Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    10209
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46783
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/09/24 in all areas

  1. மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1 March 6, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன. “சிலோன் நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் கோப்பிப் பயிர்ச் செய்கையானது உண்மையிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோற்றப்பாடாக உள்ளது. இந்தத் தீவில் இத்தகைய நிலமைகளை முன்னர் கண்டிருக்க முடியாது. சிங்கள மக்களின் நம்பிக்கையின் படி பூதங்களே மனித குலத்துக்காக இவற்றை உருவாக்கி இருக்கக்கூடும்” -Ceylon Miscellany 1866- “தேயிலை வளருகின்ற இடங்கள்; அது மலைகளாக இருக்கலாம் அல்லது பள்ளத்தாக்குகளாக இருக்கலாம். அவை புனிதமானவையாகும்.” -Drinking of Tea : Rules of Health, Japan. (12th century)- இருநூறு வருடங்களுக்கு மேற்பட்ட மலையக மக்களின் வரலாறு தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதுவே உண்மையானதாக அமையும். இந்தியாவிலிருந்த இடம் பெயரத் தொடங்கிய காலம் முதல் இன்று தனது வாழிடம் மற்றும் தொழில்சார் உரிமைகள் தொடர்பாக றம்பொடை தோட்ட மக்கள் (புஸ்ஸல்லாவ) முன்னெடுக்கும் போராட்டம் வரை இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் அனைத்தும் சமூக விஞ்ஞான அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அயராத உழைப்பு, தொழிற் சங்கங்கள் அமைப்பதற்கான முயற்சிகள், மக்கள் எழுச்சி, வேலை நிறுத்தங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உயிர்த் தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மலையக வரலாற்றைப் படைத்தளித்த உழைப்பாளர் சார்பாக, அவர்களின் எதிர்கால நன்மைக்காக ஆராயப்பட வேண்டும். வெளிக் கொணரப்படும் விடயங்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதோடு அதனூடாக நாட்டில் சமமாக வாழ்வதற்குரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதாக உள்ளது. போராட்ட வரலாற்றைக் கற்றல் என்பது சுயலாபத்திற்காகவன்றி அல்லது மனனஞ் செய்யும் கல்வி நடவடிக்கைகளிற்காகவன்றி மக்கள்சார் செயலுக்கான தூண்டுதலாக அமைய வேண்டும். இந்த நாட்டினை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்திலும், உள்ளூர் ஆட்சியாளர்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்ட பின்னரும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் பேரினவாத அடிப்படையிலும், முதலாளித்துவ அணுகுமுறையின் அடிப்படையிலும் ஈவிரக்கமின்றிய சுரண்டலை முன்னெடுத்த முறைகள் தொடர்பிலும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விரிவான தேடல்களை முன்னெடுப்பது கட்டாயமானதாக அமைகின்றது. இதைவிட மலையக மக்களை ஒன்றிணையவிடாது செயற்படுகின்ற மக்கள் விரோத அரசியல், தொழிற்சங்கச் செயற்பாடுகள், மற்றும் ‘துர்நாற்றத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளத் தூண்டுகின்ற’ அரச சார்பற்ற நிறுவனங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். முதலாளித்துவ ஆட்சி முறை, தாராளவாதம், தனியார்மயம், பேரினவாதம், அடக்குமுறைச் சட்டங்கள் போன்றன எவ்வாறு இந்த நாட்டின் தொழிலாளர், விவசாயிகள், கீழ் மத்திய தர வர்க்கத்தினரை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுக்கின்றன என்பதையும் இவர்களை ஒன்றிணையவிடாது தடுத்து நிற்கின்றன என்பதையும் சரியாக விளங்கிக் கொள்வதன் மூலமே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் நலனுக்காக உழைத்த மலையகத் தொழிலாளர்கள் தமது போராட்ட வரலாற்றையும் ஒற்றுமையின் மூலமாக வெற்றி கொண்ட உரிமைகள் பற்றியும் ஆழமாக விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே எதிர்காலப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும். மலையக மக்களின் வரலாற்றை கற்பதற்குரிய வாய்ப்புகள் வரையறைக்குட்பட்டதாகவே காணப்படுகின்றன. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. மேலும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்கள், தோட்டங்களின் அழகு – இயற்கைக் காட்சிகள் – துரைமாரின் வாழ்க்கை பற்றியே அதிகம் பேசுகின்றன. மனிதர் அண்டாத பகுதியை வளமுள்ள பணத்தினை அள்ளித் தருகின்ற பசுஞ் சோலைகளாக மாற்றிய தொழிலாளர்கள், அவர்களது தொடர்ச்சியான போராட்டங்கள், உயிர் தியாகங்கள் போன்றன குறித்த பதிவுகள் குறைவானாகவே காணப்படுகின்றன. அவற்றை மீளவும் தேடித் தொகுப்பது காலத்தின் தேவையாகும். தனது சமூக வரலாற்றை மறந்த இனம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. மானுட வரலாறையும் உலக வரலாறையும் ஆழமாகக் கற்கும் அதே வேளையில் இலங்கையின் வரலாற்றையும் மலையக மக்களின் வரலாற்றையும் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகிக் கற்க வேண்டும். ஆனால் எமது கலைத்திட்டங்களில் மலையக மக்களின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதிலும் பேரினவாதமும் மதவாதமும் மேலோங்கிக் காணப்படுகின்றது. வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் பணிகளில் ஈடுபடுவோர், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் போன்றோர் மலையக மக்களின் வரலாற்றை மாணவர்கள் கற்பதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு கலை நுட்பங்களின் மூலமாக உழைக்கும் மக்களுக்கு வரலாறு குறித்த புரிதலை ஏற்படுத்துதல் முக்கியமான பணியாக அமைகிறது. மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வரையறை செய்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை பெரிதும் பயன்படும். இந்தக் கட்டுரையானது மலையக மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்தும் அதற்கெதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்வதற்கான அடிப்படைகளை உள்ளடக்கி உள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி ஆய்வு செய்வதும், கற்றுக் கொண்டவற்றை பல்வேறு செயல்நுட்பங்களின் அடிப்படையில் மக்களிடம் கொண்டு செல்வதும் மிகவும் பயனள்ளதாக அமையும். இடம்பெயர்ந்து வருவதற்கு முன்னர், இந்தியாவில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சி தொடங்கும் காலத்தில், நிலபிரபுத்துவ சமூகத்தின் ஒடுக்கு முறை பரவலாகக் காணப்பட்டது. நிலமற்ற விவசாயிகள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதேவேளையில் காலனித்துவ ஆட்சி வளச்சுரண்டலையும் இலாப நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையால் விவசாயம், கிராமியக் கைத்தொழில் போன்றன வீழ்ச்சியடைந்தன. வறுமை, பஞ்சம், கொள்ளை நோய்கள், சாதிய அடக்குமுறைகள் மென்மேலும் அதிகரித்தன. 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனி பலமுள்ளதாக இருந்தது. அதன்மூலம், பல்வேறு உடன்படிக்கைகள் ஆங்கிலேயருக்குச் சார்பாக மேற்கொள்ளப்பட்பட்டன. மதராஸ், ஆங்கிலக் கம்பனியின் மையமாக இருந்தது. கல்கத்தா நகரத்தில் அமைக்கப்பட்ட வில்லியம் கோட்டை காலனித்துவத்தின் செயல் மையமாக விரிவுபடுத்தப்பட்டது. தென் இந்தியாவுக்கான திறவு கோல் என்று அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி கோட்டை இன்னுமொரு நிலையமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தாலும் படைத்துறை ஒப்பந்தங்கள் மூலமாக மக்களை அடக்கும், அடிமைப்படுத்தும் நடவடிக்கைள் இலகுவாக்கப்பட்டன. இராணுவ மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டங்கள், அடக்குமுறை நடவடிக்கைகள் மூலமாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காலனித்துவ ஆட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆங்கிலேயர் இந்தியாவை முழுமையாக தமது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்த போது பொருளாதார நிலை மிகவும் சீரழிந்து காணப்பட்டது. அதேவேளை இங்கிலாந்து ஆட்சி முறை முதலாளித்துவத்தின் கோர முகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கான பொருளாதார அணுகுமுறை இந்திய மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக வறுமை தாண்டவமாடத் தொடங்கியது. நிலவரி முறைகள், குத்தகைப் பணம் என்பன காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஏழை விவசாயிகள் செத்து மடிய நேரிட்டது. பல இடங்களில் ஜமீந்தாருக்கு எதிரான போராட்டங்கள் இடம் பெற்றன. ஜமீந்தார்கள் விரட்டப்பட்டனர். எனினும் அத்தகைய நிலங்களை கிழக்கிந்திய கம்பனியே பெற்றுக் கொண்டது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ ஆட்சி முறை ஏற்படுத்திய சமூகப் பொருளாதார விளைவுகள் வறுமை நிலையையும் மரணத்தையும் அதிகரித்துச் சென்றன. வறட்சியும் குடிநீர் இன்மையும் இவற்றை மேலும் தீவிரப்படுத்தின. இலஞ்சமும் ஊழலும் நிறைந்த நீதிமன்ற முறையானது பிரித்தானியச் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் சாதகமாக அமைந்தது. புதிதாக ஆக்கப்பட்ட சட்டங்களும் விதிகளும் அடிமை முறையை பலப்படுத்துவனவாகவே அமைந்தன. இத்தகைய சூழலில் கண்டிச் சீமை (சிலோன்), பினாங்கு, பிஜி, மொரிசியஸ் போன்ற இடங்களுக்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற வதந்திகள் கிராமங்களில் பரவத் தொடங்கியது. கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொய்யும், ஏமாற்றும் மக்களை கிராமங்களிலிருந்து வெளியே தள்ளியது. சென்றவர்கள் திரும்பி வராத காரணத்தால் உண்மை நிலை என்ன என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சியாம் இரயில் பாதையை அமைக்கும் பொருட்டு பலியான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் இந்தியக் கிராமங்களை சென்று சேராததைப் போல கண்டிச் சீமையிலும், மலேசியாவிலும், பிஜி தீவுகளிலும், மொரிசியசிலும் எதிர் நோக்கிய துன்பங்களும், அடக்குமுறைகளும் கிராம மக்களால் விளங்கிக்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலையானது ஆங்கிலேயத் துரைமார்களுக்கும் ‘ஆள் கட்டப் புறப்பட்ட’ கங்காணிகளுக்கும் வாய்ப்பாகப் போய்விட்டது. நாசுக்காகப் பேசி ‘ஆள் கட்டும்’ கங்காணிகளுக்கு வழங்கப்பட்ட பணமும் பொய் வாக்குறுதிகளும் வறுமை நிலையிலிருந்த மக்களை கிராமங்களிலிருந்து வேகமாகத் தள்ளிக் கொண்டு போனது. வாக்குறுதிகளை நம்பிச் சென்றவர்கள் மீளாத நிலை இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதற்குக் காரணமாகியது. ‘தேயிலைச் செடிக்குள் தேங்காயும் மாசியும்’ கிடைக்கும் என நம்பி வந்தனர் என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதையே ஆகும். நேர்வழியில் உழைத்தால் தேங்காயையும் மாசியையும் வாங்கி உண்ணலாம் என்ற நம்பிக்கையே இவர்களை இடம் பெயரச் செய்தது என்பதே உண்மையான வரலாறாகும். இன்றைய சூழலில் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என்று நம்பிச் சென்று பிணமாகத் திரும்புவோரையும், காணாமல் போவோரையும், அதேவேளை அங்கு சென்று உழைப்பதற்காக ‘ஏஜென்சி’ மற்றும் ‘விசா’ காரியாலயங்களில் வரிசையில் காத்திருப்போரையும் நன்கு அவதானித்தால் அக்காலத்தின் நிலமைகளை இலகுவில் புரிந்துக் கொள்ள முடியும். பயணத்தின் போது முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் இலாபமீட்டுவதற்காக எதையும் செய்வதற்கு தயாராக இருந்தமையை உலக வரலாற்றைக் கற்பதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக கண்டிச் சீமைக்கான பயணத்தைக் குறித்துக் காட்ட முடியும். அந்த வகையில் இந்தியக் கிராமங்களில் தொடங்கிய பயணம் முதலில் திருச்சி, துறையூர், சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, அறந்தாங்கி, தஞ்சாவூர், விழுப்புரம், அரக்கோணம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ‘ஏஜென்சி ஆபிசுகளை’ அடைந்தது. பல்வேறு பொய்களைக் கூறி ‘ஆள் கட்டும்’ இடங்களாக அவை செயற்பட்டன. ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டவதற்காக ஆங்கிலத் துரைமார்கள் வழங்கிய பணத்தின் பெறுமதியை கங்காணிகளின் சிரித்த முகங்களும், ‘தங்கப் பற்களும்’ வெளிப்படுத்தின. அந்த நிலையங்களிலிருந்து இராமேஸ்வரம் கரையை அடையும் வரை பல நூறு கிலோ மீற்றர் தூரம் கால் நடையாகவே பயணித்த வரலாற்றை காலனித்துவ அடக்குமுறையினால் விளைந்த துன்பத்தின் இன்னுமொரு விளைவாகவே அடையாளங்காட்ட முடியும். எல்லாவிதமான துன்பங்களையும் தாங்கிக் கொண்டு கண்டிச் சீமையை அடைந்து விட்டால் இன்பமாக வாழலாம் என்ற உந்துதலே முக்கிய சக்தியானது. வரிசையாகப் பயணித்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வறுமையின் அடையாளமாக தலைகளில் வைக்கப்பட்ட சிறு மூட்டையும் கங்காணிகளின் ஏச்சும், உரத்த சத்தங்களும் ஒரு மனித பேரவலத்தின் சாட்சியமாகவே அமைந்தன. அத்தனை துன்பங்களை எதிர்கொண்டமையையும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தமையையும் வாழ்க்கைக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அடையளங்காணலாம். உயிர்வாழ போராடுதல் என்பதே இதன் அடிப்படையாகும். கரையைக் கடத்தலும் இறங்குதலும் கப்பல் மற்றும் படகுகள் மூலமான பயணமானது மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தின் உச்சத்தைத் தொட்டுச் செல்லும் சான்றுகளாகும். சிறு கப்பல்கள் மூலமான பயணம் புதிய அனுபவமாகவும், அச்சம் தரும் நிகழ்வாகவும் அமைந்து விட்டது. வாந்தியும் வயிற்றோட்டமும், ஒத்துவராத பயண நிலமைகளும், உயர்ந்து எழும் கடலலைகளின் காரணமாக ஏற்பட்ட பீதியும், குளிர் நடுக்கமும், கடல் நீரின் சாரலும் இவற்றால் ஏற்பட்ட விளைவுகளும் உழைக்கும் மக்கள் மீதான பாரிய அடக்குமுறைகளே. அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றியதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் மிகச் சரியான வகையில் இடம்பெறவில்லை. அவை தொடர்பான செய்திகளும் குறைவாகவே காணப்படுகின்றன. தொழிலாளர்களில் சில ஆயிரம் பேர் விபத்துகளால் பலியாகும் சம்பவங்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே அமைவதில்லை. அவர்களுக்கு இலாபமீட்டல் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் என்பதற்கு மலையகத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் சியாம் இரயில் பாதையை அமைப்பதற்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் மரணங்களையும் சிறந்த உதாரணங்களாகச் சுட்டிக்காட்ட முடியும். ஆதிலட்சுமி என்ற படகு மன்னார் வங்காலையிலிருந்து ஏறத்தாழ 150 டொன் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பயணித்த போது கடலில் மூழ்கிய சம்பவத்தை வரலாறு பதிவு செய்கிறது. 05.02.1864 அன்று அப்படகு கடலில் மூழ்கிய வேளையில் அதில் பயணித்த 120 தொழிலாளர்களில் 14 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக செய்தி எழுதப்பட்டுள்ளது. அதே போல ‘சாரா ஆர்மி டேஜ்’ என்ற சிறு கப்பல் சிலாபத்துக்கு அருகில் சீறி எழுந்த பேரலையில் சிக்குண்டு மூழ்கியதில் 560 தொழிலாளர்கள் உயிரிழந்தமையை அக்காலத்தின் ஆளுநர் ஹென்றி வார்டின் பதிவு செய்துள்ளார். தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலிலும் கடுமையான போராட்டத்துடன் பயணித்து சிலோனை வந்தடைந்த தொழிலாளர்களின் வரலாறு, அடிப்படையில் போராட்டங்கள் நிறைந்தவை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். மன்னாரிலிருந்து மலையகத்திற்கு மன்னாரில் வந்திறங்கிய தொழிலாளர்களுக்கு இலங்கையை ஆட்சி செய்த காலனித்துவ முதலாளிகளின் நிருவாகத்தில் மென்மேலும் துன்பங்களே வந்து சேர்ந்தன. மன்னாரிலிருந்து ஏறத்தாழ 250 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாகவே நடந்து வந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். அடர்ந்த வன்னிக் காட்டைக் கடந்து அனுராதபுரம், மாத்தளையைக் கடந்து கண்டிச் சீமையை அடைந்த வரலாறு உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் அடுத்த படி நிலையாகும். மன்னாரிலிருந்து கொழும்பிற்கு சிறு கப்பல்கள் மூலமாகப் பயணித்து அங்கிருந்து புகையிரதம் மூலமாக கண்டிக்குச் செல்லும் வழி இருந்த போதிலும், போக்குவரத்துக்கான பணம் போதாமை காரணமாகவும், கங்காணிகளின் வட்டிப் பணம் கடனாக மாறும் என்ற காரணத்தாலும் கால்நடைப் பயணத்தையே மலையக மக்கள் மேற்கொண்டனர். கொலரா, மலேரியா, அம்மை போன்ற கொடிய நோய்களின் தாக்கம் காரணமாக வரும் வழியிலேயே பலர் மரணித்தனர். நோய்வாய்ப்பட்டவர்களை காட்டுப் பாதையிலேயே விட்டு வந்த நிகழ்வுகளை கேர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் பதிவு செய்துள்ளார். இதை விட தேள், பாம்பு போன்றனவற்றின் தீண்டுதலுக்குட்பட்டும் பலர் மடிந்தனர். குடிநீர் இன்றிய பயணமும் பசியும் மரண பயமும் உயிர் வாழ்வதற்கான பாரிய போராட்டமாகவே அமைந்தன. கண்டிச் சீமைக்குச் சென்றுவிட்டால் தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை மேலெழுந்து இருந்தமையே இம்மக்கள் போராடியதற்குக் காரணமாகும். ஆரம்ப காலம் பல்வேறுபட்ட இழப்புகளுக்குப் பின்னர் மலையகப் பிரதேசத்தை அடைந்த போது ஆங்கிலத் துரைமார்களினதும் கங்காணிகளினதும் அடக்குமுறையின் புதிய வடிவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. மனிதக் காலடியே படாத காடுகளை அழித்து பசுஞ் சோலைகளை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தனது உயிரையே கொடுத்தனர். உழைப்பின் சாராம்சம், அதன் குவிப்பு மலைகளின் உச்சி வரை விரிந்தது. துரைமார்கள் ஆனந்தம் கொண்டாடக் கூடியதாக அனைத்தும் அமைக்கப்பட்டது. தேயிலை எனும் பச்சைத் தங்கம், இறப்பர் எனும் பால் கொட்டும் மரம் என்பன தன்னலங்கருதாத உழைப்பினால் சாத்தியமானது. ஆங்கிலத் துரைமார்கள் மலையகத்தின் எழிலை இரசித்து எழுதிய அளவுக்கு மக்களின் உழைப்புத் திரட்சியின் விளைவை பதிவு செய்ய முடியாமல் போனதற்கான காரணம் காலனித்துவ மன நிலையும் உழைப்புச் சுரண்டலின் தேவையுமாகும். “ஆங்கில முதலாளிகளால் குறிப்பாக தோட்டத் துரைமார்களால் அடையாளங்காணப்பட்ட பகுதிகள், இது வரை மனித குடியேற்றம் நிகழாத இடங்களாக இருந்தன. அவற்றை தேயிலைத் தோட்டங்களாக உருவாக்கிய கூலிகள் தனித்தன்மை கொண்டவர்களாவர்” எனக் குறிப்பிடுகின்றார் ஹென்றி வில்லியம். இவ்வாறு உருவாக்கப்பட்ட தோட்டங்கள் மூடிய நிலையிலேயே காணப்பட்டன. சகலதும் தோட்டத்துக்குள்ளே எனும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியாதவாறு தோட்ட முகாமைத்துவம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மனிதாபிமானமற்ற, அடக்கு முறை சார்ந்ததாகவே நிருவாக நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் அதிகாலை முதல் மாலை இருள் பரவும் வரை தொடர்ந்து உழைக்கக் கூடிய வகையில் தோட்ட நிருவாகம் ஒழுங்கமைக்கப்பட்டது. தொழிலாளர்கள் வாழும் லயன் அறைகள், தொழில்முறை யாவும் அடக்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகளுக்குத் துணை புரிவனவாகவே அமைக்கப்பட்டன. வாழ்வதற்குப் பொருத்தமற்ற வீடுகள், சாதிய அடிப்படையிலான குடியிருப்புகள், உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வெள்ளைக்காரன் பங்களா, ‘ஸ்டோர்’ நிருவாகிகளுக்கு அமைக்கப்பட்ட வீடுகள் போன்றனவற்றைச் அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். குறைவான கூலியை வழங்கியதன் மூலம் தொழிலாளர்களைக் கடன் நிலையிலேயே வைத்திருந்தமை தோட்டங்களை விட்டு வெளியேற முடியாத சூழலை ஏற்படுத்தியது. கங்காணியினதும் துரைமார்களினதும் அடக்குமுறைக்குச் சாதகமாகவே, வழங்கப்பட்ட கூலியும் அமைந்திருந்தது. கங்காணிக்கு உரித்தான கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியமை, பிழையான கணக்கு விபரங்கள் போன்றன கடன் சுமையை மேலும் இறுக்கியது. துண்டு முறையும் பற்றுச் சீட்டும் தொழிலாளர்களை தோட்டத்துக்குள்ளேயே அடக்கி வைத்தன. வெளியேற முயன்றவர்கள் கங்காணிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். அடிமை முறையைப் பேணக்கூடியதாகவே சகல நடவடிக்கைளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக நாளாந்த வாழ்வில் பல துன்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. நிருவாகத்திற்கு எதிரானவர்கள் ‘பற்றுச் சீட்டின்றி’ வெளியேற்றப்பட்டனர்; தாக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தமது கோபத்தை, வெறுப்பினைக் காட்டக் கூடியதாக மலைகளெங்கும் சாமிகளை உருவாக்கிக் கொண்டனர். அத்தகைய சாமிகளுக்கு சிவப்புப் பட்டு அல்லது துணியைக் கட்டியிருந்தனர். ‘நாசமா போக…அவன் வீட்டுல எழவு விழுக….கடவுளே நீ இருந்தா பார்த்துக்க’ என மண்ணை வாரி இறைத்துச் சாபமிட எவ்வித தடையும் இருக்கவில்லை. ஆனால் இந்த அடிமை முறை வாழ்வு நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை. தொழிற் சங்கம் என்ற சக்தி அவர்களை ஒன்று திரட்டியது. போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலெடுக்க வழி ஏற்பட்டது. வாழ்வதற்கான போராட்டம் என்பது தொழில் உரிமைக்கான போராட்டங்களாக வளர்ச்சி பெற்றமையானது தியாகங்களின் அறுவடையே எனத் துணியலாம். தொழிற்சங்கப் போராட்டங்கள் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நீடித்த அடக்குமுறையுடன் கூடிய அடிமை முறை வாழ்வை மாற்றியமைப்பதில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பெரிதும் பங்களித்தன. தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு தொழிலாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாரிய சவாலுக்குரியதாகவே காணப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை துரைமார்களும் கங்காணிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர்களின் ஒருங்கிணைவு, பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என்பதையும் தோட்ட நிருவாகம் நன்கு அறிந்திருந்தது. ரஷ்யப் புரட்சியின் விளைவுகளும் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் இயக்கச் செயற்பாடுகளும் தோட்டத்து ராஜாக்களுக்கு பல எச்சரிக்கைகளை ஏற்கனவே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவதற்கான முக்கிய சக்தியாக தொழிற்சங்கம் காணப்பட்டது. தொழிற்சங்கங்கள் தொடர்பான விளக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் தேசபக்தன் கோ. நடேசையர் முக்கிய பங்கினை வகித்தார். 1905 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது. ‘தேசபக்தன்’ கோ. நடேசையர், இந்தியாவின் குஜராத் எனுமிடத்தில் பிறந்த மணிலால் மங்கன்லால் (28.07.1881 – 08.01.1956) எனும் தேசியவாதி, பொதுவுடைமைச் செயற்பாட்டாளனின் கருத்து மற்றும் நடவடிக்கைகளினால் கவரப்பட்டவராக இருந்தார். மணிலால் அவர்களால் வெளியிடப்பட்ட வாராந்தரப் பத்திரிகையான இந்துஸ்தானி தனிநபர் சுதந்திரம், ஒன்றிணையும் உரிமை மற்றும் இனங்களுக்குமான சமத்துவம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. மணிலால் 1907 முதல் 1910 வரையிலான காலப்குதியில் மொறிசியஸ் நாட்டில் சட்டத்துறை சார்ந்த கடமைகளை முன்னெடுத்தார். அந்த நாட்டில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கான அடிப்படைகளை வழங்கி இருந்தார். அவரது போராட்ட அரசியல் செயற்பாடுகள் காரணமாக பிஜி நாடு அவரை அங்கிருந்து வெளியேற்றியது. அவர் இலங்கையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை நேரடியாகக் கண்டறிந்தார். நடேசையர் அவர்களும் அவரது மனைவியான மீனாட்சியம்மாள் அவர்களும் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் தொழிற்சங்கத்தை அமைத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மணிலால் பெரிதும் உதவினார். எனினும் மணிலால் சிலோனில் தங்கியிருக்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கவில்லை. ஆரம்ப காலங்களில் தொழிற்சங்கங்களை அமைப்பது என்பது இலகுவானதாக அமையவில்லை. வெள்ளைக்காரத் துரைமார் மற்றும் கங்காணிகளின் கண்டிப்பு, நோட்டம் விடுதல், கருங்காலிகளைப் பயன்படுத்துதல், காவல்காரனைப் பயன்படுத்துதல், பேச்சுக் கொடுத்துப் பார்த்தல் என பல உத்திகளைப் பயன்படுத்தி தொழிற் சங்கம் பற்றி கதைப்போரை கண்டறிதல், தோட்டத்தை விட்டு பற்றுச்சீட்டில்லாமல் வெளியேற்றல், கட்டி வைத்து அடித்தல், பொலிஸ்காரர்களின் ஒத்துழைப்புடன் அடக்குமுறையை முன்னெடுத்தல், காயப்படுத்துதல், காவலில் வைத்தல், சிறைக்கு அனுப்புதல், சுட்டுக் கொல்லுதல் என நீண்டது அடக்குமுறை. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து துன்பங்களை ஏற்று தொழிற் சங்கத்தை அமைத்த தொழிலாளர்களின் போராட்ட வல்லமை இறுதியில் வெற்றியடைந்தது. இரகசியச் சந்திப்பு, இரவில் கூடுதல், வேலைத்தலத்தில் கதைத்தல் போன்ற நுட்பங்களை அவர்கள் கண்டறிந்தனர். தோட்டத் துரைமார்கள், கங்காணிகள், காட்டிக் கொடுப்போர் ஆகியவர்களோடு பொலிசும் இணைந்து எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் தொழிற்சங்கம் அமைப்பதில் தொழிலாளர் வெற்றி பெற்றமை போராட்ட வரலாற்றில் உச்சம் தொட்ட நிகழ்வு எனக் குறிப்பிடலாம். தொழிற் சங்கங்களை அமைப்பதற்கான போராட்டங்கள் தொழிலாளர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறையாக தொழிற்சங்க இயக்கம் அமைந்தது. தனியாகவும் கூட்டாகவும் செயற்பட்டதன் விளைவாக தொழிற்சங்க நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டன. இலங்கை இந்தியன் காங்கிரஸ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடிச் சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இவ்வகையில் தோற்றுவிக்கப்பட்டவையே ஆகும். கம்பனித் தோட்டங்களில் தொழிற்சங்கங்களை ஆரம்பிப்பதை விட தனியார் தோட்டங்களில் தாபிப்பது பெரும் சவாலுக்குரியதாக இருந்தது. தோட்டச் சொந்தக்காரனும் பொலிசாரும் இணைந்து தொழிற் சங்கங்களுக்கு எதிராக செயற்பட்டதன் விளைவு பல தொழிலாளர்கள் காயப்படுவதற்கும், உயிரிழப்பதற்கும் காரணமாக அமைந்தன. தோட்டங்களுக்கு அருகில் காணப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இனவாதக் காடையர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை தாக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கொட்டியாகலை தோட்டத்தில் 1939 ஆம் ஆண்டில் இடம் பெற்ற போராட்டம் முக்கியமானதாகும். மது விற்பனை மற்றும் சூது விளையாட்டு ஆகியவற்றுக்கெதிராக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெள்ளைக்காரத் துரையால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக பல அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறுதியில் தொழிலாளர் வெற்றியடைந்தனர். பிற்காலத்தில் தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பினை இப்போராட்டம் பெற்றுக் கொடுத்தது. அக்காலத்து தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய ஜிம்சன் பின், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்தியத் தொழிலாளர் முன்னெடுத்த முக்கியப் போராட்டமாகவும் பிற்காலத்தில் பல வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு வித்திட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதே காலத்தில் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்ட பி.என். பேங்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதை நடேசன் எஸ். (1993) தனது நூலில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார். “பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக தொழிலாளர்கள் அரசியல் சிந்தனையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் தற்போதைய வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியன தொடர்பில் திருப்தியாக இல்லை. அதன் காரணமாக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். தோட்டத் துரைமார்கள் இத்தகைய போராட்டக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுள்ளனர். ஆகவே பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.” பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன என்பதை இதன் மூலமாக அறிய முடிகின்றது. கண்டி, நுவரெலியாப் பகுதிகளில் தொழிற்சங்கம் அமைக்கும் போராட்டம் வெற்றி அடைந்தாலும் இரத்தினபுரிப் பகுதியில் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது கடினமாகவே இருந்தது. 1945 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்த குட்டிப்பிள்ளை எனும் பெயருடைய செயற்பாட்டாளனின் முயற்சியால் மயிலிட்டியா தோட்டதில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. பல்வேறு அடக்குமுறைகளை வெற்றி கொண்ட எண்ணூறு தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கத்தவர் ஆனார்கள். தொழிலாளர் போர்க்குணம் வெற்றியடைந்தது. 1953 ஆம் ஆண்டு சாமிமலைப் பகுதியைச் சேர்ந்த மீரியாகோட்டை தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டத்தில் தோட்ட முதலாளிக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் பதினேழு தொழிலாளர்கள் காயமடைந்ததோடு பி. வெள்ளையன் என்ற தொழிலாளி மரணமானார். அவ்வாறே 1957 ஆம் ஆண்டு தொழிற்சங்க காரியாலயம் ஒன்றை உடபுசல்லாவ நகரில் அமைப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொம்பாடி மற்றும் பொன்னையா ஆகிய இரு தொழிலாளர்கள் தியாகி ஆனார்கள். இந்த தொழிற்சங்க காரியாலயத்தை அமைப்பதற்கு எதிராக நகர வர்த்தகர்களும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர் போராட்டத்தின் மூலமாக தொழிற்சங்க காரியாலயம் அமைக்கும் உரிமையும் வென்றெடுக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு நாவலப்பிட்டிக்கு அருகிலுள்ள மொன்டிசிரஸ்டோ தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்ட போது ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் கிராமத்தைச் சேர்ந்த காடையர்களால் தாக்கப்பட்டனர். தொழிற்சங்கத்தை கட்டி எழுப்புவதற்கு பெரும் தடையாக இருந்த தோட்டத் துரைமார்கள் மற்றும் முதலாளிகள் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உதாரணமாக, பத்தனை டெவன் தோட்டத்தில், தொழிலாளர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்த போது தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். மு. வைத்திலிங்கம் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்டார். தோட்டத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சுகயீனம் அடைகின்றபோது, விபத்துகளை சந்திக்கும் போது, அல்லது கரப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது, வாகனம் கோரிப் பெறுவது என்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதற்கான அனுமதி பெறுவது, போக்குவரத்துப் பாதைகள் முறையாக இல்லாமை, இனவாதம் போன்ற காரணங்களால் உரிய வேளைக்கு வைத்தியசாலைக்குச் செல்லாமையினால் பலர் உயிரிழந்துள்ளனர். தோட்ட வைத்தியசாலைகளிலும் முறையான மருத்துவ உதவியைப் பெற முடியாது. வாகன வசதியைப் பெறுவதற்குக் கூட பாரிய போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். பதுளை, குயினஸ்டவுன் நகருக்கு அண்மையிலுள்ள சினாக்கொல்லை தோட்டத்தில் 1970 ஆம் ஆண்டு இதற்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் தொண்ணூறு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை அடக்குவதற்கு வழமை போல பொலிஸ் உதவி கோரப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் லெட்சுமண் அழகர் மற்றும் பெருமாள் இராமையா ஆகியோர் உயிரிழந்தனர். பாரிய போராட்டம் வெடித்தது. தொழிலாளர் போராடி வென்றனர். ஆரம்ப காலத்தில் தொழிங்சங்கங்கள் தொழிலாளர் சார்பாக செயற்பட்ட போதிலும் 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்தப் போக்கிலிருந்து நழுவிச் சென்றமையைக் காண முடியும். அவை தொழிலாளர் ஒற்றுமையைச் சிதைத்ததோடு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட போக்கும் பதிவாகி உள்ளது. 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய அப்துல் அசீஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார். இவ்விரு தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக பல மோதல்கள் இடம் பெற்றுள்ளன. ஐக்கியத்துக்காகப் போராட வேண்டிய தலைமைத்துவம், தொழிலாளர்களிடையே முரண்பாடுகளை விதைத்த வரலாறு இன்று வரை தொடர்வதைக் காணலாம். தொழிற்சங்கப் பலம், தொழிலாளர் நலன், உரிமைகளுக்காகப் போராடுதல், ஐக்கியத்தை வலுப்படுத்தல் போன்ற மகோன்னதமான தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட்ட தொழிற்சங்கங்களை இன்றும் காண முடியும். மலையகச் சமூகம் தனது அடையாளத்தை வென்றெடுக்க முடியாமல் இருப்பதற்கும் தொழிங்சங்க உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து மேம்படுத்திக்கொள்ள முடியாமல் வலுவிழந்து நிற்பதற்கும் இத்தகைய பிற்போக்குத் தொழிற்சங்கங்களே காரணமாகும். 1956 ஆம் ஆண்டு மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த நல்லதண்ணி தோட்டத்தில் தொழிற்சங்க மோதல் காரணமாக நாற்பது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்னர். தோட்ட நிருவாகத்தின் கையாட்களால் இளம் தொழிலாளி பெ. கருமலை என்பவர் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த தொழிற்சங்க மோதல் காரணமாக இருபத்து மூன்று வயது நிரம்பிய அப்புஹாமி ஏப்ரகாம் சிங்கோ எனும் பெயருடைய தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கம் மட்டும் என்ற நிலையை மாற்றி தொழிலாளர்களின் தெரிவுக்கேற்ப மாற்றுத் தொழிற்சங்கத்தையும் அமைக்கலாம் என்ற உரிமை இந்தப் போராட்டத்தின் மூலமாக வெற்றி கொள்ளப்பட்டது. தோட்டத் துரைமார்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாகவும் தொழிலாளரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நிருவாகத்திற்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதன் மூலமாக தொழிலாளரிடையே காணப்படும் ஒற்றுமையைக் குலைக்க மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 1959 ஆம் ஆண்டு மாத்தளை எல்கடுவ தோட்டத்து தொழிலாளி காலக்கார முத்துசாமி கொலை செய்யப்பட்டார். அதே பகுதியில் 1964 ஆம் ஆண்டு கந்தே நுவர தோட்டத்தில் நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட பிற்போக்குத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அழகர் மற்றும் ரெங்கசாமி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். செங்கொடிச் சங்கத்துக்கு எதிராக, நிருவாகமும் மக்கள் விரோதத் தொழிற்சங்கமும் செயற்பட்ட போதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கொடிச் சங்கத்தையே ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துரைமார் மற்றும் பொலிஸார் இணைந்து தொழிலாளருக்கு எதிராகச் செயற்பட்டது போல தோட்டத்தில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை, கண்டாக்கு, தொழிற்சாலைக் காவல்காரன் போன்ற ‘சிறு துரைமார்’களின் கெடுபிடி காரணமாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1967 ஆம் ஆண்டு மடுல்கலை சின்ன கிளாப்போக்கு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் அழகன் சோணை என்ற தொழிலாளி கணக்குப்பிள்ளையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், மயிலிட்டியா தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது தொழிற்சாலை காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் அந்தோனிசாமி எனும் தொழிலாளி தியாகி ஆனதும், 1970 ஆம் ஆண்டில் மாத்தளை கருங்காலி (நாளந்தா) தோட்டத்தில் காவல்காரன் சுட்டதில் மரணமான பார்வதி (18 வயது), கந்தையா, இராமசாமி என்ற சிறுவன் ஆகியோர் மரணமானதும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். தொடரும். https://ezhunaonline.com/compilation/trade-union-movement-in-upcountry-sri-lanka-part1/
  2. குறிச்சி என்பது? நீலாம்பிகை கன்னிப் பெண்ணாக இருந்தும் மீன் விற்பதற்குச் சங்கானைக்குப் போனதில் அவளது குறிச்சியே அதிர்ந்து போய் இருந்தது. அவள் அதைப் பற்றிக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணனின் கடும் எதிர்ப்பைக்கூட அசட்டை செய்யவில்லை. தம்பிராசா என்ன நினைப்பான் என்கின்ற ஒரு எண்ணம் எழுந்தாலும், அதையும் புறங்கையால் தள்ளிவிடுவது போலத் தள்ளி விட்டாள். சங்கானைக்குப் போய் வந்தபின் செக்கல் பொழுதில் கரைக் கிணற்றிற்குக் குளிக்கச் சென்ற நீலாம்பிகைக்கு அதிர்ச்சியாக இருந்தது. அள்ளிய வாளி நீரில் கல்லெண்ணை நாறியது. மேலும் முகர்ந்தபோது அது நிச்சயமாகிற்று. அதற்குள் யார் கல்லெண்ணெய் ஊற்றினார்கள் என்பதையோ, எதற்காக ஊற்றினார்கள் என்பதையோ அவள் அறிய மாட்டாள். நடு ஊராரின் கிணற்றில் குளிக்க விடாததிற்கு கிழக்குத்திக்கார் இரகசியமாக இரவோடு இரவாக கல்லெண்ணை ஊற்றியது அவளுக்குத் தெரியும். அதற்குப் பழிவாங்கலாக இது இருக்கலாம் என்பது விளங்கியது. என்ன செய்ய முடியும் என்று யோசித்தவண்ணம் வீட்டிற்குத் திரும்ப எண்ணிய போது தம்பிராசா வந்தான். அவன் தன்னைப் பார்ப்பதற்கு அலைவது பற்றி நீலாம்பிகை முதலில் கேள்விப்பட்டிருந்தாள். பின்பு ஒரு நாள் கள்ளுச்சீவும் இரட்டைப் பனையடியில் வைத்து 'நான் உன்னை விரும்பிறன் நீலா' என்றான். அவள் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. இப்போது அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவள் ஒரு முறை பார்த்துவிட்டு வாளியைத் தூக்கினாள். 'என்ன குளிக்கேல்லையே?' என்று தம்பிராசா கேட்க அவள் நிலைமையை விளங்கப்படுத்தினாள். தம்பிராசா இருட்டி இருப்பதாலும், நடுத்திக்குக்காரின் கிணற்றில் ஆட்கள் இல்லாததாலும் அதில் குளித்துவிட்டுச் செல்லலாம் என்றான். அதைக் கேட்டு முதலில் நீலாம்பிகை நடுங்கினாலும், தம்பிராசா தன்னைக் கொலைநடுங்கி என்று நினைத்து விடுவானோ என்பதாக எண்ணியவள், சரி என்று கூற, இருவருமாக நடுத்திக்காரிக் கிணற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது திடீரென உழவு இயந்திரம் இவர்களை நோக்கி வர, பனைக் காட்டை நோக்கி ஓடிய இருவரும், அங்கே ஒளித்திருக்கும் போதுதான் அவர்கள் காதல், முத்தம் வரை சென்றது. ஒஸ்லோ என்றாலும் எங்கள் கலாச்சாரம் காப்பதாக, பார்த்துப் பார்த்து ஒழுங்கு செய்யப்பட்ட கலியாண வீடு அது. இது சொர்க்கத்தில் அல்ல, ஒஸ்லோவில் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பாடசாலை மண்டபம் ஒன்றில் நடைபெற்றாலும், அரச வைபவம் போல் அலங்கரிக்கப்பட்ட உள் மண்டப அழகு வேலைப்பாடுகள். வண்ண வண்ண ஆடல்களும், வடிவு சேர்க்கும் உருவங்களும், கண்ணைப் பறிக்கும் மணமேடையும், உயர்ந்து நின்ற மணமக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளும், வானவில்லைப் பூமியில் நிறுவிய ஊதுபைகளுமாக மண்டபம் அமர்க்களப்பட்டது. சொந்த ஊர்ச்சனம், தெரிந்தவர்கள் என்று இரு நூறு விருந்தினர்கள் வந்திருப்பார்கள். ஐயர் புகையடிக்கும் தனது அலுவலில் மும்முரமாக, மேளமும், நாதஸ்வரமும் ஆரம்ப சுருதி பிடிப்பில் போட்டியாக. எங்கும் சிறுவர்களின் கீச்சுக் குரல், பெரியவர்களின் நகைப்பு, பேச்சு, என்பதாக வண்டுகளின் ரீங்காரமாய், களிப்பைப் பேசுவதாய், மண்டபம் உயிர் பெற்றிருந்தது. திருச்செல்வன் ஊரில் 'எதுவும் கிடையாது அவனுக்கு' என்று சொல்வார்களே, அந்த ரகத்தைச் சார்ந்தவன். இங்கே அதற்குத் தடை ஏது என்கிற சுதந்திரம் வேறு. அவனது திருநிறைச் செல்வன் சுகந்தனுக்கும், அளவெட்டியைச் சார்ந்த சிவபாலனின் ஏக புத்திரி சுகுனாவுக்கும், அன்றைய நாள் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் ஒழுங்கு செய்யப்பட்டதால் இந்தக் கலியாணத் திருவிழா. விடுவானா திருச்செல்வன்? தனக்குத் தெரிந்த ஊர்க்காரர் எல்லோரையும் அழைத்ததோடு, பல தனது வெளியூர் நண்பர்களையும் அழைத்திருந்தான். நீளமாகப் பன்னிரண்டு நபர்கள் உட்காரும்படி நாற்காலிகள் போடப்பட்ட மேசைகள், அலங்காரத்தோடு குளிர்பானங்கள் தாங்கி, சேவைக்குத் தயாராகக் காத்து இருந்தன. அதில் சில மேசைகளில் அவன் ஊர்க்காரர்கள் ஆட்சி செய்தார்கள். அப்படி ஆட்சிக்கு உட்பட்ட மேசை ஒன்றில் தர்மசீலன், அவன் மனைவி சாந்ததேவி, ரவி, கவி என்கிற அவன் பிள்ளைகள், தவலிங்கம் அவன் மனைவியான ராணி, சிவறூபன், அவன் பாரியார் நந்தினி, கமலன் அவன் துணைவி சியாமளா, தம்பிராசா, அவன் இல்லத்தாள் நீலாம்பிகை என்பவர்கள் அமர்ந்து இருந்தார்கள். 'மனிதப் புறத்தோற்றம் ஐரோப்பா வந்த பின்பு அடையாளம் தெரியாது மாறிப்போனது, அல்லது ஒரு சமத்துவத்தை எட்டியது என்பதான ஒரு மாயை. இருந்தும் மர்மமான மனதுகள்? அதனுள் புதைந்துள்ள அகத் தோற்றங்கள்? அவை சாகாவரம் பெற்ற அசுரர்கள் போலப் பலரின் மனதின் ஆழத்தில் ஒளிந்து இருக்கிறது, இருந்தும் அது வெளியே தெரியாதபடி தடித்த முகமூடிகள் பலரைக் காப்பாற்றுகின்றன' எனத் தவலிங்கம் எண்ணிக் கொண்டான். அவன் மனது பாரதி போல சமூக அநியாயங்கள் கண்டு குமுறும். இருந்தும் போராடுவது பாதிக்கப்பட்டவனாய் இருக்க வேண்டும் என்று அவன் வலுவாக நம்புபவன். அப்போது அங்கே வந்த திருச்செல்வன், மேசையில் வைக்கப்பட்ட குளிர்பானத்தைப் பார்த்துவிட்டு, 'என்ன பாத்துக் கொண்டு இருக்கிறியள்? எடுத்து வாய நனையுங்க.... கெதியா பங்ஷன் ஆரம்பிச்சிடும். பிறகு பலகாரமும் ரீயும் வரும். எல்லாம் ஓ.கே தானே?' என்று தனது விருந்தினரை உபசரிப்பதாகக் கேட்டான். அதைக்கேட்ட தர்மசீலன் 'இதெல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேணுமே. உங்களுக்கு ஏதும் உதவி தேவை எண்டாச் சொல்லுங்க' என்றான் ஊர்க்காரன் என்கின்ற உரிமையில். 'ஓ... நான் தேவை எண்டா வந்து கேட்கிறன்' என்றவன் ஏதோ அவசர அலுவலாகச் சென்று விட்டான். அப்போதே, குளிர்பானத்தையும், மேசையைச் சுற்றி இருந்தவர்களையும் பார்த்த சிவறூபன், தம்பிராசாவையும், நீலாம்பிகையையும் பார்த்தான். அவனுக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பு அவன் மூளையில் முளைவிட்டது. சிவறூபன் ஒரு பொறியியலாளனாக வேலை செய்கிறான். ஒஸ்லோவில் மற்றவர்களோடு ஒப்பிடும்போது தான் கௌரவமான வேலை செய்வதான தடிப்பு. தனக்கு ஒரு தனி மதிப்பு இருக்க வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இங்கு அதைப் பெரிதாகக் காட்டிக் கொள்ள முடியாததில் ஒருவித பொறுமையற்ற அடக்கம். அவன் மனதில் புதைந்து கிடக்கும் மனிதாபிமானத்திற்கு விரோதமான இன்னும் சில எண்ணங்கள். அதைப் பற்றி இங்கே கதைத்தால் தனக்கே அவமானம் என்கின்ற உண்மை விளங்கியதால் என்ன செய்வது என்கின்ற திணிக்கப்பட்ட சகிப்பு. சிறுவனாக இருக்கும்போது தம்பிராசா அப்பாவோடு சிவநாயகி அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தான். அவர் கணவர் தேவநேசன். யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்தார். வெள்ளிக்கிழமை என்றால் அவர் கொப்பிலேறி குரங்காகத் தாவிக்கொண்டு ஊருக்கு வருவார். அவர்களுக்கு ஊரில் அரைவாசி சொத்து உடைமையாக இருந்தது. அதனால் கூலிகள் யாவரும் அடிமைகள் என்கின்ற நினைப்பு. அதைப் பற்றி எல்லாம் தம்பிராசாவின் அப்பா கவலைப்படுவதில்லை. வேலை தந்து சம்பளமும் தரும் எசமானர்கள் கடவுளுக்குச் சமம் என்பது அவர் எண்ணம். அன்று தம்பிராசா அப்பாவோடு போனபோது சிவநாயகி அம்மாவின் கடைக்குட்டி ராகவன் நின்றான். அவனுக்கு ஆறுவயது இருக்கும். அவன் தம்பிராசாவின் அப்பாவைப் பார்த்து 'வாடா' என்பதோடு தொடர்ந்து சாதிப் பெயரையும் அப்பாவின் பெயரையும் சேர்த்துக் கூறினான். அப்பா கோவிப்பாரோ என்று தம்பிராசா நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். அவர் சிரித்துக்கொண்டு அவனுக்குப் பணிவு காட்டி 'அம்மா எங்க தம்பி?' என்று கேட்டபோது அவன் காதுகளை அவனாலேயே நம்பமுடியவில்லை. தம்பிராசாவிற்கு அன்றிலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை. அப்பாவுக்கே இப்படி என்றால் எனக்கு என்பதை அவனுக்கு எண்ணவே பிடிப்பதில்லை. அது சாதிகளாய், குறிச்சிகளாய், இன்னும் பலவாய், பலரோடு பழகும் துணிவைச் சிலவேளைத் தின்றுவிடுகின்றது. பிரச்சினையை எதிர்கொள்வதைவிடத் தப்பிப்பதில் ஒரு அலாதி நிம்மதி தம்பிராசாவிற்கு. இருந்தும் நோர்வேக்கு வந்த பின்பு எல்லோரும் மாறிவிட்டார்கள் என்கின்ற தப்புக்கணக்கில் ஒரு துணிவு வளர்ந்தது. சிவறூபனுக்கு தம்பிராசா தம்பதிகளைப் பார்த்த ஞாபகம் வரவே இல்லை. அந்தப் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற பரபரப்பு மேலும் மேலும் கொம்பாய் முளைத்து விடுமோ என்பதான அவதி. அவன் ஊரில் மற்றவரை அறிமுகம் செய்து கொள்வதற்கு, இல்லை அவர்கள் தகவல்களை ஞாபகக் களஞ்சியத்திலிருந்து எடுப்பதற்கு, பரம்பரைப் பெயர், இல்லை என்றால் குறிச்சி தெரிய வேண்டும். அதில் ஏதாவது ஒன்றைக் கூறினால் அத்தனை தகவலும் அகரவரிசையில் அவர்கள் ஞாபகத்தில் வந்துவிடும். சிவறூபன் தம்பிராசாவைப் பார்த்து, 'நீங்கள் ஊரில எந்த இடம், உங்கட அப்பாவிற்கு என்ன பெயர்?' என்று கேட்டான். தம்பிராசாவிற்கும், நீலாம்பிகைக்கும் அந்தக் கேள்வியை யாரும் கேட்டால், கட்டி இருப்பதை உருவுவது போன்ற அவமானமும், பதை பதைப்பும் ஏற்படும். ஏற்படத்தான் வேண்டுமா என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டது இல்லை. 'ஈழத்திலிருந்து இங்கே வந்த பின்பு பலரும் அதை மறந்ததாகக் காட்டிக் கொள்கிறார்கள். கலந்து ஊர்வலம் போகிறார்கள். சில இடங்களில் சமபந்தி போஷனம் சங்கோஜம் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் மனது, உள் வீட்டின் மனநிலை, வெளியில் தெரியாதவை. அவை விரிவான ஆராய்ச்சிக்குரியது' என்பதான எண்ணம் நீலாம்பிகையிடம் இருந்தது. ஆனால் முகத்துக்கு நேரே வித்தியாசம் காட்டாது பழகுவதில் தம்பிராசாவும் நீலாம்பிகையும் திருப்தி அடைந்தனர். 'அல்லது அவர்களால் கறுப்பு வெள்ளை பிரச்சனை இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. அதற்கு நியாயம் கேட்க முடியாது' என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பாதுகாப்பிற்கு இன்று பங்கம் வந்ததாய் உடல் உதறிப் போட்டது. எழுந்து ஓடினாலும் அவமானம், இருந்து பதில் சொன்னாலும் அவமானம். வெளியேற இருந்த இரண்டு வாசலிலும் நெருப்பு பற்றினால் எங்கே ஓடுவது? என்கிற தத்தளிப்பு அவர்களிடம். தம்பிராசா பதில் சொல்லாது திருதிருவென முழித்தான். கார்மேகம் சூழ்ந்த வானமாய் அவன் முகம் இருண்டது. அதைப் பார்த்த தர்மசீலன் 'அவை எங்கடை ஊர்தான். உனக்குத் தெரியாதே?' என்று சமாதானம் சொல்ல முயன்றான். 'அதுதான் ஆர் எண்டு கேட்கிறன்' என்று தொடர்ந்தான் சிவறூபன். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த தவலிங்கம் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்றான். 'சும்மா இருங்க அப்பா' என்றாள் ராணி அவசரமாக. சிவறூபன் அது தனக்கு என்று விளங்கிக் கொண்டான். தவலிங்கம் கூறியது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. அதை அவனுக்கு வேறு யாரிடமும் காட்ட முடியாது போக, அவன் பார்வை மீண்டும் தம்பிராசாவில் திரும்பியது. 'இவர் என்ன பெரிய மகாராசாவே, பெயரைச் சொன்னோண்ணை ஞாபகம் வாறத்துக்கு? எங்கடை ஊரில என்ன வழமை? பரம்பரைப் பெயரைச் சொல்ல வேணும், இல்லாட்டி எந்தக் குறிச்சி எண்டு சொல்ல வேணும். அதை விட்டிட்டு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது எண்டு ஒரு உருப்படி இல்லாத பழமொழி சொல்லுறியள். அந்தச் சுரைக்காய்க்குத்தான் லட்சம் லட்சமாய் சம்பளம் அள்ளித் தாராங்கள்' என்றான் சூடாக. தவலிங்கத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற வாய் நமைச்சல் . என்றாலும் ஏட்டுச் சுரைக்காய் பற்றி விளங்கிக் கொண்ட விதத்தை எண்ணி 'அவை அறிந்து பேசு' என்பதாக அமைதி காத்தான். தம்பிராசாவிற்கு எழுந்து போவதா, இருந்து அவமானப்படுவதா என்கின்ற சங்கடம். எழுந்து போவதே அவன் முதல் தெரிவாக இருந்தது. அவன் நீலாம்பிகையைப் பார்த்தான். அவள் அவன் கண்களைச் சங்கடமாகப் பார்த்தாள், சோகமான சிட்டுக்குருவி போல அவள் இமைகளைச் சோர்வாக வெட்டினாள். அவர்களின் சங்கடத்தைப் பார்த்த தர்மசீலன் புதையுண்டு கிடக்கும் தேரை இழுப்பது போல, 'திருச்செல்வன் பார்த்துப் பார்த்து ஹோல் அலங்காரம் எல்லாம் நல்லா செய்திருக்கிறான். நானும் உதவிக்கு வந்து இருக்கோணும். எனக்கு வேலையாப் போச்சுது' என்றான் கவலையும் காரணமுமாக. 'அது நிறைய ஆட்கள் உதவிக்கு வந்திச்சினம். இதில நான், தம்பிராசா, அதைவிட செல்வன், குமரேசன், குஞ்சன், மணி, தேவாரம், நகுலன், இன்னும் கன வெளியூர்க்காரர் எண்டு நல்ல பம்பலாப் போச்சுது' என்றான் தவலிங்கம் மேலும் தேரிழுக்க கை கொடுப்பது போல. தம்பிராசா தான் தப்பி விட்டதாகத்தான் நினைத்தான். தம்பிராசா யார் என்பதுகூட சிவறூபனுக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. ஒரு பொறியியலாளனை மதிக்காமல், தான் யார் என்று சொல்லாது இழுத்தடிப்பது, அவனை அவமானப்படுத்தியதான எண்ணத்தைத் தந்தது. அவன் மீண்டும் தம்பிராசாவைப் பார்த்தான். தம்பிராசா அவன் பார்வை வேண்டாம் என்பதாகப் பக்கத்து மேசையைப் பார்த்தான். 'நீ எங்கே பார்த்தாலும் உன்னை நான் விடமாட்டேன்' என்பதாகச் சிவறூபன், 'சரி, நீங்கள் ஊரில எந்த இடம்?' என்றான் மீண்டும். அமைதி ஒப்பந்தம் எழுதிவிட்டு விமானத் தாக்குதல் நடத்தியதாக அதிர்ந்தான் தம்பிராசா. இந்த ஆக்கினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணிய தவலிங்கம், 'அவர் எங்கடை குறிச்சிதான். கொழும்பில இருந்ததால உனக்குத் தெரியாது' என்றான். அவன் இத்தோடு ஓய்ந்து விடுவான் என்கின்ற ஒரு நப்பாசை. ஆனால் சிவறூபன் விடுவதாய் இல்லை. 'கொழும்பில இருந்தால் என்ன, ஆர்ற்ற பரம்பரை எண்டு சொன்னா எனக்குத் தெரியும்தானே' என்றான். கூடி இருந்த பலரும் ஆளை ஆள் பார்த்து விழித்தார்கள். அப்படி ஒரு பூட்டு அதில் இருப்பது அவர்களுக்குத்தான் தெரியும். குறிச்சிக்கோ, பெயருக்கோ குல விசாரணைக்கான அடையாள எண் போன்ற பெறுமானம் அவர்கள் ஊரில் உண்டு. தகவற் களஞ்சியத்தைவிடத் தனி மூளைகளில் அதைப் பற்றி அதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். 'உன்னைப் பற்றி அறிந்துகொள்ள அதில் ஒன்றைத் தா' என்பது சிவறூபனின் தொடர் அடம். 'எம் அடையாளம் தெரிந்தால் உன் கண்ணில் பரிகாசம் தோன்றுமே' என்கிற அஞ்சல், அவதி, சங்கடம் தம்பிராசாவிடம். பசுவும் கொலை செய்யும். மனித பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதாகக் கோபமும், அரிகண்டமும் தம்பிராசா மனதில் கொழுந்து விடத் துவங்கியது. நீலாம்பிகையின் அண்ணன் குட்டியன் கள்ளுச்சீவப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தான். அப்போதுதான் தம்பிராசா கடன் கொடுத்த பணத்தைக் கேட்டதால் கோபமுற்ற முருகதாஸ் இருவரது காதலையும் அவனிடம் ஒப்புவித்தான். கோபத்தால் மனது தணலாகக் கொதிக்க, தடநாரையும் குடுவையையும் தெருவில் போட்டுவிட்டு பளைக்கத்தியோடு, இருவரையும் தேடி அலைய, ஒளித்து ஓடி ஒருவாறு சிவநாயகி வீட்டிற்குச் சென்று சரணடைய, ராகவன் எதற்கும் பயப்படாது தனது மகிழுந்தில் ஏற்றிச் சென்று வவுனியாவிற்கு அனுப்பியதையும், அதனால் தமது உயிரும், காதலும் பிழைத்ததையும் தம்பிராசாவால் மறக்க முடிவதில்லை. இன்று வரையும் எது ராகவன் என்பது அவனுக்கு விளங்கவில்லை. சிறுவனா அல்லது வளர்ந்த மனிதனா? மனிதர்கள் யார் எப்போது எப்படி இருப்பார்கள் என்பதோ எந்த நேரம் அவர்கள் எந்த முகம் வெளிப்படும் என்பதோ யாருக்கும் தெரியாது. அவை விதிக்கு அப்பாற்பட்டவை. 'என்ன தம்பிராசா வாய்க்க கொழுக்கட்டையே வச்சிருக்கிறியள்? ஒரு மனிஷன் கேட்டா அதுக்குப் பதில் சொல்ல மாட்டியளே?' என்று மீண்டும் பொல்லுப் போட்டான் சிவறூபன். தம்பிராசாவால் அதன் பின்பும் பொறுமையோடு மௌனம் காக்க முடியவில்லை. இதற்குப் பதிலளிக்க எதற்குத் தான் தயங்க வேண்டும் என்று எண்ணினான். இது, தன் குறையோ, குற்றமோ இல்லை என்று முடிவு செய்தவன் 'நான் கிழக்கு திக்கு' என்றான். அதைக் கேட்ட சிவறூபன் எள்ளலாக நகைத்த வண்ணம், 'அதே உந்த மசி மசிஞ்ச நீ' என்றான் ஒற்றையில். தம்பிராசா முறைத்துப் பார்த்த வண்ணம் மேசையிலிருந்து எழுந்தான். ஒலிபரப்பியில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்கின்ற பாரதியின் பாட்டு போய்க் கொண்டு இருந்தது. 'புரட்சி செய்யாவிட்டாலும் மனிதாபிமானத்தோடு இருக்கலாம்' என்று எண்ணிய தவலிங்கத்திற்கு சிவறூபன் மேல் கடுங்கோபம் வந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று விளங்கவில்லை. ஆனால் தனது உரிமையை விட்டுக் கொடுத்து, தப்பிக்க முயன்ற தம்பிராசாவை உக்கிரமாகப் பார்த்து, 'எதுக்கு நீங்கள் இப்ப எழும்புகிறியள், அவருக்கு இதில இருக்கப் பிரச்சினை எண்டா அவர் எழும்பிப் போகட்டும், நீங்கள் ஏன் பயந்து ஓடவேணும்? அவனவன் பிரச்சினைக்கு அவனவன்தான் போராடோணும். மற்றவை போராட முடியாது' என்றான். தம்பிராசாவிற்கு தவலிங்கம் கூறியது சரியாகப் பட்டதோடு, தனது உரிமைக்கு தானே போராட வேண்டும் என்பதும் விளங்கியது. அவன் தனது இருப்பிடத்தில் மீண்டும் இருந்து கொண்டான். 'நான் அவரை யார் எண்டு தானே கேட்டன். எழும்பி ஓடச் சொன்னனா?' என்று சிவறூபன் அவமானத்தோடு வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். 'கேட்கக் கூடாததை கேட்காமல் இருப்பதும் அறம். அறிஞ்சு கொள்ளும்' என்றான் தவலிங்கம். மணமகள் மேடைக்கு வந்ததால் எல்லோரது கவனமும் அங்கே திரும்பியது. - இ.தியாகலிங்கம், நோர்வே https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/46675-2024-05-06-10-38-14
  3. இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். யாழ்கள அனைத்து தந்தையர்களுக்கும் வாழ்த்துகள்.
  4. தாய் மக்களிடம்: பிள்ளை இந்த இடது முழங்கால் ஒரே நோவாய் கிடக்குது........! மகள்.... : அது அம்மா உங்களுக்கு 87 வயசாச்சுதுதானே அது கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.......! தாய்.....: சும்மா விசர் கதை கதையாதையென வலது காலுக்கும் அந்த வயசுதானே அது நோவு இல்லாமல் நல்லாத்தானே இருக்கு......! 😂
  5. ஐயா இணை, கொஞ்சமும் இரசனை இல்லாத ஆளாக இருக்கிறீர்களே இது நியாயமா? 😁
  6. சிட்னியில் வாங்கிய கத்தி Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன். புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மான் ருஷ்டி எழுதி வெளிவந்த அவரது கடைசி நூல் உள்ளதா" என்று கேட்டேன். மூன்று இஞ்ச் மூக்கின் இடப்பக்க நுனியில் வெள்ளைக் கல்லு மூக்குத்தி அணிந்த, மெழுகு அழகி அவள். சல்மான் ருஷ்டியை அறிந்திருக்கவில்லை. கணனியில் தேடுவதற்கு முயற்சித்தாள். பெயரை முழுமையாக அறிந்தால்தானே தேடமுடியும். தடுமாறினாள். அவள் தடுமாறுகிறாள் என்பதற்காக " Can I have a Knife" என்று கேட்பதற்கு நான் தயங்கியபடி நின்றேன். அவளால் முடியவில்லை என்பதை முழுதாக உணர்ந்த பிறகு, எனது தொலைபேசியில் Knife புத்தகத்தின் அட்டையை எடுத்துக் காண்பித்து, "இந்த நூல் உள்ளதா" என்று கேட்டேன். புத்தக இறாக்கைகளுக்குள் இறக்கை விரித்து ஓடினாள். அவளைப்போன்ற வெள்ளை அட்டை அணிந்த புத்தகத்தை ஏந்திவந்து என் கைகளில் ஒப்படைத்தாள். பொது இடங்களில் மது அருந்துபவர்கள், காகிதப் பையில் போத்தலை மறைத்துக்கொண்டு பதுங்குவதைப்போல, புத்தகத்தை ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொண்டு பத்திரமாக வந்து காரில் ஏறினேன். நியூயோர்க் நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "எழுத்தாளர்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவது எப்படி" என்ற தொனிப்பொருளிலான அரங்கில் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சல்மான் ருஷ்டி கலந்துகொண்டார். நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து மேடைக்குப் பாய்ந்தோடிச் சென்ற 24 வயது இளைஞன் ஒருவன், ருஷ்டியை சரமாரியாகக் கத்தியால் குத்திச் சல்லடை போட, அவர் இரத்தச் சகதியில் சரிந்தார். முதலில், இந்தத் தாக்குதல், பேச்சின் தொனிப்பொருள் சார்ந்த அரங்காற்றுகை என்று சந்தேகித்த பார்வையாளர்கள் உறைந்திருந்தனர். சில கணங்களில் உண்மையின் தீவிரத்தை உணர்ந்து, எழுந்து குழறினர். ருஷ்டியைக் கொன்றே தீருவதென்று கொலைவெறியாடியவனை, மேடையிலிருந்தவர்கள் பிடித்து மடக்கினார்கள். ருஷ்டி குற்றுயிராக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நார் நாராகக் குத்திக்கிழிக்கப்பட்ட 75 வயது முதிய ருஷ்டியை பெரியதொரு மருத்துவர்குழு - பெரும்போராட்டத்துக்குப் பிறகு - சாவிலிருந்து மீட்டெடுக்கிறது. இடக்கையில் பல குத்துகள், கண்ணில் பார்வை நரம்புவரைக்கும் பாய்ந்த கத்தியால் பயங்கரக்காயம், இவற்றைவிட மார்பில் - கழுத்தில் என்று ஏகப்பட்ட ஆழமாக வெட்டுகள். சம்பவம் தொடர்பிலான காணொலியை பின்னர் விசாரணை செய்ததன் அடிப்டையில், கிட்டத்தட்ட 27 செக்கன்கள், ருஷ்டி தன்னைத் தாக்கியவனின் கத்தியோடு மேடையில் நின்று போராடியிருக்கிறார். தான் நுகர்ந்த மரண நெடியையும் - நேர்ந்த அத்தனை அவலங்களையும் - ஒவ்வொரு காயத்திலுமிருந்து உயிர் மீண்ட அனுபவத்தையும் - அவற்றின் பின்னணியில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் வலிபெயர்த்து விவரிக்கம் அபுனைவுதான் Knife. ருஷ்டி எழுதிய 21 ஆவது நூலான Victory City வெளிவரவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்று, அந்த வெளியீடு அவர் உயிர் மீண்ட பிறகு நடைபெற்றது. தற்போது, Knife வெளியாகி பல லட்சக்கணக்கான வாசகர்களிடம் சென்றடைந்திருக்கிறது. ஒரு எழுத்தாளன் மீதான தாக்குதலில் அவன் உயிர் தப்பினால், அந்த அனுபவத்தை அவன் எவ்வளவுக்கு எல்லைவரை சென்று தன் வாசகனுடன் பகிர்ந்துகொள்வான் என்பதற்கு இந்த நூல் செறிவான உதாரணம். ருஷ்டியின் இந்த நூலில் மிகக் கனிவோடும் இறுக்கமாகவும் பகிர்ந்துகொள்ளும் இரு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று - அன்பின் மீதான ருஷ்டியின் தீராத பற்றினால், காலம் அவருக்கு எலைஸா என்ற மனைவியை அருளியது. ருஷ்டி ஐந்தாவது தடவையாக எலைஸாவைத் திருமணம் செய்துகொண்டது, எழுத்தாளர் வட்டத்திலேயே அதிகம்பேருக்குத் தெரியாது. எலைஸாவும் அதனைப் பெரியளவில் விரும்பவில்லை. ருஷ்டி மீதான தாக்குதலுக்குப் பிறகு எலைஸா, பேரொளியாய் பெருக்கெடுக்கிறார். ருஷ்டியைத் தன் நிழலில் வைத்து ஏந்துகிறார். ருஷ்டி குறிப்பிடுவதைப்போல அவரளவுக்கு எலைஸாவும் காயமாகி வலி சுமக்கிறார். ருஷ்டிக்குக் கிடத்தட்ட எலைஸாதான் உயிரூட்டி மீட்கிறார். தன்னைவிட முப்பது வயது மூத்த கணவனின் மீது எலைஸா கொண்டுள்ள காதலும், காயம்பட்ட ருஷ்டியை எவ்வாறுப் போராடி வெல்கிறார் என்பதும் இந்த நூலில் மிகக்கனிவான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. அந்தக் காதலைப் பக்கத்துக்குப் பக்கம் ருஷ்டி கொண்டாடித் தீர்ப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. இரண்டு - ருஷ்டிக்குள்ளிருக்கும் இந்தக் கனிவான - அன்புக்கு ஏங்கும் - இதயத்துக்கு எதிர் அந்தத்தில் உள்ள அவரது எழுத்தினாலான தன்னகங்காரம். பதினைந்து தடவைகள் குத்திக் குதறப்பட்ட பிறகும், அந்த சல்லடையான உடலில் இருந்து மீண்டு வந்து, தன்னைக் குத்தியவனை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று விரும்புவதும், கடைசியில் அவன் அடைக்கப்பட்ட சிறைச்சாலைக்குச் சென்று அதனை வெளியிலிருந்து படம்பிடித்துவிட்டு "அவனிருந்த அந்தச் சிறையைக் கண்டதும் எனது கால்கள் நடமாடின" - என்று எழுதுவதும் அவரின் எழுத்து-நரம்புகளில் ஓடுகின்ற தன்னகங்காரம்தான். இந்த அகங்காரம்தான் அவரைச் சாவுக்கு எதிராகவும் போராடும் வல்லமையைக் கொடுத்தது. இந்த நூலில் அவர் எழுதாததும் - வாசகன் புரிந்துகொள்ளக்கூடியதுமான புள்ளி - "நான் வேறு எவ்வாறேனும் மரணிக்கத் தயார், ஆனால், இவனது தாக்குதலில் சாகமாட்டேன்" - என்று இறுதிவரை அவருக்குள்ளிருந்த ஓர்மம். இந்தத் திமிர்தான் பதினைந்து மாதங்களில் அவரை மீண்டும், அதே எழுத்தாளனாக அவரது கதிரையில் கொண்டுவந்து இருத்துகிறது. இந்தத் தாக்குதலினால் ருஷ்டி அடைந்த காயங்களும், அவற்றின் விளைவுகளும் ஒவ்வொன்றிலிருந்து வெளியேற அவர் அனுபவித்த - கதறிய - ஓலங்களும் நூலில் வாசகனையே பதறவைக்கக்கூடியவை. சகல காயங்களும் ஆறியபிறகும் அவருக்கு புற்றுநோயுள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட அறிவிப்பும் பிறகு, அது ஏனைய காயங்களின் தொற்றினால் ஏற்பட்டது என்று ஆறிப்போவதும் உள ரீதியாகவே ஒருவருட காலம் அவரை சிதைக்கிறது. தாக்குதல் ஏற்படுத்திய பழைய நினைவுகளினால் விளைந்த கொடும் கனவுகளால் பெருந்துயரடைகிறார். இந்தக் கூட்டு வாதையை ஒரு எழுத்தாளனாக - தனது கருத்தை உறுதியோடு எழுதியதற்காக - ருஷ்டி அனுபவித்து மீண்டிருக்கிறார். Knife நூலில் ருஷ்டிக்கு சமனாக அவரது மனைவி எலைஸாவின் காதலும் எந்த எல்லைவரையும் சென்று தனது கணவரைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் அவரது ஓர்மமும் வாசிப்பில் நிறைவுதந்தாலும், ருஷ்டியின் தன்னகங்காரமும் எழுத்தாளனுக்கு அந்தக்குணம் இருக்கவேண்டிய தேவையும் அதிகம் ஈர்க்கிறது. தன்னைத் தாக்கியவனைச் சிறையில் சென்று சந்திக்க விரும்பும் ருஷ்டிக்கு அவரது மனைவி மறுப்புச் சொல்கிறார். தாக்குதலாளியின் சார்பிலான சட்டத்தரணிகளே அதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறி கணவனைத் தேற்றுகிறார். அதனை ருஷ்டியே பின்னர் உணர்ந்துகொண்டாலும், நூலின் ஒரு பகுதியை தனக்கும் தனது தாக்குதலாளிக்கும் இடையிலான கற்பனை உரையாடலாக ருஷ்டி எழுதுகிறார். அந்த உரையாடல், மிகவும் முதிர்ச்சியானது. இந்த உரையடலை, தன்னைப் பதினைந்து தடவைகள் குத்தியவனை திட்டித் தீர்ப்பதற்கு ருஷ்டிய பயன்படுத்தவில்லை. அவனுக்கு எதிராக தனது ஏளனங்களைப் பதிவுசெய்வதற்கும் - விலங்கணிந்த அவனது குற்றத்தை எள்ளி நகையாடுவதற்கும் நீட்டிக்கொள்ளவில்லை. மாறாக, அவனது தரப்பிலிருக்கக்கூடிய கொலை வாதங்களை சமமாக முன்வைக்கிறார். அவனது அடிப்படைவாத மனநிலையை அவனது கத்தியின் முனையிலிருந்து புரிந்துகொள்கிறார். லெபனானுக்குச் சென்று திரும்பியதிலிருந்து நான்கு வருடங்களாக வீட்டின் ஒரு மூலையிலிருந்து youtube பார்ப்பதையே முழுநேரமாகச் செய்துகொண்டிருந்தவன், அடிப்படைவாதத்திற்குள் ஈர்க்கப்பட்ட கோரத்தையும் - அதன் பரிதாபமான விளைவுகளையும் - தான் எந்த வகையில் அவனுக்கு எதிரியாகவேண்டும் என்ற நியாயமான கேள்வியையும் கனிவோடு முன்வைக்கிறார். சமூகவலைத்தளங்களில் algorithm உலகிற்குள் ஒருவன் தன்னை அறியாமல் வசீகரிக்கப்படக்கூடிய சீரழிவின் உச்சத்தையும் அதன் கோரமான விளைவையும் காயங்களின் பிரதிநியாக நின்று பகிர்ந்துகொள்கிறார். சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்ற இவ்வுலகில், தன்னுடன் பேசுவதற்கு தனது தாக்குதலாளி, வன்முறையைத் தெரிவுசெய்த காரணத்தை திரும்பத் திரும்ப வெவ்வேறு தளங்களில் முன்வைத்து, இறுதியில் "நீ என்னைக் கொலைசெய்ய முயன்றாய், ஏனெனில், உனக்கு புன்னகைப்பது எப்படி என்று தெரியாது" - என்று நிறைவுசெய்கிறார். எழுத்தை எழுத்தால் - கருத்தைக் கருத்தால் - எதிர்கொள்ளமுடியாமல் வன்முறைகளை எதிர்கொண்ட எல்லா எழுத்தாளர்களும் இந்தக் கடைசிவரியில் கண்முன் வந்து போகிறார்கள். முன்னர் குறிப்பிட்டதைப்போல, ருஷ்டி போன்றோருக்கு இப்படியானதொரு நிகர் அனுபவம் ஏற்படும்போது, அதன் விளைவு இவ்வாறான மிகவும் எடைமிகுந்த நூலாகவே வெளியாகும் என்பதில் ஆச்சரியமில்லை. ருஷ்டியின் பலம் அவர் வரலாற்றின் மீதுகொண்ட ஆழமான புரிதலும் மொழியை லாவகமாக சுழற்றியெடுத்து, எழுத்தின் திசை வகுக்கும் வல்லமையும்தான். இந்தநூலிலும் அந்தக் கூட்டு-நகர்வு செறிவாக அமைந்துள்ளது. இரண்டாம் வாழ்வைப்போராடிப் பெற்ற ஒரு எழுத்தாளனின் இரத்த சாட்சியமாக இந்த நூலைப் படிப்பதற்கு அப்பால், நடப்பு உலகில் கூர்மையடையும் அடிப்படைவாதத்தின் இழிநிலையைப் புரிந்துகொள்வதற்கும் இன்றைய உலகம் முகங்கொடுக்கவேண்டிய புதிய அறம் சார்ந்த கேள்விகளையும் Knife பல்வேறு புள்ளிகளின் ஆழமாகப் பேசுகிறது. https://www.theivigan.co/post/10010?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR26MAPFw_SwSbeSdcMqt0SwsM_THBF_nVCimymF7EXIedky2UGZ4oUs2o0_aem_AXE9RuBkFXBf3oING05d-XBPJLRgiq8r3oBRnEND4_9ymHP_lHI861NcPqoy6HShFCCyx7VGrByFw3e7CrYXudc7
  7. சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து கவிதைகள்,பேச்சுக்கள் என்பன இடம்பெற்று நினைவு பரிசில்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி,சட்டத்தரணி கு.கம்சன், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி,கல்யாண வேலவர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் அதிபருமான கமலகாந்தன், கிராமசேவையாளர்களான ரி.ஜெயபாபு,க.விக்னேஸ்வரன்,கு.சிந்துஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,அகிலஇலங்கை சமாதான நீதவான்களான க.தியாராஜா,க.அருளானந்தம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜயம்பிள்ளை,சமூகசேவையாளரும் தொழிலதிபர் ஆனந்தரசா உள்ளிட்ட கமக்கார அமைப்பினர்,கிராம சக்த்தி அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சி.க.கூ கூட்டுறவு சங்கத்தினர்,மாதர்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் – குறியீடு (kuriyeedu.com)
  8. ஆங்கில பதிப்பை மட்டும் இணைப்பதோடு நிறுத்தி விடாமல் அதன் பொருளடக்கத்தையாவது தமிழில் எழுதக்கடவீர்....😋
  9. இந்த முறை கொஞ்சம் தலைகீழ்.......திதி பார்க்கின்றார்கள் போலிருக்கு...😂 முந்தி வந்தாலும் பிந்தி வந்தாலும் சரி ஜெகஜோதியாய் கொண்டாடப்போவது அன்னையர் தினம் தானே🤣
  10. இஞ்சையும் வாற ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம். ஒரு கிழமைக்கு முதலே பெரிய அடுக்குகள் எல்லாம் எடுத்திட்டினம். சாப்பாடு எல்லாம் ஒரே அமர்களமாய் வரும் போல கிடக்கு.... ஆனால் தந்தையர் தினத்துக்கு வழமையான சோறு கறிதான்.....🤣
  11. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ…..ஓ… ஆண் : குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புது வித தாகம் பௌர்ணமி பார்வை பொழிகிறதே மனம் தனில் இன்பம் வழிகிறதே பெண்மையின் பாகம் தாமரையாகும் பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும் ஆண் : அடடா கால்கள் அழகிய வாழை நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை நகங்கள் யாவும் பிறை நிலவு இவள் தான் இங்கே கலை நிலவு நாயகி பாதம் நாயகன் வேதம் நாயகி பாதம் நாயகன் வேதம் நீயே காதல் தேவாரம் .......! --- விழிகள் மீனோ மொழிகள் தேனோ ---
  12. பாவனையில் இருந்து விலகும் ஒரு தடுப்பூசிக்கு ஆதரவு அவசியமில்லையென்றாலும், இந்த தடுப்பூசி மீது வழக்குப் போட்டிருக்கும் குழுவின் நோக்கத்தைச் சுட்டிக் காட்ட இதை எழுத வேண்டியிருக்கிறது. மேலே "ஊசியால் பாதிக்கப் பட்டேன்" என்று கூறும் நபரின் வழக்கறிஞரின் கூற்று, கீழே தடுப்பூசி பாவனைக்கு வந்த போதே வெளியிடப் பட்ட product insert இன் இணைப்பு: https://www.ema.europa.eu/en/documents/product-information/vaxzevria-previously-covid-19-vaccine-astrazeneca-epar-product-information_en.pdf பக்கம் 4 இல் coagulation disorders என்பதன் கீழ், TTS எச்சரிக்கை வழங்கப் பட்டிருக்கிறது. பிறகெப்படி "AZ முதன் முறையாக இப்போது தான் ஒத்துக் கொண்டிருக்கிறது" என்கிறார்கள்? இப்படியான "அறிவுக் கோமாவில்" இருக்கும் கட்சிக் காரர்களை ஒன்று திரட்டி வழக்குப் போட்டு மருந்துக் கம்பனிகளிடம் பணம் சுருட்ட அலையும் வழக்கறிஞர்களை அமெரிக்காவில் ambulance-chasing வக்கீல் என்று அழைப்பர். அப்படிப் பட்ட ஒரு கேஸ் இது. என் அபிப்பிராயம், இவர்கள் போன்ற சட்ட துஷ்பிரயோகம் செய்வோரை AZ நேரடியாக வழக்கில் எதிர் கொண்டு, தோற்கடித்து சில மில்லியன் பவுண்ஸ் வழக்குச் செலவை உருவி விட்டு தெருவில் விட வேண்டும். ஆனால், கம்பனிப் பெயர் கெட்டு விடுமென்பதால் அப்படிச் செய்யாமல் தவிர்ப்பார்கள், சமரசமாகப் போவார்கள். இந்த ஊக்கத்தில் இன்னும் கள்ள லோயர் குழுக்கள் கிளம்பி அடுத்த வக்சீன் கம்பனிகளைக் குறி வைக்கும்.
  13. நட்சத்திர வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ண இலங்கை குழாம் : பயணிக்கும் பதில் விரராக வியாஸ்காந்த் Published By: VISHNU 09 MAY, 2024 | 07:53 PM (நெவில் அன்தனி) இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு நட்சத்திர வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த கிரிக்கெட் குழாத்தை இலங்கை பெயரிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை குழாத்தில் அனுபவசாலியும் முன்னாள் தலைவருமான ஏஞ்சலோ மெத்யூஸும் இடம்பெறுகிறார். ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 6ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். மூன்று வருடங்களாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மெத்யூஸ் இந்த வருட முற்பகுதியிலேயே ரி20 அணிக்கு மீள அழைக்கப்பட்டிருந்தார். யாழ். மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் பயணிக்கும் பதில் வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். இது இவ்வாறிருக்க, இலங்கை அணியில் தலைமைத்துவ அனுபவம் மிக்க வீரர்கள் இடம்பெறுவது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது. ஏஞ்சலோ மெத்யூஸுடன் முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை குழாம் வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க (உதவித் தலைவர்), குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெணடிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரண, டில்ஷான் மதுஷன்க. பயணிக்கும் பதில் வீரர்கள்: அசித்த பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ச, ஜனித் லியனகே. https://www.virakesari.lk/article/183093
  14. க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். Posted on May 7, 2024 by சமர்வீரன் 44 0 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அண்ணா அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்புக்கள் அடங்கிய பேசுவோம் போரிடுவோம் என்ற நூல் வெளியீடானது 06.05.2024 அன்று பெல்சியம் அன்வேற்பன் மானிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டுப்பிரிவு அனைத்துலக தொடர்பகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட இந்நூல் ஆனது முதன்மையான பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத்தேசியக்கொடி ஏற்றல், மங்களவிளக்கு ஏற்றுதல் ,மாவீரர் பொதுப்படத்திற்கான சுடர் எற்றல், மலர்வணக்கம்,அகவணக்கத்துடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. நூலின் அறிமுக உரையினை திரு.றகு அவர்கள் நிகழ்த்த மதிப்பீட்டு உரையினை தமிழ்க்கலை அறிவு கூட தலைமை ஆசிரியர் திருமதி குமுதா இளமுருகன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து நூலினை தமிழர் ஒருங்கினைப்பு குழு பெல்சிய கிளைப்பொறுப்பாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் வெளியிட்டு வைக்க நூலின் முதல் பிரதியினை பெல்சிய கிளையின் மாவீரர் பனிமனைப்பொறுப்பாளர் செல்வன் கிருபா அவர்கள் பெற்றுக்கொண்டார்.பின்னர் எழுச்சி நிகழ்வுகள் இடம் பெற்று இனிது நிறைவு பெற்றது. க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம். – குறியீடு (kuriyeedu.com)
  15. இன் நூலை இணையம் மூலம் பெற்றுக் கொள்ள வசதி இருப்பின் அறியத்தரவும். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இது இருக்கும் என நம்புகின்றேன்.
  16. பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,கிறிஸ்டோபர் கெர் கருத்துப்படி (நோயாளிக்கு அருகில் இருப்பவர்), மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சில விசித்திர காட்சிகள் தோன்றும். கட்டுரை தகவல் எழுதியவர், அலெஸ்ஸாண்ட்ரா கோஹியா பதவி, பிபிசி நியூஸ், பிரேசில். 5 மணி நேரங்களுக்கு முன்னர் 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க மருத்துவர் கிறிஸ்டோபர் கெர் தனது வாழ்க்கையின் போக்கையே மாற்றும் ஒரு நிகழ்வைக் கண்டார். கிறிஸ்டோபரின் நோயாளிகளில் ஒருவரான மேரி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தார். அவரைச் சுற்றி அவரது நான்கு பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். மரணம் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மேரி விசித்திரமாக செயல்படத் தொடங்கினார். 70 வயதான மேரி திடீரென படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவர் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய குழந்தையைத் தொட்டிலில் வைப்பது போல் கைகளை அசைக்கத் தொடங்கினார். அவர் அந்த குழந்தையை ‘டேனி’ என்று அழைத்தவாறே அணைத்து, முத்தமிடுவது போன்று செய்கை செய்தார். டேனி என்று யாரையும் மேரியின் பிள்ளைகளுக்கு தெரியாததால், அவர்களால் மேரியின் இந்த செயலை புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த நாள், மருத்துவமனைக்கு வந்த மேரியின் சகோதரி, நான்கு பிள்ளைகளுக்கு முன்பாக, மேரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்ததாகவும், அக்குழந்தைக்கு ‘டேனி’ என பெயரை மேரி சூட்டியதாகவும் கூறினார். அந்த இழப்பின் வலி மிகவும் அதிகமாக இருந்ததால், மேரி தனது இறந்த குழந்தையைப் பற்றி மீண்டும் ஒருபோதும் யாரிடமும் பேசவில்லை. முதலில் ஒரு பொது மருத்துவராக மட்டுமே பயிற்சி பெற்ற கெர், பின்னர் இருதயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார். அதன் பிறகு நியூரோபயாலஜியில் முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் மேரியின் நிகழ்வை மிகவும் அசாதாரணமான ஒன்றாகக் கருதிய அவர், தனது பணியின் போக்கை மாற்றி, இறக்கும் மக்களின் அனுபவங்களைப் படிப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க முடிவு செய்தார். பட மூலாதாரம்,PLAN SHOOT / IMAZINS / GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிக்கு எது நல்லதோ அதுவே அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் கெர். மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களின் அனுபவங்கள் அவர் மேரியைச் சந்தித்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன. மரணம் அடையும் மக்கள் இறுதிக் கட்டத்தில் காணும் காட்சிகள் மற்றும் கனவுகளைப் பற்றிய ஆய்வில், உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் கிறிஸ்டோபர் கெர். இந்த அனுபவங்கள் பொதுவாக மரணத்திற்கு சில வாரங்கள் முன்பாகத் தொடங்கி, மரணம் நெருங்கும்போது இதன் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார் கெர். அப்போது மக்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை நினைவுகூர்வதையும், பல வருடங்களுக்கு முன்னர் இறந்த தங்கள் தாய், தந்தை, பிள்ளைகள் மட்டுமல்லாது இறந்த செல்லப்பிராணிகளுடன் கூட பேசுவதைத் தான் கண்டதாக கூறுகிறார் கெர். நோயாளிகளுக்கு இந்த காட்சிகள் உண்மையானதாகவும், தீவிரமானதாகவும், ஒரு வகையான அமைதி உணர்வைத் தருவதாகவும் தெரிகிறது. "காட்சிகளில் வரும் உறவுகள் பெரும்பாலும் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் ஆறுதலான வழிகளில் நோயாளிகளுக்கு தோன்றுகின்றனர். அது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறது. அதையொட்டி, அவர்களின் மரணம் குறித்த பயத்தை குறைக்கிறது", என்று மருத்துவர் கெர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். இந்த நோயாளிகள் குழப்பத்தில் அல்லது மனப்பிறழ்வில் இதைச் செய்யவில்லை. அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைந்தாலும் கூட, உணர்ச்சி ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்று கெர் குறிப்பிடுகிறார். இருப்பினும், பல மருத்துவர்கள் இந்த நிகழ்வை மாயத்தோற்றம் (Hallucination) அல்லது மனக் குழப்பத்தின் விளைவாக ஏற்படுகிறது எனக் கூறி இதை நிராகரிக்கிறார்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் மேலும் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதன் விளைவாக, 2010-இல் அமெரிக்காவில் ஒரு முன்னோடி ஆய்வைத் தொடங்கினார் கெர். கருத்துக்கணிப்புகள் மூலம், மரணத்தை நெருங்கும் நோயாளிகளிடம் அவர்களுக்கு என்ன தெரிகிறது என கேட்டு, ஆய்வு செய்யத் தொடங்கினார். பட மூலாதாரம்,CHRISTOPHER KERR படக்குறிப்பு,மரணத்திற்கு அருகில் உள்ளவர்களின் அனுபவங்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளார் கிறிஸ்டோபர் கெர். இந்த ஆய்வுகளில் நோயாளிகளை ஈடுபடுத்துவதற்கு முன், மனக் குழப்பத்தில் இல்லை என்பதை உறுதிசெய்ய, அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த ஆய்வுக்கு முன், இந்த அனுபவங்களைப் பற்றிய பெரும்பாலான அறிக்கைகள் மூன்றாம் தரப்பினரிடமிருந்து தான் வந்தன. நோயாளி எதைப் பார்க்கிறார் என்று அவர்கள் நினைத்தார்களோ அதுவே ஆவணப்படுத்தப்பட்டது. ஸ்வீடிஷ் தேசிய மருத்துவ நூலகம் உட்பட பல அறிவியல் ஆய்விதழ்களில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நோயாளிகளின் இந்த அனுபவங்களை விளக்குவதற்கு ஒரு உறுதியான பதிலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அதே சமயத்தில் இத்தகைய அனுபவங்களின் காரணத்தைப் புரிந்துகொள்வது தனது ஆய்வுகளின் முக்கிய நோக்கம் இல்லை என்றும் கெர் கூறுகிறார். "ஆதாரத்தையும் செயல்முறையையும் என்னால் விளக்க முடியவில்லை என்பதால் அது நோயாளியின் அனுபவத்தை போலியானதாக மாற்றி விடாது," என்று அவர் கூறுகிறார். கெர் இப்போது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின், பஃபலோ நகரில் மரணவலி தணிப்புச் சிகிச்சையை (Palliative care) வழங்கும் ஒரு அமைப்பின் தலைமை நிர்வாகியாக உள்ளார். அவரது புத்தகமான, ‘Death Is But a Dream: Finding Hope and Meaning at Life's End’, 2020இல் வெளியிடப்பட்டு 10 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த இறுதி அனுபவங்கள் இறப்பு மீதான பயத்தை குறைக்கின்றன என்கிறார் கெர். இறுதி அனுபவங்களைப் பற்றி கற்றுக்கொண்டது என்ன? பிபிசி நியூஸ் பிரேசிலிடம் தனது ஆய்வுகள் மற்றும் வாழ்க்கையின் இறுதி அனுபவங்களின் அர்த்தம் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் மருத்துவர் கிறிஸ்டோபர் கெர். இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இறுதி அனுபவங்களைப் பற்றி கற்றுக்கொண்டது என்ன? "மரணம் என்பதில் நாம் காணும் உடல் ரீதியான வீழ்ச்சியை விட, அதில் இன்னும் அதிகமான விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். மரணம் நெருங்கும் சமயம் என்பது, உங்கள் கருத்துகள் மற்றும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றம், வாழ்க்கையை உறுதிப்படுத்தும் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.” "மரணம் உங்களை வாழ்க்கையின் கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான விஷயங்கள் குறித்தும், மிகப்பெரிய சாதனைகளாக கருதும் வாழ்வின் உறவுகள் குறித்தும் கவனம் செலுத்த மக்கள் முனைகிறார்கள்.” “அவர்களின் இந்த நினைவுகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு சுவாரஸ்யமான, மிகவும் அர்த்தமுள்ள மற்றும் ஆறுதலான வழிகளில் அவர்கள் முன் தோன்றுகின்றன. அவை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன, இறப்பு மீதான பயத்தை குறைக்கின்றன.” "ஒருவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும்போது நாம் எதிர்பார்ப்பது என்னவென்றால் அவர்கள் உளவியல் ரீதியான துன்பத்தை அனுபவிப்பார்கள் என்று. ஆனால் அவ்வாறு இல்லை. அன்பு மற்றும் வாழ்வின் அர்த்தம் பற்றிய உணர்வுகளால் மக்கள் ஆட்கொள்ளப்படுவதை நாங்கள் காண்கிறோம்." உங்கள் ஆராய்ச்சியின்படி, இந்த வாழ்க்கையின் இறுதி அனுபவங்கள் எவ்வளவு பொதுவானவை? "எங்கள் ஆய்வுகளில் பங்கேற்ற சுமார் 88% மக்கள், இந்த அனுபவங்களில் ஒன்றாவது தங்களுக்கு ஏற்பட்டதாக கூறினர். இது வழக்கமான விகிதத்தை விட அதிகமாக இருந்தது, அனேகமாக 20% அதிகம். காரணம் நாங்கள் தினந்தோறும் ஆய்வுகளில் ஈடுபட்டோம், மக்களிடம் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.” "மரணம் என்பது உடனடியாக நிகழ்வது அல்ல, அது ஒரு செயல்முறை. எனவே, ஒரு திங்கட்கிழமை அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும், வெள்ளிக்கிழமை அதைவிட வித்தியாசமான ஒரு பதிலை நீங்கள் பெறலாம். நோயாளிகள் மரணத்தை நெருங்கும்போது இந்த நிகழ்வுகளின் தாக்கம் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இறுதி அனுபவங்கள் நோயாளிகளுக்கு மிகுந்த ஆறுதலைத் தரும் என்கிறார் கெர். 'காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வது' இந்த அனுபவங்களின் முக்கிய கருப்பொருள்கள் என்ன? "நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வது போன்ற காட்சிகள் தோன்றுவதாகக் கூறுகின்றனர். பெரும்பாலும் அவர்கள் நேசித்த மற்றும் இழந்த நபர்களை நினைவுகூர்கிறார்கள்.” "மரணத்தை நெருங்கும்போது இந்தக் காட்சிகள் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆறுதலான அனுபவமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரைப் பற்றி கனவு கண்டார்கள் என்பதும் சுவாரஸ்யமானது. அவர்கள் தங்களை நேசித்தவர்கள், ஆதரித்தவர்கள் மற்றும் மிகவும் முக்கியமானவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அது தாய், தந்தையில் ஒருவராக அல்லது உடன்பிறப்புகளில் ஒருவராக இருக்கலாம், மற்றவர் குறித்து அவர்கள் நினைப்பதில்லை.” "இந்த கருத்துக்கணிப்புகளில், சுமார் 12% பேர் தங்களுக்கு தோன்றிய கனவுகள், அசௌகரியமானதாக இருந்தது என்கின்றனர். அதாவது, உங்களுக்கு வாழ்வில் எந்த காயங்கள் இருந்தாலும், இந்த அனுபவங்கள் மூலம் அவை வெளிப்படும். போரில் ஈடுபட்டு, தப்பிப்பிழைத்த ஒருவருக்கு குற்ற உணர்வு இருக்கலாம், ஆனால் வாழ்வின் இறுதியில் போரில் மரணித்த தோழர்களைப் இந்தக் கனவுகளில் பார்க்கும்போது அவர் ஆறுதல் அடைவார்." இதை மாயத்தோற்றம் என்று நினைப்பது தவறு என நீங்கள் சொல்கிறீர்கள். இந்த அனுபவங்களை வேறுபடுத்துவது எது? "சித்தப்பிரமை அல்லது குழப்பமான மனநிலைகள் மிகவும் பொதுவானவை, குறிப்பாக வாழ்க்கையின் முடிவில் ஏற்படக்கூடும். ஆனால் இந்த அனுபவங்கள் அதிலிருந்து மிகவும் வேறுபட்டவை. மக்கள் சித்தபிரமை நிலையிலிருந்து எளிதாக வெளியே வருவதில்லை. அந்த நிலை அவர்களின் பயத்தைத் தூண்டும் அல்லது நோயாளிகளை அடிக்கடி மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நிலையில், படுக்கையில் கட்டிப்போட வேண்டிய நிலையில் அல்லது மூர்க்கமானவர்களாக மாற்றிவிடும்.” "ஆனால் மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளின் அனுபவங்கள் உண்மையான மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளினால் தூண்டப்பட்டவை. அவர்கள் அதை தெளிவுடன் நினைவுகூர்வார்கள். மேலும் அந்த அனுபவங்கள் மிகுந்த ஆறுதலைத் தரும்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிகளில் சுமார் 12% பேர் தங்களுக்கு தோன்றிய கனவுகள், அசௌகரியமானதாக இருந்தது என்கின்றனர். குழந்தைகளின் இறுதி அனுபவங்கள் சில நேரங்களில் நோயாளிகள் கனவு காண்கிறார்கள், ஆனால் மற்ற நேரங்களில் அவர்கள் விழித்திருக்கிறார்கள். இந்த இரண்டு வகையான அனுபவங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளதா? "ஆய்வின்போது, நோயாளிகளிடம் தூங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரம் குறித்துக் கேட்டோம், அது உண்மையில் 50-50 என்ற ரீதியில் இருந்தது.” "மரணத்தை நெருங்குவது என்பதில் ஒரு தீவிரமான உறக்க செயல்முறையும் அடங்கும். பகல், இரவு என்ற கால சுழற்சி உடைந்து விடும், நேரம் கணக்கில்கொள்ளப்படாது. எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாத போது, யதார்த்த நிலை குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை." நீங்கள் உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் ஆய்வு செய்கிறீர்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் இறுதி அனுபவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? "குழந்தைகள் இதை இன்னும் சிறப்பாகச் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அவர்கள் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் கோடுகளை வரைவதில்லை. அவர்களுக்கு மரணம் குறித்த கருத்துகளும் இல்லை. எனவே, அவர்கள் அந்த தருணத்தில் உண்மையாக வாழ்கிறார்கள்.” "அவர்களுக்கு இந்த அனுபவங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் வண்ணமயமான வழிகளில் ஏற்படுவதைக் காண முடியும். இதன் அர்த்தத்தையும் அவர்கள் உள்ளுணர்வு மூலம் அறிந்துகொள்வார்கள்.” "இறந்து போன யாரையாவது அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றால், நிச்சயமாக இறந்துபோன ஏதேனும் விலங்குகளைப் பற்றி அறிந்திருப்பார்கள். அது குறித்த அனுபவங்கள் ஏற்படும்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிகள் மரணத்தை நெருங்கும்போது இறந்தவர்கள் குறித்த காட்சிகள் அதிகம் தோன்றும் என்று கெர் கூறுகிறார் குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீதான தாக்கம் இந்த அனுபவங்கள் நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? "750 நோயாளிகளின் நேர்காணல்களுடன் இரண்டு ஆவணங்களை வெளியிட்டோம். இதன் முடிவுகள் என்னவென்றால், நோயாளிக்கு எது நல்லதோ அதுவே அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் நல்லதாகப் பார்க்கப்படுகிறது.” "துக்கத்தின் செயல்முறைகளைப் பற்றி நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஆய்வை மேற்கொண்டோம். இந்த வகையான விஷயங்களைக் கண்டவர்கள் மிகவும் நேர்மறையான வழிகளில் துக்கத்தை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் அவர்கள் இழந்த நபரின் நினைவையும் அவர்கள் குறித்த உணர்வையும் இது மாற்றி வடிவமைக்கிறது." இந்த விஷயத்தைப் பற்றிய பெரும்பாலான விவாதங்கள் மனிதநேயம் சார்ந்த துறைகளில் இருந்து தான் வந்துள்ளன, மருத்துவத் துறைகளில் இருந்து அல்ல என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த ஆய்வுக்கு மருத்துவம் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை? கடந்த சில ஆண்டுகளில் அது மாறியுள்ளதா? "இல்லை, அது மோசமாகி வருகிறது என்று நினைக்கிறேன். மனிதநேயம் நமது இருப்பையும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்று நான் நினைக்கிறேன். மனிதநேயத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கிறது." பட மூலாதாரம்,GETTY IMAGES 'மரணம் குறித்த அனுபவங்களில் ஆர்வம் காட்டும் மக்கள்' மற்ற மருத்துவர்கள் ஆதாரங்களைக் கேட்டதால் தான் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கியதாகச் சொன்னீர்கள். ஆனால் உங்கள் பணி மருத்துவத் துறையை விட மீடியாக்களிடம் இருந்து அதிக கவனத்தைப் பெற்றது. இந்த மாறுபாட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? "நோயாளிகளின் இறுதி அனுபவங்களை, இளம் மருத்துவர்களுக்கு புரிய வைத்து, அவர்கள் பாராட்டைப் பெறுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனவே ஆதாரங்களை உருவாக்கி, அவற்றை அவர்களுக்கு புரியக்கூடிய வகையில் முன்வைத்தோம்.” "ஆனால் தவறான பிரிவினரை திருப்திபடுத்த முயற்சி செய்கிறேன் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், இந்த ஆய்வு குறித்து முக்கிய ஊடகங்களில் வெளியான போது, அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது." "எனவே, மருத்துவச் சேவையை வழங்குபவர்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை, ஆனால் அந்தச் சேவையைப் பெறுபவர்கள் அல்லது பராமரிப்பில் இருப்பவர்கள் அல்லது மரணம் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், இந்த ஆய்வைப் பாராட்டுகிறார்கள். இந்த முரண்பாடு சுவாரஸ்யமாக உள்ளது" https://www.bbc.com/tamil/articles/c72py6j0eldo
  17. எங்கள் அடுத்த சந்ததிக்கு ஊரும் இல்லை, பெயரும் இல்லை. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். 🙏
  18. குத்தகைக்கு எடுத்து சொந்த மக்களின் மீதே (மலக்) குண்டுகளை போட்டவனுக்கு பழக்க தோசம். இனி மீள்வது கடினம். 😪
  19. சிறிலங்கனின் முக்கிய பிரச்சனை குத்தகைக்கு விமானங்களை எடுத்து ஓடுவது...! மூல தனம் இல்லாதது தான் முக்கிய பிரச்சனை போல உள்ளது...! பாலைக் கறக்கும் போது...கண்டுக்கும் கொஞ்சமாவது விட வேணும் தானே!
  20. இவை அனைத்தையும் விட அதிக விலையானது சிறி லிங்கன் விமான பயண ரிக்கற். அப்படியானால் எப்படி???
  21. அவுஸ் விமான நிறுவனத்தின் வரியின் பின்னான நிகர இலாபம் $1.74 பில்லியன் (2023). பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் $3.8 பில்லியன். எயர் பிரான்ஸ் $1.1 பில்லியன். சிறி லங்கன் ????
  22. நிமல் பூனை கண்ணை மூடினா உலகம் இருட்டாக்கி விடும் என்பது போல் கதை அளக்கிறார் .
  23. உங்களது இணைப்பு மொழி ஜேர்மைனில் உள்ளது என நினைக்கிறேன், கோவிட் தடுப்பூசிகளுக்காக பல நாட்டரசுகள் தமது வரிப்பணத்தினை இந்த நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்கள், இதில் அஸ்ரா செனிக்கா மட்டுமே தனது உற்பத்தி செலவுடன் தடுப்பூசியினை வழங்க பைசர் போன்ற நிறுவனங்கள் இலாபமீட்டியிருந்தனர்.
  24. இது தற்போதய அரசின் ஒரு தந்திரம் உண்மையான நீண்டகால தொலைநோக்கோடு உள்நாட்டு அபிவிருத்தியினை ஏற்படுத்த உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்காமல் குறுங்காலத்தில் இறக்குமதி மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலையினை குறைத்து மக்கள் வாழ்க்கை செலவினை குறைத்து இரணில் அரசு நிலமையினை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது எனும் ஒரு மாயையினை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெறுவதனை நோக்கமாக கொண்டு செய்யப்படுகிறது. இதனால் நீண்டகால பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது, இலங்கை தொடர்ச்சியாக இந்த் நச்சுவட்டத்திலேயே தொடர்ந்திருக்கும்.
  25. செய்தியை பல முறை வாசித்த பின்னர் தான் கருத்துக்கள் எழுதப்படுகின்றது. பழைய காலத்து நடை முறைகளை இனியாவது தவிர்க்கவும். 😎 கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுக்குத்து பகையாம்.....இது போல்தால் கதை போகின்றது
  26. குறை ஒன்றும் இல்லை “மறை”மூர்த்தி கண்ணா🤣 எல்லாரும் விக்கத்தான் நிற்கினம். எதை என்பதில்தான் வேறுபாடு🤣
  27. இலங்கையின் தமிழ் ஊடகங்கள் இந்தியன் எக்ஸ்ப்றஸ் போன்ற இந்திய ஊடகங்களில் இருந்து இந்த செய்தியைப் பிரதி செய்து போட்டிருக்கின்றன. இந்திய ஊடகங்களில் "பக்க விளைவை இப்போது தான் AZ ஒப்புக் கொண்டிருப்பது போலவும், அதனால் மக்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும்" எழுதுகிறார்கள்😂. இந்த AZ Vaccine பக்கவிளைவுகள் பற்றி யாழிலேயே விவாதித்த பழைய திரிகள் இருக்கின்றன. அரிதான குருதியுறையும் பக்க விளைவை முதலில் கண்டறிந்து வெளியிட்டதே AZ இன் கண்காணிப்பு சிஸ்ரம் தான். அதன் பின்னரும், இது வரையில் இளம் பெண்கள் தவிர்த்த ஏனையோரில் இந்த தடுப்பூசி பாவிக்கப் பட்டே வந்தது. இப்போதுள்ள பிரச்சினை, AZ தடுப்பூசி ஒரிஜினலாக தயாரிக்கப் பட்ட வைரசை விட திரிபடைந்த வைரசு தான் இப்போது பரவி வருகிறது. ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் போல உடனடியாக இந்த AZ தடுப்பூசியை மீள வடிவமைக்க முடியாது. எனவே, பாவனையும் குறைந்து விட்டது. உற்பத்தியும் நிறுத்தப் படுகிறது.
  28. வழக்கம் போன்று பொறுப்பற்ற முறையில் தமிழ் ஊடகம், முக்கியமாக தினக்குரல் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது. அஸ்ராசெனிகா உலகளவில் கொவிட் தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்து செல்வதனாலும், சந்தையில் வேறு பல கொவிட் தடுப்பூசிகள் இருப்பதனாலும், தன் தடுப்பூசியை திரும்பப் பெறுவதுடன், தயாரிப்பதையும் நிறுத்துவதாகவே அறிவித்துள்ளது. தன் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதால், திரும்பப் பெறுவதாக அந் நிறுவனம்அறிவிக்கவில்லை. மேலும்: May 7 (Reuters) - AstraZeneca (AZN.L), opens new tab said on Tuesday it had initiated the worldwide withdrawal of its COVID-19 vaccine due to a "surplus of available updated vaccines" since the pandemic. The company also said it would proceed to withdraw the vaccine Vaxzevria's marketing authorizations within Europe. "As multiple, variant COVID-19 vaccines have since been developed there is a surplus of available updated vaccines," the company said, adding that this had led to a decline in demand for Vaxzevria, which is no longer being manufactured or supplied. https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/astrazeneca-withdraw-covid-vaccine-worldwide-telegraph-reports-2024-05-07/ LondonCNN — AstraZeneca is withdrawing its highly successful coronavirus vaccine, citing the availability of a plethora of new shots that has led to a decline in demand. The vaccine — called Vaxzevria and developed in partnership with the University of Oxford — has been one of the main Covid-19 vaccines worldwide, with more than 3 billion doses supplied since the first was administered in the United Kingdom on January 4, 2021. But the vaccine has not generated revenue for AstraZeneca since April 2023, the company said. https://www.cnn.com/2024/05/08/business/astrazeneca-covid-vaccine-withdrawal/index.html https://www.bbc.com/news/health-68977026
  29. சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன் தமிழில் : அழகிய மணவாளன் “கண்ணாடி மிக அதிகமான பதிப்புகள் வெளிவந்த பெஸ்ட் செல்லர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல் பைபிளைவிட அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்பட்ட புனிதமான நூல்.“ (நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்) கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்தித்திளைக்கிறார்கள். அதில் மூழ்கி தங்களை தொலைத்தும் விடுகிறார்கள். கண்ணாடியைவிட ஈர்ப்பான வேறு எந்த பொருளையும் மனிதன் படைக்கவில்லை.‘ கண்ணாடியைப் பார்த்து வாங்கமுடியாது/ கண்ணாடி பார்ப்பவர்களாக ஆகிவிடுவோம்’. கண்ணாடி மாட்டப்படாத வீடு எது? அங்காடிகளில் ’இது ஒரு வீடு’ என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. நீரில் பிரதிபலித்த ’சுயரூபம்’ தான் மனிதனில் தன்னுணர்வை உருவாக்கியது. தன் சொந்த நீர்ப்பிம்பத்திலிருந்து உருவாகிவரும் தன்னுணர்வை விவரிக்கும் உருவகக்கதை ஒன்றுண்டு: நிறைமாத கர்ப்பிணியான புலி மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகளை பதுங்கியிருந்து தாக்குகிறது. ஆடுகள் தப்பிவிடுகின்றன. வேகமாக பாய்ந்தது கீழே விழுந்த அதிர்வில் புலி குட்டியை ஈன்றுவிட்டு பிரசவத்திலேயே இறந்தும் விடுகிறது. ஆடுகள் அனாதையான புலிக்குட்டியை தங்களுடன் எடுத்துச்சென்று வளர்த்தன. அது ஆடுகளுடன் புல்லை உணவாக சாப்பிட்டது. ஆடுபோல கனைத்து, மிகமெதுவாக நடந்து புல்மேய்ந்து வாழ்ந்தது. ஒருநாள் ஆடுகளுடன் இருந்த அந்த புலிக்குட்டியை இரை தேடிவந்த புலி ஒன்று பார்க்கிறது. புலியைப்பார்த்ததும் ஆடுகள் ஓடி மறைந்துவிடுகின்றன. பயத்தில் ஸ்தம்பித்து நின்ற புலிக்குட்டியை புலி ஆசுவாசப்படுத்தியது. ‘ நீ என் உறவினன். நீ ஆட்டுக்குட்டி அல்ல புலிக்குட்டி. நீ வளர்ந்து பெரிதாகும்போது என்னைப்போல ஆவாய். நாம் புல் சாப்பிட வேண்டியவர்கள் அல்ல. ஆட்டிறைச்சியும் முயலிறைச்சியும்தான் நமது உணவு. என்னுடன் வா, உனக்கு உன்னை யார் என்று காட்டித்தருகிறேன் ’ என்று சொல்லி புலிக்குட்டியை அருகே உள்ள ஆற்றிற்கு அழைத்துச்சென்றது. ஆற்றங்கரையின் ஓரத்தில் தன்னுடன் நின்ற புலிக்குட்டியிடம் ஆற்றை பார்க்கச்சொன்னது புலி. புலிக்குட்டி சிறியது என்றாலும் பார்க்க புலிபோலவே இருக்கும் தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. தன்னை அழைத்துவந்த புலியை பார்த்தது, தன்னால் எவ்வளவுமுடியுமோ அவ்வளவுக்கு தன்னையே பார்த்துக்கொண்டது, தன் நீர்ப்பிம்பத்தை பார்த்தது. மாறிமாறி பார்த்ததுக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் புலியாக ஆகக்கூடிய உயிர்த்துடிப்பு தன் உடலில் நிறைந்திருப்பதை உணர்ந்துகொண்டது. தான் புலிதான் என்று அதற்கு நம்பிக்கை வரத்தொடங்கியது என்றாலும் புலியின் உருமல் அதை அச்சுறுத்தியது. ’வா இது முடியவில்லை. உன்னை இன்னும் நீ அறியவேண்டியிருக்கிறது’ என்று சொல்லி புலி ஒரு முயலை வேட்டையாடி புலிக்குட்டிக்கு கொடுத்தது. புல் சாப்பிட்ட பழகிய புலிக்குட்டி முதன்முறையாக சுவை என்றால் என்ன என்பதை அறிகிறது. புலி மட்டுமே அறிய சாத்தியமான தீவிரமான சுவை. தீப்பற்றியது போன்ற உன்மத்தத்தில் அது முயல் இறைச்சியை கடித்து கிழித்து உண்டது. அது தன்னையறியாமலேயே உருமியது. மறைந்திருந்த தேற்றைப்பற்களும் நகங்களும் வெளியே வந்தன. என் பருவடிவம் புலியாக ஆகிக்கொண்டிருக்கிறது. தானாக ஆதல் என்பது எவ்வளவு கம்பீரமான அனுபவம்! எந்த உருவகக்கதையையும்போல இந்த கதையிலும் புலி புலி அல்ல. இந்த கதையில் நிகழ்வதுபோல இம்மாதிரியான புறவயமான தூண்டுதலால் புலிக்குட்டி புலியாக ஆவதில்லை. தன் நீர்ப்பிம்பத்தை கண்டுகொள்ளவோ, அந்த கண்டுபிடிப்பை மாற்றத்திற்கான தூண்டுதலாக ஆக்கவோ புலியால் முடியாது. ஆனால் அந்த ஆற்றல் கொண்ட மனிதனின், அவன் பரிணாமத்தின் கதையாக மாற இந்த புலிக்கதையால் முடியும். மனிதப்பரிணாமத்தின் பொதுத்தன்மையை விவரிப்பதற்காக மட்டுமல்ல அதன் நுட்பமான தனி இயல்புகளையும் சொல்ல இந்த கதையால் முடியும். நரேந்திரனில் விவேகானந்தரை கண்டுகொண்டு அதை நோக்கி அவரை செலுத்திய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையும் ஒருவகையில் இந்த புலிக்கதைதான். குழந்தைப்பருவத்தில் மனித சிசு தாண்டிவரும் ஒரு இக்கட்டை நாடகீயமாக இந்த கதை கையாண்டிருக்கிறது. எப்போது என்று உறுதியாக சொல்லமுடியாத தொல்பழங்காலத்தில், இன்றைய நவீன மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் அதன் குழந்தைப்பருவத்திலிருந்த மனிதன் தன் தோற்றத்தை/’சுய’ ரூபத்தை நீர்ப்பிம்பத்தில் கண்டுகொண்டுதான் அவனாக ஆகத்தொடங்குகிறான். அது நீர்ப்பிம்பமாக இருக்கலாம் அல்லது பிளாட்டோ சொல்வதுபோல எரியும் நெருப்பிற்கு பின்புறம் உள்ள குகைச்சுவற்றில் பதிந்த நிழலாக இருக்கலாம். அதில் மனிதன் முதல்முறையாக தன்னை நேரடியாக பார்க்கிறான் (ஒருவகையில் எல்லா புகைப்படங்களும் நீர்ப்பிம்பங்களின் பதிலிவடிவங்கள் அல்லவா?). நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டடைந்து அதுவழியாக தன்னுணர்வு உருவாகி வருவதன் புறவயமான சித்திரம் இந்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த உருவகக்கதை மிகப்பழையது. ‘கண்ணாடிப்பருவம் (mirror stage)’ என்ற லக்கானின்(Jacques Lacan) உளவியல்ரீதியான கண்டுபிடிப்பிற்கு பல காலம் முன்பே இந்த கதையில் அந்த கருதுகோள் தோற்றம் மாறி நம்மிடம் வந்துசேர்ந்துவிட்டிருக்கிறது. ஒருவகையில் ஆன்மிகமான தேடலில் தன்னை அறிதல்(Realisation) நிகழ்வதற்கு முன்பு கடக்கவேண்டிய தடையையும் அந்த கதை சுட்டிக்காட்டுகிறது. ஸ்ரீநாராயண குரு தான் நிறுவிய கோவில்களில் கண்ணாடியை பிரதிஷ்டை1 செய்தது தன்னுணர்வு கொண்ட மனிதனை உருவாக்குவதற்காகத்தான் (’ஆத்மவிலாசம்’ என்ற பெயரில் நாராயணகுரு ஒரு வசன கவிதை எழுதியிருக்கிறார். அதில் கண்ணாடி பற்றிய அவருடைய அகத்தரிசனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. எவ்வளவு விளக்கங்கள் அளித்தாலும் தீராத அர்த்த சாத்தியங்களுடன், அதற்குமேல் செறிவாக்கவே முடியாத அளவுக்கு அடர்ந்த மொழியில் அந்த கவிதை எழுதப்பட்டிருக்கிறது). புல்தின்று ஆடுகளுடன் வாழ்ந்த அந்த புலிக்குட்டியைப்போல மனிதன் என்ற போதம் இல்லாமல் வாழ்பவர்களை தன்னுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகத்தான் நாராயணகுரு கண்ணாடியை பிரதிஷ்டை செய்தார். கண்ணாடியில் நீ உன் உடலைப்பார். இது மனித உடல். ஈழவன் என்றோ, தலித் என்றோ பிராமணன் என்றோ உள்ள பிரிவினைகளுக்கு அப்பால் உள்ளது மனித உடல். எந்த மனிதனிலும் உள்ள எண்ணற்ற சாத்தியங்கள் உன்னிலும் உண்டு. கண்ணாடியில் உன்னைப்பார். உன்னில் இருப்பது சாதி முத்திரையில்லை, மனிதன் என்ற முத்திரை மட்டும்தான். கண்ணாடியில் உன்னைப்பார், ஒரே ஒரு சாதியும் ஒரேயொரு மதமும் ஒரே ஒரு தெய்வமும்தான் இருக்கிறது, அது எந்த வகைபேதங்களும் அற்ற ’மனிதனை’த்தானே காட்டுகிறது? தன்னுணர்வை உருவாக்கும் கண்ணாடி என்ற ஊடகத்தை வழிபாட்டிற்கு உரியதாக ஆக்குவது வழியாக ’மனிதனை’ உருவாக்கியெடுக்கிறார் நாராயணகுரு. மனிதன் அல்லாத மற்ற எந்த உயிரினத்தாலும் அறிந்துகொள்ளமுடியாத தன்னுணர்வை நாராயணகுரு அழுத்தமாக சொல்கிறார். உண்மையில் நாராயணகுரு கண்ணாடி பிரதிஷ்டை செய்யவில்லை, கண்ணாடியில் மனிதனை அவர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மனிதன் தவிர்த்த உயிர்க்குலங்கள் அனைத்தும் இயற்கை என்ற மென்பொருளில் நிம்மதியாக வாழ்கின்றன (மனிதன் அந்த சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவன்). மனிதன் தான் சுயமாகவே உருவாக்கிக்கொண்ட, ஆனாலும் அவனுக்கு போதுமானதாக இல்லாத மென்பொருளில் இயங்குகிறான். இதைப்பற்றிய கற்பனையம்சம் நிறைந்த விவரணை கிரேக்க தொன்மமான எபிமெதீயஸ்(Epimetheus) ப்ரோமெதீயஸ்(Prometheus) என்ற இரட்டையர்களின் கதையில் இருக்கிறது. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களுக்கு எபிமெதீயஸ் தன்னிடம் இருக்கும் அரியவற்றை வரமாக கொடுக்கிறான். அடர்ந்த தோல், உடலின் மேற்பரப்பில் குளிர்தாங்கும் அடர்ந்த ரோமங்கள், குளம்பு, நகம், தேற்றைப்பல், கொம்பு, பல அடுக்குகள் கொண்ட குடல், பார்க்க அழகான புறவுடல், அதிக வேகம், உடல்வலிமை, தீவிரமான புலன்கள் என உயிர்வாழ்க்கைக்கு அவசியமானவற்றையெல்லாம் உயிர்களுக்கு எபிமெத்யூஸ் அளிக்கிறான். மனிதனின் முறை வரும்போது தன் கைவசம் இருப்பதையெல்லாம் எபிமெத்யூஸ் கொடுத்து தீர்த்துவிட்டிருந்தான். பிறர் உதவியில்லாமல் வாழமுடியாத, மிகமிக கைவிடப்பட்டவனான மனிதன் முன் எபிமெத்யூஸ் தன்னிடம் எதுவும் இல்லை என கையை விரித்துவிட்டான். மனிதனுக்கு நல்ல உடையைக்கூட எபிமெதீயஸ் அளிக்கவில்லை. மனிதன் மேல் இரக்கம் கொண்ட ப்ரோமெதீயஸ் தேவலோகத்திலிருந்து நெருப்பை கவர்ந்துவந்து அவனுக்கு அளிக்கிறான். நெருப்பை எரிபொருளாக ஆக்கி தான் உயிர்வாழ்வதற்குரிய மென்பொருளை தானே உருவாக்கிக்கொண்டான் மனிதன். முதல்முறையாக நீரில் உற்று பார்க்கும்போது அதில் இருக்கும் பிம்பம் தன் சொந்த நிழல்தான் என்பதை மனிதன் கண்டடைகிறான். ப்ரோமெதீயஸ் அவனுக்கு அளித்த நெருப்பின் முதல் ஒளிர்வு அந்த தருணத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த தருணத்திலிருந்து தன்னைத்தானே பார்த்துக்கொள்ள முடியாத- கண்டுகொள்ள முடியாத- ஆரம்பகட்ட உயிரினங்களிலிருந்து மனிதன் உயர்கிறான். அதுவரை கடவுளைத்தவிர யாராலும் அறிய முடியாத அவனுடைய பிம்பத்தை, நிழலை மனிதன் முதன்முறையாக காண்கிறான். ஆத்மவிலாசம் என்ற கவிதையில் ‘இந்த கண்ணாடிதான் நம் கடவுள்’ என்று நாராயணகுரு சொல்கிறார். ’ நம்மை நாம் நேருக்கு நேராக பார்க்கமுடிந்ததில்லை’. இதோ இப்போது அதற்கான வழிமுறை உருவாகியிருக்கிறது. ‘கடவுள் என்பது பரிசுத்தமான கண், அது கண்ணாடியாகவும் ஆகியிருக்கிறது’. கண்ணாடியை கடவுளின் சதுர வடிவமான கண் என்கிறார் சில்வியா பிளாத். பயணத்திற்கு கிளம்பும் மனிதன் கண்ணாடிமுன் நின்று விடைபெற்றுசெல்வதுபோன்ற ஓவியம் ஒன்றை வரைவது வழியாக ஒட்டுமொத்த மனித வளர்ச்சியின் நுண்வரலாற்றை ஒவியனால் சித்தரித்துக்காட்டிவிடமுடியும். மலையாள நாவலாசிரியரும் இதழாளரும் ஆன எம்.பி.நாராயணபிள்ளையின் ‘நினைவுகூர்தல்’ என்ற சிறுகதை கண்ணாடியைப்பற்றிய கண்டடைதல்கொண்ட நல்ல சிறுகதை. அந்த சிறுகதையில் கதைசொல்லி ஒரு கடிதமெழுதி முடித்து அடியில் கையெழுத்துப்போடும்போது சட்டென அவனுக்கு தன் பெயர் நினைவுக்கு வராது. எவ்வளவு முயற்சித்தாலும் பெயர் நினைவுக்கு வராது. ஒருவன் இல்லாத இடத்தில் அவனை பிரதிநிதித்துவப்படுத்துவது அவன் பெயர்தான். ஒருவனை நேரில் பார்த்தேயிராதவர்களுக்கு அவனுடைய பெயர் மட்டும்தான் அவனாக இருக்கிறது. பெயர் என்பது மனிதனைவிட விரிவானது, அவனுடைய பதிலி. ”ஒருவனின் உண்மைத்தன்மை அவனுடைய பெயர்தான் இல்லையா? பெயர் இல்லாவிட்டால் தன்னால் இந்த கடிதத்தை முழுமையாக்க முடியுமா? யாரிடமாவது கேட்க முடியுமா தன் பெயர் என்ன என்று? அதுவும் இந்த இரவில்? (பெயரிடுவதற்கு முன்பு உள்ள இன்மையை, இருளை இந்த இரவு நினைவுபடுத்துகிறதோ?) என் முகத்தை பார்த்தால் ஒருவேளை பெயர் நினைவுக்கு வரலாம். அதை பார்க்கலாம்….. மெழுகுவர்த்திக்கு நேராக உள்ள கண்ணாடிக்கு நேராக நடக்கிறான். நல்ல பரிச்சயம். பரிசயமுள்ளவர்களை பார்க்கும்போது சிரிக்கவேண்டும் அல்லவா. சிரித்தேன். கண்டுபிடித்துவிட்டேன். ஓ, இது வேலப்பன் அல்லவா?” கதைசொல்லிக்கு வேலப்பன் என்ற தனித்தன்மையை அளித்த மனிதப்பண்பாடு அதன் பயணத்தை தொடங்கியது கண்ணாடிப்பிம்பத்திலிருந்து உடைத்து வெளிவந்த தன்னுணர்விலிருந்துதான் இல்லையா? கண்ணாடிக்கு முன் நின்றவுடன் எவ்வளவு வேகமாக கதைசொல்லி தன்னை அறிந்துகொள்கிறான், எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு அவன் பெயர் நினைவுக்கு வருகிறது! “இந்த கண்ணாடிப்பிம்பம் வழியாகத்தானே நான் வேறுபட்ட இருப்பாக ஆகியிருக்கிறேன்? வேறு ஒரு இருப்பான ’கையெழுத்து’ இப்போது என்னுடையதாக ஆகிவிட்டது. ‘ வி.வேலப்பன். இது போதும். இனி கையெழுத்திடலாம். வி.வேலப்பன் என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கடியில் ஒரு கோடு வரைந்து இரண்டு புள்ளிகள்” நீர்ப்பிம்பத்தில் தன்னை கண்டுகொண்டதால் மட்டும் மனிதன் விலங்காக அல்லாமல் ஆவதில்லை. மேலும் தன்னுணர்வு இல்லாததை விலங்குகளும், பறவைகளும் மோதாமையாகவும் உணர்வதில்லை. அவை இயற்கையின் மென்பொருளில் பாதுகாப்பாக தொடர்வதற்கு அந்த அறியாமை அவசியமானது. ‘செயற்கை நுண்ணறிவால்’ உருவாக்கப்பட்ட, தானாகவே இயங்கும் வாகனம் ஓட்டுநரால் இயக்கப்படும் வாகனத்தைவிட பாதுகாப்பானதாக இருப்பது போல இயற்கையின் பிடியில் உள்ள விலங்குகளின் நிலை நாம் இருக்கும் நிலையைவிட பாதுகாப்பானது. செயற்கை நுண்ணறிவில் இயங்கும் வாகனத்திற்கு முன்னே ஆபத்துகள் எதுவும் இல்லை, வளைவில் சட்டென எதிர்ப்படும் வாகனங்கள் அதிர்ச்சியடையச் செய்வதில்லை, தற்செயல்கள் இல்லை, நாளை இல்லை, நேற்று இல்லை, மரணம் இல்லை. அந்தந்த கணங்கள் மட்டும். தன்னால் நிறைந்த தான் மட்டும். தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் முயலை மனிதக்கற்பனையில் பிறந்த கதைகளில் மட்டும்தான் பார்க்கமுடியும். ஒரு தனிவிலங்கிற்கு தனக்கு மட்டுமேயான எந்த பொறுப்பும் இல்லை, எந்த பதற்றமும் இல்லை. எந்த விலங்கும் தனித்தன்மை கொண்டதல்ல. தனித்தன்மையை அடைவதற்கு அவசியமான வீழ்ச்சியையோ உயர்வையோ அவற்றின் பரிணாத்தில் எதிர்கொள்ளவில்லை. ஒன்றாம் நூற்றாண்டின் நரிக்கும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு நரிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள நரிக்கும் கொயிலாண்டியில் உள்ள நரிக்குமிடையே எந்த வித்தியாசமும் இல்லை. அவற்றிற்கு கால-இடம் இல்லை. தன் நிழலை தன்னுடையதுதான் என்று கண்டடைவதற்கான அறிவு அவற்றிற்கு அருளப்பட்டிருந்தால் அவை இயற்கையின், பாதுகாப்பின் மென்பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும். கண்ணாடியுடன் தங்களால் உரையாட முடிவதில்லை என்பதை விலங்குகள் போதாமையாக உணர்வதில்லை. விலங்கு தன் சொந்த நிழல் தன்னுடையதுதான் என்பதை அறிய நேர்ந்தால் அவை நார்ஸிஸஸ் போல மனம் பிறழ்ந்துவிடும். நீரில் தெரியும் பிம்பம் தன்னுடையதுதான் என்று அவை அறிந்திருந்தால், அந்த பிம்பம்மீது கண்மூடித்தனமாக காதலிக்க ஆரம்பித்திருக்கும். அந்த காதலின் மிக மோசமான நிலையைத்தான் நாம் நார்ஸிஸஸில் பார்க்கிறோம். நார்ஸிஸஸிற்கு மனிதன் தவிர்த்த உயிரினங்களுக்கு உள்ள பாதுகாப்பு கவசம் (இயற்கையை நாம் அப்படியும் அழைக்கலாம்)இல்லாமலாகிறது, தனக்கென சுயமான பாதுகாப்பு கவசத்தை படைப்பதற்கான ஆற்றலும் அவனுக்கு இல்லை. தன்னுணர்வாக கனிவடைவதற்கு முன்பு உள்ள குருட்டுத்தனமான சுயமோக நிலை. இயற்கை அளித்த பாதுகாப்பின் கூட்டை உடைத்து வெளியே வந்த தன்னை எல்லாம் மறந்து கட்டித்தழுவிக்கொள்கிறான் நார்ஸிஸஸ். நார்ஸிஸஸின் கதை தொல்பழங்காலத்தில் எங்கேயே நிகழ்ந்த சம்பவமோ, அந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதையோ அல்ல. வெளிப்படாமல் இருக்க சாத்தியமில்லாத, இந்த ஒரு வடிவத்தில் அல்லாமல் வேறெப்படியும் வெளிப்படமுடியாத ஒரு கண்டடைதல்தான் நார்ஸிஸஸின் கதை. நம் வழியாக, நம்மையும் கதாப்பாத்திரங்களாக ஆக்கி இன்னும் தொடரும் ஒரு கதை (அதை முழுமுற்றாக பகிர்ந்து முடிக்க முடியாததால் அதை நாம் ‘தொன்மம்’ என்று சொல்கிறோம்). நாம் இன்னும்கூட நார்ஸிஸஸுக்கு தீவிரமான விழைவை ஏற்படுத்திய தற்பிம்பத்தை வெறுக்கக்கூடியவர்களாக ஆகவில்லை. தன்னை எவ்வளவு வரைந்தாலும், எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும், இதோ இன்று தொடர்ச்சியாக தற்படங்கள் எடுத்தாலும் மனிதனுக்கு நிறையவில்லை. அசாதாரணமான கோணங்களில் தற்படம் எடுப்பதற்காக அபாயகரமான இடங்களில் தவறிவிழுந்து இறப்பவர்கள் என உலகம் முழுக்க தினம் ஒருவர் என்ற கணக்கில் நார்ஸிஸஸ்கள் நிகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு வகுப்பறைகளில் புத்தகங்களுக்கு கீழே மறைத்துவைத்த கண்ணாடியில் பார்த்து உதடு, கண், மூக்கு இவற்றையெல்லாம் மனதில் பதியவைத்துக்கொண்டவர்கள் இன்று செல்ஃபி எடுக்கும் வசதி உள்ள கைபேசியை நெஞ்சில்வைத்து உறங்குகிறார்கள். எந்த மனிதனும் நார்ஸிஸஸ் விழுந்து இறந்த தடாகத்தில் நீராடி நிறைவடைந்தவர்கள் அல்ல. ‘ நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தில் மற்ற யாரையும் நான் பார்க்கவில்லை’ எதிலும் படியும் தற்பிம்பத்தை தான் என்று நினைத்து மயங்கும் ஒவ்வொரு கணமும் நாம் நார்ஸிஸஸாக ஆகிவிடுகிறோம். தான் வடித்த சிற்பத்தின் அழகில், முழுமையில் பித்தாகி தற்கொலை செய்துகொண்ட சிற்பியும் நார்ஸிஸஸ் அன்றி பிறிதொருவன் இல்லை. கதையில் என்பதுபோல கணநேரத்தில் நாடகீயமான மரணம் எதுவும் நிகழாமலிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அழிக்கக்கூடிய சில அம்சங்கள் ஆழமான சுயமோகத்தில் உள்ளது. தற்பிம்பத்தை பார்த்து ’அது நான்தான்’ என்று நம்மை அறியாமலேயே நாம் உணரும்நிலை தன்னறிதல் அல்ல. தற்பிம்பத்தை பார்த்து அது தன் பிம்பம்தான் என்ற கண்டடைதலிலிருந்துதான் (realisation) தன்னை அறிதல் நிகழ்கிறது. ஒன்றை அது மட்டுமாகவே பார்ப்பவர்களும் நார்ஸிஸ்டுகள்தான். நேரடியான பொருளில் (Literal reading) இலக்கியத்தை வாசிப்பவர்களும் நார்ஸிஸ்ட்டுகள்தான். வெறும் ஆடிப்பிம்பம் என்பதிலிருந்து தொடங்கி தன்னை அறிதல் நோக்கி உயர்ந்தும் படிநிலைகளில் முதல்படி நாராயணகுரு கோவில்களில் நிறுவிய ’கண்ணாடி’. கண்ணாடி பிம்பத்தில் ஒருவன் தன்னை பார்த்து, அதன் அடுத்த படியாக அது மனிதனின் பிம்பம் என்பதை உணர்ந்து, அதற்கு அடுத்த படியாக அது சாராம்சமானதோ, முழுமுடிவானதோ அல்ல நிழல்தான் என்று அறிந்து அதன்வழியாக ‘ அறியும் தன்னிலை’யை கண்டடையும் ஒரு மனிதனைத்தான் நாராயணகுரு உத்தேசித்தார். பிம்பமாக ஆவது எது? என்பதை அறியும் உயிரை (mortal). ‘நம்மை மட்டுமில்லை, நம்மால் காணப்படுவது அனைத்தையும் பிம்பமாக ஆக்குவதற்கான வாய்ப்பை கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்’ (ஆத்மவிலாசம்) கண்ணாடியில் தன்னை காண்பதற்கும் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் உள்ள ரத்தத்தை கண்ணாடியில் தெரியும் முகத்தில் துடைப்பதற்கும் கண்ணாடியை பார்த்து சொந்த முகத்திலிருந்து துடைப்பதற்கும் இடையேயான வேறுபாடு. நார்ஸிஸஸ் நீரில் தன்னை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அதை கட்டியணைக்க முயன்றபோது அது தான் அல்ல, தன் நீர்ப்பிம்பம் என்று அவன் அறியவில்லை (அது நிழல், அது ஜடம் என்கிறார் நாராயணகுரு). சுயமோகத்தில் தன்னுணர்வின்மை உண்டு என்றும் அது ஆன்மாவை ஒட்டுமொத்தமாகவே அழிக்கக்கூடியது என்றும் நார்ஸிஸஸ் நமக்கு கற்றுத்தருகிறான். ‘சுயமே உருவாக்கிய தடைகளை’ இல்லாமலாக்குவது எளிதல்ல. ராமாயணத்தில் உள்ள சாயாக்ரஹணி கதை மனிதசுயம் கடக்கவேண்டிய தடை பற்றிய உருவகக்கதை. ராமாயணத்தில் சீதையைக்காண அனுமன் இந்திய பெருங்கடலை கடக்கும்போது சாயாக்ரஹணி என்ற அரக்கியிடம் அகப்படுகிறான், அவள் உயிர்களை கொல்வது அவற்றின் நிழலை கைப்பற்றுவது வழியாக. அவளிடம் அகப்பட்ட அனுமன் கொஞ்சநேரம் சஞ்சலமடைந்துவிடுகிறான். பின் தன் சுயத்தை மீட்டெடுத்து சாயாக்ரஹணி என்ற அரக்கியை அழித்துவிட்டு ராமனுக்காக தான் ஆற்ற வேண்டிய பயணத்தை அனுமன் தொடர்கிறான். இந்தியப்பெருங்கடல் நீரில் பிரதிபலித்த தன் நீர்ப்பிம்பத்தில் தன் சொந்த உடலின் கம்பீரத்திலும், அழகிலும் ஈர்க்கப்பட்டு சிந்தையற்று நின்றுவிட்ட அனுமன் தன்னை சூழ்ந்த நார்ஸிஸ சுழலில் சிக்கிக்கொண்டதன் கதையைத்தான் சாயாக்ரஹணி என்ற உருவகம் வழியாக வால்மீகி சித்தரித்திருக்கிறார். அது தான் அல்ல, தன் நிழல்தான் என்று அறிந்தபோது கைகூடிய தன்னறிதலுடன், அதிக தேஜஸுடன் அனுமன் சமுத்திரத்தை கடக்கிறான். ராமனுக்கு செய்யும் சேவையாக இலங்கை போகும் அனுமன் அழித்தது சுயமோகத்தைத்தான். நார்ஸிஸஸை வென்ற அந்த அரக்கி, அனுமனை கொஞ்ச நேரத்திற்கு குழப்பிய, சொந்த நீர்ப்பிம்பத்தின் முன் ஸ்தம்பித்து நிற்கச்செய்த அந்த அரக்கி, கண்ணாடி என்ற இந்த நீர்ப்பரப்பில் எப்போதும் இருக்கிறாள். சில்வியா பிளாத்தின் Mirror என்ற கவிதையில் தன் இளமையை கொஞ்சகொஞ்சமாக விழுங்கும் அந்த அரக்கியை தெளிவில்லாமல் என்றாலும் நம்மால் காணமுடிகிறது. தன் ஆடிப்பிம்பம் தன்னுடையதுதான் என்று எண்ணுபவர்களை அந்த அரக்கி மிகமிக எளிதாக கைப்பற்றிவிடுகிறாள். பெண் தன்னை கண்ணாடியில் பார்க்காமலிருக்கக்கூடிய தைரியத்தை அடையும்போதுதான் அவள் விடுதலை அடைகிறாள் என்று எழுத்தாளர் மாதவிக்குட்டி சுட்டிக்காட்டுவது பெண்களை இன்னும் சுவைத்து உண்ணும், கண்ணாடியில் இருக்கும் சாயாக்ரஹணி என்ற அரக்கியின் இருப்பைத்தான். ‘ நிழலை பிடித்துவைத்த இந்த அரக்கியை/ வீட்டு சுவரில் மாட்டியது ஏன்/ இப்போது எதற்காக என்றாலும் இந்த மூதேவியிடம் முகம் காட்டவேண்டும்/ வெளியே போகும்முன் முதலில் அவள் என்னை உடல்பரிசோதனை செய்து முடிக்கவேண்டும்/ கண்ணாடியில் தெரியும் முகங்களெல்லாம்/ அவள் உறிஞ்சிவிட்டதால் இரத்தம் வற்றிய முகங்கள்’ சுயமோகம் உலகம் மீதான காதலாக மாறும்போது இந்த அரக்கி பலவீனமானவளாக ஆகிவிடுகிறாள். ‘ அவனவன் சுயவிருப்பத்திற்காக செய்யும் விஷயங்கள் பிறரும் மகிழ்ச்சியடைவதாக ஆகும்போது’ அவள் இல்லாமலாகிவிடுகிறாள். இந்த பரிணாமத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய படைப்பு ஆற்றூர் ரவிவர்மாவின் ‘அர்க்கம்’ என்ற கவிதை. கவிதைசொல்லிக்கு தன் ஆடிப்பிம்பத்திலிருந்து கண்ணை விலக்க முடியவில்லை ‘ காலையில் வேலைக்கு கிளம்பும்போது எவ்வளவுமுறை கண்ணாடி பார்த்தும் நிறைவதில்லை’ கண்ணாடியில் மட்டுமல்ல நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்திலும் கவிதைசொல்லி தன்னைத்தவிர மற்ற யாரையும் பார்ப்பதில்லை. ஆனால் அது தான் அல்ல தன் நிழல் மட்டும்தான் என்றும், கண்ணாடியை விட்டு வெளியேறிவிட்டால் அது இல்லாமலாகிவிடுகிறது அதற்கென தனி இருப்பு இல்லை என்பதையும் கவிதைசொல்லி உணர்ந்துகொள்கிறான். எவ்வளவுமுறை பார்த்தாலும் தன் முகம் எப்படியிருக்கிறது என்பதை அறியமுடிவதில்லை. ஆடிபிம்பம் காட்டிய சுயத்தால் நிறைவடையாத கவிதைசொல்லி வீட்டைவிட்டு வெளியேறி, கோகர்ணத்திற்கும் கன்யாகுமரிக்கும் செல்கிறான். ஆன்மவிடுதலையை அளிக்கக்கூடிய நிலங்கள். பலரின் கொந்தளிக்கும் கேள்விகளுக்கு பதில் கிடைத்த இடம். ஆனால் அங்கு எங்குமே கவிதைசொல்லி ‘தன்னை தனக்கு காட்டவில்லை’ என்று உணர்கிறான். கீழை மரபை விடுத்து மேற்கத்திய நவீன சிந்தனையில் வழி தேடுகிறான். பீஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் செல்கிறான். பலருக்கு புதியவகையான சுயகண்டடைதலை அளித்த இடங்கள். காடு முழுக்க தேனைத்தேடி அலைந்தவன் கடைசியில் வீட்டிமுற்றத்தின் எருக்கங்செடியில் தேனை கண்டுடைவதுபோல தன் வசிப்பிடத்தில் தன் சூழலிலேயே அவன் தன் சுயத்தை கண்டடைகிறான். அப்போது அது தன்னில் மட்டும் இல்லை என்பதையும் அறிகிறான். தூரத்தில் உள்ள கடலின் நீலநீர்ப்பெருக்கும், அதன் விளிம்பில் உள்ள தொடுவான்கோடும், கீழே உள்ள நுரைக்கும் அலைவெளியும் கரையும் நான்தான். தன்னை வெல்வது, தன்னை கடப்பது என்பது தன் நிழல் மீதான, தன் பிம்பம் மீதான வெற்றிதான். தன்னை வென்றவனுக்கு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரதிபலிக்கும்தன்மையை அடைந்துவிடுகிறது. இந்த கவிதையில் அப்பட்டமான அழகு இல்லாத, யாருடைய கவனத்தையும் ஈர்க்கக்கூடிய வசீகரம் இல்லாத, அதனாலேயே தேன்கூடு கட்டும் தேனீக்களை ஈர்க்கக்கூடிய, சுயமாகவே மருத்துவகுணங்கள் கொண்ட எருக்கங்செடியில் கவிதைசொல்லி தன்னை கண்டடைகிறான். ’ நான் ஒரு எருக்காக நிற்கிறேன்’ ஒருவேளை மலையாளத்தில் மிக குறைவாக கண்ணாடிபார்த்த கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவாகத்தான் இருக்க வேண்டும். ஆற்றூர் ரவிவர்மாவை ஒரு தாவரமாக ஆக்கினால் அவர் எருக்குச்செடியாகத்தான் நின்றுகொண்டிருப்பார். புத்தனாக உருமாறிய சித்தார்த்தனின் வாழ்க்கையைப் பாருங்கள். சுயமோகம் கொண்டவனுக்கு நிம்மதியாக வாழ தேவையானதெல்லாம் சித்தார்த்த இளவரசனுக்காக மாளிகையில் அவன் தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அரசர்களின் வழக்கமான திரைக்கதையிலிருந்து அவன் திசைதிரும்பிவிடாமலிருக்கத் தேவையான எல்லாம். தன் அழகை புகழ சுவரெங்கும் கண்ணாடிகள்; தன் கவர்ச்சியை பிரதிபலிக்க நிறைய அழகிகள்; தன் கனிவை,அன்பை காட்ட அழகிய நல்லியல்புகள் கொண்ட மனைவி; தன் தகுதிகளை வாழ்த்திப்பாடும் நிறைய துதிபாடிகள், அவனின் சுவைவுணர்வை கொண்ட பல்வேறுவகையான உணவுகள், தன் அதிகாரத்தை நினைவுறுத்த பணியாட்கள், காட்டிலிருக்கும் உணர்வை தனக்காக அளித்த மலர்வனங்கள் அனைத்தும் அவனுக்கு இருந்தது… அரண்மனையில் தன்னை மகிழ்விக்கும், தன்னை துதிக்கும் இந்த கண்ணாடிகளிலிருந்து வேறுபட்ட ஒரு கண்ணாடி வெளியே இருந்தது. தன் இருபத்தி யொன்பதாம் வயதில் சித்தார்த்தன் அந்த கண்ணாடி முன் நிற்கிறான். அதில் சித்தார்த்தன் ஆழமான நிலைகுலைவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை பார்க்கிறான். முதுமையை, நோயை, வறுமையை, மரணத்தை. ஜரா-நரை பாதித்த அந்த மனிதனில் தன்னை மட்டுமல்ல தான் உட்பட உள்ள, இனி பிறக்கப்போகும் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும் ஒன்றை ஆடிப்பிம்பமாக சித்தார்த்தன் பார்க்கிறான். நோயாளியின் நசிந்த உடல் யாரும் எப்போது வேண்டுமானாலும் ஆகச் சாத்தியமான நிலை ஒன்றை அவனுக்கு சுட்டிக்காட்டியது. இறந்தவிட்ட மனித உடல் ஒவ்வொரு மனிதனையும் காத்திருக்கும், யாராலும் தவிர்க்கமுடியாத நிலையை அறிவுறுத்தியது. அவையெல்லாவற்றை பிரதிபலித்த கண்ணாடியில் மிக மிக நிலைகுலைந்த ஒருவனின் பிம்பத்தை புத்தனாக ஆகிவிட்ட சித்தார்த்தன் காண்கிறான். அரண்மனையில் கண்ணாடியில் மாயை காட்டிக்கொண்டிருந்த வசீகரிமான ஆடிப்பிம்பம் சித்தார்த்தனுக்கு உவப்பில்லாததாகவும், பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. மகிழ்பவர்கள், திருஷ்ணையில்(விழைவுகளில்) திளைத்திருப்பவர்கள் சுயமோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமான நிலையின்மை கொண்ட , அனைத்திலும் அழிவின் நிழல் கொண்ட உலகத்தில், அறியாமை மட்டும்தான் மனிதனின் நிம்மதிக்கு காரணம். மனிதப்பிரக்ஞையில் மரணமோ நிச்சயமின்மையோ அழிவோ உட்படவில்லை என்றும் அதனால்தான் மனிதன் எந்த யதார்த்தமும் இல்லாத மகிழ்ச்சியில் வாழ்கிறான் என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். எந்த ஒன்றும் அது மட்டுமே அல்ல என்றும் அதன் இருப்பு அதை மட்டுமே சார்ந்தது இல்லை என்பதையும் சித்தார்த்தன் அறிகிறான். சித்தார்த்தன் அரண்மனையிலிருந்து இரவில் வெளியேறி பலவகையான தடைகளை தாண்டி புத்தனில் சென்றுசேர்கிறான். புனுயேலின்(Luis Bunuel) இயக்கிய மில்கி வே(Milky way) என்ற திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியால் உந்தப்பட்டு பால் சக்கரியா ‘ கண்ணாடி பார்க்கும்வரை’ என்ற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். கிருஸ்து கண்ணாடியை எதிர்கொள்ளும் காட்சி. அந்த காட்சியின் தரிசனரீதியான ஆழத்திற்கு சக்கரியா பொருத்தமான கதைவடிவத்தை தந்திருக்கிறார். கிருஸ்துவிற்கு நன்றாக பொருந்தக்கூடிய வடிவம் (அவரை வேறு ஒரு வடிவில் நாம் கற்பனை செய்வதில்லை) நீளமான முடியும் தாடியும் மீசையும்தான். அதை வெட்டுவதற்காக கிருஸ்து நாவிதரின் கடைக்கு செல்கிறார். நாவிதர் அங்கே புதிதாக மாட்டப்பட்ட கண்ணாடியை பார்க்க சொல்கிறார். அதுவரை கிருஸ்து தன்னை எதிர்கொண்டதில்லை. அவர் சஞ்சலமடைகிறார். ‘ வேண்டாம் வேண்டாம்’ கிருஸ்து மிகமெல்லிய ஒலியில் கண்ணாடியிடம் சொல்கிறார். ‘ நீ என்னை எனக்கு காட்டவேண்டாம். அதில் நான் எதைப்பார்க்கப்போகிறேன் என்பதை இப்போது என்னால் ஊகிக்கமுடியவில்லை; எனக்கு பயமாக இருக்கிறது. கண்ணாடி மணிமுழங்குவது போன்ற ஒலியில் “ வா, கிருஸ்து வா… உனக்கு தெரியாதா? நீ எனக்குள்ளே இருக்கிறாய்; இரண்டே இரண்டு அடி முன்னால் வந்து கொஞ்சம் குனிந்து பார்த்தால்போதும், நாம் மூவரும் ஒன்றுதான் ‘. கிருஸ்து சொன்னார்.’ இல்லை இல்லை. நான் பார்க்கவிழைவதை நீ காட்டமுடியுமா? இல்லை, இல்லை’ தன் நீண்ட அங்கியில் வியர்வை வழிவதை உணர்ந்தார். கடும்புயலில் சிக்கியதுபோல தள்ளாடினார். அவர் எதை அஞ்சினார்? தன்னை தன் புறவயமான வடிவத்தில் பார்ப்பதையா? தன் தெய்வாம்சத்தை இழந்துவிடுவோம் என்று பயந்தாரா? தன்னை சூழ்ந்திருக்கும் ரகசியத்தன்மையை சோதித்துப்பார்ப்பதில் உள்ள அச்சமா? மனிதர்களை சரியான திசையில் செலுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வகுமாரன் தனித்தன்மையை, தனிமையை அஞ்சினாரா? இன்று நாம் காணும் கிருஸ்துவின் மழிக்கப்படாத முகம் (கண்ணாடியையே பார்த்திராத முகம்) அவரின் ஆரம்பகால ஓவியங்களில், சிற்பங்களில், மொழியில் வெளிப்படவில்லை (பைபிளில் கிருஸ்துவின் உருவம் சார்ந்த விவரணைகளே இல்லை. கிருஸ்துவின் ஆரம்பகட்ட சிற்பங்கள் ஒன்றில் christ with St.Paul (389 AD) மழிக்கப்பட்ட முகம்கொண்ட கிருஸ்துதான் இருக்கிறார். புனுயேலும் சக்கரியாவும் சித்தரித்திருக்கும் கிருஸ்துவின் சஞ்சலத்தைவிட அவரை தாடி மீசையுடன் சித்தரிக்கவேண்டுமா கூடாதா என்ற குழப்பத்தில் அவரை வரைந்த ஓவியர்கள் சஞ்சலம் அடைந்திருப்பார்கள். மழித்த முகம் கிருஸ்துவிற்கு பொருந்தக்கூடியதா? மழித்தலில் ஒரு பிரத்யேக காலம் இருக்கிறது. சவரக்கத்தி உண்டு. இன்றைய நம்முடைய வழக்கப்படி முன்னால் ஒரு கண்ணாடி உண்டு. பரமபிதாவின் மகன், எல்லாகாலத்திற்குமான மகன், அவருக்கு மழித்த முகம் பொருத்தமானதா? இந்த ஒரு பதற்றத்தைதான் சக்கரியா தன் சிறுகதை வழியாக நமக்கு பகிர்கிறார். கிருஸ்துவின் உருவம் பல நூற்றாண்டுகள் அழிவின்மையின் குறியீடாக நிலைநிற்க தாடி மீசை கொண்ட இயற்கையான தோற்றம் போதும் என சில கலைஞர்கள் முடிவெடுக்கிறார்கள். பின்னர் அதை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனாலும் கண்ணாடி முன்னால் புயலில் சிக்கித்தவித்ததுபோல தடுமாறிய கிருஸ்துவை முதன்முதலாக கற்பனைசெய்த கலைஞன் எத்தனை இரவுகள் தூக்கமிழந்திருப்பான்? கடைசியில் அவனுடைய கிருஸ்து எந்த சஞ்சலமும் இல்லாமல் கண்ணாடியை நிராகரிக்கிறார். ——————————————————————————————————————– கேரளம் முழுக்க நாராயணகுரு சாதிமத பேதமில்லாமல் அனைவரும் வழிபடுவதற்கான கோவில்களை நிறுவினார். ஒவ்வொரு கோவிலிலும் கண்ணாடியையும் பிரதிஷ்டை செய்தார். எங்கு நிறைந்திருக்கும் கடவுளுக்கு வருணாசிரம பிரிவினை இல்லை, அவர் எல்லா மனிதர்களின் அகத்தில் இருக்கிறார். கடவுளை வழிபட வருபவர்கள் கண்ணாடியில் தன் ஆடிப்பிம்பத்தை காண்பதுவழியாக தன்னையும், தன்னில் உள்ள கடவுளையும் உணர்ந்துகொள்ள முடியும் என்பதால்தான் கண்ணாடியை பிரதிஷ்டை செய்தேன் என்கிறார் நாராயணகுரு. ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு. https://akazhonline.com/?p=7185
  30. சிங்கள ஜனாதிபதி : ஜே ஆர் ஜெயவர்த்தன‌ ஆட்சிக்காலம் : 1978 ‍- 1988 தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு : 40.05 % யாழ்ப்பாணம் : 20.54% திருகோணமலை : 48.64% வன்னி : 46.42 % சராசரி : 38.9125 % ஜெயவர்த்தன நிகழ்த்திய முக்கியமான படுகொலைகளில் சில‌ 1977 தமிழர் மீதான அரச வன்முறை அல்லது கலவரம் : 300+ தமிழர்கள் 1981 இல் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் மீதான படுகொலைகள் : 25+ தமிழர்கள் 1983 தின்னைவேலிப் படுகொலை : 60+ தமிழர்கள் 1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் : 53 தமிழ் அரசியல்க் கைதிகள் 1983 கறுப்பு ஜூலை இனக்கொலை : 3000+ தமிழர்கள் கொல்லப்பட்டு 125,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு, தமிழர்களின் வர்த்தகங்களும், வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன‌ 1984 வவுனியா சாம்பல்த்தோட்டம் படுகொலைகள் : 70+ தமிழர்கள் 1984 சுன்னாகம் சந்தை மற்றும் பொலீஸ் நிலையப் படுகொலைகள் : 100+ தமிழர்கள் 1984 ஆவணி மன்னார் படுகொலைகள் : 140+ தமிழர்கள் 1984 யாழ்ப்பாணம் கோடைகாலப் படுகொலைகள் : 250+ தமிழர்கள் 1984 வடமராட்சி படுகொலைகள் : 35 + தமிழர்கள் 1984 கார்த்திகை உரும்பிராய்ப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 1984 கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து மற்றும் புகையிரதங்கள் மீதான படுகொலைகள் : 100+ தமிழர்கள் 1984 மணலாறு, தென்னைமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் படுகொலைகள் : 500 + தமிழர்கள் 1984 மார்கழிப் படுகொலைகள் , வடக்குக் கிழக்கில் : 1200+ தமிழர்கள் 1984 ஒதியாமலை, செட்டிகுளம், சேமமடு படுகொலைகள் : 340+ தமிழர்கள் 1984 வவுனியா இராணுவ முகாம் படுகொலைகள் : 100 + தமிழர்கள் 1984 அமரவயல், மணலாறு, தென்னைமரவாடி படுகொலைகள் : 180 + தமிழர்கள் 1984 மன்னார் மார்கழி படுகொலைகள் : 150 + தமிழர்கள் 1984 மார்கழி வவுனியா படுகொலைகள் : 100 + தமிழர்கள் 1984 மார்கழி மதவாச்சிப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 1984 மார்கழி முல்லைத்தீவு படுகொலைகள் : 210 + தமிழர்கள்
  31. இன்று செத்தால் நாளைக்கு பால் எண்ட எங்கடை தத்துவத்தை போல்.....😂 உடல் வலிமை இருக்கும் போது சோறு தண்ணியில்லாமல் சொத்து காசு பணம் என நேர காலமில்லாமல் வேலை செய்து.... கடைசி நேரத்தில் எதையுமே சாப்பிட முடியாமல்....எழுந்து நடக்க முடியாமல் இருப்பவர்களை கண்ட அனுபவங்களில்..... உடல் வலிமை இருக்கும் போதே எல்லாவற்றையுமே அனுபவித்து விடுங்கள். இளமையில் அனுபவிக்காததை முதுமையில் அனுபவிக்கலாம் என கனவுகாணாதீர்கள்.
  32. சேச்சே .......... மற்றவர்களுக்கு குத்தும்போது சிறிதும் பயம் கிடையாது.......! 😂
  33. இது நிச்சயம் பிழைதான். காலாவதியான உணவை தெரிந்து கொண்டே நாம் உண்ணும் போது நாம் தெரிந்து ரிஸ்க் எடுக்கிறோம். அந்த bun இல் கண்ணுக்கு தெரியாத fungus இருந்து பேதி புடுங்கினால் அது எமது சாய்ஸ். ஆனால் முழு விலை கொடுத்து நம்பி வாங்கி, உண்ணும் போது இதுவே நடந்தால் அது நியாயம் இல்லை. இங்கும் நீங்கள் சொன்னது போல் கடைகளில் திகதி முடியும் தறுவாயில் இருந்தால் குறைத்து போடுவார்கள். ஆனால் தமிழ் கடைகளில் கண்டும் காணாதது போல் விற்பார்கள். சிலர் ஸ்டிக்கரை மேலால் ஒட்டி வித்ததையும் கையும் களவுமாக பிடித்துள்ளேன்.
  34. அக்கா கடைக்காறர் திருந்துவது சாத்தியமில்லை, அவர்கள் வியாபாரிகள் எல்லோ! சட்ட நடவடிக்கைகளிற்கு, தண்டப்பணத்திற்கு பயந்து கொஞ்சம் ஒழுங்காக இருப்பது போல் நடிப்பினம். எழுந்தமானமாக கடைகளை சென்று பார்வையிடும் பிஎச்ஐ களால் தான் ஓரளவு தப்பித்து வாழ்கிறோம். பிஸ்கற், சோடா போன்றவை கூட காலாவதி திகதியின் பின் கவனிக்காதது போல விற்கிறார்கள்.
  35. அதிகாரங்களற்ற வெற்று மாவட்ட சபைகளை தீர்வாக முன்வைத்த அரசாங்கமும் அதிருப்தியடைந்த தமிழர் தரப்பும் பேச்சுவார்த்தையின் இரண்டாம் நாளின் முதற்பாதி இரு அடிப்படை விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதில் செலவிடப்பட்டது. தமிழர் தரப்பு முன்வைத்த கேள்வியான பேச்சுக்களில் அரசு கொண்டிருக்கும் ஆர்வம், அரச தரப்பு முன்வைத்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான கேள்வி, இருதரப்பும் ஒருவர் மீது மற்றையவர் முன்வைத்த யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. அன்று பிற்பகலில் அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் தீர்வை "புதிய தீர்வு" எனும் பெயரில் ஹெக்டர் ஜெயவர்த்தன முன்வைத்தார். அரசின் தீர்வினை முன்வைத்துப் பேசிய ஹெக்டர், இறுதித் தீர்வு 1978 ஆம் ஆண்டின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டினையும், சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி முறைமையினையும் முற்றாக ஏற்றுக்கொண்டதாக அமைதல் அவசியம் என்று கூறினார். மேலும், தான் முன்வைக்கும் தீர்வு 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டு பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட "அதிகாரப் பகிர்வின் அடிப்படையில்" அமைந்திருக்கும் என்றும் கூறினார்.சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரு ஆவணங்களை சபையில் சமர்ப்பித்த ஹெக்டர், தமிழ்த் தரப்பினர் அவற்றைக் கவனமாக படித்து, அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தீர்வினை அமுல்ப்படுத்த உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசு தரப்பு "புதிய தீர்வு" எனும் பெயரில் முன்வைத்த தீர்வு உண்மையிலேயே 1984 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் திகதி ஜெயவர்த்தன முன்வைத்த தீர்வேயன்றி வேறில்லை என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட அத்தீர்வு மாவட்ட / பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களை எப்படிப் பரவலாக்குவது என்பது குறித்து அரசியலமைப்பில் செய்யப்படக்கூடிய பத்தாவது திருத்தம் குறித்தே பேசியிருந்தது. ஆகவே, இத்தீர்வினை ஜெயார் முன்வைத்தபோதே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அதனை நிராகரித்திருந்ததுடன் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்க அவை எவ்விதத்திலும் போதுமானவை அல்லவென்றும் விமர்சித்திருந்தது என்றும் அமிர்தலிங்கம் கூறினார். திம்பு பேச்சுவார்த்தை மேசை, தமிழர் தரப்பு இடதுபுறத்தில். வலது புறத்தில் சிங்களத் தரப்பு இலங்கை முன்வைத்த தீர்வு நகல் குறித்து மூன்றாம் நாளான ஆடி 10 ஆம் திகதி ஆராய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றைய நாள் முடிவடையும்போது பேச்சுக்களில் ஈடுபட்ட இரு தரப்பும் இணைந்து அறிக்கையொன்றினை வெளியிடுவதென்று முடிவானது. அதன்படி 8 பேர் அடங்கிய கூட்டு பேச்சுவார்த்தைக்குழுவில் ஐந்து அரச தரப்புப் பிரதிநிதிகளும், மூன்று தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். மேலும், பூட்டான் அரசாங்கத்தினூடாகவே இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடலாம் என்று இக்கூட்டுக் குழு முடிவெடுத்தது. இப்பேச்சுவார்த்தைகளுக்கு கொழும்பு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் மூன்றாம் நாள் பேச்சுவார்த்தைகளின்போது சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களில் அரச தரப்பினை ஆதரித்தும், நியாயப்படுத்தியுமே செய்திகள் வெளிவந்தமையினால், தமிழர் தரப்பு இதுகுறித்து தனது ஆட்சேபணையினை தெரிவித்தது. குறிப்பாக, தமிழ்ப்பிரதிநிதிகள் தொடர்பாக விளித்தபோது அவர்களைப் பயங்கரவாதிகள் என்றே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக அழைத்து வந்தது. இதனையடுத்து, இதுகுறித்து தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு தெரிவித்தது. மூன்றாம் நாளின் பெரும்பாலான பகுதி அரசுதரப்பு முன்வைத்த தீர்வு தமிழர்களின் அபிலாஷைகளைத் தீர்க்கப் போதுமானவை அல்லவென்று தமிழர் தரப்பு அதன் மீது தனது விமர்சனங்களையும், ஆட்சேபணைகளையும் முன்வைப்பதிலேயே கழிந்தது. அரசு முன்வைத்த தீர்வு மாவட்ட சபைகள் மற்றும் பிராந்திய சபைகளையே அதியுச்ச அதிகாரப் பரவலாக்க அலகுகள் என்று குறிப்பிட்டிருந்ததுடன், கிராம மட்டத்திலான கிராமாதோய சபைகள் தொடங்கி ஐந்து அடுக்கு சபைகள் குறித்தும், இரண்டாம் சபை குறித்தும் அது பேசியது. அரசாங்கத்தின் மிகக் கீழ்மட்ட நிர்வாக அலகுகளாக கிராம சபைகளே இருக்கும். நாடு முழுவதுமாக 4500 கிராம சபைகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கிராம சபைகளில் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். அரசியலிலிருந்து விலகி நிர்வகிக்கப்படும் இச்சபைகள் அந்தந்தக் கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தும். பிரதேச சபைகள் இரண்டாம் நிலைச் சபைகளாக இருக்கும். உள்ளூர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இச்சபைகள் மேற்கொள்ளும். தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்படும் இச்சபைகள் நாடுமுழுவதும் உள்ள 250 பிரதேசச் சபைச் செயலகத் தொகுதிகளிலும் இருக்கும். மாவட்ட சபைகள் அரசாங்கத்தின் மூன்றாம் நிலை நிர்வாக அலகுகளாக இருக்கும். நாட்டிலிருக்கும் 25 மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு மாவட்ட சபை காணப்படும். மாவட்டத்தில் நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் இச்சபைகளுக்கான நிர்வாகிகள் தெரிவுசெய்யப்படுவார்கள். இச்சபைகளின் தலைவரும், பிரதித் தலைவரும் வாக்களர்களால் நேரடியாகவே தெரிவுசெய்யப்படலாம். தலைவரின் கீழ் அவருக்கு உதவவென அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படும். ஆனால், இந்த அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிப்பார். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும் இச்சபைகளின் அமைச்சர்களுக்கான அதிகாரம் கொழும்பிலிருக்கும் தேசிய அமைச்சர்களிடமிருந்து வழங்கப்பட்டதாக இருக்கும். அரசாங்கத்தின் நான்காம் மட்ட அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக மாகாணசபைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்றிற்கு மேற்பட்ட மாவட்ட சபைகளைக் கொண்டு மாகாண சபை அமைக்கப்படும். ஓரிரு மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் விருப்பு தேர்தல் மூலமாகவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவோ அறியப்பட்டு மாவட்டசபைகள் இணைக்கப்படலாம். இந்த மாவட்ட சபைகளில் முன்னர் பணியாற்றிய ஊழியர்கள் இணைக்கப்பட்ட மாகாணசபைகளில் பணியாற்றலாம். மாவட்ட சபைகளுக்கு இருக்கும் அதே அதிகாரங்களே மாகாண சபைகளுக்கும் இருக்கும். தேசிய சபைகளே நாட்டின் அதியுயர் அதிகாரப் பரவலாக்கல் சபையாகக் காணப்படும். பாராளுமன்றத்திற்கு அடுத்தநிலையில் இச்சபை காணப்படும் ஆதலால் இது இரண்டாவது சபை என்று அழைக்கப்படும். 75 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சபையில் மாவட்ட சபையின் தலைவர்களும் உபதலைவர்களும் 50 இடங்களை நிரப்ப, மீதி 25 இடங்கள் ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். 9 மாவகாணங்களைச் சேர்ந்த சேர்ந்த தலா இருவரும், இன்னும் 7 பேரும் ஜனாதிபதியினால் தெரிவுசெய்ப்படுவர். இச்சபைகள் பாராளுமன்றத்தில் ஆலோசனைகளைப் பரிந்துரை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதிதாக சட்டங்களை நிறைவேற்றவோ அல்லது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டங்களைத் தடுக்கும் அதிகாரமோ இவற்றிற்குக் கிடையாது. மாவட்ட சபைகளுக்கான அதிகாரங்கள் வெகு சொற்பமானவை. பாராளுமன்றத்தில் அமைச்சர்களினால் பகிரப்படும் பலமிழக்கப்பட்ட அதிகாரங்களை இவர்கள் பயன்படுத்தலாமேயன்றி, இவர்களால் பாராளுமன்றத்தை மீறிச் செயற்பட முடியாது. சொந்தமாக சட்டமியற்றும் அதிகாரமற்ற இச்சபைகள் பாராளுமன்றத்திடம் தமது தேவைகளைப் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவை நிராகரிக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் பாராளுமன்றத்தின் கைகளிலேயே இருக்கும். ஹெக்டர் முன்வைத்த ஆவணங்களைத் தான் மேலோட்டமாகப் பார்த்ததாகக் கூறிய சித்தார்த்தன், மாவட்ட சபைகளுக்கென்று அரசாங்கம் வழங்கவிருந்த அதிகாரங்கள் எந்தவித முக்கியத்துவமும் அற்றவையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், அந்த அதிகாரங்களைக் கூட தேவையான போது விலக்கிக்கொள்ளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், ஜனாதிபதிக்கும் கொடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகிறார். "நாம் அவர்கள் முன்வைத்த பட்டியலைப் பார்வையிட்டோம். எமக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. மிகையாகப் புகழப்பட்ட, சோடிக்கப்பட்ட நகர சபைகளையே அரசாங்கம் மாவட்ட சபை அடிப்படையிலான தீர்வு என்று முன்வைத்திருந்தது. நீங்களும் வேண்டுமானால் அதனைப் படித்துப் பார்த்து உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்" என்று என்னிடம் அந்த நகலைக் கொடுத்தார். ஹெக்டர் முன்வைத்த அரச பரிந்துரைக்கு மிகுந்த அதிருப்தியுடன் பதிலளித்த அமிர்தலிங்கம், "தமிழர்களை இனிமேலும் ஏமாற்ற முயலவேண்டாம்" என்று கூறினார். "மொழிப்பிரச்சினை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பாக மிக விரிவாக சர்வகட்சி மாநாட்டிலேயே நாம் விவாதித்திருக்கிறோம். நாம் இப்போது செய்யவேண்டிய அதிகாரத்தைப் பரவலாக்குவது குறித்து முடிவெடுப்பதுதான். சர்வகட்சி மாநாட்டில் அரசு முன்வைத்த பரிந்துரைகள் தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற சிறிதளவிலும் போதுமானவை அல்லவென்பதை நாம் உறுதியாகக் கூறியிருந்தோம். ஆகவே, உங்கள் தீர்வை நீங்கள் மேம்படுத்டுவது அவசியம். ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் தமிழர்கள் அதனை பரிசீலித்துப் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்" என்றும் கூறினார். அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கத்தின் பதிலினையடுத்து, "அப்படியானால், உங்களின் தீர்வினை முன்வைய்யுங்கள் பார்க்கலாம்?" என்று ஹெக்டர் அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கூறினார். இக்கோரிக்கையினை தமிழ்த் தரப்பு ஒருமித்து நிராகரித்தது. "தமிழரின் கோரிக்கையான தனிநாட்டிற்கு நிகரான தீர்வினை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமை. தமிழ் மக்கள் 1977 ஆம் ஆண்டு எமக்கு வழங்கிய ஆணையான தனிநாட்டில் நாம் இன்னமும் உறுதியாகவே நிற்கிறோம். ஆனால், தமிழ் மக்கள் கெளரவத்துடனும், சுதந்திரத்துடனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக்கூடிய வகையில் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். இலங்கையரச பிரதிநிதிகள் முன்வைத்த தீர்விற்கான பரிந்துரைகளையடுத்து விரக்தியடைந்த தமிழ்த் தரப்பு சந்திரசேகரனிடம் தாம் பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளிநடப்புச் செய்யப்போவதாகக் கூறியது. அரசாங்கம் தரமான தீர்வொன்றினை முன்வைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே திம்புப் பேச்சுவார்த்தைக்கு நாம் வந்தோம். ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முற்றாக ஏமாற்றமடைந்திருக்கிறது என்று சந்திரசேகரனைப் பார்த்து அமிர்தலிங்கம் கூறினார். தில்லியுடன் இதுகுறித்துக் கலந்துரையாடிய சந்திரசேகரன், இந்தியாவும் இலங்கை முன்வைத்திருக்கும் தீர்வு குறித்து திருப்தியடையவில்லையென்று கூறியதுடன், பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யவேண்டாம் என்றும் தமிழ்த் தரப்பைக் கேட்டுக்கொண்டார்.
  36. மேலைத்தேய விஞ்ஞான/ கெமிக்கல் கலந்த பாரிய பின் விளைவுகளை உருவாக்கும் பத்து வருட உதரவாதத்துடன் திகதியிட்டு வரும் உணவுகளை நம்புவர்கள்...... ஒரு போகத்திற்கு வைத்து உண்ணும் நம்மவர் உணவுகளை நம்ப மாட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.