Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19122
    Posts
  2. P.S.பிரபா

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1866
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20014
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/04/24 in all areas

  1. வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) தம்பி நீ கனடாவோ..? (alvayan) என் இந்தியப் பயணம் (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை (ரசோதரன்) புளுகுப் போட்டி (ரசோதரன்) சிறந்த நடுவர் (ரசோதரன்) ஒரு பொய் (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன் (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க… (alvayan) புலம் பெயர்ந்த புகை (ரசோதரன்) பிஞ்சுக் காதல்… (alvayan) கனத்தைப் பேய்க் கவிதை….. (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. (goshan_che) காந்தி கணக்கு (ரசோதரன்) சனாதன வருத்தம் (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு (theeya) தோற்ற வழு (ரசோதரன்) பாக்குவெட்டி (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால் (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும் ( P.S.பிரபா) எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. (தமிழ் சிறி) அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம் (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய் (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....? (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள் (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் (ரசோதரன்) உயிர்த்தெழுதல் (ரசோதரன்) குரு தட்சணை (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்" (kandiah Thillaivinayagalingam) தேனும் விஷமும் (ரசோதரன்) சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா (விசுகு) நிலவே நிலவே கதை கேளு! (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ. (ஈழப்பிரியன்) நூலறிவு வாலறிவு (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு! (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் @ரசோதரன் 31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  2. என்னில் இருந்துதான் மனிதர்களாகிய நீங்கள் வந்தீர்கள் என தன் செய்கைகள் மூலம் நினைவூட்டுகிறதா? அக்கராயன் வீதியில் சித்திரை வெயிலுக்கேற்ற நிழலும் வாகை மரங்களின் தென்றல் காற்றும் உண்டு.
  3. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். Posted on April 29, 2024 by சமர்வீரன் 602 0 தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவுவிழா மத்திய மாநிலத்தில் 06.04.2024 அன்று தொடங்கி, வடமத்தி, வட மற்றும் தென்மேற்கு மாநிலங்களைத் தொடர்ந்து நிறைவாகத் தென்மாநிலத்தின் ஸ்ருற்காட் நகரில் 27.04.2024 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவுற்றுள்ளது. மாவீரர்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் தமிழ்ப்பற்றாளர்களையும் மற்றும் மக்களையும் நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதையடுத்து, அன்னை பூபதியவர்களுக்கும் யேர்மனியிலே தேசிய மற்றும் தமிழ்ப்பணியோடு பயணித்த நாட்டுப்பற்றாளர்களினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து அகமேந்தியதைத் தொடர்ந்து அகவை நிறைவுவிழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்திருந்த யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், பசுமைக்கட்சியின் ஸ்ருற்காட் மாநகரசபை உறுப்பினர் திருமதி மரினா சில்வெறி, கிறித்துவ ஜனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் இளையோர் அணித்தலைவர் திரு.லியோனாட் றெசிமண், ஸ்ருற்காட் சிறீ சித்திவிநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ சிவகுமார் குருக்கள், யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநிலப் பொறுப்பாளர் திரு. கனகையா சிறீகாந்தன், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்சன் கோட்டப்பொறுப்பாளர் திரு. ஜெகநாதன் சுகுமார், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நூர்ன்பேர்க் கோட்டப் பொறுப்பாளர் திரு. கந்தையா கிட்டிணபிள்ளை, யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோரின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம், தமிழாலய கீதத்துடன் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின. பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் தமது செயல்திறன்களை வெளிப்படுத்தி வெற்றியை ஏற்றமாகப் பெற்றவர்களையும் அதனைப் பெறவைப்பதற்காக உழைக்கும் பணித்திறனாளர்களையும் மதிப்பளிக்கும் பெருவிழாவாக இவ்வகவை நிறைவு விழா தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும் 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. முன்சன் தமிழாலயத்தின் நிர்வாகி “தமிழ் மாணி” திரு. நாகராசா நிர்மலதாசன் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை சிறப்பிற்குரியதாகும். தமிழ்த்திறன், கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் முன்சன் தமிழாலயம் 1ஆம் நிலையையும் நூர்ன்பேர்க் தமிழாலயம் 2ஆம் நிலையையும் பெற்றுக்கொண்டன. தமிழ்த்திறன் போட்டியில் முதலாவது நிலையைத் தமதாக்கிய முன்சன் தமிழாலயம் மாமனிதர் இரா.நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டுவரும் மாமனிதர் இரா. நாகலிங்கம் விருதைக் கையேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டிற்கான கலைத்திறன் போட்டியில் மாநிலப் மட்டத்தில் முன்சன், ரூட்லிங்கன், நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றதன் அடிப்படையில் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 64 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 21:00 மணிக்கு அகவை நிறைவு விழா தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்குடன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் திட்டமிடலுக்கேற்ப 34ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களிலும் சிறப்புடன் நிறைவடைந்தது. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தென்மாநிலம்-ஸ்ருற்காட். – குறியீடு (kuriyeedu.com)
  4. கவலையை விடுங்கள் எந்த பதட்ட நிலையும் உருவாகவில்லை🤣. ஆனால் எனது எழுத்தை “மிகைப்படுத்தல்” என விபரித்தால் அது என் integrity சார்ந்த விடயம் என்பதால் பதில் கொஞ்சம் காரமாக வரும் 🤣. இரெண்டு திரிகளிலும் ஒரே விடயத்தையே அலசுவதால் overlap சகஜம். ஆனால் இங்கே நீங்கள் எழுதியதை பார்க்க இவை typical first world complaints என்பதாக படுகிறது. மீண்டும் சொல்கிறேன் இந்தியாவுக்கு கீழே இருக்கும் தீவு 3ம் உலக நாடான இலங்கை - நியூசிலாந்து இல்லை🤣. உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம். நானும் இந்தியாவிலோ, இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதில்லை. போய் இறங்கியதும் முதலில் முகத்தில் அடிப்பது வெக்கை, அடுத்தது வியர்வை நாற்றம். பயணக்களைப்பு, சீதோசண மாற்றம் - நிச்சயமாக முதல் மூன்று நாள் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கும். ஆனால் இவை அந்த நாடுகளின் அடிப்படை பண்புகள். சுற்றுலா போகும் நாம் தான் அவருக்கு பழக வேண்டும் அல்லது வேறு எங்காவது போக வேண்டும்.
  5. மன்னிக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு. 4 நாளில் எவராலும் எந்த நாட்டை பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது. குறிப்பாக மத்திய தரை கோட்டை அண்டிய 3ம் உலக நாடுகளுக்கு மேற்கில் இருந்து போனால், அதுவும் நீங்கள் நீண்ட காலத்தின் பின் போயுள்ளீர்கள் - அந்த சூழலுக்கு இசைவாக்கம் அடையவே 3 நாள் எடுக்கும். எனக்கெல்லாம் இந்தியா போனால் முதல் மூன்று நாள் “ஏன் இங்கே வந்தோம்” என இருக்கும். ஆனால் மூன்று கிழமை முடிந்து இலண்டன் திரும்பும் போது, போகத்தான் வேண்டுமா என இருக்கும். நீங்கள் 4 நாள் துயர நிகழ்சி, ஒரு மாசு நிறைந்த நகரத்தில் ஓடி திரிந்து விட்டு - வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை வைத்து ஒரு நாட்டின் நிலையை எடை போட முடியாது. அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் டேஸ்ட் வேறுபடுவதும் உண்டு. உதாரணமாக நான் சொன்ன கொழும்பு புதுக்கடை தெருவோர கடைகளில் எனது வீட்டில் என்னை தவிர ஏனையோர் சாப்பிட மாட்டார்கள். அந்த சூழலையே பார்த்து முகம் சுழிப்பார்கள். அதே போல் ஒரு மண் கடையில் ரொட்டியும் பருப்பும் - பலர் இதில் என்ன இருக்கு என யோசிப்பார்கள். ஆனால் அதையே பலர் அசலான இலங்கை அனுபவம் என அனுபவிப்பார்கள். சுற்றுலாக்கள் எல்லாம் ஒன்றல்ல - 3ம் உலக நாடுகளில் உள்ள அனுபவம், வேறு சுவிஸ், நோர்வே அனுபவம் வேறு. சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும். அவர்களை கொண்டு போய் இந்தியா இலங்கையில் அதுவும் 4 நாள் விட்டால் திணறித்தான் போவார்கள்.
  6. என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ••••••• தொடரும் ♻️
  7. மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன். மறைந்த நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது. விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது. விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380958
  8. பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி பதவி, பிபிசி நியூஸ், குமாசி 3 மே 2024 பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர். "இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார். இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை. அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார். 'கறை படிந்த வரலாறு' பட மூலாதாரம்,BRITISH MUSEUM படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள். விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது. "கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,AFP "இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார். கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும். "இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார். தீராத சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள் கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள். அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார். கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட. பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன. 'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo
  9. "நன்றியுள்ள நண்பன்" [நாய்] பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், தான் கக்கியதையே திரும்பவும் உணவாகக் கொள்ளும் நாயின் மேல் எனக்கு ஒரு அருவருப்பு எப்பவும். அது. மட்டும் அல்ல, ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் போதும். வாலை ஆட்டி, நம்முடன் வரும் அதே நாய், வெறி பிடித்து விட்டால், பிஸ்கட் போடுபவனையே கடித்து குதறியதும் கேள்விப்பட்டுள்ளேன். அதனாலோ என்னவோ நான், நாய் வளர்ப்பதை எங்கள் வீட்டில் தடுத்துவிட்டேன். என்றாலும் பக்கத்து வீட்டில் நல்ல அழகான நாய் வளர்ந்து வந்தது. நான் வேலைக்கு போகும் பொழுது அல்லது திரும்பி வரும் பொழுது, அந்த வீட்டு அம்மா, தன் செல்ல நாயுடன் படலையில் பிராக்கு பார்த்துக்கொண்டு நிற்பார். என்னை கண்டால் தம்பி, எப்படி சுகம் என்று விசாரிப்பது வழக்கம். அப்பொழுது அந்த அவர்களின் நாய் என்னைச் சுற்றி துள்ளி குதிக்கும். நான் அதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 'நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா, நன்றி கெட்ட மகனை விட, நாய்கள் மேலடா' நான் பக்கத்து வீட்டை கடந்து போகும் போதும் வரும் போதும் , அந்த அவர்களின் நாய், வால் ஆட்டிக்கொண்டு என் காலடிக்கு வரும். ஆனால் நான் கெதியாக நடந்து அதை கடந்து போய்விடுவேன், ஆனால், பக்கத்து வீட்டு அம்மா அதை பார்த்து சிரிப்பார். ஏ தம்பி, ‘யாவரினுங் கடையனாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு’ என்று மக்களைக் காட்டிலும் விலங்கு இழிபிறப்புடையது; விலங்கில் மிக இழிந்தது நாய். நாய் போன்ற இழி பிறப்புடையவன் யான் என்று மாணிக்கவாசகர் ஆண்டவனிடம் கூறியது தெரியாதோ என்று கேட்டார். நான் அதற்கு “நாற்பது வயதில் நாய் குணம்“ தானே? ஒருவேளை அவருக்கு நாற்பது வயதோ ? என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன் எம் வீடு மலை நாட்டில் இருந்ததால், எங்கள் வீட்டிற்குப் பின்னால் ஒரு சிற்றோடை ஒன்று இருந்தது. இது ஒரு சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இது ஆற்றை விடச் சிறியது என்றாலும், தாராளமாக அதில் நீந்தக் கூடிய அளவு நீர் ஓடிக் கொண்டு இருக்கும். எனவே நான் தினம் அதில் நீந்துவது வழமை. இந்த சிற்றோடை அருகில் இருக்கும் ஆற்றிலிருந்து பிரிந்து வருகிறது. நீர் பெரிய தாழம் இல்லை, ஆனால் விரைவாக ஓடுகிறது. அது எமது வீட்டை தாண்டி, கீழ்நோக்கி ஓடி, ஒரு முக்கால் மைல் தூரத்தின் பின் ஒரு நீர்வீழ்ச்சி மீது விழுகிறது. நான் அப்படி தினம் நீந்தும் பொழுது, எனோ, அந்த பக்கத்து வீட்டு நாயும் வந்துவிடும். நான் கல் எறிந்து துரத்தினாலும், அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் என்னை பார்த்த படியே இருக்கும். நானும் அதை பின் கவனிக்காமல் விட்டு விட்டேன் ஒரு கோடை காலத்தில், அன்று நான் அரை நேரத்தில் வேலையில் இருந்து திரும்பியதால், வழமைக்கு முதலே நான் நீந்த ஓடைக்கு போனேன். கையில் ஒரு கல்லுடன். நீருக்குள் போகுமுன் சுற்றிப்பார்த்தேன், அந்த பக்கத்து வீட்டு நாயை காணவில்லை. ஒருவேளை நான் இன்று முந்தி வந்ததால், கவனிக்கவில்லையோ என்று சிந்தித்தபடி, கல்லை எறிந்துவிட்டு , நீரில் குதித்தேன். அன்று தண்ணீர் மிகவும் நன்றாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் வழமையை விட அதி வேகத்துடன் ஓடிக்கொண்டு இருந்தது. ஆகவே என்னை கீழே போகும் நீர் இழுத்து போக கொஞ்ச நேரம் விட்டுவிட்டு, பின், மேல் நோக்கி, ஓடைக்கு எதிராக நீந்தி பொழுதைக் கழித்தேன். அது மிகவும் சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஆனால், நேரம் போகப் போக திரும்பி, ஓடைக்கு எதிராக நீந்துவது கடினம் கடினமாக களைப்பினால் வரத் தொடங்கியது. இனி இப்படி நான் நீந்துவதை நிறுத்தவேண்டும் என்று யோசிக்கும் பொழுது தான் , நான் உணர்ந்தேன் , நான் ஏற்கனவே கீழ் நோக்கி பலதூரம் போய்விட்டேன் என்று. என்னால் நீர் அருவியின் மீது, நீர் பாயும் சத்தமும் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. நான் உடனடியாக மேல்நோக்கி நீந்த முற்சித்தேன். ஆனால் என் உடல் அதற்கு இடம் அளிக்கவில்லை. அப்பத்தான் என் தனிமை, வரப்போகும் பயங்கரம் எல்லாம் என் கண்முன் நிழலாக வந்தன. அந்த நேரம் என் கண்ணின் ஒரு கோணத்தில், அந்த பக்கத்து வீட்டு நாய் ஓடையின் கரையில் மிகவும் வேகமாக கீழ் நோக்கி ஓடுவதைக் கண்டேன். அது என்னை கடந்து போனபின், நீரில் குதித்து, நடுப்பகுதியில் தன்னை மிதக்க வைத்துக்கொண்டு என்னையே விடாமல் பார்த்துக் கொண்டு காத்து நின்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை . ஒரு வேளை நான் கல்லால் எறிவானோ என்று அப்படி நிற்கிறதோ என்று எண்ணினேன். என் உடலில் பலம் இப்ப இல்லை. என்ன செய்வது என்று புரியவில்லை, ஓடை நீர் என்னை வாரி அள்ளிக் கொண்டு போக தொடங்கி விட்டது. நான் அந்த பக்கத்து வீட்டு நாயை கடந்ததும் , அந்த ஆழமான நீர் வீழ்ச்சியில் விழப் போகிறேன். அது என் முடிவு என்று எண்ணி கண்ணை இருக்க மூடிவிடடேன், என்றாலும் சற்று நேரத்தின் பின் கண் திறந்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் ! நான் நீர் ஓட்டத்துடன் நாய்க்கு கிட்ட கிட்ட வர, அந்த நாயும் தன்னை என்னைத் தடுக்கக் கூடியதாக சரிப்படுத்திக் கொண்டு இருந்தது . அப்ப தான் அந்த நாயின் திட் டம் எனக்குப் புரிந்தது. நான் அதற்கு கிட்ட போனதும் அதன் நீண்ட உரோமத்தை இருக்க பிடித்துக் கொண்டேன் அது உடனடியாக குறுக்கே நீந்தி கரையை அடைந்தது. நானும் பக்கத்து வீட்டு நாயும் கரையை அடைந்ததும், ஓடையில் இருந்து வெளியே வந்து, அந்த கரையிலேயே களைப்பினால் படுத்துவிட்டேன். ஆனால் அந்த நாயோ , அப்படியே என்னை விட்டுவிட்டு ஒரே பாச்சலில் பாய்ந்து எங்கள் வீட்டு பக்கத்தை நோக்கி, மலையில் ஏறி ஓடத்தொடங்கி விட்டது. நான் தனிய அந்த களைப்புடன், படுத்து இருப்பது கொஞ்சம் பயமாக இருந்தது. அதை கூப்பிடுவோம் என்றால், அதன் பெயர் கூட எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டு அம்மா தன் மகளின் செல்லப் பிராணி என்றும் , அதை அவள் எதோ ஒன்று சொல்லி கூப்பிடுவதாக சொன்ன ஞாபகம். அந்த பெயர் என் மனதில் வரவே இல்லை. ஆகவே நான் மீண்டும் மணலில் படுத்தேவிட்டேன். பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றும் தெரியாது. நான் கண் விழிக்கும் பொழுது முதல் உதவியாளர்கள், அந்த பக்கத்து வீட்டு நாய், அந்த அம்மாவின் மகள் எல்லோரும் என்னை சுற்றி தேவையான உதவிகள் செய்து கொண்டு நிற்பதைக் கண்டேன். எனக்கும் ஓரளவு தெம்பு வந்துவிட்டது. அந்த நாய் நான் முழித்ததை கண்டதும் வாலை ஆடிக்கொண்டு பக்கத்தில் வந்து காலை நக்கியது. நான் இப்ப அருவருப்பு அடையவில்லை, கல்லால் எறியவும் இல்லை, அதை அணைத்தபடி, பக்கத்து வீட்டு அம்மாவின் மகளை பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனை கொள்ளை அழகு. அவள் மெல்லிய புன்னகை சிந்தியபடி, நான் எழும்ப கை நீட்டினாள்! அன்று அவளின் கை பிடித்தவன் தான், இன்று அதை நிரந்தரமாகி விட்டேன் . இப்ப என் தனிக் குடும்பத்தில், நானும், அவளும் அந்த நாயும் தான்! ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அந்த நாயின் பெயர் பப்பு , அவளின் பெயர் ஜெயா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். Posted on April 16, 2024 by சமர்வீரன் 714 0 யேர்மனியில் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை நிர்வகித்துவரும் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா வடமாநிலத்தின் பீலபெல்ட் அரங்கில் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 09:30 மணிக்குத் தமிழீழ மண்ணின் விடுதலைக்காக உயிரீகம் செய்தவர்களுக்கான நினைவுப் பொதுச்சுடரேற்றலுடன், விழாவிற்கு வருகைதந்திருந்த சிறப்பு வருகையாளர்களையும், மாணவ வெற்றியாளர்களையும் மதிப்பளிப்புப்பெறும் ஆசான்கள், செயற்பாட்டாளர்களையும் இசையுடன் அரங்கிற்குள் அழைத்து வந்தனர். அறப்போர் புரிந்து வீரகாவியமாகிய “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதன் பின், அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் எனத் தொடக்க நிகழ்வுகளின் நிரலில் தொடங்கியது. சிறப்பு வருகையாளர்களான பீலபெல்ட் நகரத்தின் துணைமுதல்வர் திரு.இன்கோ நூர்ன்பேர்கர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடராசா திருச்செல்வம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநிலம் 1இன் பொறுப்பாளர் திரு.இளையதம்பி துரைஐயா, தமிழர் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு.சுந்தரலிங்கம் கோபிநாத், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன், தமிழ்க் கல்விக் கழகத்தின் வடமாநிலக் கல்விப்பிரிவுச் செயற்பாட்டாளர் திருமதி யமுனாராணி தியாபரன், பிறீமன் தமிழாலயத்தின் நிர்வாகி திருமதி கனகேஸ்வரி சந்திரபாலன், யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வுகள் தொடங்கின.அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணித்திறனாற்றிய ஆசான்கள், செயற்பாட்டாளர்களுக்கான மதிப்பளிப்புகளோடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும்; 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது. பேர்லின் தமிழாலயத்தின் ஆசிரியர் “தமிழ் மாணி” திருமதி ரஞ்சினி கருணாகரமூர்த்தி அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழாலயங்களில் மழலையராக இணைந்து ஆண்டு 12ஐ நிறைவுசெய்த 25 மாணவர்கள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன் அவர்களால் வாழ்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்புகளுக்கு மத்தியில் தமிழாலய மாணவர்களின் உரை, கவிதை, மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகள் விழாவிற்குச் சிறப்புச் சேர்த்தன. தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 17:30 மணிக்கு அகவை நிறைவு விழாச் சிறப்புடன் நிறைவெய்தியது. தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா மத்தி, வடமத்தி மற்றும் வடமாநிலத்தில் நிறைவுற்றதைத் தொடர்ந்து, தென்மேற்கு மாநிலத்தில் 20.04.2024 சனிக்கிழமையும் தென்மாநிலத்தில் 27.04.2024 சனிக்கிழமையும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 34ஆவது அகவை நிறைந்த மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம் – வடமாநிலம்,பீலபெல்ட். – குறியீடு (kuriyeedu.com)
  11. சிங்களம் ஒருபோதும் நேர்மையாக சிந்தித்ததில்லை. தந்திரமாகத்தான் சிந்தித்தது. நாங்களும் தந்திரமாக நடந்துகொண்டிருக்கவில்லை. இலங்கைத் தரைவழித் தொடர்பை எப்போது இந்தியா ஏற்படுத்துகிறதோ அப்போதிருந்து இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாகிவிடும். இந்தியக் கழிவுகள் இலங்கையை நிரப்பத் தொடங்கும். இது ஒட்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியானகதைதான். அப்போது பிரபாகரனின் அருமையை சிங்களம் புரிந்துகொள்ளும்.
  12. இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள் தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும் செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
  13. 🤣 இதில் அடி சறுக்க என்ன இருக்கிறது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவா. தெரிந்ததை எழுதுவதும், தெரியாததை அறிவதும்தானே கருத்துக்களத்தின் நோக்கம். இப்போ உங்கள் தயவால் இதை அறிந்து கொண்டேன். என் குடும்ப உறுப்பினர் விரைவில் போகிறார். உதவியாக இருக்கும். அதே போல் யாழ்கள உறவுகளுக்கும்.
  14. 10 ஆம் கட்ட அகழாய்வுக்கு விண்ணப்பம்..எப்போது தொடங்கும் அகழாய்வு பணி?
  15. தேசியத் தலைவரை கொன்றதற்காக வருந்தும் நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு வரும்.
  16. மிக்க நன்றி சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் தொடுவாயிற்கு மற்றப்பக்கத்தில் தானே உண்டு. நான் போனது முல்லைத்தீவு பரந்தன் வீதியால் போய் சுண்டிக்குளம் வீதியூடாக.. அந்த இடமே வறண்டு போய், சரியான வீதி கூட இல்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தமையால் நீண்ட நேரம் இருக்க நினைக்கவில்லை. 👆🏽இப்படித்தான் அனேகமான பகுதி இருந்தது. மிக்க நன்றி சுவி அண்ணா
  17. இவர்கள் தமிழருக்கு தீர்வே தேவையில்லை என்கிறார்களே? ஐக்கிய இலங்கை தான் குறிக்கோள். ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினாலும் பாராளுமன்றைக் கைப்பற்ற முடியுமா? ஒவ்வொரு சட்டங்களையும் பாராளுமன்று அல்லவா நிறைவேற்ற வேண்டும். மிக முக்கியமாக இவர் கலந்து கொண்ட எந்த ஒரு சந்திப்பிலும் இனப்பிரச்சனை பற்றி மூச்சே விடுவதில்லை.
  18. நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வில் இன்னொரு படிமுறைக்கு போய் விட்டீர்கள்🤣🤣🤣. படு பயங்கர தம்பிகள் கூட இப்படி ஒரு முட்டு கொடுத்ததில்லை🤣. நடுநிலையாளராக காட்டி கொள்ளும் உங்களுக்கு இது புதிசு…கண்ணா….புதிசு. பிகு பொது வெளியில் மூக்கை தோண்டி, திரவியத்தை தூவக்கூடாது என்பது அடிப்படை சுகாதாரம். வேணும் எண்டால் அண்ணனுக்கு ஒரு டிரிம்மர் வாங்கி அனுப்பி விடுங்கள்.
  19. கவலை வேண்டாம் ப்ரோஸ். பக்க விழைவு அரிதானது. Rare. சில வேளை ஊசி போட்டிருக்காவிட்டால், இப்ப நாங்கள் எவராவது ஒருவரை நினைவு திரியில்…நல்லவர்…வல்லவர் என எழுதிகொண்டிருப்பம். அதிகம் நியூரொபின் எடுத்தாலும் பக்க விழைவு வரும். எல்லா மருந்து பக்கெட்டிலும் எழுதி இருக்கும். நாமிருக்கும் நாடுகளில்தான் எத்தனை இறப்புகள் - இருப்பினும் யாழ்களத்தில் அத்தனை உறவுகளும் பத்திரமாக கொவிட்டை தாண்டி வந்துள்ளோம் எண்டால் அதன் மிக பெரிய காரணி, தக்க பாதுகாப்பை எடுத்தது + ஊசி போட்டது. #Just chill
  20. சம்பந்தமில்லாத கருத்துக்களின் மூலம் இறந்துபோன உங்கள் திரியின் உயிர்ப்பிக்க முயற்சிப்பது போலுள்ளது, உங்கள் திரியினை வாசித்துவிட்டு இலங்கை தொடர்பான கனவுடன் இலங்கை சென்ற எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னிடம் இலங்கை சுற்றுலாவுக்காக எனது கருத்தினை எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களிடம் எதற்காக இலங்கையினை தெரிவு செதீர்கள் என்பதற்கு பெரும்பாலான பதில்கள் இணையத்தில் உள்ள கருத்துகளாக இருப்பதனை அவதானித்துள்ளேன். இவ்வாறு மிகைப்படுத்தப்படும் கருத்துகளால் பின் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
  21. பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும் போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது. ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும் கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது. பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
  22. அந்த பலவைகை நீர் நிலைகளும் இன்று உள்ளதா என்றால் இல்லை என்ற பதில் தான் உண்டு.
  23. போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும். சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம். உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?
  24. கூடமாட நிண்டு வேலைசெய்யிறவனுக்கும்.....போறவாற இடமெல்லாம் இருமல் தடிமலை மற்றவனுக்கும் பரப்பி விடுறதிலை என்னதொரு சந்தோசம்....🤣
  25. Disembarkation card உம் on line இல் நிரப்பலாம். 23 சித்திரையில் போனபோது நேரே இமிகிரேசன் கவுண்டருக்கு போனோம். ஒரு கதையும் இல்லை.குத்திப் போட்டு தந்தார்கள். அதுதானே விடயத்தை தெளிவா சொல்லுங்க. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இப்போது தெளிவடைந்துவிட்டேன்.
  26. அவர் உங்களுக்கு நல்லதை சொல்கிறார் நீங்கள் அர்த்தம் விளங்காமல் ....... பிராண்டி விட ஒரு பூனை வளர்க்க சொல்கிறார் போல......! 😁
  27. பிராண்டி விட்டு முட்டைக் கோப்பி.
  28. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி சுமே அவர்களுக்கும், தோழர் புரட்சிக்கும் சகல நலன்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றோம்.......! 💐
  29. யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான் May 3, 2024 தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துதல் அளித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல பகுதிகள் போராட்டக்களமாகவே மாறிவருகின்றது. அதுவும் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களின் வீரம் செறிந்த ஆற்றல்களைக் கொண்டிருந்தவர்கள் ஆண்ட பகுதிகள் எல்லாம் இன்று தமது இருப்புக்காக போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவருகின்றனர். இன்று மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 225நாட்களையும் தாண்டி பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில் வாகரை பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு வாகரை மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையினையும் காணமுடிகின்றது. மட்டக்களப்பு வாகரை பிரதேசம் என்பது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தளமாகயிருந்த பிரதேசமாகும். வடகிழக்கிற்கு இணைப்பு பாலமாகயிருந்து இக்கட்டான யுத்த காலத்தில் வடக்கிற்கு போராளிகளை அனுப்பிவைப்பதற்கான முக்கிய தள பகுதியாகயிருந்ததுடன் கிழக்கின் ஒரு கட்டளை மையமாகவும் இருந்துவந்தது. இன்று வாகரையில் நடக்கும் சம்பவங்களும் செயற்பாடுகளும் அங்கு தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. வாகரை பிரதேச செயலகப்பிரிவானது 589 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதுடன் 16 கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டது. வாகரைப் பிரதேச செயலகம் எனப்படும் கோறளைப்பற்று வடக்கு பிரிவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதியை உள்ளடக்கியது. இப்பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் அதன் எல்லைகளாக வடக்கில் வெருகல் ஆற்றையும் திருகோணமலை மாவட்டத்தையும், கிழக்கில் வங்காள விரிகுடா கடலையும், தெற்கில் கோறளைப்பற்று மத்தி பிரிவையும், மேற்கில் பொலன்னறுவை மாவட்டத்தையும் கொண்டுள்ளது. அனைத்து வளங்களையும் இந்த பகுதி கொண்டிருக்கின்றபோதிலும் இங்குள்ள வளங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு பதிலாக அப்பகுதி வளங்களை தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மையினத்தவர்களுக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யுத்தம் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தெற்கினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினருக்கு வளமிக்க சுமார் 1500 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாக இல்மனைட் அகழுதல், இரால் பண்ணை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இல்மனைட் அகழ்வு செய்யப்படுமானால் வாகரை பிரதேசத்தின் பல பகுதிகள் அழியும் நிலைமைமையும் ஏற்படும் என வாகரை பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல தடவை வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்திய மக்கள் மட்டக்களப்பு நகருக்கும் வருகைதந்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகத்தினை தாண்டியதாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். குறிப்பாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகத்தினை அடக்கி ஒடுக்குவதற்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர்.ஒரு பகுதியில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்தவேண்டுமானால் அங்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர். தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு தேவையானவற்றினை மேற்கொள்ளல், ஆசைகாட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல், கொள்ளையர்களை அரசியலுக்குள் கொண்டுவந்து தமது தேவைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் போன்ற பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றது. வாகரையில் இல்மனைட் அகழ்வு என்பது வாகரையின் கரையோரப்பகுதியை முற்றாக அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. வாகரை பகுதியின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையினை அண்டியுள்ளதால் அதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. யுத்த காலத்தில் தமிழிழீ விடுதலைப் புலிகளின் பொருண்மிய துறையின் பெரும்பங்களை வாகரை கடற்பகுதியே பூர்த்திசெய்துவந்தது.இதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் விருத்தியடைந்ததுடன் பொருண்மியமும் வளர்ச்சிபெற்றது.யுத்ததிற்கு பின்னர் குறித்த செயற்பாட்டினை பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான ஜெயம் என்பவர் பொறுப்பேற்று அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெயற்பட்டதன் காரணமாக வாகரை மக்கள் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லமுடியாத நிலையிருந்தது. எனினும் பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் காரணமாக அந்த நிலைமை தளர்ந்து வாகரை மக்கள் கடற்பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் நிலையேற்பட்டது. எனினும் தொடர்ச்சியாக வாகரை பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கடலை நம்பியே வாகரையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் இன்று வெருகல் தொடக்கம் வாகரையின் காயன்குடா வரையான பெருமளவான கடற்பகுதியில் இல்மனைட் அகழ்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதற்காக தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கடற்பகுதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வாகரை பகுதிகளின் மக்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமல்ல அப்பகுதியையே அழிக்கும் நிலையுறுவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் அரசாங்கம் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையினை எடுத்துவருகின்றது. இந்த திட்டத்திற்கு பின்புலமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் செயற்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கதிரவெளி தொடக்கம் காயன்குடா வரையிலான மக்கள் இந்த இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடிவரும் நிலையில் வறிய மக்களின் நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு பொருட்களையும் பணத்தையும் வழங்கி எதிர்ப்பு நிலையினை மாற்றுவதற்கான முயற்சிகள் பிள்ளையான் போன்றவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு எதிராகவும் வாகரை பிரதேச மக்கள் போராடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதேபோன்று வாகரையில் இரால் பண்ணை என்ற திட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இரால் பண்ணை ஆரம்பிக்கப்படுமானால் வாகரையில் நன்னீர் மீன்பிடியை நம்பியுள்ள சுமார் 15ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாகரை பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரான தபேந்திரன் தெரிவிக்கின்றார். “கடந்த காலத்தில் 2500 நிலப்பரப்பினை ஆற்றினை அண்டிய வகையில் இந்த இரால் வளர்ப்புக்கு ஒதுக்க நடவடிக்கையெடுக்கத்தபோது நாங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி அதனை தடுத்து நிறுத்தினோம். ஆனால் இன்று அந்த திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த ஆற்றினை நம்பியே அந்த 15ஆயிரம் குடும்பங்களும் உள்ளன.அங்கு இரால் வளர்ப்பு நடைபெற காணிகள் வழங்கப்படுமானால் முதலாளிகள் இலாபம் ஈட்டுவார்கள் ஆனால் ஆற்றினை நம்பியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரத்தினை இழப்பார்கள். அத்துடன் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சுமார் 45ஆயிரம் கால்நடைகள் உள்ள மேய்ச்சல் தரை பாதிக்கப்படுவதுடன் வாகரையினை தாங்கிய நிலையில் உள்ள கண்டல் தாவரங்களும் அழிக்கப்படும் நிலையேற்படும். இதேபோன்று ஆற்றினை சூழவுள்ள காடுகளும் அழிக்கப்பட்டுத்தான் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கடல்நீரை ஆற்றுக்குள் பாய்ச்சிதான் இரால் பண்ணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசத்தினை அழிக்கும் செயற்பாடுகளாகவே நாங்கள் பார்க்கின்றோம். யுத்த காலத்தில் நாங்கள் போராடி பாதுகாத்த பகுதியை இன்று இலகுவில் அழிக்கும் நிலையினை பார்த்துக்கொண்டு நாங்கள் பொறுமையாக இருக்கமுடியாது.எமது நிலத்தினை பாதுகாப்பதற்கு நாங்கள் உயிரைகொடுத்து போராடவும் தயாராகயிருக்கின்றோம்” என்று தபேந்திரன் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் வாகரை பிரதேசத்தின் இந்த அழிவின் பின்னணியில் பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செயற்படுவதாக வாகரை பிரதேச மக்களும் அரச உயர் அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் வாகரை பிரதேச மக்களின் இந்த போராட்டத்தினை வடகிழக்கு தழுவிய போராட்டமாக முன்னெடுத்து வாகரை பிரதேச மக்களின் இருப்பினை தக்கவைப்பதற்கு தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அனைவரும் முன்வரவேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்போல் யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும். கிழக்கில் தமது இருப்பினை தக்கவைப்பதற்கு வடகிழக்கு இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஓரளவாவது நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். https://www.ilakku.org/யாழ்-தொடக்கம்-வாகரை-வரைய/
  30. படங்கள் அருமை. சுண்டிகுளம் போனால் பல சைபீரியன் கொக்குகளும் நாரைகளும் நிக்குமே? படம் எடுக்கவில்லையா?
  31. அழகான நினைவுகள், அருமையான படங்கள் ......பாராட்டுக்கள்.......! 👍
  32. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் புரட்சி.🌾.கொஞ்சம் பிந்தி விட்டது சொறி.✍️🖐️
  33. ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம்.....அது போல் இருக்கின்றது உங்கள் கருத்து. 😎 நீந்த தெரிந்தவனுக்கு சுனாமியும் சாதாரண அலையாம்....🧐
  34. பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள் என்பன எனது நினைவுகளில் இருந்து மறையாத ஒன்று அதனால்தான் அவற்றைத் தேடிதேடி மீண்டும் போவதுண்டு. ஆகையால் இந்தத் திரியில் நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் நான் பார்க்கும் இடங்களை எனது நினைவுகளின் தொகுப்பாக இருப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். சில தடவைகள் ஊருக்குப் போய் வந்தாலும் சித்திரை வருடப்பிறப்பு சமயத்தில் போக சந்தர்ப்பம் வந்தது மிகவும் குறைவு, இந்த வருடம் சித்திரையில் போக சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் இந்த வருட கைவிசேசம் எனக்கு மிகவும் முக்கியமானது.. என்னைக் கவர்ந்த இன்னொரு இடம்..சுண்டி இழுக்கும் சுண்டிக்குளம் கடற்கரை
  35. பேச்சுவார்த்தைக்கான ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் திட்டம் போராளிகளின் தலைவர்களுடன் பேசிய சக்சேனா, இறுதியாக எச்சரிக்கை ஒன்றுடன் தனது பேச்சினை நிறைவு செய்தார். " பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள் எதனையும் விதிக்காது நீங்கள் சமூகமளிக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் பங்குபற்றத் தவறினால் இந்திய மண்ணிலோ அல்லது இந்தியாவின் கடற்பிராந்தியத்திலோ உங்களை நாம் அனுமதிக்கமாட்டோம்.ஆகவே, நான் கூறிய விடயங்கள் குறித்து நீங்கள் ஒவ்வொருவரும் தீர்க்கமாக ஆராய்ந்து நாளைக்குச் சாதகமான முடிவொன்றினை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்" என்று கூறினார். சக்சேனாவுடனான சந்திப்பு முடிந்து தமது விடுதி நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கையில் சக்சேனாவின் எச்சரிக்கை தொடர்பாகவும், இந்தியாவுடன் ஒத்துப்போக வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையினையும் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். பாலசிங்கத்தின் கூற்றுப்படி, பிரபாகரன் நேராகச் சிந்தித்தார். அங்கிருந்த மற்றையவர்களுடன் பேசிய பிரபாகரன், "நாங்கள் இந்தியாவை இப்போது ஆத்திரப்படுத்தக் கூடாது. நாம் இந்தியா சொல்வது போலவே செய்யலாம். திம்புப் பேச்சுவார்த்தைகளுக்கு நிபந்தனையின்றிச் செல்வோம். இந்தியாவுக்கும் எமக்கும் இடையே பிளவொன்றினை உருவாக்க ஜெயவர்த்தனவிற்கு நாம் சந்தர்ப்பம் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது. ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தனவை முழுவதுமாக நம்புகிறார்கள், நாம் அந்த நம்பிக்கையினை உடைக்கவேண்டும்" என்று கூறினார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்குப் போவதன் மூலம், இலங்கைத் தமிழர்களின் நலன்களை எந்தவிதத்திலும் விட்டுக்கொடுப்பதாக அமைந்துவிட‌க் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். "நாங்கள் திம்புவிற்குப் போகலாம், நிபந்தனைகளின்றியேபோகலாம், ஆனால் எமது மக்களின் உரிமைகள் குறித்து விட்டுக்கொடுக்காமல் அங்கு பேசுவோம்" என்று அவர் கூறினார். அன்று நள்ளிரவு கடந்து நடந்த கலந்துரையாடல்களின்போது, போராளித் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கான திட்டம் ஒன்றினை வகுத்துக் கொண்டார்கள். திட்டம் இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவது, ஜெயவர்த்தன மீது ரஜீவ் கொண்டிருக்கும் நம்பிக்கையினைச் சிதைப்பது. தம்மை நாணயம் மிக்கவர்களாகவும், ஜெயவர்த்தனவைத் தந்திரசாளியாகவும் காட்டவேண்டும் என்பதில் அவர்கள் கவனமெடுத்தனர். இதற்காக, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிப்பதென்றும், இராணுவத்தினராலும், பொலீஸாரினாலும் செய்யப்படும் யுத்த நிறுத்த மீறல்களைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டுவதென்றும் தீர்மானித்தனர். அதன்படி, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தாயகத்தில் இருந்த தமது போராளிகளுடன் பேசி, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்கும்படி பணித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று, யுத்தநிறுத்தத்தினை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தினை விளக்கி, வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. ரோ அதிகாரிகளுக்கும் இத்துண்டுப்பிரசுரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களது திட்டத்தின் இரண்டாவது பகுதி, ஜெயவர்த்தனவின் அரசாங்கம் தமிழர்களுக்கு நீதியானதும், சமத்துவமானதுமான தீர்வினை ஒருபோதும் வழாங்கப்போவதில்லை என்பதனைக் காட்டுவது. தமிழரின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வான, தமிழர்கள் தனியான ஒரு தேசம் என்பதனையோ, அவர்கள் தமக்கென்றும் பூர்வீகத் தாயகம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையோ, அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ, அவர்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப்படலாகாது என்பதனையோ ஜெயார் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. பிரபாகரனுடன் அன்டன் பாலசிங்கம் 1980 களில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் நிபந்தனைகள் இன்றி பேச்சுக்களில் பங்குபற்றுவதென்று முடிவெடுத்தார்கள். தமது முடிவினை பாலசிங்கம் உடனடியாகவே சந்திரசேகரனுக்கு அறியத் தந்தார். இது இந்திய அதிகாரிகளுக்குத் திருப்தியைக் கொடுத்தது. உங்களின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் பாலக்குமாரைக் கேட்டபோது, " சிறிலங்கா எமக்குத் தரவிருக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கேட்கவே பேச்சுக்களுக்குச் செல்கிறோம்" என்று அவர் பதிலளித்தார். ஜெயாரின் சகோதரர் அடங்கலாக சில சட்டத்தரணிகளையும், சில வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் கொண்ட தூதுக்குழுவினை இலங்கையரசாங்கம் தன் சார்பாகப் பேச்சுக்களுக்குச் செல்வார்கள் என்று அறிவித்தது. இதனை உடனடியாக போராளிகளின் தலைவர்கள் ரோ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். சந்திரசேகரனுக்கு இதுகுறித்து முறைப்பாடொன்றினைத் தெரிவித்த பாலசிங்கம், "ஜெயவர்த்தன தனக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று உங்களிடம் நாம் சொன்னோமல்லவா? இப்போது அவர் அனுப்பவிருக்கும் தூதுக்குழுவைப் பாருங்கள். அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்க முடியாத சில வழக்கறிஞர்களை அவர் அனுப்பவிருக்கிறார். இந்த வழக்கறிஞர்களிடமிருந்து எவ்வகையான முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தமக்குக் கொடுக்கப்பட்ட சில விடயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் வாதாடிக்கொண்டு இருக்கப் போகிறார்கள். ஆக, தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் என்று எதுவுமே இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு ஜெயார் அனுப்பவிருக்கும் தூதுக்குழு தொடர்பான தனது அதிருப்தியை இந்தியா டிக்ஷிட் ஊடாக ஜெயவர்த்தனவுக்கு அறியத் தந்தது. அரசியலைப்புத் தொடர்பாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள் எவருமே இடம்பெறாத தூதுக்குழு ஒன்றினைப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்புவதன் ஊடாக பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தையே ஜெயார் குறைத்துவிட்டார் என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். வழமைபோலவே இந்தியாவின் இந்தக் கரிசணைக்கும் ஜெயவர்த்தனவால் பொய்யான‌ ஒரு காரணத்தைக் கூற முடிந்தது. தனது இளைய சகோதரரும் சட்டத்தரணியுமான ஹெக்டர் உட்பட சில சட்டத்தரணிகளை தூதுக்குழுவில் அனுப்பியதற்கு நான்கு காரணங்களை ஜெயார் முன்வைத்திருந்தார். தனது இளைய சகோதரரே தனது ஆலோசகர் என்பதாலும், அவர் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாலும் அவரையே தூதுக்குழுவின் தலைவராக நியமித்ததாகக் கூறினார். மேலும், சட்டத்துறையில் பிரசித்திபெற்ற ஹெக்டர், இந்திய சட்டமாதிபருடன் இணைந்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் குறித்து அவர் பல கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதால், அவரைத் தனது அதிகாரம் மிக்க விசேட தூதுவராக அனுப்பியிருப்பதாகவும் கூறினார். ஜெயார் தமக்களித்த பதிலை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாலசிங்கத்திடம் தெரிவித்தனர். ஜெயவர்த்தனவின் பதிலினையடுத்து, போராளிகளின் தலைவர்கள் தமது தூதுக்குழுவை இரண்டாம் நிலைத் தலைவர்கள் அடங்கிய குழுவாக அனுப்ப முடிவெடுத்தனர். அதன் பின்னர், அவர்கள் தமது நேரத்தை தில்லியின் இடங்களைச் சுற்றிப் பார்க்கவும், திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதிலும் செலவிட்டனர். தில்லியின் திரையரங்கு ஒன்றில் கண்பிக்கப்பட்டு வந்த ஆங்கிலத் திரைப்படம் ஒன்றினைப் பார்க்க பிரபாகரன், பாலக்குமார், வரதராஜப் பெருமாள், சாந்தன் ஆகியோர் சென்றனர். திரைப்படத்தின் கதை இரு இளம் காதலர்கள் பற்றியே அமைந்திருந்தமையினால், அதுவரை திருமணம் முடிக்காதிருந்த பாலக்குமார் மிகுந்த தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்திய ரோ அதிகாரிகள் போராளித் தலைவர்களை யமுனா நதிக்கரையில் இருந்த ராஜ் காட் எனும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. மகாத்மாவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது பத்மநாபாவின் காதுகளில் கிசுகிசுத்த பிரபாகரன், "எங்களை ஏன் இங்கு கூட்டிவந்திருக்கிறார்கள் தெரியுமா? எம்மையும் காந்தியைப் போல் அகிம்சையினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல்ச் சொல்கிறார்கள்" என்று கூறவும், குறுக்கிட்ட பாலக்குமார், "என்ன இரகசியம் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். பிரபாகரன் பதில் ஏதும் கூறாமல் பாலக்குமாரைப் பார்த்து புன்னகைத்தார்.
  36. அடிக்குற வெயிலில் ஒர் சுலபமான ஓம்லெட்..
  37. நூலறிவு வாலறிவு ---சுப.சோமசுந்தரம் சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவே இக்கட்டுரை. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கொரு இலாபமும் உண்டு. நான் ஆங்காங்கே எழுதியவற்றில் வெட்டி ஒட்டி, சில இடங்களில் மட்டும் சிறிது விளக்கம் தந்து மேனி நோகாமல் எழுதிச் செல்வதே அந்த லாபம். இந்த வெட்டி ஒட்டுதலைச் செய்பவன் அடியேன் மட்டுமே ! நான் குறிக்க வரும் புலவர் பெருமக்களில் எவரும் அவ்வாறு செய்யவில்லை. அச்சான்றோரில் ஒருவர் முன்மொழிய மற்றொருவர் வழிமொழிதல், ஒரு கருத்தை இருவர் கூறி மேன்மையுடன் செழிக்கச் செய்தல், இருவர் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து மானுடத்தின் எல்லையற்ற வாழ்வு சிறக்க அமுது எடுத்தல் எனும் உயரிய நோக்கங்கள் கொண்டவை அப்புலவர் தம் படைப்புலகம். எடுத்துக்காட்டுதலில் வரும் பாடல்களைத் தந்தோரில் முன்னவர் யார், வழிமொழிந்த பின்னவர் யார் என்று நாம் சொல்லவில்லை. காலச்சக்கரத்தில் சிக்கித் தொலைந்த அவ்விவரம் தொலைந்ததாகவே இருக்கட்டுமே ! நமது வரிசைப்படுத்தலில், முதலில் வரும் ஒன்று காலத்தால் முன்னது என்ற பொருள் இல்லை. இக்கட்டுரையின் தலைப்பு பற்றி ஒன்றிரண்டு சொற்கள் - 'வால்' எனுஞ் சொல் சிறந்த, தூய எனும் பொருள் தருவது. வள்ளுவன் இறைவனை 'வாலறிவன்' எனக் குறிப்பது அங்ஙனமே. தமக்கு முன்னோரின் பொன் மொழியை வழிமொழியும் புலவரின் நூலறிவு ஒப்பற்ற சிறைப்புடைத்து என மொழிவதே இத்தலைப்பு. சங்ககாலம் சென்று முதலில் புறநானூறு பேசி நிற்போமே ! காக்கை பாடினியார் நற்செள்ளையார் தரும் புறநானூற்று பாடல் : "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே" (புறநானூறு 278) பாடற் குறிப்பு : போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான் எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது. பாடற் பொருள் : நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை உடைந்தான் (புறமுதுகிட்டான்) என்றால், அவன் பால் உண்ட முலையினை அறுத்திடுவேன் நான்" என்று சினந்து, வாளொடு சென்று (போர் நின்றிருந்த இரவில் அக்களம் சென்று), பிணங்கள் அகற்றப்படாத (படுபிணம் பெயரா) அக்குருதிக் களத்தில் (செங்களம்) தேடினாள் (துழவுவோள்). சிதைந்து உருக்குலைந்து கிடந்த மகனின் உடலைக் கண்டதும், அவனை ஈன்ற பொழுதை விட (ஈன்ற ஞான்றினும்) பெரிதும் மகிழ்ந்தாள் (பெரிது உவந்தனளே). (தானே விளங்கி நிற்பது - அவன் மார்பில் புண்பெற்று மாண்டதைக் கண்டாள்). ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்த மற்றுமொரு தாயினை நம் கண்முன் நிறுத்துகிறார் பூங்கண் உத்திரையார் எனும் புறநானூற்றுப் புலவர் : "மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே" (புறநானூறு 277) பொருள் விளக்கம் : மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற; வால்நரைக் கூந்தல் - தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய; முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்; களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி; ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே; வெதிரத்து - புதரில்; துயல்வரும் - அசைந்தாடும்; நோன் - வலிய; கழை - மூங்கில் கழியில்; வான் பெய - மழை பெய்யும் போது; தூங்கிய - தங்கிய; சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்). முதலில் நாம் குறித்த காக்கைபாடினியார் தாயின் வீரம் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டார். மகனை இழந்த துயரத்தை உலகோர்க்குக் காட்டாத அளவு அத்தாய் நெஞ்சுரம் கொண்டு இருக்கலாம் அல்லது மகனை இழந்த தாயின் அவலம் சொல்லில் வடிக்கவொண்ணாததாகப் புலவர்க்குத் தோன்றியிருக்கலாம். பூங்கண் உத்திரையாருக்கோ அந்த அவலச் சுவையை உணர்வுபூர்வமாய் வடிக்கத் தோன்றியது. எது எப்படியோ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவத்தல் என்று ஒருவரிடம் தோன்றிய கோட்பாடு மற்றொருவரை ஈர்த்தது என்னவோ உண்மைதானே ! அஃது வள்ளுவனிடத்தும் வெளிப்பட்டு நிற்கிறதே ! "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம் : மக்கட்பேறு) சங்ககாலத்தில் (குறளோனின் சங்கமருவிய காலத்திலும் இருக்கலாம்) வீரனைக் குறித்த 'சான்றோன்', பிற்காலத்தில் (வள்ளுவத்திற்கு உரை தரப் போந்த காலம் எனக் கொள்ளலாம்) கற்றவனையும் கற்ற வழி நின்ற பண்பாளனையும் குறித்தது ஈண்டு குறிக்கத்தக்கது. பொருகளத்தில் போர் அறம் அறிந்து நிற்றலும், கல்விக் களத்தில் அறிவறிந்து நிற்றலும் சான்றாண்மையின் பாற் பட்டதில் வியப்பென்ன ! அடுத்து மணிவாசகரின் கோவை இலக்கியமான திருக்கோவையாரில் ஒரு பாடல். தலைவன்-தலைவி உடன்போக்கு சென்ற பின் செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வது மரபு. அவ்வாறு செல்லுகையில் எதிரே அதே போல் உடன்போக்கு எனும் ஒழுக்கம் மேற்கொண்டு வரும் வேறொரு தலைவன்-தலைவி இணையரைத் தூரத்தே கண்டு தன் மக்கள்தானோ என முதலில் மயங்கி, அவர்கள் அருகில் வரவும் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள். "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". (திருக்கோவையார், பாடல் 244) உரையாடல் வருமாறு :- செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே ! எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன். எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக ! இக்காட்சியினைப் பதினோறாம் திருமுறையில் வரும் திருஏகம்பமுடையார் திருவந்தாதி பாடல் 73 ல் பட்டினத்தார் கூறக் கேட்கலாம் : "துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" பொருள் : துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் - உன் துணைவியான தலைவியின் கொடி (கோவை) போன்ற அழகினை (எழில்) உடைய பேதை நிலை பெண்ணும்; உன் இணையொத்த - உன் தலைவியைப் போன்ற; கொங்கையொடே - முலையொடும் (திகழும் அப்பேதையும்); தோன்றலும் - தலைவனும்; ஒத்த காதலொடு - (உங்களைப்) போன்ற காதலோடு; ஏகினரே - சென்றனரே; அணையத்தர் - அவ்வாறான; ஏறொத்த காளையைக் கண்டனம் - ஏறுபோன்ற இளைஞனைக் கண்டேன்; மற்றவரேல் - மற்றபடி அப்பெண்ணைப் பற்றி என்றால்; பிணையொத்த நோக்குடை - பெண்மானின் (மருண்ட பார்வையுடைய); பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே - பெண்ணிவளிடம் பேசுவீர்களாக ! திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம்."என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான். புறநானூறு கண்டோம்; கோவை எனும் சிற்றிலக்கியம் கண்டோம்; பக்தி இலக்கியத்தை விட்டு வைப்பானேன் ? இப்போது நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி : "ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்". (திருவெம்பாவை பாடல் 4) மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம். திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் : "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்" (திருப்பாவை பாடல் 15) பொருள் விளக்கம் :- துயிலெழுப்பும் பாவையர் கூற்று : எல்லே - 'அடி பெண்ணே, என்ன இது ?' எனக் கேட்பது போன்ற வழக்கு; இளங்கிளியே - கிளி போல் கொஞ்சுமொழி பேசும் இளம் பெண்ணே; இன்னமும் உறங்குதியோ - இன்னும் உறங்குகிறாயா ? துயிலெழுப்பப்படும் பாவையின் கூற்று : சில்லென்று அழையேன் - 'சில்' எனக் கூச்சலிட்டு அழையாதீர்; மின் நங்கைமீர் - மின்னல் போன்று ஒளிரும் தோழியரே; போதர்கின்றேன் - இதோ வருகின்றேன்; பாவையர் கூற்று : வல்லை - திறமையானவளே; பண்டே - முன்பிருந்தே; உன் கட்டுரைகள் - உன் உறுதிமொழிகளையும்; உன் வாயறிதும் - உன் பேச்சுத்திறனையும் யாம் அறிவோம்; பாவையின் கூற்று : வல்லீர்கள் நீங்கள் - நீங்களே (பேச்சுத்) திறனுடையவர்கள்; நானே தானாயிடுக - (நீங்கள் சொன்னவாறே) நான் (வாயாடியாக) இருந்து விட்டுப் போகிறேன்; பாவையர் கூற்று : ஒல்லை - விரைவாக; நீ போதாய் - நீ வருவாயாக; உனக்கென்ன வேறுடையை - உனக்கு (இப்போது) வேறு என்ன வேலை உண்டு ? பாவையின் கூற்று : எல்லாரும் போந்தாரோ - பாவையர் எல்லோரும் வந்து விட்டார்களா ? பாவையர் கூற்று : போந்தார் - வந்து விட்டனர்; போந்து எண்ணிக்கொள் - வந்து எண்ணிக்கொள்; வல் ஆனைக் கொன்றானை - வலிய யானையைக் கொன்றவனை; மாற்றாரை மாற்றழிக்க வல்லானை - பகைவரை, அவர்தம் அகந்தையை அழிக்க வல்லவனை; மாயனை - மாயச் செயல்கள் புரிபவனை (கண்ணனை); பாடேலோர் எம் பாவாய் - பாடுவாயாக எம் பாவையே ! திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை. இனி சில சங்கப் பாடல்களும் தொடர்புடைய குறள்களும் காணலாம். முதலில் நம் நினைவுக்கு வருவது நற்றிணையில் 355 ஆவது பாடலின் ஒரு பகுதி : "முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் " பொருள் : முன்பிருந்தே (தேர்ந்து தெளிந்த) நண்பர் கொடுப்பது நஞ்சாக இருந்தாலும் சிறந்த பண்பாளர் (நனி நாகரிகர்) அதனை உண்டு அமைவர். இங்கு 'நஞ்சினை உண்டு' என்பதை நேர்ப் பொருளாய் (Literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். 'உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றைத் தாம் தேர்ந்து தெளிந்த தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில், சூழலைக் கருத்தில் கொண்டு ஏற்று அமைதல்' எனப் பொருள் கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். மேற்கூறிய கருத்து அச்சு எடுத்தாற்போல் திருக்குறளில் கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில், "பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என அமையக் காணலாம். நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவத்தில் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது. பெயப்படும் நஞ்சு என்னவோ ஒன்றுதான். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்துக் கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. பின்வரும் நற்றிணைப் பாடல் (19) அவ்வாறான அரிய பாடல் : "வருவை யாகிய சின்னாள் வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே" [வருவை ஆகிய சின்னாள் (சில நாள்) வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே)] அஃதாவது "சில நாட்களில் வருவாய் எனினும், அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே" என்பதாம். நற்றிணையில் தோழி கூற்றாக வரும் செய்தி வள்ளுவத்தில் தலைவி கூற்றாகவே வருகிறது : "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை" (குறள் 1151; அதிகாரம்: பிரிவாற்றாமை) சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடை பெற்றுத் தலைவியிடம் விடைபெற வருகிறான். "சில மாதங்களில் வந்து விடுவேனே, ஏன் கவலை கொள்கிறாய் ?" என ஏற்கனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், "ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல் !". பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு, மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற் சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். அடுத்து வரும் குறுந்தொகைப் பாடலில், "எப்பிறவியிலும் நீயே என் கணவனாய் அமைத்தல் வேண்டும்" என்று தன் காதலின் திறம் கூறுகிறாள் தலைவி: "இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என்கணவனை யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே " (குறுந்தொகை பாடல் 49) வள்ளுவனின் திரைக்கதை கூட இதுவே. காட்சியமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்தான் : "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்" (குறள் 1315; அதிகாரம்: புலவி நுணுக்கம்) "இப்பிறவியில் பிரிய மாட்டோம் என நான் சொன்னதும் தலைவியின் கண்கள் குளமாயின" என்பதே தலைவன் கூற்று. அஃதாவது "ஏனைய பிறவிகளில் பிரிய நினைத்தாயோ ?" என்பதே தலைவியின் கண்ணீருக்கான ஏதுவாய் அமைந்தது. வள்ளுவனின் 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலு'க்கு மற்றுமொரு சான்று. இங்ஙனம் தமிழ்ச் சான்றோரின் நூலறிவிற்கான சான்றுகள் எண்ணிலடங்கா. நம் கட்டுரைக்கு எங்காவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே ! சரி, கட்டுரைக்குதானே முற்றுப்புள்ளி ! இதனை வாசித்தோர் தம் இலக்கிய வாசிப்பில் இத்தகைய முன்னோர் மொழிகளைக் கடந்து செல்லுகையில் ஒரு கணம் நின்று அசைபோட்டு இன்புறுவர்; மொழிக்கு மேலும் செறிவூட்டுவர்.
  38. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழரசியலில் முதலீடு செய்யக்கூடாதா? - நிலாந்தன் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தாயகத்தில் கட்சிகளுக்குள் காணப்படும் அணிகளை புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பும் பிரதிபலித்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இரண்டு அணிகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர் தரப்பில் ஆதரவு அணிகள் உண்டு. எனினும் சிறீதரன் அணிக்கு ஆதரவானவர்கள் தனக்கு எதிராகச் செயல்படுவது குறித்து சுமந்திரன் அதிகம் எரிச்சலடைந்து இருப்பதாகத் தெரிகிறது. அதன் விளைவுதான் அவர் அண்மையில் வழங்கிய ஒரு நேர்காணல் ஆகும். ” கட்சிகள் விற்பனைக்கு உண்டு உங்களுக்கு வேண்டுமா? ” என்று என்று ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியின் சார்பாக பேசிய ஒருவர் தன்னிடம் கேட்டதாக சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கின்றார். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் சிலர் கட்சிக்குள் செல்வாக்கு செலுத்த முற்படுவதை சுமந்திரன், கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஓர் அரசியல்வாதி புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் மீது இவ்வளவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பது இதுதான் முதல் தடவை. சுமந்திரன் கூறுவதுபோல புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களில் ஒருவர் இரண்டு சிங்களக் கட்சிகளின் பதிவுகளை வாங்கி இருப்பதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளிவந்தது. அந்த முதலீட்டாளரின் அலுவலர் என்று கருதப்படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் சில கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியும் இருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த போகிறோம் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை வெல்ல வைக்கப் போகிறோம் என்றும் அவர் கதைத்திருக்கிறார். ஏனைய கட்சிகளை ஒருங்கிணைப்பது அவருடைய நோக்கம் என்று ஊகிக்கப்பட்டது. எனினும் அந்த முயற்சி பின்னர் தொடர்வதாகத் தெரியவில்லை. இவ்வாறு கட்சிகளை வாங்குவது; கட்சிப் பிரமுகர்களுக்கு நிதி உதவி செய்வது; கட்சிப் பிரமுகர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அழைத்துக் கொண்டாடுவது; அல்லது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்வது; தாயகத்தில் நிகழும் போராட்டங்களுக்கு நிதி அனுசரனை புரிவது; வெளிநாடுகளில் பிரகடனங்களை வெளியிடுவது… போன்ற பல்வேறு வழிகளிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்து அரசியலின் மீது செல்வாக்குச் செலுத்த முற்படுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சீக்கியர்கள், சில ஆப்பிரிக்க சமூகங்கள், ஆர்மீனியர்கள் போன்ற புலப்பெயர்ச்சி நடந்த எல்லாச் சமூகங்களிலும் இது ஒரு அரசியல் யதார்த்தம். புலம்பெயர்ந்த யூதர்கள் கடந்த நூற்றாண்டில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியதோடு நவீன அரசியலில் புலம்பெயர் சமூகங்களின் யுகம் துலக்கமான விதங்களில் மேலெழுந்து விட்டது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஈழப் போரின் காசு காய்க்கும் மரமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராடுவது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் கூர்முனை போல காணப்படுவது அவர்கள்தான். ஐநா மைய அரசியலில் அவர்கள்தான் பிரதான செயற்பாட்டாளர்கள். அதுமட்டுமல்ல தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நிதி உதவிகளைச் செய்து வருகின்றது. 2009 க்கு பின் தமிழ் மக்கள் தமது சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் சமூகமே உதவியது. நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாயகத்தில் உள்ள மக்களை தோல்விகளிலிருந்தும் காயங்களில் இருந்தும் அவமானத்திலிருந்தும் இழப்புணர்விலிருந்தும் மீட்டெடுத்ததில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்குக் கணிசமான பங்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகால அரசியலில் தாயகத்தில் இடம்பெற்ற பெரும்பாலான எழுச்சிகள் போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமே உண்டு. எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்… போன்ற எல்லாவற்றின் பின்னணியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் உண்டு. அதுபோல 2009 க்கு முன்பு சுனாமியின் தாக்கத்திலிருந்து தாயகம் மீள்வதற்கும் 2020 க்கு பின் பெருந்தொற்று நோய்க்காலத்திலும் அண்மை ஆண்டுகளாக நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பெருமளவுக்கு உதவியது. அதேசமயம் தாயகத்து அரசியல் நிலைமைகளின் மீது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ரிமோட் கண்ட்ரோல் செய்ய முற்படுகிறது என்ற குற்றச்சாட்டிலும் உண்மைகள் உண்டு. கள யதார்த்தத்துக்கு வெளியே பாதுகாப்பாக இருந்து கொண்டு, தாயகத்தில் தன்னியல்பாக எழுச்சி பெறும் செயற்பாட்டாளர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்படுவது; காணாமல் ஆக்கப்பட்ட வர்களுக்காகப் போராடும் சங்கங்களுக்கிடையில் பிரிவுகளை ஏற்படுத்தியது; பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை ரிமோட் கொண்ட்ரோல் செய்ய முற்படுவது; தாயகத்தோடு கலந்தாலோசிக்காமல் ஈழத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரகடனங்களை தயாரிப்பது… போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் புலம்பெயர்ந்த தரப்பில் உள்ள சில தனி நபர்களின் மீதும் சில நிறுவனங்களின் மீதும் உண்டு. சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறுவது போல புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பு தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கின்றது. அதற்கு முதலாவது காரணம், தாயகத்தை விட்டுப் பிரிந்து வாழ்வதால் ஏற்படும் பிரிவேக்கம். இரண்டாவது காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் காணப்படும் ஒப்பீட்டளவில் சுதந்திரமான அரசியல் சூழல். மூன்றாவது காரணம் சீனச்சார்பு இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முற்படும் மேற்கத்திய நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவிப்பது, வளர்த்து விடுவது. இது போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் தாயகத்தை விடவும் அதிகம் உணர்ச்சிகரமாகவும் எழுச்சிகரமாகவும் சுதந்திரமாகவும் போராடக் கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான தீவிர நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சுமந்திரனை தேசிய நீக்கம் செய்யும் ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கிறார்கள். அவர் வெளி நாடுகளுக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்புக்கு காட்டுகிறார்கள். இப்பொழுது கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவில் அவர்கள் சுமந்திரனை ஒரு வில்லனாகப் பார்க்கிறார்கள். கட்சி சுமந்திரனை நீக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடும் ஆவேசத்தோடும் காணப்படுகிறார்கள். இவற்றால் சுமந்திரன் எரிச்சலடைந்ததன் விளைவே மேற்சொன்ன நேர்காணல் ஆகும். புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்ய வரும்பொழுது அரச புலனாய்வுத்துறை அவர்களை கண்காணிக்கும். அக் கண்காணிப்பை மீறி அவர்கள் எதையும் செய்ய முடியாது. அவ்வாறு புலனாய்வுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் தமிழ் முதலீட்டாளர்கள் தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார்கள் என்று எடுத்த எடுப்பில் தீர்ப்புக் கூறுவது சரியா? இதே விதமான குற்றச்சாட்டுக்கள்தான் தடுப்பிலிருந்து வந்த முன்னாள் இயக்கத்தவர்கள் மீதும் வைக்கப்பட்டன. 2009க்குப் பின்னரும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்வதில் உள்ள அரசியல் ராணுவ வரையறைகளை அது உணர்த்துகின்றது. அது இன ஒடுக்குமுறையின் ஒரு பகுதி தான். இந்த இடத்தில் ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் கதைக்கலாமே தவிர ஒடுக்கப்படும் தரப்பு புலனாய்வுத் துறையின் முகவராக செயல்படுகிறது என்ற பொருள்பட யாரும் கதைக்க முடியாது. தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்தால் அது தென்னிலங்கையில் இனவாதத்தைத் தூண்டும் என்பது சம்பந்தர் வழமையாகக் கூறும் ஒரு வாதம். இது எப்படியிருக்கிறது என்று சொன்னால், குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைப் பார்த்து நீ வாய் காட்டியபடியால்தான் உன்னுடைய கணவன் உன்னைத் தாக்குகிறான் என்று கூறுவதைப் போன்றது. இங்கு குடும்ப வன்முறை பிழை என்ற நிலைப்பாட்டைதான் முதலில் எடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இப்பொழுது தனிநாடு கேட்கவில்லை. தாங்கள் ஒரு தேசமாக இருப்பதற்குரிய அடிப்படைகளைத் தான் கேட்கிறார்கள். தாங்கள் ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்பது குற்றமா? அப்படிக் கேட்டால் அது சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தும் என்று சொன்னால் சிங்கள இனவாதிகளை உசுப்பேத்தாமல் இருக்க எப்படிப்பட்ட அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுக்க வேண்டும்? அதற்கு பெயர்தான் நல்லிணக்கமா? கடந்த 15 ஆண்டுகளிலும் சம்பந்தர் அப்படிப்பட்டதோர் அரசியலுக்குத்தான் தலைமை தாங்கினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தின் பிரகாரம் சம்பந்தர் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் அதிகமாக விட்டுக் கொடுத்தார். அந்த உத்தேச யாப்பின் இடைக்கால வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா என்ன சொன்னார் தெரியுமா? சம்பந்தரைப் போல விட்டுக் கொடுக்கும் ஒரு தலைவரை இனிக் காண முடியாது. சம்பந்தரின் காலத்தில் ஒரு தீர்வைப் பெறவில்லை என்றால் பிறகெப்பொழுதும் பெற முடியாது என்ற பொருள்பட டிலான் பெரேரேரா நாடாளுமன்றத்தில் பேசினார். அதில் உண்மை உண்டு சம்பந்தர் அந்தளவுக்கு அடியொட்ட வளைந்து கொடுத்தார். ஆனால் அந்த விட்டுக்கொடுப்பின் விளைவாக கூட்டமைப்பு எதைப் பெற்றது? நிலைமாறகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதைக் காட்டிக்கொடுத்தார். 2018, ஒக்டோபர் மாதம் அவர் ஒரு யாப்புச்சதிப் புரட்சியில் ஈடுபட்டு நிலைமாறு கால நீதியைத் தோற்கடித்தார். இது தொடர்பாக 2021ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது சுமந்திரன் பின்வரும் பொருள்படக் கூறினார்… கடந்த ஆறு ஆண்டுகளாக (அதாவது 2015 இலிருந்து) ஒரு பரிசோதனையை முன்னெடுத்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அதுதான் உண்மை. சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை மகிழ்விக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத்தீவின் யதார்த்தம். இப்படிப்பட்டதோர் பின்னணியில் ஒடுக்குமுறையைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் மக்களின் தீவிரத்தையல்ல. இக்கட்டுரையில் முன் சொன்ன உதாரணத்தைப் போல குடும்ப வன்முறை சரியா பிழையா என்ற நிலைப்பாடு தான் இங்கு முக்கியம். மனைவி வாய் காட்டினாரா அல்லது ருசியாகச் சமைக்க வில்லையா என்பது இங்கு விவாதமே அல்ல. எனவே புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் ஒரு பகுதி தீவிரமான நிலைப்பாடுகளை எடுக்கிறது என்பதற்காகவோ அல்லது தாயகத்து அரசியலின் மீது அளவுக்கதிகமாக செல்வாக்கு செலுத்த விளைகிறது என்பதற்காகவோ அவர்களை தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள் என்று கூறுவது யாருக்கு இறுதியாகச் சேவகம் செய்யும்? தமிழ்த் தேசிய அரசியல் சமூகம் என்பது புலம்பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கியதுதான். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தின் நீட்சியும் அகட்சியும் தான். அவர்களும் ஈழத் தமிழ் ரத்தம்தான். ஈழத் தமிழர்களுக்கு இரண்டு சிறகுகள் உண்டு. ஒன்று தமிழகம் மற்றது புலம்பெயர்ந்த தமிழ் சமூகம். இதில் ஒரு சிறகை வெட்டினாலும் ஈழத் தமிழர்கள் பறக்க முடியாது. தேர்தல் காலங்களில் கட்சிக்குக் காசை வாரி வழங்கியது போலவே கட்சிக்குள் அணிகள் தோன்றும் போது அந்த அணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கையாளப் பார்ப்பார்கள் என்பது ஒர் அரசியல் யதார்த்தம். கட்சி தனக்குள் உடையும் பொழுது புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல அரச புலனாய்வுத் துறையும் அதற்குள் புகுந்து விளையாடும். எனவே இதுவிடயத்தில் முதலில் விமர்சிக்க வேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களை அல்ல. மாறாக, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு மூத்த கட்சியை இரண்டாக உடைத்த கட்சிக்காரர்களைத் தான் விமர்சிக்க வேண்டும். https://www.nillanthan.com/6725/
  39. புலம்பெயர் தமிழர்கள் என்பது வியாபாரிகளால் ஆனது அல்ல. ஆனால் கூட்டமைப்பு விசேடமாக தமிழரசுக் கட்சி தமது சொந்த சுயநல தேவைகளுக்காக புலம்பெயர் தமிழர்களில் மிக மிக சிறிய வீதம் உள்ள வியாபாரிகளை பணக்காரர்களைத்தான் நாடுகிறது. எனவே மாற்றமடைய வேண்டியது கூட்டமைப்பே தவிர புலம்பெயர் தமிழர்கள் அல்ல.
  40. அவர்கள் முயலாமலே உடைக்க கூடியவர்கள் இவர்கள். மேலே குசா அண்ணை சொன்னது போல - இவர்கள் மீதானா நம்பிக்கை மிக வேகமாக அற்று வருகிறது. ஒரு தேர்தலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாவது உண்மையாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க தேவை. இல்லாவிடின் சுமந்திரன்/ சிறிதரன் மீதான நம்பிக்கை இழப்பு = தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கை இழப்பு என மாற வெகுநாட்கள் ஆகாது. அதை தெற்கு கட்சிகள் நிச்சயம் பயன்படுத்தி கொள்ளும்.
  41. 1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றி பலர் கிலாகித்து எழுதுகின்றனர். தமிழர்களின் உரிமைகளைக் காத்துக்கொள்ள இந்தியா முன்னின்று செய்த அளப்பரிய சேவை என்றும் இதனைக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இவ்வொப்பந்தம் செய்யப்பட்டதே இலங்கையின் ஒருமைப்பாட்டினைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இதைத்தவிர இந்த ஒப்பந்தத்தில் ஈழத்தமிழருக்குச் சார்பாகவென்று எவையுமே இருக்கவில்லை. 1. எந்த தமிழினத்தின் சார்பாக இவ்வொப்பந்தத்தினைச் செய்வதாக இந்தியா கூறிக்கொண்டு வந்ததோ, அந்தத் தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கத் தேவையான குறைந்தபட்ச முயற்சியினைக் கூட அது எடுக்கவில்லை. 2. ஏற்கனவே பலவீனப்பட்டுப் போயிருந்த தமிழரின் அரசியல் உரிமைகளை மேலும் பலவீனப்படுத்தும் சிங்களத்தின் முயற்சிகளைத் தடுக்கும் எந்த ஏற்பாடும் ஒப்பந்தத்தில் இருக்கவில்லை. 3. ஆனால், தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளே ஒப்பந்தம் முழுதும் பரவிக்கிடந்தன, உதாரணத்திற்கு வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க தமிழர் தாயகத்தில் சில பகுதிகளில் மட்டுமே நடத்தும் சர்வஜன வாக்கெடுப்பு சமாதான ஒப்பந்தம் என்கிற பெயரில் கைச்சாத்திடப்பட்டு, சிங்கள அரசின் அகம்பாவத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளின்றி, தமிழர் மீதான அடக்குமுறையினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற இந்தியாவினால் சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது போனமையே ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டதன் காரணம். எந்தத் தமிழரின் நலன்காக்க ஒப்பந்தம் செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியா வந்ததோ, அதே தமிழரின் நலன்களை விற்று தனது நலனை மட்டுமே அது காத்துக்கொள்ளப்போகிறது என்கிற உண்மை தெரியவந்தபோது ஒப்பந்தம் தோல்வியடைவதை எவராலும் தடுக்க முடியாது போய்விட்டது. இதற்குப் புலிகள் பொறுப்பல்ல, முழுப்பொறுப்பும் இந்தியாவையே சாரும். இந்தியாவினதும், இலங்கையினதும் கூலிகளாகச் செயற்பட்ட ஏனைய இயக்கங்கள் புலிகளை அழிக்கத் துணைபோனபோது, புலிகளளும் அவர்களை அழித்தது சரிதான். புலிகளுடந்தான் உங்களின் முரண்பாடென்றால், அரசியலையும், போராட்டத்தையும் விட்டு விட்டு ஒதுங்கியிருக்கலாம். எதிரியுடன் போய்ச் சேரவேண்டிய தேவை என்ன? எந்த மக்களுக்காகப் போராடுகிறோம் என்று கிளம்பினீர்களோ, அதே மக்களை இந்தியாவோடும், இலங்கையோடு சேந்து அழித்தபோது, உங்களை அழிப்பதைத் தவிர வேறு என்ன தெரிவினை புலிகளுக்கு விட்டுவைத்தீர்கள்? இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களுக்குப் பின்னர், இலங்கக்யில் இந்தியா இருப்பதே தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் என்று வெளிச்சமாகிய பின்னர், தமிழர்களின் போராட்டத்தை அழித்தேனும் தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியா உறுதிபூண்டிருப்பது தெரிந்த பின்னர், அவர்களை வெளியேற்ற எவருடன் சேர்ந்தால்த்தான் என்ன?
  42. எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.
  43. வாழ்த்துக்கள் நொச்சி. ரொம்ப பெருமையாக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.