Leaderboard
-
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்12Points8907Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points87988Posts -
புரட்சிகர தமிழ்தேசியன்
கருத்துக்கள உறவுகள்7Points16468Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்6Points7044Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/23/25 in all areas
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
5 pointsடிரம்ப் சீற்றம் கமெனி காட்டம் இடியை இறக்கிய இஸ்ரேல் .. ஈரான் சரவெடி .. இஸ்ரெல் அதிரடி.. இறங்கி அடிக்கும் ஈரான்.. சண்டை பிடிப்பவர்களை விட இவர்கள் "தலைப்பு" இம்சை தாங்கல சாமீ..5 points
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
4 pointsஈரானுக்கு அதன் ஆதரவு நாடுகளிலிருந்து ஒரு உதவி தன்னும் கிடைக்கப் போவதில்லை. ஏதோ எங்கள் வீட்டில் சுட்ட தோசையை தட்டில் மூடிக் கொண்டு போய் அடுத்த வீட்டிற்கு கொடுப்பது போல, ரஷ்யாவிலிருந்தும், வட கொரியாவிலிருந்தும் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கொடுப்போம் என்று கேலிக்கூத்தான வாய்மொழி ஆதரவு மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கும். ஒரு நாடு அணு ஆயுதத்தை தன் நாட்டில் வைத்திருப்பதற்கே அந்த நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒரு அணு ஆயுத திட்டமும், பராமரிப்பு சேவைகளும் இருக்கவேண்டும். ஈரானிடம் அப்படியான வசதிகள் எதுவும் இல்லை. மேலதிகமாக ரஷ்யாவே வட கொரியாவிடமிருந்து வட கொரிய வீரர்களையும், ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்றரை வருடங்களாக சேத்துக்குள் விட்ட காலை வெளியே எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார் ரஷ்ய அதிபர் புடின். டாலர் கடைகளில் எண்ணெய் வாங்குவது போல ஈரானிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் மலிவு விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் சீனா கூட எந்த விதமான தளபாட உதவிகளும் செய்யப்போவதில்லை. அடுத்ததாக எண்ணெய்க்கு என்ன செய்யலாம் என்பதே அதன் ஒரே ஒரு யோசனை. ஈரான் அழிந்து போகாமல் தப்பிக்க, தற்காலிகமாகவேனும் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதே இன்றுள்ள நல்ல ஒரு தெரிவு. அழிந்து போன தேசங்கள் பல அப்படியே அழிந்த நிலையிலேயே இன்னும் இருக்கின்றன. இல்லாவிட்டால் ஈரானும் அந்த வகையில் இன்னொன்று ஆகிவிடும். அதன் வான்வெளியில் சுத்தமாகவே எந்தக் கட்டுப்பாடும் அற்ற ஈரான் மிகவும் ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அந்த நாட்டை பிடிக்கின்றேன், இந்த நாட்டை பிடிக்கின்றேன் என்று சொல்லியபடியே இருக்கின்றார். இது அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுக்கப் போகின்றது. அடுத்ததாக கிரீன்லாந்த் கதையை ஆரம்பிக்கப் போகின்றார்.................... பொதுவாகவே ட்ரம்ப் எதைச் செய்ய முயன்றாலும் இங்கு சில மாநிலங்களில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் காட்டப்படும். இதில் முன்னிலை வகிக்கும் மாநிலம் கலிஃபோனியா. ஆனால் ஈரான் மீதான தாக்குதலுக்கு வழமையான அளவிற்கு எதிப்புகள் இங்கு காட்டப்படவில்லை. ஒரு விதமான ஆதரவுப் போக்கே இருக்கின்றது.4 points
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
3 pointsமத்தியகிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஊக்குவித்து, ஆயுதமும் பயிற்சியும் வழங்கிவரும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் பிடியிலிருந்து ஈரான் மீட்கப்பட வேண்டும். அணுவாயுதம் இல்லாத நிலைமையிலேயே அப்பிராந்தியத்தின் ஸ்த்திரத் தன்மையினை ஈரான் குலைத்து வைத்திருக்கிறதென்றால், அணுவாயுதமும் கிடைத்துவிட்டால் இன்னொரு வடகொரியாவாக ஈரான் மாறிவிடும். தனது கையிருப்பில் இருக்கும் ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சுற்றியிருக்கும் நாடுகளுக்கு மேலால் ஏவுகணைப் பரிசோதனை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு சண்டித்தனம் செய்யும். தேவைப்பட்டால் அணுவாயுதத்தை இஸ்ரேலின் மீது பிரயோகிக்கும். ஆகவே முல்லாக்களின் அதிகாரம் முற்றாகப் பிடுங்கப்பட்டு, நாடு மீளவும் மக்களாட்சிக்குள் செல்லவேண்டும். அது நடப்பதற்கு முல்லாக்களும், அவர்களின் இராணுவ, தொழிநுட்ப வல்லுனர்களும் அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் தனது சொந்த இருப்பிற்காகச் செய்யும் இந்த நடவடிக்கையினை அமெரிக்கா ஆதரிப்பதும், உதவுவதும் தேவையானதுதான். முல்லாக்களின் கைகளில் அணுவாயுதம் இருப்பது மனித குலத்திற்கே ஆபத்தானது. தன்னிடமிருக்கும் ஏவுகணைகள் பலவற்றை தனது முகவர்களுக்கு வழங்கி, இஸ்ரேல் மீதும் சர்வதேசக் கப்பற்போக்குவரத்து மீதும் தாக்குதல் நடத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தம்மிடம் அணுவாயுதம் கிடைத்துவிடும் பட்சத்தில் அதனையும் தனது முகவர்களுக்குக் கொடுத்து, தாக்குதலை நடத்திவிட்டு, கையை விரித்து விடலாம். ஈரானின் முல்லாக்கள் மீது நடத்தப்படும் இன்றைய தாக்குதல்கள் இனிமேல் அவர்கள் அணுவாயுதம் ஒன்றினைத் தயாரிப்பதை நினைத்துப் பார்ப்பதையே நிறுத்துவதாக அமைய வேண்டும். அமெரிக்காவின் பி 2 குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன போர்டோ அணுஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் இன்றும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவருகிறது. ஈரானில் இன்னமும் தாம் அழிப்பதற்கு இலக்குகள் இருக்கின்றன என்று அது கூறுகிறது. மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் முல்லாக்களை முற்றாகவே அடித்து விரட்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் முயல்வதாகவே படுகிறது. இது விரைவில் நடைபெறுமானால் ஈரானிய மக்கள் நிம்மதியாக தமது வாழ்வை மீளவும் ஆரம்பிக்க முடியும். பார்க்கலாம்.3 points
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
3 points3 points
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 pointsகட்டாரில் அமைந்திருக்கும் அமெரிக்க விமானப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் ஆனால் அதனை தாம் குறுக்கிட்டு முறியடித்துவிட்டதாகவும் கட்டார் அரசு கூறியிருக்கிறது. மேலும் இத்தளத்தில் பாதுகாப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானங்கள் அனைத்தையும் ஆனி 19 ஆம் திகதியே அமெரிக்கா அப்புறப்படுத்திவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று கட்டாரிய அரசு கூறுகிறது. ஈரானின் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட செய்மதிப்படத்தில் விமானங்கள் ஏதுமற்ற வெற்று படைத்தளமும், ஓடுபாதையும் காணப்படுகின்றன. ஈரான் தாக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் அமெரிக்கத் துருப்புக்கள் தற்காப்பு நிலையெடுத்திருந்தன என்று அமெரிக்க இராணுவம் கூறியிருக்கிறது. தனது அணுவாயுத நிலைகள் மீது கொட்டப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமனான ஏவுகணைகளை தான் ஏவியதாக ஈரான் கூறியிருக்கிறது. ஆக, முல்லாக்கள் அடிவாங்கியே தீருவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.2 points- சிரிக்கவும் சிந்திக்கவும் .
2 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 pointsஏன் தான் இப்படியெல்லாம் தலையங்கம் போட மாட்டாங்கள்? ரிக் ரொக், இன்ஸ்ரா, முகனூல், யூ ரியூப் மட்டுமே பார்த்து வளரும் "புரின் புரியன் மாரை" கவர இப்படி போட்டால் தானே அவங்களும் சில்லறை பொறுக்கலாம்😂?2 points- மின், இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் கிளிநொச்சியில் ஆரம்பம்
23 JUN, 2025 | 02:50 PM கிளிநொச்சியில் மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் - 2025 திங்கட்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. "சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்" எனும் தொனிப்பொருளில் திங்கட்கிழமை (23) திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை (27) ம் திகதி வரை இந்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/2182162 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 points- கருத்து படங்கள்
2 points2 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 points2 points- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
2 pointsஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍2 points- சிஸ்ட்டர் அன்ரா
2 pointsகடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரணச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திறமைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!2 points- சிஸ்ட்டர் அன்ரா
1 pointநேற்று நடந்தது போல இன்னமும் அப்படியே மனதில் பதிந்திருக்கின்றது. 1988 சித்திரையாக இருக்கலாம். தனது அனுமதியின்றி எனது மைத்துனனை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையின் பின்னர் அருகே இருந்து பார்த்துக்கொண்டமைக்காக எனது தகப்பனார் எனக்குத் தந்த தண்டனை. இரவு முழுதும் தூக்கம் துறந்து, உணவின்றி, களைப்புடன் வீடு வந்து உறங்கலாம் என்று எண்ணி வாசல்வந்து சேர்ந்தபோது, பூட்டிக்கிடந்தது கண்டு களைத்துப்போய் ஆங்கே இருந்துவிட்ட அந்தக் காலைப்பொழுது. அரைத்தூக்கத்தில் வாசலுக்கு வெளியே, படலையில் சாய்ந்து உறங்கத் தொடங்க, உள்ளிருந்து கேட்ட அகோரமான குரல், "பயங்கரவாதியே, இங்க ஏன் வந்தனீ? உள்ளுக்கை கால் வைச்சியெண்டால் வெட்டிக் கொல்லுவன்". கனவில் கேட்பதாக நினைத்து விழித்தபோது வீட்டின் முன் கதவில் தகப்பனார் கையில் கத்தியுடன். ஏன் , எதற்கென்றுகூடத் தெரியாது நான் தண்டிக்கப்பட்ட அப்பொழுது. அவரது கோபம் அடங்கும், ஒருவாறு வீட்டினுள் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையெல்லாம் சிறிது சிறிதாக அற்றுப்போய், கண்களில் கோபம் கொப்பளிக்க அவர் கையில்க் கிடந்த கத்தியைத் தவறாமல் எனக்கு நேரே பிடித்திருக்க, வேறு வழியின்றி தெல்லிப்பழை நோக்கி நடந்த அக்காலைப்பொழுது. கையில் பணமின்றி, நடப்பதற்கும் உடலில் பலமின்றி, மருதனார் மடத்தின் வீதியில் இருந்துகொண்டே வீதியில் செல்வோரிடம் பிச்சையாகப் பணம் கேட்டு, யாரோ ஒருவரின் புண்ணியத்தால் தெல்லிப்பழைவரை செல்ல முடிந்த அதே காலைப்பொழுது. அப்பம்மாவீட்டிற்குச் சென்று, "இனிமேல் அவருடன் வாழமுடியாது, நான் இங்கேயே உங்களுடன் இருக்கப்போகிறேன்" என்று அழுதழுது அவர்களிடம் மன்றாடிய காலைப்பொழுது. இற்றுடன் 37 வருடங்கள் கரைந்தோடிவிட்டன. நான் வீட்டிலிருந்து துரத்தப்பட்ட நாளில் இருந்து சுமார் இரு வாரங்களுக்கு தகப்பனார் என்னைத் தேடவில்லை. உயிருடன் இருக்கின்றேனா இல்லையா என்பது கூட அவருக்குப் பொருட்டாக இருந்திருக்காது என்பது திண்ணம். இதே காலப்பகுதியில் மட்டக்களப்பில் கன்னியாஸ்த்திரிகளினால் பராமரிக்கப்பட்டு வந்த மடம் ஒன்றில் எனது அக்கா படித்துக்கொண்டிருந்தாள். அது விடுமுறை காலமாதலால் யாழ்ப்பாணம் வந்திருந்தாள். வழமைபோல கோண்டாவிலில் நாம் வாழ்ந்த வீட்டிற்கு வந்து என்னைத் தேடியிருக்கிறாள். ரஞ்சித் எங்கே என்று தகப்பனாரிடம் கேட்டபோது அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்று மட்டுமே அவரால் கூற முடிந்தது. அவன் எங்கு போனான், உயிருடன் இருக்கிறானா என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.அக்கா என்னைத் தேடத் தொடங்கினாள். முதலில் உறவினர்கள், அம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவள் தேடினாள். பின்னர் அப்பாவின் உறவினர்களிடம் தேடினாள், தெல்லிப்பழையில் நான் இருப்பதைத் தெரிந்துகொண்டாள். அப்போது எனது தாயாரின் தங்கை, ஒரு கன்னியாஸ்த்திரி, மட்டக்களப்பில் படிப்பித்துவந்தார். இவரின் உதவியினாலேயே அக்கா மட்டக்களப்பின் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தாள். தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்தியதுபற்றி அக்கா எனது சித்தியிடம் தெரிவித்திருக்க வேண்டும். உடனடியாக செயலில் இறங்கிய அவர் எப்படியாவது என்னை எனது தகப்பனாரின் கொடுங்கரங்களில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று அங்கலாய்க்கத் தொடங்கினார். மட்டக்களப்பில் இருந்து வந்துசேர்ந்த அக்கா எனது நிலைபற்றி உறவினர்களிடம் பேசத் தொடங்கவே தகப்பனாரின் நிலை தர்மசங்கடமாகிப்போனது. மூத்த இரு பிள்ளைகளையும் மனைவி இறந்தவுடன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான் என்பதை உறவினர்கள் பேசத் தொடங்கவே வேறு வழியின்றி என்னை வீட்டிற்குள் அனுமதித்தார். ஆனால் படிக்கவைக்க அவர் விரும்பவில்லை. "வீட்டில் நிண்டுகொண்டு வேலைகளைப் பார், உன்னைப் படிக்க வைக்க என்னிடம் பணமில்லை" என்று கையை விரித்துவிட்டார். எனக்கும் வேறு தெரிவுகள் இருக்கவில்லை. எங்காவது கூலிவேலைக்குச் சென்றுவிடலாம் என்பதே அப்போது எனக்கிருந்த ஒரே தெரிவு. ஆனால் எனக்கோ வயது 15.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointநீங்கள் "not mutually exclusive" என்ற சொற்றொடரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரண்டு விடயங்கள் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியும்: இஸ்ரேல் பலஸ்தீனர்களுக்கு செய்வது அநியாயம் என்பதும் உண்மை. இஸ்ரேல், ஈரான் அணுவாயுதம் அடையாமல் வைத்திருக்கும் உரிமையைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் ரஞ்சித்திடம் இருப்பதால் எழுதியிருக்கிறார் என்கிறீர்கள். போன ஆண்டு ட்ரம்பிற்கு ஆதரவாக எழுதிய போது, ஒபாமாவையும், பைடனையும் அவர்களுடைய லிபரல் கொள்கைகளுக்காக சில சமயங்களில் போலி வீடியோக்களை இணைத்து நீங்கள் எழுதிய போது யாருக்கெதிரான வாதம் உங்களை இயக்கியது? குடியேறிகள்? முஸ்லிம்கள்? பெண்கள்? அல்லது யாருடைய அடிமையாக இருந்தீர்கள்?1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointபேச்சுவார்த்தையின் போதே குண்டுகளை போட்டு விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது நகைச்சுவையின் உச்சக்கட்டம். நத்தனியாகுவின் சொல்லை கேட்டு கூத்தாடி விட்டு இப்போ போர் நிறுத்தம் என்பது எவ்வளவு சாத்தியமானது? கொண்டு போய் மண்ணுக்கு மேல் போட்டு இஸ்ரேலை ஏன் சந்தோசப்படுத்த வேண்டும்? அமெரிக்காவில் எத்தனை பேர் இஸ்ரேலின் சொல்லை கேட்டு ஈரானுடன் மோதாமல் இருக்கும் படி கேட்டும் மண்ணுக்கு /மலைக்கு மேல் குண்டுகளை போட்டு எதிரிகளை வீணாக உருவாக்குவது எப்படி பொருளாதார ரீதியில் அமெரிக்காவை மேம்படுத்தும்?1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point- இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்தியா பின்னனி வீரர்களின் விளையாட்டு ஜந்து சதத்துக்கு உதவாது அண்ணா...................இரண்டு இனிங்சையும் பாருங்கோ எல்லாரும் 000 0000 இப்படி அவுட் ஆகி இருக்கினம் , நாளை இங்லாந் காரங்கள் வெல்லக் கூடும் மழை வந்தால் விளையாட்டு சம நிலையில் முடியும்................இந்தியா 4வேகபந்து வீச்சோட வந்து வும்ராவை தவிற மற்ற வீரர்கள் பெரிசா சாதிக்க வில்லை.................ஒரே ஒரு சுழல் பந்து அது ஜடேயா மட்டும் , ஜபிஎல்ல சுதப்பினவரை டெஸ்ட் போட்டிக்கு தெரிவாகி இருக்கிறார் வஸ்சின்டன் சுந்தர விளையாட விட்டு இருந்தால் ரன்ஸ் ஆவது அடிச்சு இருப்பார்...............................1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 point🤣 ஓம் தம்பி! ஈரான் பெண் விளையாட்டு வீராங்கனைகளை மிகவும் ஊக்குவிக்கும் ஒரு இஸ்லாமிய நாடு! எவ்வளவு ஊக்குவிப்பென்றால், 2022 சியோல் ஒலிம்பிக்கில் தலையில் ஹிஜாப் இல்லாமல் போட்டியில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய எல்நாஸ் றெகாபி என்ற ஈரானிய வீராங்கனையை உள்ளே வர விட்டுக் கைது செய்து, பின் அவரது வீட்டையும் புல்டோசரால் இடித்துத் தரை மட்டமாக்கி, மிகுந்த ஊக்குவிப்பைக் கொடுத்தது ஈரான். ஈரானின் ஊக்குவிப்பு மிகையாகி விட்டதால், வீராங்கனை இப்போது ஸ்பெயினில் வசிக்க வேண்டியிருக்கிறது😎! https://iranwire.com/en/women/139724-iranian-climbing-champion-elnaz-rekabi-leaves-country/1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointபையன் சார், இங்கு நாங்கள் எழுதுவது வெறும் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே. உங்கள் மீது எனக்கிருக்கும் வாஞ்சையில் ஒரு துளியேனும் இந்தக் கருத்துகளால் குறைந்து விடப்போவதில்லை. ரஷ்யா மக்கள் மீதும், அந்தப் பெரும் தேசத்தின் மீதும், அது ஒரு காலத்தில் கட்டி எழுப்பப்பட்ட கோட்பாடுகளின் மீதும் மற்றும் அதன் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் மதிப்பும் விருப்பும் எனக்கு உள்ளது. ஊரில் வாழ்ந்த பதின்ம வயதுகளில் கூட ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் சோவியத் யூனியனே பதக்கப்பட்டியலில் முதலாவதாக வர வேண்டும் என்று உளமார விரும்பியும் இருக்கின்றேன். ஆனால் அந்த சோவியத் யூனியன் அல்ல இன்றிருக்கும் ரஷ்யா. அதிபர் புடின் அந்த தேசத்தையே அழித்துவிட்டார். மேலும் கோட்பாடுகள் வேறு, நடைமுறை வாழ்க்கை வேறு என்று கிடைத்த வாழ்க்கை மிக நல்லாகவே கற்றுக் கொடுத்தும் விட்டது. அன்றிருந்த சோவியத் யூனியனைப் பற்றியே இன்று சில கேள்விகள் உள்ளே இருக்கின்றன.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇதே கருத்து தான் எனதும். ஈரான் அரசு பலவீனமாக்கப்பட்டு முல்லாக்களின் அதிகாரம் முற்று முழுதாக செயலிழக்க செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருக்கும் அணு சக்தி ஆற்றல் பூரணமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.1 point- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
1 point1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointமன்னிக்க வேண்டும் இதைச் சொல்வதற்கு: உங்களுடைய புலம்பலுக்கு பதில் எழுதி நேர விரயம் செய்ய முடியாது. ஆனால், "உலக சமாதான தேவதை" ட்ரம்ப் என்று வரலாற்றை ரிக் ரொக்கில் வாசித்து விட்டு 2024 நவம்பர் வரை இங்கே எழுதிய உறவுகளிடம் தான் நீங்கள் "எங்கே என்ன பிசகியது?" எனக் கேட்க வேண்டும் (போன் போட்டும் கேக்கலாம், தப்பில்லை😎!) ஆனால், இணையவன் ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, செயற்கை நுண்ணறிவு தயாரித்த போலி வீடியோக்கள், படங்களை இங்கே இணைத்து யாழ் களத்தைக் குப்பைத் தொட்டியாக்காமல் இருங்கள். குப்பை கொட்டுவதற்குரிய போதிய இடத்தை எக்ஸ், முகநூல் போன்றவை உங்கள் போன்றோருக்குத் தந்திருக்கும் நிலையில், தமிழர்களுக்கென்று இருக்கும் ஒரே தளத்தில் வந்து குப்பை கொட்டுவது கண்டிக்கத் தக்கது!1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇது அடிக்கடி இஸ்ரேலில் வந்து போகும் தடை தான், ஆனால் முக்கியமாக பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஏரியாக்களின் தகவல்கள் வெளிவராமல் தடுப்பதே நோக்கம். கீழே இருப்பது அல் ஜசீராவில் இருக்கும் தடை பற்றிய பட்டியல்: Specifically, journalists and editors are prohibited from: Filming or broadcasting images from impact sites, particularly near military installations. Using drones or wide-angle cameras to show impact areas. Detailing the precise location of affected areas near security installations. Broadcasting images of Israeli missiles being launched or of Iranian missiles being intercepted. The directive also bans the sharing of videos from social media without prior review by the censor, cautioning – as a side note – that some may be “enemy-generated fake news”. ஈரானில் இணையச் சேவையையே முடக்கி, ஆமை வேகத்தில் வைத்திருக்கிறார்களாமே? முல்லாக்களின் "குரல் தரவல்ல அதிகாரி" உங்களுக்கே தெரியவில்லையா😂?1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointநான் மூன்று உண்மையை சொல்லும் யூடுப்பை பார்ப்பேன் , மற்றம் படி பார்ப்பது கிடையாது.................இஸ்ரேல் தனக்கு ஏற்பட்ட அழிவுகளை சில நாள் மூடி மறைத்தது.................சர்வதேச ஊடகங்கள் தொட்டு உள்ளூரில் வசிப்பவர்கள் காணொளி பிடிச்சு அதை வட்சாப் மூலம் அனுப்பினால் சிறையில் அடைக்கப் படுவார்கள் என இஸ்ரேல் அரசால் விடுக்கப் பட்ட எச்சரிக்கை....................... தங்கட ஜடோம தாண்டி எதுவும் வந்து விடாது என்று நினைத்த இஸ்ரேல் , இப்படி ஈரான் முரட்டுதனமாக தாக்குவார்கள் என எதிர் பார்த்து இருந்து இருக்க மாட்டினம்........................... அது சரி தோழர் இப்ப உங்களை யாழில் பெரிதாக காண முடிவதில்லை.........................................1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇந்த செய்திய நேற்று நான் தான் யாழில் முதல் இணைத்தேன் , வடகொரியா பற்றிய செய்தி பல தளங்களில் வந்த பின்பு அதையும் இணைத்தேன் , இணையவன் வந்து குறுக்கிட அவருக்கு பதில் அளித்து இருந்தேன் அதை உடன நீக்கி விட்டு தனது பதிவை அப்படியே விட்டு இருக்கிறார்....................இப்படியான ஒருபக்க சார்வாய் நிர்வாகம் நடந்து கொள்வதால் தான் யாழில் பலரும் பெரிதாக எழுதுவதில்லை...................... எனக்கும் இதுக்கை எழுத ஆர்வம் இல்லை , ஈரானுக்கு அநீதி இழைக்கப் படுது என தெரிந்த படியால் தான் முகம் தெரிந்த உறவுகளுடன் விவாதிச்சேன் மற்றம் படி இதுக்கை விவாதிக்க ஒன்னும் இல்லை............... X தளம் , யூடுப் முக நூல் , ரிக்ரோக் , இங்கு தான் உடனுக்கு உடன் செய்திகள் விவாதங்கள் மின்னல் வேகத்தில் நடக்கும்...............செய்திகளுக்கு முதல் இடம் X தளம் அங்கு தான் உடனுக்கு உடன் எல்லாம் வரும்.....................1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointIran Strikes Tel Aviv Live: Sirens Sound, Ballistic Missiles Fly Across Skies In Israel | N18G1 point- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
1 point- கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointஅந்த அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.🙏கேள்விகள் கேட்டு இன்னும் உங்களை மனக்கஸ்ரப்படுத்துவதை விரும்பவில்லை.மனதை திடமாக வைத்திருங்கள்.🙏1 point- சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
இந்த விதிமுறைய போன வருடம் அமுல் படுத்தி இருந்தா இந்தியா பினலில் தோத்து இருக்கும் மில்லர் அடிச்ச பந்து சூரியகுமார் ஜடாவ் எப்படி பிடித்தவர் என்று நீங்களும் பார்த்து இருப்பிங்கள் உண்மை தான் இது பந்து வீச்சாளர்களுக்கு பெரிய தொல்லையா அமையும்...................மட்டை வீரர்களுக்கு இது சாதகமாய் அமையும்............................1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointபாடசாலைகளில் இணைத்துவிடும் பணி முடிவடையவே, என்னையும் அக்காவையும் எங்காவது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அன்ரா தேடத் தொடங்கினார். இவ்வாறு சில நாட்கள் தேடியதன் பின்னர் "வெள்ளவத்தை புகையிரத நிலைய வீதியில் இருக்கும் விசாலமான காணியொன்றில் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட வீடுகள் ஒன்றில் வயோதிப மாது ஒருவரின் வீட்டில் இடமிருக்கிறது, அங்குசென்று கேட்டுப்பாருங்கள்" என்று இன்னொரு கன்னியாஸ்த்திரி தனக்குத் தெரிந்தவர்கள் ஊடாக ஒரு விலாசத்தை எடுத்துத் தந்தார். ஆனால் அவ்வயோதிப மாதினால் இயங்குவது கடிணம் ஆதலால், அவருக்குத் தேவையான பணிகளைச் செய்துகொண்டு, ஆயிரம் ரூபாய்கள் வாடகையாகத் தந்தால் தங்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு நாள் மாலை வேளையில் அவரைச் சந்திக்கச் சென்றோம். மிகவும் குறுகிய, ஒற்றை அறையைக் கொண்ட குடில் போன்றதொரு வீடு. வீட்டின் முன்கதவினால் உள்ளே நுழையும்போது தலையைக் குனிந்தே செல்லவேண்டும். ஐந்து மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவில் விருந்தினர் மண்டபம். அதன்பின்னால் ஒரு கட்டில் மட்டுமே போடக்கூடிய அறை. அதற்கடுத்தாற்போல் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக் கூடிய சமயலறை, அதன் பின்னால் கழிவறையும், குளியல் அறையும். மிகவும் இடவசதி குறைந்த வீடு. ஆனால் வேறு இடங்களும் எமது வசதிக்கு ஏற்றாற்போல்க் கிடைக்கவில்லை. வெகு விரைவில் கனடா போவதற்காகக் காத்திருந்த அந்த வயோதிப மாது கேட்ட ஆயிரம் ரூபாய்கள் மற்றைய இடங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது. ஆகவே சிஸ்ட்டர் அன்ரா அதனையே தெரிவு செய்ய, நாமும் ஏற்றுக்கொண்டோம். அந்த வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கினோம். அக்கா அந்த வயோதிப மாது தங்கிய அறையில் நிலத்தில் பாய் ஒன்றினைப் போட்டுப் படுத்துக்கொள்ள, நானோ வெளியில், விருந்தினர் அறையில் பாயில்ப் படுத்துக்கொள்வேன். காலை எழுந்தவுடன், அம்மாது தனது காலைக்கடன்களைக் கழித்து வெளியே வரும்வரை காத்திருந்து, அவசர அவசரமாக எனது கடன்களை முடித்து, விருந்தினர் அறையிலேயே உடைமாற்றி பாடசாலைக்குச் சென்று வருவேன். எனக்கும் , அந்த வயோதிப மாதிற்கும் அக்காவே சமைக்கத் தொடங்கினாள். காலையில் பெரும்பாலும் பாணுடன் அஸ்ட்ரா மாஜரீன். மத்தியானத்தில் முருகன் கடையில் எடுக்கும் மரக்கறிச் சாப்பாட்டை நானும் அக்கவும் பகிர்ந்துகொள்வோம். சாப்பாட்டுப் பாசலில் பெரும்பகுதியை எனக்குத் தந்துவிட்டு அக்கா அரைவயிறு, கால்வயிறு என்று இருந்துவிடுவாள், பாவம். இரவில் ஏதாவது செய்வாள், முட்டையை அவித்து, உப்பும் மிளகும் சேர்த்துக் குழைத்து, பாணிற்குள் வைத்து வெட்டித் தருவாள், எனக்கு அதுவே அமிர்தமாக இருக்கும். அதேபோல அப்பெண்மணி கேட்கும் உணவுகளை அக்கா செய்துகொடுப்பாள். எங்களைக் கொழும்பிற்குப் பாதுகாப்பாகக் கூட்டிவந்து, பாடசாலைகள் தேடி, கெஞ்சி மன்றாடி, அனுமதியெடுத்து, எமது செலவுகளுக்கு ஒழுங்குகள் செய்து, நாம் தங்குவதற்கும் இடம்தேடிக்கொடுத்து, நாம் இனிமேல் பாதுகாப்பாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் மீளவும் யாழ்ப்பாணம் திரும்பினார் அன்ரா.1 point- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் புரையோடியுள்ள இந்துக் கடவுள்களின் நம்பிக்கையைப் பொய் என்று மக்கள் இலகுவாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புராணங்கள் பொய்யாக இருந்தால் புராணக் கதாநாயகர்களான கடவுள்களும் பொய் என்றாகும். இதேபோல் இலங்கையிலும் என்றாவது ஒருநாள் மகாவம்சம் கூறும் பொய்களும் உடையும்.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 point1990, பேச்சுக்கள் முறிவடைந்து புலிகளுடன் பிரேமதாசா யுத்தத்தினை ஆரம்பித்திருந்த காலம். மட்டக்களப்பின் பலவிடங்களிலும் படுகொலைகள். என்னுடன் கூடப்படித்த பல மாணவர்கள் கொல்லப்பட்டார்கள், அல்லது காணாமலாக்கப்பட்டார்கள். அடிக்கடி நடந்த சுற்றிவளைப்புக்கள், தலையாட்டிகளுக்கு முன்னால் நடந்த அணிவகுப்புக்கள் என்று நகரே அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்த கொடிய ஊழிக்காலம் அது. இரவுகளில் கேட்கும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள், மரண ஓலங்கள் என்று தூக்கமின்றி விடுதியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பொழுதுகள் கழித்த இரவுகள். எமது விடுதியை இராணுவம் சுற்றிவளைத்தபோது, பாதிரியர்களாக இருந்த விடுதி பராமரிப்பாளர்களுடன் பேசிக்கொண்டே மாணவர்களை நோட்டம் விட்ட சிங்கள இராணுவக் கப்டன். உயர்தரம் படித்துக்கொண்டிருந்த விடுதி மாணவர்களை அழைத்துச் செல்லப்போகிறேன் என்று அவன் அடம்பிடிக்க, பாதிரியார்களோ அவனிடம் கெஞ்சி மன்றாடி அம்மாணவர்களை விடுவித்துக்கொண்ட பொழுதுகள் என்று உயிர் வாழ்தலுக்கான நிச்சயம் இன்றி கடந்துபோன நாட்கள். சில மாதங்களாக மட்டக்களப்பு நகரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் வீதிகள் முற்றாக மூடப்பட்டு, அகோரமான படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வந்தன. மரணங்களை நாள்தோறும் கண்முன்னே கொண்டுவந்து காட்டிய மூன்று, நீண்ட, கொடிய மாதங்கள். ஒருவாறு மட்டக்களப்பிலிருந்து கொழும்பிற்கான புகையிரதச் சேவை வாழைச்சேனையிலிருந்து நடைபெறத் தொடங்கியது. ஆனால், வாழைச்சேனைவரை பஸ்ஸில்த்தான் பயணிக்கவேண்டும். மட்டக்களப்பிற்கும் வாழைச்சேனைக்கும் இடையிலான வீதியின் பகுதியில் அமைந்திருக்கும் முஸ்லீம் பிரதேசங்களில் பஸ்ஸை மறித்து, ஆண்களை இறக்கி வெட்டத் தொடங்கியிருந்தார்கள் முஸ்லீம் ஊர்காவற்படையினர். என்னையும் அக்காவையும் எப்படியாவது பாதுகாப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்குக் கூட்டிவந்துவிட வேண்டும் என்று சிஸ்ட்டர் அன்ரா உறுதி பூண்டார். இதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்கு அவர் வந்தார். அக்காவிற்கும் சிஸ்ட்டர் அன்ராவிற்கும் இருக்கக் கிடைத்த ஆசனத்தில், அவர்களின் கால்களுக்குக் கீழே நாள் ஒளிந்துகொள்ள , எங்களைப்போலவே இன்னும் பலரை ஏற்றிக்கொண்டு அந்தப் பஸ் தனது பயணத்தை ஆரம்பித்தது. முஸ்லீம்களால் நடத்தப்படும் படுகொலைகளில் இருந்து பயணிகளைக் காக்கவென செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதுபோன்றதொரு அமைப்போ பஸ்ஸின் முன்னால்ச் செல்ல, மெதுமெதுவாக பஸ் பின்னால் தொடர்ந்து சென்றது. சிலவிடங்கள் பஸ்ஸை மறித்து உள்ளே வர முயன்ற காடையர்களை முன்னால்ச் சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாழைச்சேனையில் புகையிரதத்தில் ஏறும்வரை பஸ்ஸில் இருந்த அனைவரும் உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கவில்லை என்றே கூறலாம்.1 point- சிஸ்ட்டர் அன்ரா
1 pointபாடசாலையில் கணிதபாடம் எனக்குப் புரியவில்லை. சின்னையா டீச்சர் சொல்லித் தந்த கணிதம் எனது மூளைக்குள் இறங்கவில்லை. மிகவும் கடிணப்பட்டேன். ஒரு வார விடுமுறை நாளில் என்னைப் பார்க்க விடுதிக்கு வந்த சிஸ்ட்டர் அன்ராவிடம் இதுகுறித்துக் கூறினேன். சிசிலியா பெண்கள் பாடசாலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த அவர், எனக்கு உதவ முன்வந்தார். தாண்டவன்வெளியில் இருந்த அவரது மடத்திற்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வரச்சொன்னார். தனது வேலைப்பழுவிற்கு நடுவிலும் எனக்குக் கணிதம் சொல்லித் தந்தார். காலையில் 8 மணிக்கு அங்கு சென்றுவிடும் எனக்கு காலையுணவு, மதிய உணவு என்றெல்லாம் தந்து கணிதம் படிப்பித்தார். எனக்கும் கணிதம் சிறிது சிறிதாகப் பிடிக்கத் தொடங்கியது. அவரிடம் கணிதம் கற்ற சில மாதங்களிலேயே பாடசால்யில் என்னால் ஓரளவிற்கு கணிதம் செய்ய முடிந்தது. கூடவே பேரின்பராஜா சேரும் வந்து சேர்ந்துவிட, கணித பாடம் பிடித்துப் போயிற்று. நான் மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கிய முதலாவது வருடத்தில் சிஸ்ட்டர் அன்ரா யாழ்ப்பாணத்திற்கு மாற்றாலாகிச் சென்றார். கவலை என்னை முழுமையாக ஆட்கொள்ள, அவரை வழியனுப்பி வைத்தேன். அக்கா அப்போதும் மட்டக்களப்பிலேயே படித்துவந்தாள். ஆனாலும் சிஸ்ட்டர் அன்ரா போனது மனதை வெகுவாக வாட்டியிருந்தது. சில நாட்கள் அழுதேன், ஆனாலும் வேறு வழியில்லை. வந்தாயிற்று, படித்தே ஆகவேண்டும்.1 point- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
1 pointஇஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழித்து விடுவோம் என்பதே ஈரானின் தாரக மந்திரம். இவ் இலக்கினை நோக்கியே ஈரான் தனது இராணுவ, ஆயுத பலத்தினை உருவாக்கி வந்திருக்கிறது. இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக முற்றுகைக்குள் வைத்திருக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேலினைச் சூழ்வுள்ள இஸ்லாமிய நாடுகள், மற்றும் தனது முகவர் அமைப்புக்களை உருவாக்கி, வளர்த்து, இராணுவ மயப்படுத்தி வந்திருக்கிறது. பலஸ்த்தீன அமைப்புக்களான ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புள்ளா, ஆசாத்தின் சிரிய அரசு, ஈராக்கின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள், யெமெனின் ஹூத்தீக்கள் என்று பல முகவர் அமைப்புக்களை இஸ்ரேலின் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துமாறு ஊக்குவித்து வந்திருக்கிறது. ஆக 1967 ஆம் ஆண்டின் ஆறு நாள் யுத்தம் மற்றும் 1973 ஆம் ஆண்டின் யொம் கிப்புர் யுத்தம் ஆகியவற்றை நடத்தி இஸ்ரேலினை முற்றாக அழித்துவிட சூழவுள்ள இஸ்லாமிய நாடுகள் முயன்று, தோற்றதன் பின்னர், நவீன காலத்தில் ஈரான் தனது முகவர்களைக் கொண்டு இவ்வாக்கிரமிப்பினை நடத்த முயல்கிறது. யூத இனம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது சுமார் ஆறு மில்லியன் மக்கக்ளை இழந்திருந்தது. கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனக்கொலையாக இது பார்க்கப்படுகிறது. இன்று வெறும் 9 மில்லியன் மக்களை மட்டுமே கொண்டு, 20,000 சதுரக் கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மீது நடத்தப்படும் எந்தவொரு அணுவாயுதத் தாக்குதலும் நிச்சயமாக இன்னொரு பாரிய இனக்கொலையாகவே முடிய வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான், தமது இனம் இரண்டாவது முறையாகவும் இன்னொரு இனக்கொலையினைச் சந்தித்துவிடக் கூடாதென்பதில் யூதர்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். (கிறீஸ்த்துவிற்குப் பின்னரான காலத்தில் அன்றைய இஸ்ரேலில் இருந்து அகதிகளாக உலகெங்கும் அடித்துவிரட்டப்பட்ட யூதர்களைத் தேடித்தேடி மீளவும் தமது சரித்திர நிலத்திற்குக் கொண்டுவந்துசேர்க்க இஸ்ரேலிய அரசாங்கங்கள் கடந்த 70 வருடங்களாக முயன்று வருகின்றன. இதன் ஒரே நோக்கம் யூதவினம் அழியாது, ஓரினமாக ஓரிடத்தில் வாழவேண்டும் என்பதுதான்). தனது இனத்தை முற்றாக அழித்தும், தனது சின்னஞ்சிறிய நாட்டை முற்றாக ஆக்கிரமிக்கவும் மட்டுமே ஒரு நாடு அணுவாயுதத்தினைத் தயாரிக்கின்றது என்றால், அவ்வணுவாயுதத்தை எப்பாடுபட்டாவது அழித்துவிட பாதிக்கப்பட்ட அவ்வினம் முயல்வதில் தவறு இருக்கின்றதா? ஈரானினால் உருவாக்கப்பட்டு வரும் அணுச்சக்தி எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றது? தனது சக்தித் தேவைக்காக வெறும் 1 வீதத்தினை மட்டுமே அணுச்சக்தியில் இருந்து பெற்றுக்கொண்டுவரும் ஈரானிற்கு மிகப்பெரும் அணுச்சக்தியைக் கொடுக்கப்போகும் பல அணுவாலைகள் எதற்கு? தனது நிலப்பரப்பில் பெருமளவு எண்ணெய்வளத்தையியும், இயற்கை வாயுவையும் கொண்டிருக்கும் ஈரான், அணுச்சக்தியில் மிகுந்த கவனம் செலுத்த விரும்புவது எதற்காக? அணுவாயுதம் ஒன்றினை உருவாக்குவதற்கான மிகத்தூய . செறிவான யுரேனியத்தை உருவாக்கியும் சேமித்து வைப்பது எதற்காக? மருத்துவத் தேவைக்காகவும், சக்தித் தேவைக்காகவும் என்று கூறிக்கொண்டே இத்தேவைகளை நிவர்த்திசெய்யும் அளவினை விட பலமடங்கு சக்திவாய்ந்த யுரேணியம் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டு வருவது எதற்காக? தான் உருவாக்கும் அணுச்சக்தி வெறுமனே மருத்துவத் தேவைக்காகவும், மின்சாரத்திற்காகவும் மட்டும்தான் என்றால், இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து முற்றாகத் துடைத்தழிப்போம் எனும் கொள்கையினை ஈரானின் முல்லாக்கள் இதுவரை கைவிடாது இருப்பதும், அக்கொள்கையினை நோக்கி தமது கவனத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதும் எதற்காக? அணுவாயுதத்தை தயாரிக்கும் நோக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் சுமூகமான முறையில் பயணிப்பதற்கு ஈரானிற்கு பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. ஒபாமாவின் ஆட்சியில் அணுவாயுத நோக்கத்தினைக் கைவிட்டு ஏனைய துறைகளில் கவனம் செலுத்தவென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோதும், 2006 இல் எதிரிகள் எவரிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தனது அணுவாயுதத் திட்டத்தைப் பாதுக்காகவென போர்ட்டொவில், மலைகளுக்கு நடுவில், 300 அடிகள் ஆளத்தில், மிகப்பாதுகாப்பான அணு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி, அணுவாயுத உற்பத்திக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் பாதுகாத்து வருகிறது. இந்த அணு ஆராய்ச்சி நிலையம் உட்பட மூன்று அணுவாராய்ச்சி நிலையங்களே இன்று தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்னைப்பொறுத்தவரையில் சர்வாதிகாரிகளிடமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமும் இருக்கும் மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மனித குலத்தின் இருப்பிற்கே ஆபத்தானவை. வட கொரியா, ஈரான், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை இதற்காகக் குறிப்பிடலாம். ஏனெறால், தமது சொந்த நலனிற்காகவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், மதவெறியினால் உந்தப்பட்டும் இவர்கள் தம்மிடமிருக்கும் நாசகார ஆயுதத்தினை எப்போது வேண்டுமானாலும் பாவித்துவிடுவார்கள். ஆகவேதான் இவர்களிடம் அணுவாயுதங்கள் உட்பட நாசகார ஆயுதங்கள் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பது அவசியமாகிறது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியும். தவறேயில்லை.1 point- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
1 pointஅணுசக்தி உலைகளை தாக்கியதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் எந்த சேதமோ அழிவுகளோ ஏன் அணு வெளியேறியதற்கான அறிகுறிகளோ இல்லை???1 point- இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
1 pointசெய்யிறது முழுக்க ஊத்தைவாளி வேலை. அதுக்குள்ளை, டிரம்புக்கு.... நோபல் பரிசு வேணுமாம்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointம் ....... ம்ம் .........ஆஹா .....அஹாஹா .......அருமை ......அருமை ......... ராஜா ஒரு ராஜாதிராஜா ......... ! 🙏1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
1 point- விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது
யாரப்பா இந்த ஐலண்ட் என்கிற பக்திமான். அதீத சிங்கள தேசியவுணர்வில் ஊறிக்கிடக்கிறார் போலத் தெரிகிறது.1 point- முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
சிங்களம் படிப்பிச்சா படிப்பிச்சிட்டு போங்கோ. உந்த புத்த தோரணங்கள் தேவையில்லாத ஆணி. நாளைக்கு அவன் வந்து விகாரை ஒண்டை கட்டுவான், தொல்பொருள் திணைக்களமும் வந்து புத்த சமய எச்சங்களை கண்டுபிடிப்பார்கள்.1 point- ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
என்ன நீங்கள் நானா இல்லையா! இதில் வசைமாரி எங்கே இருக்கிறது? அவர்களின் நடைமுறையைதானே எழுதினேன்!!1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் · stornepoSdci9l9m7u1fml8g210ih7gciga64l0007ltfuh92t4lh3 62h3g · ஒரு #காகம் அதற்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது... அது ஒரு எறும்புப் புற்றுக்கு சென்று எறும்புகளை தன உடம்பில் ஏற விடும் விசித்திரமாகத் தெரிகிறதா? இது உண்மையில் இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான குணப்படுத்தும் சடங்குகளில் ஒன்றாகும். ஒரு காகம் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணரும்போது, அது வேண்டுமென்றே ஒரு எறும்புப் புற்றைக் கண்டுபிடித்து, அதன் இறக்கைகளை அகலமாக விரித்து, எறும்புகள் அதன் இறகுகளில் ஊர்ந்து செல்லும் வரை காத்திருக்கும். ஏன்? ஏனெனில் எறும்புகள் ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுகின்றன - இது பறவையின் இறகுகளில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். இந்த நடத்தை "anthilling" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது காகங்களில் மட்டுமல்ல, பல பறவை இனங்களிலும் காணப்படுகிறது. மருந்து இல்லை. கால்நடை மருத்துவர் இல்லை. தூய உள்ளுணர்வு மற்றும் இயற்கையின் உள்ளமைக்கப்பட்ட மருந்தகம். இயற்கை உலகம் புத்திசாலித்தனமான, சுய-குணப்படுத்தும் அமைப்புகளால் நிறைந்துள்ளது என்பதை நினைவூட்டும் ஒரு அற்புதமான நினைவூட்டல்........ !1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- சிஸ்ட்டர் அன்ரா
0 pointsவெள்ளவத்தையில் வாழ்ந்த காலம் முதல், நான் பல்கலைக்கழகம் செல்லும் காலம்வரை சிஸ்ட்டர் அன்ராவின் முயற்சியினால் எனக்கும் அக்காவிற்குமான செலவுகளுக்கு அவுஸ்த்திரேலியாவில் இருந்து எனது மாமாவே பணம் அனுப்பி வந்தார். சிலவேளைகளில் எமக்கு உதவுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் அன்ரா மீது சில உறவினர்களால் முன்வைக்கப்பட்டன. "உவன் படிக்கப்போறதில்லை, ஏன் சும்மா மினக்கெடுகிறாய்?" என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிஸ்ட்டர் அன்ராவோ எதையுமே சட்டை செய்யவில்லை. எங்கள் இருவரையும் எப்படியாவது படிப்பித்து, கரையேற்றிவிட வேண்டும் என்பதே அவருக்கு இருந்த நோக்கமெல்லாம். 1994 ஆம் ஆண்டு தம்பி ஒரு முறை எங்களைப் பார்க்க கொழும்பிற்கு வந்திருந்தான். அப்போது நாங்கள் கிருலப்பனையில் தங்கியிருந்தோம். எங்களைக் கண்டவுடன் எங்களுடனேயே தங்கிவிடலாமா என்று அவன் அன்ராவைக் கேட்டான். அவனையும் தகப்பனார் அடித்துத் துரத்திவிட்டிருக்க, பாதிரிமார்களாகப் படிக்கும் கல்லூரியொன்றில் அவனையும் அன்ரா சேர்த்துவிட்டிருந்தார். அதன் விடுமுறை ஒன்றின்போதே எங்களைப் பார்க்க வந்திருந்தான். சிஸ்ட்டர் அன்ராவே அவனை எம்மிடம் கூட்டி வந்திருந்தார். அவனையும் எங்களுடன் தங்கவைக்க முடியுமா என்று அன்ரா கேட்டபோது அக்காலப்பகுதியில் எம்முடன் தங்கியிருந்த இன்னுமொரு சித்தியும், அம்மம்மாவும், 'இப்பவே உவை ரெண்டுபேரையும் வைச்சுப் பாக்கேலாமக் கிடக்கு, அதுக்குள்ள உவனையும் கொண்டு வந்துட்டியோ?" என்று கூறி முற்றாக மறுத்துவிட்டார்கள். மனமுடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய தம்பி, சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின்போது கரவெட்டிக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டான். ஐந்து வருட சேவையின்பின்னர் 2000 இல் மாவீரராகியும் போனான்.0 pointsImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்