Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    15791
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    4042
    Posts
  4. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1487
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/17/24 in Posts

  1. ஏறேறு சங்கிலி “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான். திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன். எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான். ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன். ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட. முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது . “அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை. அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன். மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான். காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான். “என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் . இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் . வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை, காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
  2. இப்பதிவு இங்கு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது போல் தெரிகிறது. அத்தனை பேரும் வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கி விட்டார்கள் !
  3. ‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’ September 16, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் என்பதை தமிழ் இனவாதமாகச் சுருக்கி, அதைக் கறுப்பு – வெள்ளையாக்கி, துருவ நிலைப்படுத்துவதற்கே தமிழ்த்தேசியத் தரப்பினால் தொடர்ந்தும் முயற்சிக்கப்படுகிறது. அதாவது கதாநாயகன் – வில்லன் என்ற மிகப் பழைய Formula வில். இதற்குச் சற்றுச் சூடேற்றுவதற்கு இடையில் துரோகி என்ற பாத்திரத்தையும் உருவாக்கி விடுகின்றனர். இந்தப் பழைய – உக்கிப்போன Formula வினுடைய புதிய வெளிப்பாடே (New version) தமிழ்ப்பொது வேட்பாளராகும். இதனை உறுதிப்படுத்தி மகிழ்ந்து கொண்டாடும் விதமாக தமிழ்ப்பொது வேட்பாளரை நியமித்த பொதுச்சபையைச் சேர்ந்தவர்களே தமது பத்தியில் எழுதியிருக்கிறார்கள். ஆக இவர்களுடைய நோக்கமெல்லாம் இலங்கை அரசியல் அரங்கை துருவமயப்படுத்தி வைத்திருப்பதே நோக்கமாகும். இப்படித் துருவமயப்படுத்தித் தமிழரசியலை வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு இனவாதம் தேவை. இனவாதமின்றி அதைச் செய்ய முடியாது. அந்த இனவாதத்தை வெளிப்படையாக – வெறித்தனமாக கையாள வேண்டுமென்றில்லை. பிரித்தாளும் தந்திரோபாயத்தோடு தமிழ்சமூகத்தைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கு முயற்சிப்பதே இனவாதம்தான். ஆனால் இலங்கையின் யதார்த்தம் இனி இனவாதத்துக்குரியதல்ல. இனவாதத்தை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, யாரெல்லாம் அதைத் தூக்குகிறார்களோ அவர்களை காலமும் சூழலும் நிராகரித்துவிடும். முழு இனவாதத்தை தூக்கிய கோட்டபாய ராஜபக்ஸ விரட்டப்பட்டமை ஒரு உதாரணம். பலருக்கும் இதை நம்பக்கடினமாக இருக்கும். ஆனால் இதுதான் யதார்த்தம். இதுதான் உண்மை. அண்மைய இன்னொரு உதாரணம், இந்தத் தடவை யாரும் இனவாதத்தை வெளிப்படையாக பேசவில்லை. இது 1994 லேயே வந்துவிட்டது. சந்திரிகா குமாரதுங்க இனவாதம் தவறு எனப் பகிரங்கமாகச் சொல்லி, தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கூறியே தேர்தலில் நின்று வெற்றியீட்டினார். அறகலய இதை மேலும் வலுவூட்டியது. மாற்றம் இப்படித்தான் படிப்படியாக நடக்கும். சினிமாவில் காட்டப்படுவதைப்போல ஒரே நாளில் மாற்றத்தை நிகழ்த்துவதல்ல. ஏன் சினிமாவில் அதிரடிகளை நிகழ்த்திய எம்.ஜி.ஆர் கூட தன்னுடைய அரசியலில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்த முடியவில்லை. ஆனால் தமிழ்த் தரப்போ உடனடியாக மாற்றம் நிகழவேண்டுமென எண்ணுகிறது. இவ்வளவு காலமும் நம்பினோம், விட்டுக்கொடுத்தோம் என்கிறது. அரசியலென்பது தொடர்ச்சியான, இடையறாத முயற்சியின் விளைவு. இடையறாத போராட்டத்தின் மூலம் எட்டும் வெற்றி. அது மிக கடினமான பாதையும் பயணமும். அதில் ஏற்ற இறக்கம் நிகழும். இதைப் புரிந்து கொண்டு நிதானமாக செயற்பட வேண்டும். ஆகவே இன அடைப்படையில் தனித்தமிழ் எனத் தன்னைத் தனிமைப்படுத்தி நிற்கும் தமிழ்ப்பொது வேட்பாளரையும் அதனுடைய இனவாதத்தையும் வரலாறும் சூழலும் ஏற்கப்போவதில்லை. ஏனெனில் இதற்கு எந்தப் பெறுமானமும் உள்நாட்டு அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் கிடையாது. (வேண்டுமானால் ஆரோக்கியமான முறையில் இதை விவாதிப்பதற்கு யாரும் எங்கும் வரலாம்). இன்று இதொரு எழுச்சியைப்போலச் சிலருக்கோ பலருக்கோ தோன்றக் கூடும். ஆனால், வரலாறு இதை நகையாடும். நிராகரிக்கும். மட்டுமல்ல, மோசமான தண்டனையைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கும். ஏனெனில் அரசியற் தவறுகள் எளிதாகக் கடந்து போகக் கூடியனவல்ல. இலகுவாக முடிந்து விடுவனவுமல்ல. அவை மிகப் பெரிய தண்டனையையே அளிக்கும். ஆகவே இன்றைய தவறுக்கு நாளை நிச்சயமாகப் பெரிய தண்டனை கிடைக்கும். முள்ளிவாய்க்காலையும் விட. அது மேலும் தமிழ்ச்சமூகத்தைப் பலவீனப்படுத்தும். 1960 களில் சிங்களவரல்லாத தமிழ்பேசும் சமூகங்களில் ஓரளவுக்குப் பலமாகவும் பெரியதாகவும் இருந்த தமிழ்ச்சமூகம் இன்று மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதனுடைய வளர்ச்சி மிகக் கீழிறக்க நிலையிலேயே இருக்கிறது. இது எப்படி நிகழ்ந்தது? தமிழ்த்தலைமைகள், தமிழ் ஊடகங்கள், தமிழ்ப்புத்திஜீவிகள், தமிழ்ச் செயற்பாட்டு அமைப்புகள், தமிழ்ப்பல்கலைக்கழகங்களின் கூட்டுத்தவறினாற்தானே! இவை சரியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்ச்சமூகம் இந்தளவுக்குப் பலவீனப் பட்டிருக்காது. அன்று தமிழரையும் விடப் பொருளாதாரத்திலும் அரசியலிலும் கல்வியிலும் பின்னிலையில் இருந்த சமூகங்கள் தங்களுடைய இடர்களையும் நெருக்கடிகளையும் எப்படிக் கடந்து செல்கின்றன? அதற்குள் எப்படிப் பலமாகி, வளர்ச்சியடைகின்றன? என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். என்பதால்தான் அவை தமிழ்ப்பொது வேட்பாளரை ஒத்த தெரிவுக்குச் செல்லவில்லை. அதற்காக அந்தச் சமூகங்களுக்கு நெருக்கடி இல்லை என்றோ, அரச ஒடுக்குமுறையிலிருந்து அவை விடுபட்டு விட்டன என்றோ இல்லை. அல்லது அந்தச் சமூகங்கள் சிந்திக்கத் தெரியாதனவாகவும் இல்லை. அல்லது அவற்றுக்கு அரசியல் ஞானமோ சமூக உணர்வோ இனமானமோ இல்லை என்றும் சொல்ல முடியாது. இலங்கைத்தீவின் யதார்த்தம், சர்வதேசத்தின் வரையறை, தங்களுடைய மக்களின் நிலை என்பவற்றை அவை அரசியல் ரீதியாகச் சரியாக உணர்ந்துள்ளன. மதிப்பிட்டுள்ளன. அதற்கமையவே தங்களுடைய தீர்மானங்களை எடுக்கின்றன – செயற்படுகின்றன. இதுவே அவற்றின் வெற்றியாகும். இதைப்பற்றித் தமிழ்ச் சூழலில் பேசினால், அதைப்பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக, அதொரு மாற்றுக் கருத்து, ஜனநாயக விழுமியம் என ஏற்றுக் கொள்வதில்லை. பதிலாகத் துரோகி, எட்டப்பன், காக்கை வன்னியின் என்றெல்லாம் அடையாளப்படுத்துவதே நிகழ்கிறது. இதைக்குறித்து பொதுவெளியிலோ பொது அரங்கிலோ யாரும் உரையாடவும் விவாதிக்கவும் முன்வருவதில்லை. பதிலாக தங்கள் ஏஜென்டுகளை ஏவி விட்டு வசைபாடவும் குற்றம் சாட்டிப் பழித்துரைக்கவுமே முற்படுகின்றனர். தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி என்ற அதீதமான சிந்தனை, கற்பனை இந்த உலகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்தப் போகிறது. கடந்த காலத்தில் சிங்களத் தலைமைகள் தம்மை ஏமாற்றி விட்டன, நம்பி ஏமாந்து விட்டோம் என்று இப்போது சொல்கிறார்கள. அப்போதும் இப்போதும் இவர்களுடைய அரசியற் தெரிவு தவறானது. இதை தொடர்ந்து செய்து தமிழ்மக்களை, தியாகம் பல செய்த மக்களை, இழப்புகள் பலதைச் சந்தித்த மக்களை மேலும் தோற்கடிக்கின்றனர் எனவே இவர்கள்தான் சிங்கள இனவாதத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் ஏஜெண்டுகளாக உள்ளனர். இதை மேலும் தொடர அனுமதிப்பதா என்பதைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். அதாவது தம்மைத் தாமே தோற்கடிப்பதையும் தம்மை ஏமாற்றும் தலைமைகளை அனுமதிப்பதையும் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அழிவே. https://arangamnews.com/?p=11258
  4. ஏழைகள் தங்கள் வருமானத்திற்கு எல்லை தாண்டுவார்கள் .... அவர்கள் பாவம் என்ன செய்வார்கள்.... கள்ள பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு வருவதற்காக நாங்கள் எவ்வளவோ தில்லு முள்ளு செய்தோம்....எல்லை தாண்டும்பொழுது பிடிபட்டால் சில சமயம் உயிருக்கு ஆபத்து இருக்கின்றது என தெரிந்தும் "பணம் " சிறந்த வாழ்க்கை ... என்ற ஆசையில் எல்லை தாண்டினோம்....
  5. 🤣........... இந்த திரியில் ஒரு மாற்றுக்கருத்தும் வராது போல என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.......... என் நினைப்பில் மண்ணைப் போட்டு, மாற்றுக்கருத்துடன் நீங்கள் வந்து விட்டீர்கள்.......... மூன்றாவது காரணம் அல்லது மாற்றுக் கருத்து: இந்த டாபிக்கில் மட்டும் தான் ஏழாம், எட்டாம் வகுப்பில் விட ஆரம்பித்து புளித்துப் போன அதே பகிடிகளை 50, 60, 70 வயதுகளிலும் அதே உற்சாகத்துடன் விட முடிவது.......
  6. "சுதந்திரம் தேடும் இனத்துக்கு சுமந்திரம் சூது கவ்வுது தலை சுத்துது ! தந்திரம் இதுவோ மந்திர வேதமோ சுந்தர தமிழில் மந்தியின் பாச்சலோ?" "மூன்று தேர்தலில் வழி காட்டினானாம் மூக்கு உடைந்து ஒதுக்கப்பட்டது தெரியாதோ? அபிலாசைகளை அடுக்கி ஒழுங்கு படுத்துகிறான் அதனை வலியுறுத்துவதை எதிர்த்து நிற்கிறான்?" "மூன்று வேட்ப்பாளரை ஒப்பிட்டுப் பார்க்கிறான் ஒன்றுக்கும் இணங்காத கட்சிக்குள் தேடுகிறான்? மூக்குக்கு மேலே நீரின்அளவு எதற்கு மூழ்கி மீண்டும்சாக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறானாம் ?" "ஒற்றுமை இல்லா கட்சிகள் இவையோ ஒழுக்கம் புரியா தலைவர்கள் இவர்களோ ? ஓதி குழப்பி மீன் பிடிக்கிறார்கள் ஓரமாய் மக்களை தள்ளும் தந்திரமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி , யாழ்ப்பாணம்]
  7. நரியன் ரணில்.... கருணா கட்சியையும் பிரித்துப் போட்டார் போலுள்ளது. 😃 நாசமாய் போனதுகள் பிரிந்து, சிதறி... சின்னா பின்னமாய் போகட்டும். 😂 இதுகள் ஒன்றாய் இருந்து... ஊர், உலகத்துக்கு என்ன லாபம்.? 🤣
  8. சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் https://fb.watch/uENLbbpuac/
  9. எலே… சண்முகம், வுட்றா வண்டிய ரஸ்யாவுக்கு.... 😂 🤣
  10. ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிருக்கு பயந்தும், பட்டினிச் சாவுக்கு பயந்தும், அக திகளாக செல்லும் மக்களும் கடற்கொள்ளையர்களும் ஒன்றா புத்தன்? தமிழக மீனவர்கள் , தடை செய்யப்பட்ட மீன் பிடிக்கும் முறைகளின் மூலம் கடல் வளத்தை நாசம் செய்த பின் பக்கத்து வீட்டில் இருக்கும் வளம்களை கொள்ளை அடிக்க அதே முறைகளை பயன்படுத்தி எல்லை தாண்டி வருகின்றனர். மொட்டை அடித்ததுடன் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, கொள்ளையர்கள் என்று முகத்தில் பச்சை குத்தி அனுப்பியிருக்க வேண்டும்.
  11. இது தமிழ் ஈழத்துக்கும். பொருந்தும் அங்கே மக்களை கொன்று குவிக்க ஏன் உதவினீர்கள்.?? ஆகவே அனுபவிங்ககள்
  12. நாங்கள் கடல் எல்லை தாண்டி இந்தியாவுக்கு ஓடியதை மறந்துவிட்டோம் போல. வெளிநாட்டுக்கு வந்த பலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக சென்று பின் தூரதேசம் சென்றார்கள். இங்கே உள்ள பல கருத்துக்களை/வாதங்களை பார்த்தால் இலங்கை அகதிகள் விடயத்தை இந்தியா எப்படி கையாண்டாலும் நியாயம் கேட்கும் அருகதை எமக்கு இல்லை போல. ஏன் என்றால் சட்டவிரோதமாக புகுந்தவர்கள் எப்படி பொதுவான செளகரியத்தை/மரியாதையை எதிர்பார்க்கலாம்?
  13. அப்ப.... இங்கு உள்ள செய்திகளுக்கெல்லாம், அந்தந்த ஊர் மக்கள் தான் கருத்து சொல்ல வேணுமோ... 😮 அப்ப ஏன்... நீங்கள் மற்ற ஊர் செய்திகளுக்குள்ளை மூக்கை நுழைக்கிறீங்கள். 😂 குருக்கள் "குசு" விட்டால்... ஓகே போல இருக்குதே.... 🤣
  14. ஒரு வீட்டில பொம்புளைப்பிள்ளையள் இல்லாட்டி பொடியனுக்கு சாறிகட்டி பொட்டு வைச்சு வடிவு பாக்கிறதில்லையோ. அது மாதிரி இதையும் நினையுங்கோ 😄 கோவிக்காதையுங்கோ
  15. "ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ]
  16. இந்தியாவிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணம் நோக்கி தமிழ்நாடு/கேரளாவிலிருந்து வரும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல்களை கண்டு கொள்ளாமல்...... வெறுமனே தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களை மட்டும் சாடுவது ஏற்புடையதல்ல. தமிழக மீனவர்கள் எனும் போர்வையில் பல கடத்தல்கள் நடைபெறுகின்றது என நான் நினைக்கின்றேன்.
  17. நல்ல ஐடியா வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும் அதுசரி ரிக்கற். இலவசமா. ?? ஆமாம் நம்பி விட்டோம்.......ரஷ்யா பெண்களுக்கு பிறந்த உங்கள் பிள்ளைகளை போர் களத்துக்கு அனுப்பி விடுங்கள் 🙏 குறிப்பு, ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார் கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது
  18. நீங்கள் கூறிய கொள்ளையடித்தல் விடயத்தில் ... தமிழக/இந்தியா மீனவர்கள் கொள்ளையடிப்பதை விட இந்தியா அரசு இலங்கையை கொள்ளையடிப்பது அதிகம் ...அதானி குடும்பம் கொள்ளையடிப்பது அதிகம் ,பல இந்திய நிறுவனங்கள் கொள்ளையடிப்பது அதிகம் என நினைக்கிறேன்... மீன் வளங்களை பாதுகாத்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பி பொருளாதாரத்தை அதிகரிக்க சிறிலங்கா அரசு என்ன செய்தது ....இன்றும் மீன் டின்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றனர்... நாங்களும் ஏனைய நாட்டு அகதிகளும் மேற்கத்தைய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கின்றோம்,அந்த நாட்டு மக்களின் வேலை வாய்ப்பு,உயர்கல்வி போன்றவற்றை மெல்ல மெல்லமாக கொள்ளையடிக்கின்றோம்🤣 ....அந்த நாட்டின் பிரஜாவுரிமைகளாகி அவர்களையும் புறந்தள்ளுகிறோம் ...இது மெளனமான நீண்ட நாள் கொள்ளையடித்தல் ..🤣 தமிழக மீனவர்களின் கொள்ளையடித்தலை அரசுகள் நினைத்தால் தடுத்து நிறுத்தி நடவடிக்கைகள் எடுக்கலாம் குறுகிய கால கொள்ளையடித்தல் .....🤣
  19. என்ன பிரச்சனை இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும் விருப்பமில்லை காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை போர் செய்யவில்லை ஆனால் தமிழர்களை இந்தியாவுடன் சண்டை போர் புரிய இலங்கை அரசாங்கம் வைத்து உள்ளது இதனால் தனிநாடு கிடைக்கும் முதலே எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால் என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம் உண்டு” அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் வழுவாக்கிக் கொண்டு வருகிறோம் இதற்கு மாறாக அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது ?? நாடு இல்லாத நாங்கள் கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்?? இந்த கடலில் சிங்கள கடப்படை காவல் காக்கட்டும். என்றால் வடக்கு கிழக்கு இலும். இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்
  20. யானையின் அறிவு?! மின்சாரவேலியின் கீழால் நகரும் நுட்பம்!! கீழுள்ள முகப்புத்தக இணைப்பூடாக கண்டு மகிழுங்கள். https://www.facebook.com/reel/989220152644256http://<iframe
  21. ஈழப்பிரியன்…. டாக்டர் காளிமுத்துவின் சிட்டுக்குருவி லேகியம் பாவிக்க… கூச்சம்… பஞ்சாய் பறந்து போய் விடும். 😜 😂
  22. 🤣........ 'ஐம்பதிலும் ஆசை வரும்........' என்று தான் சிவாஜியும், கே ஆர் விஜயாவும் ஓடி, துள்ளி வந்தவை. இப்பை அதையும் தள்ளித் தள்ளி 70 வரை கொண்டு போய் விட்டார்களே................🤣. களத்தில் நீங்கள் சளைக்காமல் எழுதுவது.................👋.
  23. இப்பிடி பொசுக்கெண்டு சொல்லிப் போட்டியள். 😂 எல்லாம் கேள்வி ஞானம் ஐயா. 🤣 நாளைக்கு… கந்தையா அண்ணை யாழ். களத்திற்கு வராவிட்டால், ஆள் மொஸ்கோவில் நிற்கிறார் என்று அர்த்தம். 🤣
  24. தான் அலுவலங்களில் செய்து வருவதை சட்டமாக்குகிறார் போலும் .?!
  25. தமிழர்களில் ஒரு பகுதியினர் ரணிலுக்கும் மற்றயவர்கள் சஜித் மற்றும் அநுராவுக்கும் ஆதரவு அளிப்பது ஒரு வகையில் சிறந்ததே. அந்த வகையில் மாவையின் மகனும் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ரணிலுடன் நிற்பது நல்லதே. யார் வென்றாலும் அவர்களுடன் தமிழர் பிரதேச அபிவிருத்தி மற்றும் நடைமுறை பிரச்சனைகள் என உடனடியாக தீர்கக வேண்டிய பிரச்சனைகளை முன்னெடுக்கலாம். அதற்கு இவ்வாறானவர்கள் தமது சுயநலத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது பொது நலமாகவும் சிந்திக்க வேண்டும். அரியத்திற்கும் சிலர் ஆதரவளிக்கலாம். அவர் வென்றால் தமிழீழத்தை வெட்டி பிரித்து தருமாறு கேட்கலாம். 🔪🎂
  26. கஜானாவை காலியாக்கிப் போட்டுத் தான் வந்திருக்கிறார்.
  27. மாவை இன்னும் தாண்டித் தாண்டி திரிவது எல்லாம் மகனுக்காகவே. புரிந்தால் சரி.
  28. வணக்கம் தில்லை.நீண்ட நாட்களுக்குப் பின் களத்தில் காண்பது மிகவும் சந்தோசம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.
  29. இவ்வளவு காலமும் ஒத்தோடினவருக்கு இப்போ சடுதியாக அதுவும் தேர்தல் நேரத்தில் இப்படியொரு அறிவிப்பு. சோழியன் குடுமி சும்மா ஆடாது கண்டியளோ .... பொறுத்திருப்போம்.
  30. கந்தையா.... அண்ணை, இந்தச் சகதி பிடித்த செய்திக்குள் இருந்து வெளியே வாருங்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு... இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. அதை விட்டிட்டு இதற்குள் நின்று உழன்று கொண்டிருக்காதீர்கள். தேர்தல் செய்திகளுக்குள் போய் உங்கள் தரமான கருத்துக்களை வையுங்கள். 😂 அதுதான்... தற்போது முக்கியம். 👍
  31. பெரும்பாலும் இந்த மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள், இந்த தமிழக அரசியல்வாதிகள்தான் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த முதலாளிகள் மீன் வளங்களை அழித்து சிறிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கியமையால் தற்போது கூலிக்கு எல்லை தாண்டி மீன் பிடித்தலில் ஈடுபட்டு இலங்கை கடல் வளத்தினை அழிக்கிறார்கள், இவர்களுடன் சேர்த்து அந்த தமிழக அரசியல்வாதி முதலாளிகளுக்கும் தண்டனை (முதலாளிக்கு அதிக தண்டனை விதித்தால் பிரச்சினை முடிவுக்கு வரலாம்) வழங்கவேண்டும்.
  32. சுமந்திரனின் அடுத்த, அடிப்பொடி... வெள்ளையடிக்க வந்து விட்டார். 😍 சுமந்திரனை விமர்சித்த ஆத்திரத்தில்... கேனையன்கள் என்று எல்லாம் மற்றைய உறுப்பினர்களை சொல்லக் கூடாது. கூல் டவுன் கபிதன். 😂 பல்கலைக்கழகம் எல்லாமே போய் படித்ததனிங்கள், பண்பாய் எழுதப் பாருங்கோ. 😎 அதிக கோபம்.. உடல் நலத்திற்கு, தீங்கு விளைவிக்கும். 🤣
  33. "வரமாக வந்தவளே" "வரமாக வந்தவளே துணையாய் நின்றவளே உரமாக வாழ்வுக்கு பண்பாடு தந்தவளே தரமான சொற்களால் உள்ளம் கவர்ந்தவளே ஈரமான கருணையால் மனிதம் வளர்த்தவளே கரங்கள் இரண்டாலும் உழைத்து காப்பேனே!" "தோரணம் வாசலில் மாவிலையுடன் தொங்க சரமாலை கொண்டையில் அழகாக ஆட ஓரக்கண்ணாலே ஒரு ஓரமாய் பார்த்து காரணம் சொல்லாமல் அருகில் வந்தவளே மரணம் பிரித்தாளும் மறவேன் உன்னை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  34. நானும் 2016 இல் இருந்து அமெரிக்க தேர்த்தலில் ஜனநாயகக் கடசிக்கு வாக்களித்து வருகின்றேன். தாயகத்தில் ஒருமுறைகூட வாக்களிக்கவில்லை.
  35. அதாகப்பட்டது, தாங்கள் அங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்றீர்கள், நாங்களெல்லோரும் இங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்று கூவினோம் என்கிறீர்களா,.....😉 அந்தப் பல நல்ல காரியங்களில் ஒரு நல்ல காரியத்தை ஒருக்காச் சொல்லுங்கோ , போற வழிக்குப் புண்ணியமாகப் போகும்,.🤣
  36. ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.
  37. நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள். உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்? என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁
  38. நாங்கள் எல்லாம் யார்? சொந்த ஊரில் குண்டு விழும்போது ஓடுவந்துவிட்டு, அங்குள்ள மக்களை அடியடா வெட்டடா என்று உசுப்பேத்துற பேர்வழிகளெல்லோ,...🤣
  39. சரியாக சொன்னீர்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழ் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்ளுபவர்கள் ஒரு சீரியலை டெலிவிசனில் பார்ப்பது போலவே தாயக அரசியலை நோக்குகின்றனர். அவர்களுக்கு நாளாந்தம் பொழுது போக ஒரு Thriling அரசியல் வேண்டும். யுத்த காலங்களில் அவர்களுக்கு இருந்த, அவர்கள் ரசித்த அந்த சுவாரசியம் இப்போது இல்லாமல் தவிக்கிறார்கள் பாவம்.
  40. உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன். ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும் நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார். இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள். முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம். போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.
  41. ஒரு தமிழக உறவை இலங்கை சிறையில் மொட்டை அடித்து துன்புறுத்தல் செய்வதை ரசிக்கும் அளவுக்கு நாங்கள் மனதில் வக்கிரத்தை வளர்த்து விட்டோமா?
  42. உங்கள் கற்பிதம் தவறு. அவர்கள் தாரைவார்த்துத் தருவார்கள் என்று ஒருவரும் கூறவில்லை. ஆனால் அதற்காக அங்குள்ள மக்களை ஏழ்மையிலும் பட்டினியிலும் வாழ விட முடியாது. பசியில்லை, பயமில்லை, பாதுகாப்புப் பிரச்சனையோ அல்லது எதிர்காலம் தொடர்பான பயமோ உங்களுக்கும் எனக்கும் இல்லை. அதனால் நீங்களும் நானும் உரிமையைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். தாயக மக்களின் நிலையோ நேரெதிரானது. உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன் எனும் நிலைக்கு தாயகத்தில் உள்ளவர்களைத் தள்ளி இட முடியாது.
  43. நான் அறிந்தது இப்படி, ‘நம’ என்றால் வணங்குதல் (நமஸ்தே) ‘சிவாய’ என்றால் சிவனுக்கு ஆக கூட்டிப் பார்த்தால் ‘சிவனுக்கு வணக்கம்’ ஒவ்வொருவரது விளக்கங்களும் வேறு வேறாக இருக்கலாம். ஏராளன் குறிப்பிட்டது போல் ‘ச்’ இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.