Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    88806
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46969
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33807
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3118
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/16/24 in all areas

  1. எல்லா தலைவர்களுக்கும் அவர்களைப்பறிய எதிர்மறை விடயங்களும் உண்டு. அந்த வகையில், இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர். தனவு வாழ் நாள் முழுவதும் தமிழ் தேசியத்தை எதிர்தத காமராஜரை பெருந் தலைவர் என சீமான் கூறுவது தனது சுயநல அரசியலுக்காகவே. தமிழ் நாட்டின் வரலாற்றை சரியாக படித்தால் காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே தமிழ் நாட்டுக்கு பல சிறந்த திட்டங்களையும் பல நன்மைகளையும் செய்தே உள்ளனர்.
  2. அதிகப்பிரசங்கி ------------------------ இன்றைய நிலையில் இப்படி ஒரு தலைப்பில் எவ்வளவு தான் மூடி மூடி எழுதினாலும் பூசணிக்காய் வெளியே தெரிவதை என்னால் தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இங்கு, இந்தப் பூமியில், எதுவுமே புதிது இல்லை என்று சொல்வார்கள். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எல்லாமே முன்னரும் பல தடவைகள் நடந்தவையே என்பார்கள். வரலாறு அடிக்கடி திரும்பி வரும் என்பது மிகப் பிரபலமான ஒரு கூற்று. ஒரே மாதிரியான மனிதர்களும், வாழ்க்கைகளும், சம்பவங்களும் கூட திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன. கணினி மென்பொருட்கள் செய்யும் துறை மற்றைய பல துறைகளுடன் ஒப்பிடும் போது புதியது. அதனால் கொஞ்சம் நெகிழ்வான கட்டமைப்பும், தளம்பலான திட்டமிடலும் கொண்டது. ஒரு புதிய மென்பொருளை செய்வதற்கு எவ்வளவு செலவு எடுக்கும் என்ற கேள்விக்கு மிகத் தோராயமான ஒரு பதிலே கிடைக்கும், அது எப்படியான, எவ்வளவு சிக்கலான அல்லது சிக்கல் இல்லாத மென்பொருளாக இருந்தாலும். மொத்த செலவையும் சரியாக பிரித்து பிரித்து கூறுவதும் கடினம். மற்ற துறைகளில் இவை எல்லாம் ஏற்கனவே மிகக் கறாராக நடைமுறையிலிருக்கும். அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் புதிய ஒரு மென்பொருளை செய்வதற்கு பலரை இந்தியாவில் பணிக்கு அமர்த்தினார்கள். ஒரு இந்திய நிறுவனத்தில் இருந்து தற்காலிகமாக அவர்களை வேலைக்கு எடுத்திருந்தனர். அவர்களில் சிலர், ஒரு நாற்பது பேர்கள் வரையில், எங்கள் நிறுவனத்தின் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய வந்திருந்தனர். பொதுவாக ஆறு மாதங்கள் என்றே வருவார்கள். பின்னர் இவர்கள் திரும்பிப் போக, வேறு சிலர் வருவார்கள். ஆறு மாதங்கள் அமெரிக்கா வந்து போனாலே அவர்கள் கைகளில் நிறையவே மிஞ்சும். அதனால் இங்கே வருவதற்கும், வந்த பின் இங்கேயே தங்குவதற்கும் அவர்களிடையே ஒரு போட்டி இருக்கும். அது பல வேளைகளில் ஆரோக்கியமற்ற ஒன்றாகவே இருக்கும். புதிய மென்பொருள் மிக மெதுவாகவே முன்னேறிக் கொண்டிருந்தது. அங்கேயும், இங்கேயும் என்று ஏராளமானவர்களை வேலை செய்வதற்கு எடுத்துப் போட்டிருந்தனர். ஆனால் எல்லோருக்கும் கொடுப்பதற்கும் வேலையும் இல்லை, திட்டமிடலும் சரியாக இல்லை. வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் திறமையானவர்கள் என்றும் இல்லை. சிலர் மிகவும் ஆரம்பகட்ட நிலையில் கூட இருந்தனர். பணம் செலவாகுது, ஆனால் பொருள் வருகுதில்லையே என்று எங்களின் நிர்வாகம் பொறுமை இழந்து கொண்டிருந்தது. பத்து புதிய மென்பொருட்களை திட்டமிட்டால் அதில் இரண்டு சரியான நேரத்திற்கு, சரியான தரத்துடன் செய்ய முடிந்தால் அதுவே ஒரு வெற்றி. பத்தில் ஐந்து சுத்தமான தோல்வியாக முடியும். மிகுதி மூன்றும் இழுபட்டு இழுபட்டு, பல மாற்றங்களுடன் முடிக்கப்படக்கூடும். இதனால் வேலை போனால், போனால் என்ன போகும் தான், இன்னுமொரு நிறுவனத்தில் வேலைக்கு போய்ச் சேர வேண்டியது தான். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போல, இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழக்கமே. மூன்று வருடங்கள் ஓடின ஒரு முடிவும் இல்லாமல். இங்கிருந்து அவர்களில் சிலர் இந்தியா போக, அங்கிருந்து சிலர் இங்கு புதிதாக வந்தனர். சிலர் இந்தியா போகாமல் ஏதேதோ செய்து இங்கேயே மூன்று வருடங்களாக இருந்து கொண்டும் இருந்தனர். புதிதாக வந்தவர்களில் ஒருவர் மெதுமெதுவாக இங்கிருக்கும் அவர்களின் ஆட்களை ஒருவர் ஒருவராக குற்றம் சொல்ல ஆரம்பித்தார். எந்த வேலையும் செய்வதில்லை, எந்த வேலையும் தெரியாது, பொறுப்பு இல்லை, நேரத்திற்கு வருவதில்லை, இப்படி ஒன்று மாறி இன்னொன்று என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புதிதாக வந்த அந்த மனிதர் திறமையானவர் தான், ஆனால் அவர்களின் ஆட்களை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பக்கத்தில் ஒரு நிர்வாக வரிசையும் இருந்தது. இறுதியில் அவர்களின் நிர்வாகத்தையும் இவர் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இவர்கள் எல்லோரும் எங்கள் நிறுவன ஆட்களுடன் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு 'முதலாளிகள்' போல. எங்களின் நிறுவனத்தில் இவர்கள் எல்லோரும் தற்காலிக வேலைக்கு வந்திருப்பதால் அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். பலருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இவரும் ஒரு தமிழர் தான். என்னிடம் வந்தார். அவர்களின் ஆட்கள் மேல் உள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் எனக்கும் சொன்னார். இவர் ஏன் இப்படி அவசரப்படுகின்றார் என்று யோசனையாக இருந்தது. ஒருவேளை சில வருடங்களாக இவரின் நிறுவனம் இவரை அமெரிக்கா அனுப்பாதது கூட காரணமாக இருக்கலாமோ என்று தோன்றியது. அதை விட செத்தாலும் இவர்களை விட்டுப் போகாத பிறப்பால் வரும் சில அடையாளங்களையும், பிரிவுகளையும் இவர்கள் காவிக் கொண்டு திரிவதும் இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கும். அந்த வருடம் கிறிஸ்மஸ் வாரத்திற்கு முன் வாரம். அவர்களின் நிர்வாகத்தினருடன் எங்கள் நிர்வாகம் கதைத்தது. எங்களின் நிறுவனம் இரண்டே இரண்டு வாரக் கெடு கொடுத்தது. முடிந்தது, கிளம்புங்கள் என்று சொன்னது. புதுவருடம் பிறந்த பொழுது இவர்களில் எவரும் எங்கள் நிறுவனத்தில் வேலையில் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் அந்த வருடம் கைச்சாத்திட்டனர்.
  3. சரி காவல்நிலையத்தில் காந்தி படமும் கள்ளர் படமும் இருப்பது போல் இதுவும் இருப்பது நல்லது தான்.
  4. நிலம்... இன்னும் கொஞ்சம் கூட நடுங்கி, நாலு கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால், உலக நாடுகளிடம் பல மில்லியன் டொலர்களை கறந்து... ஆயிரம் விகாரைகளை கட்டி இருக்கலாம். 😂 -ஸ்ரீலங்கா மைண்ட் வாய்ஸ்.- 🤣
  5. தமிழ்நாட்டு, அமெரிக்க அரசியல்கள் பற்றி கதைப்பது இலகுவானது, அண்ணை. நேரமும் நல்லாவே போகும். இலங்கைத் தமிழ், ஈழ அரசியல் பற்றிக் கதைப்பது நமக்கு நாமே வைக்கும் சூனியம் ஆகவும் முடியலாம். சில வேளைகளில் இங்கு போட்டுத் தாக்குதாக்கென்று தாக்கிவிடுவார்கள். 'இது உனக்குத் தேவையா.....' என்று எங்களை நாங்களே பின்னர் நொந்து கேட்பதை விட, பல இடங்களில் முன்னரே உசாராக இருப்பதும் தேவையாக இருக்கின்றது............🤣.
  6. வேறு ஒரு திரியில்… @ரசோதரன் குறிப்பிட்ட மாதிரி, “ஶ்ரீலங்கா அமைச்சர்கள், காலையில் எழுந்து Good Morning சொல்வது போல்….. ஆளுக்கு ஒரு திட்டமும், அறிக்கையும் விட்டு விட்டு அதை அவர்களே மறந்து விடுவார்களாம்.” ஜனாதிபதி கூட விதிவிலக்கல்ல. 😂 நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரி மருத்துவமனை பிரச்சினையிலும்… மீன்பிடித்துறை அமைச்சர், சுகாதாரத்துறையான மருத்துவமனை விடயத்தில் “கட்டைப் பஞ்சாயத்து” செய்து கொண்டிருப்பதும் இந்த வகையானதுதான். 🤣
  7. தமிழ்நாட்டு அரசியலைக் கதைப்பதும் வாளிக் கக்கூஸ் வண்டிலை தள்ளுவதும் ஒரே செயல். இருந்தும் நம்மையும் மீறி இடையிடை தள்ளுகிறோம்.
  8. போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........! 😁
  9. எந்த நாட்டு மசாஜ் எண்டாலும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எண்டால் சரிதான்.........உதுக்காகத்தான் நான் அப்பவே தாய்லாந்து மசாஜ் செண்டர் போட்டிருக்கிறேன்.......! 😂
  10. ஜேர்மனியில் தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் வாழ்கின்றார்கள். அதில் தமிழ்நாட்டு தமிழர்களும் அடங்கும். இப்போது ஜேர்மனியில் உள்ள இந்து கோவில்களிலும் சரி,தமிழ் பாடசாலைகளிலும் சரி இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.. இவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பண்பாடு பிடித்திருக்கின்றது. அதிலும் ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேச்சு வழக்குகளை மெச்சுகின்றனர். சுத்த தமிழுக்காகவே தமிழ்பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர். புலம்பெயர்ந்து வந்தும் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபிக்கின்றனர்.
  11. தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்று பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிக்கட்சி தலைவராக அமர்ந்த பெருமை அன்பு அமிர் அவர்களையே சாரும். அந்த அரசியல் பலத்தை வைத்து எதுவுமே செய்யாத மனிதர். அது மட்டுமல்லாமல் சிங்கள தலைவர்களை சந்திக்க பின் கதவால் செல்லும் நற்பழக்கைத்தை ஈழமண்ணில் அறிமுகப்படுத்தியவரும் சாட்சாத் அன்பு அமிர் அவர்கள் தான் என்பதை நினைவு கூர்கின்றேன்.🤪
  12. ஆனைக்கோட்டையின் பூர்வீக - தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது - ஆனைக்கோட்டையில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகுறித்து - வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் 16 JUL, 2024 | 11:55 AM ஆனைக்கோட்டையின் பூர்வீகதொன்மையான நாகரீகம் எப்போதிலிருந்து வளர்ந்து வருகின்றது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளதாக வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் பூர்வீகக் குடியிருப்பு மையங்கள் பற்றி தென்னாசிய தொல்லியலாளர்களால் அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 1980 ஆம் ஆண்டு பேராசிரியர் ரகுபதி அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் பேராசிரியர் இந்திரபாலா பேராசிரியர் சிற்றம்பலம் பேராசிரியர் கிருஷ்ணராஜா பல்கலைக்கழக நூலகராக இருந்த ஆ.சிவனேசசெல்வன் ஆகியோரும் மற்றும் பொருளியல் புவியியல் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தும் மாணவர்களதும் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரண்டு மனித எலும்பு கூடுகளும் அதன் ஒரு எலும்புக்கூட்டின் தலை மாட்டுப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முத்திரை மோதிரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தொல் பொருட்களையும் 1988 ஆம் ஆண்டு நாம் முழுமையாக இழந்துவிட்டோம். கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்கு பிறர் வருகின்ற போது பெருமையோடு காட்டக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஆனைக்கோட்டையின் அகழ்வு இடம் கருத்தில் கொள்ளக்கூடியதாக இன்று வரை இருக்கவில்லை. இந்த நிலையில் தான் 1980 களின் பின்னர் பலரால் ஆனைக்கோட்டையில் அகழ்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்பி இருந்தாலும் அந்த விருப்பம் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது. 1980 களில் இலங்கையில் மட்டுமின்றி தென்னாசியாவிலும் அகழ்வாய்வுக்குரிய நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கவில்லை. இப்பொழுது நவீன தொழில் நுட்பவசதிகள் பல மாற்றங்களோடு வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த வசதிகள் அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம் என்று பெருமை கொள்ளாவிட்டாலும் முடிந்த அளவு நவீன வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் ஒரு விஞ்ஞான பூர்வமான மிகப்பெரிய ஒரு அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதில் நாம் திருப்தி அடைய இடம் உண்டு. ஆனைக்கோட்டையில் இந்த அகழ்வாராய்ச்சியானது 20.06.2024 இல் சம்பிரதாய பூர்வமாகத் தொடங்கிய பொழுது அதனை முக்கியப்படுத்தி ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தும் அங்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி பலருக்கு எழுகின்ற அதே நேரத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தான் ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை என்ற விமர்சனங்களும் வருகின்றன. இந்த நிலையில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பிருந்து பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் எனப்பலரும் அங்கு வருகைதந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கு வந்து சில புகைப்படங்களை எடுத்து தமது முக நூல்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் எனினும் நாங்கள் எங்களுடைய செய்திகளை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் இலங்கைத் தொல்லியல் சட்டத்தில் ஓர் அகழ்வாய்வுக்கு அனுமதி வழங்குகின்ற பொழுது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் பொதுவானவை. அதில் ஒரு நிபந்தனை அகழ்வாய்வு முடிந்து அதன் பெறுபேறுகள் சரியாக ஆவணப்படுத்துவதற்கு முன்னர் அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்பதாகும். நாங்கள் ஒரு தொல்லியல் ஆய்வாளர் என்ற வகையில் தொல்லியல் கட்டுப்பாடுகளுக்கு கட்டுண்டு நடக்கும் பொருட்டு, நாங்கள் இதுவரை செய்திகளை வெளியிடவில்லை. எனினும் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதும் அதை இட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேள்வி எழுப்புவதும் விசாரணை செய்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவற்றை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் சில விடயங்களை இங்கே நாங்கள் குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது. இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. நாலாவது கலாச்சார மண்ணடுக்கில் பெறுமதியான பல தொல்பொருள் சான்றுகள் வருகின்றன. அந்தத் தொல்பொருள் சான்றுகளை தொடர்ந்து அகழ்வு செய்யப்படுகின்ற போது ஆனைக்கோட்டையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆதி இரும்புக்கால அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் முன்னைய ஆய்வுகளில் கிடைக்காத அரியவகையான பல சான்றாதாரங்களும் கிடைக்கின்றன. இதில் அயல் நாடுகளுக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடையிலான தொடர்புகளையும் உறவுகளை அறியக் கூடிய சான்றுகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆனைக்கோட்டையில் கிடைக்கின்ற சான்றுகளை வைத்து பார்க்கும் போதுஇ 1970களில் விமலா பேக்லி என்ற பெஞ்சில்வேனிய பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் கந்தரோடையில் அகழ்வு செய்த போது அவற்றின் கண்டுபிடிப்புகளை வைத்து கந்தரோடையில் வாழ்ந்த பூர்வீக மக்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கலாம் அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் தமிழகத்து மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம். இந்த பண்பாட்டுக்குரிய மக்கள், கந்தரோடையிலிருந்து புத்தளம் வரை பரவி வாழ்ந்திருக்கலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தார். அந்தக் கருத்தை எமது அகழ்வுகள் மேலும் உறுதி செய்கின்ற அதே நேரத்தில் இந்த பண்பாட்டுக்கு முன்னரும் மக்கள் வாழ்ந்து இருக்கலாம் என்ற ஒரு சமிக்ஞை அல்லது சில ஆதாரங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு உண்டு. தொடர்ந்தும் நாங்கள் அகழ்வு செய்யும் பொழுது தான் அவற்றை உறுதிப்படுத்தலாம். இந்த அகழ்வின் போது கண்டறியப்பட்ட சில மாதிரிகளை நாங்கள் நவீன காலக்கணிப்புக்கு உட்படுத்த இருக்கின்றோம். அந்தக் காலக் கணிப்புகள் மூலம் ஆனைக்கோட்டையின் பூர்வீக-தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அகழ்வாய்வு முடிந்து ஓரிரு வாரங்களுக்குள் நாங்கள் அறிக்கையாக நூலாக தொல்லியல் திணைக்களத்துக்கு சமர்ப்பிப்போம். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களுக்குமான உண்மைகளை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம். அதுவரை இந்த அகழ்வு பற்றி அங்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றி நாங்கள் வெளியிடுவது தொல்லியல் சட்ட விதிகளுக்கு முரணானது என்பதனால் அதை நாங்கள் மதித்து இந்த அகழ்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். புலம்பெயர் நிதிப்பங்களிப்புடனும் யாழ்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் இவ் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த 1980 ஆய்வுகளின் பங்கெடுத்தவரான வரலாற்றுத்துறையின் விரிவுரையாளராக அப்போதிருந்த சுப்பிரமணியம் விசாகன் தற்போது இலண்டனில் வசிப்பவர், இவ்விடத்தில் மீண்டும் ஓர் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தார் தற்போது இவ் எண்ணம் நிறைவேறி வருவதைக் காணலாம். இவ்வாய்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறையின் நான்காம் மூன்றாம் இரண்டாம் வருட மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாண தென்னிலங்கை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் பங்கு பற்றி வருகின்றனமை மகிழ்ச்சி அளிக்கின்றது. பட உதவி - ஈழத்துவரலாறும் தொல்லியலும் முகநூல் https://www.virakesari.lk/article/188585
  13. "உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... " எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில், பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும் உள்ளன. பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப் பட்ட காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மாத விடாய் வரும் காலம் என்றும், அதனால் அவர்கள் ஐயப்பனை நேரில் வந்து வழிபடுவதை விரும்பவில்லையாம் ? ஏனென்றால் அப்படி வழிபட வரும் பொழுது ஒருவேளை அவர்களுக்கு மாதவிடாய் வந்து விடுமோ என்ற பயமாம் ? யாருக்கு இந்த தீட்டும் அருவருப்பும் ? - ஐயப்பனுக்கா, நிர்வாகத்திற்க்கா அல்லது ஆண் பக்தர்களுக்கா ?? முதலில் ஐயப்பனை பார்ப்போம், அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அவரின் தங்கை மகிசீ என்பவர் அதற்கு காரணமான தேவர்களை பழிக்கு பழி வாங்க முடிவு செய்தாள். எனவே பிரம்மாவை நோக்கி கடுந் தவமியற்றி, அதனால் பிரம்மா மகிழந்து, சிவனுக்கும் திருமா லிற்கும் பிறக்கும் குழந்தையால் மட் டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு வரம் கொடுத்தாராம். அப்படி ஆண் ஓரினச் சேர்க்கை மூலம், அதாவது ஹோமோ செக்சில் பிறந்தவரே ஐயப்பன் ஆவார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழி பாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்கு மிடை யில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, அதற்கு வழமை போல் பிராமணர்களின் ஒரு புராணக் கதையே உண்டு. ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ அல்லது ஒரு சிறு காவல் தெய்வ வழிபாடு ஆகும். ஆகவே இரண்டும் ஒன்றல்ல. மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை / தமிழர்களை வென்ற பின்பு, பண் டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது. பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங் கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] . அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவு ளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவ ரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனு டன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்!சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண் யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதி யின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது.. அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்ற வர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கி னார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வ தில்லை. எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவி க்கு கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக கூறப்பட்டதோ, அதே சிவன் தான் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படி என்றால் பெண் பங்கு தேவையில்லை என்று ஒரு நாடகம் ஆடி மறுத்தளிப்பு செய்வாரா ? கொஞ்சம் யோசியுங்கள் சபரிமலை பக்தர்களே ? மற்றது படைத்தல் தொழில் செய்யும் பிரமனுக்கு ஒரு உயிர் உற்பத்திக்கு ஆணும் பெண்ணும் அவ சியம் என்பது தெரியாமல் போய்விட்டதா ? அல்லது தன் தொழிலையே மறந்து போய் அல்லது சிவனையோ அல்லது திருமாலையோ பெண் என்று நினைத்தாரா ? எப்படி 'சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தை' என்று சொன்னார் ? யாராவது ஒரு பக்தராவது சிந்தித்தீர்களா ? இல்லை உங்களுக்காவது அறிவு, அனுபவம் இல்லையா ? ஆனால் பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக அன்றே கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சபரிமலை பக்தர் களுக்கு தெரியும்? தாம் மலையாளி, தமிழ் தெரியாது என்று சொல்ல முடியாது? ஏனென்றால், திருமூலர் காலத்தில் , சங்க காலத்தில் ,ஏன் இந்த புராண ஐயப்பன் காலத்தில், நீங்கள் தமிழ் சேர நாட்டு மக்கள் என் பதும் தெரியாதா ? அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என் பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர் அன்றைய சேர நாட்டு ,ஆனால் இன்றைய ஐயப்பன் பக்தர்களை நோக்கி ? "ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே." இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உண ர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என் னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார். "ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே." அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திரு மூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாத விடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில், “வீங்கு புண் முலையாள் மாதவிடாயினள் ஒருத்தி வேட்கை தாங்குறாது இரங்கி அன்னோன் சரண் பணிந்து அதனைச் சொன்னாள் ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு ஈரம் இன்றே என்றானே!” அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார். அப்படி என்றால் எப்படி ஐயப்பனுக்கு தீட்டு வரும் ?, கொஞ்சம் யோசியுங்கள் தாம் ஐயப்பன் பக்தர் என்று கூறுபவர்கள் ?? மற்றது ஐயப்பனை 'மாளிகை புரத்தம்மா' என்ற அழகி மணம் செய்ய விரும்பிய பொழுதும் அதை உதறி தள்ளி, ஒரு பிரம்மச்சரியத்தை தொடர்ந்து கடைபிடித்தவராம். என்றாலும் எப்பொழுது முதல் தரம், வரும் பக்தர்கள் இல்லாது ஒழியுதோ (devotee visiting Sabarimala for first time) அன்று உன்னை மணப் பேன் என்று, அவளுக்கு உறுதி கொடுத்தார், அந்த காதல் தேவி அதை ஏற்று இன்னும் அந்த சபரிமலையிலேயே காத்திருக்கிறாளாம் என்று நம்புவதுடன், அவரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவளும் ஒரு மணப்பெண் என்பது குறிப் பிடத் தக்கது, இது இன்னும் இந்த பக்தர் களுக்கு தெரியாதா ? அவளை ஏன் இன்னும் சபரிமலையில் இருந்து துறத்தவில்லை ? அவளை எப்படி சபரி மலையில் வைத்து வழிபடமுடியும் ?, சிலர் பெண் கள் சபரிமலைக்கு போவது பிரம்மச்சரியத்தில் இருக்கும் ஐயப்பனுக்கு இடைஞ்சல் என்கிறார்கள் , அப்படி என்றால் அவர் அவ்வளவு மனக் கட்டுப்பாடு இல்லாதவரா ? அனுமானும் பிரம்மச்சரி தான், ஆனால் எந்த பெண்களும் போகலாம் வழிபடலாம் , அது எவ்வாறு அல்லது அனுமான் ஐயப்பனை மாதிரி இல்லாமல், உறுதியான மனக் கட்டுப்பாடு உள்ளவர் என்று ஐயப்பனை குறைத்து கூறுகிறீர்களா?? சிலர் பெண்களின் சுகாதார மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு மலை ஏறி வழிபடுவதை தடுத்து கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள், இது இந்த நவீன வசதிகள் படைத்த இன்றைய உலகில் ஒரு முற்றிலும் பொருந்தா வாதமாகும்? ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படை யாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிட மும் ஒரே தன்மை, நிலைபாட்டை உடையதாக இரு க்க வேண்டும் என்பதை தயவு செய்து உணருங்கள் . "எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. மதங்கள் வழமையாக சொல்லும் இந்த மிகப்பெரிய பொய் பலதடவை அப்பலபட்டு அவைகளின் சுயரூபம் வெளிவந்துள்ளது.
  15. காமராஜரின் ஆட்சிக்காலம் - தமிழகத்தின் பொற்காலம் தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள். இந்திய தேசத்தின் ஈடுஇணையற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள். விருதுபட்டியிலே பிறந்து, தன் இல்வாழ்வைத் துறந்து, பதினாறு வயதிலேயே பாரதத்தின் விடுதலைக்காகப் பாடுபடத் துவங்கி, அண்ணல் காந்தியின் அகிம்சை வழி நின்று, பலமுறை சிறைசென்று, தீரர் சத்தியமூர்த்தியின் பாசத்திற்குரிய சீடராகத் திகழ்ந்து, தமிழக காங்கிரஸின் தலைவராக உயர்ந்து, தன்னிகரற்ற தலைவராகத் திகழ்ந்த கர்மவீரர் காமராஜர், 13 ஏப்ரல் 1954-ம் ஆண்டு சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1954-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை, 9 ஆண்டுகள், காமராஜரின் ஆட்சிக்காலம். அது தமிழகத்தின் பொற்காலம். தமிழ்ப் புத்தாண்டு தினமான 13 ஏப்ரல் 1954 அன்று காமராஜர் தனது அமைச்சரவை சகாக்களுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். எவருடைய தலையீடுமின்றி தனது அமைச்சரவையைத் தேர்வு செய்தார். காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சட்டமன்ற உறுப்பினராக இல்லை, மாறாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மிக எளிதாக சட்டமேலவை உறுப்பினராவதற்கு அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆயினும், தேர்தலில் போட்டியிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையே அவர் விரும்பினார். எளிதில் வெற்றி பெறக்கூடிய சாதகமான பல சட்டப்பேரவைத் தொகுதிகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பலர் அவருக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தனர். ஆனால் காமராஜர் அதை விரும்பவில்லை. மாநிலம் முழுவதற்குமான பிரதிநிதியாக, முதலமைச்சராக, இருக்கும் தான், மாநிலத்தின் எத்தொகுதியில் இருந்தும் போட்டியிட தயங்கக் கூடாது எனக் கருதினார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தார். அத்தொகுதியில் காமராஜருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கே. கோதண்டராமன் என்ற வேட்பாளரை நிறுத்தியது. பெரியார் ‘பச்சைத் தமிழனுக்கு’ தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். அண்ணாதுரை தனது கட்சியின் திராவிட நாடு இதழில் காமராஜருக்கு ஆதரவாகக் கட்டுரைகள் பல எழுதினார். ஏகோபித்த ஆதரவு பெற்ற காமராஜர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட குடியாத்தம் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார். படிப்பறிவில்லாத காமராஜர் எப்படிப் பாராள முடியும் எனப் பலரும் பரிகாசம் செய்த நிலையில் பதவி ஏற்ற அவர் தனது அனுபவம் மிக்க திறமையான நடவடிக்கைகளால் தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதை நிரூபித்தார். அவருடைய நியாயமான, எளிமையான அணுகுமுறை கட்சியில் மட்டுமின்றி, ஆட்சியிலும் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தது. சரியான முடிவுகளை விரைந்து எடுப்பதில் அவர் வல்லவராகத் திகழ்ந்தார். தன் தலைமையை விரும்பாதவர்களாயினும் கூட அவர்களது திறமை இந்த தேசத்திற்குப் பயன்படுமானால், அவர்களையும் அரவணைத்துச் செல்ல காமராஜர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவ்வகையில், முதலமைச்சர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியத்தை மட்டுமின்றி, இராஜாஜியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த எம். பக்தவச்சலம், ஏ.பி. ஷெட்டி ஆகியோரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பி. பரமேஸ்வரன் அவர்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக்கினார். அது தீண்டாமையை ஒழிப்பதற்கான காமராஜரின் ஒரு சிறந்த இராஜதந்திர நடவடிக்கையாக அமைந்ததோடு, தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த அக்கறையையும் வெளிப்படுத்தியது. அது தமிழகம் முழுவதும் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, தமிழகத்தில் 1957-ம் ஆண்டு 205 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது சட்டமன்றப் பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று காமராஜர் மீண்டும் முதல்வரானார். காங்கிரஸ் கட்சி 204 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களைக் கைப்பற்றியது. இம்முறை அவருடைய அமைச்சரவையில் நான்கு புதியவர்கள் பொறுப்பேற்றனர். தமிழகத்தின் தொழில்துறையை முன்னேற்றம் காணச்செய்வதற்கு ஆர். வெங்கட்ராமன் அவர்களை தொழில்துறை அமைச்சராகவும், பெண்ணினத்திற்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக மீனவ சமூகத்தைச் சார்ந்த கிருஸ்தவப் பெண் லூர்தம்மாள் சைமன் அவர்களை உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், தியாக மனமும், திறமையும் ஒருங்கே பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தலைவர் பி. கக்கன் அவர்களை பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மின்சாரத்துறை அமைச்சராக வி. இராமையா அவர்களையும் தனது அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக்கினார். உள்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக சி. சுப்பிரமணியமும், வருவாய்த்துறை அமைச்சராக எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கரும் பொறுப்பேற்றனர். 1962-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காமராஜர் மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வரானார். மொத்தமிருந்த 206 தொகுதிகளில் காங்கிரஸ் 130 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகச் ஜோதி வெங்கடாசலம், கூட்டுறவு மற்றும் வனத்துறை அமைச்சராக என்.எஸ்.எஸ். மன்றாடியார், விளம்பரம் மற்றும் தகவல் துறை அமைச்சராக ஜி. பூவராகவன் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.எம். அப்துல் மஜீத் ஆகிய நான்கு புதியவர்கள் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றனர். கல்வித்துறை அமைச்சராக எம். பக்தவச்சலமும், நிதித்துறை அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும், விவசாயத்துறை அமைச்சராகப் பி. கக்கனும், பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக வி. இராமையாவும் பொறுப்பேற்றனர். அஷ்டதிக்கஜங்களைப் போல் எட்டு அமைச்சர்களை மட்டுமே கொண்ட அவருடைய சிறிய அமைச்சரவை மிகத் திறமையாகச் செயல்பட்டது. “எந்தப் பிரச்சனையாயினும் அதனை எதிர்கொள்ளுங்கள், பிரச்சனைகளைத் தவிர்க்காதீர்கள், அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் காணுங்கள், நீங்கள் செய்யும் காரியம் சிறிதாயினும் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்” என்பதே காமராஜர் தன் அமைச்சர்களுக்குச் சொன்ன அறிவுரையாகும். காமராஜர் ஒரு மக்கள் தலைவராவார். அவர் பாமர மக்களில் ஒருவராக இருந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காகவும், வாழ்விற்காகவும் தன் வாழ்வைத் தியாகம் செய்து, மக்களின் ஆதரவோடு காங்கிரஸ் தலைவராகி, தமிழகத்தின் முதல்வராகி, முதல்வரான பின்னரும் மக்களிடையே நடமாடி, அவர்களது இன்பதுன்பங்களில் பங்கேற்ற ஒரே அரசியல் தலைவர் காமராஜர் தான். அவர் மக்களின் நிலையை அறிவதற்காகவும், நெருங்கிப் பழகுவதற்காகவும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றார். மக்களின் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளைக் கண்டார். தனிப்பட்ட தன் நலனைப் பெருக்கிக் கொள்ளாமல், பொது நலனைப் பேணிக்காப்பதில் முனைந்து நின்றார். ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கினார். 1954-ம் ஆண்டு காமராஜர் முதன்முறை முதல்வராகப் பொறுப்பேற்ற போது முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1957-ம் ஆண்டு அவர் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1962-ம் ஆண்டு அவர் மூன்றாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்றபோது மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் செயல்படத்துவங்கியது. ஐந்தாண்டுத் திட்டப் பணிகளைத் திறமையுடன் செவ்வனே செயல்படுத்திய காமராஜர் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றார். அதனால் “மிகச் சிறப்பாக ஆட்சி செய்யப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடு” எனப் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் மனதாரப் பாராட்டினார். காமராஜர் நிர்வாகத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் அளித்ததே இல்லை. பொதுப்பணம் பொதுமக்களின் நன்மைக்குப் பயன்பட வேண்டுமே தவிர யாரோ சிலரின் நலன்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர் ஆட்சித்துறை அதிகாரிகளிடம் சுமூகமான உறவினைப் பராமரித்தார். காமராஜரின் எளிமையான, நேரிடையான அணுகுமுறை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சிப்பணி அதிகாரிகளிடத்தில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் அதிகாரிகளிடத்தில் சுமூகமான உறவுமுறையைப் பராமரிக்கத் தவறினால், அந்த அமைச்சர்களை நெறிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை. காமராஜர் மாநில முன்னேற்றத்தை இடைவிடாது கண்காணித்து முன்னெடுத்துச் செல்வதற்காக, ‘மாநில முன்னேற்றக் குழு’ ஒன்றினை ஏற்படுத்தினார். அதில் அனைத்து அமைச்சர்களும், அனைத்துத் துறையின் தலைவர்களும், செயலாளர்களும் இடம் பெற்றிருந்தனர். அக்குழு ஒவ்வொரு மாதமும் கூடி ஒவ்வொரு துறைகளின் திட்டம் சார்ந்த முன்னேற்றம், செயல்பாடுகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் ஆராய்ந்தது. இது துறையின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், தேக்கநிலை குறித்தும் அறிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. இந்த நடைமுறையானது திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதத்திற்கு இடமில்லாமல் செய்தது. இராஜாஜி அவர்கள் கொண்டுவந்த கல்வித்திட்டமே அவர் ராஜினாமா செய்வதற்கும் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கும் காரணமாக அமைந்தது. அதனால் காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்றதும், இராஜாஜி கொண்டுவந்த அத்திட்டத்தை ரத்து செய்தார். இந்திய அரசியலமைப்பின் வழிகட்டு நெறிமுறைக் கொள்கைகளில் தெரிவித்துள்ளபடி, 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை அளிக்க காமராஜர் முடிவு செய்தார். இராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட வருவாய் இழப்பின் ஒரு பகுதியைச் சரிக்கட்டுவதற்காக மூடப்பட்ட 6000 பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. அதேசமயம் காமராஜர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் இன்னல் படுவதையும், மக்களின் உடல்நலம் பாழாவதையும் தடுத்தார். கர்மவீரரான அவர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சியைக் கொண்டுவருவதற்குக் கடுமையாக உழைத்தார். தமிழகத்தில் இருந்த 15,000 ஆயிரம் கிராமங்களில் 6000 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே இல்லாத நிலை இருந்தது. அதனால் 500க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி 1954-55 ஆண்டுகளில் 12,967 கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல பள்ளிகளைத் திறப்பதற்குக் காமராஜரின் அரசங்கம் பெருமுயற்சிகளை மேற்கொண்டது. கல்வியை மேலும் பரவலாக்க முடிவு செய்த காமராஜரின் அரசாங்கம் 1962-ம் ஆண்டு 300க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளியைத் திறக்க முடிவு செய்தது. அதன்படி, மேலும் 12267 பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. அதன் விளைவாகப் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பெரிதும் உயர்ந்தது. காமராஜர் கண்ட கனவு நனவாகத் துவங்கியது. காமராஜர் ஆட்சி துவங்கிய 8 ஆண்டுகளில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கைப் பல மடங்கு உயர்ந்தது. அதுவரையில் எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்படவில்லையோ, அக்கிராமங்களிலெல்லாம் மத்திய அரசின் நிதியுதவியுடன் ஓராசிரியர் பள்ளிகளை ஏற்படுத்தினார். அதன் மூலம் வேலைவாய்ப்பற்ற படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஆசிரியராகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே கல்வியும் தழைக்கத் துவங்கியது. ஆரம்பக்கல்வி மட்டுமின்றி மேல்நிலைக் கல்வியை மேம்படுத்தவும் காமராஜர் அரசாங்கம் பாடுபட்டது. அதற்காக அமைக்கப்பட்ட இலட்சுமணசாமி முதலியார் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, 7 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, 4 ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி, உள்ளடக்கிய 11 ஆண்டுகள் பள்ளிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணிதமும், அறிவியலும், சமூக அறிவியலும் கட்டாயப் பாடங்களாக்கப்பட்டன. புதிதாகத் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு பெருமளவில் ஆசிரியர்கள் தேவைப்பட்டதால், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு மாநிலமெங்கும் 40 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. எவ்வளவு ஏற்பாடுகள் செய்தாலும் ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்த ஏதுமற்ற ஏழை மாணவர்களைப் பள்ளிகளுக்கு வரவழைக்க இயலவில்லை. பசியில் வாடும் பாலகர்கள் படிப்பைப் பற்றி நினைக்கக்கூட இயலாதநிலை இருக்கிறது என்பதை உணர்ந்த காமராஜர் நெஞ்சம் பதறினார். ஏழை மாணவர்களின் வாழ்வை எப்படியேனும் உயர்த்தியே தீருவது என்று முடிவு செய்தார். ஏழைக் குழந்தைகளின் பசியினைப் போக்கி அவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதற்காக, 1956-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் தமிழகத்தில் மாபெரும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது பெரிதும் அதிகரித்தது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் சாதிப்பாகுபாடுகளற்ற சமத்துவநிலை பள்ளிகளில் ஏற்பட்டது. ஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது. காமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர். கல்வி வளர்ச்சிக்கென மாவட்டம்தோரும் பள்ளி மேம்பாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. அம்மாநாடுகள் பொதுமக்களின் ஆர்வம் மிகுந்த பங்கேற்புடன் திருவிழாக்களைப் போல் நடந்தன. தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மலர்ந்த கல்வி வளர்ச்சிக்கு பொதுக் கல்வி இயக்குநராக காமராஜரால் நியமிக்கப்பட்ட நெ.து. சுந்தரவடிவேலுவும் பெரிதும் துணை நின்றார். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் நலன்காப்பதிலும் காமராஜர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். ஆசியாவிலேயே முதன்முறையாக ஓய்வூதியம், சேமநலநிதி மற்றும் காப்பீடு ஆகிய மூன்றும் இணைந்த பயன்களை காமராஜரின் அரசாங்கம் ஆசிரியர்களுக்கு வழங்கியது. ஆரம்பப் பள்ளிகளைப் போன்று மேல்நிலைப் பள்ளிகளும் முன்னேற்றம் பெற்றன. 1954-55-ல் 1031 ஆக இருந்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை, 1962-63-ல் 1820 ஆக உயர்ந்தது. மேல்நிலைக் கல்வி கற்ற மாணவர்கள் எண்ணிக்கையும் 3.82 இலட்சத்திலிருந்து 6.2 இலட்சமாக உயர்ந்தது. பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரிக் கல்வியை மேம்படுத்துவதிலும் காமராஜர் கவனம் செலுத்தினார். 1953-54 ஆண்டுகளில் 53 கல்லூரிகளும் அவற்றின் பயின்ற 39 ஆயிரம் மாணவர்களுமாக இருந்த நிலை, அடுத்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டு 1962-63 ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை 63 ஆகவும் அதில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாகவும் அதிகரித்தது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆய்வுக் கூடங்களும், நூலகங்களும் துவங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்களைப் போலவே கல்லூரி ஆசிரியர்களையும் பாதுகாத்தார் காமராஜர். 1962-ம் ஆண்டிலிருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. கல்விக்கு அடுத்தபடியாக காமராஜர் விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்தினார். 2007 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேட்டூர் கால்வாய்த் திட்டமானது சேலம், கோயம்பத்தூர் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 33400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 29 கோடி ரூபாய் செலவில் காவேரி டெல்டா பாசன மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆளியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை, அமாராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற நீர்த்தேக்கத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் செய்து முடிக்கப்பட்டன. இவற்றில் பல பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றி முடிக்கப்பட்டது அவருடைய நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும். புதிய கட்டளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் வீடூர் அணை போன்றவை இரண்டாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் முடிக்கப்பட்டவை ஆகும். முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் தமிழகத்திலிருந்த அனைத்து நதிகளும் அதன் அதிகபட்சப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. ஆகவே, மூன்றாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காமராஜரின் அரசாங்கம் சிறிய பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தியது. ஏரிகள், குளங்கள் போன்றவை தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டன. 1957-61க்கும் இடைப்பட்ட காலத்தில் 1600 ஏரிகளும், 1628 குளங்களும் தூர்வாரப்பட்டன. 2000 கிணறுகள் வடிகால் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டன. விவசாயிகளுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன. விவசாய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவும், கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்காகவும் அவர் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெரியார் நீர் மின் உற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின் உற்பத்தித் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விவசாயத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 23103 கிராமங்கள் மின்சாரம் பெற்றதோடு, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மின்சார நீரேற்றிகளின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்திலிருந்து 5,00,000 ஆக உயர்ந்தது. பாசனத் திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தித் திட்டங்கள் மிக நேர்த்தியாகச் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து, மிகை உற்பத்தி கொண்ட மாநிலமாக உயர்ந்தது. மின் உற்பத்தி செய்வதற்கும் அவற்றைப் பகிந்தளிப்பதற்கும் அரசுக் கட்டுப்பாட்டில் மின்சார வாரியம் உருவாக்கப்பட்டது. விவசாயத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்ந்தது. விவசாயத்துறையில் மின்சாரத்தின் பயன் 44 கோடி யூனிட்டுகளிலிருந்து, 186 கோடி யூனிட்டுகளாக அதிகரித்தது. நீர் மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. மின்சார உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் தொடந்து முன்னேறி மின்சாரத் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தது. காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் தொழில் துறையில் பெரும் ஏற்றம் கண்டது. அடிப்படையில் தமிழகம் விவசாய பூமியாக இருந்த போதிலும் தொழில்கள் பல தழைத்தோங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்தன. அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார் காமராஜர். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, தமிழ் நாட்டின் தொழில் வளரச்சிக்கு வழிகோலினார். கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் மூலம் சிறுதொழில் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் கனரகத் தொழிற்சாலைகள் பல ஏற்படுத்தப்பட்டன. சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் தொழிற்சாலை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆவடி டாங்க் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், ஊட்டி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, சென்னை ரயில்பெட்டித் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கிண்டி தொலைநகல் தொழிற்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற கனரகத் தொழிற்சாலைகள் வெளிநாட்டு முதலீட்டுடனும், மத்திய அரசின் உதவியுடனும் தொடங்கப்பட்டன. மேலும், பள்ளிப்பாளையம் சேஷாயி காகித ஆலை, ராஜபாளையம் ராம்கோ தொழிற்சாலை, சங்கரிதுர்க்கம் இந்தியா சிமெண்ட ஆலை, வண்டலூர் ஸ்டண்டர்டு மோட்டர் தொழிற்சாலை, எண்ணூர் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, வடபாதி மங்கலம் சர்க்கரை ஆலை மற்றும் அசோக் லேலண்டு தொழிற்சாலை ஆகிய தனியார் துறை தொழிற்சாலைகளும் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தின. கனரகத் தொழிற்சாலைகளைப் போலவே, கார்கள், டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள், டீசல் எஞ்ஜின்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மின்சார நீரேற்றிகள், மின் மீட்டர்கள், மின் கலங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்தன. 9 ஆண்டுக் காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 4500-ஐ தொட்டது. தொழில் வளர்ச்சியில் மகாராஷ்டிராவிற்கும், மேற்கு வங்காளத்திற்கும் அடுத்த நிலையில் இருந்த தமிழகம் மேற்கு வங்காளத்தைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. காமராஜரின் ஆட்சிக்காலத்தில் சென்னை இராமானுஜம் கணித நிலையம், சென்னை இந்திய தொழில் நுட்ப நிலையம் (ஐ.ஐ.டி), அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி மண்டல தொழில் நுட்பக் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி மின்-வேதியியல் ஆய்வு நிலையம், சென்னை அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி போன்ற அறிவியல், தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதுதவிர பல பாலிடெக்னிக் கல்லூரிகளும், தொழில் பயிற்சி நிறுவனங்களும் (ஐ.டி.ஐ.) துவக்கப்பட்டன. தனியார் துறையிலும் பல அறிவியல், தொழில் நுட்பக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. காமராஜர் ஒரு இலட்சியவாதி மட்டுமல்ல அவர் ஒரு செயல் வீரரும் ஆவார். இந்திய தேசம் பருவ மழைகளையும், விவசாயப் பொருளாதாரத்தையும் சார்ந்தே இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த அவர் விவசாயத்தை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தீவிர கவனம் செலுத்தினார். விவசாய முன்னேற்றத்தில், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், 1956-ம் ஆண்டு விவசாயக் குத்தகைதாரர்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டம் உழுபவரின் உரிமைகளை உறுதிப்படுத்தியது. 1962-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நில உட்சவரம்புச் சட்டத்தின் படி விவசாய நிலத்திற்கான உட்சவரம்பு நிர்ணயிக்கப் பட்டது. அச்சட்டம் அதிகப்படியான நிலம் வைத்திருந்த நிலச்சுவான்தார்களிடமிருந்து உட்சவரம்பிற்கு மேற்பட்ட நிலத்தை எடுத்து, அதை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது. காமராஜரின் ஆட்சியில் வீட்டுவசதியும், நகர்ப்புற வளர்ச்சியும் வேகம் பெற்றன. அரசு ஊழியர்களுக்கும், காவல் துறையினருக்கும், நேசவாளர்களுக்கும் வீட்டுவசதிகள் செய்து தரப்பட்டன. காந்தியடிகளின் கொள்கை வழி நின்றவரான கர்மவீரர் கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத் திட்டங்களிலும் கவனம் செலுத்தினார். 1960-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி விழாவின் போது தமிழ் நாட்டில் புதிய கிராமப் பஞ்சாயத்துக்களும், பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சி மன்றங்களும் துவக்கப்பட்டன. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும், நிதி ஆதாரமும், உள்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தழ்த்தப்பட்ட நிலையில் இருந்த எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குக்கென்று சிறப்பு சமூக நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், பெண் தொழிலாளர்களின் நிலையினை உயர்த்துவதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. புதிய பஞ்சாயத்து ஆட்சி முறை காமராஜர் கொண்டு வந்த அமைதிப் புரட்சியாகும். தேசத்தின் வளர்ச்சிக்கு மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பெருந்தடையாக இருப்பதை உணர்ந்த காமராஜரின் அரசாங்கம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அத்திட்டத்தை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே ஒரு வாரியத்தை உருவாக்கியது. எல்லாவற்றிக்கும் மேலாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குக் காமராஜர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரு போதும் தான் தமிழ் மொழியை வாழ வைத்ததாக அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. 1955-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. 1958-ம் ஆண்டு தமிழ் ஆய்வுக் குழுவினை நிறுவியது தமிழ் வளர்ச்சிக்குக் காமராஜர் செய்த மாபெரும் சாதனையாகும். அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் தமிழ் ஆட்சி மொழியாக்கப் பட்டதைச் செயல்படுத்தவும், தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் அக்குழு ஏற்படுத்தப்பட்டது. 14 ஜனவரி 1958-ம் ஆண்டு முதற்கொண்டு தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதே நாளில் தமிழ் மொழி தமிழகத்தின் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அதேசமயம், தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக காமராஜரின் அரசாங்கம் மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொண்டது. 1961-ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் தான் தமிழ் மொழி கல்லூரிகளில் பயிற்று மொழியாக்கப்பட்டது. 1962-ம் ஆண்டு தமிழ் அகாடமி தனது முதல் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதியை வெளியிட்டது. 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜரின் தலைமையின் கீழ் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலத்தைக் காங்கிரஸ் பெற்றிருந்த போதிலும் கூட, முந்தைய தேர்தலில் 15 இடங்களே பெற்ற தி.மு.க. இத்தேர்தலில் 50 இடங்களைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்காக, தான் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியை இராஜினாமா செய்ய காமராஜர் முடிவெடுத்தார். முதலமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப் பணிக்காக டெல்லி சென்ற காமராஜரை, பண்டித நேரு அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். தேசிய அரசியலிலும் தன் தனி முத்திரையைப் பதித்த காமராஜர் அசைக்கவியலாத ‘கிங் மேக்கர்’ ஆகத் திகழ்ந்தார். கடைக்கோடித் தமிழனும் கரம் கூப்பித் தொழுத கர்மவீரராக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தேசத்தின் முன்னேற்றமே தன் வாழ்வாகக் கொண்ட தீயாக சீலராகக் காமராஜர் திகழ்ந்தார். “ஏழைகளின் துன்பம் போக்காமல் எந்தப் பதவியிலும் இருப்பதில் எவ்விதப் பயனுமில்லை” என்பதைத் தன் கொள்கையாகக் கொண்டிருந்த காமராஜர் உண்மையிலேயே ஒரு ஏழைப் பங்காளனாகத் தமிழக மக்களின் மனங்களில் நீங்காது நிறைந்தார். - முனைவர் நா.சேதுராமன் (drnsethuraman@gmail.com) https://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/25752-2013-12-16-15-06-05
  16. காவிரி நதிநீரைக் கர்நாடகா தமிழ்நாட்டிற்குத் தர மறுப்பது ஏன்..?- Aram Talkies Special இந்தியாவின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக இருக்கும் ஒரே பிரச்சினை காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை தான்.. 1974 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே இந்த பிரச்சனை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. 50 ஆண்டுகளாக நடக்கும் இந்த பிரச்சனைக்கு என்ன காரணம்..? “தென்னகத்தின் கங்கை” என்று அழைக்கக்கூடிய காவிரி நீரானது 802 கிலோ மீட்டர் வரை நீளம் கொண்டது. கர்நாடகாவில் தொடங்கி கேரளா, தமிழ்நாடு வழியாகச் சென்று இறுதியாக பாண்டிச்சேரியை சென்றடைகிறது. முழுக்க முழுக்க மழை நீரை மட்டுமே நம்பி இருக்கும் இந்தக் காவிரி ஆற்றுப்படுகை 740 TMC (Thousand million cubic feet) வரை சேகரித்துக் கொள்ளும் கொள்ளளவை கொண்டது. இந்த 740 TMC கொள்ளளவில், மழை யின் மூலமாக கர்நாடகாவிற்க்கு 425 TMC தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்க்கோ 252 TMC தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுப்பது ஏன்? வரலாற்றை சற்று பின்னோக்கி பார்க்கும் போது, 1900 களில் கர்நாடகா மாநிலம் மைசூர் சமஸ்தானமாகவும் , தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாகவும் இருந்தது. மைசூர் சமஸ்தானம் மன்னர்களின் கீழ் இருந்த, அதே வேளையில் மெட்ராஸ் மாகாணமோ பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தது. 1910 ம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக ஒரு வரைவுத் திட்டத்தை முன் வைத்தது. ஆனால் அதே காலத்தில், மெட்ராஸ் மாகாணமும் அந்த ஆற்றின் மூலமாக நீர்ப்பாசன வசதியை மேற்கொள்வதற்கான திட்ட வரைவை முன் வைத்தது. காவிரி ஆற்றின் குறுக்கே மைசூர் அரசாங்கம் அணை கட்டினால், நீர்ப்பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் வரத்து குறைவாகிவிடும் என்று முதல் முதலாக மெட்ராஸ் மாகாணம் எதிர்ப்பு தெ ரிவித்தது அப்ப போதுதான். மெட்ராஸ் மாகாணம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டு இருப்பதால், மைசூர் அரசை பணிய வைப்பதற்காக 1924 ஆம் ஆண்டு ( நியாயம் இல்லாத) ஒரு ஒப்பந்தத்தைப் போட்டது. அதாவது 75% தண்ணீர் மெட்ராஸ் மாகாணத்திற்கு விட வேண்டும் என்றும், 23% மைசூர் மாகாணத்திற்கு என்றும், மீதமுள்ள நீர் கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்றும் 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் 1974 -இல் முடிவுக்கு வந்தது. ஆனால் இதற்கு இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு காவிரி நீரை பயன்படுத்தி 25.8 லட்சம் ஏக்கர் நிலங்கள் வரை சாகுபடி செ ய்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் கிட்டத்தட்ட நீர்ப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கையில், திடீரென அந்த நீர்வரத்து குறைந்தால் தமிழ்நாடு மூன்று விதமான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. விவசாய நிலங்கள் எல்லாம் குறையும் அபாயம். நாடு மற்றும் விவசாயிகளின் நிதிநிலை குறைந்து வேலை இல்லாமல் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் அபாயம். மேலே சொன்ன இரண்டு காரணத்தினால் விவசாயிகளின் கடன் சுமை அதிகமாவது மட்டுமல்லாமல், விவசாயிகள் தற்கொலைக்கும் தூண்டப்படும் அபாயம். இதுதான் காவிரி நதி நீருக்காக பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட ஒப்பந்தத்தால் தமிழ்நாடு சந்தித்த முதல் பிரச்சனை . இரண்டாவதாக உள்ள பிரச்சினை காவிரி ஆற்றுப்படுகையில் சீராக மழை பெய்யாதது தான்.. 1993 ஆம் ஆண்டு கீழ் காவேரியில் பெய்த மழையின் கொள்ளளவு 1502.74 MM. ஆனால் 2002ல் பெய்த மழையின் அளவோ 241.88 MM மட்டுமே. பத்தாண்டுகளில் மழைப்பொழிவு ஆறு மடங்கு வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் மேல் காவிரியிலும் 1992 ல் பெய்த மழையின் அளவு 2522.12 லிருந்து 1996ல் 1782.19 ஆக குறைந்தது. இப்படி படிப்படியாக மழை வரத்து குறையக்குறைய காவிரி பிரச்சனை படிப்படியாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் இதை விட ஒரு பெரிய பிரச்சனையும் இங்கு உள்ளது. அது என்னவென்றால், 740 TMC தண்ணீர் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பங்கிடப்பட்டாலும் கூட, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் உற்பத்தியும் தண்ணீர் தேவையை அதிகரிக்கவே செய்கின்றன. மாநிலங்களின் தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு 566 TMC தண்ணீரும், கர்நாடகாவிற்கு 465 TMC தண்ணீரும், கே ரளாவிற்கு 99.8 TMC தண்ணீர் மற்றும் புதுச்சேரிக்கு 9.3 TMC என மொத்தமாக 1030 TMC தண்ணீர் தேவைப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட 1031 TMC தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் காவிரி ஆற்றுப்படுகையின் முழு கொள்ளளவு 740 TMC தண்ணீர் மட்டுமே . இதை இரண்டு மாநிலங்களுக்கும் பாதிப்பாதியாக பிரித்தால் கூட தண்ணீர் தேவை இருக்கவே தான் செய்கிறது. தமிழ்நாட்டில் நெல் பயிர் சாகுபடி பிரதானமான விவசாய தொழிலாக இருக்கும் பட்சத்தில் நெல் பயிர் மற்றும் கரும்பு சாகுபடி கர்நாடகாவில் பிரதானமான தொழிலாக இருக்கிறது. இந்த இரண்டு சாகுபடிக்கும் தண்ணீர் தேவை மிக அதிகமாக இருக்கிறது. Water Footprint Network ன் கூற்றுப்படி, ஒரு கிலோ அரிசி விளைவிக்க 3400 லிட்டர் தண்ணீர் தேவை ப்படுகிறது என்றும், ஒரு கிலோ சர்க்கரை விளைவிக்க 1500 லிட்டர் வரைக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்திய நிலப்பரப்பை பொறுத்தவரையில், இந்தத் தே வை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அதாவது ஒரு கிலோ அரிசிக்கு 5000 லிட்டர் தண்ணீர் என்றும், ஒரு கிலோ சர்க்கரைக்கு 2500 லிட்டர் தண்ணீர் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் நெல் சாகுபடிக்கு 70% தண்ணீர் நேரடியாக செலவிடப்படுகிறது. மேலும் கரும்பு சாகுபடியில் இந்தியாவின் மூன்றாவது இடத்தில் உள்ள கர்நாடகாவிற்கு 30% தண்ணீர் செலவிடப்படுகிறது. இந்த நீர் வரத்து குறையும் பட்சத்தில் கர்நாடகா விவசாயிகள் பெரும் நிதிச்சுமைக்கு உள்ளாவார்கள். இந்நிலையில் முழுக்க முழுக்க காவிரி நதிநீரை மட்டுமே நம்பி இருக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு, கர்நாடக அரசு தண்ணீர் தருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இந்த நான்கு காரணிகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் ஒப்பந்தம், தமிழ்நாட்டின் சார்புத்தன்மை , இரு மாநிலங்களுக்குமான அதிகப்படியான தேவை மற்றும் இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயப் பழக்கவழக்கம்.மேலும் 2023 இல் கர்நாடகாவில் பெய்த குறைந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள காவிரி நதி நீர் தேக்கங்களின் இருப்பு 104.5 TMC யில் இருந்து 51.1 TMC ஆக குறைந்தது. ஆனால் அன்றைய ஆண்டில் கர்நாடகாவிற்கு அடிப்படையாக 112 TMC தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2020 லிருந்து 2050 வரை யிலான காலகட்டத்திற்குள் காவிரி நதி நீர் ஆற்றுப்படுகையில் பெய்யும் மழையின் அளவு 20 சதவதீம் வரை குறை யும் என்று BCCI – k ( Bangalore climatic change initiative – Karnataka ) தெரிவித்துள்ளது. மே லும் தொழில்துறை மற்றும் விவசாய உற்பத்தித் துறைகளின் தேவை அதிகப்படியானதினால் நிலத்தடி நீரும் குறைந்து கொண்டேதான் செல்கிறது. இதுதான் காவேரி பிரச்சனை மேலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக உருவெடுத்ததற்கு முக்கிய காரணியாகும். இயற்கை விவசாயத்திற்கு திரும்பும் பாதை என்ற முன்னெடுப்பில் முதன்மையாக இருக்கும் பயிர் Millets என்று சொல்லக்கூடிய திணை தானியங்கள். இவற்றுக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைவு. ஒரு கிலோ திணை தானியங்களை விளைய வைப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவானது, ஒரு கிலோ அரிசி விலை விற்பதற்கு தேவையான தண்ணீரை விட நான்கு மடங்கு குறைவு. மேலும் இது கோதுமை விளைவிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு குறைவு. அதுமட்டுமில்லாமல் கரும்பு விளைவிப்பதற்கு தேவையான தண்ணீரின் அளவை விட ஐந்து மடங்கு குறைவு. மேலும் இவை வறட்சி காலத்திலும் பயிரிட உகந்தவை என்பது இதன் சிறப்பம்சம். அரசாங்கம் இந்த பிரச்சனைக்கு என்று தீர்வு காணும் என்று விடை தெரியாத பட்சத்தில், விவசாயிகளுக்கு ஒரு மாற்று வழியாக கூட இந்த திணை தானியங்கள் விளைவித்தல் இருக்கலாம். மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் இந்த திணை தானியங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பது உற்று நோக்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் கூறிய இந்த தினை தானிய ஊடுபயிர்விவசாயம் என்பது ஒரு சிறு உதாரணம் மட்டுமே . இதுபோல் மாற்று வழிகள் பல இருக்கிறது.. சுமார் 150 ஆண்டுகளாக நடக்கும் இந்த காவிரி நதிநீர் பிரச்சனை ஓயாத பட்சத்தில், ” நமக்கு நாமே ” என்று சொல்லக்கூடிய தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் மாற்று வழியை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://aramtalkies.com/2024/why-is-karnataka-refusing-to-give-cauvery-water-to-tamilnadu-aram-talkies-special/
  17. பாடல் : ஆசை கூட படம்: think indie பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிர்தி இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடல் ஆசிரியர் : சத்யன் இளங்கோ ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : என் பக்கம் போனவன தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா? ஆ ஆ உன் பாதம் தாளம் போட என் பார்வை மேலோட நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்? ஆலோலம் ஆழும் தூவானம் தூவும் கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும் சேராமல் சேரும் தீராமல் தீரும் மோதாமல் மீண்டொடும் மீண்டொடும் ஆண் : என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள என் தலைக்கும் ஏறவில்லை பேர கேக்க தோணவில்லை ஆண் : என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே உன் சிரிப்பும் மாறவில்ல நாள பாத்து மேளம் துள்ள பெண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் காத்த தேட ஆழம் கூடிட மேகம் தூவிட ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட வாசம் வீசும் … தேட ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட
  18. அரசாங்கத்துடன் கள்ளத் தொடர்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் சிலை வைக்கின்றார்கள். 😁
  19. நீண்ட அருமையான பதிவிற்கு நன்றி.🙏 ஆனால் பாருங்கோ, என்னைப் பார்த்து பதில் சொல்ல என் வயசு பத்தாது ஐயா. நான் மிகச் சிறுவன்.😍
  20. 🤣............ 'இந்தியன் - 2' போல ஆகி விட்டது............... 'இந்தியன் - 3' வேண்டவே வேண்டாம், நாங்கள் வேணும் என்றால் சும்மாவே டிக்கட் காசை கொடுத்து விடுகின்றோம் என்று மீம்ஸ்ஸுகள் பறந்து கொண்டிருக்கின்றன........🤣.
  21. நீங்கள் ஏன் இப்படி செய்கின்ற முதலாளிகள் பற்றி தகுந்த இடத்தில் முறையிடக் கூடாது? toll free in Ontario: 1-800-531-5551. மேலே உள்ள இலக்கத்துக்கு தொலைபேசியில் அழைத்துக் கூட உங்களால் முறையிட முடியும். அல்லது, CRA இன் காதிலும் போட முடியும்.
  22. அந்தக் காலத்தில் ஏதாவது வீரத்தில் வெற்றியடைந்தால் - போரில், காளை அடக்குவதில், வில்லில் - அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. உதாரணமாக, முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு தெரியுமா? சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்சா கொடுக்க வேண்டும் என்று நினைத்தது, கொடுத்தது தான் தெய்வானை. இரண்டாம் மனைவியாக முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தாள். மறு பக்கம் வள்ளி அப்படியே இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தினால், மிதிலை மிதிலை ஏகல் லில், “அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் கேட்க, அங்கு “மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று பதில் வருகிறது. எடுத்த மலையே நினையின், "ஈசன், இகல் வில்லாய் வடித்த மலை, நீ இது, வலித்தி" என, வாரிப் பிடித்த மலை, நாண் இடை பிணித்து ஒருவன் மேல்நாள் ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற மலை அன்றோ? நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும் மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க என்கிறது அதன் பின் தான் "கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்." என்கிறது இனி உங்கள் கேள்விக்கு வருவோம் "அல்லது இல்லாள் கொடுத்த பரிசில்(?) போகுமா.. " அன்று போக வாய்ப்பில்லை. காரணம் அவன் வீரன், பலசாலி இன்று ?? நீங்களே உங்களைப் பார்த்து சொல்லுங்கள் நன்றி
  23. [ இந்த காமராஜர் தமிழ் தேசியத்தை புறக்கணிப்பவர். இந திய தேசியத்தை தமிழர்கள் ஏற்று கோள்ள வேண்டும் என்று தனது வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர். சென்னை மாகாணம் என று இருத்ததை “தமிழ்நாடு என்று மாற்றறுவதை பிடிவாதமாக மறுத்தவர். அதற்காக இவரது ஆட்சிக்காலத்தில் உண்ணாவிரதம் இருந்தவரை சாக விட்டவர். மொழிவாரி மாநில பிரிப்பில் பல தமிழ் நிலபரப்புகளை கேரளாவுக்கும் கரநாடகத்துக்கும் தாரை வார்த்தவர். ] முரண்பாண்டின் மொத்த உருவம் சீமான். அவர் தான் அப்படி என்றால் தொண்டர்களும் அப்படியே ஏற்று கொண்டுவிட்டனர். எனககு சந்தேகம் இருந்தது இவர்கள் பெரும் தலைவர் என்று சீமானை சொல்கின்றார்களா அல்லது சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரை வைத்த அண்ணாவை தான் சொல்கின்றார்களோ! ஆனால் அப்படி எல்லாம் இல்லை தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதை பிடிவாதமாக மறுத்த காமராசர் தான் பெரும் தலைவர். புலி தலைவரை பயன்படுத்துவது போன்று.
  24. தமிழ் இனிமை என்று அளவுக்கு மிஞ்சி அள்ளிப் பருகியதால் வந்த மயக்கத்தின் (வெறி) விளைவாக இருக்குமோ?? சிலர் தங்கள் வெறிக்கு, வாய்குரிசியாக வறுவல் தேடுவதுண்டு, கிந்தியும் ஒரு வறுவலாக இருக்குமோ??🤔
  25. அண்ணா, நீங்கள் வெளிநாட்டிலிருந்து எடுத்துக் கொண்டு போனாலும் https://aaceylon.lk/services/idp/ இங்கே கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஆனால் உங்களுக்கு இரட்டைக் குடியுரிமை இருந்தால் Medical எடுத்து உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்தில் உள்ளவாறு பொலறஸ்கமுவ இல் இலங்கை ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் எடுக்கலாம். 8 வருடத்திற்கு செல்லுபடியாகும்.
  26. என்னப்பா வேதாளத்தின் கதை போல இருக்கே?
  27. அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂 நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. செய்யுறது தான் செய்யுறது. சான்விச் மசாச் செய்து பாருங்களேன்.
  28. நீங்கள் சொல்ல முதல்… பிற்சேர்க்கையாக சேர்த்து விட்டேன். 😂🤣
  29. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. கதை கேட்க வாய்ப்பும் கிடைத்தது. மென்பொருள், வேலைக்கு வரும் இந்தியர்கள் என ‘நந்தவனத்தில் போட்டுடைத்தார்கள்’, என்று நீங்கள் எழுதியதின் தொடர்ச்சியாக இதை எடுத்துக் கொள்கிறேன்.
  30. அட…. இரண்டு ஜேர்மன்காரரும் “தாய்லாந்து மசாஜ்” என்றவுடன் பாய்ந்தடித்து போயிருக்கின்றார்கள். 😂 நானும், @Paanch சும், @Kavi arunasalam மும் தான், கவலையீனமாக இருந்திட்டம் போலை கிடக்கு. 🤣
  31. இவங்களின்ட கதையை நம்பி ஞாயிற்றுக்கிழமை உள்ள Counter எல்லாம் தடவினது தான் மிச்சம். இனி இதற்காக கொழும்புக்கு போக வேண்டிய நிலை…😭😭
  32. கனடா என்று ஒரு ஞாபகம். கேரளா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிற்கு போய் ஒவ்வொரு வகுப்புகளும், பாடசாலை அல்லது பல்கலை வகுப்புகள், கொண்டாடும் ஒன்றுகூடல் பற்றி இவர் சில வருடங்களின் முன் கருத்தொன்று எழுதி, அது கொஞ்சம் பிரபலமாக ஓடித் திரிந்தது ஞாபகம். இவருடைய பாடசாலை வகுப்பு கேரளா போனது, ஆனால் இவர் போகவில்லை என்றும் ஞாபகம்.........
  33. தமிழர நாட்டில் அனைத்து தமிழர்களும. உலிய கல்வியை கற்றால் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ் நாட்டு அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராக இந்த சிவஞான சங்கிகள் தான் உயர் நீதிமன்றத்தில் ஆகமங்களை சாட்டாக வைத்து தடை வாங்கின. ஆலயங்களில் பிரதான வழிபாட்டு மொழியாக்கவும் அங்கு தடையாக இருந்த இந்த சிவஞான சங்கிகள் இலங்கையிலும் தமது ஆர் எஸ் மத வெறியை பரப்ப தமது யாழ்பாண ஏஜெண்டுகள் மூலம். வந்து கூறும் மாய்மாலங்களே இவை.
  34. தாய்லாந்து மசாஜ் ஜேர்மனியிலையும் இருக்குத்தானே? ஏன் தேவையில்லாமல் காசு செலவழிச்சு அங்கை போய் நெருக்குப்படவேணும்? 😂 நான் மூண்டு தரம் போயிருக்கிறன். எப்பிடியிருந்தது எண்ட அனுபவம் வேணுமெண்டால் சொல்லுங்கோ. எழுதுறன்
  35. மிகவும் துன்பமான சம்பவம்........காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஆனால் காலமும் தோற்றுப் போகும்படி சில நினைவுகள் என்றும் வாழ்வில் நீங்காதிருக்கும்.......!
  36. மீள முடியாத ஏமாற்றம்.
  37. இலங்கையில் ஆரம்ப காலங்களில் தமிழர் உரிமைகள்,இனப்பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை அது இது ஆரம்பித்த காலங்கள் என பலருக்கும் ஞாபகம் இருக்கும். எல்லாம் தோல்வியடைந்த நிலையில் தந்தை செல்வாவினால் தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வு எனும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எந்தவொரு ஆயுத வாசனைகளும் இருக்கவில்லை. இருந்தாலும் ஒருவித உந்துதலின் காரணமாக இளைஞர் அணிகள் ஆயுதம் தூக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லோரின் நோக்கமும் தனித்தமிழ் தனிநாடாகவே இருந்தது. அதில் ஒரு சில அமைப்புகள் தனி நாடு சரிவராது என ஒதுங்கியது மட்டுமல்லாமல் சிங்கள இனவாத கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தனர். அது அவர்கள் தனிப்பட்ட விடயம். இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களுக்கு தனித்தமிழீழம் சாத்தியம் என சாதித்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கென சகல துறைகளையும் உருவாக்கி தனி அரசு போல் நடத்தி காட்டியவர்கள் விடுதலைப்புலிகள். துரோகத்தால் மட்டும் வீழ்ந்தவர்கள் விடுதலைப்புலிகள். தவறுகளால் அல்ல.
  38. கரையோரப் பாதுகாவலர்கள்.......! 👍
  39. The Beautiful Planet · Suivr Lotus des neiges près du Mont Kailash Tibet
  40. dmk ஆட்சிக்கு வந்தால் கன்னடன் உயிர்தெழும்புவது வாடிக்கைதானே ?
  41. ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி.. இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.