Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  2. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3311
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16468
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    38754
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/31/25 in all areas

  1. "சாம்பலாகிய யாழ் பொது நூலகமும் [01/06/1981] காதலும்" 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோடையின் ஈரப்பதமான அரவணைப்பில், ஆனந்த் என்ற கூச்ச சுபாவமுள்ள, கண்ணாடி அணிந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் பிரமாண்டமான யாழ்ப்பாண பொது நூலகத்தின் சாளரத்தின் அருகில் நின்று, வெளியே, தான் படித்த பாடசாலை, யாழ் மத்திய கல்லூரியையும், தான் விளையாடிய அதன் மைதானத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். ஆனால், அவன் விரல்கள் நீலத் துணியால் கட்டப்பட்ட, 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால்,கி.பி 1736 ஆம் ஆண்டளவில், எழுதப்பட்ட, சிங்கள மற்றும் தமிழர் வரலாற்றின் நெருங்கிய தொடர்புகளையும் யாழ்ப்பாணத்தின் பெருமையையும் அதன் பாரம்பரியத்தையும் வரலாற்று ரீதியாக கூறும் 'யாழ்ப்பாண வைபவமாலை' என்ற புத்தகத்தின் விளிம்புகளைப் மகிழ்வுடன் தேடின. அதில் அவனுக்கு ஒரு மகிழ்வு! பல பண்டைய தமிழர் மற்றும் இலங்கைத் தமிழர் வரலாற்று நூல்களை வாசித்த அவனுக்கு, இதையும் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுவது இயற்கைதானே! என்றாலும் அது உசாத்துணை அல்லது குறிப்பு பகுதியில் இருப்பதால், அங்கிருந்து தான் வாசிக்கவேண்டும். அது தான் அவனுக்கு பிரச்சனையாக இருந்தது. தமிழர் பண்பாட்டு மரபின் பெருமையை பிரதிபலிக்கும் திராவிட மற்றும் கிழக்கத்திய கலையின் ஒருங்கிணைப்புடன் கட்டப்பட்டு வெள்ளை வர்ணத்தில் ஒளிரும் அதன் முகப்புடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள் மற்றும் பரந்த வளைந்த நுழைவுகள் கொண்ட நுழைவாயில், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட மரக்கதவுகள் மற்றும் முல்லை இலைகள், வளைந்த அலங்காரங்கள் மற்றும் நுணுக்கமான மலர் வடிவ சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட, கோரிந்திய தூண்கள் (Corinthian Columns) கொண்ட பெரிய படிகளால் அலங்கரிக்கப்பட்டு, உயரமான சாளரங்கள், நுட்பமான மர வேலைப்பாடுகள், வெளிச்சம் நிறைந்த உள்வடிவமைப்பு, வாசகர்களுக்கு ஒரு அமைதியான வாசிப்பு சூழலை வழங்கும் அந்த பெருமைமிக்க நூலகத்திற்குள், அவன் யோசித்துக் கொண்டு நின்றான். நூலகத்தின் உள்ளே, 97,000 நெடுங்கால அரிய நூல்கள், பண்டைய கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள், பத்திரிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு இருந்தன. தரையில் பிரதிபலிக்கும் அளவுக்கு மென்மையாகப் மெருகேற்றப்பட்ட பளபளப்பான தரை, மேற்கூரை வழியே மெல்லிய ஒளியை உள்வாங்கும் திறமையான கட்டமைப்புடன் இருந்தது. நூலகத்தின் மையத்தில் பெரிய குவிமாடம் (குவிந்த கூரை / dome) அமைக்கப்பட்டிருந்தது, தமிழர் அறிவு மற்றும் பண்பாட்டு பெருமையின் சின்னமாக அது உயர்ந்து காட்சியளித்தது. கட்டிடத்தைச் சுற்றிய வளவில் [நிலத்தில்] பரவி வளர்ந்த மல்லிகைப் பூக்களின் மென்மையான நறுமணத்துடன் பழங்கால நூல்களின் மெல்லிய வாசனையும் அவ்விடத்தை நிரப்பியது. இது ஒரு புனிதமான தலமாகவும் கனவுகளின் பீடமாகவும் இருந்தது. முதிர்ந்த பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கவனமாக பட்டியலிடப்பட்ட புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில், தமிழர் வரலாறு அங்கு கிசுகிசுத்துக் கொண்டு இருந்தன. அந்த கிசுகிசு அவன் காதில் கேட்டுதோ என்னவோ, வேம்படி மகளீர் பாடசாலை உயர்வகுப்பு மாணவி மாலினியின் கிசுகிசுப்பு மட்டும் அவனுக்கு கேட்டது. அவன் திரும்பி பார்த்தான். அவள் இன்னும் பள்ளி சீருடையுடனே, எதோ ஒரு ஆய்வில், உதவி நூலகர் சயந்தியுடன் அலசிக்கொண்டு இருந்தாள். அவன் அங்கே மெல்லச் சென்று, எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அவளும் ஆமாம் என்று, சி. கணேசையார் 1939 ஆம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கைத் தமிழ்ப் புலவர்களின் வரலாறு" என்ற நூலில், பக்கம் ஆறில், நல்லூர் சரஸ்வதி மகாலயம் நூலகம் ஒரு சிங்கள அரசன் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றிய செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய விளக்கம் கேட்டாள். இது பதின்மூன்றாம் நூற்றாண்டளவில், யாழ்ப்பாணத்தில் நல்ல நிலையில் செயற்பட்டது என்றும், இந்த நூலகத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய நூல்கள் காணப்பட்டன என்றும், தற்போது நாயன்மார்கட்டு என அழைக்கப்படும் இடமே முன்னர் சரஸ்வதி மகாலயம் இருந்த இடமென என்றும், அறியப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். அப்பத்தான் அவன், அவளை நெருக்கமாக அருகில் பார்த்தான். ஒரு சிங்கள அரசன் நெருப்பு வைத்தானோ இல்லையோ, அல்லது போர்த்துக்கீசர் 17ஆம் நூற்றாண்டில் இதைச் செய்தனரோ இல்லையோ, இப்ப அவன் நெஞ்சத்தில், அவள் ஈவுஇரக்கமின்றி நெருப்பு வைத்துவிட்டாள்! அவன் இதயம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது!! அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும் தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக் கொண்டேன் என்றான் ஒரு கவிஞன். இவனோ அதைவிட ஒரு படி மேலே போய்விட்டான். காலுக்கு கீழ் பஞ்சு போல ஒரு உணர்வு, கொஞ்சம் சலங்கைச் சத்தம், மிதப்பது போல் உணர்வு, ஏன், பிரபஞ்சமே காதலியாக மாறி விட்டது, அவ்வளவுக்கு காரணம் சுட்டும் விழிச்சுடர்களான, அந்த அழகிய, அவளின் காந்தக் கண்கள்தான்! ”நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை தாக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன, வீக்கிய கணை கழல் வீரன் செங்கண்ணும் தாக்கணங் கணையவள் தனத்தைத் தைத்ததே..!” மாலினியின் வேல் போன்ற கண்கள் ஆனந்த்தின் அகன்ற தோளில் நிலைத்து நிற்க, ஆனந்த்தின் கண்கள் மாலினியின் தனங்களைத் தைத்து நின்றன, வாய்கள் பேசவில்லை, கேள்வியும் மறுமொழியும் மறைந்து விட்டன. விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்தது போன்ற ஒரு பிரமையில் இருவரும் மௌனமாக நின்றனர். சயந்தி, ஒரு புன்முறுவலுடன் தன் வேலையைக் கவனிக்க அங்கிருந்து அகன்றுவிட்டாள்! அமைதியான, அழகான மாலினியின் சந்திப்பு முன்னறிவிப்பு இல்லாமல், அவனது உலகத்தைத் திருப்பிய அச்சாக மாறியது. அவள் அடிக்கடி உயரமான, வளைந்த ஜன்னல்களுக்கு அருகில், பிந்திய மதியம் பாடசாலை முடிய இரண்டு மணித்தியாலம் அளவு, தனது வேம்படி பாடசாலைக்கு அருகிலேயே அமைந்து இருக்கும் யாழ்ப்பாண பொது நூலகத்தில், தன் தந்தை யாழ்ப்பாண மாநகரசபையில் வேலை முடிந்து வரும் வரை, அங்கு படிப்பது வழமை. அப்படியான ஒரு நாள் தான் அது. அவள் எனோ விடையை அறியாமலே, தான் முன்பு இருந்த இடத்தில் போய் அமர்ந்துவிட்டாள். அவளுடைய நீண்ட சடை அவள் தோளில் பட்டும் படாமலும் விழுந்து இருந்தது. அவளுடைய உதடுகள் தனக்குள் பழங்கால வசனங்களை முணுமுணுப்பது போல் அமைதியாக எதோ சொல்லிக் கொண்டு இருந்தது. ஆனால், சத்தம் வரவில்லை! யாழ்ப்பாண பொதுநூலக உசாத்துணை பகுதிக்கு அடிக்கடி வருவது ஒரு பிரச்சனையாக முன்பு நினைத்தவன், இப்ப தவறாமல் ஓய்வு கிடைக்கும் பொழுது வரத் தொடங்கி விட்டான். ஒருநாள், எதிர்பாராத மழையால் அவர்களின் முதல் உண்மையான உரையாடல் தொடங்கியது. அன்று மாலினியின் பொன் நிற உடல், அவளின் வேம்படி கல்லூரி சீருடையின் வெண்ணிறத்துடன் இணைய, மருட்சி தேங்கி நின்ற அவளின் விழிகள் அலைபாய, இரட்டைப் பின்னல்கள் அவளது நடையின் சீரான தாளப் போக்கிற்குப் ஏற்ப அசைந்தாட, பாடப் புத்தகங்களை மார்புக்கு நேராகப் பிடித்துக் கொண்டு அவள் நடந்து வந்த அழகு அப்படியே அவன் மனதில் எதோ ஒன்றைத் தோற்றுவித்தது. என்றாலும், அதை வெளியே காட்டாமல், ஆனால், அவளை இலகுவாகப் பார்க்கக் கூடியதாக அமர்ந்தான். இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தருகுதே! சக்கர தோடு கழுத்தைத் தொட சடை பின்னல் அவிழ்ந்து விழ சலங்கைக் கால் இசை எழுப்ப சங்காரம் செய்யுதே இள நகை! சங்கீதம் பொழியும் அவள் குரல் சந்தனம் மணக்கும் அவள் உடல் சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து சங்கடம் தருகுதே அவளின் பார்வை! மாலினி ஒரு குறிப்பிட்ட நூலைத் தேடும் அவசரத்தில், தனக்கு அருகில் இருந்த சாளரத்தை எட்டி மூட எத்தனிக்கும் பொழுது, மறுகையில் இருந்த சில புத்தகங்கள் நழுவப் பார்த்தன, அதற்குள் சில மழைத் துளிகள் உள்ளே விழுந்துவிட்டன. விலைமதிப்பற்ற அந்த நூல்கள் ஈரமான கல் தரையைத் தொடமுன், ஆனந்த், அவள் பக்கம் விரைந்து சென்று, தன் இயல்பான கூச்சத்தையும் மறந்து, அவள் கையைப்பற்றி, அந்த புத்தகங்களை கவனமாக எடுத்துவிட்டான். என்றாலும் அவற்றை அவளிடம் திருப்பி அவளிடம் கொடுக்கும் பொழுது அவன் கைகள் கொஞ்சம் நடுங்கின. அவள் 'அது பரவாயில்லை' என்று சிறு புன்னகையுடன் கூறி, அவ்வற்றைப் பெற்றாள். புத்தகங்களை அந்தந்த இடங்களில் திருப்பி வைத்துவிட்டு, அவன் அருகில் சென்று "நன்றி," சொல்லிவிட்டு, அங்கேயே பக்கத்து நாற்காலியில் அமர்ந்தாள். அவளுடைய கயல்மீன் போன்ற, கரும் மையிட்ட கண்கள் முதல் முறையாக மிக நெருக்கமாக நேரடியாகச் சந்தித்தன. "இந்த நூல்கள் ... என் தாத்தாவின் படைப்புகள். அவர் நமது வரலாற்றைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்" என்று தனது உரையாடலை ஆரம்பித்தாள். "இவரின் பேத்தியா நீங்கள்? அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான். ஆமாம் உங்கள் தாத்தாவின் நூல்கள் உண்மையில் மிகவும் விலைமதிப்பற்றவை, காலத்தின் தேவை " என்று அவன் பதிலளித்தான், அவனது குரல் ஒரு கிசுகிசுப்பை விட அதிகமாக இருந்தது. "நான் அடிக்கடி அவரது படைப்புகளைப் படிப்பேன். அவை நமது கடந்த காலத்தை மிகவும் உயிரோட்டமாக உணர வைக்கும் புதையல்கள்." என்றான். அந்த நாளிலிருந்து, அவர்களின் பாதைகள் அடிக்கடி குறுக்கிடுவது போல் தோன்றியது, யாழ்ப்பாண பொது நூலக புத்தக அலமாரிகளின் வரிசைகளுக்கு இடையே அவர்களின் அமைதியான ஒப்புதல் தலையசைப்புகள் படிப்படியாக நீண்ட உரையாடல்களாக வளர்ந்தன. அவர்கள் யாழ்பாணம் வைபவமலையிலிருந்து பல பகுதிகளைப் பகிர்ந்து கொண்டதுடன் மற்றும் தத்துவஞானி ஆனந்த குமாரசாமி, பேராசிரியர் டாக்டர் ஐசக் தம்பையா போன்ற குறிப்பிடத்தக்க நபர்களின் படைப்புகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளையும், அதேநேரம் ஆரம்பகால தமிழ் செய்தித்தாள்களின் பதிவுகள், குறிப்பிடத்தக்க பொருட்களின் மைக்ரோஃபிலிம்கள் [microfilms] மற்றும் காலனித்துவ சகாப்தத்தின் ஆவணங்களுடன் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகள் என எல்லாவற்றிலும் மேலோட்டமாக, தங்களுக்கு தேவையான பகுதிகளை இருவரும் ஒன்றாக அலசி, இலங்கை தமிழ் மக்களின், தமிழ் மொழியின் நீண்ட வளமான வரலாற்றைப் பற்றி விவாதித்தனர். மேலும் தங்கள் பாரம்பரியம் போற்றப்பட்டு பாதுகாக்கப்படும் எதிர்காலத்தைக் கனவு கண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, அவர்களின் பிணைப்பு ஆழமடைந்தது. நூலகத்திற்குப் பின்னல் காணப்படும் ஒதுக்குப்புறமான பூந் தோட்டத்தில் அவர்கள் சிலவேளை நீண்ட இருக்கையில் [bench] அமர்ந்து தங்கள் தனிப்பட்ட விடயங்கள் கதைப்பதும் உண்டு, அங்கு பிந்திய மதிய வெயிலிலும் கூட கல் பெஞ்சுகள் குளிர்ச்சியாக இருக்கும். அதில் அவள் அமர்ந்து, மலர்களை வட்டமிடும் வண்டுகளை மற்றும் வண்ணாத்திப் பூச்சிகளைப் வேடிக்கை பார்ப்பாள். இடுப்பிலிருந்து இறங்கிவிடுவேன் எனப் பயமுறுத்திக்கொண்டிருந்த அரைக் காற்சட்டையை இறுகப் பற்றியபடி கடையிலிருக்கும் மிட்டாயை ஆசை பொங்கப் பார்க்கும் சிறுவனைப் போல, அவன் அவளைப் பார்ப்பான். இப்படி சிலவேளை அவர்கள் அமைதியாக கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தனர், நேரத்தைக் களித்தனர். ஒரு நாள், ஆனந்த் அவளிடம் கிசுகிசுத்தான். அவள் முன்னோக்கி சாய்ந்து அவன் வார்த்தைகளைப் உற்றுக் கேட்கும் போது, அவள் இடையின் மென்மையான வளைவில் அவன் கண்கள் பதிந்தன. அதைக்கண்ட அவள் அதிசயித்தாள். அவள் கடை இதழில் ஒரு புன் முறுவல் புறப்பட்டது. அவன் அப்படியே சொக்கிப்போனான்! கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். உசாத்துணை பகுதியில், இடைவெளிவிட்டு தள்ளி இருந்தாலும், இருவர் கண்களும் அமைதியாக ஒருவரை ஒருவர் எண்ணங்களில் நெருங்கினர். அவன் கண்களால் அவளிடம் 'உன் சகோதரர்கள் கடலில் சென்று மீன்களை பிடித்து (கொன்று) வாழ்கிறார்கள். நீயோ என் உடலின் உள் சென்று என் உயிரை எடுத்து (கொன்று) வாழ்கிறாய். உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை என்னால் பார்க்க முடியவில்லையே என்றான்! ஆனால் அதை அவள் பொருட்படுத்தவில்லை, அவள் தன் நாற்காலியை கொஞ்சம் விலத்தி வைத்து, தரையில் எதோ விழுந்ததை பொறுக்குவது போல குனிந்து, இடையை மேலும் காட்டி, அங்குமிங்கும் கண்களைச் சுழட்டி, தலையை நிமிர்த்தி, அவனை தன் மான் விழியால் சுட்டாள். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் என் உயிரைக் கொல்லுகிறாய். மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுவதை எப்படி நான் பொறுப்பேன் என்றான். அவள் தன் குறும்புத்தனத்தின் பின், தன் விரல்களால் பழைய உசாத்துணை புத்தகங்களின் சிதைந்த விளிம்புகளை தற்செயலாகத் தேடினாள். "நம் பெயர்கள், நம் கதைகள், இந்தப் பக்கங்களிலும் ஒரு காலம் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். அதனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு யாராவது அவற்றைப் படிக்கும் போது, நாம் வாழ்ந்தோம், நாம் நேசித்தோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்." என்றாள். சாளரத்தின் வழியாக ஊடுருவி வந்த மங்கலான சூரிய ஒளியில் அவன் கண்கள் மின்னின, மாலினி திரும்பி பார்த்தாள். அங்கு ஒருவரும் இல்லை. அவள் கை நீட்டி, அவன், தன் விரல்களை லேசாகத் தடவ அனுமதித்தாள். "ஒருவேளை அவை ஏற்கனவே இருக்கலாம்," என்று அவள் மீண்டும் கிசுகிசுத்தாள், "இந்த இடத்தின் காற்றில் அது இன்று எம் இருவரின் விரல்களால் ஒன்றாக இணைந்து எழுதப்பட்டு விட்டதே." என்றாள். அவர்களின் பகிரப்பட்ட தருணங்கள் யாழ்ப்பாண பொது நூலகத்துக்குள் மீண்டும் மீண்டும் தினம் தினம் தொடர்ந்தன - பிரதான மண்டபத்தின் குறுக்கே ஒருவருக்கு ஒருவர் திருடப்பட்ட பார்வைகள், நாற்காலியில் அமரும் பொழுது விரல்கள் பட்டும் படாமலும் உராய்வது. பண்டைய அல்லது அண்மைய காதலர்களின் குறிப்புகளைப் புரட்டும் போது, அவர்களுக்கிடையிலான அமைதியான சிரிப்புகள் எனத் தொடர்ந்தன. அவர்கள் ஒருவருக் கொருவர் சிறிய குறிப்புகளை, உதாரணமாக, கவிதை வரிகள், பண்டைய காதல் பாடல்களின் சில வரிகள் மற்றும் வாக்குறுதிகள் அல்லது பொன்மொழிகள் போன்றவற்றை ஒரு சிறு காகித தாளில் எழுதி, அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களின் பக்கங்களில் மறைத்து வைத்து, அதில் ஒரு சுகம் கண்டனர். தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் அதிகரித்து வரும் விரோதம், யாழ்ப்பாணத்தை கொதிநிலை பயம் மற்றும் வெறுப்பின் கொப்பரையாக மாற்றி, தமிழர் தாயகத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறையின் நிழல்கள் பரவியிருந்த இந்த நேரத்தில் தான், இன்று அவர்களின் காதல் முழுமையாக மலர்ந்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை, மே மாதம் 29,1981 ஆம் திகதி. 1971 ஆம் ஆண்டு, இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக கல்வி மற்றும் மொழியில் பாகுபாடு காட்டும் கொள்கைகளை அமல்படுத்தியது. இது, ஏற்கனவே இருந்த இனப் பதட்டங்களுடன் சேர்ந்து, தமிழ் இளைஞர்களிடம் எழுச்சிக்கு வழிவகுத்து, இறுதியில், 1972 இல் போராளிக் குழுக்கள் உருவாக வழிவகுத்தது. அதைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் பற்றி முழுமையாக இருவரும் தற்செயலாகக் இன்று கதைத்தனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'.என்பார்கள். அப்படியான ஒன்றைத்தான், கி.மு. 3000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரீகத்தை படைத்த மாயன் மக்களை துன்பத்தில் இருந்து மீட்பவர் [இரட்சகர்] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர். மாயன்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா? அவன், அவள் முகத்தைப் பார்த்து கேட்டான. ஆனால், அதற்கிடையில் தந்தை வரும் நேரம் வந்ததால், விடை கொடுக்காமல், விடை பெற்று மாலினி போனாள். இனி ஜூன் ஒன்று திங்கள் தான், அவளை மீண்டும் காணமுடியும் என்ற ஏக்கத்துடன் அவனும் வீடு திரும்பினான். மே 31, 1981 அன்று மாலை, ஞாயிறுக்கிழமை ஆனந்த் நூலகப் படிகளில் நின்று, பழைய நகரத்தில் உள்ள ஒரு சிறிய புத்தகக் கடையில் கண்டெடுத்த தமிழ் காதல் கவிதைகளின் மெல்லிய தொகுதி ஒன்றை மாலினிக்கு ஜூன் 1, திங்கள் கிழமை பரிசாக கொடுக்க வேண்டும் என்று, அதை கையில் வைத்துக் கொண்டு கொஞ்ச நேரம், கல்வியின் தெய்வம் சரஸ்வதியை பார்த்துக் கொண்டு நின்றான். அந்தப் புத்தகம் ஆழமான மெரூன் நிறத் தோலால் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கங்கள் பல நூற்றாண்டுகளாக ஏக்கத்தையும் காதலையும் பேசும் வசனங்களால் நிரப்பப்பட்டு இருந்தன. மே 31 1981 இரவு நாச்சிமார் கோயிலடியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, நாச்சிமார் கோவிலடிக்கு காவல்துறையினரும், துணை இராணுவக் குழுக்களும் சீருடை அணிந்தவர்களாகவும், சீருடை அணியாதவர்களுமாக அங்கு விரைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர். அருகில் இருந்த மூன்று வீடுகள், இயந்திர ஈருளிகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களும் தாக்கப்பட்டனர். இவ்வகையான பதட்டங்களால் சோர்வடைந்த யாழ் மக்கள், வீடுகளில் நேரத்துடன் முடங்கினர். யாழ்ப்பாண பொது நூலகமும், சந்திரனின் கண்காணிப்புக் கண்களின் கீழும், கடல் காற்றின் கிசுகிசுப்பின் கீழும், அதன் பிரமாண்டமான கதவுகள் உறுதியாக மூடிய நிலையில் அமைதியாக நின்றது. ஆனால் ஜூன் 1, 1981 ஆம் தேதி அதிகாலையில், மே 31 இன் நள்ளிரவுக்குப் பிறகு, யாழ்ப்பாண பொது நூலகம் அருகில் அமைதி சிதறியது. சிங்கள வன்முறைக் குழு ஒன்றால் இந்நூலகம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. அடர்த்தியான கருப்பு புகை வானத்தில் சுழன்று, எரியும் காகிதத்தின் கடுமையான வாசனையையும் பல நூற்றாண்டுகள் பழமையான பனை ஓலைகளையும் சுமந்து சென்றது. அரை மைல்களுக்கு அப்பால் இருந்த ஆனந்த் மற்றும் பலர் தொலைதூரக் கூச்சல்களின் சத்தத்திற்கும், அடிவானத்தை வரைந்த ஆரஞ்சு நிற ஒளிக்கும், விழித்தனர். உடனடியாக அவனும் அவனைப் போல சிலரும் துணிந்து நகர மையத்தை அடையும் போது, மிகவும் தாமதமாகி விட்டது. இரவு முழுவதும் காலியாக இருந்த நூலகம், இடிந்து விழும் எலும்புக்கூடாக மாறியிருந்தது, அதன் விலைமதிப்பற்ற சேகரிப்புகள் இருண்ட வானத்தில் எரிந்து கருகின. யாழ்பாணம் வைபவமலை மற்றும் பல நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவு உள்ளிட்ட விலைமதிப்பற்ற கையெழுத்துப் பிரதிகள் சாம்பலாகின. அடுத்த நாட்களில், யாழ்ப்பாணம் சாம்பல் நகரமாக இருந்தது. ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக இருந்த நூலகம், புகைந்து கொண்டிருக்கும் இடிபாடுகளில் கிடந்தது, அதன் கருகிய எலும்புக்கூடு அதைச் சூழ்ந்திருந்த வன்முறைக்கு ஒரு கொடூரமான சான்றாகும். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், ஆனந்த் சில நாட்களுக்கு மாலினியைச் சந்திக்கவில்லை. மற்றும் மாலினியின் வீடு, நாச்சிமார் கோவிலடி என்பதாலும், அது தான் முதலில் தாக்கப்பட்ட இடம் என்பதாலும், அவளுக்கு, அவளின் குடும்பத்துக்கு என்ன நடந்தது என்பதை அறிய, அவன் ஆவலாக இருந்தான். என்றாலும் அதன் பின் அவன் அவளைக் காணவே இல்லை. பாடசாலைக்கும் வரவில்லை என்பதை அவளின் பாடசாலை தோழி ஒருவள் மூலம், இரண்டு கிழமையின் பின், அறிந்தான். அதன் பின், அவன் விசாரித்ததில், அவளின் குடும்பம் கொழும்புக்கு அல்லது வெளிநாடு ஒன்றுக்கு இடம்மாறி விட்டனர் என்பதை அறிந்தான். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. அன்றைய காலத்தில் கைத்தொலை பேசி அல்லது வலைத்தளங்கள் இல்லை. பின்னர் 1984 ஆம் ஆண்டு நன்கொடைகளுடன், யாழ்ப்பாண பொது நூலகம் ஓரளவு மீண்டும் பகுதியாக கட்டப்பட்டது. ஆனந்த் இன்னும் அவளை மறக்க வில்லை. ஆனந்த் இன்னும் அந்த - பகுதியாக திறக்கப்பட்ட - நூலகத்தின் காலியான அரங்குகளில் அலைந்து திரிந்தான். இழந்த கட்டிட தொகுதிகளுக்காகவும், நூல்களுக்காகவும் மற்றும் காற்றில் சாம்பலைப் போல, அவனது பிடியிலிருந்து நழுவிய காதலுக்காகவும், அவனது இதயம் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கிறது! "நீ இன்னும் இங்கே இருக்கிறாய், மாலினி," அவன் கிசுகிசுத்தான் "நாம் இழந்த அனைத்தின் நினைவுகளிலும். நான் படித்த ஒவ்வொரு வசனத்திலும், மீதமுள்ள பக்கங்களின் ஒவ்வொரு கிசுகிசுப்பிலும், நீ இன்னும் இங்கே இருக்கிறாய். வாழ்கிறாய்! " என்று அவன் முணுமுணுக்க என்றும் மறக்கவில்லை! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்
  2. நாளை ஞாயிறு (01 ஜூன்) மூன்றாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 76) ஞாயிறு 01 ஜூன் 2:00 pm GMT அஹமதாபாத் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI மூன்று பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். போட்டியில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் வெல்லும் என எவரும் கணிக்கவில்லை! போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது! நாளைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று மூன்று பேருக்கு புள்ளிகள் கொடுக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைகளைப் பரிமாறுமா?
  3. அவரும்தான் எல்லா முதலமைச்சர்களுக்கும் சலிக்காமல் வாழ்த்துக்கள் சொல்கிறார், ஆனால் யாரும் ஒரு பதவியும் கொடுக்க வில்லை . ......... ! 😂 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . .......... ! 😂
  4. தென் கொரிய அதிசயம்
  5. நண்டுகள் குலாமின் சார்பாக வாழ்த்துக்கள்.😂
  6. சீனா, பாகிஸ்தானும், இந்தியாவும் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் காஸ்மீரை விடுவித்து காஸ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் இப்படி தேவையில்லாத வலிகள் இருக்காது பிராந்தியம் நிம்மதியாக இருக்கும் (எதுக்கு அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படுவது?). முதலில் அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லாமல் அல்லாடும் மக்களை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனும் மனநிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே உசுப்பேற்றும் போலி தேசி அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியும். முதலில் தேசமாக ஒன்றினையாமல் (மதம், சாதி, வர்க்க) இந்த ஆயுதங்களை உருவாக்குவதால் எந்த பலனும் ஏற்படாது (இந்தியாவில் அது எப்போதும் நிகழாது).
  7. Cats We Love · Romeo and Juliet - Cat Version 🐈"
  8. இன்றைய இரண்டாவது Play-off Eliminator போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரோஹித் ஷர்மாவினது புயல்வேக 81 ஓட்டங்களுடனும், ஜொனி பெயிர்ஸ்ரோவின் மின்னல்வேக 47 ஓட்டங்களுடனும் சிறந்த தொடக்த்தினாலும், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்டியா ஆகியோரது கமியோ ஆட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 80 ஓட்டங்களை எடுத்திருந்தாலும், அணித் தலைவர் சுப்மன் கில் ஒரு ஓட்டத்துடன் வெளியேறியதாலும், பின்னர் ஆடவந்தவர்களில் வாஷிங்டன் சுந்தரின் மின்னல்வேக 48 ஓட்டங்களைத் தவிர மற்றையோர் நிலைத்து ஆடமுடியாததாலும், சவாலான வெற்றி இலக்காக இருந்ததாலும், இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டி Qualifier 2 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. குஜராத் டைட்டன் அணி ஐபிஎல் 2025 இலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. யாழ்களப் போட்டியாளார்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறும் எனக் கணித்த ஐந்து பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: முதல் இரு நிலைகளில் @நந்தன் உம், @புலவர் ஐயாவும் உறுதியாக நிலையெடுத்துள்ளனர்!
  9. அந்த நண்டு இப்ப குழம்பு சட்டிக்குள்ள
  10. இந்த பாட்டின் அர்த்தம் தெரியாது ஆனால் 1, 2, 3 என்பது விளங்கும், இன்று இந்த மூவருக்கும் பஞ்சாப்பின் பரிசாக இந்த பாட்டு இப்படிக்கு நண்டுகள் குலாம்🤣
  11. ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே. ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும். ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும். இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.
  12. ரெண்டு பேர் ஓகே, ஆனா மூணாவதா ஒருத்தர் சேர்ந்திருக்கார் பாருங்க அங்கதான் சனிபகவானே இருக்கார்.
  13. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. இரண்டு பேரும் சேர்ந்து இறங்கிறோம். பஞ்சாப்பை பறக்க விடுறம். சூர்யா ஒரு 90 அடிக்கிறான் நாளைக்கு.
  15. நண்டுகள் நாளையும் வரலாம் 😍
  16. ஏன் தேஜஸ் என ஒரு பேரிச்சம்பழத்துக்கு போடும் விமானத்தை செய்தவை எல்லோ🤣. அண்மைய போரில் அதை மேலே எழுப்பகூடவில்லை….அந்தளவுதான் மேட் இன் இந்தியாவின் சீத்துவம். அமெரிக்காவின் F 35 வை வேற வாங்க ஆசையாம் 🤣. ரபேல் போல அதன் மானத்தைதையும் கப்பல் ஏற்றி விடுவார்கள் சப்பாத்தி ஸ்கூவாட்றன். அமரிக்கா விழித்து கொள்ள வேண்டும் 🤣. 👆தாம் விமானங்களை இழந்ததை முதன்முதலாக ஒத்துகொள்ளும் இந்தியாவின் படைக்களின் பிரதானி.
  17. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 30 மே 2025 பாம்புகளைப் பார்த்தாலே மனிதர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படக்கூடிய சூழல் இல்லை என்றாலும்கூட, பதற்ற உணர்வு என்பது மனிதர்களிடையே தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. இந்தச் சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், உயிர் பயமும் பதற்றமும் உச்சத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், அந்தப் பதற்றம்தான் முதல் எதிரி என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்வதாகவும் அவற்றில் சுமார் 58,000 பேர் உயிரிழப்பதாகவும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கைப்படி, விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில்தான் அதிக அளவிலான பாம்புக்கடி சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், ஒரு பாம்பு கடித்துவிட்டால் உயிரைக் காக்க உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன? என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதுகுறித்த தகவல்களை, பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் பிபிசி தமிழிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கண்ணாடி விரியன் பாம்பு கடித்தவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது? பொதுவாக, மழைக்காலங்களில் அதிகமான பாம்புக்கடி சம்பவங்கள் இந்தியாவில் நடக்கின்றன. அதற்குக் காரணம், அவைதம் வாழ்விடங்களை இழப்பதால், மழைக்காலங்களில் விவசாய நிலங்கள், தோட்டங்கள், வீடுகள் போன்ற இடங்களில், குவித்து வைக்கப்பட்டிருக்கும் விறகுகள் அல்லது பொருட்களுக்கு இடையில் தஞ்சம் புகுவதே என்கிறார் முனைவர் மனோஜ். அவரது கூற்றுப்படி, ஏதேனும் ஒரு சூழலில் ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால், முதலில் கடிபட்ட நபர் பதற்றப்படக்கூடாது. பதற்றத்துக்கு உள்ளாகும்போது, ரத்த ஓட்டம் உள்பட உடலின் செயல்பாடுகள் வேகமெடுக்கும். அதன் விளைவாக, பாம்பின் நஞ்சு வேகமாக கடிபட்ட இடத்தில் இருந்து மற்ற பாகங்களுக்குப் பயணிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல, பலரும் பாம்பு கடித்த இடத்துக்கு மேலாக கயிறு, துணி போன்றவற்றால் இறுக்கமாகக் கட்டுகிறார்கள். இப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது என்கிறார் மனோஜ். பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் அதுகுறித்து விளக்கிய அவர், "இப்படிச் செய்வதால், ரத்த ஓட்டம் முழுவதும் தடைபடுவதோடு, நஞ்சு அங்கேயே அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்ட இடத்திலுள்ள திசுக்கள் அழுகிவிடும். இது, கை அல்லது கால் என அந்தக் குறிப்பிட்ட பாகத்தையே நீக்கும் அபாயத்தை உருவாக்கலாம். ஒருவேளை, காட்டுக்குள்ளோ அல்லது உடனடியாக மருத்துவமனையை அணுக முடியாத பகுதியிலோ இருந்தால், உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு முதலுதவியாக இதைச் செய்யலாம். ஆனால், பாம்பு கடித்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக மருத்துவ உதவியைப் பெற்றுவிட முடியுமெனில் நிச்சயமாக அப்படிச் செய்யக்கூடாது," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கட்டு வரியன் இதுபோக, நாய்க்கடிக்கு செய்வதைப் போல் சோப்பு போட்டு முழுவதுமாகக் கழுவக்கூடாது. நாய் கடித்தால் அப்படிக் கழுவுவது காயத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகளை அகற்ற உதவும். ஆனால், பாம்பைப் பொறுத்தவரை இதுவே ஆபத்தை பெரிதுபடுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் மனோஜ். அதோடு, பாம்புக்கடிக்கு ஆளான நபர் நடப்பது, ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. முனைவர் மனோஜின் கூற்றுப்படி, உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் எப்படி அந்த இடத்தைச் சிறிதும் அசைக்காமல் வைத்துக்கொண்டு சிகிச்சைக்குச் செல்வோமோ அதேபோலத்தான் பாம்புக்கடியின் போதும் செயல்பட வேண்டும். அப்படியின்றி, இயல்பாக உடலை இயக்கிக்கொண்டே இருந்தால், அது நஞ்சு ரத்தத்தில் விரைவாகப் பரவ வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். கண்டிப்பாக, சிகிச்சை என்ற பெயரில் கடிபட்ட இடத்தைக் கீறிவிட்டு, வாய் வைத்து நஞ்சை உறிஞ்சி வெளியே எடுக்க முயலக்கூடாது. இப்படிச் செய்வதால் நஞ்சு நிச்சயமாக வெளியேறாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒற்றைச் சக்கர நாகம் "அதற்கு மாறாக, ஒருவேளை பாம்பு மேற்புற சதையில் மட்டுமே கடித்திருந்தால், இப்படிக் கீறிவிடுவது, நஞ்சு மேலும் ஆழமாக உள்ளே பரவக் காரணமாகிவிடும். அதோடு, காயத்தின் மீது வாய் வைத்து உறிஞ்சும் நபருக்கு, வாய்ப்புண், சொத்தைப் பல் ஆகியவை இருந்தால், கடிபட்ட நபரைவிட, இப்படி சிகிச்சையளிக்க முயலும் நபர்கள் விரைவில் நஞ்சின் வீரியத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் மேலும், கடிபட்ட இடத்தைப் பிதுக்கி நஞ்சை வெளியே எடுக்க முயல்வது, அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி நஞ்சு உடலுக்குள் வேகமாகப் பரவ வழிவகுக்கும்," என்று எச்சரிக்கிறார் மனோஜ். பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பட்டை கட்டு வரியன் ஒருவேளை ஒருவர் பாம்புக்கடிக்கு ஆளாகிவிட்டால், முதலில் பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் மனோஜ். அடிப்படையில் நிச்சயமாக உயிர் பயம் ஏற்படும். இருப்பினும், "அதன் விளைவாக ஏற்படும் பதற்றம், நஞ்சை பிற பகுதிகளுக்கு வேகமாகப் பரவச் செய்துவிடும் என்பதால் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியமாகிறது." பாம்புக்கடி குறித்து ஆய்வு செய்து வரும் மனோஜின் கூற்றுப்படி, இந்தியாவில் ஏற்படும் பாம்புக்கடி சம்பவங்களில் சுமார் 95% நஞ்சற்ற பாம்புகளால்தான் நிகழ்கின்றன. அவற்றால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. "வெறும் 5% பாம்புக்கடிகள் மட்டுமே நச்சுப் பாம்புகளால் ஏற்படுகின்றன என்பதால், முதலில் பயப்படுவதையும் பதற்றப்படுவதையும் தவிர்ப்பது அவசியம்." பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,புல்விரியன் அதேவேளையில், நஞ்சுள்ளதா, நஞ்சற்றதா என்பதைப் பொருட்படுத்தாமல் பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அத்தியாவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். பாம்பு கடித்த 30 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரத்துக்குள் மருத்துவ உதவியைப் பெற்றால் உயிருக்கு ஆபத்து ஏதுமின்றிக் காப்பாற்ற முடியும் என்கிறார் அவர். அதேவேளையில், நாகம் போன்ற வீரியமிக்க நஞ்சைக் கொண்ட பாம்புகளைக் கடுமையாகச் சீண்டிவிட்டு, ஆத்திரமூட்டியதால் ஒருவர் கடிபட்டால், காப்பாற்றுவது மிக மிக அரிது என்றும் எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,DR.M.P.KOTEESVAR படக்குறிப்பு,பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்னேக்பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் ஏனெனில், "அத்தகைய சூழலில் பாம்பு மிக அதிகளவிலான நஞ்சைச் செலுத்திவிடும். ஆகவே, அதன் விளைவுகளும் உடனடியாக நிகழ்ந்து, விரைவாக உயிரைப் பறித்துவிடும். அந்தச் சந்தர்ப்பங்களில் 30 நிமிடங்களுக்குள் சென்றால்கூட காப்பாற்றுவது மிகவும் சிரமம்." அடுத்ததாக, கடித்த இடத்திலோ அல்லது அதைச் சுற்றியோ ஒருவர் அணிந்திருக்கக்கூடிய வளையல், கொலுசு, மெட்டி, மோதிரம் போன்ற ஆபரணங்கள் அல்லது கயிறுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றை அகற்றிவிட வேண்டும். "பாம்பு கடித்த இடத்தைச் சுற்றி நஞ்சின் விளைவாக வீக்கங்கள் ஏற்பட்டால், அவையே மேற்கூறிய கயிறு கட்டும் செயலின் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உடனடியாக அவற்றை நீக்கிவிட வேண்டும்." கூடவே, பாம்புக்கடிக்கு உள்ளான நபரை, கடிபட்டதில் இருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வரை அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஒருவர் குறித்து வைத்து, மருத்துவருக்குத் தெரிவிப்பது சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நச்சுப் பாம்புகள் யாவை? இந்தியா முழுக்கவே பரவலாக அதிகமான பாம்புக்கடி மரணங்களுக்குக் காரணமாக இருப்பவை நான்கு பாம்புகள். அவை, கண்ணாடி விரியன் – மனித வாழ்விடங்களில் எண்ணிக்கையில் இருப்பதாலும், இவை பல நேரங்களில் மலைப்பாம்பு எனத் தவறாகக் கருதப்பட்டு, அலட்சியமாகக் கையாளப்படுவதாலும் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன. நாகம் – மிகவும் வீரியமிக்க, நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நஞ்சைக் கொண்டவை என்பதால், உடலில் அதன் விளைவுகளும் விரைவாகவே ஏற்படக்கூடும். சுருட்டை விரியன் – மிகச் சிறிய உடலமைப்பு உள்ளவை என்றாலும், வீரியமிக்க நஞ்சைக் கொண்டவை கட்டு வரியன் – இவற்றின் நஞ்சு உடலில் நரம்பு மண்டலத்தைப் பாதித்து தசைமுடக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படாத, ஆனால் ஆபத்தான நஞ்சுள்ள பிற பாம்புகள் புல் விரியன் (Bamboo pit viper) சோலை மண்டலி (Malabar pit viper) குற்றாலக் குழிவிரியன் (Hump nosed pit viper) ஒற்றைச் சக்கர நாகம் (Monocled cobra) பட்டை கட்டு வரியன் (Banded Krait) இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளின் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சோலை மண்டலி பாம்புக்கடிக்கான நஞ்சுமுறி மருந்தைப் பொறுத்தவரை, இரண்டு வகைகள் உள்ளன. அவை, மோனோவேலன்ட் மற்றும் பாலிவேலன்ட். மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்து என்பது ஒரு குறிப்பிட்ட பாம்பின் நஞ்சை முறிக்கப் பயன்படும் மருந்து. பாலிவேலன்ட் மருந்து என்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாம்புகளின் நஞ்சுக்கு எதிராகச் செயலாற்றக்கூடிய நஞ்சுமுறி மருந்து. ஒவ்வொரு பாம்புக்கும் தனித்தனியாக மோனோவேலன்ட் நஞ்சுமுறி மருந்தைத் தயாரிப்பது மிகவும் சவாலான, சிக்கல்மிக்க பணி என்பதால், இந்தியாவில் பாலிவேலன்ட் நஞ்சுமுறி மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதாவது, "நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு வரியன் என எந்தப் பாம்பு கடித்தாலும் அதற்கு ஒரே நஞ்சுமுறி மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும்" என்கிறார் மனோஜ். இருப்பினும், ஒருவர் பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு உடனடியாக இந்த சிகிச்சை வழங்கப்படாது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குற்றாலக் குழிவிரியன் மனோஜின் கூற்றுப்படி, 20 நிமிட ரத்த உறைவு பரிசோதனை (20min WBCT) மேற்கொள்ளப்படும். "சராசரியாக மனிதர்களுக்கு இருக்கும் ரத்தம் உறையும் தன்மை சரியாகச் செயல்படுகிறதா என்பது இந்தப் பரிசோதனையில் அவதானிக்கப்படும். நச்சுப்பாம்பு கடித்திருந்தால், அதன் நஞ்சின் காரணமாக ரத்தம் 20 நிமிடங்களுக்கு உறையாது. அதன் மூலம், கடித்தது நச்சுப் பாம்பா, நஞ்சற்ற பாம்பா என்பதை மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதன் மூலம் நச்சுப் பாம்புதான் கடித்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே நஞ்சுமுறி மருந்து வழங்கப்படும்." ஒருவேளை, நஞ்சில்லாத பாம்பு கடித்திருந்து, அதை அறியாமல் நஞ்சுமுறி மருந்து கொடுக்கப்பட்டால், அதன் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதாலேயே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் மனோஜ் விவரித்தார். மேலும், நஞ்சுள்ளதோ, நஞ்சற்றதோ, ஒரு பாம்பு கடித்துவிட்டாலே, உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம் என்றும் உரிய பரிசோதனைகளின் மூலம் ஆபத்தில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் முனைவர் மனோஜ் வலியுறுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz9y41g0y8po
  18. பாம்பை மிதித்து அல்லது அடித்து அதனிடம் கடி வாங்கக் கூடாது . ...... கூடிய சீக்கிரம் அது கடிக்கும் எல்லைக்கு அப்பால் ஓடித் தப்ப வேண்டும் . ......... ! 😁
  19. பாஸ்கருடனான பேட்டி மிகவும் நன்றாக இருந்தது ......... ! 👍 நன்றி நொச்சி ......... !
  20. உண்மை. இந்த உண்மை சாதாரண மக்களிடம் சென்றடைவதைத் தடுப்பதில் ஊடகங்களின் உசுப்பேத்தலும் வெற்றி முரசுகளும் முன்னிலையில் உள்ளன. கிந்திய இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் மக்களும் தமது பசியை மறந்து இந்த உசுப்பேத்தலில் மயங்கிவீழ்ந்துவிடுவர். மும்பையின் சேரி வாழ் மக்களை மீட்க இந்ந யுத்தத் தளபாடச் செலவுகளைப் பயன்படுத்தலாமே. ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களைத் தேடும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம். நட்பார்ந் நன்றியுடன் நொச்சி
  21. தாய் - தந்தை இருக்கும் வரை கஸ்ரம் தெரியாது..
  22. மலையாளிகளுக்கு தமிழ் கதைக்கும் போது நன்றாக புரியும் .. ஆனால் கதைக்கவோ எழுதவோ தெரியாது .. அதே போல கன்னடர்களுக்கு தமிழை விட தெலுங்கு கதைக்கும் போது நன்றாக புரியும் ஆனால் கதைக்கவோ எழுதவோ தெரியாது.. டிஸ்கி : மலையாளம் - நேரடி தாய் மொழி தமிழ் கன்னடம் - நேரடி தாய் மொழி தெலுங்கு ஆக தமிழ் கன்னடத்திற்கு பாட்டி மொழி அல்லது கொள்ளு பாட்டி மொழி
  23. கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும் May 30, 2025 11:36 am இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் உரத்து கூறிவரும் நிலையில் அந்தக்குரலுக்கு ஆதரவான குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கையில் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா போற்றப்படுகின்றது. இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்களவர்களுக்கும் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கும் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஒரு போரின் முடிவு இலங்கையின் வடக்கு கிழக்கில் ”இனப்படுகொலை” யாக நினைவுகொள்ளப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் ”இனப்படுகொலை”என்பதனை நிராகரித்து ”போர் வெற்றிக் கொண்டாட்டம்” என்ற பெயரில் வெற்றிநாளாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான் இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது ”தமிழ் இனப்படுகொலை” என்பதனை கனடா ஏனைய உலக நாடுகளுக்கு உரத்துக் கூறியுள்ளது. இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் இறுதிக்கட்ட யுத்த தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, ”தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்தும் ”தமிழினப் படுகொலை”நடந்தது என்பதனை சர்வதேச மயப்படுத்தியுள்ளது. கனடாவின் இந்த துணிச்சலான,மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கின்ற, சிறுபான்மையினங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்ற,அநீதிகளை சமரசமின்றி எதிர்க்கின்ற,நியாயத்தின் பக்கம் நிற்கின்ற ,உண்மையை உரத்துக்கூறுகின்ற உயரிய அரசியலும் உயர்ந்த குணமும்தான் இன்று இலங்கை அரசுக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளதுடன் இவர்களை நெருப்பில் விழுந்த புழுக்களாக துடிக்கவும் துள்ளவும் வைத்துள்ளது. தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் கனடா, பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்து,இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது. 2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் , 2006 இல் கனடாவானது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது. கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்காவுசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.பிரம்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது எனவும் கனடிய தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடும் தொனியில் கண்டனம் தெரிவித்தார். அதேவேளை இலங்கையிலுள்ள பிரதான தமிழ் தேசியக் கட்சிகள்,அமைப்புக்கள்,புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்கள் கனடா அரசுக்கும் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணுக்கும் கனேடிய தூதுவருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியான இ லங்கைத் தமிழரசுக்கட்சி கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தது. கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்று கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்ததுடன் தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றையும் கையளித்துள்ளார். மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே கனேடிய ஸ்தானிகரிடம் நேரில் கையளிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ”தமிழின படுகொலை நினைவுத்தூபி”போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப்படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி மூலம் அச்சுறுத்தியுள்ளார். பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் , வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியுலர் காரியாலயம் இந்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது. இது கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவினால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் கனடா அசரவில்லை. பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் இது தொடர்பில் கூறுகையில் .நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்கக் கூடாது.இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் மேலும், தமிழர் படுகொலை நினைவுத்தூபி என் நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன. எனவே இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பினால்தான் கனடாவிலுள்ள சிங்களவர்கள் இந்த நினைவுத்தூபி தொடர்பில் சிங்கக்கொடியை தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு அடுத்த அடியாக கனடாவின் ரொரென்ரோவின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்டனில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் ராஜபக்ஸக்கள் சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்தான் கனடாவின் அடுத்த நினைவுத்தூபி அறிவிப்பு இலங்கை அரசுக்கும் சிங்களபேரினவாதிகளுக்கும் கடும் சினத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கே.பாலா https://oruvan.com/canadas-memorial-and-the-screaming-sri-lankan-government/
  24. இப்போதைக்கு இலங்கை செய்யக்கூடியது, வாயை மூடிக்கொண்டிருப்பதுதான். துள்ளிக்குதித்தால் உலகம் முழுவதும் ஆதாரத்துடன் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் நினைவுநாள் அனுஷ்ட்டிக்கப்படும். இனப்படுகொலை நடைபெறவில்லை, அதற்கான போதுமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று விதண்டாவாதம் பண்ணியவர்களின் முகத்திரை கிழிக்கப்படும். புலிகள் பயங்கரவாதிகளல்லர் என்கிற உண்மை வெளிவரும். உண்மைகள் மறுக்கப்படும்போது, அவற்றை குழி தோண்டி புதைக்கும்போது, அவர்கள் போடும் மண்ணின் மேலேறி வெளியே வந்து நிலைநாட்டும். மூடிய எல்லைக்குள் சாட்சிகளின்றி மக்களை அழித்து பயங்கரவாதிகளென முத்திரை குத்தி புதைத்த உண்மைகள், கனடாவில் கிளம்பி சிங்களத்தின் குடல் கலங்க வைத்துள்ளது. வேறு வழியின்றி இலங்கை உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் நாள் வெகுதூரத்திலில்லை. புலிகளை பயங்கரவாதிகளாகவும், தமிழரின் போராட்டங்களை குலைக்கவும் அனுப்பப்பட்ட முகவர்களாலேயே சிங்களத்தின் முகத்திரை கிழிக்கப்படும் நினைவுத்தூபிகளை சிதைக்க கிளம்பினால். போர் முடிந்த கையோடு, போரில் ஈடுபட்ட இராணுவ தளபதிகளை வெளிநாட்டு தூதுவர்களாக அனுப்பி வைத்து அழகு பார்த்த முட்டாள்தனம், அவசரமாக, திருட்டுத்தனமாக அந்த நாட்டை விட்டு தப்பியோட வைத்தது. ஏன் அவர்களால் அங்கு நிலைத்து நின்று விசாரணையை எதிர்கொள்ள முடியவில்லை? அமெரிக்க வதிவிட அனுமதியுள்ள கோத்தாவால் அங்கு செல்ல முடியவில்லை? தமிழர் தாயகத்தில் நினைவு நாளை நிராகரிக்கலாம், சட்டங்கள் போட்டுத்தடுக்கலாம் அவை எல்லாம் வெளியில் உரக்கச்சொல்லும். சிங்களம் எத்தனைதான் கத்தினாலும் தன்னை நிரூபிக்க தோற்று விட்டது, அதன் முகவர்களுந்தான். அமைதியாக இருப்பதோடு தமிழருக்கெதிரான அடாவடிகளை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம். இல்லையேல் தானாகவே பொறியில் தலையை கொடுக்கும்.
  25. கடவுள் இந்த வேலையை மனோவிடமே கொடுத்துள்ளார். இனி அடுத்தவர் போய் தட்டிப் பறிப்பது சரியில்லையல்லவா?
  26. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
  27. நண்டுகள் சட்டிக்கை என்று நந்தன் சொல்லிவிட்டார். நல்ல உறைப்பா வைப்பார் என்று நினைக்கிறன்.
  28. நினைவகத்திலுள்ள சில மின் விளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாம்.
  29. புலவருக்கும் நந்தனுக்கும் ஏதேன் கோத்து விடலாமோ. தாங்களே தங்களுக்குள்ள...... நமக்கு வேற வழி தெரியல ஆத்தா. 😁
  30. ஆக்கிரமிப்பாளரின் அதீத போர்வெறிக்குப் பலியாவது படைகள் மட்டுமல்ல. படையினரின் குடும்பங்களுமே. ஆனால், ஐந்து பத்தடுக்குப் பாதுகாப்போடு வலம் வரும் அரசுத்தலைமைகளுக்கு இந்த வலிகள் புரியாது. அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  31. பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பைவிட வேகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அது சூப்பர்நோவாவாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், அதன் தன்மை மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த அதிநவீன விண்மீன் வெடிப்பு AT2018cow என அழைக்கப்பட்டது. இதில் உள்ள "cow" என்பது ஒரு சீரான குறியீட்டின் ஒரு பகுதி மட்டுமே. அதற்கும் பசுவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'cow' என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எளிய பயன்பாட்டிற்காக மட்டுமே இது உலகமெங்கும் சுருக்கமாக "தி கௌ" (The Cow) என அறியப்படுகிறது. இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுக்குப் பிறகு, வானியலாளர்கள் பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற சில வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். இவை "ஒளிரும் வேகமான நீல ஒளியியல் நிலையற்ற வெடிப்புகள்" (Luminous Fast Blue Optical Transients - LFBots) என விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டுள்ளன. "அவை மிகவும் பிரகாசமாக இருக்கின்றன" என்கிறார் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழக வானியலாளர் அன்னா ஹோ. அதனால்தான் LFBot எனும் சுருக்கத்தில் உள்ள 'L' என்பது 'luminous' (ஒளிர்வான) என்பதைக் குறிக்கிறது. இந்த வெடிப்புகளின் நீல நிறம், சுமார் 40,000°C (72,000°F) என்ற அதீத வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த வெப்பம் ஒளியை நிறமாலையின் நீல நிறப் பகுதிக்கு மாற்றுகிறது. அந்த LFBot எனும் சுருக்கத்தின் கடைசி எழுத்துகளான 'O' மற்றும் 'T' என்பவை இந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியும் ஒளி நிறமாலையில் (optical) தோன்றி, மிகக் குறுகிய நேரத்தில் மறையும் (transient) தன்மையைக் குறிக்கிறது. வெற்றிகரமாக வெடித்துச் சிதறாத சூப்பர் நோவாக்களா இந்த LFBots? தொடக்கத்தில், LFBots என்பது வெற்றிகரமாக வெடிக்க முடியாமல் போன சூப்பர்நோவாக்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர். அதாவது, வெடிக்க முயன்ற நட்சத்திரங்கள், உட்புறமாக வெடித்து, அவற்றின் மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அதன் வெளிப்புறத்தை உள்நோக்கி விழுங்கும் செயல்முறை. இருப்பினும், இவை குறித்த மற்றொரு கோட்பாடு தற்போது பிரபலமடைந்து வருகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் (intermediate mass black holes) எனப்படும் நடுத்தர அளவிலான கருந்துளைகளின் கண்டுபிடிக்கப்படாத ஒரு வகை, அவற்றுக்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்களை விழுங்கும்போது "கௌ" (Cow) எரிப்புகள் தூண்டப்படுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, இந்தக் கோட்பாட்டுக்குப் புதிய ஆதாரங்களை விவரித்தது. இது இப்போது பொருந்தக்கூடிய விளக்கமாகக் கருதப்படலாம். "பொதுவான நிலைப்பாடு இப்போது அந்தத் திசையை நோக்கி நகர்கிறது" என்று லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டேனியல் பெர்லி கூறுகிறார். இது சரியானது என நிரூபிக்கப்பட்டால், பிரபஞ்சத்தில் காணப்படும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கருந்துளைகளுக்கு இடையே காணாமல் போன இணைப்புக்கும், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான இருண்ட பொருள் (dark matter) குறித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியமான ஆதாரங்களை இது வழங்கக்கூடும். எப்போது இத்தகைய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,வெடிப்பதற்காக முயன்ற நட்சத்திரங்கள் வெடிக்காமல், மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளிப்புறத்தை உள்நோக்கி இழுத்து விழுங்குகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் "தி கௌ" (The Cow) வெடிப்பு, ரோபோ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியான அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வெடிப்பு, பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் பதிவானது. வழக்கமான சூப்பர்நோவாவைவிட இது 100 மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. மேலும், தோன்றிய சில நாட்களிலேயே மறைந்தும்விட்டது. சாதாரண சூப்பர்நோவாக்கள் முழுமையாக நிகழச் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகும். இத்துடன், பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, இந்த வெடிப்பு ஒரு விசித்திரமான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றன. அதன் பிறகு, வானியலாளர்கள் இதேபோன்ற சுமார் 12 நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அவற்றை முதலில் கண்டறிந்த வானியல் ஆய்வுகளின் விளைவாகத் தரப்படும் எழுத்துக் குறியீடுகளின் அடிப்படையில், விலங்குகளை மையமாகக் கொண்ட புனைப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை, ZTF18abvkwla, 2018-ல் கண்டறியப்பட்டது – இது "கோலா" என அழைக்கப்படுகிறது. ZTF20acigmel, 2020-ல் கண்டறியப்பட்டது – "ஒட்டகம்" எனப்படுகிறது. AT2022tsd, 2022-ல் கண்டறியப்பட்டது – "டாஸ்மேனிய டெவில்" என்று அழைக்கப்படுகிறது. AT2023fhn, 2023-ல் கண்டறியப்பட்டது – "ஃபின்ச்" அல்லது "ஃபான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தகைய வெடிப்புகளைத் தேடும் முயற்சியில் வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தி வானத்தின் பெரிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வகையான நிகழ்வுகளைக் கண்டறிய வானியலாளர்கள் தற்போது விண்வெளியின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஒரு வெடிப்பு எப்போது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி மற்ற வானியலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க Astronomer's Telegram எனப்படும் ஆன்லைன் தளத்தில் அவர்கள் தகவல் அனுப்புகின்றனர். இது மற்ற தொலைநோக்கிகளை உடனடியாக அந்த நிகழ்வை உற்றுநோக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பரில், ஹோ மற்றும் பெர்லி மற்றொரு புதிய LFBot வெடிப்பைக் கண்டறிந்தனர். இது AT2024wpp என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதற்குப் புனைப்பெயர் வைக்கப்படவில்லை. "நாங்கள் இதற்கு 'குளவி' (Wasp) என்ற பெயரை யோசித்தோம்," என்கிறார் ஹோ. இந்த வெடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் இது "தி கௌ" வெடிப்புக்குப் பிறகு கண்டறியப்பட்ட மிகவும் பிரகாசமான LFBot. மேலும், இது தனது பிரகாச நிலையின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், வானியலாளர்கள் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உள்படப் பல தொலைநோக்கிகளை அதை நோக்கித் திருப்பி, அதிகமாகக் கவனிக்க முடிந்தது. "தி கௌ வெடிப்புக்குப் பிறகு இதுவே சிறந்தது" என பெர்லி கூறுகிறார். பூமியில் மின்சார துண்டிப்பை ஏற்படுத்தும் சூரிய எரிப்பு என்றால் என்ன? மனிதர்களுக்கு ஆபத்தா?23 மே 2025 மழையில்லா வானவில்! விண்வெளியில் நாசா கண்ட அற்புதம்22 மே 2025 'இவை அனைத்தும் ஆரம்பக் கால கண்டுபிடிப்புகளே' பட மூலாதாரம்,PERLEY ET AL படக்குறிப்பு,பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த "தி கௌ" வெடிப்பு 2018இல் கண்டறியப்பட்டது ஆரம்பக்கால கண்டுபிடிப்புகள், 'குளவி' வெடிப்பு என்பது தோல்வியடைந்த சூப்பர்நோவாவால் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கின்றன. அந்தக் கோட்பாட்டின்படி, ஒரு நட்சத்திரம் வெடிக்க முயலும்போது தானாகவே சரிந்துவிடும். அதன் வெளிப்புற ஓட்டுக்குள் ஒரு கருந்துளை அல்லது அடர்த்தியுள்ள நியூட்ரான் நட்சத்திரம் உருவாகி, அந்த ஓட்டைக் கிழித்து வெளியில் கதிர்வீச்சுகளைச் சுழற்றும். இதுதான் மைய இஞ்சின் எனப்படும் நிலையை உருவாக்கும். இது பூமியில் காணக்கூடிய சுருக்கமான 'கௌ' வெடிப்பை விளக்குகிறது. ஆனால் அந்த வெடிப்பில் இருந்து பொருட்கள் வெளியே செல்லும் எந்தத் தடயமும் 'குளவி'யில் காணப்படவில்லை என்று பெர்லி கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அப்படிப்பட்ட தடயங்கள் இருக்குமென விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பார்கள். இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே. "நாங்கள் இன்னும் அந்தத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் பெர்லி. கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெங் காவ் மற்றும் அவரது குழுவினர் முதன்முதலில் கண்டறியப்பட்ட LFBot வெடிப்பை மீண்டும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தோல்வியடைந்த சூப்பர்நோவா என்ற கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த நிகழ்வின் எக்ஸ்-கதிர் தரவுகளை ஆய்வு செய்ததில், வெடிப்பைச் சுற்றி வட்டத்தட்டு வடிவில் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர், அந்த வெடிப்பின் கணினி மாதிரியை உருவாக்கிப் பார்த்தனர். அதில், அது இடைநிலை நிறை கருந்துளையால் விழுங்கப்படும் நட்சத்திரத்தின் எச்சங்கள் போல் இருப்பதாகத் தெரிந்தது. அந்த வகையான கருந்துளைகள், நமது சூரியனின் நிறையைவிட நூறு முதல் ஒரு லட்சம் மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்றொரு பக்கம், சில பெரிய கருந்துளைகள் சூரியனைவிட மில்லியன் கணக்கிலும, பில்லியன் கணக்கிலும் அதிக நிறை கொண்டதாக இருக்க முடியும். நட்சத்திரம், கருந்துளையால் உண்ணப்படும்போது, அதன் பெரிய துண்டுகள் கருந்துளையைச் சுற்றி விழுந்து, கருந்துளையின் பிரகாசத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இதனால் பூமியில் வானியலாளர்கள் கண்ட 'கௌ எரிப்புகள்' நிகழ்கின்றன. "எங்கள் ஆய்வு AT2018cow மற்றும் அதேபோன்ற LFBots வெடிப்புகளின் இடைநிலை நிறை கருந்துளைகளின் தன்மையை ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்கிறார் ஜெங் காவ். கோவை ஆனைமலையில் ஒளிரும் காளான் - இரவில் பச்சை நிறத்தில் ஒளிர்வது ஏன்?14 மே 2025 உணவுகளை அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா? எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்?6 மே 2025 LFBots பற்றி நிலவும் மற்றொரு கருத்து பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூப்பர்நோவா வெடிப்பு மற்றொரு கருத்து என்னவெனில், LFBots என்பவை உண்மையில் வுல்ஃப்-ரேயெட் (Wolf-Rayet) எனப்படும் ராட்சத நட்சத்திரங்களின் ஒரு வகை. அவை நமது சூரியனோடு ஒப்பிடும்போது 10 முதல் 100 மடங்கு குறைவான நிறையுள்ள சிறிய கருந்துளைகள் மூலம் உடைக்கப்படுகின்றன. நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த வானியற்பியல் வல்லுநரான பிரையன் மெட்ஸ்கர் இந்த யோசனையை ஆதரிப்பவர்களில் ஒருவர். இவை உருவாகும் விதம், ஈர்ப்பு அலைகளை உண்டாக்கி கண்டறியப்பட்ட ஜோடி கருந்துளைகள் உருவாகும் முறைக்கு ஓரளவு ஒத்ததாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இதில் பல நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றுதான் கருந்துளையாக மாறுகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் பற்றிய கோட்பாடு தற்போதைய நிலையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், விரும்பத்தக்க கருத்தாகவும் இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், LFBots நமக்கு மர்மமான நடுத்தர அளவிலான கருந்துளைகளை ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். பிரபஞ்சத்தில் இடைநிலை நிறை கருந்துளைகள் இருப்பதாக வானியலாளர்கள் பெரும்பாலும் நம்புகின்றனர். ஆனால் அவற்றுக்கான உறுதியான ஆதாரம் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம், ஏனெனில் இவை அண்டத்தில் உள்ள சிறிய கருந்துளைகளுக்கும், நமது விண்மீனின் மையத்தில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கும் இடையில் காணாமல் போன இணைப்பாகச் செயல்படுகின்றன. LFBots மூலம் இடைநிலை நிறை கருந்துளைகள் எங்கே இருக்கின்றன மற்றும் அவை எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை அறிய முடியும். "இடைநிலை நிறை கருந்துளையின் மாதிரி மிகவும் சுவாரஸ்யமானது" என்கிறார் பெர்லி. "இடைநிலை நிறை கருந்துளைகள் உண்மையில் உள்ளதா என்பது ஒருவித விவாதமாகவே உள்ளது. இதற்கு ஆதாரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை." LFBots என்றால் உண்மையில் என்ன என்பதை உறுதியாக அறிய, அவற்றின் மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவை. "துரதிர்ஷ்டவசமாக, அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன," என்று பெர்லி கூறுகிறார். "அவற்றில் குறைந்தது 100 மாதிரிகள் குறித்த தரவுகள் கிடைத்தால், அது எங்களுக்கான அடுத்த முக்கியப் படியாக இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார். அடுத்த ஆண்டு இஸ்ரேலிய சுற்றுப்பாதை தொலைநோக்கி அல்ட்ராசாட் (அல்ட்ரா வயலட் டிரான்சியன்ட் வானியல் செயற்கைக்கோள்) ஏவப்பட உள்ளதால், தோராயமாக நூறு மாதிரிகளின் தரவுகள் கிடைக்கக்கூடும். தொலைநோக்கியின் பார்வை பரப்பளவு 204 சதுர டிகிரியாக இருக்கும். இது ஒரே நேரத்தில் 1,000 முழு நிலவுகளைப் பார்ப்பதற்குச் சமம். எனவே, இது விண்வெளியில் நடைபெறும் பிற நிகழ்வுகளுடன் சேர்த்து, மேலும் பல LFBots வெடிப்புகளைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற தொலைநோக்கிகளால், LFBot வெடிப்பு பிரகாசமாகும் தருணத்தில் அதன் திசையில் கவனம் செலுத்த முடிந்தால், அந்த நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேகரிக்க உதவக்கூடும். "ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) இதற்காக மிகச் சிறந்ததொரு கருவியாக இருக்கும்," என்கிறார் மெட்ஸ்கர். ஆனால், இதுபோன்ற அவதானிப்புகளைச் செய்ய நேரம் கிடைப்பது சுலபமல்ல. "நான் இருமுறை முயன்றேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆண்டில் மீண்டும் முயலப் போகிறேன்" என்று ஹோ கூறுகிறார். கூடுதல் தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விசித்திரமான வெடிப்புகள் பற்றிய மர்மம் தொடரும். LFBots யாரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அசாதாரணமானது என்பது தெளிவாகிறது. "இதுவொரு சுவாரஸ்யமான, ஒருமுறை நிகழும் சம்பவம் என நினைத்திருந்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு வகையான நிகழ்வாக மாறியது. மேலும் இவை நாளுக்கு நாள் இன்னும் சுவாரஸ்யமானதாகவே மாறிகொண்டிருக்கின்றன," என்கிறார் பெர்லி. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdr531z8md3o
  32. நான் மேலே எழுதியதில் ஒரு தவறு உள்ளது. மாகாண அரசால், மாநகர சபையின் அதிகாரங்களில் கைவைக்க முடியும். ஏனெனில் மாநகர சபை என்பது மாகாண அரசின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தின் அங்கம் என்பதால். ஆனால் மாநகர சபையால் சட்டத்திற்குற்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு தூபியை, கட்டிடத்தை அகற்ற இலகுவில் முடியாது.
  33. இது போன்ற அதிகாரப் பரவலாக்கல் பாதுகாப்பு அமெரிக்காவில் இல்லை. ஒரு நகரம், மாநிலம் செய்வது பிடிக்கவில்லையென்றால் ஏதாவது மத்திய அரசின் சட்டத்தைச் சுட்டிக் காட்டி மத்திய அரசு தடை போடும் (அண்மையில் வாஷிங்ரன் டி.சி யில் BLM இனால் அமைக்கப் பட்டிருந்த ஓவியங்களை (murals) இப்படி அழித்திருந்தார்கள்). அவ்வாறு சட்டங்களால் தடை போட இயலா விட்டால், மத்திய அரசு வழங்கும் நிதியைத் தடுப்பதன் மூலம் அழுத்தம் கொடுப்பார்கள். ட்ரம்பின் விருப்பமான ஆயுதமாக இரண்டாவது வழி முறை இருக்கிறது.
  34. Published By: RAJEEBAN 28 MAY, 2025 | 02:33 PM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவருவதாக பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பாலஸ்தீன தேசத்தை பிரிட்டன் நெதர்லாந்து பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்ற அழுத்தத்தை பிரான்ஸ் கொடுத்துவருகின்றது. பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க செய்வதன் மூலம் அதேவேளை சில மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்க செய்வதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டினை இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளிற்கான ஆரம்பமாக பயன்படுத்தலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கருதுகின்றார். இரு அரசுகள் தீர்வு முன்னர் எப்போதையும் விட அவசியமானதுஇஎனினும் யுத்தம்இ .இடம்பெயர்வுஇதீவிரதன்மை மிகுந்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை போன்றவற்றால் அது முன்னர் எப்போதையும் விட அதிக குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பிரான்ஸ் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இஸ்ரேலின் காசாமீதான குண்டுவீச்சுக்கள் காரணமாகவும்இஇஸ்ரேலின் மூன்று மாத கால தடைகள் காரணமாக உணவிற்கும் மருந்திற்கும் நீருக்கும் காசாவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாலும் சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள அந்த மாநாட்டின் மூலம் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் குறித்து பிரான்ஸ் தனது நம்பிக்கைகளை குறைத்துள்ளது. அராபிய தேசங்கள் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்தே ஆர்வமாக உள்ளன பாலஸ்தீன தேசம் குறித்து ஆர்வம் கொண்டிருக்கவில்லை என ஐரோப்பிய இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன தேசத்திற்கான அடித்தளத்தினை ஆதரிப்பதற்காக பிரிட்டன் சகாக்களுடனும் ஏனைய நாடுகளுடன் இணைந்து எதனையும் செய்ய தயார் என பிரிட்டிஸ் பிரதமரின் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். பாலஸ்தீன தேசத்தை அங்கீகரித்த முதல் ஜி7 நாடுகளாக பிரான்சும் இங்கிலாந்தும் மாறலாம். பாலஸ்தீன தேசம் என்பது பாலஸ்தீனியர்களின் தசாப்தகால கோரிக்கை. இதேவேளை பிரான்ஸ் இராஜதந்திரிகளின் முயற்சிகளை இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளது.பிரான்சின் நடவடிக்கை ஹமாசினை சட்டபூர்வமான அமைப்பாக மாற்றுகின்றதுஇ2023 பயங்கரவாத தாக்குதலிற்காக அந்த அமைப்பிற்கு வெகுமதி வழங்குகின்றது என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றது. பாலஸ்தீன தேசத்தை பிரிட்டனும் பிரான்சும் அங்கீகரித்தால் இஸ்ரேல் இதனையே தெரிவிக்கப்போகின்றது. கடந்த ஆண்டு ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நிலையில் 140க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. பல வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை மக்ரோனின் முன்னிலை பல ஆண்டுகளாக பாரிஸ் பாலஸ்தீன பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் சமாதான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே பிரான்ஸ் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவேண்டும் என எச்சரிக்கiயும் விடுத்துவந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் "அங்கீகாரத்தை நோக்கி நகர" வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசு இரண்டும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டு செயல்பாட்டில் பங்கேற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் மக்ரோன் கூறினார். ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை. இப்போது காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்து வருவதால் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பது என்பது அமைதியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குப் பதிலாக ஒரு இஸ்ரேலிற்கு எதிரான ஒரு கண்டனமாகத் தோன்றும் என்று சிரியாவிற்கான முன்னாள் தூதரும் இன்ஸ்டிட்யூட் மோன்டைக்னேவின் உறுப்பினருமான மைக்கேல் டக்லோஸ் விளக்கினார். இது இஸ்ரேலுக்கு எதிரான கண்டனமாக இருக்கும்" என்று அவர் கூறினார். இருப்பினும் பாலஸ்தீனிய பிரதேசங்களை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிப்பது "இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான நிபந்தனைகளை வரையறுக்க அரபு நாடுகளை ஊக்குவிக்கும்" என்று டுக்லோஸ் கூறினார். ஜூன் 17 முதல் 20 வரை நியூயார்க்கில் நடைபெற உள்ள மாநாட்டில் மத்திய கிழக்கு நாடுகள் இன்னும் இயல்பாக்கத்தை நோக்கி "நடவடிக்கைகளை" எடுக்கும் என்று பிரான்ஸ் நம்புவதாக மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரெஞ்சு தூதர் கூறினார். இறுதியில் காசா பகுதியில் வன்முறையை நிறுத்துவதும் ஓரளவிற்கு மேற்குக் கரையில் வன்முறையை நிறுத்துவதும் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் மிகப்பெரிய இராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா என்ன செய்ய முடிவு செய்கிறது என்பதைப் பொறுத்தது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அணுகுமுறையில் ஒரு மாற்றத்தை ஐரோப்பிய அதிகாரிகள் கவனித்தாலும்இ வாஷிங்டன் ஒரு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இன்னும் இல்லை. இது இறுதியில் வெற்றுப்பட்டாசாக மாறலாம் என ஐரோப்பிய அதிகாரியொருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/215904
  35. 1993 ல் அரபாத் - ரபின் ஒப்பந்தத்திலேயே பாலஸ்தீனம் அங்கீகரிகப்படுவதறகான சூழ்நிலை உருவாகி விட்டது. அந்த சமாதானத்தை குழப்பியவர்கள் ஹமாஸ் கடும் போக்குவாத அமைப்பினரே. இலங்கையிலும் அதே நிலமை தான் 2002 சமாதானத்தை இரு தரப்பும் குறிப்பளவு விட்டுக் கொடுப்புகளுடன் தொடர்ந்திருந்தால் இத்தனை அழிவுகள் வந்திருக்காது. நல்ல விதமான முடிவுகளும் வந்திருக்கும். பிடிவாதமும் கடும் போக்கு தேசியவாதமும் கற்பனாவாதமும் அழிவுகளையே கொண்டுவரும் என்பதற்கு பாலஸதீனமும் இலங்கையும் உதாரணங்கள். இப்போதும் கூட கூட ஹமாஸ் கடும்போக்கு வாதிகள் இதை கெடுக்காமல் இருக்க வேண்டும். சமாதானத்தை கெடுத்துவிட்டு குத்துதே குடையுதே என்று புலம்புவதில் பயன் இல்லை.
  36. முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். அடுத்த தடவை எல்லோரும் நந்தனை பின்பற்றுங்கள் . ( கொப்பியடியுங்க)😄
  37. 1981 தீபாவளி அன்று மதுரை..
  38. தேசியம் இணையத்தில் நினைவுத்தூபி சேதமாக்கபட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி பகிரப்பட்டிருந்தது..பலதும் பத்திலும் பகிர்ந்திருந்தேன்..பின் வேறு, வேறு இணையங்களில் தேடிப் பார்த்தேன்,,அப்படி ஒரு செய்தியே வரவில்லை..எதையாவது போட்டு நிரப்பும் பத்திரிகைகாரர்களை என்ன செய்வது....🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.