Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்19Points38770Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்13Points3061Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்9Points1223Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/20/25 in Posts
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு முட்டாள்த்தனமான கோமாளியைத் தவிர வேறு எவரால் இயலும்? ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தையோ அதன் உண்மையான பிரதிநிதிகளையோ அழைக்காமல் ஆக்கிரமிப்பாளனுடன் இந்தியா எனும் இன்னொரு ஆக்கிரமிப்பு வல்லரசு 1987 இல் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் நிகரானது இன்று உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை ஏற்றுக்கொண்டு போரினை முடிவிற்குக் கொண்டுவர ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரியான கொடுங்கோலன் புட்டினுடன் இன்னொரு ஆக்கிரமிப்பாளனான டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை. வெகுவிரைவில் நேட்டோவிற்கு எதிரான போரில் ரஸ்ஸியாவின் பக்கத்தில் நின்றுகொண்டு டிரம்ப் எனும் கோமாளி சண்டையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் எந்தவொரு இனமும் அமெரிக்காவின் தயவில்ப் போரிடக் கூடாது என்பதற்கு உக்ரேனின் அனுபவமும் ஒரு பாடம்தான். இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது ஜப்பானியப் படை அங்கு செய்த பழிவாங்கல்ப் படுகொலகைளும், ஐஸிஸிற்கு எதிரான போரில் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் டிரம்பின் ஆட்சியில் குர்திஸ்களை துருக்கியின் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு அங்கி வெளியேறிச் சென்றதும் நினைவிற்கு வருகிறது.6 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நல்லா போடுறீங்கள் முடிச்சு. உண்மையிலேயே அவர் நல்லா நிதானமாத்தான் விளையாடினார். சிறப்பான ஆட்டம். அதிரடியா விளையாட இது T20 அல்ல. அவருக்கு ஒரு கூடாத அனுபவம் ஒன்று இருக்கிறது. 2023 ஆசியக்கிண்ணப் போட்டியில், இதே அணிக்கெதிராக இந்தியா தோற்றுவிடும். கில் நூறடிச்சு, 50/60 ஓட்டங்கள் பெற வேண்டிய நேரத்தில், தேவையில்லாமல் தூக்கியடிச்சு, ஆட்டமிழப்பார். கடைசியில் 6 ஓட்டங்களினால் இந்தியா தோல்வியுறும். போட்டியின் பின், கில் தனது தவறை ஒத்துக்கொள்வார். தான் நிதானமா நின்று ஆடி இருக்கவேணும் என்று சொல்வியிருப்பார். இன்றும் அது போலவேதான் ஆட்டம் சென்றுகொண்டிருந்தது. மறு முனையில ஒவ்வொருவராக ஆட்டமிழந்து வெளியேற, இவரின் தலையில்தான் பொறுப்பு விழுந்தது. அவரின் பழைய அந்த அனுபவம் இன்று நன்றாக வேலைசெய்தது. இன்றைய அவரின் பேட்டியில், அவர் அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லக்கூடும். கேட்டுப்பாருங்கள்.5 points
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..5 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், ரவ்ஹிட் ஹ்ரிடொயின் சதத்துடன் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை எடுத்திருந்தது. முகமட் ஷமி 53 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதரணமான வெற்றி இலக்கை சுப்மன் கில்லின் ஆட்டமிழக்காது எடுத்த சதத்துடன் 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது எல்லோரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் அனைவருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):4 points
-
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
3 pointsஇறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ3 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (21 பெப்) 09:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG எதிர் SA 06 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனவும் 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஏராளன் நுணாவிலான் வாத்தியார் நந்தன் சுவைப்பிரியன் நீர்வேலியான் தென்னாபிரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 சுவி அல்வாயன் தமிழ் சிறி நிலாமதி ரசோதரன் வசீ செம்பாட்டான் குமாரசாமி நியாயம் வாதவூரான் எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே கந்தப்பு பிரபா கிருபன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?3 points
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது. உக்ரேனை முழுதாகவே கொள்ளை அடிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் எழுதும் அமெரிக்கா, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் உக்ரேன் என்றொரு நாடே இருக்காது என்ற எச்சரிக்கை. கனடாவிற்கு எச்சரிக்கை, பனாமாவிற்கு எச்சரிக்கை, மெக்சிகோவிற்கு எச்சரிக்கை....... முழு ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை. உள்நாட்டு கணக்கு வழக்கை சரிசெய்ய, முழு உலகையுமே அடித்துப் பறிக்க வேண்டுமா...... இது தான் எல்லோரும் எதிர்க்க வேண்டிய ஏகாதிபத்தியம். இன்றும் கூட இலங்கைக்கு எதிராக ஐநாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒரு நாடு ரஷ்யா, வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் அல்லது தீர்மானத்திகு ஆதரவாக வாக்களிக்கும் நாடு உக்ரேன். இலங்கைக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதில் உக்ரேன் தான் எங்களுக்கு அழிவு செய்தது, ரஷ்யா எங்களைக் காப்பற்றியது என்ற ஈழத்தமிழர்களின் நிலைப்பாடும், அதனால் உக்ரேன் அழிந்து போகட்டும் என்றும் நினைப்பது எங்களை கண்களை எங்கள் விரல்களாலேயே நாங்கள் குத்துவது போல. ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் 2/3 பங்கு ஐரோப்பா வங்கிகளின் பொறுப்பிலேயே இருக்கின்றது. மிகுதி தான் அமெரிக்காவின் வசம் இருக்கின்றது. ரஷ்யாவின் மிகப் பெரிய வியாபார பங்குதாரர் ஐரோப்பாவே, அமெரிக்கா அல்ல. இன்று பலவீனப்பட்டிருக்கும் ரஷ்யாவால் ஐரோப்பாவிற்கு எதிராக இன்னொரு யுத்தத்தை நடத்தவே முடியாது. ஆகவே, முழு ஐரோப்பாவும் ஒன்றிணைந்து, அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு, உக்ரேனிய மக்களுக்காக ஓரணியில் நிற்கவேண்டும்.3 points
-
சும்மா ஒர் பதிவு
2 pointsஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சனத்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .2 points
-
கைவிலங்குகள்
2 pointsஉலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உடைக்க என் காற்றை சுவாசிக்க எந்த மன்னனுக்கும் எதிராக என் வாளை நான் உயர்த்துகின்றேன் புனிதம் கலந்தது என் யுத்தம் வீரம் செறிந்தது என் வரலாறு பெருமை கொண்டது என் இனம் நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா அவர்கள் கேட்பதைக் கொடுத்து அவர்கள் கொடுப்பதை அடங்கி ஏற்று அந்த ஆட்சியின் கீழ் இருக்க முடியாதா நீ ஒரு கோமாளி உன் குரல் ஒரு ஈனஸ்வரம் உன் நியாயங்கள் எனக்கு சிரிப்புகள் உன் மக்களுக்கு ஏன் வேண்டும் உரிமைகளும் தெரிவுகளும் இப்படிக் கேட்பவர்கள் அவர்கள் எதற்காக யாரை எதிர்த்து போராடினார்கள்?2 points
-
கைவிலங்குகள்
2 pointsஏனெனில், நீங்கள் குறிப்பிடுகின்றவர்கள் ஒரு போதும் எதிர்த்து போராடாதவர்கள். போராட்டம் நிகழும் போது கிரிக்கெட் மட்ச் பார்ப்பதைப் போன்றே ஆதரவு கொடுத்தவர்கள். பெடியல் நல்லா அடிக்கிறார்கள் என்று பொப்கோர்னை சுவைத்தபடி ரசித்த ரசிகர்கள் இவர்கள். தன் இனத்தின் விடுதலைப் போரை உளமாற ஆதரித்தவர்கள், அப் போராட்டத்துக்கு தன்னாலான உதவிகளை உளமாற கொடுத்தவர்கள் இன்னொரு இனத்தின் விடுதலைப் போர் தோற்றுப் போக வேண்டும் என்றோ, அவ் இனத்தின் விடுதலை போரை முன்னின்று நடாத்த முனைகின்றவரை கோமாளி என்றோ நக்கல் அடிக்க மாட்டார்கள்.2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ...அவரா? அவர் அதே இடத்தில நிண்டால் அடியார் மடத்தில ஒரு மாசம் தொடந்து அன்னதானம் 😂2 points
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ரஷ்யா மீதான, முக்கியமாக புட்டின் மீதான வசீகரம் என்பது “சுத்தி சுத்தி அடிப்பேன்; ஏயார்ல பாய்ந்து பாய்ந்து அடிப்பேன்” என்ற கதாநாயகனின் மீதான வழிபாடு போன்றது.. தோல்வியால் துவண்ட இனத்திற்கு ஒரு கதாநாயகன் எப்போதும் தேவை! இதில் ஏன் உக்கிரேனுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று யாழில் பக்கம் பக்கமாக எழுதிக்கிடக்கு. அதற்கு எதிர்ப்பாகவும் பக்கம் பக்கமாகக் கருத்துக்கள் உள்ளன. இப்போது ட்ரம்ப் (ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டவர்) பின்பற்றுவது முதலாளித்துவம், ஏகாதிபத்யம் என்பதற்குள் எல்லாம் வராது.. வெறும் ரியல் எஸ்டேட் டீல்.. ஒரு கொள்கை எல்லாம் கிடையாது.. அதிகாரம் கொடுக்கும் போதையில் திளைப்பது மட்டும்தான் ட்ரம்ப் செய்வது.. அடுத்த நாலு வருடங்களில் உலகம் எவ்வளவு காலம் பின்னோக்கி நகர்கின்றது என்று பார்ப்போம்.2 points
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
மேற்கு ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்திற்க்கா புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இங்கு யாழ்களத்தில் புளங்காகிதம் அடைத்துக்கொண்டு இருந்த அரசியல் விற்பன்னர்கள் ...... இப்போ தடுமாறி நிற்கிறார்கள் ......... இங்கிருக்கும் கருத்துக்களை வாசிக்க எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. உண்மையில் விழுந்து விழுந்து சிரிக்கிறேன் மீசையில் மண் ஓட்ட போகிறது என்றதும் ....... இப்போ ட்ரம்பை சர்வாதிகாரி ஆக்கிவிடால் மண் ஒட்டிடாது என்று கிளம்பி இருகிறார்கள் என்று எண்ணுகிறேன். சூப்பர் ! பாலஸ்தீனத்தில் ௪௦ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த நிதன்யாகுவிற்கு யாழ்களத்தில் சிலை வைக்காத குறையாக விக்கிக்கொண்டு இருந்தார்கள் ......... கொக்குவில் தவடியில் சாதியை ஒழிக்க சித்தார்த்தன் என்று ஒரு கோமாளி பெரியாருக்கு சிலை வைக்க போகிறதாம். அது சீமானுக்கு எதிரான செயலக இருக்கும்போது ஏன் அந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டும்? அவருடன் கூடி நித்தன் யாகுவிற்கும் சேர்த்து சிலை வையுங்கள் புட்டினையும் பழிவாங்கியதாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய புகழும் இருக்கும்2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனி வரும் போட்டிகளில் தமிழ் சிறி அண்ணாவை நான் கொப்பி அடிச்சு சிறு மாற்றம் செய்தால் உங்களால் கண்டு பிடிக்க முடியாது லொள் ஹா ஹா............. சும்மா பம்பலுக்கு எழுதினேன் பெரியப்பு😁👍....................2 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முகமட் ஷாமி 5 விக்கெட் எடுத்திருக்கின்றார்.. அதிக விக்கெட் வீழ்த்திய எடுத்தவர் என முகமட் ஷாமியை யார் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்😁 @தமிழ் சிறி ஐயாவுக்கு யோகம் அடிச்சிருக்கு 😃2 points
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣2 points
-
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் ஏமாற்றிவிட்டார்.. விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.. ஆனால் இமான் ஏமாற்றிவிட்டார்.. பாடகி விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு V VasanthiUpdated: Wednesday, February 19, 2025, 17:01 [IST] ஒரு சில பாடல்கள் கேட்கும் போது நம்முடைய மனதிற்குள் இருக்கும் சந்தோஷங்கள், கவலைகள், பாசம் உட்பட எல்லா உணர்வுகளும் நம்மை மீறி வெளிப்படும் அதுபோல பாடல்களை பாடும் பாடகர்கள் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வைக்கம் விஜயலட்சுமியும் ஒருவர். இவர் தமிழில் வெளியான குக்கூ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "கோடை மழை போல" என்ற பாடல் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு கேட்பவர்களை ஆட வைக்கும் "சொப்பன சுந்தரி நான்தானே", "காக்...கா முட்டை... காக்கா முட்டை கண்ணால" என்ற பாடல்களை இவர் பாடி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. அதுபோல "மண்ணிலே ஈரம் உண்டு" என்ற பாடல் பலருடைய பெருந்தன்மையை பறைசாற்றும் இடமாக பாடியிருந்தார். அதற்கு பிறகு பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். வைக்கம் விஜயலட்சுமி பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பலருக்கும் முன்மாதிரியாக தன்னுடைய குரல் மூலம் தனித்து நிற்கிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் ஆனது ஆனால் மாப்பிள்ளை வீட்டினர் போட்ட கண்டிஷன் தனக்கு செட் ஆகவில்லை என்று திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் 2018 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண பங்க்ஷனில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர். ஆனாலும் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது தன்னுடைய கணவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி கூறியிருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாக்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் ஆகவும் கலந்து கொண்டு வருகிறார். இதன் நிலையில் பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது தன்னுடைய வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு இளையராஜா, ஏ ஆர் ரகுமான், வித்யாசாகர் கூடவும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அதோடு தன்னை பார்ப்பதற்காக ஜெயச்சந்திரன், மலையாள டைரக்டர் கமல் என பலர் வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அதுபோல இமான் சார் தன்னை பார்க்க வருகிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் இப்போ வரைக்கும் என்னை பார்க்க வரவே இல்லை என்று ஏக்கமாகவும் பேசி இருக்கிறார். https://tamil.oneindia.com/television/singer-vaikom-vijayalakshmi-accuses-music-composer-iman-details-emerge-681381.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி ஓடியாந்திருப்பியளே 🤣2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி, துணுக்குகள் போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 27 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 27 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்1 point- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
1 pointஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!1 point- இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
அல்வாயன் வடித்தெடுத்த…, அழியாத அழகின் மீது, அந்தப் பிரமனுக்கே.., காதல் வரும்..! பிரபஞ்சப் படைப்பின், இரகசியம் புரிந்தவர் நீர் ஐயா…! பொத்தி வைத்திருக்கும்.., முத்துக்களில் சிலதை, சிந்தி விடுங்களேன், எங்களுக்காக…!1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அனுரா அரசு வருவதற்கு முதலே இவரை என்கவுன்டரில் போடுவதற்கு தீர்மானித்திருப்பார்கள் ...வாகன விபத்து ஊடாக செய்ய திட்டமிட்டிருப்பார்கள் ... ஆனால் அனுரா அரசுக்கு கரி பூச வேணும் என்ற காரணத்தால் அதை உயர் நீதிமன்றில் வைத்து ஒர் குழு செய்திருக்கலாம் .. ... விசேட அதிரடி படை அதிகம் கவனம் செலுத்துகின்றது ,பொலிசார்in பங்கு இதில் குறைவு ..இறுதியில் கைது செய்ததும்,அவர்கள் தான் ...சந்தேக நபரும் முன்னாள் கொமான்டோ .... எல்லாம் குறுக்கால போன எனது எண்ணம் மட்டுமே...😀1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆதாரத்தை தரவும், இல்லை எனில் மன்னிப்பு கேட்கவும் 🤣 எனக்கு கூவத்தூரில் ரிசார்ட் ரூம் + திரிஷா என்பதாக ஒரு தனி மடல் வந்துள்ளது 🤣1 point- எம்.பி ஆகிறார் ரணில் ?
1 pointஇதுவும் அனுர அரசின் தந்திரம்தான்...பாரளுமன்றத்தில் எந்த தீர்வையும் கொண்டுவரவிடாமல் தடுப்பதிற்கும் ...ஒத்துப் போவதிற்கும் ஒருவர் தேவைதானே..இதற்கு சரியான ஆள் .. சும் மட்டுமே...அனுர அரசு தலைகீழாக நின்றும் ..சும்மை உள்ளெடுக்கும்1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் எப்ப கோஷான் ஆனேன் ஈழப்பிரியன் அண்ணா லொள்......................1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அந்த மத்தியானம் படுக்கப் போகிறேன் என்று சொன்னதுதான் தாங்கமுடியாம இருக்கு.🤣1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வசீ இந்த மூன்று பேரையும் - ரோகித், கோலி, ஹில் - இந்தியாவின் 'ஹாண்ட் பிரேக்ஸ்' என்று பகிடியாக சொல்லித்தான் எனக்கு இவரைத் தெரியும்........... மற்ற இருவரும் டி-20 இல் நியூயோர்க் பிட்சில் பிரேக் போடும் போது தெரிய வந்திருந்தார்கள்............🤣. இந்தியாவிற்கு ஏற்ற சூழல் போல உள்ளது....................... அங்கே போட்டிகள் எப்படிப் போனாலும், இங்கு கலகலப்பாக வைத்திருப்போம்..........👍.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான். ஆனா, மத்தியானம் படுக்கப் போறதெல்லாம் வரந்தானே.😁1 point- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
வசி உங்களுக்கு நான் இதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை (Direct income) சம்பளத்திற்க்காக வேலை செய்யும் மனநிலையை முதலில் துடைக்கவேண்டும் ( நாங்கள் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை எனக்கு அது கொஞ்சம் கஸ்ட்ரம்) அடுத்த தலைமுறைக்கு மிக எளிது ..... Passive Income முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் இப்போ அண்ணளவாக உலகம் பூராக செலவு ஒரே அளவாகவே இருக்கிறது மத்திய கிழக்கு நாடுகளில் ரியல் ஸ்டாட்ட்டில் ( Real estate) முதலீடு செய்வது என்பது இன்றைய சூழலில் ஒவ்வரு புலம்பெயர் தமிழனும் செய்யவேண்டிய விடயம் எதனை பேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை இப்போதும் சம்மதியவீடு கலியாணவீடு செய்வதில் பெருமை காண்கிறார்கள் பலர். கொழும்பில் சராசரி புது அப்பார்ட்மெண்ட் மாத வாடகை $1000 - $2௦௦௦ வரை இருக்கு ....... இரண்டு வீடை சொந்தமாக வைத்திருப்பவன் வருமானம் என்ன? சுலபமாகவே ௪௩௦௦ பார்க்கலாம். நிறைய இந்தியர்கள் துபாய் அபுதாவியில் வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள் https://www.lankapropertyweb.com/rentals/lease-all-Apartment.html1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் உண்மையை ஒத்துக் கொள்ளுகிறேன் பெரியப்பு நீங்கள் புலானாய்வுபுலி என்று ஹா ஹா😁👍...................1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கனக்க யோசிக்க வேண்டாம் விசுகர் 😀 நானும் சாவகச்சேரி அர்ச்சுனாவும் சாவகச்சேரி 😁 இப்ப உங்கட மனசுக்குள்ள என்ன சிந்தனை அருவியாய் ஓடும் எண்டு எனக்குத்தெரியும்...😜1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
1 point- CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
இதே கான்செப்ட் கமலின் தசாவதாரத்திலும் வரும். அந்த சிபிஐ கமலை பார்த்து சயண்டிஸ்ட் கமல் சொல்லுவார்… He knows five languages in Telugu 🤣1 point- தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
1 pointஅதே1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
இவதான் 1948 இலேயே வெளியேறி விட்டாவே. கொஞ்சம் பொறுங்கோ… அது சுமந்திரந்தானாம் எண்டு ஒருவர் தமிழ்வின் இணைப்போடு வருவார்🤣 சில வேளை அஸ்மான் சரிப்தீனின் தங்கம் வைத்தியராய் இருக்க கூடும் 🤣1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்கட முதல்வர் கனவில் நியுசிலாந் மண் அள்ளி போட்டு விட்டதே ஈழப்பிரியன் அண்ணா ஹா ஹா😁.....................1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னது பாக்கிஸ்தான் தோல்வியா சொல்லவே இல்லை 😞1 point- சும்மா ஒர் பதிவு
1 pointமழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஒரு ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை தேக்கி, நிலத்துக்குள் விடும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. இங்கு லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் பெரிய வெளிகளில் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்................... அதை ஆரம்பித்த பின் மழை தான் பெய்யவில்லை............1 point- பாம்பும் கீரியும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கீரி என்று சொன்னாலே, பாம்பு குறித்த நினைவு நமக்கு வந்துவிடும் அளவுக்கு, இந்த இரண்டு உயிரினங்கள் பற்றிய கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. கீரி - பாம்பு இடையே நிகழும் ஆக்ரோஷமான சண்டைகள் இயற்கைச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகள், பரிணாம தகவமைப்புகள், சூழலியல் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையிலான பகையுணர்வு சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானது. ஆனால், அடிப்படையில் இவையிரண்டுக்கும் இடையே இருக்கும் இயற்கையான பகை மக்களிடையே பிரபலமான அளவுக்கு, அதற்கான காரணம் அதிகமாகப் பிரபலமடையவில்லை. பாம்பு - கீரி இரண்டும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? அதில் கீரியே பெரும்பாலும் வெற்றி பெறுவது ஏன்? பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? இவையிரண்டும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? பாம்பு உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தடுப்பது எப்படி? பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? அப்போது பார்த்தால் பாம்பு கொத்துமா? குவாம் தீவு: பாம்புகளின் தீரா பசிக்கு மொத்தமாக அழிந்து போன பறவை இனங்கள் வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா? கீரிகள் - அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகள் கீரிகள், குறிப்பாக இந்திய சாம்பல் நிற கீரிகள், அச்சமற்ற பாம்பு வேட்டையாடிகளாக அறியப்படுகின்றன. இவை நாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட நச்சுப் பாம்புகளை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை. ஒரு சில பாம்புகளின் நஞ்சை தாங்கிக் கொள்ளும் எதிர்ப்பாற்றலும் இவற்றுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கீரிகளின் சுறுசுறுப்பு, வேகம் ஆகியவை, பாம்புகளின் தாக்குதல்களில் இருந்து விரைந்து தப்பித்து, எதிர்த் தாக்குதல் தொடுக்கும் திறனை அவற்றுக்கு வழங்குவதாகக் கூறுகிறார் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தைச் சேர்ந்த உயிரியலாளர் முனைவர் தணிகைவேல். அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, "கீரி அடிப்படையில், எலி, அணில் போன்ற சிறிய வகை பாலூட்டிகளில் ஒன்று. அவற்றின் உடலமைப்பு கிட்டத்தட்ட அணில்களை ஒத்திருக்கும். இருந்தாலும், அளவில் பெரிதாக இருப்பதால், அவற்றால் பாம்புகளை எதிர்த்துச் சண்டையிட முடிகிறது," என்று விவரித்தார். அவரது கூற்றுப்படி, ஒரு பாம்பு தாக்கும் போது, கடிபடாமல் உடலை வளைத்து தப்பிக்கவும், துரிதமாகத் திருப்பித் தாக்கவும் கீரிகளின் உடல் அமைப்பு அவற்றுக்கு ஒத்துழைக்கிறது. இருமொழிக் கொள்கையால் தடைகள் இருந்ததா? தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் கூறுவது என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை: உடல் பருமனால் ஏற்பட்ட மன அழுத்தம் - விபரீத முடிவை எடுத்த அண்ணன் தங்கை5 மணி நேரங்களுக்கு முன்னர் பாம்பு - கீரி இடையே சண்டை ஏற்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டைக்கு அடிப்படைக் காரணம், உயிர் பிழைத்தலுக்கான நிர்பந்தமே என்கிறார் ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் குறித்து இவர் ஆய்வு செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவை இரண்டுமே வேட்டையாடி உண்ணக் கூடியவை. அதோடு, இரண்டுமே நிலவாழ் உயிரினங்களாகவும் இருப்பதால் அடிக்கடி வாழ்விட மோதல்கள் நிகழ்கின்றன. ஆகவே, அவை ஒன்றையொன்று தங்கள் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன," என்றார். அதாவது, ஓரே நிலப்பரப்பில் பாம்பு, கீரி இரண்டுமே வாழ்கின்றன. அதில் வாழும் பூச்சிகள், எலிகள், பல்லி ஆகியவற்றை உணவாகக் கொண்டாலும், கீரிகள் பாம்புகளையும் உணவாகக் கொள்கின்றன. ஆகவே, பாம்புகள் தமது இருப்புக்கு கீரிகளை அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. பாம்பைக் கண்டாலே கீரி தாக்கும் என்ற கருதுகோள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, "பாம்புகள் கீரிகளின் உணவுப் பட்டியலில் இருக்கக் கூடிய ஓர் உயிரினம். அப்படியிருக்கும் போது, ஒரு வேட்டையாடியான கீரி, அதை எதிர்கொண்டால் உணவை விட்டுவிட்டுச் செல்லாதல்லவா!" என்கிறார் முனைவர் தணிகைவேல். நன்கு வளர்ந்த கீரிகளுடன் சண்டையிடுவது ஒரு பாம்புக்கு சவாலாக இருந்தாலும், கீரி குட்டிகளை சில பாம்புகளால் உணவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக பாம்புகளை கீரிகள் கருதுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES "நிலத்தில் குழி பறித்து வாழக்கூடிய உயிரினம் என்பதால், கீரிகளின் குட்டிகளை வேட்டையாடுவது பறவை போன்ற வேட்டையாடிகளுக்கு அவ்வளவு எளிதல்ல. ஆனால், நிலவாழ் ஊர்வன உயிரியான பாம்புகளுக்கு அது எளிதான காரியம். ஆகவே, கீரிகளுக்கு பாம்புகள் இயற்கை எதிரிகளாகி விடுகின்றன," என்று விளக்கினார் ரமேஸ்வரன். இப்படியாக, பாம்பின் இருப்புக்கு கீரியும், கீரியின் இருப்புக்கு பாம்பும் ஆபத்தை விளைவிப்பதால், அந்த அபாயத்தை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவை சண்டையிடுகின்றன. "பரிணாம வளர்ச்சியில் ஒவ்வோர் உயிரினமும் தத்தம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினத்தைக் கண்டால், உடனடியாக எதிர்செயலாற்றும் தன்மையைப் பெற்றுள்ளன. ஒரு மானுக்கு புலியைக் கண்டால் ஓட வேண்டும் எனத் தெரிகிறது, எலிக்கு பாம்பைக் கண்டால் தப்பிக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்த நடத்தைகளை அவற்றுக்கு யாரும் பயிற்றுவிப்பதில்லை. பரிணாமப் பாதையில் அவற்றுக்கு உள்ளுணர்வாகப் பதிவாகியுள்ளன. கீரி, பாம்பு இடையிலான சண்டையும் அப்படிப்பட்டதே. இரண்டுமே வேட்டையாடி உயிரினங்கள். ஒரே வகையான நிலப்பரப்பில் இரண்டுமே வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. இரண்டுக்குமே ஒன்றுக்கொன்று ஆபத்தை விளைவிக்க கூடிய திறனுள்ளது. ஆகவே, அவற்றுக்கு இடையே சண்டை நிகழ்வது இயற்கையானதுதான்," என்கிறார் ரமேஸ்வரன். காந்தி கேட்டுக்கொண்டதால்தான் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கோரினாரா?2 மணி நேரங்களுக்கு முன்னர் இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்18 பிப்ரவரி 2025 பாம்பின் நஞ்சு கீரியை ஒன்றும் செய்யாதா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு வகைகளில் கீரிகள் சண்டையிடுவது நாகங்களுடன் மட்டுமே அல்ல என்று கூறிய தணிகைவேல், ஒருவேளை நாகப் பாம்புகள் படமெடுத்து நின்று சண்டையிடுவதால் அவற்றுடனான கீரிகளின் சண்டை எளிதில் தென்படுகிறது என்றார். கீரிகள், நாகம் போன்ற நஞ்சுள்ள பாம்புகளை உணவாக உண்ணக் கூடியவை. அவற்றின் நெகிழ்வுத்தன்மை மிக்க உடலமைப்பு, அதிவேகமாகச் செயல்படும் திறன் ஆகியவை பாம்புகளை ஆக்ரோஷமாக வேட்டையாட உதவுகின்றன. அதேவேளையில், கீரிகளின் தற்காப்பு அமைப்பும் பாம்புக் கடி அவற்றின் உடலில் நேரடியாக படுவதைத் தவிர்க்கும் வகையில் இருக்கின்றது. பாம்புடன் சண்டையிடும் போது, தனது ரோமங்களைச் சிலிர்த்துக் கொண்டு உடலைச் சற்றுப் பருமனாகக் காட்டிக் கொள்வதன் மூலம், அவை பாம்புகளை ஏமாற்றுகின்றன. இதன்மூலம், ஒருவேளை பாம்பு தாக்கினால்கூட, அதன் கடி கீரியின் உடலில் நேரடியாக படுவதில்லை. இந்த உத்திகளின் மூலம், கீரியால் பாம்பை நெருங்கவும், அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் முடிகிறது. வயநாடு கடையடைப்பு: காட்டுயானை தாக்குதலால் தொடரும் மரணங்கள் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்15 பிப்ரவரி 2025 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 40 ஆண்டுகளாக 24 மணி நேரமும் வரும் வெந்நீர் - எங்கே, எப்படி?12 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றோடு, கீரிகளின் உடலில், பாம்பின் நஞ்சை எதிர்க்கக் கூடிய தன்மை இருப்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 1872ஆம் ஆண்டில் மூன்று கீரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், இரண்டு கீரிகளுக்கு பாம்புக்கடியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ஆய்வுகள், கீரியின் உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய சில பாம்பு நஞ்சுகளின் வீரியத்தை எதிர்க்கும் திறன் கொண்ட அசிடைல்கோலின் ஏற்பி இருப்பதாகக் கூறுகின்றன. 'பாம்பு, கீரியைப் போல் சண்டையிடுகிறார்கள்' என்று ஊர்ப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு. உண்மையில், பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க இதுவே காரணம். இது உயிர் பிழைத்தலுக்கான சண்டையின் அடிப்படையில் வேரூன்றிய பகை. இந்தத் தொடர்ச்சியான மோதல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், பாம்புகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதிலும், முக்கியப் பங்கு வகிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு பாம்பும் கீரியும் எப்போதும் சண்டையிடுவது ஏன்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கத்தரியில் எத்தனை எத்தனை ரகங்கள் ........... எதை வாங்குவது என்றே தெரியவில்லை .......... ! 😁1 point- ஒரு முட்டை ஆயிரம் டாலர்
1 pointஎனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......!1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள். சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், உங்களை இங்கு எல்லோரும் நன்கு அறிவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத, எந்த வித கணக்குகளும் போடாமல், அப்படியே நினைப்பதைச் சொல்லும், கள்ளம் கபடமற்ற ஒரு மனிதன் நீங்கள். என்னூரில் 'அவன் ஒரு அப்பிராணி......' என்று இப்படியானவர்களை சொல்லுவார்கள். ஒருவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்ல நட்பின் அடிப்படையே. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.............. மற்றவர்களும் அப்படியே அவர்களாகவே இருந்து கொள்ளட்டும். மிகவும் முயன்று தமிழில் நீண்ட பந்திகள் எழுதுகின்றீர்கள்.......👍. சில சொற்களை தவிர்க்க முடிந்தால் தவிர்க்க முயலுங்கள்.....🙏. சிவப்பு புள்ளிகள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமேயில்லை, பையன் சார்............... ஒன்றை விரும்புவதை விட, வெறுப்பதற்கே மனிதனுக்கு அதிக வலு தேவைப்படுகின்றது. ஒரு மனிதன் வெறுக்கும் விடயங்களே அந்த மனிதனை அறியாமல் அந்த மனிதனை ஆட்கொள்கின்றது. வெறுப்பதனால் மனிதன் தன்னையே அழிக்கின்றான். 'விருப்பம்' அல்லது 'விருப்பம் இல்லை' என்று எதையும் சாதாரணமாக கடந்து போவது நல்ல ஒரு நிலை........ இல்லாவிட்டால் மற்றவர்கள் அவர்களின் செய்கைகளாலும், சொற்களாலும் எங்களை கட்டுப்படுத்துவது போலாகி விடும்.....🤝.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஏது.............................. இனிமேல் பங்குபற்ற முடியாதா.................... இங்கே எழுதவும் மாட்டீர்களா................... பையன் சார், போட்ட contractஐ எடுத்துப் பாருங்கோ...... அதன்படி இன்னும் குறைந்தது 20 வருடங்கள் நீங்கள் பங்குபற்ற வேண்டும், எழுத வேண்டும்...... அதற்குப் பிறகும் விடமாட்டோம், புது contract போடுவம்......................❤️.1 point- இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
அடபாவி இப்படியும் எழுதத் தெரியுமோ? ஒரு பெண்ணும் பூவும் இருந்தால் கிவிதை கவிதையாக கொட்டுதே.1 point- அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல்
அகரனின் ‘துரோகன்’ சிறுகதைத் தொகுப்பு மீதான ஓர் உசாவல் January 21, 2025 — எம்.ஆர்.ஸ்ராலின் ஞானம் — மனுஷன்/மனுசி,அழகன்/ அழகி, துரோகன்/துரோகி……… துரோகி என்பது பெண்பாலா? அப்போ துரோகிக்கு ஆண்பால் துரோகனா? தலைப்பே குழப்பத்துடன் நந்தியாக துருத்திக்கொண்டிருக்கிறது. அது அகரனுக்கே உரிய அழகியல் நுட்பம். ‘அகரன்’ புகலிட இலக்கியப் பாரம்பரியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர். ஏலவே ‘ஓய்வு பெற்ற ஒற்றன்’ என்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ‘அதர் இருள்’ என்னும் குறுநாவல் ஒன்றையும் வெளியிட்டுள்ள அகரனின் மூன்றாவது நூல் இது. பதின்நான்கு சிறுகதைகளுடன் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் இடப்பெற்றுள்ள கதைகளில் பல முழுக்க முழுக்க ஈழத்து கதைகளாகவும் சில ஐரோப்பிய அகதி வாழ்வின் பக்கங்களை தரிசிக்கும் வாய்ப்புகளைத் தாங்கிய கதைகளாகவும் உள்ளன. அவையும் கூட யுத்தத்தின் நினைவுகளை தாண்டிச் செல்லமுடியாத நனவிலி மனங்களின் உரையாடல்களுடன் இணைத்துப் பின்னப்பட்டுள்ளன. பாரிஸ் பெருநகரம் அறிவாளிகளும் தொழிலாளிகளும் குவிந்து கிடக்கும் குப்பை மேடு என்பார் மூதறிஞர் மு.வரதராசனார். அத்தோடிணைந்து இந்நகரத்தின் வாழ்வென்பது உலகிலுள்ள பல்வேறுபட்ட இன, மத,கலாசார பின்னணிகளைக் கொண்ட மக்கள் கூட்டத்தை காணும்,கண்டறியும், கலந்து வாழும் வாய்ப்புகளையும் தரவல்லதாகும். அத்தகைய பாரிஸ் பெருநகரத்தில் வந்து வீழ்ந்த ஒரு இலங்கைத் தேசாந்திரி ஒருவன் எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்களைச் சித்தரிப்பதாக பூமா,அஞ்சனம்,வல்லான்வில் வேட்டைக்காரி,சிரிப்பு,8.6, போன்ற கதைகள் காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடக்கூடிய கதையாக 8.6 (போதை கூடிய பியர்) என்னும் சிறுகதை ஒரு தெருவோர மனிதனின் வாழ்வைப் பேசுகின்றது. இரந்துவாழ்வோர், பாலியல் தொழிலாளர்கள் போன்ற சமூகத்தால் புறமொதுக்கப்பட்ட விளிம்புநிலை மாந்தர்களின் உலகை தமிழிலக்கியத்தில் பேசுபொருளாக்கியத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தன. அதேபோன்று புகலிட இலக்கியத்தில் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களின் உலகினை பல்வேறு கோணங்களில் கவனங்கொள்ளச் செய்ததில் க.கலாமோகனின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. அத்தகைய கதைகளில் ஒன்றாக அகரனின் 8.6 சிறுகதையை அடையாளம் காண முடிகின்றது. ‘டே டே’ என்னும் முன்னாள் போலீஸ் வீரர் ஒருவர், அவரது குடும்பம் சிதைவுற்று வீதிக்கு வந்தவர், தெருவோரத்தில் பியரும் கையுமாக குளிரென்றோ வெயிலென்றோ அலட்டிக்கொள்ளாமல் ஏகாந்த வாழ்வு வாழ்பவர். அவருடனான ஒரு இலங்கை அகதியின் அறிமுகம், நெருக்கம், நட்பு என்று தொடரும் கதையின் முடிவில் ஒருநாள் அந்த தெருவோரச் சந்தையின் அருகே உள்ள மரத்தின்கீழ் ‘டே டே’ இறந்து கிடப்பதோடு அக்கதை முடிகின்றது. ஆம் நவீன நாகரீகங்களின் சிற்பமாக நிற்கும் பரிஸ் போன்ற நகரங்களிலும் அவற்றின் புறநகர் பகுதிகளிலும் உள்ள புகையிரத நிலையங்களிலும் மெட்ரோ பாதையோரங்களிலும் இன்னும் ‘டே டே’ போன்ற நூற்றுக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். மேலும் தாய், துரோகன், போராளியின் இறுதிவெடி, விசாரணை, பொம்மை, மாமாவின் மகன் போன்ற கதைகள் ஈழ யுத்தத்தின் வடுக்களை மையமாகக் கொண்டுள்ளன. போரின் குழந்தைகள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போரின் இடிபாடுகளுக்குள்ளே பிறந்து போரின் அவலங்களோடே வளர்ந்து தப்பிப்பிழைத்தவர்களில் அகரனும் ஒருவர். அதனால்தான் அந்த கொடிய போரின் எச்சங்களாக அவர் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் நினைவுகளே அவரது எழுத்துக்களின் சாரங்களாக இருக்கின்றன. யுத்தத்தினால் ஆயிரக்கணக்கில் மாண்டுபோன மக்களும் அவர்களில் எஞ்சிக்கிடக்கும் மனிதர்களுமே அவரது கதையுலகின் மாந்தர்களாய் உலா வருகின்றனர். இது ‘அகரன்’ என்னும் எழுத்தாளருக்கு மட்டுமல்ல இவரைப்போன்ற போரின் குழந்தைகளான பல ஈழத்து எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இன்னும் சொன்னால் இத்தகைய கதைக் களத்தையும் கதை மாந்தர்களையுமே இன்றைய பல எழுத்தாளர்கள் தமது இலக்கிய முதலீடாகவும் கொண்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர்சூழ் வாழ்வின் அவலங்களை சித்தரிக்கும் அதே வேளை உள்ளக வன்முறைகளை ஆதரிக்கும் பாசிஸ மனநிலையில் ஊறித்திளைத்த தேசிய பித்தர்களாகவும் காணப்படுவது பல ஈழ எழுத்தாளர்களிடையே காணப்படும் பெரும் முரண் நகையாகும். போர் என்பதே அவலங்களை உற்பத்தி செய்து தள்ளுகின்ற தொழிற்சாலைதான். வன்முறைகளையும் கொலைகளையும் கொடூரங்களையும் நிகழ்த்துவதிலேயே போரின் போதான அறம் நிலைநாட்டப்படுகின்றது. போரில் ஈடுபடும் இருதரப்பினராலும் அவைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டுதானிருக்கும். ஆனால் இந்த வன்முறைகளை எதிர்த்து ஆக்கிரமிப்பு, அட்டுழியம் என்று ஒரு புறம் பேசிக் கொண்டு மறுபுறம் புரட்சிகளின் பெயராலும் விடுதலைகளின் பெயராலும் தத்துவங்களின் பெயராலும் ஒருபக்க வன்முறைகளுக்கு நியாயம் கற்பிப்பது புறநாநூற்றுக் காலம் தொடங்கி ஈழத்தமிழ் இலக்கியம் வரை தொடர்கின்றது. இவற்றுக்கு மொழியுணர்வுகளும் இன,மத,தேச உணர்வுகளும் துணைக்கழைக்கப்படுகின்றன. தற்கொடையென்றும் தரணி புகழ் மாவீரமென்றும் கொலைகளும் மரணங்களும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் புகலிட தமிழ் இலக்கியத்துக்கென ஒரு பாரம்பரியம் உண்டு. யுத்தத்தைத் தின்போம் யுத்தத்தைத் தின்போம் என்று யுத்த எதிர்ப்புக்கு கவிதைகளிலும் கதைகளிலும் ஆர்ப்பரித்து எழுந்து நின்றதுதான் புகலிட இலக்கியம். ‘எந்தத் தாயும் தன் புதல்வனின் மரணத்தை மாவீரன் என்று கொண்டாடுவதில்லை’ என்று பாடுவான் புகலிடக்கவி ‘சக்கரவர்த்தி’. இப்படியாக யுத்த பேரிகைகளுக்குள் நசிவுண்டு கிடந்த மானிடத்தின் ஈனக் குரல்களின் பிரதிபலிப்பாய் தன்னை பிரகடனம் செய்த வரலாறு புகலிட இலக்கியத்துக்கு உண்டு. அதனாலேயே ஈழ யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புகளால் துரோகங்களாக பிரகடனம் செய்யப்பட்டு அடாவடித்தனங்களாலும் மிரட்டல்களாலும் கொலைகளாலும் ஒரு காலத்தில் அச்சுறுத்தப்பட்டது இந்த புகலிட இலக்கியப்போக்கு என்பது வரலாறு. அகரனின் கதைகளைப் பொறுத்தவரையில் வெற்றிவேல் வீரவேல் என்று ‘புலிகளையும் அவர்களின் வீரம் செறிந்த வாழ்வையும்’ புகழ்ந்துரைக்கும் அதேவேளை யுத்தத்தின் போதான அனைத்து வன்முறைகள் மீதும் கேள்வியெழுப்பத் துடிக்கும் அறச்சீற்றம் துளிர்விடுவதை சில கதைகளில் ஆங்காங்கே காணமுடிகின்றது. இதனுடாக புலிகளின் உள்ளக வன்முறைகள் பற்றிய பல பதிவுகளை நாசூக்காக ‘துரோகன்’ சிறுகதைகள் பேசுகின்றன. அந்த வகையில் இச்சிறுகதைத் தொகுப்பானது ஈழ வியாபார எழுத்துக்களின் போக்குகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுவிடுபட்டு புகலிட இலக்கியத்தின் கருத்துக் சுதந்திர வெளி பாரம்பரியத்துடன் தன்னை அடையாளம் காட்ட எத்தனிப்பது தெரிகின்றது. புலிகள் இயக்கம் மாத்தையா என்னும் தளபதியை துரோகி எனப் பிரகடனம் செய்து கொன்றொழித்ததோடு (1993) மட்டுமன்றி அவரின் விசுவாசிகள் என்று குற்றம் சாட்டி பலநூறு போராளிகளை சித்திரவதை செய்து கொன்றதென்பது வரலாறு. அவ்வேளையில் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைகளுக்குள்ளானவர் தளபதி ஜெயம் ஆகும். பின்னர் அவர் விடுதலையாகி படையணிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். ஒரு சுய பரிசோதனையாக நம் சமூகம் பேசியாகவேண்டிய இத்தகைய வரலாறுகளை நாசூக்காக சொல்ல முயலும் ‘அகரன்’ ‘இயக்கத்துள் நடந்த சூறாவளிக் காலத்தில் என்மனம் உடல் வதங்கிய காலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன்’ என்று தன் சொந்த இயக்கத்தினாலேயே தனக்கு இழைக்கப்பட்ட கொடிய சித்தரவதைகளை இறுதி யுத்தக் களமுனையின் சாவின் விளிம்பில் நின்ற தருணங்களின் போது தளபதி ஜெயம் என்னும் போராளி நனவிடை கொள்வதாக பதிவு செய்கின்றார். இறுதியாக தளபதி ஜெயம் தன் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதோடு யுத்தம் முடிவடைகின்றது. குறித்த இறுதியுத்தம் முடிந்தபோது ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்று கூற அந்நிலத்தில் யாரும் இருக்கவில்லை.’ என்கின்ற வரிகளோடு ‘போராளியின் இறுதி வெடி’ என்னும் அக்கதை முடிகின்றது. கதைதான் முடிகின்றதே தவிர அந்த வரிகள் எழுப்பும் கேள்விகள் ஒரு யுகம் யுகமாய் தொடரும் வல்லமை வாய்ந்தனவாகவுள்ளன. பல்லாயிரம் போராளிகளுடன் எழுந்து நின்ற அந்தப்போர் ஏன் தொடரவில்லை? குறித்த அமைப்பும் குறித்த தலைமையும் அழிந்து விடுவதானால் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து விடமுடியுமா? அப்படியென்றால் யாசிர் அராபாத்தின் மரணத்தின் பின்னர் பலஸ்தீன விடுதலைப்போராட்டமும் ஒச்சலானின் கைதுக்கு பின்னர் குர்தீஸ் விடுதலைப் போராட்டமும் பல தசாப்தங்களாகத் தொடருவது எப்படி? டாக்டர் சான் யாட் சென்னின் போன்றவர்களின் பல்வேறு தோல்விகளுக்குப் பின்னரும் எப்படி மாவோ என்னும் மனிதன் மாபெரும் மக்கள் சீனத்தைப் படைக்கமுடிந்தது? ஆனால் ஏன் மே 18 ஆம் திகதிக்கு பின்னர் ‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்’ என்று சொல்லி ஒரு கைக்குண்டை வீசக்கூட ஈழத்தில் ஒரு தேசபக்தன் இல்லாது போனான்? உண்மையான தேசபக்தர்களையெல்லாம் துரோகிகள் என்று கொன்றழித்துவிட்டு கூலிக்கு வேலைசெய்யும் முகவர்களை பண முதலைகளையும் சர்வதேச மாபியாக்களையும் மட்டுமே வளர்த்தெடுத்ததன் பலன் தான் இந்நிலையா? இத்தொகுப்பின் சிறந்ததை கதையாக ‘விசாரணை’ என்னும் கதை அமைகின்றது. துரோகம் என்னும் கதையின் தலைப்பை இக்கதைக்கு வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில் உண்மையில் துரோகம் என்பது என்ன? ‘துரோகி’ ‘துரோகி’ என்று எடுத்ததற்கெல்லாம் கொலையே தீர்வு என்று இயங்கிய புலிகள் இயக்கம் இறுதியிலே அந்தத் துரோகத்தின் அடையாளமாக, தமிழர்களின் ஒரு அவமானச் சின்னமாகச் சீரழிந்து அழிந்து போனது. அந்த துரோக வரலாற்றை சொல்லாமல் சொல்லும் பாங்கில் இந்த விசாரணை என்னும் கதை அமைந்துள்ளது. புலிகளின் புலனாய்வுத் துறைக்காக மாதாந்தம் 8000 ரூபாய் கூலிக்கு பணிபுரியும் மயூரன் என்னும் ஒரு இளைஞன் பற்றியது இக்கதை. மிக விசுவாசமாக போராளிகளோடு போராளிகளாக வாழ்ந்து புலனாய்வு துறைக்கு பணிபுரிகின்றான் மயூரன். ஒரு கட்டத்தில் அவன் ஒரு இரட்டை முகவர் என்பதை இயக்கம் அறிந்து கொள்கின்றது. இயக்கத்தின் மறைவிடங்கள் பற்றி மலர்விழி என்னும் தன் காதலியூடாக இராணுவத்தினருக்கு அவன் அனுப்பிய இரகசிய தகவல்கள் உறுதி செய்யப்படுகின்றன. அதன் காரணமாக அவன் இலங்கை இராணுவத்தினருக்கு கொடுத்த இரகசியத் தகவலால்தான் புலிகளின் முகாமொன்றின் மீது விமானத் தாக்குதல் இடம்பெற்றது என்கின்ற குற்றச்சாட்டில் புலிகளால் மரண தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றான். கண்கள் கட்டப்பட்டு பொது மக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு பகிரங்கமாக சுட்டுக்கொல்லப் படுகின்றான். கூலிக்கு வேலை செய்பவன்தானே அதிக கூலி கொடுப்பவர்களுக்கு அதிக விசுவாசமாய் இருப்பான் என்பது இயல்புதானே? இந்தக்கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. அந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் இருபத்திஐந்து வருடங்களுக்குப் பின்னர் இறுதியுத்தத்தில் புலிகளின் தலைமைக்குழுவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்திடம் தங்களை ஒப்புவிக்கின்றனர். அவ்வேளையில் இயக்க இரகசியங்களை இராணுவத்தினரிடம் கையளித்தான் என்னும் குற்றச்சாட்டில் துரோகி என்று மரண தண்டனைக்கு ஈ ள்ளாக்கப்பட்ட மயூரன் இணைந்து இயங்கிய புலிகளின் புலனாய்வுத்துறை அணியினரும் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையும் காலம் வருகின்றது. அனைவரும் தங்கள் அடையாளங்களையும் இயக்க இரகசியங்களையும் இலங்கை இராணுவத்திடம் தாங்களாகவே ஒப்புவிக்கின்றனர். அவ்வேளையில் குறித்த கிராமத்துக்குரிய அரச கிராம சேவகராக மயூரனின் காதலி மலர்விழி இருக்கின்றாள். ஆக கூலிக்கு வேலைசெய்ய வந்து அதிக கூலி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இயக்க இரகசியங்களை இராணுவத்திடம் கொடுத்த மயூரன் துரோகியென்றால் அந்த மயூரனைப் போல் பலநூறுபேருக்கு மரணதண்டனை வழங்கிவிட்டு இன்று அதே இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் ஒப்படைத்த புலித்தளபதிகள் யார்? எத்தனை ஆயிரமாயிரம் அப்பாவிக் குழந்தைகளின் கழுத்திலே சயனைட் குப்பிகளை கட்டி களமுனைக்கு இவர்கள் அனுப்பினார்கள்! உயிர்க்கொடை, உன்னதம், மாவீரம் என்று எத்தனை கரும்புலிகளுக்கு இவர்கள் பயிற்சியளித்து பாடையில் அனுப்பினார்கள்! ஆனால் தங்களுக்கான நேரம் வந்தபோதுதான் உயிர்களின் பெறுமதியும் வாழ்வின் மீதான ஆசையும் இவர்களுக்கு புரிந்தது. இருபது முப்பது வருடங்களாக கோடிக்கணக்கான சொத்துக்களையும் லட்ஷக்கணக்கான பொதுமக்களையும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பலிகொடுத்துவிட்டு ஏனைய சக இயக்கப் போராளிகளையும் மிதவாத தமிழ் தலைமைகளையெல்லாம் துரோகிகள் என்று கொன்று வீசி விட்டு எஞ்சியிருந்த தேசபக்தர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடித்துவிட்டு இப்போது தாங்களும் கேவலமாக சரணடைந்து அழிந்து போவதில் என்ன மாவீரம் இருக்கின்றது? அனைத்துக்கும் மேலான துரோகம் இதுவல்லவா? மயூரன் துரோகியென்றால் நீங்களெல்லாம் யாரென்று கேட்காமல் கேட்பதற்காவா இந்த சிறுகதைத் தொகுப்புக்கு ‘துரோகன்’ என்று பெயரிட்டார் அகரன்? https://arangamnews.com/?p=117101 point- வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
ரொய்லட் ஆசனத்தில் அமராமலே சுமந்திரன் ஒரு திருகுதாளி என உணர முடியும். ஒரு தந்தை செல்வாவுக்கோ அல்லது அமிருக்கோ இல்லாத எதிர்ப்பு அலை ஏன் உருவாக வேண்டும்? ஒரு பொது அறிவு கேள்வி. இதற்கு ரொய்லட் ஆய்வாளர்களின் கருத்து அவசியமற்றது. என்னை பொறுத்த அளவில் தமிழரசு கட்சி ஒரு தேவை இல்லாத ஆணி. வேறொரு பெயருடன் இன வேதை கொண்டவர்கள் ஒரு பொது கட்டியை உருவாக்கி எல்லோரையயும் உள் வாங்கினால் மிக்க மகிழ்ச்சி. அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.1 point- வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
இந்த காணொளியில் சுமந்திரனை ஒரு கட்சி விரோதியாக கூறப்பட்டுள்ளது, அதற்காக கூறப்படுகின்ற காரணமாக கட்சியின் அடிப்படை கொளகையான தேசிய கொள்கையிலிருந்து வேறுபட்டுள்ளமையால் அந்த கொள்கை சார்ந்த (தமிழ் தேசிய ) அரசியல்வாதிகளை அகற்றுவதனால் கட்சி பலவீனமாகிறது என்பதாக பொருள்படுகிறது ( காணொளியினை சரியாக புரிந்து கொண்டேனா என தெரியவில்லை). இந்த தமிழ் தேசிய நீக்க அரசியல் என்பதன் மூலம் சுயாட்சி ( இரு அரச நிர்வாக மட்டத்தில் மத்திய அரசு மற்றும் பிராந்திய அரச மட்டத்தில் அதாவது மாகாணசபை ஊடாக) அதிக அதிகாரங்கள் கொண்ட காணி, காவல், நிதி மற்றும் சட்டத்தினை மத்திய மானில அரசுகள் தமக்கிடையே பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார்) இனை பெற முடியும் என கூற முற்படுகிறார் என நினைக்கிறேன் (சுமந்திரன்). இது எந்தளவிற்கு நடைமுறை சாத்தியம் என தெரியவில்லை. அதற்கு விலையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைக்க வேண்டிய நியாத்தினை விட்டுக்கொடுப்பது, காணாமல் போன தமது உறவுகள் தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலவரம் மற்றும் இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட இனக்கொலையினை வெளிகொணராமல் இருப்பது என்பதனை விலையாக செலுத்துவதுடன், இதற்கு மேலே சென்று உரிமைக்காக போராடிய போராளிகளை பயங்கரவாதிகளாக்குவதன் மூலம் அதனால் இலங்கை அரசின் இனவழிப்பினை நியாப்படுத்த விழைகின்றாரா என கேள்வி எழுகிறது. ஆனால் திரு சுமந்திரன் கூறுவது போல அதிகாரங்களை பெறுவதற்காக இவற்றினை செய்வது என்பது மேலும் அதிகாரத்திற்கான சமரச முயற்சியில் ஒரு பலவீனமான நிலையினையே ஏற்படுத்தும் என கருதுகிறேன். உங்களது இறுதி பேரம் பேசும் விடயங்களாக உள்ளவற்றை கைவிடுவது, மற்றும் இனப்பிரச்சினை இல்லை என்பதான உருவமைப்பு எவ்வாறு தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும் பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கும்? உரிமையினை பெறுவதற்காக சுமந்திரன் பயன்படுத்தும் உத்தியாக தமிழ் தேசிய நீக்கம் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என இணக்க அரசியலை பயன்படுத்துகிறார்.1 point - அறிவித்தல்: யாழ் இணையம் 27 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.