Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    3115
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33794
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33292
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88790
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/16/25 in Posts

  1. கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.
  2. இவர்களைத் தாண்டி முன்னால் போக முடியாது போல இருக்குதே......... வீதியை மறித்துக்கொண்டு இரண்டு வாகனங்கள் போவது போல போய்க் கொண்டிருக்கின்றார்கள்............🤣.
  3. கொட நாடு கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியே எடப்பாடி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த, (ஆனால்) ரகசியம். அவ்வளவு நல்லவர் அவர். 'குத்தவைச்சு உட்கார்ந்துட்டு இருந்தவளையா நான் கொண்டு போய் வயக்காட்டில் வைத்து கற்பழித்தேன்' என்று வீறாப்பு பேசும் கண்ணியமற்ற ஒரு தலைவரைக் கொண்ட கட்சி இப்படியான தீர்ப்பு தொடர்பாக எப்படி கருத்து வைக்கும்?
  4. வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது. நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, Ealing North MP James Murray, ஓல்ட் பெக்ஸ்லி மற்றும் சிட்கப் தொகுதி எம்.பி. லூயி பிரென்ச் மற்றும் ருய்ஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் தொகுதி எம்.பி. டேவிட் சிம்மன்ட்ஸ், ஹேரோ வெஸ்ட் தொகுதி எம்.பி. காரத் தோமஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். தமிழரின் அரசியல் உரிமைகள் மேலும் நிகழ்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட இயக்குநர் பிரான்சிஸ் ஹேரிசன் , இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கத்தின் இயக்குநர் இவோன் ஸ்கோஃபீல்ட், Freedom from Torture அமைப்பின் Head of Accountability Roslyn Renni, Tamils for Labour அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் சமூகநீதியும், மக்களவுரிமைகளும் தொடர்பான உரைகளை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் International Tamil Youth Organisation (TYO International) ஒருங்கிணைப்பாளராக செயல்படும் மதுஷா குமரேசன், PEARL அமைப்பின் பேரவையின் வழக்குரைஞராக செயல்படும் சிவானி ரவீந்திரன் ,பிரான்சிலிருந்து ரூத் சாருகா தேவகுமார் ஆகிய இளம் தமிழ் செயல்பாட்டாளர்களும் பங்கேற்று உரையாற்றியிருந்தனர். நிகழ்வின் முக்கியக் கருத்தாக, நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் (TGTE) துணைப் பிரதமர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் மற்றும் TGTE உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கல் படுகொலையின் நீதி மற்றும் தமிழரின் அரசியல் உரிமைகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர். https://tamilwin.com/
  5. ஒண்ணுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டு, செய்யிர வேலை என்ன: நந்தனையும் புலவரையும் கலைக்கிறது.
  6. எதற்காக புவியீர்ப்பு விசைக்கெதிராக முயற்சிக்கிறீர்கள், இலகுவாக கீழே போகலாம்தானே?😂 அல்லது இந்த திரிச்ங்கு சொர்க்கத்தினை அனுபவிக்கலாம். டெல்லியே அரையிறுதிக்கு போகுமா என தெரியவில்லை நீங்கள் கொல்கொத்தாவினை பற்றி யோசிக்கிறீர்கள்.🤣
  7. ஆங்கேலேயர்கள் வெளியேறிய பின், காஷ்மீரின் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுடனும், மறு பகுதி பாகிஸ்தானிடனும் இணைக்கப்பட்டது சரியல்ல என்பதே என் பார்வையாக இருக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் இப்படியான ஒரு தீர்வு வெவ்வேறு காரணங்களுக்காக உலகின் வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து தனித்தனியேயான இரு நாடுகளாக ஆக்கிவிடுதல். ஆனால் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வேறு இரு நாடுகளுடன் அவை இணைக்கப்பட்டன. அந்த நாட்டையும், மக்களையும் சுதந்திரமான ஒரு நாடாகவே விட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆகவும், ஒரு பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மை ஆகவும், இன்னொரு சிறிய பகுதியில் பௌத்த மக்கள் பெரும்பான்மை ஆகவும் இருப்பது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் ஒரு நாடாகவும், அதற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களாகவும் தங்கள் நிர்வாகத்தை உருவாக்க ஐநாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் உதவியிருக்கலாம். இன்றைய பாஜக அரசின் பிரச்சாரங்களும், செய்கைகளும் முழு இந்தியாவையுமே ஒரு ஒற்றைப்படைத் தன்மையை நோக்கியே செலுத்துகின்றது. இந்த இந்திய அரசும், அதன் பின் நிற்பவர்களும் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை காவி அடையாளத்தை போர்த்தவே முனைகின்றார்கள். மிகச் சாதரணமாக திருவள்ளுவருக்கே காவி உடையை அணிவித்து விடுகின்றார்கள் இவர்கள். உலகத் திருமறை என்று ஐயன் எழுதியது பலவும் அப்படியே வீணாகிப் போகும் இவர்களின் செயலால். வரலாற்றில் அது ஒரு இந்து அரசாக இருந்தது, பின்னர் முகலாயர்களே அதை ஒரு பெரும்பான்மை இஸ்லாமிய பிரதேசமாக மாற்றினார்கள், இப்போதும் மீண்டும் அதை நாங்கள் வென்றெடுப்போம் என்ற முனைப்பு தவறு என்றும் சொல்கின்றேன். அவர்களின் அரசியலை அந்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அங்கு நடைபெறும் இந்திய ராணுவ அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. இவர்களின் அடக்குமுறைகளுக்கு நாங்களும் ஒரு வாழும் சாட்சிகள். எவ்வளவு தான் தொழில்நுட்பமும், தொடர்பாடலும் முன்னேறினாலும், இவர்களால் என் ஊரில் நடத்தப்பட்டவையே என் ஊருக்கு வெளியே தெரியாத நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. அங்கிருந்தே இவர்கள் காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை நான் ஊகித்துக் கொள்கின்றேன். 2019ம் ஆண்டில் அந்த மக்கள் மீது முழுத் தடை ஒன்றை இந்திய அரசு அமுல்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. அது அப்பட்டமான உரிமைகள் மீறலும், அடக்கி ஒடுக்கப்படுவதும் தானே. இலங்கை அரசு எங்களுக்கு செய்தது போன்றதே இதுவும். வெறும் கண்டனங்களை மட்டும் உலகம் எழுப்பும், பாதிக்கப்படும் மக்களுக்கு கைகொடுக்க எவரும் வருவதில்லை. ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும், இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.
  8. இல்லை. கடைகளில் கிடைக்கும் புளோரைட் பற்பசையின் புளோரைட்டினால் பல்லுக்கும், உடலுக்கும் ஆபத்து இல்லை. இது ஒரு போலி விஞ்ஞானத் தகவல், அண்மைக் காலமாக விஞ்ஞானத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டவர்களால் பரப்படும் ஒரு விடயம். Fact: புளோரைட் என்ற கனியுப்பு பல்லின் மேற்படையான எனாமலுக்கு அவசியமான ஒன்று. இந்த மேற்படை பலவீனமானால், பற்களிடையே தேங்கும் உணவுத் துணிக்கைகளில் பக்ரீரியா வளர்ந்து அமிலம் சுரக்க, அது இன்னும் பல்லைப் பலவீனமாக்கும் (பல்லுக் கூசுதல் இதன் அறிகுறி). எனவே, குடிக்கும் நீரில் ஒரு குறிப்பிட்ட அளவு புளோரைட் இருக்கும் படி மேற்கு நாடுகளில் நகரங்கள் பார்த்துக் கொள்கின்றன. சில நேரங்களில், நீரில் புளோரைட் சேர்ப்பார்கள். மறு பக்கம், புளோரைட் பற்பசையில் இருப்பது மிகக் குறைந்த வீதமான புளோரைட் அயன். உதாரணமாக, மிகக் கூடிய புளோரைட் % கொண்ட ஒரு பற்பசையில் கூட, ஒரு தடவை பல் விளக்கும் பசையில் 2 மில்லிகிராம் புளோரைட் தான் இருக்கிறது. இந்த அளவு பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு தரும் என ஆதாரங்கள் இல்லை. இந்தப் போலி விஞ்ஞான புளோரைட் வதந்திகளுக்கு பல தோற்றுவாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று சில ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் புளோரைட் செறிந்த குடி நீர் பற்றிய தகவல்கள். உதாரணமாக சாம்பியா (Zambia) வில், சில பகுதிகளில் புளோரைட் செறிவு குடிநீரில் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால், பல்லும், எலும்பும் புளோரைட் நச்சினால் பாதிக்கப் படுகின்றன அந்த மக்களில். இத்தகைய புளோரைட் நச்சு நிலைமை மேற்கு நாடுகளில் ஏற்பட சாத்தியமில்லை.
  9. வணக்கம் தமிழ்சிறி, அவரது கணக்கில் மாற்றம் எதுவும் இல்லை, எல்லாம் சரியாக உள்ளது. அவர் தனது கடவுச் சொல்லை மறந்திருந்தால் கீழுள்ள இணைப்பில் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். https://yarl.com/forum3/lostpassword/ அல்லது தனது ஈமெயிலினை மாற்றியிருந்தால் புதிய ஈமெயிலினை அவரிடம் கேட்டுத் தனிமடலில் எனக்கு அனுப்பி வையுங்கள். நன்றி.
  10. எதைச் சுத்திகரிக்கிறார்கள் என்பதைத் பொறுத்து இருக்கிறது. இந்த நிலையத்தில் என்ன முறையைப் பாவிக்கிறார்கள் (filtration or osmosis) என்று தெரிந்தால் தெளிவாகச் சொல்லலாம். அனேகமாக இலங்கையில் நீரைச் சுத்திகரிக்கும் போது வடிகட்டிகள் மூலம் பக்ரீரியாக்களை (Coliform) அகற்றுவர், இது நல்லது. பக்ரீரியாக்களும், அமீபாக்களும் குடி நீரில் இருந்தால் நோய்கள் வரும். அதை விட சில கனிமங்கள் (minerals) மிகையாக இருந்தால் உயர் தொழில் நுட்பங்கள் மூலம் அகற்றலாம், இலங்கையில் செய்கிறார்களா என்பது தெரியாது. உதாரணமாக, புளோரைட் (fluoride) மிகையாக இருந்தால் பல் ஆரோக்கியம் கெடும். அகற்றுவது அவசியமாகும். சுத்திகரிப்பில், தீங்கு தரும் என்று நிரூபணமான நச்சுக்களும் அகற்றப் படலாம். பார உலோகங்களான ஈயம், குரோமியம் என்பனவும் அகற்றப் பட வேண்டும். இலங்கையில் மிக முக்கியமான நீர் வழி நச்சாக நைட்ரஜன் உரக்கழிவு இருக்கிறது. எனவே, நைட்ரேற்றுகளை அகற்றுவதும் நீரைச் சுத்திகரிப்பதாகும். எனவே இதுவும் குடி நீரை ஆரோகியமாக்கும்.
  11. காஷ்மீர் காஷ்மீரிகளுகே சொந்தம். இந்துப். பயங்கரவாதம் காஷ்மீரை வல்வளைப்புச் செய்திருக்கின்றது. இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் நடந்தும் பாலியல் வன்முறைகளும் மனிதவுரிமை மீறல்களும் எண்ணிலடங்கா. உடனடியாக பன்னாட்டுச் சமூகம் தலையிட்டு காஷ்மீரை காஷ்மீரிகளிடம் கையளிக்கவேண்டும். காஷ்மீரிகள் பாலஸ்தீனத்தில் அத்துமீறிக் குடியேறிவிட்டு அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் அரேபிய வம்சாவளிப் பயங்கரவாதிகள் போன்றவர்கள் அல்லர். மாறாக தமது மரபுவழித் தாயகத்தினை வல்வளைப்புச் செய்துநிற்கும் இந்துஸ்தான் பயங்கரவாததிடம் இருந்து விதலைகோரி நிற்கும் அந்த நிலத்துக்கே உரித்தான மக்கள். இதே நிலைமைதான் ஈழத்திலும் தமிழர் தாயகத்தினை வல்வளைப்புச் செய்திநிற்கும் பௌத்த சிங்களப் பயங்கரவாதத்திடம் இருந்து விடுதலைபெறுவதற்காகவே எமது விதலைப்போராட்டம் தொடங்கப்பட்டது. எனவே எமது முழு ஆதரவும் காஷ்மீரிகளுக்கே தரப்படவேண்டும். கொடிய கீழ்த்தரமான மனிதநேயமற்ற இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் இருந்து வெளியேறவேண்டும்!
  12. அண்ணை, தமிழரசுக் கட்சியின் ப.பொ.செ அவர்கள் தனக்கு நம்பிக்கையானவர்களுக்கு தவிசாளர் பதவி அளிக்க முனைவது உண்மை. வலி.மேற்கில் முன்னாள் பா.உ உதயன் உரிமையாளரின் வலது கை இப்போ ப.பொ.செ இன் விசுவாசி, அவருக்கு தான் தவிசாளர் பதவி வரும் என அவரின் நட்பு வட்டம் அலப்பறை கிளப்பிறாங்கள். உதயன் உரிமையாளர் திட்டிக்கொண்டு திரிகிறாராம்.
  13. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... கழுதையாரின் முழிவியலம் வெகு சிறப்பானது . ........ இனி விளையாட்டுகள் நன்றாக நடக்கும் . ........ எல்லோருக்கும் நல்லதே நடக்கும் . ....... ! 😂
  14. Beltஆல அடிக்காதீங்க அண்ணா.. ட்ரெஸ்ச கழட்டிறேன் அண்ணா"னு.. ஒரு பொண்ணு அலறின வீடியோ முகம் மறைக்கப்பட்டு வெளி வந்தது. மனசை நொறுங்க வைத்த அந்தக் கொடூரத்தை செய்த ஓநாய்கள்... சாகும்வரை சமூகத்திற்குள் வரக் கூடாது... ஜெயிலுக்குள்ளே சாகட்டும்... Ranjith Priyan
  15. இதைத்தானே பிரதேச, சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் என்று நான் மேலே எழுதியிருந்தேன். இது எப்படி நியாயம் ஆகும்.............. காத்தான்குடியையும், அக்குறணையையும் மட்டும் பிரித்து ஒரு தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தால், அந்த இரு ஊர் மக்களும் அதை வரவேற்பார்கள் தான், ஆனால் அது நியாயமா................ 'யதார்த்தம்' என்ற சொல் எப்போதும் சில மலையாளப் படங்களை நினைவூட்டுகின்றது. அடூரின், அரவிந்தனின் மற்றும் இவர் போன்றவர்களின் படங்கள். சில வேளைகளில் அந்தப் படங்களை பார்ப்பது போலவே இருக்கின்றது உங்களின் எழுத்துகள்................. நமக்குத்தான் ஏதோ புரியவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது.................🤣.
  16. ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் க‌ணிப்ப‌து ஈசி குரு ஜ‌பிஎல் போட்டியில் அதிஷ்ட‌ம் கை கொடுக்க‌னும்.................. பெரிய‌ பெரிய‌ வீர‌ர்க‌ளை தெரியும் ஒவ்வொரு ஜ‌பிஎல்லும் ப‌ல‌ இந்திய‌ன் புது முக‌ங்க‌ள் விளையாடும் போது அவ‌ர்க‌ளின் திற‌மைக‌ளை அவ‌ர்க‌ள் விளையாடும் போது தான் தெரியுது....................14ய‌து சின்ன‌ப் பெடிய‌னின் அடிய‌ பார்த்து இருப்பிங்க‌ள்........................அதுவும் கொக் ப‌ந்தில் விளையாட‌ துணிவும் வேனும்....................2003ம் ஆண்டு முத‌ல் முறை நானும் என‌து ந‌ண்ப‌னும் டென்மார்க்கில் இருக்கும் சின்ன‌ கிரிக்கேட் கில‌ப்புக்கு விளையாடினோம் , கொக் ப‌ந்தில் கிரிக்கேட் விளையாடுவ‌து மிக‌ சிர‌ம‌ம் அண்ணா......................................
  17. இன்றைய கிரிக்கெட் உலக நிலவரங்கள் மிகவும் நன்கு தெரிந்தவர்களில் சிலர் (நீங்கள், கந்தப்பு, வசீ, செம்பாட்டான்......... போன்றோர்) பட்டைக் கிடங்குக்குள் விழுந்து கிடப்பது தான் களத்திற்கு நல்லது. அதுதான் மற்றவர்களுக்கு ஒரு மோட்டிவேஷனைக் கொடுக்கும்.................😜.
  18. 14 விளையாட்டில் நான் 12மைச் சென்னை வெல்லும் என்று தெரிவு செய்த‌ நான்.....................ஆப்புக்கு மேல‌ ஆப்பு என‌க்கு ஹா ஹா.........................
  19. இந்த‌ ஜோடி சூப்ப‌ர் ஜோடி குரு இவ‌ர்க‌ள் தெரிவு செய்த‌ அணிக‌ள் தான் கூட‌ வென்று இருக்கு....................நான் கூட்டி க‌ழிச்சு பார்த்தால் 68புள்ளிய‌ தாண்ட‌ மாட்டேன் அத‌ற்க்குள் தான் என‌ நினைக்கிறேன் போட்டி தொட‌ங்கி 10நாள் வ‌ரை தொட‌ர்ந்து 4புள்ளியோட‌ நிக்க‌ க‌ந்த‌ப்பு அண்ண‌ பைய‌னுக்கு ச‌னி என்று , ஒரு க‌ட்ட‌த்தில் நான் அவ‌ருக்கு மேல‌ நின்றேன்................................. டெல்லி மூன்று மைச்சில் ஒன்றை வென்றாலும் அவ‌ர்க‌ள் 4வ‌து இட‌த்தை பிடிப்பின‌ம்............................
  20. வளசரவாக்கம் பகுதிக்கு முன்னர் போயிருக்கின்றேன், பையன் சார். நீங்கள் சொல்வதைப் போலவே அதை ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றே சொல்கின்றனர். அகரமுதல்வனின் ஒரு சிறுகதையில் கூட இந்த இடத்தை பற்றி நல்ல ஒரு விபரிப்பு இருந்தது ஞாபகம். தமிழ்நாட்டிலும், முழு இந்தியாவிலுமே உணவுகளினதும், உணவும் பொருட்களினதும் விலைகள் மிகக்குறைவு. இவ்வளவு மக்களுக்கும் அவர்கள் எப்படி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள் என்பதே ஒரு வியப்பு தான். இந்தியாவும், சைனாவும் சில வகைகளில் பெரிய அதிசயங்கள். திருச்சியிலும் ஓரிரு பகுதிகள் இவ்வாறானதே. ஶ்ரீனிவாச நகர், அம்மையப்ப நகர் என்பன எம் மக்களால் நிரம்பி வழிகின்றன. குட்டி யாழ்ப்பாணம் என்பதை விட அவற்றை குட்டி வல்வெட்டித்துறை என்று சொல்லலாம். திருச்சியிலிருந்து சென்னை வரும் வழியில் என்று நினைக்கின்றேன். பிரதான வீதியின் அருகே நடிகர் ராஜேஷின் ஒரு உணவகம் இருந்தது. மிகவும் எளிமையான ஒரு அமைப்பாக, ஆனால் அருமையான சாப்பாடு அங்கே கிடைத்தது. விலையும் கட்டுப்பாடாகவே இருந்தது. அங்கே ஏழு நட்சத்திர விடுதிகள், ஐந்து நட்சத்திர விடுதிகள் என்றும் இருக்கின்றன. நான் போனதில்லை. அங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியே கட்டணம் அறவிடுவார்கள் போல. ஐந்து நட்சத்திரம் என்றால் ஐந்து மடங்கு விலை...............🤣. தட்டுக்கடை, ஈரோடு மெஸ், முணியாண்டி, கண்ணப்பர்,...................இப்படி ஆயிரம் இடங்கள் இருக்கின்றன அங்கே.........................👍
  21. மீள் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலேயே. இடைவெளி விட்டதால, இப்போட்டியில வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை. RCBக்கு கட்டாயம் வெல்ல வேண்டும் என்று இல்லை. வென்றால் அடுத்த போட்டிகளை இலகுவாக அணுகலாம். 13 பேர் RCBக்கு மணி கட்டியிருக்கிறம். கவலை என்ன என்றால், அந்த இருவரும் மீண்டும் என்னோட. பார்ப்போம் இந்த இடைவேளை அதையும் மாற்றுகிறதா என்று.
  22. அண்ண‌ யார் எதையும் சொன்னால் ந‌ம்பும் ப‌ழ‌க்க‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ளிட‌ம் இல்லை , எம் முன்னேர்க‌ள் சில‌ர் அந்த‌க் கால‌த்தில் இந்தியா அவுட்டு விட்ட‌ பொய்க‌ளை உண்மையேன‌ ந‌ம்பி இருக்க‌லாம்..........................பெரும்பாலான‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் அறிவில் சிற‌ந்த‌வ‌ர்க‌ள்.......................நாங்க‌ள் மின்சார‌ம் இல்லாத‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள்.......................க‌டும் போர்.............விமான‌ தாகுத‌ல்க‌ள் இவைக‌ளுக்கு ம‌த்தியில் தான் வ‌ள‌ந்தோம்....................நாங்க‌ள் சினிமா கூத்தாடிக‌ளை த‌லையில் தூக்கி வைச்சு கொண்டாடின‌து கிடையாது.................எங்க‌ட‌ போராட்ட‌த்தை நாங்க‌ளா நேசித்து வ‌ர‌லாறுக‌ளை ப‌டித்து தெரிந்து கொண்டோம் ப‌ல‌ ஆயிர‌ம் உயிர் தியாக‌ங்க‌ளை செய்து எம் போராட்ட‌ம் மெது மெதுவாய் வ‌ள‌ந்து நின்ற‌ போது தான் நீங்க‌ள் ஆத‌ரிக்கும் ஹிந்தியா எம் போராட்ட‌த்தையும் எம் உற‌வுக‌ளையும் சிறு வ‌ட்ட்ட‌த்துக்கை வைச்சு அழித்தவை......................சும்மா ஜெய் ஹிந் என்று வீர‌ வ‌ச‌ன‌ம் இணைய‌த்தில் எழுதும் கூ முட்டைக‌ள் நாங்க‌ள் கிடையாது............................இந்திய‌ர்க‌ளின் அறிவை போன‌ கிழ‌மை ந‌ட‌ந்த‌ பாக்கிஸ்தான் போரில் பார்த்து விட்டோம்......................உல‌கில் அதிக‌ம் ப‌டிக்காத‌ புரித‌ல் இல்லா கூ முட்டைக‌ள் அதிக‌ம் வாழும் நாடு இந்தியா...........................சினிமா மோக‌த்துக்குள் மூழ்கி இருந்தால் உல‌க‌ அறிவு உண்மை த‌ன்மை பொய்க‌ள் இவை அணைத்தும் எங்கை தெரிய‌ப் போகுது😁😛...........................
  23. இந்திய - பாகிஸ்தான் போர் அபாயத்தால் தடைப்பட்ட ஐபில் போட்டிகள் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கின்றன! GMT நேரப்படி நாளை சனி 17 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 13 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் 10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி பிரபா செம்பாட்டான் ரசோதரன் நுணாவிலான் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் அகஸ்தியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் கந்தப்பு வாதவூரான் ஏராளன் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  24. என்னங்க நீங்கள் பிரீத்தி படத்தையும் போடுறியல். மாறன் மகள் படத்தையும் போடுறியல். அதோட கழுதையையும் போடுறியல். நீங்கள் ஆரு. 😁
  25. அப்ப சோனகர்களை விரட்டுவதற்கு வழிசமைத்த தென் தமிழீழத்தில் சோனகர்களால் தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கட்டாய விரட்டியடிப்புகள், ஊர் வன்வளைப்பு, தமிழ் பெண்கள் மீதான வன்புணர்வுகள் எல்லாம் என்னவகை? சோனகருக்கு வந்தால் ரத்தம் தமிழருக்க வந்தால் தக்காளி சட்னியோ? அதுதான் இனப்படுகொலை
  26. சங்கு சின்னத்தில்... இவர்கள் போட்டியிட்டதற்கு, விளக்கம் கேட்டு எப்போ சுமந்திரன் கடிதம் அனுப்பப் போகிறார். நீங்களும், உங்கடை சுத்துமாத்து அரசியலும். 😂 உங்களுக்கு வெள்ளை அடிக்கவும்.. "நட்டு கழண்டதுகள்" இருக்கிறாதாலை தான் இந்தப் பிரச்சினை. 🤣
  27. கீழே உள்ள 1987 இன் பிரதேசச் சபைகள் சட்டத்தின் படி தவிசாளர் தான் "தலை". நிறைவேற்று அதிகாரி - executive officer என்று சொல்கிறார்கள். இது தான் இந்த அடிபாடு. ஒரு பிரதேச சபையின் அலுவல்களை தவிசாளர் தான் நிறைவேற்றுவார். சம்பளத்திற்கு மேலதிகமாக மேசைக்குக் கீழால் "கிம்பளம்" வாங்கிக் கொண்டு வேலைகளுக்கு ரென்டர் கொடுக்கும் வேலை முதல், தனக்குப் பிடிக்காத ஏரியாவில் வீதியைத் திருத்தாமல் தள்ளிப் போடுவதை வரை தவிசாளரால் செய்ய முடியும். இதைச் செய்திருக்கிறார்கள். https://citizenslanka.org/wp-content/uploads/2016/02/Pradeshiya-Sabhas-Act-No-15-of-1987-T.pdf
  28. பையா கைத்துப்பாக்கியால் விமானத்தை சுட்டு விழுத்த முடியாது. அதனுடைய ஆகக்கூடிய சுடும் தூரம் 50யார் தான். விமான எதிர்ப்புத் துப்பாக்கி அல்லது ஏவுகணை மூலமாக வீழ்த்தப்பட்டிருக்கலாம்.
  29. என்ன‌த்த‌ சொல்ல‌ எப்ப‌டி சொல்ல‌ 2009க்கு முத‌ல் ந‌ல்ல‌ ஒற்றுமை இங்கை எல்லாரும் இப்ப‌ ?...................
  30. குடிநீர் என்பது மனிதர் உட்பட சகல உயிரினங்களினதும் வாழ்வாதரப் பிரச்சினை ........அவற்றை நிவர்த்தி செய்து வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ........ ! 👍 நன்றி ஏராளன் ...........!
  31. வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் கஞ்சி பரிமாறல் 16 MAY, 2025 | 10:15 AM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை பஸ் நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது. இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் செ.கஜேந்திரன், சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/214856
  32. நாளை போட்டி மீண்டும் தொட‌ங்குது பாக்கிஸ்தான் PSL போட்டியும் நாளைக்கு தொட‌ங்குது.....................உந்த‌ ஜ‌பிஎல்ல‌ சீக்கிர‌ம் முடித்து ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளுக்கு ப‌ழைய‌ ப‌டி முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌னும் , இப்ப‌ எல்லாம் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் குறைந்து விட்ட‌து😁...............................
  33. இந்த நிறுவனத்தினையே நானும் குறிப்பிட்டிருந்தேன் வெவ்வேறு சந்தைகளில் வெவ்வேறு பங்கு விலை காணப்படுகிறது என கருதுகிறேன். இந்த இரக விமானம் அதியுயர் திறன் வாய்ந்த விமானம் அல்ல என கருதுகிறேன், முதன் முதலாக இலங்கை விமானப்படை ஜெட் விமானமாக சீனாவின் J7 விமானத்தினை கொள்வனவு செய்திருந்தது, கிபிரை விட மிக வேகமாக பயணிக்கும் இந்த விமானம் குண்டு வீசும் போது அதன் வேகத்தினை குறைத்து வீசும், அப்போது இந்த விமானம் (J7), Mig 21 விமானத்திற்கு இணையானது என கூறினார்கள், ஆனால் இலங்கை விமானப்படை இந்த இரக விமானத்தினை பின்னர் பாவிக்கவில்லை அதற்கு பதிலாக கிfபிரையே இலங்கை விமானப்படை பாவித்தது. பாகிஸ்தான் தனிய இந்த J10 விமானத்தினை கொள்வனவு செய்யவில்லை அதனுடன் இணைந்து ராடரினையும் கொள்வனவு செய்துள்ளது. ரபேலின் ஆரம்ப ராடர் லொக் எச்சரிக்கை மற்றும் ஏவுகணை எச்சரிக்கை ரபேலிற்கு கிடைக்காமல் போனதிற்கு காரணமாக இந்த இரக விமானங்களை தரையில் இருந்த சீன ராடர்கள் இனங்கண்டு அதன் இலக்கினை (டார்கெட் கோடினேசனை) J10 வழங்கியவுடன் அதன் செயல்பாடு முடிவடைந்து விட்டது அதன் பின்னர் விமானம் இலக்கிற்கு ஏவுகனையினை செலுத்தியவுடன் அதன் செயற்பாடு முடிவடைய அதன் பின்னர் அந்த ஏவுகணை சாப் ஏவாக்ஸ் விமானம் வழிநடாத்தியமையால் ரபேலினால் இறுதிவரை அதன் பாதுகாப்பு பொறிமுறை (Spectrum Dome) அதனை அடையாளம் காணமுடியாமல் போய்விட்டதாக கூறுகிறார்கள். இது ஒரு ஒருங்கிணைந்த தொடர்பாடல் தாக்குதல் முறை (integrated network).
  34. நன்றி கடஞ்சா. ஒரு காலத்தில் இவர்கள் பற்றி நிறையவே வாசித்திருக்கின்றேன். தொடர்ந்து வாசித்துப் பார்க்கின்றேன். சிலவற்றை வாசிக்கும் போதே அவை பிரதானமாக ஒரு பக்கசார்பான பிரச்சாரங்கள், பரப்புரைகள் என்று தெரிந்துவிடும். தரவுகளற்ற தகவல் குவியல்களாக, அனுமானங்களாக அவை இருக்கும். உலகில் சில நாடுகளில் நடப்பவை மிகக்குறைவாக வெளியே தெரியும். சீனா, ரஷ்யா, வட கொரியா, மியான்மார், பாகிஸ்தான் என்பன சில உதாரணங்கள். அவர்களின் அரசியல் அப்படிப்பட்டது. ஆதலால் பாகிஸ்தான் பக்கம் இருக்கும் காஷ்மீர் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியே தெரிவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தும், ஆச்சரியமும் இல்லை. ஓரளவாவது ஜனநாயகமும், உரிமைகளும் உள்ள நாட்டில் வெகு சிலராவது கேள்விகளை கேட்பார்கள்.
  35. ஐரோப்பா வந்த புதிதில் நசனாலிற்றி உள்ள பெண்ணை திருமணம் செய்தால் தான் தனக்கு பாதுகாப்பு என்று தேடி திரிந்த இவர், இன்று விரும்பியபடி வெளிநாட்டில் செற்றில் ஆகியதும் வருமானம் தரும் தாயக ஊடகவியலாளராகி பிழைப்பு நடத்துகிறார். தாயக அரசியல்வாதிகளடையே சிண்டு முடிவதில் இவர் வல்லவர்.
  36. இவரது கடந்த காலத்திலும் இப்படித்தான் பல ஒப்பந்தங்கள் செய்தார். ஆனாலும் நாளடைவில் கால்வாசி கூட வந்து சேரவில்லை என்று சொல்கிறார்கள்.
  37. எங்க அவரை காணவில்லை .........நான் வருவர். வருவர். என்று பார்த்தபடி அவருக்கு வேறு உழைப்பு கிடைத்து விட்டது போலும்”
  38. பிறப்பு வீதத்துக்கும். நைட்டி. அணிவதற்க்கும். என்ன தொடர்பு. ???? அது ஒரு உடுப்பு மட்டுமே இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பாலஸ்தீன முஸ்லிம் பெண்கள் முழுமையாக உடம்பை மூடி உடுப்புகள். அணிகிறார்கள். ..ஆனாலும் குழந்தை பெற்று எடுப்பதில். அவர்கள் உலகில் முதலாவது இடம் வகிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் ???
  39. இது செம உருட்டுடா சாமி . ........ ! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.