Leaderboard
-
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்20Points31987Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்19Points3061Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/23/24 in all areas
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
7 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - எட்டு - அவசரப் பயணம் ---------------------------------------------------------------------------------------------- இன்னும் மூன்று நாட்களே பிள்ளைகளுக்கு இருக்கின்றது என்ற நிலையில், அங்கே போகலாமா அல்லது இங்கே போகலாமா என்று எந்தக் குழப்பமும் நாங்கள் படாமல், வாகனக்காரர்களையே கேட்டு விடுவோம் என்று கேட்டோம். இந்த இரண்டு வாரங்களில் அவர்களுடன் நல்ல பழக்கம் வந்துவிட்டது. எங்களுக்கு மட்டும் இல்லாமல், வேறு சில உறவினர்களுக்கும் அவர்களை பயன்படுத்தி இருந்தோம். ஊரில் இருந்து நேரே திருகோணமலை, பின்னர் அங்கிருந்து அப்படியே கண்டி, இரவு கண்டியில் தங்கி, அடுத்த நாள் அங்கே சுற்றிப் பார்த்து விட்டு, மதிய நேரத்தின் பின் பின்னவல யானைகள் மற்றும் ஆயுர்வேத தோட்டங்கள், அதன் பின்னர் அப்படியே கொழும்பு என்று ஒரு அவசர தேர்தல் பிரச்சாரப் பயணம் போன்ற ஒன்றை அவர்கள் திட்டமிட்டுத் தந்தனர். ஆயுர்வேத தோட்டம் என்னத்துக்கு என்று கேட்டோம். வெளிநாட்டவர்கள் எல்லோரும் அங்கே போவார்கள் என்றனர். போய்........என்று இழுத்தோம். போய், நிறைய வாங்குவார்கள் என்றனர். எந்த நேரத்திற்கு பயணத்தை ஆரம்பிக்கின்றோம் என்று சொல்கின்றோமே, ஒவ்வொரு தடவையும் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வாகன ஓட்டுநர்கள் வந்து சேர்ந்தது ஆச்சரியம். கொழும்பில் கூட இதே ஆட்கள் சொன்ன நேரத்திற்கு வந்தார்கள். ஒரு தடவை அவர்களின் வாகனங்கள் எல்லாம் வெளியில் போய் விட்டன, ஆனாலும் இன்னொரு ஆட்களிடம் இருந்து வாகனத்தை சரியான நேரத்திற்கு எடுத்து வந்திருந்தனர். கன்னியா வெந்நீருற்றில் நீர் இன்னும் அதிகமாகச் சுட்டது. சில கிணறுகள் கொதித்தது. இது இயற்கை என்று நம்ப முடியவில்லை. முன்னரும் போய் இருக்கின்றேன், அப்பொழுது இவ்வளவு சுட்டதாக ஞாபகம் இல்லை. முன்பு இந்தப் பகுதியை சிங்களமயப் படுத்துகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இனிமேல் அந்தக் குற்றச்சாட்டுக்கு தேவை எதுவும் இல்லை. முழுவதும் செய்து விட்டார்கள். அங்கே மாற்றுவதற்கு இனி ஒன்றும் இல்லை. இராவணன் அவரின் தாயாரின் ஈமச்சடங்கிற்கு இந்தக் கிணறுகளை உண்டாக்கினார் என்று சொல்கின்றது புராணம் என்று பிள்ளைகளுக்கு சொன்னேன். இந்தப் பகுதியில் எல்லாமே இராவணன் தான் என்றும் சொன்னேன். பிள்ளைகள் சுற்று முற்றும் பார்த்தனர். கொஞ்சம் மேலே ஒரு பெரிய புத்த பகவான் கண் மூடி அமர்ந்திருந்தார். அடுத்தது கோணேஸ்வரர் கோயில். நாங்கள் அங்கே போன நேரம் இராவணன் வெட்டு முன் நின்று ஒரு யூடியூப்பர் அவரின் நிகழ்வை பதிந்து கொண்டிருந்தார். நன்றாகவே செய்தார். நான் பிள்ளைகளுக்கு கதை சொல்லாமல், அவர் சொல்வதைக் கேளுங்கள் என்றேன். ராவணன் ஒரு நாயகனா அல்லது பாதகனா என்று பிள்ளைகள் குழம்பி நின்றனர். நான் முன்னரும் அவர்களுக்கு சொல்லியிருக்கின்றேன், எங்கள் நாட்டில் அவர் ஒரு பேரரசன் என்று. காப்பியம் சொல்வது போல அவரை நாங்கள் ஒரு மோசமானவராக பார்ப்பதில்லை என்று. ஆனாலும், ராமன் ராவணனை கொன்ற நாளே தீபாவளி என்று எங்கோ புத்தகம் ஒன்றில் பிள்ளைகள் படித்து வைத்திருந்தனர். இனி முடிவு அவர்களின் கைகளில். கோணேஸ்வரர் கோவிலை விட்டு கீழே இறங்கி வரும்போது முகம் பார்த்து சாஸ்திரம் சொல்பவர்கள் நின்று கொண்டிருந்தனர். தமிழ்நாட்டில் குடுகுடுப்பை மூலமும் இவர்கள் சாஸ்திரம் சொல்வார்கள். மிகவும் பேச்சு திறமையுள்ளவர்கள். மனிதர்களின் உளவியல் நன்கு அறிந்தவர்கள். கணவனும் மனைவியுமாக இருவர் அகப்பட்டால் மனைவியிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் சேர்ந்து போனால், பிள்ளைகளிடம் இருந்து ஆரம்பிப்பார்கள். 'நல்லது ஒன்று நடக்கப் போகுது.......' என்று தொடங்குவார்கள். இவர்களை கம்பளக்காரர்கள் அல்லது நாயக்கர்கள் என்றும் சொல்வார்கள். ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குடியேறினர். பின்னர் இவர்களில் சிலர் இலங்கைக்கும் வந்து குடியேறினார்கள் என்று நினைக்கின்றேன். வீரபாண்டிய கட்ட பொம்மன் இவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்தவரே. எங்களுக்கு நேரம் அதிகம் இல்லாததால், அவர்கள் சொல்லப் போகும் நடக்கப் போகின்ற அந்த நல்ல விடயம் என்னவென்று நின்று கேட்க முடியவில்லை. தேர்தல் சுற்றுப் பயணம் நிற்காமல் ஓடியது. அடுத்தது மார்பிள் பீச். வீடு இருக்கும் அமெரிக்க மேற்கு கரையில் கலிஃபோர்னியாவில் இருக்கும் கடல், பசிபிக் சமுத்திரம், எப்போதும் குளிர்ந்தே இருக்கும். கடும் கோடையில் கூட கடல் நீர் சரியான குளிராக இருக்கும். அத்தோடு பசிபிக் சமுத்திரத்தின் அலைகள் உயர்ந்தவை, விடாமல் கரையை அடித்துக் கொண்டே இருக்கும். அதிகமாக நீரில் தொங்கி நிற்கும் மணல் துகள்கள். ஆனால் நீண்ட, அழகான கடற்கரைகள். மார்பிள் பீச்சில் கடற்கரை மிகவும் சின்னது. ஆனால் கடல் நீர் சுத்தமாக, அலைகள் அற்று இருந்தது, வெதுவெதுப்பாகவும் இருந்தது. பலர் குளித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கடற்கரையில் கழட்டி விட்டிருந்த செருப்பில் ஒன்றை ஒரு நாய்க் குட்டி தூக்கிக் கொண்டு ஓடினது. அதை சிலர் கலைத்துக் கொண்டு ஓடினர். அந்த நாய்க் குட்டிக்கு வெளிநாட்டவர்களுடன் இது ஒரு விளையாட்டு போல. திருகோணமலையை இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றி விட்டு, கண்டி நோக்கி புறப்பட்டது வாகனம். தம்பலகாமம், தம்புள்ள, மாத்தளை, கண்டி என்று சாரதி சொன்னார். தம்புள்ள போகும் முன் வரும் இரு பக்கங்களிலும் காடு நிறைந்த வீதியில் வெளிநாட்டவர்கள் திறந்த வாகனங்களில் போய்க் கொண்டிருந்தனர். யானை மற்றும் காட்டு விலங்குகளை அவைகளின் இயற்கையான இடங்களிலேயே பார்ப்பதற்கு. வழி வழியே யானைகளும், இலங்கைக்கு பயணம் வந்தவர்களை ஏமாற்றாமல், வீதிக்கு வந்து போயின. தம்புள்ள மொத்த சந்தையின் பிரமாண்டம் வியக்க வைத்தது. கண்டிக்கு போக முன் அக்குரணை நகர் வந்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான இடம் இது. அக்குரணை நகரின் வளர்ச்சி மிகப் பெரிதாக இருந்தது. மிகப் பெரியதொரு நகராக மாறியிருந்தது. இலங்கையில் எந்த நகரம் மாறினாலும், எவ்வளவு தான் வளர்ந்தாலும், கண்டி நகரம் மட்டும் மாறவே முடியாது. அதன் தரைத் தோற்றம் அப்படி. கண்டியில் எதையும் மாற்றவோ, புதிதாகக் கட்டவோ முடியாது. நகரப் பகுதியே பல ஏற்ற இறக்கங்களை கொண்டது. புனித நகர் என்னும் சிறப்பு வேற இந்த நகரை வளர விட மாட்டாது. கண்டியில் நண்பன் வீட்டை போய்ச் சேர்ந்தோம். நண்பன் என்னை விட பல வயதுகள் குறைந்தவன். இப்பொழுது பேராதெனிய பல்கலையில் வேலை செய்கின்றான். இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. பயணக் கட்டுரையில் இல்லாமல், தனியாக அதை எழுதவேண்டும். அங்கு நண்பனின் வீட்டில் நின்ற ஒரு பொழுதில் அவனுடன் நிறையக் கதைக்க கூடியதாக இருந்தது. அடுத்த நாள் காலை. நண்பனை பல்கலைக்கு போகச் சொல்லி விட்டு, நாங்கள் தலதா மாளிகைக்கு போய் விட்டு, பின்னர் அங்கிருந்து பல்கலை போவதாக திட்டம் போட்டோம். திட்டப் பிரகாரம் மாளிகை வாசலில் இறங்கி உள்ளே போக, தலதா மாளிகையின் வாசலில் இருந்த போலீஸ்காரர்கள் நாங்கள் உள்ளே போக முடியாது என்றனர்........ (தொடரும்...........)7 points
-
மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம்
6 points
- பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார்.
பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டுகிறார்: “என் குடும்பத்தில் சமையல் நிச்சயமாக இயங்குகிறது. இந்த அற்புதமான காரமான சமையல் பின்னணியை என் பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்கள் சிறந்த சமையல்காரர்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் இலங்கை சுவைகளை உபசரிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. என்கிறார் பிரின் பிரதாபன். https://www.bbc.co.uk/mediacentre/2024/masterchef-series-20-champion-crowned?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Xp0TigbKLvKC69u3TisPLlR1ZFAtLbUQjw4aQVM57xQHJuk8xB0rrBVI_aem_ZmFrZWR1bW15MTZieXRlcw பிரின் பிரதாபனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.4 points- இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
3 pointsஇந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்! தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபரொருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக, சென்னை புரசைவாக்கத்திலுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த தொலைபேசி எண்ணுக்கு, இன்று காலை அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இவ்வாறான மிரட்டல் அழைப்புக்கள்கள் வழமையாக சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கே வரும். ஆனால், NIA அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து, மர்மநபர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து சென்னை பொலிஸாருடன், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/13837033 points- தனித்திரு - சோம.அழகு
3 pointsமகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் : தனித்திரு சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான மாபெரும் மிகப் பெரிய்ய்ய்ய்ய விலையைப் பற்றி யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைப் பற்றித்தான் கொஞ்சம் கதைக்கலாமெண்டு வந்தனான். இப்பதிவை முறையாக என் பெற்றோரை வசைபாடியபடி இறைவணக்கத்துடன் துவங்குவது சிறப்பாய் அமையும். நமது முதல் உலகம் வீடல்லவோ? என் அம்மா என்பதற்காகச் சொல்லவில்லை. மனித குலத்தின் விநோதமான விதிவிலக்கு அவள். எவ்வித காழ்ப்புணர்வும் இன்றி எப்படி ஒரு மனுஷியை எல்லோர்க்கும் பிடித்துப் போகும்? இந்தப் புதிரின் புரியாத விடை அவள். கோபத்தைக் கூட அமைதியினுள்ளோ புன்னகையினுள்ளோ ஒளித்து வைத்த வருத்தமாகத்தான் வெளிப்படுத்தத் தெரியும் அவளுக்கு. இதுவரை ஒருவர் கூட அவளிடமோ அவளைப் பற்றியோ சினந்து பேசியதில்லை. வள்ளுவனைப் பொய்யாக்கிவிடக் கூடாது என்னும் ஒரே காரணத்திற்காக அப்பா மட்டும் அவ்வப்போது அவளிடம் சிறு சிறு விஷயங்களுக்குக் கோபம் கொள்வார்கள். அது இயற்கைதானே? எனவே அதுவும் கணக்கில் வராது. அப்பா, தங்கை, நான் – நாங்கள் அனைவரும் நாத்திகர்கள் என்பதில் அவளுக்கு எப்போதும் மனத்தடையோ வருத்தமோ கிடையாது. “நான் உங்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காண்பித்திருக்கலாம். ஆனால் பிற ஆத்திகவாதிகள் போல் அல்லாமல் நீங்கள் பூசிக் கொள்ள விரும்பும் நிறத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை உங்களிடமே வழங்கியதில் எல்லா பெருமையும் அவளையே சாரும்” என்று அப்பாவே சொல்வார்கள். இவள் எந்த கிரகத்திலிருந்து வந்தாள்? முதல் குற்றவாளி இவள்தான். அடுத்த முக்கிய குற்றவாளியான அப்பாவின் crime rate விண்ணை முட்டி ஆக்ஸிஜன் தேடி அலைகிறது. எவ்வளவு தைரியம், பெண் பிள்ளை என்றும் பாராமல் கருப்பின் மீதும் சிவப்பின் மீதும் ஈர்ப்பை உண்டாக்க? பகுத்தறிவு, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட பெரிய பெரிய கருத்தாக்கங்களைத் தெள்ளிய முறையில் எடுத்துரைப்பதென்ன; ‘நறுக்’, ‘சுருக்’ என தம் வாதங்களின் மூலம் வியக்க வைப்பதென்ன; வீட்டிலே ஆகச் சிறந்த சனநாயகச் சூழலை உருவாக்கித் தந்ததென்ன; தோழர்கள் உலகைக் காண்பிப்பதென்ன; நிரம்பிய நூலுடைய கொள்கைச் சான்றோரின் கலந்துரையாடல்களுக்கு அழைத்துச் செல்வதென்ன… என்ன? என்ன? என்ன? போதாக் குறைக்கு இலக்கிய ரசனையை எங்களுக்கே தெரியாமல் எங்களுள் ஏற்றியிருக்கிறார்கள். இவ்வளவும் செய்தவர்களுக்குப் புற உலகைப் பற்றிய நிதர்சனத்தையும் கூறி வளர்க்கத் தெரியாதா? சொல்லித்தான் வளர்த்தார்கள்… நான்தான்… நான் பார்த்த உலகில் உள்ளவர்கள் தான் முழு உலகிலும் பெரும்பாலானவர்களாக நிறைந்து இருப்பார்கள் என்னும் கற்பனையை ஆசையாக மாற்றி நம்பத் துவங்கினேன். அதற்காக என்னைத் தவறென்று சொல்லாதீர்கள். எனக்கு இப்போது கோபத்தைக் காட்ட இடம் வேண்டும். ‘பிங்க் ஜிமிக்கி எங்கு கிடைக்கும்?’, ‘தேங்காய் நாரில் மாங்காய் டிசைன் போட்ட மயில் கழுத்து நிற சேலை எப்போது கடைக்கு வரும்?’ போன்ற உருப்படியான(!) கவலைகளை மட்டுமே ஊட்டி வளர்த்திருந்தால் இவ்வுலகில் ‘இருத்தல்’ தொழில் சுலபமாகியிருக்கும். ப்ச்! வளர்ப்பு சரியில்லை…! ஏதோ ‘மாற்றுக் கருத்து’ என்றாலே எனக்கு ஒவ்வாமை என நினைத்துவிட வேண்டாம். ‘இடியாப்பம் பிடிக்கும்; பிடிக்காது’ என்ற அளவில் இருப்பதன் பெயர்தான் மாற்றுக் கருத்து. ‘இடி அமீன் பிடிக்கும்; பிடிக்காது’ என்பதில் வருவதல்ல. ‘இடி அமீன் ஏன் வெறுக்கப்பட வேண்டும்?’ என்பதெற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி சூழல் பணிக்கிறதெனில் சுற்றம் சரியில்லை என்றுதான் பொருள்! எவ்வளவு எடுத்துக் கூறியும் “இல்லையில்லை. நீ எவ்வளவு சொன்னாலும் இடி அமீனை வெறுப்பது எனக்குச் சரியாகப் படவில்லை. அவன் பக்க நியாயம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?” என்று கூறுவோரையெல்லாம் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு செல்ல வைக்கும் வாழ்க்கை மீதுதான் என் மொத்த கோபமே. இடி அமீனுக்குப் பதில் அதிமுக்கியமான வாழ்வியல் விஷயங்களை, ஒரு மனிதனை அடிப்படையாக வரையறுக்கும் பண்புகளை கருத்தாக்கங்களை வைத்து யோசிக்கவும். ‘வாழ்க்கை இப்படியே போயிருமா?’ என ஒரு கடுப்பு வரும் இல்லையா? பொருத்தமான நிகழ்வொன்றை விவரிப்பது ஏதுவாய் அமையும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் செல்ல நேரிட்டது. பந்தியில் உணவருந்த அமர்ந்தோம். முதல் வாய் உள்ளே சென்ற போது அருகில் துன்னுட்டு இருந்த துன்னியார் ஒருவர், “புதுசா நான் கட்டிட்டு இருக்குற வீட்டுல பெருசா ஒரு டைனிங் டேபிள். பக்கத்துல ரொம்ப பெருசா ஒரு ஜன்னல். ஹால்ல 70 இஞ்ச் டிவி,…. சுக்கு காப்பி, மிளகு ரசம்….” என்று அடுக்கிக் கொண்டே சென்றார் பெருமிதம் பொங்க. இதற்குள் எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி இருந்த மாமா ஒருவர் “வீட்டைக் கட்டிப் பாருன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க. எனக்கெல்லாம் விழி பிதுங்கிடுச்சு. அப்போல்லாம் சாப்பாட்டுக்கே கஷ்டம். ஒருத்தர் இல்ல தூக்கி விடுறதுக்கு, உன்னையும் சேர்த்துதான். எல்லாத்தையும் மீஈஈஈறி நின்ன்னு காமிச்சேன். உக்காந்து காம்போசிசன் எழுதுனேன்…. நடந்து போய் கமர்கட் வாங்குனேன்” என்று அவர் பங்குக்கு அடித்து விட்டுக் கொண்டிருந்தார். ஒரு நல்ல அரசு உத்தியோகத்தில் இருந்தும் ‘பேதைதன் கையொன் றுடமை பெற்ற’தைப் போல் வாழ்ந்து பணி ஓய்வு பெற்று இருந்திருந்து திறவோன் பருவத்தின் மத்திம கால வயதில் முதன்முதலாகத் தாம் கட்டும் வீட்டைப் பற்றி இவ்வளவு சிலாகித்த அந்தச் சுக்குக் காப்பி சித்தப்பாவிடம் ‘பயனில சொல்லாமை’ பற்றி எடுத்துச் சொல்வது வராஹ பகவானின் முன் முத்துகளைச் சிந்துவதாகும். அந்த மாமாவின் பின்னணி தெரியாமல் இதைக் கேட்டால் ஏதோ உத்வேகம் தரும் கதை போல என யாரும் நம்பிவிடுவர். குடும்பத்தில் முதல் ஆளாக வேலைக்குச் சென்றவர். அதுவும் நல்ல வேலை… பின்னர் வணிகக் காந்தமாகும் முயற்சியில் மும்மரமாகக் குதித்துக் கால் இடறியதில் அன்பை முறிக்கும் சுறாக்களின்(!) காந்தவலையில் சிக்கி முக்கி மீண்டு வந்துதான் ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ இப்பேருரை. காதுகள் பாவமில்லையா? தன் ‘அறிவார்ந்த(!)’ சோதனை முயற்சிகளின் மூலம் ‘ஏதங்கொண்டு ஊதியம் போக’ விட்டு இன்மையில் உழன்ற கதையை glorify/romanticize செய்து சொல்லிக் கொண்டிருந்ததில் அனைவரின் தலைமுடி கைமுடி எல்லாம் ‘parade salute!’ என எழுந்து நின்றன. ‘சீரல் லவர்கண் படின்’ ‘முந்திரிமேற் காணி மிகுவேதல் கீழ்தன்னை இந்திரனா எண்ணு’ம் இவர்களின் உளுத்துப் போன அறுவையுரையால் அறை முழுதும் ஊசல் வாடை கமழ்ந்தது. நானும் எதிரில் அமர்ந்திருந்த அப்பாவும் சிரித்து வைக்கவும் முடியாத, கடுப்பை வெளிப்படுத்தவும் இயலாத ஒரு கலவையான பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். இதில் வேறு அந்த மாமா என் அம்மாவிடம், “நானா கண்டு தாக்குப்பிடிச்சேன். என்னக்கா?” என அவளின் ஆமோதித்தலை எதிர்ப்பார்க்க அவளும் “பின்ன? சும்மாவா?” என்று சொல்லிச் சமாளிக்க, நானோ யாருக்கும் கேட்காதவாறு அவளின் காதில் “கூச்சமே இல்லேல?” என்றேன். சிரித்தாவாறே முகத்தை வைத்துக் கொண்டு “வாய மூடிட்டுச் சாப்பிடு” என்று கடுகடுத்தாள். “அது எப்பிடிம்மா முடியும்?” என்று கொடூரமாக நகைச்சுவையை அள்ளித் தெளித்தேன். இதற்குள் பெரியப்பா ஒருவர் “ஏன் காத கடிக்கா எம்மவ?” எனக் கேட்க “மோர் வேணுமாம்” என்று சொல்லி வைத்தாள் அம்மா. ஒரு அரை கிலோமீட்டர் தூரத்து உறவு அண்ணன் ஒருவன் மோர் கொண்டு வந்தான். உடனே அறைக்கு இன்னும் மணம் சேர்க்கும் பொருட்டு அங்கிருந்த அவனது அம்மா, “இவன் பக்குவம் பொறுப்பு அறிவு யாருக்கும் வராது… ஆனை பூனை அல்லே பராக்….” என்று நீட்டி முழக்கிய போது அவ்வார்த்தைகளுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என நிச்சயம் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்திருப்பார்கள். கல்லூரியில் வகுப்புகளுக்கு வெளியேதான் அறிவு கிட்டும் என ஆழமாக நம்பும் ஞானி அவன். ஒவ்வொரு தாளையும் குறைந்தது நான்கு முறையாவது எழுதுவதைப் பொறுப்பாகச் சலிக்காமல் ஏற்றுச் செய்து வந்தான். ஒரே நேரத்தில் பல இளைஞிகளுடன் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் நிலக்கடலை வியாபாரம் பார்ப்பதில் வல்லவன். இப்போது சம்பந்தமே இல்லாத துறை எனினும் நன்றாகச் சம்பாதிக்கிறான் என்று அவனுக்காக ஆறுதலடையவோ மகிழவோ கூட அனுமதிக்க மாட்டான். உடனே சுக்கு நூறாக அவனுள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து ஒட்ட மறுக்கும் ஆங்கிலத்தையும் இவனே வலுக்கட்டாயமாக அடித்து உடைத்த தமிழையும் கொண்டு திருவாய் மலர்ந்தருளி ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ என்ற இருவேறு உலகத்து இயற்கைக்கு வாழும் உதாரணம் தான் என நிரூபிப்பான். அத்தை ஒருத்தி அம்மா காதில், “இவன் இருந்த இருப்புக்கு வேலையா கெடைச்சுருக்கும்? கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில்ல ஒரு தேங்காய் விடலை போட்ட கையோட மரகநெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் துளசித் தண்ணி வாங்கி ஒரு மடக்கு குடிச்சுட்டு கரெக்ட்டா ரெண்டு துளிய உச்சந்தலையில தெளிச்சு விட்டுட்டு நேரே சாயிபாபா கோவிலுக்குப் போய் நாலரை சுத்து சுத்தீட்டு வடமேற்கு பக்கமா திரும்பி நின்னு ஒரு கையை மேலே தூக்கி இன்னொரு கையால் கால் சுண்டு விரலைப் பிடித்தவாறே வானத்தைப் பார்த்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும்னு அவனுக்குப் பரிகாரம் சொன்னேன். அத செஞ்ச பொறவு தான் உடனே ரெண்டு வருசம் கழிச்சு வேலை கெடச்சது. ஒங்களுக்கும் ஏதாவது வேணும்னா கேளுங்க” என்றார். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க” என்று அந்த அத்தையிடம் சொல்லிவிட்டு அம்மாவின் இந்தக் காதில் நான் “ஒவ்வொரு சாமியும் மத்த சாமி பாத்துக்கும்னு விட்டதுல கொஞ்சம் தாமதாமாகிட்டு போல” என்றது அத்தைக்குக் கேட்டுவிட்டது போலும். என்னை முறைத்துக் கொண்டே இஞ்சிப் பச்சடியை வத்தக்குழம்பு என நினைத்து சோற்றில் போட்டுப் பிசைந்துவிட்டார். “எதேச்சையா வந்த இந்த விசேஷ வீட்டோட டைனிங் ஹால்ல தற்செயலா நுழைஞ்சேன் ஃப்ராண்ட்ஸ்… இங்க பாத்தீங்கன்னா எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க ஃப்ராண்ட்ஸ்… அதுவும் வலது கையால எடுத்து வாயாலயே சாப்பிடுறாங்க ஃப்ராண்ட்ஸ்… இங்க ஒரு ஆன்டி காரத்துல கதறுரததான் பாத்துட்டு இருக்கீங்க….” என்று கி.பி இராண்டாயிரமாம் காலகட்டத்தைச் சார்ந்த குழந்தை ஒன்று கைபேசியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. திடீரென ஒரு அங்கிள் அரசியல் பேசத் துவங்கினார்கள். உலக அரசியல் வழியாக உள்நாட்டு அரசியலுக்குத் தாவி உள்ளூர் அரசியலை அடைந்து… என அங்கும் இங்கும் சுற்றி கடைசியில் காவிக்குக் காவடி எடுத்தார்கள். “அடச்சை! Toilet paper” என அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் என் நினைவிற்கு வந்து சென்றது. அப்பாவும் அருகிலிருந்த தோழரும் அவரைப் பரவச நிலையிலிருந்து நிதானமாக இறக்க முற்பட்டார்கள். அவரோ ‘பவர்ர்ர்ர்ர்’ என இன்னும் இன்னும் உக்கிரத்தை நோக்கிச் செல்ல இருவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு அமிழ்தத்தை இங்கு கொட்டக்கூடாது என்றுணர்ந்து கை கழுவ அங்கணத்தை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க’ என்று புளிசேரியை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். அப்பாவின் வார்ப்பு நான் என்றறிந்த அங்கிள் “நீ என்ன சொல்லுத?” என்று என் வாயைக் கிண்டினார்கள். “எந்தக் கட்சிக்கும் ஆதரவா நான் பேசல. எல்லா இடத்துலயும் ஊழல் இருக்கலாம். ஆனா எதேச்சதிகாரத்தை ஒழிக்குறதுதான் இப்போ முக்கியம். அதனால இந்தக் குறிக்கோளோட மக்கள் பக்கம் நிக்குற கட்சிக்கு வாக்கு அளிக்குறதுதான் சரியா இருக்கும்” என்று பதில் மொழியவும் நான் எந்தக் கட்சியைச் சொல்கிறேன் என்பதை உணர்ந்து என்னை அக்கட்சியின் பரப்புரையாளராகப் பாவித்து என்னைச் சாடத் துவங்கினார். ‘வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொள்’ளும் முயற்சியில் பரிதாபமாகத் தோற்று நின்றேன். இன்னொரு அங்கிள் வந்து “இந்த நாடு குட்டிச்சுவரா போறதுக்கே ஒங்கள மாதிரி ஆட்கள்தான் காரணம்” என்று காவி அங்கிளைப் பார்த்துச் சொல்ல ‘ஒளி தெரிகிறது’ என்று என் மனம் பூரிக்கத் துவங்கவும் படாரென்று ஒரு நடிகரின் நடுநிலைமைக் கட்சியைத் தாம் ஆதரிப்பதாகச் சொன்னார். ஒளி வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது! மூன்றாவதாக அண்ணாவா அங்கிளா என்று குழப்ப வைத்த ஒரு நபர் வந்து அவ்விருவரையும் பார்த்து “இப்படியே பேசிட்டு இருந்தா விளங்கிரும். ஒங்க ஆளுக்கு ஊர் சுத்தவே நேரம் இல்லை. ஒங்காளு பேச்சுக்கு கோனார் உரை கூட கெடைக்காது…” என்றார். ஆகா! என்னை ஆதரிக்க இவர் திருவுளங்கொண்டு விட்டார் என நான் எண்ணுகையில் என்னை நோக்கித் திரும்பி “இவ ஒரு கருப்பு சிவப்பு சங்கி” என்று அதிர்ச்சியடைய வைத்தார். பிறகு சாந்தமான குரலில் கூறினார் “புதுசா கட்சி ஆரம்பிச்சுருக்குற எங்க நடிகருக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல”. அவர் தலைவராவது புரிபடாமல் பேசுவதில்தான் வல்லவர்; இவர் தலைவர் வாயையே திறக்காமல் பேசுவதில் வல்லவர். ஹ்ம்ம்ம்!!! பிரமாதம். என்னைச் சொன்னது கூட வலிக்கல மை டியர் அங்கில்ஸ்! அட!அட!அட! இதுக்குப் பேசாம நான் பேசாமலே இருந்துருக்கலாம்! பீற்றல் பேர்வழிகளுக்கும் ‘அறிவுஜீவி’ நோய்க்குறியால் (syndrome – கூகிள் இப்படித்தான் சொல்லுச்சு!) வாடும் வகையறாக்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களையும் ஆழ்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து விட்டு ‘பாயாசம் சாப்பிடுங்க ஃப்ராண்ட்ஸ்’ என சொல்லச் சொல்லி மனது அரித்துக் கொண்டிருந்ததை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினேன். “எனக்குச் சோறே வேண்டாம். ஆள விடுங்கடா” என எழலாம் என்று பார்த்தால் பந்தி முடியவில்லை. என் இரு பக்கமும் ஒருவரும் எழவில்லை. என்னாலும் எழ முடியவில்லை. பாதியிலேயே எழுந்தால் மரியாதைக் குறைவு, இங்கிதமின்மை என்பார்கள், ஏதோ இவ்வளவு நேரமும் அவர்கள் அதைக் கடைபிடித்ததைப் போல. தப்பிக்க இயலாமல் கடைசி வரை இருந்து தொலைக்க வேண்டிய நிர்பந்தம். ‘என் உலகம் வேறு; இது ஏதோ தற்காலிகச் சூழல்’ என்னும் பட்சத்தில் ஒரு நாழிகை பந்தியில் இதையெல்லாம் சிரித்துக் கடந்து விடலாம். ஆனால் சகிப்புத்தன்மையை அளவற்ற சோதனைக்கு உள்ளாக்கும் இந்த ஒரு நாழிகை பந்தியை முழு வாழ்க்கை காலத்திற்கான குறியீடாகக் கருதிப் பாருங்கள். வாழ்க்கை நம்மை எவ்விடத்தில் எச்சூழலில் இருத்தி வைக்கும் எனத் தெரியாது. அப்போது நமக்கே நமக்கானவர்கள் பந்தியில்/வாழ்க்கையில் சில வரிசை தள்ளி இருக்கும் சூழ்நிலை அமையலாம். பணியினாலோ தொலைவினாலோ அவர்களுடனான ஆழமான கலந்துரையாடல்களுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லாமல் போகலாம். அச்சமயத்தில் ‘நாணாமை நாடாமை நாரிமை யாதொன்றும் பேணாமை’ ஆகியவற்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் (ஓட்டை உடைசல் பண்ட) பாத்திரங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிற போது ‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை’ எல்லாம் சுக்கு நூறாகிவிடும். என் உலகை அப்படியே என்னோடு நகர்த்திச் செல்வது சாத்தியமற்றதாகிப் போகும் போது, சூழ்ந்திருப்போரிடம் எனக்கானவர்களைத் தேடித் தோற்கும் வேளைகளில் மனம் ஆங்காரத்தோடு கர்ஜிக்கும் – ‘தனித்திரு!’. தேர்ந்து தெளிந்த கேண்மையே சில சமயம் கழிவிரக்கத்தையோ ஏமாற்றத்தையோ தரும் போது ‘காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதலால்’ வந்தோர் அன்னாருடன் வரும் இலவச இணைப்புகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இரு மனிதர்களுக்கு இடையில் பிணைப்பு என்பது அன்பு, புரிதல், மரியாதை, கருத்து ஒற்றுமை என ஏதோ ‘ஒன்றன்’ அடிப்படையில் உருவாகும். அப்படியான ஒன்று கூட இல்லாமல் திறந்த வீட்டில் நுழைந்த சிங்கங்களாக நம் உலகில் வளைய வருபவர்கள்தாம் இலவச இணைப்புகள். ஒரு மனிதரை நம் வட்டத்தினுள் மனதார வரவேற்கும்போது அவரிலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட அவரைச் சார்ந்த – அவ்விய நெஞ்சத்தவர்கள், நெஞ்சின் துறவார் துறந்தார்போல் பேசுபவர்கள், ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதைகள், கல்லாத மேற்கொண்டொழுகுவோர், ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் பிரிவினர், உலகத்தார் உண்டென்ப தில்லென்போர் ஆகியோரும் மிக இயல்பான நிகழ்வாக உடன் வந்து அமர்வதுதான் வாழ்க்கையின் அசட்டுத்தனமான வடிவமைப்பு! தம்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டிருக்கும் காலத்தில் அதைக் கட்டுப்படுத்துவது நம் கைகளில் இல்லாமல் போகும் கையறுநிலையில் பொறையுடைமை தீர்ந்து போகும் தருணத்தில் மனநலத்தையும் உடல்நலத்தையும் காக்கவேண்டி ‘சிற்றினம் அஞ்சி தனித்திரு என் மனமே!’ மாண்டார்நீ ராடி மறைந்தொழு மாந்தர்களே! பெரியார் துணைகோடலுக்கு வழி விடவும்! சோம. அழகு தழ்https://puthu.thinnai.com/2024/05/20/தனித்திரு/3 points- சிரிக்க மட்டும் வாங்க
2 points- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
2 pointsநவீன பெளத்த சிங்கள இனவாதியாக தன்னை உருமாற்றிக்கொண்ட லலித்தும், இலங்கை முன்வைக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி தமிழ்த் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுத்த இந்தியாவும் ஜயவர்த்தன அரசியல் சூட்சுமம் மிக்க தந்திரசாலி . தமிழர்கள் தனது செயற்பாடுகளில் நம்பிக்கைகொள்ளும் வகையில் அவர்களுக்கு ஒரு முகத்தையும், தெற்கில் இனவாதமேற்றப்பட்ட சிங்களவர்களைத் திருப்திப்படுத்த தனது இன்னொரு முகத்தையும் காட்டி வருபவர். இந்தியாவையும், சர்வதேசத்தையும், உதவி வழங்கும் நாடுகளையும் மகிழ்விக்க தமிழர்களுடன் பேசுவதாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை, தனது அமைச்சரவையிலேயே சில அதிதீவிர சிங்கள இனவாதிகளைத் தூண்டி, சிங்கள தீவிரவாதக் கருத்துக்களை உமிழப்பண்ணுவதன் மூலம் சிங்களத் தீவிரவாதிகளின் ஆதரவினையும் தன்பக்கம் வைத்துக்கொண்டிருப்பவர். இவை எல்லாவற்றையும் சூட்சுமமாகச் செய்துவிட்டு, தன்னை ஒரு நேர்மையான, நீதியான அரசியல்த் தலைவராகக் காட்டிக்கொள்வதும், தனது அமைச்சரவையிலிருக்கும் சில இனவாதக் கழுகுகளின் கட்டுப்பாட்டில் தான் சூழ்நிலைக் கைதியாக சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுவதும் அவருக்குக் கைவந்த கலை. இதனை மிக இலகுவாக, ஜெயாருடனான தனது முதலாவது சந்திப்பிலேயே இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் அடையாளம் கண்டுகொண்டார். 1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சந்திப்பில், தனது அமைச்சரவையில் இருக்கும் சில இனவாதக் கழுகுகளின் அழுத்தம் இல்லாதுபோகுமிடத்து தமிழர்களின் பிரச்சினையினை தன்னால் இலகுவாகத் தீர்த்துவைக்கமுடியும் என்று ஜெயார் கூறியிருந்தார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் கல்கி இதழில் இச்சந்திப்புக் குறித்து எழுதும்போது ஜெயாரை சிறந்த நடிகர் என்று அனித்தா குறிப்பிட்டிருந்தார். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, பிரபாகரனும் ஜெயார் குறித்து மிகவும் தெளிவான பார்வையினைக் கொண்டிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஒரே நபர் ஜெயார் என்றும், இனவாதக் கழுகுகள் என்று ஜெயார் குறிப்பிடும் தீவிரவாத அமைச்சர்களை ஜெயாரே உருவாக்கினார் என்பதையும் பிரபாகரன் அறிந்தே வைத்திருந்தார். என்னைப்பொறுத்தவரை பிரபாகரனினது ஜெயார் குறித்த அனுமானம் சரியானதுதான். ஜெயவர்த்தன, அரசியல் சதுரங்கத்தில் பல சாதுரியமான திருப்பங்களை எடுத்திருந்தாலும்கூட இறுதியில் அவர் தோற்கவேண்டியதாயிற்று. தான் அரசாண்ட இறையாண்மையுள்ள நாட்டிற்குள் பிரபாகரன் தனக்கான நிழல் அரசொன்றினை ஆள்வதை தான் இறக்குமுன்னரே ஜெயாரால் தரிசிக்க வேண்டியதாயிற்று. 1977 ஆம் ஆண்டில் சிறில் மத்தியூவை சிங்கள இனவாதிகளின் வீரனாக ஜெயார் முன்னிறுத்தினார். தமிழ் மக்களுக்கெதிரான, குறிப்பாக அமிர்தலிங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் எதிரான கடும்போக்கு நிலைப்பாட்டினை எடுக்கும் சிங்கள இனவாதியொருவர் ஜெயாருக்குத் தேவைப்பட்டார். தமிழர்கள் மீதும், அமிர்தலிங்கம் மீது பாராளுமன்றத்தின் சிறில் மத்தியூ முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அமிர் பதிலளித்தவேளை, சிறில் மத்தியூ நடந்துகொண்டவிதம் குறித்து முன்னைய அத்தியாயங்களில் நான் விளக்கியிருந்தேன். அமிர் ஒருமுறை என்னுடன் பேசும்போது, சிறில் மத்தியூவை தான் அமைச்சரவையில் வைத்திருப்பதன் ஒற்றை நோக்கம் சிங்கள இனவாதிகளைத் தன்பக்கம் வைத்திருப்பதுதான் என்று ஜெயார் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார். ஜெயாருடன் பேசும்போது, "எம்மைத் தொடர்ச்சியாக உங்களின் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் தாக்கிப் பேசும்போது உங்களின் அரசிற்கு நாம் எப்படி ஆதரவு தருவது?" என்று அமிர் வினவியபோது, "நீங்கள் அவரைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எனது அரசாங்கம் உங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருவதால் சிங்கள தீவிரவாத மக்களிடையே எனது அரசிற்கெதிரான உணர்வு உருவாகிவருகிறது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே சிறில் மத்தியூவை அப்படிப் பேசச்சொல்லியிருக்கிறேன்" என்று ஜெயார் பதிலளித்திருக்கிறார். சிறில் மத்தியூவின் சமூக அந்தஸ்த்தும், அவரது குலமும் தனக்கு எப்போதும் ஒரு சவாலாக வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்டபின்னரே அவரை சிங்கள இனவாதிகளின் வீரனாக உருவகப்படுத்தினார் ஜெயார். மத்தியூவை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துவந்த ஜெயார், இனிமேல் அவரால் அரசியலில் தனக்கு இலாபம் ஏதும் வரப்போவதில்லை என்கிற நிலை உருவாகியபோது மிக இலகுவாக அவரைத் தூக்கியெறிந்தார். 1985 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் சிறில் மத்தியூ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டபோது எவருமே ஜெயாரைக் கேள்விகேட்கவில்லை. இது, ஜெயாரினால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி எவ்வளவு தூரத்திற்கு அவரில் தங்கியிருந்தது என்பதனையும், தனக்கென்று தனியான அரசியல்ப் பின்புலம் அதற்குக் கிடையாதென்பதையும் தெளிவாகச் சுட்டிக் காட்டிற்று. மத்தியூவின் வெளியேற்றத்திற்குப் பின்னர், அவரது தொழிலைச் செய்ய ஜெயாருக்கு இன்னொருவர் தேவைப்பட்டது. அதற்குப் பொறுத்தமானவராக லலித்தை அவர் தேர்ந்தெடுத்தார். லலித்துடனான எனது அனுபவங்களின்பொழுது, அவர் எவ்வளவு தூரத்திற்கு ஜெயவர்த்தனவில் தங்கியிருந்தார் என்பதையும், ஜெயாரின் ஊதுகுழலாகவே அவர் செயற்பட்டு வந்தார் என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டேன். இதனை உறுதிப்படுத்த என்னால் பல சந்தர்ப்பங்களை உதாரணமாகக் காட்டவியலும். 1984 ஆம் ஆண்டில் நடைபெற்று வந்த சர்வகட்சி மாநாட்டின் ஒருநாள் தனது உரையினை முடித்துக்கொண்டு என்னுடன் பேசிய லலித், மாநாட்டு உறுப்பினர்கள் ஜெயாரினால் முன்வைக்கப்பட்ட "ஆங்கிலத்தையும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளுதல்" எனும் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறினார். ஆகவே, டெயிலி நியூஸிற்காக நான் வழங்கும் செய்தியறிக்கையில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் என்னைப் பணித்தார். ஆனால், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஆங்கில மொழி இணைப்பு மொழியாக மட்டுமே பாவிக்கப்பட முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்து நான் பத்திரிகைக் காரியாலயத்தை வந்தடைந்தபோது, எனது ஆசிரியர் மணிக் டி சில்வா, லலித் என்னிடம் மிகவும் முக்கியமான செய்தியொன்றினை வழங்கியிருப்பதாகத் தொலைபேசியில் கூறினார் என்று தெரிவித்தார். நான் மணிக்கிடம் லலித் கூறிய விடயம் பற்றித் தெரிவித்ததோடு, பத்திரிகைக்கும் அதனைச் செய்தியாகத் தயாரித்தேன். மறுநாள் அதுவே நான் எழுதியவகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது. அன்று மாலை நான் லலித்தைச் சந்தித்தபோது, தனது செய்தியை நான் பத்திரிக்கையில் எழுதினேனா என்று கேட்கும்படி ஜெயார் தன்னைப் பணித்திருந்ததாகக் கூறினார். அதற்கு தான் இவ்வாறு ஜெயாருக்குப் பதிலளித்ததாக லலித் என்னிடம் தெரிவித்தார், "உங்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், ஆகவேதான் அதனைச் செய்தியாக்கும்படி கொடுத்தேன்". தனது செய்திகுறித்து ஜெயார் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் லலித் என்னிடம் கூறினார். செளமியமூர்த்தி தொண்டைமான் லலித் இலட்சிய உறுதி கொண்டவர். ஜெயவர்த்தனவிற்குப் பின்னர் தானே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது பிரதான எதிரியான காமிணி திசாநாயக்கவும் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது லலித்திற்குத் தெரியும். ஆகவே, காமிணியை ஓரங்கட்டி, முன்னிற்கு வருவதற்கு லலித்திற்கு இருந்த ஒரே வழி ஜெயார் விரும்பியவாறு சிங்களக் கடும்போக்குவாதியாக தன்னை வரிந்துகொள்வதுதான். ஜெயாரின் தந்திரங்கள் குறித்து தொண்டைமான் பலதடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார். மத்தியூ கட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டபோது இதேவகையான கருத்தையே தொண்டைமான் தயான் ஜயத்திலக்கவிடமும், எஸ்.பாலகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார். அன்றைய செவ்வி லங்கா கார்டியன் பத்திரிக்கையில் 1985 ஆம் ஆண்டு கார்த்திகை 15 ஆம் திகதி மீள்பிரசுரமாகியிருந்தது. கேள்வி : சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று எட்டப்படும் சாத்தியம் உருவாகியுள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், அது இதுவரையில் நடைபெறவில்ல. சிறில் மத்தியூவை நீக்கிவிட்ட பின்னரும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தடையாக இன்னும் சில கடும்போக்கு சிங்கள இனவாதிகள் அமைச்சரவையில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தொண்டைமான் : முதலாவதாக, சிறில் மத்தியூவை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக அப்போது எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்று நான் நினைக்கவில்லை. அவரது பலம் மிக்க தொழிற்சங்கமான ஜாதிக்க சேவக சங்கமயவின் நடவடிக்கைகளால்த் தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டர் என்றால், அது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், இப்போது, எல்லாமே முடிந்துவிட்டபின்னர் அவரைப் பதவிநீக்கம் செய்வதன் மூலம் அடைந்துகொண்டது என்ன? தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மட்டத்தில் பொதுவான அபிப்பிராயம் ஒன்று உருவாகிவருகிறது. அக்கட்சியின் அங்கத்தவர்கள் தமது சிங்களத் தேசியக் குரல் ஒன்று அடைக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்கள், தமது கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு அற்றுப்போய்விட்டதாக உணர்கிறார்கள். ஆகவே, தமது கட்சி இன்னமும் சிங்கள பெளத்த தீவிரவாத நிலைப்பாட்டிலேயே இருக்கிறது என்று மக்களுக்குக் காட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கப்போகிறார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் இன்னும் அதிகமான பாதிப்பினை நாடு எதிர்கொள்ளப்போகிறது. ஒருபக்கம், சிறில் மத்தியூவை நீக்கியதன் மூலம் தமிழ் மக்களைத் தான் திருப்திப்படுத்திவிட்டதாக ஜனாதிபதி நினைக்கலாம். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்மக்களின் அதிருப்திக்குக் காரணம் சிறில் மத்தியூதான் என்று நினைக்கலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரையில் சிறில் மத்தியூ அமைச்சரவையில் இருந்தாலென்ன இல்லாதுபோனாலென்ன, தமிழர்கள் அவர்குறித்துக் கவலைப்படப்போவதில்லை. அவர்களுக்குத் தேவையானதெல்லாம் தம்மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிதான். ஆனால், சிறில் மத்தியுவை அமைச்சரவையிலிருந்து நீக்கியதனூடாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள பெளத்த நிலைப்பாடு உருக்குலைந்து போய்விட்டது என்று கவலைப்பட்டோருக்கு லலித் அதுலத் முதலியே புதிய சிங்கள பெளத்த வீரனாக தன்னை முன்னிலைப்படுத்தினார். இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்ட "கடப்பாடற்ற" ஆலோசனைகள அனைத்தையுமே முற்றாக நிராகரித்ததன் மூலம் தனது புதிய அவதாரத்தை அவர் செயலில் காட்டினார். லலித் அதுலத் முதலியைக் கடும்போக்காளராகக் காட்டிய அதேநேரம், தன்னை நேர்மையான, நீதியான அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டார் ஜெயவர்த்தன. இப்படிச் செய்வதன் மூலம் பண்டாரியை மிக இலகுவாக ஜெயாரினால் ஏமாற்ற முடிந்திருந்தது. கொழும்பிலிருந்து தில்லி திரும்பும் வழியில் பண்டாரி சென்னையில் தரித்துச் சென்றார். அங்கு தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்களையும், முதலமைச்சர் ராமச்சந்திரனையும் அவர் ஆவணி 10 ஆம் திகதி சந்தித்தார். தனித்தனியாக இடம்பெற்ற இச்சந்திப்புக்களின்போது பண்டாரியுடன் டிக்ஷிட்டும் உடனிருந்தார். ராமச்சந்திரனுடன் அவருடைய இல்லத்தில் பேசிய பண்டாரி, முதலாம் கட்டப் பேச்சுக்களில் இலங்கையரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை மேம்படுத்த ஜெயவர்த்தன உறுதி தந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரிவித்ததுடன், ஜெயாரினால் முன்வைக்கப்படவிருக்கும் புதிய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும்படி போராளி அமைப்புக்களுக்கு எம்.ஜி.ஆர் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ராஜ் பவன் சென்னை 2021 சென்னையில் ஆளுநரின் வாசஸ்த்தலமான ராஜ் பவனில் தமிழ்ப் போராளிகளை பண்டாரி சந்தித்தார். ஏனைய ஈழத்தேசிய விடுதலை அமைப்பின் தலைவர்களுடன் பிரபாகரனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் சென்றிருந்தார். கொழும்பில் ஜெயவர்த்தனவுடனும் ஏனைய தலைவர்களுடனும் தான் நடத்திய சந்திப்புக்கள் குறித்து போராளிகளின் தலைவர்களுக்கு பண்டாரி அறியத் தந்தார். இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கு வரும்போது, இலங்கையரசின் பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தன மேம்படுத்தப்பட்ட ஆலோசனைகளுடன் வருவார் என்றும், ஆகவே அதனை உடனேயே நிராகரிக்காது, யதார்த்தத்தினை உள்வாங்கிப் பரிசீலிக்க வேண்டும் என்றும் போராளித் தலைவர்களிடம் அவர் வேண்டுகோளினை முன்வைத்தார். இலங்கையரசாங்கம் முன்வைக்கப்போகும் தீர்வினை தற்போதைக்கு ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்துவது குறித்து போராளித்தலைவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார். இச்சந்திப்பிற்கு முன்னதாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியினரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாக பிரபாகரனே முதலில் பேசினார். வழக்கம் போல அவர் தமிழில் பேச, பாலசிங்கம் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலங்கையரசு தற்போது தரவிருப்பதாக பண்டாரி கூறும் தீர்வினை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் அதனை மேம்படுத்தும் திட்டத்தினை ஏற்கமுடியாது என்று பிரபாகரன் திட்டவட்டமாகக் கூறினார். சரித்திரத்தில் இவ்வாறான நீண்டகால மேம்படுத்தல்கள் தோல்வியிலேயே முடிவடைந்திருப்பதை அவர் எடுத்துக் காட்டினார். ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட காந்தியவாதியான எஸ்.ஜெ.வி.செல்வநாயகம் அவர்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டுவரை இவ்வகையான நீண்டகால மேம்படுத்தல் முடிவினை எடுத்து தமிழரின் பிரச்சினையினைத் தீர்க்க முயன்றபோதும்கூட, அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன என்று பிரபாகரன் வாதிட்டார். செல்வநாயகம் அவர்கள் பண்டாரநாயக்கவுடனும் பின்னர் டட்லியுடனும் இரு ஒப்பந்தங்களைச் செய்தார். ஆனால் அவையிரண்டையுமே அச்சிங்களத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறிவிட்டனர். தமிழர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து, அவர்களின் உணர்வெழுச்சியை மழுங்கடித்து, ஈற்றில் அவர்களை விரக்தியடையச் செய்வதனையே சிங்களத் தலைவர்கள் தமது பாணியாகக் கடைப்பிடித்து வந்தனர். ஆகவே, முன்னைய தமிழ்த் தலைவர்கள் முயன்று தோற்றுப்போன ஒரு வழியில் மீண்டும் ஒரு முறை வீழ்ந்து தோற்றுப்போக ஈழத்தேசிய விடுதலை முன்னணி தயாராக இல்லை என்று பிரபாகரன் தெரிவித்தார். மேலும், 1977 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை (1985) தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரையும் ஜெயவர்த்தன இதே வழியிலேயே ஏமாற்றி வருகிறார் என்றும் பிரபாகரன் சுட்டிக் காட்டினார். தாம் ஜெயவர்த்தனவை நம்பவில்லை என்று பிரபாகரன் மீண்டும் அங்கே குறிப்பிட்டார். மேலும், திம்புவிற்குப் போகும்படி ஈழத்தேசிய அமைப்பினர் மீது இந்தியா கொடுத்த அழுத்தங்கள குறித்த தனது அதிருப்தியையும் அவர் அங்கே வெளிப்படுத்தினார். இந்தியாவை தனது சதிவலைக்குள் வீழ்த்தி தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவே ஜெயார் முயன்று வருகிறார் என்று பண்டாரியை பிரபாகரன் எச்சரித்தார். ரஜீவ் காந்தி மீதும், பண்டாரி மீதும் தாம் வைத்திருக்கும் மதிப்பின் நிமித்தம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்காக திம்புவிற்கு தமது முன்னணியினர் செல்வர் என்று கூறிய பிரபாகரன், அப்போதும்கூட தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் இலங்கையரசு முன்வைக்காது என்று தான் திடமாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதலாம் கட்டப் பேச்சுக்களின் இறுதியில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்வைத்தவிர வேறு எதனையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை திட்டவட்டமாக அவர் அறிவித்தார். பிரபாகரனின் பேச்சைக்கேட்டு பண்டாரி அதிருப்தியடைந்தார். கடுமையான நிலைப்பாட்டுடன் பேசாது, யதார்த்தத்திலிலிருந்து சிந்தியுங்கள் என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப் பார்த்து அவர் கூறினார். ஆனால், பிரபாகரனோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததுடன், எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாராக இருக்கவில்லை. பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் புளொட் அமைப்பினருடனும் தனியான சந்திப்புக்களை பண்டாரி மேற்கொண்டார். அவர்களும் ஜெயவர்த்தனவை தாங்கள் நம்பவில்லையென்றே பண்டாரியிடம் கூறினர். தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை லலித் அதுலத் முதலி முற்றாக நிராகரித்திருப்பதன் மூலம் இரண்டாம் கட்டப் பேச்சுக்களும் தோல்வியிலேயே முடிவடையப் போகின்றது என்பது புலனாகிறது என்று அவர்கள் பண்டாரியிடம் கூறினர். பண்டாரியிடம் பேசிய அமிர்தலிங்கம், "அரசாங்கம் முன்வைக்கவிருக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே எமது பதில் இருக்கும். அவர்கள் ஏற்கனவே முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளையே புதிய பூச்சுடன் மீளவும் முன்வைப்பார்களாயின் அதனை நிராகரிப்பதைத்தவிர எமக்கு வேறு வழிகள் இல்லை" என்று கூறினார். தமிழ்ப் பிரதிநிதிகளுடனான தனது சந்திப்புக்களின்போது அவர்களின் கருத்தைக் கேட்டு பண்டாரி கடுமையான அதிருப்தி அடைந்திருந்ததாக டிக்ஷிட் தனது புத்தகத்தில் எழுதுகிறார். தனது பதவிக்காலம் 1986 ஆம் ஆண்டு பங்குனியில் முடிவிற்கு வரும் நிலையில், அதற்கு முன்னர் பேச்சுவார்த்தையூடாக உடனடித் தீர்வொன்றினை எட்டுவதே பண்டாரியின் நோக்கமாக இருந்தது. ஆகவே, இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவதற்காக கடுமையான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்திருந்தார். டிக்ஷிட் தொடர்ந்தும் எழுதுகையில், "தமிழ்த் தலைவர்களுடனான தனது பேச்சுக்களின் விளைவாக பண்டாரி இலங்கைத் தமிழர்கள் மீது கடுமையான எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருந்தார். இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்கள் அநாவசியமாக பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அவர் நம்பத் தலைப்பட்டார்" என்று எழுதுகிறார். அன்று மாலை, தனியாக இருக்கும்போது, டிக்ஷிட்டிடம் பேசிய பண்டாரி, "இந்தியாவால் வரையப்பட்ட "கடப்பாடற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குக் கொடுத்தீர்களா ?" என்று வினவினார். "இல்லை, எனக்கு அவ்வாறு யாரும் பணிப்புரை வழங்கவில்லையே" என்று டிக்ஷிட் கூறவும், "நீங்கள் கொழும்பிற்குச் சென்றவுடன் அந்த நகலை செல்வநாயகத்திடம் கொடுங்கள்" என்று பண்டாரி கூறினார். அதிர்ச்சியடைந்த டிக்ஷிட், "செல்வநாயகம் இறந்துவிட்டார், நீங்கள் நீலன் திருச்செல்வத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேட்கவும், எரிச்சலடைந்த பண்டாரி, " செல்வநாயகமோ, திருச்செல்வமோ, யாரிடமாவது கொடுங்கள். தென்னிந்தியர்களின் பெயர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன" என்று சலித்துக்கொண்டே கூறினார். பண்டாரி பணித்தவாறே, இந்தியா தயாரித்த ஆலோசனைகளின் நகல் ஒன்றினை கொழும்பு திரும்பியதும் நீலனிடம் தந்தார் டிக்ஷிட். சென்னையில் தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து இலங்கையரசாங்கம் முன்வைக்கவிருக்கும் தீர்வினை ஏற்றுக்கொள்ளும்படி பண்டாரி அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், வவுனியாவிலும், திருகோணமலையிலும் நிலைமைகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தன. வவுனியாவில் பொலீஸ் வாகனம் ஒன்றின்மீது போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு பொலீஸ் உப பரிசோதகரும், நான்கு சாதாரண பொலீஸாரும் கொல்லப்பட்டனர். இதற்கான பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் வவுனியாவிலும் திருகோணமலையிலும் நடத்தினர். வவுனியாவில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடைகளையும், வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர். இராணுவத்தினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 21 பேர் காயமடைந்தனர். திருகோணமலையில் அகதிமுகாம் ஒன்றில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - ஏழு - இந்திர விழா -------------------------------------------------------------------------------------- இந்திர விழா என்ற பெயரில் ஒரு விழா கோவலன், கண்ணகி வாழ்ந்த காலத்தில் பூம்புகார் நகரில் நடந்ததாகச் சொல்கின்றனர். அதை பல சங்ககாலப் பாடல்களில் பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இது நிகழ்ந்திருக்கின்றது. இந்திரனுக்கு விழா எடுப்பது என்றும் சொல்லியிருக்கின்றார்கள். அந் நாளில் பூம்புகார் நகரே இந்திரலோகம் போன்று அலங்கரிக்கப்பட்டு, ஆடல்களும், பாடல்களும் நகரெங்கும் நடந்ததாக இதனை விபரித்திருக்கின்றனர். இன்றும் தமிழ்நாட்டில் சில ஊர்களில் இதே பெயரில், இதே நாளில் இந்த விழா, வேறு வேறு வகைகளில், நடத்தப்படுகின்றது. ஊர் அம்மன் கோவிலின் 15ம் நாள் தீர்த்த திருவிழா. அம்மன் சமுத்திரத் தீர்த்தம் ஆடும் நாள். 15 நாட்கள் திருவிழாவின் கடைசி நாளான இது ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றே வரும். அன்றைய நாளை ஊரவர்கள் இந்திரா விழா என்னும் பெயரில் நெடுங்காலமாக நடத்தி வருகின்றனர். ஊரின் எல்லைகள் வரை மின் விளக்குகளும், குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் வரிசையாக வீதியோரங்களில் கட்டப்பட்டிருக்கும். நீர்ப் பந்தல்கள், மோர்ப் பந்தல்கள், தேநீர், கோப்பி என்று வழி வழியே தெருவெங்கும் கிடைக்கும். இலங்கையில் இருக்கும் பிரபலமான இசைக் குழுக்கள், நடன் குழுக்கள் என்பன அன்று ஊரின் வெவ்வேறு பகுதிகளிலும் இரவிரவாக நிகழ்ச்சியை நடத்துவார்கள். முன்னர் சில வருடங்கள் இந்தியாவிலிருந்தும் பிரபலங்கள் வந்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். மோகன்ராஜின் அப்சரஸ் இசைக்குழு ஒரு தடவை வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரையும், மோகன் மற்றும் ரங்கன் உட்பட, வேட்டி கட்டச் சொன்னதும் ஞாபகம். அதன் பின் மோகன்ராஜ் இலங்கையில் மிகவும் பிரபலமானார். கோவிலில் வேட்டி கட்டியதால் அல்ல, அவர் மிகவும் திறமையானவர் என்பதால்............. சித்தாரா அல்லது அப்படியான ஒரு பெயரில் ஒரு இசைக்குழு கொழும்பில் இருந்து வந்ததாகவும் ஞாபகம். இதை விட யாழில் இருக்கும் எல்லா இசைக் குழுக்களும் அன்று வருவார்கள். 'சின்ன மேளம்' என்று சொல்லப்படும் ஒரு நடன நிகழ்வும் நடக்கும். இன்றைய சினிமாப் பாணி நடனங்களின் ஒரு முன்னோடி வகை இது. தீவிரமான போராட்ட காலங்களில் சில வருடங்கள் இந்த விழா நடைபெறவில்லை அல்லது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடந்தது. சமீப காலங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற தென்னிந்திய பாடகர்கள் பலரும் வந்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி இருக்கின்றனர். கோவிட் பெருந்தொற்றின் பின் இப்பொழுது மீண்டும் பெரிதாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர் மக்கள் இந்த விழாவிற்கு வந்திருந்தனர். ஆனால் இந்த வருடம் முற்று முழுதாக உள்ளூர் கலைஞர்களின் குழுக்களே நிகழ்வுகளை நடத்தின. தென்னிந்தியாவில் இருந்து எவரையும் அழைக்கவில்லை. கொழும்பில் இருந்து கூட எந்த இசைக் குழுவும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். நெடியகாட்டு பிள்ளையார் கோவில் வீதியில் நடந்த நிகழ்வில், பருத்தித்துறையில் இருக்கும் ஒரு இசை மற்றும் நடன பாடசாலை மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினர். பலர் இருந்து அதை கேட்டும் ரசித்தும் கொண்டிருந்தது கொஞ்சம் புதுமையாக இருந்தது. எப்போதும் சினிமா பாடல்களும், ஆடல்களும் என்று போகும் நாங்கள், சாஸ்திரிய கலைகளை, அதுவும் வேறு தெரிவுகள் இருக்கும் போதும், இருந்து ரசிப்பது புதிதாகவே இருந்தது. அந்த பாடசாலை மாணவர்களுக்கு இது ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும். ஒரு இடத்தில் கடலுக்குள் மேடை போட்டிருந்தனர். மூன்று இடங்களில் கடற்கரையில் மேடை போட்டிருந்தனர். இன்னொரு இடத்தில் வீதியின் மேலே ஒரு மேடை, அதன் கீழால் எல்லோரும் போய் வந்து கொண்டிருந்தனர். சந்தியில் சிதம்பர கணிதப் போட்டி நிர்வாகக்தினரால் ஒரு மேடையில் கணிதப் போட்டி நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றை விட இன்னும் சில மேடைகள் ஊரின் ஒவ்வொரு பக்கத்திலும். இசைக் குழுக்களின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மிகவும் சாதாரணமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும். வாத்திய கலைஞர்களின் திறமை, பாடகர்களின் திறமை எல்லாமே மிகச் சாதாரணம் என்றே தோன்றியது. இது ஒரு வேளை இன்று நாம் உலகளவில் மிகப் பெரிய இசைக் குழுக்கள் மற்றும் கலைஞர்களின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருவது கூட இந்த அபிப்பிராயத்தை உண்டாக்கி இருக்கலாம். ஆனாலும் உள்ளூர் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் இருந்தால், அதில் முற்று முழுதான உடன்பாடே. எல்லாக் குழுக்களிலும் அறிவிப்பாளர்கள் அசத்தினார்கள் என்றதையும் இங்கே சொல்ல வேண்டும். தமிழும், குரலும், ஏற்ற இறங்கங்களும் அருமையாக இருந்தன. இசை நிகழ்வுகள் நடைபெறும் மேடைகளிற்கு அருகில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நடனம் ஆடியது முன்னர் நான் பார்த்திராதது. இப்படி இங்கு நடக்கும் என்பது நினைத்துக் கூட பார்த்திராத ஒரு விடயம் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களில் சிலர் கொஞ்சம் நிதானம் இழந்திருந்தனர் போன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தில் பல கட்டுபாடுகள் உடைபடுவது சகஜம் தான் என்றாலும், போதைப் பொருட்களின் பாவனை அளவிற்கு மீறி விட்டது போன்றே பல இடங்களில் தெரிந்தது. அதற்கேற்ப, ஒரு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இரு இளைஞர் குழுவினர்களுக்கு இடையில் தகராறு ஆகி, ஒருவரை கத்தியால் குத்தி விட்டனர். ஒருவர் ரத்தம் வழிய ஓட, அவர் பின்னல் அவர்கள் ஓட, அவர்கள் பின்னால் போலீஸ்காரர்கள் ஓட என்று ஒரு குழப்பமும் நடந்தது. இப்படியான ஒரு நிகழ்வு அந் நாட்களில் அங்கே நடந்திருக்கவே முடியாது. அன்றிரவு தெருவெங்கும் குப்பையானது. எங்கும் பிளாஸ்டிக் குவளைகளும், போத்தல்களும் மற்றும் பல குப்பைகளும். எவரும் எவற்றையும் ஒரு இடத்தில் போடுவதாக இல்லை. சும்மா வீசி எறிந்து விட்டிருந்தனர். அடுத்த நாள் விடியவே எழும்பி, இனி என்ன, திருவிழாவும் முடிந்து விட்டது, மீதமிருக்கும் நாட்களில் ஒரு அவசர சுற்றுலாவை ஒழுங்கு செய்வோம் என்று நினைத்தேன். கண்டியும், நுவரெலியாவும் தான் அடிக்கும் வெயிலுக்கு பரவாயில்லாமல் இருக்கும் என்ற படியே, தெருவுக்கு வந்தேன். தெருவில், எங்கேயும், ஒரு குப்பை இல்லை, ஒரு பிளாஸ்டிக் இல்லை. கட்டப்பட்டிருந்த வாழைக் குலைகளும் இல்லை. அவ்வளவையும் சுத்தப்படுத்தி விட்டனர். எப்படித் தான் அவ்வளவையும் சுத்தப் படுத்தினார்களோ தெரியாது........ (தொடரும்..........)2 points- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2 pointsபடம் இல்லாத இலங்கைப் பயணம் - ஆறு ---------------------------------------------------------------- குட்டிக் கடை என்றாலும் எங்கள் வீட்டவர்கள் அங்கும் எட்டு மணித்தியாலங்கள் செலவழிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் காலை முன் வைத்து ஒரு கடைத் தெருவில் இறங்கி விட்டால், சுன்னாகமும், தி நகரும் ஒன்றே. ஒரு கட்டத்தில் மதியம் தாண்டிய பின் இனிமேல் பசி பொறுக்க முடியாது என்ற நிலையில், சரி, சாப்பிடப் போவம் என்று வந்தார்கள். 'ஒரு நல்ல சைவச் சாப்பாட்டுக் கடையாக பார்த்து நிற்பாட்டப்பா...' என்று ஓட்டுனரிடம் சொன்னதில் ஒரு வார்த்தை பெரும் பிழையான வார்த்தை. 'நல்ல' என்ற அடைமொழியை நான் சொல்லியிருக்கக்கூடாது. அவர் அங்கிருந்து இன்னும் தூரம் ஓடி திண்ணைவேலியில் இருக்கும் லவின்ஸ் என்னும் ஒரு கடைக்கு எங்களைக் கொண்டு வந்தார். உயர்தர இந்திய சைவ உணவு அல்லது அப்படி ஏதோ ஒன்று அக்கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்தது. இது தான் இந்தப் பயணத்தில் நாங்கள் முதலாவதாகப் போகும் உணவகம். எனக்கு எந்தக் கடைகள் பற்றியும் எதுவுமே தெரியாது, என் மனைவியும் யூ டியூப் சேனல்களில் துணிக்கடைகள் போன்றவற்றை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தவர், ஆனால் உணவகங்களை பார்த்து வைக்க நினைக்கவில்லை. நாங்கள் ஆறு பேர்கள், வாகன ஓட்டுநர் உட்பட. மெனு கார்ட்டை தந்தார்கள். குடிப்பதற்கு ஜூஸ், லஸ்ஸி, சோடா என்று சிலவற்றை சொன்னோம். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 4000 ரூபாய்கள் என்று போட்டிருக்கின்றார்கள் என்று பிள்ளைகள் காட்டினார்கள். அங்கு வேலை செய்பவர் ஒருவரைக் கூப்பிட்டு, இது என்ன 4000 ரூபாய் ஆரஞ்சு ஜூஸ் என்று கேட்டோம். ஆரஞ்சை பிழிந்து கொடுப்பார்கள் என்றார். அவர் என்ன சொல்ல வருகின்றார் என்று விளங்கவில்லை. நாங்கள் அந்த ஜீஸ் எடுக்கவும் இல்லை. இந்த 4000 ரூபாய் ஜூஸ் பற்றி ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் யாரோ செய்தி போட்டிருக்கின்றார்கள் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். ஒரு செட் பூரி, பரோட்டா, ஒரு தோசை என்று மிகச் சாதாரண உணவுகளையே எடுத்தோம். கறிகளையும் எடுங்கள் என்றார்கள் அங்கு வேலை செய்பவர்கள். ஏன், பூரி, பரோட்டா போன்றவற்றுடன் ஒன்றும் வராதா என்று கேட்டோம். வரும், ஆனால் அது போதாது என்றனர். சரி என்று நான்கு கறிகளையும் எடுத்தோம். மிகச் சாதாரணமான ஒரு சாப்பாடு. அமெரிக்காவில் லிட்டில் இந்தியா என்னும் ஒரு பகுதியில் தான் என்னுடைய வீடு இருக்கின்றது. ஆதலால் அருகிலேயே பல இந்திய உணவகங்கள் இருக்கின்றன. அதில் மிகவும் சாதாரண, விலை மிகவும் குறைந்த ஒரு உணவகத்தில் இருக்கும் தரமே இங்கும் இருந்தது. அதே மணமும், குணமும், சின்ன சின்ன இரும்புச் சட்டிகளும். எதையும் சாப்பிட்டு முடிக்கவும் இல்லை. நான்கு கறிகளில் இரண்டு கறிகளை தொடக்கூட இல்லை. 24 ஆயிரம் ரூபாய்கள் என்று பில்லைக் கொடுத்தார்கள். நம்ப முடியவில்லை, கூட்டிப் பார்த்தேன், 24 ஆயிரங்களே. பின்னர் கூகிளில் இந்த உணவகத்தினை தேடிப் பார்த்தேன். பொதுவாக எல்லோரும் நன்றாகவே சொல்லியிருக்கின்றனர். என்னால் அப்படி சொல்ல இயலவில்லை. இதே வேளையில், பின்னர் ஒரு நாள் நல்லூர் கோவிலின் வீதியில் இருக்கும் Lemon Tree Hotel என்னும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இந்த தடவை நாங்கள் எட்டுப் பேர்கள். அதே 'இந்திய சைவ....' என்ற அடைமொழியுடன் இந்த இடமும் இருந்தது. இங்கும் சிற்றுண்டி வகைகளும், மதிய உணவு வகைகளும் இருந்தன. தென் இந்திய தாலி போன்று ஒரு மதிய உணவு கொடுத்தனர். வேறு உணவுப் பண்டங்களையும் எடுத்திருந்தோம். சிலவற்றை வீட்டுக்கு கட்டியும் கொண்டோம். மொத்தமாக ஆறு ஆயிரங்கள் என்று பில் வந்தது. என்னைக் கேட்டால், அந்த உயர்தர உணவகம் என்று போடப்பட்டிருந்த உணவகத்தில் இருந்தது போன்று அல்லது அதை விட சிறப்பாக இங்கு உணவுகள் இருந்தன. என்ன, சின்ன சின்ன இரும்புச் சட்டிகளில் இவர்கள் பரிமாறவில்லை என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். என்ன சொன்னாலும் சைவம் என்றால் எங்களுக்கு சரியாக அமைவது மலாயன் கபே என்பதில் பெரிதாக மாற்றுக் கருத்துகள் இருக்காது என்று நினைக்கின்றேன். என்றும் அந்த உணவகம் அப்படியே இருக்கின்றது. இரண்டாம் தடவை அங்கு போயிருந்த பொழுது ஒரு சம்பவம் நடந்தது. முதல் தடவை பிள்ளைகளையும் அங்கு கூட்டிப் போயிருந்தோம். நன்றாகவே இருக்குது என்றார்கள். இரண்டு வாரங்களில் பிள்ளைகள் அமெரிக்கா திரும்பி விட்டார்கள். இருவருக்கும் வேலை, அதில் ஒருவர், இளையவர், இந்த வருடம் தான் வேலை ஆரம்பித்து இருக்கின்றார். ஆரம்பத்தில் வருடத்திற்கே அமெரிக்காவில் இரண்டு வாரங்கள் தான் விடுமுறை கொடுப்பார்கள். இவருக்கு நான்கே மாதத்தில் சிறிது இரக்கப்பட்டு இரண்டு வாரங்கள் விடுமுறை கொடுத்தது அமெரிக்க சட்டக் கோவைகளுக்கு கொஞ்சம் எதிரான ஒரு விடயம். இரண்டாம் தடவை மலாயன் கபே போயிருந்த போது, ஒரு பருப்பு வடை எனக்கும், மனைவிக்கு ஒரு முக்கோண ரொட்டி என்றும் சொன்னேன். அதைக் கேட்டவர் சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டே நின்றார். நல்ல உயரமான ஒரு இளைஞன். போனவர் ஒரேயொரு உளுந்து வடையுடன் மட்டும் திரும்பி வந்தார். பருப்பு வடை என்றேன் மீண்டும். ஒரு வேளை கடலை வடை என்று தான் கட்டாயம் சொல்ல வேண்டுமோ என்று கடலை வடை என்றும் சொன்னேன். அந்த இளைஞன் மெதுவாக என் காதருகில் குனிந்தார்............... தான் தமிழ் இல்லை என்றும், ஒரு சிங்களவர் என்றும் மிகப் பணிவாகச் சொன்னார். சிங்களத்திலேயே சொன்னார். கொஞ்சம் ஆச்சரியமாகப் போய்விட்டது. அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்களே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று காட்டுகின்றோம் என்று சொல்லி விட்டு, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன். தான் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்றார். பீடம் கிளிநொச்சியில் இருக்கின்றது, இங்கு யாழ் நகரில் என்ன செய்கின்றீர்கள் என்றேன். அவர்களின் பயிற்சி ஒன்றுக்காக யாழ் நகரில் இப்போது தங்கியிருப்பதாகச் சொன்னார். நானும் படிக்கும் காலத்தில் இரண்டு தடவைகள் பயிற்சிக்காக மொத்தமாக ஆறு மாதங்கள் தென் பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன். ஆனால் பயிற்சிக் காலத்தில் ஒரு உணவகத்தில் வேலை செய்வது புதிய விடயம். அது அந்த இளைஞன் மீது ஒரு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கியது. அவரின் பெயர் சொன்னார். சொந்த இடம் கதிர்காமம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கிளிநொச்சியில் எலக்ரிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் சில விடயங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் கதைத்தோம். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியில் வரும் போது திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞர் ஒரு மேசையில் நாலு ஆட்களிடம் மாட்டுப்பட்டிருந்தார். சமாளித்து, கற்றுக் கொண்டு தான் வாழ்க்கையில் முன்னுக்கு போக வேண்டும். நாங்களும் இப்படித்தானே பயணித்தோம். மனைவி கேட்டார், 'எல்லாம் சரி, அந்தப் பொடியன் எப்படி உங்களோட உடனேயே சிங்களத்தில் கதைச்சது?' எனக்கும் ஏன், எப்படி என்று விளங்கவில்லை. அடுத்த முறை போய், கதிர்காமம் போய், நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். (தொடரும்...........)2 points- போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்துதான் அது உன்னை கொத்த வருகிறது. எதிர்த்து நில் ஓடிவிடும்’ என்பேன். அவள் கண்களை விரித்து கேட்பாள். ஆனால் ஒருபோதும் அதை எதிர்க்க மாட்டாள். நான் வேலையை விட்டுவிட்டு அருகே இருந்த கற்குந்தில் இருந்து அவளிடம் பேச ஆரம்பித்தேன். ‘இதோ உன்னை தாக்க வந்தால் நீ அடிக்கலாம். எதற்காக அஞ்சுகிறாய் ?’ என்றேன். ‘அப்பா, சேவலை நான் தொடர்ந்தும் எதிரியாக்க விரும்பவில்லை. நண்பனாக்க விரும்புகிறேன்’ என்று பிரெஞ்சு மொழியில் கூறினாள். என் சரீரம் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. சூரியன் எங்களருகே விழுந்துகொண்டிருந்தது. பிளே வயல்களின் வருடல் காற்று வந்துகொண்டிருந்தது. என் மடியில் தடியோடு மகள் இருந்தாள். என் மூளை காற்றால் பிளக்கப்பட்டு பறப்பது போல இருந்தது. *** தமிழின் நவீன இலக்கியத்தில் போர் பற்றிய பதிவுகள் பலவும் இருக்கின்றன. எண்ணமுடியா நட்சத்திரம் போல் கவிதைகள் மற்றும் கட்டுரைகள். போரியல் நாவல் என்றால் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கப்பால்’ அதன் சிறிய பகுதியை ஆரம்பித்து வைத்தது. ஹெமிங்வே யின் படைப்புகளில் விருப்பும் பாதிப்பும் உடைய ப.சிங்காரம் தொடர்ந்து எழுதாமல் விட்டது நமக்கு இழப்பு. அவரைத் தொடர்ந்து ஈழம் 35 ஆண்டுகள் யுத்தத்தில் நனைந்தது. இருந்தும் அங்கிருந்து போரியல் நாவல்கள் மிகக்குறைவாகவே வெளியாகி உள்ளன. அசல் போரை பதிவு செய்யும் நாவல்களாக 1985 வெளியான ‘விடியலுக்கு முந்திய மரணங்கள்’ , 1992 இல் எழுதப்பட்ட ‘போருலா’. , தூயவனின் ‘போரும் மருத்துவமும்’ , குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’ , ‘அப்பால் ஒரு நிலம்’ மற்றும் முதலாம் உலக யுத்தம் பற்றிய ச.பாலமுருகனின் ‘டைகிறிஸ்’ . சுகாஸ் என்ற த. பாலகணேசனால் கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் பற்றிய விடிவுக்கு முந்திய மரணங்கள் முதலாவது போர்பற்றிய பதிவு. இதை எழுதும்போது பாலகணேசனுக்கு வயது 21. 21/11/1992 இல் பலாலி இராணுவமுகாம் தாக்குதலில் 57 பேர் சாவடைந்தனர். அதில் ‘லியோ’ என்ற வீரனும் சாவடைகிறான். அப்போது அவனுக்கு இருபது வயது. அவனது நெஞ்சுப் பையில் ஒரு கையெழுத்துப்பிரதி இருக்கிறது. அதை எடுத்தவர்கள் வாசித்ததும் நெருப்பில் விழுந்த ஈயத்துண்டுபோல் ஆகிவிடுகிறார்கள். மாங்குளத்தில் இருந்த இராணுவ முகாம் தாக்குதல் பற்றி தன் அனுபவங்களை ஒரு நாவலாக எழுதி பையில் வைத்திருந்தான் லியோ. அந்த நாவலின் முடிவில் ‘மாங்குள இராணுவ முகாம் தகர்ப்பு நினைவுகள் இத்தோடு முடிவுறுகிற போதும் அடுத்து சிலாவத்துறை நினைவுகள் என் நெஞ்சில் பாயத்தொடங்குகின்றன..’ என்று முடிக்கின்றான். அவன் சிலாவத்துறை பற்றி எழுத முதல் மரணமடைந்து விட்டான். லியோ எழுத்து உலகுக்கு அவன் தனது பெயரை ‘மலரவன்’ என்று பதிந்திருந்தான். அவனது தந்தை ஒரு மருத்துவர். அத்தோடு மூத்த அண்ணன் வைத்திய கலாநிதி. போரில் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு தம்பியின் உடல் சென்றடைகிறது. அதுதான் அண்ணனின் கண்ணீரும் தம்பியின் இரத்தமும் கலந்த இடம். மலரவனின் அழகியலான மொழி, சமூகப்பார்வை, மரங்களுக்காக வடிக்கும் கண்ணீர், காடுகளில் விழி தூங்காதிருந்து வானத்தையும் , நட்சத்திரங்களையும் கண்ணிமைக்குள் அடைத்துப்பார்க்கும் கவிதைப் பார்வை போருலாவை இன்றும் படிக்கும்போது ஆச்சரியமாகவே உள்ளது. அவன் இறந்தாலும் அவனது படைப்பு மனம் ‘போர் உலாவில்’ பேசிக்கொண்டே இருக்கிறது. இந்த சிறிய வயதில் எப்படி இத்தனை அவதாரம் கொள்ள முடிந்தது என்று ஏங்குகிறது மனம். அவனை பார்க்க முடியாது. அவன் எழுதிவிட்டு செத்துப்போனவன். தான் எழுதியது நூலாகும் என்றுகூட அறியாத போராளி. 1990 கார்த்திகை 9ம் திகதி மாங்குளம் இராணுவ முகாமை தாக்குவதற்கு உழவு இயந்திரத்தில் மணலாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். களமுனையை சென்றடைய காடுகளூடாக நீண்ட பயணம். காடுகளுக்குள் மரங்களை வெட்டி குற்றிகளைப்போட்டு அதன் இடைவெளிகளில் மண்ணை நிரப்பி தேவையான இடங்களில் பாதை அமைத்து பயணிக்கிறார்கள். ‘பால்போல தெறித்த வெண்ணிலவை முகில்கள் வெட்டியோடின. விரைவில் அவற்றை கலைத்துவிட்டு நிலவு வெளியே வந்து சிரித்தது’ என்ற வரி மலரவனின் அழகியலுடைய குறியீட்டு மொழியின் வெளிச்சம். ‘எவ்வளவு நல்ல காடு, தாய் மாதிரி இவ்வளவு காலமும் எங்களை காத்தது இதுதானே, இனி எப்ப வரப்போறம் ? ஆவலை அடக்க முடியாமல் கைகளை உயர்த்தி ‘டாட்டா’ காட்டினேன்.’ இரவு வேளையில் போராளிகள் நகர்வை அறிந்து உலங்குவானூர்தி தாக்கத்தொடங்குகிறது. களமுனையை அடைய முதலே போர் வந்து சிவப்புப் பழங்களை அனுப்பி உயிர் கேட்கிறது. அத்தடையை நீக்கிக் கடந்தால் அலம்பில் ஊர் எங்கும் தென்னந்தோப்புகள். ‘பெரிய குடை போன்ற தென்னைகள் சுமக்க முடியாமல் தேங்காய்களைச் சுமந்த வண்ணம் காற்றில் தலைவிரிகோலமாக தள்ளாடுவது பார்க்க பயமாக இருந்தது’ இரவுப் பயணத்தில் தடுமாறிய உழவு இயந்திரம் பிரண்ட போது பெட்டிக்குள் நசிந்து போன வசந்தனின் ஒரு கையும் காலும் மோசமாக பாதிக்கப்படுகிறது. அருகே இருந்த கிராமத்து வீட்டில் அவசர வைத்தியம் நடகக்கிறது அங்கிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ‘ அக்கா நீங்கள் சரியா எங்கட மூத்தக்கா வித்தி மாரி’ என்கிறான். களப்படுக்கையில் குருதியில் தோய்ந்திருக்கும் தோழனைப்பார்த்து ‘தேங்காய் நெய்விளக்கு உருகி உருகி அழுதது.’ என்ற எழுத்தின் நுண்மை மனதின் அறையெங்கும் புகுந்துவிடக் கூடியது. முள்ளியவளை கடந்து முறிப்பு குளக்கட்டில் ஓய்வெடுக்கும் போது அவர்களை சூழ்ந்துகொண்ட மாணவர்கள், ‘நீங்கள் எத்தனை ஆமியை சுட்டனிங்கள் ?’ ‘ஏன் சுடவேணும் அவங்கள் பாவமல்லோ?’ ‘அப்ப.. எங்கட மாமாவை பெரியப்பாவை ஏன் சுட்டவங்கள் ?’ களமுனையில் பசியோடும் , தூக்கம் இன்றிய கண்களோடும் இருக்கும் போராளிகளை கண்ட தாய்மார் தங்கள் வீடுகளில் இருந்து உணவுடன் படையெடுத்த போது ‘அருவி பாய்கிறதா ? அன்பு பாய்கிறதா ? தெரியவில்லை’ என்று நெகிழ்ந்த சொல்லில் மலரவன் மொழியை மலர வைக்கிறான். மாங்குளம் இராணுவ முகாமை மறைந்திருந்து பார்வையிடுவதும் , அதன் இராணுவத்திட்டமிடல்களும் எந்த நேரத்திலும் இராணுவச் சூட்டுக்கு ஆளாகும் நிலையில் நடைபெறுகிறது. மயில் ஒன்று தூரத்தே அகவியது. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னத்தொடங்கின. மாரி கால மழையில் உப்பிக்கிடந்த வெள்ளைச்சுவர்களில் சிறிது சிறிதாய் பொத்தான்கள் இடப்பட்டிருந்தன. கூரையூடாக வானத்தின் நிர்வாணம் தெளிவாய்த்தெரிந்தது.’ முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் மாங்குளத்தின் படத்தை மலரவனின் எழுத்து மனதில் வரைகிறது. அவர்கள் தாக்குதலுக்கு நேரடி உறுதிப்படுத்தல்களை மேற்கொள்ள 40 மீற்றரை கடக்க 40 மைல் சுற்றிவரவேண்டிஇருந்தது. தோழர்களின் இழப்போடும் கரும்புலி வீரன் போர்க்கின் சக்ககைவண்டித்தாக்குதலோடும் மாங்குளம் போராளிகளிடம் வீழ்கிறது. விமானங்கள் சகடை, புக்காரா, பைற்ரர் போராளிகளை குண்டுகளால் சல்லடை போட்டபோதும் மனதில் இருந்த அவர்களின் பலம் இயந்திரங்களை வென்று நிலத்தை மீட்கிறது. ‘மனிதன் உணவுக்காக மனிதனை கொல்லவில்லை. ஆக்கிரமிப்புக்காக கொல்கிறான்’ என்ற மலரவனின் ஏக்கம் மனித மூளையின் இருட்டான முரண்பாட்டுச்சிக்கலை கேள்வி கேட்கிறது. நாவலைப் படிக்கிறபோது சக போராளிகளின் அனுபவங்களும், அவர்களை ஆயுதமேந்தத்தூண்டிய கதைகளும், வேறுபட்ட மன உணர்வுகளோடு ஒன்றுசேர்ந்து ஓர்மமாகி நிற்கும் இளைஞர்களும் சுதந்திரத்திற்காக தாம் புன்னகையோடு தோளில் சுமந்தபாரத்தை இனிய மொழியில் பதிவு செய்கிறது. வாசகனை தாக்குதல் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறது. போர் எத்தனை கொடியது ? எத்தனை மானுட வலி நிறைந்தது ? மனிதனை மனிதன் கொல்லும் அபந்தத்தின் சந்தியில் நிறுத்தி சிந்திக்கத் செய்கிறது. ஓர் போராளி இறந்த செய்தியை அவன்வீட்டுக்குச் சென்று தாயிடம் மரணச் செய்தியை சொல்லும் போராளிகளின் மனதையும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் அடிக்கடி மனம் போர்க் காலங்களில் சிந்திப்பதுண்டு. மலரவனின் வீட்டுக்கு அச்சத்தோடு சென்ற போராளிக்கு வேறு விதமான அனுபவம் கிட்டுகிறது. அழுது கொண்டிருந்த தாய் போராளிகளை கண்டாலும் அழுகையை நிறுத்திவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்துவந்து கொடுக்கிறார். அது வங்கிக்கணக்கு. மலரவன் பிறந்தபோது தந்தை அவன் பெயரில் இட்ட பணம் லச்சங்களாக பெருகி அதில் இருந்தது என்று பின்னுரையில் சு.ப தமிழ்ச்செல்வன் பதிவு செய்கிறார். என் மனம் மலரவனை இந்த சிறிய வயதில் எத்தனை பெரிய பாரத்தை புன்னகையோடு சுமந்திருக்கிறான் ? அத்தனை மலர்களின் வாழ்வும் அர்த்தமற்றதா ? என்று அங்கலாய்த்தபடிஇருந்தது. *** மகள் ‘சேவல் வருகிறது’ என்று என்மீது தொங்கி ஏறினாள். அவள் என்னிடம் ‘சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை’ என்ற சொல் கல் வீழ்ந்த குளமாக வட்டங்களை உருவாக்கியது. ‘மகளே, உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும் இதை நீ எங்கே கற்றுக்கொண்டாய் என்றேன்?’ தமிழிலும் பிரெஞ்சிலுமாக அவள் இப்படிச்சொன்னாள், ‘அப்பா, என் பள்ளியில் என்னை செயிம் , மக்சிம் , மரியா ஆகியோர் விளையாட்டுக்கு சேர்ப்பதில்லை. நான் போனால் விரும்பமாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் எழுந்து சென்றுவிடுவார்கள். ‘ ‘ஓ..என் செல்லமே நீ ஏன் மடம் லுனாவிடம் சொல்லவில்லை ?’ ‘இல்லை அப்பா. அப்படி சொன்னால் மடம் லுனா அவர்களை புனி செய்தால் அவர்கள் மேலும் எனக்கு எதிரி ஆகிவிடுவார்கள்’ ‘அப்படி என்றால் உன்னோடு யாரும் விளையாடமாரட்டார்களா ?’ ‘இல்லை. மற்றவர்கள் அவர்களோடு விளையாடுவதால் என்னை சேர்க்க மாட்டார்கள். ஆனால் நான் இப்போது தனியே விளையாடுவேன். ஒருநாள் அவர்கள் எனக்கு அமி ஆவார்கள். அப்போது நான் சேர்ந்து விளையாடுவேன். ‘உனக்கு வருத்தமாக இல்லையா ?’ ‘இல்லை. நான்தானே தனியே விளையாடப்பழகிவிட்டேன். அதனால்தான் சேவலுக்கு அடித்து அதை எதிரியாக்க விரும்பவில்லை அப்பா. எனக்கு நண்பர்கள் வேண்டும்’ என்றாள். ௦௦௦ அகரன் பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். https://akazhonline.com/?p=73331 point- வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர் அங்கிருந்து கொழும்பு என்று பயணத்தை திட்டமிட்டிருந்தோம். கதே பசிபிக் விமான நிறுவனம் மற்றைய விமான நிறுவங்களுடன் ஒப்பிடுகையில் இப்பொழுது மிக விரைவாக இலங்கைக்கு இங்கிருந்து போய்க் கொண்டிருக்கின்றது. விமானப் பயணம் மொத்தம் 22 மணித்தியாலங்கள், அதில் இரண்டு மணித்தியாலங்கள் ஹாங்காங்கில் தங்கி நிற்கும் நேரம். உலகில் மிக மோசமான விமான நிலையங்கள் என்ற தரவரிசையில் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் அடிக்கடி வரும். மிகவும் சிறிய ஒரு இடத்தில், நெருக்கலான, பெரும் நகரின் மத்தியில், ஒரு குதிரை லாட வடிவில் இது அமைந்திருக்கின்றது. அமெரிக்காவின் மேற்கு கரையினூடான பிரதான நுழைவாயிலாக இது இருப்பதால், இந்த விமான நிலையம் எப்போதும் கூட்டமாக இருக்கும். உள்ளூர்க்காரர்கள் இதை ஒரு விமான நிலையம் என்று எண்ணாமல், இதை ஒரு பஸ் நிலையம் போன்று பயன்படுத்துவது பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றது. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கே நடைபெற உள்ளது. இந்த விமான நிலையத்தை காட்டியே ஒலிம்பிக் நிர்வாகக் குழு இந்த நகரத்தை இலகுவாக நிராகரித்து இருக்கலாம். ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்காக இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. இருக்கும் இந்த சின்ன இடத்தில் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்களின் திட்டமிடும் திறன் மீது நம்பிக்கை உள்ளது. கதே பசிபிக் விமானம் சிறிது தாமதித்து புறப்பட்டது. ஹாங்காங்கில் போய் கொழும்பு செல்லும் அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு நேரம் மட்டு மட்டாகவே இருப்பது போல தெரிந்தது. சில வாரங்களின் முன், நண்பர் ஒருவருக்கு இதே போன்ற நிலை ஏற்பட்டு ஹாங்காங்கில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தை தவற விட்டுவிட்டார். பின்னர் ஹாங்காங்கிலிருந்து பெங்களூர் போய், அங்கிருந்து கொழும்பு போனார். இரண்டு மணித்தியால இடைவெளிக்கு பதிலாக நான்கு மணித்தியால இடைவெளி இருந்தால் பதற்றம் இருக்காது என்றும் தோன்றியது. மற்றபடி குறை சொல்ல முடியாத விமான நிறுவனம் கதே பசிபிக். விமானங்களில் பணிபுரிபவர்களில் மிகவும் வேகமாகவும், நிதானமாகவும் செயற்படுபவர்கள் என்றால் இவர்களாகத்தான் இருக்க முடியும். பணிபுரிபவர்கள் எல்லோருமே ஜிம்னாஸ்டிக் பயின்றவர்கள் போல, அப்படி இலகுவாக நெளிந்து வளைந்து ஏறி இறங்கி விமானத்தின் உள்ளே இடம் பெயர்கின்றார்கள். 15 மணி நேர முதலாவது பயணம் ஒருவாறு முடிந்தது. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு போதுமான நேரம் இருந்தது. கட்டுநாயக்காவில் வி எஃப் எஸ் குளோபல் நிறுவனம் இன்னும் விசா வழங்கும் நடைமுறையை ஆரம்பித்திருக்கவில்லை. இலங்கை குடிவரவு அதிகாரிகளே விசாவை வழங்கினர். ஏற்கனவே ஒரு விசாவிற்கு 50 டாலர்கள் என்று எங்கள் நால்வருக்கும் 200 டாலர்களை இணையத்தில் கட்டி இருந்தோம். ஏதோ ஒரு படிவத்தை நிரப்பவில்லை என்று அதை திரும்பவும் நிரப்பச் சொன்னார்கள். நிரப்பிக் கொண்டு போனால், அங்கு எவரும் இல்லை. நாங்கள் அங்கே இறங்கியது புது வருடம் பிறந்த இரவு. புதுவருட பிறப்பை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தின் உள்ளேயே சில இடங்களில் புதுவருட உணவு, இலவசமாக, வழங்கிக் கொண்டிருந்தனர். குடிவரவு அதிகாரிகள் அதற்கு போய் விட்டனர். ஒரு சாதாரண உரையாடலின் பின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விசாவை வழங்கினார். கடவுச்சீட்டுகளை வாங்கிக் கொண்டு வெளியில் நடக்க ஆரம்பித்தால், 'ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று ஒரு குரல் பின்னால் இருந்து வந்தது. திரும்பினால், அங்கே இன்னொரு அதிகாரி வந்து கொண்டிருந்தார். இவருக்கு நாங்கள் என்ன உதவி செய்து விட முடியும் என்றபடியே அவரைப் பார்த்து, 'பரவாயில்லையே நீங்கள் இரண்டு மொழிகளையும் கதைக்கிறீர்கள்' என்றேன். தான் ஒரு தமிழன் என்று அவரது பெயரைக் காட்டினார். இஸ்லாமியர் ஒருவர் அப்படிச் சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அருகில் இருந்த டியூட்டி ஃப்ரீ கடையில் சாக்லேட் வாங்கித் தர முடியுமா என்று கேட்டார். இலவசமா அல்லது இலஞ்சமா, இது என்ன வகை என்று நான் யோசித்தபடியே எதுவும் சொல்லாமல் நின்றேன். புரிந்து கொண்ட அவர், அவரே காசைக் கொடுப்பதாகச் சொல்லி 22 டாலர்களை என்னிடம் கொடுத்தார். கடையில் வாங்க வேண்டிய நான்கு சாக்லேட்டுகளையும் கடைக்குள் வந்து காட்டினார். புதுவருடம் ஆதலால் வீட்டுக்கு போகும் பொழுது பிள்ளைகள் எதையாவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றார். இவர் வீட்டில் இருப்பவர்கள் சித்திரை புதுவருடம் கொண்டாடுபவர்கள் என்றால், அவர்/அவர்கள் யாராக இருக்கும் என்ற தேவையில்லாத கணக்கு ஒன்று மனதில் ஓடத் தொடங்கியது. பொதிகள் எல்லாவற்றையும் சேர்த்து எடுத்த பின், எந்தவித சோதனைகளும் இன்றி வெளியில் வந்தோம். நேரம் கிட்டத்தட்ட இரவு 1 மணி. அந்த நடு இரவு நேரத்தில் இருந்த வெக்கையும், புழுங்கலும் வர இருக்கும் நாட்கள் எப்படி இருக்கப் போகின்றன என்ற ஒரு அறிமுகத்தை கொடுத்தன. இரண்டு பிள்ளைகளும் முழித்த முழி அதற்குச் சான்று. (தொடரும்.....)1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஐயோ ஐயோ தின்னாமல் குடிக்காமல் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் வீணா போகுதே.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நாளை வெள்ளி (24 மே) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 06) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றிபெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) RR எதிர் SRH ஆறு பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்லும் எனவும், நான்கு பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எனவும் கணித்துள்ளனர். வெல்லும் அணியை சரியாகக் கணித்தவர்களுக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும். மற்றையவர்கள் மூன்று புள்ளிகளை இழப்பார்கள்! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 RR முதல்வன் RR சுவி RR ஏராளன் RR நிலாமதி RR அஹஸ்தியன் CSK ஈழப்பிரியன் CSK கல்யாணி SRH கந்தப்பு SRH கறுப்பி SRH எப்போதும் தமிழன் RR வாதவூரான் CSK கிருபன் KKR நீர்வேலியான் CSK கோஷான் சே LSG நுணாவிலான் SRH புலவர் CSK1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பையா 2014 இல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கொல்கத்தாவிடம் தோற்றனர். நான் நினைக்கின்றேன் பஞ்சாப் Playoff இற்கு வந்தது இந்த ஒரு தடவை தான் 2014 இல்.1 point- இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
ஜீ சிரிப்பு செய்திகளில் தலைப்பு செய்தியாக வராத நாளே இல்லை போல........முன்னர் 'மிஸ்டர் எக்ஸ்' என்று ஒரு வகை பகிடிகள் வந்து கொண்டிருக்கும். அது போல இவை 'மிஸ்டர் ஜீ' பகிடிகள்..........1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் .........! 😂1 point- தனித்திரு - சோம.அழகு
1 point- மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/13791321 point- தனித்திரு - சோம.அழகு
1 pointநீங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள். பல வருடங்களின் முன்னர், ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நல்ல ஒரு எழுத்தாளராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார். உலகில் உள்ள நல்ல சிறுகதைகளில் 500 ஐயும், நல்ல நாவல்களில் 50 ஐயும் முதலில் வாசிக்க வேண்டும் என்று அந்தப் பதிலில் சொல்லியிருந்தார். சிறந்த சிறுகதை, நாவல் வரிசைகள் பலரால், எஸ் ரா, ஜெயமோகன் மற்றும் சில விமர்சகர்களால் (க நா சு போன்றோர்) போன்றவர்களால், வெளியிடப்பட்டும் இருந்தன. அந்த வரிசைகளில் உள்ள சில படைப்புகள் இணையத்திலேயே கிடைத்ததால், வாசிக்க கூடியதாகவும் இருந்தது. ஆனால் பலவற்றை வாசித்த பின் பெரும் பிரமிப்பும், பயமுமே உண்டானது, எவ்வளவு பெரிய படைப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர், இதுவல்லவோ எழுத்து என்று.1 point- தனித்திரு - சோம.அழகு
1 pointவேறு தளத்தில் உள்ளதைப் படி எடுத்து ஒட்டியதால் இவ்வாறு அமைந்தது. அடுத்த முறை பெரிய எழுத்தில் பதிய முயற்சிக்கிறேன். நன்றி, தோழர் !1 point- தனித்திரு - சோம.அழகு
1 pointஐயய்யோ ! உங்கள் எழுத்தின் பாணி வேறு. உங்களது எழுத்து பலரைச் சென்றடையும் திறன் கொண்டது.1 point- தனித்திரு - சோம.அழகு
1 point👍..... எல்லாவறையும் உங்கள் மகள் இப்படி ஒரேயடியாக எழுதி விட்டாரே.... அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு பந்தியும் நான் தேடிக் கொண்டிருந்தது. இடியப்பமும், இடி அமீனும் இனி என்னை பல இடங்களில் காப்பாற்றும்..........🤣 என் போன்ற பலர் ஏதாவது எழுதுவதற்கு தயங்குவதற்கு பிரதான காரணமே இப்படியான எழுத்துகள், ஆக்கங்கள் தான். இந்த எழுத்துகளின் தரத்தின் முன்னே நாங்கள் எழுத முயற்சிப்பது ஒன்றுமே இல்லை என்று தோன்றும்...👍👍1 point- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
😎 இன்று 23/05/2024 நான்காவதாக தடவையாக வீடு, மலசல கூடம் ஆகியவற்றை கட்டி முடிக்க 50000ரூபாவை திரு சிறிராசா ரஜிந்தன்(பேசமுடியாதவர்) உடைய வங்கிக் கணக்கில் யாழிணைய உறவு திரு @நந்தன் அண்ணா வைப்பிட்டுள்ளார். மிக்க நன்றி அண்ணை. மலசல கூடப்பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளது. இரண்டு அறைகளுக்கான நிலக்காறை வேலைகளும் குசினியின் கூரை வேலைகளும் பூரணப்படுத்தவேண்டும். முதல் இருதடவை காணொளி எடுத்துள்ளேன், இனி வேலைகள் ஓரளவு நிறைவடைந்ததும் காணொளி எடுத்துப் போடுவேன். இன்னும் 45000ரூபா அண்ணளவாகத் தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட நல்லுள்ளங்கள் உங்களால் இயன்ற உதவியை வழங்கலாம். சி.ரஜிந்தன் குடும்பத்தினருக்கு உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்பு கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448, +947795910471 point- தனித்திரு - சோம.அழகு
1 pointதனித்திருவில் ஏதோ புரிகிறது ஐயா. எழுத்தின் அளவை கொஞ்சம் பெரிதாக்கினால் வாசிக்க இலகுவாக இருக்கும்.1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointRR vs RCB: எலிமினேட்டரில் தொடரும் ஆர்சிபியின் தோல்விகள் - ராஜஸ்தானின் ராஜதந்திரம் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து 17 ஐபிஎல் சீசன்களாக கோப்பையை வெல்ல ஆர்சிபி முயன்று வருகிறது. அது இந்த முறையும் நடக்கவில்லை. அதேநேரம், தொடக்கம் முதல் வெற்றிகளைக் குவித்து, பிறகு தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்த ராஜஸ்தான் அணிக்கு, திடீரென தன்னம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த எலிமினேட்டர் வெற்றி, மீண்டும் ஃபார்முக்கு அழைத்து வந்துள்ளது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான பாதை தெளிவாகியுள்ளது. சென்னையில் நாளை நடக்கும் 2வது தகுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் பலப்பரிட்சை நடத்தும். ஆர்சிபி-யும் எலிமினேட்டர் சுற்றும் பட மூலாதாரம்,SPORTZPICS அதேநேரம் ஆர்சிபியின் போராட்டம், விடாமுயற்சி இந்த ஆட்டத்தோடு முடிவுக்கு வந்தது. கடந்த 17 சீசன்களாக கோடிக்கணக்கான ரசிகர்கள், ஆதரவாளர்கள், சிறந்த ஆட்டம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தியும் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியாத நிலை இந்த சீசனிலும் தொடர்கிறது. ஐபிஎல் தொடர்களில் மட்டும் 5 முறை எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோற்றுள்ளது. 2015ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், 2020ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ், 2021ஆம் ஆண்டு சீசனில் கொல்கத்தாவிடம், 2022 சீசனில் லக்னெளவிடம் தோற்ற நிலையில் இப்போது மீண்டும் ராஜஸ்தானிடம் 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தோற்றுள்ளது ஆர்சிபி அணி. ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் நேற்று ஃபீல்டிங்கும், பந்துவீச்சும் மிக சொதப்பலாக அமைந்திருந்ததே ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பவர்ப்ளே ஓவருக்குள் இரு கேட்சுகளை மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் தவறவிட்டனர். இரு கேட்சுகளை பிடித்திருந்தால், ஆட்டம் வேறுவிதமாகத் திரும்பியிருக்கும். அதேபோல ஸ்வப்னில் சிங், சிராஜ் பல ஃபீல்டிங்குகளை கோட்டைவிட்டு ரன்களை வழங்கினர். இதுபோன்ற தவறுகளைத் திருத்தியிருந்தாலே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கலாம். விராட் கோலி 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். லீக் சுற்றுகளில் சிறப்பாக ஆடிய கோலி, இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களில் தவறவிட்டுள்ளார். பந்துவீச்சிலும் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். பனிப்பொழிவு ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மாவின் பந்துவீச்சிலும் ராஜஸ்தான் பேட்டர்கள் திணறியபோது தொடர்ந்து பந்துவீச அனுமதித்திருக்கலாம். 'நம்பிக்கை வந்துவிட்டது' பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “எங்களுக்கு மிகப்பெரிய சிறந்த நாட்களும் இருக்கிறது, மோசமான நாட்களுக்கும் இருக்கிறது. ஆனால், அனைத்திலும் மீண்டு வருவது முக்கியம்," என்று தெரிவித்தார். "பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் அனைத்திலும் எங்கள் அணியின் செயல்பாடு அருமை. மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணம் வீரர்கள்தான். திட்டமிட்டபடி ஃபீல்டிங் அமைத்தோம், திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினோம், உத்திகளைச் சிறப்பாக சப்போர்ட் ஸ்டாஃப் வகுத்துக் கொடுத்தனர்." "அஸ்வின், ஆவேஷ், போல்ட் பந்துவீச்சு அருமையாக இருந்தது. இளம் வீரர்கள் பேட்டிங்கில் பொறுப்புடன் செயல்பட்டனர். எங்களின் ஓய்வறையில் மீண்டும் நம்பிக்கை வந்துவிட்டது,” எனத் தெரிவித்தார். ராஜதந்திர ராஜஸ்தான் ஆமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்றவுடன் சிறிதுகூட சிந்திக்காமல் பந்துவீச்சை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இந்த மைதானத்தில் ஸ்குயர் பவுண்டரி பெரிதானது, ஒருபுறம் சிறிதாக இருக்கும். அதாவது வலதுகை பேட்டர்கள் லெக் திசையில் பவுண்டரி அடிப்பது கடினமாகவும், இடதுகை பேட்டர்கள் ஆஃப்சைட் பவுண்டரி அடிப்பது சிரமமாகவும் இருக்கும். இந்தக் கணிப்பை சரியாக ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி, ஆர்சிபி பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுத்தனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் ஆர்சிபி அணியால் 56 ரன்களுக்கு மேல் சேர்க்க முடியவில்லை. வலதுகை பேட்டர்களுக்கு வேண்டுமென்றே லெக் திசையில் பந்துவீசி அவர்களால் பவுண்டரி அடிக்க முடியாத வகையில் ரன்ரேட்டை குறைத்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS டிரென்ட் போல்ட், அஸ்வின், ஆவேஷ் கான் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் ஆர்சிபியின் விக்கெட் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் குறிப்பாக அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் அஸ்வின் வீசிய 4 ஓவர்களிலும் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட ஆர்சிபி பேட்டர்களை அடிக்க அனுமதிக்கவில்லை. அதேபோல டிரென்ட் போல்ட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கவிட்டார். ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் என சிறிது அதிகமாக ரன்கள் வழங்கினாலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்குத் துணையாக இருந்தார். ஆர்சிபி பேட்டர்களை திணறவிட்ட போல்ட் புதிய பந்தில் பந்துவீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் போல்ட் வல்லவர். ஐபிஎல் தொடர்களில் மட்டும் புதிய பந்தில் முதல் ஓவரில் 30 முறைக்கும் மேலாக போல்ட் விக்கெட் எடுத்துள்ளார். அதேபோல நேற்றும் போல்ட் தனது பந்துவீச்சில் ஆர்சிபி பேட்டர்களை திணறடித்தார். போல்ட் தனது 3 ஓவர்களிலும் இன்ஸ்விங், அவுட் ஸ்விங் என சரியான லென்த்தில் வீசி ஆர்சிபி பேட்டர்களுக்கு செக் வைத்தார். 3 ஓவர்களில் 6 ரன்கள், அதில் 2 லெக்பை மட்டுமே போல்ட் வழங்கி, ஆர்சிபிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார். ஆனால், ஆர்சிபி அணி தனது பந்துவீச்சின்போது 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணியை 42 ரன்கள் அடிக்கவிட்டது. அஸ்வினின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS இந்த சீசனில் அஸ்வினின் பந்துவீச்சு பல பேட்டர்களால் அடித்து விளாசப்பட்டாலும், நேற்றைய ஆட்டத்தில் அவரின் பந்துவீச்சு சிம்ம சொப்னமாக அமைந்திருந்தது. பந்தை டாஸ் செய்வதிலும், சரியான லென்த்தில் பிட்ச் செய்வதிலும் அஸ்வின் அற்புதமாகச் செயல்பட்டார். ஆர்சிபி பேட்டர்கள் அடித்து விளையாட எந்த சந்தர்ப்பத்தையும் அஸ்வின் வழங்கவில்லை. ஒருபுறம் சஹல் பந்துவீச்சில் ரன்கள் சென்றபோதிலும், அஸ்வின் அதை ஈடு செய்து கட்டுப்படுத்தினார். சஹலும் தனது பங்கிற்கு கோலி விக்கெட்டை வீழ்த்தினார். அஸ்வின் பந்துவீசிய 4 ஓவர்களும் ஆர்சிபி பேட்டர்களுக்கு நேற்று தலைவலியாக இருந்து, ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது. ஒரு தவறான பந்தைக்கூட அஸ்வின் வீசாததால்தான் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடாமல் தடுத்தார். ஆர்சிபிக்கு நடுவரிசையில் நங்கூரமிட்ட கேமரூன் கிரீனை(27) வீழ்த்திய அடுத்த பந்தில் ஆபத்தான பேட்டர் மேக்ஸ்வெலையும் அஸ்வின் வெளியேற்றினார். ஆர்சிபியின் வலதுகை பேட்டர்கள் லெக்திசையில் பவுண்டரி அடிக்க சிரமப்பட்டு, மறுபுறம் ஸ்ட்ரைக் கிடைக்கும்போது ரன்சேர்க்க பயன்படுத்தினர். இதனால், ஆவேஷ் கான் வீசிய 12வது ஓவர், சஹல் வீசிய 10வது ஓவரில் தலா 13 ரன்கள் சென்றது. தினேஷ் கார்த்திக் அவுட் சர்ச்சை பட மூலாதாரம்,SPORTZPICS ஆவேஷ் கான் வீசிய 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக் கால்காப்பில் வாங்கியபோது அதற்கு களநடுவர் ஆனந்தபத்மநாபன் அவுட் வழங்கினார். இந்த முடிவுக்கு எதிராக டிகே உடனடியாக அப்பீல் செய்யவில்லை, மாறாக களத்தில் இருந்த லாம்ரோருடன் பேசிவிட்டு டிஆர்எஸ் அப்பீல் செய்தார். மூன்றாவது நடுவர் ரீப்ளேவில் பந்து கால்காப்பில் படுவது போலவும், பேட்டில் பட்டு அதன்பின் கால்காப்பில் படுவது போலவும் இருந்தது. ஆனால் அல்ட்ரா எட்ஜில் பார்த்தபோது, உறுதியாகத் தெரியாத நிலையில் 3வது நடுவர் அனில் சவுத்ரி, அவுட் இல்லை என அறிவித்து களநடுவர் முடிவை மாற்றுமாறு கூறினார். எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாத நிலையில் அவுட் இல்லை என்று கூறிய 3வது நடுவர் முடிவை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்கராவும் இந்த முடிவால் ஆவேசமடைந்து சேனல்களிடம் பேசினார். வலுான அடித்தளமிட்ட ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணி சேஸிங் செய்யும்போது ஜெய்ஸ்வால், டாம் காட்மோரின் இரு கேட்ச் வாய்ப்புகளை ஆர்சிபி ஃபீல்டர்கள் நழுவவிட்டு அந்த அணி வெற்றிக்கு வாய்ப்பளித்தனர். இதைப் பயன்படுத்திய ஜெய்ஸ்வால் 45 ரன்கள் விளாசினார். பவர்ப்ளேவில் ஒரு விக்கெட் இழந்து 47 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. ஆனால், காட்மோர் 20 ரன்னில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்த அடுத்த சில ஓவர்களில் கரன் ஷர்மா ஓவரில் கேப்டன் சாம்ஸன்(17) வெளியேறினார். ஆட்டம் திடீரென ஆர்சிபி பக்கம் சாய்வதைப் போல் இருந்தது. 14-வது ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு 36 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டது. பட மூலாதாரம்,SPORTZPICS சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த ரியான் பராக், ஹெட்மயர், இருவரும் கேமரூன் ஓவரை குறிவைத்தனர். கரீன் வீசிய 4வது ஓவரில் 17 ரன்களை விளாசினார். தயால் வீசிய 17வது ஓவரில் ஹெட்மயர் இரு பவுண்டரிகளை விளாச பந்துகளும்,தேவைப்படும் ரன்களும் ஏறக்குறைய சமமானது. கடைசி நேரத்தில் சிராஜ் திருப்பம் ஏற்படுத்தினார். சிராஜ் வீசிய ஓவரில் ரியான் பராக் 36 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிலைத்து பேட் செய்த ஹெட்மயரை 26 ரன்களில் சிராஜ் வெளியேற்றினார். மிகவும் கடினமான கேட்சை டூப்ளெஸ்ஸி பிடித்து ஹெட்மயரை பெவிலியன் அனுப்பினார். ரோவ்மென் பாவெல், அஸ்வின் களத்தில் இருந்தனர். ஆனால், பாவெல் கடந்த பல போட்டிகளில் சொதப்பினாலும் இந்த ஆட்டத்தில் இரு பவுண்டரி, ஒரு பெரிய சிக்ஸர் அடித்து வெற்றி பெறச் செய்தார். பாவெல் 16 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர். தோல்விக்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி கேப்டன் டூப்ளெஸ்ஸி கூறுகையில், “பனிப்பொழிவால் எங்களால் போதுமான அளவு சிறப்பாகப் பந்துவீச முடியவில்லை. ராஜஸ்தானை டிபெண்ட் செய்ய இன்னும் 20 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்." "இந்த ஆட்டத்தில் போராடிய வீரர்களுக்கு வாழ்த்துகள். இது 180 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம்தான், எங்கள் அணியில் இன்னும் ஒரு பேட்டர் நிலைத்து ஆடியிருந்தால் ஸ்கோர் பெரிதாக வந்திருக்கும், சவாலாக மாறியிருக்கும். எங்களால் முடிந்த அளவு சிறந்த ஆட்டத்தை வழங்கினோம். தொடர்ந்து 6 வெற்றிகள் பலரின் பாராட்டையும், இதயத்தையும் கைப்பற்றினோம்,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cd11dpjyppzo1 point- இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்!
1 point- கருத்து படங்கள்
1 point1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 point1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம்.1 point- வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன? ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointநீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? - பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும் மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார். இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட். அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன், தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன் ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார். யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால் கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும் பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார். தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார். மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும் வழங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார். ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார். ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார். பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழக்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா. இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில் முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித். அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித்.1 point- தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
1 point- வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
நரி ஊருக்கு வரும்போது திறந்து விடும். அப்ப தானே நரியை மதிப்பார்கள்.1 point- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு மாதிரி வெட்டிக்கொத்தி கொஞ்ச இடைவெளி விட்டுருக்கிறன். இதுக்கு மேலை ஏலாது. அழிக்காமல் வைச்சிருக்கிறதெல்லாம் தங்கப்பவுண்.1 point- அதிசயக்குதிரை
1 point1 point- போர் உலா - நண்பர்களை உருவாக்குவதற்கான போர்…
சில பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள். பிளே வயல்களின் = கோதுமை வயல்களின் அவர்களை புனி செய்தால் = அவர்களைத் தண்டித்தால் எனக்கு அமி ஆவார்கள் = எனக்கு நண்பர் ஆவார்கள் கதை எழுதியுள்ள விதம் மொழிபெயர்ப்பு இல்லாமலே புரியக்கூடியதாக உள்ளது என்று நினைக்கிறேன்.1 point- மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
ஹலோ @P.S.பிரபா சீரியசாக கதைக்கும் போது, சிரிக்கப் படாது. 😁😂🤣1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
எழுத்தாளர் சாரு ஒரு தடவை ஒரு படத்தை விமர்சித்து விட்டார், ஏதோ அஜித் அல்லது விஜய் படம் என்று நினைக்கின்றேன். சாரு 'இது என்ன கொடுமை, இந்தப் படங்களை எல்லாம் எப்படி ஒரு மனிதன் பார்க்கிறது, நான் மாடியிலிருந்தே குதித்து இருப்பேன்....' என்று அந்தப் படத்தை கறாராக கடுமையாக விமர்சித்து விட்டார். விட்டார்களா அந்த கதாநாயகனின் ரசிகர்கள்........ 'யாரடா சாரு, அவன் என்ன பெரிய இவனா...' என்று கேட்டு, சாரு வீட்டிற்கு ஆட்டோ அனுப்பப் போவதாக வெருட்டினார்கள். அதற்குப் பிறகு சாரு சினிமா விமர்சனமே இனி வேண்டாம் என்று ஓடி விட்டார். இங்கே யாழ் களத்திலும் சில விடயங்களில் ஒரு ரசிகர் மனநிலை இருக்கின்றது போல........என்னவோ போங்கள், பொழுது போகுது தானே........😀1 point- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
நாங்கள் சடங்கு, சாமத்திய வீடுகள் போன்றவற்றை பெரும் எடுப்புச் சாய்ப்புகளுடன், எங்களின் நிதி நிலைமைகளுக்கு கட்டுப்படியாகும் அளவைத் தாண்டி மிக மிக அதிகமாகவே செய்வது போல இருக்கின்றது ஈரான் மற்றும் சில நாடுகளின் நடவடிக்கைகள். எல்லாமே வெறும் பூச்சாண்டி ஆகத் தெரிகின்றது கடைசியில். ரஷ்யா - உக்ரேன் சண்டையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்கள் கொடுத்தோம், அதி உயர் தொழில்நுட்பம் என்றனர். கடைசியில் மலையில் விழுந்த இவர்களின் ஹெலிகாப்டரை இவர்களின் ட்ரோன் எதுவும் கண்டு பிடிக்கவில்லை. துருக்கியின் ட்ரோன் ஒன்றே முதலில் சிதைவுகளை கண்டு பிடித்தது. அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால்......ஏனப்பா, நீங்கள் தானே அணுகுண்டு கூட செய்கின்ற தொழில்நுட்பம் உங்களிடம் இருக்கின்றது என்றீர்கள். இப்ப என்னடா என்றால், இரவில் இருட்டில் தேடுவதற்கு யாராவது ஒரு விமானம் கொடுங்கள் என்கின்றீர்கள். சரி அப்படித்தான் ஒரு தேவை உங்களுக்கு இருந்தாலும், எங்கேயப்பா உங்களின் நண்பர்களான உச்ச தொழில்நுட்ப வல்லுநர்கள் - சீனா, ரஷ்யா, வட கொரியா....?1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இப்போது நடைபெறும் இசை நிகழ:ச்சிகளில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள். முன்னர் போல் அல்லாது மது வாங்குவதற்கு இளைஞர்களின் கைகளில் போதியளவு பணமும் ஒரு காரணம். முன்னர் நாங்கள் வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல உறவினர்கள் ஊரவர்கள் என்று யாரைக் கண்டாலும் பயம்.1 point- ஐ.நா. அறிக்கையை நிராகரிக்கும் இலங்கை – கடுமையான பதிலடி கொடுக்கவும் திட்டம்
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஐந்து -------------------------------------------------------------------- நோர்தேர்ண் மற்றும் பொதுவாக தனியார் மருத்துவமனைகள் பற்றி உறவினரான ஒரு மருத்துர் சொன்ன விடயங்கள் சற்று வித்தியாசமானவையாக இருந்தன. அரச மருத்துவமனைகளில் வசதிகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி அரச மருத்துவமனைகளின் தொழிற்பாட்டை இன்னும் அதிகமாகப் பாதிக்கின்றன என்றார். இரு நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இருக்கும் போது, நோயாளிகளின் வயது, குடும்ப நிலைமைகள், பொருளாதார நிலைமைகள் போன்றன ஒப்பிடப்பட்டு, அந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர். மற்றைய நோயாளியின் நிதி வசதிகளைப் பொறுத்து அவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார், இதுவே பொதுவான நடைமுறை என்றார். முறைகேடுகள் நடந்ததாக தனியார் மருத்துமனைகள் மீது வழக்குத் தொடர முடியாதா என்று கேட்டேன். யாழில் அப்படியான ஒரு வழக்கு நடந்ததாகச் சொன்னார். வழக்கு இழுபட்டுக் கொண்டிருக்க, யாழ்ப்பாணத்தில் போதிய freezer வசதியின்மையால், இறந்த உடலை வழக்கு முடியும் வரை பாதுகாப்பதில் பெரும் நெருக்கடி உண்டாகியதாம். இது போன்ற காரணங்களால், வழக்குகள் என்று பொதுவாக எவரும் போவதில்லை என்றார். மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களையோ அல்லது பொறுப்பானவரையோ பார்த்துப் பேசுவதில்லை என்று சொல்கின்றார்களே என்றேன். மருத்துவர்கள் கடமைக்கு வரும் நேரத்தில் யாராவது பொறுப்பானவர்கள் இருந்தால், அந்த மருத்துவர்கள் பொறுப்பானவர்களுடன் நோயாளிகளின் நிலைமை பற்றி கதைப்பது வழக்கமே என்றார். ஆனாலும், சில நேரங்களில் சில மருத்துவர்கள் ஓரிருவரை தவிர்த்து இருக்கக் கூடும் என்றார். சில உறவினர்களோ அல்லது பொறுப்பானவர்களோ நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், எப்போதும் ஒரு விதமான வில்லங்க மனநிலையிலேயே இருந்தால், சில மருத்துவர்கள் அவர்களை சந்திப்பதை முடிந்த அளவிற்கு தவிர்த்திருக்கலாம் என்றார். இந்த விளக்கங்களின் பின், அடுத்த நாள் சிலர் எங்களைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று எங்களைப் பார்க்க வருவதாக இருந்தார்கள் என்றும், ஆனால் நேற்று அவசரமாக நோர்தேர்ண் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி வந்து விட்டது என்றனர். எங்கே போனாலும் இந்த ஆஸ்பத்திரி என்னைச் சுற்றிச் சுற்றியே வருகின்றது என்று நினைத்தேன். அவர்களும் விடுமுறைக்காக வந்திருந்தவர்களே. கடலில் குளித்திருக்கின்றனர். அதில் ஒருவருக்கு காதுக்குள் கடல் நீர் போய் விட்டதாம். அது அன்றே குத்தாகி, அவசரமாக அந்த ஆஸ்பத்திரிக்கு நேரே போயிருக்கின்றனர். கடல் நீர் காதுக்குள் போய் குத்தியது என்பதை நம்ப முடியவில்லை. அங்கு வாழ்ந்த காலத்தில் அந்தக் கடலின் முழு நீரும் எங்களின் ஒரு காதுக்குள்ளால் போய், இன்னொரு காதுக்குள்ளால் வெளியே வந்திருக்கின்றது. சில காலங்களில் கடலில் விழாத நாட்களே கிடையாது. சில மைல்கள் என்று தினமும் அலையிலும் நீந்தியிருக்கின்றோம். குளித்து முடித்த பின், மெதுவாக தலையை ஒரு பக்கம் சரித்து, சில தட்டுகள் தலையில் தட்ட காது தெளிவாகி விடும். இப்ப ஆஸ்பத்திரிக்கு போகும் அளவிற்கு எங்களின் நிலைமை வந்து விட்டது. சிகிச்சை முடித்த மருத்துவர்கள் உங்களின் ஒரு காதில் ஓட்டை உள்ளது, அதைச் சரிப்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் அது பெரும் பிரச்சனை ஆகி விடும் என்றும் சொல்லியிருக்கின்றனர். நான் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அங்கு இருக்கும் வரையும் ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போகும் தேவை வராமல் இருந்தால், அதுவே போதும் என்றது மனது. ஒவ்வொரு ஊருக்கும் பல இணையப் பக்கங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன். இந்த இணையப் பக்கங்கள் பல ஊர் நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும் நேரடியாகவே ஒளிபரப்புகின்றன. ஒரு நாள் திருவிழாவில் எல்லோருக்கும் பின்னால் நின்றிருந்தேன். முன்னால் வீடியோக்கள், கமராக்கள் என்று சிலர் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டு ட்ரோன்கள் மேலே பறந்து கொண்டிருந்தன. தொழில்நுட்பத்தில் ஒரு உச்சியைத் தொட்டு இருக்கின்றார்கள். ஒரு சிறுவன், பத்து பன்னிரண்டு வயதுகள் இருக்கும், நேராக வந்து 'நீங்கள் யூ டியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். என்னிடம் ஃபோன் கூட கையில் இல்லை, அதையும் வீட்டை வைத்து விட்டே போயிருந்தேன். எல்லோருக்கும் பின்னால் நிற்கிறியளே, அது தான் கேட்டேன் என்றார் அந்தச் சிறுவன். பறந்து கொண்டிருக்கும் ட்ரோனில் ஒன்று என்னுடையதாக இருக்கும் என்று நினைத்து இருக்கின்றார். தன்னயும் எடுத்து, சேனலில் காட்டும் படி கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் ஒரு விளம்பரம் என்பது சரியான அவசியம் போல. சுன்னாகத்தில் ஒரு துணிக்கடை. அங்கு தான் தெரிவுகளும் அதிகம், விலையும் கொள்ளை மலிவு, கட்டாயம் போக வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார் மனைவி. சுன்னாகத்தில் முற்காலத்தில் ஒரு சந்தை இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதற்கு கூட அன்று என்றும் போனதில்லை. சுதுமலையில் தலைவர் உரையாற்றியிருந்த போது, வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை அந்தப் பக்கம் போயிருக்கின்றேன். சுன்னாகத்திற்கு எங்கள் ஊரிலிருந்து நேரடியாகப் போவதற்கு பஸ் சேவை ஒன்றும் இருந்ததும் இல்லை. இப்பவும் இல்லை. அது சரி, இந்த சுன்னாகம் கடை பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும் என்றேன். 'யூ டியூப் சேனல்' என்ற பதில் வந்தது! அந்தக் கடைக்கரார்களோ அல்லது யாரோ அவர்களின் சேனலில் இந்தக் கடையைக் காட்டி நன்றாகச் சொல்லியிருக்கின்றனர். சரி, ஒரு தடவை போய்த் தான் பார்ப்போமே என்று ஒரு வாகனத்தை அமத்திக் கொண்டு கிளம்பினோம். அந்த வாகன ஓட்டுநர் அப்படி ஒரு கடையையே கேள்விப்பட்டதில்லை. பின்னர் அவருக்கு அந்த யூ டியூப் சேனல் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு பிரச்சனையும் இல்லை, அங்கே சுன்னாகம் டவுனுக்குள் போய், இந்தக் கடையை கண்டு பிடித்து விடலாம் என்றார் ஓட்டுநர். போனோம். கடையைக் கண்டும் பிடித்தோம். அதிர்ச்சியை எப்படிச் சொல்வது.......அது ஒரு குட்டிக் கடை. எங்களூரிலேயே எங்கள் வீட்டிற்கு அருகில் இதை விட இரண்டு மடங்கு பெரிதான ஒரு துணிக்கடை இருக்கின்றது. எல்லாம் ஒரு விளம்பரம் தான்........... (தொடரும்.............)1 point- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
1 point- போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்
இருந்தாலும் எங்கள் பங்களிப்பையும் வழங்கி உதவி இருக்கிறோம். ஏதோ நல்லது நடந்தால் சரி.1 point- எனது அறிமுகம்
1 pointமௌனத்திலும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். "இது தான் என் இன்றைய நிலை" "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழப் பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலசத் தொடங்கினேன் வேஷம் போட்ட பலதைக் கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களைக் கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!” "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!” "ஓடும் உலகில் நாமும் ஓடி ஓரமாய் வருத்தங்கள் ஒதுங்க வைக்க பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் கூட்டுது வயதை ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!” (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)1 point- கனடா பீல் நகர காவல்துறை தலைமையரான துரையப்பாவின் பேரப்புள்ளை கொழும்பில்
நீங்கள் காட்டிய மேற்கோளில் முதலாவதை பகிர்ந்தவர் என் ignore list இல் இருப்பதால் அதை நான் இப்போதே காண்கிறேன். ஆனால் இதை வைத்து நிஷான் இலங்கை பொலிசுக்கு நற்சான்றிதழ் கொடுத்ததாக என்னால் கருத முடியவில்லை. மாறாக கனேடிய பொலிஸ் உதவியுடன் இலங்கை பொலிஸ் செயற்படுத்திய, இலங்கை உள்நாட்டு அமைச்சர் வழிநடத்திய, community policing units ஐ மேம்படுத்தும் செயற்திட்டம் நடந்தேறிய விதத்தை, நிஷான் பாராட்டியுள்ளார். இது ஒட்டுமொத்த இலங்கை பொலிசிற்கான, அதன் policing ற்கான பாராட்டு அல்ல, மாறாக குறித்த project ஐ, செயற்படுத்திய விதத்துக்கான பாராட்டு.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார்.