Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19109
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20010
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    10206
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/09/25 in all areas

  1. சிறப்புக்கட்டுரைகள் ’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’ இரா. தமிழ்க்கனல் Published on: 21 Jun 2025, 2:30 pm Share நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம். அந்த உரையாடலிலிருந்து... பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம் யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே? உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள். இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை. நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள். வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள். இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன். சமாதி என்றால் இறந்துவிடுவார்களா? இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா. சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது? யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன. திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன. திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார். கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள். சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை. உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார். இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்... கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள். புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது! எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது? தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும். யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே... இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன். ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும். கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை. Andhimazhai’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்ல...நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்த
  2. தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.
  3. 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு தம்பதியினரில்... மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார். கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று. எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும் மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள். பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள் ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள். ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! காரணம்... எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார். இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான். படித்ததில் பகிர்ந்தது
  4. இதை விட லாராவுக்கு செருப்பை சாணியில் முக்கி ரெண்டு அறை விட்டு இருக்கலாம்…
  5. இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம். ஐயாவுக்கு கொடுத்த அந்த கொழும்பு 7 வீட்டை மகள் திருப்பி அரசுக்கு கொடுத்து விட்டாவா?
  6. தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி எங்கோ வாசித்த ஞாபகத்தில் அதனைச்சரிபார்க்காது எழுதிவிட்டேன்.
  7. https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/ பதிவு செய்யலாம் என மேலுள்ள இணைப்பு காண்பிக்கிறது அண்ணை.
  8. சண்டையில்லாத குடும்பம் எது ? ஆனால் குடும்ப கூடு மட்டும் கலையக் கூடாது .பெற்ற பிள்ளைகளுக்காக தியாகத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களேத் தனை பேர் சண்டை என்பது கருத்து வேறுபாடு சற்று நேர உணர்ச்சி கொந்தளிப்பு .
  9. Global entry யைப் பாவிப்பதால் கடந்த சில வருடங்ளாக சப்பாத்து கழற்றாமல் கணனி ஐபாட் வெளியே எடுக்காமல் போய் வருகிறேன்.
  10. இது அவங்கட "பாரம்பரியம், கலாச்சாரம்" எல்லோ? எப்படிக் குற்றமாகும்?😎
  11. தடுப்பூசி ஏற்ற... உங்கள் நண்பர்கள், உங்களுக்கு நன்மையே செய்துள்ளார்கள். 😂
  12. எனக்கும் இந்த அனுபவம் உண்டு! 5ஆம் ஆண்டிற்குள் கற்கும்போது பாடசாலையில் எல்லோருக்கும் தடுப்பூசி போட அழைத்துச் செல்ல நான் மெதுவாக சிறுநீர் கழிக்க செல்வதுபோல போய் மறைந்திருக்க நண்பர்கள் பிடித்துக்கொண்டு போய் ஊசி போடவைத்தார்கள்.
  13. 2026 ஆம் ஆண்டிற்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி! இலங்கையின் அனைத்து சிரேஷ்ட மற்றும் இடைநிலைப் பாடசாலைகளுக்கும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதன்போது இணைய வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை பாடசாலைகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ‘1000 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும், இதுவரை 1500 பாடசாலைகளுக்கு 1900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ்இ இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன், கல்வித் துறையின் அனைத்து நிலைகளையும் ஒருங்கிணைக்கும் தேசிய கல்வி மேலாண்மை அமைப்பை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2026 இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் எனவும், இதற்காக பாடசாலைகளுக்கு 5,000 ரூபா வரம்பற்ற தரவு தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438623
  14. மிகவும் அரிதாக, எமக்கு ஆதரவாக எழும் ஒரு குரலை - அதுவும் இந்தியாவில் இருந்து எழும் குரலை, அவரின் முன்னாள் தடுமாற்றங்களை வைத்து நாமே வாயடைக்கிறோம் 🤦‍♂️. அதுவும் ஆதரவு எங்கே இருந்து வந்தாலும் அதை வரவேற்று, ஒருங்கிணைக்க வேண்டிய செம்மணி போன்ற ஒரு விடயத்தில். இதற்கு ஒரே காரணம் சத்யராஜ் மகள் இப்போ திமுக என்பதும், அவரின் தற்போதைய திமுக ஆதரவு நிலைப்பாடும் மட்டுமே. இங்கே பலருக்கு ஈழத்தமிழரின் உரிமையை வெல்வதை விட, திமுகவை, அது சார்பானவர்களை எதிர்த்து அதன் மூலம் இறந்து போன கருணாநிதியை வன்மம் தீர்ப்பது மட்டுமே பிரதானமானது. முன்பே சொல்லி உள்ளேன் - சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம், ஈழ தமிழர் கூர்ப்ப்பில் பிந்தங்கிய இனம். அந்த கருதுகோளுக்கு இது இன்னொரு உதாரணம்.
  15. எலான் மாஸ்க் நம்பக்கூடிய ஒருவரா? நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு போக்கில் செல்கின்றார்.
  16. உண்மையில் உங்கள் கருத்தில் உங்களுக்கே தெளிவின்மை தெரிகிறது. ஈழவிடுதலை போராட்டம் சார்ந்து சத்யராஜ் எப்பொழுதுமே தெளிவாக இருப்பவர். அவரது கடவுள் மறுப்பு கொள்கையால் திராவிடத்தை பிடித்து தொங்க வேண்டிவருவதால் அவர் திராவிட கட்சிகளை ஆதரிப்பது தெளிவு. அது எமக்கு தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. இவ்வாறு ஒவ்வொருவராக தீக்குளித்து நிரூபிக்க தொடங்கினால் நாம் கூட...?
  17. ஈழத்திற்கு ஆதரவாக இருந்த/இருக்கும் தமிழக உறவுகளை,பிரபல்யங்களை விமர்சிக்கலாம் ஆனால் எதிர்க்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு.
  18. நடையா இது நடையா ....... ! 😍
  19. பிள்ளையானும், இனிய பாரதியும்.... தம்மை ஏவி விட்ட, சிங்களத் தலைமைகளை காட்டிக் கொடுத்தால், அனுர அரசில் தண்டனை குறைவாக கிடைக்கலாம். ஆனால் இந்த ஊத்தைவாளிகள்... தமிழரைத்தான் காட்டிக் கொடுக்குமே தவிர, சிங்களவனை காட்டிக் கொடுக்காதுகள். அதுகளின் டிசைன் அப்பிடி.
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்மா (1808 –1896) மற்றும் சார்லஸ் டார்வின் (1809-1882), தங்களது 43 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில், 10 குழந்தைகளைப் பெற்றனர். கட்டுரை தகவல் பிபிசி நியூஸ் முண்டோ 6 ஜூலை 2025 சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார். இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார். அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது. வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார். திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள் ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக, 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார். 'திருமணம் செய்து கொள்வது' என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்: குழந்தைகள் (இறைவன் நாடினால்). உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்). விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது). வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும். இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும். "இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்." என பின்னர் அவர் கூறினார். "அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்." என்றார் டார்வின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சார்லஸ் டார்வின் அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: "லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்." பின்னர் அவர் 'திருமணம் செய்யாதீர்கள்' என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்: எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம். மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது. கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல். உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்). நேர விரயம். மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது. உடல் பருமன் மற்றும் சோம்பல். பதற்றம் மற்றும் பொறுப்பு. புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம். உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது). ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில் சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம். தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: "எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு." திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்? ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: "திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னரா?" "நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு" சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது. "முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது" ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார். நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார். "என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை" என்று அவர் எழுதினார். ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: "உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது." மேலும், "கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்." என்றும் குறிப்பிட்டார். நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், "மிகவும் சிறந்த நாள்!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். எம்மாவின் "சம்மதம்" மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல. டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். இருப்பினும், டார்வினின் 'திருமண ஆசை மற்றும் முன்மொழிவு' எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார். ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான "கிரேட் வைவ்ஸ்"-இல் சுட்டிக்காட்டுகிறார். தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது. பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது. அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது. அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது. 'எம்மா- ஒரு அற்புதமான துணைவி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டவுன் ஹவுஸ் தோட்டத்தில் சார்லஸ் டார்வின் (1870). இங்கு அவர் தனது பெரும்பாலான நேரத்தை நடைபயிற்சி மற்றும் சிந்திப்பதில் செலவிட்டார். இந்த வீட்டில்தான் அவர் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர். அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார். மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரைக் காப்பாற்றியது. டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார். இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார். அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார், பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது. ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது. 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள். காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும். ஒரு காதல் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வேரா (1902-1991) விளாடிமிர் நபோகோவ் (1899-1977) உடன், 1923இல் பெர்லினில். ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது. வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார். வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளைச் சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார். கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார். ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு 'மோசமான இல்லத்தரசி' என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார். மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார். 12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான "லோலிடா" வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார். பின்னர் அவர் எழுதினார்: "என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது." வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார். அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை 'லெட்டர்ஸ் டு வேரா' என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட "தி க்ரூட்ஸர் சொனாட்டா" என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது. அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார். அவர் "அன்னா கரேனினா"-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார். "தி க்ரூட்ஸர் சொனாட்டா"வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார், வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார். "பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மைச் சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்," என்று அந்தக் கதாபாத்திரம் கூறும். டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரைக் காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார். டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாகப் பார்க்கலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டால்ஸ்டாயின் சீடர்கள் சோபியாவை ஒரு மந்தமான, அறிவற்ற பெண்ணாக, பொருள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே அக்கறை கொண்டவராக சித்தரித்தனர். டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம். டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது. சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார். டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாகச் சிக்கல்களை கையாண்டார். மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார். இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட "போர் மற்றும் அமைதி" (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார். 'தி க்ரூட்ஸர் சொனாட்டா' வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார். அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார். எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது. எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார். 'சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக' செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார். அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார். டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது. ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார். "நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்." என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார். "எல்லோரும் கேட்கிறார்கள், 'ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று" எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, "அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், 'எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20w9wqqexgo
  21. உந்த தனிச் சிங்கள சுற்றறிக்கைகளை பாக்க எனக்கு விசர் தான் வாறது. அரச மொழி மூண்டு, இந்த யாழ்தேவியை அதிகம் பாவிப்பவர்கள் தமிழர்கள். மூன்று மொழியும் நன்கு தெரிந்த ஒருவரையாவது அரச வேலையில் இணைக்க முடியாத நிலையிலா சிறிலங்கா இருக்கிறது?
  22. இஸ்ரேலுக்கு ஆதரவாக எழுதிய யாரும் இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்ததாக அல்லது நியாயப்படுத்தியதாக நான் அறியவில்லை. ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழினத்தவர்கள் 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களைப் பலிகொண்டு தொடரும் ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  23. பிரிகேடியர் ஜெயம் முதலாம் ஈழப்போர் காலம்
  24. விருப்பமில்லாத வரவுசெலவு திட்டம் நிறைவேறியது போல நோபல் பரிசும் விருப்பமில்லா விட்டாலும் கொடுக்க வேண்டி வரலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.