Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    17
    Points
    15791
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20014
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/18/24 in Posts

  1. இரு மாதங்களுக்கு முன்னர் தாய்வானிடமிரிந்து 3000 இற்கு அதிகமான, அமைவிடத்தையும் உரையாடலையும் கண்டுபிடிக்க முடியாத பேஜர்களை ஹிஸ்புள்ளா கொள்வனவு செய்திருக்கிறது. தாய்வானில் இருந்து லெபனானிற்கு அனுப்பப்படும் வழியில் இவை இடைமறிக்கப்பட்டு பற்றரியிற்கு அருகில் சிறிய வெடிபொருள் சேர்க்கப்பட்டபின் லெபனானிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பின்னர், இப்பேஜர்களுக்கு ஒரே நேரத்தில் குருஞ்செய்தியொன்றினை அனுப்பி வெடிக்கச் செய்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவரிலும் காயப்பட்ட 2400 பேரிலும் பெரும்பாலானவர்கள் ஹிஸ்புள்ளா போராளிகள். இத்தாக்குதலின் பின்னால் மொசாட் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஸ்புள்ளாவை நிலைகுலைய வைத்துவிட்டு அதன்மீது பாரிய யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட இஸ்ரேல் முயல்கிறதா என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
  2. எதுக்கும் இனி காற்சட்டை / டிரவுசர் பொக்கட்டுக்குள் கைபேசியை வைப்பதை தவிர்க்க வேண்டும். வெடித்தால் உள்ளதும் போய் விடும்.
  3. ஆனால் நாம் ஏற்கனவே நலிவுற்று இருக்கும் ஒரு சமூகத்தின் வயிற்றில் அடித்து அவர்களின் வளம்களை கொள்ளை அடித்து அதில் கொள்ளை லாபம் சம்பாதிக்கவா அகதிகளாக கடல் கடந்து சென்றோம்? உலகம் முழுதும் தம் உயிருக்கு பயந்தும், பட்டினிச் சாவுக்கு பயந்தும், அக திகளாக செல்லும் மக்களும் கடற்கொள்ளையர்களும் ஒன்றா புத்தன்? தமிழக மீனவர்கள் , தடை செய்யப்பட்ட மீன் பிடிக்கும் முறைகளின் மூலம் கடல் வளத்தை நாசம் செய்த பின் பக்கத்து வீட்டில் இருக்கும் வளம்களை கொள்ளை அடிக்க அதே முறைகளை பயன்படுத்தி எல்லை தாண்டி வருகின்றனர். மொட்டை அடித்ததுடன் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி, கொள்ளையர்கள் என்று முகத்தில் பச்சை குத்தி அனுப்பியிருக்க வேண்டும்.
  4. சமீபத்தில் முகப்புத்தகத்தில் கண்ணுற்ற காணொளி. உடனடியாக நண்பனுடன் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன். முற்றிலும் உண்மை தனிப்பட்ட முறையில் குறித்த வைத்தியரையும் தெரியுமென்பதால் அவரிடமும் உறுதிப்படுத்திக்கொண்டேன். வைத்திய செலவுக்காகும் தொகை மிகப்பெரிதென்பதால் நல்லுள்ளங்களிடம் உதவிவேண்டி நிற்கிறார் இந்த சிறுமி. உதவும் எண்ணம் கொண்டவர்கள் நேரடியாக காணொளியில் இருக்கும் வங்கிக்கணக்கிற்க்கு செலுத்திவிட்டு என்னிடமோ அல்லது அதிலுள்ள வாட்ஸ் ஆப் இலக்கத்திற்கோ அறியத்தந்தால் உங்களுக்கான காணொளியை வெளியிடும் போது அறியத்தர உதவியாக இருக்கும். என்னுடைய உதவித்தொகையை ஏற்கனவே குறிப்பிட்ட கணக்கிற்கு செலுத்தி உறுதிப்படுத்திக்கொண்டும் விட்டேன். நல்லுள்ளங்களுக்கு நன்றிகள் https://fb.watch/uENLbbpuac/
  5. ஆறு மாசமா?😍 நல்ல விவசாயியின் தொலை நோக்குப் பார்வை..👍
  6. ஏறேறு சங்கிலி “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான். திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன். எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான். ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன். ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட. முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது . “அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை. அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன். மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான். காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான். “என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் . இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் . வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை, காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
  7. ஒரு பொருளை உருவாக்குபவர்களால் அந்த பொருளை வைத்து நல்லது - கெட்டது எதுவுமே செய்ய முடியும்.😎 வீட்டில் இருக்கும் தனிப்பட்ட கணணிகளையே கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள் உள்ள உலகத்தில் அல்லது கணணி தொழில் நுட்பம் கூடிய விமானங்களையே ...........🤣
  8. சேதாரங்களைக் கணக்கெடுக்க ஒருவர் என்றாலும் இருக்கத்தானே வேண்டும். சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோர். லாஸ் வேகசுக்கு நானும் போய் வந்திருக்கிறேன். இது ஆபிசிலேயே குடும்பம். லொட்டோ எப்போதும் விழாது. வண்டி கிழம்ப போவுது.கெதியா முடிவு பண்ணுங்க.
  9. ”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு” . பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான். . ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். . “பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார். . அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள். . முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள். . அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே! . எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார். . “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார். . “ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி. . “பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும். . ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார். . தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து . குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான். Benitto Kumar
  10. காணொளிக்கு நன்றி, அந்த சிங்கள ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய யாழ்ப்பாணம் எரியூடல் -1981 எனற புத்தகத்தில் யாழ் நூலகத்தை எரித்த சூத்திரதாரிகளை ஆவணப்படுத்தியுள்ளார், அதனை மனோரஞ்சன் தமிழாக்கம் செய்துள்ளார். குறிப்பாக ரணில் எப்படி முன்னின்று செய்யப்பட்டார் என்று விலாவரியாக கண்கண்ட சாட்சிகளுடன் தந்துள்ளார்.
  11. இங்கு இரண்டு பேர் நின்றிச்சினம், இப்ப எஸ்கேப் ஆகிட்டினம்.. திருப்பி இந்த திரிக்குள் வராமலா போயிடினம் நம்மட ரகசியமெல்லாம் இப்படி வெளியே தெரிந்து விட்டதே... பயிற்சி காணாது போல..
  12. ஆமா… ஆமா… இது நல்ல யோசனை. ஊரிலை நல்லாய் உழுதால்தான்… வெளியூர் போய், ஜாம்… ஜாம் என்று உழலாம். 🤣
  13. ரஷ்யா குளிருக்கு…. சும்மாவே „பவர்“ குறையத்தான் பார்க்கும். 😂 கந்தையா அண்ணை எப்பிடி, தாக்குப் பிடிக்கப் போறார் என்று தெரியவில்லை. 🤣
  14. அறுவடை செய்யாமல் திரும்பமாட்டார் போலும்... புட்டினும் விடமாட்டார் 🤣 பாவம் கந்தையா அண்ணை பவர் குறைந்து இருந்தால்...?🤪
  15. உண்மையான, ஆனால் மனதை அழுத்தும் கூற்று, விசுகு ஐயா. முடிவுகள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன என்றும் சொல்வார்கள்......... இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது...........
  16. தர்ம யுத்தம் செய்து தோற்றுப் போன இனம் நாம். வெற்றி மட்டுமே அனைத்தும் சீரமைக்கிறது. எப்படி வென்றோம் என்பது கூட அறிவீலித்தனமானது உலகில் ....???
  17. இது மிகவும், தூர நோக்கும் இராஜதந்திரமும் மிக்க புலிகளின் செயல்களுள் ஒன்று என்பேன்! புலிகளின் தண்டனையால் ரணில் படு தோல்வி அடைந்தார். மகிந்த பதவிக்கு வந்து, யுத்தம் மீண்டும் ஆரம்பித்து, முள்ளி வாய்க்காலில் பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்தார்கள். சர்வதேச நாடுகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தமிழர் பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டு இப்போது தமிழர் பக்கமே நிற்கின்றன. இனப்படுகொலையாளிகளான பக்சாக்கள் ஹேக் நகரில் சிறையில் இருக்கிறார்கள்! ரணில், இன்னும் தோல்வியில் இருந்து மீள இயலாமல் வீழ்ந்து கிடக்கிறார்! பி.கு: முடிவிலி எண்ணிக்கையான சமாந்தர அகிலங்கள் (parallel universe) இருக்கின்றன, அந்த சமாந்தர அகிலங்களில் ஒன்றில் 👆 இது நடக்கிறது என்ற நம்பிக்கையோடு வாசிக்கவும்!
  18. முச்சந்தி எல்லைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் . ......! 😂
  19. நன்றி பகிர்வுக்கு, நாளை பணத்தை அனுப்பிவிட்டு, உங்களுக்கு தனிமடலில் அறிய தருகின்றேன், அந்த பிள்ளை நீடூழி வாழ்த்து🙏, அவர் கனவை அடைய வேண்டும்
  20. தனது தாயின் மரணச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட மகாத்மா காந்திக்கு கிளுகிழுப்பு தேவைபட்டிருக்கிறது என்பது கூட வரலாறு,...🤣 (அவர் செய்தால் சுய பரிசோதனை 🤣)
  21. விடுதலைப் புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவு படுத்தியதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தான் அது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று மட்டக்களப்பு – கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கொண்டுள்ளார். சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணமும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களான வசந்தராஜா, எஸ்.சிவயோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309483
  22. உதெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு மற்றவனுக்குப் பாடமெடுக்க நினைப்பவர்களுக்கு புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் மூழையின் பகுத்தறியும் பகுதி அதீத நன்றியறிதலால் கழுவப்பட்டுள்ளது. நாங்கள் எல்லாம் யார்,.? ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருவோம். அது சரி வராவிட்டால் சடாரெனெக் காலில் விழுந்துவிடுவோம்ல,..... 🤣
  23. கவனம் அவங்கள் உங்களை பிடிச்சு கட்டாயமாக 15 மணி நேரம் இந்த வேலை செய்ய சொன்னால், இரண்டு நாளில் மேலே போய் சேர்ந்துவிடுவோம்
  24. நல்ல ஐடியா வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு ஒரு கிழமை காணாது குறைந்தது ஆறு மாதங்கள் வேண்டும் அதுசரி ரிக்கற். இலவசமா. ?? ஆமாம் நம்பி விட்டோம்.......ரஷ்யா பெண்களுக்கு பிறந்த உங்கள் பிள்ளைகளை போர் களத்துக்கு அனுப்பி விடுங்கள் 🙏 குறிப்பு, ....நல்ல வாய்ப்புகளை இந்த சாமியார் கெடுத்து விட்டார் கவலையளிக்கிறது
  25. நான் கடந்த 30 வருடங்களாக ரஷ்ய பெண் பிரஜைகளுடன் வேலை நிமித்தம் தொடர்பில் இருக்கின்றேன்.அவ்விடம் எது ஆக வேண்டுமோ இவ்விடமும் இனிதாக அஃதே.😎
  26. 🤣........... இந்த திரியில் ஒரு மாற்றுக்கருத்தும் வராது போல என்று சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.......... என் நினைப்பில் மண்ணைப் போட்டு, மாற்றுக்கருத்துடன் நீங்கள் வந்து விட்டீர்கள்.......... மூன்றாவது காரணம் அல்லது மாற்றுக் கருத்து: இந்த டாபிக்கில் மட்டும் தான் ஏழாம், எட்டாம் வகுப்பில் விட ஆரம்பித்து புளித்துப் போன அதே பகிடிகளை 50, 60, 70 வயதுகளிலும் அதே உற்சாகத்துடன் விட முடிவது.......
  27. யானையின் அறிவு?! மின்சாரவேலியின் கீழால் நகரும் நுட்பம்!! கீழுள்ள முகப்புத்தக இணைப்பூடாக கண்டு மகிழுங்கள். https://www.facebook.com/reel/989220152644256http://<iframe
  28. இதைக் கேட்டாவது ரஸ்ய ஆதரவாளர்கள் ரஸ்யாவில் போய்க் குடியேறுவார்களா! கண்ணாடிப் பேழைக்குள் இருந்துகொண்டு கல்லெறிந்துகொண்டே இருப்பார்கள்!
  29. நன்றாக இந்தியாவுக்கு சார்பாக கதைக்கின்றீர்கள். இந்தியா ஒன்றும் அன்பினால் இதனை செய்யவில்லை. சீனா பக்கம் முற்றிலும் சாய்ந்து இருந்த இலங்கையை தன் பக்கம் கொண்டு வர செய்த முயற்சிகளில் ஒன்று. அத்துடன் இது 'கடன்' அல்ல. ஒரு வகையான Credit Line. தன் பொருதளை அங்கு சந்தைப்படுத்தலுக்கும் ஏற்றவாறே வழங்கியிருந்தது. ஆனால் சிங்களம் மீண்டும் இவர்களுக்கு பெப்பே காட்டும் நாள் தொலைவில் இல்லை தன் அண்டை நாடுகளுடன் சுமூக உறவை ஒரு போதும் இந்தியா பேணியதில்லை. பெரிய அண்ணண் போக்கில் அல்ல. பெரிய ரவுடி போக்கில்நடந்து கொள்ளும் நாடு. அதனால் தான் படகுகளை கைப்பற்றும் வகையில் இலங்கையில் சட்டம் கொண்டு வரப்பட்டு, பல கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் மீனவர்களின் முதலாளிகளுக்கு பல இலட்சம் இழப்பு ஏற்படுகின்றது.
  30. அதுதானே.... சாத்தான். தேர்தலை பகிஸ்கரிக்கச் சொன்னவர், மற்றவர்களின் வாக்களிக்கும் உரிமையில் ஏன் தலையிடுகின்றார். எல்லாரும் தன்னுடையதை மோந்து பார்க்கிறதே விட்டிட்டு, மற்றவர்களை மோந்து பார்த்துக் கொண்டு திரிகிறார்கள். 😂 🤣
  31. நரியன் ரணில்.... கருணா கட்சியையும் பிரித்துப் போட்டார் போலுள்ளது. 😃 நாசமாய் போனதுகள் பிரிந்து, சிதறி... சின்னா பின்னமாய் போகட்டும். 😂 இதுகள் ஒன்றாய் இருந்து... ஊர், உலகத்துக்கு என்ன லாபம்.? 🤣
  32. அப்ப பயத்தில ஓடி வரயில்ல,..🤣 அதுசரி,..சிங்கப்பூரில் பிடிபட்டு பிரம்படி வேண்டுகிற ஆட்களுக்காக நாங்கள் என்ன இரங்கினோமா,.இல்லையே,...பிறகேன் உங்க பிடிச்சு மொட்டையடித்தால் மட்டும் ரோசம் வருகுது,.😉 திருப்பதியில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது இலங்கையில் மொட்டையடித்தாலும் முடி வளரத்தான் போகுது,.. இதுக்கெல்லாம் அழலாமா,.🤣
  33. என்ன கன நாளைக்கு பிறகு வந்துட்டியள்? சூரியன் மேற்கில உதிக்கப்போகுது.😄 அது சரி... எமது இன்றைய சமுதாயமும் நாளைய சமுதாயமும் வரலாறுகளை தெரிந்து கொண்டுதான் கொண்டாட்டங்கள் செய்வார்கள் என நினைக்கின்றீர்களா?
  34. தீபாவளி கட்டாயம் கொண்டாடவேண்டும்! ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன கூட வந்த குரங்கு ஆண்டாலென்ன நமக்கு மதம்தான் முக்கியம்! அவன் நரகாசுரனே சொல்லீட்டான் நான் ஒரு கொடியவன் நான் செத்த நாளை பட்டாசு வெடிச்சு ஆட்சிறைச்சி சாப்பிட்டு புத்தாடை அணிந்து கொண்டாடுங்கோ மக்களே எண்டு!
  35. நீங்கள் என்னதான் தெளிவாகத் தீபாவளி பற்றி எழுதினாலும் எந்தப் பயனும் இல்லை அண்ணா. தமிழர்கள் தான் அதிகம் சிந்திக்காமலேயே தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே வருகிறார்கள்.
  36. வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.
  37. கஜேந்திரகுமார் சிகிச்சை முடிந்து சுகமாக நாடு திரும்பியதையிட்டு மிகுந்த சந்தோசம். அரசியலில் இருந்து ஒதுங்கி உடம்பை சுகமாக வைத்திருக்கவும்.
  38. ஒரு தமிழக உறவை இலங்கை சிறையில் மொட்டை அடித்து துன்புறுத்தல் செய்வதை ரசிக்கும் அளவுக்கு நாங்கள் மனதில் வக்கிரத்தை வளர்த்து விட்டோமா?
  39. இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடக்க இன்னும் ஒரு கிழமை உள்ள நிலையில்.... ஸ்ரீலங்காவின் ஆணழகன் யார்.... என நடக்கும் போட்டி. 😂
  40. அமெரிக்காவும், நேட்டோவும் வழங்கும் வளங்களை வைத்து தான் உக்ரேனால் இவ்வளவு காலமும் தாக்குப் பிடிக்க முடிகின்றது, விசுகு ஐயா. ஆனால் ரஷ்ய ஆதரவு/எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு/எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து கொண்டு, அதன் வழியே கருத்துகள் சொல்லும் ஊடகங்களும், தனிமனிதர்களும் அவர்களுக்கேற்றவாறு நிலைமையை திரித்து விடுகின்றார்கள். ரஷ்யா ஏன் இன்னமும் உக்ரேனை அடித்து முடிக்கவில்லை என்பது ஒரு பக்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமை. அதை நியாயப்படுத்த காரணங்களை, பலது இல்லவே இல்லாத காரணங்கள், கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால், காலனியாதிக்கம் முடிந்த பின், உலகில் எத்தனை நாடுகள் எத்தனை நாடுகளை அடித்து முடித்திருக்கின்றது....... அப்படியே ஒரு போரில் வென்றாலும், அவர்களால் அந்த நாட்டையோ அல்லது பிரதேசத்தையோ நீண்ட காலத்திற்கு தக்க வைக்கக் கூடியதாக இருந்ததா.......... இல்லைத் தானே. இது தான் இன்றைய ரஷ்யாவின் நிலை. அமெரிக்காவும் சில நாடுகளுக்குள் போய் இறங்கி விட்டு, பின்னர் போதுமடா என்று சில நாடுகளில் இருந்து திரும்பி வந்திருக்கின்றது தானே.
  41. பாராட்டுக்கள் .......... உங்களுக்கென்று தனியாக அதுவும் மிகவும் பிரயோசனமான கருத்துக் படங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்ரீர்கள் . ........பத்து செய்திகளை வாசிப்பதைவிட ஒரு படம் போதும் அன்றன்றைய அரசியலை அவதானிக்க ..........மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும் . ........அதில் அணில்போல் நானும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கின்றேன் என நினைத்து மகிழ்கின்றேன் .......யாழுக்கும் நன்றி . ..........! 💐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.