இல்லை விளங்க நினைப்பவன், நான் தனியார் நிறுவனங்களில் தான் எப்போதும் வேலை. ஆனால் 'அரசவேலை' போல வேலை செய்யச் சொல்லும் நிறுவனங்களுக்கு மட்டுமே சேவையை வழங்குவதாக முடிவெடுத்து போய்க் கொண்டிருப்பதால், நான் இன்று வேலையில் இருக்கின்றேனோ அல்லது இல்லையோ என்ற சந்தேகம் இடைக்கிடை வரும்...............🤣.
ஒரு பாகைமானியில் எலான் மஸ்க், விவேக் போன்றோர் ஒரு நுனியிலும், சிலர் அதற்கு நேர் எதிரான நுனியிலும், ஆனால் தனியார் நிறுவனங்களிலேயே இருக்கின்றார்கள்.
இங்கும் அரசவேலை பள்ளிக்கூடத்திற்கு போவது போலவே............. படிக்கத் தேவையில்லை, படிப்பிக்கவும் மாட்டார்கள், ஆனால் மணி அடிக்க உள்ளே இருக்க வேண்டும், கடைசி மணி அடிக்க வீட்டுக்கு கிளம்பவேண்டும்.
தனியார் நிறுவனங்களில், குறிப்பாக ஐடி நிறுவனங்களில் நேரக் கட்டுப்பாடு பொதுவாகக் கிடையாது, அதிகமாக சம்பாதிக்கலாம். அதிக சம்பளம், போனஸ், நிறுவனப் பங்குகள், 401கே முதலீடுகள் என்று கிடைக்கும். நிறுவனங்களின் வெற்றி தோல்விகளைப் பொறுத்து இவை அமையும்.
இங்கு அதிபராக ட்ரம்ப் வந்தவுடன், பங்குச்சந்தை ஏறி, இன்று பலர் புதிய 401கே கோடீஸ்வரர்கள்........
லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பு போல இடைக்கிடை தனியார் நிறுவனங்களில் எரிந்து சாம்பலாவதும் உண்டு......🤣.
மகளுக்கு முதல் வேலை தனியார் நிறுவனத்திலும், அரசாங்கத்திலும் கிடைத்தது. 'முதல் வேலையே அரசில் வேண்டாம், அம்மா................ வாழ்க்கையில் சில வருடங்களாவது வேலை செய்வது நல்ல அனுபவம். அரசில் பின்னர் சேரலாம். ஆனாலும் உன் இஷ்டம், பிள்ளை...................' என்ற பொறுப்பான ஒரு ஆலோசனையின் பின், மகள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.............😜.