Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1487
    Posts
  3. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5832
    Posts
  4. பசுவூர்க்கோபி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    505
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/30/24 in Posts

  1. புதியன புகுதலே வாழ்வு! ***************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிசு எனிவரும் நாட்களும் புதிசு புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும் சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்த்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வு கதைகள் சொல்வதும் இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு-இவைகள் எல்லாம் வெறும் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை... இவர்களின் வாழ்வோ எனி வரப்போவதில்லை பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால் பயனொன்றுமில்லை பரிதாப வாழ்வே! புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே புதுமைகள் பார்த்து மகிழ்வோடு வாழலாம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  2. அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂 பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣
  3. இரு நரிகள என்று வந்திருக்க வேண்டும் . தாத்தா மப்பிலை எழுத்துப்பிழை விட்டிட்டார். ;
  4. தமது சொந்த மக்களுக்கே எந்த பிரயோசனமும் அற்ற தேர்தல் பகிஷகரிப்பு போன்ற உதவாக்கரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் செய்யும் தரப்பின் கடந்த கால வாடிக்கை. அதன் தொடர்சசியே இந்த பொது வேட்பாளர் என்ற பிரயோசனமற்ற தமிழரின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் வழமையான விளையாட்டும்.
  5. ஆ ஊ எண்டால் மனநிலை பாதிக்கப்பட்டவர்.நானும் ஆரையாவது(கோசானை, ஏனெண்டால் எப்பிடித்தான் இந்தாளாலை எல்லாத்துக்கும் கருத்து எழுத முடியுதோ தெரியாது) போட்டுத்தள்ளீட்டு ஒருநடிப்பு போடவேண்டியது தான்
  6. தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். அதன்படி, பரபரப்பான சூழ்நிலையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது. இந்த சூழலில் நிர்மலா தேவிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து வாதங்களை முன்வைக்க விரும்புவதாக நீதிபதியிடம் பேசினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசினார். இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி பகவதியம்மாள் கூறினார். தொடர்ந்து நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வழக்கில் 2-ம் மற்றும் 3-ம் நபர்களாக குற்றம்சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்மலா தேவிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன் வைப்பதற்கு நீதிபதியிடம் அவகாசம் கேட்டிருக்கிறோம். வாதங்கள் குறித்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார். சி.பி.சி.ஐ.டி.தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசுகையில், 'நிர்மலாதேவி வழக்கில் 2,3-ம் நபர்களாக குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதற்கு போதுமானது தான். ஆனால் வழக்கு விசாரணையின்போது முருகன் மற்றும் கருப்பசாமிக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிறழ் சாட்சிகளாக மாறியதால் நீதிமன்றம் பிறழ்சாட்சிகளை கருத்தில் எடுத்துக்கொண்டு உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்திருக்கிறது. அதேசமயம் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தீர்மானித்துள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருக்குமே தண்டனை பெற்று தருவதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது. இந்த வழக்கிலே அரசுத் தரப்பில் 104 சாட்சிகள் வழங்கப்பட்டதில் 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 194 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. 46 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முருகன், கருப்பசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம். அதேசமயம் பிறழ் சாட்சிகளாக மாறிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்வார்கள். பிற்பகலில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிர்மலா தேவி வழக்கில் வாதங்களுக்கான சிறப்பு கால அவகாசம் வழங்கக் கூடாது, இன்றைக்கே வாதங்களை முன்வைக்கவும் நியாயத்திற்கான தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். எதுவாகினும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு பின்பு எதையும் உறுதியாக சொல்ல முடியும்' என்றார். பிற்பகலில், தீர்ப்பிறக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், 'இம்மார்டல் ட்ராஃபிக் ப்ரெவென்ஷன் ஆக்ட் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன்வைக்க எங்களுக்கு இறுதி வாய்ப்பு தர வேண்டும். இதேப்போல, பிரசாந்த் பூஷன் மீதான வழக்கிலும்கூட சுப்ரீம் கோர்டு இறுதிக்கட்டத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது' என மேற்கோள் காட்டி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு நாளை பிற்பகலில் வழங்கப்படும்' என வழக்கை ஒத்தி வைத்துள்ளார். `நிர்மலா தேவி குற்றவாளி; மற்ற இருவர் விடுதலை!'- மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் கோர்ட் தீர்ப்பு | srivilluputhur court convicted nirmala devi in the case of misbehaving with the students - Vikatan
  7. உரிமைகள் இல்லை. வாக்குகள் செல்லாகாசு ஆனது என்று சொல்ல முடியாது. அடைக்கபட்ட அறைக்குள் யன்னல் திறந்து விட்ட மாதிரி ஒரு ஆறுதல் அவர்களுக்கு கிடைத்தது.
  8. கல்லுரி பேராசிரியையாக இருந்து கொண்டு, தோல் வியாபாரம் செய்திருக்கு. வெட்கம் கெட்டது. 😡
  9. கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 3 ஆம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3 ஆம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3 ஆம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2 ஆம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 2 ஆம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 2 ஆம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) முதலாம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 3 ஆம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 3 ஆம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2 ஆம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) முதலாம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2 ஆம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2 ஆம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 7% - 8% 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 5 இலட்சத்துக்கும் கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 - ஒரு இடத்திலும் வெல்லாது 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 3 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 0 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 1
  10. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி "Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை, உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக - சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து - தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். சமகாலத்தில், இந்தக் கட்டுரை என் முகநூலிலும், வலைத்தளத்திலும் பதிவிடப் படும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக சொல்கிறார். அது மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் தானே கடைப்பிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் குழப்பங்களுக்கும் அமைதியின்மைக்கும் என்ன காரணம் ?. கட்டாயம் புத்தரின் அந்த புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததுமே ஆகும். [1] வாழ்க்கை துன்பமயமானது, [2] அடக்க முடியாத ஆசையால் துக்கம் ஏற்படுகிறது, [3] துன்பத்தைக் கடந்து மகிழ்ச்சியை அடையலாம், அதாவது, நாம் தேவையற்ற பேராசையை ஒழிக்கக் கற்றுக் கொண்டு, அமைதியற்ற தேவைகளை ஒழித்து அனுபவத்தால் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பிரச்சனைகளை, அச்சமின்றிப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கோபமின்றிப் பொறுத்துக் கொள்வோமானால், நாம் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். அப்போது தான் நாம் உண்மையிலேயே வாழ ஆரம்பிக்கிறோம். என்றும் இதுவே நிர்வாண நிலை என்றும், எனவே உள்ளத்தால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நாம் இங்கு உண்மையில் விடுதலை பெறுகிறோம் என்கிறார். [4] நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நல்தொழில் வகித்தல், நன்முயற்சி, நன்மனக் கவனம், நன்மன ஒருமைப்பாடு ஆகிய, துக்க நிவாரணத்திற்கான பாதையைக் காட்டும் எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை அல்லது அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளன என்றும் புத்தர் நான்கு பேருண்மைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். எனவே நாம் நற்கருத்து, நல்நோக்கம், நற்பேச்சு, நன்னடத்தை, நன்முயற்சிகள் போன்றவற்றை மனதில் பதித்து, மகாவம்சத்தில் புதைந்து, அறிவியல் ரீதியான வரலாற்று சான்றுகளுடனும் ஒத்து போவனவற்றை, எம் அறிவிற்குள் எட்டியவாறு, நடுநிலையாக, பக்கம் சாராமல், அலச உள்ளோம், குறைகள், பிழைகள் இருப்பின் சுட்டிக் கட்டவும். திறந்த மனதோடு வரவேற்கிறோம். உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் மகாவம்சத்தின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் குறைந்தது நாற்பது பகுதிகளாக விரைவில் தொடரவுள்ளோம். இலங்கையில் வாழும் பெரும்பாலோரான சிங்கள புத்த மக்கள், குறிப்பாக பாளி மொழியில், 5 / 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தை மற்றும் அதற்கு நூறு அல்லது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளி மொழியில் எழுதப்பட்ட எழுதப்பட்ட தீபவம்சம் மற்றும் இவைகளுக்கு பின் 13 ஆம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட சூளவம்சம், முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட 17 ஆம் நூற்றாண்டு இராசாவலிய முதலியவற்றை ஆதாரமாக வைத்து தமது வரலாற்றை கற்கிறார்கள். அது மட்டும் அல்ல, தாம் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அரசியல் பேசுகிறார்கள். இந்த நிலையில், இவை நான்கு புத்தகங்களிலும் மிக முக்கியமாக கருதப் படும் மகாவம்சத்தை எடுத்துக்காட்டாக எடுத்து நுணுகி ஆய்வதே எமது நோக்கம். முதல் முதல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் முக்கியமான கதாபாத்திரம் தேவநம்பிய தீசன் என்ற கி. மு. 307இலிருந்து கி. மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த ஒரு சிவனை வழிபட்ட அரசனாவான். அவன் காலத்திலேயே, பௌத்த சமயத்தை இலங்கையில் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றது மகிந்தன் அல்லது மகிந்தர் என்ற இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்த புத்த மதகுரு. அத்துடன் ஒப்பற்ற மன்னர் எல்லாளன் என்று அது கூறுகிறது. ஆனால் அதன் பின் தீபவம்சத்தை ஆதாரமாக எழுதப்பட்ட மகாவம்சத்தில், முக்கிய கதாபாத்திரமாக துட்ட கைமுனு கையாளப்படுகிறது. என்றாலும் எல்லாளனை சிறந்த வகையில் குறிப்பிடுகிறது. இவ்வற்றுக்கு முரணாக சிங்கள மொழியில் எழுதப்பட்ட இராசாவலிய எல்லாளன் பொல்லாத ஆட்சி செய்தார் என்று குறிப்பிடுகிறது. எப்படி வரலாறு, புத்த பிக்குகளால் மாற்றி மாற்றி எழுதப் படத்திற்கு இது ஒரு துளி உதாரணமே! அன்புடன் உங்கள், [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] அறிமுகம் 02 தொடரும்
  12. எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
  13. 29 APR, 2024 | 10:37 AM தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது. இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர். எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர். இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார். குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. https://www.virakesari.lk/article/182204
  14. நீங்க இல்லாவிட்டால் குடும்பத்துக்கு போகும் தானே?
  15. என்னப்பா ஜேர்மனியில் இருந்து கொண்டு பைசர் போடாமல் அஸ்ரா ஷெனிக்கவைப் போட்டிருக்கிறீர்கள்.நான் 3 பைசர் போட்டேன்.என்க்குத் தெரிந்த வரையில் ஸ்ரோக்க வந்த பலரும் அஸ்ரா ஷெனிக்கா போட்டவர்களாக இருந்தார்கள்
  16. காதலுக்கு மறுபெயர்.
  17. ரி20 உலகக் கிண்ண இந்திய குழாத்தில் ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பான்ட் Published By: VISHNU 30 APR, 2024 | 07:50 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் செவ்வாய்க்கிழமை (30) அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உதவித் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை 20 நாடுகள் பங்குபற்றும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அஜித் அகார்கார் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (30) கூடி ஆலோசனை நடத்தி 15 வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தை தெரிவு செய்தனர். தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு செம்சன், சென்னை சுப்பர் கிங்ஸின் அதிரடி நாயகன் ஷிவம் டுபே ஆகியோருக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷாப் பான்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. சில கால இடைவெளிக்குப் பின்னர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார். இம்முறை ஐபிஎல் இல் அசத்திவரும் ருத்துராஜ் கய்க்வாட் உட்பட இன்னும் சிலர் தெரிவாளர்களின் கண்களில் படாதது ஆச்சரியத்திற்குரியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, ஐ பி எல் இல் பெரிதாக பிரகாசிக்காத ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது கிரிக்கெட் விமர்சர்களை மட்டுமல்லாமல் இரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் இலும் பார்க்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாண்டியா, யாதவ் போன்றவர்கள் அசத்துவார்கள் என தெரிவாளர்கள் நம்புகின்றனர். விக்கெட் காப்பாளர் கே.எல். ராகுலுக்கும் இந்தியா குழாத்தில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்திய குழாத்தில் ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் துடுப்பாட்ட வீரர்களாகவும், ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ரா சஹால், குல்தீப் யாதவ், மொமஹத் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர். நியூஸிலாந்து குழாம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. ஏனைய குழாம்கள் இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை (30) மாலைவரை நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது உலகக் கிண்ண கிரிக்கெட் குழாம்களை அறிவித்துள்ளன. தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், ஒட்நீல் பாட்மன், ஜெரால்ட் கொயெட்ஸீ, பிஜோன் ஃபோச்சுன், கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்யா, கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி. இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், டெவிட் வில்லி, க்றிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ். https://www.virakesari.lk/article/182362
  18. "வானம் பார்த்த பூமி" காலநிலை அறிக்கையின் படி, இலங்கையின் வட, வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் நீரின் அளவு மிக குறைவாக காணப்படுவதாக கூறுகிறது. அதிலும் மன்னார் காய்ந்த, வறண்ட பிரதேசம் ஆகும். அங்கு நான் ஒருமுறை விடுதலையில் ஊர் சுற்றிப் பார்க்க போனபொழுது, தற்செயலாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் அவளைச் சந்தித்தேன். அவள் மிகவும் அழகாகவும் அதே நேரத்தில் எளிய அடக்கமான தோற்றத்திலும் இருந்தாள். அவளின் பெயர் மகிழ்மதி. அவள் அங்கு பெற்றோருடன் வந்து இருந்தாள். இது கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற ஒரு தலமாகும். இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. அவளின் குடும்பம் ஒரு நடுத்தர விவசாய குடும்பமாகும். அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் அங்கு வாழ்க்கை. என்றாலும் இராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் கட்டுக்கரைக் குளம் அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதல். அவளின் பெற்றோரின் வேண்டுதலாலும், மற்றும் அங்கு விவசாயிகளின் வாழ்வை தெரிந்து கொள்ளும் ஆவலாலும், அவளின் வீட்டிற்க்கு அன்று மதியத்துக்கு பின்பு, அவர்களுடன் சென்றேன். வானம் பார்த்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானதோ அவ்வளவு இனிமையானதும் கூட என்றுதான், அவளை பார்த்தபின் எனக்கு தனிப்பட்ட முறையில் தோன்றினாலும். பொதுவாக மேகம் கருக்கையில் அதை பார்த்து சந்தோசப்படுதலும், கதிரவன் கொதிக்கையில் வருத்தப் படுவதும் அந்த மண்ணில் இருப்பவர்களின் வாழ்க்கை என்பது எனக்குப் புரிந்தது. அவளின் பெற்றோர் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பொதுவாக கூறியதுடன் எனக்கு வடையும் தேநீரும் தந்தார்கள். அதன் பின் , கொஞ்சம் வெயில் ஆற, அவளுடன் அவர்களின் வயலுக்குப் போனேன். அப்பொழுது தான் அந்த மண்ணின் மக்களின் மழைக்கான ஏக்கம் புரிந்தது. அவர்களின் தாகத்தின் ஆழம் புரிந்தது. அது வானம் பார்த்த பூமி. மழை வந்தால் தான் வாழ்க்கை. விவசாயம் செய்ய முடியும். பயிர் பச்சை வளரும். கிணற்றில் நீர் சுரக்கும். குளத்தில் நீர் தேங்கும். மழை வரவில்லை என்றால் வாழ்கையே இல்லை? என்பதை உணர்ந்தேன். அவள் மிக கெட்டிக்காரி, என் முகத்தில் இருந்து, என் எண்ணங்களை ஊகித்த அவள். 'இந்த வருடம் ஏனோ மழை இன்னும் வரவில்லை. கோடை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு இருக்கிறது' என்று கதையை ஆரம்பித்தாள். அவளின் அழகை, அவளின் நடையை, அவளின் முகபாவனைகளை ரசித்துக் கொண்டு இருந்த நான், சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கே செடிகளும் மரங்களும் கூட உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன். அது மட்டும் அல்ல, மேச்சல் நிலத்தில், ஆடு மாடுகளும் கூட நீர் இன்றி தளர்ந்து நடப்பதை கண்டேன். அங்கு வயல்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர்களின் முகத்தைப் பார்த்தேன், எல்லாம் வாடித்தான் இருந்தன. ஒரு சொட்டு மழை விழாதா என்று எல்லோரும் வானம் பார்த்து காத்து இருப்பது போல் எனக்கு தோன்றியது. இன்னும் சில தினங்களில் மழை வராவிட்டால் நிறைய உயிர்கள் போய் விடுமோ? செடி கொடிகள் பட்டுப் போய் விடுமோ? ஆடு மாடுகள் தாகத்தில் உயிர் விடுமோ? என் மனதில் இப்படி ஒரு ஏக்கம் தோன்றியது ?. அப்ப தான் அவள் 'ஒரேயடியாக இப்படியான ஒரு முடிவுக்கு வரவிடாது இருக்கத்தான் எமக்கு நல்லவேளை கட்டுக்கரைக் குளம் ஓரளவு உதவிசெய்கிறது' என்று விளக்கம் கூறினாள். மன்னார் கட்டுக்கரை குளத்தின் அகழ்வாராய்ச்சியில், கிடைத்த தொல்பொருட்சான்றுகள், இது இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை தெட்டத் தெளிவாக உணர்த்துகிறது என்று பேராசிரியர் புஸ்பரட்னம் கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. அப்படி என்றால், 1600 ஆண்டுகளாக இந்து வறட்சியை தாண்டித்தான் இன்னும் இங்கு மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இன்னும் வாழ்வார்கள் என்று என் உள்மனம் எனக்குச் சொன்னது. “நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு / குறள் 20" நீரின் பெருமையை இவ்வாறு தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுகிறார். ஆமாம், நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ்ந்திட முடியாது என்பதே உண்மை. ஏன் என்றால், உயிர் இனங்களுக்கு தேவையான பூமியில் உள்ள பயிர்கள், செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாம் வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கின்றன, அப்படித்தான் அவளும் அவளின் பெற்றோரும் வானத்தை பார்த்தபடி காலத்தை ஓட்டுவதை கண்டேன். ஆமாம் 'வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே' என்ற புறநானுறு 18 இயம்பியவாறு நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம் அவர்களின் முயற்சிக்கு வேண்டுவ உதவாது தான்! அது அவளின் முகத்தில் தெரிந்தது!! நாம் திரும்பி அவளின் வீடு போக, இருட்டாகி விட்டது. அவர்களின் வீடு உண்மையில் சிறு குடிசை, ஆனால் மனமோ பெரும் மாடிவீடு. அவர்கள் நாளை திரும்பி போகலாம் என்று என்னை அங்கே தங்க ஏற்பாடு செய்தார்கள். நான் அவர்களின் விறாந்தையில் வெளியே படுத்தேன். மகிழ்மதியும் பேச்சு துணைக்கு சில மணித்தியாலம் கொஞ்சம் தள்ளி, ஒரு பாயில் படுத்து கதைத்துக் கொண்டு இருந்தார். வானம் பார்த்த பூமியில் இருந்து கொண்டு என் மனம், என் கண்கள் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தது. அது தன்னை அறியாமலே சந்தோச மழையில் நனையத் தொடங்கியது. கொஞ்ச நேரம் எமக்கிடையில் ஒரு பேச்சும் இல்லை. கண்கள் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தன. திடீரென என் மேல் சில துளிகள் விழுவதை உணர்ந்தேன். அதற்கு இடையில் அவள் பதறி ஓடிவந்து தன் மெல்லிய போர்வையால் என் முகத்தை துடைத்தாள். 'மழை மழை!' சத்தம் போட்டே கத்திவிட்டாள். அவளின் சந்தோசத்தை கண்டு நான் திகைத்தே விட்டேன். அப்படி ஒரு மகிழ்வு! அவள் என்ன நினைத்தாளோ, அதே இரவு உடையுடன் முற்றத்தில் போய், வானத்தை பார்த்து துள்ளி மகிழ்ந்தாள். நான் விறாந்தையில் தூணுடன் சாய்ந்தவாறு அவளை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த இருட்டிலும் இடைஇடையே தோன்றும் மின்னல் வெளிச்சத்தில் அவளின் அந்த நனைத்த உடலின் வனப்பு என் உள்ளத்தை இதுவரை காணாத எதோ ஒரு உணர்ச்சிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தது. மழை வயலுக்கு செழிப்பை தரும், அது தம்மை வாழவைக்கும் என்று அவள் மகிழ்ச்சியில், ஆனால் தன்னை அறியாமலே என் மனதிலும் செழிப்பை தந்து கொண்டு இருந்தாள். 'ஏய் பிள்ளை, என்ன செய்கிறாய் ?, உடல் முழுக்க ஈரம், ஒரு ஆண் பிள்ளை இருப்பது கூட தெரியவில்லையா' தாயின் கடுமையான குரல் கேட்டு நான் திடுக்கிட்டேன். அவளும் பயந்த முகத்துடன், அந்த ஈரத்துடன் அறைக்குள் ஓடிப் போய்விட்டாள். அதன் பின் அவள் வெளியே வரவே இல்லை. நான் கொஞ்சம் சமாளித்துக்கொண்ட, அது தான் நான் மகிழ்மதியை கூப்பிட, எழும்பினேன் என்று கூறினேன். அவளின் தாயும் தந்தையும் மகிழ்வாக காணப்பட்டனர். இம்முறை எமக்கு வேளாண்மை நல்ல விளைச்சலை தரும் போல் உள்ளது. இந்த மழை கொஞ்சம் தொடரவேண்டும், குளங்கள் நிரம்ப வேண்டும் என்று விறாந்தையில் தொங்கிக் கொண்டு இருந்த திருக்கேதீஸ்வர ஆலய படத்திற்கு வணங்கி நன்றி கூறினர். நான் இப்படியான நம்பிக்கையில், நம்பிக்கை இல்லாதவன் என்றாலும், அவர்களின் மகிழ்வை மதித்து, நானும் அவர்களுக்கு நம்பிக்கை வரத் தக்கதாக கதைத்தேன். 'இந்த விளைச்சல், மகிழ்மதிக்கு நல்ல வரன் தரவேண்டும், வானம் பார்த்த பூமி ஒழியவேண்டும்' என்று அவர்கள் என்னிடம் கூறிவிட்டு அறைக்குள் போய்விட்டார்கள். "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கும் மளி / குறள் 1192" அந்த தாகத்தை, ஏக்கத்தை காதலனின் / காதலியின் பிரிவின் ஏக்கத்திற்கு வள்ளுவர் சொல்லுகிறார். ஆமாம் விடிந்தால் நான் அங்கிருந்து புறப்படவேண்டும். அப்ப தான் எனக்கு ஞாபகம் வந்தது அவளின் தொலைபேசி இலக்கம் நான் இன்னும் கேட்கவில்லை என்று. அவள் இப்ப உள்ளே போய்விட்டாள். பரவாயில்லை விடியட்டும் என்று காத்திருந்தேன். ஆனால் அவள் விடிந்தும் அவள் என் முன்னால் வரவேயில்லை! நான் அவளின் பெற்றோரிடம் விடை பெற்று வெளிக்கிடும் பொழுது, அவள் அறையின் கதவால் எட்டிப்பார்த்து , கையால் , கண்ணால், கொஞ்சம் வருத்தத்துடன் விடை தந்தாள். அப்ப தான் அவளின் அம்மா என்னிடம் சொன்னார், அவள் மழையில் நனைந்தலால், நல்ல காச்சலும் தலையிடியும் என்று. உடனே அதை சாட்டாக வைத்து, அவள் அருகில் சென்று வருத்தம் விசாரித்தேன். அப்படியே என் தொலை பேசி இலக்கத்தையும் மெல்ல கையில் திணித்தேன். அவள் அதை பெற்றால் என்றாலும், திறந்து பார்க்கவில்லை, ஒருவேளை பெற்றோர் அருகில் இருப்பதால் இருக்கலாம், ஆனால் அவள் கண்கள் தூறல் பெய்தது! நானும் வானம் பார்த்த பூமியாக, அவளின் முகத்தை பார்த்தபடி, அது விரைவில் காதல் மழை பொழியவேண்டும் என்ற ஏக்கத்துடனும், நாளை மே முதலாம் திகதி, தொழிலாளர், விவசாயிகளின் நாள். இவளின் குடும்பம் போன்ற பல விவசாயிகளுக்கு சரியான நீர் வசதிகள் மற்றும் பண்ணையாருக்கு பொருத்தமான மேச்சல் நிலங்கள், பாரபட்சம் இன்றி, அரசு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் மே தினத்தில் வைக்கவேண்டும் என்ற சிந்தனையுடனும் நான் அங்கிருந்து புறப்பட்டேன்!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், யாழ்ப்பாணம்]
  19. கோலி அணியில் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கிறார்............................ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................
  20. கப்பலில் இருந்து கப்பலை நோக்கி ஒரு பார்வை.......! 😂 (ஆங்கிலக் கால்வாயில் ஒரு பயணம்).
  21. இளநீர் குடித்தவன் தப்பிவிட்டான். கோம்பை சூப்பியவன் மாட்டிக்கொண்டான். ஆளுநர் தற்போது வேறு மாநிலத்தில் இளநீர் குடித்துக்கொண்டிருப்பார் 😏
  22. நீங்கள் சொல்வதில் அதிகம் பிழை காண முடியாது. ஆனால் தமிழர்கள் ஒரே அணியாக திரண்டு மைத்திரியை வெல்ல வைத்த பின்னும் - அவர்கள் எதிர் பார்த்த எதுவும் நடக்கவில்லை, வாக்குகள் செல்லாகாசாகவே ஆனதும் உண்மைதானே?
  23. Harry brook இனை இம்முறை டெல்கி அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. அவருடைய பாட்டி இறந்ததினால் அவர் ஐபிஎல்இல் இருந்து விலகினார். இம்முறை பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் இருந்து இறுதி நிமிடத்தில் விலகியிருக்கிறார்கள். Harry Brook (Delhi Capitals) Jason Roy (Kolkata Knight Riders) Mark Wood (Lucknow Super Giants Gus Atkinson (Kolkata Knight Riders) David Willey (Lucknow Super Giants) https://www.bbc.com/sport/cricket/68533187
  24. இரண்டு கேள்விகளில் ஏதாவது ஒன்று சரியாக வரலாம் என்பதற்காக எழுதுகிறார்கள் என்று நினைத்தேன். இதேபோல வினா 1 - 23 இல் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில்எத்தனையாம் இடத்தினை பிடிப்பார்கள் என்று கேட்டிருந்தேன். இதில் சில வேட்பாளர்கள் ஓரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தினை பிடிப்பார்கள் என்றும் பதில்கள் வந்திருக்கின்றன எத்தனையாம் இடமென்று பதில் அளிக்கவேண்டும்? 1,2,3,4,5.. 29வது கேள்விக்கு 3 என பதில் அளித்திருக்கிறீர்கள். ஆனால் மாக்ஸிட் கம்னியூஸ்ட் 2 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது.
  25. 33.54 நிமிடத்தில்: பவளப்பாறைகள் இறந்துவிட்டன, முன்னர் (1985- ) பல வகை நிறங்களுடன் இருந்தன, அதை பார்க்கவே நாங்கள் நீந்தி சொல்வது வழமை. இடைக்கிடை சிறு குன்றுகளிருக்கு, களைப்படைந்தால் அதில் ஏறி நின்று ஆறுதலாக வருவோம், அது ஓர் கனா காலம்😪
  26. சீமான் அவர்களின் அருமையான காட்சி.
  27. சஜீத் அல்லது ரணிலுக்கு தான் அனேகமாக வாக்களிப்பார்கள் என்றும் சொல்கின்றார்கள்.
  28. கூடியிருந்து தண்ணியடிச்சு போட்டு...வெறியேறின பிறகு அரசியல் கதைக்க வெளிக்கிட்டு நடந்த சம்பவம் எண்டு தெரியுது. 😂 இதை ஊடகங்கள் ரஷ்ய-உக்ரேன் பிரச்சனைமாதிரி பிரிச்சு மேய்ஞ்சிருக்குதுகள் 🤣
  29. செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 23/09/1990 பக்கம்: 1 மட்டக்களப்பில் தொடரும் தமிழர் இனப்படுகொலை! பெண்கள், குழந்தைகள் உட்பட 54 பேர் இரு சம்பவங்களில் பலி! யாழ்ப்பாணம், செப். 23 அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட் டத்திலும் தமிழர்களை அழிக்கும் இனப்படுகொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டும் இரு வேறு சம்பவங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 54 தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, தாளங்குடா, கன்னங்குடா ஆகிய பகுதிகளில் 6 பெண்கள் உட்பட 19 தமிழர்கள் - முஸ்லிம் தீவிரவாதக் கோஸ்டி ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை இரவு அக்கிராமங்களுக்குள் புகுந்த 20 பேர் கொண்ட தீவிரவாதிகள் கோஷ்டி ஒன்று தமிழர்களைக் கடத்திச் சென்று பின்னர் கடற்கரையில் வைத்துக் கொன்றதாக அதிகாரபூர்வமான செய்திகளை மேற்கோள்காட்டி இந்திய வானொலி அறிவித்தது. இது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று விடுத்த அறிக்கையில் - புதுக்குடியிருப்பு என்னுமிடத்தில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பெண்கள் உட்பட பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் பத்துப் பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களை அடுத்து புதுக்குடியிருப்பு, தாளங்குடா, கன்னங்குடா ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அச்சம்காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாக அறிவிக்கப்பட்டது. இதே சமயம் - மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தளவாய் என்ற மீனவர் கிராமத்தில் கடந்த வியாழனன்று பெண்கள், குழந்தைகள் உட்பட 35 தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் சேர்ந்து இப்படுகொலைகளைச் செய்ததாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. கிராமத்திலிருந்த ஐந்து வீடுகள் மற்றும் கிராமத்தவர்களின் வள்ளங்கள், கரைவலைகள் என்பன தீயிட்டுக் கொழுத்தப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. [உ] பக்கம்: 2 & 4 சவளக்கடைப் படுகொலைகள் தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல அம்பாறை பிராந்திய பொறுப்பாளர் அறிக்கை தமிழின அழிப்பையே நோக்கமாகக் கொண்டுசெயற்பட்டு வரும் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட செயலினால்- கடந்த 17 ஆம் திசுதி அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனை என்னும் இடத்தில் இருந்த 35 ஆண்கள் சவளக்கடை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவற் படையினராலும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை அழித்தும் விரட்டியடித்தும் அப்படியே தொடர்ச்சியாக கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தமிழ் மக்களை விரட்டியடித்து கிழக்கு மாகாணத்தில் தமது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவது இதன் பின்னால் உள்ள பாரிய செயற் திட்டமாகும். இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல தமிழ் மக்களும் வெளியேறி விட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 1714 தமிழ் மக்கள் முஸ்லிம் காடையர்களினாலும், சிங்களப் படைகளினாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். முன்பு இல்லாதவாறு இன அழிப்பு இதுவரை காலமும் இல்லாதவாறு இம்முறை மிகப் பெருமளவில் அழிப்பிலும், தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகத்திலும் முஸ்லிம் காடையர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இனப்படுகொலைகளை சிங்கள அரசின் தொலைத் தொடர்பு சாதனங்களும் நியாயப்படுத்தி வருகின்றன. இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல நிர்வாக இயந்திரங்களும் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே "புனிதநகர்" திட்டத்தின் கீழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் சுவீரிககப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுவிட்டார்கள். தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகள் சிங்களக் குடியேற்றங்களினால் முழுச் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பாத தீய சக்திகளின் நோக்கம் தற்காலிகமாக வெற்றி பெறுவது குறித்து எவரும் மகிழ்ச்சி அடையமுடியாது. இன்று தமிழர்கள் நாளை -முஸ்லிம்கள் குறுகிய அரசியல் இலாபத்தைத் தேடும் முஸ்லிம் மிதவாத சக்திகள் இப்படியான இனப்படுகொலைகளை ஊக்குவித்து வருகின்றன. இன்று தமிழ்மக்கள் மீது இனப்படுகொலைகளை ஊக்குவித்துவரும் இப்பேரினவாத சிங்கள அரசு தனது இந்தத் திட்டம் திருப்திகரமாக நிறைவேறியதும் தனது இனப்படுகொலைகளை முஸ்லிம் மக்களை நோக்கித் திருப்பும். தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் இரவோடு இரவாக வீதியில் சுட்டும் எரித்தும் கொன்ற சம்பவங்களை எவரும் மறந்து விட முடியாது. இவ்வரசு தமக்குப் பாதுகாப்பாக இருக்குமென எவராவது நினைத்தால் அது வீணான பகல் கனவே ஆகும். தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக ஆயுதம் தாங்கிப் போராடும் எமது தேசியப் படை, இவ்வாறான இனப்படுகொலைகளை பொறுத்துக் கொண்டு இருக்குமென இவர்கள் எதிர்பார்ப்பது மடமை ஆகும். இப்படுகொலைகளுக்கு துணை போகிறவர்களும் கண்டிக்க தவறியவர்களுக்கும் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப்போடுபவர்கள் ஆவார்கள். [இ] ***** தொகுப்பாளர் குறிப்பு: இங்கு குறிக்கப்பட்டிருப்பது தான் புதுக்குடியிருப்பு படுகொலை ஆகும். இதற்கொரு நினைவுத்தூண் புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
  30. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவையான சம்பவத்தின்போது பிபிசி செய்தியாளரும் அங்கிருந்தார். பாட்ரிசியாவுக்கு குழந்தைகளுக்கான பயணச்சீட்டு பதிவு செய்திருந்தது, கேபின் குழுவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. "வயதான பெண்ணான என்னை சின்னக் குழந்தை என்று நினைத்தது வேடிக்கையாக உள்ளது" என்று சிரிக்கிறார் பாட்ரிசியா . இப்படி நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பயணச்சீட்டு பதிவு செய்த போதும் அதே தவறு நடந்ததாக கூறும் பாட்ரிசியா, “இதனால் எனக்கு வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும்” என்கிறார் நூறு வயதை கடந்த பாட்ரிசியா. உதாரணமாக, ஒரு பயணத்தின்போது நான் குழந்தை என்று விமான நிலைய ஊழியர்கள் நினைத்துக் கொண்டதால், முனையத்திற்குள் வயதானவர்களுக்கான வசதிகளை தயார்படுத்தவில்லை. சிரமங்களை எதிர்கொள்ளும் மூதாட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா சிகாகோவில் இருந்து மிச்சிகனில் உள்ள மார்க்வெட்டிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணித்த அதே விமானத்தில் பிபிசி-யின் நிருபரும் பயணித்தார். பாட்ரிசியா தனது மகள் கிரிஸுடன் வந்திருந்தார். "என் மகள் டிக்கெட்டுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தாள், விமான நிலையத்தில் உள்ள கணினி எனது பிறந்த தேதி 1922 ஆக இருக்காது, 2022 ஆக தான் இருக்கும் என அதுவாக கணித்துவிட்டது. கடந்த ஆண்டும் இதேதான் நடந்தது, ஒவ்வொரு முறையும் இந்த விமானத்தில் ஒரு குழந்தை பயணிக்கப் போகிறது என எதிர்பார்க்கிறார்கள். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர்" என்கின்றனர். பாட்ரிசியாவின் இருக்கை பெரியவர்களுக்கான டிக்கெட்டாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், விமான நிலைய கணினியால் 1922 என்ற பிறந்த ஆண்டை கணக்கிட இயலவில்லை. காரணம் இந்த பிறந்த தேதியில் இதற்கு முன்னர் அதிக பயணிகளை கண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே 1922 என்பதை ‘default’ ஆக 2022 என்று மாற்றிப் பதிவு செய்துவிட்டது.” ஓய்வு பெற்ற செவிலியரான பாட்ரிசியா, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தைப் பார்க்கவும் குளிர்காலத்தில் இருந்து தப்பிக்கவும் மிச்சிகன் செல்வது வழக்கம். கடந்த இரண்டு பயணத்தின் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என் வயதை தவறாக பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் ஊழியர்கள் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது. மேலும் பேசிய மூதாட்டி, ”நான் இந்த பிரச்னை சரி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முந்தைய விமான பயணத்தின் போது விமான நிலைய ஊழியர்கள் எனக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யாததால், மற்ற பயணிகள் சென்ற பிறகும் நீண்ட நேரம் நானும் எனது மகளும் விமானத்தின் உள்ளே காத்திருந்தோம். என் உண்மையான வயதை பதிவு செய்திருந்தால் என் மகள் கிரிஸுக்கும் அது உதவியாக இருந்திருக்கும். என் மகள், எங்கள் அனைத்துப் பைகளையும் தனி ஆளாக ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்குக் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். அடுத்த பயணம்... பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா தனது 97 வயது வரை தனியாக தான் பயணம் செய்தார். ஆனால் அதன் பிறகு அவரால் குடும்பத்தின் துணை இன்றி பயணிக்க முடியவில்லை. "எனக்கு கண் பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் நான் தனியாக பயணம் செய்ய விரும்பவில்லை," என்கிறார் பாட்ரிசியா. ”ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஒருபோதும் என் பயணங்களை தடுத்து நிறுத்தாது” என்று உறுதியாகக் கூறுகிறார் அவர். மேலும் இலையுதிர் காலத்தில் தனது அடுத்த விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அப்போது அவருக்கு 102 வயது ஆகி இருக்கும் - ஒருவேளை அடுத்த முறை விமான நிலைய கணினிகள் அவரின் உண்மையான வயதை பதிவு செய்யக்கூடும்! https://www.bbc.com/tamil/articles/c1d43d95kyxo
  31. உண்மை தானே.வயது போன காலத்தில் அவர்கள் விருப்ப பட்டு சில உணவுகளைச் சாப்பிட்டாலும் செரிமானமில்லாது எவ்வளவு அவஸ்த்தைப்படுவார்கள் என்பதை அவ்விடத்தில் நேரிலிருந்து பார்ததால் தான் தெரியும்..மற்றப்படி சொல்லப் பேனால் வயோதிபர்களையோ அல்லது தாய் .தந்தையற்ற பிள்ளைகளையோ இந்த அன்னதானம் தந்தவர்களுக்காக நீங்களும் கும்பிடுங்கோ பிரார்த்தை செய்யுங்கோ என்று சொல்லி படம் எடுத்து பப்ளிக்கில் போட்டு சோ காட்டுவது எல்லாம் ஒரு வேண்டாத வேலை.உங்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டு அவற்றுக்கு எம்மால் முடிந்த உதவியை செய்து விட்டு போவதில் என்ன தவறு இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி சிறியண்ண..
  32. ,....1 ,2 ,3. 4. .......இப்படி தான் எடுக்க முடியும்
  33. நிச்சயமாக அது ஒரு இலக்கம் தான் ...அழகி போட்டியில் வயதுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறதா ?? இவர் எப்படி அதிக புள்ளிகள் பெற்றார்?? அழகுக்கும். வயதிற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை அது மனத்துடன். தொடர்புடையது நான் இளமையாக. இருக்கிறேன் என்ற உறுதியான எண்ணம் ஒரு வயோதிபனை இளைஞர் ஆக்கும் எனக்கு வயது போய் விட்டது என்ற எண்ணம் ஒரு இளைஞரை வயோதிபர்போல காட்டும் 😀
  34. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 03 "அறிமுகம் தொடர்கிறது" / "Introduction continuing" பண்டைய காலத்தில் இலைகளே உணவு பரிமாற பயன்படும் பிரதான தட்டுகள் ஆகும். மனிதர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்திலிருந்தே, இலைகளில் சாப்பிடுவது பல காரணங்களால் வழமையாக இருந்து உள்ளது. பல பண்பாடுகளில் இன்றும் இலைகளில் உணவைச் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. தமிழர்கள் முக்கியமாக வாழை இலைகளைப் பயன்படுத்தினார்கள், அதற்குப் பண்டைய இலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் உள்ளன. அவ்வகையில், வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, இல் "தண்ணீர் தெளித்துத் தன் கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென" என்று குறிக்கிறது. அதாவது, தனது கையினால் குளிர்ந்த நீரைத் தெளித்து மெழுகி, ஈனாத வாழையின் [குமரி வாழையின்] குருத்தினை விரித்து அதன்கண் உணவினைப் படைத்து அடிகாள் இவ்விடத்து உண்டருள்க என்று சொல்ல, என்கிறது இந்த வரிகள். அது மட்டும் அல்ல, சிலப்பதிகாரத்திற்கு முன்பே எழுதப் பட்ட புறநானுறு - 168[11-12] கூட, "கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்" என்று கூறுகிறது. அதாவது, - காட்டு மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்ணும் - என்கிறது. இவை அனைத்தும் வாழை இலை நீண்ட காலமாக உணவு சாப்பிட ஒரு தட்டுப் போல் பாவிக்கப் பட்டதை சுட்டிக்காட்டுகிறது. இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com" என்ற வலைத் தளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். "நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும் வாலில்லா பச்சைமீன் வாழையிலையில் மாணிக்க நீரைத் தெளித்து பிரகாசிக்க தமிழர் கண்ட புதுமைப் பண்பாடு!" "இனிப்பு நறுமணம் ஒன்றாய்ச் சேர வாய்க்கு முதல் பாயாசம் கொடுத்து சுவையான பச்சடி சர்க்கரை உப்பு உலர்ந்த அரை திடமான கறிகள்!" பப்படம், பொரியல் ஊறுகாய் வாய்க்கு மென்மையான இனிப்புத் திண்பண்டம் சூடான சோறு மத்தியில் சாம்பார் துண்டுகளுக்கு இடையே வரிசையாகக் கறிகள்" "சூடாக சோறும் இரசமும் சேர இனிய இடைவேளைக்கு பாயாசம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள வாய்க்கு என்றும் சொர்க்கமே!" "தொட்டு சுவைக்க ஊறுகாய் சாதம் தயிருடன் மனது நிரப்ப விரும்பிய வகையில் சமைத்து வந்து விருந்தளித்ததே சொல்லெண்ணா உணவு!" "வாழையிலையின் விளக்கமுடியாத சுவை தெய்வீக சொர்க்கம் அள்ளித் தர அனுபவித்த வயிற்றின் எண்ணம் மகிழ்ந்து ஒரு ஏப்பம் விடுகுதே! [மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] தமிழர்களால், சைவம் அசைவம் எந்த உணவாக இருந்தாலும் அவை பொதுவாக, இரண்டு விதமாக சூடு, குளிர்ச் சாப்பாடுகள் என பிரிக்கப்படுகின்றன. உதாரணமாக, தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்றவை குளிர்ச் சாப்பாடுகள் ஆகும். தமிழர்களின் உணவுகள் இன்னும் பெரும்பாலும் இந்த அடிப்படையை கொண்டவை ஆகும். தமிழர்களின் நாட்டு வைத்தியமும் அதிகமாக இப்படியே அமைகிறது. அதனால் சுகையீனமும் சூடு, குளிர் என வகைப்படுத்தப் படுகிறது. உணவு வழி சிகிச்சை [diet therapy], சூட்டை உண்டாக்கும் நோய்களுக்கு குளிர் உணவு வழியாகவும், குளிரை உண்டாக்கும் நோய்களுக்கு சூட்டு உணவு வழியாகவும் சிகிச்சை அளிக்கிறது. இந்த நம்பிக்கை இன்னும் தமிழரிடம் காணப்படுகிறது. உதாரணமாக, உடலில் சூட்டை உண்டாக்கும் சின்னம்மை நோய்க்கு, சூட்டை தணிக்கும் குளிர்ச் சாப்பாடுகளான பழங்கள், மோர், இளநீர் போன்றவை கொடுக்கப்படுகின்றன. மேலும் தமது பாரம்பரிய உணவு வகைகளை பேணிக் காக்கும் முகமாகவும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முகமாகவும் ஒவ்வொரு விழாவிலும் சடங்கிலும் பாரம் பரிய உணவுகள் பெரும்பாலும் இன்னும் வழங்கப்படுகின்றன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி :04 'அறிமுகம் தொடர்கிறது' தொடரும் "FOOD HABITS OF TAMILS" / PART 03 'Introduction continuing' Leaves are the prime plates used for serving food. Since the time humans lived in forests, leaves have been used for various reasons, such as eating food off leaves. Many nature reserve even now serve food on leaves. In this case , we found that Tamils used Banana leaves. For example, Silappatikaram, which was written in the 2nd or 3rd century AD has references to serving food in banana leaf as: "தண்ணீர் தெளித்துத் தன்கை யால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென" . These lines describe how the wife is serving food to her husband and it explicitly says that she sprinkle water, clean the banana leaf and spreads it and serves food on it. Another old Tamil work, Purananuru 168, which was written well before Silappatikaram, also, has the following lines, "front yard where wild jasmine grows beautifully along with koothalam [Convolvulus]. They share their food on wide leaves of plantain trees." "கூதளங் கவினிய குளவி முன்றில் செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்", So there are enough evidences that banana leaf has been in use to serve food for a very, very long time. Even A song from PoemHunter.com, a poetry site of today, where you can find poems from all around the world, praise the tamilian traditional foods served on banana leaf as below: "Gleaming, green and live Like a tailless fish alive Neatly cut and placed Gemming sheen of water sprinkled... Wished varieties cooked and brought on Dished up with many a pattern Items sweetened and savoured The Tamilian way innovated Served on sweetly first paayasam Of course hand to mouth a culinary mannerism Delightful pachdis sugar and salt varied next Delicious curries dry and semi-solid next Incoming pappads, crisp vegetable chips and pickle Following fudges and ladoos and like many to tickle Spooned in the centre hot rice Mixed with sambar so spice Rowed up curries in-between morsels Put into mouth, divine and dainty handsels Next helping…rice and rasam too hot Second helping…vegies to fill the heart Sweet break... Paayasam, much more to take On and on...' No' to brake Ending with rice and curd Touchy pickles dotted and tasted A meal of regale admired A menu of plethoric choices The banana leaf's magic flavours The stomach's cliche Yeaaaave...belch" [-By Indira Renganathan / poemhunter.com] Whether it is vegetarian or non-vegetarian food, all food commodities were divided into two broad categories, hot and cold. The whole of Tamil cuisine is still largely based on this classification which also influenced indigenous medicinal practices: Illnesses were classified as hot and cold and the diet therapy was based on treating with cold food those caused by heat and with hot food those caused by cold. This belief still persists. Chicken pox, for example, is believed to be a manifestation of body heat and the foods permitted are those that are supposed to counter this heat - fruit, butter milk and tender coconut. Also Every festival and ceremony has a traditional menu. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART :04 'Introduction continuing' WILL FOLLOW
  35. வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள்!!!
  36. மௌனத்திலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். "இது தான் என் இன்றைய நிலை" "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலசத் தொடங்கினேன் வேஷம் போட்ட பலதைக் கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களைக் கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!” "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!” "ஓடும் உலகில் நாமும் ஓடி ஓரமாய் வருத்தங்கள் ஒதுங்க வைக்க பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!” (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.