Jump to content

Leaderboard

  1. ரசோதரன்

    ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      708


  2. யாயினி

    யாயினி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      9203


  3. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      1881


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      16284


Popular Content

Showing content with the highest reputation on 05/11/24 in all areas

  1. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம். உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது. மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள். 15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது. கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர். ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது. பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. (தொடரும்.....)
    8 points
  2. ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல். “ஓவியம் வரைந்துதான் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொதுவாகவே கருத்துகள் வைக்க வேண்டும் என்று எவருக்குமே கட்டாயம் இல்லை. ஆனால் கருத்துக்களத்துக்குள் நுழைந்து விட்டால் கை துருதுருக்கிறது. ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார் கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.
    3 points
  3. வயது போனால் இப்படித் தான் கற்பனைகள் வரும்.😆
    2 points
  4. எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை, வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன். மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?
    2 points
  5. ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன். எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன்.
    1 point
  6. உண்மை தான். ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம். ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும். மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
    1 point
  7. 🤣..... படம் எதுவும், ஒரு இடத்தை தவிர, எங்கேயும் எடுக்கவில்லை. அதனால என் பயணத்தில் இரண்டு 'படமும்' இல்லை என்று சொல்ல நினைத்தேன்........நாம என்னதான் அடக்கமாக இருந்தாலும், ஆள் வெளியிலிருந்து வந்திருக்கின்றார் என்று எப்படியோ கண்டு கொள்கின்றனர்.....100 ரூபா கச்சானை 200 ரூபா என்று கோவில் வீதியில் எனக்கு விற்றும் விட்டனர்....... 🤣
    1 point
  8. எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்! May 10, 2024 — கருணாகரன் — வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இலங்கையில் இனவாதச் சிந்தனையே அரசிடமும் பெரும்பாலான அரசியல், ஊடகத் தரப்பினரிடத்திலும் உண்டு. இனவாதச்சிந்தனை என்றாலே அது வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். கூடவே தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) கொண்டிருப்பதுமாகும். சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. இதனால் எப்போதும் தன்னைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வுடன் – பதற்றத்துடன் எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனை அதற்குள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும். இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கும் என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகுவது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக அணிதிரள்வது, மக்களைத் திரட்டுவது, மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கும். சிங்களத் தரப்பு தமிழர்கள் மீதும் தமிழர்கள் சிங்களவர் மீதும் கொண்டுள்ள சந்தேகமும் எதிர்ப்புணர்வும் (பகையுணர்வும்) இவ்வாறானதே. இப்படித்தான் முஸ்லிம்கள் மீது தமிழர்களும் சிங்களவர்களும் சிங்களவர், தமிழர் மீது முஸ்லிம்களும் சந்தேகம் கொள்வதும் எதிர்ப்புணர்வுடன் நோக்குவது என இந்த வியாதி தொடர்கிறது. அரசு இதில் முழுமூச்சாக இயங்குகிறது. போட்டியாக ஆளையாள் குற்றம் சாட்டிக் கொண்டு இனவாதத்தை எல்லோரும் வளர்க்கின்றனர். இதுவே லாபகரமான அரசியலாக்கப்பட்டுள்ளது. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வரலாற்றுப் பழியாகவே உள்ளது. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகள் உருவாகியிருக்கும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்கிறார்கள்? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இப்படிச் சில அடிப்படையான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு இன்னும் இலங்கைத்தீவில் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்களும் நோக்குகின்றனர். ஊடகங்களும் வெளியுலகமும் பார்க்கின்ற பார்வை உண்டு. இதற்குக் காரணம், அவை வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் வளர்ச்சியடைய முடியாது. அப்படி வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு நீண்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் பிற அமைப்புகளும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு நாற்றுப்போலவே அமைதிக்கான தரப்புகள் முளைத்தெழ வேண்டும். ஏற்கனவே இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை மக்களே தோற்கடித்து விட்டனர். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். நாடும் பொருளாதார ரீதியாகவும் ஜனநாயகம், அமைதி, சுபீட்சம் போன்றவற்றாலும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆக மொத்தத்தில் மக்களும் தமது தலைவர்களைப்போல இனவாதத்தில் சிக்கியுள்ளனர். தலைவர்களுக்கேற்ற மக்கள். அல்லது மக்களுக்கேற்ற தலைவர்கள். “இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்” என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. “நாங்கள் சமாதானத்துக்காக எத்தனை படிகள் கீழே இறங்கினாலும் அரசாங்கம் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிறதே. அது மேலும் மேலும் சமாதானத்துக்கு எதிராக அல்லவா செயற்படுகிறது? சிங்களப் புத்திஜீவிகள் கூட இதைப் புரிந்து கொள்ள மறுக்கின்றார்களே!” என்று பதிலளித்தோம். “உலகம் அப்படித்தான் உள்ளது. அதிகாரத் தரப்புகளின் குணவியல்பே அப்படியானதுதான். ஆனால் அரசுக்கு எல்லா மக்களையும் காக்க வேண்டிய பொறுப்புண்டு. அந்த அடிப்படையில் செயற்பட வேண்டிய கடப்பாடுண்டு. அதையே சர்வதேச நியமங்கள் வலியுறுத்துகின்றன. அதற்கமைய சமாதானத்துக்கான வற்புறுத்தலைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அனைத்து அரசியற் தரப்புகளுக்கும் உண்டு. அப்படிச் செய்தால் நிச்சயமாகச் சமாதானத்தை எட்ட முடியும்? அதைச் செய்தே ஆக வேண்டும். நீங்கள் சொல்கிற மாதிரி நம்பிக்கையீனமாக யோசித்தால் உலகம் முழுவதும் இரத்தக்களரியாகத்தானிருக்கும். யதார்த்த உலகம் அப்படி இல்லையே!” என்றார் அவர். இதற்கு என்ன பதிலைச் சொல்வது? தலையைக் கவிழ்ந்து கொண்டு அமைதியாக இருந்தோம். இந்தப் பின்னணியில்தான் சமகால – எதிர்கால அரசியலை நாம் பேசவும் பார்க்கவும் வேண்டியுள்ளது. நம்முன்னே உள்ள யதார்த்தத்தையும் நடைமுறைச் சாத்தியத்தையும் பற்றி நம்முடைய அரசியற் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் மக்களும் சிந்திப்பதேயில்லை. உலகத்தின் மொழியையும் வரலாற்றின் குரலையும் பொருட்படுத்துவதில்லை. பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் நம்முடைய மனது எதிர்ப்பில், பகைமையில்தான் திளைக்கிறது. அது ஒரு போதையாகி விட்டது. எதிர்த்தரப்பை அப்படி நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும், யப்பானும் அமெரிக்காவும் எனப் பல பகையைக் கடந்த உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை. இனமுரணை மேலும் மேலும் வளர்த்தால் தீர்வை எட்டவே முடியாது. இனப் பிளவு கூடக் கூட நாடு பலவீனப்படும். இதனால் நாடு அந்நியச் சக்திகளிடம்தான் பறிபோகும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நமக்குள்ளே உடன்பாடு காணவும் அதிகாரங்களைப் பகிரவும் தயாரில்லை என்றால், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பிற சக்திகள் நம்முடைய நாட்டைக் கொள்ளையடிப்பார்கள். இலங்கை இந்திய உடன்படிக்கை எதற்காக வந்தது? இனப்பிரச்சினையின் விளைவாகத்தானே. ஆனால் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாறாக திருகோணமலை எண்ணெய்க்குதங்களை நீண்டகால அடிப்படையில் இந்தியா எடுத்துக் கொண்டது. இப்படித்தான் ஒவ்வொரு நாடும் இலங்கையைக் கூறு போட்டு எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான விலையை தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என எல்லோரும் இணைந்தே கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஏதாவது வேறுபட்ட நிலையிலா செலுத்திக் கொண்டிருக்கிறோம்? அல்லது இந்த விலை கொடுப்பில் யாருக்காவது விலக்கிருக்கிறதா? சிவனின் முதுகில் விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டதைப்போல, இலங்கைத்தீவுக்கு வருகின்ற நெருக்கடிகளும் அழுத்தங்களும் அனைவருடைய தலைகளிலும்தான் சுமையாக ஏறுகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் ஆளாளுக்கு பகைமையை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறோம். இது அந்நியருக்குச் சேவகம் செய்வதாகும். காலனிய ஆட்சிக்கால அடிமைத்தனம் முடிவுக்கு வந்து விட்டதாக நாம் கருதலாம். அது முடியவில்லை. நம்முடைய அறிவீனத்தின் விளைவாக இப்போதும் நாம் அடிமையாகவே இருக்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நம்முடைய உழைப்புச் சுரண்டப்படுவது வேறு. நம்முடைய தாய் மண்ணிலேயே பிறரால் சுரண்டப்படுவதும் அடிமைப்படுத்தப்படுவதும் வேறு. இது மிகக் கொடுமையானது. இதற்குக் காரணமாக நாமே இருப்பது இன்னும் கொடுமையானது. இங்கேதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. தம்முடைய சொந்த மக்களுக்குத் துரோகமிழைத்துக் கொண்டு, அந்திய சக்திகளுக்குத் தொண்டு செய்கிறது அரசு. அரசு மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து இனக் கட்சிகளும்தான். இதில் தமிழ், சிங்களச் சமூகத்தினருக்கே கூடுதல் பொறுப்புண்டு. இருதரப்புக்கும் இடையிலான இனமுரண்களே பாதிப்பின் பெருவிளைவுகளாகும். பின்னர், முஸ்லிம்களிடமும் இந்த வியாதி தொற்றிக் கொண்டது. இனவாதத்தையும் அதனால் உண்டாகும் இனமுரணையும் பிராந்திய சக்திகளும் சர்வதேச சக்திகளிற் சிலவும் கூடத் தமது தேவைக்கேற்ப ஊக்குவிக்கின்றன. வளர்க்கின்றன. அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதேவேளை இனவாதத்திற்கு எதிராக – அமைதித் தீர்வுக்காகச் சில நாடுகள் உண்மையிலேயே முயற்சிக்கின்றன. நம்மவர்கள் அதிகம் நம்புவதும் தொடர்பில் இருப்பதும் தீர்வுக்கு எதிரான தரப்புகளுடனேயே. இப்படி ஒரு சிக்கலான நிலைக்குள்ளேதான் இலங்கையின் இனப்பிரச்சினையும் இனங்களின் நிலையும் உள்ளது. இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். “இது சாத்தியமா?” என்று சிலர் கேட்கலாம். “அப்படிச் சிந்தித்த இடதுசாரிகளே இனவாதிகளாக மாறிய பிறகு, அதுவும் சிங்கள மேலாதிக்கத்தோடு அவர்கள் இணைந்த பிறகு எப்படி, எதில் நம்பிக்கை வைத்து நம்மால் செயற்பட முடியும்? மேலும் சமாதானத்துக்கான முயற்சியும் விட்டுக் கொடுப்பும் அதிகாரமற்ற சிறுபான்மைத் தரப்பிலிருந்து ஒரு எல்லைக்கு மேல் செய்யப்படுமாக இருந்தால், அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்டு, அரசு மேலாதிக்கம் செய்து விடும். இப்பொழுது அது தமிழர்களின் நிலப்பகுதியை – பிரதேசங்களை – சிங்கள மயமாக்கி வருகிறது. ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. படையை ஆதிக்க முனையாக தமிழரின் நிலத்திலேயே நிறுத்தியுள்ளதே! இந்த நிலையில் எப்படிச் சமாதானத்தை முன்னெடுப்பது?” என்று பல கேள்விகளை அடுக்கலாம். இனவாத அரசு, ஒடுக்குமுறை இயந்திரம் வேறு எப்படி இருக்கும்? வேறு எப்படி இயங்கும்? முதலாளிகள் தங்களுடைய லாபங்களை எல்லாம் தொழிலாளிகளுக்காக விட்டுக் கொடுத்து விடுவார்களா? வேண்டுமானால் சில சலுகைகளைச் செய்து கொள்வார்கள். அதற்குமேல் எதுவுமே இல்லை. இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். இதுதான் உலக மொழி. அகிம்சையின் வழி. இந்த வார்த்தைகளைப் படித்துப் பலரும் சிரிக்கக் கூடும். சிலர் பரிகசிக்கலாம். அல்லது இதொரு மோசமான கற்பனை என்று உதாசீனப்படுத்தலாம். ஆனால், இறுதியிலும் இறுதியாக இந்த இடத்துக்கே வந்து சேர வேண்டும். ஏனென்றால், இலங்கைத்தீவில் பிரிவினையை எந்தச் சக்தியும் ஒருபோதுமே ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, ஆதரிக்கப்போவதுமில்லை. அந்தச் சூழலே மாறி விட்டது. இப்போது உலகம் விரும்புவதும் வலியுறுத்துவதும் அமைதியையும் சமாதானத்தையுமே. அதற்காகவே அமெரிக்கா தொடக்கம் நோர்வே, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரித்தானியா தொடக்கம் அனைத்து நாடுகளும் இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு (போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட) உதவுகின்றன. சமாதானத்துக்காகவும் பகை மறப்புக்காகவும் பல செயலணிகளை உருவாக்குவதற்கு நிதிப்பங்களிப்பையும் அறிவுசார் செயலாக்கப்பகிர்வையும் செய்கின்றன. ஒரு காலம் போருக்கு உதவியவை இதில் உள்ள சில நாடுகள். இப்பொழுது சமாதானத்துக்குப் பங்களிக்கின்றன. இதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. ஏற்றுக் கொள்ள மறுத்தால், இலங்கைத் தீவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்று அவர்கள் சொல்ல வேண்டும். https://arangamnews.com/?p=10728
    1 point
  9. இது ஒரு கருத்து மட்டுமே. இது ஒரு காரணம் (இங்கு) முன்பு சொல்லி இருக்கிறேன் - (முன்பு நடந்த உலக யுத்தங்களும் பொருளாதாரத்தில் (தடை போன்றவற்றில்) தான் தொங்கியது) - பெரிய யுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்திய கூறு கூடி வருகிறது. இந்த கருத்தில் சொல்லியது நடக்காது இருக்க வேண்டும் என்கிறால், (மேற்கு) கடல், ஆகாயம், தரை வழி வழங்கல் பாதைகளை தடுத்தல், கடற்படை முற்றுகை (naval blockade) போன்றவையே அடுத்த வழி, ஆனால், அது யுத்த பிரகடனம். https://www.businessinsider.com/us-russia-sanctions-impact-dedollarization-oil-inflation-war-ukraine-2024-5 The US and the West are facing the blowback of sanctions against Russia, economist says Jennifer Sor May 10, 2024, 8:43 PM BST Craig Hastings/Getty Images The West's sanctions against Russia triggered a "dramatic" inflation problem. That's according to economist Jeff Rubin, who says the US is feeling the blowback of its economic war on Russia. The US miscalculated when it imposed harsh sanctions on Russia, and not only has Vladimir Putin's economy weathered the impact, but the West is facing the negative effects of the economic restrictions it imposed. That's according to Jeff Rubin, an economist who thinks the West may have opened "Pandora's box of unintended consequences" by enforcing tight restrictions after Russia's invasion of Ukraine. "The most obvious of those consequences is the resurrection of inflation, which had been long buried for more than four decades. Sanctions were the trigger for its dramatic revival," Rubin wrote in an op-ed for The Globe and Mail on Friday. The US and other Western nations have introduced a host of sanctions targeting Russian goods, including bans on Russian energy flows and a $60 price cap on Russian oil traded using Western shipping and insurance firms. Those measures have helped crimp Moscow's war revenue, but they've likely also resulted in higher prices for Western consumers, Rubin said. Food and energy prices have soared since the West imposed sanctions on Russia, he noted partly because Russia is one of the world's largest exporters of oil and grain. Inflation could worsen if US trade with Russia's allies, like China, becomes impacted, Rubin said. US firms are at risk of shifting their operations to countries that are on more friendly terms with the US, but America's closest allies are countries where workers earn high wages, which can push prices up for consumers. "That, in turn, has forced a crippling rise in interest rates, as central banks such as the Federal Reserve Board and the Bank of Canada were reluctantly forced to respond by raising their target interest rates from near zero to the 5-per-cent range," he added. Rubin notes that Russia had quietly sanction-proofed much of its economy leading up to the invasion, while the BRICS bloc of nations expanded and became more intertwined. This helped insulate Russia against the measures, and rising economies in the global south helped Putin blunt the impact of sanctions. "That proved to be a fatal miscalculation. Whereas in the past the loss of Western markets – particularly for Russian energy exports, the lifeblood of Moscow's war machine – would have dealt a fatal blow to the Russian economy, that certainly is no longer the case." Even the US dollar may end up worse off due to sanctions, Rubin said. Russia has been coordinating with its allies to shift away from using the US dollar for trade. Russia's trade with China, for instance, has nearly completely phased out the dollar, Russian officials said last year. "Sanctioning the ruble and confiscating a third of the Russian central bank's foreign reserves was supposed to cripple the Russian economy. Instead, it has cost the US dollar its five-decade status as the petrocurrency of the world and may soon cost it even more: its once unrivalled position as the sole reserve currency in the world," Rubin wrote.
    1 point
  10. தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” என சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். "இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று சோபித தேரர் கூறியதுடன், கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைவூட்டினார். https://www.madawalaenews.com/2024/05/10_11.html அட புலம்பெயர் சிங்களவர்களால்தான் லங்கா நாடே ஆளப்படுகிறது .
    1 point
  11. தந்தையர் தினம்........! 😢 (இது பாசக் கண்ணீர்).
    1 point
  12. தொடருங்கள் ........ தொடர்ந்து வருகின்றோம்.......! 👍
    1 point
  13. From the album: கிறுக்கல்கள்

    ஜனாதிபதி/பாராளுமன்ற தேர்தல்
    1 point
  14. இல்லையண்ணை. செய்தியின்படி சந்தையில் வியாபாரம் செய்யும்போது வெற்றிலை போடக்கூடாது எனப்புரிந்து கொண்டேன். வெற்றிலை போட்டபின் சுற்றாடலில் தானே புளிச்சென துப்புவார்கள். அது அங்கு வருபவர்களால் உழக்கப்படலாம் தானே?!
    1 point
  15. யாழ்ப்பாணம் சிங்கப்பூருக்கு கிட்டவா வந்திட்டுது.வெய்யில் மட்டும்தான் பிரச்சனையா இருக்கு
    1 point
  16. நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது?
    1 point
  17. சிங்கப்பூர் ஆகவேணாமா நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கிறது.
    1 point
  18. இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது. நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர். பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார். தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம், 1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது. ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம். நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது. பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம், 1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.
    1 point
  19. இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன். வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன்.
    1 point
  20. என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼 அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼
    1 point
  21. நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள். தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்? சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது. 80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள்.
    1 point
  22. யாழ்ப்பாணம் வந்தாா் நளினி May 10, 2024 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி கிளிநொச்சி வந்துள்ளார். அவரின் கணவரான முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கை வந்துள்ளார். https://www.ilakku.org/யாழ்ப்பாணம்-வந்தாா்-நளின/
    1 point
  23. ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை. நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
    1 point
  24. IPTV யில் Disney Hotstar ரில் வெளியாகி இருந்தமையால் நேற்றிரவு இப் படத்தின் தரமான பதிப்பை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் குடியும் கொண்டாட்டமுமாக காட்சிகள் தொடங்கினாலும், குணா குகைக்கு இளைஞர்கள் சென்றபின் படத்தின் tone னே மாறி, நல்லதொரு திரை அனுபவத்தை முடிவு வரை க்கும் கொடுத்தது. இத் திரைப்படம், நாளாந்தம் சிறு சிறு வேலைகள் செய்து உழைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்களின் நட்பின் உச்சத்தை பேசுவதால் தான் எளிதாக பலரின் மனசை கவர்கின்றது என நினைக்கிறேன். நல்ல படம். வாய்ப்பிருப்பின் பாருங்கள்.
    1 point
  25. உண்மையும் அதுதானே. ஈழத்தீவின் வரலாற்றில் எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் இருப்பதையே விரும்பாத சிங்களப் பேரினவாதம், தமிழர் ஒருவரை சனாதிபதியாக ஏற்குமா(?)என்ற வினாவைக் கேட்கவே தேவையில்லை. ஆனால், பேராசிரியர் புல்ஜென்ஸ் கூற்றுப்படி''எதையுமே நினைவில் கொள்ளாத , ஞாபகத்தில் வைத்திராத மறதி தேசமிது'' என்று சிறிலங்காவைச் சுட்டுவதுபோல்(எரிமலை யூலை2006) தமிழினமும் ஆகிவிட்ட சூழலில், அனைத்துலகு தனது நலனுக்காகப் பலியிட்ட தமிழர்குறித்துப் பேசித் தானே குற்றவாளிக் கூண்டில் ஏறிநிற்குமா(?)என்றால் நடவாதுதானே. ஆனால், தமிழின அரசியல் இருப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய ஏதுநிலையை ஏற்படுத்தவல்லதாக சனாதிபதித் தேர்தலை மாற்றுவதற்கான சூழலைப் பயன்படுத்தலாம். ஒருவேளை ரணில் தோற்கடிக்கப்பட்டால,; மேற்குலகுக்கான செய்தியும் அதில் உள்ளடங்கும். தமிழினத்தினது ஆதரவின்றித் தமது இலக்குகளை அடையலாம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமையும். நன்றி ரஞ்சித் அவர்களே இதில் ஒரு திருத்தம், அதாவது தமிழ்மக்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(சம்,சும் கொம்பனி) சொல்லவைத்தது. எப்படி போற்குற்றத்தில் இருந்து வெளியே எடுத்ததோ, அதேபோன்று தமது நிலையைத் தமிழ் மக்கள் ஊடாக வெளிப்படுத்தியதாகவே கொள்ளலாம். நேரடியாகத் தமிழ் மக்களது முடிவாகக் கொள்ளமுடியாது. நன்றி
    1 point
  26. புலி நீக்கிய அரசியல் செய்ய சொல்கின்றவர்கள் விரும்புகின்ற மாற்றங்கள் தான் இப்படியான மனித விரோத சம்பவங்கள். இதைத் தான் சிங்களமும் விரும்புகின்றது. ஒரு இனத்தின் மனித விழுமியங்களை மழுங்கடித்து விட்டால், பண்பாட்டை அருவருக்கத்தக்கதாக மாற்றி விட்டால், அந்த இனம் எக்காலத்திலும் மீண்டு வராது என்பது அவர்களுக்கு தெரியும்.
    1 point
  27. 1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான 53 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 154,022 இலிருந்து 253,818 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், 1956 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான 45 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 79,155 பேர் ஆகும். இவர்களுள் 54,044 தமிழர்களின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, மீதி 25,266 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரையான ஆறுவருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,867 பேர். இவர்களுள் 3,545 பேரின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் மீதி 1,322 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டின் தை மாதம் முதல் வைகாசி வரையான ஐந்து மாத காலப்பகுதியில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,796 என்று நீதிக்கும், சமாதானத்திற்குமான சர்வதேச மையம் கூறுகிறது. இக்காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இலிருந்து 146,000 ஆக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையினாலும் மற்றும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினாலும் ம‌திப்பிட்டிருக்கிறது. 1956 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையான 48 வருட காலத்தில் காயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 61,132 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், சிங்களப் பொதுமக்களாலும் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை 12,437 பேர் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2005 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புக்களும், காணாமற்போதல்களும், பாலியல் வன்புணர்வுகளும், இடப்பெயர்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலும் 112,246 தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், 24 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையில் இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து சிங்களத் தலைவர்களும் தமது பங்கினை நல்கியிருக்கிறார்கள். இவர்களுள் எவருமே விதிவிலக்கில்லை. டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமா, ஜெயார், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜேதுங்க, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய, ரணில் என்று அனைவருமே எம்மீதான இனக்கொலையினை நேரடியாக நடத்தியவர்கள். இவர்களைத் தவிரவும் சிங்கள் இட‌துசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் மீதான வன்மத்தைக் கக்கி வருவதுடன், தமிழ மக்களின் தாயக் கோட்பாட்டையும் நிர்முலமாக்க முயன்று வருகிறது. நாட்டில் இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே அன்றி, இனப்பிரச்சினை இல்லையென்றும், தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினைகள் என்று நாட்டில் எதுவுமே இல்லையென்றும் அது வாதிடுகிறது. ஆகவே, இப்படியான, தமிழ் மக்களின் இனவழிப்பை தமது தாரக மந்திரமாக ஏற்று செயற்பட்டு வரும் எந்தச் சிங்களத் தலைவரையும் தமிழர்கள் எதற்காக இன்னுமொருமுறை தெரிவுசெய்வதில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.
    1 point
  28. சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் Posted on May 9, 2024 by தென்னவள் 3 0 முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீ செயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்கள். குறித்த கௌரவிப்பு நிகழ்வுானது நேற்று(08.05.2024)முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் சிறப்புற தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு தனது 72 ஆவது அகவையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 22 ஆவது ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதங்கங்களையும் வெங்கல பதக்கத்தினையும் வென்று விளையாட்டில் சாதனை படைத்து நாட்டிற்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த இலங்கையில் சாதனை மங்கையாக காணப்படும் இவருக்கு முள்ளியவளை மக்கள் சார்பாக முல்லையின் வீரமங்கை என்ற பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அகிலத்திருநாயகிக்கு வாழ்த்து கவிதைகள்,பேச்சுக்கள் என்பன இடம்பெற்று நினைவு பரிசில்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி,சட்டத்தரணி கு.கம்சன், முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி,கல்யாண வேலவர் ஆலய நிர்வாக தலைவரும் முன்னாள் அதிபருமான கமலகாந்தன், கிராமசேவையாளர்களான ரி.ஜெயபாபு,க.விக்னேஸ்வரன்,கு.சிந்துஜன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்,அகிலஇலங்கை சமாதான நீதவான்களான க.தியாராஜா,க.அருளானந்தம்,ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி ஜயம்பிள்ளை,சமூகசேவையாளரும் தொழிலதிபர் ஆனந்தரசா உள்ளிட்ட கமக்கார அமைப்பினர்,கிராம சக்த்தி அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சி.க.கூ கூட்டுறவு சங்கத்தினர்,மாதர்சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு முல்லையின் வீரமங்கை பட்டம் – குறியீடு (kuriyeedu.com)
    1 point
  29. இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected. This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA. The money raised would be used ''SAY NO TO DRUGS'' and ''GO GREEN GLOBE'' projects. I am here to appeal for your generous help. RUN FOR A BETTER FUTURE MASSIVE THANK YOU!. மிக்க நன்றி. https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share
    1 point
  30. @புலவர், @nunavilan, @suvy, @Eppothum Thamizhan, @விசுகு@புரட்சிகர தமிழ்தேசியன், @சுப.சோமசுந்தரம், @நிழலி, @ரசோதரன், @ஏராளன், @Kandiah57, @பெருமாள், @நியாயம், @satan, @Kapithan, @நீர்வேலியான், @நன்னிச் சோழன், @நந்தன், @MEERA, @தமிழன்பன், @kandiah Thillaivinayagalingam
    1 point
  31. Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 09:57 AM குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/183212
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.