Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87988
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33600
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20010
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19112
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/10/25 in all areas

  1. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்! Vignesh SelvarajUpdated: Thursday, July 10, 2025, 18:28 [IST] நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது. கால்நடைகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த மாநாட்டு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் மேற்கொண்டுள்ளார். இயற்கை விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்சார்பு பொருளாதாரம், கள் இறக்கும் உரிமை உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சீமான். அண்மையில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் சீமான். இந்நிலையில், முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு இன்று நடத்தப்படுகிறது. மதுரை விராதனூர் பகுதியில் நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகள் மற்றும் ஆடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு பிரத்யேக பட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான். ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இன்றைய தினம் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சீமான் பேசுவது எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்ப்பட உள்ளது. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தப்படுவது கவனம் பெற்றுள்ளது. https://tamil.oneindia.com/news/madurai/ntk-chief-seeman-holds-conference-near-madurai-amid-thousands-of-cows-and-goats-719413.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி புலம்பெயர் மாடுகள் ஒண்டும் போகேல்லையா🤣
  2. இவர்களைத் தான் மாங்காய் மடையர்கள் என்பது. அவகாடோவின் படத்தையாவது போடாமல் விட்டிருக்கலாம்.
  3. ஒரு மிருகவைத்தியராக, ஆடு மாடுகளை இந்த சித்திரவதைக்குள்ளாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂! PETA நடவடிக்கை எடுக்க வேண்டும்!
  4. காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வார்த்தைகளில் சொல்ல முடியாத பயங்கரத்தையும் வன்முறையையும் காவிவரும் இக் காட்சிகள் என்னை சிதைக்கின்றன. சிலவேளைகளில் காணச் சகிக்காமல் படங்களையும் காணொளிகளையும் எனது விரல்கள் கைபேசித் திரையில் வழுக்கிச் செல்ல வைக்கிறது. அடுத்த காட்சியாக எதையெதைப் பார்க்க நேரிடலாம் என்ற அச்சம் எழுகிறது. பெரும்பாலும் இவற்றை சகித்துக் கொள்ள நான் நிர்ப்பந்திக்கப் படுவதாக உணர்கிறேன். நான் தனியாக இல்லை என எனக்குத் தெரியும். வசதிவாய்ப்புகளும் பாதுகாப்பு உணர்வும் பெற்று வாழ்கிற நம்மில் பலரும் இந்தக் காஸா குழந்தைகளின் அவலத்தை சமூகவலைத் தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்பாகவும் சிரித்து மகிழ்ந்தும் இருக்கும் மற்றக் குழந்தைகளையும், விளம்பரங்களையும், மீம்களையும் காவிவரும் திரைகளினூடு காஸா குழந்தைகளின் அவலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது இன்னும் கொடுமை நிறைந்த உணர்வை கிளர்த்துகிறது. அது உங்கள் குழந்தையாக இருந்திருக்கக் கூடும் அல்லது எனதாகவும் இருந்திருக்கக் கூடும் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒரு குழந்தையாகவும் இருந்திருக்கக் கூடும். அந்த கொடுமைக்குள் அகப்படாத, பிறப்பின் அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள் எமது குழந்தைகள் என சொல்லத் தோன்றுகிறது. இந்த காஸா குழந்தைகளுக்காகவும் அவர்தம் குடும்பங்களுக்காகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். அரசியல்வாதிகளுக்கு எழுதுகின்றனர். உதவிப் பணி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவு நிதி வழங்குகின்றனர். இந்த அவலத்தை வீதிக்கு கொண்டுவந்து நியாயம் கேட்கின்றனர். ஆனாலும் இப்போதும் குழந்தைகள் மீதான இந்தப் போர் தொடர்கிறது. அவர்களுக்கு உதவ முடியாத நிலையிலுள்ள, எந்த அதிகாரமும் அற்ற மக்களின் திரட்சியான உணர்வலை ஓங்கியிருக்கிறது. இந்த குழந்தைகளின் நிலை இன்னும் எவளவு மோசமாகப் போகிறது என்பதை ஊகிக்க முடியாதிருக்கிறது. ஐநா இன் செய்திப்படி, இந்த வாரம் 14000 குழந்தைகள் ஊட்டச் சத்தின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியவருகிறது. பட்டினிதான் காரணம். பசி போருக்கான ஓர் ஆயுதமாகப் பாவிக்கப்படுகிறது. அழித்தொழிப்பின் ஓர் ஆயுதமாக பட்டினி ஏவப்படுகிறது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. கற்பனை பண்ணமுடியாத பயங்கரத்தை எதிர்நோக்கும்போது, கவிழ்ந்துகொள்ளும் உணர்வானது மக்களின் கூட்டு உளவியலில் காயத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம் உதவிப் பணியாளர்கள் மற்றும் வைத்தியப் பணியாளர்கள் மனித பெறுமதிக்கும் உளக்கட்டமைப்புக்கும் எதிராக செயற்பட வேண்டிய கையறு நிலைக்கு தள்ளப்படும்போது, ஏன் செயற்படாமல் இருக்கும் நிலையிலும்கூட அவர்கள் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக நேர்கிறது. கோவிட் தொற்று காலத்தில் வைத்தியர்கள் தாதிகள் பணியாளர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு உள்ளானார்கள். சிகிச்சை தேவையாயிருந்த நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள், உபகரணங்கள், வளங்கள், தலைமைத்துவம் என்பன தடையாக இருந்ததே அதற்குக் காரணம். ஆனாலும் இந்தவகையான துன்பம் காஸாவைத் தவிர வேறெங்கும் இவளவு கூர்மையயாக உணரப்பட்டதாக இல்லை. வைத்தியத்துறை பணியாளர்களும் உதவிப் பணியாளர்களும் துயரத்தாலும், குற்றவுணர்வாலும், ஏமாற்றத்தாலும், ஏன் எல்லோருக்குமே உதவிசெய்ய முடியாமலிருக்கிற கையறுநிலையாலும் ஏற்படுகிற மனநெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உதவுவதற்கும் உணவூட்டுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் என்றாகிப்போன பணியில் இருக்கும் அவர்கள் அதையெல்லாம் செய்ய முடியாமல் போய்விடுகிறபோது உளநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். காஸா தாய் தந்தையர் தமது குழந்தை பசியில் துடிதுடித்து அழுகிறபோது, தாம் ஒரு பிடி உணவுகூட ஊட்ட முடியவில்லையே என்ற பெருந்துயருள் முழ்கிப் போகிறார்கள். குண்டுவீச்சுக்கு நடுவிலேயும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளை நினைத்துப் பார்க்கிறேன். அல் ஷீபா மருத்துவமனையில் ஒரே கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் ஏழு பச்சைக் குழந்தைகளை புகைப்படத்தில் பார்க்கிறேன். உயிர் வேண்டி, சூடான கதகதப்பு வேண்டி அவர்கள் அந்த மெத்தையில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். வலியைப் போக்கும் மருந்துகளோ மகப்பேற்றுச் சிகிச்சை உபகரணங்களோ வசதிகளோ இன்றி இந்தக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அந்தத் தாய்மார்கள் இப்போ எங்கே? அவர்களில் எத்தனை பேர் தப்பிப் பிழைத்தார்கள்? அவர்களைக் காப்பாற்ற குறைந்த வளங்களுடன் போராடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த முயற்சியெல்லாம் எதைப் பரிசளித்திருக்கும்? அவர்களின் இடத்தில் என்னை பதிலியாக்கி யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் அடைந்திருக்கக் கூடிய உளக்காயங்களின் தாக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன். அதிசயமாக இருக்கிறது. கள அனுபவங்களில் நசிபடும் அவர்களின் இடத்தில் இணையாக நின்று முழுமையாக உணர எனக்கு எந்த வழியுமேயில்லை. ஆனால் அதிகாரமற்ற நிலையினை உணர்கிறேன். இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் நாமும் உடந்தையாக இருக்கிறோமா என்ற எண்ணப் பாதிப்பை உணர்கிறேன். காஸாவில் என்னதான் நடக்கிறது என அறியத் துடிப்பவர்களிடம் இந்த உணர்வுகள் எதை தொற்றவைக்கும்? காட்சித் திரையினூடாகத் தன்னும் இந்த பெருந்துயரை காண்பவர்களிடம் என்ன பாதிப்பு நிகழும்? இதற்கெதிராக எதையுமே செய்ய முடியாத அல்லது இதற்குக் காரணமாக இருப்பவர்களை நிர்ப்பந்திக்க முடியாத செயலறுநிலை தருகிற உணர்வு எத்தகையது? நான் பிறந்த அந்தக் காலங்களிலே எனது அம்மா செய்திகளை பார்ப்பதை ஏன் நிறுத்திக் கொண்டாள் என்பது இப்போ எனக்குப் புரிகிறது. அவளால் இப்படியானவற்றை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எனக்கு மகன் பிறந்தபோது நானும்கூட இவ்வாறானவற்றை உள்நுழைந்து பார்க்க முடியாதிருந்தது. எமக்குக் கிடைத்த சலுகைகொண்ட வாழ்வின் சூடான அரவணைப்பும் பாதுகாப்பும் கொண்ட கூட்டினுள் இருக்கவே விரும்பினோம். ஆனால் எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து எமது வாழ்வை துண்டித்து முடங்கிப் போக இணையம் விடவில்லை. செய்திகள் எமது வாழ்வுடன் சமாந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் பயணிக்கத் தொடங்கின. அது எல்லைக் கோடுகளை இல்லாமலாக்கியது. எனது குழந்தை வயிறார உண்டு, துப்பரவானதும் மென்மையானதுமான உடைகளின் சூட்டில் உறங்குகிற பல இரவுகளில் நான் மௌனமாக அழுதேன். படுக்கைகூட இல்லாத, பசியாற்ற முடியாத மற்றக் குழந்தைகளை நினைத்து அழுகை வந்தது. பால்வேண்டி அதிகாலையில் எழும் எனது மகனுக்காக நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் குளிருட்டி சாதனத்தைத் திறந்து பாலை எடுத்துக் கொடுப்பதுதான். குண்டுச் சந்தங்கள் கேட்பதில்லை. காற்றுவெளியை நிரப்பும் பறவைகளின் கீதத்தை கேட்டபடி நாம் சேர்ந்து இருப்போம். அவனை அரவணைத்திருக்கும் பாதுகாப்பும், காஸாக் குழந்தைகளினை சீண்டும் ஆபத்தும் எவளவு முரணாக இருக்கிறது. அது என்னை உலுக்குகிறது. இது உளக் காயத்தின் ஒருவகையா தெரியவில்லை. ஒரு குழந்தையுடன் இணைந்த நாளாந்த வாழ்வானது அப்பாவித்தனம், குளப்படி, குறும்புத்தனம், இயல்பான அன்பு என நடனமாடும் பொழுதுகளாலானது. இவ்வாறான குழந்தைமை உலகின் மீதான மோசமான தாக்குதலை காஸாவில் காணும்போது வலி ஏற்படுகிறது. அதேநேரம் ஒன்றை சொல்லலாம். காஸா குழந்தைகளின் மீது கவிழ்ந்திருக்கும் குரூரத்தை உணர நீங்கள் அவர்களின் பெற்றோராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதஜீவி என்ற வகையில் இந்தக் குழந்தைகளின் இருத்தல் மீது நாம் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என நான் நம்புகிறேன் அல்லது நம்ப முயற்சிக்கிறேன். இந்தக் கூட்டு பொறுப்புணர்வு எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியது. இந்த மாதிரியான நீதியற்ற செயல்களின் முன் அதிகாரமற்றவர்களாக நிற்கிறோம் நாம். அது ஏற்படுத்துகிற உணர்வானது உண்மையின்மீதும் நம்பிக்கையின் மீதும் இழப்புகளை ஏற்படுத்தவல்லது. அது அரசாங்கங்கள் மற்றும் அதன் நிறுவனங்களின் மீது மட்டுமல்ல, உலகின் அறவொழுக்கத்தின் மீதும்தான். அதுமட்டுமல்ல இக் குழந்தைகளை காப்பாற்றுவதில் அவர்களது இயலாமையையையும் அது வெளிப்படுத்துகிறது. இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம்தான் என்ன. சில அரசியல்வாதிகள் சந்தேகமின்றி நம்புவதுபோல, எந்த தாக்கத்தையும் உண்டுபண்ணா மந்தநிலைக்கு இட்டுச் செல்லலாம். இவ்வாறான மந்தநிலையும் உளச்சிதைவு நிலையும் உருப்படியான தாக்கத்தை ஏற்படுத்த தடையாக அமைவதோடு, அதன் வீரியத்தையும் அழித்துவிடக் கூடியது. எனவே மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். தமது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் நியாயமான கோப உணர்ச்சி வெளிப்படக்கூடிய வாய்ப்பும் இருக்கத்தான் செய்யும். பெருமளவுக்கு நம்பிக்கை இழந்த நிலைமையை நான் உணர்கிறேன். இந்த யுத்தத்தில் மனிதநேயம், மனித விழுமியம் எல்லாம் பெயர்த்தெறியப்பட்டிருக்கிறது. நான் அசைக்க முடியாத கனத்த மனதுடன் உலவுகிறேன். காஸாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன். கடந்த 18 மாத காலமும் என்னை மாற்றியிருக்கிறது. நான் கண்டுகொண்டது என்னவெனில், சில மனிதர்களிடம் குழந்தைகள் மீதான இரக்கவுணர்வு என்பது அரசியல் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதையே. இவ்வாறான குரூரமான அறிவு ஒருவரது மூளைக்குள் கல்போல் குந்தியிருக்கிறபோது என்ன செய்ய முடியும்? இதற்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! ravindran.pa 07072025 Thanks: the guardian .com Thanks for image: Aljazeera https://sudumanal.com/2025/07/07/காஸாவின்-குழந்தைகள்/#more-7286
  5. அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்
  6. சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.
  7. இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭
  8. எங்கட ஆட்களில் ஒரு பகுதியினருக்கு இன்னும் உலக வாழ்க்கையில் எது முக்கியமென்பது பற்றிய அறிவு கிடையாது என்பதைக் காட்டும் பதிவு. பிறக்கிறோம், இறக்கிறோம். இடையில் ஏனையோரை தட்டிச் சுத்தாமல், பிராண்டி வாழாமல், கொல்லாமல் வாழ முடிந்தால் அதுவே போதும். இதை விட்டு விட்டு , செத்த பின்னர் என்னைக் கொண்டாட வேண்டும், நினைவுகூர வேணும், புகழ ஒரு கூட்டம் வேணுமென்பதெல்லாம் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத பினாத்தல் ரீமின் ஐடியாக்கள். இந்தப் பதிவைக் கூட சொந்தப் பெயரில் எழுத இயலாத இந்த முகநூல் பதிவர், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் சம்பந்தர் செய்ததை விட எதுவும் செய்து விடாமையால் தான் ஒளிந்து நின்று எழுதுகிறார் போல இருக்கு என ஊகிக்கிறேன்😎!
  9. யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி 10 Jul, 2025 | 05:25 PM யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார். மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. முதல்வரின் மேற்படி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி | Virakesari.lk
  10. மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.
  11. உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார். இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
  12. கோடைகாலம் ஆரம்பித்து விட்ட்து. இம் மாதம் எல்லோரும் குடும்பமாகவும் சங்கங்கள் மூலமும் ஒன்று கூடல் நடத்துவார்கள் அதில் முக்கியம் இடம்பெறும் கூல்.அதன் சுவை தரம் சேர்மான பொருட்களில் இருக்கிறது . விசேடமாக ஓடியல் மா ஊற வைத்து "கசப்பு "வடித்துவிட்டு (ரெண்டுமூன்று தடவை ) நண்டு றால் மீன் (சதைப் பற் றான ) பொருத்தமான மரக்கறிவகை இட்டு காரத்துக்கு மிளகாய் உள்ளியுடன் அரைத்து விட்டுபுட்டு உப்பு அளவாக சேர்த்து உடன் சூட்டுடன் குழுவாக உண்ண (குடிக்க )வேண்டும்
  13. 15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,
  14. அறப் படித்த ஆட்கள்தான்… இப்பிடியான கூழ் முட்டை வேலை செய்யுறது. 😂
  15. 5- வகையான பாரம்பரியமான துவையல் 🥥 1. தேங்காய் துவையல் (Coconut Thuvaiyal) சிறப்பம்சம்: எளியதும், பரம்பரிய சுவையும் 🔸 பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வத்தல் மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய், சிறிது இம்லி 🔸 செய்முறை: 1. எண்ணெயில் பருப்பு, மிளகாய் வதக்கி, இறுதியில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கவும். 2. தேங்காய், உப்பு, இம்லி சேர்த்து அரைக்கவும். 3. சாதத்துடன் கலந்தால் அருமை! --- 🍅 2. தக்காளி துவையல் (Tomato Thuvaiyal) சிறப்பம்சம்: கொஞ்சம் காரமானும், நல்ல Shelf life கொண்டதும் 🔸 பொருட்கள்: தக்காளி – 3 வத்தல் மிளகாய் – 3 கடலை பருப்பு – 1.5 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, பின் தக்காளி சேர்த்து வெந்துவிடும்வரை வதக்கவும். 2. உப்பு சேர்த்து அரைத்து, சிறிது எண்ணெயில் சுட்டு வைக்கவும். --- 🌿 3. கொத்தமல்லி துவையல் (Coriander Thuvaiyal) சிறப்பம்சம்: கொத்தமல்லி வாசனையுடன் அருமையான பச்சை நிற துவையல் 🔸 பொருட்கள்: கொத்தமல்லி இலை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிது இம்லி, உப்பு 🔸 செய்முறை: 1. பருப்பு, பச்சை மிளகாய் வதக்கி, பின் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 2. அனைத்தையும் அரைத்துத் தாளிக்கவும். --- 🌶️ 4. கார வெங்காய துவையல் (Spicy Onion Thuvaiyal) சிறப்பம்சம்: சாதத்துடன் சும்மா சூப்பரா இருக்கும் 🔸 பொருட்கள்: வெங்காயம் – 2 (நறுக்கியது) வத்தல் மிளகாய் – 3 இஞ்சி – சிறிது பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. எண்ணெயில் வெங்காயம், மிளகாய், இஞ்சி வதக்கவும். 2. உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 3. தேவைப்பட்டால் எண்ணெயில் சிறிது வதக்கவும். --- 🫘 5. பருப்பு துவையல் (Mixed Dal Thuvaiyal) சிறப்பம்சம்: அதிக நாள்கள் வைத்துக் கொள்ளக்கூடியதுடன், சத்து அதிகம் 🔸 பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி வத்தல் மிளகாய் – 3 இம்லி – சிறிது தேங்காய் – 2 மேசைக்கரண்டி (ஐச்சிகை) பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, தேங்காய், இம்லி சேர்த்து அரைக்கவும். 2. எளிய சாதம், இடியாப்பம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சூப்பர். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  16. லாராவின் சாதனயை நான் குறைத்து மதிக்கவில்லை. ஆனால் விளையாட்டு “போட்டி” என்பதன் அடிப்படையே விட்டு கொடாமல் விளையாடுவதுதான். ஆகவே சாதனையை நான் வேண்டும் என்றே தகர்காமல் விட்டேன் என சொல்லுவது அதிகபிரசங்கிதனமானதும், லாராவை அவமதிப்பதுமாகும். பேட்டிங் அவரேஜ் பார்க்கும் போது அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஓட்டத்துக்கு முழு மதிப்பு, சிம்பாம்பேவுக்கு எதிரான ஓட்டத்துக்கு அரை மதிப்பு என இல்லைத்தானே? அப்படி என்றால் முல்டர் ஏன் சிம்பாப்வேக்கு எதிராக களம் இறங்கினார்? அதே போல் அடுத்த 20 சொச்ச ஓட்டத்துக்குள் இவர் அவுட்டும் ஆகி இருக்கலாம் - ஆகவே நான் விட்டு கொடுத்தேன் என்பது எந்த வகையில் பார்த்தாலும் சுத்த அதிகபிரசங்கிதனமே. மார்க் டைலர் 1998 இல் பாகிஸ்தானில் வைத்து 334 இல் டிக்லேர் பண்ணியது இப்படி அல்ல. அவர் இரெண்டாம் நாள் ஆட்டம் முடியும் போது பிரேட்மனை சமன் செய்து இருந்தார். அப்போ அவர் மனதில் டிக்ளேர் செய்யும் எண்ணமில்லை. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்திருந்தால் கூட பிரேட்மனை முந்தி இருப்பார். ஆனால் அன்றிரவு 2 மணி வரை தூங்கவில்லை எனவும், ஆட்டத்தை வெல்ல, இன்னும் ஒரு அரை மணி நேரம் துடுப்பாட தான் விரும்பியதாயும், ஆனால் அப்படிதான் செய்தால் ( அரை மணியில் அப்போதைய உலக சாதனையான 375 ஐ எட்ட வாய்ப்பில்லை), பிரேட்மனை வெல்ல என தான் இப்படி விளையாடியதாக சொல்லப்படும், எனவே அணி வெல்ல வேண்டும் என்பதால், மறுநாள் காலையில் டிக்ளேர் செய்ததாயும் டெய்லர் கூறியுள்ளார். அத்தோடு பிரேட்மனை சமன் செய்தது தனக்கு பெருமையே எனவும் கூறினார். ஆகவே இரெண்டும் ஒன்றல்ல.
  17. நானும் தான் மேசையில் குத்தியே ராஜதந்திரிகளை கிலிகொள்ள வைக்குமளவுக்கு இன்னொமொரு தமிழ் அரசியல்வாதி பிறக்கவில்லை என்பதால்
  18. யார் இந்த சம்பந்தன்?கிமு 3 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த திருஞானசம்பந்தன் தமிழுக்கு ஆற்றியதொண்டுக்காக அந்த சம்பந்தரை யாரும் மறக்கவில்லை.ஆனால் இவரைக்கட்சிக்கார்களே மறந்து விட்டார்கள். இதுதான் துரோகத்தின் பரிசு
  19. ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.
  20. கட்டாயம் குடுப்பினம். குடிக்காட்டில் அடுத்த மூண்டு வருசத்துக்கு நோபல் பரிசு கமிட்டி காலம் தள்ளேலாது 😁
  21. 1) இன்றைய தினம் 05/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் 50000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். திரு செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
  22. பிஜிஎம் இல்லை, ஆனால் தமிழ் பாடல்களை ராஜேஷ் வைத்யா அற்புதமாக வீணையில் வாசிப்பார். கேட்டுப்பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.