Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    14675
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    87979
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20004
    Posts
  4. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7038
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/01/25 in all areas

  1. வேலையிலிருந்து இளைப்பாறினால் பரிசாக கிடைப்பது நேரம் மட்டுமே.முப்பதைந்து வருடங்களுக்கு மேலாக‌ முழுநேர பணியில் இருந்தவனுக்கு , தற்பொழுது முழுநேரம் சும்மா இருக்கும் வாய்ப்பு கிடைத்து."சும்மா இருந்து சுகம் காணு" என யோக சுவாமிகளின் வாசகம் ,எங்கயோ படித்த ஞாபகம் வரவே இது தானே சும்மா இருந்து சுகம் காணுதல் என நினைத்து இரண்டு நாள் வீட்டிலிருந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தான் .சும்மா இருந்தா சுகம் காணலாம் என சுவாமிகள் சொன்னார்,ஆனால் அவனுக்கு சும்மா இருந்தா சுகம் கிடைப்பது போல தெரியவில்லையே தொல்லை தான் வருகிற‌தே இதற்கு என்ன தீர்வு என சிந்திக்க தொடங்கினான். சும்மா இருந்து சுகம் காணுதலின் அர்த்தம் என்ன என கூகிள் ஆண்டவனிடம் கேட்டான் .கேட்டதும் கொடுப்பவர் அவர் ஒருவரே..கூகிள் ஆண்டவர் கூறியதை இவனால் கடைப்பிடிக்க முடியாததும் மட்டுமல்ல அது புரியவுமில்லை. என்ன செய்வது எனதெரியாமல் மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தான் அவனின் மென்டோர் கந்தரின் ஞாபகம் வரவே தொலைபேசியை எடுத்தான். போனை எடுத்து நம்பரை டச் பண்ண "இஞ்சயப்பா யாருக்கப்பா போன் பண்ண போறீயல் "இளைப்பாறிய பின் 24/7 அவனை கமரா கண் கொண்டு அவதானிக்கும் அவனது மனைவி கேட்க, "வேற யார் என்ட குரு கந்தருக்கு தான்" "சும்மா எந்த நேரமும் அவருக்கு போன் பண்ணிகொண்டிருந்தா அவற்ற வீட்டில மனிசி என்ன நினைப்பா" போனில் நம்பரை டச் பண்ணுவதை நிறுத்திய கந்தர் "எல்லாரின்ட மனிசிமாரும் உம்மை மாதிரி இருக்க மாட்டினம்,அவரின்ட மனிசி தங்கம்" "தங்கத்தோட எப்ப நீங்கள் கடைசியா கதைச்சனீங்கள்,ஆட்களை கண்டா கதைக்க மாட்டியள் ,சும்மா ஒர் வோமலிட்டிக்கு சிரிப்பும் சிரிக்க மாட்டியல் வந்திட்டியல் அவரிட மனிசி தங்கம் எண்டு கொண்டு" "ஆட்களை பார்த்தாலே தெரியுமப்பா நல்லவரோ கெட்டவரோ " "நீங்கள் பெரிய உளவியல் நிபுனர் ,சாமியார் ,சாத்திரியார்,குறி சொல்பவர்" மனிசி இப்படி உலகத்தில் உள்ள நிபுணர்களை துணைக்கு இழுத்து திட்ட அவனுக்கு புரிந்து விட்டது இதற்கு மேல கதைத்தால் வீடு ஜூலை கலவரமாக‌ மாறிவிடும் எண்டு..அமைதியாக இருந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டான்.கோபம் வந்தா இப்படிசெய்யுங்கள் என யூடியுப் டாக்டர்களின் ஆலோசனப்படி .அவன் மூச்சை உள் இழுத்து வெளியே விடுவதை அவதானித்தவள் ,வயசு போன நேரத்தில் இரத்த கொதிப்பை கொடுத்து மனுசனுக்கு என்னாவது நடந்திட்டா என நினைத்து அமைதியாக அங்கிருந்து சென்று விட்டாள். கலவரத்தை அமைதியாக இருந்து தடுத்து விட்டதாக நினைத்து ரிமோர்ட்டை எடுத்தவன் டி.வியை ஒன் செய்தான். "மொர்னிங் அப்பா"சொல்லி கொண்டே மூத்தவள் வேலைக்கு போக தயாராக வந்தாள் . "மொர்னிங் மகள்" "டூ டே வட்ஸ் யூ பிளான்,என்ன பிளான் இன்றைக்கு" ""பெரிய பிளான் ஒன்றுமில்லை சும்மா தான் இருப்பன், ஏன்" "வோசிங்மெசினை ஒருக்கா போட்டு உடுப்புக்களை காய போட்டுவிடுறீங்களே" "ம்ம்ம்...."என டி.வியை பார்த்த படி சொன்னான். "இஞ்சயப்பா மகள் சொன்னது கேட்டதே" "ஒம் ஒம் சொன்னது கேட்டது ,ஆனால் எனக்கு மெசினை ஓன் பண்ண தெரியாது ,நீர் ஒருக்கா ஒன் பண்ணிவிடும் நான் எடுத்து காயப்போடுறேன்" "இங்க வாங்கோ காட்டிதாரன் எப்படி ஒன் பண்ணுவது எண்டு" "உதெல்லாம் பொம்பிளைகளின்ட, வேலை நான் ஏன் பழகவேணும்?"என புறுபுறுத்து கொண்டே லொன்றி அறைக்கு சென்றான். "அம்மா ,அப்பா என்னவாம்" "மெசின் ஓன் பண்ணி உடுப்பு காயப்போடுறது பொம்பிளைகலின் வேலையாம்" "‍ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன் மான்" என மகள் குரலை உயர்த்தி பேச,பயந்து போன அவன் மனையிடம் "ஏன் இப்ப என்னை மாட்டி விடுகிறீர் ,மெசின் ஒன் பண்ண தெரியாது என்று தானே சொன்னனான்" "எப்ப தான் நான் சொல்லுற‌ வேலைகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்திருக்கிறீயல்" "ஏன் செய்ய வேணும் ,நான் பனங்காட்டு ஆண் சிங்கம், சொல்லு கேட்காது" "பெரிய ஆண் சிங்கம் அதுவும் பனங்காட்டில, சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுறது, இதில வீராப்பு வேற,தள்ளுங்கோ நானே ஒன் பண்ணி காயப்போடுறேன்." "
  2. 30 JUL, 2025 | 10:46 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றை நிருமாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இதுவரை உள்ளக விளையாட்டரங்குகள் நிர்மானிக்கப்படாத பகுதிகளில் தரமான உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். 'யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ளக அரங்கு இல்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் அதுதான் உண்மை. எனவே, இந்த வருடம் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் உள்ளக விளையாட்டு அரங்குகளை நிருமானிப்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை இந்த வருடம் நிருமாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் அவர். நாடு முழுவதும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வருடம் 100 விளையாட்டரங்குகளின் மேம்பாட்டுப் பணிகளை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கி 2 உயர்தர செயற்கை ஓடு பாதைகளை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்டியில் ஒரு செயற்கை ஓடுபாதை மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, மற்றொன்று கிளிநொச்சி அல்லது அனுராதபுரத்தில் நிருமாணிக்கப்படும். பாடசாலைகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் விளையாட்டுத்துறை உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தரமான மைதானங்களை நிர்மாணிப்பது அத்தியாவசியமாகும். அதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்து சர்வதேச அரங்கில் பிரகாசிக்க செய்யமுடியும் எனவும் அமைச்சர் கூறினார். https://www.virakesari.lk/article/221407
  3. நம்ம தலீவரு அயன்மேன், புயல் மழை ஒன்றும் அவரை நெருங்க முடியாது...
  4. ஆமா...நம்ம தலீவரு எங்க இருக்கீங்க.... சிரிக்க ....பிரியன் இப்ப எங்கு இருக்குறீங்கள்.... செய்திகள் நல்லதாக இல்லை...அவதானம்...ரசோ சார் பாடு எப்படி...மற்றும் அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும்...பாதுகாப்பில் அவதானமாக இருக்கவும்
  5. மே 18 இனவழிப்பு தினம் அல்ல அது தலைவர் பிரபாகரன் மறைந்த நாள்(புலிகள் இயக்க பயங்கரவாத தலைவ்ர் பிரபாகர்ன் மறைந்த நாள் என உலகமக்களுக்கு பிரச்சாரம் செய்ய புலனாய்வு சக்திகள் செயல் ப்டுகின்றனர்...) ஒரு ஜனநாயக நாட்டுக்கு. இனவழிப்பு என்ற பலிசொல் இருப்பதை அந்த நாட்டின் அதிகார வர்க்கம் விரும்பாது அது ஒர் நீண்ட நாள் கறையாக அந்த நாட்டுக்கு இருக்கும் எனவே இது ஒர் தொடர்கதை... காளிஸ்தான் போராளிகளை கனடா வரை துரத்தி துரத்தி இந்தியா அழிக்க முயற்ச்கின்றனர்...ஆனால் அவர்கள் இன்றும் செயல்படுகின்றனர்...
  6. நானும் ஆரம்பத்தில் நம்பல .. ஆனா நம்பினாத்தான் சாப்பாடுனு சொல்லிட்டாங்க,,
  7. அளவுக்கதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்த்து நகரம் அவசரகால சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே சில நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. Storms drop dangerous, flooding rain from DC to New York, inundating roads and snarling air travel Dangerous torrential rainfall and flash flooding are underway in the mid-Atlantic and Northeast Thursday with millions at risk along the Interstate 95 corridor. It’s shaping up to be another serious flood event in a summer that’s been full of them. Heavy storms developed in the afternoon and will last through theevening. Some could dump several inches of rain in a few hours, flooding roads and threatening public transit during the busy afternoon and evening commute. Flash flood warnings were active in parts of Pennsylvania, New Jersey, Maryland and Virginia by mid-afternoon with more drenching storms to come. There have already been reports of flooded roads and stranded vehicles in Maryland and Pennsylvania, according to the National Weather Service and local officials. https://www.cnn.com/2025/07/31/weather/flash-flooding-mid-atlantic-interstate-95-climate
  8. செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் Published By: VISHNU 01 AUG, 2025 | 08:24 PM செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்ற புலனாய்வு பிரிவின் மனித கொலை விசாரணை பிரிவின், நிலைய பொறுப்பதிகாரி யாழ்.நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்று பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மதியம் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்று பொருட்கள் வைக்கப்படவுள்ளன. செம்மணி புதைகுழிகளில் இருந்து இதுவரையில் புத்தக பை, சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போச்சி, வளையல்கள் உள்ளிட்ட 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றினை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, அவற்றை அடையாளப்படுத்த கூடியவர்கள், நீதிமன்றுக்கோ, குற்ற புலனாய்வு துறையினருக்கோ தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை சான்று பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் நாளைய தினம் சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221585
  9. நான் இப்போது மேற்குக் கரையில் ரசோதரனின் மாநிலத்தில். அடபாவிகளா பப்பாவில ஏறும் வயசா?
  10. என்ன விசுகர்! இப்பிடியான சித்திரங்கள் உங்கள் பெயரில் வரணுமா? 😂
  11. பிரித்து மேய வெளிக்கிட்டால்......🙃 ஒரு வகையில் தாம் தம் நாடு தம் இனம் தம் மண் என போராடுபவர்கள் எல்லோரும் நாசிகளாகவே தெரிவர். 🧐
  12. வடை போட்ட செய்தித்தாளில் "தமிழக அரசியலில் அநாதையான பன்னீர்செல்வம்" என்று உள்ளது. 😂 @தனிக்காட்டு ராஜா , @புரட்சிகர தமிழ்தேசியன்
  13. உங்களுக்குப் பதில் தெரியும் என்பதால் யாரும் சொல்லாமல் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். முகநூலில் புலிகளின் இலச்சினையையோ, அல்லது பிரபாகரன் படத்தையோ பகிர்ந்தாலே அவர்களை விசாரணைக்கு அழைக்கும் நிலை இருக்கும் இலங்கையில், பிரபாகரனுக்கு மௌனமாகத் தான் வீர வணக்கம் செலுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும், ஆயுத மோதலில் அல்லாமல் உண்ணாவிரதம் இருந்து மாண்ட திலீபனை நினைவு கூர்வதற்குக் கூட அங்கே நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் சாதாரணமாக வாழ முயலும் தாயக மக்கள் பிரபாகனுக்கு வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியாது.
  14. ஏதாவது ஒன்றோ, பலவோ அசைவுகள் இருந்தாலே நல்லது, ஒரே இடத்தில இருப்பதை காட்டிலும். நடை (சற்று விரைவாக இருந்தால்) கிட்டத்தட்ட முழு உடம்புக்கும் மிக இலகுவான, செலவு இல்லாத பயிற்சி. ஆயினும் சிக்கல் தன்மை உள்ள அசைவுகள், நிலைகள் அவ்வப்போது செய்வதும் (ஒரு கால, நேர ஒழுங்கு இருந்தால் இன்னும் நல்லது) வேண்டியது. (உ.ம். முழங்காலில் கைகளால் முட்டு கொடுக்காமல் குந்தி இருப்பது. அந்த நிலை யில் இருந்து எந்த முட்டும் இல்லாமல் எழும்புவது, மீண்டும் அந்த நிலைக்கு செல்வது போன்றவை. அநேகமாக எல்லா calisthenics, யோகா பயிற்சிகளும் உள்ளடக்கம். ஆனால் அவை மட்டும் தான் எனறு இல்லை. சுயமாக அசைவுகளை சோதனையாக செய்து பயிற்சிகளை உருவாக்கலாம். எல்லாமே இலவசம்) மிக முக்கியமாக பக்கவாட்டில் அசைவது (lateral movements), திரும்பும் அல்லது சுழற்சி அசைவுகள் (tornal movements) (வயது ஏற) மிகவாக குறைவது. இவற்றை ஈடு செய்ய பயிற்சிகள்.
  15. வாகன யந்திரத்தின் அடிப்படைச் செயல் வடிவம் ........! 👍
  16. சிரிப்பதா ..அழுவதா என்று தெரியவில்லை ...சுவிசு .வி.பு .அமைப்பு தலைவராம்...ரகுபதி என்பவரி ன் செய்தியில் நான் இப்பதான் தலைவருடன் கதைத்துவிட்டு வருகிறேன் என்று ..அவிழ்த்து விடுகிறார்...என்ன நடக்குது புத்தன் சார்
  17. பாலஸ்தீனத்தில் பட்டினி சாவை, அழிவை தடுத்து நிறுத்த உலக நாடுகளால் முடியவில்லை. மனித பேரவலத்தை மெளனமாக அங்கீகரிப்பதற்கு பிராயத்திச்சமாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கின்றோம் என அறிக்கைகள் விடுகின்றார்கள் போலும். இவர்கள் அங்கீகாரத்துடன் ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவுக்கரம் கிடைக்கும்முன்பே இஸ்ரேல் மிச்சம் சொச்சம் உள்ள இடங்களையும் நிர்மூலமாக்கிவிடும்.
  18. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் ·orpstonSde2i53u1 31018caaguhthca4107182l6f2il1183ia7n3cm5ui6 · #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் #தமிழ்_மண்தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.* அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. *#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.* இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? *எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.* உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது. *வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.* மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன. பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. *ஏன் கோவிலை கட்டினார்கள்?* *தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ? தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள். *கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ? மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ? *உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ? எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள். இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன. *கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.* மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை. *கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.* கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள். *நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.* சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை. *நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.* மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். *தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.* அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை. *கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.* இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம். *இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.* பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள். *12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.* இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள். *ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு. *மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும், உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.* இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது. வாழிய பைந்தமிழ் நாடு......... ! Voir la traduction
  19. இவர்களை நம்ப முடியா எல்லோருக்கும் தெரிந்த விடயம் , AUG -2 நினைவுநாள் கொண்டாட வேண்டிய தேவை என்ன அப்பிடி என்ன அவசரம் மற்ற கோஷ்டியினருக்கு இப்போதும் இந்த அறிக்கைகளினை இவர்களின் பேரில் வெளியிடுவார் அந்த பத்திரிகையாளர் தானா
  20. இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?
  21. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அது தான் அவரது விருப்பமாகவும் இருந்திருக்கும் என அவர் வாழ்ந்த கால எழுத்துக்கள்/பேட்டிகளில் இருந்து ஊகிக்கிறேன். இப்படியான பின்னணியில், ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை. இப்படிக் குழப்பங்கள் இருக்கும் போது, ஆகஸ்ட் 2 நிகழ்வுக்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாகப் போகா விட்டால் என்ன வியாக்கியானம் கொடுக்கப் படும்? பிரபாகரனை மக்கள் மறந்து விட்டனர் என்பார்களா?
  22. ஆக்கள் இரட்டை சுழிக்காரர். ஆதாவது சுழியன்கள் 🤣 எழுதுமட்டுவாள் தொடக்கம் நுணாவில் கைதடி நாவற்குளி எண்டு எல்லாம் பெரிய புள்ளிங்கோ 😂 எங்கடை கைதடியார்ர கன நாளாய் காணேல்லை(கந்தையா) கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போல 😄
  23. வழக்கு விசாரணையில் உள்ளதால் இப்போது இதைப்பற்றி கருத்து கூற முடியாது.
  24. அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது! எங்களுக்கு 30 - 16 = 14 எண்டுமட்டும்தான் நிறுவத்தெரியும். அதோட அவன் புலிகளால்தான் நாசமாய்ப்போனவன். ஆமிக்காரன் நல்லவிதமா புனர்வாழ்வு கொடுத்தபின்னும் புலிதான் வந்து இப்படி மாத்திப்போட்டாங்கள் என்று வன்னியில் மதக்கடியில இருந்து கதைச்சப்பொடியன்கள் சொன்னவங்கள் என்றும் கணித பௌதீக விஞ்ஞான முறையில் பகுத்தறிஞ்சு சொல்லத்தான் தெரியும். இதுகள் படிக்காத ஆட்களுக்கெல்லாம் விளங்காது கண்டியளோ!!
  25. எந்த விதமான உடற்பயிற்சியும் கொஞ்சமாவது செய்தால் அதனால் பயனுண்டு என்பதைக் காட்டும் ஒரு ஆய்வு. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம், "குறைந்த பட்சம் (minimum) எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?" என்ற கேள்வி பரவலாகக் கேட்கப் படும் ஒரு கேள்வியாக மாறி வருகிறது. "வாரத்திற்கு 150 நிமிடங்கள்" என்று பதில் சொன்னால், "நேரமில்லை" என்ற காரணத்தால் அதை உதாசீனம் செய்வோரும் இருக்கிறார்கள். அவர்களை உடற்பயிற்சியின் பக்கம் இழுக்கும் ஒரு ஆய்வு முடிவாக இது இருக்கக் கூடும். ஆனால், 7000 அடிகளை விட அதிகமாக நடப்பது நல்லது என்று தான் இந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது. இணைப்பில் இருக்கும் மூலக் கட்டுரையின் வரைபுகளைப் பார்த்தால், 7000 அடிகளுக்கு அதிகமாக நடப்போரில் பெரும்பலான நோய் நிலைகள் தொடர்ந்து குறைந்து செல்வதைக் காணலாம். https://www.thelancet.com/action/showPdf?pii=S2468-2667%2825%2900164-1
  26. பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?
  27. புத்தா நானும் இளைப்பாறி 5 வருடமாகுது.
  28. தலைவர் இருந்திருந்தால் இப்ப அவருக்கு 71 வயதாகி இருக்கும். இலங்கையில் ஆண்களின் சராசரி ஆயுள் 73. அவரோ சுகர் வருத்தகாரன். கட்டுப்பாட்டிலும் இருக்கவில்லை என்பார்கள். 2009 இல் தப்பி இருந்தால் கூட அவர் இப்போ இயற்கை மரணம் எய்தி இருப்பார். இன்னும் இதை வைத்து வண்டி ஓட்டாமல் - நடக்கிற காரியத்தை பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.