Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87988
    Posts
  2. வாதவூரான்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2507
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19109
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/17/25 in all areas

  1. அதுக்கு உங்களைப்போல பெடியள் தான் காரணம். சயிக்கிளில் பின்னாலை கலைச்சு உசுப்பேத்தி விட்டிடுவியள் அதுகளுக்கு தலை கால் புரியாது படிப்பை விட்டிடுங்கள்
  2. பொதுவாக போதகர் நிராஜ் டேவிட்டின் காணொளிகளை அவற்றின் தலைப்பை பார்த்தவுடன் ஸ்கிப்பண்ணிப் போய்விடுவேன். இஸ்லாமியப் பயங்கரவாதம் 1990 களில் எவ்வாறு இருந்தது என போதகர் இங்கு விவரிக்கின்றார். இதற்குப் பதிலடியாகவே வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்! இந்த வெளியேற்றப்பட்ட நிகழ்வுக்கு நான் ஆதரவு இல்லை என்றாலும், அந்த நேரத்தின் உணர்ச்சி மிக்க தருணங்கள் இந்த துன்பியல் நிகழ்வுக்கு உடனடிக் காரணமாக அமைந்துவிட்டன.
  3. Khabar Hydhiri Hydhiri onopsderStm0fhc998m9518h96899gc22413t5c92h6c006420922h4u2hi · இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் " இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில." "நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர். "வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். "டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க" என்றார். "நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க" என்றார் இஞ்சினீர் டாக்டர். "அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர். "வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். "எனக்கு கண் பார்வை சரி இல்லை, மருந்து தாங்க டாக்டர்". "சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய்" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர். "இது 500 ரூபாய் நோட்டாச்சே" என்று பதறினார் இவர். "வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்" பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது... கிடிப்பாவது... படித்ததில் பகிர்வது.
  4. 👍............... இதன் பின்னணி என்னவென்ற ஆர்வம் பல வருடங்களாகவே என் மனதில் இருக்கின்றது. அந்த நாட்களிலேயே, 80ம் ஆண்டுகளில், இப்படித்தான் நடந்தது. ஊரில் என்னுடைய வகுப்பில் சாதாரண தரத்தில் மிகத் திறமையாக சித்தி பெற்றவர்களில் பல பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். எங்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் சக மாணவிகள் எல்லோரும் காணாமல் போனார்கள். மருத்துவர் ஆகப் போகின்றார், பொறியியலாளர் ஆகப் போகின்றார் என்று கூறப்பட்ட ஒரு சக மாணவி கூட அப்படி ஆகவில்லை. சாதாரண தரத்தில் நண்பனின் மகள் ஒருவர் 9 A பெற்றிருந்தார். அவர் ஊரில் உள்ள ஒரு பாடசாலையிலேயே படித்தார். அயலூரில் இருக்கும் மெதடிஸ் பெண்கள் கல்லூரி அல்லது வேறு எந்த பெரிய பாடசாலைக்கும் அவர் போகவில்லை. இந்த வருடம் அவருடைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்தன. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஊர் இணையதளங்களில் ஒரு செய்தியுமே வரவில்லை. சிறந்த பரீட்சை முடிவுகளை ஊர் இணையதளங்கள் உடனேயே போடும் காலம் இது. பின்னர் அவருடைய பரீட்சை முடிவுகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இன்னொரு தடவை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள்.................
  5. ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு முஸ்லிம்களால் செய்யப்பட்ட படுகொலைகள் தொடர்பில் என்னுடைய பாரிய ஆவணக்கட்டை நீங்கள் மேலே வாசிக்கலாம் கீழே முஸ்லிம்களால் செய்யப்பட்ட வீரமுனை படுகொலை தொடர்பில் மக்களின் வாக்குமூலங்கள்: அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம். தமிழர் தகவல் நடுவத்தின்
  6. அதே போல கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் ஜிகாத் குழு , ஊர்காவல் படையால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ‌ர்களுக்கு பாராளுமன்றத்தில் எந்த தமிழ் அரசியல் வாதிகளும் வாய் திறப்பதில்லை. வீரமுனை, திராய்க்கேணி ,கொக்கட்டிச்சோலை ,சம்மாந்துறை, போன்ற பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறல்கள் டயர் எரிப்பு மற்றும் வெட்டப்பட்ட தமிழ்ர்கள்
  7. முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான். ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான். செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?
  8. குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போது ஒன்றைக் கண்டு பிடித்தே விடுவது என்று தலையில் தண்ணீரை விட்டேன் குளியலறையில் வழுக்கி விழுந்த சொந்தங்கள் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து போயினர்.
  9. எவ்வளவோ அட்டூழியங்கள் தமிழர்கள் மீது இலங்கையில் முஸ்லிம் வெறியர்களால் நடத்தபட்டிருக்கின்றது.அப்படி இருக்க அவர்கள் தங்களது மத அடிப்படையில் கிளப்பிவிட்ட புரளியான இஸ்ரேலால் இலங்கைக்கு ஆபத்து யூதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க போகின்றார்கள் என்பதை அப்படியே நம்பும் தமிழர்கள் இருக்கின்றார்கள் தானே
  10. நல்லாயிருக்கு...விழுந்து மயக்க நிலைக்கு போகவில்லைத்தானே
  11. இதையேதான் நானும் எதிர் பார்த்தது.... நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார். இதை சொன்னதும் ...செய்ததும் மட்டுமல்ல ....இப்ப வெள்ளை வேட்டி சேட்டு இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை. இதுக்கு இந்த முசுலிம் குரலற்ற அமைப்பு ....என்ன சொல்லப் போகுது..
  12. இந்த பிந்தங்கல் விஞ்ஞான, கணித பிரிவுகளில் அதிகம். கணக்கியல், கலை பிரிவில் ஏ எல்லிலும் பெண்கள் ஓரளவு சோபிப்பார்கள். யூகேயிலும் STEM எனப்படும் விஞ்ஞான பிரிவுகளில் பெண் பிள்ளைகளின் ஆர்வம் குறைவு - இதை அதிகரிக்கும் ஒரு வேலை திட்டத்தில் நான் ஒரு secondment செய்துள்ளேன். ஏதோ ஒரு அல்லது பல காரணிகளின் கூட்டு - விஞ்ஞான படிப்பில், 2ம், 3ம் தரநிலையில் பெண்கள் பிரகாசிக்காது விட காராணமாக இருக்க கூடும். இந்த காரணிகள் nature + nurture ஆக இருக்கும் என நினைக்கிறேன்.
  13. மடியில கைவைக்ககூடாது ராசா.. அப்படியானால் காசி உடுப்பிடம் காசு எப்படி....???
  14. கரி ஆனந்தசங்கரி அவர்கட்கு திரிசங்கு நிலைதான் போல. இவை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. ஆனால், கள நிலவரங்களை பார்த்தால் அவரை அசைக்கமுடியாது போல் உள்ளது. ஆட்டிப்பார்க்க மட்டுமே முடியும்.
  15. உண்மை மதங்கள் அவசியமில்லை. சரி பிழை கண்டு பிடித்து அதற்கேற்ப செயல்பட வைக்கும் அறத்திசை காட்டி (moral compass) பலமாக இருந்தால் போதும் என்பது என் அபிப்பிராயம். இப்படியான அறத்திசைகாட்டியை, மத அமைப்புகளுக்குள்ளும் ஊக்குவிக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்பதன் ஒரு உதாரணமாகத் தான் யேசு சபைக் குருக்களைப் பற்றி எழுதினேன். சில சமயங்களில் மத அமைப்புகளின் உள்ளே இருந்து தான் விடயங்களை மாற்ற வேண்டும். உங்கள் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கருத்தைக் கேட்டதும், சில ஆண்டுகள் முன்பு சத்குருவிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வியும் அவரது பதிலும் நினைவுக்கு வருகின்றன. "ஏன் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது?" என்ற கேள்விக்கு அவரது பதில் "உலகில் இந்தியாவில் மட்டும் தான் ஒரு சதுர மைல் பரப்பளவில் மிக அதிகமான பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றன" என்பதாக இருந்தது. அர்த்தநாரீஸ்வரரைக் கடவுள் வடிவமாகப் பார்க்கும் இந்தியாவில் இடைப்பாலினருக்கு இருக்கும் இடர்கள் இது போன்ற ஒரு நிலை தான்.
  16. கோசான்... நான், பகிடிக்கு சொல்ல வில்லை. நீங்கள் வக்கீல் சம்பந்தமாக படித்திருக்கின்றீர்கள் எனது நீண்ட நாள் சந்தேகம். நீங்கள் சொல்லாட்டிலும்... குடுமி காட்டிக் கொடுத்து விடும். 😂
  17. பணம் பறிக்கிறது ஒரு பக்கம் இருக்க... புத்த துறவிகள் என்றால்.... காமலீலை விளையாட்டு காட்டுவதில் ஸ்ரீலங்காவும், தாய்லாந்தும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். 😂
  18. //தனது வாக்காளர் ஒருவருக்கு பா.உ. இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான்.// முன்னணி வக்கீலுக்கு உரிய தரமானதும், அசைக்க முடியாததுமான கருத்து. ✔️
  19. கெரி ஆனந்த சங்கரி மீது நம்பிக்கை உண்டு – கனடிய பிரதமர் July 17, 2025 11:31 am பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனந்தசங்கரி, தனது அமைச்சரவையில் சேருவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினராக கனடா உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான CBSA அடையாளம் காணப்பட்ட ஒருவருக்காக நிரந்தர குடியிருப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக கடிதம் எழுதியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2006ஆம் ஆண்டு முதல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்காக ஆனந்தசங்கரி 2016 மற்றும் 2023-ல் கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை முகவர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 2023-இல் கெரி ஆனந்தசங்கரி நீதித் துறைக்கான பாராளுமன்ற செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த வாரம் கனடா நீதிமன்றம், அந்த நபரின் கடைசி முறையீட்டையும் நிராகரித்தது. தேசிய பாதுகாப்பும், பொது பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. 2023-இல் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு, இத்தகைய கடிதங்களை எழுதுவதை நிறுத்தியுள்ளேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் வாக்காளர்களுக்காக ஆதரவு கடிதங்கள் எழுதுவது வழக்கமான செயலாகும் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதானல் வேறும் தகவல்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார். எனினும்,கனடாவில் இயங்கி வரும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அமைப்பு ஒன்றின் பிரதானி ஷெரில் சபேரியா, இதை ஒரு முக்கிய தவறான முடிவாகக் குறிப்பிடுகிறார். ஒரு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் என எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்குவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல எனவும். இது நாடு முழுக்க பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சீர்குலைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஆனந்தசங்கரி பதவியில் தொடரக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர். இது போல் கடிதம் எழுதியவர்கள், பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கவே கூடாது என எதிர்க்கட்சி செனட் தலைவர் லியோ ஹூசாகோஸ் சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார். https://oruvan.com/canadian-prime-minister-has-confidence-in-kerry-ananda-shankar/
  20. சாவகச்சேரி நகரசபையின் தீர்மானம் வரவேற்கத் தக்கது. இந்த முன் மாதிரியை பின்பற்றி மற்றைய நகர, கிராம சபைகளும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் காப்பகம் அமைக்க முன் வரவேண்டும். 🐕 🐕‍🦺 ஊரில்… நாய்த் தொல்லை, பெரும் தொல்லையப்பா. வீதியால் நடந்து போனால் குலைக்குது, சைக்கிளில் போனல் விட்டு திரத்துது… இதுகளுக்கு என்ன வேணுமென்றே தெரியவில்லை. போகவும் வரவும் பெரிய கொட்டன் பொல்லையும் கொண்டு திரிய வேண்டிக் கிடக்குது. 😂 👨🏾‍🦯
  21. நடந்து முடிந்ததே வரலாறு தணிக்கைக்கு இடமில்லை! தேசியத் தலைவரின் நிலை தொடர்பில் முன்னாள் போராளி பஷீர் காக்கா அறிக்கை எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் வேண்டும் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி பஷீர் காக்கா(மு.மனோகர்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- 2009ஆம் ஆண்டின் பின்னர் தாயகத்திலும் உலகப்பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நிற்கின்ற வினா, எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது. பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் கள நிலைமையைச் சரியாகவே புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்ணில் அவர் தோன்றமாட்டார் என்ற கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டனர். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்த்து இவ்வாறான உயரிய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம் பங்களித்தோம் என்ற உணர்வினைப் பெற்றனர். தாயகத்தில் தலைவரின் புதல்வி துவாரகாவின் வித்துடலுக்கு மண்தூவி வீர வணக்கம் செய்தவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில் துவாரகாவின் பெயராலும் மோசடி செய்யும் ஈனப்பிறவிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைத்துலகப் பொறுப்பாளரென ஏற்கனவே தலைவர் உத்தியோகபூர்வமாக நியமித்த கே.பி. மற்றும் அம்பாறை மாவட்டச் சிறப்புத் தளபதி ராம், பிராந்திய அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் உலகுக்குத் தெரியப்படுத்தினர். அந்த நாள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியென்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் திராணி எப்போதும் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருக்கும் விசுவாசமாக இருப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இருக்க வேண்டும். உத்தியோகபூர்வமாகத் தலைவரால் நியமிக்கப்பட்ட இந்த மூவரும் விடுத்த அறிவித்தலை இனி எவரும் உதாசீனம் செய்யமுனையமாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏற்கனவே நடந்து முடிந்ததே வரலாறு, இதில் தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை. பெரும்பான்மையினரின் முடிவு என்று தீர்மானிப்பதற்கு இது தேர்தல் அரசியலல்ல. நாம் எடுக்கும் முடிவுகள் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கவேண்டும். வேறு எந்த சக்திகளின் முடிவுகளையும் அமுலாக்கும் விதமாக வரலாற்றை மாற்றியமைக்க முயலக்கூடாது என எமது மாவீரர் குடும்பங்களின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் - என்றுள்ளது. https://newuthayan.com/article/நடந்து_முடிந்ததே_வரலாறு_தணிக்கைக்கு_இடமில்லை!
  22. இங்கிலாந்தின் வேகபந்து வீச்சாளருக்கு சமனாக அல்லது சற்று மேலாக பும்ரா, டீப், கிருஸ்ணா கூட்டு இருப்பதும், தற்போதைய வரட்சி காலநிலையும் காரணம் என நினைக்கிறேன். ஆனால் எட்பாஸ்டன் மைதானம் தயாரித்தவரின் தவறு என ஸ்டோக்ஸ் தனிப்பட்டு விமர்சித்தாராம். ஹெடிங்லி, லோர்ட்ஸ் இரெண்டும் இரு அணிகள், பேட்ஸ்மன், போலர்களுக்கு சமவாய்ப்பை வழங்கின. மான்செஸ்டர் மழைக்கு புகழ் போன இடம். ஸ்பின்னும் கிடைக்கும். பார்க்கலாம். இங்கிலாந்து டவுசனை கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஜடேஜா மட்டும்தான். ஓவல் இந்தியாவுக்கு வாய்பாகவே (எட்ஜ்பாஸ்டன் போல) இருக்கும் என நினைக்கிறேன்.
  23. இவை சிலருக்கு ஒரு வடிகால்களே என்பதில் மற்றுக்கருத்து கிடையவே கிடையாது. இதில் சிலரை பல்கலைக் கழகம் முடிந்து பல வருடங்கள் பின்னரும் நான் அறிந்து இருக்கின்றேன். இந்த நடவடிக்கைகள் வேறு ஏதோ வகைகளில் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. புதிய மாணவர்களுக்கு நிறைய உதவிகள் தேவையே. செய்யப்படும் சின்ன உதவிகளைக் கூட பலரும் வாழ்நாளில் மறப்பதில்லை. 'மெய்யழகன்' படத்தில் வரும் அந்த சைக்கிள் கதை போல நெகிழ்ந்து சொல்லுகின்றார்கள். இப்படி வரும் பிணைப்பும், நட்பும் என்றும் அழியாமல் நிற்கின்றது........👍.
  24. தொடர் அருமையாக போகிறது. 3ம் டெஸ்ட் தேவையில்லாமல் இங்கிலாந்தை சீண்டி இந்தியா வாங்கி கட்டி கொண்டது. அதுவும் போலிங் போடும் போது சண்டித்தனம் காட்டிய சிராஜ் கடைசியில் துரதிஸ்டவசமாக அவுட் ஆகியமை - poetic justice 🤣. 2வது டெஸ்ட் ஆகிய பெர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்ட்டனில் நடந்த ஆட்டத்தை 4,5 ம் நாட்கள் போய் பார்த்தேன். என்ர லக்குக்கு இந்தியா வென்று விட்டார்கள். இந்திய ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து எனக்கு ஒரே காண்டு 🤣. ஆனால் நாலாம் நாள் கில், பாண்ட் அடித்த அடியை காண கண்கோடி வேண்டும். அதேபோல் ஆகாஷ் டீப் 5 நாள் பந்து வீச்சும் -அகோரம். ஆனால் 5ம் நாள் மழை உதவியோடு ஒரு நல்ல பார்ட்னசிப் போட்டிருந்தாலே, 2ம் டெஸ்டில் இந்தியாவை வெல்லாமல் தடுத்திருக்க முடியும். பார்ப்போம் அடுத்த மான்செஸ்டர், இலண்டன் ஒவல் போட்டிகளுக்கும் டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன். எனது லக் வேலை செய்யாது என நம்புவோம்🤣.
  25. Nagamuthu Piratheeparajah rodnetposSch1c8ca98m594cih37mgc7a647ga8a615af19cl3u8316m120m · 16.07.2025 புதன்கிழமை இரவு 11.45 மணி. ***.ஆடிப்பிறப்பும் காலநிலையியலும் *** நாளை ஆடிப் பிறப்பு.... பொதுவாக தமிழர்களின் பண்டிகைகளுக்கும் காலநிலையியலுக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. தமிழர்களின் பண்டிகைகளுக்கு பின்னணியான பல புவி விஞ்ஞான விடயங்கள் மிகவும் ஆச்சரியமானவை. ஏனெனில் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்னரே தமிழர்கள் புவிச்சுற்றுகை, புவிச் சுழற்சி போன்றவற்றை மிகத் துல்லியமாக கணித்து அதற்கேற்ற வகையில் தமது பண்டிகைகள் மற்றும் அவை கொண்டாடும் முறைகளை வடிவமைத்து இயற்கையுடன் இணைந்ததாக ஆனால் விஞ்ஞான ரீதியிலான அர்த்ங்களோடு பண்டிகைகளைக் கொண்டாடி வந்துள்ளனர். சூரியனைப் புவி சுற்றுகின்ற பாதையின் அமைவிடங்களை மையப்படுத்தியே தமிழர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக தைப்பொங்கல் என்பது தென்னரைக்கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான சூரியனின் நகர்வின் ( உண்மையில் சூரியன் நகர்வதில்லை. பூமி தான் நகர்கின்றது. ஆனால் இதனை படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வசதியாக சூரியன் நகர்வதாக குறிப்பிடுகின்றேன். ) தொடக்க நாளை தைப்பொங்கல் என கொண்டாடுகின்றோம். இதனை உத்தராயணம் எனவும் அழைப்பர். அவ்வாறு நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது சித்திரை வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றோம். வடவரைக் கோளம் வந்த சூரியன் மீள வடவரைக்கோளத்திலிருந்து தென்னரைக் கோளம் நோக்கி நகரும் நாளை ஆடிப் பிறப்பு என அழைக்கின்றோம். நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது தீபாவளியைக் கொண்டாடுகின்றோம். கருதுகோளின் அடிப்படையில் தெற்கு 90° யிலிருந்து சூரியன் புறப்படும் நாளையும் (தைப்பொங்கல்), மத்திய கோட்டை (,0°) அணமிக்கும் நாளையும்( சித்திரை வருடப் பிறப்பு) பின்னர் வடக்கு 90° யிலிருந்து புறப்படும் நாளையும் ( ஆடிப் பிறப்பு) மத்திய கோட்டை அண்மிக்கும் நாளையும்( தீபாவளி) நாம் பண்டிகைகளாக கொண்டாடுகின்றோம். சூரியனை புவி நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும்போது புவியின் எந்த பகுதியும் ஆண்டின் இரண்டு தடவைகள் சூரியனுக்கு அண்மையாகவும் இரண்டு தடவைகள் சூரியனுக்கு சேய்மையாகவும் அமையும். நாம் சித்திரை வருடப் பிறப்பு மற்றும் தீபாவளிக்கு அண்மித்த காலங்களில் சூரியனுக்கு மிக அண்மையாக வருகின்றோம். ஆனால் தென்னரைக்கோளத்தில் இருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு வடவரைக்கோளத்திற்கு நகரும் காலம் வரை அதாவது ஜனவரி 01 முதல் ஜூலை 01 வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தென்னிந்தியாவிலும் சற்று வெப்பமான வானிலை நிலவும். மாறாக வடவரைக்கோளத்திலிருந்து தெற்கு நோக்கிய சூரியனின் நகர்வு தென்னரைக் கோளத்தினை அடையும்வரை அதாவது ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரை மழையுடனான வானிலை நிலவும். இரண்டு காலங்களிலும் புவியின் நகர்வு காரணமாக இரண்டு வேறுபட்ட வானிலை கோலங்கள் நிலவும். இந்த வேறுபட்ட வானிலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் நாம் நம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதனை அறிவிக்கவே இந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகையின் ஊடாக வெப்பமான வானிலை நிகழ்வை அறிவித்தாலும் அதை விட இன்னமும் வெப்பமான வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க சித்திரை வருடப் பிறப்பு கொண்டாட்டமும், ஆடிப்பிறப்பினூடாக மிதமான வெப்பநிலை கொண்ட வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவித்தாலும் கூட கன மழையுடன் கூடிய வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். குறிப்பாக இந்த பண்டிகைகளின் கொண்டாட்ட முறைமைகளின் பின்னால் மிகப் பெரிய காலநிலை சார் விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெப்பமான வானிலையை வரவேற்க பிரதானமாக பொங்கல் பொங்கி வரவேற்கின்றோம். இதற்காக தான் தைப்பொங்கலுக்கும் சித்திரை வருடப் பிறப்பிற்கும் பொங்கல் பொங்கி கொண்டாடுகின்றோம். மாறாக குளிரான அல்லது மழையுடன் கூடிய வானிலையை வரவேற்க மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம். அதனால் தான் ஆடிப்பிறப்பிற்கு கொழுக்கட்டை, மோதகம், ஆடிக்கூழ் போன்றவற்றுடன் கொண்டாடுகின்றோம். இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் ஆடி மாதம் முதல் பண்டைய தமிழர்களின் முதன்மையான மற்றும் முக்கியமான தொழிலான விவசாய நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலமாகவும் கருதுவார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்வார்கள். அவர்கள் அதிக உடலுழைப்பைச் செலுத்தும் அதேவேளை மிக நீண்ட நேரம் வேலை செய்வார்கள். அவர்கள் நீண்ட நேரம் பசிக்களையின்றி வேலையைத் தொடர மாப்பொருட்களாலான பண்டங்களை உண்பார்கள். அதனைக் கருத்தில் கொண்டு நாம் மாப்பொருட்களாலான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆடிப் பிறப்புக்கு மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றோம். இன்றைய உலகம் வலியுறுத்தும் காலநிலைத் தழுவல்( Climate Adaptation) என்பதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகச்சரியாக கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பண்டிகைகளும் அவை கொண்டாடப்படும் முறைகளும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களுக்கு முன்னரே புவியின் சுழற்சி மற்றும் சுற்றுகைகளை மிகச்சரியாக கணித்துள்ளார்கள். தற்போதைய விஞ்ஞான ரீதியிலான கணிப்புக்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் புவிச்சுழற்சி மற்றும் புவிச்சுற்றுகை பற்றிய தமிழர்களின் கணிப்பு அபரிமிதமானது. நவீன கணிப்புக்களோடு சில நாட்கணக்கில் வேறுபாடுகள் இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான அவர்களின் கண்டுபிடிப்பு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. இவ்வாண்டு கூட தென்னரைக் கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான நகர்வு 03.01.2025 அன்று ( தமிழர்களின் கணிப்பின்படி ஜனவரி -14 : தைப்பொங்கல்.... 11 நாட்கள் வேறுபாடு) நிகழ்ந்துள்ளது. அதேவேளை வடவரைக் கோளத்திலிருந்து கடந்த 04.07.2025 அன்று ( தமிழர்களின் படி நாளை 17.07.2025: ஆடிப்பிறப்பு ... 13 நாட்கள் வேறுபாடு) சூரியன் தென்னரைக்கோளம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பல விடயங்களில் தமிழர்கள் மிகச் சிறப்பாக காலநிலைத் தழுவலைக் கடைப்பிடித்துள்ளார்கள். உணவுகள், உடைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், நீர்ப்பாதுகாப்பு,வனப் பாதுகாப்பு என்ற வகையில் பல விடயங்களில் தமிழர்கள் காலநிலையோடு இணைந்து மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள்( இவை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம்). நாளை ஆடிப்பிறப்பு. இதனை வெறுமனே சம்பிரதாயத்துக்காகவன்றி இதன் பின்னாலான அர்த்தங்கள் நிறைந்த காரணங்களை அறிந்து கொண்டாடுவோம். 'ஆடி உழவைத் தேடி உழு ' என்ற வாக்குக்கமைவாக ஆடி மாதத்தில் எம் விவசாயிகள் பலர் வயல் உழவு வேலைகளைத் தொடங்குவார்கள். அதற்கேற்ப எதிர்வரும் 22.07.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -நாகமுத்து பிரதீபராஜா-
  26. நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் .......... ! 😍
  27. பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!
  28. வரலாற்றில் முதல் 9A *************************** கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் நகரிலிருந்து சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிராமம் அது. பெரிதாக எவரும் கண்டுகொள்ளாத ஊர் அது. முக்கியமாக கல்வித்துறையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை என்றால் என்ன? க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகள் என்றால் என்ன அந்த பாடசாலையின் பெறுபேறு என்ன என்று எவரும் கேட்டுக்கொள்வதில்லை. வலயக் கல்வி அலுவலகம் மாத்திரம் தனது புள்ளிவிபர பதிவுக்காக பெறுபேறுகளை கேட்டுகொள்வார்கள். அவ்வளவுதான். பாடசாலை ஆரம்பித்த 1993 என நினைக்கின்றேன். அன்று இன்று வரை வளப்பற்றாக்குறை இன்றி இயங்கிய நாட்கள் இல்லை என்றே கூற வேண்டும். 1996 கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன் அந்த பாடசாலையினை தமிழ்த்தினப் போட்டியில் சிறுவர் நாடகத்திலும், கிளித்தட்டு போட்டியிலும் அந்தப் பாடசாலையினை மாவட்ட மட்டத்தில் பலரும் திரும்பி பார்த்தனர். அப்போதே இப்படியொரு பாடசாலை இருக்கிறது என்பது ஏனைய பல பாடசாலைகளுக்கு தெரியவந்தது. அதற்காக உழைத்தவர் அப்போது அந்த பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிங்கராசா ஆசிரியர். அவர் அந்த ஊர் மக்களும், மாணவர்களும் சிங்கா சேர் என்று அழைப்பர். இதன் பின்னர் மறுபடியும் அப்பாடசாலையினை எவரும் கண்டுகொள்வதில்லை. இப்படி பல வருடங்கள் கடந்தோடிய நிலையில் தற்போது அப்பாடசாலையினை ஒரு மாணவன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றான். சக்திவேல் குயிலன் என்ற அந்த மாணவன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ பெறுபேறுகளை பெற்றதன் மூலம் அப்பாடசாலையின் வரலாற்றில் முதற் தடவையாக 9ஏ பெற்ற வரலாற்று சாதனையினை ஏற்படுத்தியதன் மூலமே குயிலன் பாடசாலையினையும், ஊரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறான். இந்த ஒரு மாணவன் பெற்ற 9 ஏ ஏன் சாதனை என்றால், வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாடசாலை கல்வியினை பிரதானமாகவும், அந்த ஊரில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் மேலதிக கல்வியையும் மட்டுமே பெற்றிருக்கிறான் குயிலன். வறுமையான குடும்பம், பெற்றோர்கள் கூலித்தொழிலை செய்கின்றவர்கள். தினமும் வேலை கிடைக்காது வரையறுக்கப்பட்ட சொற்ப வருமானம், வசதிவாய்ப்புக்கள் குறைவு, இந்த வயதில் கல்வியை குழப்பும் வகையில் கவனக் கலைப்பான்கள் அதிகம், நகர்புற பிள்ளைகள் போன்று பெற்றோர்களால் மேலதிக வகுப்பு, பிரத்தியோக வகுப்பு, அந்த பயிற்சி புத்தகம், இந்த பயிற்சி புத்தகம் என எதுவும் இல்லை, தம்பி படிச்சனீயா? என்ன படிச்சனீ? இந்த முறை எத்தனை மாக்ஸ்? என கேள்வி கேட்காத பெற்றோர்கள் என அவனை சுற்றி காணப்பட்ட அந்த சூழலுக்குள் இருந்து படித்து அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெறுவது என்பது சாதனைதானே?! இந்த சாதனைக்கு அவனது பாடசாலையும், அந்த கவ்வி நிலையமும், படிப்பதற்கு தடை போடாத அந்த ஏழை பெற்றோரும், அவனது முயற்சியும், உழைப்பும்தான் காரணம். இதன் மூலமே அவன் சாதித்திருக்கிறான். அவனது இந்த சாதனையால்தான் இன்று ஊற்றுப்புலம் என்ற அந்த கிராமத்து பாடசாலையினை பலரும் திரும்பி பார்க்கின்றனர். ஊரும், பெருமைகொள்கிறது. தனது வரலாற்றில் முதல் தடவையாக ஒருவன் 9ஏ பெறுபேறுகளை பெற்றது அவர்களை பெருமை கொள்ள வைக்கிறது. Murukaiya Thamilselvan
  29. கொஞ்ச நாளுக்கு முன்னர் புட்டினுக்கு ICC பிடியாணை பிறப்பித்தபோது,.ஆகா,..ஓகோ,..அப்பிடிப் போடு,...இப்படிப் போடு என்று பாடிய மேற்கு, பெஞ்சமின் நத்தன்யாகு என்று வந்தவுடன் முகாரி ராகம் பாடுகிறது. 😁 ஆனாலும் ICC யைப் பலப்படுத்தினால் நல்லது போலத் தோன்றுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.