Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. வைரவன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    345
    Posts
  2. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    5414
    Posts
  3. வாலி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    5062
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20006
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/27/24 in Posts

  1. இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: தியாகங்களின் பெறுமதி? ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனால் தங்களுக்கான நீதியென்பது அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் என்னும் உறுதியுடன் தங்களை புதுப்பித்துக் கொண்டு, ஜனநாயகத்தை அஸ்திபாரமாகக் கொண்டு, தங்களையொரு அரசியல் ஸ்பானமாக கட்டியெழுப்பினர். இந்தக் காலத்தில் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றக் கூடிய ஓரு தரப்பாக எவருமே கருதியதேயில்லை – ஆனால் அவர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் பயணித்தனர். அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கான, ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டு உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பு அவர்களை கொழும்பின் அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது. எந்த அரச படைகள் அவர்களை நிர்மூலமாக்கியதோ, அந்தப் படைகளின் தலைமைத் தளபதியாக ஜே.வி.பியே இருக்கும் அரசியல் சூழல் உருவாகியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தை நம்பிய போதிலும், தோல்வி தந்த படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொண்டனர் - ஆயுதங்களின் மூலம், தாங்கள் விரும்பும் அதிகாரத்தை, ஒரு பேதுமே கைப்பற்ற முடியாதென்பதை புரிந்து கொண்டு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிய அதே வேளை, தங்களின் அடிப்படையான கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் ஒரு அதிகாரத் தரப்பாக எழுச்சியுற்றிருக்கின்றனர். மார்க்சியம் தொடர்பில் பேசிய போதும் கூட, தற்போது யதார்த்தவாதத்திற்கே முன்னுரிமையளிக்கும் ஒரு அரசியல் ஸ்பானமாக தங்களை மாற்றியிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் அவர்களது தியாகங்கள் வீண் போகவில்லை. ஜே.வி.பி அதன் இலக்கில் வெற்றிபெற்றுவிட்டது. நமது சூழலை உற்று நோக்கினால் என்ன தெரிகின்றது? ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றப் புறப்பட்டு, 1990களில் ஜனநாயக நீரோட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட, டெலோ. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் (டி.பி.எல்.எப்) ஆகிய அரசியல் கட்சிகளின் வளர்ச்சி என்ன? வடக்கு கிழக்கில் இவர்களுக்கு இருக்கின்ற அரசியல் கட்டமைப்பு என்ன? மக்கள் ஆதரவு என்ன? ஏதாவது இருக்கின்றதா? இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டதன் மூலம், பெற்றுக்கொண்ட வெற்றியை, தனிக் கட்சியாக - ஆகக் குறைந்தது ஒரு கூட்டாகக் கூட தக்கவைக்க முடியாத கையறுநிலைக் கட்சிகளாகவே இருக்கின்றனர். மறுபுறம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிவுற்று, பதினைந்து வருடங்களாகின்றது. கடந்த பதினைந்து வருடங்களில் அந்த அமைப்பில் எஞ்சியவர்களால் புதிய சூழலுக்கான அரசியல் ஸ்பானமொன்றை கட்டியெழுப்ப முடிந்ததா? புலிகள் அமைப்பிலிருந்து, ஆகக் குறைந்தது, சில முனனேற்றகரமான சிந்தனையாளர்கள் கூட வெளித்தெரியவில்லையே – ஏன்? இத்தனை புலம்பெயர் அமைப்புக்கள் என்ன செய்திருக்கின்றன? ஏன் முடியவில்லை. ஜனநாயக பேராளிகள் என்னும் பதாகைகளையெல்லாம், தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதைத்தானே, கடந்த பொதுத் தேர்தல் நிரூபித்திருக்கின்றது. றோகண விஜயவீரவும் கொல்லப்பட்டார் - ஜயோ – தலைவர் போய்விட்டாரே என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கவில்லையே அந்த அமைப்பு – அதே வேளை பழிவாங்கும் அரசியலையும் செய்ய முயற்சிக்கவில்லை – ஏனெனில் ஒரு அரச இயந்திரத்தை பழிவாங்க முடியாது – அதற்குப் பதிலாக அதனையே கைப்பற்றும் உக்திகள் பற்றியே ஜே.வி.பி சிந்தித்தது. சாதித்தது. எனவே தியாயங்களுக்கான பெறுமதி என்பது, வருடம் தோறும் விளக்கேற்றுவதுடனும், சில மரக் கண்றுகளை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் பெற்றோருக்கு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்வர்களது தியாயங்களுக்கான பெறுமதி என்பது, புதிய சூழ்நிலைகளுக்கான செயலிலேயே தங்கியிருக்கின்றது.
  2. தலைவரின் வீரமரணத்தை தெளிவாக அறிவித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்திருக்கவேண்டும். இருக்கிறார் வருவார் என்று பொய்சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிய கூட்டம் + புலம்பெயர் பட்டாசு ரெஜிமண்ட் (இவர்கள் தாயக அரசியலை சின்னாபின்னமாக்கியவர்கள்) தான் இதற்கு முக்கிய காரணிகள். இப்ப ஈழநாடும் மனந்திரும்பி திருமுழுக்கு எடுத்திருக்கு. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள்.
  3. இவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு திருமுழுக்கு எடுத்து பரிசுத்தவான்களாக இருப்பது ஒரு வளர்ச்சிதானே! குறிப்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தருமலிங்கம் சித்தார்த்தன் போன்றோர் மகான்களாகிவிட்டனர்!
  4. Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக அடிபடும் செய்தி இது தான் என பதிவர் ஆரம்பிக்கிறார்… யாருக்காவது, என்னாவது , யாராவது ஏதாவது சமூக வலைத்தளத்தில் இருக்கணும்… அப்பதான் அது ஓடிக்கொண்டிருக்கும்.. இல்லாட்டி பொறுக்கேலாது… 2)தற்போது டொக்டர் அர்ச்சுனா பற்றிய கதை போய்க்கொண்டிருக்கிறது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் அது பற்றி கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 3)ஆனால் அர்ச்சுனா ஆராயப்பட, படிக்கப்பட வேண்டிய மனிதர் தான் என்கிறார் பதிவர். அங்கே ஓர் Case Study இருப்பதாக கூறுகிறார். 4)எல்லோரும் என்னிடம் கேட்டார்கள், யார் இவர்? என்ன இது என கேட்டார்கள். Dr. Archchuna Ramanathan. 5)கேட்டவர்களை நான் கேட்டேன் இவருடன் கதைக்க வேண்டுமா? இது பற்றி கதைக்க வேண்டுமா? இல்லையா எனக் கேட்டேன். அதற்கு கேட்டவர்கள் அவனுக்கு பைத்தியம் அவனோட என்ன கதை தேவையில்லை விடுங்கள் என்றார்கள். 6)ஆனால் அது பற்றி கதைக்காமல் விட்டால், அவருடன் கதைக்காமல் இருந்தால் அங்கே தான் பெரிய பிரச்சனை இருக்கிறது என கூறிச்செல்கிறார். 7) கதைப்பதில் பிரச்சனை இல்லை தானே என கூறிச்செல்கிறார். ஆனால் கதைக்காமல் விட்டால் தான் பிரச்சனை பெரிதாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். 8)அர்ச்சுனா இங்கே என்ன செய்கிறார்? அவர் பாரம்பரிய சம்பிரதாயத்தில், வேதத்தில் கைவைக்கிறார். அதை கேள்வி கேட்கிறார். அதை தாக்குகிறார். 9)உடனே நாங்கள் என்ன செய்கிறோம்? ஏய், ஏய் என்ன கேள்வி கேக்கிறாய்? பேசாம மூடிப்போட்டு போ பாப்பம் என்கிறோம். 10) ஆனால் அர்ச்சுனா கேட்பதாயில்லை. ஏன் மூடுவான்? உள்ள ஏதோ இருக்கெண்டுறீங்கள்? ஒண்டையும் காணலையே? ஒண்டும் இல்லாட்டி மூடிட்டு போ எண்டுறீங்கள்?என்கிறார் .. என்ன தான் இருக்கிறது என பாப்போமே என்கிறார்… 11) விடயத்தை மூடாட்டி,அதை பார்த்துக் கொண்டிருப்பவர்களாகிய சமுதாயத்தின் பெரிய கூட்டம் என்ன செய்கிறார்கள். இவன் விசரன், பைத்தியம், சிறையில் அடையுங்கள், விசாரியுங்கள், அடியுங்கள், இல்லாமல் செய்யுங்கள், புறக்கணியுங்கள், ஒரு பக்கத்தில தூக்கிப் போடுங்கள், கொல்லுங்கள் அல்லது அங்கொடைக்கு கொண்டு போங்கள் என குளற ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கிறார்கள். (இதைத்தான் தமிழர்களாகிய நாம் சாவகச்சேரியில் இருந்து இவருக்கு செய்து வருகிறோம். இதற்கு எதிராகத்தான் தொடர்ந்து நானும் எழுதிக் கொண்டு இருந்தேன், இப்போதும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்) 12) இதை அப்படியே இழுத்து மூடுவது கூடாது. இதனால் தான் எமது சமுதாயம் முன்னேறுவதற்கு மிகவும் தாமதமாகிறது என அடித்து கூறுகிறார். இப்படி யாராவது பிரச்சனைப்படுத்தினால் உடன நாங்கள் அவரை அப்படியே அப்புறப்படுத்த ஆரம்பிக்கிறோம். சமுதாயத்தில் உள்ள பலங்கள் அனைத்தையும் கொண்டு கேட்பவரை மூடி மறைப்பதால் பிழைகளை மூடிவிடுகிறோம். (அதைத்தானே சாவகச்சேரியில் இருந்து நாம் தொடர்ந்து செய்து வந்தோம்.) 13)இந்தப் பிரச்சனையை இப்படியே கைவிடுவது கூடாது என கூறிச்செல்கிறார். சமாளிப்பது கடினம் தான், (ஏன் என்றால் அந்த பழைய சிஸ்டம் தானே எமக்கு பழகியிருக்கிறது, சுலபமாகவும் இருக்கிறது) ஆனாலும் கைவிடக்கூடாது எனகிறார். இதனால் இது மற்றவர்களுக்கு தலையிடியாக மாற ஆரம்பிக்கும்,ஆனாலும் கைவிடக்கூடாது என்கிறார். (இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்து எழுதிவருகிறேன். இதற்காக மட்டுமே நான் தொடர்ந்து அர்ச்சுனாவின் பக்கம் எழுதி வந்தேன்) (பிரச்சனை ஒன்று வந்தால் பிரச்சனையை மூடுவதல்ல தீர்வு, பிரச்சனையை தீர்ப்பது. புண் வந்தால் புண்ணை மூடி மறைப்பது போல் இருக்கிறது. புண்ணை மாற்ற வேண்டாமா?) 14)சமுதாயத்தில் ஒருவரும் கூறாத, கேட்காத விடயத்தை சமூகத்தில் வேறு ஒருவர் கேட்க ஆரம்பித்ததும் மற்றவர்களுக்கு தலையிடி தொடங்கிவிடுகிறது. பேசாம அங்கால போவியா என கோசம் எழுப்புகிறார்கள். கலைக்க ஆரம்பிக்கிறார்கள். 15) இதனால் அவர் கூறுவது எல்லாம் சரியானது என நான் கூறவரவில்லை. அவரும் சதாரண மனிதர் தானே என்கிறார். 16) மற்ற பக்கம் இருந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். சமுதாயத்துக்காக, பொதுவிடயத்துக்காக கேள்வி கேட்க ஆரம்பிக்கும் போது அவரது தனிப்பட்ட பலவீனங்களும் வெளியே வர ஆரம்பிக்கின்றன. கேட்பவரின் எல்லாப்பக்கமும் வெளித்தள்ளுகின்றன. 17) இது யாருக்கும் நடைபெறலாம், பொது விடயங்களை கதைத்துக் கொண்டிருக்கும் போது எமது தனிப்பட்ட பலவீனங்கள் கூட வெளிவரப்பார்க்கும். அப்போது அவர் கதைத்த பொது விடயங்கள் அங்கே அடிபட்டுப்போகின்றன. அதற்காக காத்திருந்தவர்கள், தங்களுக்கான இரையை தூக்கிக்கொண்டு சன்னதம் கொள்கிறார்கள். 18) அப்போது தனிப்பட்ட பலவீனங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. தூக்கிப்பிடிக்கப்படுகின்றன. அவர் கூறும் நல்ல விடயங்கள் அடிப்பட்டுப் போகின்றன. (யாழ் தேர்தலில் அர்ச்சுனா அதற்கான விலையையும் கொடுத்திருந்தார்.) (இது தான் அர்ச்சுனாவுக்கு தேர்தல் காலங்களில் நடைபெற்றது. Sepal அர்ச்சுனா பற்றி நல்லதொரு case study தான் செய்திருக்கிறார்.) 19)ஒருவர் கட்டுப்பாடு,ஒழுக்கம், அடக்கம் (discipline)என்பவற்றை பாடசாலையிலேயோ, சமுதாயத்திலேயோ, குடும்பத்திலேயோ அல்லது வேறெங்காயினும் கற்றிருந்தால் ஒருவரும் கேளாத கேள்விகளை கேட்க மாட்டார்கள். அவர்கள் ஏதோ ஓர் அமைப்புக்குள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது அடிமையாகி இருக்கிறார்கள். அதனால் கேள்வி கேட்க மாட்டார்கள். 20)Discipline க்க வளர்ந்தவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். அவர்கள் கூட்டத்துடன் நின்று கொண்டிருப்பார்கள். கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருப்பார்கள். Discipline க்க இருப்பவர்கள் கேள்வி கேட்கும் மற்றவர்களாக இருக்க மாட்டார்கள். அர்ச்சுனா கூட்டத்தில் இருந்து வெளிவந்து கேள்வி கேட்கிறார். ஆனாலும், அவருக்கு எதிரான கூட்டம் அவரை புறக்கணிக்க, அடிக்க, துரத்த, ஒதுக்க, கொல்ல, சிறையில் தள்ள சமூகத்தின் அத்தனை பலங்களையும் பாவிக்க ஆரம்பிக்கிறது… ஆனால் Aruchchuna எல்லாவற்றையும் எதிர்த்து போராடுகிறார்.. புதுவடிவம் கொள்கிறார்… பல எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து போராடுகிறார்… பகுதி இரண்டு… தொடரும்…. DR. அர்ச்சுனா ராமநாதன் FB இல் இருந்து
  5. உங்களுக்கு சம்பந்தன், சுமந்திரன் விடயங்கள் தெரிந்தது போல, எனக்கு ஜேவிபி, பெளத்த இனவாதம் பற்றி கொஞ்சம் தெரியும். இலங்கையில் தமிழர் தேசிய இனமாக அன்றி இனகுழுவாக மாற்றப்படும் விடயத்தில் இவர்கள் மகிந்தவை விட மோசமான அணைத்து அழிக்கும் அணுக்குமுறையை கையில் எடுப்பார்கள், எடுக்கிறார்கள். ஆகவே இதில் பொறுத்துப் பார்க்க ஏதும் இல்லை என்பது என் நிலைப்பாடு.
  6. வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது! 27 NOV, 2024 | 08:59 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில்... முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடர் மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலரினால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர். முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில்... முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலத்தின் மனைவியுமான கமலாதேவியினால் பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர். மேலும் குறித்த அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்.... மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கே.கனகரத்தினம் ஏற்றியதை தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில்வாயினியின் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில்... யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர் அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது வவுனியா வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்... வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் நாள்.... வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் தாயார் இருவரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர்களின் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள்... 2024 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார். ஏனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபுவின் தந்தை இராமையாவும் கப்டன் வண்ணனின் தந்தை விஜயசேகரமும் ஏற்றி வைத்தனர் இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர். தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்... தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள்போன்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நரடைபெற்றது. மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. சரியாக 6.10 மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் இசை இசைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாள் இன்றயதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன. தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட் தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர். மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்... மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டது. ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்... அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. இன்று கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர். அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் நம்பர் பலகைகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/199882
  7. நிச்சயமாக...புனிததை பேணவேண்டும்... இதில்நான் தேவையற்றதை எழுதீருந்தால் மன்னிக்கவும் புதிய திரியை திறவுங்கள்..பல திருகுதாளங்கள் வெளிவரும்...இந்த காணொளீ தமிழ் முகவர்கள் சிலர் நம்மினத்துக்கே பிடித்த கான்சர் வியாதிகள் ள இல்லை நீங்கள் இணைத்தது சரியென்றே எனக்குத் தோன்றுகிறது...சிலருடைய பித்தலாட்டம் வெளிப்படக்கூடிய இடத்தி ல் வெளிப்பட வேண்டுமே
  8. நடமாடுவதே பாதுகாப்பில்லை என்ற புயல் சூழலில் மக்கள் அலை என எழும்பி வந்தது ….எல்லாமும் முடிந்து போய்விடவில்லை என்ற நம்பிக்கையை தருகிறது.
  9. மக்கள் மனதில் ஆறாதவடுவாய் தேசியம் அலைபாய்கிறது....அதனை அணைக்க முயன்ற அரசியல் வியாதிகளுக்கு பாடம் புகட்டப்போய் ..சுயத்தை இழந்த தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்... கொடியமழை புயலால் கூட தடுக்க முடியாத அந்த உணர்வு ....தலைவன்...போராளிகள் .. மீதான அன்பையும் விசுவாசத்தையும் காட்டுகிறது..
  10. அடாது மழை பெய்தாலும் விடாது அஞ்சலி செலுத்திய மக்கள். தமக்காக மரணித்த மாவீரர்களை மறக்காது நெஞ்சில் ஏந்தும் அதிசயம் இது எப்படி ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது? இது மாவீரர்கள் நிகழ்த்தும் அற்புதம் இன்றி வேறு என்னவாக இருக்கும்? தோழர் பாலன்
  11. சுட்டு முடிய கதிரையை எறியிறதா?
  12. @குமாரசாமி கோப்பாயில் ந‌ட‌ந்த‌ மாவீர‌ நாளில் சில‌ போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் பார்க்க‌ கூடிய‌தாக‌ இருக்கு தாத்தா..................... நெருப்பை குப்பையால் அனைக்க‌ முடியாது புல‌ம்பெய‌ர் நாட்டில் ந‌ட‌ந்த‌ ப‌ல மாவீர‌ நாளில் போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் வைக்க‌ப் ப‌ட்டு அதை முக நூலிலும் போட்டு இருக்கின‌ம்.................அது இணைய‌ வ‌ழி ஊடாக‌ ஈழ‌த்தில் வ‌சிக்கும் உற‌வுக‌ளும் பாப்பின‌ம்.......................... நாம் த‌மிழ‌ர் ந‌ட‌த்தின‌ மாவீர‌ நாளில் இர‌ண்டு ப‌க்க‌மும் போராளிக‌ளின் ப‌ட‌ங்க‌ள் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் அதோட‌ த‌லைவ‌ரின் பிற‌ந்த‌ நாளை ஒட்டி 70அடி உய‌ர‌த்தில் எம‌து புலிக் கொடி ஏற்ற‌ப் ப‌ட்ட‌து............................
  13. மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்: 1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு. 2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை. 3. CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே, CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை. இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம். தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம். இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.
  14. முதலில் உங்களுக்கு இதே தண்டனை கொடுக்க வேண்டும்.
  15. ஏன் அமைதி என்பதுதான்..சந்தேகமாக இருக்கிறது... அண்மையில் ஊர் சென்றபோது தலைவரின் வீட்டிற்கு சென்றேன்.... ஒற்றைச்சுவர் மட்டும் மங்கிய மஞ்சள் கலர் எழுத்துடன் நின்றது..நினவுக்கு படமும் எடுத்துக் கொண்டேன்...அதேநேரம் 2004ல் போனபோதுமுழு வீடாக இருந்தது ..அப்பவும் படம் எடுத்ததேன்...இந்தமுறை போய் வரும்போது வேதனையுடன் வந்தேன்...ஏன் இந்த் ஊர் மக்கள்.. சிறந்த முறையில் பாதுகாக்கவில்லை என்பதே....பின்னர்தான் அறிந்தேன்கடும் பாதுகாப்பு நெருக்கடி..ஆனால் இன்றுபிறந்தநாள் நிகழ்வைப்பர்த்தபோது..மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...ஏனெனில் அவர்களுக்கு மனமுண்டு...மற்றவர்கள் விடுகிறார்கள்இல்லை என்பதே..
  16. நீஙக கூறுவது போல எமது போராட்டத்தை ஜெ,வி,பி யினரின் வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாது .. 21 கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் அதுவும் 72 வருட காத்திருப்பின் பின்பு ...நிலைத்து நிற்க வேண்டும் ஆட்சி துணை புரிய வேண்டும் எல்லாம் வல்ல இயற்கை... இடதுசாரி தலைவராகிய அனுரா வலதுசாரி நாடுகளின் உலக் வங்கியிடம் கை ஏந்தும் நிலையில் உள்ளார் ..பணத்தை கொடுத்தவர்கள் தங்கள் நலன் சார்ந்து தான் செயல்படுவார்கள் ...இந்தியாவி அதானியே அமெரிக்காவிடம் சரண்டர் இதில் அனுரா எம்மாத்திரம்.... மேற்குலகு,அமெரிக்கா போன்ற நாடுகளின் தியட்டர் ஒவ் ஒப்பரேசானாக் சிறிலங்கா மாறாமல் இருக்க வேணும் ... அது
  17. முடியாது ..காரணம் இலங்கை அரசாங்கம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் இனிமேல் மீள முடியாத ஒரு அமைப்பாக பலம் பெற இயலாத வகையில் அழித்தொழித்து விட்டது யாரவது இயங்க முற்பட்டால். அவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை நீங்கள் நம்புங்கள் அது உங்கள் சுதந்திரம் மேலும் புலிகள் போராட்டம் தான் இலங்கையை கடன்காரன். ஆக்கியது இதன் தொடர்ச்சி தான் இடதுசாரி ஆட்சி விடுதலை புலிகளின் வலிமையான போராட்டம் நடைபெறாமால். இருந்தால் ஜேவிபி ஒருபோதும் ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது
  18. நான் எனது கலாச்சாரத்தின் பின்னனி ...மற்றும் நாம் வாழும்பொழுது இருந்த கலாச்சார்த்தை வைத்து சொல்கின்றேன் ..இந்த காலில் விழும் கலாச்சாரம்( எமது பகுதிகளில்) தற்பொழுது 20 வருடங்களுக்கு முன்பு இருந்து தான் அதி வேகமாக பரவி கொண்டு வருகிறது ...இந்தியாவின் கலாச்சார ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சிறிலங்கா அதிகார,மற்றும் பெளத்த கலாச்சார ஆக்கிரமிப்பாளர்களின் மெளனமா அடிமை ஆண்டான் கலாச்சார தினிப்பாக நான் பார்க்கிறேன்...புலம் பெயர் பிர்தேசங்களில் கோவில் ஐயர்களின் காலில் விழுகின்றனர் ...இந்தியர்கள் செய்வதை பார்த்து எம்மவர்களும் செய்கின்றனர்...
  19. அண்ணா நீங்க‌ள் இத‌ற்கே வ‌ருத்த‌ப் ப‌டுறீங்க‌ள் இதை விட‌ நிறைய‌ விள‌ம்ப‌ர‌ம் வ‌ரும் பார்க்க‌ வெறுப்புட‌ன் கூடிய‌ ச‌லிப்பு வ‌ரும் அது தான் இவ‌ர்ளின் கூத்துக‌ளை பார்க்காம‌ விட்டு ஒரு வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது.............................
  20. இது மாவீர‌ர்க‌ளின் புனித‌மான‌ திரி அண்ணா அது தான் இந்த‌ திரியில் எழுத‌ விரும்ப‌ல‌ ம‌ற்ற‌ம் ப‌டி புது திரி திற‌ந்து இவ‌ர்க‌ள் செய்யும் குள‌று ப‌டிக‌ளில் இருந்து ப‌ல‌தை வெளிப்ப‌டையா ஆதார‌த்தோடு எழுத‌லாம்😉..........................
  21. இவரு புதுப் பணக்காரருங்க..... ..அவரு புது அர்ச்சனாவாக உருவாகிறார்...அவரு ஒரு தங்கத்தை தேட...இந்த அம்மணீ.. நான்தான்..நீங்க தேடிட்டிருக்கிற தங்கமென்று ..அலப்பறை செய்யிறா🙃 விவஸ்த்தை..கெட்டவர்கள்... எங்கு எப்படி..செயல்படவேண்டும் என்ற அடிப்படை அறிவற்ற கோமாளிகள் ஏன் தயங்குகிறீர்கள்....எழுதுங்கள்... பாடமாக அமையட்டும்
  22. இந்த‌ யூடுப்ப‌ர் பெய‌ர் கிருஷ்னா நான் இவ‌ரின் காணொளிக‌ளை பார்ப்ப‌து கிடையாது விள‌ம்ப‌ர‌ பிரிய‌ர் எங்கை எப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌னும் என்ர‌ ப‌க்குவ‌மும் இவ‌ரிட‌ம் கிடையாது இவ‌ர்க‌ளின் குள‌று ப‌டிக‌ள் நிறைய‌ இருக்கு அதை எழுத‌ விரும்ப‌ வில்லை...............................
  23. நாங்கள் தமிழர்கள் சிறுபான்மையினர் ஆட்சியை ஒருபோதும் கைப்பற்ற முடியாது அனைத்து தமிழரும் ஒற்றுமையாக ஒரே தலைமையில் ஒரு தலைவரின் கீழ் பயணித்தாலும் ஆகக்கூடியது 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கிடைப்பார்கள் ஆனால் ஜேவிபி க்கு. 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தது ஏனெனில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்கள். அவர்கள் போராடியது ஆட்சியை பிடிக்க தான் அதில் வெற்றி பெற்றுள்ளார்கள் வாழ்த்துக்கள் நாங்கள் போராடியது ஆட்சியை பிடிக்கவில்லை ஆட்சியை பிரிப்பதற்க்கு தீவை இலங்கை தீவை பிரித்து ஆட்சி செய்வதற்கு இந்த ஆசிரியர் தலையங்கம் இரண்டையும் எப்படி ஒரே நிலையில் வைத்து ஒப்பிட்டது ??????
  24. அப்படியானவர்களை தேடிப்பிடித்து களையெடுத்து விட்டார்கள். மிகுதியானவர்களையும் இலங்கை இந்திய பலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பிலேயே இருந்தார்கள். இதனாலேயே சாதாரண மக்களும் போராளிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கியவர்களும் மிரட்டப்பட்டார்கள் அல்லது கண்காணிக்கப்பட்டார்கள்.
  25. இரவு ஊரில் கதைத்த போது மழையும் காற்றும் வெளியில் செல்ல முடியாது என கூறினார்கள். இவ்வளவு மக்கள் வெள்ளத்தை பார்க்கும் போது மாவீரர்கள் தமிழர் மனதில் அதிவிசேடமானவர்கள் என்பதை சொல்லி நிற்கிறது.
  26. ஆயுத போரட்டத்திற்கு புறப்பட்ட இயக்கங்கள் விடுதலையை வென்றெடுக்கக் கூடிய அரசியல் ஆளுமைகளை வளர்தெடுக்கவில்லை. இயக்கத்துக்குள் இருந்த அரசியல்துறை போராளிகளே மற்றயவர்களால் கையாலாகாத ஏளனமாக பார்க்கப்படும் நிலையே இருந்தது. ஒரு வேளை இயக்கத்தில் இருந்த அரசியல் அறிவு உடைய சில ஆளுமைகள் தப்பி வந்து அரசியல் போராட்டத்தை அறிவுபூர்வமாக முன்னெடுத்து செல்ல வந்திருந்தால், முதல் வேலையாக அவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்து அவர்கள் மீது இட்டுக்கட்டிய பல அவதூறுகளை பொழிந்து அவர்களை அகற்றும் வேலையை புலம்பெயர்/ தாயக வரட்டு தமிழ் தேசியவாதிகள் முன்னெடுத்திருப்பர்.
  27. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் போல கலப்புத் தேர்தல் முறை ஒன்று கட்டாயம் தேவை. தேசியப்பட்டியலில் கட்டாயம் 25பேர் (மாவட்டத்திற்கு ஒருவர்) பெண்களுக்கு வாய்ப்பும் 9பேர் (மாகாணத்திற்கு ஒருவர்) மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பும் வழங்கப்படவேண்டும்.
  28. தோசை சுடும் கதிரை. 😂
  29. நீதிதேவதைக்கு வாழும் தராசும் குடுப்பது நல்லா இருக்கு . ............! 😂
  30. அந்த இடத்தில் யாருமே கதைக்க வ்ரும்புவதில்லை.நிலைமை விளங்கினாலும்...என் மனதில் எழுந்த கவலையைத்தான் எழுதினேன்.... ஊரில் நின்றபோது கனடாவில் இருந்த மகனிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது...தலைவர் வீட்டு மண்ணும்...உடைபாட்டுத்துண்டும் என்பதே...இதற்காக இரண்டாவது த்டவை சென்று..அந்த புனிதமான இடத்தில் இருந்து அவற்ரை சேகரித்துவந்து ..அவரிடம் ஒப்படைத்தேன்...இது எனக்கு முழுத் திருப்தி தந்த விடையம்
  31. ஆல்வாயான், எப்படி பாதுகாப்பது? 😢 வீடு இராணுவத்தால் அத்திவாரத்துடன் இடித்தழிக்கப்பட்ட கதை ஒருவரும் சொல்லவில்லையா?
  32. புலம் பெயர்ந்தோர் அனுப்பும் பணம் சரியாக கையாள்வதில்லை என்றும் சொல்கிறார்கள். சாவகச்சேரி வைத்தியசாலை ஒர உதாரணம்.
  33. நெற்றியில் அடித்தது போன்ற கேள்வி. அடக்குமுறையின் மத்தியில் நாம் மெழுகுவர்த்தியை மட்டும் ஏற்றுவது ஒன்று. அடக்குமுறையே இல்லை ஆனால் மெழுகுவர்த்தி ஏற்ற மட்டுமே அனுமதி என்பது பம்மாத்து. இன்னொரு விடயம் இன்று கேள்விப்பட்டேன். ஊர் பாடசாலைகள் வெளிநாட்டில் சேகரிக்கும் பணம் இனி அரசின் ஊடாகவே கையாளப்படும் என்ற வகையில் ஏதோ சுற்று நிருபம் - வடக்கு ஆளுனர் அனுப்பவுள்ளாராம். புலம்பெயர்ந்தோர் பணம் எமது பள்ளிகளை மேம்படுத்துவது கண்ணை குத்தி விட்டதாக்கும்.
  34. இனி அடுத்த செஞ்சரி அடிக்க இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்குதோ என்று நினைத்துத்தான், செஞ்சரி எல்லாம் ஒன்றுமேயில்லை, அணியின் வெற்றிதான் முக்கியம் என்று இப்பவே தற்காப்பாக ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கின்றார் போல கோலி பாய்................🤣.
  35. தலைக்கனம் எப்படியெல்லாம் தலைவிரித்தாடுகிறது. நன்றி தில்லை.
  36. நீதிபதிக்கு வேண்டாத வேலை. கோர்ட்டுக்கு ஆசாமி வந்தால் நீதிபதிக்கு பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
  37. சில மாதங்களின் முன் அப்பொழுது இலங்கை வெளிவிவகார அமைச்சராக இருந்த அல் சஃப்ரி ஒரு மாநாட்டிற்காக ரஷ்யா போயிருந்தார். அப்பொழுது அவர் ரஷ்ய அதிகாரிகளை இனிமேல் இலங்கையர்களை ரஷ்ய படைகளில் இணைக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார். இது ஒரு செய்தியாக பல ஊடகங்களில் வந்தது. ஆனால் பின்னர் இது சம்பந்தமான செய்திகள் எதையும் நான் காணவில்லை....................😌.............. இந்தச் செய்தி வரும்வரை.
  38. இப்படி பணம் கொடுத்து இன்னொரு நாட்டுக்கு போவதை சட்டரீதியாக தப்பென்று சொல்லலாம், ஆனால் இதையே மனிதாபிமானரீதியாக ஒரு தப்பென்று சொல்ல முடியுமா, கொழும்பான்................. எங்களில் கூட பெரும்பாலானோர் இப்படித்தானே புலம் பெயர்ந்தவர்கள். இன்றும் அமெரிக்க தெற்கு எல்லையில் இப்படியானவர்கள் உலகெங்கும் இருந்து வந்து சேருகின்றனர். இந்தியர்கள், சீனர்கள், நேபாள மக்கள்,.................... இவர்கள் ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தான் இங்கு வருகின்றார்கள். அவர்களும் இங்கு வாழட்டும் என்றே நான் நினைக்கின்றேன்................
  39. பையன் சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  40. பிரபா வாதவூரன். வாலி. மூவருக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏 தேர்தல் ஆணையாளர் கத்தப்புக்கும் ஜேர்மன் தமிழ் சிறிக்கும். நன்றிகள் பல. உடன் வாழ்த்துக்களும். உரித்தாக. என்னை கீழே இறக்கவிடாமால். அசுர பலத்துடன் தடுத்து கொண்டிருக்கும் கிருபனுக்கும் நன்றிகள்
  41. தனிப்பட்ட ரீதியில் அனைவரையும் இலங்கை தமிழர் என அழைப்பதே எனக்கு விருப்பமான தெரிவு - ஆனால் இப்படி செய்தால் மலையக/மேலக தமிழர்களின் நலனை யாழ் மையவாதத்துள் போட்டு அமுக்கவும் வாய்ப்புகள் உண்டு. வடக்கு-கிழக்கு தமிழர் ஒற்றுமையை தக்க வைக்க, யாழ் மையவாதத்திடம் கிழக்கு தமிழர் இழந்தது அதிகம். இதே போல் ஒரு நிலை உங்களுக்கு தேவையா? வடக்கு, கிழக்கு தமிழருக்கு ஒரே அணியாக தமிழ் தேசியத்தின் கீழ் அணி திரள்வதுதான் - அவர்கள் தேசிய இன இருப்பை தக்க வைக்க ஒரே வழி. ஆனால் மலையக, மேலக தமிழர்களின் அரசியல் அபிலாசை - ஒரு சிறுபான்மை இனக்குழுவாக இலங்கைக்குள் சம உரிமை கோருவது - இவர்களோடு உங்களை சேர்த்து கொள்வது - உங்களுக்கு இருப்பதையும் கெடுக்கும் வேலையாய் முடியும். செளமியமூர்த்தி தொண்டமான் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து விலகி ஆனால் தொடர்ந்தும் வடக்கு-கிழக்கு அரசியல் கட்சிகளோடு நல்லுறவில் இருந்தார். புலிகளை ஒரு போதும் எதிர்த்ததில்லை, புலிகளும் எதிர்த்ததில்லை. மனோவும் அப்படியே. இதெல்லாம் இவ்விரு மக்களின் அபிலாசைகள், தேவைகள் வேறுபட்டவை என்பதாலேயே. செளமியமூர்த்தி, சந்திரசேகரன், இப்போ ஜீவன், 2ம் சந்திரசேகரன், மனோ - உண்மையில் கடந்த 75 ஆண்டில் வடக்கு-கிழக்கு தமிழ் தலைவர்களை விட, தம் மக்களுக்கு இவர்கள் சாதித்தது மிக அதிகம். இப்போதைக்கு நீங்கள் உங்கள் தனிதன்மையை பேணுவதே உங்கள் நலனுக்கு நல்லது என நான் நினைக்கிறேன். பிகு 1. உங்கள் பிறப்பு சான்றிதழ் உங்கள் பெற்றார் சொன்ன தகவல் அடிப்படையில்தான் பதியப்படும். நான் கூட என் மகனை இந்திய வம்சாவழி என பதிய முடியும் என நினைக்கிறேன். 2. அண்மையில் முஸ்லிம்களின் சதவீதத்தை குறைத்து காட்ட, இரு தமிழரையும் ஒன்றாக காட்டும் முஸ்தீபுகள் சிங்கள தரப்பால மேற்கொள்ள படுவதாக கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தமிழரை குறைக்க -மலையக தமிழரை நாடு கடத்தியோர், இப்போ இப்படி செய்கிறார்கள். எல்லாம் அவர்கள் இன நலனின் அடிப்படையிலேயே.
  42. அட இப்ப தான் கவனித்தேன் கந்தப்பு வுக்கு பதிலா கநதையர் என்டு எழுதிப் போட்டன்.கந்தப்பு உங்களுக்கு மிக்க நன்றி.
  43. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.போட்டியை மத்தியஸ்தம் வகித்து திறம்பட நடத்திய கந்தப்பு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். அத்துடன் இதற்கு போட்டிக்கு மேடை அமைத்து ஒலிபெருக்கி,விளம்பர பதாதைகள் அமைத்து கள உறவுகள் அனைவரையும் மேடைக்கு அழைத்து போட்டியை தொய்வில்லாமல் கொண்டு சென்ற சிறித்தம்பிக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.
  44. போட்டியை மிகவும் திறமையாக நடாத்திய @கந்தப்புவுக்கு பாராட்டுக்கள்👏👏👏 https://vm.tiktok.com/ZGd2ute2S/ This post is shared via TikTok. Download TikTok to enjoy more posts: https://vm.tiktok.com/ZGd2H145D/
  45. அந்த அறிவாளிதான் ஒரு தங்கத்திடம் தோத்தான் குஞ்சு ஆனது இதுக்கு பிறகும் தனக்கு மானம் ரோசம் இருக்கெண்டு என்னெண்டுதான் தமிழ் மக்கள் முன்னிலையில் நடமாடுதோ ?
  46. “நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.