா? நம்மால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்து பார்த்து, அனுபவித்து, ரசிப்பவர்களும் உண்டு. பெரிய வீடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடிசைகள் யார் கண்ணிலும் படுவதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை. உண்மையில் நான் சொன்னவை நான்கண்டு அனுபவித்தவையே, பச்சை மிளகாய் ஒன்று, நூறு கிராம் மரக்கறி என்று வாங்குவோரும் உண்டு. அதையே கவிஞரும் பாடினார், "மாடி வீட்டு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப்ப பிள்ளை அம்மணமாய் நிண்டிருச்சு." பார்த்த இடமெல்லாம் ஸ்கூட்டியும் மொடல் கைபேசிகளுமாக இளந்தலை முறை ஒன்று அலையும் அதேநேரம் கால்நடையா அலைவோரும் உண்டு. அவர்களை ஸ்கூட்டியில் போவோர் வினோதமாக பார்க்கிறார்கள். இது சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள். கோசான் சொன்னவைகளில் சில உண்மைகளுமுண்டு, அதற்காக எல்லாமும் உண்மையில்லை. அவையெல்லாம் அரசாங்கத்தின் சாதனையுமல்ல. அரச உத்தியோகத்தர், ஓய்வூதியக்காரருக்கு எந்த சலுகைகளுமில்லை சமுதாயத்தில் அவர்களுக்கு அனுதாபமுமில்லை. இந்த தாமரை கோபுரத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அரக்கலியா போராட்டம் நடந்த இடம் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை இப்போ. காப்பற் வீதிகளை பற்றி வியந்து பேசுவோர் அதற்குள் மறைந்து, மறைக்கப்பட்ட உடல்களையும் எலும்புகளையும் நினைப்பதில்லை. இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் தங்கி ரசித்து ருசிப்போர் அது அமைந்த இடத்தின் உரிமையாளர் யார் என கேட்பதுமில்லை அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை ஆண்டுக்கணக்காய் தேடி தெருவில் அலைவோரை பார்த்து ஆறுதல் சொல்வாருமில்லை. இவையெல்லாம் பார்க்கப்படாத மறைக்கப்பட்ட உண்மையின் மறுபக்கங்கள். நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஓடியோர் சொர்க்கபுரியாக வர்ணிக்கும் நாள் அதிக தூரமில்லை. இது சிங்களத்தின் ஒரு வெற்றியே. அது எங்கிருந்து இந்தப்பணத்தை பெற்று ஏன் இப்படி அலங்கரிக்கிறது என்று யாரும் சிந்திக்கபோவதுமில்லை. எனது இந்த கருத்துக்கு நூறு எதிர்கருத்துகள் வரலாம் ஆனால் அவர்கள் பார்க்காத கதைக்க விரும்பாத உண்மைகள் இவை.3 points
-
தந்தை செல்வா
2 pointshttps://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன். தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும் எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள் இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம் புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார் எண்பட்ட யாவரையும் கவருமிந்த இழிகாலன் செய்கையது என்னே! என்னே! செல்வா என்றோர் வார்த்தை சொன்னால் அங்கோர் சேனையது தலைதாழ்த்திப் பணிந்து நிற்கும் செல்வா என்றே சொன்னாற் தமிழ மங்கை செழு முலையினூடோடி வீரம் சிந்தும் செல்வா என்றழைத்திட்டாற் தமிழர் வாழும் தேசமெலாம் அச்சொல்லின் சிறப்புத் தேங்கும் எல்லாமும் போனதடா ஈழம் சோர்ந்தாள் இழிகாலன் செய்கையது என்னே என்னே (வேறு) தந்தை செல்வாவைத் தானைத் தலைவனாய் ஏற்காதோரும் சிந்தையில் துயரடைந்தார் சிங்களர் கூடச் சோர்ந்தார் மந்திரச் சொல்லால் ஈழ மக்களைத் தன்பால் ஈர்த்து விந்தைகள் புரிந்த செம்மல் விழிகளை மூடிக் கொண்டான் ஓடியே ஒடுங்கிற்றம்மா உயிரினைத் தமிழுக்காக வாடியே கொடுத்த அன்னான் வண்டமிழ்த் தென்றல் மூச்சு பாடியே என்ன கண்டோம் பாடையில் வீழ்ந்த அந்த நீடிய தமிழ் மரத்தின் நிழலினிக் கிடைக்கப் போமோ? (வேறு) கண்ணார் தமிழின் உயர்வுக் குழைத்தே காற்றால் உதிர்ந்த சருகானாய் எண்ணார் உன்னை ஏற்காதோரும் ஏற்றும் தெய்வம் நீயானாய் விண்ணேகினையோ செல்வா தமிழின் விழியே உயிரே ஆரீரோ அண்ணா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ துன்பஞ் செய்த உடல் நோயோடும் தூய தமிழிற் குழைத்ததிலே இன்பங் கண்டாய் செல்வா என்றும் ஈழத் துயர்வே பேச்சானாய் என்புந் தோலும் கொண்டாய் எனினும் எங்கள் தமிழே மூச்சானாய் அன்பே போதும் ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ கைகால் நடுங்கும் உந்தன் உருவைக் கண்டார் இரங்கும் படி வாழ்ந்தாய் மெய்யாய் உணர்விற் தமிழே நினைவாய் மெலிந்தாய் வாடி மிக நொந்தாய் பொய்யாகிய இவ்வுலகின் பதவிப் போரைச் சகியாதுயிர் சோர்ந்தாய் ஐயா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ சீரார் தமிழின் சிறப்பிற்காகச் சிறை சென்றனையே செல்வா நின் பாரா முகம் ஏன் இழிமைத் தமிழர் பதவிப் பித்தால் நொந்தாயோ சோரா மனதிற் துயரச் சுமையாற் தோள் சோர்ந்தனையோ செல்வா எம் ஆராவமுதே போதும் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ2 points
-
மேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது?
2 pointsமேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது? | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsஎல்லா அரசியல்வாதிகளும் கள்ளர். ஆகவே சீமானை ஆதரிப்பது தவறு. கருணாநிதி>i;டாலின் உதயநிதி>இப்பாநிதி என்று கருணாநிதி குடும்பத்தான் ஆளணும். அதுதான் நியாயம். அதை விட்டு மாற்றம் வேண்டும் என்று நினப்பவர்கள் பைத்தியக்காரர்கள் அப்படித்தானே சீமான் எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள்.சீமானை எதரிப்பது அவர்கள் கொள்கை தமிழ்த்தேசியத்தை அவரது அரசியலுக்காக பயன்படுத்தினாலும்(9சீமான் எதிர்ப்பாளர்கள் சொல்லுவது போல்) தமிழ்த்தேசியத்தை உயிப்பாக வைத்திருப்பதற்காக ஆதரிக்கிறோம்.2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsதிராவிடத்தையும் பெரியாரிசத்தையும் போட்டு குழப்புகின்றார்கள் என நினைக்கின்றேன். ட்ரவிடியன்ஸ் எல்லோரும் பெரியாரிஸ்டுகள் அல்ல. பெரியாரிஸ்டுகளாக எங்கள்ண்ட ப்ராமின்ஸ் கூட இருக்கின்றார்கள்!2 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsஇடித்துரைப்புக்கு நன்றி. ஆனால் சீமானின் பக்தர்களும், டிரம்பின் MAGA பக்தர்களும் ஒரே டிசைன். அண்ணனை போலவே நாக்கை புரட்டி, புரட்டி முட்டு கொடுப்பார்கள். உதாரணமாக தமிழ் தமிழ் என கூவிய கருணாநிதியின் மகள் கனி மொழி சரளமாக ஆங்கிலம் மட்டும் அல்ல, தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு மொழியாளுமை உள்ளவர் - ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அவர் ஆங்கிலம் பேசுவதை கண்டிப்பார்கள். அதையே சீமான் செய்தால் தப்பென்ன? பள்ளி கூடம் சரியில்லை என நொண்டி சாட்டு சொல்வார்கள். ஆனால் ஸ்டாலினும், அழகிரியும் ஐ கம் யூ கோ இங்கிலிபிசுதான் என்பதையும், தமிழிழே திக்கி திணறி கதைக்கும் இவ்விரு வரும் ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராத் என்பதையும் மறந்து விடுவார்கள். இதாவது பறவாயில்லை, ஒரு. படி மேலே போய் ஸ்டாலினும், உதயநிதியும் தெலுங்கில் எழுதி தமிழில் படிக்கிறார்கள் என்ற பொய்யை கூட திண்ணையில் சொல்லி விட்டு, ஆதாரம் கேட்டதும் அது சும்மா ஜோக் என நழுவினார்கள். ஆனால் அதை ஒரு உறவு உண்மை என நம்பி பின் தெளிவானார். இப்படியாக சிலர் இங்கே செய்வது பச்சை பொய்யும், புரட்டுகளும் நிறைந்த நாதக பிரச்சாரம். பொய்யும், பிரட்டும், வரலாற்றை பொய்யாக மீள எழுதுவதும், சதி கோட்பாடுகளை முந்தள்ளுவதும்தான் நாதக/சீமானின் அடிப்படை அரசியல் யுக்தியே. அண்ணணை அப்படியே பிரதி செய்க்கிறார்கள் அவரின் யாழ்கள தம்பிகள். இந்த பொய் வரலாற்றை எழுதுவதில் ஒரு அங்கம்தான் - கெளத்தூர் மணி, வேல்முருகன், நெடுமாறன், வைகோ இன்னும் பலரின் பங்களிப்பை மறைப்பது, சிறுமை செய்வது. இதை காலத்துக்கு காலம் யாழில் பலர் கண்டிக்கவே செய்கிறார்கள். இருந்தாலும் அடுத்த திரியில் தெரிந்தே அதே பொய்யை எழுதுவார்கள். உண்மையை உரைக்கும் உங்கள் முயசிக்கு நன்றி. புலித்தோல் போர்த்திய நரி. #தொண்டை தண்ணி வத்த பேசும், கள்ள மெளனி.2 points
-
என் இந்தியப் பயணம்
1 pointநான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்1 point
-
"பால் கடல் கடைதல்"
1 point"பால் கடல் கடைதல்" [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை விமர்சியுங்கள்! ] வேதகால தொடக்கத்தில் [கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது என்பது ஐதிகம்] அசுரரும் தேவர்களும் சிறு தெய்வங்களாகவே கருதப்பட்டார்கள். சிலர் இரண்டு நிலையையும் கொண்டிருந்தார்கள் [வருணன்]. அசுரர் என்ற சொல் வலிமை மிக்கவர் என்ற பொருளில் மட்டுமே வேதத்தில் [வேதம்= மறை] பயன்படுத்தப் பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சுரர் என்ற சொல்லே இல்லை. அசுரர் என்ற சொல்லிலிருந்து ‘அ’ என்ற எழுத்தை நீக்கிப் பிற்காலத்தில் சுரர் [தேவர்] என்ற சொல்லை உருவாக்கினார்கள். பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள், யோக்கியர்கள் என்றுள்ளது. வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இயற்கையையே பாடுகின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே. அசுரர் என்றால் தீயவர்கள், அவர்களுக்கும் தேவர்களுக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும் என்பதை மட்டும் கேட்டுப் பழகி வந்த நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். பிந்திய பிரமாண நூல்களான புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள், கீதை என்பனை சமஸ்க்ருதத்தில் எழுதும் போதே இருக்கு வேதத்தில் உயர்வாக சொல்லப்பட்ட அசுரர் என்ற சொல், உயர்ச்சிப் பொருளை மாற்றி, இதற்கு அரக்கர் என்று பொருளிட்டு விட்டார்கள். மேலும் தேவர்கள் நேர்மறை சக்திகளாகவும் அசுரர்கள் எதிர்மறை சக்திகளாகவும் சித்தரித்தார்கள். புராணங்களை உற்று கவனித்திருக்கிறீர்களா? அசுரர்களை எப்படி காட்டி இருப்பார்கள், மாமிசம் உண்பவர்கள், அட்டுழியம் செய்பவர்கள். தேவர்கள் அமிர்தம் [கள்ளு / மது] அதாவது சைவம் உண்பவர்கள், அப்பாவிகள். இது நாம் சாதாரணமாக பார்ப்பது. உற்று கவனியுங்கள். அசுரர்கள் அளவு கடந்த பக்திமானாக இருப்பார்கள். பெண்கள் பக்கம் செல்லவே மாட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள். அவர்கள் செய்வது எல்லாம் ரவுடியிசம் மட்டுமே. உதாரணமாக யாகத்தைத் [வேள்வி] தடுப்பார்கள். ஆனால் மாறாக தேவர்கள் எந்த அராஜகத்திலும் ஈடுபடமாட்டார்கள். ஆனால் பெண் பித்தர்கள், அடுத்தவன் மனைவியை கவர்பவர்கள், சூதாடுவார்கள், துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் தீயவர்கள். இது கொஞ்சம் முரணாக இருக்கிறதல்லவா? மேலும் உண்மையில் இருவரும் மிகவும் கடின மூர்க்கத்தனமான ஒற்றுமை இல்லாத தொடருந்து எதிர் அணியுடன் முட்டி மோதும் வீரர்களாகும். தேவர்களின் பலத்தினாற் மட்டும் பாற்கடலை கடைவதியலாத காரியமென அறிந்த மகா விஷ்ணு, தேவர்களிடம் உங்கள் முன் இருக்கும் வேலை மிகவும் கடினமானது, உங்களால் மட்டும் தனியாக பாற்கடலைக் கடைய முடியாது, அசுரர்களும் சேர்ந்துதான் அதைச் செய்யமுடியும். அதனால் உங்களுக்கு அசுரர்களின் உதவி வேண்டும் என்று எடுத்து கூறினார். அதனால் தேவர்கள் அசுரர்களின் உதவியை நாடினார்கள். திரண்டெழும் சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்தில் சரிபகுதி என்றனர். நம்பினர் அசுரர்கள். ஆனால் இது ஒரு தந்திரமே! அசுரர்கள் ஆக தமது ஆற்றலை மட்டுமே பயன் படுத்துவார்கள், அவர்களின் பங்ககான "சாவ வரம்" கிடைக்காது, நான் அதை பார்த்துக் கொள்வேன் என மகா விஷ்ணு உறுதி கூறினார் தேவர்களுக்கு. மேலும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை - அரக்கர்களைக் எமாற்றி கொல்லத் தான். இராவணனைக் கொன்றதும் அப்படியே! ராவணன் செய்த தவறு என்ன? அடுத்தவன் மனைவியை கடத்தி சென்றது. ஆனால் இந்திரன் மாதிரி கற்பழிக்கவில்லையே. தன் தங்கைக்கு தீங்கிளைத்தவனை தண்டிக்க வேண்டும் என்று எந்த அண்ணனுக்கும் ஆசை இருக்கும். இது நியாயமான ஆசைதானே? சொல்லப்போனால் சீதையை மரியாதையாகத்தான் நடத்தினான். ராவணன் மிகச்சிறந்த பக்திமான். நல்ல அரசன். கடைசி வரை நேர்மையாக போரிட்டவன். கடைசியில் இராமன் ஏமாற்றுகளால் சீதையை மீட்டான். எனினும்,சீதையின் தூய்மையை நம்பவில்லை. சீதையை "அரக்கன் மாநகரில் வாழ்ந்தாயே, ஒழுக்கம் பாழ்பட இருந்தாயே, மாண்டிலையே?" என்று ராமன் குற்றம்சாட்டு கின்றான். இராவணனின் சிறையில் உறுதியாய் உயர்ந்து நின்ற அந்த சீதையைப் பார்த்து, "இனி எமக்கும் ஏற்பன விருந்து உளவோ?" என மேலும் ராமன் கூறுகிறார். கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது. பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள் நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை. "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல் ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்" அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான். "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக" "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து" அன்று நடந்தது என்ன? இன்று நடப்பது என்ன ? அதை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. மீண்டும் ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையை நம்பாமல் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். சீதைக்கு நடந்த கொடுமைக்கும் அவள் அடைந்த துயரங்களுக்கும் யார் காரணம்? மகாத்மா காந்தி என்ன கூறினார் தெரியுமா? "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல - தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்." என்றல்லவா? சிறிதளவு உழைப்புக்கு பெருமளவு பயன்களை அனுபவிப்பது ஆளும் வர்க்கம். உழைக்கும் வர்க்க மக்களுக்கு மிகக்குறைந்த பயன்களையே அது அனுமதிக்கும். இது நாம் அறிந்த உண்மை. இப்ப கூறுங்ககள் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" இருவரும் தமது நம்பிக்கைக்காக கொலை செய்யக் கூடியவர்கள். இருவருமே தமது சுய நலத்திற்க்காக தமது வித்தியாசங்களை ஒரு புறம் தள்ளியவர்கள், இருவருமே கொடூர வீரர்கள். இன்றைய நவீன உலகில், ஒரு உதாரணத்திற்கு இஸ்ரேலியர்களையும் பலஸ்தீனியர்களையும் எடுங்கள். "வெஸ்ட் பாங்கில்" [மேற்குக் கரை பகுதியில்] ஒரு பகுதி நிலத்திற்காக வருடக்கணக்காக ஒரு மோதலில் இடுபட்டுள்ளார்கள். இருவருமே அந்த இடத்திற்கு தாமே உரிமை உடையவர்கள் என நம்புகிறார்கள். இருவருமே ஒரு கூர்மையான விரோதிகள். இரு பக்கத்திலும் உள்ள தீவீரவாதிகள் மிகவும் கொடூர தந்திரங்களை தமது இலக்கடைய பாவிக்கிறார்கள். என்றாலும் ஒரு சமாதானத்தின் அடிப்படையில் தமது வேறுபாடுகளை ஒரு பக்கம் ஒதுக்கி கொள்கையளவில் ஏற்றுள்ளார்கள். ஆகவே மீண்டும் உங்களை கேட்கிறேன் "எந்த பக்கம் நல்லது ? எந்த பக்கம் தீயது ?" மீண்டும் நாம் "பால் கடல்" பக்கம் போவோம். இது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு கூட்டு முயற்சி. மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தனர். கயிறான பாம்பின் தலைப் பக்கம் பற்றி, வலிந்து கடைந்தோர் (கதைப்படி) அசுரர்கள். வாலைப் பிடித்து கடைந்தோர் தேவர்கள். தலைப்பக்கமாக அசுரர்கள் இருந்ததால் பாம்பின் விஷக்காற்று பட்டு, அசுரர்களின் சிவந்தமேனி கறுப்பாகி விடுகிறது. சிவந்தமேனி கறுப்பாகிற அளவிற்கு அசுரர்கள் கடுமையாக உழைத்து பொருட்களை உருவாக்கு கிறார்கள். அப்போது பாற்கடலை கடைய, கடைய காமதேனு, கற்பக விருட்சம், உலக அழகியான லக்ஷ்மி என்று ஒவ் வொன்றாக பாற்கடலில் இருந்து வெளியே வருகிறது. அவை எதற்குமே அசுரர்கள் ஆசைப்படவில்லை. எல்லா வற்றையும் தேவர்களே எடுத்துக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வருகிறது. சாகாமல் உயிர்வாழ உதவும் அமுதத்திற்கு மட்டுமே அசுரர்கள் ஆசைப்பட்டார்கள். அதைக் கூட முழுதாக தமக்கே வேண்டு மென அசுரர்கள் கேட்கவில்லை. தங்களுக்கும் கொஞ்சம் அமுதம் தரப்பட வேண்டு மென்று தான் கேட்டார்கள். இடையில் வந்த பொருளையெல்லாம் தம தாக்கிக் கொண்ட தேவர்கள், இறுதியிலும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அமுதம் அசுரருக்குத் தர மறுத்து விட்டனர். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை ஏற்பட்டபோது, மோகினி வடிவத்தில் வந்த மகாவிஷ்ணு தேவர்களைப் பார்த்து நீங்கள் இப்படி அநியாயம் செய்யலாமா? இது எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது! என்று தேவர்களை வெறுப்பது போலும், அசுரர்கள் பக்கம் சார்ந்து பேசுவது போலும் நடிக்க, அதை நம்பிய அசுரர்கள், மோகினியிடம் அவளையே அனைவர்க்கும் அமிர்தத்தைப் பங்கிட்டளிக்குமாறு வேண்டினர். தேவர்களும் அதனை ஆமோதித்தனர். பின்னர் தேவர்களை ஒரு பக்கமும், அசுரர்களை மற்றொரு பக்கமும் வரிசையாக உட்காரச் செய்தாள். பின்னர் அசுரர்களைத் தன் மோகனச் சிரிப்பால் வசப்படுத்திக் கொண்டே அவர்களுக்கு சுராபானத்தையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் பங்கிட ஆரம்பித்தாள். மோகினியின் மாயத்தால் அசுரர்களுக்குச் சுராபானத்திற்கும் அமிர்தத்துக்கும் வேறுபாடு தெரியவில்லை. மேனியெல்லாம் கருக கடுமையாக உழைத்து அசுரர்கள் பாற்கடலை கடைந்தது உயிர் வாழ உதவும் அமுதத்திற்காகத்தான். அதைக் கூட தராமல், தேவர்கள் மகாவிஷ்ணு உதவியுடன் ஏமாற்றி விட்டர்கள். ஏமாற்றுவது மகாவிஷ்ணுவிற்கு கை வந்த கலை. இன்னும் ஒரு அவதாரத்தில் கடவுள் விஸ்ணு ராமனாக அனுமனின் சகோதரனை பின்னல் யுத்த தர்மத்திற்கு புறம்பாக கொலை செய்து அனுமனின் உதவியை பெற்றார். ஒரு தனிப்பட்ட உதவியை பெற, எப்படி கடவுள் இந்த கொடூர செயலை செய்தார் ? இந்த கடவுள் அவதாரமான ராமன் மேலும் மிகவும் ஈவு இரக்கமின்றி சம்புகாவின் உயரை, தவம் செய்கிறான் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே, பறித்து எடுத்தான். இப்ப ராமர் போல் ஒரு அரசன் இருந்தால் சூத்திரர்களின் கதி என்ன ? பிராமண இந்து சாதி அமைப்பு, இந்தியாவின் அரசியல் அமைப்பால் ஒழிக்கப்பட்டாலும், தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியர்களின் கொடூரத் தாக்குதல் இன்னும் தொடர்கிறது. தை,17,2017 இல், ஆந்திரப் பிரதேசத் தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்து ஆய்வு மாணவர், ரோஹித் வேமுல தற்கொலை, அப்படியான சூத்திரர்களின் கதியின் பிந்திய செய்தியாகும். சாதிக்கொள்கை, தமிழரின் சமயமான சைவ சித்தாந்தத்தின் கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள் .மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை / இனவெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். எனினும் காலப் போக்கில், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க் கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன் ... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள். உறவுமுறைகளை வலிமைப்படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இப்படி, தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள்வாங்கப்பட்டது. ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பன வற்றினை முலமாக, அடிப்படையாக, கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ, உயரமோ குட்டையோ, பணக்காரனோ ஏழையோ, எல்லோரிடமும் ஒரே தன்மை, நிலை பாட்டை உடையதாக இருக்க வேண்டும். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக, ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால், பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை, சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப் படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
மேற்குலகம் ஏன் பதற்றமடைகின்றது?
1 pointஇணைப்பிற்கு நன்றி நுணாவிலான். காணொளியை முழுமையாக கேட்டேன் பார்த்தேன்.எனக்கு தெரிந்த உண்மைகளை உறுதிப்படுத்திக்கொண்டேன்.1 point
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
😀........... அவர்களுக்கும் ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு பாலம் போட்டு, இன்னுமொரு தனி மாநிலம் ஆக்குவமோ? ஒடிசாவிலிருந்து எப்படி அவ்வளவு நீளமான பாலம் போடுகிறது என்று எலான் மஸ்க்கை தான் கேட்க வேண்டும்....அவர் தான் இங்கே நிலத்திற்கு கீழால், மேலால், வானத்தில் என்று புது வழிகள் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றார்...😀1 point
-
ஒரே மழை
1 point
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
நேற்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாண்டிச்சேரியை ஒரு மாநிலமாக மாற்றுவோம் என்ற வாக்கு கொடுத்து வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரண்டு புதிய மாநிலங்கள் இந்தியாவில் வரப் போகுது போல தெரியுதே......😀1 point
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
இலங்கையில் இருந்து இங்கு வந்த நம்மவர்கள் பலர் சிவில் பொறியியலாளர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலும் பேராதனை பல்கலையில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் வேலை செய்யும் சில நிறுவனங்களுக்கு இந்த மீள்கட்டமைப்பில் வாய்ப்புகள் கிடைக்கும்.......👍1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். Chennai Super Kings Gujarat Titans Kolkata Knight Riders Rajasthan Royals 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) Chennai Super Kings Rajasthan Royals Kolkata Knight Riders Gujarat Titans #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) Mumbai Indians 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team Chennai Super Kings 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team Kolkata Knight Riders 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Rajasthan Royals 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 Chennai Super Kings 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Sunrisers Hyderabad 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Punjab Kings 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Virat Kohli 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Chennai Super Kings 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Yashasvi Jaiswal 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Rajasthan Royals 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Chennai Super Kings 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Shivam Dube 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Chennai Super Kings 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Chennai Super Kings Edited 18 hours ago by கிருபன்1 point
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
1 point😀............... நீங்கள் லீவில் நின்ற போது இது நடந்துவிட்டது.....😀..... இதே விடயத்தை 'சங்கீத கலாநிதி' என்று இன்னொரு திரியிலும் விவாதித்திருந்தோம். அதில் நான் பகிர்ந்த பெருமாள் முருகனின் கட்டுரை ஒன்றை இங்கேயும் இணைக்கிறேன். இது 'அருஞ்சொல்' இதழில் அவர் எழுதியது: சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணா பெருமாள்முருகன் 25 Mar 2024 மியூசிக் அகாடமி 1929ஆம் ஆண்டு முதல் கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு வழங்கிவரும், மிகுந்த மதிப்பிற்குரியதாகக் கருதப்படும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு (2024) டி.எம்.கிருஷ்ணா பெறுகிறார். மிகச் சிறுவயதிலேயே மேடைக் கச்சேரிகளில் பாடத் தொடங்கிய அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகப் பாடிவருகிறார். ‘நெடுங்காலமாக மிகத் திறமையான இசைக் கலைஞராக விளங்கும் அவர் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்று விருது அறிக்கை கூறுகிறது. பல்லாண்டுகளாகப் பாடிவரும் அவர் ஒன்றையே தேய்ந்துபோகும் அளவு திரும்பச் செய்யும் இயல்புடையவர் அல்ல. அகத்திலும் புறத்திலும் பல பரிசோதனைகளை முன்னெடுக்கும் தேடல் நிரம்பியவர். எல்லாத் தரப்பினருடனும் இசைக் கலைஞராகத் தம் உரையாடலை நிகழ்த்துவதும் அனைவரின் குரலுக்கும் உரிய மதிப்பு கொடுத்துக் கேட்பதும் அவரது பரிசோதனைகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. தமிழ்நாட்டுக்கு அப்பால்… தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தமிழர்கள் வசிக்கும் பகுதியில் என்றில்லாமல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அவரது இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேரளத்தின் எந்தக் கலை விழாவும் டி.எம்.கிருஷ்ணா இல்லாமல் நிறைவுறாது என்று சொல்லும் வகையில் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கேரள மக்களின் பெருவிருப்பத்தை ஏற்று நாராயண குருவின் பாடல்களுக்கு மெட்டமைத்துக் கச்சேரிகளில் பாடுகிறார். நாராயண குருவின் பாடல்களை மட்டுமே பாடும் தனிக் கச்சேரிகளையும் கேரளத்தில் நடத்துகின்றனர். கடம் இசைக் கலைஞரான விக்கு விநாயக்ராம் குழுவுடன் இணைந்து அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகள் தனித்துவம் வாய்ந்தவை. ‘ஜோகப்பாஸ்’ என்னும் திருநர் இசைக்குழுவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள கச்சேரிகள் பல. காஞ்சிபுரத்தில் இயங்கும் ‘கட்டைக் கூத்துச் சங்கம்’ குழுவுடன் அவர் நிகழ்த்தியுள்ள இசை நிகழ்ச்சிகளும் முக்கியமானவை. நாதஸ்வர இசைக் கலைஞர்களான செய்க் மகபூப் சுபானி – திருமதி கலீசபி மகபூப் குழுவினருடன் இணைந்தும் அவர் பல நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இத்தகைய இசை நிகழ்வுகளில் தம்மை முடிந்தவரை பின்னிறுத்திக்கொண்டு சககலைஞர்களான அவர்களது திறன் வெளிப்பாட்டுக்கு மிகுதியான வாய்ப்புகளை வழங்குவதைக் காண்போர் உணர முடியும். கர்நாடக இசைக் கச்சேரிகளின் மரபை உடைத்து வெவ்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் இணைந்து அவர் மேற்கொண்ட இத்தகைய நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களுக்கு இதுவரை கிட்டாத புதிய அனுபவங்களைக் கொடுத்தன. கர்நாடக சங்கீதத்திற்கான இடம் சபாக்களும் கோயில் திருவிழாக்களும்தான் என்றிருந்த நிலையை இவை மாற்றின. இலக்கியத் திருவிழாக்களிலும் பலவகைச் சமூக நிகழ்வுகளிலும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி இத்தகைய நிகழ்ச்சிகளை ரசிப்பதைப் பார்க்க முடிந்தது. மிகச் சிலருக்கு மட்டுமே புரிபடும் ரகசியம் கர்நாடக சங்கீதம் என்று பொதுவெளியில் இருக்கும் எண்ணத்தை இவை மாற்றின. புதுமையான முன்னெடுப்புகள் டி.எம்.கிருஷ்ணா ஓர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; களச் செயல்பாட்டாளரும் ஆவார். தம் களச் செயல்பாட்டையும் இசை சார்ந்தே புரிபவர் அவர். எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய்க் கழிவுகள் ஏற்படுத்தும் பாதிப்பை மாற்றச் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளோடு இணைந்த அவர் தம் பங்களிப்பாகப் ‘பொறம்போக்குப் பாடல்’ பாடி அப்பிரச்சினையைக் கவனத்திற்குக் கொண்டுவந்தார். புறம்போக்கு நிலங்கள் எவர் ஒருவருக்கும் சொந்தமல்ல, அனைவருக்குமான பொதுவெளிகள் அவை என்பதை அப்பாடல் விரிவாக எடுத்துச் சென்றது. ஒருவரைத் திட்டுவதற்குப் ‘பொறம்போக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. வசைச்சொல்லாக மாறிவிட்ட அதைத் தம் இசையால் மீட்டெடுத்தார் என்றே சொல்லலாம். அப்பாடலை வெளியிட்ட சுற்றுச்சூழல் குழுவினர் ‘டி.எம்.கிருஷ்ணா ஒரு பொறம்போக்கு’ என்று அழைத்து மகிழ்ந்தனர். அவர் அனைவருக்கும் சொந்தமானவர் என்னும் பொருளில் அந்த அழைப்பு அமைந்தது. துப்புரவுத் தொழிலாளர் நலனுக்காகச் செயல்பட்டுவரும் பெஜவாடா வில்சனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்’ பற்றி ஒரு பாடல் உருவாக்கலாம் என்னும் எண்ணம் டி.எம்.கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அதை என்னிடம் பகிர்ந்துகொண்டார். ‘மலம் அள்ளலாமா – கைகள் மலம் அள்ளலாமா’ என்னும் பல்லவியைக் கொண்ட கீர்த்தனை ஒன்றை எழுதிக் கொடுத்தேன். அதைப் பல கச்சேரிகளில் அவர் பாடினார். தமிழ்நாட்டில் பெரியார் சிலையை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபோது ‘எந்தச் சிலையாக இருந்தாலும் அது ஒரு கலைஞனின் கைவண்ணம். அதைச் சிதைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது’ என்று சொன்னார். அதைப் பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்னும் பாடலையும் பாடினார். அதைத் தொடர்ந்து பெரியாரைப் பற்றி நான் எழுதிய ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் பாடலையும் பாடி கடந்த 2023 மார்ச் மாதம் வைக்கம் போராட்ட நூற்றாண்டுத் தொடக்கத்தின்போது வெளியிட்டார். அது பல்லாயிரம் பேரிடம் சென்று சேர்ந்தது. கிறித்தவ, இஸ்லாம் மதப் பக்திப் பாடல்களையும் கச்சேரிகளில் தொடர்ந்து பாடிவருகிறார். வாழ்த்துகள்... சென்னையில் உள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தில் அவர் தொடர்ந்து பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். இவ்வாண்டு பிப்ரவரி இறுதியில் அங்கு நடைபெற்ற அவரது இசைக் கச்சேரியில் ஆறு பாடல்களைப் பாடினார். அவ்வூரைச் சேர்ந்த மீனவர் குடும்பங்கள் பெருந்திரளாக வந்திருந்து அக்கச்சேரியைக் பெருங்கொண்டாட்டம் ஆக்கினர். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றிய காவடிச் சிந்தை அவர் பாடி முடித்தபோது மக்களின் சீழ்க்கைச் சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று. கர்நாடக சங்கீதக் கச்சேரியில் இப்படிச் சீழ்க்கைச் சத்தம் ஒலிப்பதை டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சிகளில் மட்டுமே காண முடியும். சமீபத்தில் ‘சங்க இலக்கியக் கீர்த்தனைகள்’ என்னும் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். சங்க இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் தம்மாலான முயற்சியாக இதை அவர் காண்கிறார். இசை போன்ற கலைத் துறையில் ஈடுபட்டுச் சாதனை புரியும் கலைஞர்கள் பெரும்பாலும் அத்துறை சார்ந்த அனுபவ அறிவை மட்டுமே கொண்டிருப்பார்கள். அதன் நுட்பங்கள் பற்றி அவர்களால் பேசவோ எழுதவோ இயலாது. டி.எம்.கிருஷ்ணா பேசவும் எழுதவும் செய்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றவை. ’கர்னாடக சங்கீதத்தின் கதை’ என்னும் நூலை எழுதியுள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் விமர்சனப்பூர்வமாக அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. அது தமிழில் சிறுநூலாக வெளியாகியுள்ளது. மிருதங்கம் வாசிப்போர் பற்றி மட்டுமே இசை ரசிகர் அறிந்திருப்பர். மிருதங்கம் செய்வோர் பற்றி விரிவாக ஆராய்ந்து ‘செபாஸ்டியன் குடும்பக் கலை’ என்னும் விரிவான நூலை எழுதினார். அது இசையுலகில் இருக்கும் சாதிரீதியான பாகுபாட்டை விரிவாகப் பேசி நல்லதொரு உரையாடலை உருவாக்கியது. இவ்வாறு இசைக் கலைஞர் என்னும் அடையாளத்தை ஒருபோதும் மறவாமல் சமூகத்தின் பல தளங்களில் தம் எதிர்வினைகளை நிகழ்த்திவரும் டி.எம்.கிருஷ்ணாவுக்குச் ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்கி மியூசிக் அகாடமி பெருமை பெற்றுள்ளது. விருது அறிவிப்பில் ‘சமூக மாற்றத்திற்கு இசையை டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்துகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது வெறும் புகழ்ச்சியல்ல; பேருண்மை. டி.எம்.கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள். https://www.arunchol.com/perumal-murugan-article-on-tm-krishna1 point
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஈயம், சூரிய மின் தகட்டிலிருந்து மட்டுமல்ல, printed circuit board-PCB உடைய எல்லா சாதனங்களிலும் இருக்கும் ஒரு ஆரோகியத்திற்குக் கேடான உலோகம். அதனால் தான் e-waste என்பதை தனியாக நகரங்கள் சேகரிக்கின்றன. இந்த e-waste இல் இருந்து ஈயத்தை பிரித்தெடுக்கும் முறைகள் இருக்கின்றன. மேற்கு நாடுகளில் செய்கிறார்கள். கீழைத்தேய நாடுகள் பின்பற்றும் வழிகள் இருக்கின்றன, ஆனாலும் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் பிரச்சினை. ஆகவே, பசுமைத் தொழில் நுட்பத்தினால் கிடைக்கும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் e-waste ஒரு பெரிய மறைக்காரணி அல்ல.1 point
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி சசிகலாவின் அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான். ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார். பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு, எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக உருட்டுனார். இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம்.1 point
-
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர் Vhg மார்ச் 30, 2024 தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விளையாட்டு வினையானது கடந்த திங்கட்கிழமை (25-03-2024) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர். இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.battinatham.com/2024/03/blog-post_604.html1 point
-
ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்
என்ன கந்தையா குழப்புறீங்க? வாயில போட்டா தானே பின்னால போகும். இருவருக்கும் இதே மாதிரி செய்ய வேணும் யுவர் ஆனர்.1 point
-
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளோ தமக்குள் குத்திமுறிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களோ அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் அவலநிலை. இதில் எப்படியொரு நிலைபேறான அரசியல் முனையைத் திறப்பதெனச் சிந்திக்காதவரை மாற்றங்கள் வராது. குறைந்த பட்சம் யாழ். இந்துவில் நடந்த கருத்தாடலையாவது செவிமடுப்பார்களா? நன்றி1 point
-
சுமந்திரனின் மென்வலு அரசியலும் உட்கட்சி ஜனநாயகமும்
ஏன் தமிழ்த்தேசிய சார்பு நிலை வாக்குகள் ஈ.ம.ஜ.க வைநோக்கிச் செல்கின்றன என்பதற்கான ஒரு சிறந்த பார்வை. இனியாவது தமிழ்த் தேசியம் பேசும்(பேசும்) கட்சிகள் சிந்திக்க வேண்டும். சும் மைப்பற்றிய பார்வையை பல யாழ்க்கள உறவுகளே பல ஆண்டுகளின் புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள். அவற்றினது தொகுப்பாகவே இந்தக் கட்டுரை அமைத்துள்ளபோன்று உள்ளது. நன்றி1 point
-
கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!
துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....1 point
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் பேசும் போது, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார். வேண்டுமென்றால் அந்தக் காணொளியைக்கூட இங்கு இணைக்கலாம். தற்போதைய 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன்.1 point
-
சென்னையின் முகம்..
1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கடைசிவரை இருப்பதில் பிரச்சினை இல்லை, ஆனால் குறைந்தது பத்துப் பேரை பங்குபற்ற வைக்கவேண்டும்!1 point
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஅண்ணன் ஆசை பட்டதில் தப்பில்லை. கட்சி கூட்டத்தில் முன் வரிசையில் வந்திருத்து, கட்சி விசயங்களையே கட்டுபாடு செய்யும் அரை-தெலுங்கு அண்ணி - அண்ணன் விரும்பினாலும் தமிழில் படிப்பிக்க விட்டிருக்க போவதில்லை. ஆனால்….இருபது வருடமாக எங்கும் தமிழ்…எதிலும் தமிழ்…தமிழ் என எல்லாருக்கும் அண்ணன் லந்து கொடுத்ததுதான் தப்பு.1 point
-
தோற்ற வழு
1 point😀..... நாங்கள் எல்லோரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே என்று எங்கேயோ படித்த ஒரு ஞாபகம். பாதிப்பின் அளவு தான் ஆள் ஆளுக்கு மாறுபடும் என்று அதில் சொல்லியிருந்தவர்கள் என்றும் ஞாபகம். நான் அவனில்லை....🤣1 point
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointதெய்வம் வீடு தேடி தரிசனம் தந்தபோது காலில் வீழ்ந்து ஆசி வேண்டியபோது எடுத்த படம். ஏன் திராவிடம் சாமி என ஒன்று இல்லையென்று அந்த நேரம் தடுத்து நிறுத்தவில்லை? 😋 ஓம் சாமி...ஓம் சாமி....அரோகரா சாமி. ஒட்டுமொத்த திராவிடத்திற்கும் அரோகரா சாமி. 🤣 மன்னிக்கவும் நிர்வாகம். ஒரு சில இடங்களில் இப்படியான பதில்களையே சொல்ல வேண்டியுள்ளது. மற்றும் படி எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம் எனும் சிந்தனையுள்ளவன் நான்.1 point
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointநாங்கதான் முகமுடி யில் இருக்கோமே முடிந்தால் நம்ம பிள்ளை என்ன படிக்குது என்று யார் கண்டு பிடிப்பான் என்ற கற்பனையில் சிலர் நினைக்கினம் சாமி .😀1 point
-
பாக்குவெட்டி
1 pointஇந்த யாழில் முதன்முதல் பாக்குவெட்டியை அறிமுகப் படுத்தியவரை இன்னும் காணவில்லை ......அவர் எங்கிருந்தாலும் பாக்குவெட்டியுடன் மேடைக்கு வரவும்........! 😁1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1euR00XGtw-7ovURFAh8ZuUNSqhvvbA1e8rjLSzkmM7g/edit?usp=sharing 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் ஆரம்பத்தில் 70 புள்ளிகள் வழங்கப்படும்! அதிகபட்ச புள்ளிகள் 148 வீரர்களின் பெயர்களை ஆங்கிலத்திலும், அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 26 மே 2024 அன்று சென்னையில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்1 point
-
பாக்குவெட்டி
1 point1 point
- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஆம். இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழ் நாட்டில் வந்திறங்கிய போது வரவேற்கப் போகாமல் தவிர்த்தார் என்ற மத்திய அரசின் கோபமும் 1990 ஆட்சிக் கலைப்பிற்குக் காரணம். இவை பதிவில் இருக்கும் சரியான தகவல்கள், சம்பவங்கள். நீங்கள் இதை ஏன் பையனுக்குச் சொல்கிறீர்கள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை😂! அவர் தகவல்களை பெறும் இடம் வேறு, நம்பும் தரவுகள் வேறு. அது வேற உலகம், இல்லை பிரபஞ்சம்! உங்களுக்கு நேரம் பாழ்!1 point- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது: 1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். 4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎) 5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை. அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 point"புலிகளை, பிரபாகரனை முன்னிறுத்தும் ஒரே கட்சி" என்ற "நொண்டித் தியரி" யை நம்பி நீங்கள் கருத்துரைப்பது வீண். இது கபிதானின் ஒரிஜினல் தியரியும் அல்ல! தற்போது களத்தில் இல்லாத ஒரு உறவு, "தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபாகரனைக் கொண்டு சேர்த்தது நா.த.க!" என்று ஒரு உருட்டலை காலங்காலமாக செய்து வந்திருக்கிறார். புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் என்பன போன்ற வரலாறு தெரிந்தோர் இதைக் கேட்டுச் சிரித்துக் கடந்து போக வேண்டியது தான், சீரியசாக எடுக்க வேண்டியதில்லை!1 point- நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு
ஆப்ரிக்காவில் ஒரு இஸ்லாமீய அறிஞர் அண்ணா அவர்கள், பெண்குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை தைத்துவிடவேண்டும் அப்போதான் ஆண்களுக்கு நிறைவான சுகத்தை கொடுப்பா என்று அறிவித்து உலக அளவில் பரபரப்பானது. பின்பு இந்தியாவிலிருந்துவிட்டு மலாசியாவுக்கு ஓடிபோய் வாழும் மற்றொரு மத அறிஞர் திலகம் மதத்துக்காக எதுவும் பண்ணிட்டு சொர்க்கத்துகு போனால் அங்கே 62 கன்னிகள் கிடைக்கும் என்றார், அப்போகூட சொர்க்கத்தில் எது முக்கியம் எதை எதிர்பார்க்கிறார்கள் இந்த அறிஞர் கூட்டம் என்பது சில்லிட வைக்கிறது. இன்னொரு அறிஞர் பெண்கள் பூப்பெய்துவிட்டால் அவள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்றே அர்த்தம் என்றார், பெண்பிள்ளைகள் இப்போதெல்லாம் 10, 11 வயதில்கூட பூப்பெய்துகிறார்கள் என்பது தற்கால நடைமுறை. பின்பு தலீபான் அறிஞர் கூட்டம் பெண்களுக்கு பிரசவம் பெண்களே பார்க்கவேண்டும் என்று புனித சட்டம் போட்டார்கள், ஆனால் பெண்கள் படிக்க கூடாது என்றும் சட்டம் போட்டார்கள், படிக்காமல் எப்படி டாக்டராகி பிரசவம் பார்ப்பதென்று கடைசிவரை அந்த அறிஞர் கூட்டம் சொல்லவேயில்லை. மத அறிவில் டாக்டர் பட்டம் பெற்ற இன்னொரு அறிஞர் கூட்டம் இஸ்லாமிய பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே கடைதெருவுக்கு கூட போக கூடாது என்று சொல்லியிருந்தார் ஆனால் இஸ்லாமிய ஆண்கள் ஐரோப்பா அமெரிக்கா என்று போய் பணத்தை அள்ளியிறைத்து பெண்கள் மத்தியிலேயே பொழுது போக்கிட்டு ஊர் திரும்புவார்கள். கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய அழகை பிறருக்கு காண்பிக்ககூடாது என்று அறிஞர்கள் அலுமாரியை அவ்டி காரை மூடி வைச்சமாதிரி எத்தனை டிகிரி வெய்யில் என்றாலும் வெப்பத்தை உறிஞ்சி வைத்திருக்கும் கருப்பு துணியால் முழுவதும் மூடி செல்லவேண்டுமென்று சொல்வார்கள் , ஆனால் ஆண்கள் மனைவிக்கு மட்டும் காட்டவேண்டியதை மத்த மதக்காரர் எவர் கிடைப்பா என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு கணவனுடன் போகும் பெண்களைகூட பார்த்து ஜொள்ளுவிட்டு அலைவார்கள். மொத்தத்தில் அண்ணனோட சிந்தனைகளும் செயல்களும் பெண்ணை பற்றியே சுற்றிவரும். அதையெல்லாம் கூட மன்னிக்கலாம் ஆனால் எல்லாத்தையும் பண்ணிப்பிபோட்டு இறுதியாக ஒரு வரி சொல்வார்கள் பாருங்கள். அதை தாங்கிக்கொள்ள இன்னொரு இதயம் இறைவனிடம் கேட்டு வாங்க வேண்டும் ’எந்த மதத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் பெண்களை மதிக்க கற்று கொடுத்திருகிறது’1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஇந்தியா மத்திய அரசாங்கம் விரும்பியது பெற்று கொடுத்தது,.......எங்களை பெறுத்த மட்டில். இந்தியா மத்திய அரசாங்கம் விருபவில்லை1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointதமிழ்நாடு ஒரு மாநிலம் தமிழ்நாடு தனிநாடு இல்லை தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை செய்ய முடியாது தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது தமிழ்நாட்டில்,.சீமான் கமல் விஐய். ஸ்டாலின் உதயநிதி நெடுமாறன். வைகோ கருணாநிதி எம் ஜி” ஆர் அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும் வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்று ஆதரித்தாலும். தமிழ் ஈழம் கிடைக்காது எனவே… ஏன் குதிக்க வேண்டும்??? இந்த சீமான் ஏன் குதிக்கிறார?? என்பது தான் கேள்வி?? ஆனால் சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் முதல்வராக வரலாம்” தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் எங்கள் ஆதரவு 100% உண்டு” கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால் இலங்கை தமிழருக்கு அது செய்வேன் இது செய்வேன் என்று ஏமாற்றக்கூடாது 😀1 point- என் இந்தியப் பயணம்
1 pointவெளியே ஒரு அரை மணி நேரம் சுற்றிவிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லாததனால் மீண்டும் நாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கிருந்த உணவகத்துக்குச் சென்றால் அங்கும் ஒரே ஒருவர் மட்டும் எதையோ உண்டுகொண்டிருக்கிறார். மெனுவில் இருந்த பரோட்டாவும் மட்டன் கறியும் கணவர் ஓடர் செய்ய நான் எனக்கும் அதையே கொண்டுவரும்படி சொல்கிறேன். அரைவாசி எலும்புகளுடன் கறி ஏதோ சுவையுடன் இருக்க, ஆட்டிறைச்சியை இப்படியா இவர்கள் உண்கின்றனர் என்கிறேன். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி. குறை சொல்லாமல் சாப்பிடு என்கிறார். மனிசன். நல்லதை நல்லதென்று நான் சொல்வதே இல்லையா என்கிறேன். சாப்பிட்டு முடிய ஒரு மணிநேர ஓய்வின் பின் மீண்டும் டாக்ஸி ஓட்டுனருக்கு போன் செய்து Fatehpur Sikri, Agra fort, Anguri Bagh போன்றவற்றைப் பார்த்துவிட்டு வரலாம் என்கிறோம். தான் எம்மை இறக்கிய இடத்துக்கு வரும்படி கூற பொடி நடையாய் நடந்து செல்கிறோம் மிகச் சிறிய கடைகளும் அதன் அருகிலே சிறிய வீடுகளும் சுத்தமற்ற இடங்களும் முகம் சுழிக்க வைக்க பிரதான சாலை வந்ததும் டாக்ஸி எங்கே நிற்கிறது என்று பார்க்க, தூரத்தில் இருந்து அவர் கையசைக்க அங்கு செல்கிறோம். ஒரு நாற்பது நிமிடங்களின் பின் Fatehpur Sikri என்னும் 16 ம் நூற்றாண்டில் தன் மூன்றாவது இந்து மனைவிக்காக இஸ்லாமிய மன்னன் கட்டிய ஜோர்டா பாயின் அரண்மனைக்கு செல்ல என ஓரிடத்தில் இறக்கிவிட அது காடு போல இருக்கிறது. இவர்கள் உங்களை இனி அழைத்துச் செல்வார்கள் என்று கூற ஏன் நீ வரவில்லையா என்று கேட்கிறேன். இவன் உன்னை அழைத்துச் செல்வான் என்று கூறி ஒரு பெடியனைக் கைகாட்டுகிறார் ஓட்டுனர். பான்பராக் போட்டபடி திருடன் போல தெரிய என் முகத்தின் நம்பிக்கையின்மையைக் கண்டு, பயப்பிட வேண்டாம் என்கிறார். அங்கிருந்து ஒரு சிறிய பஸ் போன்றதில் எம்மைக் கொண்டுபோய் ஏறும்படி கூற எனக்கு இவன் எம்மைக் கடத்திக்கொண்டு சென்றால் என்ன செய்வது என்னும் எண்ணமும் எழ, பஸ்சையும் எம்முடன் வந்தவனையும் படம் எடுக்கிறேன். டோன்ட் வொறி மடம் என்று கூறி அவன் சிரிக்க, புது இடம் அதுதான் என்று சமாளித்தபடி வண்டியில் ஏறி அமர்கிறேன். ஒரு பத்து நிமிடத்தில் அரண்மனைக்கு அருகில் வண்டி நிற்க நடந்து அரண்மனைக்குள் செல்கிறோம். கட்டடங்கள் சித்திர வேலைப்பாடுகளுடன் அழகாகத் தெரிய அங்கு ஒரு மணிநேரம் செலவிட முடிகிறது. அதன் பின் அதற்கு அருகிலுள்ள இன்னொரு அரண்மனையின் உள்ளே முஸ்லிம் வழிபாட்டுத்தலம் இருக்க அங்கு எம்மைக் கரிசனையாய் கூட்டிச் செல்கின்றனர். அது மதசார்பற்ற வழிபாட்டுத் தலம் என்றும் குழந்தைகள் இல்லாத அக்பரை மூன்றாவதாக இந்து இளவரசியைத் திருமணம் செய்தால் குழந்தை கிடைக்கும் என்று கூறியவருக்காக மன்னன் அமைத்துக் கொடுத்தது என்றும் கூறப் போய் பார்ப்போம் என்கிறேன். உள்ளே தொட்டம் தொட்டமாக சாதாரண துணிகள், பட்டுத்துணிகள் விலைக்கு ஏற்றபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்க, எம்மை ஒருவரிடம் அழைத்துச் சென்று இங்கக்கு விற்கும் துணிகள் ஏழைக்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்றுவிட்டு எம்மையும் ஒரு துணியை வாங்கிக் கொடுக்கும்படி கூற நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்கிறேன். தலையைக் குனி தலையைக் குனி என்று கூற எதற்கு என்கிறேன். உன்னை துணி விற்பவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்கிறான் எம்மைக் கூட்டி வந்தவன். எனக்கு வேண்டாம் என்று நான் குனிய மறுக்க, என்ன மடம்?உன்னை ஒருவன் மதித்தால் அவனை நீயும் மதிக்க வேண்டாமா என்கிறான். குனியப்பா என்றபடி மனிசன் குனிய நானும் குனிய ஒரு பாத்திரம்போல் இருந்ததை எந்தலையிலும் கணவர் தலையிலும் வைத்து முணுமுணுக்கிறான். இவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என மனதுக்குப் படுகிறது. நான் வேறு வழியின்றி ஒரு துணியை எடுக்க, 2000 ரூபாய்கள் என்கிறான். சென்னையில் 300 ரூபாவுக்கு அதை வாங்க முடியும். உது வேண்டாம் வேறு எடுக்கிறேன் என்று கூற, மடம் எடுத்ததை வைக்காதே என்று துணியை வைக்கவிடாது பிடிக்க என்னிடம் பணம் இல்லை என்கிறேன். காட் இருக்கா என்று கேட்க நான் இல்லை என்று கூறுமுன் கணவர் ஊம் என்கிறார். ஏன் ஓம் எண்டு சொன்னீங்கள் என்று மனிசனை முறைக்க, நாங்கள் தனிய வந்திருக்கிறம். தெரியாத ஊர். உன்ர வீரம் ஒண்டும் இங்க எடுபடாது. பேசாமல் காசைக் குடுத்து துணியை வாங்கிக் குடுத்துட்டுப் போவம் என்கிறார். நான் இல்லை எண்டு சொல்லீற்றன். நீங்கள் காட்டில குடுங்கள் என்கிறேன். சரிகாட்டால் பே பண்ணுகிறோம் என்றதும் ஒருவன் காட் மிசினைக் கொண்டு வருகிறான். நாம் கொண்டு சென்றது மொன்சோ என்னும் காட். போனில் அளவளவாக பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பதுடன் அதற்குக் குறைவான கட்டணமே வெளிநாடுகளில் செலவிடும்போது எடுப்பார்கள் என்பதனால் வரும்போது அதைத்தான் கொண்டுவந்தோம். கணவர் காட்டைப் போட்டு பின் நம்பரை அழுத்தினால் சுற்றிக்கொண்டே இருக்க, நெற் கிடைக்கவில்லை என்று இன்னொருவனைக் கூப்பிட அந்த மெசினும் சுற்ற, இவங்கள் காசை இரண்டுதரம் எடுத்தால் என்னப்பா செய்யிறது என்கிறேன். பயப்பிடாதை. அதில கனக்க இல்லை என்கிறார். நான் முதலே சொன்னேனே வேண்டாம் என்று என்கிறேன் அவனைப் பார்த்து. அவனோ விடுவதாய் இல்லை. மடம் நீங்கள் உள்ளே சென்று துணியைக் கொடுத்து வணங்கிவிட்டு வாருங்கள். கீழே சென்றால் நெட் வேலை செய்யும் என்கிறான். உள்ளே சென்று பார்த்தால் ஆட்களிடம் வாங்கும் துணிகளை அங்காங்கே அடுக்கியும் நடுவில் உள்ள வழிபாட்டுத் தளம் போல இருந்த ஒன்றின் மேல் விரித்தும் போட்டிருக்கிறார்கள். அங்கு நின்ற ஒருவர் இது உங்கள் பெயரால் ஒரு ஏழைக்குச் செல்கிறது கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவிட்டு ஏழைகளுக்கு டொனேஷன் ஏதும் தர விரும்பினால் அங்கு சென்று செலுத்தும்படி கூற நாம் எதுவும் சொல்லாது வெளியே வருகிறோம். நேரத்தைப் பார்க்கிறேன். மாலை நான்காகிவிட இனி வேறு இடம் ஒன்றுக்கும் போவதில்லை என்று முடிவெடுத்து மனிசனிடமும் சொல்ல அவரும் சம்மதிக்கிறார். வெளியே வந்தவுடன் அவன் எமக்காகக் காத்திருக்கிறான். இனிப் போவோம் என்கிறேன் நான். சரி என்று கீழே நடந்துசெல்லும்போது இன்னொருவன் எமக்குக் கிட்டவாக உந்துருளியைக் கொண்டுவந்து நிறுத்த, இவன் அவன் கொண்டுவந்த மிசினை வாங்கி மனிசனிடம் நீட்ட மனிசன் மீண்டும் காட்டைப் போட்டு இலக்கங்களை அழுத்த மீண்டும் சுற்றிக்கொண்டே இருக்க, காசைத் தூக்கிக் குடு என்கிறார் மனிசன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்கிறேன் நான். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. மீண்டும் வந்து பஸ்சில் ஏறிய பின் எம்முடன் வந்தவனும் வந்து ஏறுகிறான். பஸ்சை விட்டு இறங்கியபின் நாம் வந்து ஏறிய இடத்துக்குக் கிட்ட வந்துவிட்டோம் என்று புரிகிறது. எமது டாக்ஸி ஓட்டுனரிடம் பணத்தைக் வாங்கிவிட்டு எம்மைக் கொடுக்கச் சொல்கிறான் என்று பார்த்ததால் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் கடை ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு காட் வேலை செய்கிறது. அதன்பின் நாம் அவனுக்குக் கொடுக்க வேண்டிய 1000 ரூபாய்களை என் பையில் இருந்து எடுத்துக் கொடுக்கிறேன். எமது டாக்ஸியில் ஏற இனி எங்கே என்கிறார் அவர். வேறு இடம் செல்ல விருப்பம் இல்லை. நேரே கோட்டலுக்கு போகலாம் என்கிறார் கணவர். முன்னர் போலவே நாம் செல்ல போகும் வழியில் பெரிய உணவகம் ஒன்று தென்பட அங்கே நிறுத்தச் சொல்கிறோம். நாண் உடன் கோழிப் பிரட்டல் ஒன்றும் மரக்கறி ஒன்றும் எடுக்கிறோம். நாணும் கோழியும் நன்றாக இருக்க கணவர் தேனீரும் நான் கோப்பியும் எடுக்கிறோம் . ஓரளவு நன்றாக இருக்கிறது உணவும் பானமும். ஓட்டுனரை உண்ண வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. பணத்தைத் தாருங்கள். தான் பின்னர் உண்பதாகக் கூற கணவர் அவருக்குப் பணத்தைக் கொடுக்கிறார். தங்குவிடுதிக்குச் செல்ல மாலை ஆறுமணியாகிறது. களைப்புடன் சென்று கட்டிலில் விழுந்ததுதான். அடுத்தநாள் காலை ஆறுமணிவரை நல்ல தூக்கம் தூங்கி எழுந்து காலை ஏழுமணிக்கு உணவகம் வந்தால் அப்போதும் நாம் மட்டும்தான். பத்து மணிக்கு எமது டெல்லி போகும் தொடருந்து. ஆகவே வெள்ளனவே எழுந்து தயாராகிவிட்டோம். என்ன உண்ணலாம் என்று யோசித்து காலையில் ரொட்டி உண்ண விருப்பமின்றி தோசை என்று ஒன்று இருக்க அதை ஓடர் செய்கிறோம். ஒரு பதினைந்து நிமிடங்களின் பின் வெள்ளையாகத் தோசை வருகிறது. அத்துடன் சாம்பார் என்னும் பெயரில் எதுவோ வருகிறது. இரண்டு நிறங்களில் சட்னி வைத்திருக்க தோசையைப் பிய்த்து சடனியைத் தொட்டால் குளிர்ந்துபோய் இருக்கிறது. வெறும் தோசையை உண்டுவிட்டு வெளியே வந்து எமது டாக்ஸியை வரும்படி கூறிவிட்டு பயணப் பொதியை எடுத்துக்கொண்டு வந்து வரவேற்பில் நாம் கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுத் திரும்ப, மடம் நீங்கள் இன்னும் பே பண்ணவில்லை என்கிறான் ஒருவன். நேற்றே கொடுத்துவிட்டோமே என்கிறேன். நாம் எப்போதும் போகும்போதுதான் பணத்தைப் பெற்றுக்கொள்வோம் என்கிறான். நேற்று நின்றவரைக் கூப்பிடு என்கிறேன். அவர் இன்று மாலைதான் வருவார் என்கிறான். நான் நிமிர்ந்து பார்க்கக் கமரா தெரிகிறது. கமராவில் பார் நான் நேற்றுத் தந்துவிட்டேன். காட்டில் பே பண்ணுகிறோம் என்று என் கணவர் சொல்ல காட்டில் எடுப்பதில்லை என்று கூறிப் பணமாக வாங்கினார்களே என்கிறேன். இருக்காது மேடம் பொறு உனக்கு கமராவைப் காட்டுகிறேன் என்று உள்ளே சென்றவன் பத்து நிமிடத்தின்பின் வந்து என்னையும் கணவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று கமராவை ஓட விடுகிறான். நானும் கண்ணை வெட்டாமல் பார்க்கிறேன். நான் பணம் குடுத்தது பற்றிய எதுவுமே இல்லை. மீண்டும் சுற்றி சத்தத்தைப் போடச் சொல்கிறேன். சத்தத்தைத் தாம் பதிவு செய்வதில்லை என்கிறான். இவங்கள் வீடியோவை எடிட் செய்து விட்டார்கள். அதை நின்று பார்த்து சண்டை போட்டால் எம் தொடருந்தையும் விமானத்தையும் விடவேண்டிவரும் என்கிறார். போலீசைக் கூப்பிடுவோமா என்கிறேன் நான். உன்னிடம் ரிசீட் இல்லை. அவர்கள் ஒரே இனத்தவர். உனக்காகவா கதைக்கப்போகின்றனர் என்கிறார். கணவரை வீடியோ எடுக்கச் சொல்லிவிட்டு வேறு வழியற்று மீண்டும் 3000 ரூபாயைக் கொடுத்துவிட்டு ரிசீற்றைத்தா என்கிறேன் கடுப்புடன். ரிசீற் கொடுப்பதில்லை என்கிறான் அவன். நீங்கள் எம்மை ஏமாற்றுகிறீர்கள். எனக்கு நேரம் இல்லாமையால் உன்னை ஒன்றும் செய்யாமல் போகிறேன். நீ ரோட்டில் நின்று பிச்சை எடுக்கலாம் என்று கூற, பேசாமல் வா என்று கணவர் என்னை இழுத்துக்கொண்டு போகிறார். டாக்ஸி ஓட்டுனருக்குக் கூற ஏன் நீங்கள் ரிசீட் வாங்கவில்லை என்கிறார். கோட்டல்களில் ரிசீட் கொடுப்பதில்லை. எத்தனை கோட்டல்களில் நின்றிருப்போம். ஒருவரும் ஏமாறவில்லை. உங்கள் ஆட்கள் தான் சீட் பண்ணி விட்டார்கள் என்று கூற அவர் ஒன்றும் சொல்லாமல் வருகிறார். மூண்டும் இரண்டும் ஐயாயிரம் கோட்டை விட்டுவிட்டோம் என்கிறார் கணவர். பின் நாம் தொடருந்தில் நிஜாமுதீன் வந்து அங்கிருந்து இன்னொரு டாக்ஸி பிடித்து டெல்லி வந்து விமானம் சென்னையில் இறங்கியதும் தான் மனம் நிம்மதியடைந்தது.1 point- என் இந்தியப் பயணம்
1 pointமேலே உள்ளது கூட உண்மையான அகழ்வாய்வுப் பொருள் இல்லை என்று நினைக்கிறேன். மாதிரிக்காகச் செய்து வைத்துள்ளனர். நன்றி வருகைக்கு பின்னை என்ன மிக்க நன்றி ஏராளன்1 point- என் இந்தியப் பயணம்
1 point1 point- என் இந்தியப் பயணம்
1 pointஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.1 point- தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
உந்த வாள் வெட்டுக் கோஸ்டிக் கம்பனியளும் பதியோனுமே? 🤔 🤑1 point - “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.