Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19668
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3125
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33809
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    39344
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/11/24 in Posts

  1. எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக்தியை தாறது. கொஞ்ச நாளைக்கு "முன் லைனிலே, பொசிசன் எடுத்து நிக்கப்போறன் - ஓவர்" ஒருகாலத்தில் (மைத்திரி வந்த போது) கொழும்பில் போய் இருப்பது (ஊரில் இருக்க முடியுமா தெரியவில்லை) திட்டமாக இருந்தது. கோத்தபாயவின் வருகை, கொரோனாவின் தாக்கம், பொருளாதார நெருக்கடி இதனால் முடிந்தவர்கள் அனைவரும் நாட்டைவிட்டு ஓடியதால் தற்போது வந்திருக்கும் Brain Drain போய் இருக்கும் எண்ணத்தை வெகுவாக பாதித்துள்ளது. இப்பத்தான் 38ஆவது வயசு நடப்பதால் பென்சன் எடுக்கும் காலம் பத்தி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பொருளாதார ரீதியில் சிறு உற்பத்தி ஏற்றுமதிகளோட மட்டுமில்லாமல் தகவல் நுட்பத் துறை சார்பான ஏற்றுமதிகளை எமது பக்கங்களில் ஊக்குவிப்பது தான் இப்போதைக்கு நாங்கள் லடயஸ்பொறா டமில்ஸ் செய்ய வேண்டியது/செய்யக் கூடியது. ஆனால் யாழ் மாவட்டத்தில் வேலை வாங்குவது மிகவும் கடினம். உதாரணத்துக்கு எனது நண்பன் ஒருவன் ஒரு சுயதொழில் செய்தார். அவரின் operations ஐ பாத்தவுடனேயே அதில் பல குறைபாடுகளை கண்டு பிடித்துவிட்டேன். இந்த இந்த மாதிரி செய், இத ட்ரை பண்ணு இன்னும் லாபத்தில ஓடும் எண்டு சொன்ன போது உதெல்லாம் வெளிநாட்டுக்குத்தான் சரி, எங்கட ஆக்களுக்கு உதுகள செய்ய பஞ்சி எண்டு சொல்லிப் போட்டான். ரெண்டு வாரியத்தில அவனிண்ட லாபத்தை விட கால்வாசி சம்பளத்தில அரச வேலை வந்தவுடனேயே பிஸினசையும் மூடிப்போட்டு இருக்கிறார். அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள். பொருளாதார இறுக்கத்தின் பின்னர் எனது நண்பர்களில் பல்கலை போன 90% எஞ்சினியர்/டொக்டர் ஊரிலே இல்லை. இருப்பவர்கள் ஆங்கில அறிவு போதாமையால் போகமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.
  2. (குறுங்கதை - அறிவியல் புனைவு) சிவப்புக்கல் -------------------- 'அம்மா.....' 'என்ன பிள்ளை.... போக வேணுமா?' அம்மா கண்களை முழிக்காமலேயே கேட்டார். அது அமாவாசையை அண்மித்த நாள், ஆதலால் கும்மென்ற இருட்டு சுற்றி வரவும். பெரிய காணியில் அவர்களின் வீடு காணியின் முன் பக்கமும், கழிவறை காணியின் அடிப்பக்கமும் இருந்தன. அமாவாசை நாளாக இல்லாமல் பூரண சந்திரன் தான் மேலே நடு வானத்தில் நின்றாலும், ஊர் உறங்கும் இரவில், தனித்து கழிவறைக்கு போகும் துணிவு அவனுக்கு அறவே கிடையாது. 'ம்ம்.......' என்று இழுத்தான் அவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை அவன். போன மாதம் அவனுக்கு பத்து வயதுகள் ஆகியிருந்தது. அன்றைய இரவும் அவன் படுக்கையை ஈரமாக்கியிருந்தான். இதுவரை அவனின் அம்மா எதற்கும் சிறிதளவும் முகம் சுழித்தது இல்லை. ஒரே பிள்ளை, நீண்ட நாட்கள் காத்திருந்து கிடைத்தவன் என்று தங்கள் பிள்ளையை ஒரு தாம்பாளத்தில் தாங்கிக் கொண்டிருந்தார்கள் அவனின் அம்மாவும், அப்பாவும். அவனின் படுக்கையை ஈரமாக்கும் பழக்கம் பற்றி அம்மாவோ அல்லது அப்பாவோ உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு எட்டு வயது இருக்கும் போது வேறொரு ஊரில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் அவனைக் கூட்டிச் சென்றனர். அந்த வைத்தியர் இது ஒன்றும் பெரிய பிரச்சனையே இல்லை, இந்தப் பழக்கம் இன்னும் ஓரிரு வருடங்களில் அதுவாகவே நின்று விடும் என்று சொன்னார். இரவு நித்திரைக்கு போகும் முன் ஒரு தடவை கழிவறைக்கு போய் வருவது, இரவில் நேரம் பிந்தி எதையும் குடிப்பதை தவிர்ப்பது என்று சில ஆலோசனைகளையும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொன்னார் அந்த மருத்துவர். மருந்துகளோ அல்லது வேறு சிகிச்சைகளோ வேண்டவே வேண்டாம் என்று சொல்லியும் விட்டார். முக்கியமாக இந்த விடயம் அவன் மனதில் ஒரு குற்றமாக பதிந்து, அதனால் எதிர்காலத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையோ அல்லது வேறு எதுவும் உளச் சிக்கல்களோ வருவது போல நடந்து கொள்ளக் கூடாது என்ற ஆலோசனையையும் சொல்லியிருந்தார். அம்மாவும், அப்பாவும் வேறு எவருடனும் இதைப் பற்றி கதைக்காமல் இருந்ததற்கு அயலூர் வைத்தியரின் இந்த அறிவுரையும் ஒரு காரணம். ஊரில் பலருக்கும், கிட்டத்தட்ட எல்லோருக்கும், ஏதோ ஒரு பட்டபெயர் இருந்தது. ஒருவர் இல்லாத நேரத்தில் அந்த நபரைப் பற்றிய கதை ஏதும் வந்தால், அவரின் பட்டப் பெயரை சொல்லிக் கதைப்பதே இங்குள்ளவர்களின் வழக்கம். பல பட்டப் பெயர்கள் அந்தந்த ஆட்களின் உடலில் இருக்கும் குறைபாடுகளை குறிப்பன. இது பிழையென்று கருதும் அளவிற்கு இதை ஒரு பெரிய விடயமாக அவர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கவில்லை. வேறு சில பட்டப் பெயர்கள், அதன் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்தவுடன், சிரிப்பை உண்டாக்கும். ஒருவரின் பட்டப் பெயர் - 11 மணி. அந்த நபர் இரவு 11 மணிக்கு இன்னும் ஒரு வீட்டின் கதவை அடிக்கடி தட்டினாராம், அதனால் அவரை '11 மணி' என்றே எல்லோரும் சொல்லிக் கொள்வார்கள். அவனின் பெற்றோர்கள் இப்படியான ஒரு பட்டப் பெயர் தங்களின் ஒரே மகனுக்கு வந்து விடக் கூடாது என்ற இன்னொரு காரணத்திற்காகவும் இந்த விடயம் பற்றி எவருடனும் கதைப்பதில்லை. ஆனாலும் அந்த வைத்தியர் சொன்னதிற்கு அடுத்த வருடமும், அவனின் ஒன்பது வயதில், அவனிடமிருந்து அந்தப் பழக்கம் போய் விடவில்லை. இன்னொரு ஊரில் ஒரு கோவில் இருக்கிறது என்றும், அங்கே போய் ஒரு நேர்த்திக் கடன் வைத்தால் நினைப்பது கிட்டும் என்றும் யாரோ வேறு ஏதோ ஒரு விடயத்தில் சொன்னதைக் கேட்டு, அவனின் அம்மாவும், அப்பாவும் அவனை அங்கு கூட்டிச் சென்றனர். அந்தக் கோவில் ஒரு பெரும் ஆலமரத்தின் உள்ளே இருந்தது. ஓங்கி அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த அந்த மரத்தின் சில கிளைகள் பூமியை தொட்டும் தொடாமலும் நீண்டு வளர்ந்திருந்தன. அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளே கோவிலுக்குள் செல்லும் வாசல்கள். கோவில் என்பது தகரத்தால் கூரை போடப்பட்ட ஒரு சிறு மேடை மட்டுமே. மேடையின் நடுவில் கடும் சிவப்பு நிறத்திலான சிலை ஒன்று இருந்தது. அந்த சிலையின் தலை ஒரு பாம்பின் தலை போன்றும், உடல் பல கைகள் உடைய ஒரு மனித உடல் போன்றும் இருந்தது. அதை ஒரு பாம்பு தெய்வம் என்றே அங்கே உள்ளவர்கள் சொன்னார்கள். அவர்கள் மூவரும் கும்பிட்டு, சில தடவைகள் அந்தச் சிறு மேடையை சுற்றி வந்த பின், அங்கு பூசாரி போன்று இருந்த ஒருவர் அவனின் அம்மாவிடமும், அப்பாவிடமும் ஒரு சிவப்பு நிற துணித் துண்டைக் கொடுத்தார். அதை அவர்கள் ஆல மரத்தின் ஒரு சிறு கிளையில் சுற்றி, இறுக்கமான ஒரு முடிச்சு போட்டனர். பாம்புக் கோவிலில் நேர்த்தி வைத்து இப்பொழுது ஒரு வருடம் ஆகிவிட்டது. சில நாட்களில் நடு இரவில் முழித்து எழுந்து அம்மாவை கூட்டிச் செல்லும் அவன், வேறு பல நாட்களில், இன்னும் அவனை அறியாமல், பழைய பழக்கத்தையே தொடர்ந்து கொண்டிருந்தான். சில காலை வேளைகளில் அடுத்து என்ன செய்வது என்ற கவலை அம்மாவின் முகத்தில் வந்து போவதை அவன் பார்த்தான். தன்னாலும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவனுக்குள்ளும் இருந்தது. பின்னர், திடீரென சில நாட்களாக அவன் நடு இரவில் எழும்புவது இல்லை, அவனின் பழக்கமும் முற்றாக நின்று போனது. 'பிள்ளை, நீ இப்ப இரவில் எழும்புவதில்லை...' என்றார் அம்மா ஒரு நாள் காலையில். 'நீங்கள் அன்று கொடுத்த கல்லை நான் என்னுடனேயே வைச்சிருக்கிறன், அம்மா.' முகத்தில் திகைப்புடன், 'நான் எப்ப உனக்கு கல்லு கொடுத்தேன்...?' என்று அவனையே கூர்ந்து பார்த்தார் அவனின் அம்மா. 'அது தான், சரியாக இரண்டு கிழமைக்கு முன், இரவு நீங்கள் என்னை கூட்டிக் கொண்டு போனீர்கள். அன்று இரவு ஒரே வெளிச்சமாக இருந்தது. சந்திரன் எங்கட வீட்டிற்கு கொஞ்சம் கிட்ட வந்து பெரிதாக இருந்தது.' இரண்டு கிழமைக்கு முன் முழு அமாவாசை நாளே என்று அவனின் அம்மா திடுக்கிட்டார். 'அன்று கல்லை கொடுத்து நான் என்ன சொன்னேன், பிள்ளை?' 'இந்தக் கல்லை என்னுடன் வைத்திருக்கச் சொன்னீர்கள். இது என்னோட இருந்தால் என் பயமும், பழக்கமும் போயிடும் என்றும் சொன்னீர்கள்.' அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக அவனின் அம்மாவிற்கு நினைவில் இல்லை. அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கவும் முடியாது என்றவர், 'எங்க, அந்தக் கல்லை எடு பார்ப்பம்...' என்றார். அவனுடைய காற்சாட்டைப் பையிலிருந்து அவன் ஒரு கல்லை எடுத்தான். அழுத்தமான, உருண்டையான அந்தக் கல் கடும் சிவப்பு நிறத்தில் இருந்தது.
  3. இந்த சம்பவம் நடக்கும் முன்னர், இந்த பெண்மணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் படித்த பாடசாலைகளின் வகுப்பு நண்பர்களின் வட்ஸ் அப் குழுமங்களிலும் எவரும் இவர் பற்றி எந்தவொரு காணொளியையும் இணைத்தது இல்லை. பொதுவாக ஆரோக்கியமான உரையாடல்கள் இடம்பெறும் குழுமங்களாக இவை இருந்தன. ஆனால், இந்த முட்டாள்களின் உணர்ச்சிவசப்பட்ட செயலால், இச் சம்பவம் பற்றி வெளியானதில் இருந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் இப் பெண்ணின் காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். யார் என்றே தெரியாமல் இருந்த ஒருவருக்கு, சின்ன வேலை வெட்டி இல்லாமல், இணையத்தில் குப்பைகளை மட்டும் மேய்கின்றவர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பெண் இன்று எம் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உள்ளவர்களுக்கு தெரிந்த பிரபலமான ஒருவராக மாறிவிட்டார். என்று @கிருபன்எழுதியிருந்தார் இந்த திரியில். இன்று இந்த மலத்தை எல்லாரும், சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் முகர்ந்து பார்த்து விட்டு, தாம் மட்டும் நாற்றத்தை ரசிக்காமல், மற்றவர்களுக்கும் பகிர்கின்றனர். இதனால் இங்கு வெற்றியடைந்தது அந்த மலம் தான்.
  4. பத்திரிகைச் செய்தி 1 தமிழர் பாசறைப் பத்திரிகை 10.04.4354 திங்கட்கிழமை. தமிழ் பெருங்குடிகளின் தொன்மை, அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம் மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே. அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தமிழர் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார். இற்றைக்கு 23 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின் குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க, அதை மக்கள் தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார். எமது பெரும்பாட்டன் கோஷானின் குறிப்புகளை இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ முயன்று வருவதாகவும், அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான தகவல்களை, “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர், கோஷானின் குறிப்புகளைப் பாதுகாக்க அதனை PDF ஆக பிரதியெடுத்து தமது வரவேற்பறையில் தொங்க விட்டு, தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார். அத்துடன் 45 நூற்றாண்டுகளுக்கு முன்பு புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன் தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை கண்டு பிடித்த ஒரு தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப, அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி, என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார். உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின் முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது. பத்திரிகை 2 அறிவுச்சுடர் பத்திரிகை 14.04.4354 வெள்ளிக்கிழமை “தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.4354 ல் வெளியிட்ட தகவல்களை சரிபார்தத தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி 21 ம் நூற்றண்டில் வாழ்ந்த கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில் நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார். அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர் வீட்டுக்கு முன்னால் திரண்ட தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். அவர ஒரு வந்தேறி என்பதையும் வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார். வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள் பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பத்திரிகைச்செய்தி 3 பிபிசி 16.04.4354 ஞாயிற்றுக்கிழமை பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச் செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த கட்சித் தலைவர் இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். (பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)
  5. சோமசுந்தரனார் அவர்கள் இன்பத்துப்பாலின் சிறந்த கவிநயங்களை கூர்நோக்கால் சிறப்புறக் காட்டி, நம்மையெல்லாம் மகிழ்விக்கும்போது, பேரின்பத்துப்பாலில் அதற்கிணையான கவித்துவப் படைப்பு ஒன்று அரைகுறையாக நினைவில் விக்க, அது எதுவென நினைவுகூர, ஓரிரு நாட்கள் ஆயின. சோமசுந்தரனார் போன்ற இலக்கியச் சுவைஞரின் கட்டுரைக்கு, பொருத்தமான பின்னூட்டம் எழுத, மீளவாசிப்பும், மறுவாசிப்பும் தேவைப்படுகிறது. அன்னார் சிறப்புறக் காட்டிய "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" - குறள் 1091 "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" - குறள் 1099 ஆகிய இரு குறள்களிலிருந்து பிறந்த கவிதையே "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" என்னும் சீவக சிந்தாமணி பாடல். (இச் சுவைக்கு இணையான கவித்துவம் கொண்டதோர் படைப்பு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - "உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய் விழைதருவேனை விடுதிகண்டாய்" என்று தொடங்கும் 46வது பாடல். இப்பாடலின் பேரின்பத்துக் கவித்துவத்தை விளக்கப் புகுந்தேன். அதுவே ஒரு பெரிய கட்டுரையாக விரிந்ததால், ஒருவார காலத்துக்குள் செப்பனிட்டு, தனியாகப் பதிவிடுகின்றேன். அக்கட்டுரை, சோமசுந்தரனாருக்கு சமர்ப்பணம். நிற்க. ) சோம சுந்தரனாரின் இலக்கியக் கட்டுரை, எனது கட்டுரைக்கு ஊக்கியாக அமைந்ததுபோல், திருத்தக்கத்தேவரின் சீவகசிந்தாமணி காப்பியம், சேக்கிழாரின் பெரியபுராணம் காப்பியத்துக்கு ஊக்கியாக அமைந்த வரலாறை இங்கு பதிவு செய்து, எனது பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன். சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத்தேவரின் கவியின்பத்தில் மயங்கி, எந்நேரமும், சீவசிந்தாமணி இலக்கியச்சுவையின்பத்தில் மூழ்கிக் கிடந்தான் குலோத்துங்கச் சோழன் மாமன்னன் அநபாயன். எங்கே சோழநாட்டை மீண்டும் சமணம் ஆட்கொண்டுவிடுமோ என்ற பேரச்சத்தில் மூழ்கியிருந்த சோழநாட்டு முதலமைச்சர் அருண்மொழித்தேவர், அநபாயன் மன்னனுக்கு சைவ அருளாளர்கள் 63 நாயன்மார்கள் குறித்து கவித்துவமாக எடுத்துரைக்க, அவர்கள் வரலாற்றை காவியமாகப் படைக்க முதலமைச்சர் அருண்மொழித்தேவரையே வேண்டினான் சோழ மன்னன். திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் பிறந்த வரலாறு இதுதான். சீவகசிந்தாமணிக்கும், கம்பராமாயணத்துக்கும் இணையான கவித்துவம் கொண்ட திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் இயற்றிய அருண்மொழித் தேவருக்கு "சேக்கிழார்" என்ற திருநாமம் சூட்டினான் சோழன்.
  6. தலைவர் புரொண்ட்லைனுக்கு கொடுத்த பேட்டியிலும் நாம் அமைக்கும் நாடு சோசலிஸ்ட் நாடாகவே இருக்கும் என்பதை கூறி இருந்தார் என நினைக்கிறேன். நாமும் அணுகவில்லை. தவிரவும் இது தனியே சோசலிச எதிர்ப்பு என்ற அளவில் மட்டும் அல்ல - அமெரிக்காவின் முகவர்கள் என தெளிவாக தெரிந்தோர் குறிவைக்கப்பட்டனர் (நீலன்). கூடவே இந்தியாவை நாம் எப்படி டீல் பண்ணிணோம் (ரஜீவ்) என்பதையும் அமெரிக்கா கவனித்திருக்கும் அல்லவா? ஆகவே அமெரிக்காவின் புலி எதிர் நிலைப்பாடு இறுகவும், கடைசி வரை தளராமல் இருக்கவும், நீங்கள் சொன்னவை உட்பட பல காரணங்கள் இருப்பினும், எமது “வணங்கா முடி” தனமும், “நாம் மட்டுமே எமது பிரச்சனைக்கு தீர்வை அடைவோம்” என்ற அதீத தற்சார்பும் கணிசமான காரணிகள் என்பது என் பார்வை. இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த, பலனை அறுவடை செய்ய நாம் முயலவில்லை என்பதோடு, எமக்கிருந்த early advantage ஐ தொலைக்கும் விதமாகவே நடந்து கொண்டோம். மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் நாம் நடைமுறை அரசை நடத்திய காலத்தில் கூட, அமெரிக்காவை எம்பக்கம் எம்மால் திருப்ப முடியவில்லை.
  7. தோல்வியின் பின்னர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வது அல்லது கட்சியில் பெரும் மாற்றங்களை கொண்டு வருவன என்பன நல்ல முன்னுதாரணங்கள். வெளிநாட்டு சதிகள், சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்கள், கள்ள வாக்குகள் என்று சில ஒரே மாதிரியான காரணங்களை சொல்லி, தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மாட்டோம் என்று பிடிவாதமாகவே இருக்கும் தலைவர்களும், தொண்டர்களும் தான் இன்று அதிகம்.
  8. தேர்தலும் குடுக்கல் வாங்கல் இன்றி நேர்மையாய் நடந்திருக்குது போல.......! 😁
  9. மிஸோக்களுடன் சில நாள்கள்… ராமச்சந்திர குஹா மிஸோரம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சில நாள்கள் இருந்தேன். அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் ஒருமுறைகூட அங்கு நேரில் சென்றதில்லை. அந்த வாய்ப்பும் கிடைத்தது. முதலில் விமானம் மூலம் அசாம் தலைநகரம் குவாஹாட்டியை அடைந்தேன். அங்கு பழைய நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். பிரமிக்க வைக்கும், பிரம்மபுத்திரா நதியின் அழகை ரசித்தேன். அங்குள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களிடையே மகாத்மா காந்திஜியின் போதனைகள் குறித்துப் பேசினேன். அடுத்து அய்ஜால் செல்லும் விமானத்தில் ஏறியதும் ஓர இருக்கையை விரும்பிக் கேட்டு வாங்கி அமர்ந்தேன். விமானம் உயரக் கிளம்பியதும் மெல்லிய பஞ்சுப் பொதிகளாய் உடன் வந்த வெண் மேகங்களையும், மலைச் சிகரங்களை உரசிவிடுவதைப் போல சென்ற விமானியின் சாகசத்தையும் ரசித்தபடியே அய்ஜாலில் இறங்கினேன். விமான நிலையத்தில் ‘உள் எல்லை அனுமதி’ படிவத்தைப் பூர்த்திசெய்தேன், பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசின் தொன்மையான இந்த வழக்கம், இந்தியக் குடிமக்களிடம் இன்றும் பின்பற்றப்படுகிறது. போக்குவரத்து ஒழுங்கு கிராமங்களையும் வயல்வெளிகளையும் பார்த்து ரசிக்க ரயில் பயணம்தான் விமானப் பயணத்தைவிட சிறந்தது. ஆனால், காரில் செல்வது அதைவிடச் சிறந்தது. லெங்புய் விமான நிலையத்திலிருந்து மாநிலத் தலைநகர் அய்ஜால் செல்ல ஒன்றரை மணி நேரம் பிடித்தது; மாநிலத்தின் நிலப்பரப்பைக் கண்டு ரசிக்கவும் மக்களுடைய வாழ்க்கை நிலையை ஓரளவு ஊகிக்கவும் அது போதுமானது. மலைக் குன்றுகளின் அமைப்பு, ஒரு காலத்தில் நாங்கள் வசித்த உத்தர பிரதேச மலை மாவட்டத்தை (இப்போது உத்தராகண்டில் இருக்கிறது) நினைவுபடுத்தியது. அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன். அகலம் குறைவான சாலைகளும் வளைந்து வளைந்து செல்லும் அவற்றின் பாங்கும், அருகிலேயே வேகமாகப் பாயும் நீரோடைகளும் சிறுவயதுக் காட்சிகளை நினைவுபடுத்தின. இங்கு மரம்-செடி-கொடிகள் தோற்றத்தில் வேறு மாதிரியானவை. ஏராளமாக மூங்கில் வளர்ந்திருந்தது, கணிசமான அளவில் இலையுதிர் காட்டு மரங்கள் வளர்ந்திருந்தன. உத்தராகண்டில் ஊசியிலைக் காட்டு மரங்கள்தான் அதிகம். மக்கள்தொகையும் இங்கு அடர்த்தியாக இல்லை, மக்கள் வசிக்குமிடங்களும் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்தன. கடைசியாகச் சொன்னது தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. தலைநகர் அய்ஜாலில் குன்றின் ஒவ்வொரு அடுக்கிலும் அடுத்தடுத்து வீடுகளைக் கட்டியிருந்தார்கள்; அது உடனே நைனிதால், முசௌரி நகரங்களை நினைவூட்டியது. வாகனப் போக்குவரத்து மிக ஒழுங்குடன், வட இந்திய மாநிலங்களைப் போல அல்லாமல் இருந்தது. வாகன ஓட்டிகள் அவரவருக்குரிய சாலை தடத்திலேயே இருந்தனர், நெரிசல் நீங்கி வாகனங்கள் நகரும்வரை பொறுமையாகக் காத்திருந்தனர். வலப்புறமாக எட்டிப் பார்த்து கிடைக்கும் இடைவெளியில் நுழைந்து மற்ற வாகனங்களும் மேற்கொண்டு நகர முடியாமல் பாதையை அடைக்கவில்லை. மகளிர் மேம்பாடு அய்ஜாலில் பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்கச் சென்றிருந்தேன். மாநிலத்திலேயே மிகவும் பழையதான அந்தக் கல்லூரி 1958இல் தொடங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஆண்-பெண் பேதமின்றி கலந்தே உட்கார்ந்திருந்தார்கள். உத்தர பிரதேசத்தின் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களிலும், கேரளத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாவட்டங்களிலும் இப்படிக் காண முடியாது. அந்தப் பகுதிகளிலும் கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். அங்கெல்லாம் பொறியியல் கல்லூரிகளில்கூட ஆண் – பெண் சேர்ந்து உட்காருவதை ஊக்குவிப்பதில்லை. அந்த வகையில், பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியானது மிஸோரம் மாநிலத்தின் பண்பாட்டை அப்படியே பிரதிபலித்தது. பெண்கள் இங்கு வீதிகளில் நடக்கும்போதும், கடைகளில் பொருள்களை வாங்கும்போதும், கடைகளில் காபி குடிக்கும்போதும் உடன் பயிலும், அல்லது வேலை செய்யும் ஆடவர்களுடன் சர்வ சாதாரணமாக கலந்தே செல்கின்றனர். மாநிலத்தில் மகளிர் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதாரணம். இதை மாநிலம் தொடர்பான புள்ளி விவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. பெண்கள் எழுத்தறிவில் அனைத்திந்திய அளவில் மிஸோரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 60% மகளிர், வீடுகளில் அடைந்துவிடாமல் வேலைக்குச் செல்கின்றனர். இது அனைத்திந்திய சராசரியான 30% என்ற அளவைப் போல இரண்டு மடங்கு. பிற மாநிலங்களைவிட அதிக ஊதியம் - அதிக பொறுப்பு மிக்க பணிகளில் மிஜோரம் மகளிர் இருப்பது கூடுதல் சிறப்பு. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசு அதிகாரிகள், மேலாளர்கள் ஆகிய பொறுப்புகளில் மிஸோரம் மாநிலப் பெண்கள் 70.9% என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. சிக்கிம் 48.2%, மணிப்பூர் 45.1% அடுத்துவருகின்றன. மென்மையாக ஒரு முன்னேற்றம் புவியியல்ரீதியில் ஒதுக்கப்பட்ட மாநிலமாக இருந்தாலும், மிஸோக்களின் சமூக முன்னேற்றம் பெரும் வேறுபாட்டைக் காட்டுகிறது. அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த பல்லாண்டு ஆயுத மோதல்களின் சுவடே தெரியாதபடி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்திய விமானப் படை மூலம் வானத்திலிருந்து தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு கலவரத்தை ஒரு காலத்தில் ஒடுக்கிய மாநிலமா இது என்று வியக்க வைக்கும் அளவுக்கு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) என்ற தீவிரவாத அமைப்பு இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ஆயுதம் கொண்டு 1966இல் போரிட்டது. அந்தப் போராட்டத்துக்கு லால்டெங்கா தலைமை தாங்கினார். 1966க்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால் மிஸோ மலைப் பிரதேசம் முழுவதும் உணவு தானிய விளைச்சல் இல்லாமல் உணவுப் பற்றாக்குறையில் சிக்கியது. அதனால் மக்கள் பட்டினி கிடந்து செத்தனர். அன்றைக்கு தில்லியை ஆண்ட ஆட்சியாளர்கள் இதைப் போக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவில்லை. இனி இந்தியாவுடன் சேர்ந்திருப்பதால் பயனில்லை என்று முடிவெடுத்த லால்டெங்கா, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் ராணுவ அரசுடன் கைகோத்து, இந்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார். கிழக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களையும் தளவாடங்களையும் அளித்தது. கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) எல்லைக்குள் மிஸோ இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டன. நவீன ஆயுதங்களைக் கையாள பயிற்சி தரப்பட்டது. இதில் 1966 பிப்ரவரியில் எம்என்எஃப் தீவிரவாதிகள், அரசு அலுவலகங்களைத் தாக்கியதுடன் தகவல் தொடர்பையும் துண்டித்தனர். சுதந்திரமான மிஸோ குடியரசை நிறுவிவிட்டதாக அறிவித்தனர். லுங்லெ என்ற சிறு நகரைக்கூட கைப்பற்றிவிட்டனர். அடுத்து அய்ஜாலை நோக்கி முன்னேறத் தொடங்கினர். உடனே இந்திய அரசு தரைப்படைப் பிரிவுகளை அங்கு அனுப்பியதுடன் விமானப் படையையும் கலவரத்தை ஒடுக்குவதற்கு ஈடுபடுத்தியது. இப்படித்தான் மிஸோரம் மீது, விமானத் தாக்குதலை நடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு சுமார் இருபதாண்டுக் காலம் தீவிரவாதிகளும் அரசுப் படைகளும் மோதிக்கொண்டிருந்தன. அதற்குப் பிறகு ஏற்பட்ட சுமுக உடன்பாட்டுக்குப் பிறகு லால்டெங்கா, சுதந்திர மிஸோ குடியரசின் அதிபராகவோ, பிரதமராகவோ ஆவதற்குப் பதிலாக - மாநில முதல்வரானார். மிஸோக்களின் சமூக ஒற்றுமை அய்ஜாலில் என்னுடைய பேச்சைக் கேட்க வந்த இளைஞர்களின் தாத்தா - பாட்டிகள் அல்லது அப்பா அம்மாக்கள் கடுமையான அந்தக் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள்; மிஸோ தேசியத் தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் சிக்கித் தவித்திருப்பார்கள், அல்லது உயிரைக் காத்துக்கொள்ள காடுகளில் தஞ்சம் புகுந்திருப்பார்கள், நிம்மதியற்ற வாழ்க்கையை நிச்சயம் வாழ்ந்திருப்பார்கள். சமாதானம் ஏற்பட்ட பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பியதுடன் மாநிலத்தின் அமைதி, வளர்ச்சிக்குப் பாடுபட்டது குறிப்பிடத்தக்கது. அது அவர்களுடைய துணிவையும் அறிவுக்கூர்மையையும் காட்டுகிறது. அரசுப் படைகளின் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் பழிவாங்கும் உணர்வை வளர்த்துக்கொள்வார்கள். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது தனிப்பட்ட முறையில் இழப்புகளையும் சோதனைகளையும் அனுபவித்தவர்களில் பலரும் ஜெர்மானியர்களின் இன ஒழிப்புக் கொள்கையால் பாதிக்கப்பட்டவர்களும் இப்படிப் பழிக்குப் பழி வாங்கத் துடித்தது வரலாறு. ஆனால், மிஸோக்கள் துயரப்படும் பிற மக்கள் மீது இரக்கப்பட்டார்கள். அதனாலேயே மியான்மரிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் அகதிகளாக வந்தவர்களுக்கு உணவு, உடை தந்து உபசரிக்கிறார்கள். மிஸோக்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள், பௌத்தர்களும் உண்டு. மணிப்பூர் கலவரத்துக்குப் பிறகு உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடிய குகிக்களுக்கும் மிஸோரம் மக்கள் புகலிடம் தந்து காத்தனர், இந்த வகையில் ஒன்றிய அரசு செய்திருக்க வேண்டிய கடமையை அவர்கள் நிறைவேற்றினார்கள். மிஸோ மக்களுடைய இந்த சமூக ஒற்றுமை உணர்வுக்கு முக்கிய காரணம் அவர்கள் விவசாயம் செய்வதற்கான விளைநிலங்களைப் பெற கையாளும் ‘ஜூம்’ என்ற பாரம்பரிய சமூக முறைதான் என்று ‘கிராஸ்ரூட்ஸ் ஆப்ஷன்ஸ்’ என்ற பருவ இதழ் கட்டுரை தெரிவிக்கிறது. ‘ஜூம்’ என்பது வேறொன்றுமில்லை மலைப் பிரதேசங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடிக்கு, ஏற்கெனவே வளர்ந்திருக்கும் செடி-கொடிகளை எரித்து, அந்தச் சாம்பலையே அந்த மண்ணுக்கு எருவாக்கி, பிறகு அதில் சாகுபடி செய்வது. காலப்போக்கில் அந்த மண்ணில் விளைச்சல் குறைந்தால் வேறிடத்துக்குச் சென்று அங்கு தாவரங்களை எரித்து அதை விளைநிலம் ஆக்குவார்கள். இப்படிச் செய்யும்போது அவர்களுக்குள் சமூக ஒற்றுமை வலுப்படும். அது அப்படியே மரபில் ஊறிவிட்டது. அதுவே மிஸோக்களின் சமூகப் பண்பாடாகிவிட்டது. ‘லாமங்கைய்னா’ என்று மிஸோ மொழியில் அதைச் சொல்கிறார்கள். ‘அடக்கமான சேவை’ என்பது அதன் பொருள். ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கு, குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கு, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது சமுதாயக் கடமை என்று மிஸோக்கள் கருதுகின்றனர். மிஸோக்களிடம் நாம் கற்க வேண்டும்! வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் நுழைவதற்கு முன்னாலேயே மிஸோக்களிடம் இந்தச் சமுதாயப் பண்பு நிலவியது. கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்த உணர்வை அப்படியே ஆதரித்து ஊக்குவித்தன. இப்படி சுயநலம் பாராமல் உதவுவதும்கூட மிதமிஞ்சிய ‘தூய்மைவாத’மாக உருவெடுத்தது. மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடி மக்கள் உள்ளூரில் கிடைக்கும் நாட்டு மது வகைகளைக் குடிப்பது வழக்கம். தூய்மைவாதம் காரணமாகவும் கிறிஸ்தவ தேவாலயங்கள் தங்களை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அரசால் அந்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இது பழங்குடிகளின் கோபத்தைக் கிளறிவிட்டது. அவர்கள் சட்டத்தை மீறி, நாட்டு மதுவகைகளைத் தொடர்ந்து குடித்தனர். இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் கடத்தி விற்பதும் அதிகரித்தது. மக்கள் உள்ளூர் சரக்கைச் சாப்பிட்டாலும் எவருக்கும் தொல்லை தராமல் அமைதியாகப் போய்விடுவதே வழக்கமாக இருந்தது. மதுவிலக்கை அமல்படுத்தியதுடன் காவல் துறையை விட்டு மிரட்டுவது, வீடுகளில் நுழைந்து சோதிப்பது என்பது போன்ற செயல்கள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தின. மதுவிலக்கு அமல் காரணமாக மாநில அரசுகளுக்கு மதுபானங்கள் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி வருவாய் வெகுவாகக் குறைந்தது. அந்த வரி வருவாயைக் கொண்டு மாநிலத்தின் சேதமுற்ற சாலைகளைப் புதிதாகப் போட்டிருக்கலாம். மிஸோரத்தை அதன் வரலாற்றுப் புத்தகங்கள் வாயிலாகவும் வெளிநாடு வாழ் மிஸோக்களைச் சந்தித்தன் மூலமாகவும் அறிந்திருந்த எனக்கு, நேரில் பார்த்தது அம்மாநிலம் மீதான மதிப்பைப் பல மடங்கு கூட்டிவிட்டது. ஆனால், தில்லியில் ஆள்வோரிடம் - பிற வட கிழக்கு மாநிலங்களைப் போலவே மிஸோரமும், அதிக கவனம் பெறவில்லை. வட கிழக்கில் அதிக மக்களவைத் தொகுதிகள் கிடையாது என்பதால் ஒன்றிய அரசை ஆள்வோர் அந்த மாநிலங்களின் தேவைகளைப் புறக்கணிப்பதுடன், ஏதோ தங்கள் அருளால்தான் அந்த மாநிலங்கள் பிழைப்பதைப் போல நடந்துகொள்கின்றனர். இருந்தாலும் பிரதான நிலப்பகுதியில் வாழ்வோர் மிஸோரம் மக்களிடமிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு சமுதாயமாக சேர்ந்து வாழ்வது எப்படி, தோல்வியிலிருந்தும் மனச் சோர்விலிருந்தும் மீள்வது எப்படி, சாதி பேதமில்லாமல் சமமாக அனைவரையும் நடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். மிஸோக்களைப் போல பெண்களைச் சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்; இசையையும் வாழ்க்கையையும் ரசனையோடு அனுபவிக்க வேண்டும். https://www.arunchol.com/ramachandra-guha-article-on-a-spirit-that-shines
  10. கோசான் சொல்வது போலவே இவை பற்றிய விளக்கங்கள் redundant ஆக மாறிக் கனகாலம். ஆனால், சம்பவங்கள், வரலாறு இவற்றை உணர்ச்சி எனும் வர்ணக் கண்ணாடியூடாகப் பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. ஒரு உதாரணம் மட்டும், நினைவூட்ட: அமெரிக்கா புலிகளை உதவி மாநாட்டிற்கு வருமாறு அழைக்கவில்லை, அழைத்திருந்தாலும் விசா கிடைத்திருக்காது (தற்போது சில சிறி லங்கா இராணுவத்தினருக்கு விசா கொடுக்காதது போல). அதன் பின்னர் நிகழ்ந்த ரோக்கியோ மாநாட்டிற்கு இந்தக் கோபத்தில் தமிழர் தரப்பு போகவில்லை. இது போன்ற, யதார்த்த நடைமுறையை உதாசீனம் செய்யும் உணர்ச்சி மயமான நிலை இன்னும் தமிழ் தேசியம் பேசுவோரிடையே இருக்கிறது. இது இருக்கும் வரை, பலர் தமிழ் தேசிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிப் போவது தொடரும், உணர்ச்சி மயமான "சிந்தனைத் தலைவர்கள்" இந்த தலைமுறையோடு இல்லாமல் போன பின்னர், ஏதாவது நல்லது எமக்கு நிகழலாம். அது வரை பெரிதாக எதிர் பார்க்க எதுவுமில்லை!
  11. படங்கள் V தாமரைக்கோபுரம் உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை. தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும் காலி கோட்டை உள்ளே கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள். அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும். ……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲….. என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..
  12. இதில் எதையுமே தமிழன்பன் குறிக்கவில்லை என்றுதான் படுகின்றது. தனது சொந்த நலனுக்காக மட்டுமே “உழைக்கும்” பிழைப்புவாதிதான் சுமந்திரன். தமிழ் மக்களுக்கோ, அவரைச் சேர்த்த கட்சிக்கோ சுமந்திரன் விசுவாசமாக இருப்பதில்லை. அது போல அவரின் மதத்திற்கும், ஊருக்கும், சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை. ஒரு “எலீஸ்ரிஸ்ற்” ஆக இருக்க முனைவதால்தான் எப்போதும் அதிகாரத்தில் இருக்கும் சிங்களத் தலைவர்களுடன் நல்லுறவில் இருக்கின்றார்.
  13. அப்படியே தாளிச்சிடுவோமாக்கும்….. இந்த திரியை பார்த்தாலே தெரியவில்லை….வளைச்சு, வளைச்சு கதைக்க மட்டுமே செய்வோம் என்பது…. பிரான்சில் இல்லாத தமிழ் அமைப்புக்களா? லா சப்பல் எங்கள் கையில்… அடுத்த தலைமுறை பெரிய…பெரிய பதவிகளில்….. என்ன பிரயோசனம்…. எமக்கு எது முக்கியம்? இவரின் பேச்சை நிறுத்தணும். அடித்தது எமக்கு மனச்சாந்தியை தந்தது… ஆனால் இவரின் வாயை அடைத்ததா? அடித்தவர்கள் கடைநிலை மக்கள் - அடிப்பது ஒன்றே அவர்கள் வசமுள்ள ஆயுதம். ஆனால் கதைப்பதை நிப்பாட்ட கூடிய வல்லமை உள்ளவர்கள் பதுங்குகிறார்கள்.
  14. @suvy @ரசோதரன் உங்க இருவருக்கும் விளங்கியது இங்கு சிலருக்கு விளங்கவில்லை விளங்க போவதுமில்லை .
  15. சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கடலூரில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.. இவர் பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று ஜோதிடர் கூறினார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். இதனிடையே வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இந்நிலையில் கடலூரில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் செல்வராஜ் மற்றும் சீனுவாசன் என்ற ஜோதிடரை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kili-sodhidar-arrested-for-claiming-thangarbachan-victory-in-cuddalore-constituency-anbumani-ramado-597117.html 🤣🤣...........
  16. மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன். அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே விவசாயி சின்னத்தை கேட்டு கொடுத்து விட்டதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால், இப்படியான எந்த காரணத்தையும் பிஜேபி கூட்டணியில் நிற்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் ஆணையம் கூறாமல், கேட்ட சின்னத்தை கொடுத்துள்ளது. பி.கு: இந்தியாவின் சனநயகம் என்பதே ஒரு கேலிக் கூத்து. வெறுமனே 4.3 வீதம் உள்ள பார்பனர்களால் 95.7 வீதமுள்ளவர்கள் ஆளப்படும் தேசம் அது. இதில் வேறு எதனை எதிர்பார்க்கலாம்?
  17. நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல நியாயமாய் கொடுக்கப்படவேண்டிய சின்னத்துக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என்றுதான் யோசிக்கிறேன் .
  18. தேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.
  19. 'அவன் சும்மாவே ஆடுவான், இதில நீங்கள் சலங்கை வேற கட்டி விடுகிறீர்கள்....' என்று ஒரு வழக்கு இருக்கின்றது......🤣
  20. நூற்றுக் கணக்கான யானைகளை தந்தத்திற்காகக் கொன்ற வீரப்பன் "வனக்காவலன்" ஆக முடியுமென்றால், ஸ்ராலின் "கிளி காத்த செம்மலாக" முயல்வதில் என்ன தவறு யுவர் ஆனர்😎?
  21. அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......! 😁 நல்லாயிருக்கு கதை.......!
  22. விடாக்கண்டன் இந்த இடத்தை விட்டு அரக்கிற பிளான் இல்லை போலை கிடக்கு....🤣
  23. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி… நடைபயிற்சி பொய்சொல்லி.. தமிழ் கடையில்.. கொடுவாமீனும்…காரல்மீனும் கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு… முழுகிவிட்டு… முழுச்சமையல்..நான்.. மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று நான் தெற்கு சமையல் அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு. மச்சும் தொடங்கியிட்டுது… தோனிவர..கைதட்டி மரியாதை செய்துவிட்டு மனம் விட்டு மச்சை ரசித்தால் நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது.. கிரகணம் வரப் போகுது.. கிங்சும் வெண்டுட்டுது.. சந்தோசத்தில் சமையல் நாலு அடுப்பிலும் நடக்குது.. கிரகணத்தை பார்க்க பின்புற காணியில்.. பொடியன் கமராவுடன் மனிசி போனுடன்.. நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி.. குழம்பு,காரல் தீயல் கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி.. பொடியன் அப்பா வாங்கோ வாங்கோ.. கண்ணடி போட்டு கிரகணம் காண புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது.. கைகூப்பி கண்மூடி மனுசியையும் மூடவைத்து கும்பிட்டவுடன் என்னை மறந்தவுடன்.. வித்தியாசமான வாசனை அடுப்படில் இருந்து அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தால்.. கீரையும் அடிப்பிடித்து காரல் தீயலும் தண்ணியின்றி என்னைப் பார்த்து சிரிக்குது.. அய்டியா ஆறுமுகம் எனக்கு.. அடுக்களை வேலயென்ன கொக்கா.. தீயலக்கு…புளியும் கீரைக்கு பாலும் விட்டு.. சமையல் முடித்தாயிற்று.. கிரகணம் பார்த்த கிரகங்கள் இரண்டும் குசினிக்குள் வர எனக்கு.. கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்.. தெற்குச் சமையலை சாப்பிட்ட மனுசியின் முகம்பார்க்க..அஞ்சி நானும் ரிம்கோட்டனுக்கு .. பறந்திட்டன்… இனி இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்.. சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும் தோனி தலைவா என்னை நீயே காப்பாற்று.. (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)
  24. அய்யனே..அஞ்சப்பரில் நிற்பதாகப் பார்த்தேன்..அப்ப நீங்கள் அந்தப் பக்கம்..காலையிலை பார்த்தால் கிட்ட நிற்பதாக..அட ஆளப்பிடிச்சு..இசுபைசியில் ஒரு பிரேக்பாஸ்ட்..லிங்கத்தில் 2 மாலுபணிசும்,ஒரு இசுபெசல் ஐஸ்கிறீமும்,பூரணியில் பருத்தித்துறைவடையும் வாங்கித்தர யோசித்தேன்...கிரகண லீவு எடுத்தபடியால்..முதலாளி .. வாவா..உடனை வாவென்றூ நிக்கிறான்...போகாவிட்டால் கதை கந்தல்..இதாலை கந்தையரை...காய் வெட்ட வேண்டி வந்திட்டுது...உங்களுக்கு ஜேர்மன் பக்கத்திலைதானே மீளவும் வருவியள்..தானே .. சந்திப்போம்...மு.கு..இந்த கடை மூன்றும் எனக்கு நடைத்தூரம்... உங்கள் வருகைக்கு நன்றி கந்தையர்...சந்திப்போம்..
  25. 2007 இல் எழுதப்பட்ட கட்டுரை ஆக்கம் :சச்சி சிறீகாந்தா இணையம் : இலங்கை தமிழ்ச் சங்கம் 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதி, தமிழர் தாயகத்தின் எல்லைகளுக்கு வெளியே புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலான அநுராதபுரத் தாக்குதலில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அடங்கலாக 146 சிங்களவர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்தோடிவிட்டன. புலிகளின் இந்த ஆக்ரோஷம் அண்மைய தமிழ் ஈழ வரலாற்றில் முன்னுதாரண மாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலின் மூலம் இலங்கைப் பாராளுமன்றம் உதட்டளவில் பேசிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு அர்த்தமற்றுப் போயிருப்பதுடன், சிங்கள இனவாதிகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் நடத்திவரும் அகம்பாவமான பேச்சுக்களும் அடிபட்டுப் போயிருக்கின்றன. துணிவான, சிங்களவர்களின் வாய்வானவேடிக்கைகளுக்குப் பணியாத இளைய‌ தமிழ்த் தலைமுறை ஒன்றிற்கு அவர்கள் தற்போது முகம்கொடுக்கிறார்கள். அநுராதபுரம் மீதான தாக்குதலை இன்றுவரை விமர்சித்து எழுதிவருவோர், இத்தாக்குதலுக்கு முன்னர் தமிழ் மக்கள் மீது மன்னாரில் இலங்கை இராணுவம் நடத்திய நரவேட்டைகள் குறித்துப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். அவசரமாகவும், முழுமையற்ற தகவல்களைக் கொண்டும் அநுராதபுரத் தாக்குதலை டைம்ஸ் பத்திரிக்கை செய்தியாக்கியிருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கை வேண்டுமென்றே தவறவிட்ட சில விடயங்களைப் பார்க்கலாம். முதலாவதாக, "பிரிவினைவாதப் போராளிகள்" என்று பொதுவாக அழைத்ததன் மூலம் அமைப்பின் பெயரை சரியாகக் குறிப்பிட அது மறந்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டில், டைம்ஸ் பத்திரிக்கை உட்பட்ட சர்வதேச ஊடகங்கள் புலிகளுக்கும், அவர்களின் எதிரிகளான தமிழ் பிரிவினைவாதிகள் என்று தம்மை உரிமை கோரும் அமைப்புக்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. அடுத்ததாக, அநுராதபுரம் நோக்கிக் கடத்திச் செல்லப்பட்ட பஸ் வண்டியில் எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது குறித்தும் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் எதனையும் வெளியிடவில்லை. மூன்றாவதாக, தாக்குதல் அணியினை வழிநடத்தியது யாரெனும் தகவலும் அச்செய்தியில் குறிப்பிடப் படவில்லை. பின்னர் அவர் ஒரு இந்து என்று டைம்ஸ் அடையாளம் கண்டிருந்தது. இங்கே உண்மை என்னவென்றால், தாக்குதல் அணிக்குத் தலைமை தாங்கியது மன்னார் பன‌ங்கட்டிக்கொட்டுப் பகுதியில் பிறந்தவரும், புலிகளின் மன்னார்ப் பிராந்தியத் தளபதியுமான லெப்டினன்ட் கேணல் விக்டர் என்று அழைக்கப்பட்ட கத்தோலிக்கரான மேர்சிலின் பியூஸ்லஸ் என்பதே உண்மை. 18 மாதங்கள் கழித்து, 1986 ஆம் ஆண்டு ஐப்பசி 12 ஆம் திகதி மன்னார் அடம்பனில் இராணுவத்தினருடனான மோதல் ஒன்றில் விக்டர் வீரச்சாவடைந்தார். புலிகளின் உத்தியோகபூர்வ இதழான விடுதலைப் புலிகளின் தகவல்களின்படி விக்டர் வீரமரணம் எய்தியபோது அவருக்கு வயது வெறும் 23 தான். நான் இத்தகவல்களை இங்கே தருவதற்கான காரணம், சிக்காகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ரொபேர்ட் பேப் போன்றோரின், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தளபதிகளோ அல்லது கரும்புலி வீரர்களோ புலிகள் அமைப்பில் இருக்கமுடியாது எனும் கருத்தினை உடைக்கத்தான். நான்காவதாக, டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியின்படி, தமிழர்கள் மீதான சிங்களவர்களின் தாக்குதல்களை முடுக்கிவிடவே அநுராதபுரம் மீது புலிகள் தாக்கினார்கள் என்று பொருள்ப்பட எழுதியிருந்தது. ஆனால், 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் மன்னார் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இராணுவத்தின் அட்டூழியங்களைப் பார்க்கும் பலர் டைம்ஸ் பத்திரிக்கை முன்வைக்கும் கருதுகோளினை பொய்யென்று நிறுவுகிறார்கள். இன்றுவரை, அநுராதபுர தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் புத்தகங்களாகட்டும், இணையத் தளங்களாகட்டும், டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான சிங்களவரின் பார்வையினைப் பிரதிபலித்தே எழுதுகின்றன. ஆனால், புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதியான லெப்டினன்ட் கேணல் விக்டர் அவர்கள் அநுராதபுரம் மீது தாக்குதலை நடத்த அவரைத் தூண்டியது எதுவென்பதை இவர்கள் அனைவரும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். 1985 ஆம் ஆண்டு வைகாசி 14 ஆம் திகதிக்கு முன்னர் மன்னார்ப் பிராந்தியத்தில் இராணுவத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அட்டூழியங்கள் குறித்த செய்திகளைப் பார்க்கும் ஒருவரால், இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் மன்னார் மக்களின் அமைதியான வாழ்வும் அவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டு வருவதையும், 1984 ஆம் ஆண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து 1985 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்கள்வரை கையறு நிலையில் வாழ்ந்துவரும் இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களின் அவலங்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. குறிப்பு : மன்னார்ப் படுகொலைகள் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த ஐந்து கட்டுரைகளை சிறீகாந்தா அவர்கள் தனது கட்டுரையில் விபரிக்கிறார். இக்கட்டுரைகளைப் படிக்கும் ஒருவருக்கு விக்டர் தலைமையிலான புலிகள் எதற்காக அநுராதபுரத் தாக்குதலை முன்னெடுத்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இத்தொடருடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டபோதிலும், சபாரட்ணம் இக்கட்டுரைகள் குறித்து எதுவுமே குறிப்பிடாததனால், அதற்கான இணைப்பினை மட்டும் இங்கு பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். https://www.sangam.org/2007/05/Mannar_Massacres.php?uid=2395&print=true
  26. உடைந்த ரெக்கோர்ட்டை போல இதையே எத்தனை தரம்தான் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்க போகிறீர்கள்? அமெரிக்கா என்ன எம் ஜென்ம வைரிகளா? இரு கைகள் தட்டாமல் ஓசை எழாது. அமெரிக்காவுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையான உறவு கசந்ததில் - அமெரிக்காவை போலவே ஈழத்தமிழருக்கும் சமபங்கு உண்டு. அமெரிக்கா இப்போ ஜேவிபி யை அணுகும் முறையை பார்த்தீர்களா? இதே அணுகுமுறையைத்தான் முதன் முதலில் ஈழ அமைப்புகள் மீதும் எடுத்தது. இலங்கையில் தமிழர் சுயர்நிர்ணயம் தொடர்பாக முதலாவது சர்வதேச பிரேரணையை நிறைவேற்றியது ஒரு அமெரிக்க மாநிலம். இலினோய் என நினைக்கிறேன். ஆனால் நாம் எம்மை அவர்களின் பங்காளிகள் என நிலை நிறுத்த தவறினோம். இதில் பாரிய தாக்கம் செலுத்தியது, சில ஈழத் தலைமகளின் செயலற்ற தனமும், சுயநலமும். அவர்களை அடுத்து வந்தவர்கள் திறமையானவர்களாயும், சுயநலமற்றவர்களாயும், தியாக எண்ணத்துடனும் இருந்தனர். ஆனால் அவர்களிடம், இந்தியா என்ன இந்தியா, அமேரிக்கா என்ன அமேரிக்கா, நம்மை மீறி எதுவும் நடக்காது என்ற மனோநிலை மேலோங்கி இருந்தது. இந்த மனநிலையே மேற்கு, கிழக்கு, நாலு திக்கிலும் அத்தனை பெரிய நாடுகளும் எம்மை சேர்ந்தழித்தமைக்கு வழி கோலியது. இதே அணுகுறையை, அதைவிட மிகவும் பலவீனமான நிலையில் இப்போ நீங்கள் முன்வைக்கிறீர்கள். இதை எழுதி அம்மஞ்சல்லிக்கு பயனில்லை என தெரியும். கேட்டதால் எழுதுகிறேன்.
  27. அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.
  28. இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்
  29. பீட்டர் ஹிக்ஸூக்கு இரங்கல்கள். ஹிக்ஸ் போசான் என்பது துகள் அல்ல அலை - புலக் கூறு.. எங்கிறார்கள் விஞ்ஞானிகள்.. ஏனெனில்.. இதற்கு இருப்பது புறக்கணிக்கத்தக்க திணிவு. மேலும் ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. மிகக் குறுகிய காலமே அவதானிக்கப்பட்டுள்ளன... அவை உருவாகிய மாத்திரத்திலேயே.. தாமாகவே பிரிந்து வேறு கூறுகளாகி விடுகின்றனவாம். அதனால்.. ஹிக்ஸ் அலை- புலக்கூறுகள்.. திணிவாகத்திற்கான.. கடவுளின் கூறு என்பதற்கான வாதம் பொய்த்துப் போய்விட்டது. ஆனால் ஹிக்ஸ் அலை-புலக்கூறுகள்.. வேறு போசான்கள்.. மற்றும் லப்ரன்களுடன் இடைதாக்கம் செய்து.. திணிவை உருவாக்கு உதவுவாதகச் சொல்லப்படுகிறது. இப்போ.. பேய்க் கூறுகளை (ghost particles) தேட வெளிக்கிட்டிருக்கிறார்கள். ஏனெனில்.. ஹிக்ஸ் உருவாகி பிரிந்து வேறு ஏதோ கூறுகளாகிச் செல்கிறது. அதென்ன கூறுகள் என்பது அடுத்த வினா..???! நாம் உருவாக்கியுள்ள சென்சர்களால் கண்டறியப்படக் கூடிய கூறுகள் அல்லாதவையாகக் கூட இருக்காலம். எதுஎப்படியோ.. ஹிக்ஸ் 1960களில்.. தன் சிந்தனையில் கண்டதை.. சுவிஸ் ஜெனிவா.. சேர்ன் ஆய்வுகூடம் நிஜயத்தில் அவதானித்ததாகச் சொல்லப்படுகிறது. What is the Higgs boson? In our current description of Nature, every particle is a wave in a field. The most familiar example of this is light: light is simultaneously a wave in the electromagnetic field and a stream of particles called photons. In the Higgs boson's case, the field came first. The Higgs field was proposed in 1964 as a new kind of field that fills the entire Universe and gives mass to all elementary particles. The Higgs boson is a wave in that field. Its discovery confirms the existence of the Higgs field. https://home.cern/science/physics/higgs-boson
  30. பார்த்தேன், ரசித்தேன், 10/10 எடுத்தே😎. பிறகு பெடியன் அங்கிள் எண்டெல்லே கூப்பிடுவான்🤣. நல்லா கேளுங்க எசமான்…அவர் எல்லாரும் தன்னை போல் மல்டி பில்லியனர் என நினைக்கிறார்🤣.
  31. என்ன கந்தையர் விசயம் தெரியாமல் கதைக்கிறியள்´? 😂 காசு மரம் இஞ்சை தானே நிக்குது 😎
  32. உண்மையிலேயே மிகவும் அருமையான மனிதர், எனக்கும் instructorஆக இருந்தவர், நீங்களும் நானும் ஒரே காலத்தில் அங்கே இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இங்கு அவர் வேறு விரிவுரையாளர்களுடன் வந்தபோது ஒன்று கூடல் ஒன்று வைத்தோம்
  33. லா சப்பல் வந்தால் எனக்கும் அறை விழலாம்😎 ஆனால் நான் இவர்களைப் பார்ப்பது முட்டாள்களாகத் தான். இந்த செயலால், அந்தப் பெண்ணின் செயல்பாடுகள் மாறவில்லை, அந்த வகையில் விளைவேதும் தராத ஒரு நடவடிக்கை இது. இன்னொரு கோணத்தில், இந்த லா சப்பல் சம்பவத்தை இணையத்தில் தேடினால் Paris Telegraph என்ற ஒரு யூ ரியூப் சனலில் "பாரிசில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட குழுவினால் அச்சுறுத்தல்" என்று சொல்லும் காணொளி வருகிறது. எந்த "குறிப்பிட்ட குழு" என்ற ஊகித்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த நிகழ்வு சேறடித்தலுக்கும் இனிப் பயன்படப் போகிறது என்பது தெளிவாகிறது. எந்த சட்டத் தரணியிடமும் ஆலோசனை கேட்டால் இதை உங்களுக்குச் சொல்வார்கள்: நீங்கள் என்ன உணர்கிறீர்கள், மகாஜனங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை விட, நீதி விசாரணையில் நீங்கள் என்ன ஆதாரங்கள், நியாயங்களை முன் வைக்கிறீர்கள் என்பதில் தான் கேசினுடைய வெற்றி, தோல்வி இருக்கிறது. என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.
  34. இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? என்றே யோசிக்கிறேன். ஒரு இனத்தை, மிக் கேவலமாக இனவாதமாக திட்டுகிறார். Inciting racial hatred, inciting violence, இதை ஒத்த பிரிவுகள் நிச்சயம் பிரான்சிலும் இருக்கும். இவவை எப்போதோ கம்பி எண்ண வைத்திருப்பதோடு, சமூக வலைதளத்துக்கு வருவதில் இருந்து நிரந்தர தடையும் வாங்கி கொடுத்திருக்கலாம். அடித்தவர்களின் உணர்சியை புரிந்துகொள்கிறேன். ஆனால் வேறு மாதிரி கையாள வேண்டிய விடயம் இது.
  35. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. Posted on April 7, 2024 by சமர்வீரன் 101 0 தமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது. அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது. தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன. மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வி தமிழ்த்திறன் 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
  36. 👍........ இவர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த பொழுது நன்றாகவே செயற்பட்டார் என்று நினைக்கின்றேன். சமூக ஊடகங்களில் சிறு சலசலப்புகள் ஒன்றோ, இரண்டோ வந்திருந்தன. மற்றபடி நான் வேறு எதுவும் கேள்விப்பட்டதில்லை. ஒரு தடவை இவரும், அங்கு பணியாற்றும் சில விரிவுரையாளர்களும் இங்கு அமெரிக்கா வந்து சில சந்திப்புகளை நடத்தினர். நானும் பங்குபற்றியிருக்கின்றேன். பின்னர் ஒரு தடவை நாங்கள் சில பேர்கள் கிளிநொச்சி போயிருக்கின்றோம். உங்களிடம் பொதுவெளியில் பகிரக் கூடிய தகவல்கள் எதுவும் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
  37. சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!
  38. பனைமரத்த வெட்டினால் கோபம் வராது கண்டியளோ! ஏனெண்டால் அது ஒரு கற்பகதரு.தமிழனை மாதிரி வெட்ட வெட்ட தளைக்கும் கொள்கை கொண்டது.ஊரிலை பனங்கொட்டையை எங்கையெண்டாலும் தாட்டு பாருங்கோ தன்னிச்சையாய் வளரும்.தண்ணியும் ஊற்றி வளர்க்க தேவையில்லை. பராமரிக்கவும் தேவையில்லை. மரம் வளர்ந்தா பிறகு அதின்ர பலனை அனுபவிக்க மட்டும் அதுக்கு கிட்ட போனால் போதும். மற்ற மரங்கள் அப்பிடியில்லை. கண்ணும் கருத்துமாய் வளர்க்கணும்.
  39. குமுகாயத்தின் சாரளங்களாக விரியும் இலக்கியப் பரப்பிலே சிறுகதை, குறுநாவல் என்பன விரைந்து வாசிக்கவும், இன்றைய அவசர உலகுக்குமான ஒரு படைப்பலகாகத் திகழ்கின்றது. அந்த அலகுக்கூடாக மயிலம்மாவை அழகோடு நகர்த்தியது அருமை. காதல், காமம் என்று அல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியலில் இளையோடும் நுட்பமான தவறுகளையும் யதார்த்தமான பார்வையுள் வாசகனிடம் கொண்டுவருதல் சிறப்பு. வாமனின் பயிலரங்கு சற்று நெருடலானபோதும், அதனை அனுமதித்த மயிலம்மாவின் தாகமும் கரணியமாகிறது. இலக்கிய நயத்தோடும், இளமைத்துள்ளலோடும் படைத்துள்ளமை சிறப்பு. உங்கள் குறுநாவலூடாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவர வைத்துவிட்டீர்கள். யாழ்க் களத்தின் "கதைவாரிதி,, என்றே தங்களை அழைக்கலாம் என்பது எனது பார்வை. சுவியவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்தாக்கப்பணி. யாழ்க்கள ஓவியரின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஓவியங்கள் குறுநாவலுக்கு மற்றொரு சிறப்பு. இப்படிப் பல படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் யாழுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் மற்றும் இலக்கியக் கடலிலே யாழெனும் படகின் சுக்கானைப் பிடித்து நகர்த்திவரும் மோகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
  40. படுதோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. அவரை மீண்டும் இன்னொரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவர் போட்டியிடுகின்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரத்துக்கு கூட அதிகம் போக வேண்டிய தேவை இருக்காது. அண்ணாமலையாரின் நிலை தான் பரிதாபம். தோற்றுப் போன பின் மாநில தலைவராக நீடிக்கும் வாய்ப்பும் அருகிவிடும் சந்தர்ப்பம் உண்டு.
  41. மயிலிறகு........... 18. உடனே யோகிபாபு ஐயோ அம்மா, அண்ணா நான் ஒன்றும் அவங்களைக் கடத்துறதுக்கு வரேல்ல. எங்கட அப்பான்ர மோட்டார் சைக்கிளை யாரோ ஒரு பொடியன் ஓடித் திரிகிறதாய் கேள்விப் பட்டன். அதுதான் அவனுக்கு இரண்டு தட்டு தட்டிப்போட்டு சைக்கிளைத் தூக்கிக் கொண்டு வரத்தான் பிளான் போட்டு பொடியளுடன் இந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள். அப்போது அஞ்சலா முன் வந்து அதை இவர் கேட்டிருந்தால் நானே குடுத்திருப்பேனே. இவர் "பாரில்" கடத்துறது தூக்கிறது என்று கதைத்ததால்தான் அது எனக்குத் தெரிந்து இவ்வளவும் நடந்திட்டுது. அதோ அந்தா நிக்குது மோட்டார் சைக்கிள். நான்தான் அது பழுதாய் இருந்தது. அவர் கம்பிரமாய் அதில் இருந்து இந்த ஊர் முழுதும் ஓடித் திரிந்தவர். அது பழுதாகி திண்ணையில் நிற்பதை பார்க்க எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதனால்தான் இவரிடம் அதைத் திருத்தி சில நாட்கள் ஓடிப்பார்த்துட்டு கொண்டு வரச்சொல்லி குடுத்தனுப்பினனான். எங்க அந்தத் தம்பியைக் கூப்பிடு என்று சொல்ல அரசு விதானை முன்னால் வந்து அவனை உங்களுக்குத் தெரியும் தம்பி,எப்போதும் என்கூடத்தான் வேலை செய்து வருகிறவன். பெயர் வாமன். இப்ப அவனும் இங்கு விதானையாகி இருக்கிறான் என்று சொல்ல வாமன் முன்னால் வருகிறான். ஓ.....அப்படியா நல்லது, அவனைப் பார்த்து நல்ல ராஜாவாட்டம் இருக்கிறாய்......அவர்களை நல்லபடியாய் வைத்து வாழ்ந்துகொள் என்று வாழ்த்துகிறான். வாமனும் சைக்கிள் சாவியை அவனிடம் தர நீட்டுகிறான். அதை அவன் தாய் மறித்து இந்தப் பிள்ளை விடயத்தில் அவர் செய்த பாவத்துக்கு தன் மோட்டார் சைக்கிள் மூலமாய் பிராயசித்தம் செய்திருக்கிறார். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். அப்போது மூத்தமகன் ரவியும் எங்களுக்கு கொஞ்சம் முன்னால்தான் விதானையார் பிரச்சினைகளைச் சொல்லி கூட்டி வந்தவர். அதுவும் நல்லதாய் போயிற்றுது. உங்களின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கு என்கிறான். மயிலம்மாவும் ஏதோ அந்தப் பெண்ணுக்கு உரித்தானவர்கள் வந்திருக்கிறீர்கள், சாப்பாடு எல்லாம் தயாராய் இருக்கு. இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் போக வேணும் என்று சொல்ல அங்கேயே படங்கு விரித்து தாமரை இலையில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப் படுகிறது. பின் அவர்கள் போகும் போது அந்த அம்மாள் தன் கையிலும் கழுத்திலும் இருந்ததைக் கழட்டி அஞ்சலாவுக்கு காப்பும் வாமனுக்கு சங்கிலியும் போடுகிறாள்.ரவியும், யோகிபாபுவும் கூட தங்களிடம் இருந்த சங்கிலி மோதிரங்களை கழட்டி இருவருக்கும் போடுகிறார்கள். பின் எல்லோருக்கும் நன்றி கூறிவிட்டு செல்கிறார்கள். போகும் போது மூத்தமகன் ரவி அவர்களை பார்த்து இனிமேல் உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும் எனக்கு சொல்லியனுப்பவும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களின் தாயாரும் மயிலம்மாவையும் மற்றும் எல்லோரையும் பார்த்து நீங்கள் நாலாம் சடங்குக்கு எங்கள் வீட்டிற்கு வாருங்கோ, நாங்கள் எல்லா ஏற்பாடும் செய்த்து வைக்கிறம் என்று சொல்கிறார்கள். யோகிபாபு வானில் ஏறும்போது அவனது கூட்டாளிகள் அப்பாடா கனகாலத்துக்குப் பிறகு நல்ல சாப்பாடு என்று சொல்லி ஏப்பம் வீட்டுக் கொண்டே வர யோகிபாபு அவங்களை பார்த்து நில்லுங்கடா....சும்மா தன்பாட்டில் வீட்டுக்ல வந்து நிக்கப் போற மோட்டார் சைக்கிளுக்கு என்னை உசுப்பேத்தி விட்டு நான் வானையும் வாடகைக்கு எடுத்து உங்களுக்கும் ஒரு வாரமா விஸ்கியும் பிரியாணியுமாய் அழுது கடைசில சைக்கிளும் கையை விட்டுப்போய் கையில கழுத்தில கிடந்த நகைகளும் போகப் பண்ணிட்டீங்களேடா. ஏறுங்கடா பஸ் ஸ்ராண்டில இறக்கி விடுவன் காலமை முதல் பஸ்ஸில இந்த ஊரைவிட்டே ஓடிடனும் சொல்லிப்போட்டன். வான் போகுது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏதோ சண்டை கலாட்டா நடக்கும் தான் விலக்குப் பிடித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விதானையும் விசயம் சப்பென்று போனதைப் பார்த்து மணமக்களை அழைத்து பொக்கட்டில் இருந்து பணம் எடுத்து இந்தா இதை வைத்துக் கொள் என்று குடுக்கிறார். என்ன அண்ணா இது சம்பளப்பணமா என்று நமுட்டுச் சிரிப்புடன் வாமன் கேட்க, போடாங்.....பக்கத்தில பிள்ளை நிக்குது இல்லையென்றால் இப்ப உனக்கு சொல்லுவான், ஏன்டா ஒன்றுமே இல்லாத விசயத்துக்கு இப்படிக் கலாட்டா பண்ணிட்டீங்களேடா. என்று சொல்லி விட்டுப் போகிறார். மற்றவர்களும் நல்ல சாப்பாடு நல்ல கலியாணம் என்று சொல்லி சிரித்துக் கொண்டு போகிறார்கள்.......! 🦚 மயில் ஆடும்........... 18.
  42. மயிலிறகு......... 16. பின் சுந்து வாமனைப் பார்த்து நீ ஏதோ கவலையுடன் இருக்கிறதுபோல் தெரியுது. என்னடா விஷயம்...... அதடா வந்து அஞ்சலைக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை அவனுக்கு சொல்கிறான். சரியடா .....அது அவர்களின் குடும்பப் பிரச்சினை.....அதுக்கேன் நீ கவலைப் படுகிறாய்..... அதில்லையடா ஏனோ மனசு கேட்க மாட்டேன் என்கிறது அதுதான்..... சரி நான் உன்னை ஒன்று கேட்கிறேன் நல்லா யோசித்துப் பதில் சொல்லு......நீ அஞ்சலையை விரும்புறியா...... அதுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியல்லையடா..... சரி இதுக்கு பதில் சொல்லு.....அவளைக் கலியாணம் செய்ய உனக்கு விருப்பமா..... ....ம்.....செய்யலாம் என்றுதான் தோன்றுகிறது.....ஆனால் அவர்களும் சம்மதிப்பினமோ தெரியாது..... சரி பக்கத்தில்தானே வீடு, வா போய் கதைத்துப் பார்க்கலாம்.....இருவரும் அஞ்சலை வீட்டுக்கு வருகிறார்கள்....... அவர்கள் வரும் வழியில் அவர்களைக் கடந்து ஒரு வெள்ளை வானும் கூட ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் (அவ்வூருக்கு அறிமுகமில்லாதவர்கள்) குறுக்கும் நெடுக்குமாய் போய் வருகிறார்கள். வானில் சாரதிக்கு பக்கத்து ஆசனத்தில் வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபு இருக்கிறான். ஒவ்வொரு முறையும் இவர்களைக் கடக்கும்போது வாகனத்தை மெதுவாக செலுத்தி நன்றாகப் பார்த்துக் கொண்டு செல்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு முன் வந்து நிக்க நாயும் மெதுவாகக் குரைத்துக் கொண்டு வாலாட்டுகின்றது. அதன் அருகில் அஞ்சலையின் அப்பா நிக்கிறார். அவர் உள்ளே பார்த்து மகளைக் கூப்பிட அவளும் ஜன்னலைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து இவர்களை அழைத்துக் கொண்டு போகிறாள். அப்பாடா நல்ல காலம் இப்ப நீங்கள் வந்தது..... ஏன் ஏதும் பிரச்சினையோ என்று வாமன் கேட்கிறான்..... ஓம்....அப்படித்தான் தெரியுது.....ஒரு வெள்ளை வானில் அவன் அடிக்கடி அங்கும் இங்குமாய் போய் வருகிறான். அதோடு இரண்டுபேர் மோட்டார் சைக்கிளிலும் .....அங்க மெதுவாய் திரும்பிப் பாருங்கோ என்கிறாள். அப்போது அந்த வான் மெதுவாக வீட்டை நோட்டம் விட்டபடி கடந்து போகிறது..... சுந்து சொல்கிறான் இப்ப நாங்கள் வரும்போது கூட இவங்கள் எங்களை ஒரு விரோதப் பார்வை பார்த்துக் கொண்டு போனவங்கள். வாமனுக்குப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் நீங்கள் ஒன்றுக்கும் பயப்பிடாதையுங்கோ நாங்கள் வந்திட்டமெல்லோ இனி நாங்கள் பார்த்துக் கொள்ளுறம் என்கிறான். சுந்து வெளியே சென்று கேட்டடியில் நின்று கொண்டு வாமுவை ஜாடையால் அழைத்து நீ போய் அவவிடம் கேளடா அல்லது நான் போய்க் கேட்கவா என்று சொல்ல .... இருடா நானே போய்க் கேட்கிறேன் என்று சொல்லி அவளிடம் வருகிறான். வந்தவன் அவள் கையைப் பிடித்து மா மரத்தின் பின்னால் அழைத்துச் சென்று, அஞ்சலா இது இந்த நேரத்தில் கேட்பது சரியோ எனக்குத் தெரியாது ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தெரிகிறது. உங்களுக்கு என்னைக் கலியாணம் செய்ய சம்மதமா யோசித்து சொல்லுங்கோ...... என்னடா திடுதிப்பென்று இப்படிக் கேட்கிறாய்.... நீங்கள் இல்லையென்று சொன்னாலும் பரவாயில்லை......ஆனால் யாராலும் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வர நான் விடமாட்டன்.....கொஞ்சம் யோசித்தவள் இரு வாறன் என்று போய் தந்தையையும் தாயையும் சேர்த்து வைத்து கதைத்து விட்டு வந்து ....ம்....சம்மதம் என்று சொல்கிறாள். அவளை அன்பு பொங்கப் பார்த்தவன் சுந்துவை அழைத்து கைகளால் "ஹார்ட்" காட்டி ....ம்......என்கிறான். கொஞ்ச நேரம் வெளியில் நின்று பார்க்கிறார்கள்.போன வானையும் ஆட்களையும் காணவில்லை. உடனே வாமன் அவளின் பெற்றோரை கவனமாய் இருங்கோ,கதவைத் திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவளையும் கூட்டிக்கொண்டு பின் தோட்டத்தால் வேகமாய் நடந்து வர சுந்துவும் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறான். மூவருமாக வயலுக்குள்ளால் வெகுதூரம் வந்து ஒரு ஒழுங்கையையைப் பிடித்து, சுந்து மோட்டார் சைக்கிளை ஓட்ட அஞ்சலா நடுவில் இருக்க வாமன் பின்னால் ஏற வண்டி வேகமாய் வந்து மயிலம்மா வீட்டின் முன்னால் நிக்கிறது......... அங்கு முன் முற்றத்தில் இருந்து மயிலம்மா,கனகம் அவளின் புருஷன் மகள் கோமளம் எல்லோரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பொடியளுடன் அஞ்சலாவைக் கண்டதும் எல்லோரும் திகைத்துப் போனார்கள். சுந்து சென்று அவர்களுக்கு நடந்தவற்றை சுருக்கமாய் சொல்ல வாமுவும் அஞ்சலையும் அவர்கள் வீட்டு முன் அலுவலக அறைக்குள் செல்கிறார்கள். சுந்து அவர்களிடம் வந்து அம்மா அவர்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகினம். இப்ப அவர்களுக்கு வைத்தியின் இரண்டாவது மகன் யோகிபாபுவால்தான் பிரச்சினை. அதுதான் இங்கு கூட்டிக்கொண்டு வந்தனாங்கள் என்று சொல்கிறான்..... 🦚 மயில் ஆடும்......... 16.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.