Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    19668
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    88820
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    16
    Points
    46977
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3125
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/03/24 in all areas

  1. @Kandiah57 @ரசோதரன் புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது…. புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ… புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை. அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள். தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம். ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது. இனியும் திருந்தவாய்ப்புள்ளது. வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.
  2. சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி. அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு? அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை. அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா? தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?
  3. இரு மாபெரும் புத்திஜீவிகள் சந்திப்பு. இனி தமிழ் மக்களுக்கு விடிவுகாலம்தான் போங்கோ! தமிழ்க் கூட்டமைப்பை முதலில் பாராளுமன்ற கதிரைகளுக்காக உடைத்துக்கொண்டு முதலில் வெளியேறியவர் இந்த கஜே-கயே குழுத்தலைவர் கஜேந்திரகுமார். இது சுமந்திரன் வருவதற்கு முன் நிகழ்ந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டும். மக்கள் தமக்குத் தேவையானவர்களைத் தெரிவுசெய்வார்கள். குறிப்பாக அர்ச்சுனா இராமநாதன் போன்றவர்களை அனுப்பியுள்ளார்கள். பிக்பாஸ் அதிகம் பார்ப்பதன் விளைவாகக் கூட இது இருக்கலாம். அநுர அரசு சமர்ப்பிக்கப் போகின்ற புதிய அரசிலமைபுத்தொடர்பாக கஜே, பார் சிறீதரன், அருச்சுனா போன்ற புத்திஜீவிகள் மக்களுக்குப் போதிய விளக்கம் அளிப்பார்கள் அல்லது புரியவைப்பார்கள் என நம்பலாம். எனவே சுமந்திரன் தன்னை நிராகரித்த மக்களின் ஆணையைக் கருத்திற்கொண்டு இதுபற்றி வாளாதிருப்பதே சாலச் சிறந்தது!
  4. இவ்வளவு காலமும்... சம்பந்தன் சுமந்திரன் இருந்த படியால்தான்... கஜேந்திரக்குமார் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். 🙂 சுமந்திரன் வந்தால்.... கஜேந்திரகுமார் வெளியேறுவார். எது உங்களுக்கு விருப்பம் என்று, ஒரு முடிவுக்கு வாங்கோ விசுகர். 😂 வேலியிலை போன ஓணானை, திரும்பவும் பிடித்து வேட்டிக்குள் விடாதீங்க. 😜 பட்டது போதும், பட்டினத்தாரே... 🤣
  5. சந்தோசம். இதை வரவேற்று இப்போதைக்கு பொதுவெளியில் இவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சிப்பதை தவிர்கிறேன். டில்வின் மா.சபை முறை கலைக்கப்படும் என கூறியதற்கு, சபையில் விளக்கம் கேட்ட சாணாக்ஸ். விளக்கம் ஏதும் கொடாமல், சிறிதரனுடன் சாணக்கியனும் அனுர வை சந்தித்து கேட்கலாம் என பதில் சொன்ன பிமால் ரத்நாயக்க.
  6. பதவியில் இருந்து இதை கூட செய்யா விட்டால் உலகம் என்ன சொல்லும்??
  7. கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்கிழங்கால் தேய்த்தால் எவ்வளவு மழை அடித்தாலும் கார் கண்ணாடி இருளாகாது என்கிறார் கார் டயர் பற்றிய தகவல் கார் திறப்பு காருக்குள் சிக்கிக்கொண்டால் பிரேக் திடீரென பிடிக்காவிட்டால், ஆனால் எல்லா காருக்குமிது பொருந்தாது காருக்குள் லொகேற்றர் பொருத்தியிருந்தால் கண்டுபிடிப்பது எப்படி மேலும் சில
  8. எப்படி சிங்களவர் (மட்டும் அல்ல முஸ்லிம்களும்) ஓம்படாமல் தீர்வை நாட்டில் எட்ட முடியாது என்பது உண்மையோ… அதே போல் புலத்தில் இருக்கும் நீங்கள் சொல்லும் சப்போர்டசை விலத்தி இங்கே ஒரு பெரிய அளுத்தத்தை பெற முடியாது. மேலும் அவர்களை போலவே நீங்களும் prisoner of your past அதாவது கடந்த கால கசப்பான அனுபவங்களின் கைதியாக இருக்கிறீர்கள். அருச்சுனா சொன்னது போல் இதுதான் கடைசி சந்தர்ப்பம். இதை கஜனும் சிறியும் விழங்கிகொண்டது போல்… ஒவ்வொரு புலம்பெயர் ஐலண்ட்டும், குமாரசாமியும், தமிழ் சிறியும் விளங்கி ஒரே முகமாக செயல்பட்டால் எதையாவது முயலாலாம். இல்லை, இனம் உரிமையோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை பழைய கறளைத்தீர்ப்பதே இலக்கு என்றால் - உங்கள் இஸ்டம்.
  9. எனக்கு அவர்கள் இணைந்து பேசுவதை விட நீங்கள் கூறிய இந்த விடயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது..நல்ல விடயம் விமர்சனம் என்ற போர்வையில் நானும் எனக்கே தெரியாமல் தமிழ் தேசியத்திற்கு விரோத கருத்துக்களை எழுதியிருக்கலாம்..
  10. இது யாழ்ப்பாணீஸ் தங்களுக்குத் தாங்களே எடுத்துச் செருகிய ஆப்பு,...🤣
  11. கூட இருக்கும் எல்லோரையும் மட்டம் தட்டி கொண்டே இருக்கும் குணம்தான் சுமந்திரனை இந்த நிலைக்கு இறக்கி விட்டுள்ளது. உண்மையில் மக்கள் இப்படி நிராகரித்தது அவருக்கு பலத்த பின்னடைவுதான். தோல்வியின் பின் அவர் தனியே இருந்து reflection செய்வாராயின், தன் குணவியல்பு அரசியலுக்கு ஏற்றதல்ல என்பதை விளங்கி விலகி கொள்வார் என எதிர்பார்க்கிறேன். குறுக்குசால் ஓட்டாமல், ஜனநாயகத்தை மதித்து, மக்கள் தேர்ந்த இருவர் இணைந்து அரசியலை முன்னெடுக்க சுமந்திரன் வழி விட்டு விலக வேண்டும். அரசியல்சட்ட விவகாரம் என்பது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல, திம்பு கோரிக்கை நேரம் இயக்கங்கள், அறிஞர் குழுக்களை அமைத்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை கண்டன. அதில் சிவா பசுபதி போன்றோர் உதவினர் என நினைக்கிறேன். சுமந்திரனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் சட்டத்தை தனித்துறையாக எடுத்து படித்தவர்கள் எல்லாம் புலம்பெயர்தேசத்தில் இருக்கிறார்கள். தமிழ் நாடு, மலேசியா, சிங்கபூரிலும் உள்ளனர். ஆனால் எமக்கு இப்போ தேவை ஒரு நல்ல diplomat ஒரு நல்ல negotiator. இதை செய்பவர் கட்டாயம் எம்பியாக இருக்க வேண்டியதில்லை.
  12. ஆம். அதில் என்ன சந்தேகம். 😂 சுமந்திரனை விட... பத்தாயிரம் மடங்கு திறம். 🤣 இதற்குள் சுமந்திரன் வந்தால்.... நான் திரும்பவும் அரசியலில் குதிக்க வேண்டி வரும்.
  13. இரெண்டுமே காரணங்கள். மேலும் இரு காரணங்கள்: தன் அதி தீவிர அரசியல் இன நலனை பாதிப்பதை கஜன் காலம் தாழ்தியாவது உணர்ந்திருக்கலாம் (மாற்றம் எப்போதும் நல்லதே). தான் இயலுமைக்கு அப்பாலான, சுமக்க முடியாத ஒரு சுமையை வாண்டடாக தலையில் ஏற்றி கொண்டேன் என்பதை சிறி உணர்ந்திருக்கலாம். இதில் சுமந்திரன் இப்போதைக்கு தேவையில்லை என நினைக்கிறேன். அவரது personality அரசியலுக்கு சரிவராது. சாணாக்ஸ் உள்ளே வரவேண்டும்.
  14. அவர் சொல்வது எல்லாம் சரிதான் அவை கிழங்கு , சவர்க்காரம் போன்றவை பாவித்தல் பெரிய பிரச்சினை இல்லாத விடயங்கள் . ...... சிலதுக்கு அதுக்கும் அடிப்படையான இயந்திரம் சம்பந்தமான அறிவு இருக்க வேண்டும் . ஆனால் இன்றைய நவீன 2010/2012 க்கு பின் வந்த வாகனங்களுக்கு எலக்ட்ரிக் வயர்கள் கழட்டுதல் போன்றவை பெரிய சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுடும் ...... கார் கம்பெனிகள் மற்றும் அதததுக்குரிய கராஜ்கலில்தான் அவைகளைக் கையாளக்கூடிய விசேஷமான உபகரணங்கள் இருக்கும் .......அவர்கள் என்ன பிழை என்று பார்க்கிறதுக்கே 300 ஈரோ வரை எடுப்பார்கள் . ......செய்யிறதுக்கு அல்ல .......இது வியாபார உலகம்..... அப்படித்தான் போகும் . .......! மக்களுக்கு சம்பளத்தைக் குடுத்து அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையில் ஆசைகளை ஏற்படுத்தி தொழிற்துறை , வைத்தியத்துறை ,ஆடைகள், சப்பாத்துக்கள் போன்றவை மற்றும் பல துறைகள் எல்லாம் சிறிது சிறிதாக பணத்தை சுரண்டி சுரண்டி எடுத்துக் கொள்வார்கள் . .......நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும் ஆனால் அதுவும் முடியாது எமக்கு ஆடம்பரங்களை மோகிக்கும் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்கள் . ...... பேசாமல் வாரியார் பிரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு போகவேண்டியதுதான் . ........!
  15. அதுதானே... புத்திசாலி மனுசன். 😂 நம்ம, திராவிட உடன்பிறப்புகளை பார்த்து பழகியிருப்பாரோ.... 🤣
  16. ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது என தெரிந்தால் அவனுக்கு தினசரி மரணம் தான். இந்த வகையில் நான் நேசிக்கும் அந்த இயற்கையை ஆகாயம் நோக்கி இரு கரம் கூப்பி வணங்குகின்றேன்.🙏
  17. உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம். இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋
  18. மனுநீதிச் சோழன் மகனையே தேரால் ஏற்றிக் கொல்ல உத்தரவிட்டார் என்று இல்லாத பொல்லாத கதைளை எங்களுக்கு சொல்லி எங்கள் மனதுகளை சிறுவயதிலேயே மாற்றிவிட்டார்கள். ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் போல நாங்கள் வளர்ந்திருக்கவேண்டும்.......... அந்தச் சிலையை கடலுக்குள் தாட்டுவிடலாம்............................😌.
  19. என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே. இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன. பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............
  20. "விவசாயி" இலங்கையில் உடவலவ நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசமாக இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு விவசாய நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான நீர் ஆதாரமாக இந்த நீர்த்தேக்கம் உள்ளது. கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தான் இரத்தினபுரி ஆகும். இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை இன்று அங்கு குறைந்து வருகிறது. ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் பாடசாலைகளையும் பிரசித்திபெற்ற சிவன் கோவில், மற்றும் ஜும்மா மசூதி அங்கு காணப்படுகிறது. இங்கு விவசாய குடும்பத்தில் பிறந்த ரமேஷ் என்ற இளைஞன் வாழ்ந்துவந்தான். உயர் வகுப்புவரை இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றாலும், அதன் பின் உயர் கல்வியை தொடராமல், தந்தையின் விவசாயத்தில் முழுநேரம் கவனம் செலுத்தினான். அவன் எளிய விவசாயியாக தொடக்கத்தில் இருந்தாலும், தனது நிலத்திற்கான அர்ப்பணிப்பிற்காகவும், தனது பயிர்களின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் அவன் வாழ்ந்த கிராமம் முழுவதும் நன்கு அறியப்பட்டான். என்றாலும் அவனுக்குள் ஒரு குறை. தனது பாடசாலையில் படித்த சக மாணவியும் அந்த கிராமத்து குயவனின் மகள் மீரா, அவன் பாடசாலையில் படிக்கும் மட்டும் மிக அன்னியோன்னியமாக அவனுடன் நெருங்கி பழகியவள், உயர்வகுப்புக்கு பின்பு பல்கலைக்கழகம் புகுந்ததும், ரமேஷ் பல்கலைக்கழகத்தை நிராகரித்து, தந்தையின் பரம்பரை விவசாயத்துக்கு போனதும் மெல்ல மெல்ல விலகியது அவனுக்கு மிக கவலையை கொடுத்தது. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கை உணர்வு தான் காதல். அதில் ஈடு கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? என்றாலும் அவனுக்கு இன்று வெறுப்பு வெறுப்பாக உள்ளது. நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள அந்த மீராவை, அவள் இன்று தூர விலகி போனாலும், அவனால் மறக்கமுடியவில்லை. பொதுவாக காதல் தோல்வி அடைந்தாலோ அல்லது காதலி இடையில் விலகிப் போனாலோ நாம் அழுது வடிப்போம், மன அழுத்தத்தில் மௌனமாவோம், குடி உள்ளிட்ட போதைகளில் ஈடுபடுவோம் ... இப்படி எத்தனை எத்தனையோ, ஆனால் ரமேஷ் இவைகளில் இருந்து வேறுபட்டவன். ஒரு பெண்ணுடன் நீங்கள் ரசித்து உரையாடி உங்களை மறக்க அவளின் அழகு தான் பணப்பை விட முதலில் நிற்கிறது என்பதே உண்மை. அழகு என்பது ஒவ்வொரு பெண்ணும் அணியும் முகமூடி. அழகு என்பது காதலுக்கும் நமக்கும் இடையில் தோன்றும் மூடுபனி என்பதை உணர்ந்த அவன், எப்படி அவன் மீராவிடம் முழுக்கவனம் கொண்டு காதலித்தானோ, அதைவிட பலமடங்குடன் சூரியன் தினம் தினம் முத்தமிடும் வயல்களைத் காதலிக்கத் தொடங்கினான். சில ஆண்டுகள் கழிய, ரமேஷ் விவசாயத்தில் பெரும் முன்னேற்றம் கண்டு, இன்று அந்த கிராமத்தில் இளம் தலைவர்களில் ஒரு பெரும்புள்ளியாக பண்பிலும் செல்வத்திலும் உயர்ந்து, சில விவசாயத்துடன் தொர்புடைய தொழிற்சாலைகளின் அதிபதியாகவும் இருந்தான். என்றாலும் அவன் தன்னை விவசாயி என்று சொல்வதிலேயே பெருமையடைந்தான். ஒரு நாள், பருவமழை இயற்கையை பச்சை நிறத்தில் வர்ணம் பூசும்போது, தன்னிடம் கார் இப்ப இருந்த பொழுதிலும், எந்தவித பெருமையும் இல்லாமல், மாட்டுவண்டி ஒன்றில் ரமேஷ் தனது வயலுக்கு கிராமத்து குயவனின் மகள் மீராவின் வீட்டை கடந்து போனான். அவன் மனதில் இன்றும் மீரா ஒரு மூலையில் இருந்துகொண்டுதான் இருந்தாள். ஒவ்வொரு காதல் நினைவும் விசேடமானதுதான் ... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பதட்டம், உணர்ச்சிப் பெருக்கு .. மறக்க முடியாத பசுமையான நினைவுகளே! கிராமத்துப் பாதைகளை அலங்கரித்த மணம் கமழும் மலர்களைப் போல அவளது கதிரியக்கச் சிரிப்பு வசீகரமாக அன்று அவனுக்கு இருந்தாலும், இன்றும் அவன் அந்த முதல் காதலை மறக்க முடியாவிட்டாலும், அவளின் பிரிவுதான், அது கொடுத்த வைராக்கியம் தான் இன்று தன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்ததை அவன் எப்படி மறப்பான்? "உன் முதல் பார்வையே என்னை முட்டாள் ஆக்கியதை இன்றுவரை உணர்கிறேன் ..., உன்னை நினைத்து சிரிக்கிறேன் உன் கடைசி பேச்சு என் மூளையில் நீங்காத அழிக்க முடியாத கல்வெட்டு வாசகம் ... அதுதான் நான் யார் என்று எனக்கு உணர்த்திய வாசகம்!" அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். "அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்" அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும், பசியமரலையையும் களைந்தெறிவைத்து போல மீராவை ஏறிய ரமேஷ் ஆசைப்பட்டாலும், அவனால் முழுமையாக ஏறிய முடியவில்லை. அவன் அவளின் வீட்டை கடக்கும் பொழுது, அவனது கண் அவனை அறியாமலே அவளது வீட்டை நோட்டமிட்டது. அவள் அங்கு முற்றத்தில் தந்தையுடன் எதோ கதைத்துக்கொண்டு நின்றாள். "வேய் எனத் திரண்ட தோள், வெறி கமழ் வணர் ஐம்பால், மா வென்ற மட நோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளி இழை இமைப்ப, கொடி என, மின் என, அணங்கு என, யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்கண் கண் கவர்பு ஒருங்கு ஓட, " மூங்கீலென திரண்ட தோளினையும். மணத்தால் வெறியூட்டும், வளர்ந்த, ஐம்பால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலையும், மான் பார்வையை வென்ற மருண்ட பார்வையையும். மயில் போன்ற சாயலையும் ,அழகிய சிலம்பில் உள்ளிருக்கும் மணிகளால் ஆன கலங்களை உடைய, நடக்கும்போது ஒளி வீசி இமைக்கும் அணிகலன்களையும் . கொடியா, மின்னலா, அணங்கா என்று எண்ணும்படித் கண நேரத்தில் யாதென்றே தெரியாத அந்த மெல்லிய இடையை அவன் கண்கள் எந்த வெட்கமும் இன்றி நாடிச் சென்றன. 'ஐயா கொஞ்சம் நில்லுங்கள். என்று மீராவின் அப்பா கூப்பிட்டுக் கொண்டு படலைக்கு வெளியே வருவதைக் கண்டான். 'மீரா பட்டம் பெற்றுவிட்டாள், வேலை தான் கிடைக்கவில்லை. உங்க தொழிற்சாலையில் பயிற்சி முகாமையாளர் பதவி வெற்றிடம் என்று அறிந்தேன். அதை ... ' என முடிக்கமுடியாமல் முடித்தார். கொஞ்சம் தூர முற்றத்தில் நின்ற மீராவை, ரமேஷ் வேலிக்கூடாக பார்த்தான். அவள் தலை குனிந்தபடி, கால் விரலால் எதோ மண்ணில் எழுதிக்கொண்டு இருந்தாள். கொஞ்சம் உற்றுப்பார்த்தான். ஆங்கிலத்தில் வெரி சாரி என்று அது இருந்தது. ரமேஷ் கொஞ்சம் உரத்து, மீராவின் காதில் விழக்கூடியதாக, 'என் தொழிற்சாலைகள் விவசாய உற்பத்தியையும், விவசாயத்துக்கு தேவையானவற்றையும் அடிப்படையாக கொண்டவை. உங்கள் மகள் பட்டதாரி, இதற்கு உடன்படுவாரா ?' என்று கேட்டுக்கொண்டு 'அவர் சரி என்றாள், வரும் திங்கட் கிழமை காலை பொது முகாமையாளரை விண்ணப்ப பத்திரத்துடன் அலுவலகத்தில், நேர்முகப்பரீட்சைக்கு சந்திக்கலாம்' என்று கூறிவிட்டு, மீராவின் அப்பா அதற்கு பதில் சொல்லமுன்பு ரமேஷ் புறப்பட்டுவிட்டான். மீரா தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு, கொஞ்சம் முந்தியே ரமேஷின் தொழிற்சாலைக்கு போனாள். அங்கு ரமேஷ் இல்லை. பொது முகாமையாளர் அவளின் விண்ணப்பத்தை பெற்றுவிட்டு, கொஞ்சம் காத்திருப்பு அறையில் இருக்கும்படி கூறினார். கடும் வரட்சி காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து, உடவளவ நீர்த்தேக்கத்தின் கீழ் அறுவடை செய்யப்பட்ட 65,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், ரமேஷ் விவசாயிகளுக்கு தலைமை வகுத்து, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு இரண்டு தவணை நீருக்காக சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து 27 மில்லியன் கனமீற்றர் நீரை 10 நாட்களுக்கு பெற்றுக்கொள்ள ஒரு ஏற்பாடு செய்யும் முகமாக பேச்சுவார்த்தை ஒன்றுக்கு போய் இருந்தான். என்றாலும், தற்போது 87 மில்லியன் கனமீற்றராக உள்ள சமனலேவாவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 60 மில்லியன் கனமீட்டராகக் குறைவடைந்தால், இலங்கை மின்சார சபையானது தென் மாகாணத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என்று கொடுக்க மறுத்து, அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இதனால் கடும் கோபத்துடன் மதியம் அளவில் அலுவலகம் திரும்பினான். ரமேஷ் கொஞ்சம் அவசரமாகவும் கோபத்துடனும் தனது அலுவலகத்துக்குள் நுழைவதை கண்ட மீரா, கொஞ்சம் பதற்றத்துடன் எழும்பி நின்று கவனித்தாள். அவன் அவளை ஏறிட்டு கூட பார்க்கவில்லை. அவளின் அலங்காரம், அழகு அவனுக்கு இப்ப ஒரு பொருட்டு அல்ல. அவன் எண்ணம் எல்லாம் நீர் பற்றாக்குறையினால் அழிந்து வரும் நெற் கதிர்களே! இன்னும் காத்து இருப்பதா, இல்லை பேசாமல் போவதா என்று மீராவுக்கு புரியவில்லை. அவள் எழும்பிய படியே நின்றுவிட்டாள். திரும்பி மீண்டும் இருக்கவில்லை. ஒரு பத்து நிமிடத்தின் பின், அவள் இனி பிரயோசனம் இல்லை என்று மனதில் நினைத்தபடி, வீட்டிற்கு திரும்பி போக ஓர் இரு அடி எடுத்து வைத்தாள். அப்பொழுது பொது முகாமையாளரிடம் இருந்து 'மீரா, நீங்க உள்ளே வரலாம்' என்ற சத்தம் கேட்டது. அவள் உள்ளே வந்ததும், பொது முகாமையாளர், 'உங்களுக்கு தேவையான தகுதி இருக்கிறது, எமது முதலாளியும் சம்மதித்துவிட்டார். நாளையில் இருந்து ஒரு ஆண்டுக்கு பயிற்சி, அது வெற்றிகரமாக முடித்தால், பணி நிரந்தரமாகும். சம்பளமும் மேலும் அதிகரிக்கும். உங்களுக்கு தேவையான பயிற்சியை பெரும்பாலும் எம் முதலாளி ரமேஷ் தருவார்' என்று சொல்லி, உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று விடைகொடுத்தார். ரமேஸுக்கு தனது நன்றியை கூற மீரா விரும்பினாலும், ரமேஷ் தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அவன் ஒரு விவசாயியாக, ஓரளவு நீரை வழங்கி, அழியும் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 11 குளங்களில் இருந்து ஒரு பகுதி வெலி ஓயா அணையின் ஊடாக உடவலவை நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்ல, மொனராகலை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தான். அடுத்த நாள், மீரா தனது பயிற்சியை தொடங்க அலுவலகம் வந்தாள் ரமேஷ் அவளுக்கு அடிப்படை பயிற்சிக்கான விளக்கத்தை கொடுத்ததுடன், நேரடியாக விவசாயம், மற்றும் அதனுடன் தொடர்புடையனவற்றை செய்முறையில் அறிவது அவசியம் என்பதை கோடிட்டு காட்டி, வயலில் அவளை கொஞ்ச மாதத்துக்கு பயிற்சி எடுக்க அனுப்பினான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தைப்பற்றி அறியத் தொடங்க, அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடத் தொடங்கினர், அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் பரந்த பரப்பிற்கு கீழே விவாதித்தனர். அதுமட்டும் அல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமான நிலையில், மீரா நிலத்தின் மீதான தனது அன்பைப் பகிர்ந்து கொண்டதை ரமேஷ் கண்டுபிடித்தார். அவள் அடிக்கடி அவனுடன் வயல்களுக்குச் சென்றாள், அவளுடைய வேகமான விரல்கள் பழுத்த காய்கறிகளைப் பறிக்கவும், செடிகளை மென்மையாகப் பராமரிக்கவும் உதவின. வயல்வெளிகளுக்கும் மண்ணின் நறுமணத்துக்கும் நடுவே அவர்களது காதல் மீண்டும் மலர்ந்து, கிராமத்துச் சுவர்களில் ஏறிச் செல்லும் கொடிகள் போல இதயத்தைப் பின்னிப் பிணைந்தது. நல்ல உள்ளம் காதலின் பூஞ்சோலை; அன்பின் வளமான வயல்வெளி. இவைதாம் இதயத்தின் அழகு. இவை இல்லாத இதயம் வறண்ட பாலை நிலம்தான் என்பதை அவள் உணர்ந்து, தான் முன்பு விட்ட தவறுக்கு ரமேஷ் இடம் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்! "சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு" "தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி தவறுகள் குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  21. ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. நான் அமெரிக்காவின் அதிபராக பெருமையுடன் பதவியேற்கும் நாளான 2025 ஜனவரி 25, க்கு முன்பாக காசாவில் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் மத்திய கிழக்கும், மனிதகுலத்துக்கு எதிராக இத்தகையை அட்டூழியங்களை செய்து கொண்டிருப்பவர்களும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணமானவர்கள் மீது அமெரிக்க வரலாற்றிலேயே யாரும் செய்யாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். உடனடியாக பிணைக் கைதிகளை விடுவியுங்கள். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் நாட்டில் சுமார் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவர்கள் தங்கியிருக்கும் காசாவில் தீவிர தாக்குதலை நடத்திவருகிறது. இதில், இதுவரை 43,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. அவர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று தெரியப்படுத்தப்படவில்லை. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஹமாஸுக்கு-ட்ரம்ப்-கடும்-எச்சரிக்கை/50-348159
  22. நான் இவை பற்றி எதுவும் இந்த திரியில் எழுதவில்லை. நான் கற்பனை உலகில் வாழ்கிறேன் என்றீர்கள்… ஓம்…அண்ணன் சீமானை போல என்று சொன்னேன். அவ்வளவுதான் 😎
  23. கற்பனையில் சந்தோசப்படுவதும் மனிதனின் இயல்புதானே. உங்கள் கற்பனை உலகம் தொடர என் வாழ்த்துகள். 😂
  24. அவர்கள் மனம் புண்படும் என்பதால் மெளனமாக இருக்க சொல்லவில்லை. பரஸ்பரம் குற்றசாட்டுகள் கூறும் கணவனும் மனைவியிம், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்…. இனி பழசை கிளறாமல்…எதிர் நோக்கி ஒற்றுமையாக சிந்திப்போம் என முடிவுக்கு வருவது உண்டல்லவா? அப்படி ஒரு கோரிக்கைதான் இதுவும். எனது, உங்கள் அரசியல் நிலைப்பாட்டில் அதிக வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் உங்களை போல், அனுர காட்டும் இலங்கை தேசியத்தில் கரைவதில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக தமிழர் காணி உரிமையை பெறாத எந்த தீர்வையும் என்னால் - என் இறுதிநாள் வரை ஒரு நல்ல தீர்வு என ஏற்க முடியாது. எனது மனநிலையில்தான் வடக்கு கிழக்கு தமிழ் வாக்களர்களில் பெரும்பான்மையானோர் உளர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. அந்த மக்கள் இந்த நிலைப்பாட்டை விட்டு விலகும் வரை - நான் அதை ஆதரித்தபடியே இருப்பேன். அவர்களும் நிலையை மாற்றினால், அதன் பின் அதை பற்றி கதைக்க எனக்கு ஏதும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள தொடர்புகள் சகலதையும் முடித்து கொண்டு, காலியிலோ, உனவட்டுனவிலோ ஒரு கடற்கரைப்பக்கமாக ஒதுங்கி விடுவேன்🤣. இதுதான் நமக்கிடையேயான ஒரே வேறுபாடு என நினைக்கிறேன். புலி வால்களோடு எவ்வளவு கோபம் வந்தாலும், அதற்காக தமிழ் தேசியத்தை தூக்கி எறிய தேவையில்லை, என்பது என் நிலைப்பாடு.
  25. மக்களிடம் தோற்றுப்போனவர்கள் மக்களின் தெரிவை கேளிக்கை செய்கின்றார்கள். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா முடங்கவேண்டும் என்பதே பலரின் ஆவல், எதிர்பார்ப்பாக உள்ளது போலும்.
  26. இந்த மொக்குதனத்தை புலம்பெயர் அமைக்புகள் கைவிடுவதோடு, கஜேசையும் கைவிட வலியுறுத்த வேண்டும். இப்போ கூடாரம் காலியாகி அனுரா பக்கம் போவதை கண்டதும் புலம்பெயர் தமிழர்+கஜே தம் நிலைப்பாட்டில் இருந்து இறங்க தயாராகி விட்டனர் என நினைக்கிறேன்.
  27. இதை எப்படி கோசான் சொல்லுவார் ..நீங்கள் எப்படி அதை ஆதரிக்கிறீர்கள்?....யுத்தம் நடக்கும் போது நிதியுதவி முதல் கொண்டு அனைத்து உதவிகளும் புலிகளுக்கு செய்து விட்டு ,சகல நாடுகளிலும் உள்ள பாராளுமன்றம் போய் நின்று நாங்கள் தான் புலிகள் ,புலிகள் தான் நாங்கள் என்று கத்தி விட்டு எல்லாம் முடிந்த பின் நாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்றால் அது எப்படி சரியாகும்? முதலாவது பந்தி சரியாய்த் தான் எழுதி இருக்கிறீர்கள்
  28. அவரும் தனது தவறுகளை உணர்ந்திருப்பார் என்றே நினைக்கிறேன். மீண்டும் எல்லோரும் ஒன்றாக கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நன்றி சகோ. (பச்சை கைவசம் இல்லை)
  29. வைக்கோ க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து கேக்க‌ வில்லையா இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாம் என்று ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌ துணை போன‌ திமுக்கா கூட‌ எந்த‌ த‌மிழ‌ன் கூட்ட‌னி வைப்பான் உங்க‌ளுக்கு வெக்க‌ம் மான‌ம் ரோச‌ம் சூடு சுர‌னை இல்லையா என்று ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் பேசின‌ ந‌ப‌ர் தான் வைக்கோ இப்ப‌டி த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் பிழைப்பு வாதிக‌ளை ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு தாத்தா😁😁😁😁😁😁😁😁😁😁.....................................
  30. நோ நோ நோ,..... புலம்பெயர்ஸ் டமில் புத்திய சீவினதுகள் பலரும் தற்போது சுமந்திரன் வேணும் எண்டு நிக்கினம். நீங்கள் என்ன விசர்க் கத கதைக்கிறியள்,..... அவங்கள் வேண்டாம் எண்டேக்க வரக் கூடாது. வேணும் எண்டேக்க வரவேணும் கண்டியளோ,....🤣 அதுக்குள்ள ஒரு கூக்குரல் வருகுது புலம்பெயர் டமிலருக்குள்ளே சட்டத்துறையில் கலக்கிக் குடிச்ச ஆட்கள் பலர் இருக்கினமாம் எண்டு. கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத புலம்பெயர்ஸ் முட்டாள் டமில் தேசியவாதிகளைக் கொண்டு, வானம் ஏறி வைகுண்டம் போகப் போற கனவை என்ன எண்டு சொல்லுறது ? போராட்ட ஆரம்ப காலம் தொடக்கம், புத்திசீவிகளை ஒதுக்கியும், கொலை செய்தும் வந்ததன் பலனை அறுவடை செய்யும் நாட்கள் நெருங்கி வருகின்றன என்பதைப் பலரும் உணரத் தலைப்படுகின்றனர். காலத்தே பயிர் செய் என்று காரணம் இன்றிக் கூறவில்லையே,....... 😏
  31. அது எல்லாம் சிங்கல பிரதேசத்தில் ஆரம்பமானது. யாழ்பாணத்திலும் யாழ்களத்திலும் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் பலமிக்க நிலையில் உள்ளது அப்படி நடைபெற அனுமதிக்காது
  32. இவ்வளவு காலமும்... ஒலி பெருக்கி, இருந்தது ஆச்சரியமாக உள்ளது.
  33. எங்கே, எந்த துறையில் கல்லா நிதி பட்டம் எடுத்தார் என தெரியவில்லை. அருஸ் இவர் புனைபெயர் என நினைக்கிறேன். போர்க் காலத்தில்….வேல்சில் இருந்து அரூஸ் என்ற பீடிகையோடு…. ஏதோ இரணமடு பண்டில் ஏறி நிண்டு பார்த்தவர் போல இக்பால் அத்தாஸ் முதல் கிழமை சண்டே டைம்சில் எழுதியதை + தன் கற்பனை சேர்த்து அள்ளி விட்ட வாய்வாளர் இவர்.
  34. ரஜனி இறப்பின் பின் உருட்டபடகூடிய கம்பி கட்டும் கதைகள்…. ஒரு முன்னோட்டம்….: முள்ளும் மலரும் படத்தை என்னை ரிமேக் பண்ண சொல்லி ரஜனி கெஞ்சினார்… பாஷா படத்தில் அவர் வேடத்தில் நான் நடித்திருந்தால் இன்னும் நன்றாக போயிருக்கும் என்றார்…. என்னை சந்தித்த பின்பே ரஜனியை தமிழக மக்கள் அறிந்துகொண்டனர்… ரஜனி எனக்கு ஓரங்குட்டான் ஊத்தப்பம் சுட்டு தந்தார்…. ஒரங்குட்டான் ஊத்தப்பத்தில் …நான் முடியை நீக்கி விட்டு சாப்பிட்டதை ரவிந்திரன் துரைசாமி குறிபெடுத்து ரஜனியிடம் சொன்னார். என் போயஸ்கார்டன் வீடு, பண்ணை வீடு, சகல சொத்துக்களையும் இனி நீங்கள்தான் உங்கள் சொத்து போல நிர்வகிக்க வேண்டும் என சாகும் தறுவாயில் ரஜனி எனக்கு வாய்ஸ்மெயில் வைத்தார்.
  35. முதலில் அநுர அரசு பாலஸ்தீன பிரதேசத்தில் குடியேறிய அரபிக்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஜேவிபியைப் போல ஜனநாயக வழிக்கு வருமாறு கோரவேண்டும்.
  36. செந்தமிழன் சீமான் அண்ணாவுடன் என்ன பேசினார் என்பதை ரஜனி சார் தாம் மரணமடைய முன்னரே தெரிவித்தால் நல்லது. ஒரு பத்து நிமிட சந்திப்பிலேயே பல விடயங்களைச் சாதித்த சீமான் அண்ணா இரண்டு மணிநேரச் சந்திப்பில் பற்பல விடயங்களைச் சாதித்து இருப்பார். அதனை செந்தமிழன் சீமான் அண்ணா ரஜனி சார் இல்லாத காலங்களில் கதைகளாக சொல்கின்றபோது மக்கள் இது புல்டா போண்டா கஞ்சா கப்ஸா கதையெண்டு சொல்லக்கூடாது. ரஜனி சார் இப்பவே சொன்னால் நல்லது. எனக்கு செந்தமிழன் சீமான் அண்ணவை நினைக்கும்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசெல்லம் தான் நினைவில் வருவார்கள். 1400 வருடங்களுக்கு முன்னரே நாயகம் அவர்கள் விண்வெளிக்கு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான ஒரு வாகனத்தில் விண்வெளிப் பயணம் செயததாகச் சொல்லியிருக்கின்றார்கள். பவம் சஹாபாக்கள்!😂
  37. இந்தக் காய்வாளர்கள்..தொல்லை பெரும் தொல்லையப்பா...பிரியாணிக்கடை விளம்பரம் மாதிரி
  38. 👍உங்கள் சேவைக்கு நன்றிகள் அவர்களின் கோபம் நியாயமானது தானே ...நீங்கள் மட்டும் சிறிலங்கன் மெயின் லான்ட் கொள்ளோ என சொல்லுவியள் .... அவர்களை ஐலண்டர் என சொன்ன?😅
  39. மாவட்ட அதிகார சபையை விரிவு படுத்துவார்கள் மாகாணசபையை இல்லாது செய்வார்கள் ...மாகாண சபை தமிழரின் வீகிதாசாரம் அதிக மாக இருப்பதை உலகுக்குக்கு உணர்த்துகின்றது ஆகவே மாவட்ட அதிகாரசபைக்கு அதிகாரங்களை கொடுக்க முன் வருவார்கள் ஜெ.ஆர் உருவாக்க்கியது...தேர்தல்களும் மாவட்ட அடிப்படையில் இருப்பதால் ...யாழ் மாவட்டம் ,மட்டக்கிளப்பு மாவட்டம்..மட்டும் தமிழ் மாவட்டங்களாக இருக்கும்.... திருகோணமலை மாவட்டம் 75 வீத சிங்கள மாவட்டம் வட‌க்கையும் கிழக்கையும் தமிழர்கள் உரிமை கோர முடியாது....வன்னி ,முல்லைதீவு பல்லின சமுக மாவட்டம் ,மன்னார் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மாவட்டம்.... தமிழருக்கு ஒர் இணக்கப்பட்ட பரந்த நிலப்பரப்பு தொடர்இல்லாமல் பண்ணுவதில் சிங்களம் வெற்றியடைந்து கொண்டே வருக்கிறது ...இந்த விடயத்தில் இஸ்ரேலுக்கு இணையானவ்ர்கள் சிங்களவர்கள் ...
  40. நீங்கள் கூறியது உண்மையானால், நடைமுறை சாத்தியமான தீர்வுகளைப் பற்றி பேசிய மென்போக்கு த்திழ் தேசியம் பேசிய அரசியல்வாதிகளை துரோகிகள் பட்டம் சூட்டி ஒதுக்கி விட்டு வரட்டு தேசியம் பேசிய சைக்கிள் தரப்பை புலம் பெயர் தேசியவாதிகள் ஆதரித்தது ஏன்? ஶ்ரீலங்காவில் கடும் போக்கு மகிந்த, கோட்டபாய போன்றோர் பதவிக்கு வருவதை விரும்பியது ஏன்? ஒப்பீட்டு ரீதியில் சற்றே மென்போக்கு கொண்ட, ஆனால் அநுரா போல் அல்லாமல் தமிழரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஶ்ரீலங்கா அரச தரப்புகளைக் கூட கடுமையாக எதிர்தத்துடன் கடும்போக்கு தரப்புகள் வந்து தமிழ் மக்களை அடக்குவதே தேசியத்துக்கு நல்லது என்று புலம் பெயர் தரப்புகள் விரும்பியது ஏன்? ( யாழில் கூட அது எழுதப்பட்டது ஞாபகம் உள்ளது.)
  41. இளைஞர்கள் அடிப்படை புரிதலின்றி உணர்ச்சிவசப்படும் செயல்பாடுகளில் இறங்குவது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் துன்பத்தையே தரும். இலங்கையில் விடுதலைபுலிகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது, அப்படியிருக்க புலிகள் சம்பந்தமான பதிவுகளை தனி மனிதர்கள் சமூக ஊடகங்களில் பதிவது நிச்சயமா சிங்கள நாட்டு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமே. ஏன் மனித உரிமைகளின் உச்சமென்று கருதப்படும் மேற்குநாடுகளில்கூட தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் புலிகளுக்காக நிதி சேர்ப்பது, ஆயுத போராட்டத்தை மீள் கட்டமைக்க முனைவது என்று யாரும் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமே. ஒவ்வொரு மாவீரர்நாள் தினத்திற்கும் இதுபோன்ற முகநூல் பதிவுகளால் இளைஞர்கள் சிங்கள புலனாய்வு பிரிவிடம் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது. மைத்திரி கோத்தபாய ஆட்சியில்கூட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து, மாவீரர்தின பதிவுக்காக கொழும்புக்கு நாலாம் மாடிக்கு விசாரணக்கு அழைத்ததும் நினைவில் உண்டு, அவர்கள் என்ன ஆனார்கள் தொடர்ந்து சிறையிலா அல்லது விடுதலை செய்யப்பட்டார்களா தெரியவில்லை, விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் சிங்கள புலனாய்வின் பூரண கண்காணிப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது உறுதி. மாவீரர்களை நினைவுகூர கட்டுப்பாடின்றி பொதுவெளியில் அனுமதி தந்தால் அனைவரும் அங்கே ஒன்று கூடுங்கள் அதைவிடுத்து அதை தனியான முறையில் பதிவுகளிட்டு சிங்கள சட்டத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். தனிமனித ரீதியில் ஆவேசப்பதிவுகளீட்டால் ஒரு அரசாங்கம் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும், தென்னிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு பதில் சொல்லவேண்டும், ஏன் அவர்கள் கட்சிக்குள்ளேயே குழப்ப,ம் வர வாய்ப்புண்டு. என்னதான் அநுர வந்தான் இனவாதம் இனி இல்லையென்று நாம் பேசிக்கொண்டாலும், இனவெறி சிங்களவனுக்கு நம்மை பிடிக்காது என்பதை எப்போதும் தெளிவாக மனதில் வைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இம்முறை சிங்கள கட்சி வென்றதால் யாழ் சகோதரர்களே என்று சமூக ஊடகங்களில் திடீர் பாசம் காட்டும் சிங்களவர் ஒருவேளை யாழில் என்பிபி ஒரு சீட் கூட வென்றிருக்காவிட்டால் நாம் எப்போதும் கொட்டிதான் அவனுக்கு.
  42. கார்ட்டூனின் ஆழமான அரசியல் சிந்தனை மற்றும் தர்க்க ரீதியான விளக்கம் கொடுக்கும்போது, நாம் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலைப் பொருத்தி, இங்குள்ள பல குறியீடுகளை நுணுக்கமாக ஆய்வு செய்யவேண்டும். இக்கார்ட்டூன் சிங்கள தேசியவாதம், சிங்கள சovinism, தமிழ் சமூகத்தின் பாதிப்பு, மற்றும் இந்தக் கருத்துக்களை முன்வைக்கும் அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகிறது. ### 1. **சிங்கள தேசியவாதம் மற்றும் சிங்கள சovinism:** முதன்மையாக, இந்த இரண்டு கருத்துக்களை வேறுபடுத்த வேண்டும். "சிங்கள தேசியவாதம்" என்பது பொதுவாக ஒரு இனத்துக்கு சொந்தமான கலாச்சார, மொழி மற்றும் பாரம்பரிய அடையாளங்களை உயர்த்திப் பேசும் ஒரு கலாச்சார இயக்கமாக இருக்கலாம். இது பெரும்பான்மை சிங்கள இனத்தின் உரிமைகளை முன்னிலைப்படுத்தும் அரசியல் அடிப்படையில் இயங்குகிறது. இது இலங்கையின் வரலாற்று பின்னணியில், குறிப்பாக 1948 சுதந்திரத்திற்கு பின்னர், பெரும்பான்மையாக உருவாகியபோது சிங்கள இனத்தின் அடையாளத்தை பாதுகாக்க ஒரு வழியாகத் தோன்றியது. ஆனால், "சிங்கள சovinism" என்பது இதைவிட மிகக் கடுமையானது. சovinism என்றால், இது ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் வன்மையான மேலாதிக்க எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள சovinism என்பது, சிங்கள இனத்தின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற இனங்கள், குறிப்பாக தமிழர்கள், இரண்டாம் வகுப்பினராக பார்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனை. கார்ட்டூனில், சிந்தனை மற்றும் பாவனையின் அளவில் சிங்கள தேசியவாதத்தின் பின்னாலேயே இந்த சovinism வேலை செய்கிறது என்பதை இச்சித்திரம் காட்டுகிறது. தர்க்கரீதியாக, இது ஒரு அடிப்படையான அரசியல் இயக்கத்தின் மாற்றி நிற்கும் ஆழமான சிந்தனைகளைக் காட்டுகிறது. சிங்கள தேசியவாதம், உண்மையில், பெரும்பான்மை சிங்கள இனத்தை மற்ற இனங்களின் மீது மேலடிக்கச் செய்வதற்கு ஒரு மூலமாக மாறிவிட்டது. இந்த சovinism-இன் உருவம் தன்னார்வம் போன்றதாகவும், தீய நோக்கங்களுடன் நடக்கின்றதாகவும் வெளிப்படுகிறது. ### 2. **அரசியல் சார்ந்த சித்திரவாதம்**: கார்ட்டூனில் உணவைச் சமர்ப்பிக்கும் சபையாளர் (waiter) பங்கும் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டும். சபையாளர், சிங்கள இனத்தின் அரசியல் சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போல சிங்கள தேசியவாதத்தைத் தட்டில் வைத்து சமர்ப்பிக்கிறார். இது அரசியல் நிலவரத்தை எளிதாக்கி தருகிறது – அரசாங்கம், தனது அதிகாரத்தின் மூலம், சிங்கள இன மேலாதிக்கத்தை விதிக்கின்றது. ஆனால் சிங்கள சovinism, சிங்கள தேசியவாதத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் தீவிர மற்றும் ஆபத்தான விசயம் என்பதை இதன் உருவத்தில் வெளிப்படுத்துகிறது. தர்க்கரீதியாக, சபையாளர் அரசியல் அதிகாரத்தின் சித்திரவாதியாகவும் (symbol) பார்க்கப்படலாம். அவர் ஒரு நடுநிலை முறைமை போன்றவராக இருப்பினும், அவர் சிங்கள இனத்தின் தேவைகளையே முக்கியமாகக் கவனிக்கிறார். இது அரசியல் மற்றும் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் எதார்த்த நிலையை வெளிப்படுத்துகிறது. ### 3. **தமிழரின் நிலை மற்றும் அடிமைப்படுத்தல்:** வலதுபுறத்தில் இருக்கும் பெண் (தமிழ் பெண்) ஒரு வாதவாதம் செய்யும் உருவாக்கமாக இருக்கிறார். அவர் சிங்கள சovinism மற்றும் தேசியவாதம் இரண்டு சந்தர்ப்பங்களாலும் கொடுக்கப்படும் கொடுமையால் அச்சமடைந்தவர். சிங்கள இனத்தின் தேசியவாதத்தை அவர் ஒரு நியாயமான கலாச்சார தேசியவாதமாக ஏற்கவேண்டிய சூழ்நிலையில், அதன் பின்னால் இருக்கும் சovinism அவரைக் கொடுமைப்படுத்துகின்றது. இது அவரின் மவுனத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமூகத்தின் அரசியல், சமுக, கலாச்சார உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுள்ளன, இப்பெணின் நிமிர்ந்திருக்கும் (அச்சமடைந்த) தோற்றம் அதை காட்டுகிறது. ### 4. **தற்கால அரசியல் விளைவுகள்:** தற்போது இலங்கை அரசியலில், சிங்கள தேசியவாதத்தின் அரசியல் விளைவுகள் தமிழ் மக்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் அடக்குகின்றன. அரசின் மதவாத மற்றும் இனவாத செயல்பாடுகள், தமிழ் மக்களின் அரசியல் நிலையை பலவீனமாக்குகின்றன. இது தமிழக மக்களைப் பற்றிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளிலும், இந்த சிங்கள தேசியவாதம் ஒரு முக்கியமான தடையாக அமைகிறது. தர்க்கரீதியாக, இது இந்தியாவில், தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளின் ஆதரவுகளுக்கும் மாற்றான பலரின் சிந்தனைக்கும் இணையாக இருக்கிறது. தமிழரின் அடிப்படை உரிமைகளை ஒழிக்கவும், இன அடிப்படையில் கொடுமையை வளர்க்கவும் சிங்கள சovinism பயன்படுத்தப்படுகிறது. ### 5. **முடிவுரை:** இந்த கார்ட்டூன் இலங்கையின் தற்கால அரசியல் நிலைமைகளின் ஒரு தர்க்கரீதியான பிரதிபலிப்பாக இருக்கிறது. சிங்கள தேசியவாதம், இப்போது தமிழ் சமூகத்திற்கு ஒரு சான்றான துரோகமாக இருப்பது மட்டுமின்றி, அதன் பின்னால் உள்ள சிங்கள சovinism, பெரும்பான்மையினரின் அடக்குமுறைகளை உணர்த்துகின்றது. See lesshttps://www.facebook.com/photo/?fbid=122120845610460178&set=a.122099946026460178

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.