Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    87988
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    38754
    Posts
  3. வாத்தியார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    11882
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19121
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/24/25 in Posts

  1. வந்தார், வரத்தார் என்பது வசைவு சொல் அல்ல. நான் இப்போ வசிக்கும் ஊரில் பத்து தலைமுறைகளாக இருந்தவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரின் சேர்ச் இரும்பு கதவு அவர்களின் முப்பாட்டனின் கொல்லையில் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்து வாய் வழி வரலாறாக 100 வருடங்களுக்கு முன் வந்த கடும் பனி பொழிவு பற்றி தெரிகிறது. அந்த ஊரில் எது வழக்கம், எது புதிதாக வந்த பழக்கம் என தெரிகிறது. நல்ல வேலை அல்லது பள்ளிகூடம் என்பதற்காக இங்கே வந்து குடியேறிய வந்தான் வரத்தானாகிய நான் - இந்த ஊரின் வழமைகள், வரலாறு பற்றி அறியாமல் இருப்பது இயல்பானது. இதில் எந்த வலியும் இல்லை. அப்படி இருப்பதாக நீங்கள் சொல்வது வெறும் பாசாங்கு. Playing the victim card. ஆதாரம் - யாழ்பாணம் என நான் சொல்லவில்லை. நல்லூரில் இப்போ இருப்பவர்கள் பலர் தீவகத்தில் இருந்து 50 வருடத்தில் குடியேறியோர் என்றே கூறினேன். இது என் வாழ்க்கை அவதானத்தின் பால் எழுந்த கருத்து. நல்லூரை ஓரளவு அறிந்தோருக்கு நான் சொல்வது புரியும். இலங்கை குடிசன மதிப்பீட்டில் கூட இந்த கேள்வி கேட்கப்படாத போது, இதற்கு நீங்கள் கேட்கும் வகையில் ஆதராம் எங்கும் இராது. கடை முதலாளி சுமந்திரனின் ஆள் எண்ட கதையை நம்பி சோல்டர் பேக்கோடு விமானத்தில் இருந்து குதித்தாகிவிட்டது… இனி கால் முறிந்தாலும், கழுதெலும்பே உடைந்தாலும் வலிக்காத மாரி நடிப்பதை தவிர வேறு வழியில்லை. மற்றையவர் கொஞ்சம் மேலால் தண்ணி ஊற்றியதற்கே, சசி வர்ணம் கரைந்து, உள்ளே இருக்கும் சங்கி-வர்ணம் புலப்பட்டு விட்டது. அவரும் Google street view ஆதாரத்துக்கு அவதூறை பதிலாக கக்கி விட்டு ஓடியவர், ஓடியதுதான்🤣.
  2. நாளை ஞாயிறு 25 மே GMT நேரப்படி முற்பகல் 10:00 மணிக்கும் பிற்பகல் 2:00 மணிக்கும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 67) ஞாயிறு 25 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK ஐந்து பேர் மாத்திரம் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனவும் 18 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் ஈழப்பிரியன் செம்பாட்டான் ஏராளன் நந்தன் அகஸ்தியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவி சுவைப்பிரியன் பிரபா கந்தப்பு வாதவூரான் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 68) ஞாயிறு 25 மே 2:00 pm GMT டெல்லி - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 15 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் 08 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் நுணாவிலான் கிருபன் எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரப் பையன்26 நிலாமதி வாதவூரான் ரசோதரன் தமிழ் சிறி குமாரசாமி கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  3. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 66வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஆட்டத்தில் சோபிக்கவில்லை என்றாலும், ஷ்ரெயஸ் ஐயரின் அதிரடியான அரைச் சதத்துடனும், ஜொஷ் இங்கிலிஸினதும், ஆட்டமிழக்காது 44 ஓட்டங்கள் எடுத்த மார்கஸ் ஸ்ரொயினதும் புயல்வேக ஆட்டங்களினாலும் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் வெற்றி இலக்கைத் துரத்துவதற்காக தொடர்ச்சியாக வேகமாக் அடித்தாடினர். கருண் நாயரினதும், அரைச் சதம் அடித்த சமீர் ரிஸ்வியினதும் மின்னல் வேக ஆட்டங்களால் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  4. ஐயனே ஞான பண்டிதா😂 உங்கள் எழுத்தில் குறை இல்லை...... சொல்லில் கூட குறை இல்லை ....ஆனால் பொருளில் தான் குறை தொக்கி நிற்கின்றது பொருள் மயக்கம் இருந்தாலும் சரி செய்துவிடலாம்...... ஆனால் பொருளில் இன்னொரு பொருள் தொக்கி நிற்பதையே நாம் 😅 கடைந்து எடுத்து தெளிந்து...... அன்னம் போல உங்கள் சபையில் முன்வைத்தோம் .😇 பிழை நீயப்பா இன்றும் பிழை நீயப்பா😃 சரிசெய்து தொடரும் அப்பா ........😂 வேலா ... கந்தா .....கடம்பா ......கார்த்திகேயா😇 எல்லாம் உம் செயலப்பா ...... 😊
  5. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 65வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் இஷான் கிஷானின் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் எடுத்த 94 ஓட்டங்களுடனும், அபிஷேக் ஷர்மா, ஹென்றிக் க்ளாஸன், அனிகெற் வேர்மா ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஃபில் சோல்ற்றினதும் (62 ஓட்டங்கள்), விராட் கோலியினதும் (43 ஓட்டங்கள்) புயல்வேக ஆட்டத்தினால் ஆரம்பத்தில் வெற்றி இலக்கைத் துரத்துவதில் முன்னுக்கு நின்றாலும், இருவரினதும் விக்கெட்டுகள் பறிபோன பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் திணறியதால் இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 189 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  6. நல்லூர் முன் காணாமல் போணோரின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடாத்த தடைவிதித்த நிர்வாகம், இப்போது தன் பிழைப்பிற்கு ஆர்ப்பாட்டம் நடாத்துவது ஏன்?
  7. கிரகம் இன்னிக்கு நாம சேர்ந்த கூட்டம் அப்பிடி ☠️
  8. ஒருவர் அல்ல இருவர் அல்ல... ஒரேயடியாய்... 42 போதை வியாபாரிகளை கைது செய்து இருக்கின்றார்கள் என்றால், இவற்றை முழு காத்தான்குடி மக்களே வாங்கிப் பாவித்துள்ளார்கள் போலுள்ளது.
  9. ஆம்..... தூஷண பிக்கருக்கு, "நாதம்ஸ்" பல்கலைக்கழகத்திருந்துதான் இந்தப் பட்டம் வழங்கப் பட்டது. 😂 ரூம் போட்டு யோசித்திருப்பார் போலுள்ளது. 🤣
  10. தீவார் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு நல்லூரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை என்ற பொது எனக்கும் மதியத்தில் இருந்து ஒரு கொந்தளிப்பு என்னுள்ளே ஏற்பட்டது தான் . பின்னர் யோசித்தால் இலங்கையே ஒரு தீவு அதற்குள்ளும் தீவாரா ஏன்று நட்பு ரீதியாக எதிர்க்க கருத்தை வைக்கவில்லை. ஆனாலும் தீவானாக நாங்கள் ..... வேண்டாம் ........நட்பு சேர்ந்தே பயணிப்போம்
  11. சும்மா கதையைப் புகட்டி சொல்லக்கூடாது நல்லூர்க் கோயில் இருந்த இடத்தின் அருகில் முசுலீம்கள் குடியேறியதால் அந்தக் கோயிலின் விருத்தியை தடை செய்வார்கள் என்ற நோக்கில் பேரம் பேசி அது நடைபெறாததால் பன்றி உள்ளே வந்து அவர்கள் வெளியே சென்றது தான் வரலாறு. ஆக நல்லூர்க் கந்தன் அங்கேயேதான் அப்போதும் இருந்தார் குடியேறிய முஸ்லீம்களால் கோயிலின் வளர்ச்சி தான் தடைபட்டது நீங்கள் கூறுவது போல முஸ்லீம்கள் இருந்த இடத்தில் கோயில் கட்டப்படவில்லை . விருத்தி செய்யப்பட்டு உள்ளது
  12. இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பிற்போக்குத் தனத்தின் இன்னொரு குணங்குறி தான் இந்த நல்லூர்க் கோவில் எல்லையை தனியார் காணிக்குள்ளும் நீட்டிக்கிற செயல். பரிஸ்ரா தன் வியாபார வெற்றி கருதி இவர்களுக்குப் பணிந்திருக்கிறது. இது அவர்களின் வியாபார முடிவு, அவர்கள் உரிமை. ஆனால், பரிஸ்ராவின் பணிந்து போதல் - compliance என்பது ஒரு தவறான முன்னுதாரணம்.எதிர்காலத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு இறைச்சிக் கடைக்கு அருகில் ஒரு கருங்கல்லைப் பொட்டுப் போட்டு, சரிகை கட்டி வைத்து விட்டு "இறைச்சிக் கடையை அகற்ற வேண்டும்" என்று வேலன் ரீம் பதாகை பிடிக்கக் கூடும். அந்தத் துணிவை பரிஸ்ராவின் வியாபார வெற்றி கருதிய முடிவு வேலன் ரீமுக்குக் கொடுத்திருக்கும். இவர்களுக்கும், அரச மரத்தைக் கண்டால் வேலி போட்டு "பௌத்த பூமி" என்று பிரகடனம் செய்யும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கும் இடையே எந்த வேறு பாடுகளும் இல்லை😂!
  13. அநேகமான பழமொழிகளும்,பழைய அறிவுரைகளும் அன்றைய காலத்திற்கு உரியவை என நினைக்கின்றேன். அது இன்றைய சமுதாயத்திற்கு ஏதுவாக அமையாது. அதுக்காக நல்லூர் கந்தசுவாமியார் கோயில் வாசல்லை ஹாஜியார் கொத்துரொட்டி கடை போடுறதை ஏற்க முடியாது கண்டியளோ 🤣
  14. உண்மையில் ஜேர்மனியின் காவல்துறைனர்க்கு போதுமான அதிகாரங்கள் இல்லை.கூடுதலான வெளிநாட்டவர்கள் ஜேர்மன் பொலிசாரை நாய்க்கும் மதிக்க மாட்டார்கள். கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவார்கள்.அவர்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.பார்க்கவே பாவமாக இருக்கும். Afd கட்சியினர் எதை தேர்தல் விஞ்ஞாபனமாக முன் வைத்து பெரு வெற்றி பெற்றார்களோ அவற்றை சட்டமாக்க இன்றைய அரசு முயற்சி செய்கின்றது.
  15. உக்ரேன் போர் ஆரம்பிக்கும் போது யாழ்களத்தில் நான் இந்த கருத்தை தெரிவித்திருந்தேன்.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் ராட்சியம் மிகப்பெரியது. அடுத்தது நேட்டோவில் முதன்மை வகிக்கப்போகின்றார்கள்.உள ரீதியாக ரஷ்யாவை ஆக்கிரமிக்காமல் விட்டாலும் இவர்களின் செயற்பாடு அதை ஒத்ததாகவே இருக்கின்றது. தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது போல.... உண்மை நிலவரங்களை இணைத்தமைக்கு நன்றி.
  16. கோவில்கள் வியாபர தலமாக மாறி நீண்ட காலமாகி விட்டது.ஏனைய மதங்களும் இதற்கு விதி விலக்கல்ல. வீட்டிலை இருந்தும் கடவுளை வணங்கலாம். 👈
  17. இதைத்தான் நான் மேலே சொன்னேன். நல்லூர் ஒன்றும் ஸ்பெசல் அல்ல. கோவில் வெளி வீதி வேறு. கோவில் வெளி வீதியில் இருந்து 300 மீட்டர் அப்பால், இருப்பது வேறு. இது கடைசியில் யாழ் மாநகர எல்லைக்குள் மச்சம் அனுமதி இல்லை என்ற அளவில் போய் நிற்கிறது. தாடி வளர்க்காவிட்டால் கசை அடி கொடுக்கும் தாலிபான்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். இப்போ விளங்கிறதா? தமிழ் தாலிபான்கள் எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது? பாரிஸ்டா விட்டு கொடுத்தது அனைவருக்கும் ஆப்பாக முடியும் என ஜஸ்டின் அண்ணா சொன்னதும் இதைதான். சொந்த உழைப்பில் சாப்பிட பஞ்சி பட்டு சாமியார் ஆனவனை எல்லாம் சமூக/அரசியல் தலைவராக ஏற்று கொண்டால் இதுதான் கெதி🤣. வேலன் சச்சி போன்ற கிருமிகளை வளர விட்டால் கூண்டோடு ஆளுனரிடம் ஒரு நல்ல விலைக்கு வித்து விடுவார்கள்.
  18. 🙏என்னை நிராகரித்தவர்களுக்கும், என்னுடன் நின்றவர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். நான் தொடருவேன்...?
  19. சென்னைக்கு ரயில் தவறி வந்த மாற்றுத்திறனாளி பெண் கூடைப்பந்து வீராங்கனையானது எப்படி? படக்குறிப்பு, கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெருநகர சென்னை மாநகராட்சி, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் எனும் அமைப்புடன் இணைந்து, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ஒரு காப்பகத்தையும், ஒரு பிரத்யேக உடற்பயிற்சி மையத்தையும் நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறது. இங்கு பாரா விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் இலவசமாக தங்கி, பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அப்படி தங்கியிருக்கும் பாரா விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவர், கர்நாடகாவின் ராமநகரத்தைச் சேர்ந்த லக்ஷ்மி. 10 வருடங்களுக்கு முன், ஒரு ரயில் பயணத்தில் வழிதவறி சென்னை வந்துசேர்ந்த லக்ஷ்மி, இன்று பாரா கூடைப்பந்து வீராங்கனையாக மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்கிறார். லக்ஷ்மி 15 வயதில், ஒரு ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தவர். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தபிறகு, ஒரு கட்டத்தில் கணவர் இறந்துவிட, வறுமையின் காரணமாக முதல் பிள்ளை மற்றும் 3வது பிள்ளையை தனது உறவினர்களிடம் கொடுத்தார் லக்ஷ்மி. இரண்டாவது பிள்ளையான தனலக்ஷ்மியை இவரே வளர்த்து வந்தார். வேலை வாய்ப்பும், தங்குவதற்கு இடமும் அளிப்பதாக உறவினர் ஒருவர் உறுதியளிக்க, தனது மகளுடன் ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ளார். "அங்கு சிறிது காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தேன். அதில் பல மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்தார்கள். ஆனால் ஊதியம் மிகக்குறைவு. தினமும் தரையில் தவழ்ந்து தான் பணிக்குச் செல்வேன். ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை, ஊருக்கே செல்லலாம் என முடிவு செய்தேன். அந்த நிறுவனத்தில் இருந்த ஒருவர், அருகில் உள்ள நகரப் பகுதியில் ஒரு தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணமும், ஒரு சக்கர நாற்காலியும் இலவசமாக வழங்குவதாக கூறினார். சரி அதை வாங்கிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பலாம் என முடிவு செய்து, அவரை நம்பி எனது 5 வயது மகளுடன் சென்றேன்." என்று கூறுகிறார் லக்ஷ்மி. ஆனால் அங்கு கிடைத்த உதவித்தொகையை உடன் வந்தவர் எடுத்துக்கொண்டு, தென்னிந்தியாவை நோக்கிச் செல்லும் ஏதோ ஒரு ரயிலில் லக்ஷ்மியையும் அவரது மகளையும் அனுப்பிவைத்துள்ளார். ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு அன்று நடந்ததை நினைவுகூறும் லக்ஷ்மி, "'உனது ஊருக்குதான் செல்கிறது ஏறு' என அந்த நபர் என்னை மகளுடன் ஏற்றிவிட்டார். கையில் ஒரு ரூபாய் கூட இல்லை, கிடைத்த 2000 ரூபாயையும், 'நான் தானே உன்னை அழைத்துவந்தேன், அதற்கு கமிஷன்' எனக்கூறி அவர் பிடுங்கிக்கொண்டார். டிக்கெட்டோ அல்லது உணவோ வாங்கித் தரவில்லை. பசியுடன் தான் நானும் எனது மகளும் பயணித்தோம். ஒரு இடத்தில் ரயில் நின்றபோது முழிப்பு தட்டியது. எழுந்துபார்த்தபோது அருகில் வைத்திருந்த அந்த சக்கர நாற்காலியை காணவில்லை. பதறி, எனது மகளுடன் ரயில் நிலையத்தில் இறங்கி அங்குமிங்கும் தவழ்ந்து, சக்கர நாற்காலியை பார்த்தீர்களா என அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ரயில் கிளம்பத் தொடங்கியது. தவழ்ந்து செல்வதற்குள் அது வெகு தூரம் சென்றுவிட்டது" என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "மகளுடன் பிளாட்பாரத்திலேயே அமர்ந்திருந்தேன். நள்ளிரவு நெருங்க நெருங்க பயம் வந்தது. மொழி தெரியாத ஏதோ ஒரு தென்னிந்திய ஊரில் இருக்கிறேன் என்பது மட்டும் தெரிந்தது. அப்போது அங்கு வந்த ஒரு ரயிலில் மகளுடன் ஏறினேன். நான் வாழ்க்கையில் எடுத்த சிறந்த முடிவு அதுதான். அந்த ரயில் சென்னை செல்கிறது என்றோ, நான் சில வருடங்களில் ஒரு பாரா விளையாட்டு வீராங்கனையாக மாறப்போகிறேன் என்றோ அப்போது தெரியாது." என்கிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, பிளாட்பாரத்திலேயே அமர்திருந்த லக்ஷ்மியையும் அவரது மகளையும் கண்ட சிலர், விசாரித்துவிட்டு, ஒரு அரசு பெண்கள் காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர். "அந்த காப்பகத்தில் சிறிது காலம், பிறகு வேறொரு தனியார் காப்பகத்தில் சிறிது காலம் என கழித்த பிறகு, பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் நடத்திய காப்பகத்தில் எனது மகளுடன் தங்கினேன். மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க அவர்கள் உதவினர். அவ்வப்போது கர்நாடகாவில் எனது உறவினர்களிடம் வளர்ந்துவந்த இரு பிள்ளைகளிடமும் பேசி வந்தேன். ஆனால், இப்படியே வாழ்க்கை கழிந்துவிடக்கூடாது என நினைத்து தையல் தொழில் கற்று வந்தேன். அதன் பிறகு பாரா விளையாட்டு போட்டிகளைப் பற்றி அறிந்துகொண்டேன்." என்கிறார் லக்ஷ்மி. படக்குறிப்பு,சென்னையில், அரசு 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தனது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சென்னை பெருநகர் மாநகராட்சியின் 'மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில்' தற்போது தனது 15 வயது மகள் தனலக்ஷ்மியுடன் வசித்துவருகிறார் லக்ஷ்மி. தனலக்ஷ்மி இப்போது ஒரு தனியார் பள்ளியில், 7ஆம் வகுப்பு முடித்துவிட்டு, 8ஆம் வகுப்பிற்கு செல்ல காத்திருக்கிறார். பாரா விளையாட்டில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதைக் குறித்து பேசிய லக்ஷ்மி, "எனக்கு எந்த பாரா விளையாட்டு ஏற்றது என குழப்பத்தில் இருந்தபோது, சக்கர நாற்காலி கூடைப்பந்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. முதலில் பயிற்சி எடுக்கத் தொடங்கியதும் எளிதாக இருப்பது போல இருந்தது. சரி என நம்பிக்கையுடன் ஒரு போட்டியில் கலந்துகொள்ள சென்றபோது, எதிரணியைச் சேர்ந்த ஒருவர் இடித்ததில் சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. அந்த வலி போகவே சில நாட்களானது. அதன் பிறகுதான் இது எளிதான ஒன்று அல்ல எனப் புரிந்துகொண்டு, தீவிரமாக பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். இப்போது நான் ஒரு மாநில அளவிலான பாரா கூடைப்பந்து வீராங்கனை." என்கிறார். மாற்றத்தை ஏற்படுத்திய மாரியப்பன் தங்கவேலுவின் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மாரியப்பன் தங்கவேலு (கோப்புப் படம்- 2024) "லக்ஷ்மியைப் போல இன்னும் பல மாற்றுத்திறனாளி பெண்கள், பாரா விளையாட்டுகள் தங்கள் வாழ்வை உயர்த்தும் என நம்புகிறார்கள்" என்கிறார் நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகியும், பெட்டர் வேர்ல்டு ஷெல்டர் அமைப்பின் இயக்குனருமான, டாக்டர் ஐஸ்வர்யா ராவ். இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. "லக்ஷ்மி உள்பட இங்கு தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தையல் போன்ற தொழில்களைதான் முதலில் கற்றுக்கொடுத்து வந்தோம். ஆனால், ஏதோ ஒரு கைத்தொழில் என்பது அவர்களுக்கான அடுத்த கட்டமாக இருக்காது என்பதை உணர்ந்தோம். அப்போது 2016 பாரா ஒலிம்பிக்கில், தமிழக வீரர் மாரியப்பன் பெற்ற வெற்றி எங்களை சிந்திக்க வைத்தது" என்கிறார். 2016இல், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி-42 பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். "அந்த வெற்றியால் தமிழகத்தில் பாரா விளையாட்டுகளுக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு எங்கள் காப்பகத்தில் இருக்கும் பெண்களுக்கு பாரா விளையாட்டு பயிற்சிகளை அளித்தோம். அது பலனளிக்க ஆரம்பித்தது. எங்களது பெண்கள் பலரும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்." என்கிறார் ஐஸ்வர்யா ராவ். மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மனச்சோர்வு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், பக்கவாதம், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இதைக் குறிப்பிட்டுப் பேசிய டாக்டர் ஐஸ்வர்யா, "அதனால்தான் ஏதோ ஒரு தொழில் அல்லது வேலைவாய்ப்பு என அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதை விட பாரா விளையாட்டில் ஆதரவளித்தால், உடல்நலமும் அவர்களுக்கு மேம்படும். எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளால் உடல் உழைப்பு தேவைப்படும் அன்றாட வேலைகளை எளிதில் செய்ய முடியாது. எங்கு சென்றாலும் சக்கர நாற்காலி எனும்போது, எளிதாக எடை கூடி, உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே தான் எங்கள் காப்பகத்தின் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்வதும், பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்வதும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது." என்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஜிம்கள் படக்குறிப்பு,நுங்கம்பாக்கம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான அரசு காப்பகத்தின் நிர்வாகி டாக்டர் ஐஸ்வர்யா ராவ் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கும் பல பகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய உடற்பயிற்சி மையங்கள் மிகவும் குறைவு எனக் குறிப்பிடும் ஐஸ்வர்யா, "இந்த உடற்பயிற்சி மையம்தான் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான முதல் இலவச மையம். இதைப் போலவே தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்." என்கிறார். இந்த அரசு காப்பகத்தில் தங்கியிருக்கும் தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனையான நதியா, "சாதாரண உடற்பயிற்சி கூடத்திற்குள் மாற்றுத்திறனாளிகள் நுழைந்தாலே விசித்திரமாக பார்ப்பார்கள். காரணம், வழக்கமான ஜிம்களில் சக்கர நாற்காலி பயன்படுத்த வசதிகள் இருக்காது. எனவே நாங்கள் தவழ்ந்து செல்வோம். உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு அவர்களை அவர்கள் பார்க்கும் பார்வையை மறக்கவே முடியாது. மிகவும் அவமானமாக இருக்கும், பிறகு எங்கே நிம்மதியாக உடற்பயிற்சி செய்வது. எனவே அரசு இதுபோன்ற மேலும் சில உடற்பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்" என்கிறார். படக்குறிப்பு,தேசிய பாரா பளுதூக்கும் வீராங்கனை நதியா மாற்றுத்திறனாளி பெண்களுக்கான புதிய பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது குறித்து பேசிய சென்னை பெருநகர் மாநகராட்சியின் ஆணையர் ஜெ.குமரகுருபரன், "இப்போது நுங்கம்பாக்கத்தில் மட்டுமே காப்பகத்துடன் இணைந்த ஒரு உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளோம். இது பாரா வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல. அனைத்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் இலவசம்தான். அவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு இதைப் பயன்படுத்தலாம். விரைவில் சென்னையின் பிற பகுதிகளிலும் இத்தகைய 'ஜிம்களை' நிறுவ உள்ளோம். மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகளின் ஆலோசனைபடியே இவை வடிவமைக்கப்படும்." என்று கூறினார். "பாரா விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காகவோ அல்லது வாழ்வாதாரமாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு முறை சாப்பாடு இல்லை என மகள் பார்க்க பிறரிடம் கையேந்தி நின்றிருக்கிறேன். இப்போது அதே மகள் முன் பாரா விளையாட்டு வீராங்கனையாக பதக்கத்துடன் நிற்கிறேன். சீக்கிரமாக எனது மற்ற இரண்டு மகள்களையும் என்னுடன் அழைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்கிறார் லக்ஷ்மி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqzr45r8vo
  20. டெல்லி வெல்லுது.. நமக்கு முட்டை🥚🍳 போடுது😱
  21. மக்களே உங்கள் சசிவர்ணம் பேசுகிறேன் புதிதாக "சங்கி வர்ணமாம்" 🤣 சொல்ல வேண்டிய கருத்தை தெரிய வேண்டிய கருத்தாளருக்கு, தெரிந்துகொள்ளும் விதத்தில் பதில் எழுதி ஆயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக பேசுபொருளாக இருந்த Barista நிறுவனம் நிலைமைகளை புரிந்து கொண்டு ஒரு முடிவையும் எடுத்துவிட்டது. யாழ்களமும், வந்தான் வரத்தான், தீவான் (அதுதான் அந்த தீவு மக்கள்) இப்படி புதிதாக நல்லூரில் குடி வந்த மக்களை வியப்புக்குரியோடு அன்னியபடுத்தி கருத்து சொல்வதையும் ஏற்றுக்கொண்டாயிற்று. கோஷன் அப்படி இல்லை என்று வாதாடினாலும் ஒரு உரையாடலில் அந்த குறிப்பிட்ட பதங்கள் வந்ததே தவறு என்று தான் நான் பார்க்கிறேன். இந்த திரியை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாக வாசித்து வருபவர்களுக்கு தெரியும் எங்கே, எப்படியான நையாண்டி கருத்துக்களில் இருந்து உரையாடல் தடம் புரண்டது என்பதை அவதானிக்க. இது ஒன்றும் யாழ் களத்திற்கு புதிதல்ல, இவற்றை பக்குவமாக ஏற்றுக்கொண்டு நடுநிலை வகிப்பதை போல அல்லது கடந்துபோகும் உன்னத நிலைக்கு யாழ்களம் வந்தாயிற்று. இனி இதிலே குந்தி இருந்து மேலும் மேலும் பிச்சைக்காரன் சொறிந்த புண்ணாய் கருத்து எழுத ஒன்றும் இல்லை. நன்றி 🥰
  22. @goshan_che பல விடயங்கள் சொல்லப் படுகின்றது. மூன்றாம் நிமிடத்தில் இருந்து கேட்கவும்.
  23. ஸ்டொய்னீஸ் போட்டு அடிச்சுவிட்டான். மீண்டும் ஒரு 200 ஓட்டம். துரத்தல் எப்பிடி இருக்கப் போகுது.
  24. உஸ்..சிறியர் மெல்லவா ....இங்கு ஒருதர் அவையோடை உயர்வான செய்தியோடை வாறவர்...அவருக்கு கோபமூட்டதையுங்கோ
  25. பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா ....... ! 😍
  26. கடவுள் எங்கும் இருக்கிறார் என்று இந்துமதம் சொல்கிறது . ..நல்லுரில். தன் கடவுள் இருக்கிறாரா??? கோவிலில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரா ?? இல்லை கடவுள் இறைச்சிலுமிருக்கிறார். இறைச்சி கடையிலுமிருககிறார். நான் சொல்லவில்லை இந்து சமயம் சொல்கிறது எப்படி ??? கடவுள் துணிலுமிருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று ஆகவே எங்கும் கடவுள் இருக்கும் போது எங்கும் மாமிசம் இருக்க முடியாது ....முடியுமா?? மனிதர்கள் கட்டிய கோவில்களில் மட்டும் கடவுள் இருக்கிறார் என்று எப்படி?? சொல்ல முடியும் ??? கோவிலுக்கு 300 மீற்றர்களுக்கு அப்பால். கடவுள் இல்லையா??? ஆகவே எங்கும் மாமிச கடைகள் நிறுவ முடியாது ........ இந்த உயிர்களை படைத்தவர் கடவுள் தான் ...அவர் படைத்த ஒரு உயிரினம் மற்ற உயிரினத்தை சாப்பிடும் சாப்பிடுகிறது இது ஒரு வட்டம் போல் ஒன்றையொன்று பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர்கள். ..இது கடவுளின் ஏற்பாடுகள் படைப்புகள் கோவில் சுழலில். மற்ற உயிர் இனங்கள் ஒன்றையொன்று பிடித்து சாப்பிடுவதில்லையா?? சாப்பிடுகின்றன. ....இது கடவுளின் ஏற்பாடுகள் ஆகும் 🙏. கோவில்கள் கட்டுவதின். மூலம் கடவுளை குடியமர்த்த முடியாது ஏனெனில் அவர் எங்குமே இருக்கிறார் வழிபாடு செய்வதன் மூலம் அர்ச்சனைகள். செய்வதன். மூலம் அதிக பணத்தை செலவு செய்வதன். மூலம் நாங்கள் நினைத்ததை பெற்றுக்கொள்ள சாதித்துக் கொள்ள முடியாது .... அங்கே அந்த கடை இருப்பதில் எந்தவொரு பிரச்சனையில்லை பிரச்சனை உங்கள் மனதில் தான் உண்டு” எதிரகருத்துகள். வரவேற்கப்படுகின்றன… 🙏🙏🙏
  27. மன்னித்துக் கொள்ளவும் சசியண்ணா..தவறை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.
  28. இருக்கும் பாவம் மாணவர்கள் ......ரம்பா அந்தப் பக்கம் போனால் கனடாவுக்கு திரும்ப முடியாது,.......மாறாக லண்டனுக்குத். தான் திரும்ப வேண்டும் 🤣.
  29. சைவ உணவு என்று அறிவிக்க வைத்த வெற்றியை கொண்டாட வேலன் சாமி வீட்டில் கோழி குழம்பும் குவாட்டருமா பார்ட்டியாம். 😂😂
  30. நாதம்ஸ் வீட்டிற்குப் பக்கத்தில்தான்... ரம்பா, இந்திரனின் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. ஆளை கன நாள் இங்காலைப் பக்கம் காணாத படியால், ஆள்... அங்கு புரொபசர் வேலை பார்க்கிறாரோ தெரியவில்லை. 😂
  31. ஆப்பிள்போனை அமெரிக்காவில் செய்தால் 25 வீத வரியைவிட கூடுதலான பெறுமதியே வரும்.
  32. நானறிய இவருக்கு “தூஷண பிக்கர்” என்ற பட்டத்தை வழங்கியவர் யாழ்கள கருத்தாளர் நாதம்ஸ். பவித்திரா வன்னியாராச்சியை பவித்திரம் அற்ற வார்தைகளால் இவர் அர்ச்சித்த வீடியோ வந்த நேரம் இந்த பெயர் சூட்டல் இடம்பெற்றது.
  33. விசுகர், கருத்து வறட்சி ஏற்படும் போது... கண்டபடி அடித்து விடுவதை எல்லாம், கணக்கில் எடுக்கக் கூடாது. சிலரின் கடந்த கால கருத்துக்களை அவதானித்துப் பார்த்தால்... பல இடங்களில், சாணி அடித்த வேலைகளையே இங்கும் செய்வதால்.... இதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை. கை உழையும் மட்டும், தொண்டை தண்ணி வற்றும் மட்டும்... "அலட்டி" விட்டு போகட்டும் என்று கடந்து செல்லுங்கள் விசுகர். 😂
  34. எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மதத்தவராயினும் மதவாதிகளின் எண்ணமும் குணமும் ஒன்றாகவே இருக்கிறது. தங்களுக்கு மட்டுமே மனமுண்டு, அது எதை பற்றி வேண்டுமானாலும் புண்படலாம், அதை புண்படாமல் பாத்துகொள்ள வேண்டியது மற்ற அனைவரது கடமையாகும். நாளை அந்த முருகனே நேரில் வந்து(அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது வராதவர் இதற்கெல்லாம் வரமாட்டார், ஒருவேளை வந்து) நானே முல்லை நிலத்தில் குடிகொண்டவன், மாமிசமே எனது உணவு எண்டு சொன்னாலும், முருகன் என்னை புண்படுத்திட்டார் என ஒதுக்கிவிடுவார்கள்
  35. நல்லூர் பிரதேத்தில் அசைவ உணவகம் அமைத்தால் அது நல்லாய் ஓடும் என யாரோ கணித்தமையால் வந்த வினைதானோ இது? பெயர் பலகையை தூக்கியாச்சாம். ஏற்கனவே சீல் வைத்தாயிற்று போல் உள்ளதே.
  36. அட யாழ்ப்பாண சங்கிகளே, நல்லூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவசரத்துக்கு போக ஒரு கழிப்பிடம் இல்லை, முதலில் அதனை அமையுங்கள். நான் சிறுவனாக இருந்தபோது கோவில் அருகில் இரண்டு கழிப்பிடங்கள் இருந்தன, ஒன்றை இடித்து கம்பன் கழகம் கட்டினார்கள், மற்றதனை கோவில் வீதியை பெருப்பிக்க அகற்றிவிடடார்கள் ( கோவில் வீதியும், பருத்தித்துறை வீதியும் சந்திக்கும் இடத்தில்). நானும் பிறந்து, தவண்டு, வளர்த்து எல்லாம் நல்லூர் தான் (முத்திரைச்சந்தியடி), அந்தக்காலத்தில் நல்லுரை சுற்றிவர பல அசைவ உணவகங்கள் இருந்தன, இந்த உணவகத்துக்கு சற்று தொலைவில் கோழிக் கடை ஒன்று அந்தக்காலத்தில் இருந்து உள்ளது (முருகேசர் ஒழுங்கை), எமக்கு விருப்பமான கோழியைக் காட்டினாள் உடனே உரித்து தருவார்கள். இந்த வேலன் சாமியார் என்பவர் பிஜேபின் ஸ்ரீலங்காவின் ஒரு ஏஜென்ட் ஆகும், அவரைப்பற்றி தமிழ் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும். நல்லூர் கோவில் பற்றிய வரலாற்றுக் குறிப்பொன்றை கீழுள்ள காணொளியில் காணலாம். தற்போதைய தகவலின் படி, சைவ உணவு மாத்திரம் எனறு அறிவித்தலை தொங்க விட்டு, ஜோராக கல்லா கட்டுகிறார்கள், செலவில்லாத மார்க்கெட்டிங்கை சங்கிகள் அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
  37. அதே மைதானம் அல்ல . லக்னோ குஜராத் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. ஆனால் SRH பங்களுர் போட்டி லக்னோ அதல் பிகாரி வாஜ்பேய் மைதானத்தில் நடைபெற்றது.
  38. GMT நேரப்படி நாளை சனி 24 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 66) சனி 24 மே 2:00 pm GMT ஜெய்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 13 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 10 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி பிரபா வாதவூரான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் டெல்லி கேப்பிட்டல்ஸ் வசீ ஈழப்பிரியன் அல்வாயன் சுவி சுவைப்பிரியன் செம்பாட்டான் கந்தப்பு ஏராளன் ரசோதரன் நுணாவிலான் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  39. இப்படி தான் 1980 ஆண்டளவில். சும்மா கிடந்த நிலத்தில் [ அரச காணியாகவிருக்கும் ] கண்டி றேட்டில். கைதடி சந்தியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் பிள்ளையார் வைக்கப்பட்டது . அது இன்று மிகப்பெரிய கோவில் இந்தியா கட்டடக்கலைஞர்களால் கட்டப்பட்டது ...நல்ல வருமானம் வந்து கொண்டுருக்கிறது இந்த பிள்ளையாரை நான் வைத்திருத்தல் இன்று பெரிய பணக்காரர் ஆகி இருப்பேன்... அந்த பிள்ளையாரை வைத்தவன் வேலை வெட்டி இல்லாமல் வயல்வெளியில். மாட்டு சாணி பொறுக்கி சேகரித்துக்கொண்டு திரிந்தவர் கைதடியில். அனாதை இல்லம். வயோதிபர். இல்லம் இவற்றுக்கு கூட இப்படி வருமானம் வருவதில்லை இந்த கோவில் வளர்ச்சி மேலும் வளர்ச்சி அடையும்
  40. காயத்தோடு வடமராட்சி நவிண்டிலில் ஒரு வீட்டில் வன்னிக்கு வண்டி தயாராகும்வரை இருந்தார். தலைவரினதும் பொட்டரின் திறமைகளால்தான் தமிழன் என்று பெருமிதம் கொள்ளும் நிலை ஏற்பட்டது
  41. இந்த கூகிள் படத்தில் சில விருந்தினர் விடுதிகளும் பரிஸ்ரா அளவு தூரத்திலேயே இருக்கின்றன போல தெரிகின்றன. அங்கேயும் சைவச் சாப்பாடு தானாமா? இந்தப் பிரச்சினை தெரிய வந்தது பயனர்களுக்கு நன்மையான விடயம் தான்😂!
  42. சுண்டுக்குளி மகளீர் கல்லூரிக்கு அயலில் வீடு வாங்கியிருப்பின், அசைவம் சமைப்பதை தவிர்க்க சொல்லுங்கள். ஏனெனுல் தேவதைகளுக்கு அசைவம் பிடிக்காதாம்.😍
  43. சங்குடன் கூட்டணி வைத்ததற்கு... எதிர்ப்பு தெரிவித்த யாழ்.கள அரைகுறை அரசியல் ஆய்வாளர்களை வரிசையாக வரும்படி அழைக்கின்றோம். 🤪 சுமந்திரனுக்கு...சங்கு ஊதப் படுவது நிச்சயம். ஊ.... ஊ..... ஊ............ 😂 🤣
  44. சேர் கொஞ்சம் நில்லுங்கள் ...... இதை உருட்டு என்று யாரும் சொல்லவில்லையே ........ "சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் " லில் தான் இருக்கின்றது ......... ! 😇 எனக்கே கொஞ்ச அறிவுதான் இருக்கு , அதையும் குழப்பிப் போடுவீங்கள் போல ...... !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.