Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    38770
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87990
    Posts
  3. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1223
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46793
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/07/25 in Posts

  1. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 57வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சுனில் நாரைன், அங்கியா ரஹானே, மனிஷ் பாண்டே ஆகியோரின் 25 க்கு மேற்பட்ட ஓட்டங்களாலும் மற்றும் அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்த அண்ட்ரே ரஸல்ஸினாலும் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்களை எடுத்தது. நூர் அஹமெட் 31 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே ஆட்டமிழந்திருந்தாலும், உர்வில் பட்டேலினதும், டெவால்ட் ப்ரெவிஸினதும் புயல்வேகத்தில் முறையே எடுத்த 31 ஓட்டங்களுடனும், 52 ஓட்டங்களுடனும், பின்னர் நிதானமாக விளையாடி 45 ஓட்டங்கள் எடுத்த ஷிவம் டுபேயின் ஆட்டத்தாலும் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: @நந்தன் எட்டுப் புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் அரசாமல் நிற்கின்றார்.
  2. நாளைக்கு என் தலைமையில் இந்த மண்ணில் பல போராட்டங்கள் நடைபெறும் எதிரிகளை புற முதுகோடு வைத்து எங்கள் கொள்கைகளை ( இருந்தால்த்தானே ) 😅முன்னிறுத்தி.... மூச்சு வாங்குது.... இருந்தாலும் ....😂 சென்னை இந்த முறை கோப்பையைத் தூக்காவிட்டால் நான் எனது பதவியத் துறந்து விடுவேன்......🤣 இப்படிக்கு உங்கள் தம்பி இயங்காக் குமாரன் 😜
  3. இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?
  4. கஸ்டம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அந்த நாட்களில் புலம்பெயர்வு என்பது போரின் பின்னணியில்தான் இருந்தது. இன்று போல இலவச தொலைத்தொடர்பு வசதிகள், சமூக ஊடகங்கள் எதுவும் இல்லை. ஊரில் ஏதாவது நிகழ்ந்தால், வேலை முடிந்தவுடன் பதற்றத்தோடன் ஓடி வந்து தொலைபேசியில் ஊருக்குப் பேசினாலே, அந்த மாத சம்பளத்தில் பாதி போய்விடும். அவசரத் தேவை என்று அவர்கள் கேட்டு பணம் அனுப்பினால், “எங்கடை வீட்டுக்கு அவசரத் தேவை ஒன்றும் கிடையாதுதானே” என்ற முணுமுணுப்பு இங்கே வந்துவிடும். முதல் புலம் பெயர்ந்தவர்கள், எப்போதும் நாட்டில் உறவுகளுடன் ஒட்டியே இருந்தார்கள். ஊரில் இருந்த உறவுகளின் வாழ்வாதாரத்தை இவர்களே பார்த்துக் கொண்டார்கள். இங்கே பிள்ளைகள், குடும்பம், அங்கே உறவுகள் எல்லாவற்றுக்குமாக முழு நேரம், பகுதி நேரம் என வேலைகள் செய்தார்கள். ஓய்வில்லை, பொழுது போக்குகள், விளையாட்டுக்கள் எதுவுமேயில்லை. வாழும் நாட்டவர்களோடு பழக முடியவில்லை. வாழும் நாட்டின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிப் போக முடியவில்லை. தன் வரம்புக்கு மீறிய சுமைகள். அதைச் சுமந்து நடந்த கால்கள், இன்று தள்ளாட வைக்கிறது. அநேகருக்கு முழங்கால் முக்கிய பிரச்சினையாகிப் போனது. இலங்கையரின் பாரம்பரிய நீரழிவு நோயும் சேர்ந்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பும், மன அழுத்தமும் சேர்ந்து இன்று அவர்களுடைய உடல்நலத்தை பாதித்திருக்கிறது. மூட்டுவலி, நீரழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை (முதல் புலம் பெயர்ந்தவர்கள்) பலருக்கு இன்று சாதாரண நிலையாகவே போய்விட்டன. மகனோ? மகளோ? ‘இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என இவர்களால் ஒதுங்கிப் போக முடியவில்லை. ஏனென்றால் இன்னமும் இவர்கள் தங்களது வடிவத்தை விட்டுக் கொடுக்காமல் பாரம்பரியம், பண்பாடு பேணுகிறார்கள். அதனால், முகநூலில் அவர் குறிப்பிட்டது போல் பிள்ளைகளும் தங்களது தேவைகளுக்கு இவர்களை இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது. நீங்கள் குறிப்ப்பிட்ட பணப் பிரச்சினை எல்லா இடத்திலும் இருக்கிறது. யேர்மனியில் ஓய்வூதியம் பெற வேண்டுமாயின் 67 வயதுவரை உழைக்க வேண்டும் 45 வருடங்கள் வேலை செய்திருந்தால் மட்டுமே வெட்டுக்கள் கொத்துக்கள் இல்லாமல் முழுமையான பென்சன் கிடைக்கும். வாழ்வாதாரத்துக்கு வரும் பென்சன் காணாது என்று சமூகநல உதவி கேட்டால் சொத்துக்களை காட்டு என்பார்கள். கடந்த பத்து வருடங்களில் சொத்துக்கள் விற்கப்படனவா? அல்லது மாற்றப்பட்டனவா? என்பதைச் சொல்லவும் வேண்டும். 80களில் வந்தவர்களில் ஓரளவு வயதில் முதிர்ச்சியாக இருந்தவர்களால் நல்ல பென்சன் எடுக்க வாய்ப்பில்லை. நான் யேர்மனிக்கு வந்த போது யாருமே எனக்கு முன்னர் அறிந்தவர்களாக இருக்கவில்லை. வழிகாட்ட யாரும் இருக்கவில்லை. பின்னாட்களில் வந்தவர்களுக்கு அந்த நிலை இல்லை. சொல்லித் தரவும் உதவிகள் செய்யவும் யாராவது இருக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையை மிக அடிமட்டத்தில் இருந்தே கட்ட எழுப்ப வேண்டி இருந்தது. இந்த நிலை அடுத்த சந்ததிக்கு இல்லை. அவர்களுக்கு ஏதும் தேவையென்றால் உடனே கண்ணுக்குத் தெரிபவர்கள் பெற்றோர்கள்தான். ஆக தொல்லைகளும், சுமைகளும் தொடரத்தான் செய்கின்றன. கோசன் சார் மொழி தெரியாது எழுந்து நின்று முழித்த கதையொன்றை போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறேன். அப்பொழுதெல்லாம் அகதியாகப் போன தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை சுவிஸ் நாட்டில் இருந்தது. யேர்மனியில் இருந்த தமிழர்களில் சிலர் அங்கு போவதற்கு களவாக ரயிலில் பயணிப்பார்கள். இரவு இரயிலில் பயணிகளின் சீட்டுக்கு அடியில் படுத்துக் கொண்டால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஒரு தடவை நம்மவர் ஒருவர் சீட்டுக்கு அடியிலே படுத்திருந்தார். அவர் படுத்திருந்த பெட்டிக்குள் வந்த ரிக்கெற் பரிசோதகர், “மோர்கன்” எனச் சொல்லிக் கொண்டு அங்கிருந்தவர்களின் ரிக்கெற்றை பரிசோதித்துக் கொண்டு வந்தார். திடேரென பயணிகளின் கால்களை விளக்கிக் கொண்டு நம்மவர் வெளியே வந்து எழுந்து நின்றார். பயணிகளும், பரிசோதகரும் திகைத்து நின்றிருந்தார்கள். (Guten) Morgen என்றால் காலை வணக்கம். ஆனால் கீழே படுத்திருந்த நம்மவருக்கு, எப்படி என் பெயர் ரிக்கெற் பரிசோதகருக்குத் தெரிந்தது? யாரோ போட்டுக் கொடுத்து விட்டார்கள். அது யாரா இருக்கும்? என்ற கேள்வி. அவரின் பெயர் மோகன்.
  5. GMT நேரப்படி நாளை வியாழன் 08 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. அப்பவும் நான் சொன்னனாலெல்லே....சீனா இருக்கும் மட்டும் பாக்கிஸ்தான் ஸ்ரீலங்கா ஈரான் எல்லாம் ஒரு குஞ்சு குருமனுக்கும் பயப்பிடாது எண்டு..🤣
  7. என்னடா விழுந்ததில ஒன்று முல்லாக்களின்ரையாம் 😅🤣 அச்சோ!!
  8. உவர் நாய் பூனைகளுக்கெண்டு விக்கிற நெத்தலி கருவாட்டை கத்தரிக்காயோட சேர்த்து சமைச்ச கதைய சொல்ல வாறார்....... உந்த கதைய வளர விடக்கூடாது.
  9. சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? தமிழ் தேசிய பேரவையில், கடந்த தேர்தலில் போட்டியிட சீற் கிடைக்காமல் போனதால் திடீரென்று "தேசிய நரம்பில் கரண்ட்" பாய்ந்தவர்கள்😎 பலர் கூட்டாக நின்றார்கள். தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கட்சியாக நின்றது. தேர்தலின் பின்னர் கொள்கை ஒத்து வந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று முன்னர் சொல்லப் பட்டது போல செய்யலாம். (தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஒற்றையாக நின்று டிபோசிற் இழக்கும் தருணங்களில், "தனியாக நிக்கிறாங்கள்- அதுவே வெற்றி" என்று வாழ்த்தும் ரசிகர்கள், அதே தியரியை தமிழரசுக்குப் பிரயோகிக்க மாட்டார்களாம்!)
  10. நீங்களே சொல்லுங்க சசி, ஆனையிறவு உப்புக்கு… “ரஜ லுணு” என்று பெயர் வைத்தால், கோவம்… வருமா, வராதா நியாயமான கோபம்.
  11. இப்போ பட்டியலில் உள்ள முதல் ஜந்து பேருக்கும் தான் இனி போட்டியே. கீழே உள்ள ஜவரும் அடுத்த தொடருக்கான முயற்சிகளை இப்போதே தொடங்கலாம். முதல் ஜவரில் யார் வெளியே போவார்கள். பஞ்சாப்பின் பாடுதான் கவலைக்கிடம். அடுத்த மும்பையுடனான போட்டிதான் தீர்மானிக்கும். இதில் தோற்பவர், வீட்ட போக வேண்டியதுதான். இப்படியான போட்டிகளில், மும்பையின் கையே ஓங்கியிருக்கும்.
  12. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  13. ஆர்வக் கோளாறில்… பக்கத்தில் போய் நின்று, குண்டு போட்டிருப்பார்களோ. 😂 🤣
  14. ஓம்… இந்த விடயத்தில் இவர்கள் உலக சாம்பியன்கள்🤣. சண்டை தொடங்கி ஐந்து நிமிடத்தில் போலி ஆதாரங்களால் இணையத்தை நிரப்பி விட்டார்கள்.
  15. 2025 - பாணத்தாருக்கு கோபம்/ ரோஷம் வந்துட்டுது போல.
  16. 2018-2023 காலத்திலும் பல சபைகளை தமிழரசுக் கட்சி பெரும்பான்மையின்றியே ஆட்சி செய்தது. பல கட்சிகள் எதிர்த்தரப்பில் இருந்தாலும் ஒற்றுமையாக எதிர்க்கவில்லை!
  17. தொங்குபொறியில் இருந்தவர் இரண்டாவது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டார்.இப்படி நடப்பது ஜேர்மனிய பாராளுமன்ற வரலாற்றில் இதுதான் முதல் தடவை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜேர்மனிய எல்லைகளின் பாதுகாப்பு பரிசோதனைகளை தீவிரமாக்கியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த அகதிகள் வருகையை நிறுத்துகின்றனர். ஜேர்மனியில் வசிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு தீவிரவாதிகளை ஒரு கைபார்க்கப்போகின்றார்கள்.குறிப்பாக முஸ்லீம் தீவிரவாதிகள் மீது என அழுத்தி சொல்லப்படுகின்றது. Afd எனும் கட்சி எதை காரணம் காட்டி உச்சத்திற்கு முன்னேறினார்களோ அதே காரணங்களை சட்டங்கள் மூலம் தீர்ப்பார்கள் போல் இருக்கின்றது. அத்துடன் Afd கட்சியை இனவாத, தீவிர கட்சியாக காரணம் காட்டி தடைசெய்யவும் போகின்றார்கள்.
  18. தமிழ்த் தேசிய மண்ணிலிருந்து சுமந்திரன் வெளியேற்றம். சுமந்திரனின் வீட்டு வட்டாரமான குடத்தனை வட்டாரத்தில் தமிழரசுக்கட்சி படு தோல்வியடைந்தது. ஆனால் தமிழ்த்தேசியம் வென்றது🔥 சசிகலா ரவிராஜ்
  19. Preity Zinta Universe · Preity Zinta 🌹" அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ........ ! 😂
  20. நிச்சயமாக தப்பே இல்லை வசி. இது இயல்பானது. இவ்வாறாக இடதுசாரி சோஷலிச கொள்கைகளில் உள்ள நல்ல அம்சங்களை எமது வாழ்வின் வளத்திற்காக ஆதரிக்குக்கும் நாம் எமது நாட்டிலும் சக மனிதர்களான எளிய மக்களிடமும் அதே பரிவுடன் நடந்து கொள்ளாமை குறித்த முரண்பாட்டையே சுட்டிக் காட்டினேன். மற்றப்படி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நன்றி.
  21. மேர்ஸ் இரெண்டாவது வாக்கெடுப்பில் வென்று சான்சிலராகிவிட்டார்.
  22. இந்தியர்கள் பெரும்பாலும் இங்கு வலதுசாரி கட்சியிலேயே போட்டியிடுவார்கள், வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் அதே கட்சிக்கே வாக்களிப்பார்கள், இங்கு இடது சாரி கட்சிகள் சிறுபான்மையின குடியேற்றவாசிகளுக்கு கரிசனை காட்டுவதால் அந்த நிலைப்பாடு எடுக்கிறார்கள் அதனாலேயே இடதுசாரி நிலைப்பாடெடுக்கிறோம். , வலது சாரி கட்சி புதிய குடியுரிமை வழங்குதலில் கடும்போக்கு காட்டுவது இந்த மக்களின் குடியேற்றத்தினை கட்டுப்படுத்துவது என நேரடி எதிர்நிலைப்பாடு கொண்ட கட்சி, மானில ஆட்சியில் இந்த குடியேற்ற வாசிகள் உள்ள பிரதேசத்திற்கான அபிவிருத்தியினை கடந்த காலத்தில் கட்டுப்படுத்தியிருந்த்து. இலங்கையிலும் இந்தியாவிலும் பத்தாம் பசலித்தனத்தினை கடைப்பிடித்தலில் உள்ள விடயம் எழியவர்களை சுரண்டலாம், ஆனால் இங்கு நாங்கள்தான் எழியவர்கள் என்பதால் இடது சாரிகளை ஆதரிக்கின்றோம், எப்படிப்பார்த்தாலும் வலதோ இடதோ நாங்கள் நன்றாக இருக்கவேண்டும் எனும் நலனே காரணம், இதனை எப்படி தப்பாக பார்க்கமுடியும்?
  23. தமிழ் கட்சிகள் விழித்துக்கொள்ளும் வழியை காட்டியுள்ள தேர்தல் முடிவுகள் May 7, 2025 11:44 am வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆறுமாதங்களே கடந்துள்ள சூழலில் இத்தகைய வீழ்ச்சி என்பது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும் தமிழ் மக்கள் திருப்பியடையவில்லை என்பதையே சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் மாநகர சபை பருத்தித்துறை பிரதேச சபை, நல்லூர் பிரதேசசபை, வலி. கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தெற்கு – மேற்கு பிரதேச சபை என்பவற்றில் இலங்கை தமிழ் அரசு கட்சி முன்னிலை பெற்யுள்ளதுடன், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதுடன் யாழ். மாநகர சபை உட்பட பல சபைகளில் தமிழ் அரசுக் கட்சிக்கு நெருக்கமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி யாழ்.மாவட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று வடமாகாணத்தின் ஐந்து தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தியே வெற்றிகொண்டிருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்ததில் மக்கள் ஆதரவை தேசிய மக்கள் சக்தி இழந்துள்ளதுடன், எந்தவொரு சபையையும் கைப்பற்ற முடியாது போயுள்ளது. வடமாகாணத்தில் ஏனைய தேர்தல் மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பலம் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், பல சபைகளில் தனித்து ஆட்சி அமைக்கும் ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெற்றுள்ளது. ஏனைய சபைகளில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சிகள் இடம்பெறலாம். அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்துக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதுடன், தமிழ் கட்சிகளின் ஒன்றுமை மற்றும் தமிழர்களின் எதிர்கால அரசியல் இலக்குகளை தீர்மானித்துக்கொள்ளும் பாடத்தையும் தேர்தல் முடிவுகள் எடுத்துரைத்துள்ளன. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டிருந்த பாரிய பிளவால் முதல் முறையாக பிரதான தேசிய கட்சியொன்று வடக்குகில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சந்தர்ப்பமொன்று உருவாகியிருந்தது. தேசிய கட்சிகளின் ஆதிக்கம் வடக்குகில் அதிகரிப்பது தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்தானது கடும் எச்சரிக்கைகளும் வெளியாகயிருந்தன. பாரம்பரிய தமிழ் கட்சிகள் மீது ஏற்பட்ட கடும் அதிருப்தியின் வெளிபாடாகதான் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இருந்ததன. அதனால் மீண்டும் தமிழ் கட்சிகளின் எழுச்சி மற்றும் ஒற்றுமையை தமிழ் மக்கள் விரும்புவதாக உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை தமிழ் கட்சிகளின் தலைமைகள் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். சு.நிஷாந்தன் https://oruvan.com/election-results-show-the-way-for-tamil-parties-to-awaken/
  24. அதேதான். அவனிட்ட எப்ப பந்து போகுதோ, ஏதோ நடத்துவான். அப்படி ஒரு விளையாட்டு. மயிரிலையில் தோற்றினம்.
  25. சிலர் இவ்வாறான கருத்தாடல்களுக்கு வருவதே தமது புலியெதிர்ப்பு வக்கிரத்தைக் கொட்டுவதற்காகத்தான். என்னதான் தமிழர்களுக்கான நலன்கள் குறித்தே தாம் பேசுவதாகக் கூறினும் அவர்களின் கருத்துக்களில் மிகத்தீவிரமான புலியெதிர்ப்பு உணர்வு இழையோடியிருப்பதை அவதானிக்கலாம். புலிகளை மட்டுமல்லாமல், தமிழர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்களையொத்த சிலரைத் தவிர) இன்றும் புலிகளை ஆதரிப்பதால் ஏற்படும் இயல்பான வெறுப்பும் இவர்களை இவ்வாறு எழுதத் தோன்றுகிறது. இவர்களின் சில வருடங்களுக்கு முன்னரான கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என்றால், "தமிழ்த்தேசியம் தவறானது, தமிழருக்கென்று தனிநாடு தேவையற்றது, தமிழினத்திற்கென்று தனியேயான அடையாளம் தேவையற்றது, தமிழ்ப் பிரிவினைவாதத்தினையும், இனவாதத்தையும் உருவாக்கியவர்கள் தமிழரசுக் கட்சியும் கூட்டணியும்தான், சிறிமாவும் பண்டாரநாயக்கவும் தமிழர்களுக்கு நண்மை புரிந்தவர்கள், தமிழர்கள் அடையாளம் துறந்து இலங்கையராக தம்மை அடையாளப்படுத்துவதே சரியானது" என்று இவர்கள் வாதித்ததைப் படித்திருப்பீர்கள். தமிழர்கள் நலன் தொடர்பாக இவர்களுக்கு ஒரு உரோமம் தன்னும் அக்கறை இல்லை. புலிகளையும், பெரும்பாலான தமிழர்களையும் அவமதிக்கக் களம் திறக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு வந்து கடை விரிக்கிறார்கள். இவர்களுடன் வாதிட்டு உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
  26. இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் எமக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவியவர்கள். இந்தியா ஒருபடி மேலே சென்று 2009 மே மாதாம் 18 இற்கு முன்னர் யுத்தம் முடிக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசிற்குக் கட்டளையிட்டு அதற்கான சகல உதவிகளையும் செய்திருந்தது. எந்தப் பாக்கிஸ்த்தான் இலங்கைக்குள் ஆளமாக வேரூன்றுவதைத் தான் விரும்பவில்லை என்று கூறி இலங்கைக்கான தனது இராணுவ உதவிகளை அன்று இந்தியா நியாயப்படுத்தியதோ, அதே பாக்கிஸ்த்தானுடன் இன்று சண்டையிடுகிறது. இந்தியா இப்போரில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஐந்து இல்லை ஐம்பது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும். வாழ்த்துக்கள் பாக்கிஸ்த்தான். Pakistan security sources say 5 Indian fighter jets, including French-made Rafales, shot down From CNN’s Sophia Saifi and Nic Robertson in Islamabad Five Indian Air Force jets and one drone were shot down by Pakistan during India’s attack, according to Pakistani security sources. In a statement released to reporters, the security sources said three French-made Rafale jets, one MiG-29 and one SU-30 fighter jets were downed “in self-defense.” An Indian Heron drone was also shot down, they added. A second senior Pakistani government official confirmed the same list of downed aircraft. The briefing did not say precisely where the jets were downed or how. Pakistani officials had earlier briefed that they shot down three aircraft and a drone. CNN cannot independently verify the claims and has reached out to the Indian government for a response. 8 people killed, dozens injured in 6 locations in Pakistan, military spokesperson says From CNN's Hira Humayun and Helen Regan Eight people were killed, including children, and 35 injured, Pakistan’s military spokesperson said after India launched military strikes on targets in Pakistan early Wednesday. India targeted six locations with 24 strikes in both Pakistan and Pakistan administered-Kashmir, spokesperson Lt. Gen. Ahmed Sharif Chaudhry said in a news conference early Wednesday. Previously, Pakistan said five locations were struck. India has said nine sites in total were targeted. Five people were killed, including a 3-year-old girl, in Ahmadpur East, in Pakistan’s Punjab Province, Chaudhry said. One man was also killed in Punjab’s Muridke, a city near Lahore, the capital of the province. In Pakistan administered-Kashmir, a 16-year-old girl and 18-year-old man were killed in the city of Kotli, he added. Mosques were targeted in the strikes, according to the military spokesperson. CNN cannot independently verify the claim.
  27. அதே பேச்சாளர், ஐந்து இந்திய விமானங்கள் சுட்டுத் தள்ளப்பட்டதாக கூறியுள்ளார், ஆனால் இதை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் இருந்தபோது பாகிஸ்தான் அவற்றை சுட்டுத் தள்ளியதாக அந்த பேச்சாளர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார். -theguardian.com இந்தியன் , பாகிஸ்தானுக்கு குங்கும பொட்டு (Sindoor)வைக்க போய் குண்டியில் அடி வாங்கி உள்ளார்கள் போல் உள்ளது.😅
  28. Pakistan official confirms at least two Indian jets shot down Shah Meer Baloch The director general of the media wing of Pakistan’s armed forces has confirmed to the Guardian that at least two jets of the Indian air force have been shot down. “I confirm that we have shot down at least two Indian Air Force jets,” said DG Lt General Ahmed Sharif Chaudhry. Separately a senior security official, requesting anonymity, said that the military shot down three Indian jets. “We have shot down one jet in Bathinda, Indian Punjab province bordering with Pakistan Punjab province, and two jets in Indian occupied Kashmir in Awantipora and Akhnoor. They were in their airspace after the attacks and we had fired missiles,” said the official. He added that “India had started the conflict with its attacks on civilians in Pakistan. We had to retaliate. We had to protect our sovereignty.” https://www.theguardian.com/world/live/2025/may/06/pakistan-india-attacks-kashmir-live-updates கிரிகெட் போட்டி பாக்கிறது போல பாத்துக்கொண்டிருக்கிறன்... அமோகமான மகிழ்வாக உள்ளது, மூண்டு விழுத்திப் போட்டாங்கள் எண்டு! 😍😆🤩 சிந்தூர் நடவடிக்கை தொடர்பான கவிதை குத்தாட்டம் போடடா கொண்டாடிப் பாரடா ஒரே கூத்து தாண்டா... நிக்காமல் போடு எங்கேயும் அடிதான் இனிமேலை இடிதான் டா வடக்கனின் வாயிலை வெடிதான்டா🤣🤣
  29. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாதிந்தாவில் ஒரு விமானமும், இந்திய ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் அக்னூரில் இரண்டு விமானங்களையும் நாங்கள் சுட்டுத் தள்ளியுள்ளோம். தாக்குதலுக்குப் பிறகு அவை அவர்களது வான்வெளியில் இருந்தன, அதனால் நாங்கள் ஏவுகணைகள் கொண்டு வெடிக்கச் செய்தோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார். -theguardian.com உங்கள் பிராத்தனை நிறைவேறும் போல் உள்ளது 🤪
  30. இதைப்பத்தியும் இங்கே ஒரு போட்டி வைக்கலாமே. என்ன ஒரு போட்டி இல்லையா. இரண்டு பேரும் சளைக்காம போராடினது பார்க்க நல்லாயிருந்துது. அவன் யமாலுக்காக பார்க்கா வென்டிருக்கனும்.
  31. இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.
  32. கவாஸ்கரும் என்னமோ எல்லாம் சொல்விக்கொண்டிருந்தார். முதல் ஒரு நேரம் சொல்லிச்சினமாம். பிறகு மாத்திச்சினமாம். பிறகு ஒரு பந்துப் பரிமாற்றம் என்றுச்சினமாம். ஏன் எல்லாம் மாறுது என்டு புறுபுறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கும் மும்பை தோக்குது என்றால், தாங்க மாட்டார். அவரும் இப்ப கண்டமேனிக்கு அலட்டிவிட்டுக் கொண்டும் திரியுறார். என்னமோ போங்கோ. உங்களோட சேர்ந்ததாலதான் ஜபில்லே பார்க்கிறன். அதுக்குள்ள இப்பிடி எல்லா தகுடுதித்தமும் என்றால்......
  33. நமக்குக் கிடைக்காட்டியும் பரவாயில்லை என்ற தூய நோக்குத்தான்.
  34. எனக்கும்.... ரண்டு பக்கமும் குத்து வாங்கோனும்... இந்தியன் கொஞ்சம் கூட வாங்கினால் நல்லம்
  35. இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி. விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள். ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம். பிகு இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣
  36. பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் இந்தியா ,இஸ்ரேல் அமெரிக்கா,ரஸ்யா கூட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்
  37. ஐ ஜாலி…. அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.
  38. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 56வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறியபோதும் வில் ஜாக்ஸின் அரைச் சதத்துடனும், சூர்யகுமார் யாதவின் 35 ஓட்டங்களுடனும் 10.4 ஓவர்களில் 97 ஓட்டங்களுடன் நல்ல நிலையில் இருந்தது. எனினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் சுப்மன் கில்லின் நிதானமான 43 ஓட்டங்களுடனுன், ஜொஸ் பட்லரின் 30 ஓட்டங்களுடனும், புயல்வேகத்தில் அடித்தாடிய ஷேர்ஃபேன் ரதஃபோட்டின் 28 ஓட்டங்களுடனும் வெற்றி இலக்கை நோக்கி விரைவில் முன்னேற மழைவந்து குழப்பியது. திரும்பவும் ஆட்டம் ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் சரிய போட்டி விறுவிறுப்பானது. இன்னுமோர் மழைத் தடைக்குப் பின்னர் இறுதி 19வது ஓவரில் 15 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் தீபக் சாகர் இறுக்கமாகப் பந்துபோடததால் கடைசிப் பந்தில் ரண் அவுட் சந்தர்ப்பத்தை நழுவவிட்டதால் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்து DLS முறையில் வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: குஜராத் டைட்டன்ஸ் அணி DLS முறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: மீளவும் @Ahasthiyan எல்லோரையும் தாங்கிப் பிடிக்க கீழே நகர்ந்துள்ளார்!
  39. உலகிலேயே சொந்த பந்தங்ளிடம் கையேந்தி வாழும் பழக்கம் உள்ளவர்கள் தென்னிந்திர்களும் எரித்திரிய எதியோப்பிய மக்களும் தான் . இதன் விளைவு - உடனடிப் பயன் கிடைகின்றது ஆனால் நீண்ட காலநோக்கில் சமூகத்துக்கான தீமை அதிகம். இது புத்தாக்கங்களை நீர்த்துப்போக செய்கிறது. தங்கி வாழ்வதை ஊக்கிவித்து சமுகம் தேங்கிப் போக வழி செய்கிறது. உண்மை
  40. இச் சிறுமி ராமநாதன் மகளீர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை அங்குள்ள கணித ஆசிரியரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார். அங்குள்ள கணித ஆசிரியர் (பெயர்: சங்கரன்) தன் ஆணுறுப்பை இச் சிறுமிக்கு காட்டியது தொடக்கம் மேலும் பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இச் சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோருக்கு கூற, அவர்கள் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். அந்த பெண் அதிபரோ இச் சிறுமிக்கு நிகழ்ந்த அநியாயத்திற்கு குரல் கொடுக்காமல் கணித ஆசிரியரை பாதுகாக்க முனைந்ததுடன், இச் சிறுமியையே குற்றவாளியாக்க முனைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு கல்வி கற்றால், பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சிய பெற்றோர், அப் பிள்ளையை கொட்டாஞ்சேனையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் இச் சிறுமிக்கு முன்னைய பாடசாலையில் நிகழ்ந்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் தொடர்பான தகவல் பரவியதால் மனரீதியாக கடும் அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்திருக்கின்றார். இதற்கிடையில் கொட்டாஞ்சேனையில் உள்ள ராஜேஸ்வரி தனியார் ரியூசன் சென்ரரிற்கும் இம் மாணவி ரியூசன் கிளாஸ்களுக்காக சென்று கொண்டு இருந்திருக்கின்றார். இவ் தனியார் ரியூசன் சென்ரரின் அதிபர் / நடாத்துபவரான நாராயணபிள்ளை சிவானந்த ராஜா இவ் மாணவியை கேலி பண்ணியதுடன், இனி இங்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார். இதனால் மனம் உடைந்த இச் சிறுமி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமியை திட்டி வெளியே அனுப்பிய நாராயணபிள்ளை சிவானந்த ராஜா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக தேர்தலில் நின்று தோற்றவர். இன்றும் இவர் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை பிரயோகின்றார் என அறிய முடிகின்றது. தகவல்களை தொகுத்தது: நிழலி
  41. போகவில்லை.நோர்வேயின் ந(டி)டுநிலைமையை நம்பி தான் புலிகள் பேச்சுவாத்தைக்கு போனார்கள்.
  42. நோர்வேயின் பங்களிப்புடன் செய்யப்பட்ட சுனாமிக் கட்டடைமப்பை ஜேவிபியுடன் சேர்ந்து சந்திரிகா முடக்கினார். சந்திரிக்காவின் தீர்வுப்பொதியை ரணில் பாராளுமன்றத்தில் கொளுத்தினார். புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இடைக்காலவரைபை விவாதத்துக்கு எடுக்க முன்னரே ரணில்அரசாங்கததைக்கலைத்து பேச்சுவார்ததையைக் குழப்பினார். இதேபோல் பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் எவற்றையுமே மாறிமாறி சிங்களத்தலைவர்கள் குழப்பினர். இந்த சிங்கள அரசாங்கத்தோடு 3 ஆம்தரப்பு அழுத்தம் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு குறைந்த பட்ச தீர்வையும் பெறமுடியாது.போர்க்குற்ற விசாரணை இன அழிப்புக்கு எதிரான 3ஆம்தரப்பின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிகள் அதை விட 3 ஆம்தரப்புக்கு அனகூலமான பூகோள அரசியல்~சூழ்நிலைகள் இந்த அழுத்தைக் கொடுப்பதற்கு உதவும். அதற்கு முதல் தமிழர்கள் எல்லோரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த குரலில் பேசவேண்டும்.
  43. நல்ல அவதானிப்பு வசி. இந்த trap எப்பவுமே நடக்கிறதுதானே. நீங்களும் சரியாகப் பார்த்திருக்கிறீங்கள். அவர்களின் ஆட்டத்தை நான் நேரலையில் பார்க்கவில்லை. அவரின் முன்னங்கால் நகர்த்தல் எல்லாம் பார்க்க அருமையா இருக்கு. Effortless. எந்தப் பந்தையும் அநாயாசமாக எதிர்கொள்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் பார்க்கத்தானே போறம்.
  44. பிரித்வி சா - தலைமேல் வைத்துக் கொண்டாடப் பட்டார். அதுவே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அவர் தலையில் கனம் ஏறி, சொல்பேச்சுக் கேக்காமல், தன்னைத்தானே அழித்துக் கொண்டார். அவர் விசம் என்றும் மற்ற வீரர்களை மதிப்பதில்லை என்றும் கருதி, ஒட்டு மொத்தமாக அணிகளால் ஒதுக்கப்பட்டார். வைபவ் அவ்வாறான பாதையில் போகமாட்டார் என்று நினைக்கிறேன்.
  45. பாடசாலை நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை . ......... இப்போதெல்லாம் மாணவர்களுக்கு அடிக்க முடியாது , அன்று நாங்கள் அடி வாங்காத நாளை எண்ணிவிடலாம் . ........ ! 😁 பகிர்வுக்கு நன்றி கவிஞரே ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.