Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3055
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46783
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/24/24 in all areas

  1. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 01 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்புகளுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த காலக், சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ... போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 02
  2. ஒரு தடவை அமெரிக்க ஜனாதிபதியொருவர் இந்தியாவுக்கு விஜயம் செய்தாராம், அங்கே ஒருவர் பொது இடத்தில் கூச்சமில்லாமல் மலம் கழிப்பதை பார்த்து, ஏன் இந்த நாட்டில் மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்டாராம். அவமானத்தால் தலை குனிந்த இந்திய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியை பழிவாங்க ஒரு காலம் வருமென்று காத்திருந்தாராம். இன்னொருதடவை இந்திய ஜனாதிபதி அமெரிக்கா போனபோது தெருவில் ஒருவர் மலங்கழிப்பதை பார்த்ததும், இந்திய ஜானாதிபத்திக்கு இதுதான் சந்தர்ப்பம் என்று, அமெரிக்க ஜனாதிபதி முன்பு இவரை கேட்ட கேள்வியை இப்போ இவர் அமெரிக்க ஜனாதிபதியை பார்த்து கேட்டாராம். அதற்கு, அமெரிக்கர் கொஞ்சம் பொறுங்கள்; அவரை அழைக்கிறேன், நீங்கள் அவரிடமே இந்தக்கேள்வியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அந்த மனிதரை அழைத்தாராம். இவரும் அவரை அழைத்து விசாரித்த போது தனது பூர்வீகம் இந்தியா என்றாராம் அந்த மனிதர். நினைத்துப்பாருங்கள்..... இந்தியா ஜனாதிபதியின் நிலையை, இதற்கு பேசாமலே போயிருக்கலாம், மீண்டும் வாயை குடுத்து புண்ணாக்கி கொண்டோமே என்று நினைத்திருப்பார். இந்தியன் ஆமி வந்தபோது கூட சிலரை கேட்டார்களாம், எதற்கு சண்டை போடுகிறீர்கள்? வீட்டுக்கொரு கிணறு, கழிவறை இருக்கு, வசதியாய் இருக்கிறீர்கள். பின் எதற்கு உங்களுக்குள் சண்டை என்றார்களாம்? அவர்களது பிரச்சனை அது. எங்களது பிரச்சனையை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
  3. லுங்கி டான்ஸ் ---------------------- புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை. ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம் கூட அந்த வெள்ளை சேட்டுகள் வரும். ஆனால் காற்சட்டையில் பல முக்கியமான இடங்களில் ஓட்டை விழுந்து விடும், அதனால் ஒவ்வொரு வருடமும் ஒரு காற்சட்டை புதிதாக வாங்கியே தீர வேண்டும். ஆனாலும் புதுக் காற்சட்டையையும், புதுச் சாரத்தையும் ஒப்பிடவே முடியாது. புதுச் சாரங்களை விட்டுப் பார்த்தால், வேறு எந்த புது உடுப்பினதும் நினைவும் மனதில் இன்று இல்லவே இல்லை. சங்கு மார்க், கிப்ஸ், பின்னர் டிசைன் டிசைனாக கொஞ்சம் நைசான துணிகளில் அம்பானியின் லுங்கிகள், சவுதி சாரம், மட்டக்களப்பு சாரம், பற்றிக் சாரம் என்று பல சாரங்களை இடுப்பில் சுத்தி சுத்தி வளர்ந்தவர்கள் நாங்கள். இன்றும் சாரம் தான். முன்னர் வேலை முடிந்து வந்தவுடன் சாரத்திற்கு மாறி விடுவேன். இப்பொழுது பெரும்பாலும் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், சில நாட்களில் 24 மணி நேரமும் கர்ணனின் கவச குண்டலம் போல சாரம் ஒட்டியே இருக்கின்றது. பல வருடங்களின் முன், இங்கு சாரத்தை பற்றி எல்லோருக்கும், எங்கள் மக்களிலேயே, ஒரே அபிப்பிராயம் இல்லை என்ற உண்மை முதன் முதலில் தெரிய வந்தது. சாரம் என்பது ஒரு 'மரியாதை குறைந்த' உடுப்பாக பார்க்கப்படுவதும் தெரிந்தது. வீட்டிற்கு நண்பர்கள் வரும் போது சாரத்துடன் நிற்பதை பலர் தவிர்த்தனர். சந்தியில் நாள் முழுக்க சாரத்துடன் நின்று வளர்ந்து விட்டதால் சாரத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. எவர் வந்தாலும் சாரம் தான் என்று மனம் இறுக்கமாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒருவரின் உணவுப் பழக்கத்தை அவரின் ஒரு வித அடையாளமாக எடுத்துக் கொள்வார்கள். மொத்தமான, ஒரே ஒரு வகை தோசை சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு. பேப்பர் தோசை, நெய் தோசை, ஆனியன் தோசை என்று சுட்டுச் சாப்பிடுபவர்கள் வேறு என்பார்கள். ஒருவர் குடிக்கும் கோப்பியையும், டீயையும், பிளேன் டீயையும் வைத்தே அவர்களை வகைப்படுத்தும் வல்லமை பல தமிழ்நாட்டவர்களுக்கு உண்டு. அவர்கள் கும்பிடும் சாமியை வைத்தும் வகைப்படுத்துவார்கள். நாங்கள் இந்தளவிற்கு இல்லை தான், ஆனாலும் சங்கு மார்க்கிலும், கிப்ஸிலும் ஒரு தயக்கம் இருந்தது. ஒரு தடவை மகிந்த ராஜபக்ச மாலத்தீவிற்கு போயிருக்கும் போது, மகிந்தவை வரவேற்ற சில மாலத்தீவு முக்கியஸ்தர்கள் சாரமே கட்டியிருந்தனர். படத்தில் பார்க்கும் போது அவை மட்டக்களப்பு சாரம் போன்றிருந்தன. இது போதுமானதாக இருந்தது எனக்கு, இன்னும் நிறைய சாரங்களை வாங்கி வீட்டில் அடுக்க. பின்னர் 'லுங்கி டான்ஸ்............. லுங்கி டான்ஸ்......' என்றொரு பாட்டும், ஆட்டமும் வந்து மேடையெல்லாம் கலக்கியது. பல கலை விழாக்கள், தமிழ் விழாக்களில் இந்த லுங்கி டான்ஸ் ஆடப்பட்டது. இது மிக இலகுவான ஒரு ஆட்டம், அதனால் இன்னும் புகழ் பெற்றது. ஆடுபவர்கள் பெரிதாக ஆடத் தேவையில்லை. வெளியால் கட்டியிருக்கும் சாரத்தை மட்டும் கீழேயும், மேலேயும் , பக்கவாட்டிலும் வேகமாக அசைத்தால் அதுவே லுங்கி டான்ஸ். என்றாலும் சாரத்திற்கு உரிய மரியாதை இன்னும் கொடுக்கப்படவில்லை என்றே எனக்குப்பட்டது. மாலத்தீவில் கட்டிக் கொண்டாடுகின்றார்களே. பின்னர் வந்தன ஒன்றுகூடல்கள். எங்காவது, கேரளா, மலேசியா, பாங்காக், இப்படி எங்காவது போய் ஒன்று கூடுவது. பொதுவாக ஒரே விதமான நிகழ்ச்சி நிரல்கள் தான். மேலதிகமாக, அந்தக் கூட்டத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால், அதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும். உதாரணமாக, நான் போயிருந்த ஒன்றுகூடல் ஒன்றில் ஒருவருக்கு யோகா மிக நன்றாகவும், இன்னொருவருக்கு ஓரளவும் தெரியும் என்பதால். விடிகாலையில் யோகாசனம் என்பது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தது. அதிர்ஷடவசமாக அந்த உல்லாசப் போக்கிடத்திலிருந்து (resort) வெளியே போய் வருவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. இன்றைய ஒன்றுகூடல்களில் முக்கியமான இன்னொரு நிகழ்வு எல்லோரும் சாரம் கட்டி வரிசையாகவும், வட்டமாகவும், பல கோணங்களிலும் நின்று படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் போடுவது. பெண்கள் படங்கள் எடுப்பதற்கு சேலைகளுடன் சளைக்காமல், நாள் முழுக்க நிற்பது போல. இப்பொழுது அப்பாடா என்றிருக்கின்றது. கடைசியில் சாரமும் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.
  4. இக்கட்டுரையின் முதற் பகுதி முன்பே பதிவு செய்யப்பட்டது. அதன் இணைப்பு இறுதியில் தரப்பட்டுள்ளது - அதனை வாசித்த பின்னர் இந்த இரண்டாம் பகுதிக்கு வர ஏதுவாக. பொருநைக் கரையினிலே - 2 - சுப.சோமசுந்தரம் முதல் பகுதியில் அறிவித்தது போல இன்றைய பாளையங்கோட்டையை உருவாக்கிய கிறித்தவ மத போதகர்களின் வரலாற்றிலேயே இன்றைய ஊரின் வரலாறு அடங்கியுள்ளது எனலாம். திருநெல்வேலிச் சீமையில் முதல் முதலில் (1778 ல்) கிறித்தவ மதத்திற்கு மாறியவர் தஞ்சாவூரில் இருந்து இங்கு வந்து குடியேறிய மராட்டிய பிராமணப் பெண்ணான கிளாரிந்தாவாகிய கோகிலா (1746 - 1806). ஒருவகையில் நெல்லைச் சீமையில் தென்னிந்திய கிறித்தவ திருச்சபைக்கு வித்திட்டவரும் அவரே எனச் சொல்வதும் மிகையாகாது. அவர் தஞ்சை மண்ணில் ஒரு மராட்டிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது இயற்பெயர் கோகிலா. இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து தமது தாத்தாவின் வளர்ப்பில் ஓரளவு கல்வி அறிவு பெற்று, துணிச்சலும் அன்புள்ளமும் கொண்ட பெண்ணாக வளர்ந்தவர். அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் அரண்மனையில் உயர் பதவி வகித்த ஒரு மராட்டிய வயோதிக செல்வந்தருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். மணமான சிறிது காலத்திலேயே கணவர் இறந்ததால் அக்காலத்தில் அவர்களது சமூக வழக்கப்படி வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி வைக்கப்படும் நேரத்தில், அதனைக் கேள்விப்பட்டு அங்கே சென்ற ஹேரி லிட்டில்டன் (Harry Lyttleton) என்னும் ஆங்கிலேய இராணுவ அதிகாரியால் காப்பாற்றப்பட்டார் என்பதும், அதன்பின் அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு ஒன்றாய் வாழ்ந்தனர் என்பதும் பின்னர் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் செய்வித்த பாதிரியார் ஷ்வார்ட்ஸின் குறிப்புகளில் இருந்தும், செவிவழிச் செய்திகளில் இருந்தும் அறியப்படுவன. இவை அ.மாதவையா எழுதிய 'கிளாரிந்தா' எனும் ஆங்கில நாவலில் குறிக்கப் பெறுகின்றன. லிட்டில்டன் பாளையங்கோட்டைக்கு அதிகாரியாக மாற்றலாகி வரும்போது கோகிலாவும் அவருடன் வந்தார். அதன்பின் தமது வாழ்நாள் முழுவதும் பாளையங்கோட்டையே கோகிலாவின் ஊரானது. லிட்டில்டன் தமது பெருஞ்சொத்துகளை கோகிலாவிற்கு அளித்துவிட்டு மறைந்தார். பின்னர் கோகிலா பெரிய அளவில் சமூக சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். இதற்காகத் தமது சொந்தப் பணத்திலிருந்தும் செலவு செய்தார். உதாரணமாக, மக்களின் பயன்பாட்டிற்காகக் கோட்டையின் கிழக்கு வாசல் அருகில் ஒரு கிணறு வெட்டினார். அது இன்றளவும் பாப்பாத்திக் கிணறு என்று மக்களால் வழங்கப்படுகிறது. பாளையங்கோட்டை எனும் ஊரோடு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரங்களிலும் அவர்தம் மக்கள் சேவையினால் பெரிதும் அறியப்பட்டார். ஹேரி லிட்டில்டனுடன் மணம் புரியாமல் வாழ்ந்தமையால் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் அளிக்க மறுத்த பாதிரியார் ஷ்வார்ட்ஸ், பின்னர் லிட்டில்டன் மறைவுக்குப் பின் கோகிலாவின் அளப்பரிய சமூக சேவையை மனதிற் கொண்டு அவருக்கு ஞானஸ்நானம் வழங்கினார். கோகிலா குளோரிந்தா அல்லது கிளாரிந்தா ஆனார். திருநெல்வேலியில் முதன் முதலாகக் கிறித்தவத்திற்கு மாறியவராக கிளாரிந்தா அம்மையார் அறியப்படுகிறார். கோட்டையின் கிழக்கு வாசல் அருகே அவர் கட்டமைத்த தேவாலயமும் பள்ளிக்கூடமும் இன்றும் அவர் பெயர் கூறி விளங்குபவை. சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் நிவந்து விளங்கிய அவரது வரலாற்றில் இருந்துதான் நெல்லையில் கிறித்தவ திருச்சபையின் வரலாறு தொடங்க முடியும். 1806 இல் மறைந்த அவரது கல்லறை அவர் கட்டிய அந்த தேவாலயத்தின் உள்ளேயே அமையப் பெற்றுள்ளது. நெல்லையில் தென்னிந்திய திருச்சபைக்கும் கல்வி நிலையங்களுக்கும் அடித்தளமிட்டவர் கிளாரிந்தா அம்மையார் என்றால், அக்கட்டிடத்தை வலுவாக எழுப்பியவர் ஜெர்மனியில் இருந்து கிறித்தவ மத போதகராகப் பாளையங்கோட்டைக்கு 1820இல் வந்த சார்லஸ் தியோஃபிலஸ் இவால்ட் இரேனியஸ் (C.T.E. Rhenius) அவர்கள். அவர் திருநெல்வேலிப் பகுதியில் கிறித்தவ சபையின் சுமார் 370 கிளைகளை நிறுவினார்; 107 பள்ளிகளை ஆரம்பித்தார். பாளையங்கோட்டையின் முருகன்குறிச்சி பகுதியில் அவர் 1826 இல் கட்டிய சிறிய ஆலயம் இன்று ஊசிக்கோபுரம் என்று மக்களால் பரவலாக அறியப்படும் தூய திருத்துவப் பேராலயமாக (Holy Trinity Cathedral), பாளையங்கோட்டையின் ஒரு முகவரியாக (Landmark) வளர்ந்து நிற்கிறது. அதன் அருகில் அவர் ஆரம்பித்த பெண்களுக்கான பள்ளி இன்று மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே விடுதியுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி என்ற சிறப்புக்குரியது. அவர் தொடங்கிய பள்ளிகளைத் தொடர்ந்தே நெல்லை மற்றும் பாளையில் ஏனைய பள்ளிகள் உருவெடுத்தன. எனவே பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட் எனப் போற்றப்பட்டதில் இரேனியஸ் அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. அன்றைக்கு சமூகத்தில் ஆதிக்க சக்தியாக விளங்கிய வேளாளர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு வலுவான தொடக்கத்தை உருவாக்க எண்ணிய திருச்சபைக்கு மாறாக, ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்ட நாடார் சமூகத்தினரை மதம் மாற்றி அவர்களைச் சமூக ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பதில் மும்முரம் காட்டினார் இரேனியஸ் ஐயர் (ஐயர் என்பது தலைமைப் பண்பைக் குறிக்கும் சொல். கிறித்துவ மத குருமார்களை ஐயர் என அழைப்பது வழக்கம்). உயர் சாதியினர் மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோரைத் (குறிப்பாக நாடார் சமூகத்தினரை) துன்புறுத்துவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பல கிறித்தவ கிராமங்கள் இரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன - நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், ஆரோக்கியபுரம், இரட்சணியபுரம் என்று பல. குறிப்பாக, ஜெர்மனியைச் சார்ந்த டோனா பிரபு என்பவரின் நிதியுதவியோடு இரேனியஸ் அமைத்த ஊர் டோனாவூர் என வழங்கலாயிற்று. மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோர் தாங்கள் முன்னர் கொண்டாடிய குரங்கணி அம்மன் கொடை விழா சமயத்தில் அவர்களுக்கு மாற்று விழாவாக மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இது நெல்லை திருமண்டலத்தில் அனைத்து திருச்சபைகளையும் ஒருங்கிணைக்கும் தோத்திரப் பண்டிகையாக பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு மிக்கவர் இரேனியஸ். அவர் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உயர் சாதியினர் எதிர்ப்பையும் மீறி, அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர வேண்டும், விடுதியில் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும் என்பதை நிலைநாட்டினார். இதற்கெல்லாம் சமூகத்திலும் திருச்சபையிலும் எதிர்ப்பு வலுக்கவே, பயிற்சிப் பள்ளியை இரண்டு ஆண்டுகள் இழுத்து மூடிவிட்டார். அவர் மத போதகர் மட்டுமல்ல, சமூகப் புரட்சியாளரும் கூட. அவர் காலத்தில் இந்தியா வந்த யூத மதப் போதகர் உல்ஃப், "புனிதர் பால் அவர்களுக்குப் பின் தோன்றிய மிகப்பெரிய அப்போஸ்தலர் இரேனியஸ்" என்று புகழாரம் சூட்டினார். கிறித்தவ சமயப் பணியுடன் அவரது தமிழ் இலக்கியப் பணியும் போற்றத்தக்கது. சென்னையில் முகவை ராமானுஜ கவிராயரிடம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும், நெல்லையில் திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழறிஞரிடம் பதினான்கு வருடங்கள் இலக்கண, இலக்கியங்களையும் கற்றார். பின்னர் வேதாகம மொழியாக்கங்கள், 'தமிழ் இலக்கணம்', 'பூமி சாஸ்திரம்' என்னும் அறிவியல் நூல் எனப் பல படைப்புகளைத் தந்தவர் இரேனியஸ் ஐயர். உரைநடையில் அக்காலத்தில் இருந்த கூட்டெழுத்து முறையை மாற்றித் தற்கால வடிவில் எழுத்துகளுக்கு இடையில் இடம் விட்டு எழுதும் வழக்கத்திற்கு வித்திட்டவர் இரேனியஸ். இத்தகு தமிழ்ப் பணியால் வீரமாமுனிவர், ஜி.யு. போப், இராபர்ட் கால்டுவெல் வரிசையில் நிற்பவர் இரேனியஸ். சமூகப் புரட்சியாளரான இரேனியஸ் தமது உறுதியான சமூக நிலைப்பாட்டின் காரணமாக திருச்சபையின் எதிர்ப்புக்குப் பெருமளவில் ஆளாகி சபையில் இருந்து 1835இல் விலக்கப்பட்டார். புரட்சியாளர்களை எந்தச் சமூகமும் எக்காலத்திலும் விட்டு வைப்பதில்லையே ! ஆனாலும் போராளிகள் தோற்பதில்லையே ! அவருக்குப் பெருமளவில் கிடைத்த ஆதரவாளர்களின் உதவியுடன் புதியதொரு சபையை நிறுவி சமூகப் பணியும் திருமறைப் பணியும் செய்து வந்தார். அவர் 1838 இல் மறைந்த போது பாளையங்கோட்டை அடைக்கலாபுரம் கல்லறைத் தோட்டத்திலிருந்து சற்று தூரத்தில் வெளியே - இன்று மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடுநாயகமாக - அடக்கம் செய்யப்பட்டார். கல்லறைத் தோட்டத்தில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர் தனித்துவமான பெருமை பெறுவதற்கே அத்தனையும் நிகழ்ந்தனவோ என்னவோ ! அந்தக் கல்லறை தோட்டமே அவர் திருச்சபை பொறுப்பில் இருந்தபோது ஆங்கிலேய மாவட்ட நிர்வாகத்திடம் மனுச் செய்து திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபைக்கு அவர் பெற்றுத் தந்தது. அவர் சபையில் இருந்து விலக்கப்பட்டதால் அங்கு அவருக்கு இடமில்லாமல் போனது. வெகு காலம் கழித்து 1980களில் இரேனியஸின் பெருமையுணர்ந்து தென்னிந்திய திருச்சபை அவரையும், அவர்தம் அளப்பரிய சமூக, சமயப் பணிகளையும் அங்கீகரித்தது. பொருநை நதிக்கரை வரலாற்றில் இரேனியஸ் ஐயரைப் பற்றி இவ்வளவு நீளமாக நான் எழுதியதற்குக் காரணங்கள் இரண்டு. இன்றைய கல்வி நகரம் பாளையங்கோட்டையின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முதன்மையானது என்பதும், அவரது பெருமையான வரலாறு இன்றைக்கு தென்னிந்திய திருச்சபை மக்களிலேயே பலருக்கும் தெரியவில்லை என்பதும். இரேனியஸ் அவர்கள் திருநெல்வேலியிலும் சுற்று வட்டாரங்களிலும் விதை போட்டு ஆரம்பித்து வைத்த கல்வி நிலையங்களுக்குப் பின்னர் ம. தி. தா இந்து பள்ளி/கல்லூரி, தூய யோவான் பள்ளி/கல்லூரி, தூய சவேரியார் பள்ளி/கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் பள்ளி/கல்லூரி, புனித இஞ்ஞாசியார் பள்ளி/கல்வியியல் கல்லூரி என்று நெல்லை, பாளையில் தோன்றி இப்போது நூறு முதல் நூற்றைம்பது ஆண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றன. ஆஸ்க்வித் நினைவு கண் தெரியாதார் பள்ளி, ஃபிளாரன்ஸ் ஸ்வைன்ஸன் காது கேளாதார் பள்ளி என அக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு தென்னிந்திய திருச்சபையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவையே தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட கண் தெரியாதார், காது கேளாதார் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளை ஆரம்பிக்கக் காரணமான சாராள் தக்கர், ஆஸ்க்வித், ஃபிளாரன்ஸ் ஸ்வைன்ஸன் இவர்களது வள்ளன்மையும் சமூக சிந்தனையும் பெரும் போற்றுதலுக்குரியன. இம்மேதகு கல்விச் செயல்பாடுகளால் பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் என்று அக்காலத்தில் வழங்கலாயிற்று. ஜெர்மனியிலிருந்து வந்த இரேனியஸ் ஐயரின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசிய நாம் நெல்லை மண்ணின் தமிழ்ச் சான்றோரான எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா.சு. பிள்ளை (கா. சுப்ரமணிய பிள்ளை), சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, ச. வையாபுரி பிள்ளை, புதுமைப்பித்தன் ஆகியோரை நினைவு கூராமல் கடந்து செல்ல இயலாது. ஒவ்வொருவரின் தமிழ்ப்பணி பற்றி விலாவாரியாக எழுத ஒரு புத்தகமே போதாது. மேலும் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே உரித்தாகிப் போனதால், நெல்லை மண் மட்டுமே அவர்களைச் சொந்தம் கொண்டாட இயலாது. இச்சான்றோர் பெருமக்களும் இனி நாம் காணப்போகும் சில பண்பாளர்களும் வேளாளர் குலத்தவராகவே திகழ்வது தற்செயல் நிகழ்வு என்று சொல்வதற்கில்லை. நெல்லையிலும் சுற்று வட்டாரங்களிலும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் அமைந்ததும் அவர்களில் பலர் கற்றலில் சிறந்து விளங்கியமையும் காரணம் எனலாம். ஆதிக்க சாதியினராய், அவர்கள் சில சாதியினர் - குறிப்பாக நாடார் பெருமக்கள் - மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைக்கு எதிராக இரேனியஸ் போன்றோர் போராடிய வரலாறு கண்டோம். அதே ஆதிக்க சாதியிலும் புரட்சிகர சிந்தனையாளர்கள் தோன்றியதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக, சுயசாதி விமர்சனமாக 'நாசகாரக் கும்பல்' என்ற சிறுகதையை அன்றைய நாளில் படைக்கும் துணிவு புதுமைப்பித்தனிடம் இருந்தது. ஜவுளி வணிகத்தில் கோலோச்சிய ஆர்.எம்.கே. விஸ்வநாத பிள்ளை துணிகளுக்குப் பஞ்சம் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் வாங்கும் துணிகளுக்கு அதிகபட்ச அளவு வகுத்து, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் சாதிப் பாகுபாடின்றி அக்காலத்திலேயே நியாய விலையில் வழங்கினார்; வணிகத்தில் அறம் தலையாயது என்று நிலைநாட்டினார். நெல்லை நகரில் குமார விலாஸ் உணவகம் நடத்திய திராவிட இயக்க சிந்தனையாளரும் பெரியாரின் சீடருமான பிரமநாயகம் பிள்ளை தமது உணவகத்தில் சாதி பேதமின்றி எல்லோரும் ஒன்றாகத்தான் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றும், அதனை ஏற்காதார்க்குத் தமது உணவகத்தில் இடமில்லை என்றும் அறிவிப்பு பலகை வைத்து உயர் சாதியினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே சமூக நீதியை நிலைநாட்டினார். இவ்வாறு ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழ்ந்தது எம் ஊரே ! பதிவு செய்யப்பட்ட தரவுகளானாலும் செவிவழிச் செய்திகளானாலும் நினைவலைகளில் (Nostalgia) மூழ்கித் திளைப்பது திருநெல்வேலிக்காரனுக்கு, அவன் ஊர் அல்வாவை அவனே ரசித்துச் சுவைப்பது போன்றது. கட்டுரையை முடித்தே ஆவது என்று முடிவெடுத்த தருணத்திலும் கூட அந்நினைவலைகள் புதிது புதிதாகத் தோன்றி ஆர்ப்பரிக்கின்றன. கட்டுரை என ஆரம்பித்ததே இரண்டு பகுதிகளாய் வந்து நிற்கின்றது. புத்தகம் எழுதும் ஆசையும் துணிவும் எப்போதாவது ஏற்பட்டால் அந்த அலைகளில் மென்மேலும் இறங்கலாம்; இப்போதைக்குக் கால் நனைத்ததோடு கரை திரும்பலாம். நான் எழுதாவிட்டாலும் வேறு திருநெல்வேலிக்காரன் வந்து எழுதுவான்.
  5. சுட்டு விடுவார்கள்........... பலரும் துவக்குகளை காவிக் கொண்டு திரிகின்றார்கள். கொக்கு, நாரைகள் போன்றவற்றைச் சுட்டால் தான் பெரும் பிரச்சனையாகி விடும். ஆனால், கடற்கரையில் குந்தி இருந்தார், அதனால் சுட்டேன் என்றால், பொதுவெளியில் ஆதரவு கொடுப்பார்கள்..........🤣.
  6. அமெரிக்க கடற்கரைகளில் அளவுக்கதிகமான கழிவறைகள் கட்டியுள்ளனர். நான் ஒருதடவை வீதியில் சிறுநீர் கழித்ததற்கு 50 டாலர்கள் தண்டமாக கட்டியுள்ளேன்.
  7. இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன். மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை துணிகரமாக செயற்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். இங்கே அவர் புகழுக்காகவும், பேஸ்புக் லைக்ஸ் இற்காகவும் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கின்றார் எனும்படியாக பின்னூட்டங்கள் உள்ளன. உண்மையில் அவரது நிலையில் நின்று பார்த்தால் தனது இருப்பை தக்க வைக்க சமூக ஊடகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பை பேணவேண்டியது தனிப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் ஒன்றாகவும் காணப்படலாம். அவருக்கு எதிராக எத்தனை எதிரிகள் உள்ளார்களோ தெரியாது. இந்தவகையில் பார்த்தால் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை அவர் இடுவதும், நேரலைக்கு வருவதும் தவறாக தெரியவில்லை. சமூகத்திற்காக குரல் கொடுக்க வந்த ஒருவரை பைத்தியக்காரன், தலை சுகமில்லாதவர், அங்கோடை கேஸ் என சிலர் விளிப்பது, கதை கட்டிவிடுவது எமது சமூகத்தின் தரத்தை காண்பிக்கின்றது. காலங்காலமாக தாத்தா, பாட்டா, அம்மா, அப்பா என சாகவச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தைகள் பிறந்த சரித்திரம் மாற்றப்பட்டு ஆறு மாதங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரசவங்களே நடந்தன எனும்போது இந்த அசமந்த போக்கை, அக்கறையீனத்தை மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டியது பலருக்கு கெளரவ பிரச்சனையாகிவிட்டது. தமது கெளரவங்களை காப்பாற்றிக்கொள்ள மருத்துவர் அர்ச்சனாவிற்கு தலை சுகம் இல்லை, இவர் புகழிற்கு அடிமையாகிவிட்டார் என பிரச்சாரம் செய்தால் தாம் தப்பிக்கொள்ளலாம் என தவறுகள் செய்தவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ.
  8. கட்சி மற்றும் வேட்பாளர்கள் கொடுக்கும், சொல்லும் வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்களிலிருந்து தான் நாங்கள் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது சரியே, விசுகு ஐயா. ஆனால், ஒவ்வொரு பொதுமகனிடனும் ஓரளவாவது பொதுநலமும், நீண்டகால நோக்கும் இருக்க வேண்டும் என்பதும் அதே ஜனநாயகத்தின் எதிர்பார்ப்பு தானே. இதைவிட மனிதாபிமானம் என்பதும் தன்னளவில் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும் தானே. 'அகதிகளுக்கு எல்லைகளை மூடி விடுவோம்............' என்ற ஒரு காரணம் போதும் எனக்கு அப்படிச் சொல்லும் கட்சியிடம் இருந்து விலகுவதற்கு.
  9. ஒரு மனிதர் மரணமடைந்து விடுகின்றார் ..... நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது. அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர். புரிந்து கொள்ளுங்கள்... நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள்☹️ உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள். உங்களுக்காக கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம். ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும். இப்போது சொல்லுங்கள். உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் வாழ்க்கை இறைவனைத் தவிர யாரையும் நீங்கள் திருப்திப்படுத்த தேவையில்லை யாரும் உங்களை திருப்திப்படுத்த போவதும் இல்லை. எனவே நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள் வாட்ஸ் அப்பில் வந்தது....
  10. நான் இருக்கும் இடத்திலும் வேலைசெய்யும் இடத்திலும் என்னை இந்தியன்/பாக்கிஸ்தான் என்றுதான் கணித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் நானொரு முஸ்லீம் எனவும் நினைக்கின்றனர்.
  11. அதே ஸ்கின் கலரில் பிறக்கவைத்து ஏழரையை கொடுத்திருக்கிறார் கடவுள். சிங்கையில் நானும் இந்தியன் தான். இந்தியன் என்பதை இனமாக்கி வைத்துள்ளனர். வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கியும் பார்த்தேன். ம்ஹும் ... பாக்கி என்று கூப்பிடவில்லையே என்பது ஒருவகையில் சந்தோசம்
  12. பாம்பின் கால் பாம்பு அறியும். 😂 வாஸ்து பார்க்கின்ற நல்ல அனுபவசாலிகள், எங்கு குழி தோண்ட வேண்டும் என்று வாசனையை வைத்தே கண்டு பிடித்து விடுவார்கள். இதில் இந்தியர்கள், பலே… கில்லாடிகள். 🤣
  13. உங்கள் அறத்திலிருந்து வரும் நன்றியுணர்ச்சி தொடர்பாக எவருக்கும் சந்தேகம் இல்லை. மேற்கு ஏன் அகறிகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் அதன் பின்னால் அவர்களுக்கு உள்ள தேவையும் தங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன்.
  14. "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்" தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !! “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது? இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை? இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும். மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர். கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென” என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன? எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே" குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது. "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்." தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது. திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும். திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது. "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!! ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது. "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;" இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார். மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை] இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  15. ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெறிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கறுமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க.. போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தைத் தொடங்குவாங்க. இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க. திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர் மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாங்க. நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து சுருண்டு படுத்தான். அந்த வீட்டு ஆள் வந்து "ஐயா, உங்களைப் பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவராத் தெரியுது. வாங்கையா... வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார். நம்ம ஆளுக்கு நல்ல பசி தான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறு தான் ஜெயித்தது. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியைக் கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போடச் சொன்னார். கை கால் சுத்தம் பண்ணி விட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுத் தான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறணும்"னு சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாறினாங்க. சும்மா சொல்லக் கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான். சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும் போது அந்த அம்மா ஓடி வந்து "ஐயா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பத்திரமா எடுத்துட்டுப் போனாங்க. இதைப் பார்த்த நம்ம ஆளு "தூர வீசி எறியப் போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு தான். என்னோட மாமனாரும் உங்களைப் போல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரே ஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம். நீங்க வந்து வாழை இலையில் தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களைப் பட்டினியாப் போடவும் மனசு வரலே. அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்குச் சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்குச் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிக் கிட்ட மாதிரி ஆகிப் போச்சு. சரி. இந்த கறுமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்துத் தூங்கினான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்து விட்டு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டம்மா இவனைப் பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க" என்றான். அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடித் துருவி ஒரு மண் பாத்திரத்தைக் கொண்டு வந்து அதில் இவனுக்குச் சாப்பாடு வைத்தாள். திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சு. இதைப் பார்த்ததும்... அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி, குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது . "என் புருஷன் சாகக் கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில் தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படிப் போட்டு உடைச்சிட்டானே"ன்னு அலறுச்சு. நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கறுமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான். மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனைச் சாப்பிடச் சொன்னாள். இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அது மாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்தது. பாட்டி நமக்குத் தான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான். இவன் கடிச்சதும் பாக்கு உடைபடுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள். "ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம் தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல... "பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத் தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டுக் கடிக்க முடியாமே எடுத்து வச்சிருந்தேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலி தான்"ன்னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சா. நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான். "போதும்டா சாமி காசிக்குப் போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இது தான் ஆசாரம் பார்த்தவன் காசிக்குப் போன கதை...! 😂 🤣 பழமையும் புதுமையும்
  16. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உடுக்கும் உடுப்புகளிலேயே சொர்க்க உடுப்பு எண்டால் சாரம் தான்.....அதிலை உள்ள சுகம் வேறை எதிலையும் இல்லை.குளிர்ந்தால் இழுத்து போர்த்துக்கொண்டு படுக்க......வெய்யிலுக்கு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு திரிய.....😄 all in one உடுப்பு
  17. சாரத்தை பற்றிய வர்ணனை அருமை ரசோதரன். எனக்கும் சாரம்தான் பிடித்த உடை. வீட்டில் நிற்கும் போது அதனைத்தான் அணிவேன். ஆனால் வீட்டிற்கு ஆட்கள் வரும் போது அதனுடன் நிற்க எனக்கு விருப்பம் இருந்தாலும், வீட்டுக்காரி நொய்… நொய்… என்று நச்சரித்து காற்சட்டைக்கு மாற வைத்து விடுவா. 😁
  18. 👍 அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று எங்களை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.
  19. இங்கு கொடுக்க்கப்படும் சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை. அவற்றை மீறமுடியாது. வருமான வரி குறைப்பு என்பது ஒரு திட்டவட்டமான வாக்குறுதி. அதுதுடன் இங்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுழற்சி முறையில் வேறு தேர்தல்களும் வந்து கொண்டேயிருக்கும். அவையும் மிக முக்கியமானவையே, ஆதலால் சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி விட்டு ஓடித் தப்ப முடியாது. சில வாக்குறுதிகள் திட்டவட்டமானவை அல்ல. உதாரணம்: ரஷ்யா - உக்ரேன் சண்டையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற வாக்குறுதி. வெளியேற முடியா விட்டால், வேறு விதமாக உருட்டுவார்கள். வேறு வழிகளில் அரசாங்கம் பணத்தை மக்களிடமிருந்து அறவிடுவதற்கு திருத்தங்களும், வாக்களிப்பும் நடக்க வேண்டும். பல மாநிலங்கள் எதிர்க்கும். ஆனால் சமூக நலத் திட்டங்களை, ஆராய்ச்சிகளை, உதவிகளை மத்திய அரசு குறைக்கலாம். அதைத் தான் செய்வார்கள்.
  20. "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்] "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!" "சுயநல ஆசைகள் எங்கும் வளர்கிறது சுதந்திரமாக மனித மனதிலும் பதுங்குகிறது சுழன்று சுழன்று அவனை கெடுத்து சுருக்கி விடுகிறது அவனின் இதயத்தை!" "எமக்கு வேண்டியதை நாங்கள் எடுக்கிறோம் எம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் எதுக்கு எடுத்தாலும் எம்மை முதல்நிறுத்தி எடுத்த காரியத்துக்கு நியாயம் கூறுகிறோம்!" "நாங்கள் மன மற்றவர்களாகத் தோன்றுகிறோம் நாடி வருபவர்களுக்கு கையை விரிக்கிறோம் நாதியற்ற மக்களை வரவேற்பதும் இல்லை நாணம் எம்மை வருந்துவதும் இல்லை!" "நாங்கள் காயப் படுத்திய மக்களை நாம் அழித்த எண்ணற்ற உயிர்களை நாம் விட்டுச் சென்ற அழிவின் பாதையை . நாங்கள் எனோ இன்னும் உணரவில்லை!" "இருப்பதை விட்டு இல்லாததுக்கு ஏங்குகிறோம் இல்லாத இடங்களிலும் தேடி பார்க்கிறோம் இடுகாடுவிலும் மனிதத்தை புறக்கணிக்கிறோம் இறுமாப்புடன் எம்மிடம் தவறில்லை என்கிறோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. "கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... " "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருப்பை தனதாக்கி மற்றவனை தாழ்த்தி இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்லவே !" "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமற்ற காட்டு மிராண்டிகள் அவர்களல்ல இந்நாட்டின் பூர்வீக குடிகளில் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ உரிமை உடையவர்களே ! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற கறுப்புமனமே ! இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " "இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [On the night of 24 July 1983, anti-Tamil rioting started in the capital city of Colombo and then spread to other parts of the country. Over seven days, mainly Sinhalese mobs attacked, burned, looted, and killed Tamil civilians. Estimates of the death toll range between 400 and 3,000. and 150,000 people became homeless. Around 8,000 homes and 5,000 shops were destroyed.The economic cost of the riots was estimated to be $300 million. Even I was personally left Colombo, on Indian cargo ship from Colombo harbour to KKS harbour with family and many others as an internal displaced refugees. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும். இதில் நானும் என் குடும்பமும் மற்றும் பலரும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாக , கொழும்பு துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை முகத்துக்கு [KKS] இந்தியாவின் ஒரு சரக்கு கப்பலில் சென்றது இன்னும் மறக்க முடியாது.]
  22. "அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது] ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர். இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர். உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக தெரிவும் செய்யப்பட்டார். அதுமட்டும் அல்ல, சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். ஆனால் அந்த கனாக்காலம், 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், எல்லாளனை நடத்திய விதம் மாதிரியே, இராமநாதனையும் சிங்கள அரசியல் வாதிகள் ஒதுக்கத் தொடங்கினார்கள். இலங்கையில் நிலவிய அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது. அந்த கால இடைவெளியில் தான், 1982 ஆண்டு தொடக்கத்தில், விஜயவீர என்ற இளைஞனும், மகிழ்விழி என்ற இளம் பெண்ணும் பக்கத்து பக்கத்து கிராமங்களில் வசித்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - விஜயவீர சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர், மகிழ்விழி ஒரு தமிழர். அவர்களிடம் கலாச்சார வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களின் காதல் எல்லைகளைத் தாண்டியது! அதுமட்டும் அல்ல, அங்கு இன்னும் ஒரு கனாக்காலம் நிலவியதால், அவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் அவர்களின் உறவை எந்த இன ரீதியாகவும் பார்க்கவில்லை. காலம் செல்ல செல்ல, 1983 ஜூலைக்கு பின் அவர்களின் கனவு காலம் மறைய ஆரம்பித்தது. மலை அடிவாரத்தில், பரந்தவெளியில், எந்த பயமும் தயக்கமும் இன்றி இருவரும் மாலைப்பொழுதில் முழு நிலாவின் அழகை பார்த்து ரசித்து கொஞ்சி பேசி காதல் புரிந்த அந்தக் காலம் 'அதுவொரு கனாக்காலம்' ஆக அவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஒரு காலத்தில் நிலவிய தீவின் சிறப்பியல்புகள் குறையத் தொடங்கி, பதட்டங்கள் தோன்றின. பற்றாக்குறையான வளங்கள், வேலை வாய்ப்புகள் சமூகங்களுக்கிடையில் சச்சரவுகளைத் தூண்டின, மேலும் சில அரசியல், மத தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை வளப்படுத்துவதற்குப் பதிலாக, பிளவுபடுத்தி குறுக்குவழியில் இலாபம் அடைய பார்த்தனர். பல நூற்று ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை மண், தவறான புரிதல்கள் மற்றும் அச்சங்களால் தூண்டப்பட்டு, இன பாகுபாடு மற்றும் இனப் பதட்டங்களை அனுபவிக்கத் தொடங்கியது. ஆழமான காதல் வசப்பட்ட விஜயவீராவும் மகிழ்விழியும், இந்த வளர்ந்து வரும் இன கொந்தளிப்பின் மத்தியில் தங்களைக் கண்டுகொண்டனர். ஒரு காலத்தில் அவர்களது உறவை ஆதரித்த அவர்களது குடும்பங்கள் மாறிவரும் காலத்தின் அழுத்தத்தால், மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள், சமூக எதிர்பார்ப்புகள், பயம் காரணமாகவும் அவர்களின் எண்ணங்களை மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கினர். மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளின் உறவை இனம் மற்றும் கலாச்சாரத்தின் கண்ணாடிகளின் ஊடாக இன்று பார்க்கத் தொடங்கினர். எதுஎவ்வாறாகினும், விஜயவீராவும் மகிழ்விழியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். தங்கள் சமூகங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பிளவை தங்களின் பிணைப்பு ஒரு பாலமாக சரிப்படுத்தும் என்று நம்பினர். அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் நிலத்தை வரையறுத்திருந்த ஒற்றுமையை தங்கள் தங்கள் மக்களுக்கு நினைவூட்டும் நம்பிக்கையில், புரிந்துணர்வு மற்றும் பச்சாதாபத்திற்காக உறவினருடனும் அயலவருடனும் வாதிட்டனர். அவர்களின் எண்ணம் எல்லாம் "அதுவொரு கனாக்காலம்" ஆக மாறாமல் என்றும் அது தங்களுக்கும் தங்கள் வருங்கால பிள்ளைகளுக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே! ஆனால், அவர்களின் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதிகரித்த பதட்டங்கள் இரு தரப்பிலும் தீவிரவாதக் குரல்களுக்கு வழிவகுத்தது, பிளவுகளை விரிவுபடுத்தியது மற்றும் விஜயவீராவும் மகிழ்விழியும் பகிர்ந்து கொண்ட அன்பை மறைக்க முயன்றது. அவர்களால் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான தெளிவான பாதை, பனிமூட்டமாக வளர்த் தொடங்கி, தப்பெண்ணம் மற்றும் பயத்தின் இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டது. ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இது ஒரு கனாக்காலமாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் எல்லாவற்றையும் மூடி மறைக்க தொடங்கினர். துரதிர்ஷ்டவசமாக, 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மேல் மீண்டும் ஒரு வன்முறை ஏவிவிடப்பட்டது. வன்முறை நகரங்கள், கிராமங்கள், குடும்பங்கள் மற்றும் உயிர்களை கிழித்தெறிந்தது. இந்த குழப்பத்திற்கு மத்தியில் விஜயவீராவும் மகிழ்விழியும் கட்டாயத்தின் பேரில் பிரிக்கப்பட்டனர். ஒரு காலத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர்களது காதல், அவர்களது நிலத்தை, உயிரை மூழ்கடித்திருந்த வெறுப்பின் முகத்தில் அற்பமானதாகத் தோன்றியது. ஆண்டுகள் சென்றன, மோதலின் காயங்கள் ஆழமாக ஓடியது. விஜயவீரா மற்றும் மகிழ்விழியின் காதல் கதைகள் புராணக்கதைகளாக மாறிவிட்டது. கொந்தளிப்பின் போது இழந்த காதலை மீண்டும் புதுப்பிக்க முடியவில்லை. பாரபட்சம், இனத்துவேசம் மற்றும் பயத்தின் காரணமாக ஒற்றுமை கனவு சிதைந்ததை நல்ல உள்ளங்கள் பல உணர்ந்து தமது அந்த முன்னைய கனாக்காலத்தை வருத்தத்துடன் திரும்பிப் பார்த்தனர். 1987-89 ஜேவிபி புரட்சி மற்றும் 1987-90 இந்திய அமைதி காக்கும் படையின் போர் என இலங்கை முழுவதுமே ஒரே பதட்டத்திலும் பயத்திலும் மூழ்கி இருந்தது. என்றாலும் மகிழ்விழி முன்பு விஜயவீராவை சந்திக்கும் மலை அடிவாராத்தில் பரந்தவெளியில், ஆனால் இன்று சந்திரன் தோன்றாத அமாவாசை மாலையில் வானத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அவள் எண்ணம் எல்லாம், விஜயவீராவுடன் மகிழ்வாக காலம் கழித்த அந்த கனாக்காலம் மட்டுமே ! ஆமாம் அவளுக்கு "அதுவொரு கனாக்காலம்" ஆக இன்று மாறிவிட்டது! "என் அன்பு ஒன்றில் நீ வாழ்ந்தாய் உன் அன்பு ஒன்றில் நான் வாழ்ந்தேன் நம் அன்பு கடலில் இருவரும் நீந்தினோம் நாளை நாமதேயென ஒன்றாய் மகிழ்ந்தோம்!" "உன் துன்பம் என்னை வலிக்கும் என் துன்பம் உன்னை வலிக்கும் நம் காதல் பூந் தோட்டத்தில் இன்ப மலர்கள் பூத்த காலமது!" "என் நிழலாக இருட்டிலும் நீயிருப்பாய் உன் மழலையாய் என்றும் நானிருப்பேன் இனம் மதம் தாண்டியதே நம்காதல் மனிதம் மட்டுமே அங்கு மலர்ந்தது!" "பொல்லாத வெறியர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான வார்த்தைகளை உண்மையென பரப்பி பிரியாத உள்ளங்களை தூர விலக்கி அதுவொரு கனாக்காலம் ஆக்கி விட்டார்களே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  23. அப்புறம் வேற என்ன பண்ணுவாங்களாம்......... மோடிஜீ எத்தனை தடவை தமிழ்நாட்டிற்கு வந்து போனார், கன்யாகுமரியில தவம் கூட இருந்தாரே.......... ஒரு சீட், ஒரே ஒரு சீட் கிடைச்சுதா தமிழ்நாட்டில........ தேர்தலில் அவர்களுக்கு தமிழ்நாடு கொடுத்த முட்டைக்கு பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு அவர்கள் முட்டை போட்டிருக்கின்றார்கள். இது தான் இவர்களின் சுயரூபம். ஒரு நீலநரி போல நிறம் மாறி அப்பப்ப திருக்குறள் கூட சொல்லுவார்கள்......... பொதுவாகவே எல்லோரிடமும் ஏமாறும் தமிழ் மக்கள் இந்தக் கூட்டத்திடம் மட்டும் ஏமாறாமல் இருப்பது அதிசயமே........
  24. சாமியாரே! நீங்கள் வீபூதிக்குறி நெற்றியில் வைத்துச் சந்தணப் பொட்டுடன் குங்குமமும் இட்டு வேலைக்குச் சென்றால் அவர்கள் நினைப்பு கைலாய நித்தியானந்தாவை நினைவூட்டி உங்களை யாரென்று அறியவைக்கும்.😆
  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூரிய ஒளி ஊடுருவ முடியாத ஆழ்கடலில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆழ்கடலில் "இருண்ட ஆக்ஸிஜன்" உற்பத்தி ஆவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடற்பரப்பில் இருக்கும் `உலோக முடிச்சு’ பந்துகளில் இருந்து ஆக்சிஜன் உருவானது விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பாதி கடலில் இருந்து கிடைப்பதாகும். இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, கடல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகிறது என்றும் இந்த செயல்பாட்டுக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்றும் புரிந்துக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியாவதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். ஆம், 5 கிமீ ஆழத்தில், சூரிய ஒளி ஊடுருவ முடியாத இடத்தில், இயற்கையாக உருவாகும் உலோக "முடிச்சுகள்" மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, உலோக முடிச்சுகள் கடல் நீரை (H2O) ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரிக்கின்றன. பல சுரங்க நிறுவனங்கள் இந்த உலோக முடிச்சுகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளன. அப்படி நடந்தால் இயற்கையாக நிகழும் செயல்முறையை சீர்குலைக்கும் என்று கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். சுரங்க நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை எடுக்க ஆரம்பித்தால் அவை உருவாக்கும் ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். ஆக்ஸிஜன் பற்றிய நம்பிக்கையை மாற்றிய ’உலோக முடிச்சு’ "நான் இதை முதன் முதலில் 2013 இல் கவனித்தேன். கடலில் சூரிய ஒளியே இல்லாத, முழு இருளில் அதிக அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது" என்று ’ஸ்காட்டிஷ் அசோசியேஷன் ஃபார் மரைன் சயின்ஸ்’ அமைப்பின் முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் விளக்குகிறார். "அந்த சமயத்தில் நான் அதை புறக்கணித்தேன். காரணம் ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி ஆகும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. நான் அதை நம்பினேன்” என்று விளக்கினார். "இறுதியில், இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பை பல ஆண்டுகளாக நான் புறக்கணித்து வந்ததை என்பதை உணர்ந்தேன்" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்வீட்மேன் அவரது சக விஞ்ஞானிகளுடன் ஹவாய் மற்றும் மெக்சிகோ இடையே உள்ள ஆழ்கடல் பகுதியில் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டனர் - இது உலோக முடிச்சுகள் நிறைந்திருக்கும் கடலோரப் பகுதி. பட மூலாதாரம்,NOC/NHM/NERC SMARTEX படக்குறிப்பு,உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகள் பாறைகள் போல, ஆழமான கடற்பரப்பில் காணப்படுகிறது உலோக முடிச்சுகள் எப்படி உருவாகிறது? கடல் நீரில் கரைந்த உலோகங்கள், ஷெல் துண்டுகள் அல்லது பிற கழிவுகள் ஒன்றிணைந்து சில வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து உலோக முடிச்சுகள் உருவாகின்றன. இந்த செயல்முறை முழுமையாக நிகழ மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகும். இந்த உலோக முடிச்சுகளில் லித்தியம், கோபால்ட் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இருப்பதால் - இவை அனைத்தும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவைப்படும். எனவே பல சுரங்க நிறுவனங்கள் அவற்றைச் சேகரித்து மேற்பரப்பில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. பேராசிரியர் ஸ்வீட்மேன் கூற்றுபடி, உலோக முடிச்சுகள் உருவாக்கும் `இருண்ட ஆக்ஸிஜன்’ கடற்பரப்பில் இருக்கும் உயிரினங்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும். அவரது கண்டுபிடிப்பு, `நேச்சர் ஜியோசயின்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டது. அதே சமயம், முன்மொழியப்பட்ட ஆழ்கடல் சுரங்க முயற்சிகளின் அபாயங்கள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் புதிய கவலைகளை எழுப்புகிறது. உலோக முடிச்சுகள் பேட்டரிகளைப் போல செயல்படுவதால் துல்லியமாக ஆக்ஸிஜனை உருவாக்க முடிகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். "நீங்கள் ஒரு பேட்டரியை கடல் நீரில் போட்டால், அது நுரைகளை உமிழத் தொடங்குகிறது. அதற்குக் காரணம், மின்சாரம் கடல்நீரை ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனாக [குமிழ்கள்] பிரிக்கிறது" என்று பேராசிரியர் ஸ்வீட்மேன் விளக்கினார். நாகப்பாம்பு விஷத்தை முறிக்கும் மலிவு விலை மருந்து கண்டுபிடிப்பு20 ஜூலை 2024 "இந்த உலோக முடிச்சுகளிலும் இந்த செயல்பாடு தான் நடக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இது ஒரு டார்ச்சில் உள்ள பேட்டரியை போன்ற தன்மை கொண்டது" என்றார். "நீங்கள் ஒரு பேட்டரியை மட்டும் பயன்படுத்தும்போது, டார்ச் லைட்டை ஒளிர வைக்காது. இரண்டு பேட்டரிகள் பயன்படுத்தும் போது டார்ச்சை ஒளிரச் செய்ய போதுமான மின்னழுத்தம் உருவாகிறது. எனவே கடற்பரப்பில் முடிச்சுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தும் போது, அவை வேலை செய்கின்றன." ஆராய்ச்சியாளர்கள் இந்த கோட்பாட்டை ஆய்வகத்தில் சோதனை செய்து, உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அவர்களின் சோதனைகள் ஒவ்வொரு உலோகக் கட்டியின் மேற்பரப்பில் உள்ள மின்னழுத்தங்களை அளவிட்டன - முக்கியமாக அதில் இருக்கும் மின்சாரத்தின் ஆற்றல் ஆய்வு செய்யப்பட்டது. உலோக முடிச்சுகளில் இருந்த மின் சக்தி, ஒரு பொதுவான AA-அளவிலான பேட்டரியில் உள்ள மின்னழுத்தத்திற்கு கிட்டத்தட்ட சமமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதன்படி, கடலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் முடிச்சுகள் கடல்நீரின் மூலக்கூறுகளை பிளவுபடுத்தும் அல்லது மின்னாற்பகுப்பு (electrolyse) செய்யும் அளவுக்கு பெரிய மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சுரங்க நிறுவனங்களின் அபாயகரமான முயற்சி பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY/NOAA ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, ஒளி மற்றும் உயிரியல் செயல்முறையில் தேவை இல்லாமல், பேட்டரி மூலம் நிகழும் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்முறை, நிலவு மற்றும் வேறு கிரகங்களிலும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்கையில், உயிர்கள் செழிக்கக் கூடிய ஆக்ஸிஜன் நிறைந்த சூழல் அங்கு உருவாகும். `இருண்ட ஆக்ஸிஜன்’ கண்டுபிடிப்பு கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலத்தில் நிகழ்ந்தது. `கிளாரியன்-கிளிப்பர்டன்’ மண்டலம் (Clarion-Clipperton Zone) என்பது பசிபிக் பெருங்கடலின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பகுதியாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பகுதி ஏற்கனவே பல கடற்பரப்பு சுரங்க நிறுவனங்களால் ஆராயப்பட்டு வரும் ஒரு தளமாக உள்ளது. அந்த நிறுவனங்கள் உலோக முடிச்சுகளை சேகரித்து மேற்பரப்பில் ஒரு கப்பலுக்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன. அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம், "கடற்பரப்பு சுரங்கம், இந்த பகுதிகளில் உள்ள உயிர்கள் மற்றும் கடற்பரப்பு வாழ்விடங்களை அழிக்கும்" என எச்சரித்துள்ளது. ஆழ்கடல் சுரங்க நடவடிக்கைகளுக்கு விஞ்ஞானிகள் எதிர்ப்பு பட மூலாதாரம்,CAMILLE BRIDGEWATER படக்குறிப்பு,ஆராய்ச்சியாளர்கள் இந்த கோட்பாட்டை ஆய்வகத்தில் சோதனை செய்து, உருளைக்கிழங்கு அளவிலான உலோக முடிச்சுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். 44 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட கடல்சார் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அபாயங்களை எடுத்துரைக்கும் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். ஆழ்கடலில் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். ஆழ்கடலைப் பற்றி நாம் அறிந்ததை விட சந்திரனின் மேற்பரப்பைப் பற்றி நமக்கு அதிகம் தெரியும் என்கின்றனர் சில விஞ்ஞானிகள். அந்தளவுக்கு ஆழ்கடலில் பல கண்டுப்பிடிக்கப்படாத ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இந்த உலோக முடிச்சுகள் ஆழ்கடலில் இருக்கும் உயிர்கள் வாழ ஆக்ஸிஜனை வழங்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர், பேராசிரியர் முர்ரே ராபர்ட்ஸ், கடலுக்கு அடியில் சுரங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிரான மனுவில் கையெழுத்திட்ட விஞ்ஞானிகளில் ஒருவர். "ஆழ்கடல் உலோக முடிச்சுகளை அகற்றுவது நம்மால் புரிந்து கொள்ள முடியாத சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்துவிடும் என்பதற்கு ஏற்கனவே ஏராளமான சான்றுகள் உள்ளன" என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். "இந்த கடற்பரப்பு நமது கிரகத்தின் மிகப் பெரிய பகுதிகளை உள்ளடக்கியிருப்பதால், அவை ஆக்ஸிஜன் உற்பத்தியின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கலாம் என்பதை அறிந்தப் பின்னரும் ஆழ்கடல் சுரங்கத்தை முன்னெடுப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்." என்றார். பேராசிரியர் ஸ்வீட்மேன் மேலும் கூறுகையில்: "இந்த ஆய்வை நான் சுரங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒன்றாக பார்க்கவில்லை. நாம் ஆழ்கடலை இன்னும் விரிவாக ஆராய வேண்டும், ஆழ்கடலுக்குச் சென்று மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் சுரங்க நடவடிக்கைகள் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்” என்றார். https://www.bbc.com/tamil/articles/c2j39pdzjrdo
  26. தலைவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீண்டெளவில்லை.
  27. என‌க்கு சிங்க‌ள‌வ‌னுக்கு கீழ் அடிமையா வாழ‌ பிடிக்காது இது இன்று நேற்ற‌ல்ல‌ ப‌ல‌ வ‌ருட‌மாய் இருக்கு இன்னொரு போர் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம் ப‌ட்டு நுந்த‌து போதும் ஏதாவ‌து ஒரு நாடு த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌து அநீதி அவ‌ர்க‌ளுக்கு த‌னி நாடே தீர்வென்றால் அதோட‌ ம‌ற்ற‌ நாடுக‌ளும் ஆத‌ரிச்சா நில‌மை வேற‌..............................
  28. என்ன?? இது கிரிக்கெட்டா. ?? 😂🤣🤣😂 இல்லை பையன் அரசியல் தமிழ் ஈழத்தை எடுத்து போட்டு சொல்லுங்க உங்களுக்கு முதல் நிறைய பேர் அங்கே நிற்ப்பார்கள். கமலா எப்போது ட்ரம்புடன். நேரடியாக விவாதம் செய்வார் ?? அவரின் துணை ஐனதிபதி வேட்பாளர் யார்??
  29. டொக்டர் அர்ச்சுனாவை பொது வேட்பாளரா போட்டால் என்ன என்று யாழ்களத்தில் பேசப்படுகின்றது அவர் தான் ஒரு நேர்மையான மக்களுடைய உண்மையான அரசியல்வாதியாக இருப்பேன் என்று அறிவித்துள்ளார். தன்னை ஒரு யதார்த்தவாதி என்ற அப்படிபட்டவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்காக தமிழ் பொது வேட்பாளர் என்ற இவர்களது பகிடி வேலையில் இறங்க மாட்டார் என்று நம்புகிறேன்.
  30. கொரோனாவால் இறந்த சில முஸ்லீம்களின் உடல் எரிப்பு சம்பந்தமாக அமைச்சர் கேட்ட மன்னிப்பிற்கு, முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆனால்.... ஜூலை கலவரத்தில் தமிழர்கள் பல ஆயிரம் உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்த போதும்.. பொத்தாம் பொதுவாக விஜயதாச ராஜபக்ச கேட்ட மன்னிப்பிற்கு தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளமை கண்டிக்கப் படவேண்டியது. உங்களால்... தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் யோக்கியதை இல்லா விட்டால், தயவு செய்து ஒதுங்கி இருங்கள். செய்யக் கூடிய திறமையானவர்கள் அதனை தொடர்வார்கள். அரசியல் என்பது... வேலை மாதிரி... சொத்து, புகழ் சேர்ப்பதற்குரிய இடம் அல்ல. அது ஒரு இனத்திற்கு செய்யும் சேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
  31. எனக்கு அந்தப் பாக்கியம் லண்டஸ்தானில் நிறையக் கிடைத்தது…!
  32. இலங்கையில் நம்மவர் கேட்கும் பண உதவிகளில் அதி முக்கிய இடத்தை இந்த நகை அடகு பெறுகின்றது. அடகு காசு கட்ட வேணும் இல்லாவிட்டால் நகை போய்விடும் என்று கேட்பது ஒன்று. அடகு வைத்ததை வெளியில் எடுக்க உதவி செய்யுங்கோ என்பது இன்னொன்று. அண்மையில் என்னிடம் இன்னும் ஒரு படி சென்று நுட்பமான உதவி கேட்கப்பட்டது. தான் சொந்தக்காரர் ஒருவர் ஒப்படைத்து சென்ற நகையை அடகு வைத்ததாகவும் காசு கட்டாவிட்டால் நகை போய்விடும் என்றும் நகை போய்விட்டால் சொந்தக்காரருக்கு அவர்கள் வந்து கேட்கும்போது என்ன பதில் சொல்வது என்றும் கூறி உதவி கேட்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த திட்டம் அல்லது சலுகை நல்லவிடயமாகவே தெரிகின்றது. ஆனால் இது எல்லா அடகுபிடிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தாது போல் உள்ளதே.
  33. ட்ரம்ப் அவர்களின் உள்நாட்டு தனிநபர் மற்றும் நிறுவன வரித் திட்டங்கள், இறக்குமதி வரித் திட்டங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமானவையே. ஆனால் அவையே அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதகமானவை தானே. எவர் வந்தாலும் அமெரிக்காவின் இஸ்ரேல் பற்றிய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் வராது. அமெரிக்கா, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இஸ்ரேலைக் கைவிடாது. இன்று இங்கிருக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு பதினைந்து வருடங்களின் மேல் எடுக்கின்றது கிரீன் கார்ட் எனப்படும் நிரந்தர வதிவுடமை பெறுவதற்கு. இந்த ஆமை வேகம் ட்ரம்பின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கென்று புதிய சட்டம் எதுவும் அவர் இயற்றவில்லை, இருக்கும் சட்டத்தின் படியே வரிக்கு வரி போனார்கள், எல்லாம் அதுவாக குறைந்தது. இதைப் போலவே தான் எல்லை கடந்து ஓடி வரும் அகதி மக்களின் நிலையும். புதிய சட்டம் எதுவும் இல்லை, ஆனால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார்கள். இந்த இரண்டு கட்சிகளில் எவர் பதவிக்கு வந்தாலும், அமெரிக்காவிற்கு, அதன் நலனுக்கு தேவையான யுத்தங்களும், சண்டைகளும் நடந்து கொண்டேயிருக்கும். அது எந்த அதிபரையும் மீறியது. 👍.... சில கணிப்புகளில் இவர் முன்னால் நிற்கின்றார் தான், அண்ணை. ஆனால் பெரும்பாலான கணிப்புகளில் ட்ரம்ப் சில புள்ளிகள் இடைவெளிகளில் முன்னுக்கு நிற்கின்றார். அதுவும் முக்கியமாக அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ என்று இன்னும் சாயாமல் இருக்கும் மாநிலங்களில். அவை தானே தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன............ கலிஃபோர்னியாவில் ஐந்து புள்ளிகள் கமலா ஹாரீஸிற்கு கூடினாலும் அதனால் பயன் ஏதும் இல்லை........
  34. நீங்கள் கட்டிய பார்சலை யாராவது தட்டிக்கொண்டு போயிருந்தால் இப்படி சொல்வீர்களா சார்? எப்படியோ சேதாரம் இல்லாமல் கட்டிய பார்சலை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டதால் இப்படி புகழ்கிறீர்கள், ஆனால் சாமியாருக்கும் ஒரு பாசல் காத்துஇருக்கு என்று சொல்லலையே..... அதுதான் எனது கடுப்பு!
  35. கமலா ஹாரீஸின் தந்தையார் ஜமேக்கா நாட்டைச் சேர்ந்தவர். கரீபியன் அணி கிரிக்கட் வீரர்கள் போல இருப்பார். தந்தையின் சாயல் அதிகமாகவே இவருக்கு இருக்கின்றது. நிறமோ, உருவமோ ஒரு பொருட்டல்ல. அதே போலவே இந்திய மக்கள் சிலரின் அலட்டல்களும். அவர்கள் நாளுக்கொன்று, வாரத்திற்கு ஒன்று என்று ஏதாவதை இன்டர்நெட்டில் போட்டு உருட்டிக் கொண்டே இருப்பார்கள். ரஜனி அரசியலுக்கு வரப் போகின்றேன் என்று சாடைமாடையாகச் சொன்னாலே, கமலாவை மறந்து விடுவார்கள். ரஜனி கூட அவரின் படம் வெளியாவதற்கு முன் அப்படியும் சொல்லிக் கொள்வார். அமெரிக்க இன்றைய தேர்தல் கள நிலவரப்படி கமலா ஹாரீஸ் பின்னுக்கே நிற்கின்றார். இன்னமும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ளது. மாற்றங்கள் வரலாம். ட்ரம்ப் வந்தால் அமெரிக்காவிற்கு பரவாயில்லை. மற்றவர்கள் வந்தால் உலகத்திற்கு பரவாயில்லை.
  36. "சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 " இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம். என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன், ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது! ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை! 1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும் பின்பு தான் தெரிந்தது. ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும். மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம். எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம் வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்! சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்குத் தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம்? "மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே! காசு அறு விரையே! கரும்பே! தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா? இசையே என்கோ? தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி, தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி," குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம் அவள் உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்! அவர்கள் தூங்கிய கையோடு, தான் முன்பு வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக மாற்றி அமைத்து, ஓ! அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக, கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு 136] நினைவூட்டி சென்றது. இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து], ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள் நெற்றி இப்படி வேர்க்குதே? கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறாள்! "தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், ‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணி, பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே." 1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. அது மட்டும் அல்ல, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக காடையர்களாலும் அரசின் சில தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட இந்த கலவரம் அடங்க ஏழு நாட்கள் சென்றது குறிப்பிடத் தக்கது . முக்கியமாக அங்கு சிங்களக் காடையர் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர். இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும். அதாவது கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 ஜூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தன அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்: "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" இது ஒன்றே இந்த கலவரத்தின் நோக்கத்தையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்! இவை எல்லாம் தமிழர்களை நோக்கி 'சத்தம் போடாதே'. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே ' நிறைவேறிக்கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.! என் கதை வாசிப்பவர்களுக்கு, ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த கதை பற்றி 'சத்தம் போடாதே!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  37. இனக்கலவரத்தின் சாட்சியம் "சத்தம் போடாதே" அதிலும் இன்னொரு "சத்தம் போடாதே" இருட்டிலும் சொல்லிய விதம் அழகு.
  38. தெரியாமல் செய்தால் மன்னிப்பு கேட்கலாம் திட்டம் போட்டே செய்தால் அது இனப் படுகொலை.
  39. உண்மையில் இது நல்ல விடயம்........! --- சிறு தொழில்கள் ஊக்குவிக்கப் பட்டு தொழில் முனைவர்கள் உருவாக வாய்ப்புண்டு........! --- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல உருவாகும்.......! --- வேலை வாய்ப்புகள் அதிகமாகும்........! பகிர்வுக்கு நன்றி பிழம்பு .......! 👍
  40. உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே. எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும். 12/7 வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார் . உயர்தர வாழ்க்கை வாழ்பவர்கள் யாரென்று தேடினால் அவர்கள் எல்லோரும் வரி ஏய்ப்புச் செய்யும் வாய்ப்பைக் கொண்டிருப்போரே. எங்கள் போன்ற முதலாம் தலைமுறையினரில் வரிஏய்ப்புச் செய்ய வாய்ப்புகள் உள்ளவர்கள் மாத்திரமே (Professionals தவிர) வசதியாக வாழ முடியும். 12/7 வேலை செய்வோர் அந்த வகுப்பிற்குள் வரார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.