Leaderboard
-
suvy
கருத்துக்கள உறவுகள்9Points33600Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20014Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்4Points7048Posts -
நியாயம்
கருத்துக்கள உறவுகள்4Points2137Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/08/24 in all areas
-
உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இந்தியன் எக்ஸ்ப்றஸ் போன்ற இந்திய ஊடகங்களில் இருந்து இந்த செய்தியைப் பிரதி செய்து போட்டிருக்கின்றன. இந்திய ஊடகங்களில் "பக்க விளைவை இப்போது தான் AZ ஒப்புக் கொண்டிருப்பது போலவும், அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும்" எழுதுகிறார்கள்😂. இந்த AZ Vaccine பக்கவிளைவுகள் பற்றி யாழிலேயே விவாதித்த பழைய திரிகள் இருக்கின்றன. அரிதான குருதியுறையும் பக்க விளைவை முதலில் கண்டறிந்து வெளியிட்டதே AZ இன் கண்காணிப்பு சிஸ்ரம் தான். அதன் பின்னரும், இது வரையில் இளம் பெண்கள் தவிர்த்த ஏனையோரில் இந்த தடுப்பூசி பாவிக்கப் பட்டே வந்தது. இப்போதுள்ள பிரச்சினை, AZ தடுப்பூசி ஒரிஜினலாக தயாரிக்கப் பட்ட வைரசை விட திரிபடைந்த வைரசு தான் இப்போது பரவி வருகிறது. ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் போல உடனடியாக இந்த AZ தடுப்பூசியை மீள வடிவமைக்க முடியாது. எனவே, பாவனையும் குறைந்து விட்டது. உற்பத்தியும் நிறுத்தப் படுகிறது.4 points
-
உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
வழக்கம் போன்று பொறுப்பற்ற முறையில் தமிழ் ஊடகம், முக்கியமாக தினக்குரல் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது. அஸ்ராசெனிகா உலகளவில் கொவிட் தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்து செல்வதனாலும், சந்தையில் வேறு பல கொவிட் தடுப்பூசிகள் இருப்பதனாலும், தன் தடுப்பூசியை திரும்பப் பெறுவதுடன், தயாரிப்பதையும் நிறுத்துவதாகவே அறிவித்துள்ளது. தன் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதால், திரும்பப் பெறுவதாக அந் நிறுவனம்அறிவிக்கவில்லை. மேலும்: May 7 (Reuters) - AstraZeneca (AZN.L), opens new tab said on Tuesday it had initiated the worldwide withdrawal of its COVID-19 vaccine due to a "surplus of available updated vaccines" since the pandemic. The company also said it would proceed to withdraw the vaccine Vaxzevria's marketing authorizations within Europe. "As multiple, variant COVID-19 vaccines have since been developed there is a surplus of available updated vaccines," the company said, adding that this had led to a decline in demand for Vaxzevria, which is no longer being manufactured or supplied. https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/astrazeneca-withdraw-covid-vaccine-worldwide-telegraph-reports-2024-05-07/ LondonCNN — AstraZeneca is withdrawing its highly successful coronavirus vaccine, citing the availability of a plethora of new shots that has led to a decline in demand. The vaccine — called Vaxzevria and developed in partnership with the University of Oxford — has been one of the main Covid-19 vaccines worldwide, with more than 3 billion doses supplied since the first was administered in the United Kingdom on January 4, 2021. But the vaccine has not generated revenue for AstraZeneca since April 2023, the company said. https://www.cnn.com/2024/05/08/business/astrazeneca-covid-vaccine-withdrawal/index.html https://www.bbc.com/news/health-689770263 points
-
சிரிக்க மட்டும் வாங்க
2 points2 points
- உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
உலகெங்கும் 300 கோடி டோஸ் செலுத்தப்பட்ட பிறகு 'கோவிஷீல்டு' தடுப்பூசி வாபஸ் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கலாகர் பதவி, ஆரோக்கியம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் உலகெங்கிலும் 300 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டப் பிறகு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்பப் பெறப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகா இந்தத் தடுப்பூசியைப் பற்றி 'மிகவும் பெருமையாக உணர்வதாகக்' கூறியது. ஆனால் அந்த நிறுவனம் இந்த வணிக முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரசின் புதிய மாறுபாடுகள் அதிகரித்து வருவதால் புதிய, மேம்பட்ட தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின்போது அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசி பல லட்சம் பேரின் உயிரைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் அரிதான சில சந்தர்ப்பங்களில் அது ஆபத்தான இரத்தம் உறைதலையும் ஏற்படுத்தியது. இதனால் சில மரணங்களும் நிகழ்ந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது மிகத் துரிதமாக உருவாக்கப்பட்ட தடுப்பூசி கோவிட் தொற்றுநோய் பொதுமுடக்கத்திலிருந்து உலகை மீட்டெடுக்கும் பணியில், கோவிட் தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மிகத் துரிதமாக உருவாக்கினர். பொதுவாக 10 வருடங்கள் எடுக்கும் இந்தச் செயல்முறை சுமார் 10 மாதங்கள் வரை துரிதப்படுத்தப்பட்டது. இது மற்ற கோவிட் தடுப்பூசிகளை விட மிகவும் மலிவானது மற்றும் சேமிக்க எளிதானது என்பதால் இது 'உலகத்திற்கான தடுப்பூசி' என்று கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அறிவிக்கப்பட்டது. மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா அதை வெகுஜனப் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க ஒப்புக்கொண்டது. இங்கிலாந்து பொது முடக்கத்தில் இருந்து வெளிவரும் திட்டத்திற்கு இந்தத் தடுப்பூசியே அடித்தளமாக இருந்தது. "உண்மையில் இது ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. ஃபைசரின் மற்றொரு தடுப்பூசியுடன் சேர்ந்து அந்தப் பேரழிவிலிருந்து நம்மை மீட்டெடுத்தது," என்கிறார் இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் ஃபின். பட மூலாதாரம்,PRESS ASSOCIATION படக்குறிப்பு,'சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன' ரத்தம் உறைதலும் மரணங்களும் இருப்பினும், தடுப்பூசியின் அரிதான பக்க விளைவாக அசாதாரண இரத்தக் கட்டிகள் தோன்றியதால் அதன் நற்பெயர் சிதைந்தது. இதனால், இங்கிலாந்து மாற்று வழிகளுக்கு திரும்பியது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தனது ஒரு அறிக்கையில், "சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் மட்டும் 65 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன," என்று கூறியது. மேலும் அந்த அறிக்கையில் "எங்கள் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஒரு முக்கிய அங்கமாக பரவலாகக் கருதப்படுகிறது," என்று அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,'கொரோனா வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி மிகத்தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது புதிய வைரஸ் பிறழ்வுகள், புதிய தடுப்பூசிகள் இப்போது பரவலாக இருக்கும் கொரோனா நுண்கிருமியின் பிறழ்ந்த வடிவங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பொருந்தக்கூடிய புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதாக அவ்வறிக்கை தெரிவித்தது. இதனால், 'நமக்கு அதிகளவிலான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் கிடைத்தன' என அந்த அறிக்கை கூறுகிறது. இது அதன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கான (கோவிஷீல்டு தடுப்பூசி) 'தேவை குறைவதற்கு' வழிவகுத்தது. இது 'இந்த தடுப்பூசி இனி உற்பத்தியோ அல்லது சப்ளையோ செய்யப்பட மாட்டாது' என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. இதுகுறித்து பேசிய பேராசிரியர் ஃபின், "இந்தத் தடுப்பூசி திரும்பப் பெறப்படுவது, அது இனி பயனற்றது என்பதையே சொல்வதாக நான் நினைக்கிறேன்," என்றார். "கோவிட் வைரஸ் மிகவும் சுறுசுறுப்பானது என்பதும், அது அசல் தடுப்பூசிகளிலிருந்து மாறி வெகு தொலைவாகச் சென்றுவிட்டது என்பதும் தெளிவாகிவிட்டது. எனவே அந்தத் தடுப்பூசிகள் ஒரு வகையில் பொருத்தமற்றதாகிவிட்டன. புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் மட்டுமே இப்போது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c0deywlpknxo2 points- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
2 points2 points- அதிசயக்குதிரை
2 points2 points- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! குழந்தை : சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓகே னா அடி தூளு ஆண் : சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசை எல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்கள விழியில புடிச்சா ஆண் : நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்க நீங்க மோட்டார் பைக்க தான் பார்பிங்க நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்க நீங்க மாருதிக்கு மாறுவீங்க ஆண் : நாங்க ஜீன்ஸ் பேண்ட தான் போட்டாக்கா நீங்க பாகி பேண்ட்ட தான் பார்ப்பீங்க நாங்க பாகி பேண்ட தான் போட்டாக்கா நீங்க வேட்டிய தான் தேடுவீங்க ஆண் : ஒன்னுமே விவரங்கள் புரியல்லே என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு ஆண் : நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு வாலிபந்தான் திரும்ப வருமா ஆண் : உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள அத வச்ச பின்பு தான் பூமாலை அப்படியொரு அவதி ஏம்மா ஆண் : இப்போவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது ......! --- சிக்கு புக்கு ரயிலே ---2 points- வினா விடை
2 pointsநேரம் பொன்னானது. நேரம் போகும் வாராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். அலைவரும்போதே தலை முழுகு. ஆரோக்கியமான வாழ்வு ஆயுளை அதிகரிக்கும்.2 points- உக்ரைன் புலனாய்வு தலைவர் கூறிய கள இரகசியம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்.
உக்ரென் ரசியாவிடம் பெரியதொரு தோல்வியை சந்தித்திருக்கிறது போல. 12 நாடுகளின் கவச வாகனங்கள் ராங்கிகள் என பல வகையான கனரக ஆயுங்களை அள்ளிக் கொண்டு போய் மாஸ்கோவில் மே தின ஊர்வலத்தில் ரசிய மக்களுக்கு காட்டியுள்ளார்கள்.2 points- இந்தியாவில் கணவரை கட்டிப்போட்டு சித்ரவதை செய்த மனைவியை பொலிசார் கைது செய்தனர்.
இந்த திரியை விளங்க நினைப்பவன் மினக்கெட்டு மொழிமாற்றம் செய்து இங்குஇணைத்து உள்ளார் இனி ஸ்டாட் மியூசிக் ............................................................................2 points- இந்திய வெங்காய இறக்குமதி; தேவை இழந்த சீன வெங்காயம்
மக்கள் கூடுதலான பணம் செலவு செய்து தை மாசியில் வெங்காய செய்கையில் ஈடுபட்டு அறுவடை செய்யும் நேரமாக பார்த்து இறக்குமதி செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.செலவு செய்த பணத்தையே எடுக்க சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யும் நேரமாக பார்த்து இறக்குமதியை செய்வது வேண்டுமென்றே விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்துகிறாரோ?1 point- பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு!
பன்றி இறைச்சியால் இரு கைதிகள் சாவு! செய்தியின் தலையங்கமே தவறு. இலங்கை நாட்டின் உணவுப்பொதியில் சோறுதானே முக்கியம். கறி மட்டுமே பன்றி இறைச்சி. இனிவரும் காலங்களில் கத்தரிக்காய் கறி,புடலங்காய் கறி சாப்பிட்டவர் மரணம் என செய்த்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.🤣1 point- டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
கனம் கோட்டார் அவர்களே! தாய்லாந்து நாட்டில் என்ன கொறைச்சலை கண்டீர்கள்?1 point- ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
1 pointBill Clinton போன்று Trump Lolita Express ல் பயணித்திருப்பாரானால் Stommy Daniels இத்தனைக்கும் கொல்லப்பட்டிருப்பார். 😂1 point- இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி
ஆமாங்க சப்ரி...பேபரில் மட்டும் எழுதி 17 பில்லியன் என்ன 34 பில்லியனாகவும் குறைக்க முடியும்..1 point- டயானா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது
ஆளாளுக்கு இலங்கையை சிங்கபூராக்குவோம் என நடக்காததை கதைத்து கொண்டிருக்க, இலங்கையை தாய்லாந்தாக்க புறப்பட்ட தீர்க்கதரிசி🤣.1 point- மானிட சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமைகின்ற மைக்றோபிளாஸ்ரிக் : கட்டுப்பாடு நடப்புத் தேவையாகும்
1 point08 MAY, 2024 | 11:27 AM மானிடனின் புலமைசார் அபிவிருத்தியின் பெறுபேறாக விஞ்ஞானரீதியான தொழில்நுட்ப முடிவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அபிவிருத்தியென இனங்காணப்படுகின்ற மாற்றத்திற்கு ஒட்டுமொத்த மானிட சமூகமும் நிகழ்காலத்தில் இந்த மாற்றத்தின் சாதகமான மற்றும் பாதகமான பெறுபேறுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதோடு பாதகமான தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக துரிதமானதும் பயனுறுதிமிக்கதுமான தீர்வுகளைக் காண்பது உலகளாவிய சவாலாக மாறியுள்ளமையையும் இனங்காண முடியும். தொழில்நுட்பத்தின் பலம் காரணமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் போட்டித்தன்மையும் சிக்கலும் நிறைந்த சமூகத்தில் மனிதன் மிகவும் நெகிழ்ச்சியானதும் வசதியானதுமான நுகர்வுப் பாங்குகளுடன் மாறிவருகிறான். மேற்சொன்ன நுகர்வுப் பாங்குகள் மற்றும் வாழ்க்கை நடத்தைநெறிகள் மீது மாத்திரமன்றி தனது மானிட வாழ்க்கை வழியுரிமை மீதும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் தீர்மானகரமானதும் சவால்நிறைந்ததாகவும் அமைகின்றது. இந்த நுகர்வுப் பாங்கின் பக்கவிளைவாகவே மைக்றோபிளாஸ்ரிக் பிரதான மாசுபாட்டுக்காரணியாக சுற்றாடலில் சேர்கின்றது எனக்கூறுவதும் பெரும்பாலும் பொருத்தமானதாகும். ஏனெனில் பிளாஸ்ரிக் உற்பத்திகளில் நிலவுகின்ற எடைகுறைந்ததன்மை மற்றும் வசதியாக அங்குமிங்கும் கொண்டுசெல்ல இயலுகின்றமை, விலை குறைவானதாக உள்ளமை, பல்வேறு நிறங்களையும் கவர்ச்சிகரமான தன்மையையும் கொண்டுள்ளமை, நீண்டகாலமாக நிலைத்திருத்தல் மற்றும் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதிலான வசதி ஆகிய பலவிதமான பண்புகள் காரணமாக மக்கட் சமூகத்தில் பிரபல்யமான நுகர்வுப் பண்டமாக பிளாஸ்ரிக் மாறியுள்ளது. இவ்விதமாக பாவிக்கின்ற பிளாஸ்ரிக் உற்பத்திகள் பாவனையின்பின்னர் முறைசாராதவகையில் கழிவுப்பொருட்களாக கையுதிர்க்கப்படுவதும் அத்துடன் பிளாஸ்ரிக்கின் உள்ளடக்கம் காரணமாக பாவனையின்போதே உடலில் சேர்வதாலும் அதன் பெறுபேறாக மானிட சுகாதாரத்திற்கும் சுற்றாடலுக்கும் நீண்டகால மற்றும் குறுங்காலரீதியான பாதகமான தாக்கங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக நவீனகாலத்தில் ஒருசில உற்பத்திகளின்போதும் மைக்றோபிளாஸ்ரிக் மூலப்பொருளாக பாவிக்கப்பட்டு வருவதோடு அது தொடர்பில் கட்டாயமாக கவனம் செலுத்தப்படவேண்டும். ஏனெனில் இதனூடாக மானிட சுகாதாரமும் சுற்றாடலும் அச்சுறுத்தலுக்கு இலக்காவதால் நிலைபெறுதகு எதிர்காலத்திற்கு அது பாரிய சவாலாக அமைந்துள்ளமையாகும். மைக்றோபிளாஸ்ரிக்கை இனங்காண்போம். பருமனில் 5 மில்லிமீற்றரைவிடக் குறைவானதும் பல்லுருத்தோற்றம் கொண்டதுமான பிளாஸ்ரிக் பாகங்கள் மைக்றோபிளாஸ்ரிக்காக இனங்காணப்பட முடியும். அவை உக்கிப்போகின்ற துரிதநிலை குறைந்த மட்டத்தில் நிலவுவதால் மானிட உடலுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி சுற்றாடலில் பாரியஅளவில் எஞ்சிநிற்கின்றது. மைக்றோபிளாஸ்ரிக் அவற்றின் தோற்றுவாய் மற்றும் துணிக்கைகளின் அளவுக்கிணங்க முதனிலை மற்றும் இரண்டாம்நிலை என வகைப்படுத்தப்பட முடியும். சலவைக் காரணிகள் மற்றும் அழகுசாதன தயாரிப்புகள் போன்ற பாவனையாளர் பாதுகாப்பு உற்பத்திகள் அல்லது கைத்தொழில் உற்பத்திகளாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்ரிக் பாகங்கள் முதனிலை மைக்றோபிளாஸ்ரிக் என அழைக்கப்படுவதோடு மைக்றோ முத்துக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அத்துடன் சுற்றாடலுக்கு திறந்தநிலைக்கு ஆளாகிய பின்னர் அழிவடைகின்ற பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்களும் நாரிழைகள் அல்லது பிளாஸ்ரிக் பண்டங்கள் போன்ற பிளாஸ்ரிக் அடங்கிய தயாரிப்புகள் இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் ஆகும். குறைந்த அல்லது கூடிய அடர்த்திகொண்ட பொலிஎத்திலீன் (PE), பொலிப்றொபிலீன் (PP), பொலியஸ்டரீன் (PS), பொலிப்றொபிலீன் டிறெப்தலேற் (PET), பொலிவயினயில் குளோறைட் (PVC) மற்றும் பொலிவயினயில் அல்கஹோல் ஆகிய பல்லுருத்தோற்றங்களை உள்ளடக்கிய மைக்றோபிளாஸ்ரிக், துண்டுகள், படலங்கள், நார், நுரைகள், முத்துக்கள், கோளங்கள் / கட்டிகளாகவும் நிலவுகின்றன. மைக்றோபிளாஸ்ரிக்கின் நவீன சவால் மைக்றோபிளாஸ்ரிக் எந்தளவில் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் அது எதிர்காலத்தில் பிரமாண்டமான சுற்றாடல் பேரழிவினை உருவாக்க காரணமாக அமையுமென்பதும் பல்வேறு உலகளாவிய ஆராய்ச்சிகள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பிளாஸ்ரிக் கழிவுப்பொருட்கள் காரணமாக கடல்சார் சூழற்றொகுதி மாசுபாட்டுக்கு இலக்காவது நிகழ்காலத்தில் மிகவும் பாரதூரமான சுற்றாடல் சிக்கலாக மாறியுள்ளது. புவிமேற்பரப்பின் ஒட்டுமொத்த ஒட்சிசன் தேவையின் 80% கடல்சார் சூழல் மூலமாகவே நிவர்த்திசெய்யப்பட்டு வருவதோடு அது உயிருள்ள , உயிரற்ற விலங்கினத்தின் வழியுரிமைமீது பிரமாண்டமான அச்சுறுத்தலை விடுக்கின்றது. இன்றளவில் பல்வேறு ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதன்படி பிளாஸ்ரிக் உக்கிப்போக சராசரியாக ஏறக்குறைய 500 - 1,000 ஆண்டுகள் கழிகின்றதென்பதும் அவை முழுமையாக உக்கிப்போகாமல் மைக்றோபிளாஸ்ரிக்காக மாறுகின்றதென்பதுமாகும். அதற்கிணங்க இன்றளவில் வளிமண்டலத்தில் ஏறக்குறைய 50 - 75 ரில்லியன் தொன் பிளாஸ்ரிக் துணிக்கைகளும் மைக்றோபிளாஸ்ரிக்குகளும் உள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த ஆராய்ச்சிகள் மூலமாக 2025 அளவில் அது 250 மில்லியன் தொன்களை விஞ்சக்கூடுமெனவும் அத்துடன் 2050 ஆம் ஆண்டளவில் கடலில் வசிக்கின்ற மீன்களின் நிறையைவிட பிளாஸ்ரிக்கின் அளவு அதிகரித்துவிடுமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்குள் கடந்த நூற்றாண்டினைவிட பிளாஸ்ரிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதன் மூலமாக பிளாஸ்ரிக் நுகர்வு உயர்வடைந்துள்ளமையும், மறுபுறத்தில் 8 - 10 மில்லியன் மெட்றிக் தொன் வரையான அளவு இவ்விதமாக பாவனைக்குப் பின்னர் சுற்றாடலில் சேர்ந்துள்ளதென்பதும் வெளிப்படுகின்றது. மைக்றோபிளாஸ்ரிக் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகும் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பாவனைகள் ஊடாக நேரடியாகவோ மறைமுகமாகவோ மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகள் உடலில் சேர்ந்து அபாயநேர்வு நிலைமைக்கு மாற்றுகின்றது வாய் மூலமாக, சுவாசம் மூலமாக மற்றும் சருமத்தின் ஊடாக இவ்விதமாக மைக்றோபிளாஸ்ரிக் உடலில் கலப்பதால் சமிபாட்டுத்தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி, அகச்சுரப்பித் தொகுதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நீண்டகால மற்றும் குறுங்கால நோய் நிலைமைகள் உருவாகும். இரண்டாம்நிலை மைக்றோபிளாஸ்ரிக் பிளாஸ்ரிக் துணிக்கைக சுவாசம் வழியாக அவை உடலில் சேர்வதை தடுக்கமுடியாதுள்ளது. அதனூடாக சுவாசக்கோளாறுகள், இதயநாளங்கள் சார்ந்த நோய்கள், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள், நுரையீரல்சார்ந்த தொற்றுகள் காரணமான இருமல், தும்மல், குருதியில் ஒட்சிசன் செறிவு மாற்றமடைவதால் சுவாசிப்பதிலான சிரமங்கள், களைப்பு, தலைச்சுற்று போன்ற குறுங்கால நோய் நிலைமைகளும் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூழற்றொகுதி தரங்குன்றுதல் பறவைகள், மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் மைக்றோபிளாஸ்ரிக் துணிக்கைகளை உணவாக உட்கொள்வதால் உணவுப் பாதையில் காயங்கள் ஏற்படுதல், உணவுப் பாதைக்குள் சிக்குதல் போன்ற உள்ளக மற்றும் வெளிப்புற அபாயநேர்வுமிக்க நிலைமைகள் ஏற்படுகின்றன. மைக்றோபிளாஸ்ரிக் கட்டுப்பாட்டுக்கான உலகளாவிய அணுகுமுறைகள் உலகளாவிய நெருக்கடியொன்றாக மாறியுள்ள பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்காகவும் மட்டுப்படுத்துவதற்காகவும் மறுபுறத்தில் பாவனையின் பின்னர் கையுதிர்ப்பதன் மூலமாக பிறப்பிக்கப்படுகின்ற கழிவுப்பொருள் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும் அரச மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் / வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளின் உற்பத்திப் பொருளாதார செயற்பாங்கில் மேற்சொன்ன தாக்கம் உயர்மட்டத்தில் நிலவுகையில் இந்நாடுகளால் பல்வேறு கட்டுப்பாடுசார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. சவால்களை எதிர்கொள்ளல் : இலங்கை நடைமுறைகள் பொலித்தீன் மற்றும் தனிப்பாவனை பிளாஸ்ரிக் உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு எதிர்காலத்திலும் அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. அதன்கீழ் பொலித்தீன் உணவுப் பொதியிடல்பொருள் (லன்ச் ஷீட்) உற்பத்தி, பாவனை மற்றும் வர்த்தகம். அதிக பருமன்கொண்ட பொலிஎத்திலின் (HDPE),ஷொபிங் பேக், குரொசரி பேக், பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் எச்சங்களை திறந்தவெளியில் தகனம்செய்தலும் விரிவடைந்த பொலியஸ்டரின் உணவுப் பெட்டிகள் உற்பத்தி, வர்த்தகம், பாவனையைத் தடைசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் PET, PVC தேறிய பரிமாணம் 20 மில்லிமீற்றர் / தேறிய நிறை 20 கிறாமிற்கு இணையான அல்லது அதற்குக் குறைவான செஷே பக்கெற்றுகள் ( உணவு மற்றும் ஔடத பொதியிடலுக்காக பாவித்தல் தவிர்ந்த) காற்று நிரப்பக்கூடிய விளையாட்டுச் சாமான்கள் (பலூன், பந்துகள், நீரில் மிதக்கக்கூடிய / நீச்சல் தடாகங்களில் பாவிக்கின்ற விளையாட்டுச் சாமான்களும் நீர் விளையாட்டுச் சாதனங்கள் தவிர்ந்த) அத்துடன் பிளாஸ்ரிக் காம்புகள் (STEM) கொண்ட கொட்டன் பட்ஸ் ( COTTON BUDS) ( மருத்துவ/ கிளினிக்சார்ந்த சிகிச்சைகளுக்காக பாவிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கொட்டன் பட்ஸ் தவிர்ந்த) மற்றும் தனிப்பாவனை பானக் குழாய்கள் மற்றும் கலத்தல் சாதனங்கள் / விமானப் பயணங்கள் தவிர்ந்ததாக பாவிக்கப்படுகின்ற உணவுப்பொதியிடல் பீங்கான், கோப்பைகள், கரண்டிகள், முள்ளுக் கரண்டிகள் மற்றும் கத்திகள் / மலர் மாலைகள்/ இடியப்பத் தட்டுகள் பாவிக்கப்படுவது தடைசெய்யவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மைக்றோபிளாஸ்ரிக் சம்பந்தமாகவும் அதன் அபாயநேர்வு நிலைமையை இனங்கண்டு அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு நாடு என்றவகையில் நிறுவனமென்றவகையில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட மற்றும் கட்டுப்பாட்டு முறையியல்கள் போன்றே பல்வேறு ஊடகப் பாவனைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற கல்வி, தொடர்பாடல் முறையியல்களும் மக்கள் மனங்களை விழித்தெழச் செய்வித்து நிலைபெறுதகு வாழ்க்கைப்பாங்கு மற்றும் நிலைபெறுதகு எதிர்காலத்திற்காக வழிகாட்டுகின்ற பயனுறுதிமிக்க அரும்பணியாகுமென எடுத்துக்காட்ட இயலும். சுஜீவா பெரேரா சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் சுற்றாடல் மேம்பாட்டுக் கூறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை https://www.virakesari.lk/article/1829141 point- உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் குடுத்து வளர்க்கவேணும் .......! 👍1 point- வினா விடை
1 pointபுலம்பெயர்ந்திருந்தால் ஒரு அறையில் கோயில் செய்து உண்டியல் வைக்கலாம்.......! ஊரில் என்றால் இவருடன் ஒருநாள் பயணியுங்கள் போதும்.....! 😂1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointசாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட், ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி - ப்ளே ஆஃப் வாய்ப்புகள் எப்படி? பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிக்கெட்டில் எப்போதுமே சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத்தான் தரப்பட வேண்டும் என்று தார்மீகம். ஏனென்றால், பேட்டருக்கு இருப்பது ஒரு வாய்ப்புதான், ஒரு உயிர்தான் அதில் தவறு நேரும்பட்சத்தில் பேட்டரும் தன்னுடைய விக்கெட்டை இழக்க நேரிடும், அணியின் வெற்றி வாய்ப்பும் தலைகீழாக மாறிவிடும். ஆனால், பந்துவீச்சாளருக்கு ஒரு பந்து இல்லாவிட்டால் அடுத்த பந்தில் வாய்ப்பு கிடைக்கும். இதைக் கணக்கிட்டுத்தான் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு தரப்பட வேண்டும் என்று தார்மீகமாகக் கூறப்படுகிறது. அதன்படி, நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். ஆனால், சந்தேகத்தின் பலன் சாம்சனுக்குத் தராமல் அவுட் வழங்கியது ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ரன்களில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது. ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்? பட மூலாதாரம்,SPORTZPICS இப்போதுவரை ப்ளே ஆஃப் சுற்றை எந்த அணியும் இறுதி செய்யவில்லை என்பதுதான் ஐபிஎல் தொடரில் இருக்கும் சுவாரஸ்யம். டெல்லி கேபிடல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.316 என்ற கணக்கில்தான் இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், அதில் கட்டாய வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குப் போராட முடியும். இதில் நிகர ரன் ரேட்டையும் டெல்லி அணி உயர்த்துவது அவசியம். டெல்லி அணிக்கு நெருக்கடி கொடுக்க லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகள் காத்திருக்கின்றன. இப்போதைய சூழலில் இந்த 3 அணிகளுக்குள்தான் ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தைப் பிடிக்கக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் தோற்றாலும் 4வது இடத்துக்கான ரேஸில் சேர்ந்துகொள்ளும். இதில் டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும். இன்று ஹைதராபாத்தில் நடக்கும் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கிடைக்கும் முடிவுதான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு யார் செல்ல முடியும் என்பதில் தெளிவான பார்வையை உருவாக்கும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி வென்றால் 14 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணியைக் கீழே இறக்கிவிட்டு 3வது இடத்தைப் பிடித்துவிடும். லக்னெள அணி ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.371 என இருக்கும் நிலையில் தோல்வி அடைந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகும். அடுத்த இரு ஆட்டங்களையும் லக்னெள வென்றாலும் 16 புள்ளிகள்தான் கிடைக்கும், நிக ரன்ரேட்டில் சிக்கிக்கொள்ளும். ஒருவேளை சன்ரைசர்ஸ் அடுத்த 3 ஆட்டங்களையும் வென்று லீக் சுற்றை 18 புள்ளிகளுடன் முடித்து, சிஎஸ்கேவும் 18 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட்டில் இரு அணிகளுக்குள் போட்டி ஏற்படும். அப்போது 3வது, 4வது இடத்தை இரு அணிகளுமே பகிர்ந்துகொள்ளும். டெல்லி, லக்னெள அணிகள் வெளியேற்றப்படும் சூழல் ஏற்படலாம். இதே கணக்கீடு, லக்னெள அணி வெற்றி பெற்றால் சன்ரைசர்ஸ் அணிக்கும் பொருந்தும். சிஎஸ்கே அணி அடுத்து ஒரு போட்டியில் தோற்றாலும், 16 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் சிக்கி 4வது இடத்தையே பிடிக்கலாம். ராஜஸ்தான் அணியின் நிலை என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இருப்பினும் 16 புள்ளிகளோடு வலுவாக இருப்பதால் 2வது இடத்தில் இருந்து இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் மைனசுக்கு வராமல் 0.476 ஆக இருக்கிறது. இப்போதுள்ள சூழலில் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் வென்றால் தலா 22 புள்ளிகள் பெறும், அப்போது நிகர ரன்ரேட் ஒப்பீடு பார்க்கப்படும். எந்த அணி நிகர ரன்ரேட்டில் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். ஏற்கெனவே நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா உயர்வாக இருப்பது அந்த அணிக்குக் கூடுதல் சாதகம். ராஜஸ்தான் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் 3 ஆட்டங்களையும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில், விக்கெட் வித்தியாசத்தில் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால், முதலிடம் கிடைக்கும் அல்லது கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ராஜஸ்தானுக்கு 2வது இடம்தான். ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் 3 லீக் ஆட்டங்களில் இன்னும் ஒரு ஆட்டத்தில் வேண்டுமென்றால் தோற்கலாம், மற்ற இரு ஆட்டங்களிலும் வென்றால் 2வது இடத்தைப் பிடித்துவிடும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தால், ப்ளே ஆஃப் சுற்றில் 2,3,4வது இடங்களுக்கு கடும் போட்டி ஏற்படும். டெல்லி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் காரணம் என்பதைவிட, ராஜஸ்தான் அணியில் வலுவான பேட்டர்கள் நடுவரிசையில் இல்லாததே காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஹெட்மயர், துருவ் ஜூரெல் இருவரும் இல்லாத பலவீனமான நடுவரிசை இருந்ததால்தான் ராஜஸ்தான் 20 ரன்களில் தோல்வி அடைந்தது, ஒருவேளை இவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். இருப்பினும் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தார். 4 ஓவர்கள் வீசிய குல்தீப் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குல்தீப் வீசிய 18வது ஓவர்தான் ஆட்டத்தை டெல்லி பக்கம் முழுமையாகக் கொண்டு சென்றது. சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட்? பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(4), பட்லர்(19), ரியான் பராக்(27) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அணியை தோல்வியிலிருந்து கேப்டன் சாம்சன் இழுத்து வந்தார். அரைசதம் அடித்து 85 ரன்களுடன் ஆக்ரோஷமாக சாம்சன் பேட் செய்தார். சாம்சன் இருந்த தீவிரத்துக்கும், ஆவேசத்துக்கும், ஸ்பிரிட்டுக்கும் களத்தில் இருந்திருந்தால் அணியை வெற்றி பெற வைத்திருப்பார். ராஜஸ்தான் வெற்றிக்கு 30 பந்துகளில் 63 ரன்கள்தான் தேவைப்பட்டது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. 16வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரில் 4வது பந்தை சாம்சன் தூக்கி அடிக்க பவுன்டரி கோடு அருகே பக்கவாட்டில் சாய்ந்தவாறு ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். ஆனால், ஹோப் கேட்ச் பிடித்தபோது அவரின் கால் பவுண்டரி எல்லைக் கோட்டின் மீது லேசாக மிதித்தது போன்று இருந்ததா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. எல்லைக் கோட்டின் மீது ஹோப் லேசாக மிதித்தது போன்றும் இருந்தது, மிதிக்காமல் சென்றது போன்றும் இருந்தது. ஆனால், உறுதி செய்ய முடியாத சூழலில் இருந்தது, 3வது நடுவரும் பலமுறை ரீப்ளே செய்து பார்த்தபோதும் இறுதி முடிவை எடுக்க முடியவில்லை. களத்தில் இருந்த சாம்சனும் வெளியேறவில்லை. ஆனால் ஷாய் ஹோப் கேட்ச் பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் சகவீரர்களோடு கொண்டாட்டத்தில் இருந்தார். சந்தேகத்தின் பலனை பேட்டருக்கு வழங்காமல் 3வது நடுவர் சாம்சனுக்கு அவுட் வழங்கினார். இதைப் பார்த்த சாம்சன் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். சாம்சனின் அவுட் குறித்து முடிவு அறிவிக்கப்படாத நிலையில், அரங்கில் இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் கொண்டாட்டத்தில் இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். சாம்சனுக்கு ஒரு தலைபட்சமாக முடிவு அளிக்கப்பட்டதைக் கண்டித்தும், டெல்லி உரிமையாளரின் செயலையும் கடுமையாகக் கண்டித்து, விமர்சித்து வருகிறார்கள். ஒருவேளை சாம்சனுக்கு சந்தேகத்தின் பலனை அளித்து அவுட் இல்லை எனத் தெரிவித்திருந்தால், ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாம்சனும் 46 பந்துளில் 86 ரன்களில் (6 சிக்ஸர், 8 பவுண்டரி) இருந்தவர் சதம் அடித்திருப்பார். இவை அனைத்தும் சர்ச்சைக்குரிய அவுட்டால் நடக்கவில்லை. ராஜஸ்தான் அணி எங்கு தோற்றது? பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், பட்லர் விரைவாக ஆட்டமிழந்ததுதான் தோல்விக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் பவர் ப்ளேவில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தால், அடுத்து வரும் பேட்டர்களின் சுமை குறைந்திருக்கும். ஜெய்ஸ்வால் இந்த சீசனில் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது, பவர்ப்ளே ஓவருக்குள் பட்லர் ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. இருப்பினும் சாம்சன் களமிறங்கி, பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி சிக்ஸர், பவுண்டரி என விளாசி 67 ரன்களை சேர்த்தார். அடுத்ததாக நடுவரிசையில் களமிறங்கிய ரியான் பராக்(27), ரூ.2.80 கோடிக்கு வாங்கப்பட்ட ஷூபம் துபே(25) இருவரும் சாம்சனுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறிவிட்டனர். இருவரும் சாம்சனுக்கு நன்கு ஒத்துழைத்திருந்தால், ரன் சேர்ப்பு இன்னும் வேகமெடுத்திருக்கும். இதில் ஷுபம் துபே மட்டும் சாம்சனுக்கு ஓரளவு ஒத்துழைத்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ரியான் பராக், சாம்சன் கூட்டணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். கீழ்வரிசையில் ரோவ்மென் பாவெல்(13), பெரேரா(1), அஸ்வின்(2) என அனைத்து பேட்டர்களும் ராஜஸ்தான் அணியைக் கைவிட்டது தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதிலும் பவர் ஹிட்டரான பாவெல் கடைசி நேரத்தில் பந்துகளை வீணாக்கியது நெருக்கடியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்க வீரரான பெரேராவுக்கு பேட்டர் என நினைத்து வாய்ப்பளித்தும் அவர் ஏமாற்றினார். சாம்சன் ஆட்டமிழக்காத வரை ராஜஸ்தான் அணி 162 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்தது. 15வது ஓவர் வரை ஆட்டத்தை சாம்சன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சாம்சனுக்கு எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் திணறி வந்தனர். குறிப்பாக கலீல் அகமது பவுண்டரி அடிப்பதைத் தவிர்க்க வேண்டுமே என்பதற்காக 5 வைடு பந்துகளை ஒரே ஓவரில் வீசி சாம்சனை வெறுப்பேற்றினார். இசாந்த் சர்மா, சலாம், முகேஷ், குல்தீப் ஓவர்களையும் சாம்சன் வெளுத்து வாங்கி, 28 பந்துகளில் அரைசதம் அடித்து சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். முகேஷ் குமார் ஓவரில் சர்ச்சைக்குரிய வகையில் சாம்சன் ஆட்டமிழந்தவுடன், ராஜஸ்தான் சரிவு தொடங்கி, அடுத்த 39 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவர் ஹிட்டர்களை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணி 20 ரன்களில் தோற்றது. பாவெல், பெரேரா இருவரும் சிறிய கேமியோ ஆடி இருந்தாலே ஆட்டத்தின் முடிவு வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். எங்களிடம்தான் ஆட்டம் இருந்தது பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “ஆட்டம் எங்கள் கைகளில்தான் இருந்தது, ஓவருக்கு 10 முதல்11 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான், ஐபிஎல் தொடரில் இதுபோன்ற சேஸிங் நடந்துள்ளது. பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டோம், சூழலுக்கு என்ன தேவையோ அதைச் செய்தோம். 220 ரன்களை நாங்கள் அனுமதித்திருக்கக் கூடாது, 2 பவுண்டரிகள் கொடுத்ததைக் குறைத்திருந்திருந்தால், ஆட்டம் எங்கள் பக்கம்தான். டெல்லி அணி சிறப்பாக பேட் செய்தனர், மெக்ருக் இந்த சீசன் முழுவதும் சிறப்பான தொடக்கத்தை அளித்து வருகிறார். மெக்ருக் சந்தித்த இரு ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்தோம். நாங்கள் 3 ஆட்டங்களையும் வெற்றியின் அருகே வந்து தோற்றுள்ளோம், இருப்பினும் சிறந்த கிரிக்கெட்டை ஆடினோம் என்ற மனநிறைவு இருக்கிறது. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் தொடர்ந்து எங்களை நாங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டே அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றோம், சிறிதுகூட ரிலாக்ஸ் ஆக எங்களை நாங்கள் அனுமதிக்கவில்லை. டெத் ஓவரில் சந்தீப் சர்மா சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர். அவர் கடைசி நேரத்தில் 3 சிக்ஸர்களை விட்டது பின்னடைவு. எங்கு தவறு நடந்தது என்பதை ஆலோசிப்போம், அடுத்தடுத்த ஆட்டங்களில் முன்னோக்கிச் செல்வோம்,” எனத் தெரிவித்தார். மெக்ருக், போரெல், ஸ்டெப்ஸ் அதிரடி பேட்டிங் டெல்லி அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்ததற்கு தொடக்க ஆட்டக்காரர் மெக்ருக், அபிஷேக் போரெல், கடைசியில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகியோரின் அதிரடிதான் காரணம். அதிலும் பிரேசன் மெக்ருக் தொடக்கத்தில் இருந்தே ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்தார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர் என 15 ரன்களை பிரேசர் விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS ஆவேஷ் கான் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 28 ரன்களை பிரேசர் விளாசி, 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிரேசர் அதிரடியில் 3.5 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. அஸ்வின் வீசிய 5வது ஓவரில் பிரேசர் 50 ரன்கள் சேர்த்த நிலையில்(3 சிக்ஸர்,7 பவுண்டரி) விக்கெட்டை இழந்தார், அடுத்துவந்த ஷாய் ஹோப் ரன் அவுட் ஆனார். இதனால் பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களை டெல்லி அணி சேர்த்தது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்து 65(36 பந்து, 3 சிக்ஸர், 7 பவுண்டரி) ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் ரிஷப் பந்த்(15), அக்ஸர் படேல்(15) எனப் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. கீழ்வரிசையில் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். ஸ்டெப்ஸ் தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். டெல்லி அணியும் 14 முதல் 17வது ஓவர்கள் வரை ரன்ரேட் குறைந்து 22 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் யஷ்வேந்திர சஹலின் கடைசி ஓவரை வெளுத்த ஸ்டெப்ஸ் 16 ரன்கள் சேர்த்து 41 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்புதின் நயீப்(19), ரசிக் சலாம்(9) இருவரும் கடைசி ஓவர்களில் கேமியோ ஆடியதால், டெல்லி அணி 200 ரன்களை கடந்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 70 ரன்களை சேர்த்ததுதான் 200 ரன்களுக்கு மேல் உயரக் காரணம். டெல்லி பந்துவீச்சு சுமார்தான்… டெல்லி அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சாம்சன் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்யவே டெல்லி பந்துவீச்சாளர்கள் மிகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். குல்தீப் யாதவ், அக்ஸர் மட்டும்தான் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சாம்சன், ரியான் பராக், ஷூபம் துபே ஆகிய 3 பேட்டர்களும் துவைத்து எடுத்துவிட்டனர். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 4 பேருமே ஓவருக்கு சராசரியாக 11 ரன்களை விட்டுக்கொடுத்தனர். மற்றவகையில் டெல்லியின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cevepv8zx94o1 point- "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
தில்லை உங்கள் துயரில் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு விருப்பமிருந்தால் அடுத்த நினைவுநாளை இங்கு நினைவஞ்சலி பகுதியில் இணைத்து விடலாம்.1 point- "தளிராடும் தூறலில்"
1 pointநித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ1 point- யாழில் உணவகத்தில் புழு!!
1 pointநானெல்லாம் ஊரிலை இருக்கேக்கை..... பாணுக்குள்ளை வண்டுகள் புழுக்கள் எல்லாத்தையும் கண்டால் லாவகமாக அதை மட்டும் நுள்ளி எறிஞ்சு போட்டு தொடர்ந்து ஒரே வெட்டுத்தான். இதையெல்லாம் வெளியில சொல்லிக்கொண்டே திரிஞ்சனாங்கள்? இதெல்லாம் நோர்மலப்பா....உங்கை சீனக்காரன் புழு பூச்சியள் எல்லாம் சாப்பிடுறாங்கள் தானே? என்ன செத்தே போனாங்கள்? 🤣1 point- குமரி மாவட்டத்தில் 8 பேரை பலி கொண்ட 'கள்ளக்கடல்' சீற்றத்திற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?
இந்த கள்ள கடல் சமீபத்தில் தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது அது என்ன அலை என்று தெரியாமல் மடவளவு போன்ற இணையம்கள் செய்தி போட்டு இருந்தன .1 point- "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
வணக்கம் தில்லை. உங்கள் உள்ளத்தில் இப்படி ஒரு சுமை இருப்பது இதுவரை தெரியாது. சகோதரியை நாங்களும் சுமக்கிறோம்.1 point- "தளிராடும் தூறலில்"
1 point- யாழில் உணவகத்தில் புழு!!
1 pointமூன்று கிழமைக்கு மேல ஊர் போய் நின்று விட்டு, நேற்றுத் தான் திரும்பி வந்தேன். யாழில் சில இடங்களில் 300 ரூபா மரக்கறிச் சாப்பாடு சாப்பிட்டும் இருக்கின்றேன். இது எந்தக் கடை என்று சொன்னீர்கள் என்றால், திருவிழா நாட்களில் மரக்கறி என்று நினைத்து மச்சம் சாப்பிட்டதற்கு மனதார மன்னிப்பு கேட்க வசதியாக இருக்கும். அங்கு கொளுத்திக் கொண்டிருக்கும் வெயிலில், சாப்பாட்டில் புழு இருக்குதா, அசையுதா அல்லது சோற்றுப் பருக்கை அதுவா அசையுதா என்று பேதம் பிரித்து பார்க்கும் பொறுமையையும் இருக்கவில்லை........... என்ன வெயிலும், வெக்கையும்.......புழுக்கள் கூட அடுத்த கொஞ்ச நாட்களுக்கு பதுங்கி வாழ்வது தான் அவைக்கு பாதுகாப்பு.....1 point- ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
எப்பவும் எதிலும் தமிழர்தான் முன்னோடிகள். நாங்கள் தொப்புளில் ஆம்லெட் போட்டு 30 வருடத்துக்கு மேல் ஆக போகுது… இப்ப போய் ஜப்பான்காரன் அக்குளை தூக்கீட்டு வாறன்….அதுவும் செய்தியாகுது🤣1 point- யாழில் உணவகத்தில் புழு!!
1 point- யாழில் உணவகத்தில் புழு!!
1 pointவெள்ளவத்தையில் சிங்களவன் கடை ஒன்றுக்கு சென்று ஆப்பம் சாப்பிட்டு ஆப்பமே வெறுத்து போயிற்று ஐயா. ஆனால் இட்டலியுடன் சிலந்திக்காலை அவிச்சு தந்தது தமிழன் கடைதான்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலைமை: இந்தியா வெளியிட்ட அவசர அறிக்கை
யானைக்கும் அடி சறுக்கும். எனக்கும் யாழில் செய்தியாக வந்தபடியாலேயே விழிப்பாக இருந்தேன். எனக்கு தெரிந்த பலர் போகும்போதும் இப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்று சொல்லி அவர்களையும் செய்ய வைத்தேன். அத்துடன் நான் போனநேரம் ஒரே கட்டணத்தில் 6 மாதகாலம் நிற்கலாம்.எனவே ஒரு மாதத்துக்கு சற்று கூடுதலாகவே நின்று வந்தேன்.1 point- லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
🤣 நிச்சயமாக ஒரு 1ம் உலக நாட்டில் இருந்து, சுற்றுலாவாக அல்லாமல் ஒரு கடமையாக போக வேண்டிய நிர்பந்தத்தில், 15 மணியளவை பிரயாணத்தில் செலவழித்து, இயல்பாகவே சுற்றுலா போவதில் நாட்டமில்லாத ஒருவர், நான்கு நாளைக்கு - இலங்கைக்கு அல்ல, சொர்கத்துகே போயிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்🤣. தவிரவும் எனது கட்டுரையை விளங்கி கொள்ள - இலங்கைக்கு கொவிட்டுக்கு முன்னான வருடங்களில் போன அனுபவம், கொவிட்/அறகளைக்கு பின் நாடு இருந்த நிலமை என்பனவற்றை அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்போதுதாம் 2024 இல் இலங்கை நாம் எதிர்பார்த்த படி மோசமாக இல்லை என எழுதியதை விளங்கி கொள்ளலாம். நீங்கள் இப்போதுதான் கொழும்பு ஏர்போர்ட்டுக்கே முதல் தரம் போனேன் என்கிறீர்கள் - ஆகவே நீங்கள் இலங்கையை “சொர்காபுரி” என நான் சொல்லியதாக தப்பாக விளங்கி, அதனால் ஏமாற்றம் அடைந்துள்ளீர்கள். இதனால்தான் என்ன விசயங்கள் அதிருப்தியாய் இருந்தன என படம் போட்டு விளக்க முடியுமா என கேட்டேன். உங்கள் அதிருப்திக்கான காரணம், தூசு, மாசு, wet-bathrooms/toilets, டாய்லெட் டிசு இல்லை (இன்னொரு திரியில் வெள்ளைகாரர் குறை பட்டதாக எழுதி இருந்தீர்கள்) இந்த வகை 1st world complaints என்றால் - அதற்கும் நான் எழுதியதுக்கும் சம்பந்தமில்லை. அதுதான் இலங்கை கொவிட்டுக்கு முன்பும், பின்பு எப்போதும்.1 point- மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வில் இன்னொரு படிமுறைக்கு போய் விட்டீர்கள்🤣🤣🤣. படு பயங்கர தம்பிகள் கூட இப்படி ஒரு முட்டு கொடுத்ததில்லை🤣. நடுநிலையாளராக காட்டி கொள்ளும் உங்களுக்கு இது புதிசு…கண்ணா….புதிசு. பிகு பொது வெளியில் மூக்கை தோண்டி, திரவியத்தை தூவக்கூடாது என்பது அடிப்படை சுகாதாரம். வேணும் எண்டால் அண்ணனுக்கு ஒரு டிரிம்மர் வாங்கி அனுப்பி விடுங்கள்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஈழத் தமிழர்களின் நலன்களை விற்று தனது நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள எத்தனித்த இந்தியா பண்டாரியுடனான பேச்சுக்களின்போது சில விடயங்கள் குறித்து விளக்கங்களைத் தருமாறு ஜெயார் கோரினார், யுத்த நிறுத்தம் : போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று ஜெயார் கேட்க, போராளிகளைக் கலந்தாலோசிக்கமாலேயே பண்டாரி, போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவு தருவார்கள் என்று உறுதியளித்தார். பேச்சுவார்த்தை : போராளிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என்று உறுதியளிக்க முடியுமா என்று ஜெயார் கேட்டபோது, ஆம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று போராளிகளைக் கேட்காமலேயே உறுதியளித்தார் பண்டாரி. இதன்போது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசுவதில் பயனில்லையென்றும் ஜெயார் கூறியிருந்தார். தில்லி திரும்பியதும் இந்தியாவின் யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டத்தினை போராளிகளுக்கும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் "இரகசிய ஆவணம்" எனும் பெயரில் பண்டாரி அனுப்பி வைத்தார். யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான இந்தியாவின் திட்டம் பின்வருமாறு, கட்டம் ஒன்று : ஆனி 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டியவை அரசாங்கம் செய்ய வேண்டியவை 1. வீதிகளில் வாகனங்கள் ஆட்களையும் பொருட்களையும் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையினை நீக்குதல். 2. புதிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்திவைக்கப்படும். 3. உள்ளூர் அதிகாரிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் முன்னிலையிலேயே இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். 4. கடற்கண்காணிப்பு வலயங்களை நீக்குதலும், இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல். போராளிகள் செய்யவேண்டியவை 1. யுத்த தவிர்ப்பு வலயங்களை தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்துவதை நிறுத்துதல். 2. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கள் மற்றும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 3. வடக்குக் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்திருக்கும் அரச அலுவலகங்கள், பொருளாதார இலக்குகள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 4. யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாட்டிற்கு வெளியே இருந்து ஆட்களையும், ஆயுதங்களையும் கொண்டுவருவதை நிறுத்துதல். கட்டம் இரண்டு : மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை அரசாங்கம் செய்யவேண்டியவை 1. பாதுகாப்புப் படையினர் ஊரடங்கு உத்தரவினை மீளப் பெற்றுக்கொள்வர். போராளிகள் செய்ய வேண்டியவை 1. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ரோந்து அணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 2. இராணுவ முகாம்கள், பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துதல். 3. வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல்களை நடத்துவதை நிறுத்துதல். 4. ஆயுதங்களைக் காவித் திரிவதை நிறுத்துதல். கட்டம் மூன்று: இரண்டு வாரங்களில் செய்யப்பட வேண்டியவை 1. யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடித்தல். 2. மூடப்பட்டிருக்கும் பொலீஸ் நிலையங்களை மீளத் திறத்தல். சட்டம், ஒழுங்கு விடயங்களைப் பொலீஸார் பொறுப்பேற்றுக் கொள்வர். 3. வழக்குப் பதிவின்றி தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். வழக்குப் பதிவுசெய்யப்பட்டவர்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, கலந்தாலோசனைகளின்பின்னர் விடுதலை செய்யப்படுவர். கட்டம் நான்கு (அரசியல்த் தீர்வு எட்டப்படுவதற்கான கால அவகாசம் குறிப்பிடப்படவில்லை) முக்கியமான பிரச்சினைகளில் எட்டப்படவேண்டிய அரசியல்த் தீர்வு குறித்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கம், போராளிகள் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகியோருக்கிடையில் நடைபெறும். இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாவது நாடொன்றில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பேச்சுவார்த்தைகளில் கலந்தாலோசிக்கப்படும் அனைத்து விடயங்களையும், பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளையும் இரகசியமாக வைத்திருக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். யுத்த நிறுத்தமும், பொது மன்னிப்பும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சரியாக மூன்று மாத காலத்திற்குள் அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் இடப்பட்டிருக்க வேண்டும். அரசியல்த் தீர்விற்கான அடித்தளம் இடப்பட்டதும், அரசாங்கத்திற்கும் தமிழர்களின் அரசியல்த் தலைமைக்கும், ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே வெளிப்படையானதும், நேரடியானதுமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். இந்தியாவினால் முன்வைக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை பிரபாகரன் அறிந்துகொண்டபோது கொந்தளித்துப் போனார். தமிழர்களின் நலன்களை விற்று தனது சொந்த நலன்களை இந்தியா பாதுகாத்துக்கொள்ளப் பார்க்கிறது என்று பாலசிங்கத்திடம் அவர் கூறினார். கட்டம் ஒன்று, சரத்து 4 இல், குறிப்பிடப்பட்டிருக்கும், ".....இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் மேலதிகமான ஆயுத தளபாடங்களை வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்வதை நிறுத்துதல்" என்று கோருவதன் மூலம் இந்தியா தனது நலன்களைப் பாதுகாக்க முனைகிறது என்று அவர் கூறினார். இதனூடாக தனது இராணுவத்தினருக்கான பயிற்சிகள் என்கிற பெயரில் வெளிநாட்டு இராணுவ நிபுணர்களையும், கூலிப்படைகளையும் ஜெயவர்த்தன இலங்கைக்குள் கொண்டுவருவதை இந்தியா தடுக்கப்பார்க்கிறது என்று அவர் கூறினார். இதனை அடைந்துகொள்வதற்காக ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இதுவரை காலமும் அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளையும் இந்தியா தாரை வார்க்க விரும்புகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் இந்தச் செயல் மூலம் தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதப் போராட்டத்தினை முற்றாகக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதோடு, தமிழர்களின் ஆயுத வல்லமையினால் மூடப்பட்டிருந்த பொலீஸ் நிலையங்களை அரசாங்கம் மீளவும் திறக்கும் சந்தர்ப்பமும் இந்தியாவால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தமிழ் மக்களின் அரசியல்த் தலைமை என்று இந்தியா குறிப்பிடுவதையும், போராளிகளின் முயற்சியினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்பட்டிருக்கும் தருணத்தில், அவர்களை வெறுமனே ஆயுத அமைப்புக்கள் என்று இந்தியா அழைப்பதையும் பிரபாகரன் விரும்பவில்லை. ஆனால், பிரபாகரன் அதிருப்தியடைந்த இன்னும் இரு விடயங்கள் இருந்தன. இலங்கை இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் பழிவாங்கல்த் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தேவையான சரத்துக்களை தனது ஆலோசனைகளில் சேர்த்துக்கொள்ள இந்தியா தவறியிருந்தது. மேலும், பேச்சுவார்த்தைகளை கால அவகாசமின்றி ஜெயவர்த்தன நீட்டித்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தினையும் இந்தியா தனது ஆலோசனைகள் ஊடாக வழங்கியிருந்தது. ஆகவே, அரசியல்த் தீர்விற்கான பலமான அடித்தளம் ஒன்றினையும், அதனூடான நிரந்தரத் தீர்வையும் இலங்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முன்வைக்கவேண்டும் என்கிற நிபந்தனையினை இந்தியா கோரியிருக்க வேண்டும் என்றும் பிரபாகரன் கருதினார். இந்தியா முன்வைத்திருந்த ஆலோசனைகள் குறித்து பிரபாகரன் தனது அதிருப்திகளைத் தெரிவித்து வந்த நிலையில், லலித் அதுலத் முதலி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயலில் இறங்கினார். இலங்கையரசாங்கம் தனது படைகளை ஆனி 18 இலிருந்து யுத்த நிறுத்ததைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டிருப்பதாக அவர் அறிவித்தார். அவசர அவசரமாக இலங்கையரசாங்கம் யுத்த நிறுத்தத்தினை கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததன் உண்மையான நோக்கம், போராளிகள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை முன்வைப்பதைத் தடுப்பதற்காகத்தான் என்பது இரகசியமல்ல. தேசியப் பாதுகாப்பு அமைச்சின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலி, யுத்த நிறுத்தப் பிரகடணம் இரு தரப்பாலும் ஒன்றிணைந்து வெளியிடப்படப்படும் போது மட்டுமே இரு தரப்பு நிபந்தனைகளும் உள்வாங்கப்பட்டிருக்கும், ஆகவேதான், தன்னிச்சையாக இலங்கையரசாங்கம் இதனை அறிவித்தது, போராளிகளின் நிபந்தனைகளை நாம் இதன்மூலம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றாகிவிடுகிறது என்று கூறினார். "இப்போது அவர்கள் தமது நிபந்தனைகளையும் தூக்கிக்கொண்டு நரகத்திற்குப் போகட்டும் (Let them go to hell with their conditions)" என்று ஆக்ரோஷமாகக் கூறினார் லலித் அதுலத் முதலி. பிரபாகரன் ஆட எண்ணிய ஆட்டத்தில் அவரைத் தோற்கடித்திருந்தார் லலித் அதுலத் முதலி. இதன்மூலம் பிரபாகரனும் ஏனைய போராளித் தலைவர்களும் யுத்த நிறுத்தத்தினை நிபந்தனியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. எனது அறிவிற்கு எட்டிய வகையில், லலித் அதுலத் முதலி பிரபாகரனை வெற்றி கொண்டது இந்தத் தருணத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். வடமாராட்சியில் இலங்கையரசால் நடத்தப்பட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையின்போது கூட , தனது போராளிகளையும், ஆயுத தளபாடங்களையும் சேதமின்றி வன்னிக்குப் பிரபாகரன் நகர்த்தியிருந்தபோதும், அதுலத் முதலியும், அவரது தலைவரான ஜெயவர்த்தனவும் அதிர்ந்து போகும்வகையில் நெல்லியடி மத்திய கல்லூரி மீது பாரிய குண்டுத்தாக்குதல் ஒன்றினை பிரபாகரன் வெற்றிகரமாக நடத்தியிருந்தார். ஆனி 18 ஆம் திகதி காலை, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் யுத்த நிறுத்தம் குறித்து முடிவெடுக்க மீளவும் ஒன்றுகூடினார்கள்.1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஇந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர். ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். ரஜீவுடன் சிதம்பரம் பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்". "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன், 1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது. 2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும். 3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும். 4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்" என்கிற பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார்.1 point- "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண்டு களித்து அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?" "கண்மணியே எம் குடும்ப தலைவியே கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?" "கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே கண்காணாத உலகம் சென்றது நீதியோ?" "அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல் அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல் அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல் அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?" "ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம் ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]0 points- "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
நன்றி இறப்பு ஒரு திடீர் சம்பவம். வேலைக்கு போனவர் மதியம் அளவில் மயங்கி விழுந்து வைத்தியசாகையில் உடனடியாக கொண்டுபோய் ஆனால் அன்றே விடியப்பறம் 4 மணி அளவில் 'இனி நான் சாகிறேன்' என்ற கடைசி வார்த்தையுடன் எம்மை விட்டு பிரிந்தார். [08 / 06/ 2007] அவரின் இரத்தம் முழுவதும் நஞ்சாகி விட்டது. கொரோனா மாதிரி ஒரு தொற்று நோய். பாக்டீரியாவால் பரவுவது எல்லா இயக்கமும் உடனடியாக நின்றுவிட்டது. Meningitis அதன் பெயர். மூச்சு / தொடுதல் … இப்படி பரவுவது. அப்பொழுது பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.0 points - உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.