Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19122
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3054
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38754
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/31/25 in all areas

  1. நியாயமான கேள்வி. இதே போல்தான் பல்வேறு பெயர்களில் சீமானை ஆதரித்து அறிக்கை விடுபவர்களும்.
  2. குருமூர்த்தி, பாண்டேவை பாராட்டும் சீமான்.. சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட் Rajkumar RUpdated: Friday, January 31, 2025, 16:01 [IST] சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து பல ஆண்டுகளாகவே முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம் ஆகியோர் திராவிட கட்சிகளில் இணைந்து இருக்கும் நிலையில், தற்போது மாநில ஒருங்கிணைப்பாளரான ஜெகதீச பாண்டியன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய தம்பிகள் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து உடன்பிறப்புகளாக மாறினர். மேலும், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர். இதேபோல அரூர். பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதி நிர்வாகிகளும் விலகி வருகின்றனர். இது சீமானுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஜெகதீச பாண்டியன் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். அதற்கான காரணத்தை 5 பக்க கடிதமாக சீமானுக்கு எழுதியுள்ளார் ஜெகதீச பாண்டியன். அதில், சில முக்கிய கருத்துக்களாக," அண்ணா இது போல் எழுதுவேன் என்று நான் கனவிலும்நினைத்தது இல்லை காலம் பொல்லாதது என்னை இந்த நிலைமைக்கு தள்ளியது நீங்கள் தான். கட்சி ஆரம்பித்து 1 ஆண்டாகியும் நீங்கள் அமைப்பை கட்டமைக்க கவனம் செலுத்தவில்லை. அமைப்பை பற்றியும், அமைப்பு விதியைப் பற்றியும் நாங்கள் பேசினால் அதீத கோபம் அடைகிறீர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் எழுதி கொடுத்த அமைப்பு விதியை நீங்கள் இன்னும் கூட பார்க்கவில்லை என்பதை பலமுறை சுட்டிகாட்டியும் பயன் இல்லை. கட்சி வளர வளர உங்கள் நம்பிக்கை அதிகமாகி அது அதிகாரமாக மாற, உங்களிடமிருந்த எளிமையும் உறவோடு பேசும் இனிமையும் காணாமல் போய்விட்டது. வேகமாக மாறும் உலகில் கசியும் இரகசிய தகவல்களால் ஏற்படும் பாதிப்புகளை விட பகிரப்பட்ட உண்மையான தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று வரலாறு நமக்கு நிரூபித்திருக்கிறது. இதை உணராமல் உங்களுடனும் உங்கள் பின்னாலும் மக்களிடம் அறிமுகமானவர்கள். புகழ் பெற்றவர்கள், கட்சிக்கு வந்து தனது உழைப்பாலும் கட்சி கொடுத்த வாய்ப்பாலும் உயர்ந்தவர்கள் சிலரை நா வன்மையாலும் சிலர்அவமானப்படுத்தப்பட்டு அவர்களாகவே வெளியேறும்படியும் செய்தீர்கள். இதையெல்லாம் நான் பலமுறை உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளேன். கட்சியில் அதற்கு நீங்கள் கொடுத்த பதில் தம்பீ பேருந்தில் 50 பேர் உட்கார்ந்து இருப்பார்கள் ஒருவர்தான் ஓட்ட முடியும் என்பிர்கள். ஆனால் உங்களோடு அந்த பேருந்தில் ஏறியவர்கள் எல்லாம் அறிவார்ந்த ஓட்டுநர்கள் அண்ணா, அப்படியே நீங்கள் ஓட்டுநராக இருந்தாலும் அதன் உரிமையாளர் போல் நடந்து கொண்டுள்ளீர்கள் அண்ணா. அப்பேருந்து (கட்சி) பல பேரின் தியாகத்தாலும் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாகிய பேருந்து என்பதை நீங்கள் அடிக்கடி மறந்துவிடுகிறீர்கள் அண்ணா. ஒன்றிய அரசுக்கு நாம் கூடி ஆள்வோம் என்று பல மேடைகளில் அறிவுரை சொல்லும் நீங்கள் ஈட்சியில் கூடி பேசி முடிவெடுத்து செயல்படுத்த மறந்து போகிறீர்கள் அல்லது மறுத்து விடுகிறீர்கள். இதை சுட்டிக்காட்டினால் அன்பான சர்வாதிகாரம் என்கிறீர்கள் அண்ணா. எதிரிகள் தலைவர் பிரபாகரனை சர்வாதிகாரி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கூட தமிழீழ கொள்கையை கைவிட்டு விட்டால் ஆயுதத்துடன் அருகில் இருக்கும் புலிகள் தன்னை சுட்டு கொன்றுவிடுங்கள் என்று அதிகாரம் அளித்த ஆகச்சிறந்த ஜனநாயகவாதியின் உருவத்தை குறியீடாக வைத்து அரசியல் நடத்துகிற நீங்கள் சர்வாதிகாரியாகவே நடந்துக்கொள்கிறீர்களே அண்ணா. அனைத்திலும் வெளிப்படை தன்மை வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசும் நீங்கள். பொதுக் குழுவை கூட்டி யாருக்கும் அறிவிக்காமலேயே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரை பொதுச்செயலாளராக நியமித்து இருக்கிறீர்களே எப்படி அண்ணா? நிர்வாகத்தில் சிறப்பாக பணிபுரிந்த பொருளாளரை அப்பொறுப்பில் இருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கிவிட்டு எட்டு ஆண்டுகளாக கட்சிக்கே வராத கட்சிக்கு எதிராக செயல்பட்ட நாம் தமிழர் கட்சியையே கைப்பற்ற முயற்சி செய்த பல மேடைகளில் உங்களை திட்டி தீர்த்த ஒருவரை பொருளாளராக நியமித்திருக்கிறீர்களே அண்ணா? தவறான நபர்களை பொறுப்பிற்கு தேர்வு செய்து சரியான செயலை எப்படி அண்ணா செய்ய முடியும்? கட்சியில் நிதி இல்லை, நிதி இல்லாததால்கட்சியினருக்கு நீதி இல்லை. நிதியையும் சரிவர கையாளாததால் இன்று தமிழ் நாட்டில் காசு கொடுத்து கூட்டதிற்கும், பொதுக் கூட்டத்திற்கும் அழைத்து வந்து வாக்குகளை காசு குடுத்து வாங்கும் நிலையில் தன் குடும்ப தேவைகளை குறைத்துக்கொண்டு சொந்த காசைப் போட்டு, கொடி நட்டு கூட்டம் நடத்தி தேர்தல் செலவுகளுக்கு பிழைக்கப் போன இடத்தில் தன் இனம் தழைக்க. ஒரு வேலை உணவை தவிர்த்து உணர்வோடும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிற நமது தாய் தமிழ் உறவுகள் அனுப்புகிற பணம் கட்சியின் தலைமை அலுவகத்தில் இருப்பவர்களால் ஊதாரிதனமாக செலவு செய்யப்படுகிறது. இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால் கட்சியில் இருப்பவர்கள் தனது பொருளாதாரத்தை இழந்து வசிப்பிடத்தை இழந்து வாடகை வீட்டில் குடி இருக்கும் நிலையில் சம்பளத்திற்கு வேலை செய்யும் தலைமை நிலையத்தில் இருப்பவர்கள் கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவதும் புதிய வாகனத்தை வாங்குவதும். வீட்டை வாங்குவதும்ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழப்பதும் வாடிக்கையாய் போனது அண்ணா அலுவலகம் வாங்க வெளிநாடு வாழ் தமிழர்கள் அனுப்பிய பணத்தை தலைமையில் இருப்பவர்களின் கவனக்குறைவால் வீரயமாக்கி சோறு தண்ணி இல்லாமல் சோர்வடையாமல் தமிழ் நாட்டு உறவுகளும் வெளி நாடுகளில் வாழுகிற தமிழ் உறவுகளும் விமான பயணத்திற்கு பல செலவு செய்து இனத்துக்கான வாக்கை தன்மானத்தோடு பதிவு செய்து பெறப்பட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்ற கரும்பு விவசாயி சின்னத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த இராவணன் அண்ணனை புறக்கணித்துவிட்டு நிர்வாக திறனற்றவர்களின் கையாளாகாத தனத்தால் விவசாயி சின்னம் பறிபோனது. என மீதுள்ள நம்பிக்கையாலும் என் செயல்திறனை நீங்கள் அறிந்திருந்தாலும் 2004 பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்தீர்கள். அறிவித்த நாள் முதல் அய்யா இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களை எனது தொகுதிக்கு அழைத்துச் சென்று முதன் முதல் பிரச்சாரத்தை துவக்கி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் வென்று விடுவார் என்று தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பில் இடம்பெறும் அளவிற்கு தொகுதி உறவுகளின் ஒத்துழைப்போடு பணியாற்றினேன். நீங்கள் எனக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது தமிழகத்திலேயே மிகச் சிறப்பான ஒரு கூட்டத்தை கூட்டிக் காட்டினோம். அந்தக் கூட்டத் கூட்டத்தில் பேசிய கட்சி ஆரம்பிக்கும்போது வர பயந்தவர்களுக்கு மத்தியில் எதற்கும் அஞ்சாது 25 ஆண்டுகளாக என்னை தோளில் தூக்கிச் சுமந்தவன் என்றும் என் குடும்பமே ஒத்துழைக்க மறுத்த போதும் ஈழ பயன ஏற்பாடுகளை உறுதி செய்து பெங்களுருவில் இருந்து விமானம் ஏற்றியும் திரும்பி வரும்போது என்னை அழைத்து வந்தவன் என்று என்னைப் பெருமையாக பேசி சிலாகித்து கொண்டீர்கள். தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஐந்து இடங்களில் மூன்றாவது இடம் வந்தது. அதில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று. சென்ற ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆரம்ப வேலையிலிருந்து வாக்கு எண்ணும் வரை நான் சிறப்பாக பணிபுரிந்ததாக நீங்கள் மற்றவர்களிடம் சொன்னதாக கேள்விப்பட்டேன். நான் மேற்கூறிய அனைத்தும் நிர்வாக சிக்கல்தானே அதை சரிசெய்துகொள்வோம் என காத்திருந்த வேளையில் இப்போது கொள்கையிலேயே முரண்பட்டு நிற்கிறீர்கள். திரு இரவீந்திரன் துரைசாமியின் தவறான வழிகாட்டுதலால் தாங்கள் திரு ரஜினி அவர்களை சந்தித்தீர்கள் சந்தித்ததில் தவறு இல்லை. சந்தித்த பிறகு நீங்கள் கொடுத்த நேர்காணல் இருக்கின்றதே. சில நாட்களுக்கு முன்னர் சங்கி என்றால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன நீங்கள் சங்கி என்றால் சகத் தோழன் என்று சொன்னதை கேட்டு நானும் கட்சியில் உள்ள பெரும்பான்மையோரும், தமிழ் நாட்டில் உள்ள பல முற்போக்கு சக்திகளும் அதிர்ச்சி அடைந்தோம். சங்கிகளை தோழர் என்று அழைக்க எப்படி அண்ணா மனம் வந்தது? என்று கேட்க உங்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். வழக்கம் போல் பதில் இல்லை எனது கருத்தை தெரிவிக்க முகநூலிலும் தளத்திலும் சங்கி தமிழுக்கு எதிரி, சங்கி தமிழ் நாட்டுக்கு எதிரி சங்கி மானிட குல எதிரி என்று பதிவிட்டேன். பல நூற்றாண்டுகளாக ஆண்டுகளாக தமிழையும் தமிழ் மொழியையும். இனத்தையும் அடிமைப்படுத்தி வஞ்சித்து வருகின்ற வலதுசாரி கருத்து கொண்டவர்களை அய்யா, அம்மா, மாமா என்கிறீர்கள். இருந்தாலும், நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே, ஹெச்.ராஜா, ஆடிட்டர் குருமூர்த்தி, அண்ணாமலை மற்றும் அம்மா தமிழசை உங்களை தீம் பார்ட்னர் என்று கூறி வலிய வந்து உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கருத்துக்கெல்லாம் அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். மறுப்பு வராததால் பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அண்ணன் சீமானின் கருத்துதானே ஒழிய என்னைப் போன்றவர்களின் கருத்து அல்ல என்று ஜனநாயகப் பூர்வமாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள முதலாளிதத்துவ கட்சிகளில் கூட கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. "ஆகச் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்" என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை. என் கருத்தியலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு எந்த தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர். வலதுசாரி ஆதரவு கருத்துக்கு அண்ணன் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் பிரசாந்த் கிஷோரை விட தம்பி பாண்டே அறிவு மிக்கவன் என்றும், கொஞ்ச நாளைக்கு முன்பு பயித்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல பேசுவது பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறது அண்ணா அண்ணன் இப்படியெல்லாம் பேசுகிறாரே என்று வேதனையோடு இருந்தபோது அடிக்கடி நீங்கள் குருமூர்த்தியையும், தினமலர் கோபால் ஜீ யையும் சந்தித்து அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தமிழர்களின் நாடி நரம்புகளில் உரமேறி இருக்கும் நமது தேசிய தலைவரையும், தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய திராவிட இயக்கத் தோழர்களின் குறியீடாக இருக்கக்கூடிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ் நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்பது தெரிகிறது அண்ணா. தமிழரின் அறிவாகவும், ஆற்றலாகவும் உணர்வாகவும் இருக்ககூடிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் குடும்பத்திலுள்ள கார்த்திக் மனோகரனை சிங்களவனே பயன்படுத்த தயங்கக்கூடிய வார்த்தையை பயன்படுத்தி வசைப்பாடினீர்கள் அண்ணா. மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்? வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது. இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும். தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடி முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய, வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு. விலகுகிறேன் அண்ணா!" என கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/jagadeesan-pandiyans-exit-major-setback-for-naam-tamilar-party-amid-leadership-crisis-676059.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி இன்னொரு மாநில ஒருங்கிணைப்பாளர் விலகி உள்ளார். சொன்ன காரணம் - சீமானோடு இருந்தால் நானும் சங்கி ஆகிவிடுவேன்.
  3. உண்மைதான் விசுகு அவர்களே! ஆனாலும் துன்பப்படாத ஒருவரை உங்களால் உலகில் காட்ட முடியுமா? பகிடியும் அவர்களை ஆறுதல்படுத்தும். உதாரணத்திற்கு, பரிமளாக்கா பெயரைச் சொன்னதும் சாமியார் தள்ளாத வயதிலும் துள்ளிக் குதிக்கிறாரே! 🧐 சறுக்கி விழுந்து எலும்பு முறிந்த நிலையிலும், ஆசுப்பத்தரி நேசுமாரின் நினைவுதான் சிறித்தம்பியின் துன்பத்தை நீர்த்துப்போக வைக்கிறதே!!🤪 இருந்தும் ஈழப்பிரியன் போன்றோரின் துன்பங்களில் பகிடி விடுதல் நன்றன்று விசுகர் அவர்களே!!😢
  4. யார் இவர்? புலிகளின் பொறுப்பாளர் என்ற பதவியை இவருக்கு யார் கொடுத்தது. புலிகள் ஆயுதங்களை மௌனித்தபின் இவர் தலைமையில் என்ன அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை இதை இணைத்தவர் தருவாரா??
  5. ”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கம்! Jan 31, 2025 சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் மற்றும் பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் இழந்து, இலங்கை அரசோடு இணைந்த சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், பல தடைகளையும் தாண்டி எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தாங்கள் அறிவீர்கள். எமது தேசியத் தலைவரின்(பிரபாகரன்) சிந்தனையில் இருந்தும் மாவீரர்களின் அர்ப்பணிப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களிலிருந்தும் கட்டி எழுப்பப்பட்ட எமது தாயக விடுதலைப் பயணத்தில் நாங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எமது தாயகம் நோக்கிய பயணத்தை சர்வதேச பூகோள அரசியல் நலன் கருதி சர்வதேச சக்திகளும், இலங்கை அரசும் திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைந்து நசுக்க முற்படுவதுடன், எமது போராட்ட வரலாற்றையும், ஈழத் தமிழ் மக்களுடைய கலாச்சார விழுமியங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். புகைப்படம், பயிற்சி வழங்கவில்லை! பல காலகட்டங்களில் எமது அண்டை நாடான இந்தியாவோடும், தமிழகத் தமிழர்களோடும் பின்னி பிணைந்து ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றோம். பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் முன்னிறுத்தி செய்யப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு, இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்றவோ, அவர்களின் செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம். சீமான், தேசியத் தலைவரை சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகின்றோம். இந்த சர்ச்சையான கருத்துக்கள் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் இழிவு படுத்துகின்ற, கொச்சைப்படுத்துகின்ற செயல் என்பதையும் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். ஒரு கொதி நிலையை உருவாக்கும்! நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது எமது இயக்கமோ, ஈழத் தமிழ் மக்களோ அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பதையும், எமது போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கு மிகவும் விலைமதிப்பற்ற தியாகம் நிறைந்த அர்ப்பணிப்புகளையும் நன்றி உணர்வோடு பற்றிக் கொள்ள விரும்புகிறோம். தேசியத் தலைவர் திராவிட இயக்கங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதையும் இந்த வேளையில் பதிவு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்ளுகின்றோம். விடுதலைப் புலிகளின் கொள்கை தொடர்பாக அண்மையில் வெளிவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், அரசியல் துறை என்று பேரிடப்பட்ட அறிக்கை தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். சம்பந்தப்பட்ட அறிக்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையும், திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆகிய நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. விடுதலை புலிகளின் பெயரைப் பயன்படுத்தி எமது இயக்கத்தின் பேச்சாளர்களைப் போன்று ஊடகங்களில் கருத்து கூறுவதை சம்பந்தப்பட்ட நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கையோடு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் இடையிலான ஒரு கொதி நிலையை உருவாக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இது போன்ற கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். சீமானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை! எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்ந்த உலகப் பரப்பில் தவறான செயற்பாடுகளுக்கோ, அரசியல் செயற்பாட்டுக்கோ பயன்படுத்த முடியாது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். சீமானுக்கோ, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பதைனையும், எமது போராட்டத்தை அரசியல் வழியில் முன்னெடுத்துச் செல்ல விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் கட்டமைப்புகள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் செயல்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகின்றோம். ஆகவே பொய்ப் பிரச்சாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும், பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், எமது தேசியத் தலைவரையும், விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்பதனையும், இன்று பலராலும் பேசப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறது. விடுதலைக்குப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும், இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது” இவ்வாறு தமிழ்வேந்தன் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/prabhakaran-seeman-photo-issue/
  6. இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள்கின்றது அதையும் இழுத்து நீவியும் விடுகின்றது சில நேரங்களில் காற்றுப் போன ஒரு சின்ன பலூன் போல ஒரு உருண்டையாகி கண்களை மூடி தியானத்தில் இருக்கின்றது திடீரென பாய்ந்து மண்ணைக் கொத்தி எதையோ சாப்பிடுகின்றது பொழுது செக்கலாகி சிவந்து கறுக்க அது எங்கோ போய் விடுகின்றது வானத்தில் வெகு மேலே உச்சத்தில் கழுகுகள் ஒரு சோடியாக ஓய்வே இல்லாமல் வட்டம் போட்டபடியே சுற்றிக் கொண்டிருக்கின்றன.
  7. உதயன் பத்திரிகை வைத்த தலைப்பும், அனுரவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களான…. மாவை வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி, யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டமை, வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் சந்திப்பும், தமிழ் ஆச்சிமாரை… எம். ஜி. ஆர். பாணியில் கட்டிப் பிடித்த்தையும் பார்த்து, தையிட்டி விகாரையை… அனுர, அத்திவாரத்துடன் கிளப்பப் போறார் என்று நம்பி ஏமாந்து போனன். 😂 உதயனுக்கு…. நெடுகவும், “ஏப்பிரல் பூல்” செய்யுறதே… வேலையாய் போச்சுதுது. 🤣
  8. தமிழ்நாட்டில் பலருக்கு பிரபாகரன் ஒரு ஆதர்ச நாயகன், மாவீரன், ஆனால் அவரை தூக்கி பிடிப்பதால் மட்டுமே ஓட்டு விழாது. ஈழப்போரில் உச்சக்கட்டத்தில் தேர்தல் நடந்த போது பெரும் எதிர் பரப்புரையையும் மீறி திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சீமானுக்கு பிரபாகரன் வெறும் முகமூடிதான் , அதை கழற்றி எறிந்துவிட்டு காசு கொடுக்கும் எசமான் சொல்லும் முகமூடியை மாட்டும் காலம் வெகு தூரமில்லை.
  9. குழப்பவாதியாக இருக்கிறீர்கள், ஒன்றிலிருந்நது மற்றொனாறாய் தாவி கொண்டே இருக்கிறீர்களா. இங்கு யாரும் பெரியார் ஈழத்துக்கு தேவை என்றும் கூறவில்லை , பிரபாகரனுக்கு மாற்று என்று கூறவில்லை.ஏன் தமிழ்நாட்டில் பெரியாருக்கென்று வாக்கு வங்கி இருப்பதாக கருதவில்லை. இருவரும் போராடிய களங்கள் வேறு, போராட்ட வடிவமும் வேறு. ஆனால் இருவரும் தம் வாழ்நாளின் இறுதி வரை போராடினர்.
  10. நோட்டோ இல்லையென்றால் 3 ஆம் 4ஆம் 5 ஆம்,.......... உலகப். போர்கள். வந்து இருக்கும் .....நோட்டோவை கலைத்து பார்க்கட்டும். உலகப் போர் வருமாயின. சீனா இந்தியா பிரேசில் ....மற்றும் ஆபிரிக்கா நாடுகள் போரில் வெல்வார்கள். ஐரோப்பா அமெரிக்கா தோற்க்கும். இவர்களிடம் மனித வளசக்தி அறவே இல்லை ஜேர்மனியில் வெளிநாட்டவர்கள் இல்லை என்றால் நிறைய வீடுகள் காலியாகி விடும் அரசாங்கத்திற்கு வருமானம் குறைந்து விடும் வீட்டு வரி இல்லை தொலைக்காட்சி வரி இல்லை தண்ணீர் குப்பைகள் காசு காட்டுவார்கள் இல்லை மாடு மாதிரி உழைத்து விட்டு 50. 60. வயதில் உயிரை விடுகிறார்கள் இவர்கள் காட்டிய பென்சன். பணம் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது மேலும் நோட்டோ இல்லையென்றால் குசையின். இராக். அதிபர் உயிர் உடன். இருந்து குவைத் உள்பட பக்கத்து நாடுகளை பிடித்து ஆட்சி செய்துகொண்டு இருப்பார் அமெரிக்கா கனடாவை பிடிப்பது இலகுவாகும். புட்டின். உக்கிரேன். உட்பட பக்கத்து நாடுகளை இணைத்து ஆட்சி செய்வார் 🙏
  11. மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.
  12. நான் சீமானை கழுவி கழுவி ஊத்தவில்லை ..... இலங்கை தமிழர்களின் விடுதலை போரை பயன்படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை எதிர்க்கிறேன். மிக கடுமையாக எதிர்க்கிறேன். சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் நான் முதல்வர் ஆக வந்தால் அல்லது தெரிவு செய்யப்பட்டால் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் கூலி தொழிலளாருக்கும். ஓய்வு ஊதியம் இப்படி பல வாக்குறுதிகளை கொடுத்து தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாம். ஆட்சிக்கு வரலாம். சீமானுக்கு தன்னில் நம்பிக்கை இல்லை அதாவது தன்னம்பிக்கை இல்லை எனக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்கு போட்டு முதல்வர் ஆக்குவார்களோ என்ற ஐமிச்சம். சீமானிடமுண்டு ஆகவே தான் பிரபாகரனின் பெயரை சொல்லி பல பொய்களை சொல்லி தமிழ்நாட்டில் மக்களின் வாக்குகளை. பெற்று முதல்வர் ஆகலாம் எனக் கனவு காண்கிறார். .....இவர் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். இப்படி படம் வைப்பதால். தமிழ் ஈழம் கிடைத்து விடாது எங்கள் போராட்டம் தொடர்கிறது என்று பொருள் இல்லை தமிழ்நாட்டிலுள்ள. ...வாழ்கின்ற ஒவ்வொருவரும் தலைவரின் படத்தை வைத்திருத்தல் கூட. போராட்டம் தொடராது தமிழ் ஈழம் கிடைக்காது இந்தியா அரசை மத்திய அரசை சீமான் கட்டி போடுவார். என்றால் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். இந்தியா தான் தடையாக இருக்கிறது இந்தியன் சீமானால். அந்த தடைகளை அகற்ற முடியுமா???????? 🙏
  13. ஓணாண்டியார், விடயம் மிகவும் எளிமையானது, இதைப் பெரிதாக்க வேண்டாம்! இதைப் பற்றி யாரும் இனிப் பேசப் போவதில்லை! ஒணாண்டியாரின் கருத்துக்கு எப்போதும் நம்பகத் தன்மை இருக்கும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும்.
  14. பலரும், பல வழிகளில் இதைச் சொல்லியிருந்தாலும், மீண்டும் மீண்டும் வெவ்வேறு வேசங்களில் வந்து ஒரே கீதம் இசைப்பதால், இதைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!
  15. நீங்கள் பதிந்ததை எம்மால் தேடி எடுக்க முடியவில்லை. உங்களாலும் முடியவில்லை. விடயம் அவ்வளவு தான். எழுதும் போது உங்களால் அதை நிரூபிக்க முடியும் என நினைத்து இருப்பீர்கள். இப்ப, அப்படி செய்வது சாத்தியமில்லை என தெரிந்து விட்டது. இப்படி எனக்கு உட்பட பலருக்கு யாழிலும், யாழுக்கு வெளியே எம் நாளாந்த வாழ்விலும் எத்தனை தரம் நிகழ்ந்து இருக்கும். உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். நன்றி
  16. அப்படிதான் நானும் நினைத்தேன், வாய் மூடி மௌனியாய் இருந்தேன், ஆனால் சீமான் போன்ற தகுதி அற்ற வாய்ச்சொல்லில் வீரர்கள் ஈழத்தமிழர் பெயரைச் சொல்லியே அங்கே அரசியல் செய்து எமது போராட்டம் மற்றும் எங்கள் மதிப்பை இழக்காரப்படுத்தும் பொழுதும், எங்களுக்காக உண்மையாகவே போராடிய வைகோ போன்ற தலைவர்களை விட தான் உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ளும் பொழுதும் எப்படி இனிமேலும் அப்படியே இருப்பது? நாங்கள் இனியும் சீமான் போன்ற நாலாம்தர அரசியல் வாதிகளை எங்கள் பெயரைச் சொல்லி அங்கே கடிவாளம் அன்றி அரசியல் செய்ய அனுமதித்தால் அது அங்கே எங்களுக்காக மனமுவந்து போரடிய சிறை சென்ற,குடும்பத்தை கரை ஏற்ற முடியாமல்ப் போன,அரசியலில் தன் நிலையை இழந்த மனிதர்களுக்கும், தலைவர்களுக்கும் செய்யும் அவமரியாதை. இப்பொழுதும் நாம் அங்கே எந்த அரசியல் நிலைபாடும் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அங்கே யார் எம்மை கேலிப்பொருள் ஆக்குகின்றார்களோ அவர்களின் உண்மை நிறத்தை வெளிக்கொணர வேண்டிய தேவை வந்துள்ளது
  17. இந்த வார ஆரம்பத்தில் கூட ஆதவ் அதிமுகவில் இணைவதாகவே செய்திகள் கசிந்து கொண்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தவெக பக்கம் வந்துவிட்டார். கிஷோரின் கருத்துப்படி, இன்றைய நிலையில் அதிமுகவும், தவெகவும் இணைந்து தேர்தலை சந்திப்பதே திமுகவை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரேயொரு வழி. வேறு எந்தக் கூட்டணியுமே திமுகவை அசைக்கமுடியாது. புஸ்ஸி ஆனந்த் அதிமுகவிடம் தவெக நெருங்குவதை விரும்புவது போல தெரியவில்லை. அவருக்கு வேறொரு திட்டம் இருக்கலாம். தவெகவை அதிமுகவுடன் கூட்டணியாக்க ஆதவ்வால் முடியும். மேலும், தவெகவில் ஆதவ் மிகக் குறுகிய காலத்திலேயே நம்பர் 2 என்னும் நிலைக்கும் வந்துவிடுவார். எடுத்த எடுப்பிலேயே நம்பர் 3 ஆக உள்ளே போகின்றார். சில வாரங்களின் முன், ஆதவ் விசிகவையும் திருமாவையும் விட்டு விலகும் போது, இங்கே களத்தில் நான் எழுதியிருந்தேன் - இதையிட்டு தமிழ்நாட்டில் அதிகூடிய கவலை கொள்ள வேண்டியவர் புஸ்ஸி ஆனந்த் என்று. இப்போது தவெகவின் பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆதவ் இன்று லாட்டரி மருமகன், அதனால் இன்று நிதி வசதிகள், பின்புலம் எக்கச்சக்கமாக உள்ளவர். அதே நேரத்தில், இவரது தனிப்பட்ட ஆளுமை, முன்னைய நாட்கள் எல்லாம் முற்றாக வேறானவை. மிகவும் திறன் கொண்ட, அதே நேரத்தில் அளவில்லாத பிடிவாதமும் கொண்டவர் போலவே இருக்கின்றார். அடிப்படையான சில மாற்றங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றார். ஆனால், பின்னர் உதயநிதியுடன் வந்த மோதலால், இன்று ஆதவ்வின் முழுச் சக்தியும் உதயநிதிக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றது. ஆதவ்வா அல்லது உதயநிதியா என்பது தான் உள்ளிருக்கும் போட்டி. தமிழ்நாட்டிற்கு இந்தப் போட்டி நல்லதொரு வருகை. திமுகவை யோசிக்கவைக்கும், தான்தோன்றித்தனமாக அவர்கள் நடக்க எத்தனித்தால் இந்தப் போட்டி அவர்களை கட்டுப்படுத்தும்.
  18. “தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்” என்று உதயன் தலையங்கத்தில் போட்டுள்ளது. நல்ல செய்தியாக உள்ளதே என்று உள்ளே போய் பார்த்தால்… விகாரையை அகற்றுவதைப் பற்றி ஜனாதிபதியோ அரச அதிகாரிகளோ எதுவும் சொல்லாமல் நட்ட ஈடு கொடுப்பதைப் பற்றி கதைத்துள்ளார்கள். தலையங்கத்தின் படி… விகாரை எப்ப அகற்றப்படும் என்று உதயன் சொன்னால் நல்லது.
  19. 14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  20. சுவிஸ் காரர் கொஞ்சம் நூதனமான துவேசக்காரர். கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் பல ஹிற்லருக்குப் பணிந்து தாங்களே யூதர்களை சுற்றி வளைத்துப் பிடித்து வதை முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்கள். சுவிஸ், யூதர்கள் உட்பட்ட அகதிகள் தங்கள் நாட்டுக்குள் தப்பி வந்து விடாமல் பார்த்துக் கொண்டதன் மூலம் நாசிகளின் இனவழிப்பிற்கு உதவினார்கள். பின்னர், நாசி யுத்தக் குற்றவாளிகள் தப்பி வந்து ஒளிந்திருக்கவும், அமெரிக்கா உட்பட்ட நாடுகளுக்கு சட்ட ரீதியாகக் குடியேறவும் உதவினார்கள். இப்படி சுவிஸ் அல்ப்ஸ் கிராமமொன்றில் ஒளிந்திருந்து அமெரிக்காவால் காப்பாற்றிக் கொண்டு வரப்பட்ட நாசி விஞ்ஞானி von Braun தான் அமெரிக்கா முதல் றொக்கற் தயாரிக்க உதவினார். அவருக்கு உயர் விருதும் கொடுதார்கள் அமெரிக்காவில்.
  21. ஆதாரத்தைப் பார்க்காமல் விளங்கிக் கொள்ள நான் "மூளையில் chip பதித்த படி திரியும்" சீமானின் சூப்பர்மேன் தம்பியல்லவே😎! நீங்களே தேடிப் பாருங்கள்! உங்கள் பாசையில் சொன்னால் நீங்களே ஒரு சாக்கடை அரசியல் வாதிக்கு செம்பு தூக்கியபடி உங்களுக்கு சேவை செய்ய இன்னொருவரைத் தேடுவது ரூ மச்😂! செவ்வியனுக்கு எழுதிய பரிந்துரைப்பைப் பார்த்தேன். எங்கேயோ யாரோ பெரியார் எதிர்ப்பாளர் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் எனப் புரிந்தது, நீங்களாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறதாவது? உங்களைப் போல அதிகம் படிப்பில்லாத ஒருவர் நோண்டுமளவுக்காவது மிருக வைத்தியம் நான் படித்திருக்கிறேன் அல்லவா? எனவே மூளையைப் பற்றிப் பேசலாம். சீமான் ஆதரவாளர்கள் மூளையைக் கழட்டி வைத்து விட்டு பின் தொடர்வதால் மூளை பற்றிப் பேசுவது trigger ஆக இருக்கிறது போல😂!
  22. பணம் எதுவும், ஒரு சின்ன கைச்செலவு தவிர, கொடுத்து அனுப்பமாட்டார்கள். கைகளில் விலங்கு போடாமல் அனுப்பினாலே அதுவே பெரிய மரியாதை. அவர்கள் உழைத்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துப் போக அனுமதித்தால், அதுவே சில ஆயிரங்களாக தேறும். இதே போலவே ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சிலர் திரும்பி வந்தனர், சொந்த விருப்பின் பேரில், இரண்டு நாடுகளின் சம்மதத்துடன். தமிழ்நாட்டின் ஒரு அடையாளமான அந்த கறுப்பு பெட்சீட் மற்றும் சில பொருட்களுடன் மட்டுமே. இரண்டு அரசுகளும் அவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை, செய்யவில்லை. தமிழ்நாட்டிலாவது இலவச அரிசியும், மாதாந்த கொடுப்பவனவும், மழைக்கு ஒரு கூரையும் இவர்களுக்கு கிடைத்ததுக் கொண்டிருந்தது. பலர் மீண்டும் அங்கே போய்ச் சேர்ந்துகொண்டனர். அமெரிக்காவின் நீதித்துறை இன்னும் கொஞ்சம் உயிர்ப்புடன் இருக்கின்றது. வழக்குகள் வரும். அதுவரை தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பார்கள். சிலரை திருப்பி அனுப்புவார்கள்.
  23. தமிழ்நாட்டு அரசியல் என்பது எப்போதுமே ஈழத் தமிழருக்குத் தேவையில்லாத ஆணிதான். அது எங்களைச் சார்பு நிலையெடுக்க வைக்கும். அந்த ஆணி ஈழத் தமிழருக்குத் தேவையில்லை.
  24. சரி எற்றுக்கொள்கிறேன். ஆனால் நாட்டை விட்டு. வெளியேற்றும் போது ஒரு அன்பளிப்பு. கொடுப்பது உண்டு அதை கூட்டி. கேட்க்கலாம்.
  25. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு teachable moment இனைக் நான் காண்கிறேன். 2012 இல் தாயகம் சென்று வன்னியில் யுத்த காலத்தில் வாழ்ந்த மக்களைச் சந்தித்த பிறகு, யாழில் தமிழர் தரப்பின் மீதான என் பார்வையை நான் மாற்றிக் கொண்டேன், அதையே இங்கே வெளிப்படையாக எழுத ஆரம்பித்தேன். ஒரே அவதார், ஆனால் நிலைப்பாட்டில் சிறிது மாற்றம். என்னுடைய இந்த வெளிப்படையான மாற்றத்திற்கே சிலரிடமிருந்து கேள்விகளும், திட்டல்களும் இன்றும் இடைக்கிடை கிடைக்கின்றன. இப்படித் திட்டுவோர் எல்லோருமே அனேகமாக சீமான்/நாதக ஆதரவாளர்கள்! அவதாரை மாற்றிய ஒரு சக சீமான் ஆதரவாளரை எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்😂!
  26. றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதி இருக்க கூடாதுதான் 🤣. வேலை வெட்டி இல்லாமல் றோவை எதிர்த்து நாம் எழுதினால்…. றோவுக்கு வெப்சைட் நடத்தி வேலை செய்பவருக்கு கோவம் வருமா இல்லையா?
  27. றோ -முத்துகுமார் கொலை - சீமான் பற்றி நான் எழுதி இருக்க கூடாதுதான் 🤣.
  28. 50,000 டொலர் சரியான குறைவு. இன்னும் கூட கேட்டு வாங்க வேணும். 😂
  29. அவரவர் தனி மனிதர்களாக தாம் அறிந்தவற்றை பொதுவெளியில் இரு பக்கம் சார்பாகவும் சொல்லலாம். ஆனால் த.வி.பு இப்போ இல்லை. வெளிநாட்டிலும் இலங்கையிலும் தவிபு என அறிக்கை விடுபவர் எல்லோரும் போலிகளே. அது எந்த செயல் (அற்ற) அகமாக இருப்பினும்.
  30. @Kavi arunasalam, @வாலி, @பாலபத்ர ஓணாண்டி ....... அரியநேந்திரனுக்கு சிங்களப் படை பாதுகாப்பு கொடுத்ததற்கு துள்ளிக் குதித்த... சுமந்திரனுக்கு முட்டுக் கொடுக்கும் சிலரை இந்தப் பக்கம் காணவில்லை. வரிசையாக வந்து, உங்களின் ஆளுக்கு... முட்டுக் கொடுத்து விட்டுப் போகவும். 😎 உங்களுடைய வாய்.... எப்பிடி, வடை சுடுகுது... என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.
  31. ஆனால் தென்னிந்திய மக்களும், அவர்களுக்குள் இருந்த தமிழ் மக்களும் இதற்கு தயாராக இருக்கவில்லை. இன்றும் இல்லை. காந்தி நேருவின் இந்திய சுதந்திர மாயையில் சிக்கி இருந்தார்கள். இதனால் ஏற்பட்ட கடுப்பில்தான் பெரியார் கரிநாள் என அறிவித்தார் என நினைக்கிறேன். வாய்ப்பே இல்லை. ஹைதரபாத் நவாப் தனி நாடு பிரகடனம் பண்ணி, இந்திய படைகள் அவரை போரில் தோற்கடித்தன. இதே போல் மேலும் சில ராஜ்ஜியங்களும் மிரட்டப்பட்டு வலபாய் பட்டேலால் வழிக்கு கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தானை சாட்டி காஸ்மீர், அதேபோல் மிரட்டி பணியவைக்கப்பட்ட சிக்கிம். மெடிராஸ் மாகாணத்தில் தனிநாடு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருப்பின் அன்றி அன்றைய இந்தியாவில் இது சாத்திய பட்டிராது. ஆனால் பெரியாரால் கூட மக்களை இதற்கு திரட்ட முடியவில்லை. இந்திய தேசியவாதம் அவ்வளவு வலுவாக இருந்தது, இன்னும் இருக்கிறது. இன்றைய இந்தியாவில் சாத்தியமே இல்லை.
  32. யாழ். வரும் ஜனாதிபதியிடம் 20 விடயங்களை முன்வைத்தார் கயேந்திரகுமார் எம்.பி! ஜனாதிபதி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயத்தானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட செயலருக்கு வழங்கியுள்ளார். இருபது முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயத்தானங்களை அபிவிருத்தி குழு கூட்ட நிகழ்சி நிரலில் சேர்ப்பதற்காக இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. - யாழ். போதானா மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல். - யாழ். போதனா மருத்துவமனையில் அதிகளாவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது. பல விடுதிகளில் அவ்வப்போது நோயாளர்கள் கட்டில்கள் இல்லாத நிலையில் நிலங்களில் படுக்கின்ற நிலைமை சீர் செய்யப்படல். - யாழ் பண்ணையில் அமைந்துள்ள காச நோய் சிகிச்சைப் பிரிவில் அடிப்படை வசிதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். மயிலட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். - மயிலிட்டியில் இயங்கிய காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் இயங்குகிறது. ஆனாலும் அங்கு ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும். - பண்ணையில் உள்ள மார்பாக சிகிச்சை நிலையத்திற்கென நிரந்தரமான எக்ஸ்றே றேடியோ கிறாபர் இல்லை. நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும். தற்போது திங்கள் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வருகின்றார். - பண்ணையிலுள்ள மார்பாக சிகிச்சை நிலையத்தில் பரிசோதனைக்காக பெறப்படும் சளிமாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியபடுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்படல் வேண்டும். ஆனால் உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடங்களாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இந்நிலை சீர் செய்யப்படல் வேண்டும். - யாழ் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப் பொருள் பயன்பட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வளித்து மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படல் . - யாழ் மாவட்டத்தில் கடற்தொழில்படகுகளை பாதுகாப்புக்கான கல்லணைகளை பின்வரும் பகுதிகளில் அமைத்தல். - பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம். இன்பர்சிட்ட கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை.சேந்தான்குளம், மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும். - இறக்கப்படும் நுழைவு வாண்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும். - கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்: - வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது. மண்ணை அகற்றுவதற்கான திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும். - இந்திய மீனவர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும். - கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும். - யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணி வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ள நிலையில் நிதியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு இருவது கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான மாவட்ட செயலருக்கு அனுப்பியுள்ளார். (ப) https://newuthayan.com/article/யாழ்._வரும்_ஜனாதிபதியிடம்__20_விடயங்களை_முன்வைத்தார்_கயேந்திரகுமார்_எம்.பி!
  33. ஆம். முன் பதின்ம வயதுகளில் சாண்டில்யனில் ஆரம்பித்து, பின் பதின்ம வயதுகளில் ஜெயகாந்தனில் தொற்றி பின்னர் சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன், என்று தொடர்ந்து ஜெயமோகனை அவரது, மண் சிறுகதைத் தொகுதி, ரப்பர், விஷ்ணுபுரம் நாவல்களில் கண்டடைந்தேன்.😀 இப்போது போகன் சங்கர், சுரேஷ் பிரதீப் என்று பலரின் எழுத்துக்களைப் படிக்கின்றேன்! ஈழப் படைப்பாளிகளின் நூல்களை தவறாமல் வாங்கிவிடுவேன். ஷோபா சக்தியைப் போலவும், முத்துலிங்கத்தைப் போலவும் சிறுகதைகளை தொடர்ச்சியாக எழுதுபவர்கள் பலர் இல்லை. சிறிதேவி “மஞ்சள் தாவணி போடவா” என்று சொல்வதை பாரதிராஜா அப்படி ஒரு ஃபிரேமில் எடுத்திருப்பார்! சிறிதேவியை எந்த வயதில் பார்த்தாலும் அவர் பதினாறு வயது இளைமையாகத்தான் இருப்பார்🥰! பின்னர் கனவுகளில் வந்த ஐஸ்வர்யா ராய், மனீஷா கொய்ராலா, ஏன் சமந்தா கூட வயது ஏற இளமை மங்கித்தான் தெரிந்தார்கள்!
  34. நாதகவின் முக்கிய நிதி கொடையாளி தாது மணல் கொள்ளைக்காரர் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் தான். சீமானின் திருமண செலவையே இவர் தான் செய்தார் என்ற பேச்சுண்டு. இந்த திமுக ஆட்சி அமைந்தபின் ஒரு குவாரி பிரச்சனை சம்பந்தமாக நாதகவின் சுற்றுசூழல் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார், அது குறித்து சீமான் எதிர்ப்போ, போராட்டமோ எதுவுமில்லை. இன்று அந்த நாதக போராளி பிசிறாக ஒதுக்கப்பட்டுவிட்டார். சீமான் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் இயற்கை வளத்தை காக்க அல்ல, அக்கொள்ளையர்களிடமிருந்து பணம் பெற்று தன்வளத்தை பெருக்கி கொள்ள
  35. முவவை விட்டு விடலாம், அவர் ஒரு நல்ல பாடசாலை ஆசிரியர் போல. அக்கறை உள்ளவர், நல்வழி காட்ட வேண்டும் என்று நினைப்பவர் என்று வைத்துக் கொள்ளலாம். ஓரளவு முதிர்ச்சி அடைந்த பின், அவருடையவை நீதி நூல்கள் போல தோன்ற ஆரம்பிக்கும் என்று நினைக்கின்றேன். ஒவ்வொருவரின் ரசனையும், அனுபவங்களும் தனித்தனியானவையே........... நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற மூவரும் ஜாம்பவான்களே. 'ஜெமோவின் ஏஜண்ட்' என்று என்னைச் சொல்வான் என்னுடைய தனித்தமிழ் நண்பன். ஆனால், இங்கு களத்தில் வந்து பார்த்தால், கிருபன் தான் ஜெமோவின் பிரதான ஏஜண்ட்.........🤣. ஜெமோவின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் எல்லா நியாயங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஆனால் அவரின் ஆக்கங்களை வாசித்தபடியே போய்க் கொண்டிருக்கலாம்.
  36. அவர்கள் 12 மணத்தியால கணக்குக்குள் வரவில்லை என நினைக்கிறேன்🤣.
  37. பசுவூர்க் கோபி .....குறுங்கவிதை அழகு ......இத்தனை காலம் பத்திரப்படுத்தி வைத்து இருப்பதற்கு ஒரு பாராட்டு . உங்கள் முன் பெயரின் (பசுவூர் ) அர்த்தம் என்ன வென்று கேட்கலாமா ?
  38. எல்லோருக்கும் தலைவராக வர விருப்பம் இருக்கும். அரசியலில் தலைவராக வருவது இலகுவானதல்ல. ஜனவசியம் இருக்கவும் வேண்டும். முடிவுகளை உறுதியாககவும், சரியாகவும், வேகமாகவும் எடுக்கவும் வேண்டும். அதிகாரத்தைப் பாவித்து கட்சியைக் கட்டும்கோப்பாகவும் வைத்திருக்கவேண்டும். அப்படி ஒரு ஆளுமையுள்ள தலைவர் தமிழர்களின் தேசியக் கட்சிகளில் இல்லை!
  39. உங்கை மட்டுமே இஞ்சை வெளிநாடுகளிலையும் சொல்லி வேலையில்லை.... அதை ஏதோ திறமை எண்டு நினைக்கினம் போலை....😂
  40. அழகிய கிராம வாழ்க்கையை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.☝ அந்த சொர்க்க காலம் இனி வராது. நன்றி பசுவூர்க்கோபி👍🙏
  41. பாலபத்திர ஓணாண்டி, 2009 மேயுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லாது போகிறது. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை போராளிகளுக்கும், அமைப்பில் பணி புரிந்தோருக்குமான தேவைகளை எல்லாம் விடுதலைப் புலிகளே பார்த்துக் கொண்டார்கள். திடீரென எல்லாம் அழிந்தபின் அவர்கள் வாழ்வதற்கான வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. போதாததற்கு அரசாங்கத்தினால் ஏற்படும் அச்சமும் அவர்களிடம் சேர்ந்து கொள்கிறது. விரைந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். எங்களில் பலர் வீட்டை, காணியை, நகைகளை விற்று அல்லது கடன் வாங்கியே வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் கையில் உள்ளதைத்தானே விற்பார்கள். ஆகவே நீங்கள் அமரதாஸை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் உங்களை அவர் தங்களில் ஒருவனாகத்தான் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அவர் உங்களுக்குப் photoக்களை அனுப்பியிருந்தால், அது அவர் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். உங்கள் கைகளில் படங்கள் வரும் போது அது பரவலாக பலரைச் சென்றடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் எண்ணியிருக்கலாம். பணம் தந்தால்தான் படங்களைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தாலும் கூட அதை பிழை என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கும் வாழ வழி வேண்டும் அல்லவா?
  42. கோசன் எனக்குப் பிடித்த அற்புதமான கருத்தாளர். உங்களைப் பார்த்து அல்லது உங்களுடன் சேர்ந்து, அடுத்த கருத்தாளர்களை bully பண்ணுவது, நக்கல் அடிப்பது, இடையூறு செய்வது போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொண்டு விட்டன. ரசோதரனுடனான கருத்தாடலில், தயவுடன் குழப்ப வேண்டாம் என்று அவரை கோர வேண்டிய நிலை. இதோ, உங்கள் சேட்டையை பாருங்கள். ஓய்வு பெற்ற பின் பல வழிகளில் நேரத்தை செலவிடலாம். ஆனால், cyber bullying நல்லதல்ல. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பவர்கள் மீது நீங்கள் வன்மத்துடன் தாக்குவது அழகல்ல, அசிங்கம். நான் உங்களுக்கு பதில் அழிக்காமல் நகர்ந்தாலும் விடாமல் திரத்தி பின் சொறிச் சேட்டை விடுவதே உங்கள் வழமை! ஏதோ, நல்லா இருங்கள். 🙏
  43. நீங்கள் சொல்வது சரியே, நாதமுனி. நீங்க சொல்வது போலவே, அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் நாங்கள் அவர்களின் சாதி அடுக்குக்குள், அதன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் சமூக, அரசியல் அமைப்புகளுக்குள் ஆழமாக போகத் தேவையேயில்லை. ஆனால், நான் ஆழமாக போகவேண்டி இருந்ததிற்கு இரண்டு காரணங்கள்: 1. நீங்கள் என்னிடம் கேட்டிருந்த ஒரு கேள்வியும், நீங்களே சொல்லியிருந்த விளக்கமும்: "நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா? எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்." 2. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான் ஒரு அயல் நாட்டுத் தமிழனே இல்லை. எனக்கு இலங்கையின் வடக்கு கிழக்கை விட தமிழ்நாடு தான் அதிகப் பரிச்சயம். ஒப்பிடுகையில், அதிகமான ஆட்களை எனக்கு தமிழ்நாட்டில் தான் பழக்கம். நான் அவர்களின் தமிழைக் கூட சில வட்டாரவழக்குகளில் அப்படியே பேசுவேன். இதன் பின்னணி, எங்கள் பலரினதும் வாழ்வில் இருப்பது போன்ற, துன்பமும், அலைச்சலும் தான். இது ஒரு மகிழ்வோ அல்லது பெருமையோ கிடையாது. இவற்றை கதைகளாக எழுதினால் அனுதாபம் கிடைக்கும், ஆனால் அது என்னத்திற்கு................... அங்கிருக்கும் ஊர்கள் மட்டும் இல்லை, எம்மவர்களின் அகதி முகாம்களும் தெரியும். அங்கு தங்கியும் இருக்கின்றேன். எம்மவர்கள் ஏதாவது பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால், அங்கே யாரிடம் போகின்றார்கள் என்றும் தெரியும். நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஆட்களிடம் இல்லை. அவர்களை நான் அங்கே பார்த்ததே இல்லை. தமிழ்நாட்டு அரசியல் பற்றிய என்னுடைய பார்வை தமிழ்நாட்டுக்காரர் ஒருவருடையதாகவே இருக்கின்றது. 'முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடுங்கள், அது தான் முக்கியம்...............' என்று தான், என் தமிழ்நாட்டு நண்பர்கள் போலவே, நானும் நாதகவிற்கு சொல்கின்றேன்..............
  44. அரைகுறையாய் வரலாற்றை படித்துவிட்டு அத்துடன் தான் இட்டுக்கட்டிய கற்பனைகளை சேர்த்து, தான் நீண்ட காலமாய் காவித்திரியும் அந்த இத்து போன தனது போத்துகேய வரலாற்றை உண்மையாக்கி சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதிக்கு முட்டுக்கொடுக்க ஒருவர் படாத பாடுபடுகிறார். சீமானின் தம்பிகள் போல இங்கு சிந்திக்கும் அறிவு அற்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பு போலும். சீமானுடன் சேர்ந்தாலே பொய்யும் புரட்டும் வியாதியை போல் பரவி விடுகிறது போலும்.
  45. முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி. இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன். மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன. சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன். ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள். நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே. தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு. அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே. பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன். சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்.
  46. ஹங்கேரி ஜனாதிபதி விக்ரர் ஓர்பன் கேரளாவிற்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று எடுத்த படம். 😂
  47. இணையவன், நீங்கள் / நாங்கள் கரடியாக கத்தினாலும், தலையைக் குத்தி தாளம் போட்டாலும், எங்கள் சனம் திருந்தாது. பலவிதமான ஆய்வுகளுட்பட்டு, பரிசோதனை சுற்றுகளெல்லாம் முடிந்து வெளி வரும் ஒரு மருந்தையோ அல்லது தடுப்பூசியையோ நம்பாமல் சதிக்கதைகள் எல்லாம் சொல்லுவினம், ஆனால் இப்படி ஒரு குடி நீரை அல்லது பானத்தை அப்படியே நம்பி குடிப்பினம். ஆட்டு மந்தைக் குணம். இன்னும் ஒரு முட்டாள் கூட்டம் இருக்கு. அக் கூட்டம் " நீ ஆங்கில மருந்தைத் தான் நம்புவாய், ஆனால் இப்படியான மருந்துகளை நம்ப மாட்டாய்" என்று புளிச்சல் ஏவறைக் கதைகள் கதைப்பினம். இப்படி தவறான பானத்தை நம்பி பருகி நோயில் வீழ்ந்தவர்கள் எனக்குத் தெரிந்து இருவர் உள்ளனர். இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் செய்கின்றவர்கள். கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பாமரர்களைக் காட்டிலும் இவற்றை அதிகம் நம்புவது எம் மக்கள் மத்தியில் இருக்கும் படித்தவர் கூட்டம் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.