சுமந்திரனின் குலுமாசு:
"இலங்கை வாக்காளர், தேர்தல் மேடைகளில் நான் கொடுத்த சைகையை சரியாக பயன்படுத்தி, எனது கருத்துக்களைப் கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக நான் நம்புகிறேன், அதை நீங்களும் முன்னைய தேர்தலில் அவதானித்திருப்பீர்கள், இது எங்களின் ராஜதந்திரம்." "இதை தாங்கள் கவனத்தில் எடுத்து எனக்கு பதவியளித்தால், அதை நீங்கள் எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்."
கண்டிப்பாக இப்பவே வாழ்த்து என்கிற பெயரில் அழைப்பெடுத்து கோரிக்கை விடுத்து காத்திருப்பார்கள், இனி அனுராவை புகழ்ந்தே பேசுவார்கள், ஆனால் இந்த வௌவால் கூட்டத்தை அனுரா சேர்த்துக்கொண்டால் மற்றவர்களைப்போலவே இவரின் ஆட்சியும் குப்பையாக மாறும். இவரின் கொள்கை மாற்றமடையும், இவருக்கு கிடைத்த இந்த அருமையான வாய்ப்பை இவர் தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை அவர் அறிவார். ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பின்னர், எங்களின் கொள்கை சரியானது அதை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு ஆணை (சந்தர்ப்பம்) தரவில்லை என்று பின்னாளில் புலம்புவதில் பயனில்லை. சொல்லும் செயலும் ஒன்றானதா என்பதை இவர்களின் அமைச்சரவையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ராஜா பக்க்ஷக்களுக்கு எதிராக தொடங்கிய அரகலியாவை அடக்கி அதை தன் தோளில் சுமந்து அவர்களை காப்பாற்றியவர் ரணில். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் பெறுபேறுகள்!
அது நாமலின் தவறு.. இவர்கள் வேண்டாமென்றுதானே மக்கள் இவர்களை விரட்டியடித்தாகள், அந்த வெறுப்பு ஆறுமுன், எனக்கு வாக்கு போடுங்கள் என்று வெட்கமில்லாமல் மேடையேறியது யார் தவறு? அந்த இடத்தில் மஹிந்த இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இது அவருக்கு பெருத்த அவமானமாக இருந்திருக்கும். அவர் தப்பித்துக்கொண்டிருந்தார். தமிழரை அழித்த கையோடு, அதை விழாவாக எடுத்து எக்காளம் ஊதிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம், தப்பித்து துயரை தாங்கமுடியாது தவித்தவர்களிடம் வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்டவரின் புதல்வாராயிற்றே நாமல்!
நுணலும் தன் வாயாற் கெடும். இவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்லர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுவது இவர்களுக்கு நல்லது. இல்லையேல், பாராளுமன்றத்தேர்தலில் தகுந்த பாடம் அளிக்கப்படும். இவர்களின் வழமையான போலி வாக்குறுதிகளும் நாடகங்களும் இனியும் எடுபடாது. இவர்கள் தமிழரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு முட்டாள்தனம்.
இந்த இனவாத அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும், நாட்டின் பொருளாதாரமுந்தான் ஏப்பமிடப்படுள்ளது எனும் உண்மையை புரிந்து கொண்டுள்ளார்கள்.
ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?
இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்! தமிழர் இனியும் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்!
இனவாதம் பேசுவோரை விரட்டியடிக்க தொடங்கியதோடு புதிய கொள்கைக்கு இடம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அனுரா அதை சரியாக பயன்படுத்தினால் சரி, இல்லையென்றால் அவருக்கும் இதே கதிதான். இந்த நாட்டை கட்டியெழுப்புவது, ஊழலை ஒழிப்பது சாதாரண விடயமல்ல, விடவும் மாட்டார்கள். அவர்களின் சும்மா இருந்து பணம் உழைக்கும் வழி இது. தமது ஊழலையும் சிறை வாழ்வையும் தக்க வைக்க எந்த நிலைக்கும் போவார்கள்.
எழுபத்தைந்து வருடங்களாக வாக்குபோட்டுப்பழகிய பழக்க தோஷம், செம்மறிகூட்டங்களாக கேள்வி கேட்காமல் தலையாட்டிய கூட்டம், உடனடியாக புது பாதையை தெரிவது கொஞ்சம் சிரமம். ஆனாலும் முதல் தரத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது பெரும் சாதகமே! இது தொடர்ந்து மக்களோடு பயணித்தால்; வெற்றியடையலாம்.
நரி, ஆபத்து நேரமெல்லாம் மஹிந்த கொம்பனிக்கு கை கொடுத்து ஒற்றையாட்சி கொள்கையை காப்பாற்றியதன் விளைவு; தன் வாலை இழந்து நிக்குது. இனி இந்த கிழட்டு நரி அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது.
அனுரா கட்சிக்கு அரகலியா ஏற்படுத்திக்கொடுத்த அரிய வரப்பிரசாதம். இது கடைசியும் முதலுமானது, இதை இவர் சரியாக பயன்படுத்திக்கொண்டால் இனவாதிகளையும் அவர்களின் அரசியலையும் முற்றாக ஒழித்து நாட்டை முன்னேற்றலாம். இவர் சரியாக தமிழரை அணுகினால் முதலீடுகளை பெறலாம். இல்லையேல் இந்தக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்த இளைஞரை அவமதிப்பதோடு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒருபோதும் அரசியல் செய்ய இடமளிக்கப்படாது.