Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3057
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    9
    Points
    15791
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/30/24 in all areas

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டதும் காளான் போன்று எழுந்த புகை மண்டலம் கட்டுரை தகவல் எழுதியவர், லூசி வாலிஸ் பதவி, பிபிசி செய்தி 29 ஜூலை 2024 புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அன்றைய நாள் காலை… ஏற்கனவே வெப்பம் சற்றே அதிகரித்திருந்தது. சியேகோ கிரியாக்கே (Chieko Kiriake) தன் நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை துடைத்தபடி, ஒரு நிழலான பகுதியை தேடித் கொண்டிருந்த போது, தொலைவில் மிகப் பிரகாசமான ஒளி தோன்றியது. 15 வயதே நிரம்பிய சியோகோ அதற்கு முன் அப்படியொரு காட்சியைக் கண்டதில்லை. அப்போது நேரம் 8:15, நாள் ஆகஸ்ட் 6, 1945. ‘சூரியன் கீழே விழுவது போல நான் உணர்ந்தேன், எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது’ என அந்த நிகழ்வை நினைவுகூர்கிறார் சியோகோ. அவர் வசித்து வந்த ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா அப்போது தான் அணுகுண்டை வீசியிருந்தது. போர்க்களத்தில் முதல் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது அப்போது தான். அந்தசமயம் ஜெர்மனி ஐரோப்பியாவில் சரணடைந்து இருந்தது. இரண்டாம் உலகப்போரில் நேசநாட்டுப் படைகள் ஜப்பானுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சியோகோ அப்போது படித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரைப் போன்ற மூத்த மாணவர்கள் போர் காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்தனர். குண்டுவீச்சில் காயம்பட்ட சக நண்பரை தனது முதுகில் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடி பள்ளிக்கு அழைத்து சென்றார். பெரும்பாலான மாணவர்கள் மோசமான தீக்காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வகுப்பறையில் எண்ணெயைத் தடவி காயங்களுக்கு சிகிச்சை அளித்தார் சியோகோ. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் உருக்குலைந்து போன ஹிரோஷிமா நகரம் ‘அச்சமயம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் இருந்தது அது மட்டுமே. ஒருவரை அடுத்து மற்றொருவர் கண் முன்னே மாண்டனர்’ என கூறுகிறார் சியோகோ. ‘எங்களை போன்ற மூத்த மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் விளையாட்டு மைதானத்தில் குழி தோண்டுமாறு கூறினர். அங்கே, எங்கள் கைகளால் உயிரிழந்த மாணவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்தோம். நான் அதை மிகவும் சோகமாக உணர்ந்தேன்.’ என்கிறார். சியோகோவுக்கு இப்போது 94 வயதாகிறது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு ஏறத்தாழ 80 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜப்பானில் ஹிபாகுஷா (Hibakusha) என்றழைக்கப்படும் உயிர் பிழைத்த இவர்கள், தங்கள் வாழ்நாளின் கடைசிப் பகுதியில் உள்ளனர். அணுகுண்டு தாக்குதல் காரணமாக நிறைய பேர் உடல்நல குறைபாடுகளுடனும், சிலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். இப்போது, இவர்கள் பிபிசி டூ ஆவணப்படத்திற்காக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், எதிர்கால சந்ததியருக்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் தங்களது கடந்த காலத்தை ஆவணப்படுத்துகிறார்கள். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS/CHIEKO KIRIAKE படக்குறிப்பு,சியேகோ கிரியாக்கே - அணுகுண்டு தாக்குதலுக்கு முந்தைய மற்றும் இன்றைய புகைப்படம். அந்த துயரமான நிகழ்வுக்கு பிறகு, நகரில் ஒரு புதிய வாழ்க்கை துவங்கியது என்கிறார் சியோகோ. புற்கள் வளர 75 ஆண்டுகள் ஆகும் என மக்கள் பேசிக் கொண்டதாக கூறிய சியோகோ, ‘அடுத்த ஆண்டே பறவைகள் ஊருக்கு திரும்பின’ என்றார். தனது வாழ்நாளில் நிறைய முறை மரணத்தின் விளிம்பை அடைந்துள்ளேன் என்று கூறும் சியோகோ, அவரது உயிரை ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாற்றுகிறது என நம்புவதாக கூறுகிறார். இன்று உயிருடன் வாழும் பெரும்பாலான ஹிபாகுஷாக்கள், அணுகுண்டு வீச்சு தாக்குதலின் போது குழந்தைகளாக இருந்தவர்கள். ஜப்பானிய மொழியில் ஹிபாகுஷா என்ற வார்த்தைக்கு ‘வெடிகுண்டால் பாதிக்கப்பட்ட மக்கள்’ என பொருள் அறியப்படுகிறது. இப்போது இவர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். இப்போது உலகளாவிய மோதல்கள் தீவிரமாகி உள்ளன. முன்னெப்போதையும் விட, இக்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இவர்கள் உணர்கின்றனர். ‘யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் போர் போன்ற உலகளாவிய மோதல்களை காண்கையில், என் உடம்பு நடுங்குகிறது, கண்ணீர் வழிகிறது’ என்கிறார் 86 வயதான மிச்சிகோ கொடாமா (Michiko Kodama). ‘மீண்டும் ஒரு அணுகுண்டு தாக்குதல் நடக்க நாம் அனுமதிக்க கூடாது. இப்போது அதற்கான நெருக்கடி உருவாகி இருப்பதாக உணர்கிறேன்’ என்கிறார் அவர். மிச்சிகோ அணு ஆயுதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வருபவர். தனது பிரசாரத்தால் உயிரிழந்தவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்கிறார். இதுகுறித்த சாட்சியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படும் என்கிறார். ‘நேரடியாக அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹிபாகுஷா-க்களிடம் இருந்து அவர்கள் அனுபவத்தை கேட்டறிய வேண்டியது அவசியம் என நினைக்கிறன்’ என்கிறார் இவர். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS படக்குறிப்பு,'வானில் இருந்து கறுப்பு நிற சேறு போன்ற மழை பொழிந்தது', என்கிறார் மிச்சிகோ ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நடந்த போது மிச்சிகோ பள்ளி பயின்று வந்த 7 வயது சிறுமி ஆவார். ‘என் வகுப்பின் ஜன்னல் வழியாக, கடுமையான ஒளி எங்களை நோக்கி வேகமாக நெருங்குவதை கண்டேன். அது மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளி நிறத்தில் இருந்தது.’ என்றார் அவர். ஜன்னல்கள் வெடித்து சிதறியது, வகுப்பறை முழுவதும் பிளவுபட்டது, குப்பை குவியல்கள் எல்லா பக்கமும் தூவலாக பரவியது, சுவர், மேசை மற்றும் நாற்காலிகள் கூர்மையான குத்துவது போல சிதறி கிடந்தன, என்று தனது அனுபவத்தை விவரிக்கிறார் மிச்சிகோ. ‘மேற்கூரை விரிசல் விட்டு கீழே விழுந்தது. நான் எனது மேசைக்கு கீழே மறைந்து கொண்டேன்.’ குண்டு வெடிப்புக்கு பிறகு, முற்றிலும் சேதமடைந்த வகுப்பறையைக் கண்டார். எங்கு பார்த்தாலும், கைகளும், கால்களும் சிக்கிக் கிடப்பதை காண முடிந்தது. ‘நான் வகுப்பறையில் இருந்து தாழ்வாரம் பகுதிக்கு ஊர்ந்து சென்றேன். என் நண்பர்கள் அனைவரும் ‘உதவுமாறு’ கேட்டனர்’ என்று அவர் கூறினார். பிறகு, மிச்சிகோவின் தந்தை வந்து இவரை வீட்டுக்கு தூக்கி சென்றதாக மிச்சிகோ கூறினார். வானில் இருந்து சேறு போன்ற ஒரு கருப்பு மழை பொழிவது போல் காட்சியளித்தது எனும் மிச்சிகோ. ‘அது கதிர்வீச்சு பொருட்கள் மற்றும் அணுகுண்டு வெடிப்பு மிச்சங்களின் கலவை’ என்கிறார். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS/MICHIKO KODAMA படக்குறிப்பு,'தாக்குதலுக்கு பிறகு, வீடு திரும்பிய பயணம் ஒரு நரகம் போன்று இருந்தது', என்கிறார் மிச்சிகோ அன்றைய தினம் வீடு திரும்பிய பயணத்தை மறக்கவே முடியாது என்கிறார் இவர். ‘அது நரகம் போன்ற காட்சி’ என்று கூறும் மிச்சிகோ. ‘எங்களை கடந்து தப்பியோடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்களின் உடைகள் முழுவதுமாக எரிந்திருந்தன, அவர்களின் சதைகள் உருகிக் கொண்டிருந்தன. அன்று தான் கண்ட ஒரு சிறுமியை பற்றி நினைவுகூர்ந்த மிச்சிகோ, ‘தன் சம வயது நிரம்பிய அந்த சிறுமியின் உடல் மிக மோசமாக எரிந்திருந்தது’ என்கிறார். ‘அந்த சிறுமியின் கண்கள் அகண்டு விரிந்திருந்தன. அந்த கண்கள் இன்றும் என்னை துளைப்பது போல உணர்கிறேன். என்னால் அவளை மறக்க முடியவில்லை. 78 ஆண்டுகள் கழிந்த பிறகும், அந்த சிறுமியின் நினைவு என் உடலையும்,. மனதையும் பாதிக்கிறது.’ என்கிறார் மிச்சிகோ. ஒருவேளை மிச்சிகோவும் அவரது குடும்பத்தாரும், அச்சமயம் அவர்களது பழைய வீட்டில் வசித்திருந்தால், உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள். குண்டு வெடித்த இடத்தில் இருந்து அந்த வீடு வெறும் 350 மீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி அவர்கள் வேறு வீட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். அது தான் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றியது. 1945 இன் இறுதியில் ஹிரோஷிமாவில் தோராயமாக 1,40,000 பேர் இச்சம்பவத்தால் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. மூன்று நாளுக்கு பிறகு நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதல் காரணமாக 74,000 பேர் உயிர் இழந்தனர். நாகசாகியில் அணுகுண்டு வெடித்த மையப்பகுதியில் இருந்து வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வந்தவர் தான் சூய்ச்சி கிடோ (Sueichi Kido). அப்போது இவரது வயது 5. இவர் முகம் முழுக்க தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அணுகுண்டு தாக்குதலின் முழு தாக்கத்தில் இருந்து இவரை பாதுகாத்த, சூய்ச்சியின் தாய் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டார். ‘ஹிபாகுஷாக்களாகிய நாங்கள், எங்களை போல வேறு எந்த ஹிபாகுஷாவும் உருவாகாமல் பாதுகாக்கும் எங்கள் பணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்’ என்கிறார் 83 வயதான சூய்ச்சி. இவர் சமீபத்தில் நியூயார்க் பயணம் மேற்கொண்டு அணு ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரிக்க ஐநா சபையில் உரையாற்றினார் அணுகுண்டு தாக்குதலின் தாக்கத்தில் மயங்கிய இவர், எழுந்து பார்த்த போது, அங்க அருகில் ஒரு சிவப்பு நிற எண்ணெய் கேன் இருந்தது, அது தான் இவ்வளவு பெரிய வெடிப்புக்கும், சுற்றிலும் ஏற்பட்ட நாச செயலுக்கும் காரணம் என சில வருடங்கள் இவர் எண்ணியுள்ளார். அது அணுஆயுத தாக்குதல் என்ற உண்மையில் இருந்து இவரை பாதுகாக்க இவரது பெற்றோரும் இவருக்கு தெளிவான விளக்கம் அளிக்க விரும்பவில்லை. அவர் இதுபற்றி பேசிய போதெல்லாம் கண்ணீர் சிந்தியுள்ளனர். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS படக்குறிப்பு,சூய்ச்சி கிடோ (Sueichi Kido) இந்த வெடிப்பின் மூலம் ஏற்பட்ட எல்லா காயங்களும் உடனே தென்பட்டவை இல்லை. சிலர் வாரங்கள் கழித்தும், மாதங்கள் கழித்தும் கதிர்வீச்சு நச்சு காரணத்தினாலான அறிகுறிகளை கண்டறிய துவங்கினர். இதனால் புற்றுநோய் பாதிப்பு அளவு அதிகரித்தது. நிறைய ஆண்டுகள் தப்பி பிழைத்தவர்கள் சமூகத்தில் பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. குறிப்பாக, இல்லற துணை தேடுகையில் பாகுபாட்டை சந்தித்தனர். ‘நம் குடும்பத்தில் ஹிபாகுஷா இரத்தம் நுழைய விரும்பவில்லை’ என தன்னிடம் கூறப்பட்டதாக மிச்சிகோ கூறுகிறார். பின்னாளில் இவர் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளும் பெற்றார். இவரது தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் புற்றுநோயால் இறந்தனர். இவரது மகள் நோய் காரணமாக 2011 இல் இறந்தார். நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் தப்பி பிழைத்த மற்றொரு நபரான கியோமி இகுரோவின் (Kiyomi Iguro) வயது அப்போது 19. தூரத்து உறவினர் ஒருவருடன் திருமணமாகி, கருச்சிதைவு உண்டான போது, அவரது மாமியார் அதற்கு அணுகுண்டு தாக்குதலின் தாக்கம் தான் காரணம் என்று கூறியதாக குறிப்பிடுகிறார். ‘உன் எதிர்காலம் மிக மோசமானது’ என்று அவர் கூறியதாக கியோமி தெரிவிக்கிறார். நீ அணுகுண்டு தாக்குதலை எதிர்கொண்டது பற்றி அண்டை வீட்டாரிடம் பேச வேண்டாம் என்று மாமியார் அறிவுறுத்தியதாக கியோமி கூறுகிறார். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS/KIYOMI IGURO படக்குறிப்பு,கியோமி, அவரது பதின் வயதில், பாரம்பரிய உடையில். நேர்காணல் கண்ட பிறகு கியோமி மரணமடைந்தது பரிதாபத்திற்குரியது. ஆனால், தனது 98வது வயது வரை, நாகசாகியின் அமைதி பூங்கா எனும் இடத்திற்கு சென்று, அணுகுண்டு நகரில் வெடித்த 11:02 மணியளவில் அங்கிருந்த மணியை அடித்து, அமைதிக்காக வேண்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். பட மூலாதாரம்,BBC/MINNOW FILMS படக்குறிப்பு,அணு ஆயுதம் மற்றும் போர் இல்லாத அமைதி நிறைந்த உலகை விரும்புகிறேன் என்கிறார் கியோமி. சூய்ச்சி, பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய வரலாற்றைக் கற்பித்து வந்தார். இவர் ஒரு ஹிபாகுஷா என அறிந்ததும் தன் மீது நிழல் போன்ற ஒரு அடையாளம் படியத் துவங்கியது என்கிறார். ஆனால், பின்னர், தான் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்பதை உணர்ந்து, மனித குலத்தை காப்பாற்றுவது பற்றி பேசுவதை தனது கடமையாக உணர்ந்ததாக கூறினார். ‘நான் ஒரு சிறப்பான நபர் என்ற உணர்வு தனக்குள் பிறந்தது’ என்கிறார் சூய்ச்சி. ஹிபாகுஷாக்கள் அனைவரும் உறுதியோடு கூறுவதில் ஒரு விஷயம் மட்டும் பொதுவாக இருக்கிறது. அது என்னவெனில், கடந்தகாலம், நிகழ்காலம் ஆகிவிட கூடாது என்பது தான். Atomic People எனும் இந்நிகழ்ச்சி வரும் ஜூலை 31 ஆம் தேதி பிபிசி 2 மற்றும் பிபிசி ஐபிளேயர்-இல் ஒளிபரப்பாகும். ஒருவேளை நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் நிகழ்வினால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கான உதவி மற்றும் அறிவுரை BBC Action Line இல் கிடைக்கும். https://www.bbc.com/tamil/articles/cgrlj681xn4o
  2. குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக அனுப்பப்பட்டேன். இந்தப் புதிய பாடசாலை வீட்டில் இருந்து ஐந்து மைல்கள் தூரம். போகும் பாடசாலைகளின் தூரம் வர வர கூடிக் கொண்டே போவது ஒரு அயர்வைக் கொடுத்தது. இலங்கையிலேயே இது மிகச் சிறந்த பாடசாலை என்று முதல் நாளே, நான் அங்கு போகும் போது, சொல்லிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் அப்பா பஸ்ஸை தவற விட்டு விட்டு, அந்த வழியால் போய்க் கொண்டிருந்த ஒரு லாரியில் ஏறி புதிய பாடசாலைக்கு, கொஞ்சம் பிந்தி, போயிருந்தோம். ஆறாம் வகுப்பில் ஒரே ஆசிரியர் தான் தமிழுக்கும், சமய பாடத்திற்கும். அவரே தான் வகுப்பாசிரியரும். தமிழுக்கு எண்பது பக்க கொப்பியும், சமயத்திற்கு அறுபது பக்க கொப்பியும் வாங்கியிருந்தேன். அப்படித்தான் அந்தப் பெரிய பாடசாலையில் சொல்லியிருந்தார்கள். பிரவுன் பேப்பரில் வெளி உறை ஒன்று போட்டு, அவர்கள் சொன்னது போலவே அந்த உறையில் சுயவிபரங்களையும் எழுதி வைத்திருந்தேன். நானே ராஜா, நானே மந்திரி என்று ஊர்ப் பாடசாலையில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்து, கூட்டத்தில் ஒருவன் ஆகியிருந்தேன் அந்தப் பெரிய பள்ளிக்கூடத்தில். ஏழாம் வகுப்பிலும் இதே ஆசிரியர் தான், தமிழ், சமயம், மற்றும் வகுப்பு ஆசிரியர். ஆறாம் வகுப்பில் வாங்கிய எண்பது பக்க, அறுபது பக்க கொப்பிகள் இரண்டும் அப்படியே புத்தம் புதிதாகவே இருந்தன. பிரவுன் பேப்பர் உறையை மட்டும் மாற்ற வேண்டி இருந்தது. பத்தாம் வகுப்பு வரை இப்படியே தொடர்ந்தது. அந்த ஆசிரியர் எங்களை விட்டு விலகவேயில்லை, இந்த இரண்டு கொப்பிகளும் கூட விலகவில்லை. ஒரு வருடத்தில் ஒன்றோ இரண்டோ பக்கங்களில் ஏதாவது எழுதியிருப்போம். அந்தப் பக்கங்களை கிழித்து எறிந்து விட்டு, புது பிரவுன் பேப்பர் உறை போடப்பட்டு, இந்த இரண்டு கொப்பிகளும் புது வகுப்புகளுக்கு என்னுடன் சேர்ந்து அப்படியே வந்து கொண்டிருந்தன. சிறந்த பாடசாலை, சிறப்பாக படிப்பித்தார்கள் என்று எல்லோரும் வெளியில் சொல்லிக் கொள்வார்கள். விட்டுக் கொடுக்க மனம் இடம் கொடுக்காததால், நானும் அதை ஆமோதித்துக்கொண்டே இருந்தேன். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தினமும் பந்து அடித்ததும், வேறு ஒரே ஒரு ஆசிரியரையும் தவிர வேறு எதுவும் பாடசாலையில் கற்றதாக நினைவில் இல்லை என்றாலும். பின்னர் பல்வேறு சிறந்த பாடசாலைகள் என்று சொல்லப்பட்டவற்றில் படித்தவர்களுடன் ஒன்றாகப் படிக்கும், பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்பவே அப்படி என்று தான் அவர்களும் கொஞ்சம் கெத்தாகவே இருந்தனர். பின்னர் எல்லா இடமும் ஓடிக் கொண்டிருந்தது ஒரே கதையே என்று சொல்லி ஒத்துக்கொண்டனர். முப்பது வருடங்கள் அல்லது அதற்கும் கூடிய காலத்தின் பின், பல ஆசிரியர்களை போய்ச் சந்தித்தோம். அவர்களுக்கு எங்களை ஞாபகமே இல்லை. எத்தனை வருடங்கள், எத்தனை மாணவர்கள், யாராவது உறவினர் அல்லது நண்பர்களின் பிள்ளைகளைத் தவிர வேறு எவரையும் அவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது தான். ஆனால், நாங்கள் சொன்ன கதைகளை கேட்டு ஆச்சரியப்பட்டார்கள், பெருமைப்பட்டார்கள். நாங்கள் எல்லா ஆசிரியர்களிடமும் உங்களிடம் படித்தோம், அதனாலேயே வளர்ந்தோம் என்றே சொன்னோம். உண்மையில் அவர்களை மீண்டும் நேரில் பார்த்த போது, மிகப் பிரியமான ஒரு உணர்வைத் தவிர வேறு எதுவும் தோன்றவேயில்லை.
  3. அங்கு, அந்த வைத்தியசாலையில் இரவு நேரம் மருத்துவர்களே இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அனேகமாக மாலை 6 மணிக்கு வந்து வேலைக்கு வந்ததாக ஒப்பமிட்டுவிட்டு வீட்டை போய் நித்திரை கொண்டு இருப்பார்கள். இவர்களுடன் ஒப்பிடும் போது சிங்கள பகுதிகளில் வேலை செய்யும் சிங்கள மருத்துவர்கள் எவ்வளவோ மேல்.
  4. உங்கள் பாடசாலை அனுபவம் எனக்குப் புதிது. எனது ஆசிரியர்கள் படிப்பிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள். எனது ஆரம்பப் பாடசாலை அனுபவம் இப்படி இருந்தது. ஆசிரியர் கையில் சுட்ட பிரம்பிருக்கும். அதை வைத்துக் கொண்டே, “எங்கே நீ சொல்லு” என்று அவர் கேட்கும் போது நா வறண்டு குரல் தளர்ந்து வார்த்தைகள் தள்ளாடி அவை வெளியே வரும் போது, “அடியாத மாடு படியாது” என சுளீர் விழும். கலவன் பாடசாலை என்பதால் அழவும் முடியாமல், வீரனாக வாங்கிலில் அமர்ந்த நாட்கள்தான் அதிகம். சமீபத்தில் ஊர் போன போது குருவானவர்களைப் போய்ப் பார்க்கவில்லை. யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. புண்ணியவான்கள் போய்ச் சேர்ந்திருப்பார்கள். எனது தமிழ், சமய ஆசிரியர் ஏகாம்பரநாதன் 15.11.2019இல் காலமான போது நான் எழுதியது
  5. 🤣.......... இப்ப ஒலிம்பிக்ஸ் எஃபக்ட் எல்லா இடமும், அண்ணை.......... கைப்பந்து, கால்ப்பந்து, கூடைப்பந்து, தேஷ்பந்து.................
  6. அணுக்குண்டால் பாதிக்கப்பட்ட யப்பான் அணுகுண்டுகளை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார தடை விதித்தால் நியாயமானது. அறமும் கூட. அணுகுண்டு வீசி யப்பானிய மக்களை கொன்று குவித்த அமெரிக்கா அணுகுண்டு வைத்திருக்கும் , செய்து கொண்டிருக்கும் நாடுகளுக்கு பொருளாதார தடையை விதிப்பது எவ்விதத்தில் நியாயம். ? ஒரு வேளை தம்மீது போட்டு விடுவார்கள் என்ற பய பீதியாக இருக்கலாம்.
  7. "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 01 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்புகளுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த காலக், சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ... போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 02
  8. நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று கையளிக்கப்பட்டன. இவ் நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394116
  9. மான்னார் குடியாக்க‌ள் பொல்லாத‌வ‌ர்க‌ள் என்றால் நாங்க‌ள் இனி இல்லை என்ர‌ கெட்ட‌வ‌ர்க‌ள் 😁🤣 சொல்லிட்டு செய்ய‌ மாட்டோம் போட்டு த‌ள்ளி விட்டும் பேசாம‌ இருப்போம்😁 என்னை ந‌ம்புங்கோ சார் உங்க‌ளுக்கு ஒன்னு என்றால் நான் க‌ள‌த்தில் குதிக்கிறேன் நீங்க‌ள் ச‌சிக‌லா அன்ரிய‌ ர‌சிக்க‌லாம் அவாவின் அழ‌கை பார்த்து விய‌க்க‌லாம் நெருங்கியும் ப‌ழ‌க‌லாம் நான் பார்த்து கொள்ளுகிறேன்😛.................
  10. 👍.......... ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது. அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும். ஒருவர் தன்னை நன்றாக கவனித்த தனது அப்பாவுக்கு நினைவு அஞ்சலி கொண்டாடினாராம். அதை பார்த்த இன்னொரு தமிழர் அவருடைய அப்பா- அப்பாவோ அவைரை குடும்பத்தோடு கைவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்டவர் இவர்களை கவனிப்பதே இல்லை அம்மா உணவுகள் செய்தும் உறவினர் உதவியுடன் வாழ்கை ஓடியது அவரும் தனது அப்பாவுக்கு பெரிய அளவில் நினைவு அஞ்சலி செய்து அப்பாவின் பாச பிணைப்பை பற்றி புழுகி உரை நிகழ்த்தினாராம். அதே மனப்பான்மை தான் புனைவுகளை வரலாறாக மாற்றி அடித்துவிடுவதும் குதுகலிப்பதும்.
  11. 🤣..... இதில கூட ஓபிஎஸ்ஸிற்கு ஒன்றும் கொடுக்க மாட்டீர்களா........ இன்னுமொரு தர்மயுத்தம் ஆரம்பித்து விடுவார், பதக்கம் தனக்கும் வேண்டும் என்று.............
  12. In 2022, India overtook China as the country with the largest population in the world, and now has more than 1.44 billion people. China now has the second-largest population in the world, still with just over 1.4 billion inhabitants, however its population went into decline in 2023.
  13. ரணில் ஒரு குள்ள நரி என்பதை மீண்டும் காட்டி விட்டார். கட்சி சின்னத்தில் இல்லாதுசுயேச்சையாக புதிய சின்னத்தில் நிற்பது சஜித்தின் கட்சியில் இருப்பவர்களையும் மகிந்தவின் கட்சியில் உள்ளவர்களையும் தான் ஐதேகட்சியின் வேட்பாளர் இலலை பொது வேட்பாளர் என்று மாயையக் காட்டி அவர்களை இழுக்கப் பார்க்கிறார்.என்னைப் பொறுத்தவரையில் ரணில் ஸனாதிபதியாவதை விரும்பவில்i. உடனே ராஜபக்சேக்களுக்கு கருத்து எழுதுவதாக நினைக்கக் கூடாது.மகிந்த தரப்பு ஜனாதிபதியானால் கோத்தாவின் காம் போல மீண்டும் ஒரு அரகல வரும்.மேற்குலகம் அதனை சில தந்திரங்களைக் கையாண்டு ஊக்கவிக்கும்.ஏனெ;னறால் மகிந்த தரப்பு நேரடியாக சீனாவை ஆதரிக்கும். ஆனால் ரணில் சீனாவை எதிர்க்கமாட்டார் ஆனார் எதிர்பது போல பாவனை காட்டி மேற்குலகை ஏமாற்றுவார். சிங்களவர்களுக்கு பரும்பும்>பாணும்>மின்சாரமும்>எண்ணெையும் கொடுத்தால் அவர்கள் பேசாமல் இருப்பார்கள்.தமிழர்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமித்து பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும் போடவேண்டும். அன்றேல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.ரணிலை இந்தத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அந்தக் குள்ள நரிதேர்தலில் தோற்றும் ஜனாதிபதியான குள்ளநரி.
  14. இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு அனுப‌வ‌ம் இல்லை முத‌ல் த‌ப்பு அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றுவ‌து . முந்தி இல‌ங்கை அணியில் க‌ப்ட‌ன் என்றால் குறைந்த‌து இர‌ண்டு வ‌ருட‌ம் ஒருவ‌ரே அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவார் இந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் இல‌ங்கை அணியில் 4 க‌ப்ட‌ன் மார்..................ஒரு கால‌த்தில் எப்ப‌டி இருந்த‌ அணி இப்ப‌டி போன‌துக்கு முழுக்க‌ முழுக்க‌ அர‌சிய‌லே ம‌கிந்தா குடும்ப‌ம் அந்த‌ நாட்டில் இருக்கும் வ‌ரை இல‌ங்கை சிறு முன்னேற்ற‌த்தையும் அடையாது............................
  15. 🤣..... மோகம் முப்பது, ஆசை அறுபது....... இரண்டும் முடிய, இவவிடம் இருந்து ஓடியும் தப்ப முடியாது........ காசிக்கு தான் போனாலும், எங்களுக்கு முன்னேயே அங்கே ஓடிப் போய் நிற்பார், 'வா ராசா, வா.......' என்று.....
  16. என்ன‌ ஒரு அருவ‌ருக்க‌ த‌க்க‌ விளையாட்டு ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளை ஒழுங்காய் விளையாட்டு வ‌ரிசையில் விளையாட‌ விடாம‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை ந‌டுவில் விளையாட‌ விட்டு ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு சூப்ப‌ர் ஓவ‌ரில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுத்த‌ர் போட்ட‌ ஓவ‌ரில் ஒரு ர‌ன்ஸ் தான் இவையால் அடிக்க‌ முடிஞ்ச‌து ஒரு வ‌யிட் வோல் மொத்த‌ம் இர‌ண்டு ர‌ன்ஸ் வாழ்த்துக்க‌ள் வ‌ஸ்சின்ட‌ர் சுத்த‌ர்🙏🥰..........................
  17. இது போன்ற மரணங்கள் மிகவும் அநியாயமானவை, 100% தடுத்திருக்கப் படக் கூடியது இது. சிசேரியன் செய்து 3 வாரங்களுக்குள் இரத்தப் பெருக்கு அல்லது வயிற்றினுள் கிருமித் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. ஒன்று hypo-volemic shock இற்கு இட்டுச் செல்லும், மற்றது septic shock இற்கு இட்டுச் செல்லும். எனவே தான், நோயாளியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். இந்த அடிப்படை மருத்துவம் தெரியாமல் சாதாரண வார்ட்டில் அனுமதிக்கும் அளவுக்கு தாதியரும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால், இவர்களை அர்ச்சுனா குறிப்பிடுவது போல மக்கள் அடித்துத் துரத்துவதில் ஒரு தவறும் இல்லை!
  18. வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முயற்சி என்பதே என் உறுதியான அபிப்பிராயம்.
  19. 👍.......... ஐரோப்பியர்களின் எந்த வரலாற்றையும் நான் முழுதாக, தொடர்ச்சியாக இதுவரை வாசிக்கவில்லை. துண்டு துண்டாக, தொடர்ச்சி இல்லாமல் பலதும் வாசித்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது சரி என்றே எனக்கும் படுகின்றது. அவர்கள் வரலாற்றை வேறாகவும், சாகசக் கதைகளை வேறாகவும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். இரண்டையும் ஒன்றாகப் போட்டு குழப்புவதில்லை. எங்களின் வரலாறு எழுதப்படவேயில்லை. கல்கியின், சாண்டில்யனின், கலைஞரின், கோவி. மணிசேகரனின் புனைவுகள் வரலாறே இல்லை. வேறெதுவுமே இல்லை என்பது ஒரு பக்கம், ஏதாவது வேண்டுமே என்பது இன்னொரு பக்கம். இரண்டு பக்கங்களும் சேர்ந்து உண்டாக்குவது தான் இந்த சாகசப் புனைவுகளை சரித்திரமாக ஏற்கும் மனநிலை. ரவிவர்மா பாரசீக ஓவிய வழிகளை முதன் முதலில் கற்று, அதன் வழியே அரசர்களையும், அரசிகளையும், மாடமாளிகைகளையும் வரைந்தார். அவை வெறும் சித்திரங்களே, நிஜம் அல்ல. இன்று எல்லோரும் அப்படியே தான் அன்று நாங்கள் இருந்தோம் என்று நினைக்குமளவிற்கு அது எங்களை மாற்றிவிட்டது. அது போலத் தான் இந்தக் கதைகளும்.
  20. 👍.... குலுக்கல் தெரிவு.......🤣. _______________________________________________________________ இங்கு சில நாட்களில் திடீரென்று ஒரு ஒருநாள் கரப்பந்தாட்டப் போட்டியை ஒழுங்கு செய்வோம். பெரும்பாலும் இந்தியர்கள் தான். எல்லோரும் காலையில் வந்தவுடன், ஒரு எழுபது அல்லது எண்பது பேர்கள் வரை, ஆட்களை திறமை அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக்கி, பின்னர் இந்த 'லொட்' முறையில் அணிகளை பிரித்துக் கொள்வோம்.......... சில அணிகள் இடையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவார்கள்................🤣.
  21. இல்லை, எல்லாருக்கும் அறிவிப்பார்கள். ஆனால், தனித்தனியாக அறிவிப்பதால், எத்தனை பேரிற்கு அறிவித்தார்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சமர்களில் மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவராலும் அறிய முடியாது.
  22. ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா நினைவு தினம். 2ம் உலகப் போரின் போது ஜப்பானின், ஹிரோஷிமா மீது 1945, ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக் கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத் தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப் படுகிறது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ஆனால் "லிட்டில்பாய்' என்கிற இந்த அணுகுண்டு வாங்கிய உயிர் பலி எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்துக்கும் மேல். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இத் தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலை குலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. எனது அதிர்ஷ்ட்டம் , நான் அங்கு, University in Shimonoseki, ஜப்பான் இல் மேலதிக பயிற்சிக்காக சென்ற பொழுது, இந்த இரண்டு நினைவு நாளிலும் நேரடியாக கலந்து அஞ்சலி செலுத்தவும், அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் நேரடியாக அதன் விளைவுகளை பார்வையிடவும் வாய்ப்புக் கிடைத்தது.
  23. கண்டி சிங்களவர்கள் தான் சிங்களத்தில் முதன்மை சாதி🤣
  24. ஐரோப்பாவில் எந்த மன்னர் கால வரலாற்றை எழுதும் போதும் அவர்களின் எதிர்மறை அம்சங்களை தவறுகளை மறைக்காமல் எழுதியே உள்ளார்கள். ஏனென்றால், அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு தத்தமது சமூகங்களை முன்னேற்றிய அவர்களுக்கு இத்தகைய சாகஸ கதையாடல்களில் தங்கி இருக்க வேண்டுய அவசியமில்லை. காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்து கொள்ளாத பத்தாம்பசலி இனங்களுக்கே தாழ்வு மனப்பான்மையை போக்க இவ்வாறான சாகாச கதையாடல்கள் புராணங்களில் தங்கி இருக்க வேண்டிய தேவை உள்ளது.
  25. அவர்களில் சாதி ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகள் உண்டு. நான் வேலைபார்த்த ஆலையில் அப்புகாமி என்ற குள்ளமான கரையோரச் சிங்களவன், ஆலையின் பிரதான இயந்திரத்தை இயக்குபவர்களின் உதவியாளன் பதவி, பள்ளிக்கூடப் படியேறி அறியாதவன், ஆனாலும் எங்கள் இரண்டாவது பெரிய சிங்கள அதிகாரியின் செல்லப் பிள்ளை ஆதலால் அவன் குறைகள் தவறுகள் கணக்கில் வருவதில்லை. அவன் எடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி அந்த அதிகாரியின் பைக்குள் போய்விடுவது அரசல் புரசலாகத் தெரியும். ஒரு அடிமையைவிடக் கேவலமாக அவருக்குத் தொண்டுகள் செய்வான். நாங்கள் அவனைப் பரிகாசம் செய்தால் பற்கள் முழுவதும் காட்டிச் சிரிப்பான் அவ்வளவுதான். பாவம் அவன் குடும்பகாரன், மனைவி ஊரில். தன்செலவு போக மிகுதிச் சம்பளத்தை அவன் அண்ணனுக்குத்தான் அனுப்புவான். ஏனெனில் அவன் ஊரில், அவர்கள் குல வழக்கப்படி கணவன் வெளியூரில் வேலை பார்த்தால் மனைவியைக் கணவனின் அண்ணன் தன் மனைவியைப்போல் பராமரிப்பாராம் என்று அறிந்தேன்.
  26. கிந்தியா விமானநிலையம் கட்டியது போல தனது கலவையை கலந்திருக்கலாம்.
  27. தொட‌ர்ந்து ஒரே சாப்பாட்டை எவ‌ள‌வு நாளுக்கு சாப்பிடுவின‌ம் அண்ணா😉................ நான் ஒரு சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் கூட‌ தான் ப‌ழ‌கி இருக்கிறேன் உதார‌ன‌த்துக்கு சிங்க‌ள‌வ‌ன் ஆமியில் சேர்ந்து போர்க‌ள‌த்தில் ப‌லி ஆனால் மாத‌ம் மாத‌ம் சிங்க‌ள‌ அர‌சு அந்த‌ ஆமியின் குடும்ப‌த்துக்கு காசு கொடுப்பின‌மா......................இதில‌ என‌க்கு ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் 1996 முல்லைத்தீவு ச‌ம‌ரின் போது 1000க்கு மேல் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ ஆமி இற‌ந்து போனார்ள்................இல‌ங்கை அர‌சு ஏதோ 100க்கு குறைவான‌ ஆமியின் உட‌லை வாங்கி விட்டு மீத‌ம் த‌ங்க‌ட‌ இராணுவ‌த்தின் உட‌ல் இல்லை என்று வாங்க‌ ம‌றுத்து விட்டின‌ம்................அர‌சு வாங்க‌ ம‌றுத்த‌ உட‌ல்க‌ளை வ‌ன்னி காட்டுக்குள் வைச்சு எம்ம‌வ‌ர்க‌ள் எரிச்ச‌வை கிட்ட‌ த‌ட்ட‌ 900ஆமியின் பெற்றோர்க‌ள் அர‌சிட‌ம் கேட்ப்ப‌தில்லையா ஆமியில் சேர்ந்த‌ எங்க‌ட‌ பிள்ளைக‌ள் எங்கை என்று😮 எங்க‌ட‌ போராட்ட‌த்தில் போராளிக‌ள் வீர‌ச்சாவு அடைஞ்சா அடுத்த‌ நாளே உற‌வின‌ர்க‌ளுக்கு அறிவிப்பின‌ம் ஒரு போதும் மூடி ம‌றைச்ச‌து கிடையாது........................1991ம் ஆண்டு ஆனையிற‌வு ச‌ம‌ரில் என்ர‌ ம‌ச்சானோட‌ சேர்த்து 800 மாவீர‌ர்க‌ளுக்கு மேல் வீர‌ச்சாவு😥☹️ வீர‌ச்சாவு அடைந்த‌ அத்த‌னை மாவீர‌ர்க‌ளின் பெற்றோருக்கு அறிவிப்பின‌ம்🙏🙏🙏....................... இது தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தின் புனித‌ம்🙏🙏🙏 . ஒன்றையும் மூடி ம‌றைக்க‌ மாட்டின‌ம் எங்க‌ளுக்கு கிடைச்ச‌ த‌லைவ‌ர் அப்ப‌டி...................2009க‌ளில் வீர‌ச்சாவு அடைஞ்ச‌ போராளிக‌ளின் புள்ளி விப‌ர‌ம் தான் ச‌ரியா தெரியாது அதுக்கு முத‌ல் வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளின் புள்ளி விப‌ர‌ங்க‌ள் தெரிய‌ப் ப‌டுத்துவின‌ம்🙏🙏🙏.......................... எம்ம‌வ‌ர்க‌ளோடு ச‌ண்டையிட்டு போர் க‌ள‌த்தில் ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் கொல்ல‌ ப‌ட்ட‌ வ‌ர‌லாறு ப‌ல‌ உண்டு....................அவ‌ர்க‌ளின் உற‌வின‌ர்க‌ளுக்கு சிங்க‌ள‌ அர‌சு அறிவித்து இருக்குமா என்ற‌து தான் பெரிய‌ ச‌ந்தேக‌ம் ஒரு க‌ட்ட‌த்தில் காணாம‌ல் போன‌ லிஸ்ட்ட‌ காட்டி த‌ப்பிச்ச‌வை சிங்க‌ள‌ அர‌சு ப‌ல‌ ஆயிர‌ம் இராணுவ‌ம் போர்க‌ள‌த்தில் கொல்ல‌ ப‌டும் போது எப்ப‌டி இத்த‌ன‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் காணாம‌ல் போனார்க‌ள் என்று சொல்ல‌ முடியும் குறைந்த‌து 5 . அல்ல‌து 10 இராணுவ‌ம் காணாம‌ல் போனால் ஒத்துக் கொள்ள‌லாம் ப‌ல‌ ஆயிர‌ம் பேர் இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ல‌ வ‌ருட‌மாய் வீடு திரும்பாட்டி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அர‌சு மீது கோவ‌ம் அடைந்து கேள்வி கேட்க்க‌ மாட்டின‌மா............................
  28. ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக் கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார். மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார். சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும். அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார். நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள். அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும். மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
  29. எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல் எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.
  30. தேரர் ஆழம் பார்க்கத் தான் போனாரோ............😜. தியேட்டர், அங்க இங்க எல்லாம் இவர்களை சும்மாவும் உள்ளே விடுவார்கள் போல......... இப்பவும் அதே பழைய 50,000 மற்றும் 75,000 ரூபாய்கள் தானாம். கட்சி வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் 50,000. சுயேட்சை என்றால் 75,000. இதையே 25 இலட்சம், 30 இலட்சம் ரூபாய்களாக மாற்றுவதற்கு ஆலோசிக்கப்பட்டது, ஆனால் அது இன்னமும் தீர்மானமாகவும், சட்டமாகவும் வரவில்லை என்றிருக்கின்றது.
  31. கற்காலம் தொடக்கம் இன்று வரைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் போர் செய்துகொண்டுதான் இருக்கின்றான். இன்றைய செய்திகளின் படி உலகசமாதானம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியவில்லை.
  32. அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்.......! 😍
  33. 👍 அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று எங்களை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.
  34. கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.........! 😁
  35. இதுதான் வேணும் நடக்குமா ? இந்த எழரைக்கு தன்னுடைய கடல் தொழில் பிரச்சனையே கையாள தெரியவில்லை இங்கு ஏன் மூக்கை நுழைக்குது ?
  36. 30 JUL, 2024 | 12:28 PM வயநாடு: மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் என்பது தான் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை டவுன் பகுதியின் தற்போதைய நிலை. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே கேரளம் அதீத மழைப்பொழிவை சந்திக்கும் போதெல்லாம் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படுவது வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி மாவட்டங்கள் தான். இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் கேரளத்தில், இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலான நான்கு மணிநேரத்தில் மூன்று பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை டவுன் பகுதியில் இரண்டு முறை நிலச்சரிவு ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சூரல்மலா கிராமத்தின் ஒரு பகுதி நிலச்சரிவில் சிக்கி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலம் சேதம்: மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் படையினர், நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தாக்கம் சரியாக தெரியவில்லை என கூறுகின்றனர். அங்குள்ள பாலம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது காரணமாக சேதங்களை மதிப்பிட முடியவில்லை. சூரல்மலா கிராமத்தை தாண்டி தான் முண்டக்கை டவுனுக்கு செல்ல முடியும். இரண்டு ஊர்களையும் இணைக்கும் பாலம் கனமழை, நிலச்சரிவால் சிதிலமடைந்துள்ளது. இதனால், முண்டக்கை டவுனுக்கு மீட்புக்குழு செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதனால், முண்டக்கை டவுன் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியுள்ளது. சில நிமிடங்கள் முன் அரசின் இரண்டு ஹெலிகாப்டர்கள் அங்கு தரையிறங்க முயற்சித்தது. ஆனால், காலநிலை மோசமாக இருப்பதால், அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் கோழிகோட்டுக்கு திரும்பியது. முண்டக்கை டவுன் பகுதியில் அதிகாலை 3.15 மணியளவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதில் புனிச்சிரிமட்டம் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருக்கும் யூனுஸ் என்பவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். முண்டக்கை டவுனில் மட்டும் கிட்டத்தட்ட 100 வீடுகள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்கிறது முதல்கட்ட தகவல். முண்டக்கை டவுனுக்கு அடுத்த அட்டமலை கிராமத்தில் ஓடும் ஆற்றில் ஆறு சடலங்களை அக்கிராம மக்கள் மீட்டெடுத்துள்ளனர். இவை, முண்டக்கை டவுனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் என்று கூறப்படுகிறது. எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு வெள்ளப்பெருக்கு காரணமாக தற்போது சீற்றத்துடன் பாய்கிறது என்பதால், முண்டக்கை டவுனில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இந்த ஆற்றில் மேலும் கிடைக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல், பொதுகல்லு ஊராட்சியில் உள்ள சாலியாற்றில் இருந்து 3 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேப்பாடி பகுதியில் இருந்து உருவாகும் ஆறு தான் இந்த சாலியாறு. மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து வெளியேறும் நீரும் சகதியும் ஆற்றில் கலப்பதால், சாலியாறு பார்ப்பதற்கே அபாயகரமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த மற்ற கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ள வேளையில், கண்ணூரில் இருந்து இந்திய ராணுவம் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளது. இதேபோல், தமிழகத்தின் குன்னூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/189782
  37. உங்கள் அவதானிப்பிற்கு ஒரு காரணம் இருக்கிறது. மருத்துவர்கள் கற்கும் மருத்துவ பீடம் தான் அந்தக் காரணம். இலங்கையில் இருக்கும் சிறந்த மருத்துவ பீடமான கொழும்புப் பீடத்தில் சில வருடங்களுக்கொரு முறை பாரியளவில் பாடத்திட்டத்தை மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப மாற்றுவார்கள், புரட்டிப் போடுவார்கள். இது போல ஒரு மீளாய்வு (review) முறை யாழ் மருத்துவ பீடத்தில் இருப்பதாக நான் அறியவில்லை. அதே 50 வருடப் பழைய முறையான பேராசிரியர் சொல்வதை கேள்வி கேட்காமல் செவிமடுத்து, பரீட்சை எழுதி பாஸ் ஆகி மருத்துவராகி விட்டு நோயாளியோடு உரையாடும் முறை கூட தெரியாமல் வாய்க்குள் கொழுக்கொட்டை அடக்கி வைத்திருக்கும் மருத்துவர்களை யாழ் பீடம் உருவாக்குகிறதென நினைக்கிறேன். யாழ் மருத்துவ பீடத்தில் கற்பிக்கும் பேராசான்கள் எப்படியாக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்: Internal Medicine எனப் படும் உள்ளக மருத்துவத்தில் பேராசிரியராகவும், யாழ்ப்பாணம் நொதேர்ன் மருத்துவமனையில் தனியார் தொழிலும் செய்யும் ஒரு மருத்துவரிடம் என் உறவுக்காரர் ஒருவர் போயிருக்கிறார். அளக்கப் பட்ட அவரது இரத்த அழுத்தம் 140/90, இது Stage II உயர் இரத்த அழுத்தம், கவனிக்கப் பட வேண்டிய ஒரு குணங்குறி. ஆனால், அதைப் பற்றி நோயாளிக்கு எதுவும் சொல்லாமல், முப்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரத்த பரிசோதனைகளை எழுதிக் கொடுத்து "இங்கேயே செய்தால் தான் நம்புவேன்" என்று சொல்லியிருக்கிறார். என் சொந்தக்காரர் வாரம் மூன்று தரம் கருவாடு சாப்பிடும் சாப்பாட்டுப் பிரியர் என்று எனக்குத் தெரிந்திருந்ததால் "மருத்துவர் உணவைப் பற்றி ஏதாவது அறிவுரை சொன்னாரா?" என்று கேட்டேன். "எதுவும் சொல்லவில்லை, என் உணவுப் பழக்கங்கள் பற்றி அவர் கேட்கக் கூட இல்லை" என்றார். இத்தனைக்கும் அவர் ஒரு தடவை சிறிய மூளை இரத்த அடைப்பு (stroke) வந்து தப்பிய ஒருவர். இந்த நோயாளிக்கு ஒரு அடிப்படை ஆலோசனை/தகவல் கூட வழங்காத பேராசிரியரின் பட்டங்கள் (certifications) அவர் பெயரை விட நீளம்😂. இவை தான் அந்தப் பட்டங்கள்: MD (Col), FRCP (Lon), FRCP (Edin), FCCP, MRCP (UK), MRCP (Ireland), MSc (Col), FACP (USA). இந்த நோயாளிக்கு என்ன பயன் இவ்வளவு தகுதிச் சான்றிதழ்களால்? இவர்களுக்கெல்லாம் மருத்துவத் தொழில் ஒரு கேடா? என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
  38. சாரி விசுகர், 1) உங்களுக்கு கிரகிக்கும் ஆற்றல் குறைவு என்பதை உணர்த்தியதற்கு நன்றி. 2) சருகு புலிக்கும் விடுதலைப் புலிக்கும் இடையே உள்ள வேறுபாடு எனக்கு நன்றாகவே தெரியும். 3) இந்தக் கேள்விகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஆற்றல் இல்லை என்பது எனது குறைபாடு அல்ல. பின் குறிப்பு. ஒரு வங்கியில் சிறிய வியாபாரக் கடன் எடுப்பதற்கே உங்கள் Business Plan என்ன என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட விபுக்கள் மீதான தடை நீக்கத்தை விரும்பும் நாம், தடை நீக்கத்திற்கு ஆதரவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதத்தை முன்வைக்க வேண்டும் என்கிற அறிவோ அல்லது தடை நீக்கத்தின் பின்னர் விபுக்களின் செயற்பாடு எப்படி இருக்கும் எனும் திட்டமோ கொள்கை முடிவோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.