Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87990Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்10Points33600Posts -
satan
கருத்துக்கள உறவுகள்7Points10100Posts -
குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்6Points46783Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/04/25 in Posts
-
பதியம்
3 pointsசுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி உள்ளேன், இது 10 நாள்களுக்கு முன்னர் செய்யப்பட்டது, இந்த இலை அரும்பு நிலையில் 1 CM அளவில் இருந்தது, தற்போது 4-5 CM வரை வளர்ந்துள்ளது, இரவு நேரத்தில் இலேசாக வாடுகிறது (ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆரம்ப நிலையில் இன்னமும் பூரணமாக குணமாகத நிலையில் உள்ளது) 2 அல்லது 3 வாரத்தில் சரியாகிவிடும் என கருதுகிறேன், தற்போது சிட்னியில் கோடைகாலம். கத்தரியினை சுண்டங்காய் மரத்தில் ஒட்டினால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் 3 - 5 வருடங்கள் வரை கத்தரி பலன் தரும். முன்னர் 45 பாகையில் ஒரு வெட்டு கத்தரியிலும் அதே போல் சுண்டைங்காய் மரத்திலும் அதற்கேற்ப வெட்டி இணைத்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது 'V' வெட்டு மூலம் பொருத்தியுள்ளேன், ஒட்டும் பகுதியினை துணியினால் முன்னர் சுற்றிய நினைவுள்ளது தற்போது காற்று புகாத cling wrap (cling wrap தான்) போன்ற ஒட்டுக்குரிய நாடா பாவித்துள்ளேன். நேரடியான சூரிய வெளிச்சத்தினை இம்முறை தவிர்த்துள்ளேன், மற்றும் முன்னர் பிளாஸ்ரிக் இனால் மூடி கட்டியிருந்தேன் தற்போது வலவன் இணைத்த காணொளிகளில் குறிப்பிடும் கொக்க கோலா போத்தில் பாவித்துள்ளேன்.3 points
-
பதியம்
2 pointsநானும் இப்படி பலவித முயற்சி செய்வதுண்டு . கருவேப்பிலை தடியில் root பவுடர் பூசி , மாங்கொட்டையை பிரித்து விதையை பொலித்தீன் பையில் கட்டி எல்லாம் செய்வதுண்டு .......வரும் நாலு இலை .....அதைத்தொடர்ந்து குளிரும் வந்து விடும் . ...... எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......! 😁2 points
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
கப்பித்தான், அழகு குணசீலன் புள்ளையானின் அபிமானி! அவர் அப்படி இப்படி எழுதினாலும், சுமந்திரன் விசயத்தில தெளிவாத்தானே இருக்கார். நீங்கள் சுமந்திரன் அபிமானி என்பதால் பொங்குகின்றதாக்கும்!😁2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 pointsஇந்த ஏஞ்சல் நீர்வீழ்ச்சி... நிலவு உருகி அருவியாக கொட்டுவது போன்ற வியப்பை ஏற்படுத்தும். இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ளது. 2425 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் சில நாட்களில் இத்தகைய அழகோவியத்தை காணலாம்.2 points
-
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
2 pointsகடந்த பல தசாப்தங்களாக தமிழரின் ஏக பிரதிநிதியாக இருந்த சுமந்திரன் அப்போது எல்லாம் தமிழரின் அபிலாசைகளை சிங்கள அரசுடன் பேசி தீர்க்கக் கூடிய சந்தர்பங்கள் பல இருந்தும் அப்போதெல்லாம் பேச்சுவார்ததைகளில் இருந்து வெளியேறி பொறுப்பற்ற தனமாக நடந்து மக்களின் பாரிய இழப்புகளுக்கு காரணமாக இருந்து விட்டு இப்போது தோல்வியடைந்த பின்னர் இவ்வாறு அறிக்கை இடுவது வடி கட்டிய முட்டாள்த்தனம். காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத சுமந்திரன்.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சம்பந்தர் இருக்கும் காலத்தில், அவர் தவறு செய்தாலும் அவரின் மூப்பு காரணமாக அவரை எதிர்க்காமல் மதிப்பளித்தனர் மற்றைய உறுப்பினர். அதனை அவர் தனது திறமை, மற்றவர்களின் இயலாத்தன்மை என தவறாக விளங்கிக்கொண்டார். அதனாலேயே சுமந்திரனுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினார் சம்பந்தன். சுமந்திரன் விடும் தவறுகளை மற்றையோர் சுட்டிக்காட்டியபோதும் அவர் தன் அதிகார தொனியை பயன்படுத்தி கடிவாளத்தை சுமந்திரனுக்கு கொடுத்தார். இதனால் இப்போதும் அவர்களால் சுமந்திரனை அடக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை. சம்பந்தர் காலத்திலும், அதிகாரம் அவர் கையை மீறிப்போயிருந்தது. வருந்துவதை விட அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பதவிகள் யாவருக்கும் வழங்கப்படவேண்டும், எல்லோரையும் சரிசமமாக மதிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் எப்படி ஒருவர் பேச்சாளர் பதவியை வகிக்க முடியும்? முன்னைய பேச்சாளர் எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்? கட்சி யாப்பின்படி ஒருவர் எத்தனை ஆண்டுகள் பதவி வகிக்கலாம்? ஏன் அந்த கொள்கை பின்பற்றப்படவில்லை? இந்தப்பேச்சாளர் பதவியை தன்வசப்படுத்தி, கட்சிக்கு, இனத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவது, அதே மற்றவர்கள் கருத்து கூறினால், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என நடவடிக்கை எடுப்பது எந்த விதத்தில் நிஞாயமானது? இவரை இந்தபதவியிலிருந்து அகற்ற வேண்டும். குரங்கின் கைபூமாலை போன்றது இவர் கட்சியில் எந்தப்பேச்சாளர் பதவியையும் வகிப்பது. அவர் தனது பதவியை துஸ்ப்பிரயோகம், செய்து கட்சிக்கு அபகீர்த்தியை, முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார். கட்சியை தன் சொத்துபோல் ஆள்கிறார். கட்சி யாப்பின்படி அவரை விலத்த வேண்டும். இதிலிருந்தே இவருக்கு சட்டம் தெரியாது என்பது புலனாகிறது. சட்டம் தெரிந்திருந்தால்; அதற்கு மதிப்பளிக்க தெரிந்திருக்கும். அவ்வாறான ஒருவர், கொள்கைகளை உதாசீனம் செய்து கொண்டு, நீதிமன்றத்திற்கு போவேன் என்று உறுப்பினரை மிரட்டுவதும் நீதிமன்றத்தை அவமதிப்பதுபோல் செயற்படமாட்டார். நீதிமன்றம் என்பது இவரது வீடா, தொட்டதற்கெல்லாம் நீதிமன்றம் இவர்களை விசாரிக்க? அப்போ கட்சியின் யாப்பு என்பது எதற்காக? மக்களின் எத்தனையோ பிரச்சனைகளை தீர்க்க நேரம் காணாமல் நீதிமன்றம் திணறுகிறது. இதற்குள் இவர் சொறிச்சேடடை. இவர் ஒரு சட்டத்தரணி. நீதிமன்றத்தின் பழு, மாண்புதெரியாதா இவருக்கு? இவர் எவ்வகையில் பார்த்தாலும் நீதிக்கோ, கட்சிக்கோ கட்டுப்படுபவரல்ல. கடிவாளம் இல்லாத குதிரை போல தான் நினைத்தபடி ஓடுபவர். தானே கட்சிக்குள் வலிய வந்து தன் பெயரை இழுக்குப்படுத்திவிட்டார். இனி இவரால் பழைய தொழிலையும் தொடர முடியாது. கட்சிக்கு பிடித்த ச***. இவரிடமிருந்து கட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும்.2 points- கனடாவில் திருடனுக்கு வந்த சோதனை...
2 pointsவடிவேலு திரைப்பட காமடியெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது போல…2 points- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……! January 2, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக்கு தீர்வில்லாவிட்டாலும் சுமந்திரன் அணிக்கு தீர்வு. தமிழரசுகட்சியில்/தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் வருகை பலர் நினைப்பது போன்று ஒரு அரசியல் விபத்தோ, அரசியல் தற்செயல் நிகழ்வோ அல்ல. நன்கு திட்டமிட்ட நகர்வு. விடுதலைப்புலிகள் செயலிழக்கும் வரையும் ஓடுமீன் ஓடி உறுமீன் வரும் வரையும் கொக்கு காத்திருந்த கதை. 2001 இல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக இரா.சம்பந்தன் புலிகளால் நியமிக்கப்பட்ட போதும் மானசீகமாக சம்பந்தன் புலிகளின் அரசியலை ஆதரிக்கவில்லை. ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வு. இதுவே சம்பந்தனது மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் பின்கதவு அரசியலாக இருந்தது. இது “தமிழீழம் ஒரு வில்லங்கமான காரியம்” என்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வார்த்தைகளின் உள்ளீட்டை தமிழ்மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்தகாலம் என்பதால் இதற்கான நியாயப்பாடு தமிழர் அரசியல் தராசில் ஒரு பக்க தராசுத் தட்டை கதிக்கச்செய்தது. மறு பக்கத்தில் புலிகள் தவிர்ந்த ஆயுத போராட்ட அமைப்புக்களின் பாராளுமன்ற அரசியல் பிரவேசம் இதை மேலும் உறுதிப்படுத்தியது. இந்த அமைப்புக்களும்/கட்சிகளும் தமிழீழத்தை புலிகளின் துப்பாக்கி தங்களை குறி பார்த்ததால் ஆயுத போராட்டத்தில் தாங்களாகவே தோற்றும், தோற்கடிக்கப்பட்டும் இருந்த நிலையில் கொண்ட கொள்கையில் “அரசியல் கற்பு” இவர்களிடமும் இருக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டு துடுப்பு விடுதலைப்புலிகளின் கைகளில் இருந்தது. ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமைகளை அழித்த பாவத்திற்காக பிராபாகரன் செய்த பிராயச்சித்தம் இவர்களையும் கூட்டமைப்பில் உள்வாங்கியது. உமா மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதால் சேர்க்கவில்லை போலும். (?). பின்னர் சேர்த்துக்கொண்ட போது விமர்சனங்கள் எழுந்தன. அதுவரை தலையாட்டும் அரசியல் செய்த கூட்டமைப்பு 2009 மே மாதத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல சுயரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. ஒரு புறம் கிளிநொச்சி சந்திப்புக்களில் ஒன்றும், கொழும்பு சந்திப்புக்களில் இன்னொன்றும் பேசி வந்த இரா.சம்பந்தருக்கும், எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான கொழும்பு உறவில் நெருக்கம் ஏற்பட்டது. சம்பந்தரின் நம்பிக்கையை திட்டமிட்ட படி சுமந்திரன் பெற்றார். சாத்தியமற்ற தமிழீழம், பிராந்திய, சர்வதேச பூகோள அரசியல் சூழல்கள் பற்றிய கலந்துரையாடல்களில் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்தனர். விளைவு 2010 பாராளுமன்ற தேர்தலில் முள்ளிவாய்க்கால் வலியோடு தமிழ்மக்கள் பெற்றெடுத்த தேசிய பட்டியல் குழந்தையை தூக்கி சாய்மனைக்கதிரை கொழும்புவாசி சுமந்திரனுக்கு சம்பந்தர் கொடுத்தார். முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை தங்கள் திசைக்கு திருப்ப புலிகளின் கையில் இருந்த துடுப்பு சம்பந்தருக்கும், சுமந்திரனுக்கும் கைமாறியது. சம்பந்தரின் வயோதிபம் அவருக்கு நம்பிக்கையான ஒரு கையாளைத்தேடியது. அந்த இடத்தை சம்பந்தர் சுமந்திரனுக்கு கொடுத்தார். மறுபக்கத்தில் சம்பந்தரின் முதுமையை சுமந்திரன் பயன்படுத்தி, கட்சியில் முக்கிய செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். சம காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தமிழரசு உள்ளிட்ட பங்காளிகள் கட்சிகளின் பலவீனங்களை சுமந்திரனால் இலகுவாக அடையாளம் கண்டு அரசியல் செய்ய முடிந்தது. பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்று முழுதாக சுமந்திரனில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. சம்பந்தர் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட அனைத்து வரப்பிரசாதங்களுடனும் கொழும்பு அரசாங்க மாளிகையில் முடங்கிப்போனார். இது ஒரு வகையில் எஸ்.ஜே.வி.செல்வாநாயகத்தின் முதுமையை அ.அமிர்தலிங்கம் பயன்படுத்தியதற்கு ஒப்பானது. இந்த அரசியல் சூழ்நிலையில், சரியாக காலக்கணக்கை பார்த்து வந்த எம்.ஏ. சுமந்திரன் தருணம் பார்த்து இரா.சம்பந்தர் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைத்தார். இது பல விமர்சனங்களுக்கு வழிவிட்டபோதும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துதல் என்பதில் சாதகமானதாக நோக்கப்பட்டது. ஆனால் சுமந்திரனின் தனிப்பட்ட, அரசியல் குணாம்சங்களை நன்கு அறிந்திருந்தவர்கள், சம்பந்தரின் செயற்பாடற்ற பலவீனமான அரசியலை அறிந்திருந்தும் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால் சுமந்திரனின் அரசியல் தந்திரோபாய உட்கட்சி நகர்வுகளை அறியாதவர்களும், அவரது வாதத்திறமையையும், அரசியல் நியாயப்படுத்தல்களையும் , சர்வதேச உறவுகளையும், பாராளுமன்ற செயற்பாடுகளையும் மட்டும் அறிந்தவர்களும் சுமந்திரனுக்கு பின்னால் ஆதரவாக நின்றனர். 2010 இல் இருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பல்வேறு காரணங்களுக்காக உடைவுகள் ஏற்பட்டன. ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் சுமந்திரனின் பங்காளிகள் தனித்து போட்டியிடல் என்ற தொழில்நுட்பம்/பொறிமுறை தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தமிழரசுக்கட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்தது. 2015, 2020 தேர்தல்களில் சுமந்திரன் மீதான மக்கள் நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து 2024 இல் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டார். இதற்கு என்னதான் காரணங்களை கூறினாலும் அந்த காரணங்களில் சுமந்திரனின் கடந்த 15 ஆண்டுகால தமிழ்த்தேசிய அரசியலுக்கும் பங்குண்டு. அதை அவர் சுயவிமர்சனம் செய்ததாக தெரியவில்லை. தனது நிலைப்பாடே சரியென தனித்து ஓடும் சுமந்திரன் இதை செய்வார் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. பாராளுமன்ற அரசியலில் சம்பந்தரினதும், பங்காளிக்கட்சிகளினதும் பலவீனங்களை பயன்படுத்தி பாராளுமன்ற குழுவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சுமந்திரன் அடுத்த நகர்வாக தமிழரசுகட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர களத்தில் இறங்கினார். மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவ பலவீனமும், வயோதிபமும் சம்பந்தர் காலம் போன்று மீண்டும் ஒரு வாய்ப்பை சுமந்திரனுக்கு வழங்கியது. கட்சிக்குள் தனக்கு சாதகமாக சி.வி.கே.சிவஞானம், சத்தியலிங்கம், சாணக்கியன், துரைராசசிங்கம் போன்றவர்களை வளைத்துப் போட்ட சுமந்திரன் தலைமை பதவிக்கு போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. வெற்றி பெற்ற சி.சிறிதரன் பதவியேற்க முடியாதவாறு வழக்கு தாக்கலானது. இந்த இழுபறியில் மாவை சேனாதிராஜாவை பதவியில் இருந்து நீக்கி பதில் தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியில் அதுவும் தனது சார்பான சி.வி.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அது சுமந்திரனுக்கு வெற்றியே. தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் பதவியும் சுமந்திரனுக்கு உறுதியானது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் -தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடாக முடிவுகளாக எடுக்கப்படுகின்ற நிலை தொடர்கிறது. அதற்கு வாய்ப்பு இல்லாத நிலை காணப்படுமாயின், ஏதோவொரு வகையில் அதற்கான காலம் கனியும் வரை முடிவுகளை எடுப்பதை சுமந்திரன் தனது அணியின் மூலம் சாதித்து வருவது வழக்கம். இதற்கான வாய்ப்பை சுமந்திரன் தேடிச் செல்லவில்லை. மாறாக அது காலடிக்கு வரும் வரையும் காத்திருந்து காரியம் செய்கிறார். அந்த வாய்ப்புக்களை அவரின் காலடியில் கொண்டு குவிப்பவர்களாக இரா.சம்பந்தருடன் மாவை.சேனாதிராஜா, சி.சிறிதரன், பா. அரியநேத்திரன், சி.வி.தவராசா….போன்றவர்கள் இருக்கிறார்கள். அவற்றை சுமந்திரன் அணி பயன்படுத்துகிறது. இதனால் கட்சியில் சுமந்திரனின் அடைவுகள் காகம் இருக்க பனம் பழம் வீழ்ந்த கதையல்ல. எம்.ஏ. சுமந்திரனின் அதே அரசியல் குணாம்சங்களை கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசுகட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரின் சிறிதரன், செல்வம் ஊடான நகர்வு நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானது என்பது வெளிச்சம். இது தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? ஒரு சந்தர்ப்பத்தில் “சுமந்திரனை திருத்த முடியாது” என்று சொன்ன கஜேந்திரகுமார், சுமந்திரன் இல்லாத பாராளுமன்றத்தில் வகிக்கப் போகின்ற முக்கியத்துவம் என்ன? இது பொன்னருக்கு பொல்லு கொடுத்த கதையாக அமையலாம்……(?). https://arangamnews.com/?p=116031 point- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சுமந்திரன் தமிழ் அரசியலுக்கு வராவிட்டிருந்தால்.....! இலங்கை அரசியல் இன்று வேறு விதமாக இருந்திருக்கும். அனுரவும் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்.1 point- முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!
"கிளின் எதிர்கட்சிகள்"1 point- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
"கொமாண்டோ பாணியில் மறைந்திருந்து கரந்தடி தாக்குதல்."..1 point- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
இப்படி ஏதாவது செய்தால் தான் தன்னை அநுரகுமார திசாநாயக்கவின் தமிழ் தளபதியின் அதிரடி நடவடிக்கை என்று தமிழ் யுரியுப்பர்கள் செய்தி போடுவார்கள் என்று நினைத்திருப்பார்1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
அவரைக் கூப்பிட்டால் சீரியஸ் ஆக எடுத்து விடுவார்.1 point- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
அங்குள்ள மக்கள் எப்போதும் கஸ்ரம் என்று சொல்லிக் கொண்டே தானே இருக்கிறார்கள்..அண்மையில் ஒரு பெண்மணியோடு பேசும் போது பல தரப்பட்ட உதவி கோரல்களை முன் வைத்தார்...உங்களுக்கு யாரும் வெளி நாட்டில் இல்லயா.... உதவி செய்வதில்லையா என்று கேட்டேன்...இருக்கிறார்கள் ஆனால் உதவி செய்ய முன் வாறார்கள் இல்லை என்றார்..எதனால்........ஒரே உதவி கேட்பதால்...அப்படி என்றால் தற்போதைய முக்கிய உதவியாக என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்று கேட்கும் போது..........தனது தேவைக்கு ஒரு ஒன்றரை லட்சம் ...மகனது படிப்புக்கு உதவி தேதை மற்றும் அவருக்கு கணணியோ அல்லது கைப் போணோ வேணும்.அதை விட யூருப் செய்ய விருப்பம் அதற்கும் முடிந்தால் அல்லது யாராவது ஸ்பொன்ஸர் செய்தால் நன்று...இப்போ சொல்லுங்கள் அய்யா..மக்கள் எதை நோக்கி போகிறார்கள்..1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க”
“நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க” “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க நாலா பக்கமும் தெரியும் வயல்வெளிகள் நாவூற குழைச்ச சாதகம் உண்ணலாம் நாணிக் கோணும் விறலியும் காணலாம்!" "கற்றாழை முள்ளும் காலில் குத்தும் கருவாட்டு குழம்பும் மூக்கை இழுக்கும் கள்ளம் இல்லா வெள்ளந்தி அவர்கள் கருப்பு சாமியின் பக்தர்கள் இவர்கள்!" "விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள் விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள் விரிச்ச நெற்றி இவள் வீராப்புக்காரி வித்தைகள் காட்டிடும் குறும்பு பொண்ணு!" "கிராமம் எங்கும் பண்பாடு அழைக்கும் கிணற்று நீரும் ஒற்றுமை காட்டும் கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள் கிண்கிணி இசைக்கும் உலக்கை குத்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
வன்னியில் மன்னாரில் கொள்வனவு செய்யப்படும் மிகத் தரமான நாட்டு மாடுகளின் பால் தென் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பல்வேறு வகையான இறுதிப் பயன்பாட்டுப் பொருட்களாக வடக்கிற்கு வருகிறது.1 point- “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க”
உங்களின் கவிதையில் பொருட் பிழை உண்டு போல் இருக்கிறதே புலவரே . ........! நாட்டுப்புறத்தில் கிணற்றுநீரில் ஒற்றுமை உண்டா புலவரே . .........! 😴 மற்றும்படி கவிதை அருமை தில்லை .......!1 point- கருத்து படங்கள்
1 pointதமிழ் சிறி இனைக்கும் கருத்தோவியங்கள் சிரிப்பை மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது, ஆப்பிழுத்த குரங்கு என்பார்கள் அது அனுரவுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் இலங்கையர்களுக்கு நன்றாக பொருந்துகிறது.1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
மற்ற மதங்கள் தமது நாட்டிற்குள் தமது அட்டகாசத்தினை நிறுத்திக்கொள்கிறார்கள், இவர்கள் முட்டாள்த்தனமாக மற்ற நாடுகளுக்குள் மாத்திரம் தமது அட்டகாசத்தினை செய்கிறார்கள் அதனால் மற்ற நாடுகளால் தடை செய்யப்படும் நிலை ஏற்படலாம். எந்த மதமும் அழியாது, மதங்களில் எந்த குறைபாடும் இல்லை பகுத்தறிவில்லா முட்டாள்களில்தான் குறைபாடு உள்ளது.1 point- கருத்து படங்கள்
1 point1 point- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
இஸ்லாம் மட்டும் அல்ல, இந்தியாவில் ஹிந்து மத , அமெரிக்காவில் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் ஆட்டமும், ரஷ்யா ukraine இல் orthodox அமைப்பின் ஆட்டமும் கட்டுக்கு மீறி விட்டது. எல்லா மதங்களின் அழிவும் நெருங்குவது போல் தெரிகிறது1 point- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
ஐயா! இந்தியாவை சொன்னவுடன் கோபமடைவது நீங்கள் தான். நான் உங்கள் கேள்விக்கான பதிலை மட்டுந்தான் கொடுத்தேன். அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. நான் ஒன்றும் இட்டுக்கட்டி சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாவிட்டால் அமைதியாக இருங்கள், இங்கு யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அதற்காக என்மீது வார்த்தை துஸ்பிரயோகம் வேண்டாம். இது உங்கள் பதிலளிக்கும் முறை, இங்கு யாரும் அதை ரசிப்பதில்லை என்பதை பண்புடன் எடுத்தியம்புகிறேன். கால் கழுவுகிறதென்கிறீர்கள், ஏதோ குடிப்பதென்கிறீர்கள். நீங்கள் அதைத்தான் செய்கிறீர்களோ?1 point- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க மக்களை தூண்டியது யார்? யாரால் மக்கள் ஜே .வி .பியை தெரிந்தெடுத்தனர் என்பதை எல்லோருக்கும் புரியும். உங்களுக்கு புரியவில்லையென்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவுக்கு தமிழினம் கால் கழுவுவதை இந்தியாவுடன் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.1 point- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
அப்போ சுமந்திரன் வலுவாக இருக்கிறாரோ? நீங்கள் நிதர்சனத்தை ஏற்றிக்கொள்ளும் ஆளல்ல என்பது எல்லோரும் தெரிந்த விடயம். தேர்தல் முடிவுகள் உங்கள் தலையில் குட்டிச்சொல்லியும் புரியவில்லை என்பதால், உங்கள் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.1 point- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
கட்டுரை என்பதைவிட அவதூறு என்பதே பொருத்தம். ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்ட சமூக ஊடகங்கள் நிறமிழந்து, வலுவிழந்து அவதூறுக் கட்டுரைகளில் வந்து நொந்து நிற்கின்றன. ஈனத் தமிழினம் எதற்கும் சோரம் போகும் என்பதற்கு இதுந்தக் கட்டுரையாளர் ஒரு உதாரணம். 😏 உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும், உந்தப் புதிய ஆண்டில். 🤣1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
அவர் பெயர் ஶ்ரீராம் கிருஷ்ணன், அண்ணா. ஶ்ரீராமை ட்ரம்ப் இந்தப் பதவிக்கு நியமித்த உடனே, சில நாட்களின் முன், அவரைப்பற்றி மிகச் சுருக்கமாக இங்கு எழுதியிருந்தோம். இங்குள்ள ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் நீங்கள் சொல்லும் குணாதிசயங்கள் உள்ள நம்மவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அநேகமாக இருப்பார்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் கூட நான் இப்படியான சிலரைப் பார்த்திருக்கின்றேன். போட்டுக் கொடுப்பவர்கள். ஶ்ரீராமிடம் இந்தக் குணாதிசயங்கள் இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகக்கடுமையான் உழைப்பாளி, எலான் மஸ்க் போன்றே, என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இருவரும் வேலைத்தளத்திலேயே தூங்கி எழுபவர்கள்............. அதி உச்சத்தை அடைவதற்கு அதி உச்ச புத்திசாலித்தனமோ அல்லது அதி கூடிய திறமையோ தேவையில்லை, ஆனால், அளவான திறமைகளுடன், மிகக்கடுமையான உழைப்பும், விடா முயற்சியும். அர்ப்பணிப்பும் தேவை. அது ஶ்ரீராமிற்கு அளவுக்கதிகமாகவே இருக்கின்றது. சென்னையில் எஸ்ஆர்எம் கல்லூரியிலேயே பொறியியல் படித்தார் என்று நினைக்கின்றேன். அதைவிட தமிழ்நாட்டில் மட்டுமே குறைந்தது பத்துக் கல்லூரிகள் ஆவது தரவரிசையில் கூடியவை. ஏதோ சில காரணங்களால் அன்று ஶ்ரீராமால் தரவரிசையில் முன்னிருக்கும் ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலையிலோ சேர முடியவில்லை. சிலருக்கு இதுவே வாழ்க்கை முழுவதும் ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல
தோல்வியடைந்த அரசியல்வாதிகளெல்லாம், கூடிப்பேசி, கருத்து தெரிவிக்கிறார்களோ என்றொரு சந்தேகம் எனக்கு. காரணம் இந்த அரசில் அதிகம் பாதிக்கப்படப்போவது ,ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். அதனால் அவர்களே அதிகம் மக்கள் பற்றி கவலைப்படுகிறார்கள், கருத்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் செய்தது போதுமென்றே இவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். இவர்கள் காலத்தில் தேனும் பாலும் ஓடியதுபோல பீலா விடுகிறார்கள். படிக்கிற காலத்தில் சில பிள்ளைகள், தாங்களே தவறு செய்து விட்டு முதலில் ஓடிப்போய் ஆசிரியரிடம் பாதிக்கப்பட்ட மாணவனை குற்றம்சாட்டுவது போலுள்ளது, இன்றைய போலிப்பணக்காரர், அதிகாரிகள், அரசியல் வாதிகளின் குற்றச்சாட்டுக்கள். இதில தாங்கள் தலைவர், மக்களுக்கு சேவை செய்கிறோம் என்கிற எண்ணம் வேறு. இதை மக்கள் சொல்லவில்லை, அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். "ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாய் ஒன்று."1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
எவ்வாறு ஒசாமா பின்னலேடனை அழித்து, ஆப்கானிஸ்தானை சூறையாட, சதாம் குசேனை கொன்று, ஈராக்கை சுடுகாடாக்க, நாடகம், கதாபாத்திரம் தயாரித்தார்களோ, அவ்வாறே தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் வேண்டிய இடத்தில் தங்கள் நாடகங்களை அரங்கேற்றுவார்கள். அவர்களுக்கு எந்த மக்களைப்பற்றியும் கவலையில்லை. அப்பாவிமக்களே அவர்கள் பாவிக்கும் கேடயங்கள். நாம் என்ன செய்ய முடியும்? நாமும் அவ்வாறே, பல தலைமுறைகளை, அவர்கள் வருந்தித்தேடிய யாவற்றையும் இழந்தவர்கள். நீங்கள் மனித நேயம் மிக்கவர் என்று தெரிந்துகொண்டேன், உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். ஆமாம். அந்த அதிர்ச்சி செய்தி, எல்லோருக்கும் விசர் வர வைத்ததோடு அச்சத்தையும் ஏற்படுத்தியது. செய்வதேறியாமல் தாக்குதல் நடந்த இடத்துக்கு போயிருந்தார்கள்.1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
நேரலை மரண தண்டனைகளும்,கை விரல் வெட்டும் தண்டனைகள்,கல்லால் எறிந்து கொல்லும் தண்டனகள் போன்ற நாடுகளில் இருந்து தப்பி வருபவர்களை நம்ப சொல்கின்றீர்களா? அவ்வளவு கொடூர தண்டனைகள் ஒரு நாட்டில் இருக்கின்றதென்றால் அந்த பொது சமுதாயம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்த நாடுகளிலிருந்து மேற்குலகிற்கு வந்தவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? சருகு ஆமையை மெத்தையில் வைத்தாலும் அது சருகைத்தான் தேடிப்போகுமாம்.....அது போல்தான் அவர்கள் நடவடிக்கைகளும்.1 point- கனடாவில் திருடனுக்கு வந்த சோதனை...
நல்லகாலம் கனடாவில மாட்டு வண்டில் இல்லை. அங்கையும் மாட்டு வண்டில் நிண்டால் கள்ளன் அதிலை தான் பாங்க் கொள்ளையடிக்க போயிருப்பான்.......😎1 point- தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களிடமே உண்டு ...மேலும் வடக்கு கிழக்கிலிருந்து ஐந்தாறு அரசு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் உண்டு ...தமிழர் அபிலாசைகள் இந்த அரசாங்கம் நிறை வேற்றிய நிர்ப்பந்தம் இல்லை ....அதற்கான காலம் நீங்கள் பா.உ வாக இருந்த பொழுது இருந்தது ,ஆனால் நீங்கள் முயற்சி எடுக்கவில்லை ..இப்பொழுது அறிக்கை போர் நடத்துகின்றீர்கள்...உங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள .... தமிழருக்கு பிர்ச்சனை உண்டு என சிங்கள ஆட்சியாளர்களும்,தமிழ் பா. உ சொன்ன காலம் இருந்தது .. இப்ப தமிழ் பா.உ.(ஜெ,வி.பி டமிழ்ஸ்).,சொல்லினம் பொருளாதார பிரச்சனை மட்டுமே உள்ளது எண்டு..1 point- கூட்டத்தில் புகுந்தது வாகனம்; அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15 பேர் பலி!
சில நாடுகளின் கொடியில் "வாள்" தான் சின்னம் ...அந்த நாடுகளின் பிரஜைகள் சொல்வார்கள் தமது மதம் வாள் கொண்டு பரவியதாக...நிச்சமாக அந்த வாள் கேக் வெட்ட உபயோகப்படுத்தவில்லை....மனித் தலைகளை வெட்ட பயன்படுத்த பட்டுள்ளது... அன்று வாள் இன்று துப்பாக்கி ,வெடிகுண்டு என ....அந்த இறைவனின் பெயரை சொல்லிக்கொண்டே தாகுதல் செய்கின்றனர் இலங்கை தாக்குதல் எச்சரிக்கை அவர்கள்(அமெரிக்கா) நலன்சார்ந்து அவர்களே திட்டமிட்டது ...எனவே தான் முன்னெச்சரிக்கை...இதை(இலங்கையில்) உண்மையாகவே ஒர் தீவிரவாத அமைப்பு செய்ய நினைத்திருந்தால் செய்திருப்பார்கள் ...1 point- ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
இதை ஒரு செய்தியாகவே அறிந்திருந்தேன், அண்ணா. இதை ஒரு கொலை என்னும் கோணத்தில் முதலில் நினைத்திருக்கவில்லை. ஆனால், இது ஒரு கொலையாக இருப்பதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. சில மாதங்களின் முன், எழுத்தாளர் ஜெயமோகன் எல்லா செயற்கை நுண்ணறிவு தகவல் திரட்டிகளையும் திருட்டுத் தகவல் திரட்டிகள் என்று குறிப்பிட்டிருந்தார். பாலாஜியின் மரணத்தின் முன்னரேயே, பாலாஜியுடன் ஒரு தொடர்பும் இல்லாமலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார். ஜெயமோகன் ஒரு படைப்பாளியாக அவருக்கு காப்புரிமை உள்ள அவரது படைப்புகள் எவ்வாறு இந்த தகவல் திரட்டிகளால் திரட்டப்பட்டு, உருமாற்றப்பட்டோ அல்லது உருமாற்றப்படாமலேயோ பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை வைத்து இப்படி ஒரு முடிவிற்கு வந்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவும் பின்னர் இதைப்பற்றி, தன் அனுபவத்தை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதையே தான் காப்புரிமைகளை வைத்திருக்கும் எந்த படைப்பாளியும் சொல்வார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். எழுத்தோ, ஓவியமோ, இசையோ, மென்பொருள் நிரல்களோ........... எதுவென்றாலும் இன்று திருட்டுப் போவது தடுக்கப்பட முடியாததாக இருக்கின்றது. சட்டதிட்டங்கள் மிகவும் மேம்போக்காக, பழைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையிலேயே உள்ளது. புதிதாக மிகவும் கறாரான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்படவேண்டும். இது முதலில் அமெரிக்காவிலேயே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். பாலாஜி இதையே தான் சொல்லியிருந்தார். அவரின் வேலை அனுபவத்தில் இருந்து மிக உறுதியான ஆதாரங்களை காட்டியிருக்கின்றார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், சில முக்கியஸ்தர்கள் மற்றும் பேராசிரியர்களும் பாலாஜியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுவான, 'உலகம் முன்னுக்குப் போகின்றது.............. நீ முட்டுக்கட்டை போடாதே...........' என்பது போன்ற அடிப்படையுடன், அவர்களின் புத்திக்கூர்மையையும் சேர்த்து திருட்டு என்று சொல்லப்படுவதை அது திருட்டே இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எலான் மஸ்க்கும் பாலாஜியின் மரணம் தான் கொலை போன்று தெரிகின்றது என்று சொல்லியிருக்கின்றாரே தவிர, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், அதில் இருக்கும் குறைபாடுகளையும் பற்றிக் கதைக்கவில்லை. அவரே இதில் மிகப்பெரிய ஒரு நிறுவனம் வைத்துள்ளார். எந்த எல்லைவரை போயும் இவர்கள் பணம் சேர்ப்பார்கள். மிக மிகத் திறமையான ஒரு இளைஞன் இழக்கப்பட்டது மிகவும் வருத்தமான ஒரு நிகழ்வு. அச்சு அசலாக இங்கிருக்கும் பல பிள்ளைகள் போன்றே கள்ளம் கபடமற்ற, உள்ளுக்குள் நிகழ்ச்சிநிரல்கள் வைத்துக் கொள்ளாமல், சரியென்று தோன்றுவதை சரியென்றும், பிழையென்று தோன்றுவதை பிழையென்றும் சொல்லும் அறம் தெரிந்த பிள்ளை................🙏.1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
திடீர் கோடீஸ்வர யோகம் தரும் சனி. அள்ளி கொடுக்கும் சனி. சுழற்றி அடிக்கப் போகும் சனி. முதல் சனியால் மாற்றம் முன்னேற்றம். ஜென்ம சனியால் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம். விஸ்வரூபம் எடுக்கும் சனி. 😂1 point- சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்
உலகம் முழுக்க இருக்கிற சீனர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்பி ஜனவரி 29 அவர்களின் புது வருசத்தை கொண்டாடி விட்டு அப்படியே இலவச இணைப்பாக புதிய தொற்று நோயோடு வந்து இறங்கி இங்குள்ள நாடுகளில் நோயை பரப்ப போகினம் .1 point- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஆம் இந்த சனி லேசுப்பட்ட சாமனல்ல இல்லவா யூரிப்பில் பின்வரும் தலைங்களில் பட்டையை கிளப்புவார். கெத்து காட்டும் சனி வைச்சு செய்யும் சனி கொட்டி கொடுக்கும் சனி சுக்கிரனுடன் சேரும் சனி, 100% நிச்சயமாக திருமணத்திற்கு அப்பால் இன்னொரு உறவுக்கு வழி வகுப்பார். சனியும் குருவும் வக்கிரம் மறுமணம் நிச்சயம் குருவும் சனியும் இணைவு வெளிநாட்டு யோகம் கதவருகில் சனி/செவ்வயும் தோசம், தலைகீழாக நின்றாலும் காலம் பூரவும் கையில்தான் கதை சுக்கிரதசை ஆரம்பம் அந்தப்புரம் போக தயராகும் மிதுனராசியினர் சனி பெயர்சி ஜக்போட் அள்ளப்ப்கும் ராசிகள் வாசகர் அனுபவத்தில் இன்னும் யூரிப் தலையங்கள் வரவேற்கப்டுகின்றது1 point- அதிசயக்குதிரை
1 point- கருத்து படங்கள்
1 point1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointநான் சீமான் செய்வதெல்லாம்,பேசுவதெல்லாம் சரியென வக்காளத்து வாங்க வரவில்லை. தமிழ்நாட்டில் ஏனைய கட்சித்தலைவர்களும்,கட்சி தொண்டர்களும் சுத்த பத்தம் என நீங்கள் நிரூபியுங்கள். அதன் பின் சீமான் அரசியலை வழித்து ஊத்துங்கள். ஏதோ எம்ஜி ஆரும்,கருநாநிதியும்,ஜெயலலிதாவும்,ஸ்டாலினும்,,உதயநியும் பெண்கள் விடயத்திலும்.ஊழல் விடயத்திலும் தப்பு தாண்டாக்கள் செய்யாத மாதிரியும் சீமான் மட்டும் அருவருப்பு அரசியல் செய்வது மாதிரி நாடகங்களை அரங்கேற்றுகின்றீர்கள். கருணாநிதியும் எம்ஜிஆரும் அவர்கள் சார்ந்தவர்களும் செய்யாத பெண் லீலைகளையா சீமான் செய்து விட்டார்? தமிழ்நாட்டு அரசியலும்,கிந்திய அரசியலும் அப்படித்தான். அதற்கேற்ப நாங்களும் கருத்துக்கள் எழுத வேணும் இல்லையா? அதை விட்டு தனி வக்கிரத்திற்காக நீங்கள் சீமான் மீதான குற்றச்சாட்டு கருத்துக்களை எழுதினால்.... நானும் பெரியார்காலத்திலிருந்து இருந்த நாற்றங்களை எழுதலாம் என நினைக்கின்றேன்.😃1 point- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
1 pointசெந்தமிழன் சீமான் அண்ணாவின் பரம்பரையில் மன்னிப்பு கேட்கும் வழக்கம் மட்டுமல்ல பொய், பித்தலாட்டம், கப்ஸா, பெண்களை ஏமற்றுதல் எவருக்குமே இல்லை! அந்தளவுக்கு கண்ணியமான பரம்பரையில் இருந்து வந்தவர் செந்தமிழன் அண்ணா! பின்னிணைப்பு; இவர்ட பரம்பரையில மன்னிப்புக் கேட்கும் வழக்கமில்லையாம், ஆனா சாட்டை துரைமுருகனை வச்சு டீல் பேசி விஜி அண்ணிக்கு மாதாமாதம் பாங்க் எக்கவுண்டுக்கு ஒரு எமவுண்ட் போகுது அது என்னவாம். மண்டியிடாத மானம் அல்லவா இது!😂 இப்ப கொஞ்சநாள் எமவுண்ட் ஒழுங்காப் போகுது போலை அதுதான் விஜி அண்ணி பேசாம இருக்காங்க!😂 எண்டு மக்கள் பேசிக்கிறாங்க!1 point- உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ்
1 point2009திலேயே இந்த நிறுவனங்கள் செயலிழந்து வெறும் பொம்மை நிறுவனங்களாகவும், மேற்கிற்கு ஆதரவான சார்புநிலை மனிதஉரிமை அறிக்கை அமைப்புகளாகிவிட்டன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
1 point1 point- அதிசயக்குதிரை
1 point- வீட்டுத் திட்டப் பணிகளுக்கு முதற்கட்ட உதவி வழங்கப்பட்டது
😎 இன்று 23/05/2024 நான்காவதாக தடவையாக வீடு, மலசல கூடம் ஆகியவற்றை கட்டி முடிக்க 50000ரூபாவை திரு சிறிராசா ரஜிந்தன்(பேசமுடியாதவர்) உடைய வங்கிக் கணக்கில் யாழிணைய உறவு திரு @நந்தன் அண்ணா வைப்பிட்டுள்ளார். மிக்க நன்றி அண்ணை. மலசல கூடப்பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளது. இரண்டு அறைகளுக்கான நிலக்காறை வேலைகளும் குசினியின் கூரை வேலைகளும் பூரணப்படுத்தவேண்டும். முதல் இருதடவை காணொளி எடுத்துள்ளேன், இனி வேலைகள் ஓரளவு நிறைவடைந்ததும் காணொளி எடுத்துப் போடுவேன். இன்னும் 45000ரூபா அண்ணளவாகத் தேவையாக உள்ளது. கருணை உள்ளம் கொண்ட நல்லுள்ளங்கள் உங்களால் இயன்ற உதவியை வழங்கலாம். சி.ரஜிந்தன் குடும்பத்தினருக்கு உதவ விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வங்கி விபரங்களைத் தந்து உதவுவோம். எம்முடன் தொடர்பு கொள்ள சிவறஞ்சன் தேவகுமாரன் +94777775448, +947795910471 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!