Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19134
    Posts
  2. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    15741
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87990
    Posts
  4. vasee

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3328
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/12/25 in Posts

  1. பிரச்சனை சர்வதேசம் எங்கும் தடை விதிக்கப்பட்ட ரோலிங் மீன் பிடி முறை தமிழ்நாட்டு மீனவர்களே அவர்களுடைய கடலில் ரோலிங் பண்ண முடியாது அதே போல் கேரளா பக்கமும் போகமுடியாது ஆந்திரா பக்க கடலுக்கும் போக முடியாது போனால் கழுவேற்றி விடுவார்கள் அவர்களுக்கு கிடைத்தது இளித்த வாய் வட கிழக்கு தமிழர்களின் மீன் வளம் . மிக மிக முக்கியமானது வடகிழக்கு கடல் மிகவும் ஆழம் குறைந்த சூரிய ஒளி கடல் அடி மட்டம் வரை இலகுவாக ஊடுருவும் பகுதி மீன்கள் இலகுவாக இனப்பெருக்கம் செய்யும் கண்டமேடைகளை கொண்ட இயற்க்கை வளமான பகுதிகள் இவற்றையே அம்பது அறுபது ரோலர்களை ஒரே நேரத்தில் ரோலிங் பண்ணுகிறார்கள் அப்படி ரோலிங் பண்ணும் போது ஒரு சின்ன மீன் கூட தப்ப முடியாது ஒருமுறை அந்த பகுதியில் அப்படி ரோலிங் பண்ணினால் அந்த பகுதி மீன்கள் அற்ற கடல் பாலைவனம் ஆகி விடும் மீண்டும் மீன்கள் அந்த பகுதியில் உருவாக பலவருடங்கள் காத்திருக்க வேண்டி வரும் இது தேவையா எமது மக்களுக்கு ?
  2. சொந்த இனத்தையே இப்படிச் செய்த இனம்...எம்மினத்தை என்னபாடூ படுத்தியிருப்பார்கள்....வாசிக்கவே நெஞ்சு பதறுகின்றது
  3. பத்திரிகைகள் மட்டுமல்ல… ராஜாவும் சரியான அற்பன். அவரை தமிழ் கூறு நல்லுலகம் இனம் கண்டு பாராட்டுகிறது. ஆனால் ஏனைய மொழிகளில் அவ்வளவு ரீச் இல்லை. ஆனால் ரஹ்மானின் இசையை உலகமே கொண்டாடுகிறது. ஏனையவர்கள் ரசிக்கவில்லை என்பதால் அவரின் இசை அற்புதமானது அல்ல என யாரும் சொல்லமுடியாது. ஆனால் அவருக்கு அந்த validation தேவைபடுகிறது. சாதி விடயத்தில் கூட அப்படித்தான். ஆம் நான் டேனியல்தான். மிகவும் பிற்படுத்தபட்ட சாதியில் பிறந்தவந்தான் ஆனாலும் என் இசைக்கு நீங்கள் எல்லோரும் ரசிகர்கள் என இறுமாப்பாய் இருக்கலாம். ஆனால் பொய்க்கு பிராமண வேஷம் போட்டு, அவங்கள் கோவிலுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தும் படி நடப்பார். # எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணம் இருக்கு
  4. தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல, சாதாரண தொழில்முறை மீனவர்களும் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். முதலாளிகள் படகை ஓட்டுவதில்லை. வலை வீசுவதில்லை. ஆகவே இது எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு களவு. இதை சகல கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்துகிறார்கள். கடல் முற்று முழுதாக, மத்திய அரசின் படைகளின் கட்டுப்பாட்டில். தமிழக கடலை மொட்டை அடிப்பதை, அல்லது இலங்கை கடல் எல்லைக்குள் போய் மீன் வளத்தை சுரண்டுவதை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையிம் எடுப்பதில்லை. ஒட்டு மொத்த மீனவ சமூகத்துக்கு மாற்று தொழில் இல்லை என்பது பச்சை பொய் - ரெயில் ரெயிலாக கட்டுமான துறையில் வேலை தேடி வரும் வட மாநில இளைஞர்களே சாட்சி. இதில் மீனவர்களின், முதலாளிகளின், அத்தனை அரசியல்வாதிகளினதும் சுயநலனே பிரதான காரணி. நான் முன்வைக்கும் தீர்வு எல்லை தாண்டும் மீனர்வர்களை பிடிக்க வேண்டும். அடிக்க கூடாது. கொல்ல கூடாது. இலங்கை சட்டத்தை வலுவாக்கி, அதன் கீழ் வழக்கு போட்டு 5-10 வருடம் சிறையில் போட வேண்டும். சிறையில் கட்டாய வேலை கொடுத்து - அதற்கு வெளி உலகில் உள்ள சம்பளத்தையும் கொடுத்து, அதை மீனவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறை வைக்கும் செலவை இந்திய மத்திய அரசு ஏற்க வேண்டும். படகுகள், இலங்கையருக்கு ஏலம் விடப்படலாம். மீதி உடைக்கப்படவேண்டும். இலங்கை, இந்திய அரசுகள் மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் அதிகாரம் உள்ள அமைப்புகள்.
  5. முத்தையா முரளிதரனும் ஒரு மணிக்கட்டால் பந்து வீசுபவர். முன்னால் இந்திய சுழல் பந்து வீச்சாளரான பிசன் சிங் பேடி முரளிதரன் ஈட்டி எறிகிறார் என கூறியதாக நினைவுள்ளது. மனிசன் 800 விக்கெட்டுகளை எடுத்தாலும் அவரை இன்னமும் அவுஸ்ரேலியர்கள் (சாமானியர்கள்) எறிபவன் எனவே நினைவூட்டுவார்கள் (அவரது பந்து வீச்சு தவறல்ல என நிரூபிக்கப்பட்ட பின்னும்). நீங்கள் மணிக்கட்டினால் பந்து வீசியதால் மணிக்கட்டு திரும்பிவிட்டது என கருதுகிறீர்கள் ஆனால் இப்போதுதான் உங்கள் மணிக்கட்டு நேராகியுள்ளது.🤣 தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் அமெரிக்க அணியில் வாய்ப்பு கிடைக்கலாம்.🤣
  6. நான் அறிந்தவரையில் ஒரு பிரபலமான மண்டபத்தை வாடகைக்கு அமர்த்தி, போதியளவு ஆட்களை கொண்டு, விதிப்படி ஒரு சிம்பொனி நிகழ்வை எவரும் நிகழ்த்தலாமாம். கீழே தொடக்கம் முதல் சிம்பொனி இசைத்தவர்கள் லிஸ்ட் உள்ளது. அதில் சுபசிங்க எனும் ஒரு சிங்களவரும் அடக்கம். https://en.m.wikipedia.org/wiki/List_of_symphony_composers
  7. படக்குறிப்பு, தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வெளிப்படுத்தினார். 45 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பு பாலைவனமாவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மறுத்து வருகின்றனர். பிபிசி தமிழுக்காக இலங்கையில் இருந்து செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதைக் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதன்போது வெளிப்படுத்தினார். கேள்வி: இந்தியா-இலங்கை மீனவப் பிரச்னை, மிக முக்கியமான பிரச்னையாகக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான பாரிய பொறுப்பு உங்கள் வசம் காணப்படுகிறது. இது தற்போது எவ்வாறான நிலைமையில் காணப்படுகின்றது? பதில்: இலங்கை இந்தியா இடையிலான மீனவப் பிரச்னை என்பது மிக நீண்ட நாட்களாக புரையோடிப் போயுள்ள பிரச்னையாகக் காணப்படுகின்றது. இதைத் தீர்ப்பதற்காக அல்லது இணக்கப்பாட்டிற்கு வருவதற்காகக் கடந்த காலங்கள் முழுவதுமே இங்கிருக்கின்ற மீனவர்கள், மீனவ சங்கங்கள், அரசியல்வாதிகள் எல்லோருமே பல்வேறு பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்படிக்கைகளைச் செய்துகொண்ட போதிலும்கூட எந்தவித இணக்கப்பாடும் இல்லாது தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகின்றது. அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதன் காரணமாக இன்று அது திருப்புமுனையாக மாறியுள்ளது என நான் நினைக்கின்றேன். அதற்குக் காரணம் என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மீன்பிடி அமைச்சராகப் பொறுப்பேற்றதன் பிறகு அது மாத்திரமல்ல, கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கணிசமான மக்கள் வாக்களித்தார்கள். யாழ் மாவட்டத்திலும் எங்களை முதலாவது கட்சியாக மக்கள் உயர்த்தி வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. எங்களை நம்பிய மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய முடியாது. மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் மீனவர்களுடைய பிரச்னை தொடர்பில் பல தடவை சொல்லியிருப்பேன். பெருமளவான மீனவர்கள் என்னிடம் சொல்வது ஒன்றுதான். முடியுமானால், இந்த இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துங்கள். தடுத்து நிறுத்த முடியாவிட்டால் நாங்கள் எல்லோருமே இந்தக் கடலில் குதித்து செத்துப் போகின்றோம் என்ற வார்த்தையைப் பல மீனவர்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு இன்றைக்கு இது உச்சக்கட்டமான பிரச்னையாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இந்திய அரசிடமும் சரி, தமிழ்நாட்டு அரசிடமும் சரி, நாங்கள் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்வது, 'எங்களுடைய கடற்பரப்பு, இது சர்வதேச ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட கடல் பரப்பு, இலங்கைக்குச் சொந்தமான கடல். இந்தக் கடல் எல்லையை மீற வேண்டாம், தாண்ட வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்குச் சொல்லும் படி,' நாங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும், மத்திய அரசாங்கத்தையும் மிக மிக வினையமாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழக மீனவர்கள் தங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்ற கேரளா கடல் பரப்பிற்குச் செல்லமாட்டார்கள். ஆந்திராவுக்கு செல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால், எங்களுடைய கடற்பரப்புக்குள் வந்து முற்று முழுதாக எங்களுடைய மீன்வளங்களைக் கொள்ளையடித்து விட்டு, எங்களுடைய கடல் வளங்களை நாசம் செய்துவிட்டு, எங்களுடைய கடல் தொழிலாளர்களின் வலைகள், வளங்கள் எல்லாவற்றையும் நாசம் செய்துவிட்டு கொள்ளையடித்துக் கொண்டு, போகும் வழியில் நாங்கள் தொப்புல்கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு போகின்றார்கள். இதுதான் இன்றைக்கு இவர்களுடைய நிலைமை. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. அதற்கான நடவடிக்கைகள் நகர்வுகளை நாங்கள் எடுத்து வருகின்றோம். இலங்கை: 2 வயது குழந்தையை தத்தெடுத்து சித்ரவதை செய்து கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன? இலங்கையில் வெறும் ஐந்தே நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் - எப்படி? கச்சத்தீவுக்கு அருகில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கூறக்கூடிய ஒரு விடயம், கச்சத்தீவு நிலப்பரப்புக்கு அண்மித்த பகுதியில்தான் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதைத் தாண்டி நாங்கள் செல்வதில்லை எனக் கூறுகின்றார்கள். அப்படி கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடிக்கின்ற அந்த மீனவர்களை இலங்கை கடற்படை ஏன் கைது செய்கின்றது? பதில்: இதற்கான பதிலை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில், ஒரு சில இந்திய ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். விசேடமாக ஆங்கில பத்திரிகைகளில் இலங்கை தொடர்பான செய்திகளை இந்தியாவுக்கு கொண்டு செல்கின்ற வலிமையான பத்திரிகைகளில் இருக்கின்றார்கள். அவர்களிடம் நீங்கள் சென்று கேட்டுப் பார்க்கின்றபோது, மிகத் தெளிவாக அவர்கள் சொல்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது. நாங்கள் நேரடியாக வந்து பார்த்திருக்கின்றோம். இந்திய ட்ரோலர்கள் வந்து, எங்களுடை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து எங்களுடைய கடல் பரப்பில் இருந்துகொண்டு எங்கள் மீன் வளங்களையும், கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதை நாசமாக்குவதையும் நாங்கள் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். அதனால், இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. கச்சத்தீவுக்குக்கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. நாங்கள் ஏதோ இணக்கப்பாட்டிற்கு வந்து கொடுத்தாலே தவிர, அவர்கள் அங்கு வர முடியாது. அவர்களுக்குச் சொந்தமான கடலில் அவர்கள் எந்த விளையாட்டை விளையாடினாலும் பரவாயில்லை. அதேபோன்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடல் பரப்பில் அவர்கள் மீன் பிடிப்பார்களாக இருந்தால், அதற்கு எங்களுடைய கடற்படை எந்தவிதத்திலும் தலையீடு செய்யாது. அவர்கள் எங்களுடைய கடற்பரப்பு அல்ல, எங்களுடைய எல்லையையும் தாண்டி, எங்களுடைய கரையையும்கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள். கச்சத்தீவுக்கு அந்தப் பக்கம் அவர்களின் கடலில் இருந்துகொண்டு மீன்பிடிக்கின்றோம் என்பது பொய்யான விடயம். அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம். கேள்வி: இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்னையாகக் காணப்படுவது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை தமிழக அரசாங்கம், மத்திய அரசாங்கம் இலங்கையிடம் மீளக் கோரியிருந்தன. இலங்கை அரசாங்கத்திற்குக் கச்சத்தீவை கொடுப்பதற்கான எண்ணம் எதுவும் இருக்கின்றதா? பதில்: கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது. இது ஐக்கிய நாடுகள் சபையில் கடல் எல்லை தொடர்பான விடயத்தில் எங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், கச்சத்தீவை என்றைக்குக் கொடுத்தார்கள், யார் கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்பது வரலாற்று ரீதியில் வேறு விடயங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது எங்களுக்குச் சொந்தமானது. ஆனால், எங்கள் எல்லோருக்குமே தெரியும். நேற்று இன்று அல்ல. இந்தியா, தமிழ்நாட்டில் தேர்தல் காலங்கள் வருகின்றபோது காளான் பூத்ததைப் போன்று தொடர்ந்து கச்சத்தீவு பிரச்னையை இவர்கள் கையில் எடுப்பது வழமை. ஆனால், கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது. இதை யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை. புத்தகயா: புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் உருவான மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம்? இந்து - பெளத்தர் மோதல்3 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து டிரம்ப் எழுதிய கடிதத்திற்கு இரானின் பதில் என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் யோசனைகள் உள்ளதா? படக்குறிப்பு,"அவர்களின் கடலில் மீன்பிடிக்கும்போது எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் எடுக்கப் போவதில்லை, ஆனால், எங்களுடைய கடலில் மீன்பிடிக்கும்போது நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்" என்கிறார் இராமலிங்கம் சந்திரசேகரன். கேள்வி: கடந்த காலங்களில் நாங்கள் கண்ட ஒரு விடயம். அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் வரக்கூடிய இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்ற குற்றச்சாட்டு காணப்பட்டது. சில வேளையில் அவர்களை விரட்டுவதற்காக வானை நோக்கி துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தியா தரப்பினர், தங்களை நோக்கியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகச் சொல்கின்றார்கள். உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் அவர்கள் குற்றசாட்டுகளை முன்வைக்கின்றார்கள். இது உங்களின் அரசாங்கம் அல்ல. இதற்கு முன்னர் இருந்த அரசுகளின் காலப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்தன. உங்களின் ஆட்சியில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கும் பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் யோசனைகள் எதுவும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றதா? பதில்: இல்லை. எங்களுடைய அரசாங்கத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களைத் துன்புறுத்துவதோ, அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. ஆனால் உங்களுக்கு தெரியும். ஒரு நாட்டின் கடல் எல்லையை மீறுகின்றபோது அந்தக் கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கடற்படைக்கு உண்டு. யுத்த காலத்தில் அது வேறு கதை. யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் சம்பங்கள் இடம்பெற்று இருக்கின்றது. ஆனால், எங்களுடைய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு வந்ததற்குப் பிறகு நாங்கள் இந்திய படகுகளைக் கைது செய்வது உண்மை. ஆனால் கடற்படை அவர்களைத் துப்பாக்கி பிரயோகம் செய்து, தடுக்க வேண்டும் என கோரிக்கையோ கட்டளையோ யாரும் விடவில்லை. ஆனால் குறிப்பிட்ட சம்பவமொன்று இருக்கின்றது. அந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை என்னவென்றால், அந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எங்களுடைய கடற்படையினர் கைது செய்வது வழமை. பலவந்தமாக அவர்களுடைய படகுகளில் ஏறிக் கைது செய்கின்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள். அவ்வாறு நடவடிக்கைகளை எடுக்கின்றபோது அவர்கள் படகுகளில் ஏற முடியாதவாறு சுற்றி வர ஓயில் போட்டிருப்பார்கள். அதையும் மீறி ஏறினால் சுடுநீரைக் குழாய் மூலம் பாய்ச்சுவார்களாம். கடற்படைக்குத் தீங்கு செய்கின்ற நடவடிக்கைகளை அவர்கள் செய்கின்றார்கள். அதையும் மீறி அன்றைய தினம் எங்களுடைய ஒரு சிப்பாய் படகிற்குள் ஏறிவிட்டார். ஏறிய பிறகு அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டு, அவரை தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அவர்களின் தலையில் சுட்டிருக்கலாம் அல்லது ஏனைய பாகங்களில் சுட்டிருக்கலாம். ஆனால், முழங்காலுக்குக் கீழேதான் சுடப்பட்டது. மீன்பிடிப் படகுகளில் வருகின்றவர்கள் கூலித் தொழிலாளர்கள் அப்பாவிகள். அங்குள்ள ஒரு சில பெண்கள் கதறி அழுவதையும் நான் பார்த்திருக்கின்றேன். நான் இந்திய மீனவர்களைச் சந்தித்து இருக்கின்றேன். ஒரு மீனவர் என்னிடம் சொன்னார், "ஐயா நான் இனி இந்தப் பக்கம் வர மாட்டேன். இது எங்களுடைய வாழ்க்கைப் பிரச்னை. இந்த வாழ்க்கைப் பிரச்னைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாக இருந்தால், இந்திய கடற்பரப்பில் மீன்கள் உற்பத்தியாவதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமானால், அல்லது இந்திய கடற்பரப்பின் ஏனைய பகுதிகளில் மீன்களைப் பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்குமானால், சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான சலுகைகளைச் செய்து கொடுத்து இருக்குமானால், நிச்சயமாக நாங்கள் இவ்வாறானதொரு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க மாட்டோம்" என்றார். தங்களுக்கு முடியாத பட்சத்திலேயே இவ்வாறான செயற்பாடுகளை எடுப்பதாக அவர்கள் தரப்பில் கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில் அந்த மீனவர்களை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதோ அவர்களைத் துன்புறுத்துவதோ அவர்களைச் சிறையில் அடைப்பதோ எங்களுடைய நோக்கம் கிடையாது. அவர்களைச் சிறையில் அடைக்கின்றபோது தங்களுக்குத் தெரியும் என்று கூறி அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். "நாங்கள் சட்டவிரோதம் எனத் தெரிந்து கொண்டுதான் இலங்கை கடல் எல்லையை மீறி இருக்கின்றோம். அதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றோம்" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. எங்களால் அல்ல. நீதிமன்றத்தால். அந்த நிலைமையின் கீழ் நாங்கள் சொல்கின்றோம். இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல. இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பதுதான். இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே சட்டவிரோத கும்பல் தலைவரை கொன்ற நபர்21 பிப்ரவரி 2025 இலங்கை: 2025-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய 10 விடயங்கள்17 பிப்ரவரி 2025 இந்திய பிரதமர் மோதியுடன் மீனவர் பிரச்னை குறித்து பேசப்பட்டதா? படக்குறிப்பு,"இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், தீர்வு வேறு ஒன்றும் அல்ல, இந்திய மீனவப் படகுகள் எங்களுடைய எல்லையை மீறாமல் இருப்பது தான்." கேள்வி: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றார். நரேந்திர மோதியை சந்தித்தார். குடியரசுத் தலைவரைச் சந்தித்திருந்தார். இப்படியான சந்திப்புகளில் இந்த மீனவப் பிரச்னை தொடர்பாக எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? பதில்: ஒரு விடயம் இருக்கின்றது. இந்திய விஜயத்தின்போது தோழர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மோதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்னை முதன்மையான பிரச்னையாகப் பேசப்படவில்லை. அதைவிட வேறு விதமான தேவைகள் இந்தியாவிற்கு இருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இந்தியாவுக்கும் தெரியும் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசிக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் அண்மையில் தமிழ்நாட்டிற்குச் சென்றபோது இந்திய அரசாங்கம் 42 லட்சம் ரூபா நட்ட ஈடாக அல்லது மானியமாக வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக அங்கிருக்கின்ற மீனவர்கள் தொடர்பான புத்திஜீவிகள் சிலர் என்னிடம் கூறினார்கள். இது ட்ரோல் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்துவதற்கான நடவடிக்கை. அப்படி இருந்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தப் பொடம் ட்ரோலிங் இழுவை படகுகளின் மூலமாக எங்களுடைய கடல் பரப்பை நாசமாக்குகின்றார்கள் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். அதனால், இது சம்பந்தமாக தோழர் அநுர குமாரவோடு வேறு விதமான ஆழமான உரையாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால், இது பேசப்பட்டது. எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். நாங்கள் ஒரு தீவு. இலங்கை என்பது ஒரு தீவு. இந்தத் தீவு அழகாக இருக்கின்றது. அது தீவாக இருப்பதன் காரணமாக நாங்கள் இறைமையுள்ள நாடு, தன்னாதிக்கம் உள்ள நாடு. மோதியுடனான சந்திப்பின்போது நாங்கள் கூறியுள்ளோம். இது, இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்புகளிலும் நானும்கூட அடித்துக் கூறுகின்ற ஒரு விடயம்தான். இந்திய படகுகள் எங்களுடைய கடல் எல்லையை மீறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு. டிரம்ப் உத்தரவு எதிரொலி: USAID இடைநிறுத்தத்தால் இலங்கைக்கு என்ன பாதிப்பு?9 பிப்ரவரி 2025 இலங்கை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்3 பிப்ரவரி 2025 தமிழ்நாடு, இலங்கை மீனவப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கேள்வி: இந்திய மீனவர்களைக் கைது செய்யும்போது, அவர்களின் உடைமைகள், சொத்துகள் இலங்கையில் அரசு உடையாக்கப் படுகின்றன. அந்த நடவடிக்கை இனி வரும் காலங்களில் எப்படியான விதத்தில் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்பதை இந்த அரசாங்கம் எப்படிப் பார்க்கின்றது? பதில்: இந்த நடவடிக்கைகள் தொடரும். அதனால், தயவு செய்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எங்களுடைய கடல் எல்லையை மீற வேண்டாம். நீங்கள் வருவீர்களாக இருந்தால், கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்படுவது மாத்திரமல்ல. உங்களின் உடைமைகளும் இல்லாதுபோகும் நிலைமை ஏற்படும். இப்போதும்கூட 124 படகுகள் அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. 24 படகுகள் தொடர்பில் வழக்கு நடக்கின்றது. சுமார் 20 படகுகளை அவர்கள் கொண்டு செல்ல முடியும். அவர்கள் வருவதில்லை. 124 படகுகள் என்பது விளையாட்டு இல்லை. பெரிய படகுகள். லட்சக்கணக்கான பெறுமதிமிக்க படகுகள். இந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் இன்றைக்கு அவை அரசு உடைமையாக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய படகுகளால் எங்களுடைய கடல்வளம் அழிக்கப்படுகின்றது. அந்தக் கடல் வளத்தை மீள உருவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இதை இந்தியாவுக்கும் நாங்கள் அறிவித்து இருக்கின்றோம். இந்திய தூதுவர்களுக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம். அந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கப் போகின்றோம். இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு என்னவென்றால்,வேறு எதுவும் அல்ல. இது எங்களுடைய வீடு.எங்கள் வீட்டில் வேறு ஒருவர் வந்து புகுந்து விளையாடுவாராக இருந்தால், அவருக்குத் தேவையான வகையில் வளங்களை நாசம் செய்வாராக இருந்தால், அதை நாங்கள் கண்மூடிப் பார்த்துக் கொண்டு இருப்போமாக இருந்தால், நாங்கள் ஒன்று குருடர்களாக அல்லது செவிடர்களாக அல்லது மூடர்களாக, ஊமைகளாகவே இருக்க வேண்டும். அல்லது இதைக் கண்டு அஞ்சும் முதுகெலும்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் அப்படியல்ல. இந்திய அரசாங்கத்தை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். இந்திய மீனவர்களை நாங்கள் நேசிக்கின்றோம். மீன்பிடி அமைச்சர் என்ற வகையில் இந்திய மீனவர்கள் மீதான பாசம் நேசம் அதிகரித்திருக்கின்றது. அந்த நேசம் பாசம் எல்லாமே இருக்கின்றது. அதனால், நேசம் பாசம் தொடர வேண்டும் என்றால், அல்லது நீங்கள் சொல்கின்ற அந்தத் தொப்புள் கொடி உறவு உண்மை என்றால் அந்தத் தொப்புள் கொடி உறவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவர்களாகும். கடலையே நம்பி வாழ்கின்றார்கள். கடந்த 30 வருடத்திற்கு மேல் யுத்தம். பாதிக்கப்பட்டது வாழ்க்கை. யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாக இன்னமும் தங்களால் எழ முடியவில்லை. தங்களின் வாழ்க்கையில் மேல் எழ முயன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கட்டி எழுப்புகின்ற அந்த வாழ்க்கையில், மண்ணை வாரிப் போடுவது, தொப்புள் கொடி உறவு என்று கூறிக்கொள்ளும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களே. எங்களுடைய மீனவர்களின் வாழ்க்கையை அவர்களே நாசமாக்கின்றார்கள். எங்களுடைய கடல் வளத்தை நாசமாக்கின்றார்கள். இவ்வாறு கடல் வளம் நாசமாக்கப்படுவது தொடருமாக இருந்தால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களுடைய கடல் பரப்பு பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பாலைவனத்தில் நாளை இந்தியாவுக்கும் இடம் கிடையாது. எங்களுக்கும் இடம் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் அன்றைக்கு எந்த விளையாட்டையும் விளையாட முடியாது. அதனால், நாங்கள் நீங்கள் எல்லோருமே சேர்ந்து இந்தக் கடலைப் பாதுகாக்க வேண்டும். கடல் எங்களுக்குச் சொந்தமானது அல்ல. உங்களுக்கும் சொந்தமானது அல்ல. நாளைய தலைமுறைக்குச் சொந்தமானது. அந்த வகையில்தான் இதற்கு இறுதியானதும் உறுதியானதுமான தீர்வு, இந்திய படகுகள், குறிப்பாக தமிழ்நாட்டின் ஒரு சில படகு உரிமையாளர்கள் எங்களுடைய கடல் எல்லையை மீறாதிருப்பதே இதற்கான நீண்டு நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வு என்று நான் நினைக்கின்றேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8ydyeqkdyo
  8. சரி அப்படி என்றால் எல்லா ட்றோலரிலும் இருக்கும் கருவிகள் சரியான செயற்திறன் உள்ளனவா எனப் பரிசோதிக்க வேண்டும். ஏன் எனில் அப்பாவி மீனவர்களை ஏமாற்ற பல உத்திகளையும் அந்த எஜமானர்கள் கையாள்வார்கள். அப்பாவி மீனவர்களை ஏமாற்ற என்பதை எஜமானர்கள் பணம் சம்பாதிக்க என்று வாசியுங்கள்
  9. யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஆஸ்பத்திரி வீதியில்,வேம்படிச் சந்திக்கு அருகாக உள்ள சூழலில் உயர்தர உணவகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன.பீட்சா கடைகளில் இருந்து பிரியாணி கடைகள்வரை பல்வேறு வகைப்பட்ட உணவகங்கள் மிகக்குறுகிய தூர இடைவெளிக்குள் உண்டு. இந்த உணவகங்கள் தவிர இவற்றிற்கு முன்னரே திறக்கப்பட்ட உயர்தர விருந்தினர் விடுதிகள் உண்டு.அங்கேயும் இரவில் நூற்றுக்கணக்கானவர்களைக் காணமுடியும்.அவரவர் அவரவர் நுகர்வுக் கொள்ளளவுக்கு ஏற்ப உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ்ச் சமூகத்தில் நுகர்வுத் தாகம் அதிகரித்து வருவதை;ஒரு நுகர்வு அலை எழுந்திருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த நுகர்வுப் பசியும் தாகமும் அதிகரித்துச் செல்கின்றன. போரினால் மூடப்பட்டிருந்த ஒரு சமூகம் வெளியுலகத்துக்குத் திறந்து விடப்படுகையில் நுகர்வுத்தாகமும் பசியும் அதிகமாக இருக்கும்.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவிகள் மட்டும் இதற்குக் காரணமல்ல.ஆயுத மோதலுக்கு பின்னர் தமிழ்மக்கள் தமது வாழ்க்கையைப் படிப்படியாகக் கட்டியெழுப்பி வருகிறார்கள் என்பதன் குறிகாட்டிகளில் ஒன்றாக மேற்படி உயர்தர உணவகங்களின் பெருக்கத்தைக் கூறலாம். ஒரு மாற்றத்திற்காக வெளியில் போய்ச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது வித்தியாசமாகச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது கூடியிருந்து சாப்பிடுவதைக் கொண்டாட விரும்புகிறவர்கள் அவ்வாறு உயர்தர விருந்தகங்களை நோக்கிப் போகிறார்கள். வசதிபடைத்த மேல்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லஅன்றாடம் உழைப்பவர்கள் அதிகமுடைய கிராமங்களிலும்கூட இரவு உணவுக்காக பேக்கரிகளில் தங்கியிருக்கும் ஒரு நிலையைக் காணலாம்.உதாரணமாக,சில ஆண்டுகளுக்கு முன்பு உரும்பிராயில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஸ்தாபகருடைய நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக போயிருந்தோம்.பெருமாளவிற்கு அன்றாடம் உழைப்பவர்களைக் கொண்ட ஒரு கிராமம் அது.நாங்கள் அங்கேயிருந்த சுமார் 5 மணித்தியால காலப்பகுதிக்குள் 8 பேக்கரி வாகனங்கள் அப்பகுதிக்குள் வந்துபோயின.அவற்றுள் சில ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வந்தன.அந்த கிராமத்தவர் ஒருவரிடம் கேட்டேன்,”இவ்வளவு அதிக தொகையாக பேக்கரி வாகனங்கள் வருகின்றனவே அந்த அளவுக்கு நுகர்வு உண்டா? என்று. அவர் சொன்னார்,”ஓம் பெருமளவுக்கு உடல் உழைப்பாளிகளாகிய எமது கிராமத்தவர்கள் இரவுகளில் ஆறுதலாக இருக்க விரும்புகிறார்கள்.இரவில் சமைப்பதைவிடவும் இந்த பேக்கரி உணவுகளை வாங்கினால் பெண்கள் ஆறுதலாக இருந்து திரைத்தொடர்களைப் பார்க்கலாம்” என்று சொன்னார். சமையல்,பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒரு கடமை என்று கருதும் ஒரு சமூகத்தில் இவ்வாறு விருந்தகங்களுக்குப் போவதன் மூலம் பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.பொதுவாக கிழமைக்கு ஒரு நாளிலாவது அல்லது ஒரு நாளில் ஒரு வேளையாவது சமையாமல் இருப்பதை பெண்கள் பெருமளவுக்கு ஆறுதலாகக் கருதுகிறார்கள். எனினும் இவ்வாறு உணவை கூடியிருந்து சாப்பிடுவதை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் பலரும்,உயர்தர உணவகங்களில் உணவுக்கு ஓர்டர் கொடுத்துவிட்டு,மேசையைச் சுற்றியிருந்த அவரவர் அவரவருடைய கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒன்றாக உட்கார்ந்து உணவைச் சுவைப்பது ஒரு கொண்டாட்டம்.அந்த கொண்டாட்டத்துக்குள்ளும் கைபேசி ? மேற்சொன்ன உயர்தர உணவகங்களில் ஒரு தொகுதி கோர்ப்பரேட் வலப்பின்னலுக்குள் வருபவை.உதாரணமாக ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கும் ஆர்ஆர் பிரியாணி இந்தியாவை மையமாகக் கொண்டது. அதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளைகள் உண்டு.அடுத்ததாக காலித் பிரியாணியும் சென்னையை மையமாகக் கொண்டது.பெருந்தொற்று நோய்க்காலத்தில் மூவர் இணைந்து உருவாக்கிய உணவகங்களின் சங்கிலி வலையமைப்பு அது. கோப்பரேட் உணவகங்கள் உலகப் பொதுவான கோப்பரேட் சுவையைப் பரப்புகின்றன. யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான சனாதனன் கூறுவார் எல்லா பேரங்காடிகளுக்கும் ஒரே மொழிதான் என்று. அங்குள்ள தட்பவெட்பம், அங்கு மென்மையாகத் தவழும் இசை, உணவு வேகும் வாசம் போன்ற எல்லாமும் உலகின் எல்லாப் பேரங்காடிகளுக்கும் ஒரே மாதிரியானவைதான்.அப்படித்தான் கோப்பரேட் உணவகங்களும் உலகப் பொதுச் சுவையை பரப்புகின்றன. ஆனால் இதனால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன என்று கூறமுடியாது. ஏனென்றால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகளில் வழமையாக உணவு அருந்துபவர்கள் எப்பொழுதும் அங்கே போவார்கள்.ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் உயர்தர உணவகங்களை நோக்கியும் குறிப்பிட்ட சில பேரங்காடிகளை நோக்கியும் போகிறார்கள். “உயர்தர உணவகங்களில் பிரியாணி வகை உணவைச் சாப்பிடுவது என்பது ஒரு அந்தஸ்தை,சமூகத் தராதரத்தை காட்டும் விடயம்” என்று கனடாவில் வசிக்கும் கீதா சுகுமாரன் கூறுகிறார்.அவர் உணவுப் பண்பாட்டை தனது கலாநிதிப் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டவர்.பிரியாணி என்பது எல்லாவிதமான பொருட்களும் கலந்து சமைக்கப்படும் ஓர் உணவு.விருந்துகளில் அது அந்தஸ்தைக் குறிப்பது.பிரியாணிக் கடைகளில் சாப்பிடுவதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதும் ஒரு பிரிவினர் அங்கே போகிறார்கள்.என்றும் அவர் கூறுகிறார். ஆனால்,அதனால் உள்நாட்டுச் சுவையும் உள்நாட்டு உணவும் கைவிடப்படுகின்றதா?இல்லை.அவ்வாறெல்லாம் ஏங்கத் தேவையில்லை. வீடுகளில் இப்பொழுதும் உள்நாட்டு சமையல்தான்.உள்ளூர் சுவைதான்.ஒரு வித்தியாசத்துக்காக,ஒரு மாற்றத்திற்காக அல்லது தமது அந்தஸ்தைக் காட்டுவதற்காக பிரியாணிக் கடைக்கு போகின்றவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரியாணிக் கடைகளிலேயே சாப்பிடுவதில்லை.அவ்வாறு தினசரி பிரியாணிக் சாப்பிடுகிறவர்கள் யாழ்ப்பாணத்தில் அந்தக் கடைகளில் இருந்து குறுகிய தொலைவில் காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தங்களுடைய கொலஸ்ட்ரோலைக் கரைப்பதற்கான சிகிச்சைகளையும் பெறுகிறார்கள். அதாவது ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலை விற்கிறார்.ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலைக் கரைக்கிறார்.ஆக மொத்தம் கோப்பரேட்களின் ஆய்வு கூடமாக மாற்றப்பட்ட உள்ளூர் உடல் ? கோப்பரேட் சுவை என்பது உலகப் பொதுவானது.உள்ளூர்ச் சுவை என்பது அதிகம் தேசியத் தன்மை மிக்கது.ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு.பொதுப் பண்பாட்டுக்குள் உணவுப் பண்பாடும் அடங்கும்.எனவே உணவுப் பண்பாடானது ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தனித்துவங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது.1966இல் மேதினத்தன்று இடதுசாரிகள் தமிழ்மக்களுக்கு எதிராக எழுப்பிய கோசத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.“தோசே மசால வடே அப்பிட்ட எப்பா”.இது தமிழர்களை அவர்களுடைய உணவுக்கூடாக விழித்த ஒரு கோஷம்.தோசையும் மசாலா வடையும் வேண்டாம் என்று பொருள்.அதாவது தோசையும் வடையும் அங்கே தமிழ் மக்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டன. ஈழத் தமிழர்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் வித்தியாசமான உணவுப் பண்பாடுகள் உண்டு.வடக்கில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.யாழ்ப்பாணத்திலேயே வடமாராட்சி,தீவுப் பகுதிக் கிடையே வித்தியாசமான உள்ளூர் உணவுப் பண்பாடுகள் உண்டு.ஒரு தேசிய இனத்தின் உள்ளூர் உணவு பண்பாட்டுக்குள்ளேயே பல வகைகள் உண்டு.அவை எக பரிமாணத்தைக் கொண்டவை அல்ல. இந்தப் பல்வகைமையின் திரட்சிதான் ஈழத் தமிழர்களுடைய பொதுவான உணவு பண்பாடாகும். உலகில் தூய உணவுப் பண்பாடு என்று ஒன்று கிடையாது என்று கீதா சுகுமாரன் கூறுகிறார்.எல்லா உள்ளூர் உணவுப் பண்பாடுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவைதான். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே கோப்பரேட் உணவுப் பண்பாட்டையும்,உள்ளூர்,தேசியத் தனித்துவம்மிக்க உணவுப் பண்பாடுகளையும் பார்க்க வேண்டும். ஆயுத மோதல்களுக்கு பின்னரான நுகர்வுப் பசி,தாகம் என்பவற்றின் பின்னணியில் ஒரு தேசமாக திரள்வதன் மூலம் மட்டுமே தனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தமிழ்ச் சமூகமானது,தனித்துவம் மிக்க தனது சொந்தச் சுவையைக் குறைத்து மதிப்பிட்டு, அதை “லோக்கலானது” என்று இகழ்ந்துவிட்டு, கோப்பரேட் சுவை மீது பசி தாகமுடையதாக மாறிவிடுமா ? கோப்பரேட் உணவகங்களின் பெருக்கத்தின் மத்தியில் உள்ளூர்த் தனித்துவங்களைப் பாதுகாப்பதை ஒரு வாழ்க்கை முறையாக, பெருமைக்குரிய வாழ்க்கை முறையாகக் கட்டமைப்பது என்பது ஒரு சமூகத்தின் அரசியல் சமூக பண்பாட்டுத் தலைமைத்துவங்களின் வேலை.அது தொடர்பாக அந்த சமூகத்தின் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் மத்தியில் பொருத்தமான விழிப்பும் தூரநோக்கிலான அரசியல் தரிசனங்களும் இருக்க வேண்டும்.துறைசார் அறிஞர்கள் இதுதொடர்பான கற்கைகளை காஸ்ரோ நஷனலிஸம் (Gastro nationalism)என்று அழைக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் புலப்பெயர்ச்சி காரணமாக ஏற்கனவே உலகமயப்பட்டு விட்டார்கள்.தாங்கள் உலகமயப்பட்டு விட்டதாகக் காட்டிக்கொள்வதை ஒரு பகுதியினர் பெருமையாகவும் கருதுகிறார்கள். தமிழ்மக்கள் பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டவர்கள். பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகம் தன்வசமிழந்து தனது தனித்துவங்களை ‘லோக்கல்’ ஆனவை என்று இகழ்ந்து எதிர்ப்பின்றி உலகப் பொதுப் பண்பாட்டுக்குள் கரைந்துவிடாது.ஆனால் ஒரு சமூகத்தை தோற்கடிக்க விரும்பும் சக்திகள் அந்தச் சமூகத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தையும் செழிப்பையும் அதைவிட பலமான ஒரு பண்பாட்டிற்குள் கரைத்து விட முயற்சிக்கும்.எனவே அதை எதிர்கொள்வதற்கான சமூக,அரசியல், பொருளாதார,பண்பாட்டு விழிப்பு என்பது கலெக்டிவ் ஆனது.அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட வேண்டியது.கோப்பரேட் சுவையைப் பரப்பும் உயர்தர உணவகங்களுக்கு நிகராக உள்ளூர்ச் சுவையை,உள்ளூரில் தனித்துவமான உணவுப் பண்டங்களை உலகத் தரத்துக்கு உற்பத்தி செய்வதற்கு தமிழ் மக்களிடம் வளம் இல்லையா? உள்ளூர் நண்டுக் கறி,உள்ளூர் றால்கறி,உள்ளூர் பிரட்டல்,உள்ளூர் பொரியல்,உள்ளூர் சுண்டல்,உள்ளூர் கீரை,உள்ளூர் ஒடியல் கூழ்,உள்ளூர் பலகாரம்… என்று தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை வெளிப்படுத்தும் உணவுச் சாலைகளை கட்டியெழுப்ப உள்ளூரிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும். சூழலியலாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்கள்.உள்ளூர் மரங்களில்தான் பறவைகள் கூடுகட்டும்.பூச்சி புழுக்களும் அந்த மரங்களைத்தான் மொய்க்கும்.அவற்றுக்குத் தெரிகிறது உள்ளூர் மரம் எது? “ஹைபிரிட்” மரம் எது? என்று.பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் மக்களுக்கும் அது தெரியும்.தமது சுவை எது? கோப்பரேட் சுவை எது என்பது.பண்பாட்டு விழிப்பில்லாமல் தேசிய விழிப்பு இல்லை. https://www.nillanthan.com/7204/?fbclid=IwY2xjawI6xzJleHRuA2FlbQIxMQABHU9bV8WeZ6y9-ofwXcsKiaVwJMeLXey4zcwzs3EkkH3YOm1A2iYmhcowhQ_aem_M8jBIXhneVE-VhcQYyfL6A
  10. வன்னி படையணி ...சிங்கள அடியான் பயங்கரமாக கொதித்தெழுகின்றார்..லண்டனில் இருந்து டிரோன் தாத்குதல் செய்வார் போல இருக்கு 😄
  11. சரி ஒரு தமிழன் சிம்பொனி இசை செய்வது இது தான் முதல் தடவை. பெருமை கொள்வதில் தவறில்லையே.
  12. பாவம் இளையராஜா அவருக்கு மட்டும் ஒரே சோதனையாக இருக்கிறது, எப்பவுமே அவரை சுற்றியே விமர்சனங்கள் இருக்கிறது. ஒரு முறை இசகு பிசகாக ஒரு பிரச்சினையில் மாட்டி பொறியில சிக்கிய எலி மாதிரி முழிச்சுக்கொண்டிருந்த போது எனது தாயார் கூறினார், அதென்னவோ தெரியவில்லை பிரச்சினைகள் எல்லாம் உன்னையேதான் தேடி வருகிறது என, கடந்த காலத்தில் நான் சிக்கி தவித்த பிரச்சினைகளை பட்டியலிட்டார், சிந்தித்து பார்த்த போது அது உண்மையாக இருப்பது போல தோன்றியது (பிரச்சினை வருகிறது என ஒதுங்கி இருந்தாலும் பிரச்சினை வந்து முன்னால நிற்கும்), சிலருக்கு சும்மா இருந்தாலும் சிக்கல்தான்.
  13. அவசரப்படாதீர்கள், ரசோதரன் கூறும் மணிக்கட்டு திரும்பியதற்கான காரணம் நம்பும்படியாக இல்லை.🤣
  14. ஆறுகள் எந்த எந்த பாதைகளால் நகர்ந்தாலும் ...... உச்சமடைய .... வாழ்வின் உன்னதமடைய .... கடலை தானே வந்து சேர வேண்டும். அது இயற்கை விதி அதை யாராலும் மாற்ற முடியாது!
  15. நல்லவேளை தொலைபேசியை திருடியது. இல்லாவிட்டால் ஆளைக் கண்டுபிடிக்கவே இயலாது போயிருக்கும்.
  16. நிலக்கரி, மசகெண்ணை - இவற்றை எடுப்பது இலகுவான வேலை. நிலக்கரி, படிப்படியாக பூமியை அகழ்ந்து சென்று சுரங்கத்தினுள் மனிதர்கள் சென்று மேலே கொண்டு வருவார்கள். ஆபத்தான வேலை. இருந்தும் நிலக்கரிப் பாவனை இப்போது மிகவும் குறைவு. இதன் காரணம் நிலக்கரி உச்ச சூழல் மாசடைதலை உருவாக்கும் எரிபொருள் என்பது தான். பாவனை குறைவென்பதால் நிலக்கரி அகழ்வதும் அருகி விட்டது. ஆனால், இந்த Shale gas எனப்படும் வாயுவை வெளியே கொண்டு வர hydraulic fracturing என்ற சிக்கலான முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது (படம் கீழே). சுருக்கமாக, நிலத்தினுள் ஒரு ஆழமான துளையிட்டு, அந்த துளையூடாக உயர் அழுத்தத்தில் இரசாயனத் திரவங்களை அனுப்பும் போது, ஆழத்தில் வெடிப்புகள் ஏற்பட, வாயு வெளியே வரும். இந்த முறையினால் ஆழத்தில் இப்படி வெடிப்புகள் உருவாக்கும் போது காலப் போக்கில் சிறு நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால், ஷேல் வாயுவை எடுப்பது மிகவும் பாதகமான ஒரு முறை - அப்படியே விட்டு விடுவது தான் புத்தி சாலித்தனம்.
  17. எனக்கென்ன குறைச்சல்? ஜாம் ஜாம் எண்டு இருக்கிறன் 😎 சிவகார்திகேயனும் கொழும்பிலை தான் நிக்கிறாராம் 🧐
  18. இதுவரை.... மிகச் சிலரே சிம்பொனி இசை அமைத்து இருந்தார்கள் என நினைத்து இருந்தேன். நீங்கள் பதிந்த பட்டியலைப் பார்க்க... மிகப் பெரிதாக உள்ளது. இந்தப் பட்டியலை இந்திய தமிழ் ஊடகங்கள் இதுவரை பார்த்ததே இல்லைப் போலுள்ளது. பார்த்திருந்தால்... இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 😂
  19. அவர் சொன்னது சரி தான் கோவில் தான் ஆனால் சீமான் காரில் இருந்தார் கோவிலுக்கு போகவில்லை அதாவது கோவிலில் காரில். மாலை மாற்றிக்கொண்டார்கள். எனவே… இந்த பெண் சீமானின். முதல் மனைவி ஆவார் குறிப்பு,.....பெரிய எழுத்தாளர்களுக்கு எல்லாம் வாழைப்பழம் உரித்து கொடுப்பது போல் விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது 🤣🤣🤣🤣
  20. தமிழருக்கெதிராக திட்டமிட்டு வளர்த்தது, இப்போ தன் இனத்தையே மேயுது.
  21. ஏதோ ஏதோ எதோ ஒரு மயக்கம் .......! 😍
  22. பிரச்சனையில்லை ஐரோப்பாவிலிருந்து ரயிலில் இந்தியா போகாலாம். கீர்த்தி திரும்ப வரும் வரை சென்னையில் நிற்கிறது 🤣. அதுவும் தேவையற்றது ரயிலில் போக 21 நாட்கள் தேவை அங்கை போக கீர்த்தி வந்து விடுவார் ...சாமியாரை அவா. சந்திப்பாவா.???
  23. என்ன ஒன்றிணைந்து விட்டார்களா??? 🤣. இரண்டு பேருக்கும் அடுத்த தேர்தலில் வாக்கு வீதம். கூடப்போகுது
  24. 1995, செப்டம்பர் 21,அன்று, பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணையகம் நிறுவப்பட்டதும், அது தொடர்பான சில விடயங்களையும் ஊடகம் ஓன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நடப்பு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இந்த ஆணைக்குழுவின் அறிக்கை, 1988/90 காலகட்டத்தில் பட்டலந்த வீட்டு வளாகத்தில் இயங்கிய சித்திரவதை அறை பற்றிய பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் ஆணையகத்தின் முன், தாம் தவறாக நடத்தப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டனர். இந்த விபரங்கள் ஆணையகத்தின் அறிக்கையில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள 2/2 இலக்க வீடு, 1983 முதல் 1989 ஏப்ரல் வரை இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு சுற்றுலா பங்களாவாக ரணில் விக்ரமசிங்கவால் பயன்படுத்தப்பட்டது. ஏப்ரல் 1989 முதல் 1994 வரை, தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, விக்ரமசிங்க அதே வீட்டை தனது அதிகாரப்பூர்வ இல்லமாகப் பயன்படுத்தினார். மர்மமான முறையில் உயிரிழப்பு விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக 2/1 வீடு ஒதுக்கப்பட்டது அதே நேரத்தில் 2/3 வீடு அவரது கீழ் உள்ள அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டது. விக்ரமசிங்கவின் பங்களா பராமரிப்பாளராகப் பணியாற்றிய வின்சென்ட் பெர்னாண்டோ, ஆணையகத்தின் முன் சாட்சியமளிக்க சில நாட்களுக்கு முன்னர்,மர்மமான முறையில் இறந்தார். ரணில் விக்ரமசிங்க, ஆணைக்குழுவின் முன், சாட்சியமளித்த, சில நாட்களுக்கு முன்னரே, அவர் மர்மமான முறையில் இறந்தார். சித்திரவதையிலிருந்து தப்பிய ஒருவர் ஆணையகத்திடம், இந்த வீட்டை அடையாளம் காட்டினார். வீடு B1 விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது, மேலும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான சுதத் சந்திரசேகர B7 வீட்டை பயன்படுத்தினார். அருகில் அமைந்துள்ள வீடு B8, பொலிஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. என்ன நடந்தது இந்த நிலையில், B8 வீட்டிலேயே, தாம் சித்திரவதை செய்யப்பட்டதாக ஏர்ல் சுகி பெரேரா ஆணையகத்தின் முன் சாட்சியமளித்தார். முன்னர்,ஒரு ஊடக சந்திப்பில், முன்னாள் இராணுவ அதிகாரி இந்திராநந்த டி சில்வா பட்டலந்தவில் நடந்த நிகழ்வுகள் குறித்த விபரங்களை வெளியிட்டார். "நான் இராணுவப் பொலிஸின் புகைப்படக் கலைஞராக இருந்தேன். சித்திரவதை அறைகளைப் புகைப்படம் எடுத்து, கொல்லப்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்களை தொகுக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது. பலர் கொல்லப்படுவதற்கு முதல் நாளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர். சிலர் கொடூரமான சித்திரவதைகளைப் பார்த்து மகிழ்ந்து பிரனாடியை உட்கொண்டனர். அத்தகையவர்கள் பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதிகளானார்கள். பட்டலந்த சித்திரவதை அறை பற்றி அனைத்தையும் வெளிப்படுத்திய நபர் தற்கொலை செய்து கொண்டார், ஆனால் அது தற்கொலை அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். டக்ளஸ் பீரிஸ் விஷயங்களை மறைக்க முயன்றபோது என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய விஜயதாச லியனாராச்சி, தங்காலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எஸ்எஸ்பியின் வீட்டில் வைக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் பட்டலந்தவுக்கு அழைத்து வரப்பட்டார். ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணிகள், நீதிமன்றத்தைப் புறக்கணித்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். எனினும் அதே நாளில் லியனாராச்சியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது. பின்னர் அவர் மரணமானார். அவரது பிரேத பரிசோதனையில் 19 உடைந்த விலா எலும்புகள் மற்றும் 307 காயங்கள் இருப்பது தெரியவந்தது. ஏழைகளுக்காகப் போராடிய விஜயதாச லியனாராச்சி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில், அல் ஜசீரா நேர்காணலின் போது, பட்டலந்த அறிக்கை குறித்து, ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது இந்த அறிக்கை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று விக்ரமசிங்க மீண்டும் மீண்டும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
  25. பல உதவிக்கரங்கள் சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டும் அரசியல் தலையீடுகளால் அடக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கின்றேன். இனவாத அரசு தமிழர் பகுதிகளுக்கான புலம்பெயர் உதவிகளை கரவுக்கண்ணோடுதான் பார்க்கின்றது. சட்டபூர்வமான புலம்பெயர் உதவி எனில் பென்சில்,கொப்பி,புத்தகம்,உடுப்பு வகைகளுக்கு உதவி செய்யலாம். அதை மீறி சட்ட பூர்வமாக ஒரு செங்கல் கூட வாங்க முடியாது. வாங்கினால்....? இலங்கை இனவாத அரசு இன்னும் இருந்த இடத்திலேயேதான் இருக்கின்றது என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.
  26. நானே கிட்னி இன்னும் இருக்கா இல்லையா எடுத்துட்டாங்களோ எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். இதுக்குள்ள மாலினியாவது மாதவியாவது....😂
  27. புத்த‌ன் மாமா இப்ப‌வும் ஒன்றும் கெட்டு போக‌ வில்லை , வெளி நாடுக‌ளில் இருக்கும் அந்த‌ அந்த‌ ஊரை சேர்ந்த‌ உற‌வுக‌ள் , ஊரில் மிக‌வும் ந‌ம்பிக்கையான‌ ஒடுவ‌ரை அம‌த்தி அவ‌ர் த‌ல‌மையில் ஒருவ‌ருட‌ ப‌டிப்புக்கான‌ செலவை வ‌ருட‌ க‌ட‌சியில் ஆளுக்கு 100 டொல‌ர் போட்டால் அதில் 25 , அல்ல‌து 30 உற‌வுக‌ள் இருந்தால் 2500 டொல‌ர் அல்ல‌து 3000 ஆயிர‌ம் அவுஸ் டொல‌ர் போதும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ளின் வ‌ருட‌ ப‌டிப்புக்கு..................என்ர‌ சொந்த‌ ஊர் ஏழாலை புத்த‌ன் மாமா , எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா , எங்க‌ட‌ ஊர் உற‌வுக‌ளை முக‌ நூல் ஊடாக‌ தொட‌ர்வு கொண்டு , இப்ப‌டி எங்க‌ட‌ ஊரில் இருக்கும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு முன்னுக்கு வ‌ர‌ நிக்கின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு ப‌டிப்ப‌த‌ற்க்கு வ‌ச‌தி இல்லை என‌ சொல்ல‌ , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ 30 குடும்ப‌ங்க‌ள் வ‌ருட‌த்தில‌ ஒருக்கா 100ப‌வுன்ஸ் 50 ப‌வுன்ஸ் 75ப‌வுன்ஸ் என்று கொடுக்க‌ , இப்ப‌ ஊர் பிள்ளைக‌ள் ப‌ண‌ நெறுக்க‌டி இல்லாம‌ மாத‌ம் மாத‌ம் புல‌ம்பெய‌ர் நாட்டு எம் ஊர் உற‌வுக‌ளின் உத‌வியோட‌ ப‌டிச்ச‌ பிள்ளைக‌ள் இப்ப‌ மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்................. வ‌ருட‌த்தில‌ ஒருக்காத் தான் இப்ப‌டி நாங்க‌ள் செய்யிற‌து புத்த‌ன் மாமா , தை மாத‌ம் இல‌ங்கை காசுக்கு இந்த‌னை பிள்ளைக‌ளுக்கு இந்த‌ ஆயிர‌ம் ரூபாய் ப‌டிப்பு செல‌வுக்கு கொடுத்தோம் என்று பிள்ளைக‌ளின் பெய‌ரும் வ‌ரும் காசு கொடுத்த‌ விப‌ர‌மும் ச‌ரியா போடுவின‌ம் , இது இப்ப‌ தொட‌ங்கி மூன்று வ‌ருட‌ம் இருக்கும் என‌ நினைக்கிறேன்..................இதை ஆர‌ம்பிச்சு வைச்ச‌து ல‌ண்ட‌னில் வ‌சிக்கும் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா , அவ‌ர் ஊருக்கு போய் வ‌டிவாய் எல்லாம் பார்த்து விட்டு தான் , இந்த‌ முடிவை எடுத்த‌வ‌ர் , எங்க‌ட‌ புல‌ம்பெய‌ர் ஊர் ம‌க்க‌ளுக்கும் பெருத்த‌ ம‌கிழ்ச்சி................ இப்ப‌டி ஒவ்வொரு ஊரை சேர்ந்த‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் செய்தால் எங்க‌ட‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு முன்னுக்கு வ‌ருங்க‌ள் , உந்த‌ கேடு கெட்ட‌ க‌ள்ள‌ யூடுப்ப‌ர்க‌ளிட‌ம் அதுக‌ள் கை ஏந்தாதுக‌ள் புத்த‌ன் மாமா🙏👍...................... நீங்க‌ள் முய‌ற்ச்சி செய்து பாருங்கோ வெற்றி அளிக்கும் உங்க‌ட‌ ம‌ன‌சுக்கும் திருப்தியாய் இருக்கும்🙏...........................
  28. அண்ணை உங்கள் கிணத்தில எனக்கு பங்கு உரிமை தருவியளே🤣 இதே போல் வடக்கு இங்கிலாந்து, தெற்கில் கேட்விக்குக்கு கீழே எல்லாம் ஷியில் காஸ் எனப்படும் எரிவாயு எக்கசக்கம். ஆனால் எடுத்தால் பெரிய இயற்க்கை அழிவுகள் வரும். பிரான்ஸ் ஓக்கே - இங்கே யூகேயில் என்ன வளம் எடுத்தாலும் தனியார் கைக்குத்தான் போகும். நோர்வேயும் பிரிதானியாவும் ஒரே நேரத்தில் வடகடலில் எண்ணையை கண்டுபிடித்தன. நோர்வேயின் வளம் அரச நிதியம் ஆகியது. அதனால் இன்று சாதராண நோர்வேஜியர்கள் பணக்காரார். பிரிதானிய வளம் BP எனும் நிறுவனத்துக்கு. அதனால் பங்குதாரார்கள் அதீத பணக்காரார்கள்.
  29. உங்களது "அமெரிக்க விருந்தாளி " என்னும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
  30. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
  31. நாடாளுமன்றத்தை அதிர வைத்த அர்ச்சுனா எம்.பி
  32. அந்த‌ மூன்று ல‌ச்ச‌மும் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளையின் தேவைக்கு தான் கொடுத்தார் க‌ன‌டா அண்ணா..............இந்த‌ யூடுப்ப‌ர் அந்த‌ பிள்ளைக்கு மூன்று ல‌ச்ச‌ம் கொடுப்ப‌தை வீடியோவில் காட்டி விட்டு , சுத்து மாத்து ப‌ண்ணி வேண்டி விட்டார் , அந்த‌ யூடுப்ப‌ரின் நினைப்பு க‌ன‌டா அண்ணாக்கு காணொளி மூல‌ம் காசு கொடுத்த‌தை காட்டியாச்சு தானே இனி ஆதார‌ம் கேக்க‌ மாட்டார் , பிற‌க்கு த‌ன்ட‌ குள‌று ப‌டி விளையாட்டை காட்டி அந்த‌ பிள்ளையிட‌ம் வேண்டி விட்டார் க‌ன‌டா அண்ணா காசு அனுப்பி சில‌ மாத‌ம் க‌ழித்து ஊருக்கு போய் இருக்கிறார் , க‌ன‌டா அண்ணாவுக்கு அடிப்ப‌டையில் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளையை யார் என்று கூட‌ தெரியா , அந்த‌ பிள்ளையின் க‌ஸ்ர‌த்தை உன‌ர்ந்து பெரிய‌ தொகையை க‌ன‌டாவில் இருந்து அனுப்பி இருக்கிறார் வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ர‌ட்டும் பிள்ளை என்று.............. ஊருக்கு வ‌ந்த‌தும் அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் ப‌ண்ணி இருக்கிறார் த‌ம்பி வாங்கோ வெளிய போய் விட்டு வ‌ரும் என்று , அந்த‌ யூடுப்ப‌ரும் போக‌ , க‌ன‌டா அண்ணாக்கு அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக்கு கூடுத‌ல் உத‌வி நேரில் போய் செய்ய‌னும் என்று என்ன‌ம் இருந்து இருக்கு , அந்த‌ பிள்ளைக்கு முன்னாள‌ கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் ச‌ரியான‌ முறையில் த‌ந்தாரா என‌ , அந்த‌ பிள்ளை ஒளிவும‌றைவு இல்லாம‌ சொல்லி இருக்கு இவ‌ர் 3ல‌ச்ச‌த்தை த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை வேண்டி விட்டார் என்று , ம‌று க‌தை இல்லை அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலே க‌ன‌டா அண்ணா ந‌ல்ல‌ அடி , அடி தாங்க‌ முடிய‌மா , அண்ண‌ நான் செய்த‌து த‌ப்பு என்னை ம‌ன்னித்து விடுங்கோ என்று ம‌ன்னிப்பு கேட்ட‌வ‌ர் வ‌ய‌து போன‌ மூதாட்டியையும் அதே யூடுப்ப‌ர் தான் ஏமாற்றின‌வ‌ர் , மூதாட்டி த‌ன‌து இர‌ண்டு ஊன‌முற்ற‌ பேர‌ப்பிள்ளைக‌ளை வைத்து பார்க்கிறா , அந்த‌ மூதாட்டிக்கு யூடுப் என்றால் என்ன‌ என்று தெரியாது , அந்த‌ மூதாட்டி த‌ன‌து க‌ஸ்ர‌ங்க‌ளை சொல்ல‌ , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் காசு அனுப்ப‌ , வீடியோவில் மூதாட்டிக்கு காசு கொடுக்கிற‌ மாதிரி காட்டி விட்டு , வீடியோவை நிப்பாட்டி போட்டு அந்த‌ காசை தாங்கோ என்று வேண்டிட்டு ஓடின‌ ஆள் தான் அந்த‌ கேடு கெட்ட‌ யூடுப்ப‌ர் , ஆண்ட‌வ‌ர் கூட‌ ம‌ன்னிக்க‌ மாட்டார் அந்த‌ மூதாட்டிக்கு அந்த‌ யூடுப்ப‌ர் செய்த‌ துரோக‌த்தை அண்ணா................................
  33. அங்க குளறுபடியே இல்லை. தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள் 🤣
  34. உண்மையான உண்மை...பகிடி என்னவென்றால் பாவித்த சுகர் ரீடர் ,பிரசர் மிசினையும் இவர்களுகு கொடுத்துவர அதாலையும் களோபரம் ஏற்பட்டு ஆசுப்பத்திரிக்கும் திரியினம்...வீடு ,காணி ,கார் ,நகை நட்டுப்போக பாங்பலன்ஸ் 9 கோடியாம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.