SRH-ஐ சிதைத்த ஷர்துலின் விஸ்வரூபம் - லக்னௌவின் ஆணிவேராக அமைந்த பூரன், மார்ஷ் ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஹைதரபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 23 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் மைதானத்தில் 190 ரன்கள் சேர்த்தால்கூட டிஃபென்ட் செய்ய முடியாது என்பதை நேற்றைய ஆட்டம் உணர்த்திவிட்டது. கடந்த சீசனில் லக்னெள சேர்த்த 165 ரன்களை ஹெட், அபிஷேக் இருவரும் 9.5 ஓவர்களில் சேஸ் செய்து அவமானப்படுத்தியதற்கு பதிலடி கொடுத்தது லக்னெள அணி. லக்னெள அணி இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டி 0.963 என்று 2வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. லக்னெள அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட்டில் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றியுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் சரிவால் பின்தங்கியுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அமைதிப் பாலம் மீண்டும் திறக்க வித்திட்ட காதல் ஜோடியின் மரணம்3 மணி நேரங்களுக்கு முன்னர் மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?23 மார்ச் 2025 விலை போகாத வீரர் விஸ்வரூபம் பட மூலாதாரம்,GETTY IMAGES லக்னெள அணியின் வெற்றிக்கு 3 பேரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர், பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்ஷெல் மார்ஷ் ஆகிய மூவரும்தான் லக்னெள வெற்றிக்கு மூலதாராமாக இருந்தவர்கள். அதிலும் ஐபிஎல் டி20 ஏலத்தில் விலை போகாத விரக்தியில் இங்கிலாந்தில் கவுண்டி தொடர்களில் விளையாட ஷர்துல் ஆயத்தமானார். காயம் காரணமாக மாற்று வீரர் தேவை என்றபோது ஷர்துல் தாக்கூரை லக்னெள வாங்கியது. தனது திறமையை எந்த அணியினரும் மதிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் வெளிப்படுத்திச் சிறப்பாக ஆடி வருகிறார். முதல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த சீசனில் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தபோதும் விலை போகாத வீரராக ஒதுக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். எம்புரான் விமர்சனம்: லூசிஃபர் அளவுக்கு அழுத்தமான படமாக இருந்ததா?4 மணி நேரங்களுக்கு முன்னர் தங்க நகைகளை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப் பிடிக்குமா?27 மார்ச் 2025 வெற்றியை பெரிதாக எடுக்கவில்லை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் வெற்றிக்குப்பின் லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், "உண்மையாகவே பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அணியாக சிறப்பாகச் செயல்பட்டோம். வெற்றி பெற்றவுடன் உயரத்தில் பறக்கவும் இல்லை. தோற்றவுடன் நம்பிக்கை இழக்கவும் இல்லை. அணியாக கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஆவேஷ், ஷர்துல் சிறப்பாகப் பந்துவீசினர். பூரனுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டோம். அந்தச் சுதந்திரம்தான் வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொருவரும் சரியான திட்டமிடலுடன் வந்தோம், பயிற்சி எடுத்தோம், பின்னர் அதைச் செயல்படுத்தினோம்," என்று தெரிவித்தார். ரிஷப் பந்தை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு லக்னெள அணி வாங்கியது. முதல் வெற்றி கிடைக்காமலும், தன்னுடைய விலை அழுத்தத்தாலும், ரிஷப் பந்த் கடும் நெருக்கடியில் இருந்தார். இந்த வெற்றியால் ரிஷப் பந்த் நிம்மதி அடைந்தார் என்பதோடு, அணியின் நிர்வாகிகள் வெற்றிக்குப் பின் ஓடி வந்து ரிஷப் பந்தை கட்டியணைத்துப் பாராட்டியதன் மூலம் லக்னௌ அணிக்கு இந்த வெற்றியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தோனியின் வியூகத்தை உடைப்பாரா கோலி? கொல்கத்தாவை எளிதாக ஜெயிக்க வைத்த ராஜஸ்தான் அணி - கேப்டன் செய்த அந்த மிகப்பெரிய தவறு என்ன? ஐபிஎல் வந்தாலே அதிகம் பேசப்படும் காவ்யா மாறன் யார்? இவரது பின்னணி என்ன? ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் சன்ரைசர்ஸை சிதைத்த வீரர்கள் நிகோலஸ் பூரனின் ஆட்டம் நேற்று மிரள வைத்துவிட்டது. இந்த ஐபிஎல் சீசனில் அதிவேகமாக 18 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை பூரன் படைத்தார். பூரன் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 6 சிக்ஸர், 6 பவுண்டரி என 269 ஸ்ட்ரைக் ரேட்டில் ருத்ரதாண்டவமாடினார். அதேபோல கடந்த சீசனில் டெல்லி அணிக்கு சரியாக ஆடாத மார்ஷ் நேற்று சன்ரைசர்ஸ் பந்துவீச்சை அநாயாசமாகக் கையாண்டார். 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த இருவரும் சேர்த்த ரன்கள்தான் லக்னெள வெற்றிக்கு ஆணிவேராக அமைந்தது. குழம்பிய கம்மின்ஸ் நிகோலஸ் பூரன், மார்ஷ் இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தபோது, கேப்டன் கம்மின்ஸ் எவ்வாறு இருவரையும் பிரிப்பது எனத் தெரியாமல் குழம்பினார். இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த இருவரும் 9வது ஓவருக்குள் 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். பவர்பளே ஓவர்களில் 77 ரன்களும், 7.3 ஓவர்களில் 100 ரன்களையும் லக்னெள எட்டியது. நிகோலஸ் பூரன் 70 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தபோது லக்னெள வெற்றிக்கு 68 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், லக்னெள அணி சிறிதுகூட பதற்றப்படாமல் இலக்கைத் துரத்தியது. டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த அப்துல் சமது தனது பங்கிற்கு 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 22 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். பூரன், மார்ஷ் இருவரையும் பிரிக்கவும், லக்னெள பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்யவும் கம்மின்ஸ் நேற்று 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் சராசரியாக ஓவருக்கு 12 என்ற ரன்ரேட்டில் ரன்களை வாரி வழங்கினர். யஷ்வந்த் வர்மா: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதாக சர்ச்சையில் சிக்கிய இவரின் 5 முக்கிய தீர்ப்புகள்27 மார்ச் 2025 பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி27 மார்ச் 2025 இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு கடுமையாக எதிர்த்தது ஏன்?27 மார்ச் 2025 சன்ரைசர்ஸை கட்டம் கட்டிய லக்னெள பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிச்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு கொண்டாடிய சன்ரைசர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த தொடக்கத்திலயே விக்கெட் வீழ்த்துவதுதான் சரியானது என்பதை அறிந்த லக்னெள அணி அதற்குரிய திட்டமிடலுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட்டுக்கு வைடர் யார்கர்களையும், அபிஷேக் சர்மாவுக்கு ஷார்ட் பந்துகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தியது. ஷர்துல் தாக்கூர் வீசிய 2வது ஓவரிலேயே அதற்குரிய பலன் கிடைத்தது. அபிஷேக் ஷர்மா ஷார்ட் பந்தில் தூக்கி அடித்து 6 ரன்னில் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் வந்த வேகத்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டில் விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட்டுக்கும் குறிவைக்கப்பட்டது, ரவி பிஸ்னாய் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் அடித்த ஷாட்டில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை பூரன் தவறவிட்டார். ஆனால் ஹெட் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது, அவருக்கு வலுவான யார்கரை வீசி பிரின்ஸ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். டாப் ஆர்டர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆயுதங்களையும், திட்டங்களையும் லக்னெள வைத்திருந்தது. கிளாசனுக்கு நேர்ந்த கொடுமை கிளாசன் களத்துக்கு வந்தவுடன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். 11வது ஓவரை பிரின்ஸ் யாதவ் வீசினார். நிதிஷ் ரெட்டி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க பிரின்ஸ் முயன்றபோது அவரின் கைகளில் பட்டு பந்து நான்-ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் பட்டது. அந்த நேரத்தில் கிளாசன் க்ரீஸைவிட்டு வெளியே நின்றிருந்தால் பரிதாபமாக ரன்-அவுட்டாகி வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் நிதிஷ் ரெட்டியை 32 ரன்களில் ரவி பிஸ்னோய் வெளியேற்றினார். ஹமாஸுக்கு எதிராக காஸாவில் வீதிகளில் இறங்கிய மக்கள் - திடீர் போராட்டத்துக்கு என்ன காரணம்?27 மார்ச் 2025 மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை27 மார்ச் 2025 மம்மூட்டிக்காக சபரிமலையில் பூஜை செய்த மோகன்லால்: சர்ச்சையானது ஏன்? - இன்றைய டாப் 5 செய்திகள்27 மார்ச் 2025 புதிய கண்டுபிடிப்பான அனிகேத் வர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சன்ரைசர்ஸ் அணியை எப்படி வீழ்த்துவது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர் அனிகேத் வர்மாவை தனது புதிய கண்டுபிடிப்பாகப் பிடித்துள்ளது. 21 வயதாகும் அனிகேத் வர்மா, 13 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் சேர்த்து பிஞ்ச் ஹிட்டராக மாறினார். இந்த ரன்களை அனிகேத் அடிக்காமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 160 ரன்களில் சுருண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம். அனிகேத் வர்மா ஆட்டமிழந்த பிறகு, பின்வரிசையில் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கம்மின்ஸ் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களையும் பயன்படுத்த சன்ரைசர்ஸ் அணியில் கடைசி வரிசையில் பேட்டர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் சன்ரைசர்ஸ் அணியை எப்படி காலி செய்வது என்று மற்ற அணிகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ். அதிரடி வீரர்களுக்கு யார்கர் ஆயுதம் என்பதை உணர்ந்து, நேற்று மட்டும் 16 ஓவர்களில் 14 யார்கர்களை லக்னெள பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர். அதிலும் பிரின்ஸ் யாதவ் தன்னுடைய 4 ஓவர்களிலும் யார்கர்களை திட்டமிட்டு வீசினார். ஒருதரப்பாக ஆட்டத்தை மாற்றிய பூரன் லக்னெள அணி 190 ரன்களை துரத்தியது. ஆனால் மார்க்ரம் தொடக்கத்திலேயே ஏமாற்றினார். அடுத்து வந்த பூரன், பவுண்டரியுடன் கணக்கையும், அதிரடியையும் தொடங்கினார். பூரன் இடதுகை சுழற்பந்துவீச்சுக்குத் திணறுவார் என்று அபிஷேக் சர்மாவை பந்துவீச கம்மின்ஸ் அழைத்தார். ஆனால், அபிஷேக் பந்துவீச்சைத் துவைத்து எடுத்த பூரன் சிக்ஸர், பவுண்டரி எனச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடம் ஸம்பா பந்துவீச்சை விட்டு வைக்காத பூரன், 2 சிக்ஸர்களை விளாசினார். பூரன் சந்தித்த முதல் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். 18 பந்துகளில் பூரன் அரைசதத்தை எட்டினார். பூரன் அதிரடியாக ஆடியபோது மார்ஷ் சிறிது பொறுமை காத்து 22 பந்துகளில் 37 ரன்களுடன் இருந்தார். பூரன் ஆட்டமிழந்தவுடன் மார்ஷ் அதிரடியாக ஆடத் தொடங்கி, ஷமி பந்துவீச்சில் 2 சிக்ஸர்கள், கம்மின்ஸ் பந்துவீச்சில் 2 பவுண்டரி என விளாசி 29 பந்துகளில் அரைசதம் எட்டினார். கடைசி 11 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. ரிஷப் பந்த்(15), பதோனி (6) விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில், மில்லர், அப்துல் சமது வெற்றியை உறுதி செய்தனர். அதிலும் சன்ரைசர்ஸ் அணியில் கடந்த சீசனில் இருந்த இளம் வீரர் அப்துல் சமது 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 8 பந்துகளில் 22 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மில்லர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedld161z54o