Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    33600
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3061
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    7054
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/05/25 in Posts

  1. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .
  2. "கரை கடந்த புயல்" நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி] திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர். இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்­கி­ழமை மாலை வரை, நிலவும் சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை இரண்டு இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளதுடன் நால்வர் உயி­ரி­ழந்­துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்­ளனர். இது தவிர 9 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்துடன் 8 வீடுகள் முழு­மை­யா­கவும், 620 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திரு­கோ­ண­ம­லையில் 1537 குடும்­பங்­களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்­வதால் அப்­ப­கு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்­ற­ராகக் காணப்­படும் எனவும் ஆழ்­கடல் பகு­தி­களில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்­பதால் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கட­லுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரி­வித்தது. செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால் கவிழ்வதைக் கண்டனர். "கால் ஏமுற்ற பைதரு காலைக் கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு" 'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது. இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது. அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. "கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம் வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம் வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம் சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" "புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். “அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான். "உரு கெழு யானை உடை கோடு அன்ன, ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ வில் எறி பஞ்சி போல, மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே" 'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான் கவிதா இருந்தாள். நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர். செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி, திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள். அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை அல்லது முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார். "புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, ''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என, நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, வதுவை நல் மணம் கழிந்த பின்றை" திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறினர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர். "புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர். புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும். செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள். "புளகாங் கிதமே புறவேலி யாக. கன்னந் தனில் நீ சின்ன மாகள். அடைக்கலப் பொருள்போல் அமையப் பேணும்" [காதா சப்த சதி 1 - 69] [காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்] ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது. ட்ரம்ப் வருவதால் உலகத்திற்கே பெரும் கேடு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தேன். என்ன கேடு, அவர் எங்கே யுத்தம் செய்யப் போகின்றார் என்ற ஒற்றை வரிக் கேள்விகள் தான் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. ஒரு மனிதனை புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு எவ்வளவு நாட்களும், எத்தனை நிகழ்வுகளும் தேவை. இவர் போன்ற ஒருவரால் சர்வமும் நாசம் தான். 20 இலட்சம் மக்களை 'நீங்கள் உங்கள் மண்ணை விட்டு வேறு எங்கேயாவது போங்கள்...................' என்று சொல்லுவது எந்த யுத்தம் அளவிற்கும் கொடுமையானதே. என்ன ஒரு திமிரும், அறியாமையும் வேண்டும் இப்படிச் சொல்லுவதற்கு. சூடானில் பாடசாலையில் கொடுக்கப்படும் அந்த ஒரு நேர உணவிற்காகவே பாடசாலை போகும் அந்தச் சிறுவர்கள், அமெரிக்க உதவியை நிற்பாட்டிய பின், இன்று என்ன செய்வார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்ற அந்த நினைவே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதுவா இவர் வந்தால் உலகத்திற்கு கிடைக்கும் நன்மை. அதுவும் ஒரு வருடச் செலவே சில பில்லியன் டாலர்கள் மட்டுமே. பக்கத்தில் இருக்கும் நாடு கனடா. முழு உலகத்திலேயேயும் உற்ற தோழன் அது தான். அதனுடனேயே தகராறா............ இத்தனைக்கும் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் போகும் குடியேறிகளும், போதைப் பொருட்களும் தான் மிக அதிகம். கனடாவை பகைப்பதால், பயப்படுத்துவதால், என்ன சமாதானம் இங்கே கிடைத்து விடப்போகின்றது. இங்கு அமெரிக்க உள்நாட்டில் இவருடைய மற்றும் இவரின் சகாக்களின் நடவடிக்கைகளை நீதிமன்றின் மூலம் கேள்வி கேட்கலாம். ஆனால், இவர்களின் அறியாமையினாலும், அதிகாரம் உள்ள திமிரினாலும் உலகிற்கு வந்து சேரப் போகும் கேடுகளுக்கு எவரைப் போய் கேட்பது.....................😌.
  4. புதிர் இது தான்: முன்னைய தலைமுறையினரை விட, தற்போதைய இளையோர் - குறைந்த பட்சம் மேற்கு நாடுகளில்- மது அருந்துவதும், புகை பிடிப்பதும் குறைவாக இருக்கிறது. மது விற்பனை கூட குறைந்திருக்கிறது. சிவப்பு இறைச்சியை, வேகனிசம், ஆரோக்கியம் போன்ற காரணங்களால் இளையோர் தவிர்ப்பதும் அதிகரித்திருக்கிறது. இப்படி பல முன்னேற்றங்கள் இருந்தும், சில வகைப் புற்று நோய்கள் இளையோரில் அதிகரித்திருக்கின்றன. சில ஊகிக்கக் கூடிய காரணங்கள், தண்ணீர், சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் (micro and nano-plastics) மாசு என்பனவாக இருக்கலாம். ஏனெனில், பல இள வயது புற்று நோய்கள், பெருங்குடல் புற்று நோய்களாக இருக்கின்றன. இன்னும் சில காரணிகளாக, குடல் நுண்ணங்கிகளை (gut microbiome) மாற்றும் வெளிக்காரணிகள். உதாரணமாக, தூக்கமின்மை, அல்லது ஒழுங்கான தூக்கமின்மை, ஒளி உமிழும் (light) மூலங்களை மணிக்கணக்காகப் பார்த்து, தூங்கும் போது கூட குறைத்தூக்கம் கொள்வது. இவை கூட காரணங்களாக இருக்கலாம்.
  5. கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்! "....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes" https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள். விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி! என் மனக் குரல் சொல்வது: "சாவுங்கடா".
  6. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 27 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 27 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
  7. சுதந்திரதினம் நாளையாம்…. தம்பி எத்தனைபேர் நாளைக்கு கொழும்பு போறியள்.. போனும் புதிசாய் வாங்கியிருப்பியள் போதாக்குறைக்கு பேசிலும் காசு நிரம்பி வழியும்.. கால்பேசுத் திடலில் கையில் போன் தக தகவென்று படம் பிடிக்க வாய் என்னவோ வர்ணஜாலம் செய்யும்.. இதுக்கென்ன உங்கடை காசா போகுது.. வருந்தி உழைக்க அண்ணன் வெளிநாட்டில்… வட்டியா குட்டியா.. வாயிலை வந்ததை சொல்லி சுதந்திர தினத்தை வாழ்த்து.. வசனங்கள்.. போட்டு வருகைதரும் பார்வையாளர் தொகை கூட்ட வார்த்தையை கவனமாகப் பாவி… வல்வெட்டித்துறைக்கு அனுரவந்ததை அடித்துத் துரத்திய இடத்தில் அனுரவந்து வெற்றி முழக்கம்…. தலைப்பு அருமைதம்பி…இங்கு தலை குனிந்தது..தமிழினம்தான்.. உன்னுடைய யூடுயூபின்பெயரோ ஈழம் ஸ் ரீட் வு லக் நிச்சயம் உனக்கு சுதந்திரம் விளையாடு… வார்த்தைக்கு வார்த்தை அனுர புகழ்பாடும் தம்பி.. மகிந்தவின் வீடு கிழப்பலுக்கு வார்த்தையாலம்தான் செய்வார் மகிந்தவுக்கு வடிவாக கடிதம் எழுத மாட்டார் ஏன் தெரியுமா தம்பி…. தென்பகுதி அரசியல்வேறு.. வடபகுதி அரசியல் வேறு… வார்த்தை ஜாலத்தால் வெட்டிவிழுத்தலாம் வடபகுதியை. ஏனெனில் எழுத்து மூலத்தில் எதையும் நீங்கள் கேட்கமாட்டியள் தலைவர்கள் முதல் தம்பிவரை பூம் பூம் மாடுகள்…இதுதான் அவருடைய சுதந்திரம் படம் கிளியர் இல்லை உடனடியாக போனுக்கு காசனுப்பு அண்ணன் உயிருக்கு பயந்தோ உழைப்புக்காகவோ வெளிநாட்டில் அசைலம் அடிக்க உதவினதும் ஈழப்போராட்டம்தான் தம்பி அந்த நன்றிக் கடனாவது உனக்கிருந்தால் உப்பிடியெல்லாம் தலைப்புப்போட்டு உசுப்பேத்த மாட்டாய் தம்பி உனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது தம்பி.. அனுபவி ராசா அனுபவி.. பிரியாணிக்கடை பரோட்டக்கடை போயே மில்லியனில் உழைப்பவன் காசு வாங்கிவிட்டு கடை திறக்க வந்தவரை… கோயில் கட்டி கும்பிடாத குறையாக முன்னாலும் பின்னாலும் வழிந்து திரிந்தியளே அப்பவே அவன் நினைத்திருப்பான் இவங்களா ஈழத்துக்கு போராடின சனம்.. இந்த ஜன்மங்களா அவ்வளவுக்கு வழிகின்றீர்களே உங்கடை சுதந்திரதாகம் ஓசிப் பிரியாணிக்கும் ஓடி ஒடி படப்பிடிப்புக்கும்தான் சரி அவன் முன்னொரு தடவை சொன்னது சரியென நினைத்திருப்பான்... போதும்..போதும் போன் கிடைத்தால் போறடமெல்லாம் போகஸ் பண்ணி படமெடுத்து போடுவது உங்கள் சுதந்திரம் தம்பி இப்பவும் போரில் தொலைத்தவர்களை தேடும் உறவுகளை யோசியுங்கள் நிலமிழந்து அலைபவரை பாருங்கள் உறவினரை இழந்த அனாதைகளை யோசியுங்கள் அப்ப தெரியும் உங்கள் சுதந்திரத்தின் வலி அனுபவியுங்கள்...உங்கள் சுதந்திர தினத்தை
  8. ட்ரம்ப் பதவிக்கு வந்தது இனங்களுக்கிடையே, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து. பெரும்பான்மையான அமெரிக்கர்களை வெறுப்பின் மூலம் ஒன்றிணைத்து வெற்றி அடைந்தார். எவரெவர் சமூகங்களிற்கிடையே, தேசியவாதம், இனத்தூய்மைவாதம் எனும் போர்வையில் வெறுப்பை விதைத்து பெரும்பான்மையானோரை ஒன்றிணைக்க முயல்கின்றனரோ அவர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அப்படியான விசச்செடிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு ட்ரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார்.
  9. Jerry Purpdrank · Suivre · Sheep shows gratitude to the dog who saved them from a wolf attack
  10. கூடஇருந்து குழிபறித்தல் , உறவாடிக் கெடுத்தல் போன்ற போன்ற விதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் இந்தியா முதலாவதாகக் கூட வந்திருக்கும் ........!
  11. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒரே பொய் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு உள்ளது. 15 -16 வயதில் செய்திகளை வாசிக்க தொடங்கும் ஒரு இளைய தலைமுறையின் சிந்திக்கும் முறை இந்த சீமான் வகையறாக்களால் மாற்றப்பட்டு உள்ளது விஷப் பாம்புகளை இனியும் விட்டு வைக்கக் கூடாது
  12. இதில் இவர்களுக்கு அப்பிடி என்ன வெற்றி கிட்டியது? இவ்வளவு பணத்தை செலவிட வைத்து, அமெரிக்க எல்லையை கண்காணித்து அப்பிடி என்ன செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. இந்த எல்லையால் அமெரிக்காவுக்கு வரும் fentanyl இல் அளவு மொத்தத்தில் வெறும் 0.2%. கிட்டதட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடலாம். சட்டவிரோத குடியேறிகளும் அங்கிருந்து வருவது குறைவு. Trump இற்கு கை சுட்டு விட்டது, தான் வெற்றி பெற்றேன் என்று அவரது மறைகழண்ட ஆதரவாளர்களுக்கு காட்டவேண்டிய தேவை வந்துவிட்டது. மேலே நிழலி எழுதியது போல, இதன் விளைவு கனடா மக்களை இன மதம் பார்க்காமல் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரவைத்தது. இதன் பொருளாதார அடி கொஞ்ச நாட்களில் இங்கு எதிரொலிக்கும். தற்போது இவருக்கு வாக்கு போடாத blue states எனப்படும் ஜனநாயக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கை வைக்கத்தொடங்கியுள்ளார்.
  13. ஶ்ரீலங்கா, பங்களாதேஷ், மாலதீவுக்குத்தான்…. இந்தியா சக்தி வாய்ந்த நாடு. உலகத்துக்கு அல்ல. 😂 உள்ளூர் பொலிஸ்காரனை… உலக பொலிஸ்காரன் ஆக்குவது கேவலம். 🤣
  14. இலங்கையின் பொருளாதார அளவை அமெரிக்காவுடன் ஒருபொதுமே ஒப்பிட முடியாது. அமெரிக்கா அரச வருமானத்தில் கிட்டத்தட்ட 19% வட்டி கட்டுகிறார்கள், இது அதிகம் என்றாலும், மோசமான நிலை அல்ல, செலவை குறைக்க வேண்டும் என்பது உண்மை, அனால் குறைப்பதுக்கு வேறு நிறைய வழிகள் உள்ளன, மக்களின் social security யில் கை வைக்கக்கூடாது, அது மக்கள் வேலை செய்யும்போது அவர்களிடம் இருந்து எடுத்த பணம்.
  15. கனடிய மக்கள் கண்டிப்பாக ட்றம்ப் இற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். ட்றம்பின் வரி விதிப்பு நடவடிக்கையை கனடிய மக்கள் தம் மீது அவர் bullying செய்கின்றார் என்ற வகையிலேயே எடுத்துக் கொண்டு உள்ளார்கள். இது உறங்கிக் கிடந்த கனடிய தேசியவாதத்தை முதுகில் படீர் என்று ஒரு போடு போட்டு எழுப்பி விட்டுள்ளது. அமெரிக்க பொருட்களை புறக்கணிக்குமாறு அரசியல் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக செவி சாய்க்கத் தொடங்கியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இது பற்றிய விளக்கங்களும், அமெரிக்க பொருட்களுக்கு நிகரான கனடிய பொருட்களின் பட்டியல்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றனர். சாதாரண பலசரக்கு கடைகளில் இருந்து, Costco போன்ற பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளில் கூட அமெரிக்க பொருட்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சியை நான் நேற்று அவதானித்தேன். நான் நேற்றுடன் நெட்பிளிக்ஸ் கான என் எக்கவுண்டை கான்சல் செய்து விட்டேன். ஆயிரக்கணக்கானோர் என்னைப் போன்றே நெட்பிளிக்ஸ் இல் இருந்து விலகியுள்ளனர். அமேசன் கனடாவில் பெருமளவு முதலிட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான கனடியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளதாலும் அதை தொடர்கின்றேன். கனடாவின் அதிரடியான பதில் நடவடிக்கைகள் தான் ட்றம்ப் இற்கு அழுத்தம் தந்து, ஒரு மாதத்துக்கு வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் அவசியத்தை கொடுத்தது. இந்த ஒரு மாதம் என்பது கூட ஒரு வகையான black mail தான். வரி விதிப்பை முற்றாக கைவிட்டால் கூட, கனடா வர்த்தகத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இன்றைய நிலையில் இருந்து முற்றாக விடுபட்டு, ஐரோப்பா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தகளை உருவாக்க வேண்டும் என்ற குரல் கனதியாக வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஒன்று மட்டும் நிச்சயம். அமெரிக்காவை நம்பினார் கைவிடப் படுவார்!
  16. இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வருடப் போட்டியை நடத்த யாழ். இந்து கல்லூரி முன்வந்தமை பாராட்டுக்குரியதாகும். பம்பலப்பிட்டி கல்லூரி அடுத்த வருடம் தனது பவள விழா கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளதால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப் போட்டி தொடர்பான ஊடக சந்திப்பும், அனுசரணை வழங்கும் நிகழ்வும் தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக் க்ளப் (TU & AU) கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் பேசிய ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டர், 'வடக்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் தெற்கிலுள்ள இந்து கல்லூரிக்கும் இடையிலான இந்தப் போட்டி மிகவும் சிறப்வுவாய்ந்ததாகும். இந்த மாபெரும் கிரிக்கெட் சமருக்கு அனுசரணை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்' என்றார். இதேவேளை, இந்துக்களின் சமர்' ஒரு மறக்க முடியாத மாபெரும் கிரிக்கெட் போட்டியாகும் என ஜனசக்தி குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கமிக்க டி சில்வா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'சமூகங்களையும் குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவி விளையாட்டுத்துறை யாகும். 400 கிலோ மீற்றர் வித்தியாச தொலைவில் இருக்கும் இந்த இரண்டு பாடசாலைகளும் விளையாட்டுத்துறை மூலம் சகோதரத்துவத்தை கட்டி எழுப்ப முடியும் என்பதையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை உருவாக்கமுடியும் என்பதையும் வெளிப்படுத்திவருகின்றன' என்றார். இப் போட்டிக்கான அனுசரணை உதவுத் தொகைக்குரிய மாதிரி ஆவணத்தை ஜனசக்தி குழுமத்தின் ஸ்தாபகரும் அதிபருமான சந்த்ரா ஷாவ்டரிமிருந்து யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளைத் தலைவர் ஜீ. வசந்தன் பெற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/205689
  17. பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக செய்திகள் 4 பிப்ரவரி 2025, 03:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். "இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயமும் இல்லை. இது எனக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை". கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லுயிசாவுக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தது. நான்கரை மாதத்துக்கு மேல் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், அவரது மார்பகத்தின் ஒரு பகுதியை நீக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் ரேடியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் லுயிசாவுக்கு புற்றுநோய் சிகிச்சை நிறைவடைந்தது, ஆனால் புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க அவர் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. "கீமோதெரபி மிக தீவிரமாக இருந்தது, ஆனால் எனது உடல் அதனை நன்கு தாங்கிக்கொண்டது. அதற்கு நான் சுறுசுறுப்பாக இருந்ததும் உடலை வலுவாக வைத்திருந்ததும்தான் காரணம் என்பேன்", என்று அவர் நினைவுகூர்ந்தார். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. புற்றுநோய் வராமல் ப்ரோக்கோலி தடுக்குமா? ஆய்வில் புதிய தகவல் இந்த நான்கு வகை புற்றுநோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் புதிய சிகிச்சை முறைகள் பற்றித் தெரியுமா? சர்க்கரை, செயற்கை இனிப்பு, செல்போன் கதிர்வீச்சு ஆகிய மூன்றும் புற்றுநோயை உண்டாக்குமா? பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை "நல்வாய்ப்பாக, எனது மார்பகத்தை முழுமையாக அகற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனது முடியை இழக்க வேண்டியிருந்ததுதான் இதில் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது, நான் பயந்துபோவேன். இது எனது குழந்தைகளையும் பாதித்தது." லுயிசாவைப் போலவே உலக அளவில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரின் முன்னோர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ரீதியாகவோ, சூழலியல் மற்றும் வாழ்வியல் காரணங்களால் வயது முதியவர்கள் மத்தியில் புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் வயதடையும்போது, உயிரணு பிரிதல் அதிகரிக்கும். இது பிறழ்வுகள் (mutation) உருவாக வழிவகுக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது எனவே, புற்றுநோயியல் நிபுணர்கள் நீண்ட காலமாக இளம் வயதினரிடையே மார்பகப் புற்றுநோயில் BRCA1 மற்றும் BRCA2 பிறழ்வுகள் போன்ற மரபணு காரணிகளுடன், இளம் வயதினருக்கு ஏற்படும் ஆரம்பகால புற்றுநோய் வருவதைக் கண்டறிவதை இணைத்து வருகின்றனர். இருப்பினும், லுயிசாவைப் போன்ற அதிகமான நோயாளிகளுக்கு, மரபணு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பிபிசி செய்தி அறைக்குள் நுழைய விருப்பமா? - மெட்டாவெர்ஸ் உலகுக்கு உங்களை வரவேற்கிறோம்3 பிப்ரவரி 2025 மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆரம்பகால புற்றுநோய்கள் குறித்த ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது. அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகள் பிஎம்ஜே என்னும் புற்றுநோய் இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, 1990 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் 50 வயதுக்குட்பட்டவர்களின் ஆரம்பகால புற்றுநோயின் பாதிப்பு 9% அதிகரித்திருப்பதாகவும், இவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்புடைய மரணங்கள் 28% அதிகரித்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய்களை பகுப்பாய்வு செய்தது. இதேபோல், தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்காவில் தலைமுறை தலைமுறையாக 17 வகையான புற்றுநோய் பாதிப்பு சதவிகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது, குறிப்பாக Gen X மற்றும் மில்லினியல்ஸ் (1965 மற்றும் 1996க்கு இடையில் பிறந்தவர்கள்) மத்தியில் இது அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. 2012 மற்றும் 2021க்கு இடையில் 50 வயதுக்குட்பட்ட வெள்ளையின பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் ஏற்படும் விகிதம் ஆண்டுக்கு 1.4% உயர்ந்த நிலையில், அது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் 0.7% ஆக இருந்ததாக, அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் (ACS) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. பிஎம்ஜே புற்றுநோய் இதழில் நாசித் தொண்டை, வயிறு, பெருங்குடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா காட்டுத்தீயின் போது மீட்கப்பட்ட 100 வயது மூதாட்டி3 பிப்ரவரி 2025 ராஜீவ் காந்தி ஓட்டிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயன்றது ஏன்? ரா உளவு அமைப்பு தடுத்தது எப்படி?3 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளம் வயதினரிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதிகரிக்கும் புற்றுநோய் வளர்ச்சி, பல பத்தாண்டுகளாக புற்றுநோய் தடுப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மாற்றியமைக்கக்கூடும் என்ற அபாயம் இருப்பதாக லேன்செட் ஆய்வு எச்சரிக்கிறது. பிஎம்ஜே புற்றுநோய் இதழ் மற்றும் லேன்செட் அறிக்கைகளின்படி, சிவப்பு இறைச்சி (ஆடு, மாட்டிறைச்சி போன்றவை) மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகள், பழங்கள் மற்றும் பால் குறைவாக உள்ள உணவுமுறை போன்றவற்றுடன், அதிகளவு மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவையே முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன. மேலும் உடல் பருமன் ஏற்படுவதால் வரும் உடல் வீக்கம் மற்றும் ஹார்மோன் ஒருங்கின்மை போன்றவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் 17 வகை புற்றுநோய்களில் சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை போன்ற 10 வகை புற்றுநோய்கள் உடல் பருமன் தொடர்பானவை என்று லான்செட் அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கவில்லை. ஆனால், அனைத்து புற்றுநோய் நேர்வுகளையும், இந்த காரணங்கள், விளக்குவதில்லை. புற்றுநோய்க்கான மற்ற காரணங்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின் சாதனங்கள் அல்லது தெருவிளக்குகள் மூலம் செயற்கை ஒளி தொடர்ச்சியாக உடலில் படுவது நமது உடல்நிலையை பாதித்து மார்பு, பெருங்குடல், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர். இரவில் அதிக நேரம் ஒளி படும்படியாக இரவு நேர பணியில் பணியாற்றுவது மெலடோனின் அளவுகளை குறைத்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை ஊக்குவிக்கக்கூடும் என பிற ஆய்வுகள் கூறுகின்றன. ஜூன் 2023-ல் நியூசிலாந்தை சேர்ந்த பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரான்க் பிரிசெல் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்குவதில் நுண் நெகிழிகளின் பங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது ஆணுறையில் ஊசியால் ஓட்டையிடுவதைப் போல பெருங்குடலின் மேல் உள்ள பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்துவது போன்றது என்று குறிப்பிட்டார். கர்நாடகாவில் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்க அனுமதி - முக்கிய செய்திகள்1 பிப்ரவரி 2025 மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் தனது குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாக லுயிசா கூறுகிறார் உயரமாக இருந்தால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்குமா? உணவில் சேர்க்கப்படும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட எமல்சிஃபையர்கள் மற்றும் நிறமூட்டிகள், குடல் அழற்சி மற்றும் டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். புற்றுநோய் ஆய்வுக்கான அமெரிக்க சங்கத்தின் கூற்றின்படி, குடற் செயல்பாடு கோளாறு, பெருங்குடல் புற்றுநோயோடு மட்டுமல்லாது, மார்பக மற்றும் ரத்த புற்றுநோயோடும் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்பாடு குடல் நுண்ணுயிரிகளை பாதிப்பதால், அதுவும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடு 2000-ம் ஆண்டிலிருந்து சுமார் 45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, குறிப்பாக சிறார்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இது, நுரையீரல் புற்றுநோய், நிணநீர் மண்டல புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக செல் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பிளாஸ்மா செல்களில் உருவாகும் ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது என, 2019-ல் வெளியான அறிக்கையில் இத்தாலியை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருந்தது. தலைமுறைகளுக்கிடையில் அதிகரிக்கும் சராசரி உயரம் கூட புற்றுநோய் உருவாவதற்கு பங்களிக்கலாம் என, ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பெருங்குடல் சிகிச்சை நிபுணரும், பிஎம்ஜே ஆன்காலஜி அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் மால்கம் டன்லப் குறிப்பிடுகிறார். "மனித இனத்துக்கு பொதுவாக உலகம் முழுவதும் உயரம் கூடிக்கொண்டிருக்கிறது. உயரத்துக்கும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களுக்கும் வலுவான நேரடித் தொடர்பு உள்ளது." என்கிறார் அவர். அதிக செல் உற்பத்தி, இயல்பாக உருவாகும் வளர்ச்சி ஹார்மோன் தாக்கம், அதிக பெருங்குடல் பரப்பு போன்றவற்றை அவர் புற்றுநோயுடன் தொடர்புப்படுத்துகிறார். புற்றுநோய் மரபியலில் உலகில் முன்னணி நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் டன்லப், ஒரே ஒரு காரணமல்லாமல், பல்வேறு காரணிகள் ஒரே நேரத்தில் இணைவதுதான் இளம் வயதில் புற்றுநோய் ஏற்பட காரணம் என்றும் இருப்பினும் அவற்றை அடையாளம் காண்பது கடினம் என்றும் நம்புகிறார். "பெரும்பாலான அபாய காரணிகள் உரிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை," என குறிப்பிடுகிறார். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த அபாயம் குறைவு என்பதால் இளையவர்கள் அனைவரையும் புற்றுநோய் சோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமான பொருட்செலவாக இருக்காது என்றும் கூறுகிறார். என்ஐசி எனப்படும் அமெரிக்க தேசிய புற்றுநோய் மையத்தின் கூற்றுப்படி, 80 விழுக்காடு புற்றுநோய்கள் 55 வயதுக்கு மேற்பட்டோரிடம்தான் கண்டறியப்படுகிறது. இராசகேசரி பெருவழி: முதலாம் ஆதித்த சோழன் வணிகர்களுக்காக அமைத்த நிழல் படை என்ன செய்தது?2 பிப்ரவரி 2025 தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் போது நீர் அருந்தலாமா?1 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,BRAZILIAN SOCIETY OF CLINICAL ONCOLOGY படக்குறிப்பு, தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என்கிறார், மருத்துவர் லெக்ஸாண்ட்ரே ஜேகோம் புற்றுநோயின் புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள் இருப்பினும் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலை, இளம் நோயாளிகளிடம் தோன்றும் அறிகுறிகள் கவனிக்காமல் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை பொது மருத்துவர்களிடையே ஏற்படுத்த சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) போன்ற முக்கிய அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. "60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மலம் கழிப்பதில் சிரமம், சோர்வு, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளை சொல்லும்போது , மருத்துவர்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார்கள். இருப்பினும், 30களில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளவர்களாக கருதப்படாதவர்களுக்கும் இந்த அறிகுறிகள் சாதாரண வலிகளாக கண்டுகொள்ளாமல் விடப்படலாம்." என விளக்குகிறார் பிரேசிலின் புற்றுநோய் மருத்துவத்திற்கான சங்கத்தின் இயக்குநர் மருத்துவர் அலெக்ஸாண்ட்ரே ஜேகோம். தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என அவர் விளக்குகிறார். "இவர்கள், தங்கள் இளமை காலத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், தங்களுக்கான குடும்பம் ஒன்றைத் தொடங்குபவர்கள், சிறப்பாக வாழ்பவர்கள். புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிப்பது அவர்களையும் அவர்களது அன்புக்குரியவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது," என்கிறார். ஆனால் நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இளம் நோயாளிகள் பெரும்பாலும் தீவிர சிகிச்சைகளை சிறப்பாக தாங்கிக்கொள்வார்கள். இதனால் அவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர் ஜாகோம் குறிப்பிடுகிறார். இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப். "இந்த புற்றுநோய்களால் பாதிக்கப்படும் இளைஞர்கள் இந்த அபாயத்தை தங்களது வயதான காலத்துக்கும் அனுபவிக்கக் கூடும்", என்று அவர் எச்சரிக்கிறார். "இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் புற்றுநோய் தாக்கத்தின் தொடக்கமா அல்லது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா?" சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 டீப்சீக் செயலி என்பது என்ன? இது சாட்ஜிபிடி-க்கு சவால் விடுவது எப்படி?31 ஜனவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப் வாழ்க்கையை மாற்றும் அனுபவம் "கடினமான நாட்களையும், மகிழ்ச்சியான நாட்களையும் ஒரே விதமாக இருண்ட எண்ணங்கள் தோன்றியபோது, அவற்றை கடந்து செல்ல முயற்சி செய்கிறேன். நான் வலிமையாக உணர்ந்தபோது, இதுவும் கடந்து போகும் என்பதை அறிந்ததால் அந்த தருணங்களை நான் மிகவும் நேசித்தேன்", என்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற லுயிசா கூறுகிறார். "ஒவ்வொரு நாளையும் பொறுமையாக அணுகுங்கள். உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்- சில நாட்களில் ஓய்வு எடுப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியதில் சிறந்தது, அவ்வாறு செய்வது தவறில்லை. புற்றுநோய் ஒருவரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் யார் என்பதை வரையறுக்க அதை நீங்கள் அனுமதிக்க வேண்டியது இல்லை. மிகவும் கடினமான நேரத்திலும் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது", என்று அவர் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62q08xejgxo
  18. ர இதேசனம் தமன்னா வந்திருந்தாலும் தமன்னா கொடி பிடித்திருக்கும் ...பிரியாணிக்குண்டன் இர்பான் வந்திருந்தாலும் ..கொடிபிடிக்கும்....இதுக்கென்றே அங்கு ஒரு கூட்டமிருக்கு.. .. அவர் வேறை... அனுர வேறையில்லையே..
  19. No No No சாவகச்சேரி அர்ச்சுனாவுக்கு என்று எழுதியாச்சு.
  20. பெப்ரவரி மாதம் விடியுறதே உங்கள் படைப்புகளை வாசிக்கத் தான் சுவியர்….! ஆரம்பமே நல்லாயிருக்கு..!
  21. Trump நித்திரையால் எழும்பிக் கட்டிலில் குந்தியிருந்து இன்றைக்கு யாருக்கு ஆப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறார் , "இன்றைக்கு பலஸ்தீனியருக்கு வுக்கு ஆப்பைச் செருகுவோம்" என்று முடிவெடுக்கிறார். குளித்துவிட்டு வந்து நெத்தன்யாகுவுக்கு போனைப் போட்டு "பலஸ்தீனியருக்கு ஆப்பைச் செருகுவதாக முடிவு. நீர் என்ன சொல்கிறீர்? "" என்று கேட்க, நத்தன்யாகுவோ,..யோசித்துவிட்டு,..Mr. Trump ...நீர் ஏன் Gaza வை லீசுக்கு எடுக்கக்கூடாது? ஒரு போடு போட்டார். அதற்கு Trump ....இது ஒரு நல்ல Idea .....Okey . Gaza வை அமெரிக்க பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அடுத்த 99 ஆண்டுகளுக்கு நான் Gaza வை அமெரிக்காவிற்கு குத்தகைக்கு இஸ்ரேல் தரும் என்று அறிவிப்பதாக நெதன்யாகுவிற்குக் கூறுகிறார். அதன்படி Gaza அமெரிக்காவிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது. (யாவும் கற்பனை அல்ல. 😁)
  22. யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்! மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது 60 குருதிக் கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சரயன்கள், உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கி பொறுப்பு மருத்துவ அதிகாரி திருமதி தாரணி, பொது சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ், தாதியர்கள் சுகாதார ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/யாழ்._சிறைச்சாலையில்_வெற்றிகரமாக_நடைபெற்ற_மாபெரும்_இரத்ததான_முகாம்!
  23. கடையை திறங்க நாங்க சேலை வாங்க வருகிறோம்
  24. புரிகிறது! சில வருடங்கள் முன்பிருந்தே, நான், கோசான், நீர்வேலியான் உட்பட பலர் ட்ரம்ப் பற்றியும், புரின் பற்றியும், புரின் வால்களாக உருவாகி வரும் ஓர்பான் போன்றோர் பற்றியும் மீள மீளச் சொல்லி வந்திருக்கிறோம். இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தோரை இரு வகைகளில் அடக்கலாம்: 1. இந்தக் கருத்துக்களைச் சொல்வோரைப் பிடிக்காத உறவுகள், அதனால் கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டு வாதாடுவோர். 2. உலகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்ற வரலாறு கூடத் தெரியாத அறிவலட்சியர்கள். துரதிர்ஷ்ட வசமாக, இந்த இரண்டாவது வகையினர் எங்கள் சமூகத்தில் பெருகி விட்டனர். தொடர்ந்து பெருகுவர் என்றே அஞ்சுகிறேன். யாழுக்கு வெளியே, பொறியியல், உயிரியல், நிதியியல் துறைகளில் பெரிய படிப்பெல்லாம் படித்த என் நண்பர்கள் பலருக்கு, ஹிற்லர் எத்தனை பேரைக் கொன்றார் என்பது பற்றிய விபரங்கள் கூட இன்னும் தெரியாத அளவுக்கு, அறிவலட்சியர்களாக இருப்பதைக் காண்கிறேன். இதற்கு என்ன தான் தீர்வு? வீடுகளில் நம் குழந்தைகளை வாசிப்பாளர்களாக உருவாக்க வேண்டும். வளர்ந்தவர்கள் உலாவரும் யாழ் போன்ற இடங்களில் விடயம் தெரிந்தவர்கள் கூச்சப் படாமல் பேச வேண்டும். குடத்தில் வைத்த விளக்காக இருக்காமல், குன்றில் வைத்த விளக்காக இருக்க வேண்டும்! நக்கல், திட்டு, பேச்சு எல்லாம் வரும் தான்! ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு வளர்ந்தவர்கள் இருக்கும் இடங்களிலும் விடயங்களைப் பேச வேண்டும்!
  25. கைதிகள் வழங்கி இருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறன் சிறைச்சாலை ஊழியர்கள் நடாத்தி இருக்கலாம் இந்த இரத்த தான முகாம் கைதிகள் மனநிலை வேறு விரும்புவதும் இல்லை ஒரு சிலரைத்தவிர
  26. எனக்கும் ஒரு விளம்பர உதவி செய்யுங்கோ.."சிறு வயதில் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால்..." என்று ஆரம்பிக்கும் "சிட்டுக்குருவி" லேகிய பிசினஸ் செய்தால் யாழில் நல்லா ஓடும் அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்😎!
  27. படிக்கும் காலத்தில் பாடசாலைக்கு போகாமல் முனியப்பர் கோவில் கோட்டை பண்ணை போன்ற இடங்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
  28. "கரை கடந்த புயல்" கதை அமர்க்களம் 👍
  29. ஒரு அதி தீவிர வலதுசாரி பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை ட்றம்ப் காட்டிக் கொண்டு இருக்கின்றார். காசாவில் இனச்சுத்திகரிப்புக்கு அங்கீகாரம் வழங்குகின்றார். ஒரு சிங்கள அதி தீவிர இனவாதி எம் தாயக மக்களை இந்தியாவில் குடியேற்றி விட்டு, வடக்கு கிழக்கை முற்றிலும் சிங்கள மயமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடின் அது எப்படி இருக்குமோ, அவ்வாறு தான் இந்த வலதுசாரி யின் கோரிக்கையும். அமெரிக்காவை நாசமாக்காமல் விட மாட்டார்.
  30. கோட்டை முனியப்பர் மணியோசையோடு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். நீங்கள் போராடுங்கள்.நான் இருந்தபடி இரசிக்கின்றேன்.🙂
  31. சோதிடத்தைப் பற்றிய பிரத்தியேகக் கட்டுரைகளை கீழே பார்க்கவும் "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/24366525666329408/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/24413828874932420/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/24458822917099682/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/24501440722837901/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/24547155781599728/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/24591116130537026/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/24637435149238457/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/24691687010479937/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/24736573269324644/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/24788718830776754/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/24837858872529416/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/24890323107282992/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/24943993545249281/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 14 https://www.facebook.com/groups/978753388866632/posts/24993273376987964/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/25041218948860073/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/25090145337300767/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/25141261605522473/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 18 https://www.facebook.com/groups/978753388866632/posts/25196031830045450/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 19 https://www.facebook.com/groups/978753388866632/posts/25249858347996131/? "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 20 https://www.facebook.com/groups/978753388866632/posts/25304672232514742/?
  32. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில் (New York) இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமரன் (Visvanathan Rudrakumaran) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். தமிழீழ மக்கள் இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் எதிர்த்துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானால் கட்டியமைக்கபடும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியற் சூழலைக் கடந்து, ஒட்டு மொத்தத் தமிழ்நாடு மக்களும் அரசியற் கட்சிகளும் ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். விடுதலை இயக்கம் நமது விடுதலை இயக்கத்துக்கு கடினமான நேரங்களில் உறுதுணையாக நின்றவர்களுக்கு என்றும் மரியாதையுடன் மதிப்பளித்து வந்தவர். தமிழ் உணர்வுடனும் தமிழீழ விடுதலைப் பற்றுடனும் திராவிட இயக்க வழிவந்த தோழர்கள் போராட்டத்தின் ஆரம்ப காலம் முதல் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பும் பணியும் என்றும் தேசியத் தலைவரதும் தமிழீழ மக்களதும் மனங்களை நெகிழச் செய்தவை. இத்தகைய நமது சொந்தங்களுக்கு எதிரான தளத்தில் நமது தேசியத் தலைவரை நிறுத்தும் முயற்சியினை சீமான் கைவிட வேண்டும் எனவும் நாம் அவரைக் கோருகிறோம். தேசியத் தலைவரால் தனது மாவீரர் நாள் உரைகளிலும் அறிக்கைகளிலும் கடிதங்களிலும் செவ்விகளிலும் அவரால் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் மட்டுமே அவரது கருத்துகளாகக் கருதப்படும். இவற்றை விட அவர் சார்பில் கருத்துரைக்கவோ அல்லது அவரது கருத்துகளை தமது அரசியற் தேவைக்கேற்ப வளைத்துத் திரித்துப் பயன்படுத்தவோ எவரும் முனையின் அது அரசியல் அறம் அற்ற ஒரு போக்காகும். தேசியத் தலைவர் இத்தகைய அணுகுமுறை தேசியத் தலைவர் கடைப்பிடித்த அறநெறிக்கு முரணானது ஆகும். தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினையும் தமிழ்நாட்டு மக்களின் தேசியப்பிரச்சினையும் வேறுபட்டவை, தனித்துவமானவை. தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ மக்களே தலைமை தாங்க முடியும் தலைமை தாங்க வேண்டும். சிங்களத்தின் தமிழின அழிப்பில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாட்டில் இருந்து கட்சி வேறுபாடு கடந்து பரந்து பட்ட ஆதரவைத் தமிழீழ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் தமிழீழத் தேசியத் தலைவரையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழுத்து விடும் முயற்சிகளை சீமான் உட்பட எந்த அரசியற்கட்சித் தலைவர்களும் மேற்கொள்ளக்கூடாது என்பதே நமது வேண்டுதல்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/gov-of-tamil-eelam-based-abroad-condemns-seeman-1738583911
  33. நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளின் அழிவுக்கு பின்னர் செய்த ஒரே நல்ல சம்பவம் இதுதான் இவர்கள் எல்லோரும் தமது வண்டவாளங்கள் வெளியே தெரிந்து விட்டதே என்று எல்லாம் எண்ணி தலைகுனிவார்கள் என்று எதிர்பார்க வேண்டாம் இவர்கள் இப்பொழுது உரித்திரகுமாரை வைத்து உரிக்கப் போகின்றர்கள் ஓம் மிகவும் காலம் தாழ்த்தி சொல்லப்பட்ட செய்தி இது. கிட்டத்தட்ட 15 வருடமாக பரப்பப் பட்ட பொய்யை இந்த செய்தி எளிதில் வீழ்த்தி விடாது. ஒரு தலைமுறையையே மூளைச் சலவை செய்ய வைத்து இருக்கின்றான் சீ சீமான்
  34. ஒம்…இப்போதைக்கு இது conspiracy theory தான். சந்தர்ப சாட்சியம் கூட இல்லை. ஆனால் நடக்கும் ஒவ்வொரு விடயமும் இதை confirm பண்ணுவதாகவே என் மனதில் படுகிறது. தனியே நாடுகளை சீண்டுவது மட்டும் அல்ல. 1. காசாவை அமரிக்கா எடுக்கும் என்பது பற்றி இன்று சொன்னது - அமெரிக்க இஸ்லாமிய மோதலை இன்னும் கூர்மையாக்கும் 2. எப் பி ஐ முடக்கம் - பட்டேல் நியமனம் - நேரடியாக அமெரிக்க உள்ளக பாதுகாப்பை முடக்கும் செயல். 3. யூ எஸ் எயிட் முடக்கம் - அமெரிக்காவின் உதவி மூலம் உலக நல்லெண்ணத்தை வாங்கும் செயலுக்கு அடி. இலங்கையில் பல செயல்திட்டங்கள் மூடுவிழா காணும். கோவம் அமெரிக்கா மீதே போகும். உலக அளவில் இது நீண்டகால ராஜதந்திர பின்னடைவை தரும். அடுத்து அரச சேவையில் செலவீன குறைப்பு என ஸ்டேர்ட் டிபார்மெண்ட், சி ஐ ஏ யை முடக்குவார் மஸ்க் என நினைக்கிறேன். அதேபோல் நேட்டோ, ஈயூவை உடைக்கும் அல்லது பலமிழக்க செய்யும் நடவடிக்கைகள். நான் சொல்வதை ஒரு சதி கோட்பாடு என நானே ஏற்கிறேன். 4 வருடத்தில் ரஸ்யாவின் உலக ஆளுமை கூடி இருந்தால் நான் சொல்வது சரி, இல்லை எண்டால் பிழை. பிகு 4 வருடத்தின் பின்னும் பதவியில் தொடர டிரம்ப் விரும்புவார், முயல்வார் எனவும் நான் நினைக்கிறேன்.
  35. இது உண்மை கண்டறியும் வழி என நான் எப்போதும் கூறவில்லையே அண்ணை? முன்பே சொல்லி உள்ளேன் - இங்கே ஒரு அன்ரி வருவா - கருணாவுக்கு ஆதரவாக எழுதுவா - மிச்சம் எல்லாரையும் குறைசொல்லி விட்டு சாக்கோடு சாக்காக கருணாவின் அரசியலை முன் தள்ளுவா - அவவிடமும் அந்த விடயத்தில் சாக்குத்தான் என் பதில், இன்னுமொரு நல்ல தம்பி வருவார் - தேசிக்காய்கள், புரொக்சிகள் என்பார் ஆனால் - பிள்ளையான் கருணாவை முன் நிறுத்துவார் - இந்த விடயத்தில் என் அவர் சார்பான அணுகுமுறை சாக்குத்தான், இந்த இரெண்டு இடத்திலும் நான் எழுதியவை உங்களுக்கு இனித்தது. ஆனால் சீமான் விடயத்தில் அதே அணுகுமுறை கசக்கிறது. ஆனால் என் அணுகுமுறை எப்போதும் ஒன்றேதான். ஈழத்தமிழர்களின் நீண்டகால இருப்புக்கு - ஈழத்தில் வடக்கு, கிழக்கு என எம்மை பிரிப்பதும், இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களுக்கும் எமக்கும் சண்டையை மூட்டி விடுவதும் மிக ஆபத்தானது. இவ்விரு விடயங்களை யார் செய்தாலும், செய்வதை ஆதரித்தாலும் நானும், சாக்கும் தயாராகவே இருப்போம்.
  36. ஏன் நாங்கள் தி,மு.க வினரை குற்றம் சொல்வான் ...எங்கன்ட யாழ்களத்திலயே எவ்வளவோ கருத்துக்கள் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது ...
  37. ஒவ்வொரு டாலரிற்கும் கணக்கு காட்டப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. விரயத்தையும், ஊழலையும் தவிர்க்க அது உதவும். ஆனால், செய்யப்படும் உதவிகள் அமெரிக்க தேசிய நலனுக்கு என்பதை விட, உலகில் உள்ள மிக பலவீனமான மக்களின் நலனுக்கு என்று அமைந்தாலும் அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு காரணமே. சூடானில் பிள்ளைகளுக்கு மதிய உணவு போன்ற ஒன்று இதன் மூலம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அது நின்றுவிட்டது. இப்படியானவற்றை நிற்பாட்டுவதாலும், மொத்தமாகவே வருடம் 40 பில்லியன் டாலர்களை அமெரிக்க சேமிப்பதாலும், அமெரிக்கா புதிதாக எங்கே போகப் போகின்றது. உக்ரேனுக்கு கொடுப்பதில் அல்லது இஸ்ரேலிற்கு கொடுப்பதில் ஒரு சிறு பகுதியை குறைத்தாலே இந்த 40 பில்லியன் டாலர்களையும் விட மிக அதிகமாக சேமித்துவிடலாம். நான் ஆரம்பப்பாடசாலையில் படிக்கும் நாட்களில், பாடசாலைகளில் பிஸ்கட் கொடுப்பார்கள். அந்தப் பெட்டிகளில் அமெரிக்க தொண்டர் நிறுவனம் ஒன்றின் பெயரே இருந்த ஞாபகம். இதைப் போன்றே வேறு பல உதவிகளும் இவர்களிடமிருந்து அது தேவையான மக்களுக்கு கிடைத்திருக்கும். இவற்றை அமெரிக்கா தொடரவேண்டும். உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே முழு உலகின் செல்வத்தையும் உடமையாக்கி வைத்துள்ளார்கள். அந்த நாடுகளுக்கு இந்தக் கடப்பாடு நிச்சயம் இருக்கின்றது.
  38. துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக் ஷர்மா; இந்தியாவிடம் இங்கிலாந்து படுதோல்வி 03 FEB, 2025 | 06:09 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று (2) இரவு நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அபிஷேக் ஷர்மா துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் பிரகாசிக்க, இந்தியா 150 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 4 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைக் குவித்தது. 24 வயதுடைய அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் குவித்து ஐசிசியில் பூரண அங்கத்துவம் பெற்ற நாடுகளுக்கான இரண்டாவது அதிவேக சதத்தை சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பெற்றார். பூரண அங்கத்துவம் பெற்ற நாடுகளின் வீரர்கள் வரிசையில் 35 பந்துகளில் சதம் குவித்த தென் ஆபிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு அடுத்ததாக அபிஷேக் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 7 பவுண்டறிகள், 13 சிக்ஸ்களுடன் 135 ஓட்டங்களைக் குவித்த அபிஷேக் ஷர்மா, இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்ளைப் பெற்ற தனிநபருக்கான சாதனையை நிலைநாட்டினார். நியூஸிலாந்துக்கு எதிராக 2023இல் ஷுப்மான் கில் குவித்த ஆட்டம் இழக்காத 126 ஓட்டங்களே இதற்கு முன்னர் இந்தியரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸ்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் நிலைநாட்டினார். இதற்கு முன்னர் ரோஹித் ஷர்மா 10 சிக்ஸ்களுடன் இந்தியர்களில் முதலிடத்தில் இருந்தார். இந்த இன்னிங்ஸில் அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் இந்தியா சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அதிவேக அரைச் சதத்தைப் பூர்த்திசெய்த வீரரானார். இங்கிலாந்துக்கு எதிராக 2012ல் யுவ்ராஜ் சிங் 12 பந்துகளில் அதிவேக அரைச் சதத்தைக் குவித்து சாதனை நிலைநாட்;டியிருந்தார். அபிஷேக் ஷர்மாவை விட ஷிவம் டுபே 30 ஓட்டங்களையும் திலக் வர்மா 24 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 10.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றது. அபிஷேக் ஷர்மா பெற்ற எண்ணிக்கையைவிட இது 38 ஓட்டங்கள் குறைவாகும். பில் சோல்ட் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மொஹம்மத் ஷமி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அபிஷேக் ஷர்மா 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷிவம் டுகேப 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வருண் சக்ரவர்தி 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: அபிஷேக் ஷர்மா https://www.virakesari.lk/article/205727
  39. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே .........! 😍
  40. நான்... முதல் வெடி விழ முதல் வெளிக்கிட்ட ஆள். 😎 இன்னும்... என் காதால், ஒரு துப்பாக்கி சூட்டுச் சத்தத்தையும் "லைவ்" ஆக நேரில் கேட்கவில்லை. எனக்குத் தெரிந்த தொழில் அதிபர் எல்லாம்... மில்க் வைற் சோப்.... அமரர் கனகராஜா, அண்ணா கோப்பி முதலாளி, யானை மார்க் சோடா முதலாளி, மலிபன் பிஸ்கட் முதலாளி, கன்டோஸ் சொக்லேட் முதலாளி மட்டுமே. 😂 பிற் குறிப்பு: இதில் கூறப்பட்டுள்ள தரவுகளை இந்தத் திரியுடன் மறந்து விட வேண்டும். பூனை... குட்டியை காவின மாதிரி, எல்லா திரிகளுக்கும் காவிக் கொண்டு திரியுறேல்லை. படித்தவுடன் கிழித்து விடவும். ஓகே.... 🤣
  41. ட்ரம்ப் போன்ற "4 வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும்?" என்று யோசிக்க முயலாத தலைவர்களால், உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கும் நல்ல கட்டுரை. இதே போன்ற மாற்றங்கள் பல முன்னரும் நடந்திருக்கின்றன. 1. 2000 களில் இந்தியாவுக்கு றொக்கற் இயந்திரங்களை விற்க அமெரிக்கா தடை போட்டு அவர்களது விண்வெளி ஆய்வுகளை முடக்கிய போது, இந்தியாவே சுயமாக, மலிவான றொக்கற் இயந்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டது. 2. 2014 இல் கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போது அமெரிக்கா செயலற்றிருந்தது. விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஈட்டி முனை என்ற திட்டம் மூலம் சில நேட்டோ அணிகளை உருவாக்கி சகல ஐரோப்பிய நேட்டோ எல்லைகளுக்கு அருகில் நிறுத்தினார்கள். 3. 1970 களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தந்த அமெரிக்காவிற்கு எரிபொருள் விற்க அரபு நாடுகள் மறுத்து பாரிய எரிபொருள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை உருவாக்கவும், உள் நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரம்பித்தார்கள். பசுமைத் தொழில் நுட்பத்தின் தோற்றுவாய் இது எனலாம். 4. மிக அண்மையாக, ரஷ்யாவின் எரிவாயுவை கணிசமாகக் குறைத்து விட்டு, நோர்வேயில் இருந்து வடகடல் வழியாக எரிவாயுவை இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு, அமெரிக்க எரிவாயுவை திரவமாக்கி, ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதி செய்வதை அதிகரித்திருக்கிறார்கள். இது ரஷ்யாவின் ஐரோப்பா மீதான மிரட்டலால் வந்த விளைவு. எனவே, சிவதாசன் சொல்வது போல, கனடா தன் "வேட்டைப் பல்லைத்" தீட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சனத்தொகையில் பத்திலொரு பங்கை வைத்துக் கொண்டே இவ்வளவு வளர்ச்சியைக் கண்ட கனடா உண்மையில் ரௌத்திரம் கொண்டால், மெக்சிகோவோடு NAFTA இற்கு மாற்றான ஒரு ஏற்பாட்டைச் செய்து அமெரிக்காவிற்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம்!
  42. மத்திய தரவர்க்கதின் கனவுகளில் ஒன்றான கார் வாங்குவதை இது மேலும் கடினமாக்குகிறது. இந்தியன், சீன கம்பெனிகள் பல எலெக்ரிக் கார்கள் செய்கிறன. இவற்றில் ஒன்றை வைத்து ஒரு உள்ளூர் எலெக்ரிக் தயாரிப்பை உருவாக்கலாம். ஏற்கனவே micro என்ற ஒரு உள்ளூர் கம்பெனி உள்ளது. https://en.m.wikipedia.org/wiki/Micro_Cars
  43. @shanthy அக்கா கண்டது சந்தோசம். ஆரம்பம் முதலே யாழில் பல அவதூறுகளை எதிர்கொண்டு ஆமைவதம் செய்தவர் நீங்கள். ஒரு பெரிய வேண்டுகோள். யாழில் எப்படி சீமான் கழுவி ஊத்தபடுகிறார் என்பதையும், ஈழத்தமிழர்கள் சீமான் பின்னால் இல்லை, அவர்களும் அவரின் பிராடுத்தனத்தை கண்டு கொண்டார்கள் என்பதையும் உங்கள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கிய வட்டங்களுக்கும் இந்த நெறியாளர் போன்றோருக்கும் யாழின் திரிகளை உதாரணமாக காட்டி பரப்பி விடுங்கள். ஈழத்தமிழரின் எதிர்காலத்துக்கு இது மிக முக்கியமான பணி. @sathiri @வல்வை சகாறா போன்ற தமிழ்நாட்டில் பெயர் தெரிந்த இலக்கியவாதிகளிடமும் இதே கோரிக்கையை வைக்கிறேன்.
  44. இதுவரை DeepSeek இன் ஆர்-1 மாடல் இந்த துறையில் ஒரு சாதனை போன்றே தெரிகின்றது. இதைப் பற்றிய கட்டுமான விபரங்களும் வெளியே வந்துள்ளன. Open Source ஆக எம்ஐடி லைசென்ஸ் ஊடாக எவரும் தரைவிறக்கி, அவர்களின் தேவைகளுக்கேற்ப செம்மையாக்கிக் கொள்ளலாம் என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.............................❤️. அவர்களின் முன்னைய மாடலின் வழமையான 671 பில்லியன் inputs களிலிருந்து, மிகக் குறைவான, ஆனால் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய ஒரு பகுதியையே பயன்படுத்துகின்றார்கள் என்று சில விபரங்களில் இருக்கின்றது. இதைப் போலவே தகவல்களை எங்கே, எப்படி ஒரு சுருக்கிய வடிவில் சேமித்து, பின்னர் விரைவாகக் கொண்டு வருவது என்பதிலும் சில மாற்றங்கள் செய்துள்ளனர். NVIDIA இன் H800 GPUs ஐயே இவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இந்த துறையில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இதைவிட மிகவும் திறன் வாய்ந்தவற்றை, மிக அதிக எண்ணிக்கையில் உபயோகித்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் பிரதி செய்யும் சைனாவால் இவைகளை பிரதி செய்ய முடியாமல் இருப்பதும், இதற்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இதை தரைவிறக்கம் செய்து இது என்னதான் என்று பார்க்க ஆரம்பித்தால், யாழ்களப் பக்கம் வரமுடியாது. யாழ்களம் இதைவிட எனக்கு முக்கியம்......................😜. வேறு யாராவது பார்த்து விட்டுச் சொல்லுங்கள்......... இங்கு பங்குச் சந்தைக்கு விழுந்த அடி, புட்டுச் சாப்பிட்டு விட்டு வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்த சிவபெருமானுக்கு முதுகில் விழுந்த அடி போல. இங்கு எங்கள் எல்லோருக்கும் அந்த அடி விழுந்திருக்கின்றது. இப்படி இடைக்கிடை இங்கு நிகழும். 'எதைக் கொண்டு வந்தாய் அதைக் கொண்டு போக..................'...................🤣.
  45. ஒபிஸ் வேலை .. என்று அமர்களமாய் கிளம்பிடுவியள் ..
  46. 11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........ எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.