Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    13
    Points
    15791
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    3055
    Posts
  3. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    1487
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2954
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/16/24 in Posts

  1. இந்தப் பாடல் நல்லா இருக்குது...... கமலா ஹாரீஸின் ரியாக்‌ஷன்..........🤣.
  2. "ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ]
  3. மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........
  4. இவர் பொருளாதாரத்தில் பெரிதாக ஒன்றுமே செய்ததில்லை. ஒபாமா காலத்தில் இருந்த பொருளாதர வளர்ச்சியின் தொடர்ச்சியில் காலத்தை ஒட்டினவர். இவரின் காலத்திலத்தான் இரான் உடனான உறவுகள் மோசமாகின, இரானுடனான ஒப்பந்தத்தை முறித்தார், தளபதி சுலைமானியை கொன்றார். ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என அங்கீகரித்து அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்றினவர். அதுவரை எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். பாலஸ்தீனினியர்களின் கடும் எதிர்ப்பாளர். மத்தியகிழக்கில் இன்று நடக்கும் பல பிரச்சனைகளுக்கான விதை இவரது ஆட்சில் போடப்பட்டது. இவரது நண்பர்கள் புடின், மோடி, கிம் யங், துருக்கி மற்றும் பிரேசில் தலைவார்கள், சொல்லி வேலையில்லை
  5. 2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.
  6. இவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முறை வெல்ல முடியாது. என் ஒரேயொரு வாக்கு எங்கள் அக்காவுக்குத்தான் 🤪
  7. ஆமா..... ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறுதான் கூவிக்கூவி மக்களின் வாக்கை வாங்கி கொட்டினார், ஏதாவது சொன்னதை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தாரா? இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று என்றாரே, அதுக்கு என்னாயிற்று? ரணில் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் என்றாரே, அது எங்கே போனது? ஏதோ தமிழர் அயல்நாட்டுக்கு வாக்களிப்பதுபோல் துள்ளுகிறார். வாக்கு என்பது அவரவர் உரிமை, அதை அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், இவர் யார் அதை தடுப்பது? முதலில் தமிழரசுக்கட்சியை ஒழுங்காக இயங்க விடவேண்டும். இவர் தன்னிச்சினையாக, தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடும்போது இவருக்கெதிராக நடவடிக்கை எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் இன்று தமிழரசுக்கட்சி இந்தளவுக்கு சிதறுண்டிருக்காது. யோசிக்க தெரியாத ஆள். எழுபத்தைந்து ஆண்டுகளாக சிங்களத்துக்கு வாக்களித்து என்ன கண்டோம்? வாக்கு வாங்கி கதிரை ஏறும்வரை ஒன்று சொல்வார்கள், அதன்பின் வந்தேறு குடிகள், உரிமை ஏதும் கோர முடியாது என்கிறார்கள். சரி... வாக்கு வாங்கி ஏமாற்றியது போதும், இனிமேல் சொன்னதை நிறைவேற்றியபின் வாக்கு வழங்கப்படும் மறு தேர்தலில். எந்த சிங்கள கட்சிக்கு வாக்களித்தாலும் நமக்கு ஏதும் தரப்போவதில்லை என்பது தெரியும், ஆனால் நாம் ஏதோ ஒன்றுக்குத்தான் வாக்களிக்க முடியும் என்பதாலேயே இந்த நாடகம் தொடருது. நாங்கள் ஜனாதிபதியாக வரப்போவதில்லை, ஆனால் இனியும் சிங்களத்துக்கு எங்கள் வாக்கு இல்லை, நாங்களும் ஒரு தேசிய இனம், எங்களுக்கும் உரிமை, வேணவா உண்டு, எமக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்பதை தெளிவு படுத்துவதே இதன் நோக்கம். இது வருங்காலத்திலும் தொடர வேண்டும், இது முதல் நடவடிக்கை!
  8. இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.
  9. ஆயுதம் ஏந்தி போராடி அழிவுகளைத்தான் கண்டோம். அரியத்தாருடைய சிந்தனை அன்று யாருக்கும் வராமல் போயிற்றே. அப்பொழுதே பொது வேட்பாளரை நிறுத்தி சிங்களத்தை அதிரவிட்டு சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லியிருக்கலாமே. காலம் கடந்து வந்து சங்கெடுத்து ஊதிக் கொண்டிருக்கிறோம்.
  10. இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது! ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்கா சிறப்பாக இருந்ததுதானே! உலகில் அவர் யுத்தம் எதனையும் ஆரம்பிக்கவில்லையே! இந்தமுறையும் அவருக்கு ஒரு வாக்கைச் செலுத்துங்கள்! நீங்கள் இருக்குமிடம் நீலம் என்றாலும் சிவப்பு வெல்லும்போது ஒரு மிதப்பு வரும்😃
  11. இல்லை, நீங்கள் எழுதும் காரணங்களுக்காகத் தான் புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர், பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் என எண்ணவில்லை. அவர்கள் எவரும் நாமல் வருவதை விரும்பக் கூடியவர்கள் அல்ல. அந்தளவுக்கு சுயநலமிகளும் அல்ல. போர், சுனாமி, கொவிட் தொற்று நோய்க்காலம் என்று தாயக மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்திய பொழுதுகளில் எல்லாம் புலம்பெயர் மக்களின், அமைப்புகளின், சங்கங்களின் பொருளாதார, தார்மீக உதவிகள் இல்லாமல் விட்டிருந்தால் தாயக மக்கள் இன்னும் கடும் துன்பத்தை எதிர் நோக்கியிருப்பர். அவ்வாறானவர்களை இவ்வாறு குற்றம் சொல்வது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும். ஆனால், பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில், வெற்றுக் கோசங்களுக்கு மயங்கும் தன்மை புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புகளின் பொதுவான பண்பு. அதன் வழிதான் சீமானை ஆதரிப்பதும், பொது வேட்பாளாரை ஆதரிப்பதும், முன்னர் சைக்கிள் அணியை ஆதரித்ததும். தாம் வாழும் தேசங்களின் முன்னேற்றத்துக்கு வழிசமைக்கும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆதரிப்பதில் சரியான முடிவுகளை எடுக்கும் இவர்கள், தாயக அரசியல் என்று வரும் போது, தம் இருப்பை பேணுவதற்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமற்ற வெற்றுக் கோசங்களுக்கு ஆதரவை வழங்குவது ஒரு முரண் நகை.
  12. வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.
  13. முற்றிலும் தவறான செய்தி - தமிழ்மிரர் காரருக்கு ஆங்கிலம் புரிவதிலும், மொழிமாற்றம் செய்வதிலும் உள்ள சிக்கலால் இந்த நிலை. இரண்டு "வழக்குகள்" அல்ல, இன்னும் நடந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் உட்பட்ட 18 பேருக்கெதிரான ஒரு வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுகளை (counts of felony) மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்ற தொழில் நுட்பக் காரணத்தினால் நீதிபதி நீக்கியிருக்கிறார். இதே போல 6 குற்றச்சாட்டுகள் மார்ச் மாதமும் தொழில் நுட்பக் காரணங்களால் நீக்கப் பட்டன. இன்னும் 8 மோசடிக் குற்றச்சாட்டுகள் (felony counts) ட்ரம்பின் மீது இந்த 1 வழக்கில் சுமத்தப் பட்டிருக்கின்றன. ஒரு மோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டாலே தண்டனை பலமாகத் தான் இருக்கும், எனவே 8 என்பது மிகப் பெரிய ஆபத்து நிலை தான். இந்த போலிச் செய்திகளை "அப்படியே சாப்பிடும் அப்பாவிகள்" உலவும் இடங்களில் போடுவது அவர்களுக்கு கொஞ்சம் மன அமைதியைக் கொடுத்தால் அதுவும் நல்லது தான்😎! உண்மையான செய்தியின் இணைப்பு: https://www.npr.org/2024/09/12/nx-s1-5110238/georgia-trump-case-supremacy-clause-counts-quashed
  14. பொது வேட்பாளர் தெரிவு என்பது தமிழ் மக்களின் ஒற்றுமையை அல்ல, பிளவுகளை உலகுக்கு வெளிப்படையாக தெரிவுக்கும் ஒரு முறை என்பதால் தான், இதுபற்றி ஊடகங்களில் வர ஆரம்பித்த நாளில் இருந்து நான் எதிர்க்கின்றேன். இன்றிருக்கும் சூழ்நிலையில், முக்கியமாக வடக்கு கிழக்கு என்பது ஒன்றிணைந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இல்லாத போது, தமிழ் பேசும் மக்களுக்கிடையில் அடிப்படை புரிந்துணர்வு கூட கட்டமைக்கப்படாத சூழ் நிலையில், இது ஒரு விசப் பரீட்சை. பொது வேட்பாளருக்கு 100 வீதம் தமிழ் மக்கள் வாக்களிப்பினும் கூட, அதன் விளைவுகள் பூச்சியம். வென்ற சனாதிபதியின் ஆட்சி தான் நிலவும். சர்வதேசமும் அவருடன் தான் கைகுலுக்கி தன் அலுவல்களைப் பார்க்கும். ஆனால் 50 வீதம் கூட பொது வேட்பாளருக்கு வடக்கு கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை. அதனால் அதன் விளைவு தமிழ் தேசிய அரசியலில் கடும் செல்வாக்கு செலுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் எனும் அடிப்படையை தமிழ் பேசும் மக்களே நிராகரித்தனர் எனும் விதத்தில் இந்த விளைவு மற்றவர்களால் எடுக்கப்படும். தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களில் 50 வீதத்தினர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வாக்களிப்பின் மூலம் உலகுக்கு அறிவித்த பின், அங்கு எந்த அரசியல் மிச்சமிருக்க போகின்றது? தமிழ் தேசிய அரசியல் வடக்கு கிழக்கு என்று இருந்து, பின் வடக்குக்கு மட்டும் என்று ஆகி, ஈற்றில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே என்று குறுகப் போகின்றது.
  15. முதலாவது மைத்திரியை ஆதரித்தமை பிழையான முடிவு அல்ல. மகிந்தவின் தமிழர்களுக்கு எதிரான மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விலகி தமிழர்கள் மூச்சு விடக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதற்காக எடுத்த முடிவு அது. மைத்திரி வந்த பின் அதுதான் நடந்ததும். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவ பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் மைத்திரியின் ஆட்சியில் தான். ஊர் பக்கம் தலைவைத்தும் பார்க்க முடியாத சூழ்நிலையில் இருந்த என்னைப் போன்றவர்கள் மீண்டும் தாயகம் பக்கம் போகக் கூடிய நிலைவந்ததும் மைத்திரி காலத்தில் இருந்து தான். இன்று என்ன பயன் என்று கேட்பவர்கள் பலர், அங்கு தொடர்ந்து அச்சமின்றி போகத் தொடங்கியதும் மைத்திரி காலத்தில் தான். ஆனால் அரசியல் தீர்வு? சிங்களம் அழுத்தங்கள் இல்லாத, தமிழர்களின் இராணுவ பலம் மட்டுமல்ல, பொருளாதார பலமும் சிதைக்கப்பட்ட சூழ்நிலையில் ஒரு போதும் தீர்வு தராது. தமிழ் மக்கள் மகிந்த அல்லாத கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு வாக்களிப்பதும் இதை புரிந்து கொண்டு தான். இதன் அடிப்படையில் தான் சரத்துக்கும் பின்னர், சஜித்துக்கும் வாக்களித்தனர். மூன்று வருடங்களுக்குள் தமிழர்கள் போல் கோத்தாவுக்கு வாக்களிக்காமல் விட்டிருக்கலாம் என 69 இலட்சம் சிங்கள மக்களும் எண்ணும் அளவுக்கு காலம் மாறியதும், அதன் பின் இன்று இனவாதத்தால் வெல்ல முடியாது என்று முன்னனி 3 வேட்பாளர்களும் உணர்ந்ததும் இதன் பக்க விளைவுகள்.
  16. அண்ணை, சஜித் இந்த பத்திரிகையை எதற்கு உபயோகப்படுத்துவார்?
  17. இவருக்கு வாக்குப்போடவும் முடியாது, இவர் நாட்டிலுமில்லை, பிறகு ஏன் இவர் அரற்றுகிறார். நல்லாட்சி அரசாங்கம் அமைக்க வாக்குபோடும்படி மக்களை கேட்டவர் யார்? எதைபெற்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்? சுமந்திரனுக்கு அன்று ரணில் வேண்டும், இன்று சஜித் வேண்டும் என்றால், மக்கள் என்ன அவரின் அடிமைகளா? அப்படி சுமந்திரன் என்ன பெரிய ராஜதந்திரி, செயல் வீரனா அவருக்கு எதிராக மற்றைய கட்சிகள் ஒன்று திரள? ஒன்றாக இருந்த கட்சிகளை வெளியேற்றினார், அதற்கான காரணங்களை முதலில் அவர்களுக்கு தெரியப்படுத்தினரா சுமந்திரன்? கட்சிக்குள் இருந்தவர்களை முரண்டு பிடித்து வெளியேற்றியது யார்? இன்று கட்சி நீதிமன்ற படியேறி இருப்பது யாரால்? தங்கள் மேல் பிழையை வைத்துக்கொண்டு, முந்திக்கொண்டு மற்றவர்மேல் குற்றம் சுமத்துவது. இவருக்கு தமிழ் மக்கள் மேல் பாசம் இருந்தால் அவர்களோடு இருந்திருக்க வேண்டும். சுமந்திரன் மக்களோடு இல்லை, அவர்களுக்கு சேவை செய்யவில்லை, இப்போ சிங்களத்தோடு வந்து அவர்களுக்காக வாக்கு கேட்கிறார். மக்கள் ஏன் அவருக்கு செவி மடுக்க வேண்டும்? மக்களுக்கு பணி செய்யாதவர்கள் அவர்களை வாக்கு போடும்படி கேட்க உரிமையில்லை. வயதுக்கேற்ற அனுபவமுமில்லை, பகுத்தறிவுமில்லை. உன் நண்பனைப்பற்றி சொல், நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது எவ்வளவு உண்மை. சுமந்திரன், சஜித்துக்கு வாக்கு கேட்கிறார், கனடாக்காரர் ஏதோ சுமந்திரன் தேர்தலில் நிற்பது போலவும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரளுகின்றனர் என்பது போலவும் கதையளக்கிறார். சுமந்திரன் இது வரையில் எதை செய்து சாதித்து விட்டார்? ஏதோ சிங்களத்துக்கு நாம் வாக்குபோடுவதுபோல் ஆளாளுக்கு துள்ளிக்குதிக்கிறார்கள், சிங்களவனே பேசாமல் இருக்கிறான்.
  18. தமிழரசுக் கட்சியின் காலைச் சுற்றிய பாம்பு போன்றவர்தான் சுமந்திரன், கடித்துக் குதறாமல் விடாது. அதற்குப் பாலூற்ற யாழ்களத்திலும் ஆள் உண்டு.😳
  19. இந்த கிழமை Charleston South Carolina போயிருந்த போது மனதுக்கு நெருடலான ஒரு அறிவிப்பு தொங்கிக் கொண்டிருந்தது.
  20. நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை. மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று எதற்கெடுத்தாலும் சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம் பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு. சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான். இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். "நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க காத்திருக்கிறாள். http://ippadikkuelango.blogspot.com/2024/09/nilamenumnallal.html
  21. நாங்கள் எல்லாம் யார்? சொந்த ஊரில் குண்டு விழும்போது ஓடுவந்துவிட்டு, அங்குள்ள மக்களை அடியடா வெட்டடா என்று உசுப்பேத்துற பேர்வழிகளெல்லோ,...🤣
  22. ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்பொழுது பிடிபட்டால் சில சமயம் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என தெரிந்தும் "பணம் " சிறந்த வாழ்க்கை ... என்ற ஆசையில் எல்லை தாண்டினோம்....
  23. இதற்கு பின்னால் இருப்பது ஈரானா, உக்ரேனா, ரஷ்யாவா அல்லது ஜனநாயகக் கட்சியா என்று பல கோணங்களில் இதை ஆராயத்தான் போகின்றார்கள், ஆனால் இங்கு ஒருவர் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு இப்படியான எந்தப் பின்னணியும் தேவையில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டும். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தாங்கள் ஒரு தலைவர் என்ற எண்ணம் இருக்கின்றது. பிறப்பு, பாடசாலை, இங்குள்ள புத்தகங்கள், Independence Day வகை சினிமாக்கள் என்று பல காரணிகளால் அந்த எண்ணம் நன்றாக வளர்க்கப்படுகின்றது. அவர்களாகவே ஒரு கருதுகோளை முன்வைத்து, அவர்களாகவே ஒரு தீர்ப்பை வழங்கி, அதை அவர்களாகவே நடைமுறைப்படுத்துவது பல சூட்டுச் சம்பவங்களின் பின்னணியாக இங்கு உள்ளது.
  24. அணைந்த காதலின் தீபத்தை ஏற்ற அந்தப் பெண் 1000 முறை போன் செய்தும் அந்த கல்நெஞ்சம் கொண்ட காதலன் ஒருமுறை கூட எடுக்காததற்கு, அவரையும் அந்தப் பெண்ணுடன் சேர்த்து ஒரே அறையில் அடைத்திருக்க வேண்டும் . ........! 😎
  25. நிலாந்தன் கிளிநொச்சியில் ஒரு காலத்தில் (உருத்திரபுரமென்று நினைவு) தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்பித்ததால் "மாஸ்ரர்" என அழைக்கிறார் என நினைக்கிறேன்.
  26. அபராதத்தொகையை குறிப்பிட்ட திகதிக்குள் கட்டாவிட்டால் தண்டனையை கடூழிய தண்டைனையாக மாற்றுவார்கள் போல. கடூழிய தண்டனையில் இந்த மாதிரியான கடுமையான வேலைகளும் கொடுக்கப்பட்டு, அத்துடன் தலைமுடியை ஒட்டவும் வெட்டி விடுவார்கள் போல. தலைமுடியை வெட்டாமல் விட்டிருக்கலாம். எப்பவும் இதைப் பற்றிக் கருத்துச் சொல்லி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்கும் தமிழக அரசியல்வாதிகள், எல்லை தாண்டிப் போகாதீர்கள் என்று அவர்களுடைய மீனவர்களுக்கு ஒரு போதும் சொல்வதில்லை.
  27. தமிழ் மக்கள் தம்மு முதலாவது அல்லது இரண்டாவது தெரிவை ரணிலுக்கு அளிப்பதே தற்போதைய நிலையில் நல்லது. ரணில் வந்து பாலாறும. தேனாறும. ஓடப்போவதில்லை. ஆனால், இன்றைய நிலையில் அதுவே பொருளாதார நீங்கள் சொன்னது போல் தாயக மக்கள் சற்றேனும் பொருளாதார மீட்சி பெற்று வடகிழக்கில் தமிழர் இருப்பை பேண சற்றேனும் கைகொடுக்கும். அதுவே இன்றைய தேவை. எது எப்படியோ ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியுடன் சுயநலமற்று (அது சாத்தியமில்லாதுவிட்டால் அல்லது சுயநலத்துடன் சேர்த்து பொதுநலத்தை சற்றேனும் ஆர்வம் கொண்ட வட கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் ஆர்வம் உடைய) தமிழ் மக்களின் பொதுவான பொருளாதார நன்மைகளை பேணக்கூடிய வட கிழக்கு அபிவிருத்தி, உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சிலராவது சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
  28. யானை... மரத்தில் ஏறி, நித்திரை கொள்ளுமா?
  29. உங்களுக்கு தமிழை வாசித்து புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கின்றது என நான் அறிந்திருக்கவில்லை. பொது வேட்பாளர் தெரிவு என்பது, வென்றாலும் (தமிழ் மக்கள் 100 வீதம் அவருக்கு வாக்களிப்பினும்) பூச்சிய விளைவை தருகின்ற, அதே நேரம் தோற்றால் பாதகமான சூழ் நிலையை தோற்றுவிக்கின்ற ஒன்று என இங்கு பல தடவை எழுதியுள்ளேன். இப்படியான சாத்தியம் தெளிவாக உள்ள ஒரு விடயத்தை மக்கள் முன் கொண்டு செல்வது அந்த மக்களை ஏமாற்றும் ஒரு விடயம் என தொடர்ந்து எழுதியுள்ளேன். அப்படி நான் எழுதியவற்றை உங்கள் கண்கள் வாசித்தாலும், அதை உடனடியாக மறந்து விட்டு "இவர்கள் சொல்ல மாட்டினம் " என்று மீண்டும் எழுதுகின்றீர்கள்
  30. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும் வட இந்திய மாணவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாய் தெரியாது முன்பின் தெரியாதவர்களிடம் எடுத்த எடுப்பிலே ஹிந்தியிலே கதைக்க தொடங்குவார்கள் அதே விளையாட்டை ரஷ்யர்களிடம் தொடங்கி இருந்து இருப்பார்கள் வாங்கி கட்டிக்கொண்டு நாடு திரும்பி இருப்பார்கள் .
  31. உண்மை 15 வருடமாய் யாழ் காலத்தில் வேட்பாளராய் இருக்கிற என்னைத் தங்கச்சியோ தம்பியோ எண்டு தெரியேல்லை, இதுக்குள்ள உலக நடப்பு வேற 🤪
  32. நெகிழ்ச்சியாய் இருந்தாலும் சிந்திக்க வைத்த கதை . ...........! 👍
  33. இதை சுமந்திரனின் அதிபுத்திசாலித்தனம் என்பதா, ராஜதந்திரம் என்பதா? சுமந்திரன் தெற்கில் ஒன்று சொல்வார், வடக்கில் அதற்கு வேறு விளக்கம் கொடுப்பார். கேட்டால்; பத்திரிகைக்காரர் நான் சொன்னதை திரித்து எழுதி விட்டார்கள் என்பார், அல்லது தனது கருத்துக்கு சரியான சொல் சிங்களத்தில் இல்லை, ஆங்கிலத்தில் இல்லை என்று மழுப்புவார். இனி வருங்காலத்தில் சுமந்திரம் எனும் பத்திரிகையில் அவரின் சுத்து மாத்தெல்லாம் சுதந்திரமாய் வெளிவரும். அதை வாசிப்பது சஜித்தாகத்தான் இருக்கும்.
  34. எவர் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் நம்மாள் தான்। ட்ரம்ப் மகத்தாட்ட ஜயவேவா! மென்ன பபோ அப்பி எனவா!
  35. ஆள் ஏற்கனவே பொய்யும் பிரட்டும் சுத்துமாத்தும்....😂 இதுக்குள்ள சொந்த பேப்பர் வேற😎 சுமந்திரம் சமாந்தரமாய் இருக்குமா? எழுதுமா? 😁 தமிழ் எழுத வாசிக்க பேசத்தெரியாதவனிடம் வெள்ளோட்ட தமிழ் பத்திரிகை கையளிப்பு. விளங்கினமாதிரித்தான்.
  36. R ரணில், A அனுர, S சஜித்.
  37. ஆரு வில்லங்கப்பட்டது இவர்தான் சுமக்கோனும் எண்டு.. ஓராமா இறக்கிவச்சிட்டு கிளம்புறது.. ஆனா செய்யமாட்டார்.. பச்சைக்கிளிக்கு புல்லட்டும், தொப்பியும் வாங்கிதரவும் எண்டு தமிழ்தேசியத்தை வாசித்து காட்டியே வாழ்ந்திடும்..
  38. கட்டுரை எழுதி சாவடிக்கபோகுது மனுசன்.. இதுக்காகவாவது அரியம் ஜனாதிபதி ஆகிடணும்..
  39. அது சரி.. சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்.. புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்… பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்… இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது.. ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு.. அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..
  40. சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா- திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய். (நன்றி: காளமேகப் புலவர்)
  41. சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.
  42. வடக்கில் 25 வீதத்திற்கு மேல் சஜித்திற்கு கிடைக்கவிருந்த வாக்குகளை குறைத்து ரணிலுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீயாய் வேலை செய்கின்றவரை இப்படி சொல்லக் கூடாது.
  43. தமிழர்கள் ஒற்றுமையே இல்லை என்று முதலைக் கண்ணீர் விடுபவர்கள் அதிலும் யாழ் இணையத்திலும் மூக்கால் அழுபவர்கள் இன்றைக்கு எத்தனையோ அமைப்புகள் கட்சிகள் கூட்டாக வந்திருப்பதே ஒரு வெற்றி தான். தமிழர்கள் என்றுமில்லாமல் பலயீனமாக இருக்கும் இந்த நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்னெப்போதையும் விட தமிழ் மண்ணில் நாளாந்தம் போய் நின்று ஆளாளுக்கு ஒவ்வொரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள். சட்டத்திலுள்ளதை அமுல்படுத்த முடியாதவர்கள் அதற்கு மேலும் பேச தயாராக இருப்பதாக கூவித் திரிகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் பொது வேட்பாளரை இறக்கிவிட்டதே. இதை முன்னுதாரணமாக கொண்டு மற்றைய தமிழ் அமைப்புகளும் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி மக்களை பொது வேட்பாளருக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும். போடு புள்ளடி சங்கிற்கு நேரே.
  44. கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் கட்டுரைகளை காணவில்லையே என்று நினைத்தேன் சரியான நேரத்தில் சிவப்பு சர்வாதிகாரிகளை நினைவுபடுத்தியுள்ளீர்கள் புத்தன் அண்ணா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.