Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்14Points38754Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87988Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்7Points3049Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்7Points19112Posts
Popular Content
Showing content with the highest reputation on 05/29/25 in all areas
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய முதலாவது Play-off Qualifier 1 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டியில் வெல்லும் நோக்கோடு விளையாட வந்ததாகத் தெரியவில்லை! தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 14.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஃபில் சோல்ற்றின் புயல்வேகத்தில் ஆட்டமிழக்காது எடுத்த 56 ஓட்டங்களுடனும் மயங் அகர்வால், ரஜட் பரிடாரின் கமியோ ஆட்டங்களுடனும் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்லும் என சரியாக கணித்த இருவருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:5 points
-
இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம்
மண்டபத்தின் திறப்பு இன்னும் இந்தியத் தூதரகத்தில் மட்டுமே உள்ளது. அதனால் யாழ்ப்பாணிகள்.. மண்டபத்தின் வெளியில் நின்று கட்டிடத்தை பார்த்து விட்டு, போக வேண்டியதுதான். தமிழனின் மையப் பகுதியில் அமைந்த கட்டிடத்தினை, தமிழன் பாவிக்கக் கூட உரிமை இல்லை. பெயர் மட்டும்... கலாச்சார மண்டபமாம். இது என்ன காலாச்சாரமோ... கட்டினவனுக்குத்தான் வெளிச்சம். பிற் குறிப்பு: எனது அறிவுக்கு எட்டியவரை.... இந்த மண்டபத்தை இந்தியா தனக்குப் பாவிக்க கட்டியதாகவே கருதுகின்றேன். ஒரு காலத்தில் இந்தியாவின் சொல்லுக்கு... இலங்கை கீழ்ப்படியாமல் முறுகல் நிலை ஏற்பட்டால்... இந்திய இராணுவத்தை பலாலியில் கொண்டுவந்து இறக்கி.. இதனை இந்திய ராணுவ முகாமாக பாவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது. மையப் பகுதியில் இந்த நிலத்தை யாழ். மாநகரசபை இந்தியாவிடம் கொடுத்ததே பெரிய தவறு. கோடிக்கு கணக்கில்... கோவிலுக்கு செலவு செய்யும் நம்மவர்கள்... அந்த மண்ணுக்கு என்று பொதுவாக ஒரு அழகிய பிரமாண்டமான கட்டிடத்தை கட்டி இருக்கலாம். நம்மிடம்தான்... தூர நோக்குப் பார்வை என்றும் இருந்ததில்லையே.4 points
-
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்...
நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
2 pointsநாம் போராடி கொண்டிருந்த போது….புன்னகை மன்னன் படத்தில்….”உங்களுக்கும் சிங்களவருக்குமான பிரச்சனையை அங்கே வைத்து கொள்ளுங்கள், இங்கே வேண்டாம்” என சொன்ன கமல்…. தெனாலியில் “ஏன் யுத்தம் ஆரம்பித்தது என எனக்கு அன்றும் தெரியவில்லை, இன்றும் தெரியவில்லை” என ஒரு ஈழதமிழன் சொல்வதாக வசனம் பேசிய கமல்…. இன்று தமிழ் பற்றிய சர்சையில் சிக்கி கொண்டுள்ளார்…. காலம் விசித்திரமானது. இந்த எந்த மொழி பழையது என்ற சர்ச்சை யாழிலும் பலதடவை விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். உண்மையில் இது மதம் போல ஒரு நம்பிக்கை. எனது மதம் உண்மையானது, உனது மதம் பொய்யானது என அடிபடுவது போலவே இதுவும். எந்த மொழியியல் அறிஞரும் 100% சோதனை கூட ஆதாரத்தை ஒப்ப ஆதாரத்துடன் இந்த மொழிதான் மூத்தது என நிறுவ முடியாது. நாம் ஒரு ஆராய்சியை காட்டினால், அவர்கள் இன்னொன்றை காட்டுவார்கள். மாறி மாறி கத்தி போட்டு, பாகிஸ்தான்காரன் நொட்டினதும் இரு பகுதியிம் ஒன்றாகி, ஜனகன மண, ஜெய்ஹிந்த என போய்விடுவார்கள். சும்மா சவுண்டு விட்ட நாம் விரல் சூப்ப வேண்டியதுதான்🤣. கமலே இதை யோசிக்காமல் உளறிவிட்டேன்…இப்போ எப்படி தப்பிப்பது என நினைத்து கொண்டிருப்பார். அதுகுள்ள சீமான் கமலை பப்பாவில் ஏத்தி விட பார்க்கிறார்🤣. கன்னட வாட்டாள் நாகராஜு போல யாழ்களத்திலும் தமிழ் வாட்டாள் நாகராஜுகள் உளர். 12,000 வருடத்துக்கு முன் தமிழர் பூம்புகாரில் துறைமுகம் கட்டினர் என இதே யாழில் எழுதப்பட்டு, லைகுகள் வாளியில் அள்ளப்பட்டது வரலாறு🤣. பிகு முன்பே எழுதியதுதான். தமிழ், தெலுகு, கன்னடம், துளு, மலையாளத்தின் ஒற்றுமைகளை வைத்து பார்க்கின், அவற்றில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கி பார்க்கின், திராவிடமொழிகளின் மூத்தாவாக ஒரு மொழி - அதை Porto Dravidian எனலாம் அல்லது திராவிடம் என்ற சொல் அலர்ஜியானவர்கள் X எனலாம் - இருந்திருக்க வேண்டும். இந்த X மொழி தமிழ் என்கிறோம் நாம். இல்லை X இல் இருந்து மிச்சம் எல்லாம் வந்தன என்கிறனர் அவர்கள். அதிலும் கூட X இன் பிள்ளைகளில் மூத்தது தமிழ் (இலக்கிய செழுமை, நெடிமை) என்பதை கூட அவர்கள் ஏற்க தயாரில்லை. இது எந்த மதம் உண்மையானது என்பதை போல அறிவு, ஆதாரத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கை, இனப்பெருமை சார்ந்த ஒரு விடயம். என்னை பொறுத்து - நான் வாசித்து அறிந்ததை, என் குறை அறிவை வைத்து நான் இப்போ நம்புவது (இது நாளை ஆதார அடிப்படையில் மாறலாம்) X - தமிழாக இருக்க வாய்புள்ளது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது. அது அழிந்து போன ஒரு ஆதி மொழி வடிவமாக இருக்கலாம் (லத்தீன், சமஸ்கிருதம், அரமையிக்). இப்போ இருக்கும் தென்னிந்திய மொழிகளில் காலத்தால் மூத்தது தமிழ்.2 points
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
2 pointsஉண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான். வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும். தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது. இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை. பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன அதிசயம், முதல் இருவரும், மும்பை வெல்லும் என்று கணித்துள்ளனர்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை வெள்ளி (30 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 75) வெள்ளி 30 மே 2:00 pm GMT முலான்பூர் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI ஐந்து பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை. போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் ஐவருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???2 points
-
ரப் பாடகர் வேடன்
2 pointsவேடனை விடுதலை செய்யுங்கள் * "நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!" வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை. வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன. அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான். யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான். அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள். ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான். மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன இருக்கிறது. கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் "றப் இசையைப் பாட வேடன் யார்" என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார். 2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன. கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும் அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார். ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது. இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது. All reactions: Thank you:Ravindran Pa https://www.facebook.com/share/p/1GdxBpxTjy/2 points
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
திமுக மகனுக்கு எம்பி சீட் கொடுத்து வென்றும் விட்டார். கட்சியில் பழைய பெரும்புள்ளிகள் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள், அல்லது போய்விட்டார்கள். இருக்கும் ஒரே ஆள் மல்லை சத்யா - அவருடன் துரை பகிரங்கமாக மோதி வைகோ இருவரையும் சமாதானம் செய்தார். 82 வயதாகிறது - பழைய கம்பீரம் அடியோடு போய்விட்டது. அடிக்கடி கோபம் வருகிறது. வார்த்தை தவறுகிறது. ஓய்வு கட்டாயம். வைகோவுக்கு பின் கட்சியை துரை மீண்டும் திமுகவில் சேர்க்கலாம். லெட்டர்பாட் செலவாவது மிஞ்சும். இப்போதே செய்யாலம் - ஆனால் வைகோ பிரிந்த நேரம் உயிர்நீர்த்தோர் நினைவு அதை தடுக்கும். வைகோ இறந்தபின் அப்படி ஒரு நெருடலும் இராது. திமுக திட்டமிட்டு காயடித்த ஒரு அருமையான ஆளுமை வைகோ. அவரின் அரசியல் தகிடுதத்தங்களும் வீழ்ச்சிக்கு துணை போயின. அரசியலில் தரவுகளை விரல் நுனியில் வைத்து கொண்டு, அரங்கத்தை கட்டிபோடும் பேச்சாற்றல் கொண்டிருப்பது மட்டும் தலைவனாக வெல்ல போதுமானதாக இராது, துண்டு சீட்டை வைத்து பேசும் ஆட்களிடம் கூட தோற்று போக வேண்டி வரும் என்பதன் வாழும் உதாரணம் வைகோ. அமெரிக்காவில் அல் கோரை the President we never had என்பார்கள். அதேபோல் தமிழ் நாட்டில் வைகோ the CM they never had. ஈழத்தமிழரின் நன்றி வைகோவுக்கு எப்போதும் உண்டு.2 points
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
2 points
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
ராஜ்ய சபாவுல எங்களுக்கு தெரியாத இந்தி மொழியிலையா பேசறீங்க இருங்கடா என்ன பேசினாலும் புரியாத மாதிரி ஒரு ஆளை அனுப்புறோம் பாருங்க...!!!2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தத் திரிப்பக்கம் எட்டியும் பார்க்காமல் இருக்க வைத்துவிட்டது! நானும் மடைத்தனமாக CSK ஐ play-off க்கு வரும் என்று கணித்திருந்தேன்😩2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
கடற்புலி லெப்.கேணல் பிரசாந்தன் வின்சன் ஜெயச்சந்திரன் தருமபுரம், கிளிநொச்சி https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTM0MjA= லெப்.கேணல் செல்வி கணபதிப்பிள்ளை கலாதேவி நெடுந்தீவு, யாழ்ப்பாணம் https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTkzNjY=1 point- ‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு May 21, 2025 தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது. ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார். அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார். வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர். இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது. இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் “நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்” என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார். அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரிச்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மேஜர் பசீலன் அவர்களுடன்: நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார். இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார். முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார். 1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது. தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள். பசீலன் அண்ணை “எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை” என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார். தலைவருடன்: தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார். இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்டபோது “என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும்; பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது; போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்” என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார். வன்னிப்பிராந்திய தளபதியாக: முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் “இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை” எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார். பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது. பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது. பால்ராஜ் அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது: “மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார். “அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. “படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து – திட்டமிட்டுத் தாக்குவது வழமை. எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து,” என்று கூறியுள்ளார். இந்திய அதிரடிப்படைகளின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்: தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடயம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார். எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால் முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர். எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செறியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர். இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி. அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது. அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார். இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார். மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார். அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதி அவர். கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல்:- இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்-02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார். முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம். அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கிச் சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது. மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல்: இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. பசீலன் எறிகணை தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த ‘வானூர்தி’ இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது. அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது. அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார். வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது. சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத்தளபதியாக: இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார். சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார். மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார். மூலோபாயத் தாக்குதல்கள்: தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது “இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார். இதனைப் புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்துப் பயிற்சிகளை வழங்கினார். இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் “புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்,” என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது. 1991ம் ஆண்டு காரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது. வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம். அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று. அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது “சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்” இதுவே பலாலி – வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்களையும் கைப்பற்ற அடிப்படையானது. காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல், கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார். 1990 ஆண்டு ஈழப்போர் – 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார். இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது. யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல்: பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார். இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், ‘யாழ்தேவி’ என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது. தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது. இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது. காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல்: 1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது. அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார். தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது. சத்ஜெய முறியடிப்புத் தாக்குதல்: முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார். சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது. விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும். கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல்: ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் “உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட” என தெரிவித்தார். தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது. தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர். முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோடத் தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர். குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல்: இத்தாவில் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது “ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1200 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும். சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்” என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இத்தாவில் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1200 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார். இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும். சுனாமி ஆழிப்பேரலையின் போது: 2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார். பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு: பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார். அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா என முடிவெடுப்பது அவரது வழக்கம். சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர், “சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்,” என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும். தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் இத்தாவில் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுநர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக… தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல. தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும், எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி. https://www.uyirpu.com/?p=195941 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- ரப் பாடகர் வேடன்
1 pointஅந்த வட்டங்களை இனியும் காவிக்கொண்டு திரியக்கூடாது. அப்படியான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். Michael Jackson நிற வெறிக்காக போராடி வெற்றி பெற்றவர் என்பதை மறக்க கூடாது.1 point- ரப் பாடகர் வேடன்
1 pointலண்டன் தமிழ் கடையொன்றில் இப்படியான ஒரு உரையாடல் ( 'தாய் யாழ்ப்பாணத்தில் எவ்விடம்' ) இடம்பெற்றதாக ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டு இருக்கின்றது..1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை வெல்லவேணும் என்பவர்கள் கையொத்துங்கோ பாப்பம்🤪1 point- ரப் பாடகர் வேடன்
1 pointநிச்சயமாக. இலங்கையில் ஒருவர் திடிரெனெ பிரபலாமாகி - இந்தியாவில் அவருக்கு பல வாய்புகள் மேடைகள் எல்லாம் கொடுக்பப்பட்டன. திடிரென நரி ஏன் அம்மணமாக ஓடுகிறது என கிண்டினால்…. அவர் உமாகரன இராசையாவின் தம்பியாம். அண்ணம் கவிதை சொல்கிறேன் என வந்து, பின் காவி உடை போட்டு தான் நாக்பூர் எனபதை வெளிகாட்டினார். தம்பி இசையோடு வருகிறார் என நினைத்து கொண்டேன். ஆகவே இவர்கள் யார் எனபதை கொஞ்சம் ஆழமாக பார்கவும் வேண்டும்.1 point- 'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
1 pointஅங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது. தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது. தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள். இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது இப்ப ஒரு மேட்டிமைத்தனம் ஆகிவிட்டது இல்லையா. என்னமோ போங்க. கேட்டுக் கேட்டு சலிப்பா இருக்கு.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மேட்ச் பிக்சிங் மாதிரித்தான் தெரியுது! இல்லாவிட்டால் இன்னும் ஆறு ஓவர் இருக்கும்போது இப்படியா அடித்து அவுட் ஆவார்கள்! அப்படி அவுட் ஆகி இருந்தாலும் பரவாயில்லை! எனக்காவது புள்ளிகள் கிடைத்திருக்கும்!😜1 point- நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
நீங்கள் சொல்லியிருப்பவை சரியானவையே. லோக்சபா தேர்தல்களில் சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போன அல்லது தோல்வியடைந்த சிலர் ராஜ்யசபா சென்று அங்கிருந்து முக்கிய பங்களிப்பு வழங்கியிருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தேர்ந்த, முழுநேர அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட தயங்கி பின்வாங்குவதும் இப்படியான ஒரு வழியும் இருப்பதாலேயே.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பங்களூரு முன்னேறி விடும் போல தெரியுதே............ கிளி இறுதிப் போட்டியை நோக்கி பறக்குது............🤣.1 point- ’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’
’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’ உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான பேச்சாகவும், வாய் மூலமான மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாகவும் அமைய வேண்டும் என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/எம்-ஏ-சுமந்திரன்-கஜேந்திரகுமார்-நாளை-பேச்சு/175-3582111 point- நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
பிகு மனவருத்தம் ஆனால் இதை பெருசுபடுத்தபோவதில்லை என வைகோ கூறியுள்ளாராம்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒன்றல்ல இரண்டல்ல 20 பேர். நீங்கள் தனி மரம் இல்லை. ஓ அதுதான் நீங்கள் எங்களைத் தனியே தவிக்க விட்டதா. பாவம்ல நாம.1 point- ரப் பாடகர் வேடன்
1 pointஅண்ணை, கஞ்சா வழக்கு, புலிப்பல் வழக்கு போட்டாயிற்று. இனி தேசிய புலனாய்வு முகமை வழக்கு(NIA) போடலாம்!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் தான் சென்னையை நம்பியவன் என்று பார்த்தால் வரிசையில் இருக்கினம் நிறையப்பேர்?!1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உன்மைதான். கொடுத்துக் கெடுத்தது. ஒன்று எனக்கு. மற்றது மற்றவர்களுக்கு.1 point- ரப் பாடகர் வேடன்
1 pointஇவர் தமிழ் சார்ந்தும் புலி சார்ந்தும் கொஞ்சம் ஓவராக பாடுகிறார் அவரின் கையை பிடித்து இழுத்தார் என்று ஒரு விபச்சாரியை கண்ணகி ஆக்கினால்தான் என் தாகம் தீரும்1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
புலிகளும் வேண்டாம், இராணுவமும் வேண்டாம் என்று இடம்பெயராமல் தங்கள் வீட்டிலிருந்தவர்களையே இராணுவம் கொலை செய்து குழிதோண்டி புதைத்ததும் கிணறுகள் மலசல குழிக்குள் மூடியதும் தாங்கள் அறியாதது வியப்பே எனக்கு. தங்கள் காணிகளை, வீடுகளை பார்க்க சென்றவர்களை சுட்டுக்கொன்றதும் தெரியாததும் ஆச்சரியமே. கோவில்களிலும் வைத்திய சாலைகளிலும் தஞ்சம் புகுந்தவர்கள் மேல் குண்டுமழை பொழிந்ததும் கேள்விப்படாதது உங்கள் தவறே. எங்கெங்கோ வாழ்ந்தவர்களை விரட்டி புலிகளின் பின்னால் குவித்தது யார்? புலிகள் உருவாகமுதலே தமிழரை தேடித்தேடி கொன்றவர்கள் யார்? ஏதோ புலிகள் மக்களை தடுத்ததால்தான் இராணுவம் மக்களை கொலைசெய்ததுபோல் கதை பேசக்கூடாது. தங்கள் கைகளால் இராணுவத்திடம் கையளித்த தந்தையர், பிள்ளைகள், கணவன்மார் எங்கே? இவர்களை நம்பித்தானே கையளித்தார்கள்? பாடசாலைகள், வீடுகள் எல்லாம் ஏன் குண்டு வீசினார்கள்? புலிகளினாலா? புலிகளை அழித்தபின் தீர்வு என்று சொன்னார்களே, அந்த தீர்வு எங்கே? இன்னும் ஏன் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்? விகாரைகளை எழுப்புகிறார்கள்? தன்னார்வ தொண்டு நிறுவனங்களை, போர்நிறுத்த கண்காணிப்பு குழுவை ஏன் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்? சிறுவன் பாலச்சந்திரன்! அவன் ஆயுதம் ஏந்தவில்லை, அரசியல் பேசவில்லை, தனக்கு என்ன நிகழப்போகுது என்பதையே அறியாதவன். அவனை ஏன் கொன்றார்கள்? புலிகள் பயங்கரவாதிகள் என்கிறார்கள், இவர்கள் மனிதரை மீட்க போர்புரிந்தவர்கள், பொறுப்புள்ளவர்கள் இவ்வாறு செய்யலாமா? எங்கு போனாலும் தங்களுக்கு பாதுகாப்பில்லையென மக்களே புலிகள் பின்னால் ஓடினார்கள். மக்களை மீட்பதற்காக போர் புரிந்தவர்கள் அந்த மக்களை தங்க வைக்க வசதிகள் செய்திருந்தார்களா? அடிப்படை வசதியேதும்......? மக்கள் வெளியேறா வண்ணம் பாதைகளை, உணவு மருந்து விநியோகத்தை தடுத்தவர் யார்? யாரையும் உள்ளே அனுமதிக்காததன் நோக்கம் என்ன? மக்கட்தொகையை குறைத்து சொன்னதன் காரணம் என்ன? எப்படியாகிலும் அங்குள்ள மக்களை ஒரே இடத்தில் கூட்டி கொன்றுவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என்று பரப்புரை செய்வதற்கே. அதைத்தான் இன்றுவரை சொல்கிறார்கள். ஆயுத விநியோகம் தடை செய்யப்பட்டுவிட்டது, புலிகள் சரணடைய வெள்ளைக்கொடியோடு செல்ல பேச்சுவார்த்தை, காத்திருப்பு நடந்திருக்கிறது. இதில உள்ளுக்கை வரவிட்டு அடிப்போமென யாரிடம் புலிகள் சொன்னார்கள்?1 point- பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா
இந்த மனிதன் நேரத்திற்கு ஒரு கதை பேசுபவர், இதனாற்தான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர், தான் போரை முடிவுக்கு கொண்டுவந்தேன் என்று வேறை பங்கு கேட்க்கிறார். தமிழர் எல்லோரும் வந்தேறு குடிகள் என்று சொன்னவருள் இவரும் ஒருவர். அமெரிக்கா சென்றபோது, தொலைக்காட்சி பேட்டியோ பத்திரிகைப் பேட்டியோ ஒன்றில் இவரது பேச்சுப்பற்றி கேள்வி கேட்டபோது, தான் அப்படி சொல்லவேயில்லை என மறுத்து விட்டார். சிறிது நாட்களில் நாடு திரும்பியவர் பின் அமெரிக்கா பக்கம் செல்லவேயில்லை. இவ்வளவுக்கும் இவர் அமெரிக்காவில் கிறீன் அட்டை பெற்றவர். வடக்கில் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று முரசு கொட்டிக்கொண்டு பாதுகாப்பு பிரச்சினையாம். அப்போ தெற்கு, ஒரே கலவரமும் சூடுமாக இருக்கிறதே, நீதிமன்றத்துக்குள் சூடு நடத்தப்படுகிறதே, அதற்கு என்ன சொல்லப்போகிறார்? இவரை யாரும் தென்பகுதியில் கண்டுகொள்வதேயில்லை, ராஜபக்ஸக்கள் எடுக்கும் போர் வெற்றி விழாவிலேயே இவருக்கு அழைப்பு கிடைப்பதில்லை. போர்முடிந்த கையோடேயே சிறைக்குள் போடப்பட்டவர், அவமானப்படுத்தப்பட்டவர். இவருக்குத்தான் தேர்தலில் நம்ம தலைவர்கள் ஆதரவு வழங்கியவர்கள். பார்த்தீர்களா நன்றிக்கடனை? வெகு விரைவில் மஹிந்தா, நாமலோடு இணைவார் போலுள்ளது. பாலாய் வார்த்து தேனாய் ஊற்றினாலும் பாம்பு கடிச்சுக்கொல்லுமே.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிஎஸ்கே, பத்து அணிகளில் ஒரே ஒரு அணி.............. யாழ் களத்தையே கவிழ்த்துப் போட்டுதே...............🤣.1 point- மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
கரும்புலி மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் சந்திவெளி, மட்டக்களப்பு அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வ...கரும்புலிகள் மேஜர் அரசப்பன் மயில்வாகனம் அருட்செல்வன் சந்...மட்டக்களப்பு நகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு1 point- உணவை தேடி பல மைல் நடந்த பாலஸ்தீனிய மக்கள் - மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து உணவு பெட்டிகளை தூக்கினர் - இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகம்
இதெல்லாம் பனிக்கட்டியின் வெளியே தெரியும் முனை மட்டுமே. 1000 கிலோ ரிஎன்ரி வெடிமருந்தை நிரப்பிய MOAB குண்டுகளை விற்பது முதல், இப்படியாக அமெரிக்காவில் கொள்வனவு செய்த உணவை , அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்களின் பாதுகாப்போடு விநியோகிப்பது வரை, பிணம் தின்று வயிற்றை வளர்த்து, உழன்று, ஒரு நாள் செத்துப் போய் பூமிக்குப் பாரமாகப் போகும் பேர்வழிகள் நடமாடும் உலகம் இது!1 point- ரப் பாடகர் வேடன்
1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீண்ட காலத்திற்கு பின்னர் காதுக்கு இனிமையான அமைதியான பாடலை கேட்கின்றேன்.😍 https://youtu.be/QJ-4za89Y6k?si=J7im5V7LmBCF6pfY பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண் : ………………………………. தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம் இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் மற்றும் குழு : கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண் : …………………………….. பெண் : ……………………………….. ஆண் : ஓ….. பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ…. பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் பெண் : சிவம் கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை1 point- குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
தமிழினம் ஏன் அநியாயத்திற்கு தன்னை நல்லினமாகக் கட்டமைக்க முயன்று அழிந்து போகிறது.? போரில் ஒரு இனத்தை வென்றாலும் அங்கு தன் ஆட்சியை நிறுவாமல் தோற்ற இனத்திடமே ஆட்சியை ஒப்படைத்து வருவதைச் சரித்திரரீதியாகவும் அறிய முடிகிறது. ஆனால் அந்த தோற்ற இனமே தன்னை அழிக்க முற்பட்டு வருவதை இன்றுவரை உணராமல் தமிழினம் எதற்காகத் தன்னையே அழித்து வருகிறது.????🤔1 point- மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்...கடற்கரும்புலிகள் கப்டன் சுதாகரன் கனகசபை அருள் முறக்கொட்ட...முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழ...கடற்கரும்புலிகள் கப்டன் சித்தா பாலசிங்கம் சிற்றூபன் சுழி...முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படைக் கலங்களைத் தாக்கச் சென்றவேளை ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவு1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் கேள்விகள் 1-73 வரையான பதில்களின் அடிப்படையில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: தொடர்ந்து முதல் நிலையில் இருக்கும் @நந்தன் க்கு வாழ்துக்கள்1 point- குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!
ஒன்றுஅனுரா இனவாதிகளுக்கு பணிந்து போக வேண்டும், அப்படியானால் நாட்டில் சமாதானத்தை, நல்லிணக்கத்தை அவரால் கட்டியெழுப்ப முடியாது. கட்டியெழுப்ப வேண்டுமாயின் இந்த அச்சுறுத்தலுக்கு பணியாது, உண்மையில் இவர்கள் செய்த வேலைக்கு, இவர்களை சிப்பாய் என்று அழைத்ததே மேல், போரில் என்ன நடந்தது என நடந்தவற்றை காட்டுகிறேன் பார்க்க தயாரா என கொக்கரிப்பவர்களிடம் கேட்க வேண்டும். அப்படி போரில் நடந்த அக்கிரமங்களை நீங்கள் பார்க்கதயாரென்றால் இவர்கள் போர்க்குற்ற வாளிகள் ஆவர், பிரச்சனையில்லையா என கேள்வி கேட்க வேண்டும். ஆனால் அனுரா அதை செய்யமாட்டார், அதை செய்யவில்லையென்றால்; இந்த பிரச்சனை தொடர்கதைதான். ஆனாலும் சர்வதேசம் ஒருநாள் இவற்றை வெளியிடத்தான் போகிறது. இலங்கையில் இனவழிப்பு நடைபெறவில்லை என்பவர்கள். அப்போ என்ன சொல்லப்போகிறார்கள்? இனவழிப்பு நடைபெறவில்லையென்றால் ஏன் சணல் நான்கை பார்ப்பதற்கு இலங்கையில் தடை செய்துள்ளார்கள்? உங்கள் வீரர்களின் வீரத்தை, தியாகத்தை பார்க்க அவ்வளவு வெறுப்பு உங்களுக்கே. ஆனால் வெற்றி விழா, கோசம். அவர்கள் ஒன்றும் சும்மா போரிடவில்லை. இருக்கும்போது சம்பளம், இறந்தபின் குடும்பத்தினருக்கு சம்பளம். அதுவும் ஏம்மாற்றப்பட்டே போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.1 point- விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ
பப்பிளிக்கிலையே உந்த சாத்து எண்டால்.....வீட்டில உலக்கையாலதான் சாத்துப்படி போல... 🤣1 point- கருத்து படங்கள்
1 point1 point- மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
லெப்.கேணல் வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன் பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன்...லெப்.கேணல் வினோதன் தம்பிப்பிள்ளை பத்மநாதன் பழுகாமம், பெர...தரவைக்குளம் படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு1 point- மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
லெப்.கேணல் சோ (சத்தியநாதன்) செல்லத்துரை புவனேந்திரன் உயிலங்குளம், மன்னார் https://veeravengaikal.com/index.php?option=com_maaveerarlist&view=maaveerarlist&layout=detail&detail=MTY5NzY=&Itemid=1291 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்க படங்களக் காணேல என்று பார்த்தன். இது ப்ரித்தியா. இல்லையே.1 point - மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.