Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38770
    Posts
  3. Kandiah57

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    4043
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/22/25 in Posts

  1. நான் மாறலாம் ஆனால் மனைவி ஒருபோதும் மாறமாட்டாள். அது வளர்ப்பு முறை எனது சமையல் சீனா இலங்கை மற்றும் இணையத்தில் பாரத்தும் செய்வேன் மகன் இத்தாலிய சமையல் செய்வன். நான் சமைபபதையாம் சாப்பிடுவன். மனைவி அனேகமாக பாண். 🤣 அல்லது மரக்கறி. சோறு பழையது எதுவுமே சாப்பிடுவதில்லை நான் இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடுவேன். சமையல் பெரிய வேலை இல்லை இந்த துறையில் இருபது வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு” எனக்கு மூன்று பெண் சகோதரிகளுண்டு அவர்களுக்கு சீதனம். கொடுத்து தான் திருமணம் செயதது ...எனக்கும் நிறையவே சீதனம். தர முன் வந்தார்கள்.....சீதனம். தேவையில்லை வேலை செய்தால் சரி என்றேன் ஆனால் நான் விரும்பியது கிடைக்கவில்லை அதாவது 33 ஆண்டுகளில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை ஆனால் நாலு ஏக்கர் தென்னம். தோட்டம் ஏழு பரப்பளவு காணி இரண்டுயரை ஏக்கர் வயல் ஒட்டிசுட்டானில். பேசினார்கள் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு” 1993 தனக்கு தானே திருமணம் பேசி திருமணம் செய்து கொண்டாள். நானும் 3000 மார்க். அனுப்பி வைத்தேன் மனைவி சொன்னார் கொடுக்கக்கூடாது என்று மனைவியின் சகோதரி. எங்களுக்கு பேசிய ஏழு பரப்பளவு காணியையும். தனக்கு சீதனமாக எழுதிக் கொண்டாள் இதை 2003 இல் நாங்கள் குடும்பமாக போன போதும் செல்லவில்லை இடையில் நான் இரண்டு முறை போன போதும் சொல்லவில்லை இதற்க்கு இடையில் நீங்கள் ஊருக்கு போகமாட்டீர்கள் பிள்ளைகளும் போகாதுகள். என்று தென்னாம். தோட்டத்தை சுவிஸ் உள்ள தனது மாமாவுக்கு விற்க வேண்டும் என்று என்னுடன் மனைவி அடிக்கடி அடிபடுவாள் நான் கையெழுத்திட முடியாது என்றேன் அவளது தமையன் அவுஸ்திரேலியவில். இருக்கிறார் இலங்கையில் மூன்று மாதம் நின்று சட்டத்தரணி மூலம் எனது கையெழுத்து இன்றி விற்று விடடார்கள். பரப்பளவு 65 ஆயிரம் ருபாய் வீதம் 64 பரப்பளவு ஆனால் இன்று அந்த காணி பரப்பளவு 3 இலட்சம் ருபாய் நிற்க அந்த ஏழு பரப்பளவு காணியையும். மீண்டும் தனது பெயரில் அடிபட்டு எழுதி விட்டார் மனைவி அதையும் விற்க. தமையனுடன். கதைத்து பரப்பளவு 15 இலட்சத்துக்கு. எற்பாடு செய்து விட்டாள் தமையன் கூறியுள்ளார் நான் கையெழுத்து வைக்க விடடால். தன் சட்டத்தரணி மூலம் செயது தருவேன் எனறு ....எனது மகள் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் காதல் திருமணம் தான் 16. வயதில் காதலிக்க தொடங்கி விட்டாள். எங்கள் நகரில் பெரும் தெருக்கள் சபையில் பொறியியலாளர் ஆக வேலை செய்கிறாள் தான் இலங்கையில் வீடு கட்டபபோகிறேன. என்று காணி விற்பனையை நிறுத்தி விட்டாள். வயலும். பக்கத்து வயல்காரர். வரம்பை அரக்கி அரககி அது இரண்டு ஏக்கர் ஆகி விட்டது அது மொத்தம் 5 ஏக்கர் இரண்டு சகோதரிகளுக்கும். அரைவாசியாகப் பிரித்தது எங்கள் முன்னேர்கள் பெண்பார்ப்பது காணிகள் அளந்து எழுதிய பின். திருமணம் செய்வது… சரியாகும் நான் மச்சம். இல்லாமல் சாப்பிட மாட்டேன் உந்த. விரதங்கள். அர்ச்சனை எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நமபுகிறேன். ஒரு அர்ச்சகர் அர்ச்சனை செய்வதன் மூலம் எங்கள் கஸடஙகள். தீருமென்றால். ஆயிரக்கணக்கானா. ஐயார்மார. ஏன் வறுமையில் வட வேணடும். இதோ அர்ச்சனை செய்வதன். மூலம் தஙகளின். பிரச்சனைகளை தீர்ககலாம அல்லவா இது எல்லாம் மனிதர்களின் சுய விருப்பம் 🤣🙏
  2. இதைதான் ஒவ்வொரு கணவரும் இப்ப யோசிக்கினம்🤔🙆, காலம் தழ்த்திய செய்தி பிந்திக்கிடைத்த நீதி மாதிரி🥲
  3. இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். 🤣
  4. கிளிச்சாத்திரம் தான் என்னுடைய கதை....... 'ஐயாவுக்கு இன்றைக்கு டெல்லி வந்திருக்கு................. அமோகமாக இருக்கப் போகிறாரு.................' 🤣................ நாளைக்கு கிளி மும்பையை எடுத்திருக்குது............
  5. இதேபோல ஒருசிறு கதை .. ஒரு வயதான மூதாட்டியை ரிச்சர்ட் என்பவர் அன்னையர் தினத்தன்று அவரது தங்குமிடத்துக்கு சென்று, அழகான ஆடை அணிவித்து நம் வெளியே சென்று வரலாம் என்றான். நீண்டகாலமாக மகள் வராது இருந்ததால் மூதாட்டியும் ஆவலுடன் விரும்பி அவனுடன் வெளியே ஒரு காலையுணவு உண்ணும் கடைக்கு கூட்டிச் சென்றான். காபி sandwich அவருக்கு விரும்பிய அனைத்தும் ஓடர் செய்து உண்டனர் . இடையிடையே சிறிது மெளனமா இருப்பர் . எனக்கு இவை விருப்பமென்பது உமக்கு எப்படி தெரியும் ? என்றாள் திரும்ப திரும்ப அவன் பெயரையும் கேட்டுக் கொண்டாள். இவனுக்கு உள்ளூரக் கவலை, பெற்ற கடைசி மகனை மறந்து விடடார் என்று இவன் பெயரைச் சொன்னதும் ஓ எனக்கும் கடைசி மகன் விடுதியில் ஆறாம் வகுப்பு படிக்கின்றான். விடுமுறைக்குபண்ணைவீட்டுக்கு வருவான். நீர் நல்ல ஆடை அணிந்து கம்பீரமாய் இருக்கிறீர் .மீண்டும் .....உமது பெயர் என்ன ? அடுத்த தடவை வரும்போது எமக்கு ஊரின் எல்லையில் அழகான தோடடக் காணி, விடுமுறைக்கு ஏற்ற பங்களா வீடு அங்கே சென்று சில நாட்கள் களிக்கலாம்.நான் அமைத்து வைத்த றோசாக்கன்றுகளின் பூக்களையும் ரசிக்கலாம். அருகே உள்ள சிறு நீரோடையில் வாத்துக்கள் நீந்துவதை பார்க்கலாம். மிக்க நன்றி அடுத்த தடவையும் வருவீர் எனக் காத்திருப்பேன் என்றாள்.மீண்டும் Handsome Guy What is your nice name ? (அவரது கணவன் இறப்பின் பின் வீடு வளவு விற்று பங்கு போடப்பட்ட்து ஞாபகம் இல்லை , மூன்று மாதங்களின் பின் தலைசுற்றி விழுந்த பின், ஒரு வருடம் வைத்திய சிகிச்சையில் இருந்தபின் பலத்த அடிகாரணமாக மறதி நோய்க்கு ஆளாகி விடடார் முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார்..) இந்த முதிர் குழந்தைகளுக்காக வாவது அன்னையர் தினம் தந்தையர் தினம் வரவேணும்.
  6. அவர்களில் நொட்டினால்…. நாட்டில் குழப்பம் ஏற்பட்டு, அரசாங்கம் கவிழும் என்று அனுரவிற்கு தெரியும். அதனால்… ஐந்து வருடங்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருப்பார்கள். வழக்கம் போல் மக்கள் தான் ஏமாளிகள்.
  7. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் எய்டன் மார்க்கமும் (52 ஓட்டங்கள்) மிச்சல் மார்ஷும் (45 ஓட்டங்கள்) நிலைத்து ஆடி முதலாவது விக்கெட் இணைப்பாட்டத்தில் 87 ஓட்டங்களை எடுத்திருந்தனர். 200 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கக்கூடிய நிலையிருந்தும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இறுதியில் வேகமாக அடித்தாடிய ஆயுஷ் படோனியின் 36 ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே வேகமாக அடித்தாடினர். அபிஷேக் போரல் 51 ஓட்டங்களையும் கேஎல் ராஹுல் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும், அக்க்ஷர் பட்டேல் 4 சிக்ஸர்களுடன் 34 ஓட்டங்களையும் எடுத்து 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை இலகுவாக அடடைந்தது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நான்கு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நிலாமதி அக்கா கடைசி இடத்தில் வந்து நிற்கின்றார்!
  8. நான் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறன் ........ ! 😂
  9. பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதை நிறுத்துவீர்களா? நிறுத்துவீர்களா? நிவாரண பொதி கொடுக்குறோம் எனும் பெயரில் கட்சி வளர்ப்பதை கண்டிப்பீர்களா? கண்டிப்பீர்களா?
  10. அதேதான்.. அதே போல் ஜீவனாம்ச காசுதா மயிர் மட்டை எண்டு கேக்ககுடாது.. அவன் உடல் அவன் உழைப்பு அவன் காசு அவனுக்கு சொந்தம்..
  11. இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். கால தாமதம் காரிய நஸ்டம். இதையெல்லாம் முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.
  12. முதல்வர் நந்தனாருக்கும் அவன்தாழ் வணங்கி அவன் புகழ்பாடும் புலவருக்கும் ஏனைய முனிவர்கள், தேவர்கள், வீரர்கள் எனக் களமாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். விரைவில் மாற்றம் ஒன்று வராதா என எங்கும் மனித குலத்தவர்களுக்கான பதில் ..... காத்திருங்கள்.... கலங்காதீர்கள்..... கவலையை மறந்து..... கலகலப்பாக இருங்கள்.... உங்களுக்கான நேரம் வரும் ஆனால் வராமலும் விடலாம் ... .😂
  13. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சாய் சுதர்சனின் 52 ஓட்டங்கள், சுப்மன் கில்லின் 90 ஓட்டங்கள், ஜொஸ் பட்லரின் 41 ஓட்டங்கள் என வேகமாக அடித்தாடியதால் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களில் அங்கியா ரகானேயின் 50 ஓட்டங்களைத் தவிர பிற வீரர்கள் ஓட்டங்களை எடுக்கத் திணறியதால் இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  14. குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு! குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்காது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பினையும் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429115
  15. ஜயகோ. இனித்தான் வைக்கப் போறியலோ. நான் பாவமில்லையா. பேசித் தீர்த்துப்போம்
  16. கவலைப் படாதீங்க. கோஸான் கோஸான் என்று ஒருவர் வருவார். என்ன @goshan_che நான் சொல்லுறது
  17. முதல் 15 போட்டியில் 10ஜ சரியாகத் தெரிவு செய்தேன். களமே பத்தி எரிந்தது. ஆனால், அடுத்த 25 போட்டிகளில் வெறும் 10 தான் சரி. இன்னும் 30 இருக்கே. எத்தினை சரி வருமோ.
  18. பூக்களின் நறுமணம் வேர்களுக்கு தெரிவதில்லை.
  19. 40 போட்டிகளில் 40 புள்ளிகள் நமக்கு. தொடக்கத்தில கணிச்சதெல்லாம் சரியாப் போச்சுது. யார் கண் பட்டுதோ. இப்ப எல்லாம் பின் பக்கமா ஓடுது. ஆரேன் சூனியம் கீனியம் வைச்சிட்டினமோ.
  20. ஆகா ....நிலாமதிக்கு கடைசி இடம். சோடியாக நிற்க பையனும் ஊரில் இல்லை. பார்க்கலாம் யாராவது வருவார்கள். கடைசியாய் நிற்கவும் (தாங்கி பிடிக்க )ஒரு ஆள் தேவை தானே.😃
  21. GMT நேரப்படி நாளை புதன் 23 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 12 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 11 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஈழப்பிரியன் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ஏராளன் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  22. இனி ஊஞ்சல்தான் கட்டி ஆட்டணும்
  23. உண்மையாவா? உங்களுக்கேற்ற ஜோடி தானே? வைச்சுக்கோங்க.
  24. நாம 90களில் மனிஷா கொய்ராவில சொக்கிப்போய் இருந்ததால் ப்ரீத்தி ஸின்ராவைக் கவனிக்கவில்லை! இப்ப அவருக்கு 50 வயதாகிவிட்டது😱 இளமை ஊஞ்சலாடும் படங்கள்🥰
  25. இந்த முறையோடை அவர் ஆட்டம் குளோசு
  26. திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதும் யாதவ் என்பவர் மீது அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைபாடளித்துள்ளார். அதில், தானும், கணவரும் நெருக்கமாக இருந்ததை தனக்கு தெரியாமல் கணவர் தனது தொலைபேசியில் வீடியோ எடுத்து, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும், பின்னர், தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும், இதர கிராமத்தினருக்கும் அவர் பகிர்ந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன்பேரில், பிரதும் யாதவ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவின்கீழ், பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றில் பிரதும் யாதவ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவரது சட்டத்தரணி வாதிடுகையில், புகார் கொடுத்த பெண், பிரதும் யாதவ் சட்டப்படி திருமணம் செய்து கொண்டவர் என்றும், எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67-வது பிரிவுக்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறினார். அதை ஏற்காத கூடுதல் அரச தரப்பு சட்டத்தரணி, சட்டப்படியான கணவர் என்றபோதிலும், அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடவோ, மற்றவர்களுக்கு பகிரவோ அவருக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். இந்த வழக்கில், நீதிபதி வினோத் திவாகர் தீர்ப்பு அளித்துள்ளார். பிரதும் யாதவ் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி தனது தீர்ப்பில் , கணவர் மீது மனைவி வைத்த நம்பிக்கையை, குறிப்பாக நெருக்கமான சந்தர்ப்பத்தில் வைத்த நம்பிக்கையை கணவர் மதிக்க வேண்டும். நெருக்கமான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததன் மூலம், அவர் திருமண பந்தத்தின் புனிதத்தன்மையை மீறிவிட்டார். நம்பிக்கையை மீறிய செயல், திருமண பந்தத்தின் அடித்தளத்தையே சிறுமைப்படுத்துகிறது. மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் கொண்ட ஒரு தனிநபர். திருமணம் என்பது மனைவியின் உரிமையாளர் என்ற அந்தஸ்தையோ, அவரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையோ கணவருக்கு அளித்து விடாது. மனைவியின் உடல் சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மதிப்பது சட்டப்பூர்வ கடமை மட்டுமின்றி, தார்மீக கடமையும் ஆகும் என கூறியுள்ளார். https://athavannews.com/2025/1426351
  27. உண்மையிலேயே, லக்னோவின் திட்டம் புரியவில்லை. பாந்தும் தாக்கூரும் இருக்கத்தக்க, எதுக்கு impact sub அனுப்பினவை. என்ன மாதிரியான வியூகம் இது. நமக்கு முட்டை தாறதில அவ்வளவு விருப்பம்.
  28. துருக்கி, ரஸ்சியன், உக்ரைன் காரியள் என்றாலும் ஓகேயா… ஓம் எண்டால், டக்கெண்டு சொல்லுங்கோ. 2’ம் கலியாணத்தை ஜாம்… ஜாம்… என்று நடத்தி விடலாம். 😂 ஆனால் ஒண்டு… சீதனத்தை, நீங்கள்தான் கொடுக்க வேண்டி வரும். 🤣
  29. https://www.facebook.com/watch/?v=651763991167673&rdid=CcSyubaREloxFyFc தமிழ்நாட்டில் தலைவர் படத்தை வைத்து திருமணங்கள் கூட செய்கின்றார்கள்.
  30. இந்தப் பறவையை பார்க்க.. யார் போல் உள்ளது. நான் பார்த்த உடனே.. ட்ரம்ப் என்று நினைத்து விட்டேன். 😂
  31. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனவும், அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும்,அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429114
  32. இந்து சமயத்தில் இந்த விடயத்தில் இஸ்லாமிய மதம்” போல் மாற்றி விட்டால் எல்லா இந்துக்களும் பயன் அடைவார்கள். அதாவது ஒருவர் 4 கலியாணம். செய்யலாம் என்று ..... 7 கூடிப். போச்சு ஏழு பேரிடம் அடி வேண்ட. முடியாது 🤣. மற்ற யாழ் கள உறுப்பினர்கள் ஆலோசனையும் பார்த்து செயயலாம்.
  33. பேச்சமல் இசுலாமாக மாறிவிட்டால் 7 கலியாணம் பக்கு பக்கென்று கட்டலாம் ..அலுத்துவிட்டால் ஜிகாத் செய்தால் அங்கும் 72 கன்னியர்கள் கிடைப்பினம் ...பிறகேன் இந்த இந்துசமயத்தில் இருந்து கயிட்டப் படவேணும்..
  34. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான். ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது. பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை. பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள். பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார். மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது? கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று. ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்” அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை. முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல். கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது. அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது. ‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’ பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான். எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார். இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன். அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள். முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார். என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார். பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன். தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம். நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா? தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது. வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?
  35. உங்கள் நேரத்திற்கும் எழுத்துக்களுக்கும் நன்றி ரஞ்சித். தம் சொந்த இனத்தையே அழிக்க துணை போனவர்களை என்னவென்பது? பிரதேசவாதம் எனும் போர்வையில் தம் கண்ணை தாமே குத்திக்கொள்கின்றனர். மற்றவர்கள் எதிலும் சழைக்காமல் புலிகளை எதிர்க்கிறோம் எனும் போர்வையில் தமது மலத்தை தமது மூக்கில் வைத்து நுகர்ந்தவர்கள் அதன் பலன்களை இன்று அனுபவிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
  36. 'சமூகம் என்றால் நாலு பேர்கள்...............' என்று சொல்லுகின்ற ஒரு வழக்கம் இருக்குது தானே......... இது தான் அந்தச் சமூகம்..................🤣. ஆழ்துளைக் கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்தது போல, அடி எங்கே என்று தெரியாமல் கீழே போய்க் கொண்டிருக்கும் போது நாலு பேர்களாக சேர்ந்து போவது மனதுக்கு கொஞ்சமாவது ஆறுதல்...........🤣. நந்தனும், புலவரும் நாசா ராக்கெட் மாதிரி மேலே மேலே போய்க் கொண்டிருக்கின்றார்கள்.............👍.
  37. பெனாத்தல் என கருதினாலும் முழுமையாக எனது கருத்தினை வாசித்தும் பின் பெனாத்தல்தானே என வெறுமனே கடந்து போகாமல் அந்த பெனாத்தல் கருத்திற்கு நேரம் எடுத்து பதிலிட்டமைக்கும் நன்றி. அதிகார உணவுச்சங்கிலியில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் குறுங்கால சுயநல நடவடிக்கைகளும் அதே உணவுச்சங்கிலியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் தொலைதூர நோக்கின்றி சுயநலனினால் தவறானவர்களை (50000 வாக்குகளால் வெற்றி அடைய செய்தவர்கள்) தெரிவு செய்தமையால் ஒரு சமூகத்திற்கு ஏற்படும் நீண்டகால பாதிப்பு பற்றி கட்டுரை மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளது, அதற்கு பதிலூட்டம் செய்த எனது கருத்தில் சமூகத்தில் அதிகார உயர்மட்டமும் அடிமட்டமும் மட்டும் சுயநலனிற்காக தவறிழைக்கவில்லை அனைத்து மட்டங்களிலும் தவறுள்ளது என்பதே இந்த கருத்தாடல்களின் இரத்தின சுருக்கம் ஆகும்.
  38. GMT நேரப்படி நாளை செவ்வாய் 22 ஏப்ரல் பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 19 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் நான்கு பேர் மாத்திரம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் சுவைப்பிரியன் கந்தப்பு ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  39. அந்த வயதில் அநேகமானவர்கள் உங்களை, என்னைப் போலவே இருந்திருப்பார்கள். கடைக்கு பொருட்களை வாங்கி வரும்படி அனுப்பினால் அதிலும் ஏதாவது அமுக்குவதுண்டு. “இண்டைக்கு சந்தையிலே ஏதும் வாங்க வேணுமோ?” என்று கேட்டாலே போதும், “பெடியனுக்கு ஏதாவது காசு தேவைப் படுது” என்று அம்மாவுக்குப் புரிந்து விடும். என்ன ஒரு ஜம்பத்தைந்து சதம் இருந்தால் போதும். ஒரு மெட்னி ஷோ பாத்து விடலாம். அதுக்காக கீரையில் இரண்டு சதம் மீனில் பத்து சதம்… என்று கணக்குப் போட்டு எவ்வளவு சிரமத்தின் மத்தியில் காசு சேர்த்திருக்கிறேன். இப்போ எல்லாம் கணக்குப் போடுவதில்லை. அம்மா மாதிரி மனைவி இல்லை.
  40. சிரச தொலைக்காட்சியின் பிரபல அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான "ட்ருத் வித் சமுதித்த" எனும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சிங்களப் பத்திரிக்கையாளரும் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பெரிதும் முரண்பட்டு வந்தவருமான கீர்த்தி ரட்நாயக்க எனும் சுதந்திர ஊடகவியலாளர் பல விடயங்கள் குறித்து தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில முக்கியமான தகவல்களை இங்கே பகிர்கிறேன். துணைவேந்தர் ரவீந்திரநாத்தைக் கருணாவுடன் சேர்ந்து பிள்ளையான் எதற்காகக் கொன்றான்? வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல்வன்புணர்விற்கு உள்ளாக்கிய பிள்ளையானையும் கருணாவையும் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். தம்மீதான விமர்சனங்களை தடுப்பதற்காகவே கருணாவும் பிள்ளையானும் இணைந்து அவரைக் கொழும்பிலிருந்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று கீர்த்தி கூறுகிறார். கருணா இலண்டனுக்குத் தப்பியோடிய காலத்தில் பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி நேவி சம்பத் என்று அழைக்கப்பட்ட கடற்படை அதிகாரியொருவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் கொழும்பில் இருந்த பல தமிழ் வியாபாரிகளைக் கப்பத்திற்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறான் என்று அவர் கூறுகிறார். 2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரி எனும் பொய்யான கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குக் கருணாவை கோத்தா அனுப்பிவைக்க, அவன் அங்கு சில மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுடன் இருந்த காலத்தில் வெறும் எடுபிடியாளாகச் செயற்பட்டு வந்த பிள்ளையான், அவர்களுக்காக உழவு இயந்திரங்களை ஓட்டுவது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வது போன்ற வேலைகளையே செய்துவந்திருக்கிறான். கருணா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கத் தொடங்கியதன் பின்னரே பிள்ளையான் எனும் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் கொடூரமானவன் என்று சில காலத்திலேயே பெயரெடுத்துவிட்ட பிள்ளையான் இராணுவ புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கி வந்தான். இலங்கையில் இருந்து கருணா லண்டனிற்குத் தப்பியோடிய இடைவெளியைப் பாவித்துக்கொண்ட பிள்ளையான், தன்னை ராஜபக்ஷ சகோதரர்களுடனும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அவ்வாறே இராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு பிரிவு இவனைத் தமது தேவைகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. கருணா மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. மாமனிதர் ரவிராஜை பிள்ளையானும் கருணாவும் எதற்காகக் கொன்றார்கள் ? கொழும்பிலிருந்த சில தமிழ் வர்த்தகர்கள் அக்காலத்தில் புலிகளுக்கு பணவுதவிகளைச் செய்துவருகின்றனர் என்பதை கோத்தாபய அறிந்துவைத்திருந்தான். ஆகவே நாட்டின் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் கொழும்பில் இயங்கிவந்த பிரபல தமிழ் வர்த்தகர்களை இலக்குவைத்து கடத்தல்களில் ஈடுபடுமாறும், கப்பம் கோருமாறும் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானையும் அவனோடு இயங்கிவந்த கருணா, சாந்த கஜநாயக்க மற்றும் ஹெட்டியாரச்சி எனும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை பணித்தார்கள். அதன்படியே கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். சிலர் பாரிய கப்பத்தொகை செலுத்தப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ பாதுகாப்புடன் பவணிவந்த பிள்ளையான் வெளிப்படையாகவே தமிழ் வர்த்தகர்களைக் கடத்திச் சென்றுகொண்டிருக்க, இதனைத் தடுப்பதற்காக பல தமிழ் வர்த்தகர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்களையும் மீறி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜிடம் பிள்ளையானின் கடத்தல் மற்றும் கப்பம் கோரல்களுடனான படுகொலைகளைப்பற்றி முறையிட்டிருந்தனர். வர்த்தகர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள், தகவல்கள் அடிப்படையில் முக்கியமான அறிக்கையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ரவிராஜ் தயாரித்து வந்திருந்தார். பாராளுமன்றத்தில் ரவிராஜினால் வெளிப்படையாகவே இத்தகவல்கள் வெளிக்கொணரப்படுமிடத்து இக்கடத்தல்களுடனான தமது தொடர்புகள் வெளிவரும் என்று அஞ்சிய கோத்தாபாயவும், பசில் ராஜபக்ஷவும் ரவிராஜைக் கொல்லுமாறு பிள்ளையானுக்கு உத்தரவிடுகின்றனர். ரவிராஜைக் கொல்வதற்காக பிள்ளையான் ஆயத்தப்படுத்தி வருகிறான் என்பதை புலநாய்வுத்துறையினரூடாக அறிந்துகொண்ட கீர்த்தி, ரவிராஜைச் சந்திப்பதற்காக பஸ்டியான் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று தான் அறிந்தவற்றைக் கூறி, "இன்னும் ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் உங்களைச் சுட்டுக் கொல்லப்போகிறான்" என்று எச்சரித்திருக்கிறார். இதற்கான சாட்சியாக சத்துரிக்கா ரணவக்க எனும் ரவிராஜின் உதவியாளர் இருக்கிறார் என்றும் கீர்த்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டவாறே சரியாக 8 நாட்களில் பிள்ளையானும், நேவி சம்பத்தும் இணைந்து கொழும்பு நகரில் தனது பிரத்தியேக வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த ரவிராஜை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றனர். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் 5000 கோடி சொத்துக்களைச் சுருட்டிய போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் உரிமையாளரான நடராஜா சிறீஸ்கந்தராஜாவைக் கடத்திச் சென்று படுகொலைசெய்து, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, 5000 கோடி பெறுமதியான சொத்துக்களை போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா வளைத்துப்போட்டிருக்கிறான் என்று கீர்த்தி கூறுகிறார். பிள்ளையான், கருணா மற்றும் நேவி சம்பத் ஆகியோர் மூலம் இக்கடத்தலினைச் செய்த சவேந்திர சில்வா, தனது பாதாள உலகக் கும்பல் ஒன்றின் தலைவனூடாக வர்த்தகரின் மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தினான் என்று கீர்த்தி மேலும் கூறுகிறார். அக்குரஸை மற்றும் கெப்பிட்டிக் கொல்லாவைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு பங்குனியில் தென்மாகாணத்தின் அக்குரசைப் பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் மத வழிபாடொன்றின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு இன்னும் 35 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்று அரசு உடனடியாக அறிவித்திருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு மகிந்தவின் ஆதரவாளரான ஜானக்க பண்டார தென்னக்கோன் எனும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வன்னியில் நடக்கும் போரின் அகோரத்தைத் திசைதிருப்பவே மகிந்த இத்தாக்குதலை தெற்கில் நடத்தியதாகவும் கீர்த்தி கூறுகிறார். 2006 ஆம் ஆண்டு ஆனிமாதம் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவை பஸ் குண்டுத் தாக்குதலை நடத்தியதும் மகிந்தவே புலிகளை முற்றாக அழிக்க தன்னை உந்தித் தள்ளிய தாக்குதல் இது என்று இத்தாக்குதல் குறித்து மகிந்த பலவிடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 2006 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்தவுடனேயே அமெரிக்காவும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இத்தாக்குதலுக்குப் புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தனர். பல சர்வதேச ஊடககங்களில் முக்கிய செய்தியாக இது வலம்வந்ததுடன் தமிழர்மீதான முற்றான போரிற்கும் இத்தாக்குதலை ஒரு காரணமாக மகிந்த காட்டிவரத் தொடங்கினான். ஆனால் இத்தாக்குதலே மகிந்தவினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கீர்த்தி கூறுகிறார். அநுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மகிந்தவின் கொலையாளிகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே மகிந்தவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதல் குறித்த தகவல்களை கவலையீனமாக வெளியே கசியவிட்டதாகவும் இதன்மூலமே மகிந்தவின் இத்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கீர்த்தி கூறுகிறார். இத்தாக்குதல் நடந்தபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறியது நினைவிருக்கலாம். உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான் இத்தாக்குதல் நடந்தவுடன் கோத்தாபாயவிற்குச் சார்பான லங்கா கார்டியன் பத்திரிக்கையும், கோத்தாவின் ஆலோசகரான ரொகாண் குணவர்த்தனவும் இத்தாக்குதலை ஐஸிஸ் அமைப்பே நடத்தியதாக கூறியிருந்தனர். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையினை இப்பத்திரிக்கையும், ரொகான் குணவர்த்தனவுமே காவி வந்தனர். 2021 இல் இவ்வறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கான முஸ்த்தீபுகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதற்காகத் தயார் செய்யப்பட்ட பிள்ளையானுக்கு மாதம் தோறும் 35 இலட்சம் ரூபாய்களை இராணுவப் புலநாய்வுத்துறை சம்பளமாகச் செலுத்திவந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை ராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் உதவியாளராகச் செயற்பட்டு வந்த ஒருவரின் மகனே ஆசாத் மெளானா. இவனுக்கும் இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்றன. இதனால் இவன் அடிக்கடி இந்தியாவிற்குப் போய்வந்திருக்கிறான். இவனூடாகவே பிள்ளையானை இத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது ரோ.. குண்டுத்தாக்குதலுக்குத் தேவையான மேலங்கிகள், குண்டுகள் என்பன இந்தியாவினாலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவப் புலநாய்வுத்துறையினரின் உதவியுடன் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டே இந்திய ரோ, இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் சுரேஷ் சாலேயின் கீழ் வழிநடத்தப்பட்ட பிள்ளையான் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலினை நடத்தினார்கள். இலங்கையில் கோத்தா ஜனாதிபதியாவைதையும், இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவதையும் உறுதிப்படுத்துவதற்காகவே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் ரணில் விக்கிரம‌சிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொழும்பில் இதுகுறித்து நடந்த ரகசியச் சந்திப்பொன்றில் ரணில், பிள்ளையானின் அடியாட்களில் மிகவும் கொடூரமானவன் என்று அறியப்படும் இனியபாரதி மற்றும் இராணுவப் புலநாய்வுத்துறையின் சுரேஷ் சாலே ஆகியோர் இத்தாக்குதல் குறித்து பேசியது குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.
  41. அடியேனும் அதில் ஒருவன்.சென்னையின் திறமைக்காக தெரிவு செய்யவில்லை.சென்னை அணி நம்ம தமிழ்நாட்டு அணி என்ற பாசம் தான்.ஆனால் சென்னை அணியில் அஸ்வினைத் தவிர வேறு தமிழக வீரர்கள் இல்லை.சென்னை அணியை முற்றாக மாற்றவேண்டும் .குறிப்பாக தோனியைத் துரத்த வேண்டும்.சென்னை ரசிகர்களுக்கு வெற்றி முக்கியமல்ல.தோனி வந்து 4 சிக்ஸர் விளாசவேண்டும்.இது கிரிக்கட் சூதாட்டம் போல் இருக்கிறது.அவருக்கு சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற மாதிரி இலகுவான பந்துகளைப் போடுகிறாரகள்.இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் ரிக்கற் வாங்கி வந்து மைதானத்தில் விளையாட்டைப் பார்க்க வேண்டும்.அதற்கு தோனி வேண்டும்.தமிழக முட்டாள் ரசிகர்களும் வேண்டும்.
  42. சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... ஒரு வித்தியாசம் பிள்ளையான் செயலில் இறங்கினார் ...மற்றவர்கள் கருத்துக்களை எழுதினார்கள் ... மகிந்தா குழுவினர்,மற்றும் அண்மையில் ரில்வின் சில்வா சொன்னதும் இதே கருத்து ...தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை பொருளாதார பிரச்சனை ...அதுவும் ஒர் பகுதியினரின் கையில் பொருளாதாரம் சென்றுள்ளது மேட்டுக்குடியினரின் கையில்
  43. உங்கள் ஆயுளில்... 40 வருடங்கள் நல்லெண்ணெய் வைத்து இருக்கின்றீர்கள் போலுள்ளது. நல்லெண்ணெய் வைத்தால் தலை முடி... பொசு பொசு என்றும், நரை இல்லாமல் கரு, கரு என்றும், சொட்டை விழாமல் அடர்த்தியாக இப்ப இருக்க வேணுமே. இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல். பொய் சொல்லாமல்... நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். 😂
  44. யயார் சொன்னது முனகிறன் என்று.எனக்கு கன நாளாக முதுகு உளைவு இவளவு பேர் ஏறி மிதிக்கும் போது சொர்க்ம் தெரியுது.😂
  45. கிருபன் தீவிர பக்தனை காணவில்லை இங்கே முட்டுக்கொடுக்க, 🫠 சோபா ஒரு வெளி வேச மனிதன்,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.