Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87988
    Posts
  2. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    16468
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    20010
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    14675
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/08/25 in all areas

  1. சசிகாந்த செந்தில் ஒரு காங்கிரஸ் கட்சி சார்ந்த மக்களவை உறுப்பினர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி. அண்மையில் வடகரோலினாவில் நடந்த FeTNA ஆண்டு விழாவில் இவரது பேச்சைக் கேட்டேன். உலகில் வலதுசாரிகள் ஆட்சி ஏன் ஓங்கி வருகிறது என்பது பற்றிப் பேசினார். மிக அருமையான உரை. "சாதாரண மக்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம், இந்த வலது சாரிகளுக்கு எதிராகப் பேசாமல் இருப்பது தான்" என்று கூறியிருந்தார், அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது. அந்த உரையிலும், ஈழத்தமிழர்கள் இன அழிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள், அது இன்னும் தொடர்கிறது என்று பேசியிருந்தார்.
  2. பாதிக்கப்படும் ஏழை இலங்கை தமிழ் மீனவர்கள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தாயும் பிள்ளையானாலும் வாயும் வறும் வேறு என்பந்தனை உணர்த்துகிறார், ஆனாலும் எமக்குத்தான் புரிவதில்லை.
  3. எல்லை தாண்டி வந்து வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் கடல் வளத்தையும் கொள்ளை அடிக்கும் தமிழக மீனவர்களை கண்டிக்க திராணி இவருக்கும் இல்லை. இந்த கொள்ளையர்களை எதிர்த்தால் மேலும் மேலும் கட்டுப்பணத்தை இழக்க வேண்டி வந்து விடும் எனப் பயம். எல்லா தமிழக அரசியல்வாதிகள் போலத்தான் இவரும்.
  4. மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலியே வரப்பிடாது. அப்டியே ஆளைச் சாய்ச்சிடுது பாருங்க. என்ன பண்ணுறதுன்னு தெரியாம அங்க இங்கன்னு கோட்டு போட்ட டாக்டருங்களுக்கு பணத்தையா அள்ளி விட்டார்” “பிறவு?”என்றேன். “எங்கிட்ட ஒருநாளைக்கு கேட்ட்டார். நம்ம இயற்கைமருத்துவம் லோகநாதன் இருக்காரே?” என் முகத்தைப் பார்த்துவிட்டு நிறைவுடன் “கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. அப்டியே கொடத்தில போட்ட வெளக்கு… ஆரல்வாய்மொழிக்கு அந்தப்பக்கமா ஒரு சின்ன ஊரிலே இருக்கார்.பேச்சிப்பாறை சானலை தாண்டி அந்தப்பக்கமா போனா ஒரு ஓட்டுவீடு. வாசலிலே ஆடு நிக்கும்” “எப்பவுமேயா?”என்றேன். “மேயாதப்ப நிக்கும்”என்று யதார்த்தமாகச் சொல்லிவிட்டு “அவரிட்ட கூட்டிட்டு போனேன். போனதுமே சொல்லிட்டார், மூட்டுல பிரச்சினைன்னு”. “நடக்கிறதப் பாத்தா?”என்றேன். “இல்ல, இவரை சேரோட தூக்கிட்டு போனோம்” என்று மேலும் யதார்த்தமாகச் சொல்லி, “அப்டியே கூப்பிட்டு ஒக்கார வைச்சார். நாக்க நீட்டுன்னார்” நான் “மூட்டுல இல்ல வலி?”என்றேன். “ஆமா. ஆனா பாடி ஒண்ணுதானே? ஆத்துத்தண்ணியில கரைதோறும் ருசி பாக்கணுமாடாம்பார். பெரிய ஞானி. நாக்க கூர்ந்து பார்த்துட்டே இருப்பார். ஒரு புள்ளியில குண்டூசியாலே குத்துவார். அப்டியே ஒடம்பு துள்ளும்” “வலிக்குமோ?” “பின்ன? நாக்குல நரம்பில்லாம பேசுறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. நாக்கில எல்லா நரம்பும் இருக்கு. மூட்டுக்குண்டான நரம்ப கண்டுபிடிச்சுட்டார்னா அப்டியே குத்தி தூர் எடுத்து விட்டுடுவார். செரியாப்போயிரும்” ”ஆச்சரியம்தான்” என்றேன். முதுகெலும்புகளுக்கெல்லாம் சேர்த்து ஒரே நரம்பா இல்லை ஒவ்வொன்றுக்கும் ஒரு நரம்பா என எண்ணிக்கொண்டிருந்தபோது நண்பர் தொடர்ந்தார். “மாற்றுமருத்துவத்திலே பலது இருக்குது சார். சாமுண்டியப்பான்னு வெள்ளக்கால் பக்கம் ஒருத்தர்” “பாக்க சாதாரணமாத்தான் இருப்பார் இல்லீங்களா?” “எப்டி தெரியும்?”என்றார் வியப்புடன். “சொன்னாங்க”என்றேன். “ஆனா மகாஞானி. அவரோட சிகிச்சை என்னான்னாக்க எல்லாமே உள்ளங்காலிலேதான்! நம்ம பிரண்டோட பொஞ்சாதிக்கு மனசிலே ஒரு பிரச்சினை. உள்ளங்காலிலே சரியா தொட்டு மனசிலே உள்ள அந்த பிரச்சினையப் புடிச்சுட்டாருன்னா பாத்துக்கிடுங்க” “ஓகோ”என்றேன். ஐயத்துடன் “அந்தம்மா அப்ப அவங்க மனசையா ரோட்டில வச்சு நடந்திட்டிருந்துது? ரொடெல்லாம் ஒரே கலீஜா கெடக்குமே?” “கழுவிக்கலாங்க. மனசிலே என்ன பிரச்சினை இருந்தாலும் கழுவிடலாம். அதுக்குத்தான் யோகக்குளியல் சிகிச்சை. சாம்பமூர்த்தின்னு ஒருத்தர் பண்றார். யோகாவால மனசை குளிப்பாட்டி விடுவார். சோப்பு, சீயக்காய்,ஷாம்பூன்னு அதிலே மூணு லெவல் இருக்கு. வேற வேற ரேட்டு ” “டிடெர்ஜெண்டு கூட தேவைப்படறவங்க இருப்பாங்க இல்லியா?” என்றேன். “சிலருக்கு ஃபினாயில்கூட வேண்டியிருக்கும்…” “பின்ன? நோய்கள் பலவகை. மோப்ப மருத்துவம் பாத்திருக்கியளா?” “மலர்மருத்துவம்னு ஒருவாட்டி யாரோ சொன்னாங்க” “இத மலமருத்துவம்னு சொல்வாங்க. மலத்தை மோந்து பாக்கிறது” “நோய் தெரிஞ்சுருமாமா? அதுக்கு லேப்லே குடுத்தா–” “இது பேஷண்டே மோந்து பாக்கிறதுங்க” “தன்னோட மலத்தையா?” “அதான் இல்ல”என்றார் மகிழ்ந்து “டாக்டரோட மலத்த…” “ஓ” என்றேன் “நெறைய தேவைப்படுமே” “அவரு மூணுவாட்டி தெனம் போவார். காலையிலே ஆணவம். மத்தியான்னம் கன்மம். ராத்திரி மாயை” “நிர்மலம்னு சொல்லுங்க” “அவரோட சம்சாரம் பேரு அதான்…மாற்று மருத்துவத்திலே பலது இருக்கு. இயற்கை உணவுண்ணு ஒண்ணு இருக்கு. மருந்தே வேண்டாம்னு சொல்வாங்க” “நோய் இல்லேன்னா எதுக்கு சார் மருந்து?” “கரெக்ட். அதான் அவங்க பாலிஸி. உணவே மருந்துன்னு சொல்லி பச்சைபச்சையா சாப்பிடுவாங்க. வாழையெலைக்கும் அதில வச்ச சாப்பாட்டுக்கும் வித்தியாசமே தெரியாம சாப்பிட்டாத்தான் அது ஆரோக்கியமான சாப்பாடுன்னு ரூல். குரங்கெல்லாம் அப்டித்தானே சாப்பிடுது” “அதுக்கு சமைச்சு குடுத்தா சாப்பிடாதா என்ன?” அவர் என்னை கடந்து சென்று “அதைச் சாப்பிட்டா நாப்பதுநாளிலே எல்லா நோயும் போயிரும்.நம்ம சகா ஒருத்தர் தமிழ்வாத்தியார். பதினாறு வருசமா சமைக்காத சாப்பாடுதான்.பெரீய ராமபக்தர். சேரிலே கூட குந்தித்தான் உக்காருவாருன்னா பாத்துக்கிடுங்க. நல்லமனுஷன், நம்மளப் பாத்தா அப்டியே ஒரு ஜம்பு…” எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ”இவங்க இப்டீன்னா மருந்தே உணவுன்னு ஒரு குரூப்பு இருக்கு. அவங்க வேற டைப்பு” என்றார் நண்பர் “ஒரே மூலிகையா சாப்பிடுவாங்க. கொல்லைக்குப்போறதே லேகியம் மாதிரி இருக்கும்னா என்னத்தச் சொல்ல?” “ஓகோ” என்றேன்.“அதை வேற ஏதாவது மாற்றுமருத்துவத்துக்கு யூஸ் பண்றாங்களா?” “இன்னும் இல்லீங்க” என்றார். ஆசுவாசமாக உணர்ந்தேன் “ஏதோ இந்தமட்டுக்கும்…” என்றேன். “ஹீலிங்னு ஒண்ணு இருக்கு. ஹீலர் ஆஸ்கார்னு ஒருத்தர். அவர் என்ன சொல்றார்னா நோயே இல்லேன்னு” “அப்ப அவர் எதை ஹீல் பண்றார்?” “இப்ப இலுமினாட்டின்னு ஒரு குரூப்பு இருக்குங்க இல்லியா?” ”பொம்மனாட்டீன்னு மாமிகள சொல்வாங்களே” “அதேமாதிரிதான். அவங்க சர்வதேச ஆரியச் சதி. அவங்க நம்மள பாதிக்காம இவரு நம்மளைக் குணப்படுத்திட்டே இருப்பார்” “அதுக்கு அவங்களையே குணப்படுத்தலாமே” “இன்னொருத்தரு ஃபீலர் மாதவன்னு பேரு. நாம நோய சொன்னாலே போரும் அப்டியே அளுதிருவார். அவர் ஒருபாட்டம் அளுதிட்டார்னா நம்ம மனசு லேசாயிரும்ங்க” எனக்கு இது கொஞ்சம் நம்பும்படியாக இருந்தது. ஒரு மனிதன் நமக்காக அழுகிறான் என்றால்… “வெங்காயம் மாதவன்னு சொன்னா ஊர்ல தெரியும்” என்றார் நண்பர் “ஓகோ” “ஹோமியோ வேற மாதிரி” என்றார் நண்பர் “எந்த அளவுக்கு கம்மியா கெமிக்கல கலக்கிறோமோ அந்தளவுக்கு வீரியம் ஜாஸ்திங்கிறது அவங்க பாலிசி. குண்டுமணி அளவுக்கு பாஸ்பரஸை எடுத்து அண்டாத்தண்ணியில கலக்குவாங்க. அதில ஒரு ஸ்பூன் எடுத்து மறுபடி ஒரு அண்டாத்தண்ணியில கலக்குறது. அதில ஒரு ஸ்பூன் எடுத்துமறுபடியும் ஒரு அண்டாத்தண்ணியிலே..அதில—” “அப்றம்…?” “அந்தக் கடைசீ தண்ணி இருக்கே அதோட வீரியம் அணுகுண்டு மாதிரியாக்கும். நின்னு கேக்கும். நம்ம ப்ரண்டோட தம்பி ஒருத்தனுக்கு தலைச்சுத்து. ஒக்காந்தா வாந்தி. நேரா போயி நம்ம கேசவபிள்ளைய பாத்தான். நாலு மடக்கு மருந்து குடுத்தார். நின்னிட்டுது” நான் பெருமூச்சுவிட்டேன் “கும்பகோணத்திலே ஒரு ஹோமியோ இருக்கார். இருக்கிறதிலேயே எசன்ஸை கம்மியா கலக்கின தண்ணி அவரு குடுக்கிறதுதான். காவேரியிலே அவரோட கெமிக்கல கலக்கிட்டு காவேரித்தண்ணியையே குடுக்கிறார். நல்லா கேக்குது” “எப்ப கலக்கினார்?” “அவரெங்க கலக்கினார்? அவங்க அப்பாதான் கலக்கினது…”என்றார் நண்பர் “இப்ப உங்க பிரச்சினைக்குத் தொடுவர்மம்கூட நல்லா கேக்கும். உடம்பிலே அங்கங்க தொடுறது…” “வேணாங்க எனக்கு கிச்சுகிச்சு ஜாஸ்தி”என்றேன் “சயண்டிஃபிக் டிரீட்மெண்டுங்க” என்றார்.”மாயநாதன்னு ஒருத்தர்.பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். பொம்புளையாளுங்களுக்கு குச்சி வச்சு தொடுவார். முஸ்லீம் பொம்புளைங்கன்னாக்க நெழலையே தொட்டு குணப்படுத்தீருவார்” “பயங்கரமா இருக்கு” என்றேன் “இருக்குல்ல? சார் மாற்றுமருத்துவம்னா சும்மா இல்ல. இங்கிலீஷ்ல நாலஞ்சு வார்த்தைய வாசிச்சுட்டு வெள்ளைக்கோட்ட மாட்டீட்டு பணத்த கறக்குற பிஸினஸ் இல்ல. தெய்வீகமான மருத்துவம். காலு கையின்னு தனியா பிரிச்சு செய்றதில்ல. ஹோலிஸ்டிக் மெடிசின்…” என்றார் நண்பர் “எனிமா மருத்துவம்னு ஒண்ணு இருக்கு. அதான் பெஸ்ட்” “என்ன பண்ணுவாங்க?” “எனிமா குடுக்கிறதுதான்” “எல்லா நோய்க்குமா?”என்றேன் “ஆமா, பின்ன?” “வயித்துப்போக்குக்கு?”என்றேன். “அதுக்கும்தான்”என இயல்பாகச் சொல்லி “அதில வெளக்கெண்ணை எனிமான்னு ஒண்ணு இருக்கு. அது மூட்டுநோய்க்கு நல்லது. போட்டுக்கிட்டா நடக்கிறது ஸ்மூத்தா இருக்குன்னு நம்ம பொஞ்சாதியோட தம்பி சொன்னான்” நான் பெருமூச்சுவிட்டேன். “உங்க மச்சினர் இப்ப எப்டி இருக்கார்?” “செல்போனிலே கூப்பிட்டேன். பேசமுடியல்லை. நேரா சங்கரன்கோயிலிலே சம்முவம்னு ஒருத்தர் இருக்கார். பாக்க சாதாரணமாத்தான் இருப்பார். போயிப்பாருங்கன்னு சொன்னேன்” நான் தெளிந்து “அவரு என்ன பண்றார்?”என்றேன் “அறை மருத்துவம்சார்” “ரூம்லயா?” “இல்ல”என்றார் “போனதுமே பளார்னு ஒண்ணு விடுவார் பாருங்க. அப்டியே நோய்லாம் பறந்திரும். நம்ம தம்பி மச்சானுக்கு அங்கயே சரியாயிடுச்சுன்னா நம்ப மாட்டீங்க” “பல்வலியா?” “எப்டி கண்டுபிடிச்சீங்க?” மறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 21, 2015 https://www.jeyamohan.in/72144/
  5. செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த செந்தில் வேண்டுகோள் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 11:28 AM செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள் குறித்து நான் பின்வருமாறு குறிப்பிடுவேன். இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன். மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித படுகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு. ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது. இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோரவேண்டும். செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும். நீதி நல்லிணக்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்கான தனது நீண்டகால நிலைப்பாட்டை இந்தியா மீள வலியுறுத்தவேண்டும். இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது, எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/222030
  6. வீரப்பன(சந்தன கடத்தல்) படுகொலைசெய்து அரசியல் செய்வது போல,இந்தியாவில் உள்ள சில மார்க்ஸிட் பயங்கரவாதிகளை கொலை செய்து அரசியல் செய்வது போல .... நம்ம போராட்ட அரசியலையும் நசுக்குவதற்கு முயற்சி செய்கின்றனர் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க இந்தியா தேசியவாதிகள் தீயா வேலை செய்கின்றனர் என்பது என்னவோ உண்மை... இந்தியா தேசியவாதிகளுக்கு ஒர் கனவு உண்டு ...பிரித்தானியா நாட்டை விட்டு செல்லும் பொழுது ஒன்றாக இருந்த மாதிரி மீண்டும் பாகிஸ்தான்,பங்களதேஷ்,இந்தையா எல்லாத்தையும் ஒன்றாக்க வேணும் எண்டு... கனவு தானே காணட்ட்டும் ...காசா? பணமா?
  7. சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ... தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..
  8. திமுக புலிகள் ஆதரவு நிலைபாடு எடுத்து தனது ஆட்சியை இழந்தது .கொலைகார இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தது. புலிகள் ஒழிப்பு நடவடிக்கை என்று படித்து கொண்டிருந்த இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ஜெயலலிதாவால் நிறுத்தபட்ட விசாவை மீண்டும் வழங்கியது. சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா
  9. அரசியல் வாதிகள் (முக்கியமா ஜெ.வி.பியினர்) மட்டும் சிறிலங்கா தேசியம் பேச வேணும் என்ற சட்டம் இல்லை தானே... திருடர்களும் ஒன்றுபட்ட இலங்கைய விரும்புகின்றனர் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து நல்லூருக்கு வந்து திருடி அதை தங்கள் பகுதியில் விற்பனை செய்து சிறிலங்கா தேசியத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்... தமிழ் தேசியத்தை சிங்கள தேசியவாதிகள் திருட,நகை திருடர்கள் நகைகளை திருடுகிறார்கள் ...வாழ்க திருடர் தேசியம்..
  10. "மூன்று கவிதைகள்" 'உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்' உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உண்மைக் காதல் என்று நம்பிவந்தேன் உடலைத் தந்து என்னை மயக்கினாய் உள்ளதையும் பறித்து வீதியில் விட்டாய்! கண்கள் நான்கும் சந்தித்த வேளை விண்ணில் பறந்தேன் அறிவைத் தொலைத்தேன் எண்ணம் மறந்து கையைப் பிடித்தேன் வண்ண அழகில் பொய்யை மறைத்தாய்! மனைவியை மறந்து புத்தன் ஆனான் மணவாட்டியின் ஆட்டத்தில் புத்தி கெட்டேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................................ 'கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே' கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே கன்னியென்னை முகர்ந்து பார்த்து மகிழ்கிறதே கன்னமிரண்டிலும் முத்தம் கொடுத்து பறக்கிறதே கட்டியணைத்து தேன் குடிக்க மேய்கிறதே! பெண்களென்ன காமம் சுரக்கும் உடலா கிண்ணத்தில் ஏந்திக் குடிக்கும் போதையா பெண்மையைப் போற்றி காதலைத் தேடு மண்ணின் பெருமையை அவளிடம் காட்டு! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... 'பட்டாம்பூச்சியின் தேடல்' பட்டாம்பூச்சி பூவைச் சுற்றித் தேடி பச்சைக் கொடியில் தவம் இருந்து பக்குவமாக மலரின் மணத்தை முகருது! பருவக் காளை பூவையரை நாடி பல்வரிசைக் காட்டி பின்னால் தொடர்ந்து பகட்டை நம்பி தன்னையே தொலைக்குது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/30730529339928977/?
  11. கவிதைகள் அருமை. காலகாலமாக காளையர்க்கு இருக்கும் பிரச்சனையே இவைதானே, காதல், காம ம், கன்னி. பள்ளிக்குப்போய் படிப்பை விட்டதும், பாடையில போறளவு உயிரை விடுறதும்.
  12. Published By: DIGITAL DESK 2 08 AUG, 2025 | 04:34 PM மனித - யானை மோதலைக் குறைப்பதையும், இதனால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, காட்டு யானைகளின் நடமாட்டத்தை நிகழ் நேரத்தில் அறிவிக்கும் புதிய மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலியின் உருவாக்குநர்களில் ஒருவரான வினுர அபேரத்ன தெரிவிக்கையில், யானைகள் அருகில் வரும்போது மக்களுக்கு எச்சரிக்கை செய்வதன் மூலம் சேதங்கள் மற்றும் மனித உயிரிழப்புகளைக் குறைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இலங்கையில் சுமார் 3,000 பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் யானை நடமாட்டம் தென்பட்டால், பயனர்கள் அதனைச் செயலி மூலம் அறிவிக்க முடியும். உடனடியாக, அந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள ஏனைய பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். யானை நடமாட்டம் குறித்த தகவல்களைப் பகிர்வதுடன், யானை மரணங்கள், யானை மோதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள், சொத்து சேதங்கள் மற்றும் வனவிலங்கு குற்றங்கள் போன்ற சம்பவங்களையும் இந்தச் செயலி மூலம் பயனர்கள் முறைபாடளிக்க முடியும். இதன் மூலம், மனித - யானை மோதல் தொடர்பான விரிவான தகவல்களைப் பெற்று, அதற்கான தீர்வுகளைக் கண்டறியவும் இந்தச் செயலி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222100
  13. பெண்களால் ரொம்பவும் நொந்து போனவரின் கவிதை போலிருக்கே? பாராட்டுக்கள் தில்லை.
  14. புரட்சி ஏன் சார் எந்திரிக்கணும்? அவசர சிகிச்சைப் பிரிவினர் வண்டியில் ஏற்றிக் கொண்டு போவார்கள்.
  15. இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனந்தோப்பில் எப்படி வெளியார் தீ வைப்பார்கள்? இராணுவமே தீயை வைத்துவிட்டு வெளியாரை சாடுகின்றதோ?
  16. தாயகத்தில் ஓர் ஊடகச் சந்திப்பில் இருந்து..... https://www.facebook.com/share/v/1D8jFnopBx/
  17. சசிகாந்த் செந்தில் இந்திய புலனாய்வு துறையை சேர்ந்தவர் இல்லை என உங்களுக்கு எப்படி தெரியும்?
  18. பாராட்டுக்கள்.. தற்செயலா அடிபட்டு கீழ விழுந்தால் உடனே எந்திரிக்க முடியுமா ரெல் மீ ..
  19. அண்ணை, சரி சரி Positive ஆ எடுத்துக்கிறோம். மாப்பிள்ளைக்கு கைக்கு எட்டியது..... பயமா இருக்குமில்லையா?
  20. இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமைச்சரே, மேலும் பல நாடுகளுக்கும் இலவச விசாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கையரசு. இலவச விசாவை காட்டி சுற்றுலாப்பயணிகளைஅழைத்து, கல்லாப்பெட்டியை நிரப்புவதற்காக. எங்கே நீங்கள் இலங்கை அரசோடு இணைந்து தமிழரை நசுக்கினீர்களோ, அவ்வாறே உங்களுக்கு எதிராக இஸ்ரேலோடு இலங்கை இணைந்துவிடுமோ என அஞ்சுகிறீர்கள் போலிருக்கிறது. எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். இலங்கையே யுத்தக்குற்றவாளிகள் பிறந்த, நிறைந்த நாடு. இதில இவர் வேற புனித நாடு போல கதையளக்கிறார். எல்லோருக்கும் சப்பித்துப்புவதற்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். சிங்கள கிறிஸ்தவர்களை சொல்லப்பயம். ஏன் நீங்கள் அழுத்தங்களை கொடுப்பது? தமிழருக்கு சமஉரிமை வழங்கக்கூடாது என்பதற்காக சகல ஒத்துழைப்புகளையும் வழங்கினீர்கள். உங்களுக்குத்தான் அதிக பலம், உரிமை இருக்கிறது கேட்பதற்கு கேட்டுப்பாருங்கள். இப்போ புரியும், தமிழர் ஏன் போராடினார்கள் என்பது. உங்களுக்காக குரல் கொடுக்க யாருமே வரப்போவதில்லை கூப்பாடு போட்டுப்பாருங்கள், போராடிப்பாருங்கள் என்ன பதில் கிடைக்கிறது என அறிய ஆவல்! சும்மா சுற்றுலா வருபவர்களை நிரந்தரவாசிகளாக்கப்போகிறார்கள் கூப்பாடு போட்டு.
  21. முஸ்லீம் மக்கள் சார்பாக போராட போகின்ற போது DJ Tom Monagle யும் கூட்டி கொண்டு போங்கோ நல்லாக கூவுவார்
  22. மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன் நான் வசிக்கும் பகுதியில் கிழமை தோறும் கழிவகற்றும் வண்டி வரும் நாட்களில் சில வீட்டு மதில்களில் குப்பைப் பைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். அல்லது மதிலில் ஒரு கம்பியை கொழுவி அந்த கம்பியில் குப்பைகளைக் கழுவி வைத்திருப்பார்கள். ஏனென்றால்,குப்பை அகற்றும் வண்டி உரிய நேரத்துக்கு வருமா வராதா என்ற சந்தேகம். அது வரத் தவறினால் நிலத்தில் வைக்கும் குப்பைகளை நாய்கள் குதறிவிடும். கட்டாக்காலி நாய்களை இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இது யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதி. இன்னொரு பகுதி குரு நகரில். “தாங்கள் தொழில் செய்யும் கடலிலேயே அப்பகுதி மக்கள் கழிவுகளை கொட்டுகிறார்கள்” என்று ஒரு மதகுரு தெரிவித்தார். அப்பகுதியில் சூழலில் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் சொன்னார் குருநகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கடலில் இருந்து தொடங்கி குறிப்பிடத்தக்களவு தூரம் அவ்வாறு கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும் உட்பட அனைத்து விதமான கழிவுகளையும் காணக்கூடியதாக இருக்கும் என்று. சில சமயம் செத்த நாயை கொண்டு வந்து போடுகிறார்கள். சில சமயம் பழைய ஆடைகள் கடலில் மிதக்கும். இவற்றோடு வழமை போல பிளாஸ்டிக் கழிவுகளும் காணப்படும் என்று. மேற்குறிப்பிட்ட மதகுரு சொன்னார், “கரையோரக் குடியிருப்புகளில் வீடுகளுக்கு முன்னாலும் நிலம் இல்லை பின்னாலும் நிலம் இல்லை. எனவே வீட்டுக் கழிவுகளை அவர்கள் எங்கே கொட்டுவது? சாப்பாட்டுக் கழிவுகளை வீட்டுக்குள் வைத்தால் சில நாட்களில் அவை புழுக்கத் தொடங்கி விடும். எனவே இந்த கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு பொருத்தமான வழிமுறை வேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு நாள் தான் கழிவு அகற்றும் வண்டி வரும் என்றால் ஏனைய நாட்களில் கழிவுகளை எங்கே கொட்டுவது? ஏனென்றால் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கழிவு வருந்தானே?” என்று. ஒவ்வொரு நாளும் கழிவை அகற்றுவதற்கு போதிய வாகனங்கள் இல்லை என்று மாநகர சபை நிர்வாகம் கூறுகின்றது. மாநகர சபையில் மட்டுமல்ல இந்த பிரச்சினை உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் அதுதான் நிலைமை. போதிய அளவு வாகனங்கள் இல்லை வளங்களும் இல்லை. கழிவை முகாமை செய்வதற்கு போதிய அளவுக்கு பொருத்தமான வளங்கள் இல்லை என்பது ஒரு புறமிருக்க, கழிவை முகாமை செய்வது என்பது தனிய உள்ளூராட்சி சபையின் பொறுப்பு மட்டுமல்ல. அது மக்களுடைய பொறுப்பும் தான் என்று அண்மையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியிருந்தார். சுத்தமாக இருப்பது ஒர் ஒழுக்கம். தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு பொறுப்பு; ஒரு பண்பாடு. வட்டாரங்கள்தோறும் கழிவை சேகரிக்கும் மையங்களை உருவாக்க வளங்கள் இருக்கின்றதோ இல்லையோ அவ்வாறு உருவாக்கப்படும் மையங்களில் மக்கள் கழிவுகளை எவ்வாறு போடுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். அதற்கென்று வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளில் பக்குவமாகக் கழிவைக் கொண்டு போய்ப் போடுவது எத்தனை பேர்? பதிலாக வாகனத்தில் நின்றபடியே தொட்டியை நோக்கி அதை வீசுபவர்கள் எத்தனை பேர்? இதற்கு முன்பு அவ்வாறு கழிவு சேகரிக்கும் மையங்களை உருவாக்கிய பொழுது அந்தப் பகுதியையே குப்பையாக்கிவிட்டார்கள். யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் உயிர் பல்வகமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறார் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி கஜபதி. இது ஒரு சமூகப் சமூகப் பொறுப்பு. தன் வீட்டுக்கு குப்பையை மற்றவரின் தலையில் கொட்டுவது.தான் சுத்தமாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படியும் அழுகி நாறட்டும் என்ற சிந்தனை. இந்த சுயநலம் இருக்கும்வரை ஒருவர் மற்றவரை நேசிக்க முடியாது. ஒரு சமூகமாகத்தானும் திரள முடியாது. இதற்கு சட்டம் இயற்றி கமராவைப் பூட்டி எத்தனை நாட்களுக்கு கண்காணிப்பது? தண்டனைகளின் மூலம் மட்டும் சமூகப் பொறுப்பை, கழிவு முகாமைத்துவப் பண்பாட்டை உருவாக்க முடியுமா? அண்மையில் பொது இடங்களில் வெற்றிலை துப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். பெரும்பாலான சந்தைகளில் மூலைகளில் வெற்றிலை துப்பல்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வாகனத்தின் சாரதி அல்லது பேருந்தில் பயணிப்பவர்கள் வெற்றிலையைத் துப்புவார்கள் அது காற்றில் பறந்து வந்து உங்களுடைய முகத்தில் படும். எச்சில் நெடி அன்றைய நாளையே அருவருப்பானதாக ஆகிவிடும். இங்கே இந்த இடத்தில், இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு கிடைத்த ஒரு அனுபவத்தைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாச ஊரில் அதிகம் பிரபல்யமாகாத ஒருவராக இருந்த காலத்தில் தன்னுடைய முதலாவது நேர்முகத் தேர்வுக்காக புதிய ஆடைகளை அணிந்து கொண்டு பேருந்தில் ஏறுவதற்கு மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்திருக்கிறார். அங்கே நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் இருந்த ஒருவர் தன் வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார். அது பிரமதாசாவின் முகத்திலும் தலையிலும் சட்டை முழுவதிலும் பட்டிருக்கிறது. திகைத்துப்போன பிரேமதாச துக்கத்தோடு தாயாரிடம் திரும்பி ஓடி வந்திருக்கிறார். தாயார் மகனைத் தேற்றி நம்பிக்கையூட்டியிருக்கிறார். நீ முழுகிவிட்டு வா நான் இருப்பவற்றில் நல்ல உடுப்பை அயர்ன் பண்ணித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். தாய் கொடுத்த உற்சாகத்தோடு வேறு ஓர் உடுப்பை அணிந்து கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போன பிரேமதாச அங்கே நூலக உதவியாளராக தெரிவு செய்யப்படுகிறார். அங்கிருந்துதான் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்குகிறது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜன்னலுக்கு வெளியே துப்புகிறார்கள். மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்பிவிட்டுப் போகிறார்கள். அது காற்றில் பறந்து வந்து பின்னால் வருகிறவரின் முகத்தில் துர் நெடியோடு படியும். எவ்வளவு அருவருப்பு? அது இப்பொழுது தண்டனைக்குரிய குற்றம். தன் குப்பையை மற்றவர்களின் தலையில் கொட்டுவதும் குற்றம். தண்டனைகளால் மட்டும் அவ்வாறான சமூகப்பொறுப்பை பண்பாட்டை உருவாக்க முடியுமா? திருநெல்வேலி சந்தைக்குள் காறித் துப்பும் ஒருவர் தன் வீட்டுக்குள் அதைச் செய்ய மாட்டார். ஏனென்றால் அது அவருடைய சொந்த வீடு. தான் சுத்தமாக இருந்து கொண்டு மற்றவர்கள் வாழும் சூழலை அசுத்தமாக்குவது ஒரு நாகரிகம் அடைந்த மக்கள் கூட்டம் செய்கிற வேலையல்ல. கழிவை அகற்றுவது என்பதற்கு பதிலாக கழிவை முகாமை செய்வது என்று சிந்திப்பதே பொருத்தமானது என்று சமூகச் செயற்பாட்டாளராகிய செல்வின் கூறினார். கழிவு முகாமைத்துவத்தை வளர்ச்சியடைந்த நாடுகள் லாபகரமான ஒரு தொழிலாக மாற்றி விட்டன. அங்கெல்லாம் கழிவு விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது; மீள சுழற்சிக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகிறது. எனவே கழிவு முகாமைத்துவத்தை எப்படி வணிகப் பண்புடையதாக மாற்றலாம் என்று சிந்திக்கலாம். அது ஒரு கூட்டுப் பொறுப்பு. ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பை மக்களுக்கு உணர்த்துவது யார்? உள்ளூர்த் தலைவர்கள் உள்ளூர் முன்னுதாரணங்களாக மாறினால்தான் அவ்வாறு கூட்டுப் பொறுப்பைக் கட்டியெழுப்பலாம். உள்ளூர்த் தலைவர்கள் முதலில் பிரதேச சபைக்குள் தமது கூட்டுப் பொறுப்பை நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்துக்குள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முடிவெடுக்க வேண்டிய விடையங்களில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் கூட்டுப் பொறுப்பை நிரூபிக்குமாக இருந்தால் மக்களிடமும் கூட்டுப்பொறுப்பை எதிர்பார்க்கலாம். குப்பை விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் கூட்டுப் பொறுப்பை எதிர்பார்க்கலாம். தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி. https://www.nillanthan.com/7603/#google_vignette
  23. முதலில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இந்த சமுக அக்கறை தொடங்க வேண்டும்
  24. வகுப்பு எடுத்து ,கட்டுரை வரைந்து ,யூ டியுப் போட்டு தமிழ் அரசியலை இல்லாமல் பண்ணிபோடுவினம் சிலர்...
  25. இளமைக் கவிதைகள் இறக்கை விரிக்கின்றன .......... நல்லாஇருக்கு ......... ! 👍
  26. இன்று இரண்டு காணெளி பார்த்தேன் முழு காணொளியும் பார்க்க நேரம் இல்லை நண்பர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்த்தேன் புனர்வாழ்வளிக்கபட்ட போராளி என்று ஒருவர் பேசினார் இனி ஒரு போர் தொடங்குமாய் இருந்தால் அது இலங்கை அரசுடன் இல்லை .அஞ்சலி செலுத்திய கள்ளர்களுடன் அந்த போர் இருக்கும் என்றார் மற்றவர் பேசினார் ஜேவிபி அரசு நல்லவற்ற தமிழ் மக்களுக்கு செய்ய தொடங்கி உள்ளது இவற்றை குழப்பும் நோக்கத்தில் கொண்டுவரபட்டதே இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு.
  27. தமிழ்நெற் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான கோபிநாத் ஜெயச்சந்திரனுடனான செவ்வி.
  28. கல்யாணம் காதுகுத்து .. கேரள செண்டை மேளம் ஒக்கே.. பந்தி பரிமாற கூடவா கேரள பெண்களை வரவைக்கணும். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ .. " புதியதா ஒரு கலப்பினம் உருவாக்காமல் ஓய மாட்டினம் போல கிடக்கு ..
  29. ஆடி மாத பரிதாபங்கள் ..
  30. பரீட்சையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கச் சொல்லும் கேள்வி, இப்படித்தான் இருக்கும் 😹😹
  31. சிரிப்பதா ..அழுவதா என்று தெரியவில்லை ...சுவிசு .வி.பு .அமைப்பு தலைவராம்...ரகுபதி என்பவரி ன் செய்தியில் நான் இப்பதான் தலைவருடன் கதைத்துவிட்டு வருகிறேன் என்று ..அவிழ்த்து விடுகிறார்...என்ன நடக்குது புத்தன் சார்
  32. ஆயிரம் தாமரை மொட்டுகளே .. மெட்டில் .. படம் : சீறும் சிங்கங்கள் (1983) பாடியோர் : ஜெயசந்திரன் + சுசிலா இசை: சங்கர் கணேசு டிஸ்கி : நல்ல வேளை சங்கர் கணேசு மீது இளையராசா வழக்கு தொடுக்கவில்லை
  33. வணக்கம் செலுத்துபவர்களிடமும் சரி செலுத்த வேண்டாம் என்று சொல்பவர்களிடமும் சரி இருக்கிறார் என்று சொல்பவர்களிடமும் சரி இல்லை என்று சொல்பவர்களிடமும் சரி நிரூபிக்க தகுந்த எந்த ஆதாரமும் இல்லை. எனவே கண்டதை சொல்லி மக்களை ஏமாற்றாமல் மக்களின் தெரிவு எதுவோ அவர் அதுவாகவே இருக்கட்டுமே.
  34. கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அது தான் அவரது விருப்பமாகவும் இருந்திருக்கும் என அவர் வாழ்ந்த கால எழுத்துக்கள்/பேட்டிகளில் இருந்து ஊகிக்கிறேன். இப்படியான பின்னணியில், ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை. இப்படிக் குழப்பங்கள் இருக்கும் போது, ஆகஸ்ட் 2 நிகழ்வுக்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாகப் போகா விட்டால் என்ன வியாக்கியானம் கொடுக்கப் படும்? பிரபாகரனை மக்கள் மறந்து விட்டனர் என்பார்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.