Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    8
    Points
    15791
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20019
    Posts
  4. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    2958
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/23/25 in Posts

  1. அரசியல் காரணங்களுக்காக உதாசீனம் செய்யப் படும் பல்வேறு தரவுகள், தகவல்கள் வெளியே பிரபலமாக்கப் படாமல் மூலையில் கிடக்கின்றன. உதாரணமாக வடக்கின் கந்தரோடையில் விகாரைகள் போன்ற சிறு அமைப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதி வடக்கில் கிமு 600 அளவில் இருந்தே மக்கள் குடியேறி வாழ்ந்த பகுதி என்று கார்பன் 14 பரிசோதனையில் நிரூபித்திருக்கிறார்கள். பௌத்தம் தமிழரிடையே இருந்த காலமொன்று இருந்திருக்கிறது, இது அதிசயமல்ல. இனியும் அப்படியொரு காலம் உருவாகாது என்றும் உறுதி செய்ய முடியாது.
  2. சந்திரசேகரர் இன்று நேற்று அல்ல ஜேவிபி யில் இணைந்து, எனக்கு தெரிந்தே இவர் கடந்த 30 வருடங்களாக இருக்கின்றார். மலையக தமிழரான இவர் பல ஜேவிபி சார்பான நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர். ஜேவிபி ஒரு கடும் இனவாதக் கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் தான் சங்குக்கு வாக்களிப்பதன் மூலம் ஜேவிபியிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும், ஈற்றில் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிப்பர் என கடந்த ஆண்டு பெப்ரவரியில் இருந்து எழுதி வந்தேன். ஆனால் இன்று இவர் வடக்கில் செய்யும் பல விடயங்கள், முக்கியமாக இந்திய கடல் கொள்ளைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. வடக்கு தமிழனான டக்கிளஸை விட பல மடங்கு சிறப்பாக உள்ளார். இவர் மட்டுமல்ல, எந்த தேசியக் கட்சிகளும், அரசுகளும் இனப்படுகொலை பற்றி பேசப்போவதில்லை. போர்க் குற்றம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இது தான் யதார்த்தம். இதனை அங்குள்ள தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொண்டமையால் தான் தேசியக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த யதார்த்தை புரிந்து கொள்ளாமல் வெறுமனே சந்திரசேகரனை குறிப்பிட்டு திட்டுவது அவர் மலையகத்தமிழர் என நன்கு தெரிந்த பின்னும் சந்திரசேகர என்று சிங்கள பெயர் சூட்டி விமர்சிப்பது யாழ்பாணிகளின் மலையக தமிழர் மீதான வழக்கமான குறும் பார்வையின் அம்சமாகவே தெரிகின்றது. மற்றது, தையிட்டி விவகாரம், அங்கே பெளத்த வழிபாடு போன்றவை எப்போது தொடங்கியது என்று தெரியுமா உங்களுக்கு?
  3. மலையகத்தை சேர்ந்த, இந்திய வம்சாவளி தமிழரான இவரால் என்ன துன்பத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றனர் என அறியத் தர முடியுமா? நன்றி
  4. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாது தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திராவினதும், ருதுராஜ் கைக்வாட்டினதும் அரைச் சதங்களுடன் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
  5. சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும். தமிழரும், சிங்களவரும் இலங்கையை ஆண்டிருக்கின்றார்கள் என்பதுதானே உண்மை. மற்றைய இடங்களை விட்டு நான் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்கிறேன். புலோலி என்றொரு பிரதேசம். புல்எலிய என்பதே பின்னாளில் புலோலி ஆனது. பின்னாளில் புலவர் கந்த முருகேசனார் அவர்கள், “புலவர்கள் குரல்கள் ஓயாமல் எப்பொழுதும் கேட்பதால் இந்த இடம் “புலவர்கள் ஒலி’ என்று அழைக்கப்பட்டு அது மருவி ‘புலோலி’ ஆகிவிட்டது” என விளக்கம் கொடுத்தார். பருத்தித்துறை, நெல்லியடி இரண்டுக்கும் இடையில் மாலிசந்தி என்றொரு இடம் இருக்கின்றது. பருத்தித்துறை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் உள்ள கடலில் பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் மையப் பகுதியாக மாலிசந்தி என்ற இடமே இருந்தது. அப்பொழுது அந்த இடம் ‘மாலு சந்த’ என்றே அழைக்கப்பட்டிருந்தது. அடுத்து வல்லிபுரக் குறிச்சி. இந்த இடத்தில்தான் சைவருக்குச் சம்பந்தமில்லாத வல்லிபுர ஆழ்வார் கோவில் இருக்கின்றது. கிருஸ்ணருக்கு ஆந்திராவிலேயே வல்லிபுரம் என்ற பெயர் இல்லை. மண் நிறைந்த பகுதி. நாங்கள் மணற்காடு என்று சொல்வோம். மண்-வலி (சிங்களத்தில்). சிங்களத்தில் ‘வலிபுர’ என அழைக்கப்பட்டு வல்லிபுரமானது. இப்படி தும்பள, திகிரி என நான் வாழ்ந்த பகுதியில் நிறையவே இருக்கின்றன. சட்டப்படி சீட்டு நடத்தும் ஒருவர் ஊரில் இருந்தார். அவரது காணியின் அடி உறுதியில், காணியின் பெயர் புத்தர் கோயில் என்றிருக்கிறது. அந்த அடி உறுதி நிச்சயமாக பருத்தித்துறை காணி பதிவு அலுவலகத்தில் இருக்கும். நாங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு வெளியே வர மறுக்கிறோம். நேற்று புலம் பெயர்ந்து வந்தோம். இன்று போய்ப் பார்த்தால், யாரோ ஒரு முகம் தெரியாத தமிழன் காணியை அபகரித்து அங்கே குடும்பமாக இருக்கிறான். அபகரிப்பு என்பது இரண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கின்றன.
  6. யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.
  7. என்ன பையன் சாரே...ரோகித்தும் ..ரியானும் போயிட்டாங்களே.....நம்ம சிங்கங்கள் ....கலக்கிறாங்க காவ்யா வுடன் சேர்ந்தாடுகின்றீர்கள் ..அதனால் தணிக்கை செய்யப்பட்டிருக்கு
  8. எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டின் நிலத்தை காப்பாற்ற குரல் கொடுக்கினம் பாருங்கோ ...தமிழர் பகுதியில் உள்ள‌ விகாரை நிலத்தை காப்பாற்ற ஆட்கள் இல்லை ஆனால் அமெரிக்கா தூதரகத்துக்கு முன்பு போராட்டம் ...அவ்வளவு ஜனநாயகம் சிறிலங்காவில் இருக்கிறதாம் என படம் காட்டியினம்.
  9. உதிலை நிக்கிறா ஆட்கள்.. நமது இனம் அழிக்கப்பட்டபோது..இந்தக் பதாகைகள் பிடித்திருந்தால் ...இலங்கை இப்ப சிங்கப்பூர்..நம்ம ஆளுக்கும்(??) ..சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறன்
  10. ஓவியரே, இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா? சைவ சமய பாடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பம் தொட்டு இப்படி கதைகள் கூறித்தானே மண்டையை கழுவினார்கள்? எங்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை அறிவை விட அதிகம் உணர்ச்சி - பற்றின் பாற்பட்டது. பக்தி வழிமுறையின் மூலம் கடவுளையே அடையலாம் என்று கற்பிக்கப்பட்டதே.
  11. ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்... சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது... ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்... 80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்... எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது.. வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே? கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்... " எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்... நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்... இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்.. அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்.. நாயகியின் அம்மா " காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?" "பேசத்தான் போறேன்" நாயகி.. "என்னடி உளர்ற?" அம்மா "உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி.. இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்... வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்... பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை.... என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்... "ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்.. "கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்.. 'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்.. வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்.. மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை... அபத்தமான வசனங்கள் இல்லை... நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை... அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை... ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது.. 80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்... Hats off ராஜேந்தர் சார்... இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்... Lakshmi RS
  12. வரலாறுகள் சரியாக இருந்தாலும் ஏன் இப்போது விகாரைகளை கட்டி சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள்? இலங்கையின் கிழக்கு பகுதிகளில் தமிழர் பிரதேசங்களாக இருந்த கந்தளாய் திருகோணமலை பறி போவதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. கோண்டாவில கோண்டாவில் ஆக மாறியது கொக்குவில கொக்குவில் ஆக மாறியது இணுவில இணுவில் ஆக மாறியது யாப்பன யாழ்ப்பாணம் ஆக மாறியது கொடிகாம கொடிகாமம் ஆக மாறியது மிருசுவில மிருசுவில் ஆக மாறியது....இப்பிடியே சொல்லிக்கொண்டு போக வேண்டியதுதான்.🤣 கனக்க வேண்டாம் சும்மா இருந்த கதிர்காமத்தை எப்படி மாற்றி விட்டார்கள் என பாருங்கள்? சிங்களம் ஒரு சேர்ந்து வாழக்கூடிய இனமும் அல்ல. அதன் அரசியல் போக்கும் சேர்ந்து வாழ நினைக்கவில்லை. விட்டுக் கொடுத்த இராமநாதன் குணம் கொண்டவர்கள் இனியும் விட்டுக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகின்றார்கள்.
  13. டெல்லிய‌ நாளைக்கு ல‌க்னோ விழுங்கி விடும் ல‌க்னோ அணியில் அதிர‌டி விளையாட்டுக்கு பெய‌ர் போன‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள்................ இந்திய‌ உள்ளூர் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தெரிவாகி இருக்கின‌ம் அது தான் சின்ன‌ சிக்க‌ல் , ம‌ற்ற‌ம் ப‌டி ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடின‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் ல‌க்னோ அணியில் இருக்கின‌ம்...........................
  14. இந்த கத வேணாம் புள்ளி எங்க
  15. ஜிக்கியின் குரலில் எனக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. தமிழ்ப் படங்களில் பாடுவதை கணவனுக்காக இடையில் நிறுத்திவிட்டார். “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும் சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் தாவி அணைத்தே படர்ந்திடும்….” பட்டுக்கோட்டையார் ஆரம்பத்தில் இசையில் மனம் துள்ளும் என்பார், இறுதியில் காதல், இன்பத் தேனையும் அள்ளும் என்பார். நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவர் ஏ.எம். ராஜா இறந்தபின் ஐரோப்பிய மேடைகளிலும் இவர் பாடியிருந்தார். அப்பொழுது இவர் பாடிய, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்…” பாடலைப் பாடும் போது அவர் உணர்ச்சி மிகுந்து உச்ச தொனியில் பாடிய இந்த வரிகள் கண்கலங்க வைத்தன “கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ-என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ வாழ்கவென்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம் இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறையச் சம்மதம்”
  16. நான்தான் முதலமைச்சர் உள்ள தூக்கி போட்டுவிடுவேன் கவனம்.
  17. SHR வெற்றிய‌ @vasee @செம்பாட்டான் SHR யாழ்கள‌ ர‌சிக‌ர்க‌ள் தோட்ட‌த்தில் இருந்த‌ ப‌டி பாட்டு பாடி கொண்டாடின‌ போது...................
  18. சனி ஞாயிறு தினங்களில் சனநடமாட்டம் குறைவு. அத்துடன் புள்ளிகள் போட கிருபனும் இல்லை. புள்ளிகள் போட்டால் அதைப் பார்க்கவாவது உள்நுழைவார்கள். அதுவரை நாங்க சின்னஞ் சிறிசுகள் இஸ்டத்துக்கு ஓடி விளையாடுவோம். என்ன தம்பி நானொருத்தன் இருக்கிறதை மறந்துட்டீங்க போல. நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கிறது. காவியா அக்கா வேறு என்னென்ன விற்கிறா?
  19. சரி நானும் வரன்.இன்று சம்மசன் இல்லையோ .
  20. நான் ஆர‌ம்ப‌த்தில் சொன்னான் தானே பெரிசுக‌ள் இதுக்கை எங்க‌ளுட‌ன் சேர்ந்து குப்பை கொட்ட‌ மாட்டின‌ம் நாங்க‌ள் 5பேர் தான் அதிக‌ம் குப்பை கொட்டுவ‌து😁........................
  21. சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணி 22 பந்துகள் மீதமிருக்கையில் 177 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆர்பிசி அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் ஹேசல்வுட், க்ருணால் பாண்டியா, சூயஸ் சர்மா மூவரையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும், இவர்கள் 3 பேரும் எடுத்த விக்கெட் ஆட்டத்தையே புரட்டிப்போட்டது. பேட்டிங்கில் அதிரடி வீரர் பில் சால்ட்(56), விராட் கோலி(59), பட்டிதார்(34) ஆகியோரின் ஆட்டம் வெற்றியை எளிதாக்கியது. இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் தனது பேட்டால் ஸ்டம்பை உரசிய போதிலும் கூட நடுவர்கள் அவுட் கொடுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். சுனில் நரைன் - ரஹானே அதிரடி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு டீகாக் ஆட்டமிழந்தபின் புதிய கேப்டன் ரஹானே, சுனில் நரைன் இருவரும் சேர்ந்து அதிரடியாக ஆடினர். ரஹானே திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கேயில் இருந்தபோது எந்தமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ அதை போன்ற ஆக்ரோஷம் நேற்றும் இருந்தது. ரஹானே, நரைன் இருக்கும் வரை பவர்ப்ளேயில் கொல்கத்தா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது, 9.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரஹானே 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுனில் நரைனும் தனது பங்குக்கு சிக்ஸர், பவுண்டரி என ஆர்சிபி பந்துவீச்சை சிதறவிட்டார். 10 ஓவர்கள் வரை ஆட்டம் கொல்கத்தாவின் கைகளில்தான் இருந்தது. ஆனால், 10-வது ஓவரில் சுனில் நரேன், 11வது ஓவரில் ரஹானே ஆட்டமிழந்தபின் ஆட்டமே தலைகீழாகத் திரும்பியது. இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பைத் தவிர்த்து வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும் கொல்கத்தாவில் அமையவில்லை. 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்த கொல்கத்தா அணி, அடுத்த 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 10-வது ஓவரில் இருந்து 16-வது ஓவர் வரை ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் கொல்கத்தா இழந்தது தோல்விக்கு மிகப்பெரிய காரணம். அதிலும் நடுவரிசையில் வெங்கடேஷ் அய்யர்(6), ரிங்குசிங்(12), ரஸல்(4) என 3 முக்கிய பேட்டர்களும் ஏமாற்றியது, கொல்கத்தாவை தோல்வியில் தள்ளியது. ரஹானே, நரைன் இருந்தபோது, ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும் என கணிக்கப்பட்டது, ஆனால், 174 ரன்களில் ஆட்டம் முடிந்தது. ரகுவன்ஷி 30 ரன்களை சேர்த்தார். ஹேசல்வுட் அபார பந்துவீச்சு ஹேசல்வுட் மீது நம்பிக்கை வைத்து ஆர்சிபி வாங்கியதற்கு அவர் கைங்கர்யம் செய்துவிட்டார். பேட்டர்கள் ஆட முடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார். ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்ட ஹேசல்வுட், பவுன்சர்களை வீசி கொல்கத்தா பேட்டர்களை திணறவிட்டார். ஹேசல்வுட் தனது 4 ஓவர்களில் 16 டாட் பந்துகளை வீசியதுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே குயின்டன் டீகாக் தூக்கி, கடைசி ஓவரில் ஹர்சித் ராணா விக்கெட்டையும் ஹேசல்வுட் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பேட்டர்கள் ஆடமுடியாத பவுன்ஸ், லைன் லெத்தில் மாறாத பந்துவீச்சு என திக்கமுக்காட செய்தார் ஹேசல்வுட் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசிய போதும் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது ஏன்? சுனில் நரைன் - ரஹானே ஜோடி அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வேளையில், 8-வது ஓவரை ராசிக் சலாம் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஆஃப் சைடுக்கு வெளியே, அதிக உயரத்தில் செல்ல அந்த பந்தை கள நடுவர் 'வைட்' என்று அறிவித்தார். அதேநேரத்தில், சுனில் நரைனின் பேட்டானது ஸ்டம்ப் மீது லேசாக உரசியதில் பெய்ல்ஸ்கள் கீழே விழுந்தன. இதையடுத்து, ஹிட் விக்கெட் முறையில் நரைனுக்கு ஆர்சிபி அணி அவுட் கேட்டது. ஆனால், அதனை நடுவர் நிராகரித்துவிட்டார். இதனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் அதிருப்தி அடைந்ததை அவரது முகம் வெளிக்காட்டியது. ஸ்டம்புகளை பேட்டால் உரசி பெய்ல்ஸ் கீழே விழுந்தும் கூட சுனில் நரைன் அவுட் இல்லை என்று நடுவர்கள் அறிவித்தது ஏன்? எம்சிசி விதி 35.1.1-ன் படி, ஒரு பவுலர் அந்த பந்தை வீசத் தொடங்கிய பிறகோ அல்லது பந்தை எதிர்கொள்ளும் போதோ பேட்டர் தனது உடலாலோ, பேட்டாலோ ஸ்டம்பை உரசி பெய்ல்ஸ் கீழே விழுமானால் அவர் ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்று அறிவிக்கப்படுவார். சுனில் நரைனைப் பொருத்தவரை, பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டு விட்டதால் அதனை விளையாடுவதற்குரிய சரியான பந்தாக கணக்கில் கொள்ள முடியாது. ஆகவே, ஹிட் விக்கெட் முறையில் அவுட் என்ற விதி இதற்குப் பொருந்தாது. பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா தவறவிட்ட பில்சால்ட் தொடக்க ஆட்டக்காரர் பில்சால்ட்டை ஏலத்தில் தக்கவைக்க தவறிவிட்டோம் என்று கொல்கத்தா நிர்வாகம் நேற்று இவரின் அதிரடியைப் பார்த்த பின் உணர்ந்திருக்கும். கொல்கத்தா அணி கடந்த சீசனில் கோப்பையை வெல்ல பில்சால்ட் காரணமாக இருந்தார் என்று நம்பப்படும்போது, எப்படி இவரை ஏலத்தில் தக்கவைக்காமல் இருந்தது எனத் தெரியவில்லை. கொல்கத்தா அணியில் இருந்தபோது சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 185, அவரின் சராசரி 58 ஆக இருந்தது. இப்படிப்பட்ட வீரரை கொல்கத்தா தக்கவைக்காமல் தவறுசெய்துவிட்டதாக பலரும் கருதுகின்றனர். கொல்கத்தாவின் பந்துவீச்சை முதல் பந்திலிருந்து பில் சால்ட் வெளுத்து வாங்கினார். வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்கிறார் என வருண் சக்ரவர்த்தியை கொண்டு வந்தால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி என 20 ரன்களை விளாசி வருணை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். விராட் கோலியும் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்யவே பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்தது, 3.4 ஓவர்களில் 50 ரன்களையும் எட்டியது. அரோரா, ஜான்ஸன், ராணா என ஒருவரின் பந்துவீச்சையும் சால்ட் விடவில்லை. அதிரடியாகஆடிய சால்ட் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். 36 பந்துகளில் 56 ரன்கள் (9பவுண்டரி, 2 சிக்ஸர்) சேர்த்திருந்த சால்ட், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கோலி, சால்ட் கூட்டணி 95 ரன்கள் சேர்த்தனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா?22 மார்ச் 2025 சுனிதா வில்லியம்ஸுக்கு 5$ தானா? - ஓவர் டைம் தொகை குறித்து டிரம்ப் கூறியது என்ன?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES விராட் விளாசல் விராட் கோலி கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் 500 ரன்களுக்கு மேல் குவித்து சிறப்பாக ஆடினாலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் மீது தொடர்ந்து விமர்சனம் இருந்தது. அடித்து ஆட வேண்டிய இடத்தில் ஆடாமல், மெதுவாக பேட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது, ஸ்ட்ரைக் ரேட்டும் கடந்த இரு சீசன்களில் பெரிதாக இல்லை. ஆனால், இந்த சீசனுக்கு கோலி தீர்மானத்துடனே களத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிந்தது. வைவப் அரோரா வீசிய ஓவரில் கோலி சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன்பின் ஸ்பென்சர் ஜான்ஸன் வீசிய ஓவரில் ஸ்ட்ரைட் திசையிலும், லாங்ஆனிலும் இரு சிக்ஸர்களை கோலி பறக்கவிட்ட போது, கோலி ஏதோ தீர்மானத்துடன் வந்துவீட்டார் எனத் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் வருண் சக்ரவர்த்தி, நரேன் பந்துவீ்ச்சில் இரு ஸ்வீப் ஷாட்களில் பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் கோலி விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "சேஸிங் மாஸ்டர்" என்று கோலியை அழைப்பதுண்டு அதற்கு ஏற்றார்போல் நேற்று ஆர்சிபி அணியை வழிநடத்தினார். இந்த முறையாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்ற தீர்மானம் கோலியின் ஆட்டத்தில் தெரிந்தது, 30 பந்துகளில் அரைசதம் அடித்த கோலி, 36 பந்துகளில் 56 ரன்களுடன்(4 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, பந்துவீச்சில் நரைன், வருண் பந்துவீச்சுக்கு ஏற்றபடி எதிரணி பேட்டர்கள் நன்கு வியூகம் அமைத்து வந்ததை கொல்கத்தா அணி எதிர்பார்க்கவில்லை. ஆந்த்ரே ரஸலுக்கு கேப்டன் ரஹானே ஒரு ஓவர் கூட வழங்கவில்லை. வைவப் அரோரா, ஜான்ஸன் இருவரும் சேர்ந்து 5 ஓவர்கள் வீசி 73 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் ஒவருக்கு 13 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். கோவையில் அடுத்தடுத்து 2 சட்டவிரோத குழந்தை தத்து சம்பவங்கள் - 15 பேர் கைது; என்ன நடந்தது?22 மார்ச் 2025 தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஸ்டாலின் நடத்திய கூட்டம் - தலைவர்கள் பேசியது என்ன?22 மார்ச் 2025 திருப்புமுனை நாயகன் இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. 4 ஓவர்கள் 29 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை க்ருணால் பாண்டியா வீழ்த்தினார். முதல் ஓவரில் 15 ரன்கள் வழங்கிய க்ருணால் பாண்டியா மனம் தளரவில்லை, நெருக்கடியாகப் பந்துவீசி அடுத்த 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்த 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். கொல்கத்தா நடுவரிசையில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ரஹானே என முக்கியமான 3 விக்கெட்டுகளை வெளியேற்றி திருப்புமுனை ஆளித்தது க்ருணால் பாண்டியாதான். க்ருணால் பாண்டியா எடுத்துக் கொடுத்த இந்த 3 விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஆர்சிபியின் கரங்களில் ஒப்படைத்தது.11வது ஓவரில் ரஹானே, 13-வது ஓவரில் வெங்கடேஷ், 15-வது ஓவரில் ரிங்கு சிங் என க்ருணால் பாண்டியா தனது கடைசி ஒவ்வொரு ஓவரிலும் ஒரு விக்கெட்டைச் சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 107 ரன்களுக்கு ஒரு விக்கெட் என வலுவாக இருந்து, 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை எட்டும் எனக் எதிர்பார்க்கப்பட்டது. ரஹானேவும், சுனில் நரைனும் சேர்ந்து ஆர்சிபி பந்துவீச்சை வறுத்து எடுத்தனர். முதல் 10 ஓவர்கள்வரை கொல்கத்தா கையில் இருந்த ஆட்டம் கடைசி 10 ஓவர்களில் தலைகீழாக மாறியது. க்ருணால் பாண்டியாவின் பந்துவீச்சில் கொல்கத்தா சிக்கியதையடுத்து, ஆட்டம் மொத்தமும் ஆர்சிபியின் பக்கம் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது க்ருணால் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது க்ருணால் பாண்டியா ஐபிஎல் டி20 தொடரில் "அன்டர்ரேட்டட்" பந்துவீச்சாளராகவே பார்க்கப்பட்டுள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் பெரிதாக டர்ன் இருக்காது என்பது உண்மைதான், ஆனால், பேட்டர்களை எவ்வாறு விளையாட விடாமல் செய்து பந்துவீசுவது என்பதை க்ருணால் நன்கு தெரிந்தவர். இவரின் பந்துவீச்சை கிராஸ்பேட் போட்டு அடிப்பது, இறங்கி வந்து தூக்கி அடிப்பதை பேட்டர்கள் செய்வது ஆபத்தானது. ஏனென்றால் க்ருணால் பாண்டியா பந்துகள் பெரும்பாலும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் என பிளாட்டாகவே வரும். இதில் சிறிய தவறு பேட்டர்கள் செய்தால்கூட விக்கெட்டை இழக்க நேரிடும். இந்த ஆட்டத்திலும் ரூ.23 கோடி வீரர் வெங்கடேஷ், ரூ.13 கோடி வீரர் ரிங்கு சிங் இருவரும் பந்தை இன்கட் செய்ய முயன்று போல்டாயினர். க்ருணால் பாண்டியாவை ரூ.5.75 கோடிக்கு வாங்கியது தகும் என நிரூபித்துவிட்டார். சூயஷ் சர்மா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் அவருக்கு ஓவர் மறுக்கப்படவில்லை. ஆனால், இக்கட்டான நேரத்தில் லெக் ஸ்பின் மூலம் ரஸல் விக்கெட்டை வீழ்த்தி கொல்கத்தா அணியின் நம்பிக்கையை உடைத்தார் சூயஸ் ஷர்மா. பட்டிதாருக்கு முதல் வெற்றி ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்ற பட்டிதாருக்கு அணியின் வீரர்கள் சேர்ந்து முதல் வெற்றியை பரிசளித்துள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும். புதிய கேப்டன்ஷி, புதிய வீரர்கள் சேர்ந்து வெற்றியை எளிதாக்கினர். மும்பை இந்தியன்சுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸின் துருப்புச்சீட்டு யார்? ஐபிஎல்: பந்தில் எச்சில் தடவ தடை நீக்கப்பட்டதை பவுலர்கள் வரவேற்பது ஏன்? சிஎஸ்கே ஆட்டங்கள் எப்போது? கேப்டன்கள், புதிய விதிகள் உள்பட ஐபிஎல் பற்றிய முழு விவரம் 4 தலைமைகளுடன் களமிறங்கும் மும்பை அணி - பல கேப்டன்கள் பலமா? ஹர்திக் பாண்ட்யாவுக்கு சிக்கலா? பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் கேப்டனாக தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்தார் பட்டிதார். 16 பந்துகளில் 5 பவுண்டரி, ஒருசிக்ஸர் என 36 ரன்களில் சிறிய கேமியோ ஆடி வெற்றியை நெருங்கவைத்துவிட்டு சென்றார். விராட் கோலியுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து பட்டிதார் பிரிந்தார். 'வெற்றிக்கு காரணம் இவர்கள்தான்' முதல் வெற்றிக்குப் பின் ஆர்சிபி கேப்டன் ரஜப் பட்டிதார் கூறுகையில் " எனக்கு முதல் போட்டி என்பதால் அழுத்தம் இருந்தது ஆனால், சிறந்த நாளாக முடிந்தது. இதேபோல அடுத்தடுத்து இருக்கும் என நம்புகிறேன். சூயாஷ் குமார் ரன்கள் கொடுத்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்தோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றினார். க்ருணால் பந்துவீச்சு ஆட்டத்தை திருப்பிவிட்டது. இருவருக்கும்தான் வெற்றிக்கு முழுப்பங்கு இருக்கிறது. கேப்டன் கோலி எனக்கு தொடர்ந்து களத்தில் ஆதரவு அளித்தார் ஆலோசனை வழங்கினார் அவரிடம் இருந்த கற்று வருகிறேன்" எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20znedp30o
  22. பார்த்தா, இப்ப ஒரு நாலஞ்சு பேர்தான் இதுக்குள்ள குதிரை ஓடுறம். எங்க மிச்ச எல்லோரும். எல்லாரையும் இதுக்குள்ள இறக்கினாத்தான் பம்பல் கூடும். பல வருடங்களாக இப்பிடியான அணியுடன்தான் அவர்கள் விளையாடுகிறார்கள். இதனால்தான் கோப்பையை அடிக்க கஷ்டப் படுகினமோ. இம்முறையாவது, நடக்குமா. பாவம் கோலி. அணி விசுவாசத்தினால், இதுக்குள்ளேயே மாட்டுப்பட்டு இருக்கிறார்.
  23. சுனில் நாராயன் இன்னும் மெதுவாக வீசுபவர். அவர் 27 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் வருண் 43 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் பெற்றனர். இங்கு மிதமான வேகம்தான் வேலை செய்திருக்கிறது. இப்படியான நேரங்களில் வருண் தனது வேகத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனாலும் கோலி ஆடின ஆட்டத்தினால் RCB எப்பிடியும் வெற்றி பெற்றிருக்கும். அவர்களின் நேரம் அது. அனில் கும்ளேவும் முரளி வார்ன் போன்றோரை விட வேகமாக வீசுபவர். மூவரும் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்று தெரியும். இவர்களைப் போல் வருணும் வருவாரா.
  24. எங்களுக்கு வழிபடுவதற்கு ஆலயம் தேவை. எங்கள் உழைப்பில், பணத்தில், அனுமதிபெற்று, சட்டத்திற்கு அமைவாக காணி வாங்கி, கட்டுகிறோம், கும்பிடுகிறோம். யாரின் ஆலயங்களையும் இடித்து, வழிபாடுகளை தடுத்து, மக்களின் காணிகளில் கட்டவில்லை, அதிகாரம் காட்டவில்லை, குழப்பங்களை உருவாக்கவில்லை. உங்களுக்கு ஏன் இப்படி யோசனை போகிறதென யோசிக்கிறேன். இராவணன் ஒரு தீவிர சிவபக்தன். சிவனிடம் தியானம் செய்தே பலம் பெற்றதாக செய்திகள் கூறுகின்றன. அதுசரி, சரித்திரத்தை மாற்றி தங்களுக்கு சாதகமாக எழுதி நாடு பிடிப்பதுதான் அவர்களின் சரித்திரம்.
  25. வேட்புமனு தாக்கல் செய்த போது கெளசல்யா கையெழுத்திடவில்லையாம். இவர்களுக்கு உதவி செய்வதற்காக தனிஒரு மேசைபோட்டு ஒருவரை உட்கார வைத்துள்ளார்கள். கெளரவம் கருதி யாருமே இந்த மேசைப்பக்கம் போகவே இல்லையாம். ஒருஒருத்தர் டக்லஸ் மாத்திரம் இவரின் அறிவுரையைக் கேட்டு திருத்திய பின்பு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். நானொரு வக்கீல் சாதாரண கிளாக்கிடம் போய் சரிபிழை பார்ப்பது அவமானம் இல்லையா? அத்துடன் முக்கியமாக யார்யார் வேட்பாளர்கள் என்பது பரமரகசியம். சரிபிழை பார்க்கப் போய் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துடுமே?
  26. இது ஏற்கனவே நான் யாழில் எழுதிய ஒரு கருத்துத் தான் இருந்தாலும் இங்கே அண்ணை கந்தையா அவர்கள் எழுதியதால் இன்னொரு முறை என்னயுடைய ஒரு துருக்கி நாட்டுக்கு நண்பன் கூறுவான் அங்கே சில சிறிய கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம். எல்லாவற்றிற்கும் பதிவுதான் காரணம் கதையோட கருத்து நான் பிறந்த காணி எனக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும் என்னுடைய சொந்தங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
  27. அமெரிக்கன் பயங்கரவாத தடைச்சட்டம் போட்டு கொழும்பில் வந்து கைது செய்ய மாட்டான் என்ற துணிவில் தூதரகத்திற்கு முன் நின்று போராடுகின்றனர் .சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களவர்கள் தான் குரல் கொடுக்க முடியும்...சிங்களவர்கள் சித்திரைவதைசெய்யப்பட்டு கொல்லப்படால் மட்டுமே சிறிலங்காவில் விசாரனை செய்யப்படும்...ஏனைய இனங்கள் அமைதி காக்க வேணும் ...அமெரிக்காவுக்கு எதிராக,பிரித்தானியாவுக்கு எதிராக ஏனைய இனங்கள் குரல் கொடுக்கலாம்... "அமெரிக்கா இம்பிரியலிசம் " எங்கயோ கேட்ட குரல் .... சிறுபான்மையினர் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க ,பெரும்பான்மயினர் ட்ரம்ப்பிடம் கடன் கேட்டு நாட்டை அபிவிருத்தி செய்வினம்
  28. வியாபாரி இன்னும் ஒரு கௌதாரிக்கு நல்ல உணவு கொடுத்து வளர்ககப் போகிறான்.
  29. ‘பம்மாத்து’ என்பதே எங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைத்ததுதான்
  30. முன்பு றோயல் கல்லூரி டமிழ்ஸும்,சென்ற் தோமஸ் டமிழ்ஸும் ,கருவாக்காட்டு டமிழ்ஸும் உடரட்ட சிங்களவர்களும் இரண்டர கலந்து ஆங்கில ஆட்சி செய்தனர் ....அழிந்தனர் தமிழர்களை...கொழும்பிலிருந்து தமிழர் பகுதிக்கு சென்று அரசியல் செய்தனர்.. இப்ப அனுராதபுர அப்புஹாமியும் பண்டாரவளை சந்திர சேகரவும் கொழும்பிலிருந்து சென்று தமிழ்ர் பகுதியில் ஆட்சி செய்கின்றனர்...
  31. சந்திரசேகர என்ற தமிழ் அமைச்சர் தமிழ் படிச்சதனால் தமிழர்கள் அனுபவிக்கிற துன்பம் காணாது என்று இன்னும் பத்தாயிரம் பிக்குகளா தாங்காதடா சாமி ...
  32. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு ஃபில் சால்ட்டினதும் விராட் கோலியினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
  33. சரி விடுங்கோ .......... ஐயாயிரத்துக்கு அந்த கௌதாரியை வாங்கி அதன் கழுத்தைத் திருகிக் கொன்ற நல்லவனும் மனித இனத்தில்தானே இருக்கிறான் ..........! 😂
  34. மாலை சூடும் மணநாள் ..........! 😍
  35. இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்க செய்த முதல் வேலை ஜேர்மனியின் தொழில் நுட்பங்களையும்,விஞ்ஞானிகளையும் திருடியது தான்....கொஞ்சம் பிந்தியிருந்தாலும் ரஷ்யா அதே வேலையை செய்திருக்கும்.....
  36. கனக்க நினைச்சு துள்ளிக்குதிக்க வேண்டாம்.🤸 நான் பிறந்து நாலு வருசத்துக்கு பிறகுதான் பதிஞ்சதாம்
  37. இதற்கு திரைமறைவில் உழைத்தவர்கள் யாரோ? அயல்நாட்டு ராஜதந்திரிகள் தான் அண்மைக் காலங்களில் குறுக்கும் நெடுக்குமா ஓடுப்பட்டுத் திரிந்தார்கள்.
  38. நல்லதொரு கட்டுரை ........... நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ........... ! 👍
  39. தமிழரசுக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? கொதித்தெழுகிறார் மணிவண்ணன்.
  40. கிழக்கில் முஸ்லிம் காடையர்கள் செய்த கொலைகளுக்கு மன்னிப்பு கேட்டார்களா? மடவெல இணையம் கருத்தில் எடுக்கும் என நினைக்கிறேன். பல இனப்படுகொலைகளை செய்த சிங்கள அரசு மன்னிப்பு கேட்டதா? செங்கோலை தூக்கி கொண்டு ஒடியவர்கள், கைகலப்புகளில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் தடை செய்யப்பட்டனர்?
  41. பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர். அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும். ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது? விண்கலன் பூமிக்குத் திரும்பும் நேரத்தை எவை தீர்மானிக்கின்றன? விண்வெளிப் பயணங்கள் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, விண்கலன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாகக் கீழே இறங்கி விடுவதில்லை. அவர்கள் மெதுவாக வர வேண்டும், பத்திரமாகத் தரையிறங்க வேண்டும். இதற்குத் தேவையான நேரம் என்பது விண்கலத்தின் வடிவம், தரையிறங்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும். டிராகன் மற்றும் சோயுஸ் விண்கலன்கள் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவது முதல் தரையிறங்குவதை வரை வெவ்வேறு கால அவகாசங்களை இரு விண்கலன்களும் கொண்டுள்ளன. சுனிதா வில்லியம்ஸின் விண்கலத்தைச் சுற்றி வலம் வந்த டால்பின்கள் சுனிதா வில்லியம்ஸ் பயணித்த டிராகன் விண்கலம் திடீரென 7 நிமிடங்கள் பூமியுடன் தொடர்பை இழந்தது ஏன்? சுனிதா வில்லியம்ஸ்: 'விண்வெளியில் எப்போதும் பதற்றம், குறைவான தூக்கம்' - 12 ஆண்டுகளுக்கு முன் என்ன கூறினார்? பத்திரமாக பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? சோயுஸ் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்? பட மூலாதாரம்,NASA ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 1960களில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை விரைவாக பூமிக்குக் கொண்டு வரும் சிறிய கடினமான விண்கலன் வடிவத்தைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, அந்த விண்கலன் செங்குத்தான பாதையில் பூமியை நோக்கிப் பயணிக்கும். அதன் மூலம், மூன்றே மணிநேரத்தில் விண்வெளி வீரர்களை பூமியில் தரையிறக்கிவிடும். "கஜகஸ்தானில் உள்ள புல்வெளிப் பரப்பில் தரையிறங்குவது மிகவும் விரைவாக மூன்றரை மணிநேரத்துக்கு உள்ளாக நடைபெறும் நிகழ்வு," என்று ஐரோப்பிய விண்வெளி மையம் சோயுஸ் விண்கலன் குறித்துக் கூறுகிறது. சோயுஸ் விண்கலனில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் பூமிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஒரு பகுதி மட்டுமே தரையிறங்கும். தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நான்கு பாராசூட்கள் விரியும். முதலில் இரண்டு பாராசூட்கள் விரியும். பிறகு பெரிதாக உள்ள மூன்றாவது பாராசூட் விரியும். இதன் மூலம் விண்கலனின் வேகம் நொடிக்கு 230 மீட்டர் என்பதில் இருந்து நொடிக்கு 80 மீட்டர் என்று குறையும். கடைசியாக நான்காவது பாராசூட் விரியும். இது மூன்றாவது பாராசூட்டைவிட 40 மடங்கு பெரியது. விண்கலன் நேராகத் தரையிறங்கும் வகையில் அதன் சாய்வு சரி செய்யப்படும். மேலும் விண்கலனின் வேகம் நொடிக்கு 7.3 மீட்டராகக் குறைக்கப்படும். இருப்பினும், இதுவும் தரையிறங்கப் பாதுகாப்பற்ற அதிக வேகம்தான். அதைக் குறைப்பதற்காக, தரையிறங்குவதற்கு ஒரு நொடி முன்பாக, விண்கலனின் அடிப்பகுதியில் இரண்டு இயந்திரங்கள் எரியத் தொடங்கும். இவை விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலன் தரையிறங்கும்போது என்ன ஆகும்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலன் கடலில் இறங்கிய காட்சி சோயுஸ் தனது இயந்திரங்களை எரியூட்டி வேகத்தைக் குறைத்து, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகுகிறது. பிறகு பூமியின் வளிமண்டலத்துக்குள் செங்குத்தான கோணத்தில் நுழையும். செங்குத்தாக உள்ளே நுழையும்போது, காற்றின் எதிர்ப்புவிசை காரணமாக அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் விண்கலனின் வேகம் குறைக்கப்படும். இந்தச் செயல் அதிக வெப்பம் மற்றும் விசைகளை விண்கலத்தின் மீது உருவாக்கும். இந்த வெப்பத்திலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வெப்பப் பாதுகாப்பான் உதவும். ஆனால் அந்தப் பாதுகாப்பான்கள் ஈர்ப்பு விசையைவிடப் பல மடங்கு வலுவான சக்தியை எதிர்கொள்ளும். வளிமண்டலம், விண்கலனின் வேகத்தைக் குறைத்த பிறகு, சோயுஸ் தனது பாராசூட்களை விரிக்கத் தொடங்கும். இது விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலனைப் பொறுத்தவரை, அதன் சாதகமான அம்சம் அதன் வேகம். விண்வெளி கதிர்வீச்சு மற்றும் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை விண்வெளி வீரர்கள் குறைவான நேரமே அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதன் தரையிறக்கம் மிகக் கடுமையாக இருக்கும். பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY படக்குறிப்பு, சோயுஸ் விண்கலன் தரையிறங்கும் நிகழ்வு டிராகன் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்? ஏழு பேரை ஏற்றிச் செல்லும் வகையிலான டிராகன் விண்கலம் தரையிறங்குவதில் வேறு மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது வேகமான, செங்குத்தான பயணத்திற்குப் பதிலாக, மெதுவாக, படிப்படியான பயணத்தை அது மேற்கொள்கிறது. பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, பூமிக்குத் திரும்பும் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராகன் விண்கலன் தனது சுற்றுவட்டப் பாதையைச் சரி செய்ய மட்டுமே பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும். டிராகன் விண்கலனில் உள்ள 16 டிராகோ த்ரஸ்டர்கள் எனும் இயந்திரங்கள் இதைச் செய்யும். இதனால் திட்டத்தைக் கட்டுப்படுத்துவோர் தரையிறங்குதலின்போது சீரான நிலைமைகள் இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது. சோயுஸ் விண்கலன் போலன்றி, டிராகன் விண்கலன் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது சாய்வான கோணத்தில் இருக்கும். இதனால், வளிமண்டலத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் வெப்பம் பரவலாகவும், நீண்ட நேரமும் கிடைக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதோடு, விண்கலன் தனது வேகத்தை மெதுவாகக் குறைத்துக் கொள்ளும். வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலனை நிலையாக வைத்துக் கொள்ள இரண்டு பெரிய பாராசூட்கள் உள்ளன. இது தவிர, தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலனின் வேகத்தைக் குறைக்க நான்கு பாராசூட்கள் உள்ளன. தரையிறங்குதல் உத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன? பட மூலாதாரம்,NASA சோயுஸ் விண்கலன் நிலபரப்பில் தரையிறங்கும், ஆனால் ட்ராகன் கடல் மீது தரையிறங்கும். சோயுஸ் வழக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் பரந்த புல்வெளிகளில் தரையிறங்கும். டிராகன், கடலின் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பரப்பில் தரையிறங்கும். நிலத்தில் அல்லாமல் நீரில் தரையிறங்குவதற்கு அதிக ஏற்பாடுகள் தேவைப்படும். கடலில் இருந்து விண்கலனையும் விண்வெளி வீரர்களையும் மீட்பதற்கு நிறைய ஏற்பாடுகள் தேவை. தண்ணீரில் விண்கலன் எங்கு தரையிறங்கும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கு அருகில் படகுகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவர்கள் விண்கலனுக்கு அருகில் வந்து, விண்கலன் மீது ஏதேனும் நச்சுக் கதிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வேண்டும். பிறகு விண்கலனை அருகிலுள்ள மீட்புத் தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். தரையிறங்கும் இடத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதே இதன் சாதகமான அம்சம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedl4635d19o
  42. காற்றில் கலந்து வந்த சேதி ஒன்று ....அர்ஷுனாவின் மீதுள்ள சில வழக்குகளின் , தீர்ப்பால் இவரது பாராளுமன்ற பதவி பறிபோகும் நிலையில் உள்ளதாம் அதனால் தங்கச்சியை / தங்கத்தை அந்த பதவிக்கு அமர்த்திவிட்டு இவர் மாகாண முதல்வர் பத்விக்குப் போட்டியிடப போகிறாராம் கடைசியில் அதுவுமில்லாமல் இதுவும் இல்லாமல்...அம்போ " தவளையும் தன் வாயால் கெடும்".
  43. இருவரும் சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள். தனியே உள்ளூராட்சி தேர்தலைக் குறிவைத்து இணையாமல் அடுத்தடுத்த தேர்தல்களையும் ஒன்றாக இருந்து சந்தித்து தேசியத்துக்காக பாடுபடணும்.
  44. தமிழ் தேசியத்தை இல்லாது பண்ண ஜெ.வி.பி யினரால் உள்வாங்கப்பட்ட ஒர் டமிழர் ...இன்று தமிழர் பகுதியில் இவர் பிரச்சாரம் செய்வது தமிழர் நிலத்தை படிப்படியாக இல்லாமல் பண்ணும் முயற்சி என நான் கருதுகிறேன்.தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு நேற்றைய பாராளுமன்ற உரையிலும் யாழ் நூலக எரிப்பு,பழைய இனக்கலவரங்களை பேசி ஐ.தே.க கட்சியினரை குற்றம் சாட்டுகிறார் ...இவை யாவற்றையும் விட "தமிழ் இன அழிப்பு" "இன படுகொலை" மிகவும் பாரதூரமானது அது பற்றி அவர் பேச வில்லை...இதுவரை காலமும்... தையிட்டி விகாரை விவகாரத்திலும் அவரின் நிலப்பாடு பக்கசார்பாக உள்ளது... சில நுனி நாக்கு ஆங்கில தமிழ் அரசியல்வாதிகள் செய்த செயலை ,இவர் நுனி நாக்கு சிங்கள தமிழ் அரசியல்வாதியாக செய்யப்போகின்றார்
  45. யாழ் இந்து பழைய மாணவர்கள் குறிப்பிடப்பட்டு; இவர்கள் சிலர் தன்னை அரசியலில் ஓரங்கட்டுவதாக கங்கணம் கட்டியுள்ளதாகவும், கெளசல்யா ரரேந்திரனை மிக கேவலமான அளவில் திட்டமிட்ட வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாகவும் இந்த அழுத்தங்களின் வெளிப்பாடே கெளசல்யா ஒதுங்குவதற்கான காரணமாக அமையலாம் எனும்படியான அர்ச்சனா அவர்களின் ஒரு காணொளி பார்த்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.