Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்17Points88820Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்14Points19667Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20351Posts -
வீரப் பையன்26
கருத்துக்கள உறவுகள்6Points16859Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/20/24 in Posts
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள் 1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்6 points
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
@புலவர், @nunavilan, @suvy, @Eppothum Thamizhan, @விசுகு@புரட்சிகர தமிழ்தேசியன், @சுப.சோமசுந்தரம், @நிழலி, @ரசோதரன், @ஏராளன், @Kandiah57, @பெருமாள், @நியாயம், @satan, @Kapithan, @நீர்வேலியான், @நன்னிச் சோழன், @நந்தன், @MEERA, @தமிழன்பன், @kandiah Thillaivinayagalingam3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
2 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சாட்டை துரைமுருக்கன் என்பவரின் Short Video பார்ததேன். அந்த விடியோவில், “திமுக, அதிமுக தமிழ்நாட்டில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யுது. பாஜக, காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமே பிரச்சாரம் செய்யுது. நாம் தமிழர் கட்சி மட்டுமே சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யுது என்று லண்டனில் உள்ள, நாம் தமிழர் ஈழத்தமிழர்களின் பிரச்சாரம் என்று ஒரு விடியோவை காட்ட தம்பிகள் வழமை போல் விசிலடிதான். வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் பிரச்சாரம் என்று தம்பிகளும் கேட்கவில்லை. வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று லண்டனில் உள்ள அந்த ஈழத்தமிழ் லூசுகளும் சிந்திக்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா? ஆனால் ரசிகர்களாகிய எமக்கு பார்த்து ரசிக்க நல்ல கொமடி. வடிவேலு கொமடி போரடித்தால் தம்பிகள் கொமடி பார்ககலாம். சுப்பராக இருக்கும். நமக்கும் பொழுது போகணுமல்ல. 😂2 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம். உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை. ”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது. புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை. ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
போட்டி விதிமுறைகளுக்குள் உட்பட்டுத்தான் பதில்களைப் போட்டிருந்தீர்கள் @புலவர் ஐயா!2 points
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.2 points
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நிச்சயமாக @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂2 points
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.02 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பிந்தி கிடைத்த தகவலின் படி பெரியப்பட்ட மணிக்கூடு நீண்ட நாளாய் வேலை செய்யுது இல்லையாம் ஆன படியால் புலவர் அண்ணாவின் போட்டி பதிவு ஏற்றுக் கொள்ளப் படும் லொல்😂😁🤣...........................................2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH2 points
-
எனது அறிமுகம்
1 pointஎனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்1 point
-
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. எந்த நேரமும் நீ தடை செய்யப்பட்டு, இன்னொருவர் அந்த இடத்துக்கு மாற்றப் படலாம் ? யார் அறிவார் பராபரமே !!. நீங்க என்ன நடந்தது என்று வருந்தி கேட்டால், ம்ம் இது முகநூல் தானே, மாற்றி விட்டேன் என்பார். இனி எனக்கு செய்தி, அழைப்பு எடுக்க வேண்டாம் என்பார். அந்த காதல் அரோகரா தான் !! சிலர் எனது வாதத்தை மறுக்கலாம். அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்?? நான் இங்கு பாலியலைப் பற்றி கூற வில்லை, ஆனால், மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன். "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை , நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை," சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்கு கிறது: "எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514] நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா?????? முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே" [குறுந்தொகை-2] பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது????? சேயாறு சென்று, துனைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, ''இனி வரின் எளியள்'' என்னும் தூதே. [குறுந்தொகை-269] சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழ னிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி தூது விடுகிறாள் . அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள், கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் , தாயும் நெல்லுடன் வந்து விடுவாள். இது தான் அந்த காலம். ஆனால் இன்று கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி , அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால் கணினி உதவலாம்? காதலில் விழுவதென்றால், ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும். கட்டாயம் முன் திட்ட மிட்ட , நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல் சந்திப்பு அல்ல. அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க்கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்? காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும். அப்பதான் உண்மை காதல்! ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்பு கள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாட லுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும். உதாரணமாக, ஒருவர் குறுந்தகவல் [text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம். நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை . ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம். அதே போல, வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம். மேலும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம். அப்படியே, தழும்பு, வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம். இவை நேரடியாக செய்ய முடியுமா? முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் . அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை. மேலும் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல. மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல", ஆகவே: "சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதென்ன லூஸ் தனமான கேள்வி? இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது. நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க? புலிகள் 1991 க்கு பின் எப்படி தமிழ் நாட்டில் ஒரு பின் தள வலைபின்னலை மீள உருவாக்க கஸ்டப்பட்டனர் என்பது தெரியும். இதை 1998 அளவில் நடுக்கடலில் வைத்து மருந்து, பின்னர் பெற்றோலியம் கைமாற்றும் அளவுக்கு வளர்த்தமையும் இந்த வலையமைப்பை இந்தியா அடிக்கடி உடைப்பதும் கேள்வி பட்டவையே. இதில் பல திக உறுப்பினர், வேல்முருகன் போன்றோர் தொடர்ந்து ரிஸ்க் எடுத்ததும் தெரியும். ஆனால் இந்த வலையமைப்பில் இருந்தோருக்கு கூட இதில் யார் ஈடுபட்டனர் என்ற முழு விபரமும் தெரியாது. அதுதான் புலிகளின் அணுகுமுறை. இந்த ரகசியங்கள் பல அவர்களோடு போய்விட்டன. இப்போ அண்ணன் சீமான 1000 லீட்டர் பெற்றோலை தனது பேண்ட் பக்கெட்டில் வைத்து, ஒரு கையால் பொத்தி கொண்டு போய் வன்னியில் கொடுத்தார் - என்ற ரீதியில் யாரோ உங்களுக்கு கதை சொல்லி இருக்கிறார்கள் என ஊகிக்கிறேன். ஏனைய ரகசிய தகவல்கள் போல் இதையும் எழுதுங்கள் - கேட்டு ரசிப்போம். இது ரொம்ப ஓவர் பையா…. ஈழப்போராட்டம் நடந்த போது நீங்கள் படுக்கையில் உச்சா போகும் வயதினர்…..அதுவும் மிக இள வயதிலேயே டென்மார்க் ஓடி வந்து விட்டீர்கள்…. உண்மை என்வென்றால் போராட்டத்துக்கு துரோகம் செய்யும் இயலுமையோ, வயதோ, வாழ்விடத்திலோ நீங்கள் அப்போ இருக்கவில்லை. அதென்ன “ஈழ ஆதரவு”🤣 - நீங்கள் என்ன தமிழ் நாட்டு காரரரா ஈழ ஆதரவு நிலை எடுக்க? நடந்து முடிந்தது எமது போராட்டம் - அதில் நாம் பங்காளிகள் - ஆதரவு நிலை எடுப்போர் அல்ல.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டில் பட்டுக்கோட்டை தான் உண்டு” வட்டுக்கோட்டை இலங்கையில் அல்லவா இருக்கிறது ....சீமான் இலங்கையிலும் அரசியல் செய்கிறாரா??? 🤣🤣🤣 இதை தான் நாங்களும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் கேட்டால் தானே?? 🤣🤣1 point
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
சென்னையில் இருக்கும் பிபிசி இதை யாழ்பாண தமிழர்களை கொப்பி பண்ணி கண்டுபிடித்த மாதிரி தெரிகின்றது சொக்லேற் எல்லாம் கன்டோஸ் என்பது போல் தற்காலிக வதிவிட உரிமை, நிரந்தர வதிவிட உரிமை எல்லாமே அமெரிக்கன் கிரீன் காட்😂 நானும் நினைத்தேன் யாழ்பாணத்து தொகுதிகளில் ஒரு 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றார்கள் .அவர்களுக்கே வாக்குக்கு 25 000 கொடுக்க முடியாதே ஜனதொகை வெடிக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் பல இலட்சங்கள் வாக்குகள் கொண்ட தொகுதிக்கு வாக்குக்கு 25000 கொடுப்பது என்றால் சீமான் எதை சொன்னாலும் நம்புவது என்ற பரவச நிலையை அடைந்துவிட்டனர்.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஆமா எங்கட போராட்டம் இருந்த போது எங்கட போராட்டத்துக்கு நீங்கள் செய்த நல்லதை ஒன்றை சொல்லுங்கோ அதுக்கு பிறக்கு வீரப்பன் எங்கட போராட்டத்துக்கு செய்ததை சொல்லுகிறேன் /மேல ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வர வில்லை........................ஜெயலலிதா காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து வன்னிக்கு யார் மூலம் எண்ணை போனது அந்த நபர்களை சொல்ல முடியுமா..................... இந்த கேள்வி இதோட இரண்டாவது தடவை கேட்டு விட்டேன் பதில் இல்லை.....................பதில் இல்லாட்டி தேவை இல்லாம மூக்கை நுழைக்க வேண்டாம்.............................முதல் நேர்மைய கடை பிடிக்க பழகுங்கோ அப்ப அப்ப கால நேர சூழ் நிலைக்கு ஏற்ற மாதிரி மாறும் நபர் நீங்கள்............................ஈழ ஆதரவில் இருந்து நான் இதுவரை பின் வாங்க வில்லை எங்கட போராட்டத்துக்கு சிறு துரோகம் கூட செய்ய வில்லை இது என் தாய் மேல் சத்தியம் உங்களால் இப்படி சத்தியம் பண்ண முடியுமா..............................உங்கட எழுத்தே காட்டி கொடுக்கும்😏............................. யூன 4ம் திகதி இந்த திரியில் சந்திப்போம்...........................நன்றி வணக்கம் நல் இரவாகட்டும் உங்களுக்கு🙏🥰...................................................1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈழ போராட்டத்தை 2009க்கு முன் தூற்றியவர்கள் அல்லது அது சம்பந்தப்பட்டவர்களை அழிக்க உதவியவர்கள் இன்று நானும்......என்றொரு சொல்லை சேர்த்து தம்மை புனிதர்களாக்கி அபிசேகம் செய்து கொண்டு திரிவதை நம் கண்முன்னே பார்க்கின்றோம் அல்லவா!!!! நானும் என் குடும்பமும் வாழணும். அதை தவிர்த்து எல்லாம் மண்ணாங்கட்டி விசயம் 😂 உங்கள் கரிசனைக்கு நன்றி. 👈🏽 💪🏽 👍🏼1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂 யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼 ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. மேன் மேலும் சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈழத்தை நேசித்த வீரப்பன் பாடல் ஈழத்தையே நெஞ்சில் வைச்சு வரிபுலி வளந்ததடி🙏🙏🙏........................1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வேண்டவே வேண்டாம் தம்பி. எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். நான் இந்த விளையாட்டுக்கு வரவே மாட்டேன்1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஒரு தாய்க்குலமும் இல்லை. @நிலாமதி அக்காவை… சேர்த்து விடுவமா.1 point
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும். பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம். சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம். எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.1 point
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 2ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 2ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 1ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 1ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 1ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 1 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? சுழியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? சுழியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? சுழியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (விழுப்புரம், விருதுநகர்) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) மூன்று (குமரி, தர்மபுரி, திருநெல்வேலி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 34 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 7 (குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 (தர்மபுரியில் செளம்யா வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 - குமரி, திருநெல்வேலி1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- எனது அறிமுகம்
1 point◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான உறவு வாருங்கள் கூடுவோம் பேசுவோம் மகிழ்ந்திருப்போம்..1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ் நாட்டில் தலைவராக இன்னமும் தேவை. கடந்த கால தலைவர்களைப் பாருங்கள்.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த சிலமன் என்பதை பார்த்ததும் ஆகா ஆகா ஈழத் தமிழ் தேன் என்று ஓடி வருவார்.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி1 point- நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
அது வயோதிபத்தில் வரும் எழுச்சி 😁1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்புறம் ஏனய்யா இத்தனை பேர் சேர்ந்து ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க? எல்லாருக்கும் மனதில பயம் இருக்கல்லோ? அந்த பயம் எப்போதும் இருக்கணும். எழுதுங்க எழுதுங்க.1 point- "முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?"
சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத காதல் ரசம் சொட்டும் பாடல்கள் உருவாகி இருக்க மாட்டாது.1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஈழத்தமிழர் அரசியல்
1 pointஇல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள்.1 point- ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣1 point- இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
வாக்குக்கு காசு பணம் மிக்ஸர் ரிவி வேலை குடுக்கிறதெல்லாம் பொய் எண்டுறன்....பிறகு ஏன் இதுக்கை நிண்டு கத்துறியள்? 😄1 point- இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣1 point- இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம். பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.1 point- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.1 point- ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் தீக்குளிப்பு
அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.1 point- கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
யாழ்பாணத் தமிழ் மகனின் சாகசம்! சாதனை! சரித்திரம்!1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- எனது அறிமுகம்
1 pointமௌனத்திலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். "இது தான் என் இன்றைய நிலை" "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலசத் தொடங்கினேன் வேஷம் போட்ட பலதைக் கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களைக் கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!” "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!” "ஓடும் உலகில் நாமும் ஓடி ஓரமாய் வருத்தங்கள் ஒதுங்க வைக்க பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!” (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)1 point- எனது அறிமுகம்
1 pointஅட, இப்பொழுதுதான் பார்த்தேன்.. நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவின் தலையீட்டினை எதிர்த்த போராளிகளும், இந்தியாவிடம் தமிழர் நலன்களைத் தாரைவார்த்த அமிர்தலிங்கமும் நற்பிட்டிமுனை படுகொலைகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமே நற்பிட்டிமுனை. அநுராதபுரம் மீதான தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்குப் பின்னர், கடும்பச்சை நிற காக்கி சீருடை அணிந்த, இங்கிலாந்தின் விசேட படைகளால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை பொலீஸின் ஒரு பிரிவினரான விசேட அதிரடிப் படையினர், வைகாசி 17 ஆம் திகதி இரவு, நற்பிட்டிமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள இரு கிராமங்களுக்குள்ளும் நுழைந்தனர். அப்பகுகளை முற்றாக முடக்கிவிட்டு, அங்கிருந்த இளைஞர்கள் அனைவரையும் அவர்கள் கைதுசெய்தனர். அவ்வாறு கைதுசெய்யப்படும் போது சில இளைஞர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். சிங்கள பெளத்த மிருகங்கள் - விசேட அதிரடிப்படை அம்பாறை, தை முதலாம் திகதி, 2007 கிராமத்திற்குள் அதிரடிப்படையினர் நுழைந்தபோது இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்தார். அவர்களின் காலில் வீழ்ந்த அவர், தன்னைக் கொல்லவேண்டாம் என்று மன்றாடியதுடன், போராளி அமைப்புக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று கூறினார். அவர்கள் கேட்கவில்லை, அவ்விடத்திலேயே அவரைச் சுட்டுக் கொன்றனர். அருகிலிருந்த வீட்டிற்குச் சென்ற அவர்கள், உள்ளிருந்து இளைஞர் ஒருவரை வெளியே இழுத்துவந்து, அவரது மனைவி பார்த்திருக்க தலையில் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்ட அவரது உடலை இழுத்துச் சென்ற அதிரடிப்படையினர், "பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் எல்லாத் தமிழர்களுக்கும் இதுதான் கதி" என்று சத்தமிட்டவாறே சென்றனர். தம்மால் கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் 40 இளைஞர்களை நற்பிட்டிமுனை மயானத்திற்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பகுதியில் கிடங்குகளை வெட்டுமாறு கட்டளையிட்டனர். கிடங்குகள் வெட்டி முடிக்கப்பட்டதும், அவற்றின் அருகிலேயே அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் வெட்டிய கிடங்குகளை அவர்களைத் தள்ளி நிரவினர். கல்முனை பிரஜைகள் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சர்வதேச மன்னிப்புச் சபைக்கு இப்படுகொலைகள் தொடர்பான விலாவாரியான அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தது. சர்வதேச மன்னிப்புச்சபை இப் படுகொலைகுறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகொண்டபோது, இளைஞர்களைக் கைதுசெய்ததையோ அல்லது படுகொலை செய்ததையோ முற்றாக மறுத்தது இலங்கையரசு. ஆனால், அங்கிருந்து காணாமற்போன இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பதுபற்றி இலங்கையரசு எதுவுமே கூறவில்லை. ஆனால், கல்முனை பிரஜைகள் குழுவின் தலைவரான போல் நல்லநாயகம் இதனை இப்படியே விட்டுவிடவில்லை. அவர் ஊடகங்களிடம் இதுகுறித்துப் பேசத் தொடங்கினார். அரசாங்கம் குறித்தும், அதிரடிப்படையினர் குறித்தும் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார் என்கிற பெயரில் நல்லநாயகத்தை பொலீஸார் மறுநாள் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். ஆடி 1986 இல் நீதிபதி அவர் குற்றம் அற்றவர் என்று கூறி அவரை விடுவித்தார். தீர்ப்பு வழங்கப்படும்போது, "1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் திகதி நற்பிட்டிமுனையில் கைதுகள் எதுவும் நடைபெறவில்லை எனும் அதிரடிப்படையினரின் கூற்றினை எனக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் பொய்யென்று நிரூபிக்கின்றன" என்றும் நீதிபதி மேலும் கூறினார். நற்பிட்டிமுனை படுகொலைகள் நடைபெற்று மூன்று நாட்களின் பின்னர் புலிகள் மீண்டும் தாக்கினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பயணம் செய்த ஜீப் வண்டியொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியைச் சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படையினரும் ஊர்காவற்படையினரும், அப்பகுதியிலிருந்த இரு கிராமங்களில் இருந்து 37 இளைஞர்களைக் கைதுசெய்து இழுத்துச் சென்று சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அடையாளம் தெரியாதவாறு அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டன. டிக் ஷிட் 2004 வன்முறைகள் தீவிரமாகிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே டிக் ஷிட் இந்தியாவுக்கான தூதராக கொழும்பில் பொறுப்பேற்றுக்கொண்டார். வைகாசி 27 ஆம் திகதி எனக்கு வழங்கிய நேர்காணலில், அதிகரிக்கப்பட்டு வரும் வன்முறைகள், வன்முறைகளின் தீவிரம் குறித்த தனது கவலையினைத் தெரிவித்திருந்தார். "திரு பண்டாரியின் விஜயம் நண்மை பயப்பதாக அமையவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படாதவாறு இந்த அழகான தீவு காக்கப்படுதல் வேண்டும்" என்று கூறினார். ஆனால், அவர் வேண்டிக்கொண்டதுபோல எதுவுமே அமையவில்லை. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் அப்போதைய சூழ்நிலை நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனவை நம்புவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஆகவே, பண்டாரியின் கொழும்பு விஜயம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக ஈழத் தேசிய விடுதலை முன்னணியினர் மீண்டும் கூடினர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன பண்டாரியையும் தனது தாளத்திற்கு ஆடவைக்கப் போகிறார் என்று கூறினார். பண்டாரியுடன் மிகவும் கனிவாகப் பேசி, அவரையும் தன்பக்கம் இழுத்துவிடப் போகிறார் ஜெயார் என்று அவர் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் போராளிகளுக்குமிடையே ஒரு பிளவினை ஏற்படுத்தவும் ஜெயார் முயல்வார் என்றும் அவர் கூறினார். "நாம் கவனமாக இருப்பது அவசியம்" என்று அவர் கூறினார். இந்தியா தம்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதிப்பதில்லை என்கிற முடிவிற்கு ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வந்தார்கள். ஈழத்தமிழர்களின் நலன்களே தமது குறிக்கோளாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆகவே, தமிழர்கள் சார்பாக இந்தியா முடிவெடுப்பதை அவர்கள் நிராகரித்தார்கள். ஆனால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியோ இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அமிர்தலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வினை தீர்மானிக்கும் நடவடிக்கையில் இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மூன்று நிபந்தனைகளையும் அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார், 1. அனைத்துப் போராளி அமைப்புக்களும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். 2. பேச்சுவார்த்தைகள் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே நேரடியாக நடைபெற வேண்டும். 3. எடுக்கப்படும் தீர்விற்கு இந்தியா எழுத்துறுதி தரவேண்டும். அமிர்தலிங்கத்தின் முடிவினையடுத்து பிரபாகரன் மிகவும் கோபமுற்றார். தமிழர்களின் தலைவிதியினை இந்தியா தீர்மானிப்பதை அனுமதிக்கக் கூடாது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார். "எமது தலைவிதியினை நாமே தீர்மானிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். தமது தலைமையினைப் பாதுகாத்துக்கொள்ள தமிழரின் நலன்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இந்தியாவிடம் அடகுவைப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து இலங்கையரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் கேட்டுக்கொண்டனர்.1 point - எனது அறிமுகம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.