Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    38756
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3057
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/08/24 in all areas

  1. ஐயோ…. முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣. ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏. கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.
  2. பதின்நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆப்கான் பந்துவீச்சில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் 75 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது! முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினைந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைந்த வெற்றி இலக்கை விக்கெட்டுகளை இழந்த தட்டுத்தடுமாறி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளா வெற்றியீட்டியது பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினைந்து போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 24 2 ஈழப்பிரியன் 22 3 பிரபா USA 22 4 ரசோதரன் 22 5 நந்தன் 22 6 சுவி 20 7 ஏராளன் 20 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாதவூரான் 18 12 கிருபன் 18 13 வாத்தியார் 18 14 எப்போதும் தமிழன் 18 15 கல்யாணி 18 16 வீரப் பையன்26 16 17 நிலாமதி 16 18 புலவர் 16 19 நுணாவிலான் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 14 முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!
  3. பையன், உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. நீங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் தெரிவுகளை, நீங்கள் ஆதரிக்கும் கட்சி சார்ந்தும், நீங்கள் வாசிக்கும் ஊடகங்களின் ஊடாக முடிவு செய்கிறீர்கள் போட்டியில் வேல்லவேண்டும் என்று முடிவு செய்தால், கள நிலவரத்தை பின்பற்றவேண்டும். தற்போதைய நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால், நாதக தனித்து நின்று ஒரு ஆசனமும் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்வதற்கு நிறைய தூரம் உள்ளது. கூட்டணி வைக்காவிட்டால் தாண்டுவது கஷ்டம். இதற்கு இடையில் பாஜக வளர்ந்தது கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகபலமான நிலையில் இருக்கும் திமுக கூட, கூட்டணி இல்லாவிட்டால் வெல்வது கடினம், ஒருவரும் 50%இற்கு மேற்பட்ட வாக்கு வங்கியுடன் இல்லை.
  4. பதினாறாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி தட்டுத் தடுமாறி 9 விக்கெட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து டேவிட் மில்லரின் நிதானமாக ஆட்டத்துடன் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் இல்லை! ----------------- பதினேழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 6 விக்கெட்டுகள் இழப்புடன் 165 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பதினேழு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 28 2 பிரபா USA 26 3 ரசோதரன் 26 4 நந்தன் 26 5 ஈழப்பிரியன் 24 6 சுவி 24 7 ஏராளன் 24 8 வாதவூரான் 22 9 குமாரசாமி 20 10 தியா 20 11 தமிழ் சிறி 20 12 புலவர் 20 13 நுணாவிலான் 20 14 கிருபன் 20 15 கந்தப்பு 20 16 வாத்தியார் 20 17 எப்போதும் தமிழன் 20 18 நீர்வேலியான் 20 19 வீரப் பையன்26 18 20 நிலாமதி 18 21 P.S.பிரபா 18 22 அஹஸ்தியன் 18 23 கல்யாணி 18
  5. யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு. க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜினாவிற்கு, யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மாணவி கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. ஊரவர்கள், அயலவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்களுடன் பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்தார். அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்தார். குறித்த மாணவி மிகவும் வறுமை கோட்டுக்குட்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கல்வி கற்பதற்கு வீட்டில் ஒரு மேசை கூட இல்லாத நிலையில் வெற்று தரையில் இருந்தே கல்வியினை கற்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாணவியின் உறவினர்கள், ஊரவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். https://athavannews.com/2024/1386708
  6. கண்டியுங்கள். ஆனால் அவர்கள் 15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது? எப்படியான அழுத்தங்களை, லொபியிங்கை யார்மீது பிரயோகிக்கின்றார்கள்? இவர்கள் தாயக மக்களின் பிரதிநிதிகளும் இல்லை, புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகளும் இல்லை. வெறும் zoom மீற்றிங்கும், தேநீர், வடையோடு நேரடியாக சந்தித்து அறிக்கைவிடும் கோமாளிக்கூட்டம்
  7. நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢
  8. என்ன நடக்கின்றது இந்த முறை கிரிக்கெட் T 20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமான நிலையில் பலரும் எதிர்பார்த்த மாதிரியே ஸ்ரீலங்கா அணி இரண்டு விளையாட்டுக்களில் தோல்வி . அடுத்து இலங்கைக்கு இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியும் இரண்டாவது விளையாட்டில் அவுஸிடம் தோல்வியடைந்ததது. யாரும் எதிர்பாராத அமெரிக்க அணி முதல் இரண்டு விளையாட்டுக்களிலும் வெற்றி- அவுஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தாங்கள் விளையாடிய இரு விளையாட்டுக்களிலும் வெற்றி, இருந்தாலும் இன்னும் சில விளையாட்டுக்கள் இருப்பதால் இன்றைய நிலை நாளை மாறும் என்பதைப்போல எல்லா அணிகளும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றார்கள் .😂
  9. கையோட அதுக்குள்ள இரண்டு பெக் விஷ்கி விட்டு கலக்கவும் பிளீஸ்.....😎
  10. நீங்க, போங்க... நாங்க பின்னாலை வாறம். 😂
  11. 23 P.S.பிரபா 14 NZ இப்படித் தோற்கும் என கனவிலையும் நினைக்கேல🥹 இனிமேல் இயலாது😥 என்னால நம்பவே முடியவில்லை😳😳
  12. வாக்காளர்களுக்கு காசு கொடுக்கவில்லை. 50/50 விகிதம் பெண்களுக்கு நியமனம். இறுதி நேரத்தில் கட்சியின் சின்னம் பறிக்கப்பட்டது. எவருடனும் கூட்டணியில்லை. பாரம்பரிய கட்சி எனும் அந்தஸ்து இல்லை. ஊடக ஆதரவு இல்லை பண பலம் இல்லை. அரசியல் பின்புலம் இல்லை. இவை எல்லவற்றையும் தாண்டி மாநிலக் கட்சியாக உறுதிப்படுத்தும் அளவிற்கு 6% ல் இருந்து 8% ஆக வாக்குகளைப் பெற்றிருப்பது வளர்ச்சி இல்லாமல் வேறு என்ன? தமிழக அரசியல் ஆய்வாளர்களால், அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படு, பாரட்டப்படும் ஒரு விடயத்தை யாழ்கள குருவிச் சாத்திரக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மட்டம் தட்டுவதும், கேலிசெய்வதும் ஏன்? இந்த உண்மையைக்கூட ஏற்றுக்கொள்ள மனம் ஏற்றுக்கொள்ள மறுபதற்குக் காரணம் என்ன? வெறுப்பும் வஞ்சகக் குணமும் மனிதர்களின் கண்களை மறைக்கிறது.
  13. பரதியாரின் மறுபக்கம்.தெரிந்திராத தகவல் தெரியபடுத்தியமைக்கு நன்றி. ஈழதமிழர்களும் மேற்குலக நாடுகளில் நல்ல பாதுகாப்பான வசதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டு தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் அப்படி போராட வேண்டும் இப்படி போராட வேண்டும் என்று பொங்குவார்கள்.
  14. இதுதான் கள நிலவரம். அதிமுக, திமுக வாக்குவங்கிகள் சற்றுக்குறைந்து இருக்கின்றன. ஆனால் சரியான கூட்டணி அமைத்து திமுக 40 தொகுதிகளையும் வென்றது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பிஜேபி, பாமக கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரலாம். ஆனால் திமுக பாமகவுடன் தொகுதி உடன்படிக்கை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும். 10% வீதத்திற்கு குறைவான வாக்குவங்கிகள் கூட்டணி பேரத்திற்குத்தான் உதவும்!
  15. அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்
  16. விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன் தேசம்நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையாடுகின்றனர். அவர் நரகத்திற்கு செல்கின்றார் என்றும் சில பதிவுகள் வெளியாகி யுள்ளது. அரசியலற்ற தனிமனித ஆளுமைகளின் கீழ் கட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள், அவ்வமைப்பை சுக்குநூறாக சிதறடித்துள்ளது. தனிப்பட்ட நபர்களைத் தவிர இவ்வமைப்புகள் தங்களை ஒருங்கமைப்பதற்கான அரசியலைக் கொண்டிருக்கவில்லை. இவர்களில் சற்று அரசியல் விளக்கமுடையவர்கள் முற்றாக மே 18க்குப் பின்னான புலி அமைப்பிலிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளனர். ஒரு போராளியின் கடைசி மூச்சுக் காற்று கரைந்து செல்வதற்கு முன்னரேயே அவதூறுகள் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. ஒரு போராளி துரோகியானது எப்படி? தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் ‘துரோகத்தின் பரிசு’ பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு ஆதாரங்கள் அவசியமில்லை. வந்திகளும், தனிப்பட்ட கோபதாபங்களும், போட்டிகளுமே போதுமானது. யுத்தம் முடிவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் கடந்தும் ‘தியாகி – துரோகி’ என்ற கருப்பு வெள்ளை பைனரி அரசியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் வரமுடியவில்லை. இன்று பழிசொல்வதற்கு ஆளில்லாமல் தங்களுக்குள்ளேயே தியாகி – துரோகி முத்திரைகளைக் குத்துகின்றனர். வவுனியாவில் அன்றைய காலத்தில் நன்கு அறியப்பட்ட கொடுங்கோலன் மாணிக்கதாசன். மாணிக்கதாசனின் மறைவு இன்றும் நினைவுகூரப்படுகின்றது. மாணிக்கதாசன் தமிழ் மக்களுக்காகப் போராட ஆயதமேந்திய போதும் மாணிக்கன்தாசன் இழைத்த அநீதிகள் மிக மிக அதிகம். மாணிக்கன்தாசன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்பதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அவரைத் தியாகி ஆக்குவது சரியா என்ற கேள்வி மிக நியாயமானதே. இந்த வகையில் விநாயகம் துரோகி ஆக்கப்படுவதற்கு வலுவான எந்தக் காரணமும் கிடையாது. வதந்திகள், தனிநபர் போட்டி பொறாமை போன்றவையே இந்த அவதூறுகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. இதற்கு ஒரு நீண்ட பின்னணியும் உண்டு. எண்பதுக்களின் பிற்பகுதியில் மேற்குநாடுகளுக்கு தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆரம்பகாலங்களில், விடுதலைப் புலிகள் தங்களுக்கான அமைப்புகளை மேற்குலகில் நிறுவினர். நிதி வசூலிப்புகளையும் மேற்கொண்டனர். மேற்குலகில் தங்களோடு பணியாற்ற விடுதலைப் புலிகளில் இருந்து, மரண தண்டனையில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற பாரிஸில் உள்ள சுக்லா போன்றவர்கள் உட்பட பலர் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டனர். மாற்று இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இக்கட்டமைப்புகளுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவர்கள் புலிகளுக்கான நிதி சேகரிப்பு மற்றும் நிதி சேகரிப்பு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது என்று ஆரம்பித்து, மாவீரர் தின நிகழ்வு, பொங்கு தமிழ் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாதவர்கள் ஏற்பாடு செய்யும் ஒன்றுகூடல்களைக் குழப்புவது, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றையும் செய்து வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்புப் பற்றி கருத்து வெளியிட்ட இந்திய இராஜதந்திரி ஒருவர் இந்திய நிதி அமைச்சுக்கு தெரியாது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிள் வருமானம் பற்றி. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் வருமானத்தை தெரிந்து வைத்திருந்ததுடன் அவர்களிடம் கணக்குப் பார்த்து வரியையும் அறவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். இரண்டாயிரத்தின் நடுப்பகுதியில் ஒஸ்லோ உடன்படிக்கையில் கிடைத்த யுத்த இடைவேளையின் போது சர்வதேச கட்டமைப்புகள் கேபி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் பொறுப்பிலிருந்து கஸ்ரோவுக்கு கை மாறியது. கேபி இன் செயற்பாடுகள் முடக்கப்பட்டது. பிற்காலத்தில் கேபி யிடம் இருந்து ஆயுத கொள்முதல், விநியோகம் ஆகியவையும் பறிக்கப்பட்டது. ஆயுத கொள்முதல் விநியோகத்தில் நீண்ட கால அனுபவம் மிக்க கேபி யிடம் இருந்து அது பறிக்கப்பட்டது முதல் ஆயதக் கொள்வனவில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மேற்கு நாடுகளின் உளவுத்துறையினரிடமே ஆயுத பேரம் பேசி மாட்டிக்கொண்டனர். இறுதி யுத்தத்தில் புலிகளுக்கான ஆயுதங்கள் வந்தடையாததற்கு இதுவும் முக்கிய காரணம். அடுத்து இந்தியா செய்மதிகளுடாக சர்வதேச எல்லையையும் கண்காணித்ததால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு சேர்க்கவும் முடியவில்லை. 1993 இல் சர்வதேச எல்லைக்குள் வைத்து கிட்டு பயணித்த கப்பலை இந்திய கடற்படையினர் கைப்பற்றியதும், கிட்டுவை கைது செய்ய முற்பட்டதும், கிட்டு கப்பலோடு எரிந்தது உயிர் மாய்த்ததும் வரலாறு. கஸ்ரோ விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்புகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதும், தாயகத்தில் இருந்து சில போராளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பபட்டு அக்கட்டமைப்புகள் நேரடியாக கஸ்ரோவின் கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர். அனைத்துலகச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்று இயங்கிய அமைப்புக்களுக்குள் புதிதாக வந்தவர்கள் தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நிதி சேகரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பல முதலீடுகளையும் மேற்கொண்டனர். நிதி சேகரிப்பவர்களுக்கு அவர்கள் சேகரிக்கும் நிதித் திரட்சியைப் பொறுத்து சம்பளமும் போனஸ்சும் வழங்கப்பட்டது. இதுவரை தமது நேரத்தை ஒதுக்கி தங்களது கடமை சேவை என்ற அடிப்படையில் பணியாற்றிய சிலர் இவ்வமைப்புகளில் இருந்து தங்களை விலத்திக்கொண்டனர். இறுதி யுத்தம் உச்சத்தைத் தொட்டிருந்த 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. 300 மில்லியன் டொலர் ஆண்டு வருமானத்தை ஈட்ட தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 300 பில்லியன் டொலர் அசையும் அசையாச் சொத்துக்கள் சர்வதேசம் எங்கும் இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த மதிப்பீடு தெரிவிக்கின்னறது. 2009 மே 18க்கு மறுநாளே இச்சொத்துக்களில் பெருமளவு காணாமலாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் தப்பிய தளபதிகள், போராளிகள் இந்த சர்வதேச வலைப்பின்னல் தொடர்பைக் கொண்டிருந்தால் அவர்கள் அத்தொடர்பைப் பயன்படுத்தி இராணுவ, மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளிநாட்டுக்கு வந்தனர். இது பெரும்பாலும் இங்கு வலைப்பின்னலில் நிதிக்குப் பொறுப்பாக இருந்தவர்களின் நெருங்கிய உறவுகள், தளபதிகளின் குடும்பத்தினரை அழைக்கப் பயன்படுத்தப்பட்டது. இங்கும் யாழ் மையவாதம் மிகத் கச்சிதமாக காரியத்தை நகர்த்தியது. மற்றும் சாதராண போராளிகள், போராட்டத்தில் ஊனமுற்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள சொந்தபந்தங்களின் உதவியோடு வெளிநாடு வந்து சேர்ந்தனர். ஏனையவர்கள் கைவிடப்பட்டவர்களாக இன்னமும் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் நாளாந்த வாழ்வுக்காகப் போராடிக்கொண்டுள்ளனர். கிழக்குப் போராளிகள், வன்னிப் போராளிகள், மலையகப் போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்த வந்த போராளிகள் பெரும்பாலும் கைவிடப்பட்டனர். சர்வதேச தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளும் அவர்களை கூலிப்படைகளாகவே கணித்தனர். கைவிட்டனர். தற்போது பதுக்கப்பட்ட நிதியில் தங்களை விடுதலைப் புலிகளாக அறிவித்து இயங்கியவர்கள் அவர்களின் குடும்பங்களின் சாமத்திய வீட்டுக்கு ஹெலிக்கொப்டரில் வந்து இறங்குகின்றனர். பூத்தூவுகின்றனர். உள்ளக புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்த விநாயகமும் சிலரும் இறுதி யுத்தத்தில் கடைசிநேரத்தில் மே14ம் திகதி நந்திக் கடல் பிரதேசத்திலிருந்து தப்பித்து சென்றதாக சொல்லப்படுகின்றது. அவ்வாறு தப்பித்த அவர் குறுகிய காலம் சில மாதங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றார். அதன் பின் விநாயகம் பாரிஸ் வந்தடைந்தார். 2009க்குப் பின்னான காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைத்தளத்திலிருந்த நிதியை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு. அதற்கு அனுமதி வேண்டும் என இறுதி யுத்தத்தின் போது வெளியேறிய விநாயகம் போன்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இவர்கள் ஏற்கனவே அனைத்துலக வலைப்பின்னலிலிருந்து வெளியேறியவர்களையும் இணைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நிறுவினர். இரு மாவீரர் நிகழ்;வுகள் நடைபெற்றதன் பின்னணி இதுவே. இந்த விடயங்களுக்காக விநாயகம் லண்டனுக்கும் வந்திருந்தார். பிரித்தானியாவில் வரலாற்று மையம் அமைக்கப்பட்டதன் பின்னணியிலும் விநாயகம் செயற்பட்டிருந்தார். ஆனால் வெகுவிரைவிலேயே விநாயகம் துரோகி ஆக்கப்பட்டார். நந்திக் கடலில் இருந்து துவாரகா, மதிவதனி, பிரபாகரன் மூவரும் தப்பிவந்தார்கள் என்பதை நம்புபவர்கள் அவர்களுக்கு நான்கு நாளுக்கு முன் மே 14இல் விநாயகம் தப்பி வந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பல களமுனைகளைக் கண்ட விநாயகத்திற்கு அங்கிருந்து தப்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என யாரும் முற்றுமுழுதாக மறுக்க முடியாது. அவ்வாறு தப்பி வந்தபடியால் அவர் இலங்கைப் புலனாய்வுத்துறையின் உதவியுடனேயே தப்பி வந்துவிட்டார், அதனால் அவர் துரோகி என ஒரு சாரார் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இறுதி யுத்தத்தில் விநாயகத்தின் மனைவி பிள்ளைகளும் சரணடைந்து கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். விநாயகம் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கு உதவியதால் தான் அவருடைய மனைவி பிள்ளைகள் விடுவிக்கப்பட்டதாக இன்னொரு தரப்பு விநாயகத்தை துரோகி என்கிறது. இதனால் விநாயகம் தலைமைச் செயலகத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த வதந்திகளின் அவதூறுகளின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. ஆனால் விநாயகம் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதற்காக இலங்கைப் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்டிருந்தால் கூட அதில் எவ்வித தவறும் இல்லை. அதற்காக அவரைத் துரோகியாக்க முடியாது. விநாயகத்தை துரோகி என்பவர்கள் தங்களை தாங்களே மதிப்பீடு செய்வது மிக முக்கியம். இவை இவ்வாறிருக்க இலங்கை அரசு விநாயகம் மீது வழக்கைப் பதிவு செய்து அவருக்கு பிடிவிறாந்தை அனுப்பியது. இன்ரபோலில் விநாயகம் தேடுதலுக்குரிய நபரானார். பிரான்ஸ் உள்துறை அமைச்சு அவருக்கு வழங்கிய விசாவை மீளப்பெற்றது. விநாயகம் குறுகிய காலத்திலேயே ஓரம்கட்டப்பட்டார். துரோகியாக்கப்பட்டார். மௌனிக்கப்பட்டார். கடந்த சில வாரங்களாகவே புற்றுநோய்க் கொடுமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு யூன் 4இல் மரணத்தை தழுவினார். அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாயகத்தில் வறணியில் வாழ்ந்த அவருடைய மனைவி பிள்ளைகளைக் காணவில்லை. மூத்த மகன் கனடா வந்தடைந்துள்ளார். அவருடைய மனைவியும் மற்றைய பிள்ளைகளும் விசிற்றேர்ஸ் விசாவில் அண்மையில் கனடா வந்துள்ளனர். விநாகயத்தின் பூதவுடலை கனடாவில் உள்ள அவருடைய மனைவி பிள்ளைகளிடம் அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை. விமர்சனங்களோடும் மனிதாபிமானத்தோடும் அப்போராளியின் வாழ்வை மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்காக தன்னை தியாகம் செய்ய முன்வந்த போராளியாக அவருக்கு எனது அஞ்சலிகள். https://www.thesamnet.co.uk/?p=105119
  17. கனக்க கதைச்சால் இந்த பாட்டை போட்டு றூட்ட மாத்தி தப்பிச்சிடுவானுவள்.🤣
  18. நீங்க பரவாயில்லை. நான் பைனலுக்கு இவங்களைத் தான் தெரிவு செய்திருக்கிறேன். தேவையா? அவுஸ் பாபடோசுக்கு நல்ல பிட்ச்சை கொடுத்திட்டு மற்றைய இடங்களுக்கு அடிக்கவே முடியாத பிட்ச்சைக் கொடுத்து விட்டார்கள். இதைப் பற்றி கதைச்சா கங்காருவை அவிட்டு விடுறாங்க. என்ன கொடுமை சரவணா? @P.S.பிரபா
  19. உண்மைதான்......கள யதார்த்தம் அதுதான்........! 😴
  20. சிட்னியில் வாங்கிய கத்தி Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன். புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மான் ருஷ்டி எழுதி வெளிவந்த அவரது கடைசி நூல் உள்ளதா" என்று கேட்டேன். மூன்று இஞ்ச் மூக்கின் இடப்பக்க நுனியில் வெள்ளைக் கல்லு மூக்குத்தி அணிந்த, மெழுகு அழகி அவள். சல்மான் ருஷ்டியை அறிந்திருக்கவில்லை. கணனியில் தேடுவதற்கு முயற்சித்தாள். பெயரை முழுமையாக அறிந்தால்தானே தேடமுடியும். தடுமாறினாள். அவள் தடுமாறுகிறாள் என்பதற்காக " Can I have a Knife" என்று கேட்பதற்கு நான் தயங்கியபடி நின்றேன். அவளால் முடியவில்லை என்பதை முழுதாக உணர்ந்த பிறகு, எனது தொலைபேசியில் Knife புத்தகத்தின் அட்டையை எடுத்துக் காண்பித்து, "இந்த நூல் உள்ளதா" என்று கேட்டேன். புத்தக இறாக்கைகளுக்குள் இறக்கை விரித்து ஓடினாள். அவளைப்போன்ற வெள்ளை அட்டை அணிந்த புத்தகத்தை ஏந்திவந்து என் கைகளில் ஒப்படைத்தாள். பொது இடங்களில் மது அருந்துபவர்கள், காகிதப் பையில் போத்தலை மறைத்துக்கொண்டு பதுங்குவதைப்போல, புத்தகத்தை ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொண்டு பத்திரமாக வந்து காரில் ஏறினேன். நியூயோர்க் நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "எழுத்தாளர்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவது எப்படி" என்ற தொனிப்பொருளிலான அரங்கில் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சல்மான் ருஷ்டி கலந்துகொண்டார். நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து மேடைக்குப் பாய்ந்தோடிச் சென்ற 24 வயது இளைஞன் ஒருவன், ருஷ்டியை சரமாரியாகக் கத்தியால் குத்திச் சல்லடை போட, அவர் இரத்தச் சகதியில் சரிந்தார். முதலில், இந்தத் தாக்குதல், பேச்சின் தொனிப்பொருள் சார்ந்த அரங்காற்றுகை என்று சந்தேகித்த பார்வையாளர்கள் உறைந்திருந்தனர். சில கணங்களில் உண்மையின் தீவிரத்தை உணர்ந்து, எழுந்து குழறினர். ருஷ்டியைக் கொன்றே தீருவதென்று கொலைவெறியாடியவனை, மேடையிலிருந்தவர்கள் பிடித்து மடக்கினார்கள். ருஷ்டி குற்றுயிராக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நார் நாராகக் குத்திக்கிழிக்கப்பட்ட 75 வயது முதிய ருஷ்டியை பெரியதொரு மருத்துவர்குழு - பெரும்போராட்டத்துக்குப் பிறகு - சாவிலிருந்து மீட்டெடுக்கிறது. இடக்கையில் பல குத்துகள், கண்ணில் பார்வை நரம்புவரைக்கும் பாய்ந்த கத்தியால் பயங்கரக்காயம், இவற்றைவிட மார்பில் - கழுத்தில் என்று ஏகப்பட்ட ஆழமாக வெட்டுகள். சம்பவம் தொடர்பிலான காணொலியை பின்னர் விசாரணை செய்ததன் அடிப்டையில், கிட்டத்தட்ட 27 செக்கன்கள், ருஷ்டி தன்னைத் தாக்கியவனின் கத்தியோடு மேடையில் நின்று போராடியிருக்கிறார். தான் நுகர்ந்த மரண நெடியையும் - நேர்ந்த அத்தனை அவலங்களையும் - ஒவ்வொரு காயத்திலுமிருந்து உயிர் மீண்ட அனுபவத்தையும் - அவற்றின் பின்னணியில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் வலிபெயர்த்து விவரிக்கம் அபுனைவுதான் Knife. ருஷ்டி எழுதிய 21 ஆவது நூலான Victory City வெளிவரவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்று, அந்த வெளியீடு அவர் உயிர் மீண்ட பிறகு நடைபெற்றது. தற்போது, Knife வெளியாகி பல லட்சக்கணக்கான வாசகர்களிடம் சென்றடைந்திருக்கிறது. ஒரு எழுத்தாளன் மீதான தாக்குதலில் அவன் உயிர் தப்பினால், அந்த அனுபவத்தை அவன் எவ்வளவுக்கு எல்லைவரை சென்று தன் வாசகனுடன் பகிர்ந்துகொள்வான் என்பதற்கு இந்த நூல் செறிவான உதாரணம். ருஷ்டியின் இந்த நூலில் மிகக் கனிவோடும் இறுக்கமாகவும் பகிர்ந்துகொள்ளும் இரு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று - அன்பின் மீதான ருஷ்டியின் தீராத பற்றினால், காலம் அவருக்கு எலைஸா என்ற மனைவியை அருளியது. ருஷ்டி ஐந்தாவது தடவையாக எலைஸாவைத் திருமணம் செய்துகொண்டது, எழுத்தாளர் வட்டத்திலேயே அதிகம்பேருக்குத் தெரியாது. எலைஸாவும் அதனைப் பெரியளவில் விரும்பவில்லை. ருஷ்டி மீதான தாக்குதலுக்குப் பிறகு எலைஸா, பேரொளியாய் பெருக்கெடுக்கிறார். ருஷ்டியைத் தன் நிழலில் வைத்து ஏந்துகிறார். ருஷ்டி குறிப்பிடுவதைப்போல அவரளவுக்கு எலைஸாவும் காயமாகி வலி சுமக்கிறார். ருஷ்டிக்குக் கிடத்தட்ட எலைஸாதான் உயிரூட்டி மீட்கிறார். தன்னைவிட முப்பது வயது மூத்த கணவனின் மீது எலைஸா கொண்டுள்ள காதலும், காயம்பட்ட ருஷ்டியை எவ்வாறுப் போராடி வெல்கிறார் என்பதும் இந்த நூலில் மிகக்கனிவான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. அந்தக் காதலைப் பக்கத்துக்குப் பக்கம் ருஷ்டி கொண்டாடித் தீர்ப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. இரண்டு - ருஷ்டிக்குள்ளிருக்கும் இந்தக் கனிவான - அன்புக்கு ஏங்கும் - இதயத்துக்கு எதிர் அந்தத்தில் உள்ள அவரது எழுத்தினாலான தன்னகங்காரம். பதினைந்து தடவைகள் குத்திக் குதறப்பட்ட பிறகும், அந்த சல்லடையான உடலில் இருந்து மீண்டு வந்து, தன்னைக் குத்தியவனை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று விரும்புவதும், கடைசியில் அவன் அடைக்கப்பட்ட சிறைச்சாலைக்குச் சென்று அதனை வெளியிலிருந்து படம்பிடித்துவிட்டு "அவனிருந்த அந்தச் சிறையைக் கண்டதும் எனது கால்கள் நடமாடின" - என்று எழுதுவதும் அவரின் எழுத்து-நரம்புகளில் ஓடுகின்ற தன்னகங்காரம்தான். இந்த அகங்காரம்தான் அவரைச் சாவுக்கு எதிராகவும் போராடும் வல்லமையைக் கொடுத்தது. இந்த நூலில் அவர் எழுதாததும் - வாசகன் புரிந்துகொள்ளக்கூடியதுமான புள்ளி - "நான் வேறு எவ்வாறேனும் மரணிக்கத் தயார், ஆனால், இவனது தாக்குதலில் சாகமாட்டேன்" - என்று இறுதிவரை அவருக்குள்ளிருந்த ஓர்மம். இந்தத் திமிர்தான் பதினைந்து மாதங்களில் அவரை மீண்டும், அதே எழுத்தாளனாக அவரது கதிரையில் கொண்டுவந்து இருத்துகிறது. இந்தத் தாக்குதலினால் ருஷ்டி அடைந்த காயங்களும், அவற்றின் விளைவுகளும் ஒவ்வொன்றிலிருந்து வெளியேற அவர் அனுபவித்த - கதறிய - ஓலங்களும் நூலில் வாசகனையே பதறவைக்கக்கூடியவை. சகல காயங்களும் ஆறியபிறகும் அவருக்கு புற்றுநோயுள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட அறிவிப்பும் பிறகு, அது ஏனைய காயங்களின் தொற்றினால் ஏற்பட்டது என்று ஆறிப்போவதும் உள ரீதியாகவே ஒருவருட காலம் அவரை சிதைக்கிறது. தாக்குதல் ஏற்படுத்திய பழைய நினைவுகளினால் விளைந்த கொடும் கனவுகளால் பெருந்துயரடைகிறார். இந்தக் கூட்டு வாதையை ஒரு எழுத்தாளனாக - தனது கருத்தை உறுதியோடு எழுதியதற்காக - ருஷ்டி அனுபவித்து மீண்டிருக்கிறார். Knife நூலில் ருஷ்டிக்கு சமனாக அவரது மனைவி எலைஸாவின் காதலும் எந்த எல்லைவரையும் சென்று தனது கணவரைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் அவரது ஓர்மமும் வாசிப்பில் நிறைவுதந்தாலும், ருஷ்டியின் தன்னகங்காரமும் எழுத்தாளனுக்கு அந்தக்குணம் இருக்கவேண்டிய தேவையும் அதிகம் ஈர்க்கிறது. தன்னைத் தாக்கியவனைச் சிறையில் சென்று சந்திக்க விரும்பும் ருஷ்டிக்கு அவரது மனைவி மறுப்புச் சொல்கிறார். தாக்குதலாளியின் சார்பிலான சட்டத்தரணிகளே அதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறி கணவனைத் தேற்றுகிறார். அதனை ருஷ்டியே பின்னர் உணர்ந்துகொண்டாலும், நூலின் ஒரு பகுதியை தனக்கும் தனது தாக்குதலாளிக்கும் இடையிலான கற்பனை உரையாடலாக ருஷ்டி எழுதுகிறார். அந்த உரையாடல், மிகவும் முதிர்ச்சியானது. இந்த உரையடலை, தன்னைப் பதினைந்து தடவைகள் குத்தியவனை திட்டித் தீர்ப்பதற்கு ருஷ்டிய பயன்படுத்தவில்லை. அவனுக்கு எதிராக தனது ஏளனங்களைப் பதிவுசெய்வதற்கும் - விலங்கணிந்த அவனது குற்றத்தை எள்ளி நகையாடுவதற்கும் நீட்டிக்கொள்ளவில்லை. மாறாக, அவனது தரப்பிலிருக்கக்கூடிய கொலை வாதங்களை சமமாக முன்வைக்கிறார். அவனது அடிப்படைவாத மனநிலையை அவனது கத்தியின் முனையிலிருந்து புரிந்துகொள்கிறார். லெபனானுக்குச் சென்று திரும்பியதிலிருந்து நான்கு வருடங்களாக வீட்டின் ஒரு மூலையிலிருந்து youtube பார்ப்பதையே முழுநேரமாகச் செய்துகொண்டிருந்தவன், அடிப்படைவாதத்திற்குள் ஈர்க்கப்பட்ட கோரத்தையும் - அதன் பரிதாபமான விளைவுகளையும் - தான் எந்த வகையில் அவனுக்கு எதிரியாகவேண்டும் என்ற நியாயமான கேள்வியையும் கனிவோடு முன்வைக்கிறார். சமூகவலைத்தளங்களில் algorithm உலகிற்குள் ஒருவன் தன்னை அறியாமல் வசீகரிக்கப்படக்கூடிய சீரழிவின் உச்சத்தையும் அதன் கோரமான விளைவையும் காயங்களின் பிரதிநியாக நின்று பகிர்ந்துகொள்கிறார். சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்ற இவ்வுலகில், தன்னுடன் பேசுவதற்கு தனது தாக்குதலாளி, வன்முறையைத் தெரிவுசெய்த காரணத்தை திரும்பத் திரும்ப வெவ்வேறு தளங்களில் முன்வைத்து, இறுதியில் "நீ என்னைக் கொலைசெய்ய முயன்றாய், ஏனெனில், உனக்கு புன்னகைப்பது எப்படி என்று தெரியாது" - என்று நிறைவுசெய்கிறார். எழுத்தை எழுத்தால் - கருத்தைக் கருத்தால் - எதிர்கொள்ளமுடியாமல் வன்முறைகளை எதிர்கொண்ட எல்லா எழுத்தாளர்களும் இந்தக் கடைசிவரியில் கண்முன் வந்து போகிறார்கள். முன்னர் குறிப்பிட்டதைப்போல, ருஷ்டி போன்றோருக்கு இப்படியானதொரு நிகர் அனுபவம் ஏற்படும்போது, அதன் விளைவு இவ்வாறான மிகவும் எடைமிகுந்த நூலாகவே வெளியாகும் என்பதில் ஆச்சரியமில்லை. ருஷ்டியின் பலம் அவர் வரலாற்றின் மீதுகொண்ட ஆழமான புரிதலும் மொழியை லாவகமாக சுழற்றியெடுத்து, எழுத்தின் திசை வகுக்கும் வல்லமையும்தான். இந்தநூலிலும் அந்தக் கூட்டு-நகர்வு செறிவாக அமைந்துள்ளது. இரண்டாம் வாழ்வைப்போராடிப் பெற்ற ஒரு எழுத்தாளனின் இரத்த சாட்சியமாக இந்த நூலைப் படிப்பதற்கு அப்பால், நடப்பு உலகில் கூர்மையடையும் அடிப்படைவாதத்தின் இழிநிலையைப் புரிந்துகொள்வதற்கும் இன்றைய உலகம் முகங்கொடுக்கவேண்டிய புதிய அறம் சார்ந்த கேள்விகளையும் Knife பல்வேறு புள்ளிகளின் ஆழமாகப் பேசுகிறது. https://www.theivigan.co/post/10010?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR26MAPFw_SwSbeSdcMqt0SwsM_THBF_nVCimymF7EXIedky2UGZ4oUs2o0_aem_AXE9RuBkFXBf3oING05d-XBPJLRgiq8r3oBRnEND4_9ymHP_lHI861NcPqoy6HShFCCyx7VGrByFw3e7CrYXudc7
  21. திமுக பெற்ற 26.93 வீதமான வாக்குகள் அவர்கள் போட்டியிட்ட 22 தொகுதிகளில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டது. அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குகளை 22 தொகுதிகளில் பெற்றிருக்கின்றனர், அது தமிழ்நாட்டில் பதியப்பட்ட மொத்த செல்லுபடியாகும் வாக்குகளின் 26.93%.
  22. 🤣..... அமெரிக்காவில் இருக்கும் கிரிக்கெட் தெரிந்த சிலரில் ஈழப்பிரியன் அண்ணாவும் ஓராளாக இருப்பார். அவர் தான் ஏஜண்டோ தெரியல.......🤣.
  23. எல்லோருமே சொன்னாங்க. நீங்க தான் அதை நம்பாம கங்காருவை அவிட்டு விட்டு எங்களை வெருட்டினீங்க. அவுஸ் இப்படி ஒரு பிட்ச் செய்து கொடுத்ததே கிவிஸ் குரூப்பை கவிழ்க்கவாக இருக்குமோ....
  24. எனக்கும் இப்ப pitchலதான் சந்தேகம் வந்திட்டுது.. எனக்கு அவுஸை விட Kiwisதான் அதிகம் பிடிக்கும்.. அவங்களே தோத்திட்டாங்க..
  25. தம்பி.. ஒரு நாளைக்கு ஒரு முட்டைதான் நல்லது.. இப்படி ஒரே நாளில 5/6 முட்டைகள் என்றால் தாங்காது.. நானாவது பரவாயில்லை.. கடைசியில வந்தாலும் இன்னமும் இங்கதான் நிற்கிறன்.. ஆனால் நீர்வேலியான் அண்ணா score listயே மறைக்க கேட்டவர்..
  26. அருமையான கருத்து. எனது நிலைப்பாடும் இதுவே.
  27. பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக, பி.க.க தலைவர் கோஷான் இலங்கை அணியை மரக்கறி விற்ற அனுப்பும் கோப்பில் கையெழுத்திட்டார்…. கோஷான் சே எனும் நான்……🤣
  28. தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சி உறிப்பினர்களே சீமானின் வெற்றியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால்.... ஆனால்.... ஆனால்... 🤣
  29. நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாகி விஜய் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்குமளவுக்கு முன்னேறுவது நல்லதே. எனது வாழ் நாளில் சீமான் அவரது நடைமுறை சாத்தியமற்ற கிறுக்குத்தனமான பேச்சுகளைத் தவிர்த்து பொ றுப்புணர்வுடன் அறிவு பூர்வமாக மேடையில் பேசுவதை பார்கக ஆசையாக உள்ளது. அவர் பொறுப்புணர்வுடன் செயலாற்றும் போது அவரின் மதிப்பு மனிதர்கள் மத்தியில் கூட உயரும் வாய்ப்பு உண்டு. அவரது கிறுக்குதனமான கொமடிப் பேச்சுகளை பார்தத்து ரசிக்கும் இளவட்டங்கள் அவர்களுக்கு maturity வந்தவுடன் Pokemon ஐ spongebob பிள்ளைகள் கைவிட்டு அடுத்த கட்ட மனித வளர்சசிக்கு செல்வதை போல சீமானை கைவிட்டுவிட்டு சென்றுவிடுவர். ஒரு சில மனவளர்சசி குன்றியவர்கள் அவருடன் தங்கி விடுவதும் உண்டு.
  30. பெரிய‌ப்பு ஏன் எங்க‌ளை வெறுப்பு ஏத்துறீங்க‌ள் நாங்க‌ளே ப‌ட்டு நுந்து போய் இருக்கிறோம்😁..........................................
  31. முட்டை நல்ல புஸ்டியான ஆகாரம் @கந்தப்பு. ஆசான் ஜெயமோகன் தினமும் காலையில் நாலு அவித்த முட்டையை நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்த்தூளோடு சாப்பிடுகின்றவராம்! உடம்புக்கு நல்லது! https://www.jeyamohan.in/198775/
  32. எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி
  33. நியூசிலாந்து தோல்வி 75/10 New Zealand (T: 160 runs from 20 ovs) BATTING R B M 4s 6s SR Finn Allen b Fazalhaq Farooqi 0 1 1 0 0 0.00 Devon Conway † c Ibrahim Zadran b Fazalhaq Farooqi 8 10 16 1 0 80.00 Kane Williamson (c) c Gulbadin Naib b Rashid Khan 9 13 38 1 0 69.23 Daryl Mitchell c †Rahmanullah Gurbaz b Fazalhaq Farooqi 5 5 10 1 0 100.00 Glenn Phillips c Rashid Khan b Mohammad Nabi 18 18 28 2 0 100.00 Mark Chapman b Rashid Khan 4 7 8 0 0 57.14 Michael Bracewell lbw b Rashid Khan 0 1 2 0 0 0.00 Mitchell Santner b Mohammad Nabi 4 8 12 0 0 50.00 Matt Henry c Karim Janat b Fazalhaq Farooqi 12 17 21 0 1 70.58 Lockie Ferguson c & b Rashid Khan 2 5 3 0 0 40.00 Trent Boult not out 3 7 10 0 0 42.85 Extras (lb 5, w 5) 10 TOTAL 15.2 Ov (RR: 4.89) 75 Fall of wickets: 1-0 (Finn Allen, 0.1 ov), 2-18 (Devon Conway, 2.4 ov), 3-28 (Daryl Mitchell, 4.2 ov), 4-33 (Kane Williamson, 6.1 ov), 5-43 (Mark Chapman, 8.1 ov), 6-43 (Michael Bracewell, 8.2 ov), 7-53 (Glenn Phillips, 9.4 ov), 8-59 (Mitchell Santner, 11.6 ov), 9-63 (Lockie Ferguson, 12.6 ov), 10-75 (Matt Henry, 15.2 ov) • DRS BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB Fazalhaq Farooqi 3.2 0 17 4 5.10 15 2 0 3 0 Mohammad Nabi 4 0 16 2 4.00 11 0 0 0 0 Naveen-ul-Haq 3 0 10 0 3.33 12 1 0 0 0 Rashid Khan 4 0 17 4 4.25 16 2 0 2 0 Noor Ahmad 1 0 10 0 10.00 1 0 1 0 0
  34. அமெரிக்க மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கே சாதகமானது போல.
  35. இலங்கையின் பந்து வீச்சு நன்றாக எடுபடுது. ஓஓஓ அப்ப லைற்று பிரச்சனையாக இருக்கும்.
  36. நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
  37. 🤣........ இது ஆஸ்திரேலியாவில் எந்தப் பூங்கா........அந்தப் பக்கமே போகமாட்டேன். ஈழப்பிரியன் அண்ணைதான் அப்படி (கொஞ்சம் உறுதியாக....) சொல்லிக்கொண்டு திரிகின்றார். நான் அப்படியும் இருக்குமா, அப்படி இருக்காது என்ற இரண்டுக்கும் இடையில் நடுவில் தான் நிற்கின்றேன்.......🤣.
  38. நாம் தமிழர் வாங்கிய 8 சத வீதத்திற்கும் மேலான வாக்குகள் நாம் தமிழர் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள். தி மு க.. காங்கிரஸ்.. விடுதலைச் சிறுத்தைகள்... பா ம க.. பா ஜ க.. அதிமுக.. தே மு திக கமலஹாசன் கட்சி.. சரத்குமார் கட்சி.. இவற்றின் வாக்கு சதவீதம் என்பது இவர்களுக்கான வாக்குகளால் மட்டும் வந்தவை அல்ல. கூட்டணிக்கு விழுந்த வாக்குகள். அப்படி நோக்கின்.. பா ஜ க.. காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளை விட நாம் தமிழரின் வாக்கு சதவீதம் அதிகம் எனலாம். அதேபோல் தி மு க வின் வாக்கு சதவீதம் என்பது கூட தி மு கவிற்கு தனித்து வீழ்ந்த வாக்குகள் என்பது அர்த்தமில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு சிறுகச் சிறுக வீழ்ந்த வாக்கு சதவீதங்களின் மொத்தமும் அதில் அடங்கும். ஆக நாம் தமிழர் தனித்துப் பெற்ற 8 சதவீதம் என்பது... உண்மையில்.. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிப் படியே. அதற்காக உழைத்த அண்ணன் சீமான்.. மற்றும் நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கே இந்தப் பெருமைகள் போய் சேர வேண்டும். எந்த இலவசங்கள்.. சலுகைகள் இன்றி.. அவர்களை நம்பி வாக்களித்த தமிழக வாக்காளர்கள் நன்றிக்குரியவர்கள் மட்டுமன்றி எதிர்காலத்தில் தாம் சார்ந்த எல்லோரையும் நாம் தமிழருக்கு வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில்.. தமிழகத்தில் ஒரு உருப்படியான தமிழராட்சி மலரவும்.. தமிழகம்.. முழு வளர்ச்சி அடையவும் இது தேவையாகும். நாம் தமிழர் பாசறையில் குவித்திருக்கும் அனுபவ முத்துக்களை தமிழக மக்கள் தம் முன்னேற்றத்திற்கு அணிகலனாக்கிக் கொள்ள வேண்டும்.
  39. 🤣........ குகுடுப்பை சாஸ்திரம் போலவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியே பலிக்கப் போகுது. நாங்க சும்மா 'குண்டக்க மண்டக்க' என்று போடவில்லை... ஒவ்வொரு தெரிவிற்கும் பின்னால் எவ்வளவு 'திங்கிங்' இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். உதாரணம்: உகண்டா எதிர் PNG. PNG என்றால் ஒரு கழகமா அல்லது நாடா என்று முதலில் ஒரே குழப்பம். அப்புறம் அது ஒரு நாடு தான் என்று தெரிந்ததது...அந்தக் குழப்பத்திலேயே உகண்டாவை தெரிவு செய்ய, உகண்டா வென்றது வரலாறு..........
  40. சீமான் தமிழில் வெளுத்துவாங்கி ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. ஆங்கிலத்தில் புலமை பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கக் கோமாளிகளும் ஒன்றும் புடுங்குவதில்லை. மக்கள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் கண்டுகொள்ளாமல் விடுகின்றார்கள். இதனால்தான் ரணில் தனக்கு தமிழர்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற தைரியத்தில் இருக்கின்றார்.
  41. பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடையமுடியாமல் 7 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களையே எடுத்தது. முடிவு: கனடா அணி 12 ஓட்டங்களால் வெற்றியீட்டியது கனடா வெல்லும் எனக் கணித்த @kalyani க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த ஏனைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை! பதின்மூன்றாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 கல்யாணி 18 14 வீரப் பையன்26 16 15 நிலாமதி 16 16 புலவர் 16 17 நுணாவிலான் 16 18 வாதவூரான் 16 19 கிருபன் 16 20 அஹஸ்தியன் 16 21 கந்தப்பு 16 22 நீர்வேலியான் 16 23 P.S.பிரபா 14
  42. திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்
  43. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் திரு.திருமதி பாஞ்ச் தம்பதிகளுக்கு .........! 💐
  44. திருமணநாள் வாழ்த்துகள் பாஞ்ச் ஐயா & அம்மா, வாழ்க வளத்துடன்.
  45. திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்❤️
  46. கக்கா போகும் காகம்கள் சார்பாக இதை நான் வரவேற்கிறேன்🤣.
  47. ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை பக்கத்தை அழிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்கு சிங்களவரோடு சேர்ந்து ஒத்தூதியவர்களில் சிலர் தீவிர பாலஸ்தீன ஆதரவு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.