Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1487
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/13/24 in Posts

  1. ஒரு ராத்திரி ------------------- பகலுக்கும் இரவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி நடுச்சாமத்தில் வெளியே போகும் போது தெரியும். இரவின் இருட்டில் உயிர்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கும். இருட்டு கட்டுப்பாடுகளை அவிழ்த்து தளர்த்தி விடுகின்றது. ஆறு போல வாகனங்கள் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த பெரும் தெருக்கள் நிலத்தில் கீறப்பட்ட கறுப்புக் கோடுகள் போல அரவமற்ற இரவில் நீண்டு தெரியும். சிறு தெருக்கள் அசைவில்லாமல் நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போல அப்படியே கிடக்கும். வீடுகள், வீடுகளுக்குள் மனிதர்கள், நகரங்கள் என்று எல்லாமே எல்லாம் மறந்த ஒரு தூக்கத்தில் கிடக்கும். 'மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே........' என்ற வரிகளை இப்படியான ஒரு சாமத்தில் வெளியே வந்து பார்த்து விட்டுத் தான் அவர் எழுதினாரோ. தூங்கா நகரங்கள் என்றும் சில இருக்கின்றன தான். மதுரையைச் சொல்வார்கள். இரவு இரண்டாம் காட்சி படம் பார்த்து விட்டு, நடுச்சாமத்தில், அங்கே ரோட்டுக் கடையில் ஆவி பறக்கும் மல்லிகைப் பூ இட்லியும், மட்டன் குழம்பும் சாப்பிடலாம், சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அப்பவும் அந்த நேரத்திலும் கூட்டம் தெருக்கடைகளில் அள்ளும். லாஸ் ஏஞ்சலீஸ் நகரும் அப்படியான ஒன்று தான். 24 மணி நேரங்களும் திறந்திருக்கும் கடைகள், எப்போதும் நடமாடித் திரியும் மனிதர்கள், ஓயாத தெருக்கள் அத்துடன் அங்கங்கே சில சூட்டுச் சம்பவங்கள் என்று இதுவும் ஒரு தூங்கா நகரம் தான். சமீபத்தில் ஊர் போயிருந்த போது, ஒரு நாள் வவுனியாவில் இருந்து யாழ் போகும் புகையிரதம் அன்று கொஞ்சம் பிந்திப் போய்ச் சேர்ந்தது. இரவு ஏழு மணி ஆகிவிட்டது. யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து பஸ் தரிப்பிடம் போனால், கடைசி 751 பஸ் ஆறே முக்காலுக்கே போய் விட்டது என்றார்கள். இனி அன்றைக்கு பஸ் இல்லை. அங்கே நின்ற கடைசி 750 பஸ்ஸில் ஏறி புறாப்பொறுக்கியில் இறங்கினால், அங்கே ஒரே ஒரு ஆட்டோ நின்றது. அதில் ஏறி வீடு போனோம். எட்டு மணிக்கெல்லாம் அடங்கி விடுகின்ற ஒரு பிரதேசம் ஆகி விட்டது பிறந்து வளர்ந்த இடம். முன்னர் இப்படி இல்லை. ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. அங்கும் இரண்டு இரவுக் காட்சிகள் இருந்தன. யாழ் - பருத்தித்துறை பஸ் இரவிலும் ஓடிக் கொண்டிருந்தது. சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. ஊரில் முறிவு நோவு பார்ப்பதற்கென்றே இரண்டு பரியாரிகள் அந்த நாட்களில் இருந்தார்கள். 'மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.......' என்ற பாடல் வழமையான ஊஞ்சல் பாடல்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு முன்னுக்கு வந்தது ஒரு வருடம். இந்தப் பயிற்சி, அடுக்குத் தடுக்கு எல்லாம் சிவராத்திரி அன்று முழு இரவும் முழித்திருப்பதற்காகவே. ஆனாலும் ஆறு காலப் பூசைகளுக்கும் சிவன் கோவில் போகும் சிலர் தவிர பெரும்பாலானோர் முழு இரவும் முழித்து இருப்பதில்லை. ஆனால் நாங்கள் சிலர் காத்துக் கொண்டு இருப்போம். அதிகாலையில் கோவிலில் இருந்து வந்து கொண்டிருக்கும் அல்லது கோவிலுக்கு போய்க் கொண்டிருக்கும் சிலர், அங்கங்கே நிற்கும் எங்களைப் பார்த்து 'என்னடா, நீங்கள் இரவிராக முழித்து இருந்தனீங்களோ.......... உங்களுக்கு சிவபெருமானின் அருள் கிடைக்குமடா.........' என்று சொல்லிக் கொண்டே போவார்கள். பொழுது விடிந்தவுடன், சில வீடுகள் அல்லோலகல்லோலப்படும். சில வீடுகளின் படலைகளைக் காணவில்லை என்று தேடுவார்கள். ஒருவரின் வீட்டின் முன் நின்ற அவரது கார் அடுத்த தெருவில் போய் நின்றது. 'இங்கு சாஸ்திரம் பார்க்கப்படும்' என்று எழுதப்பட்டு ஒரு வீட்டின் முன் இருந்த விளம்பரம் நடு வயலில் நின்று கொண்டிருந்தது. இப்படி பல இடமாற்றங்கள். வருடா வருடம் ஒரு ராத்திரியில் மட்டும் இப்படி நடந்து கொண்டேயிருந்தது.
  2. இது தமிழ் சினிமாவில் வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் காட்சிகள் ஆனால் உண்மையில் , ஆண்மை என்றால் என்ன ? ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். Masculinity (also called manhood or manliness) is a set of attributes, behaviors, and roles associated with men and boys. Masculinity can be theoretically understood as socially constructed, and there is also evidence that some behaviors considered masculine are influenced by both cultural factors and biological factors. அதாவது, ஆண்மை என்பது ஆண் தன்மை, வலிமை மற்றும் வீரத்தை குறிக்கும். இது பொதுவாக ஆண்களின் உடல் மற்றும் மன வலிமையை குறிக்கின்றது என்றும் குறிக்கலாம். பெண்கள் [மனைவி, காதலி என்ற பெண்கள்] விரும்புவது உண்மையான நேர்மையான ஒழுக்கமான ஆண்மையை, முரட்டு ஆண்மையை அல்ல?? நன்றி
  3. "மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !" "மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் ? மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை ?" "மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில் மகத்துவம் பொருந்திய அழகு உடல் மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே மலர் விழியால் ஜாடை காட்டுதே !" "மறைப்பு கொடுத்த தாவணி விலக மகிழ்வு தரும் வனப்பு மயக்க மவுனமாய் திகைத்து நானும் நிற்க மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின !" "மருண்டு விழித்து நாணி குனிய மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும் மஞ்சர மாலையும் ஒல்லி இடையும் மஞ்சுளம் காட்டி காதல் வீசின !" "மது உண்ட வண்டாக நானும் மனம் கொண்டு மையல் கொண்டு மன்மதன் போல் ஆசை கொண்டு மன்றாடி அவள் தோளில் சாய்ந்தேன் !" "மங்கல வாழ்வும் மங்காத உறவும் மனங்கள் ஒன்றி மலர வேண்டுமென மனமார வாழ்த்தி தன்னையே தந்து மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. தமிழ் மக்களின் பொருளாதார ரீதியான பின்னடைவிற்கு காரணம் இந்திய சமூக பிற்போக்குதனங்களை அப்படியே தமது சுயநலனுக்க்காக சிலர் ப்யன்படுத்துகிறார்கள், இந்தியா எப்போதும் சீனாவை போல பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியாது, இரு நாடுகளும் ஒரே பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை 80 களில் ஜொண்டிருந்தன இந்தியாவும் சீனாவும் ஒரே மாதிரியான இடது சாரி பொருளாதார கொள்கைகளை 80 களில் பின்பற்றியிருந்தன இதற்கு ஒரு காரணமாக இந்த சாதிய அடக்குமுறைகள் காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மிக வறுமையான மானிலமான பீகாரில் பல வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்ற நிலையில் பல வேலைக்குரிய நியமனங்கள் வழங்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட சாதிய அமைப்பு காரண்மாக கூறப்படுகிறது. இது பொதுத்துறையில் அதிகளவில் காணப்படுவதால் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது (இது இந்திய பொருளாதார வள்ளுனர்களின் கருத்து). எமது பகுதிகளில் திட்டமிட்டு ஒரு பகுதி மக்களை தொடர்ச்சியாக வறுமைக்கோட்டிற்கீழ் வைத்திருந்து அவர்களை அடிமையாக நடத்துவதற்கு காலனித்துவ காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை தமக்கு சாதகமாக்கி தொடர்ச்சியாக 200 வருடங்கள் மக்களை அடிமையாக்கியுள்ளார்கள் அதற்கு சமயங்களை தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளார்கள். சமயத்தினை பயன்படுத்தும் போது மக்கள் கேள்வி கேட்பதில்லை என்பதால் மிக தந்திரமாக இதை கையாண்டுள்ளார்கள், அப்படியான சமூக விரோதிகளை சமய தொண்டர்களாக விம்பப்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள், ஆனால் அதிர்ச்சியான விடயம் என்னவென்றால் இப்படியான சமூக விரோதிகளை தற்காலத்திலும் கொண்டாடுகின்ற நிலைதான், அதனை விட மோசம் தாம் அடக்கப்படுவதற்கு மதம் ஒரு காரணமாக பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்தும் அந்த மதத்தினை பாதிக்கப்படுகின்ற மக்கள் தொடர்ச்சியாக பின்பற்றுவதனால் அவர்கள் மீதான பிடியினை இந்த சாதி வெறியர்கள் விடப்போவதில்லை என்ற புரிதல் இல்லாமை. இந்த இறுக்கமான சாதிய கட்டமைப்பு இருக்கும் வரை எந்த விதமான பொருளாதார முன் முயற்சிகளும் பெரிதளவில் எமது சமூகத்தில் பொருளாதார சமூக முன்னேற்றத்தினை ஏற்படுத்தாது, எமது சமூகத்தில் மாற்றம் ஏற்படாமல் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.
  5. உதுக்குத்தான் சொல்லுறது கிடைச்சதை மூக்கு முட்ட கட்டக்கூடாது என்று. அதுதானேபாத்தேன், அது எப்படி தனக்கு தெரிந்தவர்களை, அழைப்பே இல்லாமல் கூட்டிக்கொண்டுபோய் கச்சிதமாய் பாசல் கட்டிக்கொடுக்க முடிந்ததென்று? இப்பதான் விளங்கிச்சு அதன் ரகசியம்! இருக்காதா என்ன? தனது உறவினர் வைபவத்துக்கு உங்களை அழைத்து வண்டில் கட்டி அனுப்பியவரை உப்பிடி லேசாக அவர்களுக்கு சாமியாரை தெரியாது என்று கைகழுவி விட்டு போகிறீர்களே, ஒருவேளை உங்களை அவரோடு பாத்தால் கெடுபிடி, சோதனை பலமாக இருக்கும் பயத்தில அப்பிடி சொல்கிறீர்களோ?
  6. உண்மை விசுகர். ஈழப் போராட்டத்தின் போதும் பல தகவல்களை வலிய சிங்களவனுக்கு கொடுத்து உதவியது எமது சில ஊடகங்களே. சில விடயங்களில்... தேவையற்ற விசயங்களை தொடாமல் செய்தி எழுதுவதே... தரமான ஊடகமாக இருக்க முடியும். இப்போ ஊடகங்கள் பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றார்கள். சமூக அக்கறை என்பது, பெரும்பாலானவர்களிடம் அறவே இல்லை.
  7. இது தான் கடைசியாக அவருக்கு ஆப்பு வைக்க போகுது. எம்மவரே தோண்டி எடுத்து காட்டிக்கொடுத்து அழித்து முடிப்பார்கள். 😭
  8. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  9. எதிரியின் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டுறது என்பது இதுதான்.......! 😂
  10. எங்கள் ஊரிலும் படலை காவியள் இருந்தவை! இப்ப பொடியள் போனோடை மினக்கெடுவதாலும் மக்கள் படலைகளை பாரமாகவும் இலகுவில் கழற்ற முடியாதவாறு போடுவதாலும் கழட்டுவதில்லை!
  11. இந்தப் ‘படலை’ விடயம் எங்கள் ஊரிலும் இருந்திருக்கிறது. அதுவும் சிவராத்திரி காலத்தில் என்பதையெல்லாம் பார்க்கும் போது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. என்ன ஒற்றுமை பாருங்கள். எங்களுக்குப் பிடிக்காதவரின் வீட்டுப் படலை சிவராத்திக்கு மறுநாள், ஊர்க்கிணற்றின் துலாவில் தொங்கிக் கொண்டிருக்கும். பரம வைரிகள் இருவரில் ஒருவர் வீட்டு ஆடு மற்றையவர் வீட்டில் கட்டப் பட்டிருக்கும். இப்படி எத்தனையோ. ஆனாலும் பெண்கள் விடயத்தில் கண்ணியம் காத்தோம். சிவராத்திரி விரதத்தை ஊர்க் கோழிக் கறியுடன் முடித்து வைப்போம்.
  12. ஐயா ராமதாஸ் சொல்வது பாதி தான் நியாயம். ஏனெனில் தி மு க இவ்வளவும் கொடுத்தது என்றால்.. பா ம க.. கூட்டணி வைக்காமலே.. மற்றைய கட்சிக்கொடிகளையும் தூக்கி வைச்சுக் கொண்டும்.. பகுதியாக என்றாலும் காசு கொடுத்து வாங்கினது 56,000 வாக்குகள். வெறும் மைக் சின்னத்தை மட்டும் வைச்சுக் கொண்டு காட்டுக்கத்துக் கத்தி மட்டும் 9000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் தான் உண்மையான சனநாயகவாதிகள். அவர்களுக்கு வாக்குப் போட்டவர்கள் தான் சாதாரண மக்கள். இங்கு பாமக கொடி மட்டுமா பறக்கிறது..?! ராமதாஸ் ஐயாவுக்கே வெளிச்சம்.
  13. உதைத்தான் சொல்லுறது...ஓசி என்றாலும் மூக்குமுட்டச் சாப்பிடக்கூடாது என்று..மண்டபத்தில் சாப்பிட்டாலும் பரவாயில்லை...பொதிசெய்து ..வீட்டில் கொண்டுபோய் சாப்பிட்டதுதான் பிழை..பகிடிக்கு சிறியர்... விரைவில் பழைய சிறியாகவர எனது வாழ்த்துக்கள்...😆
  14. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், பயண சிநேகிதர்கள், விளையாட்டு குழு, .... என உறவு தொடர்கிறது. இவர்கள் ஒவ்வொருவருடனும் நாம் ஒவ்வொரு விதமாகப் பழகுகிறோம். சுருக்கமாக 'சொந்தங்கள் அல்லது குடும்ப உறவுகள்', 'நண்பர்கள்', 'பழக்கமானவர்கள்' [Family Relationships, friends, Acquaintances] என்று உறவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப் பின்னலே என்று கூறலாம். தன்னோடு உறவு, அயலாரோடு உறவு, உலகத்தோடு உறவு, ஏன் தன்னை படைத்தவர் கடவுள் என நம்பி, அந்த ஆண்டவனோடும் உறவு, மற்றும் தன்னை சுற்றி அமைந்து இருக்கும் இயற்கையோடும் உறவு - என்று உறவுகளின் தொகுப்பே இங்கு வாழ்க்கையாக விரிகிறது. அது மட்டும் அல்ல, “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என எல்லா உலக மக்களையும் தன் உறவினராக பேணியதை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ஆணானாலும், பெண்ணானாலும் அவர்களுக்கு குடும்பம், உறவு, நட்பு என்பவை முக்கியமான அவசியமான ஒன்று. பொதுவாக எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ்ந்து விட முடியாது. மனித வரலாறு அதைத்தான் எமக்கு காட்டுகிறது. திருவிளையாடல் படத்தில் கேபி சுந்தராம்பாள் பாடிய 'பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா' என்ற பாடலில் உறவை பற்றி மிக அழகாக கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு வரியில் 'ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு' என விபரிக்கிறார். அதாவது, ஊருண்டு – ஊரில் இருக்கும் பொதுச்சனம் உண்டு, பேருண்டு – சாதிக்காரங்க உண்டு. அதாவது குறிப்பிட்ட பெயர்களை கொண்ட கூட்டம் உண்டு, உறவுண்டு – தேர்வினால் வந்த சொந்தங்களும் நண்பர்களும் உண்டு [Relatives by choice], சுகமுண்டு – சுகம் தரும் மனைவி, குழந்தைகள் என்ற தன் குடும்பம் உண்டு, உற்றார் – பிறப்பினால் வந்த சொந்தம் உண்டு [Relatives by birth], பெற்றார் – தன்னை பெற்ற அம்மா அப்பா உண்டு என்கிறார். அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது என்றோ அல்லது ஒரு உள்ளுணர்வு என்றோ கூறலாம். இது வெவ்வேறு சூழல்களில் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட பல அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. எனவே, பல மொழிகளில் சூழலுக்கு தகுந்தாற் போல வெவ்வேறு சொற்கள், உதாரணமாக, நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் .... பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக, அன்பு என்பது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரைப் பற்றி நினைக்கும் ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறது என்றோ அல்லது இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவரும் ஒரு புரிதலின் அடிப்படையிலயே வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்த புரிதல் தான் அன்பு என்றோ கூறலாம் என்றும் கருதுகிறேன். இனிப்பு இனிக்கும் என்கிறோம். ஆனால், இனிப்பு என்றால் என்ன? என்று யாராவது கேட்டால், விளக்குவது சிரமமாகிறது. அப்படியே அன்பும் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றை சொல்லுவது வழக்கம். அந்த ரீதியில் நாம் பார்க்கும் பொழுது வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என்பன அன்பின் எதிரான பதம் ஆகும். என்றாலும் அன்பிற்கு நாம் நாளாந்த வாழ்வில் கொடுக்கும் விளக்கம், அதை ஒரு அளவிடக் கூடிய பொருளாக சிந்திக்க ஊக்குவிக்கிறது. இதனால் தான் நாம் "அன்பை உருவாக்குங்கள்", "காதலில் விழுந்தார்", "நிறைய அன்பு" (“make love“, “fallen in love“, “lots of love“) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். பண்டைய கிரேக்க தத்துவவாதிகளும் அன்பை நான்கு வகையாக பிரிக்கின்றனர். அவை, குடும்ப உறவு (கிரேக்கத்தில் – storge), நட்பு (கிரேக்கத்தில் – philia), காதல் (கிரேக்கத்தில் – eros) மற்றும் தெய்வீக அன்பு (கிரேக்கத்தில் – agape) ஆகும். அதன் நீட்சியாக மேலும் இன்று இனக்கவர்ச்சி, தற்காதல், விசுவாசம் போன்றவை அன்பின் வகைகளாக கருதப் படுகிறது. சுருக்கமாக அன்பின் அனுபவத்தை 1] இரு நபர்களுக்கிடையில் ஏற்படும் கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றும், 2] ஒரு வீட்டின் மீது கொண்டுள்ள அன்பு, பெற்றோரின் கடமை, பாதுகாப்பு ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவம் அல்லது இணைப்பு என்றும், 3] பாலியலின் ஆரம்ப உணர்ச்சியினால் ஏற்படும் ஆசை அனுபவம் அல்லது காமம் என்றும் வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பொதுவாக ஒருவர் உயிர்வாழ அவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னலம் [சுயநலம்] அவசியமாகிறது. அது மாட்டு அல்ல, சுயநலமாய் இருப்பதை எவரும் தவிர்க்கவும் முடியாது. ஏன் என்றால், சுயநலமாய் இருக்கக் கூடாது என்று இருப்பதுவே ஒரு சுயநலம் தான். ஒருவர், சில செயல்களை செய்யும் பொழுது, சுயநலம் இல்லாமல் தாம் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை தருவதால் தான் அப்படிச் செய்கிறார்கள். இதை எவரும் மறுக்க முடியாது. பெரியாரிடம் ஒரு முறை ஒருவர், பொது நலம் என்றால் என்ன என்று கேட்டார், அதற்கு பெரியார், இதோ மழை பெய்கிறதே, இது தான் பொது நலம் என்றார். அடுத்து அவர் சுயநலம் என்றால் என்ன என்று பெரியாரிடம் கேட்டார். அதற்க்கு அவர், இதோ எல்லோரும் குடையை பிடித்துக் கொண்டு நடக்கிறோமே, அது தான் சுயநலம் என்றார். அதாவது ஒருவர் தனது நலத்தைப் பற்றி மட்டும் சிந்திப்பதை சுயநலம் எனலாம். நம்மை உயிரோடு வைத்திருப்பதற்காக நாம் மூச்சு விடுவது கூட உண்மையில் ஒரு சுயநலம் தான். அப்படியே நாம் சிலவேளை முரண்பட்டு நிற்பதும் சுயநலம் தான். எனவே, சுயநலமில்லாமல் எதுவுமே இல்லை எனும் போது, உறவுகளைப் பற்றிய சந்தேகங்களை ஆய முற்பட்டால், அன்புக்காக, ஆசைக்காக என்று உறவுகள் அமைவதும், உறவுகளை நாம் அமைத்துக் கொள்வதும் கட்டாயம் நம் அவசியத்திற்காக அல்லது எம் முக்கியத்திற்காக என தெரியவரும். உதாரணமாக காதலும் அப்படித்தான். அவளது அல்லது அவனது நலனுக்காக நான் காதலிக்கிறேன் என்று எவரும் சொல்ல முடியாது, எனக்கு முக்கியம் என்பதற்காகவே அவள் அல்லது அவன் பின் அலைகிறேன் என்பதே அவரவர் சொல்லக்கூடிய உண்மை நிலையாகும். தமிழ் மூதாட்டி ஔவையார், தனது ஒரு பாடலில், "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு" என்கிறார். அதாவது, குளத்தில் நீர் நிறைந் திருக்கையில் அதில் தங்கி மீன்களை உண்டு வாழ்ந்த நீர்வாழ் பறவைகள் எல்லாம், அக்குளத்தில் நீர் வற்றுமானால் அங்கிருந்து அகன்று சென்று விடும். அதைப்போல, நாம் செழிப்பாக இருந்த காலத்தில் எல்லாம் நம்முடன் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்த நம் உறவினர்கள், நமக்கு வறுமை வருகையில் அல்லது நமக்கு ஒரு துன்பம் வருகையில், அவர்களால் இயன்ற உதவிகளை செய்ய மன மில்லாமல், நம்மை விட்டு அகன்று விடுவார்களே யானால், அவர்கள் எல்லாம் நமக்கு உறவினர்களே அல்ல. கொட்டியும், அல்லியும், நெய்தலும் போல ;நம்மை விட்டு நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே ; உண்மையில் உறவினராவார் என்கிறார். இதை மெய்ப்பித்தல் போல, ஒரு பண்டைக் கிரேக்க துன்பியல் நாடகாசிரியர் சாஃபக்கிளீசு (Sophocles - கிமு 496 - கிமு 406), தனது ஆண்டிகான் [Antigone - 441 BC] நாடகத்தில், தன் சகோதரன் பொலினிக்ஸ் [Polynices] இற்க்காக அல்லது குடும்ப உறவுக்காக, சகோதரி ஆண்டிகான் அரசனையே எதிர்ப்பதை காண்கிறோம். தனது சகோதரனுக்கு, தனது குடும்ப உறவுக்கு, ஒரு மரியாதையான நல்லடக்கம் செய்ய தன்னையே தியாகம் செய்ய துணிகிறாள். "அவனை நானே அடக்கம் செய்வேன் அந்த செயலில் நான் இறந்தாலும், அந்த இறப்பு ஒரு மகிமையாக இருக்கும் அவனால் நேசித்த நான், நான் நேசித்த அவனுடன் [மரண படுக்கையில்] ஒன்றாக படுப்பேன்" (ஆண்டிகான் 85- 87) "I will bury him myself. And even if I die in the act, that death will be a glory. I will lie with the one I love and loved by him" (Antigone 85- 87). உறவுகள் மீதான ஒருவரது பாசம், ஈடுபாடு உண்மையில் அன்பல்ல. குறிப்பாக, ஒருவர் தனது குழந்தைகளின் மீது கொள்ளும் பாசம் அன்பல்ல. ஏனெனில் ஒருவரது குழந்தைகள் என்பவை உண்மையிலேயே ஒருவருடையவையே. அதாவது ஒருவரது பகுதியே அல்லது நீட்சியே. குட்டி என்பது தாயின் நீட்சியே. ஆகவே இவ் விடத்தில் தோன்றுவது உடமை பூர்வமான பாசம் தானே தவிர அன்பல்ல என்று எண்ணுகிறேன். ஏனென்றால், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அந்த ஒருவரது உணர்வு தான் தனது அங்கம் அல்லது நீட்சி போன்ற குழந்தை குறித்தும் ஏற்படுகிறது எனலாம். இதே சுய-அன்பானது, தனது குழந்தை கட்கும், பிற நெருங்கிய குடும்ப உறவு கட்கும், சற்று தொலைவான குடும்ப உறவு கட்கும் நீட்டிக்கப் படுகிறது. இதைத் தான் நாம் பண்டைக் கிரேக்க ஆண்டிகான் நாடகத்திலும் பார்த்தோம். இறுதியாக இன்னும் ஒரு பண்டைய இதிகாசமான இராமாயணத்தை பார்ப்போம். இங்கு, கைகேயி பரதன் 14 வருடம் நாடாள வேண்டும் எனவும், அப்பொழுது ராமன் 14 வருடம் காட்டுக்கு போக வேண்டும் எனவும் வரம் கேட்க, தசரதனும் அவ்வாறே வரம் கொடுக்க, தந்தை சொல் மீறாத ராமன் காட்டுக்கு செல்ல, அவனோடு செல்வதே பதிவிரதைக்கான நியதி என்று சீதாதேவி கிளம்ப, அண்ணன் இல்லாத இடத்தில் இருக்க மாட்டேனென லட்சுமணனும் கைகேயிடம் சூளுரைத்து காட்டுக்கு கிளம்புகிறான் என கதை தொடர்கிறது. ஆனால் லட்சுமணின் மனைவி ஊர்மிளாவை அவர்கள் கூட்டிப் போகவில்லை. ஊர்மிளா பதிவிரதை இல்லையா ?, ஏன் ராமன் ஊர்மிளாவையும் கூடிக் கொண்டு வா என்று லட்சுமணை கேட்கவில்லை, எங்கே போயிற்று நியாயம், எங்கே போயிற்று தம்பி என்ற உறவில் அன்பு ? ஊர்மிளா வந்தால், இலட்சுமணன் அவன் கடமையை, அதாவது ராம-சீதாவை சரிவர கவனிக்கும் கடமையை அல்லது தேவையை முழுமையாக செய்ய முடியாது என நம்பியதாலோ ? உண்மையான அன்பு உறவு இருந்தால், தம்பியை தடுத்து இருப்பான், அல்லது தம்பியுடன், சீதை போல் ஊர்மிளாவையும் கூட்டிப் போய் இருக்கவேண்டும், ஆனால் அங்கு ஒரு தேவை தான் முக்கியமாக இருந்து இருக்கிறது, என்றாலும் அதை மறைக்க பல பல காரணங்கள் அங்கு பின்னிப் பிணையப் படுகிறது. நியாயம் எல்லோருக்கும் பொதுவாகவே இருக்க வேண்டும். மற்றது நேர்மையாக சிந்தித்தால், 'உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா' என்பதற்கு உண்மையான நேரான பதிலை இங்கு நீங்கள் காணலாம் ? ஒரு கட்டத்தில், சீதை அக்னி பிரவேசம் செய்ய நேர்ந்ததை தெரிஞ்சு, ஊர்மிளா கொந்தளித்தாள். காட்டில் இத்தனை ஆபத்துகள் இருக்குமென எடுத்துச் சொல்லி ராமன் நீ வரக்கூடாது என சீதைக்கு உத்தரவு போட்டிருந்தால், பதிவிரதையான சீதையால் அதை மீற முடியுமா? பாதுகாப்பிற்கு லட்சுமணன், வேலைகளுக்குச் சீதை எனத் தேவைப் பட்டதால் தானே ராமன் பேசாமல் இருந்து விட்டான். அதனால் தானே சீதைக்கு வனத்தில் இத்தனை ஆபத்துகள் வந்ததென - சீதைக்கு தாயாய் இருந்து குமுறுகிறாள். இது உறவின் உண்மை நிலையை எடுத்து காட்டவில்லையா ? இன்னும் ஒரு கட்டத்தில், மாறுவேடம் கொண்டு நகர்வலம் வரும்போது துணி வெளுப்பவனின் பேச்சை கேட்டு, சீதையின்பால் சந்தேகம் கொண்டு அவளை தீக் குளிக்க சொன்னதை கேட்டு ஊர்மிளா வெகுண் டெழுகிறாள். சீதையின் கற்பு பற்றி ராமனுக்கு ஐயமில்லை. ஆனா, ஊரார் எதுவும் அவளை தவறாய் பேசி விடக் கூடாது என்று தான் அக்கினிப்பிரவேசம் செய்யச் சொன்னான் என்று அவளை சமாதானப் படுத்த பலர் முயற்சிக்கையில், ஊர்மிளா ராமனிடம், இன்று ஊரார் பேச்சுக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்கிறீர்களே! அன்று அயோத்தி மக்கள் எல்லோரும் நீ வனவாசம் போகக் கூடாது என கெஞ்சினார்களே! அப்போது மக்கள் கருத்துக்கு நீ ஏன் செவி மடுக்க வில்லை? அன்று தந்தைக்குக் கொடுத்த வாக்கு தான் முக்கியமென நினைத்த உனக்கு உன் குடும்பம் தானே முன்னுக்கு நின்றது? இப்போது மட்டும் என்ன மக்கள் பற்றிய கவலை? என கேட்கிறாள். பெண்களின் பல கேள்விகளுக்கு ஆண்களிடம் பதில் இல்லாதது போலவே இதற்கும் பதிலில்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. கருணாநிதி திட்டாத திட்டுக்களா..?! ஜெயலிலதா.. வை கோ போன்றவர்களை திடாத திட்டா. ஏதோ கருணாநிதி யோக்கியவான் போலவும்.... அண்மையில் ஸ்ராலின் கூட எரிதடி மாலா.. பா(f)னைப் போடு என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் எள்ளி நகையாடியது கூட கைதுக்குரிய அம்சம் தானே. இது குறித்து தி மு க மகளிர் அணி மூச்சும் விடவில்லை. அண்மைய நாடாளுமன்ற.. மற்றும்.. இடைத்தேர்தல் பணநாயக வெற்றிக்கு பின்.. தி மு க கும்பல் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுது.
  16. முரட்டு ஆண்மையைத்தான் பெண்மை விரும்பும் என்று உடற்கூற்று நிபுனர்கள் வெளியிட்ட செய்தியைப் படித்துள்ளேன். இங்கு ஆண்மை மலராகி பெண்மையை சாய்க்கிறது. டைவேசில்தான் முடியுமோ…..😳😩
  17. கறுப்புப் பட்டியலில் இடுவதால் மட்டும் பிரச்சனை தீராது. ஆபத்தான புகை வெளியிடுவதை குறைக்கக் கூடிய ஊக்கி மாற்றிகள் பொருத்தப்படுவது.. மின்சார வாகனங்களின் பாவனையை அதிகரிப்பது.. மின்சார வாகனக் கொள்வனவுக்கு மானியம்.. என்று பல வகைகளில் இது அமுலாகப்பட வேண்டும்.
  18. வேகக்கட்டுப்பாட்டு விதிகள் மட்டும் போதாது வீதி மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம். இதற்கு சொறீலங்கா பொலிஸ் சரிப்பட்டு வராது. ஏ ஐ உதவியுடன் கூடிய தானியங்கி கமராக்கள் மூலம்.. போக்குவரத்து அமைச்சுக்குள் உட்பட்ட போக்குவரத்து விதி அமுலாக்க துறை சுயாதீனமாக இயங்கும் நிலை அவசியம். சொறீலங்கா பொலிஸ் உதவி தேவை என்றால் மட்டும் பெறப்படலாம்.
  19. நாங்கள் உண்ணும் உணவு வயிற்றுக்குள் சென்று பல இரசாயன மாற்றங்கள் அடைந்து உடலுச் சக்தியைக் கொடுத்து எம்மை வாழவைப்பதையும், சில உணவுகள் நோய்களைக் கொடுத்து எம்மை வருத்துவதையும் அனுபவத்திலும் அறிந்துள்ளோம். பயித்தம் பணியாரம் பயறு வறுத்து உருட்டிச் செய்வது. அந்தப் பயறு வயிற்றுக்குள் சென்று கெட்ட நாற்றமுள்ள காற்றை உற்பத்தி செய்து வெளியேற்றுவதும் நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எங்கள் அன்புக்கும், அபிமானத்திற்கும் உரிய தமிழ் சிறித் தம்பி பயித்தம் பணியாரம் உண்டு கெட்ட காற்றும் உற்பத்தியாகி வெளியேறினால்….. அந்த நாற்றம்…. கட்டையோ, குட்டையோ, நெட்டையோ அழகிகளையும் அவர் அருகேகூட நிற்கவிடாமல் துரத்தியடித்து அவருக்கு மன நோயை ஏற்படுத்திவிடும் என்று எண்ணியதால்…. பயித்தம் பணியாரத்தைப் பார்சலில் இருந்து எடுத்துவிட்டேன். தமிழ் சிறி! தம்பி உங்கள் வருகைக்காக பலகாரப் பார்சல் எங்கள் வீட்டில் காத்துக் கிடக்கிறது.😌😀
  20. என்ன இது கொஞ்சம் செக்ஸியாய் இருக்குது. 😂
  21. The Beautiful Planet · Suivr Lotus des neiges près du Mont Kailash Tibet
  22. மூட்டைக்கடி,நுளம்புக்கடி.பேன்கடி என்று எத்தனையோ கடியைத் தாங்க மாட்டீர்கள். கட்டில்பாய்கதிரை எங்குமே உட்கார முடியாது.
  23. சிவராத்திரிக்கு பல நாட்கள் முன்னரேயே வீச்சு ஊஞ்சல்கள் கட்டி ஆட ஆரம்பித்து விடுவோம். சில ஊஞ்சல்கள் பெரியவை. பல பேர்கள் ஒன்றாக இருந்து ஆடலாம். பாட்டு சுத்தமாக வராதவர்களும் ஒரு கூச்சநாச்சம் இல்லாமல் பாடுவதற்கு இந்த வீச்சு ஊஞ்சல்கள் ஒரு நல்ல இடமும் கூட. ஊஞ்சல் கயிறு அறுந்து, பலகையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்த மனிதர்களும் பறந்து போய் விழுந்த நிகழ்வுகளும் உண்டு. இந்த வீச்சு ஊஞ்சலை நம்ம ஊரில் அன்ன ஊஞ்சல் என்று சொல்லிறவை...இந்த ஊஞ்சலை இரண்டுபக்கமும் கயிற்றைபிடித்தபடி நின்று உதையிறவை தான் கீரோக்கள்.. சறத்தையும் அவிட்டுவிட்டிட்டு .காற்று அதை அமுக்க அமுக்க உதைவினம்..நடுவிலை இருக்கிறவை பயத்திலையே பாட்டுப் பாடத்துவங்கிவிடுவினம்..ஆண் .. பெண் வேறுபாடுகிடையாது..விகல்பமும் கிடையாது...நினைத்தாலே இனிக்கும் ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலை பிள்ளை ஊஞ்சல் என்று அழைப்பினம்...இருப்பவரை இருத்திவிடூ குருவி நுழைஞ்சு ஊஞ்சலை ஆட்டுவதில் அலாதி இன்பம்.. ரசோதரன் உங்கள் குரு ங்கதைகள் மூலம் ஊர்நினைவை கிளறுகின்றீஈறீர்கள்... இதன்மூலம் கிடைக்கும் இன்பத்தின்மூலம் என் ஆசைகளை அசைபோடவேண்டியதுதான்... தொடருங்கள் .. அவாவுடன் உள்ளேன்..
  24. https://www.facebook.com/reel/3286469628325153?fs=e&mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V எழுதிக் கொடுத்தும் படிக்கத் தெரியலை. பாவம் முதல்வர். ஆனாலும் எல்லாவற்றுக்கும் கை தட்டுவோம்.
  25. இல்லை அண்ணா போலிஸ் வேலையை தீ அணைப்பு வீரார் பார்க்கமாட்டினம்தீ அணைக்கும் வேலையை போலிஸ் பார்க்காது இதுதான் ஐரோப்பாவின் விதி . லண்டன் ஈஸ்ட் காமில் மூன்று பெட் ரூம் உள்ள வீட்டில் வடக்கு இந்தியர்கள் 25 பேர் மாணவர் விசாவில் போட்டிக்கு கிழக்கு ஐரோப்பியர்கள் நாலாயிரம் பவுன் வாடகை m25 தாண்டினால் மூன்று பெட் வீடு 8௦௦ பவுன்தான் வாடகை .
  26. தெய்வமே.....! தாம் சொல்லும் சமாச்சாரம் கட்டிலிலா....? பனையோலை... பாயிலா?
  27. "கலப்படம்" "தாய்ப் பால் ஒன்றைத் தவிர தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும் தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும் தாராளமாக இன்று பலபல கலப்படம்" "எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம் எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம் எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்" "பெண் முட்டையுடன் விந்து இணையும் பெரும் கலவையிலும் சிலசில கலப்படம் பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்" "குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம் குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம் குறிஞ்சிநில முருகன் தமிழிலும் கலப்படம் " "ஓதிடும் மந்திரத்திலும் போதகர் போதனையிலும் ஓதுவார் ஓசையிலும் ஒழுகிடும் நெறியிலும் ஓர்மனமாய் நின்று வழிபடும் அடியாரிலும் ஓகை கொண்டு இணைந்துவிட்டது கலப்படம்" "உழைத்து பெற்ற ஊதியத்திலும் கலப்படம் உண்மை தந்த உயர்விலும் கலப்படம் உணர்வுகொள் தாய் மொழியிலும் கலப்படம் உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம்" "கூட்டம் சேர்க்கும் அரசியலில் கலப்படம் கூர்மையான அரச அறிக்கையில் கலப்படம் கூறிடும் ஊடக செய்தியில் கலப்படம் கூசாமல் பேசிடும் வரலாற்றில் கலப்படம்" "தெரிந்து வேண்டும் என்று சேர்ப்பதும் தெரியாமல் தவறி அங்கு சேர்ப்பதும் தெளித்து பட்டும் படாமலும் சேர்ப்பதும் தெளிவாக அவை எல்லாம் கலப்படம்தான்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ஓகை - உவகை, மகிழ்ச்சி
  28. கலியாண வீட்டு கசெட் ப்ரோக்கிறாம் செய்ய எண்டு மாப்பிளையையும் பொம்புளையும் ஜேர்மனியிலையிருந்து மாலைதீவு மொரிசியஸ் எண்டு கூட்டிக்கொண்டு போய் வீடியோ போட்டோ எடுத்து அல்பம் தயாரிக்கின்றார்கள்....இதை அம்பானி கூட செய்தாரோ தெரியாது 😛
  29. அப்பன்! உலக செய்திகளிலை பேசு பொருளாக இருக்கிற அம்பானி வீட்டு கலியாணத்திலை கூட ஆகாயத்திலை இருந்து ரோசாப்பூ கொட்டினாங்களோ தெரியாது. காணி பூமி இல்லாத எங்கடை சனம் ஹெலியிலை இருந்து ரோசாப்பு தூவி சாமத்திய வீடு செய்யுதுகள். கலியாண வீட்டு பொம்புளை ஹெலியில வந்து இறங்குது.... சந்தணம் மிஞ்சினால் தடவடா ------ எண்ட மாதிரி ஈழத்தமிழன் வாழ்க்கை போகின்றது.
  30. எனக்கும் பயிற்றம் பணியாரம் மிகவும் பிடிக்கும். போளி ரொம்ப பிடிக்கும். கனடாவில் சாப்பிட்டேன்.ஊரில் சாப்பிட்டது போல இல்லை. ஆக்களைத் தெரியாவிட்டால் பரவாயில்லை. அட்ரஸ் தெரிந்தா காணும்.
  31. நசுக்கினா ரத்தமும் வரும் தாங்கேலாத மணமும் வரும்.
  32. இங்கேயும் ஊருக்கு போய் வந்தவர்கள் வீட்டில் கட்டாயம் அன்பளிப்பு கிடைக்கும் ஒரு மூட்டைப்பூச்சி எடுத்தால்😂 இரண்டு பேன்கள் இலவசம் ...
  33. உலகம் போற போக்கை பாத்தால் இப்பிடி தலைகீழாய்த்தான் எல்லாம் வரும் போல கிடக்கு.😂
  34. 🛑1.சாவகச்சேரி ஆசுப்பத்திரியில் 400 மில்லியன் ரூபாவில் கட்டின building project இல் ஊழல் நடந்திருக்குமா? இல்லையா? நடந்திருக்கும்! நடந்திருக்கு எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑2.சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பிணத்தை வைச்சு JMOs காசு கறந்திருக்கிறாங்களா? இல்லையா? கறந்திருப்பாங்கள்! காசு கறந்தவங்கள் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑3.பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதா? இல்லையா? செய்யப்பட்டது! விற்கப்பட்டது , அதுக்கும் கேதீஸ்வரனுக்கும் சம்பந்தம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑4.அரச வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒரு சில வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருந்துகொண்டு, வராத நாளுக்கும் சம்பளம் எடுத்துக்கொண்டு அதே நாளில் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினமா? இல்லையா? செய்யினம்! 8மணித்தியாலம் ஒரு சில வைத்தியர்கள் வேலை செய்வதில்லை. களவா போய் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑5.ஒரு சில வைத்தியர்களுக்கும் pharmacy கடைகளுக்கும் தொடர்பு இருக்கு.சட்டவிரோதமாக Commission வாங்குகினமா? இல்லையா? வாங்குகினம்! வாங்குகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑6.ஒரு சில அரசியல்வாதிகள் பிழையாக நடக்கும் அரச வைத்தியர்களை தங்கள் அரசியல் செல்வாக்கால் காப்பாத்துகிறார்களா? இல்லையா? காப்பாத்துகினம்! ஒரு சில அரசியல்வாதிகள் தவறுசெய்த டாகுத்தர்மாரிடம் லஞ்சம் பெறுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑7.அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அபிவிருத்தி நிதியை ஒழுங்கா கையாளத்தெரியாமல் பல மில்லியன் ரூபா திருப்பி அனுப்பப்படுகிறதா? இல்லையா? அனுப்பப்படுகிறது! ஒழுங்கான திட்டமிடலும் project management உம் இல்லை எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑8.medical marfia வடக்கில் தலைவிரித்தாடுகிறதா? இல்லையா? ஆடுது! Medical Marfia வை ஒழிக்கவேணும் எண்டால் முதல்ல அடிப்படையில் ஆசுப்பத்திரியில் இருந்து ஆரம்பிப்பம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑9.நோயாளர்களை தகாத வார்த்தைகளால் சில வைத்தியர்கள் ஏசுகிறார்களா? இல்லையா? ஏசுகினம்! முறைப்பாடு செய்தால் courts case எண்டு அலையவேண்டி வரும் என சனத்தை ஒரு சில வைத்தியர்கள் வெருட்டுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா? 🛑10. கடைசியா ஒரு கேள்வி... டாக்குத்தர் சத்தியமூர்த்தி, டாக்குத்தர் கேதீஸ்வரன், சாவகச்சேரி மரண விசாரணை வைத்திய அதிகாரி,Jaffna JMO சேர் பிரணவன் உட்பட இன்னும் சில ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிப்பாட்டி நீதியான விசாரணை செய்யோணுமா? இல்லையா? செய்யோணும்! நீதியான விசாரணைக்குழு ஒண்டு அமைச்சு எல்லா ஊழல்களும் விசாரணை செய்யவேணும் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை ஊழல்களை பாத்துக்கொண்டிருக்கிற நாங்கள் லூசா? #தமிழ்ப்பொடியன்#
  35. நோர்வே வெள்ளைப்புலி... எரிக் சோல்கைமே போர் முடிந்து 15 வருசமாகியும் இங்கு நிற்கும் போது... இந்த மனிசியும் நிற்கத்தான் பார்க்கும். 😂 சிங்களவன் அந்தளவுக்கு.. குழையடிச்சு வைத்திருக்கின்றான். எங்களுக்கு ரெக்னிக் சுட்டுப் போட்டாலும் வராது.
  36. யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய மருத்துவர் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி! வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலை
  37. உங்களுக்கு பரவாயில்லை. போட்ட முதலுக்கு மேலால எடுத்தாச்சு.
  38. நல்ல சந்திப்பும், அருமையான வர்ணிப்பும். @குமாரசாமி அண்ணை எம் ஜி ஆர் கலரில் தக தக என பட்டு வேட்டி சால்வையில் மின்னி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது😎. @Kavi arunasalam போய் இருந்தால் உங்கள் அனைவரையும் ஒரு கருத்தோவியமாக்கி இருப்பார். படம் இல்லாவிடிலும் கருத்துபடமாவது பாத்திருக்கலாம். நேரம் வாய்கவில்லை.
  39. ஆழ்ந்த இரங்கல்கள். சேவை மனப்பான்மை உடைய நல்ல மனிதர். ஆத்மா சாந்தியடையட்டும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.