Leaderboard
-
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்13Points46793Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்12Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20019Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/15/24 in Posts
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
பாத்து,பவுத்திரமா எழுதுங்க தம்பி! அப்புறம் ஒண்டு கிடக்க இன்னொண்டு ஆவப்போவுது ராசா... உப்புடித்தான் சிஐஏ ஈராக்கிலை தார் பீப்பாவை கெமிக்கல் ஆயுதம் எண்டு அச்சொட்டாய் ஆதாரம் காட்ட......அந்த நாட்டையே அழிச்சு நாசமாக்கினார்கள். அதே போல லிபியா,சிரியா எண்டு ஒரு பட்டியலே நீளும்.... ஈராக்கிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 லிபியாவிலை சிஐஏ சொன்னது உண்மையெண்டால்😂 சிரியாவிலை சிஐஏ சொன்னது உண்மை எண்டால்😂 ஆப்கானிஸ்தானிலை சிஐஏ சொன்னது சரி எண்டால்😂 உக்ரேனிலை சிஐஏ சொல்லுறதெல்லாம் சரி எண்டால்😂 என்ரை அன்புத்தம்பி கோஷான் சொல்லுறதும் சரிதான்....🤣 அரோகரா....அரோகரா சாமிவாறார் வழி விடுங்கோ😎6 points
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? நேற்று நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பிறந்தநாள் ஒன்றிற்காகச் சென்றிருந்தேன். சுமார் 8 - 9 ஆண்களும், அதேயளவு பெண்களும், பெருமளவு சிறுவர்களும் இருந்தார்கள். வழமைபோல ஆண்கள் வட்டமாக அமர்ந்துகொண்டு பேச, பெண்களும் அவ்வாறே செய்தார்கள். நடுவில் சிறுவர்கள் தமது விளையாட்டுத் துப்பாக்கிகளோடு ஓடித்திரிய வீடு அமர்க்களமாகியிருந்தது. இளையராஜா பாடல்கள், அக்காலத்தில் எமக்குத் தெரியாமலிருந்த இன்னும் சில இசையமைப்பாளர்கள் , அநிருத்தின் சிட்னி இசை நிகழ்ச்சி என்று ஆரம்பித்து சில படங்கள் குறித்த விமர்சனம் என்று நீண்டு, அரசியலுக்குள் நுழைந்தது சம்பாஷணை. அங்கிருந்தவர்களில் பல தரப்பினர் இருந்தனர். புலிகளை ஆதரிப்பவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சிப்பவர்கள் என்று மூன்று வகையினர். நடுநிலைவாதிகள் அநேகமான வேளைகளில் அரசியலைப் பேச ஆரம்பிப்பார்கள். அங்கும் இன்றி, இங்கும் இன்றி அவர்களின் பேச்சுக்கள் இருக்கும். புலிகளை ஆதரிப்பவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சிப்பவர்கள் எப்போதாவது சம்பாஷணையில் தமக்கான தருணங்கள் வரும்போது கலந்துகொள்வார்கள். நேற்றும் அதுதான் நடந்தது. கருணாவின் பிளவு குறித்து ஆரம்பித்த சம்பாஷணை, டி.பி.எஸ்.ஜெயராஜ் குறித்து நீண்டபோது, அவர் அணமையில் கொழும்பு டெயிலி மிரர் பத்திரிக்கையில் எழுதிய "கிழக்கை இழந்த கருணாவும், ஈழத்தைப் பறிகொடுத்த பிரபாகரனும்" என்கிற கட்டுரை குறித்து பேசப்பட்டபோது, நான் தலைப்பைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன் என்று கூறவும் நடுநிலைவாதியான ஒருவர், "அது எப்படி கடந்து செல்வீர்கள்? உள்ளே என்ன இருக்கிறது என்று படிக்காமலேயே விமர்சிப்பீர்களா? தலைவர் கூட இறுதிவரை அவரது கட்டுரைகளை இன்னொருவர் மொழிபெயர்க்க அறிந்துகொண்டுதான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். நானோ, "அவர் புலிகள் குறித்து அவதூறாகவே எழுதிவருகிறார், அவரின் வாசகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களே, அவர்களை மகிழ்விக்கவே அவர் இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுகிறார்" என்று கூறினேன். இதில் மெதுவாக சம்பாஷணை சூடேறத் தொடங்கியிருந்தது. இடையிடையே சிலர் இதுகுறித்த தமது கருத்துக்களை கூறினார்கள். இடையில் யாழ்ப்பாணம் சென்று வந்த ஒருவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, நாவற்குழியில் கட்டப்பட்டிருக்கும் விகாரை பற்றியும் பேசினார். யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளைவிற்குப் பின்னால் தெரிவது பெளத்தர்களின் விகாரை என்று அவர் கூறி வேதனைப்படும்போது, உண்மைதான், அங்கு கிட்டத்தட்ட 148 சிங்களக் குடும்பங்களும் குடியேறியிருக்கிறார்கள் என்றுய் கேள்விப்பட்டேன் என்று கூறினேன். இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. டி.பி.எஸ்.ஜெயராஜின் அபிமானியான அவர், "சிங்களவர்கள் 83 இற்கு முன்னரும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அரச வேலைகள், தனியார் வேலைகள், வியாபாரங்கள் என்று வாழ்ந்தவர்கள், அவர்கள் மீள யாழ்ப்பாணத்திற்கு வருவதில் ஒரு பிரச்சினையுமில்லை. சண்டை ஆரம்பித்ததால் விட்டுச் சென்றவர்கள், தற்போது வருகிறார்கள். நீங்கள் கொழும்பில் சென்று வாழ்வதில்லையா? அதுபோலத்தான் அவர்களும் வடக்குக் கிழக்கில் வாழ்கிறார்கள்" என்று கூறினார். எனக்கு அது சரியென்று படவில்லை. "கொழும்பில் சிங்களவர்கள் கூறும் விலைக்கு அதிகமாகக் கொடுத்து, காணிகளை வாங்கி வீடுகளை கட்டுவதும், வாங்குவதும், வடக்குக் கிழக்கில் அரச இராணுவத்தின் உதவியுடன் தமிழர்களைக் கொன்றுவிட்டோ, அடித்துத் துரத்திவிட்டோ அடாத்தாகக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறுவதும் ஒன்றா? சிங்களக் குடியேற்றவாதிகளை ஆயுதமயப்படுத்தி, கூடவே பாதுகாப்பிற்கென்று இராணுவ முகாம்களையும் அமைத்து, சிறுகச் சிறுக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதும், தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்றா? கொழும்பில் புலிகள் முகாம் அமைத்துத் தமிழர்களை ஆயுததாரிகளாக்கி, சிங்களவர்களை கொன்றோ அல்லது விரட்டியோ ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறார்களா? என்று சற்றுச் சூடாகவே கேட்டுவிட்டேன். அவர் மெளனமாகிவிட்டார். எதுவும் பேசவில்லை. "நான் கூறவந்ததைக் கேட்காமலேயே நீங்கள் டென்ஷன் ஆகிவிட்டீர்கள்" என்று மட்டும் கூறினார். ஆத்திரப்பட்டதற்காக வருந்தினேன். ஆனால், இக்கேள்வி அடிக்கடி நடுநிலைவாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இவர்கள் கேட்பது தமிழர் தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்திவிடுவதாக எனக்குப் படுகிறது. இந்த வேறுபாட்டினை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமற்போனது எங்கணம்? இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?5 points
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
Palma விமானநிலையத்தில் ஒரு மினிபஸ் எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறியதும் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தின் பின்னர் ஒரு நட்சத்திர ஹோட்டல் முன்னால் நின்றது. நாங்கள் 4 குடும்பம் மற்றும் எனது கடைசி மகள். அதற்கு ஏற்ப 5 ரூம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தனையையும் கடலில் இருந்து 50 மீற்றர். ஜன்னலை திறந்தால் முன்னால் கடல். கீழே நீச்சல் குளம் sauna hammam jacuzzi மற்றும் மூன்று நேர சாப்பாடு வொலாந்தேர் (நூற்றுக்கும் மேற்பட்ட சாப்பாடுகள் கேக் ஐஸ்கிரீம் மற்றும் பழ வகைகள்) அத்துடன் 24 மணிநேர ஓபன் பார். மேலும் இரவு ஏழு மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிவரை ஆடல் பாடல் விளையாட்டுக்கள். அத்துடன் காலையில் 2 வான்கள் வந்து எம்மை ஏற்றி சென்று ஒவ்வொரு நகரமாக இந்த இடத்தின் விசேடமாக பார்க்க வேண்டிய இடங்களை காட்டி மீண்டும் கொண்டு வந்து கோட்டலில் விட்டு செல்கின்றன. நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. உண்மையில் மறக்க முடியாத அனுபவம். நான் எனது வாழ்க்கையில் 11 மாதங்கள் பல மணிநேர வேலை மற்றும் வேலை வீடு என்று வாழ்பவன். ஆனால் ஆவணி மாதம் மட்டும் கோடீஸ்வர வாழ்க்கை. மக்களுக்கும் அதையே பழக்கி இருந்தேன். இன்னொரு விடயம்: வீட்டில் நாங்கள் மேசையில் இருந்து சாப்பிடும் போது என் பிள்ளைகள் மற்றும் மனைவியின் கண்கள் என் கோப்பை மற்றும் கிளாசிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இங்கே அதிலிருந்தும் விதிவிலக்கு. நான் 4 அடி பாய்ந்தால் என் பிள்ளைகள் 16 அடி பாய்ந்ததை உணர்ந்தேன். அனுபவித்தேன். இதுவரை எனது பொக்கற்றில் இருந்து ஒரு சதம் கூட வெளியே எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நான் இந்த தீவில் பார்த்தவை மற்றும் இந்த தீவு பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். நன்றி.5 points
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன். போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது. தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள். அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன். சுற்றுலாவில் இருந்து தொடரும். ..4 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
3 points
- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஓவர் நக்கல்…🤣…. சோத்துக்கு சிங்கி அடிக்கும் எனக்கு சி ஐ ஏ தகவல் சொல்லுமா 🤣 நான் மேலே எழுதியது நடப்பவைகளை வைத்து நான் கருதும், எனது கருத்து. அது எனது கருத்து என்பதால்தான் எந்த டிக் டொக் ஆதாரத்தையும் இணைக்கவில்லை. அண்ணை நான் இவர்களை அச்சா பிள்ளைகள் என சொல்லவில்லை. அவர்களுக்கு சில மூலோபாய குறிக்கோள்கள் உள்ளன. அதில் ஒன்று மத்திய கிழக்கில் ஸ்திரமின்மையை பேணுவது. இன்னொரு ரஸ்யாவில் யெல்சின் அல்லது பழைய புட்டின் போல ஒரு நட்பு சக்தியை வைத்திருப்பது. இரெண்டையும் அடையும்/ தொடர்ந்து பேணும் எத்தனிப்பே நாம் இப்போ காண்பது. இப்போ ரஸ்யா உக்ரேனில் முடக்கப்பட்டுள்ளதா? நிச்சயமாக ஆம். மத்திய கிழக்கில் மட்டும் அல்ல, அண்டைநாடுகளான கசகஸ்தான், ஆர்மேனிய, ஜோர்ஜிய, துருக்மனிஸ்தான் க்கு கூட படை அனுப்பி மேலாண்மையை பேணும் நிலையில் இப்போ ரஸ்யா இல்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகிறன. ஏன்? முழுப்பலமும் 21% உக்ரேனை தக்கவைப்பதில் செலவழிகிறது. தமக்கு எந்த செலவுமில்லாமல் மேற்கு ரஸ்யாவை உலக இராணுவ அரங்கில் இருந்து வெளியேற்றி வைத்துள்ளது. டிரம்ப் வந்த பின் - நிலைமை நிச்சயம் தலை கீழாக மாறும் (ஏன் என்றால் டிரம்பின் துருப்பு புட்டின் கையில்). ஏதோ ஒரு ஒப்பந்தம் மூலம் புட்டினை தாஜா செய்வார் டிரம்ப். அது உக்ரேனுக்கு பாதிப்பாகவே அமையும். அதற்கு பிரதியுபகாரமாக ஈரானுக்கு வாயளவு உதவியோடு நிறுத்தி கொள்வார் புட்டின். ஆங்கிலத்தில் time is of the essence என்பர். உக்ரேன் விடயத்திலும் அதுதான். வாலி சொன்னது போல் ஈரானின் முல்லா+புட்டின் சாம்ராஜ்யங்கள் ஒரு சேர முடியும் நிலை ஏய்தப்பட - நொவெம்பர் 2024 வரைக்கும் மட்டுமே காலம் இருக்கிறது. இல்லாவிடின் சகல எதிர்வுகூறல்களையும் பொய்யாக்கி - பைடன் வெல்ல வேண்டும். பிகு மேலே எழுதியது என் கருத்து. தனிப்பட்டு என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 1. ஈரானில் சொந்த மக்களை,மத, இன, பால்நிலை, இனச்சேர்க்கை விருப்பு அடிப்படையில் துன்புறுத்தும் முல்லாக்கள் ஒழிய வேண்டும். 2. ரஸ்யாவில் ஜனநாயகத்தை கேலிகூதாக்கி, ஆயுட்கால அதிபராகியுள்ள, அன்நாட்டின் வளங்களை ஒலிகார்குகளு தாரை வார்த்த புட்டின் - ரஸ்யர்களுக்காக - ஒழிய வேண்டும் 3. ஏனைய சிறிய ஐரோபிய தேசிய இன வழி நாடுகளின் சுய உரிமையை கேள்விக்குள்ளாக்கி mother Russia விற்குள் போலந்து முதல் பெலரூஸ் வரை தேசிய இனங்களை விழுங்கும், புட்டினின் 2ம் ரஸ்ய சாம்ராஜ்ய கனவு தோற்கடிக்கப்படவேண்டும். 4. இந்த கனவின் முதல் போரிற்கு முகம் கொடுத்துள்ள உக்ரேனிய தேசிய இனம் வென்று, அதன் சுயநிர்ணய உரிமை நிலை நாட்டப்படவேண்டும். 5. பலஸ்தீனருக்கும், இஸ்ரேலுக்கும் கீறின் லைன் எனப்படும், 1969 இல் இருந்த சர்வதேச அங்கீகாரமுள்ள எல்லைகள் அடிப்படையில் இரு நாடுகள் அமைய வேண்டும்.3 points- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தனிப்பட்ட விதமாக பையனின் ஆங்கில அறிவுபற்றி நக்கலாக எழுதியது நீங்களே! கையை தூக்கிக்கொண்டு போய் இங்கிலாந்தில் இருந்துகொண்டு எதோ Professional Migration இல் போனமாதிரி படம்காட்ட வேண்டாம்! பலதடவை எழுதியாகிவிட்டது. ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே அது மட்டுமே உங்கள் அறிவை தீர்மானிக்காது!3 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்னும் நான்கு நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு முன்னர் குறைந்தது பத்துப் பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி யாழ்களத்தில் நடக்கும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😀 @suvy, @ஏராளன், @Eppothum Thamizhan, @MEERA, @தமிழ் சிறி, @kalyani, @சுவைப்பிரியன், @வாதவூரான், @வாத்தியார், @nunavilan, @பிரபா, @Ahasthiyan, @புலவர், @நீர்வேலியான், @நந்தன், @முதல்வன், @nilmini, @ஈழப்பிரியன், @நிலாமதி, @குமாரசாமி, @goshan_che, @கறுப்பி, @Kandiah573 points- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்? இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?3 points- இரசித்த.... புகைப்படங்கள்.
3 points3 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) RCB 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Bumra 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Kohli 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sanju Samson 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH2 points- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
வடக்கு கிழக்கில் சிங்களவர், தெற்கில் தமிழர் இரண்டும் ஒன்றல்ல. மேலே பலர் சுட்டியிருப்பது போல அரச ஆதரவுடன் குடியேற்றம் என்பது தான் முக்கிய காரணி. ஆனால், சில விடயங்களை நாம் எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஒரு சிங்களவர் மிக அடிப்படையான தமிழ் பரிச்சயத்துடன் வடக்கில் வேலை செய்ய நியமனம் கிடைத்தால் அதில் எதிர்க்க எதுவும் இல்லை. ஏனெனில், மிகக் குறைந்த சிங்களப் பரிச்சயத்துடன் தெற்கில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். அதே போல, யாழ் பல்கலைக்கு சிங்கள மாணவர்கள் விரும்பி வருவதையும் நாம் எதிர்க்க இயலாது. தெற்கின் பல்கலைகளில் தமிழ் மாணவர்கள் விரும்பிச் சென்று படிக்கிற நிலையும் இருக்கிறது.2 points- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எம்மவர்கள் தெற்கில் சென்று சிங்களம் தெரிந்தே அரச அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.வடக்கு கிழக்கில் சிங்கள உத்தியோகத்தர்கள் மக்களிடம் சிங்களத்தில் பேசி தமது அலுவல்களை செய்யும் படி மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வற்புறுத்தி சிங்களம் பேச முடியாத தமிழ் மக்களை மிகுந்த அசெளகரியத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.2 points- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://www.facebook.com/share/r/ux7vdTmqzsGpJYro/?mibextid=xCPwDs தமிழக முதல்வரின் புதிய கணக்கு.2 points- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
சுற்றுலா என்றாலே புதிய இடங்கள் புதிய தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அதுதான் எல்லாவற்றிற்கும் தயாராகப் போக சொல்லியிருக்கிறார்கள்.......நீங்கள் வேற........! 😂 பல்மா, ஸ்பெயினுக்கு அருகில் கச்சதீவின் அமைவிடம் போல் ஒரு கச்சான் அளவு தீவு.........! 😁2 points- கருத்து படங்கள்
2 points2 points- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
காஸா யுத்தத்திற்கு முதலே நெத்தன்யாகு மேல் பாராளுமன்றம் நம்பிக்கையில்லா பிரேரணையை பலமுறை கொண்டு வந்தது. இன்றும் நெத்தன்யாகுவிற்கு எதிராக வீதி மறிப்பு போராட்டங்கள் இஸ்ரேலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு யுத்தம் மட்டுமே அவரை பதவி கதிரையில் அமர்த்தியுள்ளது. நான் நினைக்கிறேன் இஸ்ரேலிய பொதுமக்கள் குழுவும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு விடுதலை/தீர்வை கொடுத்துவிட்டு தாங்கள் நிம்மதியாக வாழ நினைக்கின்றார்கள் போலும்.2 points- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? இப்படி ஒரு கேள்வி எழுவதே பிழை என்பது என் எண்ணம். நாவற்குழி குடியேற்றமும், கொழும்பில் தேவை நிமித்தம் போய் வாழ்வதும் ஒன்று என நினைப்பது அவர்களுக்கு தமிழர் போராட்ட வரலாறு தொடர்பான அடிப்படை அறிவே இல்லை எனக் காட்டுகிறது.2 points- தேனும் விஷமும்
2 pointsதேனும் விஷமும் ------------------------------ நண்பன் ஒருவர் ஒரு சந்தியின் முப்பது வினாடிகள் காட்சி ஒன்றை அனுப்பியிருந்தார். நண்பன் அயலூர் தான் என்றாலும், இப்பொழுது தான் இந்தச் சந்திக்கு முதன் முதலாகப் போயிருப்பதாகச் சொன்னார். எந்தச் சந்தியும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களினதும், கதைகளினதும் களம். 'எப்படியும் சந்திக்கு வந்திடும்', 'சந்தி சிரிக்கும்', 'கடைசியாக சந்தியில் தான் நிற்கப் போகின்றாய்' என்ற அடைமொழிகளுடன் சாகாவரம் பெற்று நிற்கும் சாட்சி சந்திகள். நண்பனின் சந்திக் காட்சி ஆரம்பிக்கும் இடத்தில், குமார் இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற அன்று, 1976 அல்லது 1977 அல்லது அந்த ஆண்டுகளில் ஒரு நாள், இராணுவம் வரிசையில் நின்றிருந்தார்கள். இராணுவ வரிசைக்கு நடுவில் பயத்தில் உதறி உதறி வீடு போய்ச் சேர்ந்தது அப்படியே நினைவில் இருக்கின்றது. இராணுவத்தின் மீதான பயமும், வெறுப்பும் ஆரம்பித்த இடம் இந்தச் சந்தி. அயலூரில் நடந்த ஒரு உதைபந்தாட்ட போட்டியில் எங்கள் அணியினரை அயல் ஊரவர்கள் அடித்து விட்டார்கள் என்று ஒரு நாள் திடுமென பலர் இந்தச் சந்தியில் கூடினர். நின்றவர்கள் சில வாகனங்களில் ஏறினர். ஒருவரின் கைக்குள் வெள்ளியாக மினுங்கும் ஒரு பொருள் இருந்தது. போகும் வழியில் யாரோ இவர்களை தடுத்து நிற்பாட்டியிருக்க வேண்டும், அன்று அறிந்தவரையில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. அதே இடத்தில் தான் சந்தி வாசிகசாலை, இன்னமும் இருக்கின்றது. ஊர் முழுக்க வாசிகசாலைகள் இருந்தாலும், இந்த வாசிகசாலையில் மட்டுமே டொமினிக் ஜீவா அவர்களின் 'மல்லிகை' சஞ்சிகை போட்டார்கள் என்று நினைக்கின்றேன். அந்த வயதுகளில் தெரிந்து வாசிக்கும் அறிவோ அல்லது பக்குவமோ இருக்கவில்லை. எந்தக் கல் என்றாலும் சுற்றி வந்து ஒரு கும்பிடு போடுவது போல, எல்லாம் ஒரே வாசிப்பே. தமிழ்நாட்டிலிருந்து வரும் எல்லா பிரபல சஞ்சிகைகளும் அன்று இந்த வாசிகசாலையில் போடப்பட்டன. ஜீவாவின் அயராத முயற்சியைப் பற்றிப் பின்னர் தெரிய வந்தது. இன்று ஈழ திரை படைப்பாளிகளுக்கும், தமிழ்நாட்டு திரை படைப்பாளிகளுக்கும் இடையில் இருக்கும் போட்டியும் இவ்வாறானதே. இதில் போட்டியே இல்லை, போட்டியே போட முடியாது என்பது தான் அன்றைய நிலையும், இன்றைய நிலையும். பின்னர் ஒரு நாளில் கமலம் கொலை வழக்கில் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவருக்கு இந்தச் சந்தியில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கடைசியாக அவருக்கு சிகரெட் ஒன்று கொடுக்கப்பட்டது. அருகிலிருந்தவர்கள் சுடவில்லை, சந்தியின் இன்னொரு பக்கத்திலிருந்து வேறொருவர் சுட்டார். நாங்கள் பலர் பார்த்துக் கொண்டு நின்றோம். அரசாங்கம் ஒரு நவீன சந்தையை இந்தச் சந்தியில் கட்டிக் கொடுத்தது. பின்னர் அந்த அரசாங்கமே ஒரு நாள் புதிய சந்தையின் மீது குண்டும் போட்டது. நவீன சந்தையின் கூரையும், மேல் தளமும் இடிந்து போனது. கீழ் தளத்தில் சில கடைகள் அதன் பின்னரும் இயங்கின. எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஒரு தனியார் கல்வி நிலையம் நடத்தி வந்தார். அதற்கு புதிய இடம் தயார் செய்வதற்காக சந்தையின் உடைந்த கூரையிலிருந்து நாங்கள் மரங்கள், வளைகளை எடுத்தோம். அதை ஒருவர் நகரசபைக்கு சொல்லிக் கொடுத்தார். நகரசபை விசாரணை, வாருங்கள் என்றது. நகரசபையில் வேலையில் இருந்த இன்னொருவர் எங்களைக் காப்பாற்றி விட்டார். இதுதான் சமூகம் என்றால் நாலு பேர்கள் என்பது. சந்தியின் நடுவே ஒரு பெரிய அரசமரம் நின்றது. ஒரு இயக்கத்தை இன்னொரு இயக்கம் தடை செய்த போது, இங்கே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அன்றைய தளபதி ஒருவர் அரசமரத்தின் அருகே அவரது வாகனத்தை நிற்பாட்டி, வாகனத்தின் மேல் ஏறி இருந்தார். இரண்டு இயக்கங்களுக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த இடம் இந்தச் சந்தி. அது அந்தக் கூட்டத்திலும் தெரிந்தது. கூடியிருந்த கூட்டம் ஏறி இருந்த தளபதியின் கருத்துகளை ஆமோதிக்கவில்லை. கூட்டம் சத்தம் போட்டது, மனைவிமார்களும், சொந்தங்களும் அழுதனர், ஆனாலும் காணாமல் போன அண்ணன்மார்கள் என்றும் திரும்பவில்லை. உயிர்களின் வாழும் விருப்பம் நிகரற்றது. அழிவுகளின் நடுவேயும் எல்லா உயிர்களும் வாழ முயன்று கொண்டேயிருக்கும். பெரும் பூகம்பத்தின் பின்னும் வாழ்க்கைகள் இருக்கும், அதே பாதைகளில் பயணிக்கும். அழகான பெண் பிள்ளைகளின் பின்னால் இந்தச் சந்தியினூடாகப் போய்க் கொண்டிருந்தவர்கள், எவை நடந்தாலும், என்ன இழப்புகளின் பின்னரும், அவை முடிய முடிய, போய்க் கொண்டே இருந்தார்கள். சந்தியின் ஒரு ஓரத்தில் நாங்கள் சிலர் ஒட்டுகளில் இருப்போம். 'இப்படியே இருந்து எப்படியடா உருப்படப் போகிறீர்கள்' என்று அக்கறையுள்ள அண்ணன் ஒருவர் ஒரு தடவை கேட்டார். நல்லூரில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பொழுது, இந்தச் சந்தியிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். தலைவர் கூட ஒரு இரவு வந்து பார்த்து விட்டுப் போனதாகச் சொன்னார்கள். மற்றைய இரவுகளில் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தோம். அநேகமான நண்பர்கள், தெரிந்தவர்கள் இந்தச் சந்தியிலிருந்து தான் கடைசியாக கொழும்புவிற்கு வாகனத்தில் ஏறினர். போனவர்களில் பலர் ஒரு முறை கூட இந்தச் சந்திக்கு திரும்பி வரவேயில்லை. வர முடியாத சூழலும் கூட. நான் பல வருடங்களின் பின் அந்தச் சந்திக்கு போன பொழுது, அந்த அரசமரம் இல்லை, இப்பொழுது அதே இடத்தில் புதிதாக ஒரு அரசமரம் வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய நினைவுகள் என்பது தேன் தடவிய விஷம் என்று சமீபத்தில் வாசித்திருந்தேன். அது எப்படி விஷமாகும் என்று ஒரே குழப்பமாகவே இருந்தது. ஒரு முப்பது வினாடிகள் வந்த காட்சியால் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கும் நினைவுகளிலேயே தேனும், விஷமும் கலந்து தான் இருக்கின்றது.2 points- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான் தனது இராணுவத் தளபதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்க, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. நூற்றிற்கு மேற்பட்ட ட்ரோன்களும், பலிஸ்ட்டிக் ஏவுகனைகளும் இத்தாக்குதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் பதிலடித்தாக்குதலை ஆரம்பிக்கும்போது, அயல் நாடுகள் எவராவது இஸ்ரேலிய விமானங்கள் பறப்பதற்கு தமது வான்பரப்பை திறந்துவிட்டால் அந்த நாடுகளையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரித்திருக்கிறது. ட்ரோன்கள் இன்னும் இஸ்ரேல் வந்து சேரவில்லை. இஸ்ரேல் அவற்றை அவதானிக்கின்றதாம். அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு உடவுவோம் என்று கூறியிருக்கிறது https://edition.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-04-13-24/index.html மத்திய கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் இஸ்ரேலுக்கு உதவும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஈரானைத் தோற்கடிப்போம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது. மேலும், ஏவப்பட்ட ட்ரோன்களில் சிலவற்றை அமெரிக்கா இடைமறித்திருக்கிறது. இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு நிலை மீது ஹிஸ்புள்ளா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பான பகுதிகள் என்று அறியப்பட்ட இடங்கள் நோக்கி நகருமாறு அரசாங்கம் அறிவித்திருக்கிறது.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் சொல்லும் படியும் இருக்கலாம் உறவே....................இரண்டு தளங்களில் இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கும் என்று வெளிப்படுத்திச்சினம்................ டென்மார்க் ஊடகத்தை நான் பார்ப்பது மிக குறைவு அவியிற மீனை துடிக்குது என்பினம் இப்பத்த ஊடகங்கள்................1999களில் இருந்த ஊடக நேர்மை இப்போது இல்லை எனது நண்பனின் நண்பன் அவன் முக நூலில் காணொளிகள் போட்டு மக்கள் மத்தியில் பிரபலமான நபர் பலஸ்தீனத்துக்கு ஆதரவாய் ஒரு பதிவை போட உடன அவனை சிறைக்குள் பிடிச்சு போட்டு விட்டது இப்ப ஆளும் அரசு😡...................எப்படி இருந்த டென்மார்க் இப்படி ஆகிட்டு மக்களுக்கு முழு சுதந்திரம் தந்து மக்களை நல்லா வாழ வைச்ச நாடு...................இந்தியாவை போல் அடக்குமுறைய கையில் எடுக்கினம் இப்ப ........................... ஈரான் மீது ஏற்க்கனவே பல பொருலாதார தடை போட்டு விட்டினம் இனி தடை போட என்ன இருக்கு....................இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடுக்காம இருப்பது தான் நல்லம்...................நெத்தனியாகு ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தின மாதிரி ஈரான் மீது தாக்குல் நடத்தினால் இரண்டு நாடும் பேர் அழிவை சந்திக்கும்............................. போர் இல்லாத உலகம் வேண்டும் ஆனால் மேல குமாரசாமி தாத்தா எழுதினதை வாசித்து பாருங்கோ இந்த உலகின் நின்மதியை கெடுத்ததே அமெரிக்கா தான்.............................. மோடி குஜராத்தில் முஸ்லிம் மக்களை கொன்று குவித்து தனது மத வெறிய காட்டினாரோ , அதே போல் முஸ்லிம் நாடுகளிலும் உந்த மத வெறி அதிகம் இருக்கு அதில் முதல் இடம் ஈரான்.........................................1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். RR , KKR, CSK, SRH. 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR, KKR, CSK, SRH. #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB. 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team SRH. 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team CSK. 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR. 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR. 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH. 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) LSG. 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) VIRAT KOHLI. 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB. 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) YUVENDRA CHAGUL. 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR. 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) SHUBMAN GILL. 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT. 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) R.ASHWIN. 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR. 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) ROHIT SHARMA. 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR. 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் எல்லோரும் விரும்பும் ஒரு பாட்டு 😂 இளையராசா பாட்டு ஆக்கும் வருந்துகிறேன்.1 point- "காதல் தந்த தண்ணீர் குடம்"
1 pointஎன்னய்யா சந்தி என்கிறீர்கள் வடை என்கிறீர்கள் கடைசிவரை எந்த இடமென்று சொல்லவே இல்லையே?1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
உண்மையில் இந்த பாட்டை எனக்கு அறிமுகம் செய்து வைச்சதே குமாரசாமி தாத்தா எனது தமிழ் நாட்டில் வசிக்கும் நண்பன் மற்றும் எனது தங்கைச்சி மாருக்கும் இந்த பாட்டை முக நூலில் பகிர்ந்தேன் சில வருடத்துக்கு முதல் அந்த சின்னன் சிறுசுகளுக்கு கூட இந்த பாட்டு பிடித்து விட்டது..............அருமையான பாடல்🙏🥰..............................................................1 point- இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு
1 point2022/2023 கால பகுதியில் உச்சம் தொட்ட வெள்ளிகள் இப்போது இலங்கை ரூபாக்கு இறங்க தொடங்கி உள்ளது. பணவீக்கம் ஒரு புறம் என்றாலும் அனுப்புகின்ற வெள்ளிக்கு அதிக ரூபாய்கள் தேறும்போது ஒரு சந்தோசம்தான் நமக்கு.1 point- "மர்ம இரவுகள்"
1 point"மர்ம இரவுகள்" பொதுவாக என் வேலை மாலை மூன்றரை மணிக்கு முடியும். ஆனால் அடுத்த நாள் விடுதலையில் யாழ்ப்பாணம் போக வேண்டி இருந்ததால், தொடங்கிய திட்டச்செயல் வேலையை [project work] ஓரளவு முடித்துவிட்டு போகவேண்டி இருந்தது. அப்பத்தான், எனக்கு மாற்றாக தற்காலிகமாக வருபவரால் அதை தொடர இலகுவாக இருக்கும். அத்துடன் அவருக்கு அதைப்பற்றி கொஞ்சம் தொலைபேசியிலும் மற்றும் குறிப்பேட்டிலும் ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியும் இருந்தது. ஆகவே அன்று என் வேலை முடிய ஆறு மணி தாண்டிவிட்டது. கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும், மற்றும் என்னுடன் பணிமனையில் இருந்து வரும் நண்பர்கள் எல்லோரும் வீடு போய் விட்டதாலும், நான் தனியவே போக வேண்டி இருப்பதால், பக்கத்தில் இருந்த கடை ஒன்றில் இரண்டு பீர் போத்தல் [bottle of beer] வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு போனேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் பேருந்தை தவறவிட்டுவிட்டேன். இரவு என்பதால், அடுத்ததுக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் நிற்கவேண்டும். அது மட்டும் அல்ல, இங்கு நடைபெறும் சில அரசுக்கு எதிரான கலவரங்களால், ஒன்பது மணியில் இருந்து ஊரடங்கு சட்டமும் ஒருபக்கம். எனவே குறுக்கு வழியில், ஆற்றின் வழியே நடக்க தொடங்கினேன். அன்று முழுமதி நாள் என்பதால், ஆற்றங் கரையோரமாக நிமிர்ந்து நிற்கும் மூங்கில் மரங்களுக்கும் மற்றும் சோலையில் பூக்கும் மலர்களுக்கும் இடையில், சந்திரன் அழகாக வானில் தவழ்ந்து கொண்டு இருந்தான். அந்த அழகு என் காதலியின் நினைவை தந்து என்னை துன்புறுத்த செய்தன! "பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே!" [கானல் வரி - சிலப்பதிகாரம்] சோலையில் பூக்கும் வாசமுள்ள மலரே, உன்னால் இந்த மணலும் மணக்குதே, என் காதலியின் உடம்பும் அது போல வாசனை வீசுதே! குற்றமில்லா இன்பப் பேச்சும், கணந்தொறும் பருக்கின்ற இளமையுடைய அவளது முலையும் எங்கே! முழு நிலவு போன்ற முகமும், வில்லுக்கு இணையாய் வளையும் புருவமும் எங்கே!, எழுகின்ற மின்னலைக் கொண்ட இடையும், என்னைத் துன்புறுத்துகிறதே இங்கே! இன்றைய கூடுதலான வேலையும், அவளின் நினைவும், தனிமையும் வாட்டிட, அங்கு உயர்ந்து காற்றுக்கு ஆடிக்கொண்டு இருந்த மூங்கில் மரங்களுக்கிடையில் இருந்து, நான் கொண்டுவந்த மதுவினை, கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். நான் மிகவும் சோர்வாக இருந்ததால், கொஞ்சம் கண்களை மூடினேன். என்னை அறியாமலே அங்கே, மணலில் தூங்கிவிட்டேன்! "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வெண்நிலா ஒன்று கண் சிமிட்ட வெற்றி மகளாய் இதயத்தில் வந்தாளே!" "வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய் வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து மனதை மயக்கும் வாசனை உடன் மனதை நெருடி மகிழ்ச்சி தந்தாளே!" என் கனவில் வந்த என்வளுடன்கொஞ்சம் ஆனந்தமாக இருந்த எனக்கு, திடீரென என் கால் மாட்டில் அவளே வந்து கொஞ்சுவது போல உணர்வு வந்தது, இன்னும் களைப்பாக இருந்ததால், கண்ணை திறக்காமலே, காலை உதறினேன். உதறமுடியவில்லை, உண்மையில் யாரோ கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்து இருப்பது போல இருந்தது. சட்டேன துள்ளி எழும்ப முயற்சித்தேன். முடியவில்லை, கண்ணை முழித்து, நல்லகாலம், முழுமதி நாள் என்பதால், பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு இளம்பெண், அலங்கோலமான அரைகுறை உடையுடன் நினைவுற்று என் கால் மேல் கிடந்தாள். திடுக்கிட்டு பயந்து போனேன். கொஞ்சம் கண்ணை மேலே உயர்த்தினேன். ஒரு வாலிபன் தனது தொலை பேசி மூலம் என்னையும் அவளையும் சேர்த்து படம் எடுத்துக்கொண்டு இருந்தார். நான் எழும்புவதை கண்டதும், அங்கிருந்து ஓடி, மோட்டார் சைக்கிளில் ஆயத்தமாக நின்ற மற்றோரு வாலிபனுடன் எதோ சிங்களத்தில் பேசிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். நான் விரைவாக அவர்களின் பின் ஓடி, என் தொலைபேசியில் எடுக்கக்கூடிய அளவு வீடியோ எடுத்தேன். பின் பக்கம் என்றாலும், அவர்கள் துணியால் மறைத்த இலக்கத்தகடு, ஓடும் வேகத்தில், துணி நழுவி விழ, அது அதை பதித்துவிட்டது. எனது வெற்று பீர் போத்தலில் ஆற்று நீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து, எனக்கு தெரிந்த முதல் உதவியும் செய்தேன். அவள் எதோ சிங்களத்தில் முணுமுணுத்துக்கொண்டு மெல்ல மெல்ல கண்ணை திறக்க தொடங்கினாள். அது எனக்கு நிம்மதியை தந்தது. ஏனென்றால், கட்டாயம் அவள் என்ன நடந்தது என்று உண்மை சொல்லுவாள். அப்படி என்றால் ஒரு பிரச்சனையும் எனக்கு வராது என்று. ஆனால் ' நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று' என்பது போல, நான் அவளிடம், நீ யார், என்ன நடந்தது என்று கேட்கும் முன்பே காவற்படையினர் பல வண்டிகளில் வந்து என்னை கைவிலங்கு போட்டு, என்னை ஒன்றும் கதைக்கவிடாமல் அடித்து இழுத்து சென்றனர். அவள் எதோ சிங்களத்தில் அவர்களிடம் அழுதுகொண்டு சொல்வது மட்டும் எனக்கு தெரிந்தது. அவர்கள் இவன் ட்ரஸ்ட்வாதி [பயங்கரவாதி] என எனக்கு முத்திரையே குத்திவிட்டார்கள். அதற்குள் மருத்துவ அவசர ஊர்தியும் வர, அவளை அதில் ஏற்றுவது மட்டுமே எனக்கு தெரிந்தது. யார் அவள், அந்த இரு வாலிபரும் யார், அவளுக்கு என்ன நடந்தது எல்லாமே எனக்கு ஒரு மர்மமாகவே இருந்தது. என் கால்சட்டை பாக்கெட்டை மெல்ல ஒரு கையால் தொட்டு பார்த்தேன். என் தொலைபேசி அங்கு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னை ஒரு நீதிபதியிடம் கொண்டுபோய், இவன் ஒரு பயங்கரவாதி, ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்ய முயற்சித்தான் என குற்றம் சாட்டி, என்னை தங்கள் காவலில் வைத்து முழுதாக விசாரிப்பதற்கு அனுமதி தரும்படி அவரிடம் கேட்டனர். நீதிபதி என் பெயர், விபரங்களை பதிவுக்காக கேட்டார். நான் அந்த சந்தர்ப்பத்தில், என் தொலை பேசியை எடுத்து, இதில் ஒரு வீடியோ இருக்கு அதையும் பார்க்கவும் என கொடுத்து, என் முழுவிபரத்தையும் , அன்று நான் பணிமனையில் ஆறு மணிவரை, வேலை செய்ததையும், பீர் வாங்கிய கடையையும், நான் ஒரு பொறியியலாளர் என்பதையும் என் வாக்குமூலமாக ஆங்கிலத்தில் அவரிடம் சமர்ப்பித்தேன் . இப்ப விடிய தொடங்கிவிட்டது. என்றாலும் என் மனதில் அந்த இரவின் மர்மம் புரியவில்லை. அந்த இரு வாலிபரையும் தேடுவதை விட்டுவிட்டு, என்னை விசாரிப்பதிலேயே அக்கறையாக இருந்தனர். இன்னும் ஒன்றும் எனக்கு மர்மமாக இருந்தது. எப்படி இத்தனை வண்டிகளுடன் அங்கு காவற் படையினர் வந்தனர். அந்த இருவரை தவிர, வேறு யாரும் அங்கு இருக்கவில்லை? எப்படி என்னையோ அந்த பெண்ணையோ விசாரிக்க முன் என்னை பயங்கரவாதி என்றனர்? அவளை நான் கெடுத்தனர் என்றனர் ? எல்லாமே மர்மமாக இருந்தது. என்னை தங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டுபோய், ஏற்கனவே அவர்களால் சிங்கள மொழியில் தயாரித்த ஒரு வாக்குமூலத்தை, நான் கொடுத்ததாக அதில் ஒப்பமிடும்படி வற்புறுத்தினர். 'உண்மை, தோற்பது போல் இருந்தாலும், அது கட்டாயம் வெல்லும்'. நான் அதற்கு இசையவில்லை. அந்த நேரம் அந்த நீதிபதியிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது, உடனடியாக விடுதலை செய்யும் படியும், என் தொலை பேசியை நீதிபதி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும். அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தபடி, வேறுவழி இன்றி என்னை கைவிலங்கு அகற்றி வெளியே விட்டனர். ஆனால் இன்றுவரை அந்த இரு வாலிபர் யார், அவள் யார், அவள் இப்ப எங்கே ? என்ற மர்மம் வெளிவரவே இல்லை. என்றாலும் சமூக வலைத்தளங்களில், அவளின் பெயர் குறிப்பிடாமல், யாரோ பெரும் புள்ளியின் மகனும் நண்பனும் அவளை அனுபவித்துவிட்டு, இறந்துவிட்டாரென மூங்கில் பத்தையில் போட்டுவிட்டு சென்றதாக மட்டுமே இருந்தது, அதில் என்னைப் பற்றி ஒன்றுமே இல்லை ? "வாருங்கள், வந்து கை கொடுங்கள் இமைகள் மூடி பல நாளாச்சு ... சொல்லுங்கள், என் கண்களை மூடினால் அந்த மூவரும் வரிசையாய் வருகுது ... தாருங்கள், தீர்வைதந்து மர்மம் கலையுங்கள் கேள்விகள் கேட்டு உள்ளம் வதைக்குது ... கண்களுக்குள் புதையாத மர்மம் தருகிறேன் கவனமாக ஒன்று ஒன்றாய் அவிழ்க்க ..." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இனி இந்திய தூதரகம் மறுப்பறிக்கை வரைக்கும் இது போகும்🤣1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ஜேவிபி யின் அனுர கூட, இவ்வாறான ஒரு அரைகுறை புரிதலுடன் தான் தமிழர்களிடம் வாக்கு கேட்கின்றார். அவரை ஆதரிக்கும் தமிழ் இளையவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றது.1 point- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
ரஞ்சித் மெத்தப் படித்த பலரே அரசு குடியேற்றங்களை கண்டிப்பதில்லை. நீங்கள் கேட்டவைகள் அத்தனையும் சரியே. கூடுதலான இப்படியான கதைகள் எங்காவது பார்ட்டியில் தான் பூதம் கிழம்பினமாதிரி கிழம்பும். எனக்கு தண்ணி சரிவராது என்பதால் ஏதாவது காரசாரமாக கொடுத்துவிட்டு வந்துடுவேன்.யாராவது சிரமப்பட்டு கொண்டாட்டம் நடத்தும் போது பிரச்சனைகள் வருவதை அறவே வெறுக்கிறேன்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- தந்தை செல்வா
1 pointhttps://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன். தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும் எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள் இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம் புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார் எண்பட்ட யாவரையும் கவருமிந்த இழிகாலன் செய்கையது என்னே! என்னே! செல்வா என்றோர் வார்த்தை சொன்னால் அங்கோர் சேனையது தலைதாழ்த்திப் பணிந்து நிற்கும் செல்வா என்றே சொன்னாற் தமிழ மங்கை செழு முலையினூடோடி வீரம் சிந்தும் செல்வா என்றழைத்திட்டாற் தமிழர் வாழும் தேசமெலாம் அச்சொல்லின் சிறப்புத் தேங்கும் எல்லாமும் போனதடா ஈழம் சோர்ந்தாள் இழிகாலன் செய்கையது என்னே என்னே (வேறு) தந்தை செல்வாவைத் தானைத் தலைவனாய் ஏற்காதோரும் சிந்தையில் துயரடைந்தார் சிங்களர் கூடச் சோர்ந்தார் மந்திரச் சொல்லால் ஈழ மக்களைத் தன்பால் ஈர்த்து விந்தைகள் புரிந்த செம்மல் விழிகளை மூடிக் கொண்டான் ஓடியே ஒடுங்கிற்றம்மா உயிரினைத் தமிழுக்காக வாடியே கொடுத்த அன்னான் வண்டமிழ்த் தென்றல் மூச்சு பாடியே என்ன கண்டோம் பாடையில் வீழ்ந்த அந்த நீடிய தமிழ் மரத்தின் நிழலினிக் கிடைக்கப் போமோ? (வேறு) கண்ணார் தமிழின் உயர்வுக் குழைத்தே காற்றால் உதிர்ந்த சருகானாய் எண்ணார் உன்னை ஏற்காதோரும் ஏற்றும் தெய்வம் நீயானாய் விண்ணேகினையோ செல்வா தமிழின் விழியே உயிரே ஆரீரோ அண்ணா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ துன்பஞ் செய்த உடல் நோயோடும் தூய தமிழிற் குழைத்ததிலே இன்பங் கண்டாய் செல்வா என்றும் ஈழத் துயர்வே பேச்சானாய் என்புந் தோலும் கொண்டாய் எனினும் எங்கள் தமிழே மூச்சானாய் அன்பே போதும் ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ கைகால் நடுங்கும் உந்தன் உருவைக் கண்டார் இரங்கும் படி வாழ்ந்தாய் மெய்யாய் உணர்விற் தமிழே நினைவாய் மெலிந்தாய் வாடி மிக நொந்தாய் பொய்யாகிய இவ்வுலகின் பதவிப் போரைச் சகியாதுயிர் சோர்ந்தாய் ஐயா தூங்கு ஆறத் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ சீரார் தமிழின் சிறப்பிற்காகச் சிறை சென்றனையே செல்வா நின் பாரா முகம் ஏன் இழிமைத் தமிழர் பதவிப் பித்தால் நொந்தாயோ சோரா மனதிற் துயரச் சுமையாற் தோள் சோர்ந்தனையோ செல்வா எம் ஆராவமுதே போதும் தூங்கு ஆரீர் ஆரீர் ஆரீரோ1 point- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
விசுகர் தொடருங்கோ...அதுக்காக அன்ய்ஹநாட்டில் பாலும் தேனூம் ஓடுது என்று எழுதாதையுங்கோ....பிறகு யாழில்.. 13 பக்கம் ஓடலாம்... சும்மா சிரிப்பதற்காக மட்டுமே...கோசான்ஜி கோபிக்க வேண்டாம்..1 point- இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
சும்மா இஸ்ரேலை புகழ்ந்து தள்ளாமல்...... பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பது யார் என்ற கேள்விகளுக்கு விடையளியுங்கள்.1 point- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
உங்களிட்ட ஒரு கேள்வி ஒண்டு கேக்கவேணும் எண்டு கனநாளாய் யோசிச்சு கொண்டிருந்தனான். அதை கேக்க இப்பதான் சரியான நேரம் எண்டு நினைக்கிறன்( இப்ப தும்மினாலத்தான் சரியாய் இருக்கும் 🤣 ) உக்ரேன் யுத்தத்திலை ரஷ்யா பலவீனமான நிலை எண்டு நீங்கள் எங்கை எப்பிடி கண்டு புடிச்சனியள்? அதே மாதிரி ஈரான் வாணவேடிக்கை விடத்தான் சரி எண்டு எப்பிடி தீர்க்கதரிசனமாய் சொல்லுறியள்? மேற்கத்தைய ஊடக ஆதாரங்கள் இங்கே செல்லுபடியாகாது 😎1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் பிராண்டும் போது மற்றவர்களும் திருப்பி பிராண்டுவார்கள். நாங்கள் சில்லரை அலப்பறை. தாங்கள் தாள்காசு அலப்பறையோ???😂1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நக்கல்களை நிற்பாட்டினால் கருத்தாடலாம். நானும் பொறுப்போடு விலகுவேன்.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
சிரியாவுக்குள் ஈரானிய தூதரகத்தை தாக்கியது மிகவும் மோசமான இஸ்ரேலின் சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை யதார்த்தமாக சர்வதேசம் கண்டித்திருக்க வேண்டும்..! ஆனால் இஸ்ரேலும் அதன் அமெரிக்க மேற்குலக அடிவருடிகளும் செய்தியை வெளியிடுவதோடு அடங்கிவிட்டார்கள். இரண்டாம் உலகப் போர் கூட ஒரு தூதரக அதிகாரியின் கொலையுடனே தான் ஆரம்பமானது... என்ன தான் பல உள் காரணிகள் இருப்பினும். இஸ்ரேலின் எல்லை தாண்டிய உலக பயங்கரவாதத்தை நிறுத்தாத வரை.. இஸ்லாமிய மதப் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது கடினம். ஈரான் என்ற சுயாதிபத்திய நாட்டின் தூதரகத்தை தாக்கி அதன் அதிகாரிகளை கொலை செய்த இஸ்ரேலின் பயங்கரவாதம் சர்வதேச நீதியின் பால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக.. ஈரானின் பலவீனமான பதில் தாக்குதலால் அல்ல என்பதுவே எங்கள் கணிப்பு.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேலின் அடாவடியான நடவடிக்கைகளுக்கும், பலஸ்தீனர்களை பட்டினிபோட்டு, கைது செய்தவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வதற்கும் ஒரு போதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதற்கு முட்டுக்கொடுக்கும் அமெரிக்காவும் மத்தியகிழக்கில் ஒரு பாடம் படிக்கவேண்டும். ஆனாலும் ஈரானின் ஜனநாயகமற்ற மதவாதிகளுக்கும் ஆதரவு கிடையாது.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஏவல்பட்ட 300 ட்ரோன்களிலும், ஏவுகணைகளிலும் 99% க்கு மேல் இஸ்ரேலும், அமெரிக்க நாசகாரிக் கப்பல்களும் சுட்டுவீழ்த்திவிட்டன. இது ஈரானின் தாக்குதல் படுதோல்வி என்றுதான் காட்டுகின்றது. ஒரு சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேலின் அயர்ன் டோம் எதிர்ப்புப் பொறிமுறையை செயலிழக்கவைக்காமல் நடந்த தாக்குதல் வெறும் புஸ்வாணமாகப் போயிருக்கின்றது. பதிலுக்கு இதே மாதிரி ட்ரோன்களை இஸ்ரேல் ஏவினால் ஈரானில் பெரிய அழிவு வரலாம்.1 point- தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து!
தமிழ் – சிங்கள புத்தாண்டு : அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்த்து! தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில் அவர் இந்த, வாழ்த்தினை வௌியிட்டுள்ளார். இந்தச் சிறப்பான நிகழ்வைக் கொண்டாடும் உலகில் உள்ள அனைவருக்கும் தானும் தன் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/13780191 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
சும்மா.... சாரை குஷிப்படுத்துவோம் என்றால்; உங்களுக்கேன் இவ்வளவு பொறாமை? இப்படி ஏற்றி விட்டு, அடுத்தமுறை மிளகாய்தூளுக்கு சொல்லி பாருங்கள்... எவ்வளவு என்கிற கேள்வியே இல்லாமலே சொந்தச் செலவிலேயே கொண்டுவந்து தருவார். உங்களுக்கும் குஷி வரும்!1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேலிய ஈரான் யுத்தத்தின்மூலம், பலஸ்த்தீன மக்களின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும். அம்மக்களின் அவலங்கள் உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு விடும். இஸ்ரேலோ, ஈரானோ இந்த யுத்தத்தில் வெல்லப்போவதில்லை. வெறும் அழிவுகள் மட்டும்தான் மிஞ்சப்போகிறது. பலஸ்த்தீன அரசினை அங்கீகரித்து, அவர்கள் மீதான ஆக்கிரமிப்பினை நிறுத்துவதுதான் இப்பிரச்சினைகளை முடிவிற்குக் கொண்டுவர ஒரே வழி. ஆனால், இஸ்ரேலிய அரசு இதற்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை. மத்திய கிழக்கு தொடர்ந்தும் எரிந்துகொண்டே இருக்கப்போகிறது. இதன்மூலம் ஈரானைப் பலவீனப்படுத்த இவர்களால் முடியாது. ஏவப்பட்டவை ஏவுகணைகள் மட்டும்தான். அவற்றைச் சுட்டு வீழ்த்துவதுடன் இவர்களின் பணி முடிந்துவிடும்.1 point- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
அமெரிக்க, பிரான்ஸ், ஐக்கிய ராட்சிய விமானப்படைகள் களத்தில் இறங்கி உள்ளன.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
படங்கள் V தாமரைக்கோபுரம் உருவாகி வரும் இண்டர் கொண்டினெண்டல் ஹோட்டல், கொழும்பு மாநகரசபை கட்டிடம், வெளி ஊர்களில் இருந்து, உறபத்தியாளர்கள் நேரடியாக புறக்கோட்டைக்கு மரக்கறிகளை கொணர்ந்து விற்கும், இரவுச்சந்தை. தென்னிலங்கை கடற்கரைகளும், ஐரோப்பிய பயணிகளும் காலி கோட்டை உள்ளே கொழும்பு புறநகர் ரயில் - காதல் ஜோடியும் கச்சான் வியாபரியும். பழைய ஆனால் சுத்தமான ரயில் பெட்டிகள். அதே ரயிலில் பாட்டு பாடி யாசகம் எடுப்பவரும், பயணிகளும். ……அதிலும் கொடுமை இளமையில் துறவு🥲….. என் வீட்டுத்தென்ங்கன்றை இப்போதே கேட்டுப்பார்😀. உன்பெயர் சொல்லுமே🤣…..1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அனுராதபுரம் வரை என்பதால் 1ம் வகுப்பில் மிக சிலரே வந்தனர். இராணுவத்தினர் வருவதால் மக்களுக்கு இடமில்லை என்பது அக் மார்க் புழுகு. திருத்த வேலைக்காக நிப்பாட்டும் வரை நாளுக்கு நாலு டிரெயின் ஓடியது, பாவனையாள் பெரும்பான்மை தமிழர்தான். அதுவும் இலவச வாரண்டில் வரும் சிப்பாய்களுக்கு 3ம் வகுப்புத்தான். 2ம் வகுப்புத்தான் அநேக அதிகாரிகளுக்கு. நான் அறிந்தவரை 1ம் வகுப்பை நிரப்புவது வெளிநாட்டுத்தமிழர்தான். சரியே. அவர்களுக்கு அவர்கள் முதிசத்தை பார்க்க அதிக விலை போட்டால், வர மாட்டார்கள். ஆகவே சலுகை விலை. ஆனால் இங்கே எம்மிடம் கொள்ளை அடித்ததை விண்சர் மாளிகையில் போய் பார்க்கவே எமக்கு டிக்கெட் போடும் இவர்களுக்கு அங்கே ஏன் சலுகை விலையில் கொடுக்க வேண்டும். இந்தியாவிலும் இதேதான்.1 point- ஒரு கிலோ விளாம்பழம்
1 point(குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.1 point- கடவுள் இருக்கிறாரா.............?
1 pointஉண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.1 point - இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.