Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46793
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    8133
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/29/24 in Posts

  1. eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக் காட்டித் தமிழர்களை மயக்கி வடவர் தங்கள் மொழியை தமிழர்களுடைய கோவில்களில் வளர்த்து வருவதுபோல், என்னை மயக்கமடைய வைத்து இதனைச் செய்ததால் சிகிச்சையின் தாக்கத்தை நான் உணரவில்லை. “செல்வத்துள் செல்வம் அருள்ச் செல்வம்” என்று பொய்யா மொழிப்புலவர் கூறியிருந்தார், ஆனாலும் நிலத்தில் அருள்ச் செல்வத்தையும் தேடிச் சேர்த்த காடையர்கள் பலர் இலங்கையில் இருப்பது கண்டு, அதிலும் அரச ஆட்சி அதிகாரத்திலிருந்து சொந்த மக்களையே கொல்லும் கொடியவர்களிடமிருந்தும் தப்புவதற்காக புலம்பெயர்ந்து வந்தபோதும், கூட இருந்தே குழிபறிக்கும் என் சொந்தங்களான என் நலம்காக்கும் இரத்த நாளங்களில் சில கருனாகூட்டம் போல் குழிபறித்ததால் வந்தநிலை இது. கள உறவுகளில் ஒருவரான திரு குமாரசாமி அவர்களைச் சந்திக்க வழிசமைத்த என் நண்பர் தமிழ்சிறீ அவர்களுக்கு என்நன்றிகள்.🙏🙏
  2. 28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள் நிகழ்வில், நான் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒரு இதயப்பூர்வமான கவிதை: "இந்த ஆண்டு ஐம்பத்திஒன்றாவது ஆண்டோ? காதல் சிரிப்பு மகிழ்ச்சியின் பயணமோ? வலி கண்ணீர் துக்கத்தை மறந்து நாங்கள் ஒன்றாக இங்கே கூடுகிறோம்!" "என் மூத்த அன்பு சகோதரிக்கு என் சிறந்த புத்திசாலி அத்தானுக்கு வலுவான உங்கள் பந்தம் வளரட்டுமே! உங்கள் அன்பு வானங்களையும் வென்றதே!" "ஐம்பத்திஒன்றாவது வருட கனவுகள் நிறைவேற ஏற்றத் தாழ்வுகள் அற்றுப் போக அன்பு நீரோட்டம் பொங்கிப் பாய ஒன்றாய் இன்றுபோல் என்றும் வாழ்க!" "உங்கள் அர்ப்பணிப்பு எமக்கு உத்வேகமே! தளராத காதல் உயர்ந்து நிற்கட்டுமே! ஆறுதலையும் அமைதியையும் அது காட்டட்டுமே! என்றும் மங்காத வாழ்வு ஒளிரட்டுமே!" "நரைத்த முடியும் அனுபவ கோடுகளும் தொடர்ந்து ஒளிரும் அன்பின் சான்றும் ஆண்டுகள் தோறும் வலுப்பெறும் உறவும் அன்பின் மெல்லிசை வாழ்நாள் பாடலே!" "பொன்னாண்டுகழிந்த முதலாம்ஆண்டில் நான் உளறுகிறேன்! பழையதை மீட்டு கண்ணீர் வடிக்கிறேன்! தம்பியும் நானும் பக்கத்தில் படுத்து பொன்னியின் செல்வன் கேட்டதை மறப்போமா!" "பெற்று வளர்த்த பெற்றோரை நினைத்து விட்டுப் பிரிந்த உடன்பிறப்புகளை நினைத்து வானத்தில் இருந்து அவர்கள் வாழ்த்த ஐம்பத்திஒன்றாவது ஆண்டு மகிழ்வாக மலரட்டும்!" என் அன்பு அக்காவிற்கு ஐம்பத்திஒன்றாவது திருமணநாள் வாழ்த்துக்கள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 8) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT NAM 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK Select IRL Select CAN Select USA 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) IND IND PAK PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG AUS AUS Select AUS ENG Select NAM Select SCOT Select OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS ENG ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI Select AFG Select PNG Select UGA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ NZ WI WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL Select BAN Select NED Select NEP 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) SA SA SL SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS WI AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 NZ IND IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL ENG 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK WI WI 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 IND SL IND 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 NZ ENG ENG 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 WI SA WI 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG IND ENG 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 NZ SL NZ சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG IND Select IND IND Select NZ Select SL 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ENG IND IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS WI Select WI WI Select SA Select PAK 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS AUS WI WI 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) ENG 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UGA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Daryl Mitchell 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Matheesha Pathirana 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shivam Dube 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  4. எப்போதாவது உங்களை புனைப்பெயர் சொல்லி இன்னொருவர் அழைத்ததுண்டா எப்போதாவது உங்கள் பெயரை உச்சரித்த நாட்களை விட புனைபெயரை அதிகம் உச்சரித்ததுண்டா அவரவர் வாழ்வில் பட்டப் பெயராகவோ செல்லப் பெயராகவோ ஒரு புனை பெயர் இருந்திருக்கக் கூடும் பிடித்த தலைவர், பிடித்த நபர் பிடித்த நதி,பிடித்த மலை அன்றேல் பிடிக்காமல் போன எது வேண்டுமானாலும் புனை பெயராக இருக்கலாம் முன்னொரு நாளில் விரும்பி நான் சூட்டிக் கொண்ட என் புனைபெயர் அண்மைய நாட்களில் அடிக்கடி என் பெயரை மறக்கச் செய்கிறது தியா - காண்டீபன்
  5. ஆஹா .....அடுத்த சந்திப்பும் அடுத்த கல்யாண வீட்டில் நடக்க வேண்டும் என்னும் மனசிருக்கே அதுதான் சார் கடவுள்.......! 😂
  6. அமெரிக்காவில் வசிக்கும் மக்களது வரிப்பணத்தில்த்தான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகிறது, இதனை கண்டும் காணாமல் விட்டால் இந்த படுகொலைகளின் பாவம் அவர்களையும் வந்து சேரும். குறைந்த பட்ச மனித பண்புடைய மனிதர்கள் இதனை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டார்கள்.
  7. இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை கொன்றிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை அனாதைகள் ஆக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டு ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளின் காதுகளைச் செவிடாக்கியிருக்கக் கூடும் இந்தப் பீரங்கிக் குண்டின் இடிச் சத்தம் ஒருநாள் எண்ணற்ற குழந்தைகளை ஓட வைத்தது பள்ளிகளைப் போர் சூழ்ந்த முன்னொரு நாளில் வகுப்பறை நாற்காலிகளை கண்ணீர் பூக்கள் நிறைத்தன பள்ளி முடிந்த இன்றைய நாளில் பீரங்கிக் குண்டொன்றின் வெற்றுப் பேழை பள்ளி மணியாக ஒலிக்கிறது இழந்துவிட்ட மகிழ்ச்சியை இன்னும் தேடியபடி எண்ணற்ற குழந்தைகள் வீடு நோக்கி விரைகிறார்கள் தியா - காண்டீபன்
  8. என் வழக்கப்படி எதையுமே பெரிசாக யோசிக்காமல் மூட்டை முடிச்சுகளுடன் வைபவம் நடக்கவிருக்கும் நகரை நோக்கி பயணித்தேன். கிட்டத்தட்ட ஐந்தரை ஆறு மணித்தியாலங்கள் கடந்து தங்கவிருக்கும் விடுதியை வந்தடைந்தோம். வந்தவுடன் முதல் வேலையாக நாங்கள் தங்கியிருக்கும் விடுதியின் முகவரியை கூகிள் மூலம் சிறித்தம்பியருக்கு அறிவித்து விட்டேன். இப்போது கூட சந்திப்பது பற்றி எவ்வித அசுமாத்தங்களும் அறவே இல்லை. 🤣 ஆரம்பத்தில் நூற்றுக்கு நூறு வீதம் சந்திப்போம் என்ற நம்பிக்கை மாறி 50/50 என்ற நிலைக்கு இறங்கி விட்டேன்.இருந்தாலும் கார் தரிப்பிடத்திலாவது அவசர அவசரமாகவது சந்தித்து முகத்தை பார்த்து ஒரு வணக்கமாவது சொல்லிவிடலாம் என்ற நப்பாசை அடி மனதில் உருண்டோட..... நாளை காலை நேரத்துடன் எழும்பிவிட வேண்டும் என்ற கட்டாயத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.😴
  9. இன்றைய நவீன காலகட்டத்தில் ‘சும்மா தான் இருக்கேன்’ என்று சொன்னால் கூட கையில் ஃபோன் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று எதையாவது பார்த்துக் கொண்டோ அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள். உலகில் என்னென்னவோ போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தென்கொரியா வித்தியாசமாக “ஸ்பேஸ்- அவுட்” என்ற போட்டியை நடத்தியது. அதாவது 90 நிமிடங்கள், எந்த வேலையும் செய்யாமல், தூங்காமல், ஃபோன் பார்க்காமல், அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். இவ்வளவு தானே என்று ஈசியாக எண்ணிவிட முடியாது. போட்டியாளர்களின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்களால் வாக்களிக்கப்பட்ட முதல் 10 போட்டியாளர்களில் யாருக்கு நிலையான இதய துடிப்பு இருந்ததோ அவர்களே இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். மேலும் இப்போட்டி வீக் – எண்ட் நாட்களில் நடத்தாமல், வாரத்தின் பிஸி நாட்களில் தான் நடைபெறும். 2014ஆம் ஆண்டு இந்த போட்டி வூப்சாங் என்ற ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்டால் தொடங்கப்பட்டது. “நான் ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும், எப்பொழுதும் என்னைவிட அதிகமாக வேலை பார்ப்பவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வேன். வேலை செய்யாமல் இருந்தால் அது மிகவும் தவறு என்று நினைத்து என்னை நானே வருத்திக் கொள்வேன். ஆனால் என்னை நானே அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது தான் மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தேன். நமக்கென்று சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்,” என்று வூப்சாங் கூறியிருந்தார். அதிக நேரம் வேலை பார்த்துக்கொண்டே இருப்பதால் பலரும் ஸ்ட்ரெஸ், டென்ஷன் என பல மனநல நோய்களுக்கு ஆளாகிறார்கள். அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு இடைவேளை தேவைப்படும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இப்போட்டியை தொடங்கியுள்ளார். “பணமோ, டெக்னொலஜியோ இல்லாமல், ‘சும்மா’ இருப்பதையே ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் கூறினார். இந்த ஆண்டு மே 15ஆம் தேதி தென்கொரியாவில் தலைநகரான சியோலில் நடைபெற்ற போட்டிக்கு கிட்டதட்ட 4,000 போட்டியாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 117 போட்டியாளர்கள் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 6 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை பங்கேற்றுள்ளனர். 5 முறை ஒலிம்பிக்கிற்கு முயற்சி செய்து இரண்டு முறை வெள்ளி பதக்கம் வென்ற க்வாக் யூன் ஜீ- யும் இம்முறை போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை வென்றுள்ளார். “நான் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதற்கு ஐந்து முறை முயற்சி செய்துள்ளேன். எனக்கு சரியான தூக்கமும் ஓய்வும் இருந்ததில்லை. இந்த இடத்தில் என்னுடைய உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கிடைக்கும் என்பதால் நான் இப்போட்டியில் கலந்துக் கொண்டேன்” என்றார். https://thinakkural.lk/article/302630
  10. பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு! (ஆதவன்) கடந்த காலங்களில் வாக்களிக்க தவறியமையால் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். கோத்தாபய போன்ற கடந்த கால அரச தலைவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது. -இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அரசதலைவர் ரணில் விக்கிரமங்க பொதுமக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேர்தலில் தோற்றபோதும், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார். இன்று அநுரகுமார திஸாநாயக்க, சஜித் எனப் பலர் தேர்தலில் போட்டியிட வருகின்றார்கள். அன்று நாட் டைப் பொறுப்பெடுக்கும் வாய்ப்பு இருந்த போது அனைவரும் பின்வாங்கினர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பெடுத்தார். அடுத்த தேர்தலே எனது அரசியல் பயணத்தின் இறுதி தேர்தலாகும். அதன் பின்னர் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் - என்றார். (ச) பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் (newuthayan.com)
  11. ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி! -சாவித்திரி கண்ணன் சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த தனயன் அனாயசியமாக தொட்டுவிட்டார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த ரகுமான் தன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் பள்ளிப் படிப்பை கைவிட நேர்ந்தது. தந்தை வைத்திருந்த இசைக் கருவிகளை வாடகைக்கு விட்ட வகையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, விஜயபாஸ்கர், ஹம்சலேகா..என அப்போதிருந்த இசை அமைப்பாளர்களின் இசை குழுக்களில் ஒரு இசைக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை வானொலி, பொதிகை தொலைகாட்சிக்கும் இசை நிகழ்ச்சி செய்துள்ளார். நிறைய விளம்பரப் படங்களுக்கு அசத்தலாக இவர் இசை அமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் மணிரத்தினத்தின் ரோஜா பட வாய்ப்பு பெற்று இந்திய திரைஇசை உலகையே தன் முதல் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். தமிழ் திரை இசையில் தனிபெரும் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சிய இளையராஜாவின் பாடல்களில் சற்றே ஒரு சலிப்பு ஏற்படத் தொடங்கிய நேரம் அது! 1990 களில் ரகுமானின் கொடி உயர, உயர இளையராஜாவின் வாய்ப்புகள் குறைந்தன! ”சிறு வயதில் வறுமையால் கல்வி கற்க முடியாமல் போனது, வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் பெற்ற அவமானங்கள், தூக்கிவிட ஆளில்லாமல் துவண்டு விழுந்து தனிமைப்பட்ட பொழுதுகள்.. என்னை தற்கொலைக்கு தூண்டியுள்ளன” என்று ஒருமுறை ரகுமான் கூறியுள்ளார். இந்தச் சூழல்களில் இறை நம்பிக்கையே அவரைத் தேற்றியது. திலீப்குமார் என்ற அவரது இயற்பெயரை அல்லா இரக்கா ரகுமான் என மாற்றிக் கொண்ட தருணத்தில் அல்லலுற்ற அவர் மனம் அமைதி அடைந்தது! ஆன்மீக ஒளி உள்ளமெங்கும் நிறைந்தது! இன்று வரை ரகுமான் யாரிடமும் கோபப்பட்டதாகவோ, வெறுப்பை காட்டியதாகவோ ஒரு நிகழ்வைக் கூட சொல்ல முடியாது. பள்ளிப் படிப்பை கூட முடித்திராத ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான அண்ணா பல்கலைக் கழகம், டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், பெர்கிலீ காலேஜ் ஆப் மியூசிக், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் போன்றவை ‘டாக்டரேட்’ பட்டம் தந்து கெளரவித்துள்ளன. 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற இந்திய விருதுகள், ஆஸ்கார், கோல்டன் குளோப், பாப்தா, கிராமி போன்ற சர்வதேச விருதுகள்.. என நீளமான பட்டியல் போடும் அளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் அவருக்கு விருதுகள் தந்துள்ளன. இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ரகுமான் இந்த விருதுகள் யாவும் அவரைத் தேடி வந்தவைகளே! பல விருதுகளை அவரால் சென்று வாங்க முடியாத நிலையில், அதை தன் நண்பர்களை பெற வைத்து, அந்த விருதுகளும் நண்பர்களிடமே தங்கிவிட்டன என்கிறார். நெளஷ்த் அலிகான், மைக்கேல் ஜாக்சன், சாரா பிரிஷ்மென், மைக்கேல் பொல்டர் போன்ற சர்வதேச இசை விற்பன்னர்கள் பலரோடு ஈகோ இல்லாமல் பணியாற்றிவர் ரகுமான். இவ்வளவு பிஸியான நிலையிலும், அவர் ஒரு லட்சியத்தை மனதில் ஏந்தி, அதற்காக தன் நேரத்தையும், உழைப்பையும் கணிசமாக செலவழித்து வருகிறார். பொருளாதார வசதி இல்லாத தான், அனுபவித்த துன்பங்களை மனதில் வைத்து, ‘அன்று தன்னைப் போல தூக்கிவிட ஆளில்லாத வறுமையில் உழலும் இளையோர்களை கண்டெடுத்து ஊக்குவிக்க வேண்டும், உலகத் தரத்திற்கு அவர்களை உயர்த்த வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் கடந்த 16 ஆண்டுகளாக சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவச் செல்வங்களை தேர்ந்தெடுத்து இசைப் பயிற்றுவிக்கிறார். அதுவும், குறிப்பாக அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இசை ஆர்வமுள்ளவர்களை கண்டெடுத்து கட்டணமில்லா இசையைக் கற்பிக்கிறார். எதிர்கால இசைத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே அவர் ஏற்படுதிய கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற பெரிய இசைக் கல்வி நிறுவனத்தில் எளிய சமூக பின்பலமுள்ள மாணவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் தருகிறார். இங்கு உலகத் தரத்திற்கான இசைக் கல்வியை மாணவர்களுக்கு தானே நேரடியாகவும், மிகப் பெரிய இந்திய மற்றும் சர்வதேச இசை ஆசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவிக்கிறார்! இதற்காக அவர் உருவாக்கியதே உலகின் முதல் சிம்பொனி இசைக் குழுவான ‘சன்சைன் ஆர்கெஸ்டிரா’ (Sunshine Orchestra). ரகுமானும் சிம்பொனி இசை தந்து ‘மேஸ்ட்ரோ’ பட்டம் பெற்ற போதிலும், ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ‘மேஸ்ட்ரோ’ எனப் போட்டுக் கொள்ள மாட்டார். போட அனுமதிக்கவும் மாட்டார். ரகுமானின் இசைக் கல்லூரியில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், பாப், ஜாஸ், நாட்டுப்புற இசை என அனைத்து வகை இசையும் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இசை வரலாறு தொடங்கி நவீன ரெக்கார்டிங் தொழில் நுட்பம் வரை கற்பிக்கிறார். கிடார், வயலின், ப்ளுட், பியானோ, மற்றும் பல மேற்கத்திய இசைக் கருவிகளில் பயிற்சி தருகிறார். ஒரு வருட சர்டிபிகேட், இரண்டு வருட டிப்ளமா, நான்கு வருட படிப்பு போன்றவற்றை இங்கு அறிமுகப்படுத்தி அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பிக்கிறார்கள். இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு மாணவர்களும் வந்து, உரிய கட்டணம் செலுத்தி பயின்று செல்கிறார்கள். அவர்களில் இலங்கையில் இருந்து வந்த தினேஷ் சுபாஷினியும், பங்களாதேஷில் இருந்து வந்த இமான்ஷாப் அவர்களும் இன்று அங்கு பிரபல கம்போசர்களாக உள்ளனர். இந்த இசைக் கல்லூரி லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படுகிறது. அந்த வகையில் இலண்டன், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தும் ஆசிரியர்கள் வந்து கற்பிக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் பலர் சர்வதேச இசைக் குழுக்களில் வாய்ப்பு பெற்று இயங்கி வருகின்றனர். தன் வேலைபளுவால் தனக்கு வரும் வாய்ப்புகளை ரகுமான் தன் மாணவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அந்த வகையில் ஹாலிவுட் படங்களின் வாய்ப்புகளைக் கூட தன் மாணவர்களுக்கு தந்துள்ளார் ரகுமான். நம்மிடையே நிலவிய ஏற்றத் தாழ்வுகளால் தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்த அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்கும் கனவுகளுடன் தான் இயங்குவதாக ரகுமான் குறிப்பிடுகிறார். ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஹாலிவுட், சீனா மற்றும் ஐரோப்பிய படங்களுக்கு எல்லாம் பணியாற்றினாலும், தாய் மொழியாம் தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்ட ரகுமான், தான் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அந்த தருணத்தில், அந்த சர்வதேச மேடையில், ”எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசினார். தன் டிவிட்டரில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை அவ்வப்போது பகிர்வதும் ரகுமான் வழக்கம். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழிசை மரபுகளை ஆழமாக ஆய்வு செய்தவரும், அதன் தொன்மை, வரலாறு, பண்கள், சுருதி முறைகள் போன்றவற்றை எடுத்தியம்பும் ‘கருணாமிர்தசாகரம் என்ற நூலை இயற்றியவரும், ‘கர்நாடக இசையின் மூலம் தமிழிசையே’ என பல்வேறு ஆய்வுகள் செய்து நிருபித்தவருமான மாபெரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் குறித்து உரிய ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வைச் செய்து அரிய நூல் ஒன்றையும் வெளிக் கொண்டு வந்தார்! இப்படியாக தான் உருவான தமிழ்ச் சமூகத்திற்கும், ஆதரவற்ற எளியோருக்கும் விளம்பரமில்லாமல் அளப்பரிய நற்காரியங்களைச் செய்யும் ரகுமான், எந்த அதிகார மையத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். ஆன்மீகத்தில் ஆழ்ந்து திளைப்பவரென்றலும், பற்றற்வர் போல பாசங்குதனம் செய்யாதவர்! நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் மாதம் முழுக்க நோன்பு, இறைதூதர்களின் சமாதியான தர்க்காகளுக்கு சென்று வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடும் ரகுமான் இவற்றையுமே கூட மக்களோடு மக்களாக – சராசரி மனிதர்களில் ஒருவராகவே – செய்கிறார். பழங்குடிகள் நிறைந்த நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ள ரஹ்மான், இந்த ஆவணப் படத்தின் பணிகளோடு அங்கு இருக்கும் பழங்குடி குழந்தைகளுக்கான ஆசிரமம் ஒன்றை தத்தெடுத்து, அங்கு இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசைக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். ஒரு தமிழன் சர்வதேச மனிதனாக தன்னை முழுமையாக தகவமைத்து சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளை முற்றிலும் கடந்து, உலகளாவிய முறையில் எப்படி இயங்குவது என்பதற்கு ஏ.ஆர்.ரகுமானே இலக்கணம். எத்தனை உச்சத்திற்கு சென்றாலும், ‘எளியோரை ஏற்றம் பெற வைப்பதே முதன்மை இலக்கு’ என்று இயங்குவது தனிச் சிறப்பாகும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/18004/arrahman-music-college-for-poor/
  12. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு! Vhg மே 23, 2024 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தெரிவு நடைபெற்றது. அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளதுடன் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.battinatham.com/2024/05/blog-post_636.html
  13. அதிகாலை எனக்கு முதலே குடும்பம் எழும்பி ஹொட்டல் அறையை மேக்கப் றூம் மாதிரியே மாற்றிவிட்டிருந்தார்கள்...ஒரு மாதிரி தடக்குப்பட்டு எழுந்து ஏதாவது நல்ல செய்தி தேடி போனை நோண்டிய போது இப்படியான செய்தி ஒன்று என்னைப்பார்த்து புன்னைகை செய்தது.. அதை பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இவர் எதற்கு என்னுடன் அனுமதி கேட்கின்றார் உரிமையுடன் வரவேண்டியது தானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டு பதில் செய்தியை அனுப்பினேன். தொலைபேசியில் இப்படியே பல சம்பாசணைகள் போய்க்கொண்டிருக்கும் போதே நானும் குளித்து முழுகி கும்பகோண பட்டு உடுத்தி கலாதியாக வெளிக்கிட்டு விட்டேன்.🤪 அப்படியே .....அதே கோலத்துடன் விடுதியின் காலை உணவு பகுதிக்கு சென்றேன். முதலில் எனக்கு காலை சாப்பாடு சாப்பிடும் நோக்கமில்லை(காரணம் நாள் முழுக்க பானை வண்டியை எக்கிக்கொண்டு நிக்க வேண்டிய கட்டாயம் கண்டியளோ சாப்பிட்டால் அது ஏலாது😎). இருந்தாலும் மனைவி இதுக்கெல்லாம் சேர்த்துதான் காசு கட்டினனாங்களப்பா..... கட்டின காசை வீணாக்காமல் போய் சாப்பிட்டிட்டு வாங்கோப்பா எண்டு எண்டு சொல்லி வாய் மூடக்கு முதல்...வரேக்கை எங்களுக்கும் கிடக்கிறதிலை ஏதாவது கட்டிக்கொண்டு வாங்கோப்பா என அறிவுறுத்தப்பட்டது....😂 மறு வார்த்தை பேசாமல் இந்த பாடலை மனதுக்குள் நினைத்தபடி.... மாடி படிகளை நோக்கி பெண்கள் சாறியை தூக்கிக்கொண்டு நடப்பது போல் நானும் பட்டு வேட்டியை தூக்கிக்கொண்டு நகர்ந்தேன்.😊
  14. இது மட்டும்தான்... அந்தப் பைக்குள்ளை இருந்தது என்று சொன்னால், ஸ்ரீலங்கா பொலிஸ் நம்பி.... அந்த வெள்ளைக்காரிதான் பொய் சொன்னதென்று பிடித்து விளக்கமறியலில் வைத்து விடுவார்கள். உங்களுக்கு மேலதிக போனசாக 5´000 டொலரும் கிடைக்கும். 🤣 ஒரு கல்லில்... பல மாங்காய்கள்.... 😂
  15. யாழில் அநேகமானவர்கள் (நான் உட்பட) புனைபெயர்தானே .......... அது நல்லதுதான்......! 👍
  16. பல கத்துக்குட்டி அணிகள் இம்முறை அதிர்ச்சியளிக்க அதிக வாய்ப்புண்டு
  17. நாடு கடந்த அரசாங்கங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இரகசியம் இல்லை யார் என்று சொல்வதில் ஏன தேவை இல்லாத ஆலாபரணம்?
  18. முன்னாள் ஐநா தூதரின்(நிக்கி கெய்லி) கேவலமான செயல். அமெரிக்காவினது உண்மையான முகம் இதுதான்.
  19. போட்டியில் கலந்துகொண்ட P.S. பிரபா வெற்றிபெற வாழ்த்துக்கள்! ஐபில் போட்டியில் 17 கலந்துகொண்டனர். இங்கு பலரைக் காணவில்லை! இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன!
  20. வலி சொல்லும் கவிதை வரிகள். நன்றி தியா 👍🏼
  21. நன்றாயிருக்கின்றது தியா. 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஞாபகத்திற்கு வந்தது, இவை இரண்டும் ஒன்று அல்ல என்றாலும்.
  22. அவர் நிச்சயமாக 2005ம் ஆண்டு நடந்தவைகளை மனதில் வைத்தே சொல்லியிருக்கின்றார். ஆனால் இன்று மக்கள் எவர் சொல்லியும் ஒரு அணியாக கேட்கும் நிலையில் இல்லை. அப்படியான ஒரு வலுவான தலைமை தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலேயெ இல்லை என்றே தெரிகின்றது. முஸ்லிம் மக்கள் ஒரு அணியாகத் திரளக்கூடும்.
  23. சரி கவலைப்பட வேண்டாம். @ஈழப்பிரியன் அவர்கள் முன்பு தனது பிள்ளைகளின் திருமணத்தின் போது யாரோ சாப்பாடு/பலகாரத்தில் ஆட்டையை போட்டுவிட்டதால் பழைய கோபம் தணியாமல் உள்ளார் போல. சில திருமண/வைபவ நிகழ்வுகளின்போது பாயாசம்/வடை/சாப்பாடு போதாமல வருவதும் சம்மந்திகள்/விழா அமைப்பாளர்/பெற்றோர் ஆளையாள் முறைத்து பார்ப்பதுவும் நடக்கத்தான் செய்கின்றன.
  24. 28 MAY, 2024 | 09:52 PM யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (28) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்திசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளது. இதேவேளை கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி திறக்கப்பட்டது. யாழ் போதனா வைத்திய சாலையை தேசிய வைத்தியசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதியால் கூறப்பட்டது. ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விடயத்தை கூறி அடுத்துவரும் அமைச்சரவையில் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184718
  25. நல்லகாலம் வரல்லை. வந்திருந்தால் அங்கையும் பலகாரங்களை ஆட்டையைப் போட்டிருப்பார். சிறி தப்பிவிட்டார்.
  26. சிறியின் மகளின் கலியாணத்துக்கு இந்த மாதம் ஜெர்மனி சென்று இருந்தபோது குசா அண்ணாவை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். அவரது வெளிப்படையான, நகைச்சுவையான பதிவுகள், பதில்களை தாண்டி நல்ல உள்ளம் கொண்ட ஆளுமையான மனிதர் என்று நான் கணித்ததால் கட்டாயம் ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும் என்று இருந்தேன். ஏமாற்றம் என்றாலும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று நம்புகிறேன். கு சா அண்ணா, நாங்கள் நாலு யாழ் களத்து உறுப்பினர்கள் ஒரு get together வைக்கலாம் என்று இருந்தோம். முடிந்தால் நிச்சயம் வந்திருப்பீர்கள்தானே?
  27. ஒரே ஜெகஜோதியாய் ஜொலிச்சுக்கொண்டிருந்தன் 🤣 உள்ள சனமெல்லாம் என்னை கண் வெட்டாமல் பார்த்தபடியே.....எண்டால் யோசிச்சு பாருங்கோவன் 😁
  28. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) PAK #A2 - ? (1 புள்ளிகள்) IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI AFG AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) NZ #C2 - ? (1 புள்ளிகள்) AFG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 IND SA IND 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS AFG AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 NZ PAK PAK 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL SL 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 IND AFG IND 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 PAK SL SL 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 NZ ENG NZ 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 IND AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 AFG SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG PAK PAK 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 NZ SL NZ சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK PAK ENG Select ENG NZ NZ Select NZ Select SL Select SL Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) PAK #அணி 1B - ? (2 புள்ளிகள்) NZ 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS AFG Select AFG Select SA Select SA Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) IND 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) PAK 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  29. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இலங்கை அரசின் நேரடி முகவர் ஒருவர் தேர்தலில் நிற்காமலேயே (?) தெரிவுசெய்யப்பட்டதுதான். இன்னொரு விடயம், ஒருவரை நீங்கள் உருத்திரகுமாருக்குப் போட்டியாக நிற்க வைக்கிறோம் என்று அறிவித்து அவரை முதுகின் பின்னால் குத்தியே தேர்தலில் தோற்கடிக்க வைத்தார்கள். 🤣
  30. உங்க‌ளுக்கு மிக‌வும் விருப்ப‌ப் ப‌ட்ட‌ ந‌ப‌ர் போல் தெரிகிற‌து தாத்தா நீண்ட‌ தூர‌ தேச‌த்தில் இருந்து வ‌ந்து இருந்தால் வ‌ருத்த‌ம் அளிக்கும் ஜேர்ம‌னின் அன்டை நாட்டில் வ‌சிக்கும் ந‌ப‌ர் என்றால் ச‌ந்திக்க‌லாம் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் க‌ன‌டாவில் வ‌சிக்கும் யாழ்க‌ள‌ அண்ணா என்னை நேரில் ச‌ந்திக்க‌ கேட்டார் டென்மார்க் வ‌ந்து இருந்த‌ போது அப்போது என‌க்கு உட‌ல் நிலை ச‌ரி இல்லை பின்னாளில் அந்த‌ ச‌கோத‌ர‌ன‌ ச‌ந்திக்க‌ வில்லை என்று ரொம்ப‌ க‌வ‌லையா இருந்திச்சு😞..................................
  31. 40 நாட்களுக்கு முன் என் குடும்பத்தினர்க்கு ஒரு சுப நிகழ்விற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இன்ன நாள்தான் என முடிவு செய்யப்படவில்லை. தேதியுடன் அழைப்புதழ் வந்ததும் முதலில் வேலை விடுமுறையை முடிவு செய்து விட்டு. சிறித்தம்பிக்கு நான் செல்லும் இடத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடனடியாக அந்த இடம் தான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தான் இருக்கின்றது என தெரியப்படுத்தினார். சந்திப்பது பற்றியும் கூறினார். ஆனாலும் இடம் வலம் நேரகாலம் எதையுமே தீர்மானிக்கவில்லை. இருந்தாலும் சிறித்தம்பியை அவர் வீட்டில் என் குடும்ப சகிதம் அவர் வீட்டிற்கே சென்று சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் என் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. கால நேர சூழ்நிலைகள் நன்றாக இருந்தால் இப்படியான சந்திப்பு நடக்க இருக்கும் என என் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தேன்.
  32. 2009 அவலங்களுக்கு பின் நாடு கடந்த தமிழ் அரசின் மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அது ஒரு நாடக கூட்டுகள் என்பதை சிறிது காலத்திலேயே உணர்ந்து விட்டேன். என்னது கெட்ட கேட்டுக்கு அமைச்சரவை வேற இருக்கா? 🤣
  33. நாடு கடந்த அரசாங்கத்தில் பிரதமருடன் பல அமைச்சர்களும் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை முதன் முதலில் கேட்ட போது, பல வருடங்களின் முன், எப்படியாவது சிரிப்பை அடக்க வேண்டுமே என்று கொஞ்சம் கஷ்டமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இணைந்து வருடா வருடம் ஒரு ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். முக்கியமாக ஒரு கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி. இரண்டு நாட்கள் நடக்கும். பல வருடங்களின் முன் ஒரு வருடத்தில் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தான் இந்த அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் என்று சொன்னார். இந்த இடத்தில் தான் எனக்கு நான் மேலே சொல்லியிருந்த அந்த அடக்க வேண்டிய கஷ்டம் ஏறபட்டது. எங்களின் இந்த விளையாட்டுகள் மற்றும் ஒன்றுகூடலிற்கு அரசாங்கமும் வரலாமா என்று என்னைக் கேட்டனர். கேட்டுச் சொல்கின்றேன் என்று சொன்னேன். நண்பர்களை கேட்ட போது, பலத்த எதிர்ப்பு. இவையெல்லாம் யார், இதுக்குள்ள ஏன் அரசியல் என்று எல்லோரும் மறுத்து விட்டனர். அத்துடன் இது முடியவில்லை. முன்னர் இங்கு மாவீரர் தினம் பெரிதாக நடக்கும். பின்னர் அமெரிக்க அரசின் தடை மற்றும் சில கைதுகள் காரணமாக இங்கு மாவீரர் தினம் தடைப்பட்டது. உருத்திரகுமார் அவர்கள் நல்ல பேச்சு வல்லமை உள்ளவர். கொழும்பு சட்டக் கல்லூரி என்று நினைக்கின்றேன். இங்கு மாவீரர் தினங்கள் பெரிதாக நடைபெற்ற போது மேடையில் பேசியிருக்கின்றார். தடையின் பின்னரும் நாங்கள் சில குடும்பங்கள் மட்டும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தோம் ஒவ்வொரு வருடமும், இன்று வரையும். பெரும் பேச்சாளர்கள் எவரும் வருவதில்லை, நாங்களும் கூப்பிடுவதில்லை. சில வருடங்களின் பின், அமெரிக்க அரசு இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. அத்தோடு நாங்கள் வெறும் 'பிள்ளைப் பூச்சிகள்' என்று அதற்கு தெரிந்தும் விட்டது போல. மீண்டும் மாவீரர் தினங்கள் பெரிதாக ஆரம்பித்தன. எங்களின் ஒரு வருட நிகழ்விற்கு, அரசாங்கமும் வருவதாகச் சொல்லி, பிரதமரும், அமைச்சர்களும் வந்தனர். அவர்களின் வருடாந்திர கூட்டமும் நடந்தது. அங்கு நடந்தவையை நேரே பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள். மொத்தத்தில் இது என்ன கூத்து என்றே பார்த்துக் கொண்டிருந்த எங்கள் எல்லோருக்கும் தோன்றியது. இவர்களை இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும், அதே அரசுகள் என்னை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் ஒன்றே. அந்த அரசுகளுக்கு ஒரு சல்லிக்கு பிரயோசனம் கிடையாது என்று சொல்கின்றேன்.
  34. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது. உருத்திரகுமார் ஏற்கனவே ஒரு கையாளாகாத ஆள் என்று நிரூபித்தவர். இனிமேல், தான் ஒரு பொம்மை என்று நிரூபிப்பார். அம்புட்டுதே. 😏
  35. அடப்பாவி.......உணவு குடுப்பதற்கு பதிலா உயிரைக் குடுத்திருக்கிறார் ........! 😂
  36. பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் 2000 பேர் உயிரோடு புதைந்துள்ளனர் - வெளியான அதிர்ச்சி தகவல் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர். இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. https://thinakkural.lk/article/302547
  37. இந்த இடத்தில் சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்த தமிழர்களும் இருக்கிறார்கள்..பெற்றோர் மட்டும் தமிழ் பேசுபவர்களாகவும் அநன் பின் வந்தவர்களுக்கு தமிழ் பற்றி மற்றும் நம் நாடு பற்றி அதிகம் தெரியாத பல் வேறு பட்ட மக்களோடு கலந்தவர்களாக இருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.