Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20018Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
alvayan
கருத்துக்கள உறவுகள்7Points5417Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/05/24 in Posts
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected. This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA. The money raised would be used ''SAY NO TO DRUGS'' and ''GO GREEN GLOBE'' projects. I am here to appeal for your generous help. RUN FOR A BETTER FUTURE MASSIVE THANK YOU!. மிக்க நன்றி. https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share3 points
-
காசா படுகொலைகள் குறித்த உண்மைகளை பகிரங்கப்படுத்திய மருத்துவருக்கு பிரான்ஸுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுப்பு
ஜனநாயக நாடு.3 points
-
வினா விடை
3 pointsசெயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்). யாழ் = மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்). 😂3 points
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள் தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும் செத்தமீன் கிளீயராகிவிடும்..😄3 points
-
வினா விடை
2 pointsஎன் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ••••••• தொடரும் ♻️2 points
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.2 points
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
நீங்கள், நூல் விட்டுப் பார்க்கிறீர்கள் என்று எனக்கும் தெரியும். இந்த ஊடகங்கள்தான்... கள்ள மாடும், கள்ளக் காணியையும் பிடிப்பவர்களை காட்டிக் கொடுக்கின்றார்களில்லை.2 points
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
2 pointsமிக்க நன்றி.. எனக்கு ஊரில் ஒரு கடமை உள்ளது, சகோதரியின் மேல் முழுப் பொறுப்பையும் போட மனம் வரவில்லை, அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கே போகிறேன். அப்படி போகும் பொழுதெல்லாம் நான் பார்க்க நினைப்பதை பார்க்க முயற்சிக்கிறேன்.2 points
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
கனடா மிரர் தவறாக மொழி திரித்துள்ளது. இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். இனி, இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, ஆதாரங்களை சமர்பித்து வழக்கு தொடங்கி முடிக்க சில வருடங்கள் செல்லும். அதன் பின் தான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனாவா இல்லையா என முடிவு தெரியும்.2 points
-
வினா விடை
2 points
-
இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் பண்பாட்டு-கலாசார ரீதியாக தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான நாடாக இலங்கை விளங்குகிறது. இந்தக் காரணத்திற்காகவும் அதன் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் இந்தத் தீவு நாட்டுக்குச் செல்ல தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மலைப் பிரதேசங்கள், கடற்கரைகள், காட்டுயிர் சரணாலயங்கள், தனித்துவமான-சுவையான உணவுகளுக்காக உங்களின் பயண ‘லிஸ்ட்டில்' இலங்கை நிச்சயமாக இருக்கும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில், 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்தது. 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியது. தங்கள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுலாத் துறையைப் பெரிதும் சார்ந்திருக்கிறது இலங்கை. 2023ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களிலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவில் இருந்தே 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவிலிருந்தே அதிகளவிலானோர் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலிருந்து அதிகளவிலானோர் இலங்கைக்குப் பயணிப்பது தெளிவாகிறது. குறைந்த செலவில் பயணம், இ-விசா சலுகை போன்ற வசதிகளும் இந்தியர்கள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன. குறைந்த செலவில் எப்படி இலங்கைக்குச் செல்லலாம், இந்தியர்களுக்கு இலங்கையில் உள்ள வசதிகள் என்னென்ன, அங்கு நிச்சயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம். இ-விசா சலுகை பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்லும் நோக்கத்திற்காக இலங்கை செல்பவர்கள், https://www.srilankaevisa.lk/ எனும் இணையதளத்தில் பயண ஆவணங்களைப் பதிவேற்றி, இ-விசா பெற்று இலங்கை செல்லலாம். சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு, இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இ-விசா வசதியை அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர், 2023இல் அறிவித்தது. அதன்படி, இலங்கை செல்வதற்கு முன்பு, குறிப்பிட்ட இணையதளத்தில் விவரங்களைப் பதிவிட்டு இ-விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த இ-விசா மூலம் இலங்கையில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES குறைந்த பயண செலவு தமிழ்நாட்டிலிருந்து இலங்கை செல்வதற்கு ஏராளமான விமான வசதிகள் உள்ளன. அதிலும் குறைவான பயண செலவிலேயே இலங்கை சென்று வர முடியும். சென்னையைச் சேர்ந்த ‘வேண்டர்லஸ்ட்' எனும் பயண நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி கண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு மிகவும் அருகில் இருப்பதாலும் விமான கட்டணம் குறைவாக இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலாவுக்காக இலங்கையை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். இலங்கை செல்வதற்கான நடைமுறை எளிதானது. விசா தேவையில்லை. இ-விசாவை ஆன்லைன் மூலமாகவே பெறலாம். ஒருவர் இலங்கை சென்றுவர 15,000-18,000 ரூபாய் இருந்தாலே போதுமானது," என்கிறார். விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அவ்வப்போது பயணப்படகு ஒன்றையும் அரசு இயக்கி வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையிலிருந்து தனியார் கப்பல் மூலமாகவும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு பயணிக்கலாம் என பாலாஜி கண்ணன் தெரிவித்தார். கடல்வழிப் போக்குவரத்து எப்போதும் இருக்காது என்பதால், விமானப் பயணமே இலங்கை செல்ல ஏற்றது என்றும் அவர் பரிந்துரைக்கிறார். இந்திய ரூபாயை பயன்படுத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES எந்தவொரு வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் இந்திய ரூபாயை அந்த நாட்டுப் பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்றினால்தான் நாம் அதைச் செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இதிலும் இலங்கை அரசு சலுகை வழங்கியிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயை அப்படியே யூபிஐ மூலமாக இலங்கையில் நாம் பயன்படுத்த முடியும். அதற்கென பெரும்பாலான இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதை நாம் ஸ்கேன் செய்தால், இந்திய ரூபாய் மதிப்பு, இலங்கை ரூபாய் மதிப்புக்கு மாற்றி அப்படியே பணத்தைச் செலுத்திவிடலாம். இதுதொடர்பாக பிபிசி தமிழுக்காக இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் பேசியபோது, “இது இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கென இலங்கை அரசு செய்துள்ள சலுகை. இதற்கென பல்வேறு இடங்களில் க்யூ-ஆர் கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதன்மூலம் எளிதாக பணத்தைச் செலுத்தலாம். இதனால், சுற்றுலாப் பயணிகள் இலங்கை பணமாகவோ அல்லது அமெரிக்க டாலர்களாகவோ மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,” எனத் தெரிவித்தனர். ஆனால், இந்திய ரூபாயை கரன்சியாக அங்கு பயன்படுத்த முடியாது. எனினும், சில இடங்களில் யூபிஐ வசதி இல்லாமல் இருந்தால், அசௌகரியங்களைச் சமாளிக்க கொஞ்சம் பணத்தை இலங்கை ரூபாயாகவோ அமெரிக்க டாலர்களாகவோ மாற்றி வைத்திருப்பது நல்லது என்கிறார் பாலாஜி கண்ணன். மற்ற செலவுகள் எப்படி இருக்கும்? இலங்கையில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு ரூ.3,000-3,500 செலவிலேயே நல்ல ஹோட்டல்கள் கிடைக்கும் என, பாலாஜி கண்ணன் தெரிவித்தார். “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வருவதால், இன்னும் சில இடங்களில் சுற்றுலா வசதிகளுக்கான சேவைகள், பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இலங்கை பணத்தைவிட அதிகம் என்பதால், அதிக செலவு இருக்காது," என்றார் பாலாஜி. தவறவிடக்கூடாத இடங்கள் பட மூலாதாரம்,SAIKO3P/GETTY IMAGES கொழும்புவில் இருந்து பதுல்லாவுக்கு செல்லும் ரயில் பயணம் நிச்சயம் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டிய பயணம். அந்த ரயில் செல்லும் வழி மிக அழகு நிறைந்தது. மிகவும் மெதுவாக, 10 மணிநேரம் செல்லக்கூடிய இந்தப் பயணம், சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும் இந்தப் பயணத்தின்போது நாம் பார்க்கக்கூடிய இடங்கள் மனதுக்கு மிக இனிமையாக இருக்கும். இலங்கை அழகிய கடற்கரைகளுக்குப் பெயர் போன நாடு. கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் உள்ளவர்கள், மிரிசா, பென்டோடா போன்ற கடற்கரைகளுக்குச் செல்லலாம். காட்டுயிர்கள் மீதான ஆர்வம் கொண்டவர்கள் யாலா, உடவலவே போன்ற தேசிய காட்டுயிர் பூங்காக்களுக்குச் செல்லலாம். இங்கு, யானை, சிறுத்தை மற்றும் பலவகையான பறவைகளைக் காண முடியும். இலங்கையில் நிச்சயம் காண வேண்டிய மலைப்பிரதேசங்களும் உண்டு. தேயிலைத் தோட்டங்களால் நிரம்பிய எல்லா, நுவரெலியா போன்ற மலைப் பகுதிகளின் அழகை அவசியம் காண வேண்டும். இலங்கையின் கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படும் சிகிரியா கோட்டை, தம்புள்ளை குகை கோவில், அனுராதபுரம் போன்றவற்றுக்கு இலங்கையின் கலை அழகை ரசிக்கச் செல்லலாம். https://www.bbc.com/tamil/articles/cd1vm1rgrrjo1 point
-
ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள். இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார். எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார். தமிழ் இனப்படுகொலை புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம். படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம். காசாவில் இடம்பெறும் மோதல் இந்த திரைப்படம், இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம் இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/ray-of-hope-documentary-by-radhika-chitsabesan-1714862461?itm_source=parsely-api1 point
-
"அன்பே ஆருயிரே"
1 point"அன்பே ஆருயிரே" "அன்பே ஆருயிரே அழகான மயிலே கன்னம் இரண்டும் சிவந்தது எனோ? சின்ன இடை ஆசையத் தூண்டுதே அன்ன நடையில் அருகில் வாராயோ? இன்பக் கடலே என்னைத் தழுவாயோ?" "காதலே காவியம் படைக்கும் உறவே மோதலைத் தவிர்த்து புன்னகை பூக்காயோ? ஆதரவாய் என்றும் நான் இருப்பேனே இதயத்தில் வலியை ஏன் தருகிறாய்? சாதல் வருமுன் என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointபத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣1 point
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இருந்தாலும் எங்கள் பங்களிப்பையும் வழங்கி உதவி இருக்கிறோம். ஏதோ நல்லது நடந்தால் சரி.1 point
-
ஈழத்தமிழர்களின் போராட்டத் தாக்கத்தை சித்தரிக்கும் ரதிகா சிற்சபேசனின் ரே ஒப் ஹோப் ஆவணப்படம்
எனது கருத்தும் அதே.1 point
-
கண்ணீர்க் கோலம்.
1 pointதடம்புரண்டோடும் மனித வாழ்வில் தடம்புரளா வண்டி போல் அவன் தடம்பற்றி ஓடும் வண்டி ஒன்றில் தபுதாரனற்ற ஒருத்தன் தவிப்பில் அவள் தவிர்க்க முடியாது தவித்த அவன் விழிகள் தத்தை அவள் தகிக்கும் வதனம் காண...... தண்ணீர் போல் கண்ணீர் தத்தளிக்கும் துளிகள் தரவரிசையாய் சரிகின்றன. தவிக்கிறது அவன் மனசு தரமறியாது தவிர்க்கிறது வார்த்தை உதிர்க்க.. தவிர்த்த விழிகள் தகர்ந்து போகின்றன தகரடப்பா போல் போனுக்கு தத்தை அவள் கண்ணீர் கோலம் தரவாகிறது தகவலாய் மறுமுனை தாவ தத்தையும் தேடுறாள் பட்சாதாபம்...! தகர்கிறது தண்ணீராய் ஓடிய அவள் கன்ன அருவியில் தகரும் அவள் வதனப் பூச்சொடு தத்தை மேல் வைத்த காருணியம். தவித்தே போகிறது அவன் மனம் தரணியில் மனிதக் கோலங்கள் கண்டே...!1 point
-
களைத்த மனசு களிப்புற ......!
1 point
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
1 pointகூழுக்கு தேங்காய் சொட்டு என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........! 😂1 point
-
போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
உத்தரவாதம் இல்லைத்தான். ஆனால் இந்த பணம் நேரடியாக போதை பாவிப்பவர்களுக்கு இன்றி, அவர்களை மீட்கும், போதை பழகாமல் தடுக்கும் செயற்திட்டங்களில் பயன்படுத்த படும். ஆகவே கொஞ்சப் பலனாவது வரும் என நினைக்கிறேன்.1 point
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️ 😁1 point
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️1 point
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
இதை சவுக்கு சொல்லி இரண்டு மாதத்துக்கு மேல் இருக்கும் சவுக்கு ஒரு கோமாளி சீமான் சவுக்கு விடையத்தில் தள்ளி நிப்பது நல்லம் தலைவர் மீதான போலி குற்ற சாட்டுக்கு அப்போது தமிழக அரசியல் வாதிகள் யாரும் வாய் திறக்க வில்லை அது திருமாளவனாய் இருந்தாலும் சரி சீமானாய் இருந்தாலும் சரி அந்த விடையத்தில் மாமா பயல் சவுக்கு மீது எனக்கு கடும் கோபம் வந்தது......................இந்த எளிய பிள்ளையால் என்ன செய்ய முடியும் மிஞ்சி போனால் ஒரு மிம்ஸ் செய்து சவுக்கு எதிராக போடத் தான் முடியும்...................... சவுக்கு பொய்யையும் உண்மை போல் சொல்லும் நபர் கைபேசிய சவுக்கு நிப்பாட்டினால் சவுக்கு பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.............................. தனி கட்சி தொடங்கி உதயநிதி போட்டியிடும் தொகுதியில் நிக்க போகிறேன் என்று சொல்லும் போது புரிய வில்லையா சவுக்கு ஒரு காமெடி பீஸ் என்று ஹா ஹா....................................1 point
-
தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
மொக்கன் கடை சாப்பாடும் வேணும், மாடும் வெட்டக்கூடாது. இனி vegan மாட்டு சூப்தான் அறிமுக படுத்த வேணும்🤣.1 point
-
கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்
1 pointஅப்பிடியே மற்றைய நாடுகளிலும் கொள்ளையடித்ததையும் கொடுக்கலாமே. மிக முக்கியமாக பல உலக நாடுகளிடம் கப்பம் வாங்குவதையும் நிறுத்த வேண்டும்.1 point
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை. இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂 மலர்பனி சாபம் சும்மா விடாது தேவேந்திரனை!😂1 point
-
வாசிப்புக் குதிரைகளும் மறதி மலையும் - காந்தப் புலம் நாவலை முன்வைத்து
வாசிப்புக் குதிரைகளும் மறதி மலையும் காந்தப் புலம் நாவலை முன்வைத்து நிரூபா ஆழமான கருவைக்கூடச் சுருக்கமாகவும், துல்லியமாகவும். குறைந்த பாத்திரங்களுடனும் சொல்லக்குடியன என்பதால் சிறுகதை எனக்கு எப்போதுமே பிடித்தமான இலக்கிய வடிவம் என்றாலும், மனித வாழ்வோடு பிணைந்திருக்கும் மரபுகள், பண்பாடுகள். கலைகள், அரசியல், உளவியல் தொடர்பாக நுன்னிப்பாகவும் விரிவாகவும் சொல்வதற்கு நாவல்களே சிறந்த வடிவம் என்று தோன்றுகின்றது. நீண்ட கால எனது வாசிப்புப் பயணத்தில், கதைகளை மட்டுமே வாசிப்பதில் ஒரு போதாமையை அண்மைக் காலமாக உணரத்தொடங்கியபோது எனது தேடல்களும் புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. வாழ்வியற் கூறுகளை உணர்வுரீதியாகவும், கதையாகவும் திறம்படச் சொல்லும் நாவல்கள் சுய சிந்தனை வளர்சியை ஊக்கப்படுத்தும்வகையில் இருப்பது அரிது. கதைகள் ஒருவகையில் என் மனதை வளப்படுதியிருந்தாலும் மறுபக்கம் மீண்டும் மீண்டும் உணர்வுகளுக்குள் உழன்றவும் வைத்துள்ளன. நாவல்களுக்குக் கதைகள் இன்றியமையாதன. தற்போதைய மனநிலையில் கதைகளோடு சிந்தனை வளத்தையும் ஊக்கப்படுத்தும் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை உருவாக்கச் சட்டங்கள், சித்தாந்தங்கள் அவசியம்தான், ஆனாலும் அக மாற்றமும் இணைந்தே சமத்துவ உணர்வை முழுமைபெறச்செய்யும். மனிதரை மனிதர் ஒடுக்கின்ற உணர்வு அகத்தளத்திலிருந்து எழுவதால், சமத்துவ உணர்வும் அகத் தளத்திலிருந்து எழுவது அவசியம். ‘காந்தப் புலம்’ ஒரு மனப் பயணக் குறிப்பு. இந்த நூலின் மீதான வாசிப்பு அகச் சுவையையும். அறிவுத் தளத்தில் புதிய சிந்தனைகளையும் கிளறிவிட்டது என்பதனாலேயே எனது வாசக அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். “அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு” மனிதர்கள் இயற்கையின் ஒரு கூறாய் பரிணமித்தவர்கள். இயற்கையின் கூறுகள் மனிதர்களுக்குள்ளேயும் இருக்கின்றன. “அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உண்டு” என்பது காந்தப் புலத்தில் மையப் புள்ளியாய் உள்ளது. இயற்கையின் அசைவுகள்(நீர், நெருப்பு, காற்று) மனிதர்களுக்குள்ளேயும் அசைந்து கொண்டிருக்கின்றன. இந்த அசைவு, தேங்கத்திற்கு முரணானது. தேக்கமுறுபவைகள் கழிவுகள்தான். மனித மனம் தனக்குள் ஊடாடும் மரபுகள், எண்ணங்கள், உணர்வுகள், அனைத்தையும் புதுப்பித்துக்கொள்வதன்மூலமே புதிய மனிதர்களாய் பரிணமிக்கவும் இயலும். காந்தப் புலத்தின் உயிர்த்துடிப்பாய் உள்ளது சமத்துவம். சமத்துவத்தை வெளியுலகில் உருவாக்குவதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சாதியத்துக்கெதிரான போராட்டம், இனவிடுதலைப் போராட்டம், பொருள் சமத்துவம், பால் சமத்துவம்… இவைகளைச் சட்டங்களால் மாற்ற முயலலாம். ஆனால், அகத்தளவில் மனிதர்கள் மாறாதபட்சம், முழுமையான மாற்றம் சாத்தியமில்லை என்பதால் மனிதர்கள் தம்மைத் தாமே உணருதல் அவசியம். காந்தப் புலத்தின் மனப்பயணம் இவ்வாறுதான் தன் புதிய சிந்தனைகளால் பூத்திருக்கின்றது. இது ஒரு ஈழத்து இளைஞனின் மனப் பயணம். இரு தலைமுறைகளுக்கிடையிலான ஊடாட்டம். ஊடறுப்புகள்: பயணத் தளங்கள், பாத்திரங்கள் மனித அகவெளியும், புறச்சூழலும் (அண்டமும் பிண்டமும்) காந்தப் புலத்தின் மையக் கதைக் களங்கள். இந்த இரண்டு கூறுகளும் மனிதர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்து இயங்கும் தளங்களாகவும் உள்ளன. இது ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாக நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனால், இந்த இயக்கம் பற்றிய விழிப்பு நிலையும், தொடர்ச்சியான அவதானிப்பும் இங்கு முக்கியமானது. ஓர் ஈழத்து இளைஞனின் யுத்தகால இடப்பெயர்வுச் சூழலில் ஆரம்பிக்கும் கதை, பின்னர் அவனது அக உலகிலேயே பெரும்பாலும் நிகழ்கின்றது. இளைஞனின் அகம் தனியொரு பாத்திரமாக உருவகிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாத்திரத்தின் பெயர் “சடையன்.” அகவுலகம் முழுக்க முழுக்கக் குறியீடுகளாலேயே சித்தரிக்கப்படுகின்றது. பிரதான கதாபாத்திரமான இளைஞனின் அகம் உணர்வுகள், சிந்தனைகள், மரபுகள் ஆழங்கள், நினைவுகள், மறதிகள், இரகசியங்கள், இன்னும் அறியப்படாத இருள்மைககள் அல்லது வெளிகள் என்று எமது மனதின் தன்மைகளைப் பிரதிபலிக்கின்றது. குறியீடுகளாலான இவ் அகவுலகக் காட்சிகள் எம்மை ஒரு புதியதொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றது. அந்தப் புதிய உலகில், உணர்வுகள் மரங்களாக அசைகின்றன. அங்கு காதல் கனி காய்க்கின்றது. சொற்கள் மழைத் தூறல்களாக அல்லது பெரும் மழையாய்ப் பொழிகின்றன. எண்ணங்கள் பறவைகளாகிச் சிறகடிக்கின்றன. மனதில் ஆழ ஊறிப்போயுள்ள மரபுகள் நதியென அவனை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இளைஞனின் நினைலிருந்து தொலைந்திருக்கும் மறதி, மலைகளாய் உருப்பெற்றுள்ளன. மனங்களின் இரகசியம் ஒரு பொதிக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் குறியீடுகள் பேசுபொருளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, அழகியலுக்கு மெருகூட்டுவனவும்கூட. காந்தப் புலம் நாவலில், வெளியுலகத்திலும், அகவுலகிலும் இன்னும் பல குறியீடுகள் (நாகம், யானை, கடல், கப்பல், நரி, பன்றி, செம்மீன்) போன்றவை கருத்தியல் அழகுணர்ச்சியை மெருகுபடுத்தியுள்ளன. மனம், அகத்திலும் புறத்திலும் மாறி மாறிப் பயணிக்கக்கூடிய தன்மைகொண்டிருப்பதால், கதைக் களங்கள் அகமும், புறவெளியும் (ஈழம், புலம் பெயர் நாடொன்று) என்று மாறி மாறியே நிகழ்கின்றது. புறவெளியில் சந்தித்த மனிதர்கள் ‘சடையன்’ என்கிற அகத்திலும் வாழ்கின்றார்கள். துயரத்தின்போது அல்லது ஆழமான சிந்தனையிலோ எமது மனசுக்குள்ளேயே நாம் சில கணங்களில் தொலைந்துபோவதைப் போன்றே, காந்தப் புலத்தில் காலப் பள்ளத்துள் சடையன் மனசு தனது துயரகாலத்தில் தொலைந்துபோகின்றது. இவ்வாறான பல தளங்களில் கதை பயணிக்கின்றது. இங்கு காலப் பயணம் (time travel) கதைக் களங்களில் முக்கியமான ஒன்று. ஈழவிடுதலைப் போர்- இடப்பெயர்வுக் காலம் இறந்தகாலங்களாகவும், பின்னர் தற்காலத்திலும் கதை நிகழ்கின்றது. பின்னர் ஆதிகாலத்துக் செல்கின்றது மனசு. அங்கிருந்து திரும்பி தற்காலத்திற்கு வருகின்றது. உடல் காலத்தின் நேர் வழியில் பயணிப்பதுதான், ஆனால் மனமோ இந்தத் தம்மைக்கு முரணானது. உடலோடு மனம் ஒன்றியிருப்பதுபோல தோன்றினாலும் மனம் வேறாகவும் இருக்கின்றது. பல பாத்திரங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். அவர்கள் சமூகப் பற்றுடையவர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் படைக்கப்பட்டுள்ளனர். காந்தப் புலத்தின் பிரதான பாத்திரம், ஒரு மலையகத்து இளைஞன். பெரும்பாலான பெண் பாத்திரங்கங்கள் அப் பாத்திரங்களின் கதை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இறந்துவிடுகின்றனர். ஆசிரியர் கதைக் கருவின் தேவை கருதியே இவ்வாறு எழுதியிருக்கலாம். யதார்த்தத்திலும், பெண்கள் பல சமூக ஒடுக்குமுறைகளால் இறக்கும் சம்பவங்களோடு பொருத்திப்பார்த்துக்கொண்டாலும், இத்தனை பெண்பாத்திரங்கள் மரணமெய்வது, அவர்களது கருத்துக்களைச் சொல்வதற்கான தொடர்ச்சி இல்லாமல் போய்விடுகின்றது. மனிதர்களுக்கிடையிலான சமத்துவம் ‘காந்தப் புலம்’ முழுவதும் ஒரு நூலிழை போன்று தொடர்கின்றது. பொருளியல் சமத்துவம், பால் சமத்துவம். அகநிலைச் சமத்துவம், இறுதியல் ஞானம். சமத்துவத்தை நிலைநாட்ட வரலாறு முழுவதும் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள், வாழ்வியல் முறைகள், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள், சித்தாந்தங்களில் இருக்கும் முரண்கள், ஒன்றுமைகள் காந்தப்புலத்தின் பேசுபொருள்கள். மார்க்சியத்துக்கும் பௌத்தத்துக்குமான ஒற்றுமை பொதுவுடமை சார்ந்து மிக நெருக்கமாக இருப்பதைப் பற்றியும் காந்தப்புலம் பேசுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தனியுடமை மனிதர்களுக்கான அழிவென்றும், பொதுவுடமையே மனித சமத்துவத்திற்கு அவசியமென்றும் முன்மொழிந்தார். ஆசை துன்பத்திற்கான காரணி. ஆசையின் விளைவுதான் தனியுடமை. பொறாமை. போட்டி, குரோதம் போன்ற பாதகமான உணர்வுகளும் தனியுடமை மனநிலையிலிருந்துதான் எழுகிறது. தனியுடமைக் குவிப்புக்கு முரணாகவுள்ளது மார்க்சியம். ஆகவே மனித வாழ்வை மேம்படுத்த உருவாக்கப்பட்ட தத்துவங்களின் ஒன்றுமைகள் முக்கியமானவை. சமத்துவத்திற்கு முரணான சாதியத்தை ஒழிப்பதற்கு எமது நிலத்தில் நடந்த போராட்ட முறைகள் அல்லது போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் போதாமைகளும், முரண்களும் பற்றிப் பேசும்போது, ஈழத்தில், சாதியத்திற்கு எதிராகப் போராடிய மூத்த தலைமுறை மார்க்சிஸ்டுக்களின் வெள்ளாள சாதிய மனநிலைதான் பெரியாரியத்தை ஈழத்திற்குக் கொண்டுவரத் தடையாக இருந்தது என்கின்ற விமர்சனமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது. இந்தகைய விமர்சனத்துக்கு இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த தலைமுறை மார்க்ஸியவாதிகளிடம் எவ்வாறான பதில்கள் இருக்கின்றது? போராட்டப் பெருமைகளைப் இன்றும் பேசிக்கொண்டிருப்பவர்கள் விமர்சனங்களைத் தட்டிக்கழிப்பவர்களாகத்தான் தெரிகிறது. சுயவிமர்சனங்களும், கடந்தகால சாதியத்துக்கெதிரான போராட்டம் தொரர்பான சரியான மதிப்பீடுகளும் அடுத்த தலைமுறையினருக்கு பலனுள்ளதான இருக்கும். கத்தோலிக்க மதத்திலிருந்து விலகும் ஒரு பாதிரியார் ஆத்மீகத்தை உணர்கின்றார். இங்கு ஆத்மீகம் மதத்துடன் தொடர்பற்றதாகப் பார்க்கப்படுகின்றது. எழுத்தாளர், ஆத்மீகத்தை “தன்சார ஆழ அனுபவம்” என்று குறிப்பிடுகின்றார். நம்மை நாமே அவதானித்தல், புரிந்துகொள்ளுதல் ஞானத்தை அடையும் வழிகளாக முன்மொழியப்படுகின்றது. “தன் சார ஆழ அனுபவம்” என்கின்ற இந்தப் பதம் ஆசிரியரின் புதிய உருவாக்கம். இவ்வாறு கருத்தியலோடு புதியசொற்களையும் உருவாக்குவதன் மூலம் தமிழ் மொழியும் புதுப்பிக்கப்படுகின்றது. கால ஓட்டத்தில் கருத்தியல் மாறும்போது மொழியும் மாற்றமடைதல் தவிர்க்கமுடியாததாகவும் உள்ளது. “கற்பு” பற்றிய கருத்தியல் மாறியபோது “வன்புணர்வு” என்ற சொல் மாற்றப்பட்டது. இன்று முற்போக்கு இலக்கிய சூழலில் பலரும் இச் சொல்லைப் பாவித்துவருகிறார்கள். நாவல் முழுக்க நூலிழைபோன்று நகர்ந்துகொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் சமத்துவம் மற்றது பௌத்தமும். ‘அண்டத்திலுள்ளதுதான் பிண்டத்திலுமுண்டு’ என்ற கூற்று கருத்தியலாகவும் இருக்கின்றது. வௌிச் சூழலில் நிகழுபவை அகத்தில் தாக்கமுறுகின்றன. தன்னைத் தானே புரிந்துகொள்வதோடு, தனிமனித உருவாக்கத்தின் அவசியம் பற்றிய பௌத்தத்தின் அறிவுரைகள் தொடர்பாக இங்கு பேசப்படுகின்றது. துன்பத்திலிருந்து விடுபட ஆசைகளைத் துறத்தல் அவசியம் என்பது பௌத்த நெறியின் பிரதான ஒரு கூற்று. கதாபாத்திரமான இளைஞன் ஆசை, பொறாமை, காதல் பிரிவு என்கின்ற மனிதரது வழமையான உணர்வுகளுக்கு ஆளாகி பின் ஆழத் துயரத்துக்குச் சென்று, துயரத்திலிருந்து மீளுகின்ற காலத்தில் தன் உணர்வுகளை அவதானித்தும், உணர்ந்தும் தனக்குள் பகுத்தறிந்துபார்த்தும், துயரத்திலிருந்து விடைபெற்று பௌத்தம் வழி ஞானதை நோக்கிச் செல்கின்றான். “மின்காந்தத் துகள்கள்” என்று பொருளுடைய “இயனி” இயற்கையோடு ஒன்றிய, சுய சிந்தனையும் கொண்ட, ஒரு ஆழுமை மிக்கப் பெண். பிரதான ஆண் பாத்திரமும் இயனியுமும் நேசத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள். இவர்களுக்குள் ஏற்படும் முரண் பலவீனமானதாக உள்ளது. இத்தனை ஆழுமையுடன் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரமும் குறுகிய காலத்தில் இறந்துபோவதால், அவளுக்குகெனப் பேசுவதற்கான பெரிய வெளி இருக்கவில்லை. ஆனால் அவளுடைய ஆளுமை அவள் இறந்த பின்னரும் உணரப்படுகின்றது. மனசின் மாறி மாறிப் பயணக்கும் தன்மையால், சில சம்பவங்கள் அகத்தில் நிகழ்கின்றனவா அல்லது வெளியேயா என்கின்ற குழப்பம் வாசகருக்கு சில நேரங்கள் வருதவதற்கு வாய்ப்புண்டு என்பதால் அவதானமான வாசிப்பு அவசியம். பெரும்பாலான நாவல்கள் கதைகளை மட்டுமே வைத்து எழுதப்படுபவை. காந்தப்புலத்திலும் கதைகள் இருக்கின்றனதான். ஆனால் கதைகளோடு தத்துவ விசாரணைகளும், தத்துவங்களை இணைத்துப் பார்த்தலும்(மார்க்சியம்-பௌத்தம்) ஆய்வுசெய்தலும் நிழந்திருக்கின்றது. தத்துவங்கள் தொடர்பாகவும், “தன் சார ஆழ அனுபவங்கள்” தொடர்பாகவும், ஆசிரியரின் சுய ஆய்வுகளும், சுய கண்டுபிடிப்புக்களும் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் உணர்வுகள், எண்ணங்கள் தொடர்பான தனது சொந்த அவதானிப்புகள், கண்டுபிடிப்புகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இவையே இந்த நாவலின் மிகப் பலமாகவும், வழமையான நாவல்களிலிருந்து வித்தியாசன தன்மையையும் கொண்டிருக்கின்றது. மெலிஞ்சி முத்தனின் “அத்தாங்கு”, “வேருலகு” போன்ற முன்னைய நாவல்களிலும் சிறிதளவான தத்துவ விசாரணைகளோடு கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ‘வேருலகு” நாவல் கனவுகளின் தொகுப்பு. காந்தப் புலத்தில் அகவுலகக் காட்சிகள் ஒரு கனவு போன்றே மனதில் படிகின்றன. அங்கும் உணர்வுகள் எண்ணங்கள் பற்றிப் பேசப்பட்டிருப்பது கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ஒரு மயக்க உணர்வையும் கொடுக்கிறது. கதைசொல்லும் உத்தியும், காட்சிப் படிமங்களும். யதார்த்தமுடைய ஒரு மனசைக் கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பதும், அதன் அக- புற பயணங்கள் மாயத் தன்மையானதாகவும் இருக்கின்றது. காந்தப் புலத்தில் பாவிக்கப்டும் மொழி அவசிறமற்ற வார்த்தைகளின்றி சொற் சிக்கனங்களோடு, வாசிப்பதற்கு இனிமையைத் தரும், புதுவகையான எழுத்துப் பாணியாகவே இருக்கிறது. ஆசிரியரின் பெரும்பாலான நாவல்களில் உரையாடல்கள் குறைவாகவும், கதைசொல்லப் பாணியே அதிகமாகவும் காணலாம். காந்தப்புலமும் விதிவிலக்கல்ல. ௦௦௦ நிரூபா நிரூபா கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். ‘சுணைக்கிது’ , ‘இடாவேணி’ ஆகிய சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். https://akazhonline.com/?p=69161 point
-
ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
நீங்க இலங்கை போகும்போது சொன்னால் போட்டுக்குடுக்கலாம்.1 point
-
"தவறான தீர்ப்பு"
1 point"தவறான தீர்ப்பு" அக்டோபர் / நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எட்டாவது ரி 20 உலகக்கோப்பை தொடரில், 06/11/2022 அன்று பாகிஸ்தான் பங்களாதேஷ் துடுப்பாட்டம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. யார் வெல்லுகிறார்களோ அவர்கள் அரை இறுதி ஆட்டத்துக்குப் போக தகுதி அடைவார்கள். இந்த சூழ்நிலையில் தான் பங்களாதேஷ் அணித் தலைவரும் சிறந்த துடுப்படி வீரருமான சகிப் அல் ஹசன் மைதானத்துக்குள் சென்றார். அப்பொழுது, பங்களாதேஷ் நல்ல நிலையிலும் இருந்தது. அவர் முதல் பந்தை தடுத்த பொழுது, பந்து மட்டையில் பட்டு காலில் பட்டது. அதை சரியாக கவனிக்காமல், மூன்றாவது நடுவர் கூட தவறான தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புத்தான் பாகிஸ்தானை அரை இறுதிக்கு இட்டுச்சென்றது. இதை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகம் வந்தது. அன்று நான் என் நண்பியுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு போய்க் கொண்டு இருந்தேன். நாம் சென்ற பேரூந்து முழுதாக நிரம்பி இருந்தது. அது அனுராதபுர பேரூந்து நிலையத்தில் சிறு ஓய்வுக்காக தரித்து நின்றது. என்னுடன் வந்த நண்பி நல்ல நித்திரை. எனவே அவரை எழுப்பாமல், கீழே போய் தண்ணீர் போத்தலை நிரப்பி வருவம் என்று எழும்பும் தருவாயில், திருநங்கை ஒருவர் பேரூந்தில் ஏறி, ஒவ்வொருவரிடமும் பணம் கேட்டுக் கொண்டு இருந்தார். எனக்கு எனோ அவர்களைப் பிடிப்பதில்லை. அவர்கள் பொதுவாக வியாபாரமாக பாலியலில் ஈடுபடுவதாலும், மற்றும் அவர்களின் தோற்றம் எனக்கு ஒரு அருவருப்பை கொடுத்தது. என் நண்பி நித்திரை குழப்ப வேண்டாம் என்று சொல்லி, ஒரு நாற்பது ரூபாயை அவளிடம் கொடுத்து விட்டு, நான் தண்ணீர் எடுக்க பேரூந்தில் இருந்து இறங்கி போய்விட்டேன் தண்ணீர் எடுக்க பெரிய வரிசை நின்றதால், நான் வர பேருந்தும் வெளிக்கிட்டு போகத் தொடங்கி விட்டது. என்னால் அதை நிற்பாட்ட முடியவில்லை. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, என் பெட்டி, காசு எல்லாம் அங்கேதான். நான் உடனடியாக என் நண்பிக்கு தொலைபேசி அழைப்பு போட்டேன், ஆனால் ஒரு பதிலும் இல்லை, அவர் நித்திரையில் இருப்பதால், மௌனத்தில் விட்டு விட்டார் போலும். என் நண்பி கட்டாயம் எழும்பினதும் என்னை காணவில்லை என்று எனக்கு அழைப்பு விடுவார். மற்றும் என் பெட்டி காசு பத்திரமாக எடுத்து வருவார் , அதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை எப்படி இங்கிருந்து கொழும்பு போவது. என்னிடம் ஒரு பணமும் இல்லை. குறைந்தது நானுறு ரூபாயாவது வேண்டும்! நான் அப்படியே செய்வதறியாது, பேரூந்து நிலையத்தில் இருந்த ஒரு தூணுடன் சாய்ந்து நின்றேன். பின் சற்று சுற்றிவர பார்த்தேன். இது சாமம் என்பதால் , பெரிதாக ஒருவரும் இல்லை. என்றாலும் ஒரு சிலர் பயணத்துக்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கிடையில், அந்த திருநங்கை என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். பின் அவர் அங்கிருந்து என்னிடம் வந்தார், ஐயா என்ன நடந்தது?, உங்க பேரூந்து போய் விட்டதே? என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார். பின் சிங்களத்தில் அங்கிருந்த நேர அட்டவணையை பார்த்து விட்டு, உங்களுக்கு இன்னும் அரைமணித்தியாலத்தில் அனுராதபுர - கொழும்பு கடுகதி பேரூந்து இருக்கு, அது நீங்க தவறவிட்ட பேரூந்துவை கட்டாயம் கொழும்பில் பிடித்து விடும், அதில் நீங்கள் போகலாம் என்கிறார். அப்ப தான் நான் அவளுக்கு என் பிரச்னையைச் சொன்னேன். அவள் இதற்கு ஏன் கலங்குகிறீர்கள் என்று சொல்லிவிட்டு, தன் சில தோழிகளை கூப்பிட்டு, நானுறு ரூபாய் சேர்த்து, தானே டிக்கெட் கவுண்டரில் [சீட்டு முகப்பில்] பற்றுச் சீட்டும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. உங்க வங்கி கணக்கு தந்தால், நான் கொழும்பு போனதும் போட்டு விடுவேன் என்றேன். ஐயா எமக்கு எங்கே வங்கி கணக்கு என்று சிரித்துக் கொண்டு சொன்னார். ஐயா கவலை வேண்டும், இன்னும் ஒரு நேரம் யாராவது கஷ்டத்தில் இருப்பதை கண்டால் உதவுங்கள், அது காணும் என்று கூறிவிட்டு, அவள் அங்கிருந்து உடனே தன் தோழிகளுடன் போய்விட்டார். அப்பத்தான் என் தவறான தீர்ப்பு எனக்குப் புரிந்தது. என்னை மாதிரி, அவர்கள் மேல் வெறுப்பும் அருவருப்பும் கொண்டு, எல்லோரும் புறக்கணித்தால், வேலை வாய்ப்பு கொடுக்கா விட்டால், அவர்கள் தான் என்ன செய்வார்கள். அதன் பின் நான் அவர்களை வெறுப்பதும் இல்லை, அருவருப்பு படுவதும் இல்லை. அவர்களுக்கு என்னால் இயன்ற நேர்மையான உதவிகள் செய்வதுடன், அவர்களுடன் மனம் திறந்து கதைக்கவும் தொடங்கினேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point
-
இலங்கை சுற்றுலா: குறைந்த செலவில் செல்ல விரும்புவோர் அவசியம் அறிய வேண்டிய தகவல்கள்
பயனுள்ள தகவல்கள்........! 👍 நன்றி ஏராளன் .........!1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
கைப்புண்ணுக்கு... கண்ணாடி வேண்டுமா. 😂 ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் எனும் போதே... உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். 😁 இல்லை என்றால்... உங்களுக்கு பூகோள அரசியல் அறிவு காணாது என்று நினைக்கின்றேன். 🤣1 point- இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்ட துருக்கி.
இதைக் கூட தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக திராவிட ஆட்சியாளர்களும் செய்யவில்லை.. நாம் தந்தை நாடு என்று சொல்லிக் கொண்டு இன்று வரை ஏதோ ஒரு வகையில் தாங்கி நிற்கும் ஹிந்தியாவும் செய்யவில்லையே..???! நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும்... அது இன்று வரை தொடர்கின்ற நிலையிலும்..!!1 point- தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மாடு , ஆடுகள் இறைச்சியாக்கப்படுவதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர். இதிலை எந்த இனம் ..ஊர் பேர் இல்லை...இதை யாரு செய்திருப்பினம்...கன்பியூசா இருக்கே...1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointதமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைத்த அரச யுத்தநிறுத்த மீறல்கள் தொடர்பான அறிக்கை பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த தமிழர் தரப்பினரின் ஆறு பிரதிநிதிகளும் இணைந்து கூட்டாக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்கள். அது வருமாறு, தமிழ் விடுதலை அமைப்புக்களின் இணைந்த முன்னணியினர் விடுக்கும் அறிக்கை, 09/07/1985 இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்த எமது முறைப்பாடுகள் தமிழரின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு முயன்றுவரும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியையும், பேச்சுவார்த்தைக்கான உதவிகளை நல்கிவரும் இந்தியாவின் நற்பண்பினையும் பாராட்டும் அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கக் கூடிய சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக தமிழர் தாயகத்தில் அமைதியான சூழ்நிலையினை ஏற்படுத்த எமது தரப்பிலிருந்து அனைத்துவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் நாம் முற்றாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதையும் நாம் கூறிக்கொள்கிறோம். ஆனால், யுத்தநிறுத்தம் தொடர்பாக தனது கடமைகளைச் செவ்வண செய்வேன் என்று வாக்குறுதியளித்த இலங்கையரசாங்கம் இன்றுவரை அதனைச் செய்யாது, தொடர்ச்சியாக யுத்தநிறுத்தத்தினை மீறிச் செயற்பட்டு வருகிறது என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இலங்கையரசாங்கத்தின் படைகள் தமிழர்களுக்கெதிரான வன்முறைகளிலும், அச்சுருத்தும் செயற்பாடுகளிலும் இன்றுவரை ஈடுபட்டே வருகின்றனர். இலங்கையரச இராணுவத்தினரால் செய்யப்பட்டுவரும் போர்நிறுத்த மீறல்கள் குறித்த சில விடயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். 1. தமிழ் மீனவர்கள் மீதான வன்முறைகள் : இலங்கையரசாங்கம் கடல்வலயத் தடையினை பகுதியளவில் மீளப்பெற்றுக்கொள்வதாக பகிரங்கமாக அறிவித்திருக்கும்போதிலும், அவர்களின் கடற்படையினர் தொடர்ந்தும் எமது மீனவர்கள் மீது அச்சுருத்தல், கைதுசெய்தல், தாக்குதல் நடத்துதல், சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டே வருகின்றனர். வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, பருத்தித்துறை, தாளையடி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தொழிலுக்குச் சென்றவேளை அவர்களை முட்கம்பிகளாலும், இன்னும் பிற ஆயுதங்களாலும் கடுமையாகத் தாக்கியும், அவர்களின் படகுகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், அவர்களின் வாழ்வாதாரத்தைத் திருடியும் கடற்படையினர் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். 2. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், வன்முறைகளும் : யுத்தநிறுத்தத்தினைத் தான் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பதாக இலங்கையரசாங்கம் அறிவித்த வாரத்த்திற்கு அடுத்த வாரத்தில் மட்டுமே பல இளைஞர்களை இலங்கையரசாங்கம் படுகொலை செய்திருக்கிறது. இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட இளைஞர்களில் ஆயுதங்கள் இன்றி நடமாடிய தமிழ் விடுதலை அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்கும். இப்படுகொலைகளை எந்தத் தூண்டுதலும் இன்றியே இலங்கையரசாங்கம் செய்துவருகிறது. ஆனி 18 ஆம் திகதியிலிருந்து ஆடி 8 வரையான காலப்பகுதியில் இலங்கையரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் படுகொலைகளின் விபரங்கள் வருமாறு, a) மன்னார் கொக்குடையார் பகுதியில் நான்கு தமிழ் இளைஞர்களைச் சுட்டுப் படுகொலை செய்த இராணுவத்தினர், அவர்களின் உடல்களை எரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்திருக்கிறார்கள். b) முன்னாகத்தில் உந்துருளியில் பயணம் செய்த இரு இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோக செய்த இராணுவத்தினர், ஒருவரைக் கொன்று, மற்றையவரைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். காயப்பட்டவர் தப்பிச் சென்றுவிட, கொல்லப்பட்டவரது உடலைஅடையாளம் காணமுடியாத வகையில் இராணுவத்தினர் எரியூட்டியிருக்கிறார்கள். c) மூதூரில் இராணுவத்தால் இழுத்துசெல்லப்பட்ட இரு இளைஞர்கள் கொல்லப்பட்டு, முகாமினுள்ளேயே எரியூட்டப்பட்டிருக்கிறார்கள். d) மண்டூரில் நான்கு இளைஞர்களை இலங்கை இராணுவத்தினர் கைதுசெய்து சென்றிருக்கிறார்கள். e) மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த விவசாயிகள் மீது உப - பொலீஸ் பரிசோதகர் பியசேனவும் அவரது பொலீஸ் அணியினரும் நடத்திய தாக்குதலில் பல விவசாயிகள் படுகாயமடைந்திருப்பதோடு, அவர்கள் பயணம் செய்த உழவு இயந்திரமும் பொலீசாரினால் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது. f) மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான 50 வீடுகள் சிங்களவர்களால் எரித்து அழிக்கப்பட்டிருக்கின்றன. யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்ததிலிருந்து இவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் நான்காவது கிராமம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது. g) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பகுதியில் இரு இளைஞர்களைத் துரத்திச் சென்று, அவர்களைக் கைதுசெய்ய முடியாது போன கோபத்தில், அப்பகுதியால்ச் சென்ற பல தமிழர்களை இராணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். h) ஆனையிறவு முகாமிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் செல்லும் வழியில் காணப்பட்ட தமிழ் மக்கள் மீது பொலீஸ் விசேட அதிரடிப்படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து தமிழ் மக்களை அச்சுருத்தும் விதமாக நடந்திருக்கிறார்கள். i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலைப் பகுதியில் அரச அச்சகத்திற்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று திடீரென்று இராணுவச் சோதனைச் சாவடியாக மாற்றப்பட்டிருப்பதோடு இதனை அமைப்பதற்கு தமிழ் மக்களை 16 பாரவூர்திகளில் இழுத்துவந்த இராணுவத்தினர் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் மீதும், ஆயுதம் தரிக்காத போராளிகள் மீது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகளும், தாக்குதல்களும் தற்போதும் நடந்துகொண்டே வருகின்றன. 3. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை : யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் அடக்குமுறைகள் சற்றுத் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் இராணுவத்தினரின் அடக்குமுறையும், கெடுபிடிகளும், கண்காணிப்பு நடவடிக்கைகள் என்கிற பெயரில் நெருக்குவாரங்களும் தற்போது அதிகரித்தே காணப்படுகின்றன. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை அச்சுருத்தி, பயங்கரமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்காக வேண்டுமென்றே குடிமனைகள் ஊடான ரோந்துக்கள், வீதிதடைகள், தேடியழிக்கும் நடவடிக்கைகள், கைதுகள், தாக்குதல்கள் என்பன இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்திற்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளை மீளப்பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் இவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 4. பெருந்தோட்டப் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தினால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை: பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் சுதந்திரமான நடமாட்டம் அரசாங்கத்தால் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, இப்பகுதிகளிலிருந்து வெளியே செல்வோரும், உள்ளே நுழைவோரும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு, அச்சுருத்தப்பட்டு வருகிறார்கள். ஏறக்குறைய ஒரு முற்றுகை நிலையிலேயே பெருந்தோட்டத் தமிழ்ப்பகுதிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளுக்கும் வெளியிடங்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதோடு, பல தமிழர்களை காரணமின்றிக் கைதுசெய்து தடுத்து வைத்திருக்கிறது இலங்கையரசாங்கம். "மேற்கூறப்பட்ட இலங்கையரசின் அப்பட்டமான யுத்தநிறுத்த மீறல்களுக்கு மேலதிகமாக, தான் ஏற்றுக்கொண்ட இரு விடயங்களான தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வது, தமிழ்ப் பிரதேசங்கள் மீதான ஊரடங்கு உத்தரவினை நீக்கிக்கொள்வது ஆகியவற்றையும் செயற்படுத்த இலங்கையரசாங்கம் பிடிவாதமாக மறுத்தே வருகிறது". "இலங்கையரசாங்கத்திற்கும், தமிழ் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் பரஸ்பர யுத்தநிறுத்தத்திற்கு அமைவாக, இலங்கையரசாங்கம் உடனடியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்". "யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்படவேண்டிய காலப்பகுதியில் மேலதிகமாக ஆட்களையோ ஆயுதங்களையோ தருவித்தல் ஆகாது என்கிற நிபந்தனையினையும் மீறி, இலங்கையரசாங்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரையும், ஆயுத தளபாடங்களையும் குவித்துவருகிறது என்பதையும் நாம் அறியத் தருகிறோம். அண்மையில்க் கூட பாக்கிஸ்த்தானிடமிருந்து நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகளையும், சீனாவிடமிருந்து 18 பீரங்கிப் படகுகளையும் இலங்கையரசாங்கம் தருவித்திருக்கிறது". தமிழ்ப் பிரதிநிதிகளின் கூட்டறிக்கைக்குப் பதிலளித்த இலங்கையரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜயவர்த்தன, ஊரடங்கு உத்தரவு மற்றும் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்ந்து பிற்பகலுக்குள் பதில் ஒன்றினைத் தருவதாகக் கூறினார். மதியவேளை தனது சகோதரரும், ஜனாதிபதியுமான ஜெயாருடன் நேரடித் தொலைபேசியூடாகப் பேசிய ஹெக்டர், அரசாங்கம் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டத்தை அடுத்தநாள் நீக்கிக்கொள்ளவும், அரசியற்கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 1,197 தமிழர்களில் 643 பேரை இருநாட்களின் பின்னர் விடுதலை செய்யவும் ஒத்துக்கொண்டிருப்பதாக பேச்சுவார்த்தை மேசையில் அறிவித்தார்.1 point- தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
சிங்களம் ஒருபோதும் நேர்மையாக சிந்தித்ததில்லை. தந்திரமாகத்தான் சிந்தித்தது. நாங்களும் தந்திரமாக நடந்துகொண்டிருக்கவில்லை. இலங்கைத் தரைவழித் தொடர்பை எப்போது இந்தியா ஏற்படுத்துகிறதோ அப்போதிருந்து இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாகிவிடும். இந்தியக் கழிவுகள் இலங்கையை நிரப்பத் தொடங்கும். இது ஒட்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியானகதைதான். அப்போது பிரபாகரனின் அருமையை சிங்களம் புரிந்துகொள்ளும்.1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 pointஉங்கள் இயற்கை காட்சி/ படங்களுடன் கூடிய பயண நிகழ்வுகள் மிக பிரமாதம். எல்லோருக்கும் இந்த சந்தர்ப்பங்கள்கிடைப்பதில்லை. நன்றி தெரிவிப்போடு உங்கள் பயணத்தை தொடருங்கள். 👍🏼1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
இதெல்லாம் புதிதல்ல...... அரச நன்கொடை எனும் பெயரில் வறிய மக்களுக்கு நாறிப்போன, புழு பிடித்த மீன்களை கொடுத்ததை என் கண்ணால் கண்டிருக்கின்றேன்.😂1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page இலங்கை போக இருப்பவர்கள் மேலே உள்ள சுட்டியை அழுத்தி Embarkation Card நிரப்பினால் அங்கே போய் மினக்கெட தேவையில்லை. ஆனால் போவதற்கு 4-5 நாட்கள் இருக்கும் போதே நிரப்ப அனுமதித்தார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை.1 point- "நன்றியுள்ள நண்பன்" [நாய்]
1 pointநீங்கள் ஆற்றில் மூழ்கப்போவது மட்டுமன்றி எதிர்காலத்தில் தனது எஜமானன் ஆகப்போகின்றீர்கள் என்பதும் அந்த ஜீவனுக்குத் தெரிந்ததுதான் விந்தை......! 😂1 point- ஆசியாவில் கடும் வெப்பம்; வியட்நாமில் இலட்சக்கணக்கான மீன்கள் இறப்பு
அங்கு வெக்கை இங்கு இன்னமும் விண்டர் ஜக்கட் ஓய்வுக்கு போக வில்லை இன்று காலையில் ஓரளவுக்கு வெப்பம் பின்னேரம் இருந்ததும் போச்சு .1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 point- தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
தேசியத் தலைவரை கொன்றதற்காக வருந்தும் நிலை மிக விரைவில் சிங்களத்திற்கு வரும்.1 point- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
1 pointபடங்களும் பார்வைகளும் சிறப்பு. சில இடங்கள் நான் சென்ற இடங்களாகவும் உள்ளன. காட்சிக்குள் நானும் இணைவதுபோன்றதொரு உணர்வு. சிறுகுறிப்புப்போல் இருந்ததாலும் அவை கனதியான செய்திகளைச் சொல்லி நிற்கிறது. படங்களைப் பேசவைத்துள்ளீரகள். வலைஞனைத்தொலைத்தவிட்டு நினைவுகளோடு அலையும் இனமாகத் தமிழினம். படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointபேச்சுக்களில் பங்கெடுத்த தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மையினைக் கேள்விகேட்ட சிறிலங்கா அரசு தரப்பும், வெளிநடப்புச் செய்த போராளிகளும் 1985 ஆம் ஆண்டு ஆடி 8 ஆம் திகதி பேச்சுக்கள் ஆரம்பமாகின. பத்து உறுப்பினர்கள் அடங்கிய இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு ஜெயாரின் சகோதரன் ஹெக்டர் ஜெயவர்த்தன தலைமை தாங்கினார். 13 உறுப்பினர்கள் அடங்கிய தமிழர்களின் பேச்சுவார்த்தைக் குழுவினர் பலத்த பாதுகாப்புடன் திம்புவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேச்சுவார்த்தைக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். திம்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பூட்டானின் தலைநகரான திம்புவிற்கு அந்நாட்களில் உல்லாசப் பயணிகளோ, பத்திரிக்கையாளர்களோ வருவது தடைசெய்யப்பட்டிருந்தது. இரு இந்தியச் செய்தியாளர்களான இந்திய டுடேயின் சென்னைப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியும் அவரது புகைப்பிடிப்பாளரும் உல்லாசப் பயணிகள் என்கிற போர்வையில் திம்புவில் தங்கியிருந்தவேளை, நடுச்சாமத்தில் அவர்களைத் தட்டி எழுப்பிய அதிகாரிகள் மரியாதையுடன் காலைவிடியுமுன் நகரிலிருந்து அனுப்பி வைத்தார்கள். விடுதியில் தங்கவைக்கப்பட்ட தமிழ்ப் பேச்சுவார்த்தைக் குழுவினரை ஏறக்குறைய பணயக் கைதிகள் போலவே இந்தியா நடத்தியது. வெளியாரைச் சந்திப்பது அவர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது.ஆனால், சென்னையின் கோடாம்பக்கத்தில் இருக்கும் ஒரு இரகசிய இடத்திற்கான நேரடித் தொலைபேசி அழைப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. சென்னைக்குத் திரும்பியிருந்த தமது தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் பேசும் விடயங்கள் குறித்துப் பிரதிநிதிகள் அவ்வப்போது பேசிக்கொள்ளவே இந்த வசதி செய்துகொடுக்கப்பட்டிருந்தது. சந்திரசேகரனும் ஏனைய ரோ அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்தினர். சந்திரசேகரன் போராளிகளுக்கு பேச்சுவார்த்தைகளின்போது உதவிபுரிய ஏனைய அதிகாரிகள் இலங்கையரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கு உதவினர். பேச்சுவார்த்தைகளுக்கான தூதுக்குழுவினரை திம்புவிற்கு அனுப்பியபின்னர் போராளித் தலைவர்கள் சென்னைக்குத் திரும்பியிருந்தனர். பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக பாலசிங்கத்தை சென்னையில் இருக்குமாறு கூறிவிட்டு, புலிகளின் சேலம் முகாமிற்குச் சென்றார் பிரபாகரன். பத்மநாபா, சிறீ சபாரட்ணம், பாலக்குமார் ஆகிய ஏனைய தலைவர்கள் சென்னையிலேயே தங்கியிருந்தனர். திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்பதனை பிரபாகரன் உணர்ந்தே இருந்தார். இந்தியப் பத்திரிக்கையாளரான வெங்கட்ரமணியின் கூற்றுப்படி, தமிழர்களின் நலன்களும், இந்தியாவின் நலன்களும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பது தெளிவாகும்போது, வடக்குக் கிழக்கிற்குச் சென்று மீண்டும் ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்வதற்கு மனரீதியாகத் தன்னைத் தயார் செய்ய பிரபாகரன் உறுதிபூண்டிருந்தார். சேலம் முகாமிற்குச் சென்ற பிரபாகரன் தனது அடுத்த இராணுவத் திட்டத்தினைச் செயற்படுத்த போராளிகளைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபடலானார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் தான் கலந்தாலோசித்தது போல, இராணுவ முகாம்களையும், பொலீஸ் நிலையங்களையும் சுற்றி தனது போராளிகளை நிலைவைக்க அவர் முடிவெடுத்தார். கிட்டுவுடன் பேசிய பிரபாகரன், தனது அடுத்த நகர்வு இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குவதுதான் என்று கூறினார். பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சென்னையிலிருந்த தமது தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக் குழுவினர் அறியத் தந்ததுடன், அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு வந்தனர்.திம்புவிலும் சென்னையிலும் ஓரணியாக செயற்பட்ட போராளிகளின் தலைவர்கள் ஒருமித்து முடிவெடுத்தனர். சென்னையில் பொராளிகளின் ஒருமித்த அணியின் பேச்சாளராக பாலசிங்கமே செயற்பட்டார். திம்புப் பேச்சுவார்த்தை மேசையில் இப்பணியை திலகர் செய்தார். மேலும், திம்புவில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் புளொட் அமைப்புடனும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனும் சேர்ந்து செயற்பட்டனர். தற்போதைய (2005) புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் திம்புப் பேச்சுவார்த்தை குறித்து என்னுடன் பேசுகையில் தமிழத் தரப்பினர் ஓரணியாகச் சேர்ந்து இயங்கியது இதுவே முதற்தடவை என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட சிங்கள தூதுக்குழுவே இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது என்றும் கூறினார். "நாம் எமக்கிடையே தர்க்கிப்போம் என்றும், ஒருவரையொருவர் இழுத்து வீழ்த்தும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், நாம் எமது ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாகத் திட்டமிட்டே செய்தோம். ஒவ்வொருவரும் எந்தவிடயம் குறித்துப் பேசுவதென்றும், அவரே அப்பிரச்சினைகுறித்து தனது பேச்சில் பதிலளிப்பார் என்றும் முடிவெடுத்துச் செயற்பட்டோம்" என்றும் சித்தார்த்தன் கூறினார். பேச்சுக்களுக்கான போராளிகளின் பிரதிநிதிகளை வழிநடத்தும் பொறுப்பில் பாலசிங்கம் இருந்தார். தாம் நடத்தும் கலந்துரையாடல்கள் அனைத்தையும் ரோ வினர் செவிமடுத்து வருகின்றனர் என்பதை அவர் அறிந்தே இருந்தார். ஆகவே, போராளிகளின் பிரதிநிதிகளுடன் வேண்டுமென்றே யாழ்ப்பாண பேச்சுவழக்கில் அவர் பேசினார். இக்கலந்துரையாடல்களை இன்னொரு பக்கத்திலிருந்து செவிமடுத்துக்கொண்டிருந்த ரோ வின் தமிழ் அதிகாரிகள் குழம்பிப் போயிருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவில் ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் சட்டத்தரணிகளான எச் எல் டி சில்வா, எல்.சி.செனிவிரட்ண, மாக் பெர்ணான்டோ மற்றும் எச்.எல்.குணசேகர ஆகியோரும் அங்கம் வகித்தனர். ஏனையவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள். தமிழர்களின் பிரதிநிதிகள் குழுவில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சார்பில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோரும், புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகருடன் சிவகுமாரனும் (அன்டன்), ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் வரதராஜப்பெருமாளுடன் கேதீஸ்வரனும், டெலோ சார்பில் சார்ள்ஸ் அன்டனிதாஸுடன் மோகனும், ஈரோஸ் சார்பில் சங்க ராஜியுடன் இ. இரத்திணசபாபதியும், புளொட் சார்பாக வாசுதேவாவுடன் சித்தார்த்தனும் பங்குகொண்டிருந்தனர். பூட்டான் நாடே பேச்சுவார்த்தைகளுக்கான அனுசரணைகளை வழங்கியிருந்தமையினையடுத்து, அந்நாட்டின் வெளிநாட்டமைச்சர் லியொபொனோ தாவா செரிங் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவைத்தார். மிகுந்த அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தஅரச மாளிகையின் விருந்தினர் மண்டபத்தில் இப்பேச்சுவார்த்தைகள் நடந்தன. அங்கு பேசிய தாவா, ஒரு நாட்டில் வாழும் பல்வேறு இனங்களுக்கிடையிலான பிணக்குகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியதுடன், இப்பேச்சுவார்தைககள் வெற்றியடைய தனது நாட்டின் வாழ்த்துக்களையும் அவர் பேச்சுவார்த்தைப் பிரதிநிகளுக்குத் தெரிவித்தார். பேச்சுவார்த்தையினை ஒழுங்குசெய்தமைக்காக இந்தியாவுக்கும், நடத்த அணுசரணை வழங்கிய பூட்டானுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஹெக்டர் ஜெயவர்த்தன நன்றி தெரிவித்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பில் நன்றியுரையினை டெலோ உறுப்பினர் சார்ள்ஸ் வழங்கியது அன்று போராளி அமைப்புக்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினைக் காட்டியது. சரித்திர முக்கியத்துவாம் வாய்ந்த பேச்சுவார்த்தையின் முதலாவது நாள் நிகழ்வுகள் முடிவிற்கு வந்தபோது, பூட்டான் வெளிநாட்டமைச்சரின் விருந்தோம்பல் குறித்தே பலரும் பேசிக்கொண்டனர். பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் நாளான ஆடி 9 ஆம் திகதி, இரு குழுக்களும் ஒருவரையொருவர் நேராகப் பார்த்துகொள்ளும் வகையில் நீண்ட மேசையொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. தமிழர் பிரதிநிதிகள் சார்பில் அமிர்தலிங்கமே பேச்சுக்களை ஆரம்பித்தார். தமிழர் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கிடையே அன்றுகாலை கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு அமையவும், தாம் ஏற்கனவே தீர்மானித்திருந்த திட்டத்திற்கு அமைவாகவும் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தமது கரிசணையினைத் தமிழ்த் தரப்பு எழுப்பியது. முதலாவது, பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கும் உண்மையான நோக்கமும், உறுதிப்பாடும். முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தினைக் கொண்டிருக்காத சில சட்டத்தரணைகளையும், வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியிருப்பதன் மூலம் தாம் உணர்ந்துகொள்வது என்னவெனில், இப்பேச்சுவார்த்தைகளை தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான கால அவகாசத்திற்காகவே ஜெயவர்த்தன பாவிக்கிறார் என்று தாம் சந்தேகிப்பதாக தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அமிர்தலிங்கம் ஜெயாரின் இத்திட்டம் குறித்து மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்தார். "அவர்களின் திட்டம் எம்மைப்பொறுத்தவரை புதியதல்ல. கடந்த வருடம் முழுவதும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்துக் காலம் கடத்திய அரசாங்கம் இவ்வருடமும் அதனையே செய்ய எத்தனிக்கிறது" என்று அவர் கூறினார். தமிழர்களின் பிரதிநிதிகள் முன்வைத்த விமர்சனத்திற்கு ஹெக்டர் ஜயவர்த்தன பதிலளித்தார். இனப்பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதுமான தீர்வினை முடிவுசெய்யும் சகல அதிகாரமும் கொண்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே இப்பேச்சுக்களில் தானும் தனது அணியினரும் கலந்துகொள்வதாக அவர் கூறினார். மேலும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன தானே திம்புவிற்கு நேரடியாக வருவதாக தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் ஹெக்டர் கூறினார். அடுத்ததாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவில் இலங்கைப் புலநாய்வுத்துறையினைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்திருப்பது குறித்த தமது அதிருப்தியினை தமிழர்தரப்பு எழுப்பியது. உடனேயே குறுக்கிட்ட ஹெக்டர், தமிழ்ப் போராளிகள் பேச்சுவார்த்தைக் குழுவில் பிரதிநிதிகளாக அங்கம் வகிப்பதற்கான தகமை குறித்தும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவர்கள் கோருவது குறித்தும் கேள்வி எழுப்பினார். "நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்? நீங்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார். போராளி அமைப்புக்கள் தம்மை மட்டுமே இங்கு பிரதிநிதித்துவம் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களையோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களையோ போராளிகள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று அவர் கூறினார். அவர்கள் முஸ்லீம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், இலங்கையரசாங்கம் தமிழர்கள் சார்பாகவுமே பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். ஹெக்டரின் இந்த விசமத்தனமான பேச்சு இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்திற்கு வித்திட்டது. இலங்கையரசாங்கம் தமிழர்களையும் சேர்த்தே பிரதிநிதித்துவம் செய்வதானால், அது தமிழர்களுடன் பேசவேண்டிய தேவையென்ன என்று தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பினர். "தமிழர்களையும் சேர்த்தே நீங்கள் பிரதிநித்துவம் செய்வீர்களாகவிருந்தால், நீங்களுக்கு உங்களுக்குள்ளேயே பேசி, தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்" என்று தமிழர்களின் பிரதிநிதியொருவர் கிண்டலாகக் கூறினார். இதனையடுத்து, தம்மைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழர் தரப்பு கூறியது. ஆகவே, பேச்சுவார்த்தைகளில் சிறிய இடைவேளை ஒன்றினைக் கோரிய தமிழர் தரப்பு, தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கையரசாங்கம் ஏற்றுகொண்டால் அன்றி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தது. இடைவேளையின்போது தனித்தனியாக தமக்குள் கலந்தாலோசித்த தமிழர் பிரதிநிதிகள் தமக்கான திட்டத்தினை வகுத்துக்கொண்டனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், போராளிகளுக்கும் இடையே பிளவொன்றினை ஏற்படுத்தவே இலங்கையரசாங்கம் முயல்வதை அவர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டனர். ஆகவே, இதனை எப்படியாவது முறையடித்து விட அவர்கள் உறுதிபூண்டனர். அதன்படி, தமது எழுத்துமூல அறிவிப்புக்கள் அனைத்தையும் "தமிழ்மக்களின் பிரதிநிதிகள்" என்கிற தலைப்புடனேயே வெளியிடுவது என்று தீர்மானித்தனர். இடைவேளையின் பின்னர், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அறிக்கையொன்றினை ஹெக்டர் ஜயவர்த்தன வெளியிட்டார். இரு தரப்பினரும் பிரச்சினைக்கான தீர்வொன்றினை உண்மையாக அடைந்துகொள்ளும் நோக்கிலேயே பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும், பேச்சுக்களில் ஈடுபடுவதென்பதே தேவையானளவிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பேச்சுக்களில் பங்கெடுக்கும் தமிழர் தரப்பினை தாம் ஏற்றுக்கொண்டதனால்த்தான் என்றும் கூறினார். அதன்பின்னர், தமது இரண்டாவது கரிசணையான யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழர் தரப்பு கேள்வியெழுப்பியது. கொழும்பு அரசாங்கம் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுகொள்ள மறுத்துவருவதாக தமிழர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த செயற்பாடுகளில் ஒரு பகுதியினை இலங்கையரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். குறிப்பாக ஊரடங்குச் சட்டத்தினை நீக்குதல், தமிழர் பகுதிகளில் தேடியழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவற்றை அரசு செய்யத் தவறியிருப்பதாக அவர்கள் கூறினர். இரவுநேர ஊரடங்கு உத்தரவும், கைதுகளும் தற்போதும் இலங்கை இராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், தமது போராளிகள், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவம் , பொலீஸார், சிங்கள மக்கள் ஆகிய அனைவர் மீதான தமது தாக்குதல்களையும் முற்றாக நிறுத்திவைத்திருப்பதைச் சுட்டிக் காட்டினர்.1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது. முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும். சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும். இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்) இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)1 point- "ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]"
1 point"ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]" "அரை குடத்தின் நீர் அலைகள் தரை காண ததும்பி வடியும் அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு கூரை ஏறாமல் வானம் ஏறும் !" "நிறை குடம் அமைதி கொண்டு முறையாக கசடு அறக் கற்று பாறை போல் தன்னைத் திடமாக்கி பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !" "குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !" "கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும் கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும் மஞ்சள் கிழங்கென தோற்றத்தை கண்டு இஞ்சிபிடுங்கி தின்ற குரங்கு கதையாகும் !" "வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் கள்ளம் கபடமற்ற ஞானப் பார்வையில் உள்ளம் நிறைவு கொண்ட இளைஞர்கள் கேள்விஞானம் பெற்று சிக்கலையும் நீக்குவார்கள் !" "ஆழமற்ற குறுகிய மேலோட்ட பார்வைகள் பலமரம் கண்டதச்சன் ஒருமரமும் வெட்டானாகிறது ஆழமான தெளிவான எமது அறிவியல் குழப்பம்நீக்கி அறிவியல் எல்லைகளைத் திறக்கிறது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] கவிதை மேதை அலெக்சாண்டர் போப் (Alexander Pope, 1688-1744) 17ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆங்கில அறிஞராவர். இவர் தனது திறனாய்வுக் கட்டுரைகள் ['essay on criticism'] என்பதில், அற்ப அறிவோடு எல்லோரையும் விட தனக்கு எல்லாம் அதிகமாகத் தெரியும் என்ற எண்ணத்தோடு இருந்தால் அது பிறருக்குத் தீங்கு விளைவிப்பதில் முடியும் என சில எடுத்துக் காட்டுகளுடன் கவிதையாக குறிப்பிட்டு இருந்தார். அதை வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், ஆனால் அவரின் கருத்தை அப்படியே இங்கு தருகிறேன். அத்துடன் கிரேக்க புராணங்களில் கலை அல்லது அறிவியலின் பாதுகாவலரான 'மூஸ்' அல்லது 'மியூஸ்' [Muse] தெய்வம் 'சரஸ்வதி'யால் பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கிரேக்க புராணத்தின் படி, பியரியன் ஊற்று [Pierian spring] என்பது பண்டைய கிரேக்கத்தில் இருந்த மாசிடோனியா ( Macedonia] என்ற ஒரு இராச்சியத்தில் காணப்படட தெய்வீக ஞான ஊற்று ஆகும். படிப்பு என்பதற்கு குறியீடாக, அந்த பியரியன் ஊற்றை போப் பயன்படுத்துகிறார். Alexander Pope, a translator, poet, was born in London in 1688. He wrote “An Essay on Criticism” when he was 23. In Part II of this Essay on Criticism includes a famous couplet: 'A little Learning is a dangerous thing; Drink deep, or taste not the Pierian Spring ' . Translation of this in Tamil is given here. Here's the line in its original habitat from Alexander Pope's An Essay on Criticism (1709): "A little learning is a dangerous thing; drink deep, or taste not the Pierian spring: there shallow draughts intoxicate the brain, and drinking largely sobers us again. Fired at first sight with what the Muse imparts, In fearless youth we tempt the heights of Arts Short views we take, nor see the lengths behind, But, more advanced, behold with strange surprise New distant scenes of endless science rise !" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது? 2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்? Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#1 point - தலை துண்டிக்கப்பட்ட 4 மாடுகள், உயிருடன் 21 மாடுகள் மீட்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.