Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    87990
    Posts
  2. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14676
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20018
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10100
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/15/24 in Posts

  1. இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை? நாடுகளுக்கு பிரச்சனை என பத்திரிகை எழுதலாம் ....ஆனால் இது காளிஸ்தான் தேசியத்தின் பயம் காரணமாக இந்தியா வின் எல்லை தாண்டிய அரச பயங்கர்வாதம்....இந்த விடயத்தில் சிறிலன்கா அரசும் ஐந்தியா அரசும் நண்பேன்கடா... தமிழ் தேசியத்துக்கு சிறிலங்கா பயப்படுவது போல இந்தியா காளீஸ்தான் தேசியத்துக்கு பயப்ப்படுகிறது
  2. மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்! Vhg அக்டோபர் 14, 2024 சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது. ஆனால் அதுதான் உண்மை. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர். ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படி என்று பார்ப்போம். 'யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரனை தோற்கடித்தே தீருவது' என்று கங்கணம் கட்டி நின்றுகொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். வாக்குகளின் அடிப்படையில் இம்முறை சுமந்திரன் வெல்லுவது என்பது மிக மிகக் கடினம் என்றுதான் பலரும் கூறுகின்றார்கள். ஆனால் அவர் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும். தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் சுமந்திரனின் என்கின்ற தமிழ் மக்கள் பெரிதாக விரும்பாத ஒரு நபரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பி விடக்கூடிய அபாயத்துக்கு வித்திட்டுவிடும். ஒரு கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் என்பது, ஒரு கட்சிக்கு இலங்கை முழுவதும் விழக்கூடிய ஒட்டுமொத்த வாக்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஆசனம். அதனால் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் சுமந்திரன் தெரிவாகுவதற்கு சாத்தியம் இருக்கின்றது. உதாரணத்திற்கு, வீட்டுச் சின்னத்தில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நீங்கள் அம்பாறையில் வாக்களித்தாலும் சரி, மட்டக்களப்பில் வாக்களித்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் வாக்களித்தாலும் சரி, சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு மறைமுகமாக நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் என்பது தான் உண்மை. எனவே சுமந்திரன் இம்முறை தமிழ் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுகின்ற எந்த ஒரு வேட்பாளரையும் நீங்கள் ஆதரிக்க முடியாது என்பதுதான் சமன்பாடு. https://www.battinatham.com/2024/10/blog-post_873.html
  3. "கார் கூந்தல் சரிந்து விழ" "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காகொடி தரும் நஞ்சை விடவும் காமப் பால் நெஞ்சில் வடிய காசனம் செய்யும் விழிகள் திறந்து காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !" "காசினி மேலே அன்னநடை போட்டு கால் கொலுசு தாளம் போட காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி காருண்யம் காட்ட என்னை அழைத்து காதல் தெளித்து ஈரம் ஆக்கி கானல் உள்ளத்தை சோலை ஆக்கி கார் மேகமாய் அன்பு பொழிந்து காலம் அறிந்து காரிகை வந்தாள் !" "காதோரம் மெதுவாய் செய்தி கூறி காங்கேயம் காளையாக வலு ஏற்றி காட்டுத் தீயாக ஆசை பரப்பி காவல் உடைத்து என்னைத் தழுவி காவணம் முழுதும் மலரால் அலங்கரித்த காமன் விழாவிற்கு என்னை அழைத்து காலை மாலை முழுவதும் கொஞ்சி காவற் கடவுளாய் நம்பி வந்தாள் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] காகொடி - A thorny poisonous tree [Strychnine tree], எட்டிமரம் [காஞ்சிகை], ஒரு விஷ மரமாகும். காசனம் - Killing,slaying; கொலை காகோதரம் - snake, பாம்பு காசினி - world, Earth, உலகம், பூமி காஞ்சனி - colour of gold, பொன்னிறம் தொய்யில் - மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு காருண்யம் - mercy, compassion, கருணை காரிகை - woman, பெண் காவணம் - open hall, pandal, மண்டபம், பந்தல்
  4. சும் இன் செம்புகள் மேடைக்கு வரவும்…. தேர்தல் வந்தவுடன் தமிழ் தேசியம் வந்துவிட்டது சும் இற்கு….
  5. இவர்களே… ஆறு இடத்தையும் எடுத்தால், தமிழரசு கட்சியை எரிக்கிறதா, புதைக்கிறதா… என்ற நிலைமை நெருங்கி விட்டது போலுள்ளது. 😂 இப்போது களத்தில் இறங்கியுள்ள அர்ச்சுனா போன்ற புதிய முகங்களும், தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களும்…. தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் இருந்தே தமது வாக்கை பெற்றுக் கொள்வார்கள். அப்போது, தமிழரசு கட்சி மரண அடி வாங்கும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. அதில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்பிலை. அத்துடன் அனுர அலையும்… வடக்கு, கிழக்கில்… புதிதாக கிளம்பியுள்ளதால், தமிழரசுக் கட்சி தூக்கி வீசப்படும். எல்லாவற்றுக்கும் அந்த உளறுவாயன் சுமந்திரனும், கொம்பு சீவி விட்ட அல்லக்கைகளும் தான் காரணம். 🤣
  6. சுமத்திரனை தமிழ்தேசிய அரசியலில் இருந்து அகற்ற வேண்டுமெனறால் சிறிதரனுக்கும் வாக்குப் போடக் கூடாது. 2020 இல் கை;கிய தேசியக்கட்சியை முற்றாகத் தோற்கடித்தது போல் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் தோற்கடிக்க வேண்டும்.
  7. தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் இருந்து மாவையுடன் சேர்ந்து முடிவெடுப்பவராக இருந்திருந்தால், நிலாந்தன் இத்யாதிகளுடன் சங்கு ஊதப் போய் ஓட்டு மொத்த கட்சியையும் போட்டுடைத்திருப்பார் என்பதை நடக்கும் சம்பவங்களால் இப்பொழுது அறிய முடிகிறது. ஒரு கட்சியை நடத்துவதற்கான வல்லமை சிறீதரனிடம் இல்லை. ‘பார் லைசனஸ்’ விபரங்களை வெளியிடுங்கள் என சுமந்திரனும் கேட்கிறார். டக்ளஸும் கேட்கிறார். சிறீதரன் photoவுக்குக் கூட சிரிக்க மாட்டேன் என்கிறார். கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம் கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம். ஒருவர் மீது கொண்ட வெறுப்புக் கண்கள் யதார்த்தத்தை பார்க்க மறுக்கிறது.
  8. https://www.facebook.com/kunalan.karunagaran/posts/pfbid02dkgEHxtnJo8x5z4VBR1xUtsk627AAhLNFvssGSWoieEufS5K6EksxKwSZobf537sl இன்று மீண்டும் பரபரப்பாக பேசப்படும் பெயர் ஷானி அபேசேகர கொழும்பில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்களை கப்பம் கோரி கடத்தி கொடூரமாக கொன்ற சிறீலங்கா கடற்படையினரின் கொடூரங்களை ( திருகோணமலை கன்சைட் சித்திரவதை முகாம் ) ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசாவுடன் இணைந்து வெளியுலகிற்கு கொண்டு வந்தவரே இந்த ஷானி. கோத்தபாய ராஜபக்ச அரசு அவரை சிறையில் தள்ளி அணு அணுவாக கொல்லமுயன்ற போது அவரை காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தவர் ஆளுமை நிறைந்த சனங்களின் சட்டத்தரணி & சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் K.v. Thavarasha கே வி தவராசா
  9. வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
  10. கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே. வேறு எவருக்கும் எங்களுடைய மக்கள் ஜனநாயக ஆணையைக் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கப் போவதுமில்லை. தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்று அறிவித்து இதுவரை காலமும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சி தான் பலமான அணியாக பாராளுமன்றத்திற்குள் செல்லவேண்டும். மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஒரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றி இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலோடு ஒரு ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாய சங்கை ஊதினோம் அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள். ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம்பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. கட்சிப் பெயரை திருடினார்கள். மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்த சின்னத்தையும் திருடி விட்டார்கள். 23ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சின்னத்தை நாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை. சின்னத்தை திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கை கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழ திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசாங்கம் இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களை தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் என கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது இன்னும் வெளிப்படுத்தவில்லை. நான் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் மதுபான அனுமதிப் பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும். தமிழரசு கட்சியின் உடைய வேட்பாளர் தெரிவிலே நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இளையவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். மக்கள் கேட்கின்ற மாற்றத்திற்கு நாங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கு ஈடுகொடுக்கமுடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தல் காலங்களில் வெளியேறியிருக்கிறார்கள். கொள்கைப்பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களை குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்கு சொல்லத் தேவையில்லை. அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருத தேவையில்லை என தெரிவித்தார். https://www.battinews.com/2024/10/blog-post_756.html
  11. கார்ட்டூனின் ஆழமான அரசியல் சிந்தனை மற்றும் தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கும்போது, நாம் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொருத்தி, இங்குள்ள பல குறியீடுகளை நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டும். இக்கார்ட்டூன் சிங்கள தேசியவாதம், சிங்கள சovinism, தமிழ் சமூகத்தின் பாதிப்பு, மற்றும் இந்தக் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகிறது. ### 1. **சிங்கள தேசியவாதம் மற்றும் சிங்கள சovinism:** முதன்மையாக, இந்த இரண்டு கருத்துக்களை வேறுபடுத்த வேண்டும். "சிங்கள தேசியவாதம்" என்பது பொதுவாக ஒரு இனத்துக்கு சொந்தமான கலாச்சார, மொழி மற்றும் பாரம்பரிய அடையாளங்களை உயர்த்திப் பேசும் ஒரு கலாச்சார இயக்கமாக இருக்கலாம். இது பெரும்பான்மை சிங்கள இனத்தின் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் அடிப்படையில் இயங்குகிறது. இது இலங்கையின் வரலாற்று பின்னணியில், குறிப்பாக 1948 சுதந்திரத்திற்கு பின்னர், பெரும்பான்மையாக உருவாகியபோது சிங்கள இனத்தின் அடையாளத்தை பாதுகாக்க ஒரு வழியாகத் தோன்றியது. ஆனால், "சிங்கள சovinism" என்பது இதைவிட மிகக் கடுமையானது. சovinism என்றால், இது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வன்மையான மேலாதிக்க எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள சovinism என்பது, சிங்கள இனத்தின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற இனங்கள், குறிப்பாக தமிழர்கள், இரண்டாம் வகுப்பினராக பார்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை. கார்ட்டூனில், சிந்தனை மற்றும் பாவனையின் அளவில் சிங்கள தேசியவாதத்தின் பின்னாலேயே இந்த சovinism வேலை செய்கிறது என்பதை இச்சித்திரம் காட்டுகிறது. தர்க்கரீதியாக, இது ஒரு அடிப்படையான அரசியல் இயக்கத்தின் மாற்றி நிற்கும் ஆழமான சிந்தனைகளைக் காட்டுகிறது. சிங்கள தேசியவாதம், உண்மையில், பெரும்பான்மை சிங்கள இனத்தை மற்ற இனங்களின் மீது மேலடிக்கச் செய்வதற்கு ஒரு மூலமாக மாறிவிட்டது. இந்த சovinism-இன் உருவம் தன்னார்வம் போன்றதாகவும், தீய நோக்கங்களுடன் நடக்கின்றதாகவும் வெளிப்படுகிறது. ### 2. **அரசியல் சார்ந்த சித்திரவாதம்**: கார்ட்டூனில் உணவைச் சமர்ப்பிக்கும் சபையாளர் (waiter) பங்கும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டும். சபையாளர், சிங்கள இனத்தின் அரசியல் சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போல சிங்கள தேசியவாதத்தைத் தட்டில் வைத்து சமர்ப்பிக்கிறார். இது அரசியல் நிலவரத்தை எளிதாக்கி தருகிறது – அரசாங்கம், தனது அதிகாரத்தின் மூலம், சிங்கள இன மேலாதிக்கத்தை விதிக்கின்றது. ஆனால் சிங்கள சovinism, சிங்கள தேசியவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிர மற்றும் ஆபத்தான விசயம் என்பதை இதன் உருவத்தில் வெளிப்படுத்துகிறது. தர்க்கரீதியாக, சபையாளர் அரசியல் அதிகாரத்தின் சித்திரவாதியாகவும் (symbol) பார்க்கப்படலாம். அவர் ஒரு நடுநிலை முறைமை போன்றவராக இருப்பினும், அவர் சிங்கள இனத்தின் தேவைகளையே முக்கியமாகக் கவனிக்கிறார். இது அரசியல் மற்றும் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் எதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது. ### 3. **தமிழரின் நிலை மற்றும் அடிமைப்படுத்தல்:** வலதுபுறத்தில் இருக்கும் பெண் (தமிழ் பெண்) ஒரு வாதவாதம் செய்யும் உருவாக்கமாக இருக்கிறார். அவர் சிங்கள சovinism மற்றும் தேசியவாதம் இரண்டு சந்தர்ப்பங்களாலும் கொடுக்கப்படும் கொடுமையால் அச்சமடைந்தவர். சிங்கள இனத்தின் தேசியவாதத்தை அவர் ஒரு நியாயமான கலாச்சார தேசியவாதமாக ஏற்கவேண்டிய சூழ்நிலையில், அதன் பின்னால் இருக்கும் சovinism அவரைக் கொடுமைப்படுத்துகின்றது. இது அவரின் மவுனத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தின் அரசியல், சமுக, கலாச்சார உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளன, இப்பெணின் நிமிர்ந்திருக்கும் (அச்சமடைந்த) தோற்றம் அதை காட்டுகிறது. ### 4. **தற்கால அரசியல் விளைவுகள்:** தற்போது இலங்கை அரசியலில், சிங்கள தேசியவாதத்தின் அரசியல் விளைவுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் அடக்குகின்றன. அரசின் மதவாத மற்றும் இனவாத செயல்பாடுகள், தமிழ் மக்களின் அரசியல் நிலையை பலவீனமாக்குகின்றன. இது தமிழக மக்களைப் பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளிலும், இந்த சிங்கள தேசியவாதம் ஒரு முக்கியமான தடையாக அமைகிறது. தர்க்கரீதியாக, இது இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளின் ஆதரவுகளுக்கும் மாற்றான பலரின் சிந்தனைக்கும் இணையாக இருக்கிறது. தமிழரின் அடிப்படை உரிமைகளை ஒழிக்கவும், இன அடிப்படையில் கொடுமையை வளர்க்கவும் சிங்கள சovinism பயன்படுத்தப்படுகிறது. ### 5. **முடிவுரை:** இந்த கார்ட்டூன் இலங்கையின் தற்கால அரசியல் நிலைமைகளின் ஒரு தர்க்கரீதியான பிரதிபலிப்பாக இருக்கிறது. சிங்கள தேசியவாதம், இப்போது தமிழ் சமூகத்திற்கு ஒரு சான்றான துரோகமாக இருப்பது மட்டுமின்றி, அதன் பின்னால் உள்ள சிங்கள சovinism, பெரும்பான்மையினரின் அடக்குமுறைகளை உணர்த்துகின்றது. See lesshttps://www.facebook.com/photo/?fbid=122120845610460178&set=a.122099946026460178
  12. காலிஸ்தான் தேசியவாதிகளுக்கு ஜெய் ஹிந்😅 அந்த துப்பலில் தெறித்து உருவானது தான் சிறிலங்கா தேசியமும் ...அதை சிங்கள தேசியமாயக்க 72 வருடமாக் சிங்கள அரசியல்வாதிகள் போராடுகிறார்கள் பார்ப்போம்.புது தலமை என்ன செய்கின்றது செய்யப் போகின்றது எண்டு
  13. வைத்தியர் அர்ச்சுனாவின் செல்வாக்கு அவரது மாறுபட்ட செயல்பாடு மற்றும் கருத்துக்களால் சிதைந்து விட்டது. இந்த நிலையில் இந்த வேளையில் இது தேவையற்றது. இருக்கும் கொஞ்ச வாக்குகளையும் பிரித்து பிரித்து.....,???
  14. இரண்டு கிழமைக்கு முன்னர் தமிழரசு கட்சியுடன் இணையுங்கள். என்று அழைத்தது இவர்களை தானா?????????? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
  15. மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம் adminOctober 15, 2024 கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207538/
  16. கூட்டுக்கு உப்பு, புளி, மிளகாய் வேண்டுமே! இல்லையானல் ருசிக்காது க தி வி னா அவர்களே!
  17. இவரது கணவர் ஒரு மருத்துவர், பரியோவான் கல்லூரியில் படித்தவர். கிருஷ்ணவேணி என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவியின் சகோதரி. அரசியலுக்கு வரக் கூடியளவுக்கு எந்த திறமையும் அற்றவர் இவர்.
  18. நன்றி. அனைவரின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை மகிழ்ச்சி.
  19. இல்லை மகளே என் மூத்த மகளின் பிள்ளைகளின் பெயர் இங்கு இணைக்கிறேன். மகளே தேர்ந்து எடுத்தது மகள் - ஜெயா [ அம்மம்மாவின் பெயரின் சுருக்கம் / ஜெயக்குமாரி] மகன் [இருவர்] - கலை மற்றவர் இசை
  20. வெளிநாடு போன முக்கிய சாட்சிகள் பலர் நாடு திரும்புகிறார்கள்.
  21. உவங்கள் விட்டுப் பிடிச்சிருக்கிறாங்கள். 🤣 இந்தியாவை உலக அரங்கில் வைத்து சேறடிக்கும் வேலையை கனகச்சிதமாகச் செய்கிறார்கள். வந்தே பாரத்,.... சாரி, ரங் ஸ்லிப்பாயிடிச்சு ........வந்தே மாதரம்,... .🤣
  22. தவளையும் தன் வாயால் கெடும். அதுகும் மூன்று நாட்களுக்குள் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கும் படி குறுகிய கால கெடுவை… அரசாங்கம் விதித்துள்ளது. மாட்டிக் கிட்டாரு மைனரு… 😂 🤣
  23. ஆனால் என்ன செய்வது…. வெட்கம், சூடு, சுரணை, மானம், மரியாதை இல்லாததுகள்… பின் கதவாலைதான் பாராளுமன்றத்துக்குள்ளை போகப் பார்க்கும். இந்த முறையாவது திருந்தி இருக்கின்றார்களா என பார்ப்போம்.
  24. இவர்கள் பிடிபடும் போது மனதுக்கு ஏதோ ஒருவகையில் சந்தோசமாக உள்ளது. சாப்பாடு களவெடுத்த செய்தி கிழக்கில் நடந்ததாக நினைக்கிறேன்.
  25. சொக்லேட் ஐஸ்கிறீம். 😂
  26. நீங்கள் எல்லாரும்... உங்கடை ஊரிலை இருக்கிற வாக்குகளை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு தருவீங்களாம், நான் அதை எடுத்துக் கொண்டு "பின் கதவாலை பாராளுமன்ற கன்ரீனுக்குப் போய்"... "கொத்து ரொட்டி" சாப்பிடுவனாம். உங்களுக்கு நான் "அல்வா" வாங்கிக் கொண்டு வந்து தருவனாம். எப்பிடி டீல்... ஓகே தானே... - ஆபிரகாம் சுமந்திரன்.-
  27. உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன். வாழ்க வளமுடன் பேரனின் தோற்றம் மாறடொனாவை நினைவூட்டுகிறது🤔
  28. இந்தியா வந்து கிட்டத்தடட, சுமந்திரன் மாதிரி.... 😂 🤣 ஒருவரையும் அனுசரித்து போகத் தெரியாது. சொல்லும், செயலும், சிந்தனையும்.... மற்றவர்களுக்கு குழி பறிப்பதிலேயே இருக்கும். 😎
  29. இவங்களுக்கு வேற காந்திய முக மூடி....இன்னும் வசதியா போய்விட்டது
  30. //கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.// கனடிய தூதரகத்தில் இருந்து கொண்டு.... கொலைகளையும், வன்முறை சம்பவங்களையும் தூண்டிக் கொண்டிருக்கும் இந்திய கூலிப் படைகள்... ஸ்ரீலங்காவிலுள்ள இந்திய தூதரகம், யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகங்களில் இருந்து கொண்டு எத்தனை தில்லு முல்லுகளை செய்து கொண்டிருப்பார்கள். உலகத்திற்கு உதவாத நாடு இந்தியா.
  31. நல்ல விடயம். புதுமுகங்கள் தமிழ் மக்களிற்கு புதிய பல நல்ல விடயங்களை கொண்டு வரவேண்டும். இந்த தடவை ஒரு வேளை வெற்றி பெற முடியாவிட்டாலும் நல்லதொரு அடித்தளமாக, ஆரம்பமாக இந்த சுயேட்சை குழு அமைய வேண்டும். வேட்பாளார்களின் கல்வி/தொழில்/சமூக தொடர்புகள்/பின்னணி/ஆர்வம்/முயற்சி/கண்ணோட்டம் இவை பற்றி அறியத்தாருங்கள் பார்ப்போம்.
  32. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலனுக்கு
  33. நிலனுக்கு 4ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
  34. ஹிஹி..... சுமந்திரனை எல்லோரும் மதித்தார்கள், அவருக்கு மற்றவரை மதிக்கவும் தெரியாது, மதிப்பை ஏற்றுக்கொள்ளவும் தெரியாது.யாரோடு முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினார்கள் என்பதை தெரியாதா? அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? தமிழரசு ஒன்றும் அவரது ஏக சொத்தல்ல. அங்குள்ளவர்களின் கருத்துக்களை ஏற்கவும் அவர்களை மதிக்கவும் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவும் எல்லோரையும் சமமாக வழிநடத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அது அங்கே நடந்ததா? ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. ஒரு தலைவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல், தான் தோன்றித்தனமாக நடப்பவரை பாதுகாக்க முனைகிறீர்களென்றால்; உங்கள் குணாதிசயமும் ஒன்றே. தமிழரசு செய்த ஒரே தப்பு, இவரை கட்சிக்குள் புகுத்தியதுமட்டுமல்ல, அவர் செய்த தவறுகளை தட்டிக்கேட்க்காமல், கண்டும் காணாதமாதிரி இருந்து கட்சிக்கு சாவு மணி அடித்தார்கள். இனி மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
  35. ஆளுக்கொரு நீதி உள்ள வீடு நிலைக்காது. "சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க்கணி." தமிழரசை உரிமை கோரும் சுமந்திரனும் சான்றோனல்ல, அவருக்கு வக்காலத்து வாங்கும் இந்த மூத்தவரும் சான்றோனால்ல. தலைவனுக்குரிய தகுதியுமிதுவல்ல, அதை சுட்டிக்காட்டும் தகுதியும் இவருக்கில்லை. மொத்தத்தில் தமிழரிடம் வாக்கு கேட்க எந்தக்கட்சிக்கும் தகுதியுமில்லை, அவர்கள் மக்களுக்கு எதையும் செய்வதற்காக தேர்தல் களமாடவுமில்லை. மக்களை வைத்து, ஒருவரை ஒருவர் வீழ்த்தி வீரவசனம் பேசுவதற்கே முற்படுகின்றனர். அதன் முன்னோட்டந்தான் தேர்தல் மேடைபேச்சு. சுமந்திரன் அனுராவிடம் ஓட்டமாய் ஓடி, மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பெயரை வெளியிடுங்கள் அவர்களை தகுதியிறக்க வேண்டும் என்று கோரினார். ஏன்? சமுதாயத்தின் மேல் அவ்வளவு அக்கறையா? அதுவும் தேர்தல் வந்ததாலா? ஏற்கெனவே இந்த அக்கறையை காட்டினாரா? இவர் அநாகரிகமாக எதிர் வேட்பாளர்களை மேடையில் சேறு பூசி தன் வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக. எழுபத்தாறு வருடங்களாக வீட்டை உரிமை கொண்டாடியவர்கள், அந்த வீட்டை அவர்களுக்கு அளித்து அழகு பார்த்த மக்களை நடுவீதியில் விட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இவர்களல்லவா? அந்த வீட்டை நேற்று வந்த சுமந்திரன் என்கிற கறையான் அரித்து குடிச்சுவராக்கி அதிலிருந்தவர்களை வெளியே துரத்தியதைவிட வேறெதை சுமந்திரன் சாதித்தார்? இவர்களின் செயலற்ற தன்மையையும், ஏமாற்றும் தன்மையையும் பயன்படுத்தி இன்று எத்தனை கட்சிகள் நுழைந்து விட்டன? அத்தனையும் வீட்டுக்காரரின் சாதனையல்லவா? இவர் ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாமல் தாங்கள் வீதிக்கு வந்து நின்று மக்களுக்கு எதை சாதிக்கப்போகிறார்கள்? கதைக்க வேண்டிய நேரத்தில் கதைக்காமல், நமக்கென்ன வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோமென மற்றவர்களை துரத்தும் போது மௌனமாக இருந்ததன் விளைவு; இன்று அவர்களுக்கு வந்துவிட்டது. கடந்த உள்ளூராட்சி தேர்தல் என நினைக்கிறன் மாவையர், மக்கள் தங்களைத்தான் ஆதரித்தார்கள் என்று பெருமிதமாக பேசினார். இன்று தலைகுனிந்து நிற்கிறார். இந்த நிலை ஒவ்வொருவருக்கும் வரும். கழுதை தேய்ந்து கட் டெறும்பு ஆன நிலையிலும் வீம்பு பேசுதுகள். அவர்கள் சாதித்ததுமில்லை ,சாதிக்க இவர்களால் ஒன்றுமில்லை. அதனால் தேர்தல் மேடையில் வாக்குறுதிகளை விட சேறடிக்கும் கேவலமான பேச்சுக்கள் மலிந்திருக்கின்றன. இதற்கு மற்றக்கட்சிகள் செய்ய வேண்டியவை, இந்த கோமாளியை விமர்சிப்பதை தவிர்த்து, மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அறிவியுங்கள், அதை செயற்படுத்துங்கள். இவர் கையூட்டு பெற்று மேடைகளில் சிங்களத்தை புகழ்ந்து சாதிக்க இனிமேல் உள்ள அரசு இவரை பயன்படுத்தாது. அந்த தேவையுமில்லை அவர்களுக்கு. ஆகவே மக்களாணையை நயவஞ்சகமாய் பெற்று, அரியாசனம் ஏற துடிக்கிறார். இவர் எங்கே வைக்கப்படுவார் என்பது முன்பே அறிமுகத்தில் இருந்து தெரிகிறது. எல்லா சிங்களத்துக்கும் காட்டிக்கொடுக்கும் அடிமைகள் தேவையில்லை. இருந்தவர்தான் இருந்தார் இந்தக்கூத்தையும் பார்த்து வீட்டை மூடிய நிம்மதியுடன் கண்ணை மூடியிருக்கலாம். பாதியில் விட்டிட்டு போட்டார்.
  36. அடுத்த ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு உள்மூக மொறிமுறையில் தான் அக்கரையுட‌ன் செயல் படுவதாகவும் ,இன நல்லிணக்கத்துக்கு முழு மூச்சுடன் செய்ல படுவதாகவும் காட்ட வேணும் தானே ....
  37. வட கிழக்கில் வெல்பவர் யாராக இருந்தாலும் ஆளும. அரசுடன் நல்லுறவை வளர்த்து அதன் மூலம் வட கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு தான் மக்கள் அவர்களை தெரிவு செய்கிறார்கள். அரசுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆனால் அநுரவுடன் ஒத்துளைத்து மக்களுக்கு நன்மை யார் செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டியதே. மக்களும் அவ்வாறானவர்களை தான் தெரிவு செய்ய வேண்டும்.
  38. அதில் ஒரு கல்லை சிவராம் கொலை வழக்கை வைத்து விடுங்க 😁 கடைசியில் நடக்கபோவதை dailymirror.lk காரன் இன்றே சொல்லி விட்டான் நாங்கதான் .......................... இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் .
  39. சலிப்பின் விளைவாகவே சனாதிபதித் தேர்தலில் ஒரு கூட்டுணர்வை தமிழர் தாயகத்தில் கட்டமைக்க முடியவில்லை. மக்களுக்கான அரசியலைவிட்டு வணிக அரசியல், அதாவது தமது தேவைகளுக்காக மக்களது வாக்குளை அடகு வைக்கும் அரசியலைக் கடந்த பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ததன் விளைவுக்கு சூழல் பொருந்திவரச் சிங்களம் தமிழர் தாயகத்தில் வாக்கு அறுவடைக்குத் துணிந்துள்ளது. நாசபக்ஸர்களின் காலத்தில் தமிழர் தாயகத்தை நோக்கி வாக்குவேட்டையில் நேரடியாக ஈடுபடாது பினாமிகளூடாகவே நகர்ந்தனர். ஆனால் இன்று 1977இற்கு முற்பட்ட நிலைபோன்றதொரு நிலையில் சிங்களக் கட்சிகளின் நிலை உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  40. இல்லை தகுதி அற்றவகளையும். சுமத்திரனின். அடிமைகளையும். வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து,......... தவராசாவைவிட சிவமோகனைவிட இன்னும் தமுழரசுகட்சியிலுள்ளவர்களைவிட சுமத்திரன். நியமித்தவர்கள் அதிக தகுதி கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்’ முடியுமா??? இல்லை உங்களால் ஒருபோதும் முடியாது எனவே… தயவுசெய்து தவராசா போன்றவர்களை குற்றம்சாட்டுவதை தவிர்க்கவும் 🙏
  41. முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?" அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்...... "அன்பே என்னை மன்னித்துக் கொள். இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு.. நம் வீட்டை நீ எடுத்துக் கொள். நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் "மெர்சிடஸ் பென்ஸ்" காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று... பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...! 😂 🤣 Nicole Santana
  42. அண்ணா அண்ணா அந்தாள் அங்கே தானே தேர்தலில் வென்றார்???? அப்படியானால் மக்கள் இல்லாமல் எப்படி? ஓ அப்படி வென்றாரா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.